திங்கள், 13 ஏப்ரல், 2020

'திங்க'க்கிழமை  :  மசாலா போளி -  பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 


மசாலா போளி 
தேவையான பொருள்கள்:
மேல் மாவிற்கு:
மைதா மாவு        -  2 கப் 
எண்ணெய்           -  2 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் பொடி     -  1 சிட்டிகை 
உப்பு(தேவையென்றால்)  -  1/4 டி ஸ்பூன் 
ஸ்டஃப் செய்யத் தேவையான மசாலா செய்ய தேவையான பொருள்கள்:  
மீடியம் சைஸ் உருளைக் கிழங்கு  - 4
வெங்காயம்(பொடியாக அரி ந்தது) - 2
ப.மிளகாய்                                             - 2 
காரப்பொடி                                            - 1 டீ ஸ்பூன் 
உப்பு                                                        -  1 1/2 டீ ஸ்பூன் 
பிடிக்குமென்றால் கரம் மசாலா பொடி கொஞ்சம் சேர்த்துக்  கொள்ளலாம். வேக வைத்த பட்டாணியும் சேர்த்துக் கொள்ளலாம். 

செய்முறை:
முதலில் மைதா மாவை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு சற்றுத் தளர பிசைந்து வைத்துக் கொள்ளவும். 


உருளைக் கிழங்கை வேக வைத்து கட்டி இல்லாமல் உதிர்த்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் இவைகளை போட்டு லேசாக வதக்கி, உருளைக் கிழங்கோடு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். இப்போது மேல் மாவு, அதன் உள்ளே வைக்க உருளை மசாலா இரண்டுமே தயார். 

அடுத்த ஸ்டெப் போளி தட்டுவதுதான். ஒரு வாழை இலை அல்லது அலுமினியம் ஃபாயில் பேப்பர் இதில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொள்ளவும். மசாலா கலவை ஒரு சராசரி(சிறிய)எலுமிச்சம் பழம் அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் மைதா மாவு அதைப் போல் இரண்டு மடங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதை இலையில் வைத்து லேசாக தட்டவும். அதிகம் பரத்தி விடக் கூடாது. பூரணம் வைத்து மூடும் அளவு இருந்தால் போதும். மசாலா பூரணத்தை அதில் வைத்து, மூடி, அப்படியே கையால் தட்டி பரத்தினால் பூரணம் ஒதுங்காமல் சீராக பரவும். அதை அப்படியே சூடான தாவாவில் போட்டு சிறிது நேரம் கழித்து இலையை எடுத்தால் வந்து விடும். போளியைச் சுற்றி எண்ணெய் விட்டு, அடுத்த பக்கம் திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் வெந்ததும், மேலே கொஞ்சம் தோசை மிளகைப் பொடி மற்றும் கொத்துமல்லி தழைகளை தூவி எடுத்து வைத்து விடலாம்.  இந்த மசாலா போளிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை. புளிக்காத தயிர் ஓகே.


*மசாலா போளி பிடிக்காத நெல்லைத் தமிழன் கண்களில் இது படாமல் இருக்கக் கடவது.  

81 கருத்துகள்:

  1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி. காலை வணக்கம். வாங்க கமலா அக்கா...

      நீக்கு
  3. மசாலா போளி...
    சாப்பிட்டு வெகு நாளாயிற்று....

    எனிமையான செய்முறை...அருமை...

    பதிலளிநீக்கு
  4. தஞ்சையில் இனிப்பு போளி பிரசித்தம்..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய திங்கள் காலைக்கான வாழ்த்துகள். இன்றே
    சித்திரை மாதமும் பிறக்கிறது .சர்வாரி வருடமும்
    பிறக்கிறது.

    எல்லா நலங்களும் சிறக்க ,நோயகல, ஆரோக்கியம் மீள, மன நிம்மதி பெருக அன்னை
    பராசக்தி அருள்வாள்.
    மழை சிறந்து, தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும்.

    எங்கள் வீட்டில் வருடப்பிறப்பிறு இனிப்பு போளி
    உண்டு.
    அன்பு பானுமா அருமையாகச் செய்திருக்கும்
    மசாலா போளி பார்க்கவே அருமையாக இருக்கிறது.

    இதுவே கோதுமை மாவில் செய்ய முடியுமா
    என்று யோசிக்கிறேன்.
    அந்த எலாஸ்டிசிடி இருக்காது. நன்றி பானுமா.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோதுமை மாவிலும் செய்யலாம். அப்போது அது ஆலு பரோட்டாவாகிவிடும்.ஹா ஹா!நன்றி வல்லி அக்கா.

      நீக்கு
    2. கோதுமை மாவிலும் செய்யலாம். அப்போது அது ஆலு பரோட்டாவாகிவிடும்.ஹா ஹா!//

      ஹா ஹா ஹா அதே அதே...

      கீதா

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பகிர்வில், சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் புதிய முறையான சமையல் பக்குவம் நன்றாக உள்ளது.

    மசாலா போளி படங்களும், செய்முறைகளும் அற்புதமாக உள்ளன. வெல்லம் தேங்காய் சேர்ந்த இனிப்பு போளிக்கு துணையாக இதையும் இந்தப் பக்குவத்துடன் செய்து சாப்பிடலாம். இனிப்பு திகட்டாமல் நடுவில் ஒரு மாறுதலாக இருக்கும். (இதற்கு நெ. தழிழர் வந்து என்ன சொல்வாரோ?) அவர் கண்ணிலேயே படாமல் இருக்கக் கடவது என்று என்று சகோதரி சொல்லியிருக்கும் தைரியத்தில் நானும் இணை போளியை பற்றிய கருத்தை தைரியமாக குறிப்பிட்டு விட்டேன். ஹா.ஹா.ஹா.

    நானும் இதுவரை இதைச் செய்ததில்லை. இனிமேல் இதுபோல் ஒரு தடவை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். (இதற்கு தேம்ஸ நதிக்கரையிலிருந்து எதிர்ப்புக் குரல் வரும். ஹா. ஹா. ஹா.)

    அருமையாக கார மசாலா போளியை செய்து பகிர்ந்த பானுமதி சகோதரிக்கு என் பாராட்டுகளும், நன்றிகளும். பகிர்ந்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம். இன்று சித்திரை மாதம் பிறந்தாலும் வருடப்பிறப்பு கொண்டாட்டம் நாளைதான். பிறக்கப்போகும் புத்தாண்டு எல்லோருக்கும் நன்மையை கொண்டு வர பிரார்த்திக்கிறேன். லோகா சமஸ்தா சுகினோ பவந்து:

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம்.

    சித்திரைத் திருநாள் வாழ்த்துகள். இந்த வருடம் அனைவருக்கும் நன்மையைக் கொண்டு சேர்க்கப் ப்ரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல ரெசிப்பி. படங்களுடன் செய்முறை அழகாக வந்துள்ளது. பானுமதி வெங்கடேச்வரன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    இந்த மசாலா போளியை முதன் முதலில் பாண்டிபஜார் ஶ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையில்தான் பார்த்திருக்கிறேன், சாப்பிட்டிருக்கிறேன். இனிப்பு போளியில் விருப்பம் இருந்த அளவு இதில் இருந்ததில்லை. வேறு எங்காயும் மசாலா போளி சாப்பிட்டதில்லை.

    படம் ஆசையைத் தூண்டுது என்பதை ஒத்துக்கணும்.

    இப்போது மைதா உபயோகம் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். நான் கரைத்தமா தோசை அல்லது அப்பம் பண்ணுவதற்காக எப்போதாவது வாங்கினால்தான் உண்டு. மனைவி உபயோகிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரைச்ச மா தோசை வகைகளுக்கு மைதாமாவே சேர்க்க வேண்டாம். வறுத்து அரைத்த உளுத்த மாவு இருந்தால் போதும். தோசை மெலிதாக மொறுமொறுவென வரும்! நான் மைதாவே சேர்ப்பதில்லை.

      நீக்கு
    2. இல்லைனா உளுந்து அரைச்சுப் போட்டுக் கரைச்ச தோசை வார்க்கலாம்.

      நீக்கு
    3. கீசா மேடம்.. எனக்கு கரைச்சமா தோசையில் பிடித்தது அந்த கொழுக் கொழுக்னு இருப்பதுதான். அது மைதா சேர்த்தால்தான் வரும். முறு முறுவென தோசை (கரைச்சமா தோசை) ஓகே..நல்லாத்தான் இருக்கும். இந்தக் கரைச்சமா தோசை செய்வதே உடனே தோசை வார்க்கத்தான். உளுந்தை ஊரவைத்து அரைப்பதற்கு, இன்னும் கொஞ்சம் மெனெக்கெட்டு தோசை மாவே தயார் செய்துடலாமே.

      நீக்கு
  10. இன்று பின்னூட்டம் இடும்போதே நாளை சோக்க் கதையை வெளியிட்டுவிடக் கூடாதே என மனதில் தோன்றுகிறது. ரொம்ப வாரங்கள் முன்னால் ஷெடியூல் செய்வதால் இதனைக் கவனத்தில் கொண்டிருப்பார்களா எனவும் யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

  11. படம் ஆசையைத் தூண்டுவது என்பது உண்மைதான்

    பதிலளிநீக்கு
  12. மசாலா போளி நன்றாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. செய்முறை எளிதாக உள்ளது... வீட்டில் செய்ய சொல்லியாயிற்று...!

    பதிலளிநீக்கு
  14. சூப்பர்! இது,இது, இதைத்தான் நான் விரும்புகிறேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது மனைவி + மச்சினி (மட்டுமாவது) தன் பிறந்த வீட்டிற்கு சென்றே ஆக வேண்டிய சூழல் (விசேசம்)

      துணைவி, ரவா லட்டு செய்வதெல்லாம் சாதாரணம்... ஆனால் வீட்டில் சர்க்கரை அதிகம் இருப்பதில்லை... நான் 25 வருடங்களாக 'இனிப்பானவன்' என்பதும் ஒரு காரணம்...!

      இனிப்பு போளியும் செய்வதாக காதில் மெதுவாக வந்து விழுந்த செய்தி... அநேகமாக இன்று இரவு எனக்கு, சாப்பாடே மசாலா போளி தான் போல...!

      நன்றி...

      நீக்கு
  15. மசாலா போளி - எனக்கு இனிப்பு போளி ரொம்பவும் பிடிக்கும். மசாலா போளி சாப்பிட்டதில்லை. இங்கே மைதா பயன்படுத்துவதில்லை. ஊருக்கு வந்தால் தான் செய்து/சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். குறிப்பினை அனுப்பி வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. காலையில் பசியை தூண்டறீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது இரவாகிவிட்டது, மசாலா போளி வாங்கி சாப்பிட்டு விடலாம். நன்றி.

      நீக்கு
  17. சுவை.மசாலா போளி எங்கள் வீட்டில் பிடித்தமானது.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். நல்வரவு, காலை/மாலை/மதிய வணக்கம். இந்தப் புத்தாண்டு அனைவர் வாழ்க்கையிலும் ஒளியையும் சுபிக்ஷத்தையும் கொண்டு வருவதோடு எல்லோரையும் கொரோனா பிடியிலிருந்து விடுவிக்கவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  19. மைதாவே வாங்குவதில்லை. இப்போத் தான் மைத்துனர் விசேஷத்திற்காக சமையல்காரர் கேட்டிருந்தார்னு அரைக்கிலோ வாங்கி வைச்சது! அப்படியே இருக்கு! ஆலு பராந்தாவை மைதாவில் பண்ணினால் மசாலா போளியா? எல்லோரும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உருளைக்கிழங்கு கார போளி பத்திச் சொல்றாங்களேனு (அதான் பானுமதியின் மொழியிலே மசாலா போளி) இங்கே இருக்கும் கடையில் கேட்டோம். ஈ ஓடுகிறது. அது இங்கே வருவதில்லையாம். அதோடு கூடுதல் தகவலாக ரொம்பவே நெய்யைக் கொட்டி இருப்பாங்க, அதற்கு அவ்வளவு வரவேற்பு இல்லைனும் சொன்னார். சென்னையில் குறிப்பிட்ட இடங்களிலும், கோவையில் குறிப்பிட்ட இடங்களிலும் மட்டும் விற்பனைனும் சொன்னார். போனால் போகிறதுனு அவரிடம் சிறப்பு மிக்சர் வாங்கி வந்தால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நாம் செய்யும் சாதாரண மிக்சரையே சிறப்பு மிக்சர்னு கொடுத்திருந்தாங்க கேட்டால் இதில் வேர்க்கடலை, முந்திரிப்பருப்புப் போடுவோம். சாதாரண மிக்சரிலே போட மாட்டோம்னு பதில்! :P :P :P :P :P அப்புறமா அங்கே போவதே இல்லை.

    பதிலளிநீக்கு
  20. எல்லாத்தையும் விட நகைச்சுவை என்னன்னா இன்னிக்கு புதன்கிழமைனு நினைப்பிலே கேள்வி, பதிலைத் தேடினால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்சமையல் குறிப்பு! அப்புறமாத் தான் இன்னிக்குத் "திங்க"ற கிழமை, நாம தான் "திங்க"றதை மறந்துட்டோம்னு புரிஞ்சது. அப்போ நாளை செவ்வாயா? அதான் நெல்லை சோகக்கதைனு சொல்றாரா? நாளைய பதிவு யார் கதைனு லீக் ஆயிடுச்சா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹஹாஹ் :) கீதாக்கா .ஒருநாள் தள்ளி வரலாம் ஆனா ஒரேயடியா சண்டேலருந்து புதனுக்கு தாவிட்டீங்க :) 

      நீக்கு
    2. /அதான் நெல்லை சோகக்கதைனு சொல்றாரா? நாளைய பதிவு யார் கதைனு லீக் ஆயிடுச்சா என்ன /

      நானே இதை கேட்கலாம்னு நினைச்சேன். நீங்க கேட்டு விட்டீர்கள்.

      நீக்கு
    3. அதென்னமோ காலம்பரத்திலே இருந்து புதன்கிழமைனே நினைப்பு! இப்போக் கூட நாளை வியாழன் என நினைத்துக் கொண்டிருந்தேன். சில சமயங்கள் இப்படித் தான் என்னிக்கானும் ஞாயிறு போலவே இருக்கும். பார்த்தால் அன்னிக்கு புதன்கிழமைனு சொல்வாங்க!

      நீக்கு
    4. நேற்று நான் சனியா,ஞாயிறா என்ற குழப்பத்தில் இருந்தேன்.

      நீக்கு
  21. ஆலு பராந்தா இடுவதை விட இம்மாதிரித் தட்டிப் பண்ணுவது எளிது என்பதால் பானுமதிக்குப் போனால் போகுதுனு ஒரு ஓட்டு! :))))))

    பதிலளிநீக்கு
  22. ஆலு பராந்தா, ஆலு சமோசா, ஆலு போண்டா போன்றவற்றில் வெங்காயம் சேர்த்துப் பண்ணியதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இவற்றில் வெங்காயம் சேர்க்கின்றனர். நான் எப்போ பராந்தா, சமோசா மற்றும் ஆலு போண்டா பண்ணினாலும் வெங்காயம் இல்லாமலே பண்ணுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பானுமதிக்குப் போனால் போகுதுனு ஒரு ஓட்டு! :))))))// நன்றி,நன்றி.

      நீக்கு
  23. புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும். இந்தப் புத்தாண்டில் உலகம் முழுவதும் நன்மை விளைந்திட வேண்டும். இனி வரும் வருடங்களிலும் இப்படி ஒரு நிகழ்வை உலகம் சந்திக்காமல் இருக்கவும் வேண்டும்.

    கணொளிகளில் பல ப்ரெடிக்ஷன்ஸ் சொல்லப்படுவதாக (நான் நோக்கவே மாட்டேனாக்கும்.) எங்கள் வீட்டில் இருக்கும் ப்ரெடிக்ஷன்ஸ் பிலிவர்ஸ் சொல்லுகிறார்கள் அனைத்தும் நெகட்டிவ். நமக்கும் அதற்கும் வெகு தூரம். எனவே நாம் எந்த நெகட்டிவையும் பார்க்காமல் எல்லோரும் ஒரே மனதாக நேர்மறையாகவே சிந்திப்போம். எண்ணுவோம். செயல்படுவோம். ஒன்று போல் சிந்திக்க்ம் போது நல்லது நடக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. வெங்காயம் இல்லாமல் இம்மாதிரி உ.கி.மசாலா செய்து அதில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொண்டு மைதாமாவை மேற்சொன்ன மாதிரிப் பிசைந்து கொண்டு தட்டியோ அல்லது குழவியால் இட்டோப் பூரணத்தை உள்ளே வைத்துத் தட்டி எடுத்துக் கொண்டு எண்ணெயில் போட்டுப் பொரிக்கலாம். கசோடா/கசோடி என்பார்கள். இதற்கு உ.கி. தவிர்த்து பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றிலும் பண்ணுவது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ! கீதாக்கா கச்சோடி நினைவுப்படுத்திட்டீங்களே....சென்னைல இருந்த வரை செஞ்சேன் இங்க வந்து செய்யவே இல்லை/ ஆனால் இங்க பக்கத்துல இருக்கற வட இந்திய கடைகளில் சூடா செஞ்சு செஞ்சு கொடுக்கறாங்க. ஆனால் வாங்கினது இல்லை.

      கச்சோடி சாட் எல்லாம் இங்கு வந்து செய்யவே இல்லை. ஆனால் வீட்டில் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும் கச்சோடியும் சரி, கச்சோடி சாட்டும் சரி.

      கீதா

      நீக்கு
    2. ஆமாம், எனக்கும் பிடித்தது. வயிற்றையும் ஏதும் செய்யாது. தொட்டுக்கவும் எதுவும் தேவை இல்லை. அநேகமாக நான் வடக்கே போனால் இரவுகளில் இரண்டு கசோடிகளும் பால் கிடைத்தால் பால் இல்லைனா ச்சாஸ் எனப்படும் கரைத்த மோர் சாப்பிட்டுவிடுவேன்.

      நீக்கு
  25. ஹை பானுக்கா சூப்பர். நம்ம வீட்டு ஃபேவரைட். பார்சல் ப்ளீஸ்... உங்க வீட்டுப் பக்கத்துல இருந்தா எக்சேஞ்ச் மேளா வா இருந்திருக்கும்...ஹூம்!! ரொம்ப ஃபீலிங்க்..

    சரி சரி நெல்லை வரேன்னு சொன்னார்னு வைங்க அவருக்கு மட்டும் இந்தப் போளி செஞ்சு கொடுங்க!!!!!! ஸ்வீட் போளிய ஒளிச்சு வைச்சுருங்க ரகசியமா எனக்கு. ...ஹா ஹா ஹா ஹா ஹா...(எனக்கு இதுவும் பிடிக்கும்....இப்பத்தான் தெலுங்கு வருஷப் பிறப்புக்கு ஸ்வீட் நமக்கு ஆகாதுன்னு கொஞ்சமா செஞ்சுட்டு இதுவும் செஞ்சேன். கோதுமை மாவுலயும் செஞ்சேன். ஆனால் கோதுமை மாவை பராத்தாவுக்குப் பிசைவது போல அல்லாமல் போளிக்குப் போல கொஞ்சம் தளர்வாகப் பிசைந்து...)

    கிருஷ்ணா ஸ்வீட்ஸில் முழங்கை வழி வாரன்னு எண்னெயோ நெய்யோ அள்ளி ஊத்தியிருப்பாங்க ஆனா உங்க போளி பாருங்க சூப்பரா எண்ணெய் இல்லாம நல்லாருக்கு.

    ஆமாம் மிளகாய்ப் பொடி தூவி அது நல்லாருக்கும் அந்த டேஸ்ட். பார்க்கவே நாவூறுது பானுக்கா.

    ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னிக்குப் புது வருஷமா போளிக்கு ஆர்டர் வந்துருச்சு. நான் நைசா நாளைக்கு விஷு! ஸ்வீட் போரடிக்குது எனக்கு. காரப் போளி (இதுதான்!!!!) செஞ்சு தரேன்னு சொல்லித் தப்பிக்க முடியாது போல!!!இன்னிக்கும் செய்ய வேண்டி வரும் போல!!!! ஸ்வீட். ஹா ஹா ஹா ஹா ஆனா உ கி இருக்கு அப்ப மீக்கும் ஆச்சு!!!

      அக்கா மைதா பிசைந்திருப்பது சூப்பரா இருக்கு மழு மழுன்னு...

      கீதா

      நீக்கு
  26. அருமையான போளி . பார்க்ககவே மிக அழகாய் இருக்கிறது.

    செய்முறையும் மிக எளிது. கோதுமைமாவில் தான் செய்து இருக்கிறேன்.
    மைதா வாங்கியது இருக்கிறது. ஒரு நாள் செய்ய வேண்டும்.
    படம் மிக அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  27. இனிப்பு இருந்தா எட்டிபார்த்திருக்கமாட்டேன் காரம்னாதாலே ஓடி வந்தேன் .வீட்டில் மைதா இருக்கு  உகி யும்  இருக்கு செஞ்சிடறேன்  இன்னிக்கே :) .வாழை இலை இல்லை வெறுமனே தான் தட்டணும் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Angel13 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 2:42
      இனிப்பு இருந்தா எட்டிபார்த்திருக்கமாட்டேன்//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெரி பாட் அஞ்சு:))

      அதிரா நல்ல பிள்ளையாக்கும்:)) இனிப்பு பிடிக்காட்டிலும் எட்டிப் பார்ப்பேனே:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    2. இனிப்பு விஷயத்தில் மட்டும் காம்ப்ரமைஸ் ஆகவே முடில மியாவ் :))

      நீக்கு
    3. ஏஞ்சல், வாழை இலை இல்லேனா என்ன? நல்ல கெட்டியான நல்ல ப்ளாஸ்டிக் பேப்பர் இருந்தால் எண்ணெயைத் தடவிட்டு அதில் தட்டிக் கையால் எடுத்துக் கல்லில் போட்டுடலாம். நான் தட்டை எல்லாம் இப்போ அப்படித் தான் எண்ணெய் வரும் ப்ளாஸ்டிக் பேப்பர்களிலேயே செய்து தட்டிப் போட்டு விடுகிறேன். ஒட்டாமல் வருது.

      நீக்கு
    4. ம்ஹூம்ம்.. அஞ்சு பிளாஸ்ரிக் பாவிச்சால் நான் அடிப்பேன் ஜொள்ளிட்டேன்ன்:).. ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே கதையா எல்லோ இருக்குது:)).. ஓகே அக்காவாம் கர்ர்ர்ர்ர்ர்:))..

      கீசாக்கா, நீங்க நான் எல்லாம் பிளாஸ்ரிக் பாவிக்கலாம் ஏன் தெரியுமோ, நாங்கள் இதுபற்றி பெரிதாக உபதேசம் செய்வதில்லையெல்லோ:)).. நானும் தட்டையை உப்பூடித்தான் தட்டுவேன்... இன்று ஒரு வீடியோப் பார்த்தேன் அரிசி அரைச்சு தட்டை வடை செய்து காட்டினார், அது எப்படி வருமோ தெரியவில்லை, இருந்தாலும் தட்டை வடை செய்யும் ஆவல் அதிகமாகிட்டுது.. அதுக்கு முன் ஒரு இனிப்பு செய்யோணும்:))..

      நீக்கு
    5. ஸ்ஸ்ஸ் பெரியவங்க கீதாக்கா சொல்லும்போது குறுக்குக்கேள்வி கேக்கப்டாது :)அது  எப்பவாச்சும் யூஸ் பண்ணா தவறில்லை மைக்ரோவேவிலெல்லாம் யூஸ் செய்யக்கூடாதது ..எங்க ஜெசி மல்டிக்கு உணவு பாத்திரம் பிளாஸ்டிக்கில் யூஸ் பண்ணப்போ வாயில் புண் வந்தது அதனால்தான் சொல்றது தினமும் பயன்படுத்தக்கூடாதது என்னிக்காவது ஓகே 

      நீக்கு
    6. ந்ன்றி ஏஞ்செல். அலுமினியம் ஃபாயில் பேப்பரில் தட்டலாம். அதையும் குறிப்பிட்டிருகிறேனே கவனிக்கவில்லையா?

      நீக்கு
    7. அக்கா நாங்க 3 வாரமாச்சு கடைக்கு போயி .foil /பேக்கிங் பேப்பர் எதுவுமேயில்லக்கா வீட்ல .தனிமைப்படுத்தலை ஒழுங்கா follow செய்ரோம்க்கா :) 

      நீக்கு
  28. மெட்ராஸைல் இருக்கும்போது மைதா சப்பாத்தியுடன் இட்லி மிளகாய்ப்பொடி தொட்டு சாப்பிடுவேன் அது நினைவு வந்துச்சி 

    பதிலளிநீக்கு
  29. மிக அருமையாக செய்திருக்கிறீங்க பானு அக்கா, தெரிஞ்ச ரெசிப்பிதான், ஆனாலும் மறந்து போயிருந்தேன், ஞாபகப் படுத்தியமையால் செய்திடப்போறேன்.. நல்ல காரசாரமாக இருந்தால்தான் வீட்டில், சுடச்சுட முடிந்து போயிடும்.

    பதிலளிநீக்கு
  30. //தேவையான பொருள்கள்:
    மேல் மாவிற்கு://
    அப்போ ஃபீமேல் மாவும் இருக்குதோ?:)).. கொரொனா நேரத்தில புதுசு புதுசா எல்லோரும் பேசுகினமே கர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேணாம் அப்புறம் நான் வேற ஏதாச்சும் சொல்லிடுவேன் :)

      நீக்கு
    2. நன்றி அதிரா. என்னுடைய வீடியோ கேட்டீர்களா?

      நீக்கு
    3. வீடியோக் கேட்டு கொமென்டும் போட்டிட்டனே மோனிங்... நீங்கதான் கவனிக்கவில்லை கர்ர்ர்ர்ர்ர்:)..

      நீக்கு
  31. இங்கு அதிராவைத்தவிர ஆருமே சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதில்லைப்போல இருக்கு.. மருத்துநீர் வைத்துத் தோய்ஞ்சு கை விஷேடம் எடுக்க வாணாமோ??? கர்ர்ர்:)).. சரி சரி போயிட்டு வாறேன்ன்..
    அனைவருக்கும் இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர் நாளைக்குத்தான் சித்திரை நாளைக்குத்தான் தமிழ் புத்தாண்டு 

      நீக்கு
    2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. இலங்கை இந்திய நேரம் இன்றிரவு 7 மணிக்குப் பிறக்கிறது, நைட் 11.30 உடன் சுப முகூர்த்தம் முடிஞ்சிடுமாம்.. நாளைக்கு அரச விடுமுறை ஊரில்... நாளை செவ்வாய்க்கிழமை என்பதாலும், தொடர்ந்து அட்டமி நவமி வருவதாலும்.. இந்த நேரமே அனைத்தையும் முடிச்சுக் கொண்டாடிடோணும்.

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, நெல்லைத் தமிழர், பானுமதி, நான் அப்புறம் துரை இன்னும் சிலர் சொல்லி இருக்கோம் புத்தாண்டு வாழ்த்துகள். ஒழுங்காப் படிச்சாத்தானே! எங்கே! பதிவையே ஒழுங்காப் படிக்கிறதில்லை! :)))))))

      நீக்கு
    4. ஆஆஆவ்வ்வ் அப்பூடியா கீசாக்கா.. இன்று கொமெண்டை மினக்கெட்டுப் படிக்கவில்லை, போஸ்ட்டில் எந்த வாழ்த்தும் இல்லாததால் அடிச்சு விளாசிட்டு ஓடிட்டேன்ன்ன்... ஹா ஹா ஹா..

      நீக்கு
  32. நண்பர்களே, இப்போதுதான் வர முடிந்தது. இன்றே எங்கள் வீட்டில் தமிழ் புத்தாண்டு உதயமாகி விட்டது. ஆனால் ஒரு முக்கிய சொந்தத்தின் இழப்பால், பண்டிகை கிடையாது. பானு, சூப்பரோ சூப்பர். மசாலா போளியை பார்த்தவுடன் எங்கள் வீட்டில் ஒவ்வொரு வருடமும் செய்யும் தேங்காய் போளி நினைவிற்கு வந்தது. ஆஹா, ஆஹா, ஆஹா.............. எப்படி இருக்கும் சாப்பிட. எனினும் யாவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பழையன களைதலும் புதியன புகுதலும் இப்போதே ஆரம்பமாகி கொரோனா ஓடி மறைந்து மகிழ்ச்சி இறங்கி வந்து நம் யாவரையும் சூழட்டும். மறுபடியும் புதியதோர் உலகம் பிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  33. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் சார். பஞ்சாங்க படனம் ஆயிற்றா?

      நீக்கு
    2. பஞ்சாங்கம், ஆஷ்ரமம் எல்லாம் எடுத்துச்சொல்லி, பித்ரு தர்ப்பணம் ஆயிற்று; புத்தாண்டும் வந்துவிட்டது!
      வடை, பாயசத்துடன் பருப்புருண்டைக் குழம்புவேற தூள்பறந்தது!
      இந்தமாதிரி நாட்களில், இன்னும் விசேஷமாக நன்றிக்கடன் பட்டிருக்கிறட்டிருக்கிறது ஆண்வர்க்கம், பெண்களுக்கு!

      நீக்கு
    3. *...நன்றிக்கடன்பட்டிருக்கிறது...

      நீக்கு
  34. மசாலா போளிக்கு பதில் இனிப்பு போளியாக இருந்தால் நன்றாக இருக்கும். எனக்கு அது தான் ரொம்ப பிடிக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!