வெள்ளி, 3 ஏப்ரல், 2020

வெள்ளி வீடியோ : விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல அதுதான் அன்னையின் மலர்ப்பாதம்

1​972 இல் முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், முக்தா ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தவப்புதல்வன். 
சிவாஜி கணேசன் - கே ஆர் விஜயா நடித்துள்ள திரைபபடத்துக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.  Love is fine darling ​என்னும் பாடலைத்தவிர மற்ற மூன்று பாடல்களையும் எழுதி இருப்பவர் கவியரசர்.  அந்த ஆங்கிலம் கலந்த பாடலை ராண்டார்கை எழுதி இருக்கிறார்.





இன்றைய நேயர் விருப்பமாக வருவது இந்தப் படத்தில் வரும் "இசை கேட்டால் புவி அசைந்தாடும்" பாடல்.  விரும்பிக் கேட்ட நேயர் பெங்களூரு பானுமதி வெங்கடேஸ்வரன் (மற்றும் பலர்!)

டி எம் எஸ் குரலில் வரும் பாடல்.  தான்ஸேன்மியான் பாதிப்பில் உருவான பாடல் காட்சி.  

தான்ஸேன் தனது 'மேக் மல்ஹார்' ராகத்தைப் பாடி மழையை தருவித்ததாக, 'தீபக்' ராகத்தைப் பாடி விளக்குகளை ஏற்றியதாக சொல்வார்கள்.  'தீபக்' என்கிற ராகம் இப்போது கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது.  

தான்ஸேனை இஸ்லாம் மதத்துக்கு மாறச்சொல்லி அக்பர் வறுபுறுத்தி அவர் மகள் மெஹருன்னிசாவை மணமுடித்துத் தந்ததாக வரலாறு சொல்கிறது.



இங்கு சிவாஜி தான்சேனாக  "என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்.. என் பாடல் சேய் கேட்கும் மருந்தாகலாம்.. என் மேன்மை இறைவா உன் மருந்தாகலாம்" என்று கண்ணதாசன் வரிகளால் டி எம் எஸ் குரலில் பாடுகிறார்.



தான்ஸேன் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் வெளிவராத ஒரு படத்தில் ரவீந்திர ஜெயின் இசையில் கே ஜே யேசுதாஸ் பாடி இருக்கும் ஒரு ராகமாலிகை.  இந்தப் பாடல் பொது வெளியில் கேட்கக் கிடைக்காததாம்..  பாடலின் கீழே இருக்கும் இந்த கமெண்ட்ஸ் கொஞ்சம் சுவாரஸ்யமானவை.

- According to Yesudas, it was the most challenging song for him to sing. Song has been composed based on different Ragas like Bilaval, Kaafi, Bhairav, Yaman Kalyan, Khamaj, Asavari, Bahar, Darbari. Its taken 3 days to record this 13 minute ascending-descending song with 59 takes!! Orchestra team includes the legends like Hari Prasad chourasya, Pandit shiv Kumar Sharma, Partha Sarathi. A complete Legends Song!!

- "Shadaj ne paya" is one of the most difficult songs ever composed in Hindi (Bollywood) touching all 3 octaves. Raveendra Jain its music director recalls: When I played this song for Rafi, he told me 'Raviji, I would not be able to sing this song in this lifetime.' Hemant Kumar who I approached next told me that the very thought of singing this song made him tense. It was finally sung by Yesudas. "According to Yesudas himself, it was one of the most difficult songs he ever sang. 

இனி நேயர் விருப்பப் பாடலுக்கு வருவோம்!  'தவப்புதல்வன்' படத்தில் ஒரு விசேஷம் உண்டு.  ஒரு காட்சியில் - ஒரே காட்சியில் - வரும் எம் ஆர் ராதா மற்றும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் அவர் மகன் எம் ஆர் ஆர் வாசு இணைந்து நடிக்கும் காட்சி ஒன்று உண்டாம்.  நான் படம் பார்த்திருக்கிறேன்.  இந்தக் காட்சி நினைவில்லை.

இசை கேட்டால் புவி அசைந்தாடும் -அது 
இறைவன் அருளாகும் 
ஏழாம் கடலும், வானும் நிலமும் 
என்னுடன் விளையாடும் - இசை 
என்னிடம் உருவாகும்...   இசை என்னிடம் உருவாகும் 

என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் 
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம் 
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம் 
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன் 
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்.

விதியோடு விளையாடும் ராகன்களே 
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே
கனலேந்தி வாருங்கள் தீபங்களே 
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே 
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே 

கத்தும் கடலலை ஓடி ஓடி வரும் 
உந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே 
எந்தன் இசையுடன் பாடல் கேட்டபின்னும் இன்னும் வரவில்லை 
செய்த பாவம் என்ன தீபங்களே 
கண்ணில் கனல் வரப் பாடல் வேண்டுமெனில் 
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே
தீபங்களே    தீபங்களே    தீபங்களே    தீபங்களே   




இனி என் விருப்பத்துக்கு வரவா?  1976 இல் வெளிவந்த திரைப்படம்.  சிவகுமார் - அல்கா (ஹிந்தியிலிருந்து) நடித்த திரைப்படம்.  டி என் பாலு கதை வசனத்தில், விஜயன் இயக்கத்தில் புலமைப்பித்தன் பாடல்களுக்கு எம் பி ஸ்ரீநிவாசன் இசை.  அவருக்கு உதவி வி எஸ் நரசிம்மன்!  ஆயிரம் பூக்கள் மலரட்டும், கண் சிமிட்டும் நேரம், கல்யாண அகதிகள் உள்ளிட்ட சில படங்களுக்கு பின்னாளில் இசையமைத்தவர்.



எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.  அவர் மறைந்த நாள் ஏப்ரல் 22 ம் தேதி.    அடிக்கடி போடச்சொல்லி கேட்பார்.



தாயின் பெருமையை புலமைப்பித்தன் மிக அருமையான வரிகளில் வடித்திருக்கிறார் என்றால், எம் பி ஸ்ரீநிவாசன் அவர்களின் இனிமையான டியூனில் எஸ் பி பி அதை அற்புதமாக பாடி இருக்கிறார்.



அந்தக் கால கதாநாயகன் அறிமுகக் காட்சியின் கடமைப்படி சிவகுமார் கன்றாவியான ஒரு மேக்கப்பில் ஒரு பாடல் பாடி ஆடிக்கொண்டே ஊருக்கு வரும் காட்சி!

ஒரு சின்னப் பறவை.. 

ஓரு சின்னப் பறவை அன்னையைத் தேடி வானில் பறக்கிறது 
அதன் சிந்தனை எல்லாம் தாயவள் அன்புத் தேனில் குளிக்கிறது 

காலைப்பொழுதில் பனித்துளி எங்கும் பன்னீர் தெளிக்கிறது - மென் 
காற்றுக் குளிர்ந்து வீசிடும்போது உள்ளம் சிலிர்க்கிறது 

அன்னை என்பது மானுடம் அல்ல, அதுதான் உலகத்தில் தெய்வீகம் 
அன்றவள் சொன்னது தாலாட்டல்ல ஆன்மா பாடிய சங்கீதம் 
ஆன்மா பாடிய சங்கீதம் 

வேதம் என்பது வேறேதும் அல்ல தாயவள் கூறிய உபதேசம் 
விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல 
அதுதான் அன்னையின் மலர்ப்பாதம் 
அதுதான் அன்னையின் மலர்ப்பாதம் 





132 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். இன்றைய தினம் நல்ல தினமாகட்டும்.

    பதிலளிநீக்கு
  2. எம் பி ஸ்ரீனிவாசன், பெரிய இசைக்குழுவிற்கு உரிமையாளர்.
    கோரஸ் பாடல்கள் வானொலி நிலையத்தில் கேட்டுக் கொண்டே இருக்கும்.

    அவரது இசை அமைப்பும் தனித்துவம் கொண்டதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. இரண்டாவதாக வரும் அவர் பாடலைக் கேட்டு
    ரசிக்கலாம். பார்க்க அவசியம் இல்லை.
    உங்கள் தந்தைக்குப் பிடித்த பாடல்
    நல்லதாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம்.

    நலமே விளையட்டும்.

    முதல் பாடல் இனிய பாடல். இரண்டாவது பாடல் கேட்ட நினைவில்லை. பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். நல்ல பாடல். கேட்டுப் பாருங்கள்.

      நீக்கு
    2. இரண்டாவது பாடலும் கேட்டேன் ஸ்ரீராம். கொஞ்சம் கேட்ட பிறகு கேட்ட நினைவு வந்தது. நல்ல பாடல் தான்.

      நீக்கு
  5. முதல் பாடல் மிக மிகப் பிரபலம்.

    மாலைக் கண் நோயால் அவதிப்படும் சிவாஜி.
    கொஞ்சம் மிகையான நடிப்புதான்.
    ஆனால் பாடல் நம்பிக்கை தரும் வண்ணம் டி எம் எஸ்
    குரலில் கம்பீரமாக ஒலிக்கும்.
    உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்று சொல்வார்கள். இசைக்குக்
    கிடைத்த அங்கீகாரம்.

    இதே போல் இன்னோரு பாடல் நினைவுக்கு வருகிறது.
    "நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்''
    நல்ல பாடல்களுக்கு மிகமிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகையான நடிப்பு என்பதை நான் மென்மையாக மறுத்து விட்டு நின்று விடுகிறேன்.  பாடல் நல்ல பாடல் என்பதில் சந்தேகம் இல்லை.

      நீங்கள் சொல்லி இருக்கும் இரண்டாவது பாடல் என் லிஸ்ட்டில் இருக்கும் பாடல்.  அதோடு வேறு இரண்டு பாடல்களும் இணைக்கவேண்டி இருக்கும் என்பதால் தள்ளிப்போகிறது!

      நீக்கு
    2. அச்சோ, சிவாஜியை நான் ஒண்ணும் சொல்லலை ராஜா. என் தம்பிகிட்டயும் இப்படி
      மாட்டிப்பேன். மன்னிக்கணும் மா.

      நீக்கு
  6. அன்பு துரையை இன்னும் காணவில்லையே.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் அனைவருக்கும்.

    மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார்
    நிலமிசை நீடு வாழ்வார்

    (கடைசி பின்னூட்டம் கண்ணில் பட்டது. அதனால் குறள்)

    பதிலளிநீக்கு
  8. இசைகேட்டால் - என் ஆல்டைம் ஃபேவரைட். நல்ல ரசனை.

    அடுத்த பாடல் வரிகள் பாடலை நினைவுபடுத்தவில்லை. அப்புறம் கேட்கிறேன் (சிவகுமார் பாடல்)

    இன்று கேஜே ஏசுதாசின் பாடலைக் கண்டிப்பா கேட்டுப் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொன்னா தவறா நினைக்கக்கூடாது. எனக்கு கேஜே ஏசுதாசின் பாட்டு (13 நிமிடப் பாடல்) ஆஹா ஓஹோ என்று புகழும் அளவு இசை ஞானம் இல்லை. நம்ம ஊர்லயும் கர்நாடக இசையிலும் ஏகப்பட்ட ராகமாலிகா என் மனதை மயக்கியிருக்கு. திக்குதெரியாத காட்டில், ஸ்ரீசக்ரராஜ சிம்ஹாச............................. தான்சேன் பாடல் என் மனதை மயக்கலை. (@கீதா ரங்கன்... Note this point and counter)

      நீக்கு
    2. நெல்லை சார், உண்மை கூறினீர். ஸ்ரீசக்ரராஜ பாடலை மஹாராஜபுரம் சந்தானம் பாடனும். நாம கேக்கனும். உருகுவார். அந்த அம்மன் நேரில் வந்து நின்று பாடல் கேட்டு விட்டு போவார். அதே போ திருமதி டி.கே. பட்டம்மாள் (இவர் எனது ஒன்று விட்ட அத்தை. என் கல்யாண நலங்கு மற்றும் ஊஞ்சல் பாடல்கள் இவரால் பாட பட்டவை). பாடும் "என்ன தவம் செய்தனை, யசோதா" என்ற பாட்டும் என்றும் கேட்கலாம்.

      நீக்கு
    3. ஆனால், இப்பாடலுக்கு என் மனதில் ஒரு தனி இடம் உண்டு. over acting ஆனாலும், தான்சேனை நம் மனதில் கர்ணனை நிருத்தியது போ நிருத்துகின்றார் சிவாஜி. அதற்கேற்றார் போல் பாடியிருக்கின்றார் டி.ம்.ஸ். என்றும் நினைவில் நிற்கும் பாடல்.

      நீக்கு
    4. ஒரு நாள் போதுமா - இந்த ஒரு பாடல் போதாதா?

      நீக்கு
    5. ரமா ஸ்ரீநிவாசன் - எனக்கு டி.கே பட்டம்மாள் குரல் (கொஞ்சம் பேஸ் வாய்ஸ்... ஆண் குரல் போல) ரொம்ப ரொம்பப் பிடிக்கும். மூவரில் எனக்கு இவர் குரல் ரொம்பப் பிடிக்கும். எம்.எஸ்.எஸ் குரல் கேட்டுக் கேட்டு, ரொம்ப பரிச்சயமானதுனால அவருடைய பாடலும் பிடிக்கும் இருந்தாலும் இரண்டாவதாகத்தான்.

      சிவாஜி ஓவர் ஆக்டிங் என்ற உண்மையை உரக்கச் சொல்லிட்டீங்க. அதை டிஃபெண்ட் பண்ண வருவாங்க பா.வெ. அவர்கள். ஹா ஹா

      நீக்கு
    6. கே ஜே யேசுதாஸ் பாடிய அந்தப் பாடல் என்னையும் பெரிதாகக் கவரவில்லை!  மற்றபடி அனைத்து கருத்துக்களுக்கும்...   "ஆமாம் சாமி..."

      நீக்கு
    7. தான்சேன் பாடல் என் மனதை மயக்கலை. (@கீதா ரங்கன்... Note this point and counter)//

      நெல்லை அதில் வரும் ஸ்வரங்களைத் தவிர வேறு எதுவும் கவரவில்லை. அதைவிட மிக மிக அழகான ராகமாலிகைப் பாடல்கள் ந்ம்ம தமிழ் திரைப்படங்களில் உண்டே..

      அதிசய ராகம்...எம் எஸ் வி!!! பாடல் என்ன ஒரு பாட்டு!!!! அசாத்தியமான இசையமைப்பு ராகம்...எல்லாமே அப்பாடல்...இதுதான் இப்ப டக்குனு நினைவு வந்தது இன்னும் நிறைய இருக்கு...

      கீதா

      நீக்கு
    8. ஒரு நாள் போதுமா - இந்த ஒரு பாடல் போதாதா?//

      அதே அதே....நெல்லை

      கீதா

      நீக்கு
    9. ஆமாம் ரமா டி எம் எஸ் செம வாய்ஸ்..ரொம்ப அருமையா பாடியிருப்பார். கணீர் குரல்!

      கீதா

      நீக்கு
    10. ஜிவாஜி பற்றிய உண்மையை உரக்கச் சொன்னவர்களுக்கு நன்னியோ நன்னி! :)))))) இந்தக் கருத்தை பானுமதிக்குச் சமர்ப்பிக்கிறேன். :)))))))))))

      நீக்கு
  9. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும்.

    தொற்று எப்போது நீங்கி உலகம் இயல்பு நிலைக்குத் திரும்புமோ என்று ஒவ்வொரு நாளும் காலையில் எழும் போது தோன்றுகிறது. எல்லோர் மனதிலும்.

    இசை கேட்டால் புவி அசைந்தாடும்...இந்தத் தொற்றுக்குக் காரணமானது அசைந்து கொடுக்குமா?

    மிகவும் பிடித்த பாடல் இது. நிறைய ஸ்வாரஸ்யமான தகவல்கள் ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...  தோற்று நோய்க்காகதான் பானு அக்கா இந்தப் பாடலைப் போடச் சொன்னார்.  

      நீக்கு
    2. ஓ!!! பானுக்கா நன்றி ஒரு அருமையான பாடலை அதுவும் கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்....கருணா ரசம், பக்தி, காருண்யம் என்று கலந்து கட்டி பல ரசங்களைக் கொடுக்கும் ராகம்...எல்லா நேரமும் பாடலாம் என்றதான ராகம்...

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    3. //..தொற்றுக்குக் காரணமானது அசைந்து கொடுக்குமா?//

      இசையைக் கேட்டுவிட்டது போலிருக்கிறது அது. அசைந்து ஆடிக்கொண்டிருக்கிறது. தன் நடனத்தை எல்லோரும் பார்க்கவேண்டுமே என நாடு நாடாகப் போய் ஆடுகிறது..

      நீக்கு
  10. தாஸேட்டன் பற்றிய தகவல்கள் புதிது ஸ்ரீராம். ...ஆச்சரியமும்...கண்டிப்பாக அந்தப் பாடலைக் கேட்கிறேன்...கேட்டுவிட்டு வருகிறேன்

    இப்ப மலையாள திரையுலகில் ஷரத் மிக மிகக் கடினமான இசை அமைக்கிறார் என்று சொல்லப்படுவது உண்டு. பெரும்பான்மையான பாடல்களில் ஸ்வரபேதம் செய்துதான் அமைப்பார் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..  ஷரத் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். 

      நீக்கு
  11. 'தீபக்' என்கிற ராகம் இப்போது கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. //

    புரியலையே ஸ்ரீராம்? இந்த ராகத்தில் அமைந்த பாடல் ஜாம்பவான் குலாம் முஸ்தஃபா கான் பாடி இருப்பது...https://www.youtube.com/watch?v=k25zubw8j8E

    இந்தப் பாடலை நான் டவுன்லோட் செய்து வைத்திருந்தேன். மேக்மல்ஹார் தேடிய போது இன்னும் பல ஹிந்துஸ்தானி ராகங்கள் நம் கர்நாட்டிக் ராகங்களுக்கு இணை என்று சொல்லப்படுவதை தேடிய போது கிடைத்து டவுன்லோட் செய்து வைத்திருந்தேன். இது கர்நாடக சங்கீதத்தில் தீபகா என்று சொல்லப்படுவதாக அப்போது அறிந்தேன் ஆனால் கர்நாடக சங்கீதத்தில் இந்த தீபகா ராகத்தில் எந்தப் பாடலும் கிடைக்கவில்லை. அதைத்தான் சொல்லியிருக்கீங்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு விவரம் சொல்ல தெரியவில்லை கீதா...    படித்ததை வாந்தி எடுத்திருக்கிறேன்!!!!!

      நீக்கு
  12. https://www.youtube.com/watch?v=LjnQLjUAk2E

    ஸ்ரீராம் நீங்கள் தான்சேன் பற்றி சொல்லியிருக்கும் காட்சி இதுதானோ?

    இதில் தீபக் மற்றும் மல்ஹார் ராகங்கள். தீபம் ஏற்றப்படுவது ஒரு புறம் மற்றொரு புறம் மழை தருவிக்கப்படுவது என்று ஒரு போட்டி போன்று காட்சி

    இதுவும் ராகங்களுக்காக டவுன்லோடு செய்து வைத்திருந்த நினைவு அதான் தேடி எடுத்து இதோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இந்தக்  காட்சி எல்லாம் பார்க்கவில்லை கீதா...!!!

      நீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இந்த வாரம் தேர்ந்தெடுத்த பாடல்கள் அருமை. இதில் முதல் பாடல் நன்றாக இருக்கும். நானும் மிகவும் விரும்பி அடிக்கடி கேட்டுள்ளேன். இரண்டாவது கேட்ட நினைவில்லை. கேட்டால் நினைவுக்கு வரும். பிறகு இரண்டையும் கேட்கிறேன். கேட்டு விட்டு மறுபடியும் வருகிறேன்.

    நான் இன்றும் தாமதம். நேற்றைய பதிவுக்கும் நேற்று இரவு கருத்துரை தந்துள்ளேன். நேற்று லேட்டாக தூங்கி எழுந்த தாமதத்தின் விளைவு அங்கும் ஒரு பிரார்த்தனை. ஹா. ஹா.

    தங்களின் அவசரத்தில் என் பதிவுக்கு வந்து கருத்து தந்தமைக்கு நன்றி. மற்றும் கருத்து தந்த அனைவருக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை கமலா அக்கா...   நிதானமா படிச்சு சொல்லுங்க...  அதனால் என்ன!   நன்றி.

      நீக்கு
  15. "ஒரு சின்னப்பறவை அன்னையைத் தேடி"
    தினந்தோரும் இலங்கை வானொலியில் கேட்ட பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   நான் கெஸெட்டில் பதிவு செய்து வைத்திருந்தேன்!

      நீக்கு
  16. இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்... முதல் பாடலை பள்ளிக் காலத்தில் பாடி உள்ளேன் !

    பதிலளிநீக்கு
  17. திரு கில்லர் ஜி அவர்கள் சொல்வது போல
    அப்போதைய இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்...

    அம்மா பாடல் வரிசையில்
    இதுவும் ஒரு நல்ல பாடல்..

    மற்றபடிக்கு ஒன்றும் இல்லை...

    பதிலளிநீக்கு
  18. அக்குபர் காலத்துல தான்சேனை கொடுமைப்படுத்தி வாங்கப்பட்ட பாடல் விஷயம் தான் பெரிதாகப் பேசப்பட்டு மண்டையில் பதிய வைக்கப்பட்டது...

    ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசையால் நிகழ்த்திய அற்புதங்கள் பேசப்படுவது இல்லை.. புகழப்படுவதில்லை..

    அப்படிப் பேசினால் நம்மவர்களாலேயே
    மதவாதிகள் என்று இகழப்படும் அவலம்...

    எப்படியோ வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம்மவர்களாலேயே மதவாதிகள் என்று இகழப்படும் அவலம். // - காலையிலேயே இந்த போலி மதச்சார்பின்மைவாதிகளை நினைவுபடுத்திட்டீங்களா?

      நீக்கு
    2. மதவாதிகள் கருத்தை விடுவோம். அதேபோல எல்லா நல்ல பாடல்களையும் ரசிப்போம்.

      நீக்கு
  19. இசை கேட்டால் புவி அசைந்தாடும்...

    அருமையான சந்தங்களுடன் அழகு தமிழ்ப் பாடல்...

    கவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய அற்புதங்களுள் இதுவும் ஒன்று...

    பதிலளிநீக்கு
  20. திருவருட் செல்வர் என திரு. AP நாகராஜன் அவர்கள் வழங்கிய திரைப்படம் எல்லாருக்கும் நினைவில் இருக்கும்...

    அதில் நாவுக்கரசர் - அப்பூதி அடிகளின் மகனை உயிர்ப்பிக்கும் காட்சியில் மிகவும் ஏளனமாகப் பேசப்பட்டார்...

    இப்போதும் தமிழன் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருப்பவர்களை இதை ஒத்துக் கொள்ளச் சொல்லுங்களேன் ... பார்ப்போம்..

    குறிப்பு - நாவுக்கரசர் தமிழர்...

    இன்றும் நம் பிள்ளைகளுக்கு இப்படியான நிகழ்வுகள் தெரியாது..

    திருமழிசை ஆழ்வாரின் பின்னால்
    பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு பரந்தாமன் போனதெல்லாம் தனி விஷயம்...

    வாழ்க தமிழ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை சார், என் கணவர் என்னை காஞ்சியில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அழைத்து சென்றிருக்கின்றார். ஒவ்வொரு கோவிலின் சரித்திரத்தையும் கூறி காண்பித்திருக்கின்றார். பச்சை வண்ண பெருமாள், பவழி வண்ண பெருமாள், யதோத்தகாரி சன்னதி ஆகிய almost எல்லா கோவில்களையும் பார்த்துள்ளேன். நன்றி என் கணவருக்கு உரித்தாகுக.

      நீக்கு
    2. கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றும் முன் தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களிடமும் அங்கீகாரம் பெற்று வர வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தில் உள்ளவர்கள் கூறிவிட,கம்பர் சிதம்பரம் செல்கிறார். அங்கு மூவாயிரம் அந்தணர்களுள் ஒருவருடைய குழந்தையை அரவம் தீண்ட இறந்து விடுகிறான். கம்பர் பெருமாளை வேண்டி ஒரு பதிகம் பாட, இறந்த குழந்தை மீண்டும் உயிர் பெற்றது என்றும் ஒரு வரலாறு உண்டு.  

      நீக்கு
  21. இதெல்லாம் எனது ஆதங்கம் தான்...
    மற்றபடிக்கு வேறொன்றுமில்லை...

    நல்ல பாடல்களைத் தொகுத்து வழங்கி
    மனதைப் பழைய நினைவுகளில் ஆழ்த்தி வரும் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  22. தவப்புதல்வன் தஞ்சை ஞானம் டாக்கீஸில் வெளியானது...

    சரபோஜி கல்லூரியில் PUC படித்துக் கொண்டிருந்தேன்..

    MGR கட்சி ஆரம்பித்ததும் திருச்சி க்ளைவ் ஹாஸ்டலில் வெட்டு குத்து நடந்ததும் அப்போது தான்...

    ஒழுங்காக கல்லூரியை நடத்த விடவில்லை அப்போதைய சில அமைப்புகள்..
    நான் தேர்ச்சி பெற்றது பெரிய விஷயம்...

    சிவாஜி ரசிகன் என்றாலும் இன்றுவரை தவப்புதல்வன் படத்தைப் பார்த்ததில்லை..

    இப்போது அந்த ஞானம் டாக்கீஸ் வணிக வளாகமாக ஆகி விட்டது....

    பதிலளிநீக்கு
  23. சிவாஜி விஜயா படத்திற்குக் கீழே:
    ’என் மேன்மை இறைவா உன் மருந்தாகலாம்’ என வந்திருக்கிறது!

    இறைவன் மருந்தைத் தேடிக்கொண்டிருக்கவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவனுக்கு மருந்தில்லை. இறைவன் கொடுக்கும் மருந்து.

      நீக்கு
    2. நான் சொல்வது அதை அல்ல.

      ‘என் மேன்மை இறைவா உன் மருந்தாகலாம்’ என்பதே தவறான வரி - நீங்கள் கீழே கொடுத்திருக்கும் முழுப்பாடல் வரிகளோடு ஒப்பிட்டுப்பார்த்தால்! பாடலில் ‘உன் அருளாகலாம்’ என வருகிறதே. அதைத்தான் சொன்னேன். எதைச் சரிசெய்வது என்று முடிவெடுங்கள்..!

      நீக்கு
    3. மருந்தைதான் நீக்க வேண்டும். ஆனால் கணினி கஷ்டம் கொடுக்கிறது. கணினி மருத்துவர் வரவும் பதினைந்து தேதி வரை வழி இல்லை! கேஜிஜியே துணை!

      நீக்கு
    4. கணினியாண்டவர் கைவசம் இருக்கையிலும் இத்தனைக் கஷ்டமா !

      நீக்கு
    5. எனக்கே கொஞ்சம் தெரியும். Ram மாற்ற வேண்டிய சூழலாயிருக்கலாம். ஒரு 8 GB, ஒரு 4 GB Ram போட்டிருக்கிறேன். ஏற்கெனவே பிரச்னை வந்தபோது அண்ணன் மகன் உதவியுடன் ஒன்றைக் கழற்றி, ஒன்று மாட்டி, ஸ்லாட் மாற்றிப்போட்டு எல்லாம் செய்தாச்சு... இப்போ என்னன்னு பார்க்கணும்.

      நீக்கு
    6. சீனாவின் சதியோ -Ramona -வாக இருக்குமோ !

      நீக்கு
  24. பலரும் விரும்பி கேட்டிருந்தாலும், என் பெயரை முதலில் குறிப்பிட்டதற்கும், வி.கே. பாடலை ஒளி பரப்பியதற்கும் நன்றி. இந்தப்  பாடலின் அழகை சூப் சிங்கர் ஜுனியரில் ஒரு பையன் மிகச் சிறப்பாக பாடியபொழுதுதான் உணர்ந்தேன். அதுசரி, என்னவோ எங்கள் ப்ளாகில் ஏழெட்டு பானுமதிகள் இருப்பது போல் என்னை பெங்களூர் பானுமதியாக்கிவிட்டேர்களே? நியாயமா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி.. ஹி... ஹி... சும்மா ஒரு ஜாலிக்கு...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா பானுக்கா காலையிலேயே எனக்கும் தோன்றி கேட்க நினைத்து மறந்து விட்ட ஒன்ற

      கீதா

      நீக்கு
  25. ஜேசுதாஸின் பாடல் மிக அருமை. அவருக்கென்ன பாடுவதற்கு? ஒரு சின்னப் பறவை பாடல் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. தான்சேன் பற்றிய தகவல்களில் தெரிந்ததும், தெரியாததும் இருந்தன. வழக்கம்போல் சிவாஜியின் வாயசைப்பு வியக்க வைத்தது. இத்தனைக்கும் பாடல் காட்சிகளில் அவர் பாட மாட்டாராம். வெறும் வாயசைப்பு மாத்திரமே. என்னவொரு கலைஞன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// என்னவொரு கலைஞன்...///

      ஆனாலும் மிகை நடிப்பு என்று இழித்தும் பழித்தும் அவர் மனதை நோகச் செய்தார்களே...

      ரிக்‌ஷாக்காரன் படத்திற்காக எம்ஜாருக்கு பாரத் பட்டம் கிடைத்ததை நினைவு கூரலாம்...

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்....

      அந்தச் சமயத்தில் பா வரிசைப் படங்களில் நடித்து நடிப்பின் முழுப் பரிமாணத்தை சிவாஜி தொட்டிருந்தார். விருதுக் குழு டிஸ்கஷ் செய்தபோது ஒரு புண்ணியவான் "இந்தமுறை சந்தேகமில்லை. அவருக்குத்தான் கொடுக்கணும்" என்று பெயர் குறிப்பிடாமல் சிவாஜியை மனதில் நிறுத்திச் சொல்ல, இன்னொரு புண்ணியவான், நீங்கள் சொல்வது எம்ஜிஆரைத்தானே என்று கேட்க, கெட்ட பெயர் எடுக்க விரும்பாமல் எம்ஜிஆர் என்றே ஒத்துக்கொண்டாராம். இதுதான் எம்ஜிஆர் பாரத் பட்டம் பெற்ற கதை.

      எம்ஜிஆர் சிறந்த நடிகர் (அந்த இலக்கணப்படி) சிவாஜியை விட, என்பதை எம்ஜிஆரே ஒத்துக்கொள்ள மாட்டார்.

      சிவாஜி ஓவர் ஆக்டிங். காரணம் நாடக மேடையில் ஓவர் ஆக்டிங்தான் கடைசி வரிசைக்கும் கொண்டு சேர்க்கும். சினிமாவில் ஓவர் ஆக்டிங்கிற்கு சிவாஜியே சொன்னது, "கிராமத்து எளிய ரசிகனுக்கும் அழுத்தமான நடிப்புதான் பாத்திரத்தின் தன்மையைக் கொண்டு சேர்க்கும் என்பது. சோவிடம் தனிப்பட்ட முறையில் அமெரிக்கையாக ஒரு காட்சியை நடித்துக் காண்பித்து சோவை அசந்துபோக வைத்திருக்கிறார் சிவாஜி. கூடவே, இதுமாதிரி நடித்தால் படித்தவர்கள் தவிர வேறு யாரும் இம்ப்ரெஸ் ஆக மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

      நீக்கு
    3. நல்ல தகவல் நெல்லை. நானும் படித்த ஞாபகம் இருக்கிறது.

      நீக்கு
  26. தவப்புதல்வன் பாம்பன் ஆயிஷா திரையரங்கில் (கூரை கொட்டகை மணலை குவித்து உட்கார்வது) பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  27. காலம் வென்ற பாடல்கள்....மீண்டும் கேட்க உடன் வந்தது அன்றைய நாளைய இனிய நினைவுச் சுகங்களும்....வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  28. அப்புறம் இன்னும் ஒன்று...
    அதையும் சொல்லி வைப்போம்...

    இசை கேட்டால் புவி அசைந்தாடும்...

    பாடல் எனக்கு மனப்பாடம்...

    வயல் வெளிகளில் பாடிக் கொண்டு நடந்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நானும் அடிக்கடி முணுமுணுத்திருக்கேன் இந்தப் பாடலை. ஆனால் எந்தப் படத்தில்னு தெரியாது.

      நீக்கு
  29. தவப்புதல்வன் படம் பார்க்க பிடிக்கும். நீங்கள் பகிர்ந்த பாடலும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  30. ஒரு சின்னப் பறவை பாடலும் நிறைய கேட்டிருக்கிறேன். பிடித்த பாடல்..

    எஸ்பிபியின் குரல் வளம் என்ன ஒரு வளம். இப்போதும் கூட...அப்பலருந்து இப்ப வரை...சான்சே இல்லை..வரிகள் அருமை...இதுவரை பாடல் மட்டுமே கேட்டதுண்டு..இப்ப வரிகளும் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  31. ஸ்ரீராம் அந்த ஹிந்திப் பாடல் பல ராகங்கள் மெட்டு...தாசேட்டன் பாடினது கேட்டேன்...அது அத்தனை கஷ்டமான இசையமைப்பாகத் தெரியலை ஒரு வேளை அத்தனைக் கவராததால் இருக்குமோ? தாசேட்டன் பாடினது ஓகெ ஆனால் அந்தப் பாட்டு ஏனோ மனதைத் தொடவில்லையே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... "அப்போ" அது கஷ்டமாய் இருந்திருக்கலாம். இப்ப இன்னும் ரொம்ப தூரம் முன்னேறிட்டோம்.

      நீக்கு
    2. //அது அத்தனை கஷ்டமான இசையமைப்பாகத் தெரியலை//  எனக்கும் இதேதான் தோன்றியது. நம்முடைய சொற்ப அறிவை வைத்துக் கொண்டு பேச வேண்டாம் என்றிருந்து விட்டேன். 

      நீக்கு
  32. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது வெள்ளி வீடியோ : விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல அதுதான் அன்னையின் மலர்ப்பாதம் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  33. பழைய பாடல்கள் எப்போதுமே எனக்கு பிடிக்கும். சிவாஜி நடித்த பாடல்கள் தனிச்சிறப்பு. நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  34. // (மற்றும் பலர்!)//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    இன்று இரு பாட்டுக்களும் அருமை.. முதல் பாட்டு நீண்ட நாட்கள் காதில் கேட்கவில்லை, இன்று முழுவதும் கேட்டேன்..

    ஒரு சின்னப் பறவை...... ரிபீட்டில் கேட்ட பாட்டாச்சே.. என நினைகையில் கில்லர்ஜி மேலே சொல்லியிருக்கிறார் இலங்கை வானொலியில் எப்பவும் ஒலிக்கும் என... அப்போதான் நினைவு வருது... எனக்கும் அதனாலதான் அடிக்கடி கேட்ட அழகிய பாடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரும்பிக்கேட்ட நேயர்கள் பெயர்கள் சொல்லும்போது அப்படிதானே சொல்வார்கள்..

      நீக்கு
  35. இசை கேட்டு மகிழ்ந்தேன்.
    இரண்டு பாடலும் பிடித்த பாடல்.
    //அந்தக் கால கதாநாயகன் அறிமுகக் காட்சியின் கடமைப்படி சிவகுமார் கன்றாவியான ஒரு மேக்கப்பில் ஒரு பாடல் பாடி ஆடிக்கொண்டே ஊருக்கு வரும் காட்சி!//

    நானும் நினைத்து இருக்கிறேன் "ஏன் இப்படி அசிங்கமாய் மேக்கப் " என்று .

    கே.ஜே .யேசுதாஸ் பாடிய பாடலையும் கேட்டேன்.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... வாங்க கோமதி அக்கா... பாட்டை மட்டும் ரசிச்சுடுவோம்!

      நீக்கு
  36. சரி... நேற்று Fb ல் கேட்ட கேள்விக்கு இன்று இங்கே பதிலைச் சொல்லி விடலாமா!...

    பதிலளிநீக்கு
  37. //எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்
    எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்.

    விதியோடு விளையாடும் ராகன்களே
    விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே
    கனலேந்தி வாருங்கள் தீபங்களே
    கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
    கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே // இப்போது நம் பிரதமரின் வேண்டுகோளும் இது தானே. கனலேந்தி வரும் தீபங்களால் நோயென்னும் பாவங்கள் கரைந்து ஓடட்டும். பொருத்தமான பாடல் தேர்வுக்கு நன்றியும் பாராட்டுகளும். பானுமதிக்கு உள்ளுணர்வு சொல்லி இருக்கும்போல, பிரதமரும் இம்மாதிரி கேட்பார் என!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைத்தேன்... எங்கடா இந்த கீதா சாம்பசிவம் மேடம் கட்சிப் பிரச்சாரத்தை இன்னும் ஆரம்பிக்கலையே என்று.... ஹா ஹா ஹா

      நீக்கு
    2. இருந்தாலும் அவுரு எப்புடி வெளக்கு ஏத்தி வெக்கச் சொல்லலாம்?...

      நாங்க அதையெல்லாம் ஒத்துக்கவே மாட்டோம்..

      நீக்கு
    3. அதில் மின்சாரம் சம்பந்தப்பட்ட ஏதோ விஷயம் இருக்குன்னு ஒரு க்ரூப்ல பெரிய டிஸ்கஷன் ஓடியது.

      நீக்கு
    4. ’விளக்கு ஏற்றுவதால் நன்மைகள்’ என்று ஒன்றும், ’அன்று ஒரே கோட்டில் 9 கிரஹங்கள் இருக்கையில்..’ என ஒன்றும், டாக்டர் ஜே. மதான் (நன்றாகக் கூறியுள்ளார் அந்த இளம்பெண்) ஜோதிட சாஸ்திரப்படி ஹிந்தியில் விளக்கும் ஒரு மெசேஜும் வேகம் பிடித்திருக்கின்றன..

      நீக்கு
  38. டி.எம்.செளந்திரராஜனின் இந்தப்பாடல் மிகவும் கம்பீரமான, இனிமையான பாடல்!
    Shadaj ne paya பாடலைப்பற்றி படித்ததும் யுடியூப்ல் சென்று அந்த பாடலைக்கேட்டேன். இனிமை என்று சொல்ல முடியாவிட்டாலும் மிகவும் சிரமமான பாடல் தான் இது.
    தான்சேனின் ' தர்பாரி கானடா' ராகப் பாடலைக் கேட்டு மயங்கிப்போய்தான் அக்பர் அவரை தன் அரசவைக்கவிஞராக ஆக்கினார் என்று படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மனோ மேடம்... யேசுதாஸ் அந்தந்த ராகங்களின் பெயர்கள் வருமாறு சரணங்களைப் பாடுகிறார்.

      நீக்கு
  39. /Shadjane Paya//
    கேட்டேன் பாடலை ..தாஸேட்டன் அட்டகாசமா பாடியிருக்கார் .
    இப்பாடலை பெண் குரலில் விரைவில் தாஸேட்டனின் பரம ரசிகை  ஆஷாபோஸ்லே அதிரா பாடுவார் :) எல்லாரும் ரெடியா இருங்க அவர் குரல் கேட்க 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடியோ வாப் போடட்டோ அஞ்சு?:)....

      ஆஆஆஆங் மீ தான் 100 ஊஊஊஊஊஊ

      நீக்கு
    2. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அடுத்த பிரயாணத்துக்கு தயாராகிட்டிருக்கேன். அந்த சமயத்தில் போடுங்க. ஏனெனில் யாரையும் கலாய்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். ஹா ஹா ஹா

      நீக்கு
    3. அதுக்கு சான்ஸே கிடையாது இனிமே உங்களுக்கு ஒரே பொழுது போக்கு கலாய்ச்சிங் மட்டுமே :)

      நீக்கு
    4. வாங்க ஏஞ்சல்... வாங்க அதிரா... வீடியோ பதிவு இங்கு எபிலதான் வரணும்!

      நீக்கு
    5. ///ட்டிருக்கேன். அந்த சமயத்தில் போடுங்க. ஏனெனில் யாரையும் கலாய்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். ஹா ஹா ஹா////



      ////

      ஸ்ரீராம்.3 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 7:01
      வீடியோ பதிவு இங்கு எபிலதான் வரணும்!////

      ஏதோ ஒரு முடிவோடதான் இருக்கினம் போல:).... எதுக்கும் கொரோனா வந்திடாமல் பாதுகாப்பா ஒளிச்சிருப்பதைப்போல:)... இதுக்கும் ஒளிச்சே இருந்திடோணும்:)...

      நீக்கு
    6. ஆஆவ் !! அதிரா உங்களுக்கு ஸ்லாட் கிடைச்சாச்சு கம் சூன் :) 

      நீக்கு
  40. இசைக்கேட்டால் பாட்டை கேட்டு ரசித்தேன் .அந்த பெரிய தாடியை ஒட்டியும் அதுக்குலேர்ந்து நவரசத்தை காட்டுறாரே ஜிவாஜி அங்கிள் !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.. அதுக்குள்ள சபதத்தை மீற வைக்கிறாங்களே........

      ஒருவேளை ஜிவாஜி, இந்தப் பாட்டிற்கு வாயசைப்பதற்கு முன்னால், தக்காளி ரசம், சீரக ரசம், மிளகு ரசம், பூண்டு ரசம், வெங்காய ரசம், வெந்தய ரசம், கண்டதிப்பிலி ரசம், வேப்பம்பூ ரசம், எலுமிச்சை-தேசிக்காய் ரசம் ஆகிய ஒன்பது ரசங்களில் அரை டம்ளர் வீதம் குடித்திருப்பாரோ?

      நீக்கு
    2. ஹாஆஹாஆஆஅ :) வன்மையான மென்மையான கண்டனங்கள் :) எதுக்கு தெரியுமோ :) எனது ரெசிப்பி கொக்கம் ரசம் ,வாழைப்பூ ரசம்  திராட்சை  ரசம் இதெல்லாம் மறந்ததற்கு 

      நீக்கு
    3. //கொக்கம் ரசம் ,வாழைப்பூ ரசம் திராட்சை ரசம் இதெல்லாம் // - இதெல்லாம் சாப்பிட்டால் முகத்தில் ஒரே ரசம் மட்டும்தான் வரும் என்று ஸ்காட்லாண்ட் சொல்றாங்க. அது என்ன ரசம் என்றும் அவங்க சொல்லிட்டாங்கன்னா என் சந்தேகம் தீர்ந்துடும். ஹா ஹா.

      நார்மல் ரசம் செய்முறைல கைல கிடைச்சதைப் போட்டுட்டு திராட்சை ரசம், வாழப்பூ ரசம்னுலாம் பேர் வச்சிடுவீங்களோ? அப்புறம் பன்னீர் திராட்சை ரசம், சீட்லெஸ் திராட்சை ரசம், கறுப்பு திராட்சை ரசம் என்றெல்லாம் நானும் பலவித ரசங்களை தி.பதிவுக்கு எழுதி அப்புறம், இனிமே இப்போதைக்கு தி.பதிவு அனுப்பவேண்டாம், ஸ்லாட் 2025 வரை நிரம்பிவிட்டது என்று ஸ்ரீராம் சொல்லுமாறு செய்துவிடுவேன்...ஜாக்கிரதை...ஹா ஹா.

      நீக்கு
  41. சின்னப்பறவை பாட்டு spb குரல் சூப்பர் ..ஒரே ஒரு சந்தேகம் சிவா அங்கிளுக்கு எதுக்கு அந்த டோப்பா போட்டாங்க ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் எங்களுக்கும் சந்தேகம்! அப்போ அது ரொம்ப மாடர்னா இருந்திருக்கும்!

      நீக்கு
  42. ஒரு சின்னப்பறவை - இப்போதுதான் முழுசாகக் கேட்டேன். கேட்கலாம் மேலும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா இருக்கும் ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
    2. ’சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா..’ ஏனோ குறுக்கே ஒடிப்பார்த்தது! அதுவும் செம கண்ணதாசன் பாடல் -டிஎம் எஸ், ஜானகியின் ஹம்மிங்குடன். எப்போதாவது போடுங்கள். கேட்போம் கூட்டாகச் சேர்ந்து!

      நீக்கு
    3. இரண்டுமே தர்பாரி கானடாவோ... கீதா ரெங்கன் தான் சொல்லணும்! அந்தப் பாட்டும் சேர்ந்து ரசிப்போம் பின்னர்!

      நீக்கு
  43. இசை கேட்டால் புவி அசைந்தாடும்,, அருமையான பாடல்.

    //விதியோடு விளையாடும் ராகன்களே
    விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே
    கனலேந்தி வாருங்கள் தீபங்களே
    கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
    கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே //

    திருத்தங்கள் வேண்டிய பகுதி.

    பதிலளிநீக்கு
  44. இரண்டு பாடல்களும் இதுவரை கேட்காத பாடல்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!