புதன், 29 ஏப்ரல், 2020

புதன் 200429 :: ரிடயர்மெண்ட் வாழ்க்கை யாரை அதிகம் பாதிக்கிறது?



 பானுமதி வெங்கடேஸ்வரன்: 

போஸ்ட் ரிடையர்மெண்ட் சிண்ட்ரோம் ஆண்களை பாதிப்பதை போல பெண்களை பாதிப்பதில்லையே ஏன்?



$ போஸ்ட் ரிடயர்மெண்ட் பெண்களுக்கு ஒர்க் லோட் குறைகிறது.

# ஆபீஸ் , அதிகாரம் மட்டுமே வாழ்க்கை என்று இருப்பவர்கள் தான் ரிடயர் ஆனபின் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். 
பெண்களுக்கு வேலைப்பளுவிலிருந்து ஓய்வு என்பது இல்லாத ஒன்று. எனவே அவர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை.

& என் வீட்டில் நடந்தது இது: 
நான் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுகின்ற வரையில், பெரும்பாலான வீட்டு வேலைகளை திருமதி திறம்பட கவனித்து வந்தார். ஓய்வு பெற்ற பிறகு, நான் என்னால் ஆகின்ற வீட்டு வேலைகளை தயக்கம் இன்றி செய்து வருகிறேன். எங்கள் இருவருக்குமே இப்போ எந்த மன அழுத்தமும் இல்லை. 

தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நாம் எதுவும் செய்யாமலேயே விளம்பரங்கள்,வரும் பொழுது ஒலி அளவு கூடுகிறதே.. அது எப்படி?

# நம் காதைக் "கவர" வேண்டும் என்று அதிக அளவில் ஒலிப்பதிவு செய்கிறார்கள்.

& வீட்டில் எல்லோரும் பார்த்துக்கொண்டு இருக்கும்போது விளம்பரம் வந்தால், பார்ப்பதை விட்டு கிட்சன் வேலைகள், துணி உலர்த்துதல் என்று சிறு வேலைகள் செய்ய எல்லோரும் சென்றுவிடுவார்கள். காதைக் கிழிக்கும் விளம்பர சப்தம் முடிந்ததும், சிறிய ஒலி கேட்க ஆரம்பித்ததும் எல்லோரும் திரும்ப படம் பார்க்க வருவதற்கு சௌகரியமாக இருக்கும். நேயர்களுக்கு அந்த அளவில் சௌகரியமான விஷயம்தான். 


நல்ல குரல் வளம் உள்ள ஒரு பெண், பத்து வருடம் சங்கீதம் கற்றுக் கொண்டாலும் எம்.எஸ். போல பாடி விட முடியுமா? அவளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான். கிளியைத்தானே பழக்க முடியும், காக்கையை பழக்க முடியுமா?

# நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் எம் எஸ் ஸைவிட நன்றாகப் பாடுபவர் நிச்சயம் வருவார் (வந்து விட்டார் என்போரும் உண்டு) . 
ஆனால் நல்ல இசை இருக்கும், அந்த பக்தி, தன்னடக்கம் (எளிமை அல்ல) இன்னொருவருக்கு அமைவது கடினம்.

& எனக்கு என்னவோ கிளி கீ கீ என்று கத்துவதை விட காகம் கா கா என்று கூவி அழைப்பது பிடித்திருக்கிறது. என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார். அடிக்கடி ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று கோதை ஆண்டாளை தரிசித்து வருபவர். தினமும் காலையில் கீ கீ என்று கத்திச் செல்லும் கிளிகளை ஆண்டாளாக எண்ணி பக்திப் பரவசத்தோடு தரிசித்து, சந்தோஷமடைவார். என்றாவது கிளிகள் தரிசனம் கிடைக்கவில்லை என்றால், அன்றைக்கு மூட் அவுட் ஆகிவிடுவார். 

கில்லர்ஜி தேவக்கோட்டை : 

துரோகம் செய்து விட்டு அதனை துளியும் உணராமல் பல வருடங்களாக இருப்பவர்களை எளிதாக மறந்து விடமுடியுமா ?


# முடியாதுதான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல வெறுப்பும் சினமும் மங்கிப்போய் அது ஒரு தகவலாக மட்டுமே இருக்கும்.

& துரோகம் செய்தவரே அதை உணரவில்லை என்றால், நாம் ஏன் அதை இழுத்து நமக்குள் பூட்டி வைத்துக்கொள்ளவேண்டும்? நாமும் மறந்துவிடலாமே! 


எல் கே : 

தனிமனித உரிமை என்பது திருமண பந்தத்தில் எப்படி வரும்? திருமணமே இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வது தானே ? எனக்கு ஒரு சில காய் பிடிக்காது அதனால் அதை செய்யக் கூடாதுனு சொல்ல முடியுமா ?
         
# சொல்லக் கூடாதுதான். " அவருக்குப் பிடிக்காது எனவே செய்வதில்லை " எனும் துணை வாய்க்கக் கடவுள் அருள் வேண்டும்.

& எனக்கு ஒரு காய் பிடிக்காது என்றால், அது "ஏன்" என்பதை மனைவியிடம் தெளிவாக சொல்லிவிட்டோம் என்றால், அப்புறம் கருத்து வேற்றுமைகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம் அல்லவா? 
உதாரணமாக நான் அலுவலக காண்டீன் சாப்பாடு சாப்பிட்டு வந்த நாட்களில், சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும், எனக்கு ஜலதோஷம் பிடிக்கும். மிகுந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, அலுவலக காண்டீனில் சௌ சௌ கூட்டு சாப்பிடும் நாட்களில் எனக்கு ஜலதோஷம் பிடிக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். சௌ சௌ சமையலை சாப்பிடாமல் தவிர்த்த நாட்களில் எனக்கு ஜலதோஷம் பிடிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். 

இதை மனைவியிடம் சொன்ன நாளிலிருந்து அவர் சௌ சௌ வாங்குவதை விட்டுவிட்டார். அதுமட்டும் இல்லை, வீட்டில் நடந்த கல்யாணங்களுக்கு சமையல் காண்டிராக்ட் கொடுக்கும்போது கூட சௌ சௌ  வேண்டாம் என்று முன்பாகவே சொல்லிவிடுவோம். 

பொதுவாக இருவரில் ஒருவருக்கு சில விஷயங்கள் பிடிக்காது என்றால் அது ஏன் என்பதை மற்றவருக்கு விளக்கி சொல்லிவிட்டால், வாழ்க்கையில் பிரச்னை வராது. 

===================================

எங்கள் கேள்வி : 

1) இந்த ஊரடங்கு வாழ்க்கைக்குப் பின் உங்களுடைய வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் வரும்? 

2) முன்பு நீங்கள் அலட்சியமாக விட்ட சில செயல்கள் இனிமேல் கவனமாக பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் நினைப்பவை எவை? 

3) ஊரடங்கு நேரத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு பின்பற்றிய சிலதை 'அப்பாடி இனிமேல் வேண்டாம் இது ' என்று நினைப்பது எதை? 

====================================


157 கருத்துகள்:

  1. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. ,
    ,1,,ஊரடங்கு வாழ்ககை பதப் படுத்தி இருக்கிறது. அதைத் தொடரவேண்டும்.
    2, கை கழுவதல். முன்பு. சாப்பிடும் முன், சமையலுக்கு முன் , குளியறை,கழிவறை என்று மட்டும்
    சுத்தம் என்பது மாறி எந்நேரமும் சுத்தம் தொடரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், உண்மைதான். என் பையன் எப்பொழுதும் சுத்தத்தை insist செய்வான். அப்போதெல்லாம் நான் அதை அவ்வளவாக பொருட்படுத்தியதில்லை. இப்போ அவன் சொல்வது எல்லாவற்றையும் துல்லியமாகப் பின்பற்றுகிறேன்.

      நீக்கு
  4. 3,இனி வெளியே போகும். எண்ணம் வருமா என்று கூட சந்தேகமாக இருக்கிறது. செய்திகள் அப்படி உலுக்கி விட்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே, அதே! அனாவஸ்ய ஊர் சுற்றுதல் யாவும் இனி நிறுத்தப்படும்.

      நீக்கு
    2. //அதே, அதே! அனாவஸ்ய ஊர் சுற்றுதல் யாவும் இனி நிறுத்தப்படும்.// எனக்கு அப்படி தோன்றவில்லை. இதுவும் கடந்து போகும் என்பது போல் எல்லாம் மறந்து போகும் என்பதும் நம் தேசிய விதி. 

      நீக்கு
  5. இந்த ஊரடங்கு எனக்கு கற்று தந்த பாடம் உணவுகளை தேவையான அளவு சமைத்து அதையும் வேஸ்ட் செய்யாமல் இருக்க கற்றுக் கொடுத்து இருக்கிறது (பொதுவாக நான் சமைக்கும் போது யாரவது தீடிரென்று நாம் சாப்பிடும் போது வந்தால் அவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டி எப்போதும் சற்று அதிகமாகவே சமைப்பேன் ஆனால் இந்த கொரோனா சமயத்தில் யாரும் வீடிற்கு வர மாட்டார்கள் அதிலும் என் வீட்டில் உள்ளவர்க்கு இந்த வைரஸ் தாக்கி இருப்பதால் கண்டிப்பாக யாரும் வரமாட்டார்கல் என்பதால் குறைத்தே சமைக்கிறேன் )


    நிமேல் கவனமாக பின்பற்ர வேண்டியதாக நான் நினைப்பது சேமிப்பு.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்துகள். நன்றி. ஆம் எதையுமே வீணாக்காமல் வாழ்தல் நன்றி. சிக்கனம், சிறுசேமிப்பு இரண்டுமே நன்மை பயக்கும்.

      நீக்கு

  6. இது போனவாரம் கீதா சாம்பசிவம் அவர்கள் கேட்டது போல இருக்கிறது... கில்லர்ஜி தூரோகம் செய்தவர்கள் அதை மற்ந்து போய் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.. நான் நாம் அதை நினைத்து நினைத்து குமைந்து போய் நம் உடலையும் உள்ளத்தையும் கெடுத்து விடக் கூடாது.. அதை அப்படியே மறந்து வாழ பழகிக் கொள்வதே சிறந்து ஆனால் அதற்கு மிகுந்த மனப் பக்குவம் வேண்டும்

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    கேள்வி பதில்கள் இந்த வாரம் குறைவு - இதுவும் நல்லாத் தான் இருக்கு.

    உங்கள் கேள்விகள் நன்று. பதில்கள் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. 1) இந்த ஊரடங்கு வாழ்க்கைக்குப் பின் உங்களுடைய வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் வரும்?

    ஊரடங்கு நாட்கள் பலருக்கும் பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. இப்பொழுது கூட பெரும்பாலான நாட்களில் அலுவலகம் சென்று வருகிறேன். வரும் நாட்களில் அலுவலக வேலைகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வரும் நாட்களில் உழைப்பு இன்னும் கடினமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. தெரிந்த வரையில் பல விஷயங்கள் நமக்கு எதிராக இருக்கலாம். வாரத்தின் ஆறு நாள் வேலை, நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்கு பதில் பத்து மணி நேரம் என சில விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்.

    2) முன்பு நீங்கள் அலட்சியமாக விட்ட சில செயல்கள் இனிமேல் கவனமாக பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் நினைப்பவை எவை?

    நான் கொஞ்சம் செலவாளி – பயணங்களில் செலவு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்திருக்கிறேன். ஒரு பக்கம் பார்க்க வேண்டிய இடங்களை முடிந்த அளவு விரைவில் பார்த்து விட வேண்டும் என எண்ணம் வந்தாலும், வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு சுற்றுலா பயணத்திற்கு மேல் கூடாது என நினைத்திருக்கிறேன். கஷ்ட காலங்களில் சேமிப்பு மட்டுமே உதவும்.

    3) ஊரடங்கு நேரத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு பின்பற்றிய சிலதை 'அப்பாடி இனிமேல் வேண்டாம் இது ' என்று நினைப்பது எதை?

    அப்படி ஒன்றும் எனக்கு இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக் கொள்வது சிறந்தது என நினைப்பவன் நான். வருவதும் போவதும் அவன் கையில்!

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் நல்வரவு, காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள். நேற்றைய செய்திப்படித் தமிழ்நாட்டில் கொரோனா வேகமாகப் பரவுகிறது. கட்டுக்குள் வர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்./பிரார்த்திப்போம். கொரோனா விரைவில் நம் நாட்டில் இருந்தே ஒழிந்து போகவும் பிரார்த்திப்போம். இறைவன் அருளால் நலமே விளைய வேண்டும்..

    பதிலளிநீக்கு
  10. கில்லர்ஜியின் கேள்வியைச் சரியாகப் புரிஞ்சுக்கலையோனு நினைக்கிறேன். துரோகம் செய்தவர்கள் அந்தச் சுவடு கூடத் தெரியாமல் மேலும் மேலும் நம்மிடம் நட்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளூர மறுபடி குழி பறித்துக்கொண்டு தான் இருப்பார்கள். கில்லர்ஜி அதைத் தான் சொல்கிறார் என நினைக்கிறேன்.

    சிலர் வரிந்து கட்டிக்கொண்டு ஒருவர் நற்பெயரைக் கெடுத்துக்கொண்டே இருப்பதற்கு என்ன காரணங்கள்? (அரசியல் கேள்வி இல்லை.)

    ஆண் பணி ஓய்வு பெறுவதற்கும் பெண் பணி ஓய்வு பெறுவதற்கும் என்ன வித்தியாசம்?

    பணி ஓய்வு பெற்ற ஆண்கள் பெரும்பாலும் அப்பாடானு தங்களுக்குப் பிடித்ததைச் செய்து கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு நிம்மதியாக இருப்பார்கள். ஆனால் பெண்களுக்கு அப்போதும் வீட்டுப் பணி தொடருமே! அதை ஆண்கள் உணர்ந்திருக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சற்றும் குற்ற உணர்வு இல்லாமல் இருப்பவர்களின் செயலை மன்னிக் இயலுமா ?

      நான் பல வகையிலும் உதவி செய்து அவனது வாழ்வை உயர்த்தி இருக்கிறேன்.
      ஆனால் எனக்கு துரோகம் செய்து விட்டான் என் வயதையொத்தவன்.

      பேச்சை குறைத்து விலகி விட்டேன் புரிந்து கொண்டான் காரணம் என்னை அறிந்தவன்

      மரணம் நெருங்கி விட்டது மூன்று தினம் முன்பு என்னை மன்னிச்சுடு என்றான்
      எனது மன்னிப்பு கிடக்கட்டும் இறைவன் உன்னை மன்னிக்கட்டும் என்று கடந்து விட்டேன். அதுவே கடைசி.

      நீக்கு
    2. மறதி மனிதனுக்கு மிகச்சிறந்த மருந்து ஜி... அப்புறம் :-

      மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன...?

      வலைப்பூவிற்கு வந்த புதிதில் எழுதிய பதிவு :

      https://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_26.html

      முடிவாக:

      இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
      நன்னயம் செய்து விடல்...

      நீக்கு
    3. //துரோகம் செய்தவர்கள் அந்தச் சுவடு கூடத் தெரியாமல் மேலும் மேலும் நம்மிடம் நட்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளூர மறுபடி குழி பறித்துக்கொண்டு தான் // - இதுக்குத்தான் மாஃபியாவில் ஒரு முறை துரோகம் செய்தவனை உடனே எலிமினேட் செய்துவிடுவார்கள். அப்போதுதான் மத்தவங்களுக்கும் பயம் இருக்கும் என்று.

      எந்தச் செயலையும் மன்னிப்பது என்பது, அந்த செயலின் தாக்கத்தைப் பொறுத்தது என்று நினைக்கிறேன். அதனால்தான் கில்லர்ஜி அந்த நண்பனை கடைசிவரையில் மன்னிக்கவில்லை என்று தோன்றுகிறது.

      'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண...' - இதெல்லாம் சொல்வதற்கு நன்றாக இருக்கும். செயலில் கடைபிடிப்பவர்களை நான் சந்தித்த நினைவு இல்லை.

      நீக்கு
    4. இங்கே பாருங்க கௌதமன் சார், 3 கேள்விகள்! :)))))

      நீக்கு
    5. ஓ இங்கே இருக்கா --- ஓ கே - பதில் அளிப்போம்.

      நீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில்கள் ஸூப்பர் ஜி

      3)'அப்பாடி இனிமேல் வேண்டாம் இது ' என்று நினைப்பது எதை ?

      மீண்டும் கொரோனா வருவதை.

      நீக்கு
    2. ஹா ஹா ! அது நம் கையிலா இருக்கு!

      நீக்கு
    3. //மீண்டும் கொரோனா வருவதை.// - அது சரி... மீண்டும் அது ஏன் வரப்போகுது? சார்ஸ்... என்பதுபோல, புது வைரஸ் 'அவங்க' கண்டுபிடிக்க ஆரம்பிச்சிருப்பாங்க. இன்னும் இரண்டு வருடங்களில் வெளியிட்டு, அதற்கான உபகரணங்களையும் மற்ற நாடுகள் தலையில் கட்டிவிடலாம் என்று

      நீக்கு
  12. என்னைப் பொறுத்தவரை பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் இல்லை. கொரோனாவுக்கு முன்னால் நம்மவர் மார்க்கெட்டுக்குப் போய்க்கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருப்பார். இப்போ அது இல்லை. கொஞ்சமாக வாங்கி அதை அன்றன்றே சமைத்துச் சாப்பிட்டு விடுகிறோம். ஒரே காயை 3,4 நாட்கள் வரும்படி வாங்கறதில்லை.

    எப்போவும் தள்ளிப்போடும் வேலை எனில் புத்தக அலமாரியை ஒழிப்பது. அதிலேயே உட்கார்ந்துவிடுவேன் என்னும் பயம் தான். அன்றாட வேலைகளில் மாற்றம் ஏதும் புதிதாக இந்தக் கொரோனா ஊரடங்கால் இல்லை என்பதால் புத்தக அலமாரியை இப்போதும் தொடவில்லை. ஆகவே எதிலும் எந்த மாற்றமும் இல்லை.

    புதுசாக எதுவும் இல்லை. நம்ம ரங்க்ஸ் கீழே பால் பாக்கெட் வாங்க, காய் வாங்கனு கீழே போகும்போது மாஸ்க் அணியச் சொல்லுவதும் வந்ததும் கை,கால்களை சோப் அல்லது கை கழுவும் திரவத்தினால் சுத்தம் செய்வதும் தான் புதுசு. பொதுவாகக் காய்களையும், பால் பாக்கெட்டுகளையும் கழுவிய பின்னரே குளிர்சாதனப் பெட்டிக்குள் வைப்பதால் அதிலும் புதிய மாற்றம் இல்லை. கருகப்பிலை, கொத்துமல்லியைக் கூடக் கழுவி வடிகட்டி எடுத்து வைப்பேன். இஞ்சி, சேனைக்கிழங்கெல்லாம் மண் போக அலம்பியே வைப்பேன். ஆகவே புதுசாக எதுவும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆக, ஊரடங்கு நீடித்தாலும் உங்களைப் பொறுத்தவரையில் எதுவும் பெரிதான மாற்றம் இல்லை. சரியா?

      நீக்கு
    2. ஆமாம், தினம் தினம் ஊரடங்கு போலத் தான் இருக்கு எனக்கு! :))))

      நீக்கு
    3. //சேனைக்கிழங்கெல்லாம் மண் போக அலம்பியே// - மண் போக அலம்பினால் (நான் அப்போ அலம்புவதில்லை. வெளிலயே வைப்பேன். பிறகு கட் பண்ணும்போது, மண்ணோடு தோலையும் எடுத்து குப்பைக்கூடைக்குப் போடுவேன்) 1. வாஷ் பேசினில் அடைத்துக்கொள்ளும் 2. சேனை அழுகிவிடாதோ? குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாலும்?

      நீக்கு
    4. நெல்லைத் தமிழரே, மண் அதிஅம் இருந்தால் தொட்டிமுற்றத்தில் அடைச்சுக்கும்னு தெரியாதா? கீழே ஒரு பேப்பரைப் போட்டுக்கொண்டு அதைத் தட்டிச் சுத்தம் செய்த பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு நன்கு அலம்பிய பின்னர் கொஞ்சம் காய வைச்சதும் தினசரித்தாளில் சுற்றிக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சால் சேனைக்கிழங்கு வீணாகாது. அழுகினதெல்லாம் இல்லை.

      நீக்கு
  13. இந்தக் கொரோனா இல்லை எனில் இதுக்குள்ளாக நம்பெருமாளைப் போய்ப் பார்த்துட்டு வந்திருப்போம். குஞ்சுலு இங்கே வந்திருக்கும். அதெல்லாம் இல்லாமல் போனதில் வருத்தம். ஆகவே இனி இம்மாதிரி ஒரு கொடிய நோய் உலகில் எங்குமே வரவேண்டாம். உலகமக்கள் நிம்மதியாயும் சந்தோஷமாயும் வாழப் பிரார்த்திப்பதைத் தவிர வேறே எதுவும் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். குழந்தைகளை நேரில் பார்க்க இயலவில்லை என்பது வருத்தமே.

      நீக்கு
    2. இப்போதைய செய்தி கொரோனா இப்போதைக்கு விடாது. திரும்பத்திரும்பச் சுற்றும் என்பதே! :( அதான் கொஞ்சம் கவலையாயும், வருத்தமாயும் இருக்கு! என்ன செய்யப்போகிறோம்!

      நீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் (சற்று தாமதமான) காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    இந்த வார கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. சுருக்கமான அளவு கேள்விகளும், பதில்களும் அமைந்திருந்தாலும், நிறைவாக உள்ளது.

    முதல் கேள்விக்கு இரண்டாவது பதில் முற்றிலும் உண்மை. ஆண்களை தாக்கும் இந்த மன அழுத்தத்தை வாழ்க்கைச்சுற்றை சற்று பெரிதாக்கிக் கொள்ளாமல் அவர்களாகவே உண்டாக்கி கொள்கிறார்களோ என எனக்கும் தோன்றும்.

    கிளிக்கும் காக்கைக்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பிட்டது சிறப்பு. பறவைகளின் அந்தந்த குரலை ரசிக்க ஆரம்பித்தால் இறைவனின் உன்னத படைப்பின் ரகசியம் புரியும். பதில்கள் உண்மைதான்..!

    துரோகம் என்பது மனதின் வடுவாக மாறும் ஆற்றலுடையது. எனினும் நம் மனதின் சுயநலன் கருதி மன்னிப்போம் .. மறப்போம்..

    பதில்கள் யோசிக்கனும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. //..பிடிக்காது என்றால் அது ஏன் என்பதை மற்றவருக்கு விளக்கி சொல்லிவிட்டால், வாழ்க்கையில் பிரச்னை வராது.//

    'சௌ-சௌ’ ஆராய்ச்சியில் எப்படியோ உங்களுக்கு ஒரு பி.ஹெச்.டி. கிடைத்துவிட்டது என்கிற காரணத்தால் இப்படியெல்லாம் பொதுப்பேச்சுப் பேசப்படாது!

    சில அம்மணிகள் இருக்கிறார்கள் உலகில். அவர்களிடம்போய், நீங்கள் விளக்கி, விளக்கி.. மேலும் விளக்கிச் சொல்ல முயன்றால் அவர்களுக்கு ஏறிவிடும் ரத்த அழுத்தம் ஒரேயடியாக. விளைவு - ஹை-வோல்ட்டேஜ் ட்ரான்ஸ்ஃபார்மரில், மழையோடு இடியும் சேர்ந்து இறங்கியதுபோலாகிவிடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா என்ன செய்வது! அப்படியும் உண்டுதான்!

      நீக்கு
  17. // 1) இந்த ஊரடங்கு வாழ்க்கைக்குப் பின் உங்களுடைய வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் வரும்? //

    மாற்றங்கள் தெரியாத போது...? சரி, மாற்றங்கள் எதுவும் வராது... "குறள் ஆய்வுப் பதிவுகள் எழுத முடியாதோ" எனும் எண்ணம் வரலாம்... (இப்போதே அந்த எண்ணம்...)

    // 2) முன்பு நீங்கள் அலட்சியமாக விட்ட சில செயல்கள் இனிமேல் கவனமாக பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் நினைப்பவை எவை? //

    கற்றுக் கொள்ளுதல்...

    // 3) ஊரடங்கு நேரத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு பின்பற்றிய சிலதை 'அப்பாடி இனிமேல் வேண்டாம் இது' என்று நினைப்பது எதை? //

    தேடிக் கொண்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  18. முத்து முத்தான வளையலுங்கோ!...

    அடடே!...

    முத்து முத்தான விடைகளுங்கோ!...

    பதிலளிநீக்கு
  19. தினசரி வாழ்க்கையே ஊரடங்கு மாதிரி நடந்து கொண்டிருக்கையில்
    அதை விடுவது... இதைத் தொடர்வது... - என்ற சிந்தனைகளுக்கே இடமில்லை...

    என்றும் அன்புடன்...

    பதிலளிநீக்கு
  20. இந்த ஊரடங்கில் என் வாழ்க்கையில் பெரிதாக மாற்றம் இல்லை. முன்பு மருமகள் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்ததால் நான் காலை நேர சமையலை பார்த்துக் கொண்டிருந்தேன். இரவு சமையலை அவர் செய்வார். இப்போது அவர் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதால் இரண்டு வேளைகளும் அவரே சமைக்கிறார். நான் வீட்டை பெருக்கி மெழுகுவது, பாத்திரங்கள் தேய்ப்பது போன்ற காரியங்களை செய்வேன். இயல்பு நிலை திரும்பினால் மீண்டும் காலை சமையல் நான் செய்ய வேண்டி வரும். 
    முன்பு அலட்சியமாக எதையும் விட்டதில்லை என்பதுதான் என்னிடம் உள்ள குறை. கீதா அக்கா சொன்னது போல காய்களை அலம்பி பின்னர்தான் ஃபிரிட்ஜில்  வைப்பேன். கொத்துமல்லி, கீரை வகைகளை வேரை  கட் பண்ணி, நன்கு கழுவி, ஒரு சுத்தமான துணியில் காயவைத்து பின்னர்தான் ஃபிரிட்ஜில் வைப்பேன். இப்போது உப்பு ஜலத்தில் அலம்புகிறேன். 
    ஊரடங்கு நேரத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு பின்பற்றி அப்படி இனிமேல் இது வேண்டாம் என்று நினைப்பது வெளியே செல்லும்போது மாஸ்க் அணிவது. மூச்சு முட்டுவது போல் இருக்கிறது.  
    சென்னையிலிருந்து பெங்களூர் வந்ததிலிருந்தே அங்கு கோவில்களுக்குச் சென்ற மாதிரி இங்கே செல்ல  முடியவில்லையே  என்ற ஏக்கம் உண்டு. எனவே அதுவும் புதிது இல்லை. அது மாறுமா என்றும் தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யமான பதில்களுக்கு நன்றி. நான் சென்னையில் நடைப்பயிற்சி செய்ததுபோல் இங்கே பெங்களூரில் செய்யமுடிவதில்லை. கோயில் விசிட்டும் அப்படியே.

      நீக்கு
  21. இது சென்ற வாரம் கீதா அக்காவின் perfection பற்றிய கேள்விக்கு நான் அளித்திருந்த பதிலுக்கு அவர் சொன்ன கருத்துக்கு மறு கருத்து(அப்பாடா!) . கீதா அக்கா perfection என்பது மீண்டும் மீண்டும் ஒரு செயலை செய்வதனால் வருவது என்று கூறியிருந்தார். சிலருக்கு சில விஷயங்கள் இயல்பாகவே நன்றாக வரும். அந்த திறமை இல்லாத இன்னொருவர் எத்தனை பயிற்சி செய்தாலும் அவருக்கு நிகராக செய்ய முடியாது. இதை  வலியுறுத்தத்தான் நான் கிளி,காக்கை உதாரணம் ம் கூறினேன். அதில் கேள்விக்குறி இருந்ததால் புதனுக்கான கேள்வியாக்கி  விட்டீர்கள். கர் ர் ர் ர் ர் ................ ர்! இனிமேல் புதன் கிழமை பின்னூட்டம் போடும் பொழுது கேள்விக்குறி இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ அது கேள்வி இல்லையா.

      நீக்கு
    2. அது எனக்கான பதில் என்பதை நான் புரிந்து கொண்டேன் பானுமதி.

      நீக்கு
    3. இல்லை ஶ்ரீராம், நான் கேள்விகளை எ.பி.யில் கேட்கவே மாட்டேன். வாட்ஸ்ஆப்பில்தான் அனுப்புவேன். ஏதோ குழப்பம். It's OK.

      நீக்கு
    4. ஹி ஹி கேள்விகள் ரொம்பக் கம்மியா இருந்ததால, அலைஞ்சு திரிஞ்சு கேள்விகளைத் தேர்ந்தெடுத்தேன்! மன்னிக்கவும்!!

      நீக்கு
  22. //இதை மனைவியிடம் சொன்ன நாளிலிருந்து அவர் சௌ சௌ வாங்குவதை விட்டுவிட்டார். // இது ஒரு வகை என்றால் நான் செய்வது வேறு வகை. எனக்கு கோவைகாய் பிடிக்காது. மனைவியும் மகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் அதை தடை செய்ய மாட்டேன். எனக்கு அன்னிக்கு வேற காய் அவ்ளோதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு பீன்ஸ் பிடிக்காது. கோவைக்காய் (இதற்கு வேறொரு பெயரும் உண்டு தெரியுமோ?) பிடிக்காது. புடலை பிடிக்காது.. வீட்டில் அவைதான் அதிக ரொட்டேஷனில் வரும்!

      நீக்கு
    2. எனக்கு செளசெள பிடிக்கும். பசங்களுக்கு கோவைக்காய், ஆனால் எனக்குப் பிடிக்காது. ஆனாலும் 1/4 கிலோ வாங்கிவருவேன், அவங்க சாப்பிடுவதற்காக. அன்று எனக்கு வேறு காய்.

      பீன்ஸ் - எனக்கு பருப்புசிலி மட்டும்தான் பிடிக்கும். புடலை-ஆஹா.. அதிலும் எனக்கு கூட்டு மட்டும்தான் பிடிக்கும், கரேமது பிடிக்காது.

      இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும், பிடிக்காது என இருப்பதால் மனைவி பாடுதான் கஷ்டம் (எல்லார் வீட்டிலேயும்)

      நீக்கு
    3. கோவைக்காய்க்கு இன்னொரு பெயர் தண்டங்காய்? என் சித்தப்பா வீட்டில் சொல்லுவார்கள். நாங்க கோவைக்காய் சாப்பிட மாட்டோம். சௌசௌ எப்போவானும். ஆனால் மாமியார், மாமனாருடன் கூட்டுக் குடும்பமாக இருந்தப்போ எல்லாம் அநேகமா சமையலே 2 விதமாகச் சமைக்கும்படி இருக்கும். நம்மவருக்கு தினம் சாம்பார் பிடிக்காது. மாமனார், மைத்துனர்கள், நாத்தனார்கள் நேர் மாறாக சாம்பாரிலேயே குளிக்கும் ரகம். 3 தரம் கூட சாம்பார் அலுக்காமல் சாப்பிடுவார்கள். ஆகவே இவருக்கு மட்டும் வத்தக்குழம்போ, மோர்க்குழம்போ, துவையலோ அரைக்கணும். அவங்களுக்கெல்லாம் எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் சாம்பார் தான்! இல்லைனா மாமனார் தட்டைப் பறக்க விட்டுடுவார்! :))))) இப்போக் கூட என் மைத்துனர் துவையல் சாப்பிட மாட்டார். இங்கே வந்தப்போ ஒரு நாள் பீர்க்கங்காய்த் துவையல் செய்திருந்தேன். அவர் தொடவே இல்லை. ரசம் போதும்னு சொல்லிட்டார். இத்தனைக்கும் ரசமே சாப்பிட மாட்டார். துவையலுக்கு ரசம் பரவாயில்லைனு ஆகி விட்டது போல!

      நீக்கு
    4. அதே போல் இவருக்குக் காரமா வேணும், அவங்களுக்கு வெல்லம் போட்டுச் சமைக்கணும்! சேர்த்துப் பண்ணும் நாட்களில் இவருக்குத் தனியா எடுத்து வைச்சுட்டு அப்புறமா வெல்லம் சேர்ப்பேன்.

      நீக்கு
    5. ..மனைவி பாடுதான் கஷ்டம் (எல்லார் வீட்டிலேயும்)//

      மனைவி கடவுள் மாதிரி. எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது!

      நீக்கு
    6. கோவைக்காய்க்கு இன்னொரு பெயர் தண்டங்காய்?//

      கீதாக்கா தண்டங்காயா? எங்க வீட்டுல மாமியார் தொண்டங்காய் நு சொல்லுவாரே..

      //மனைவி கடவுள் மாதிரி. எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது!//

      ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா சிரித்துவிட்டேன் ! சட்டுனு விட்டு!!!

      கீதா

      நீக்கு
    7. சுவையான கருத்துரைகளுக்கு நன்றி. எனக்கும் கோவைக்காய் பிடிக்காது. ஆனால் அது பல்வலிக்கு நல்லது என்று எங்கோ படித்ததால், இப்போ சேர்த்துக்கொள்கிறேன். புடலங்காய் எந்த ரூபத்தில் சமைத்தாலும் சாப்பிட்ட ஒருமணி நேரம் அல்லது இரண்டுமணி நேரத்தில் சுகமான, தன்னை மறந்த தூக்கம் வரும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவு படுக்கப்போகும் முன்பு, ஐம்பது கிராம் புடலங்காய் துண்டுகளை மிக்சியில் இட்டு அரைத்து லேசாக உப்பு சேர்த்து அல்லது சேர்க்காமல் சாப்பிட்டுப் படுங்கள். குறைந்தது நான்கு மணி நேர ஆழ்ந்த உறக்கம் நிச்சயம்.

      நீக்கு
    8. கௌ அண்ணா நிஜமாவா புடலங்காய்க்கு தூக்கம் வர வழைக்கும் சக்தி உண்டா? அட புது தகவல். பச்சையாவே அரைத்தா?! ஆஆஆ வேக வைத்து என்றால் ஓகே..சும்மா உப்பு போட்டு வேக வைத்துச் சாப்பிட்டாலோ? (எனக்கெல்லாம் நிலம் முகர்ந்தால் உறக்கம் தான். தூக்க

      கீதா

      நீக்கு
    9. அது தொண்டங்காயாத்தான் இருக்கணும் கீதா! ஹிஹிஹி, எனக்கும் ஜந்தேகமாத் தான் இருந்தது. :)))) புடலங்காய் சாப்பிட்ட அன்னிக்கெல்லாம் நான் ராத்திரி கூடத் தூங்கியதாய் நினைவில் இல்லை. நாளைக்குப் புடலை பண்ணினால் கவனிக்கணும். நானெல்லாம் "உள்ளத்தில் நல்ல உள்ளம், உறங்காது!" ஆகவே இதுக்கெல்லாம் அசைஞ்சு கொடுக்கிறதாய் இல்லை. :)))))

      நீக்கு
    10. //டலங்காய் துண்டுகளை மிக்சியில் இட்டு அரைத்து லேசாக உப்பு சேர்த்து அல்லது சேர்க்காமல் // - இதுதான் தூக்கம் வருவதற்கு மருந்து என்றால், ஐயோ..அம்மா இதைக் கொடுத்துவிடப் போகிறார்களே என்ற பயத்தில் தானாகவே தூக்கம் வந்துவிடாது?

      நீக்கு
    11. இன்னிக்குப் புடலங்காய்க் கறி சாப்பிட்டிருக்கேன்! தூங்கறேனா இல்லையானு பார்க்கணும்.

      நீக்கு
    12. இல்லை, மத்தியானம் தூங்கலை. ராத்திரி தூங்கினேன் என்றால் அது உலக மகா அதிசயம்.

      நீக்கு
  23. கேள்விகளும் பதில்களும் மிக அருமை.


    //$ போஸ்ட் ரிடயர்மெண்ட் பெண்களுக்கு ஒர்க் லோட் குறைகிறது//

    முன்பு இரட்டை பாரத்தை தூக்கியவர்களுக்கு வீட்டு பாரம் மட்டும் தான் பாரம் குறைகிறது.

    //ஓய்வு பெற்ற பிறகு, நான் என்னால் ஆகின்ற வீட்டு வேலைகளை தயக்கம் இன்றி செய்து வருகிறேன். எங்கள் இருவருக்குமே இப்போ எந்த மன அழுத்தமும் இல்லை. //

    இப்படி வேலைகளை பகிர்ந்து கொண்டால் எல்லாம் நலமே!

    பதிலளிநீக்கு
  24. //தனிமனித உரிமை// - இதுக்கு அர்த்தம் என்ன? நான் சிவாஜி படம் பார்க்கமாட்டேன் என்றால், மற்றவர்கள் என்னை கம்பெல் பண்ணினாலும் பார்க்கமாட்டேன், இது என் தனிமனித உரிமை. செளசெள எனக்குப் பிடிக்காது, அதனால் நான் சாப்பிடமாட்டேன் என்பது தனிமனித உரிமை. ஆனால் நீ சாப்பிடக்கூடாது, நீ பண்ணக்கூடாது என்பது தனிமனித உரிமை அல்ல, அடக்குமுறை.

    ஒய் ஜி. மகேந்திரன், தான் பெண் பார்க்கப்போனபோது, எனக்கு சிவாஜி படங்கள் பிடிக்கும், சிவாஜியை நான் ரொம்பவும் மதிக்கிறேன். அதற்கு பங்கம் வருவதுபோல நீ நடந்துகொள்ளக்கூடாது என்றாராம். அதற்கு அவர், அது எனக்குப் பிரச்சனை இல்லை. எனக்கு 'இந்த நடிகரை/நடிகையை'ப் பிடிக்கும் என்று பதில் சொன்னாராம். இதுதான் தனி மனித உரிமை.

    பதிலளிநீக்கு
  25. //மரணம் நெருங்கி விட்டது மூன்று தினம் முன்பு என்னை மன்னிச்சுடு என்றான்
    எனது மன்னிப்பு கிடக்கட்டும் இறைவன் உன்னை மன்னிக்கட்டும் என்று கடந்து விட்டேன். அதுவே கடைசி.//

    தேவகோட்டை ஜி, மரணத்தருவாயில் கேட்ட போது மன்னித்துவிட்டேன் என்று ஆறுதல் வார்த்தை சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது. மரணத்த்ருவாயில் நினைவு வந்து சொல்கிறார் என்றால் அவரை அவர் செய்த தப்பு உறுத்திக் கொண்டே இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். நானும் அதைத்தான் நினைத்தேன். ஆனால் முழு விவரங்களும் மற்றவர்களுக்குத் தெரியாததால், நம்மைப் பொறுத்தவரை இதில் சம்பந்தப்படாதவர்கள் ஒன்றும் கருத்துக் கூற இயலாது.

      நீக்கு
  26. //நல்ல குரல் வளம் உள்ள ஒரு பெண், பத்து வருடம் சங்கீதம் கற்றுக் கொண்டாலும்// - யாரும் யாரையும்போல் வரவே முடியாது. அவர்களுக்கு விதி இருந்தால் அந்த நிலையை எட்டலாமே தவிர, ஒருவரைப் போல வருவது என்பது சாத்தியமே இல்லை. பதிலில் சொல்லியுள்ளபடி, எம்.எஸ். அவரது திறமைக்காக மட்டும் போற்றப்படவில்லை, அவரது ஆட்டிடியூடுக்காகத்தான். கேஜே யேசுதாஸ், எஸ்பிபி, பட்டம்மாள் போன்றோருக்கு பாரத ரத்னா கிடைக்கவில்லையே.

    குரல் வேறு, கடின உழைப்பு வேறு, திறமை வேறு, அதிர்ஷ்டம் வேறு.

    சச்சின், காம்ப்ளி ஒரே மேட்சில்தான் லைம் லைட்டுக்கு வந்தார்கள். காம்ப்ளி சோபிக்கவில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நான் சென்ற வாரம் கீதா அக்காவுக்கு அளித்த பதில் நெல்லை. Totally different context.

      நீக்கு
    2. ..காம்ப்ளி சோபிக்கவில்லையே.//

      அவரை சோபிக்கவிடவில்லையே. 17 டெஸ்ட்டுகளில் அவரது சராசரி 59.66. 4 சதங்களில் 2 டபுள்-செஞ்சுரி என்று நினைவு. இரண்டே வருடங்களில் அவரை டெஸ்ட் டீமில் இருந்து தூக்கிவிட்டார்கள். அவருடைய ஒரு-நாள் சராசரியும் சரியாகவே இருந்தது. அவர் வெளிப்படுத்த முயற்சித்த ஸ்டைல், ஷோமேன்ஷிப், மானரிசங்கள் போன்றவை அவர் நுழைந்த காலத்தில் ஒத்துவராததாகக் கருதப்பட்டவை. நமது கட்டுப்பெட்டி செலக்டர்களுக்குப் பிடிக்க வாய்ப்பே இல்லை. ஒருவகையில் பார்த்தால் காம்ப்ளி 20 வருடம் முன்னதாகவே க்ரிக்கெட் உலகத்தில் ப்ரவேசித்துவிட்டார் எனத் தோன்றுகிறது.

      நீக்கு
    3. காம்ப்ளி குறித்து ஏகாந்தன் சார் சொல்லியிருப்பதை ஆமோதிக்கிறேன். செலக்டர்களுக்கு என்ன நிர்ப்பந்தமோ!

      நீக்கு
    4. காம்ப்ளி போதையினால் கெட்டார் என்றொரு தகவல் உண்டு. அந்த துரதிருஷ்டவசமான ஸ்ரீலங்காவுடனான கல்கத்தா உலகக் கோப்பை ஆட்டத்தில் அவர் அழுகை நினைவுக்கு வருகிறது!

      நீக்கு
    5. வினோத் காம்ப்ளி பெயருக்கேற்றபடி வினோதமானவர். வெஸ்ட் இண்டீஸின் கேர்ஃப்ரீ மைண்ட்-செட் உள்ள இந்திய வீரர்! போதையில் வீழ்ந்தவரில்லை. பாப் மியூஸிக் பைத்தியம். பாடியிருக்கிறார். சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார். ஒற்றைக்காதில் வளையம் போட்டுக்கொள்வார் இப்படி சில கிறுக்குத்தனங்கள். பல்துறைகளில் அவர் காட்டிய ஆர்வம், வேகம் அபரிமிதமானது. சச்சினின் சாதுத்தனத்தை, அடங்கிப்போகும் அசட்டுத்தனத்தைக் கொண்டாடுபவர்கள் காம்ப்ளியை வெறுப்புடன் தான் பார்ப்பார்கள். பார்த்தார்கள். பார்த்தவர்களில் சிலருக்கு சர்வதேசக் களத்தில் காம்ப்ளியின் ஆரம்ப வெற்றிகளை ஜீரணிக்க முடியவில்லை - ‘இந்த லோ-க்ளாஸ்’ பயல் பெரிய ஆளா ஆயிடுவான் போலருக்கே! - பொறாமையின் அசிங்க முகங்கள் மெல்லத் தலைதூக்கின. இதனைக் கவனிக்கமுடியாமல், கவனித்தும் ஒன்றும் செய்யமுடியாமல் வாளாவிருந்தார் காம்ப்ளி. வீழ்த்தப்பட்டார். இப்போது ரிஷப் பந்திற்கு கொடுக்கிறார்களே .. சான்ஸ்.. அப்படி ஒரு இரண்டாவது வாய்ப்பைக்கூட -டெஸ்ட் லெவலில்- அவருக்குக் கொடுக்கவில்லை. விரட்டிவிட்டுவிட்டார்கள்.

      இன்னொரு விஷயம் : தமிழ் எழுத்தாளப் பெரிசுகளில் ஒன்று, தன்னை ‘தமிழ் இலக்கியத்தின் வினோத் காம்ப்ளி’ என்று ஒருமுறை அழைத்துக்கொண்டதுண்டு!

      நீக்கு
    6. சிலருக்கு அதீத புகழ்/பணம் வரும்போது ஹேண்டில் செய்யத் தெரிவதில்லை. காம்ப்ளி அப்படிப்பட்டவர் என்று நினைக்கிறேன். தமிழக உதாரணம் எல். சிவராமகிருஷ்ணன். தன் உழைப்பை (அதாவது இந்திய அணிக்கு வரும் அளவு உழைப்பை) வீணடித்துக்கொண்டவர்.

      நீக்கு
  27. 1) இந்த ஊரடங்கு வாழ்க்கைக்குப் பின் உங்களுடைய வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் வரும்?

    அடுத்தவர் கை கொடுத்தாலும் திருப்பி கை கொடுக்க யோசிப்பேன். யாரேனும் இருமினால் அலர்ட் ஆவேன். யாரிடமும் நெருங்கிவர மாட்டேன் ஒரு மூன்று அடியாவது இடைவெளி இருக்கணும்னு நினைப்பேன். எந்தப் பொருட்களை கடைகளிலிருந்து வாங்கிவந்தாலும் இப்போது செய்வதுபோல கூடுதலாக சுத்தம் செய்வேன்.

    2) முன்பு நீங்கள் அலட்சியமாக விட்ட சில செயல்கள் இனிமேல் கவனமாக பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் நினைப்பவை எவை?

    மேலே உள்ளதுதான். அதிலும் காய்கறி, பால் பாக்கெட் போன்ற பலதையும் நன்றாக சுத்தம் செய்வேன். வீட்டிற்கு வந்ததும் கை கால் அலம்புவது, எதில் உடை படுகிறது, யாரையாவது தொட்டோமா என்றெல்லாம் கவனத்தில் வைத்துக்கொண்டு அதற்கேற்றபடி சுத்தம் செய்துகொள்வது.

    3) ஊரடங்கு நேரத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு பின்பற்றிய சிலதை 'அப்பாடி இனிமேல் வேண்டாம் இது ' என்று நினைப்பது எதை

    வெளியே நடைப்பயிற்சி, யோகா செய்வது. அப்பாடி..இனி வீட்டில் அடைந்துகிடக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  28. ஏற்கெனவே 3கேள்விகள் கேட்டிருக்கேன். இப்போ
    4. மே மாதம் 3 ஆம் தேதியோடு ஊரடங்கு முடியுமா? நீட்டிக்கப்படுமா?

    5. கொரோனா அடங்கி இருப்பதாக நினைக்கிறீர்களா?

    6. அரசும், காவல்துறையும் இவ்வளவு கெடுபிடியுடன் இருந்தாலும் மக்கள் அதை அலட்சியம் செய்வது ஏன்?



    7. இந்த ஊரடங்கால் தனிப்பட்ட உங்கள் வாழ்க்கையில் மாமூலான வாழ்க்கை முறை மாறி இருக்கிறதா? (எங்களுக்கு அப்படி இல்லை. தினம் அதே போல் காலை எழுந்திருந்து வீடு, வாசல் சுத்தம் செய்துவிட்டுக் காஃபி, குளியல், பின்னர் கஞ்சி, சமையல், சாப்பாடுனு அதே மாதிரித்தான். காய்கள் எல்லாம் சந்தைக்குப் போய் வாங்கி வருவார். இப்போ இங்கே அருகிலுள்ள கடை! அதான் வித்தியாசம். )

    பதிலளிநீக்கு
  29. ஊரடங்கினால் உங்களுக்கு நன்மையா, தீமையா? இல்லை எப்போதும் போலவா?

    இணையம் மூலம் பால், காய்கள் வாங்குவதில் ஊரடங்கினால் மாற்றம் வந்திருக்கிறதா? இல்லை அப்படியே தானா?

    வீட்டில் எல்லோரும் கூடி ஒன்றாகச் சாப்பிட்டுக் களித்து இருப்பதில் சந்தோஷம்தானே வரவேண்டும்? ஏன் ஆங்காங்கே சண்டைகள் வருகின்றன? லூடோ விளையாட்டில் மனைவி ஜெயித்துவிட்டதால் கணவர் அவர் முதுகை உடைத்துவிட்டாராம்! :(

    பதிலளிநீக்கு
  30. தனிமனித உரிமை என்பதை இங்கே சாப்பாட்டிலும், திரைப்படம் பார்ப்பதிலும் என நினைத்துக் கொள்கின்றனர். உண்மையில் தனி மனித உரிமை என்பது என்ன என்பதை எப்படிச் சொல்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எட்டு கேள்விகளுக்கும் பதில் அளிப்போம்.

      நீக்கு
    2. 11 கேள்விகள். முன்னாடி 3 கேள்விகள் கேட்டிருக்கேனே! ஹை, உங்களை யாரு விட்டாங்க?

      நீக்கு
  31. கடைசியிலிருந்து போகிறேன்...கேள்விகளில் இருந்து

    1) இந்த ஊரடங்கு வாழ்க்கைக்குப் பின் உங்களுடைய வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் வரும்?

    மாற்றங்கள் பெரிதாக இல்லை. நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. வாழ்க்கையை ஏற்கனவே ஜிம்பிளாக வாழ்ந்தாலும் இனியும் அது தொடர வேண்டும் என்பது. தேவையற்ற தேவைகளைக் குறைத்துக்கொளல். ஏற்கனவே தேவைகள் குறைவு, ஜிம்பிள் வாழ்க்கைதான் என்றாலும் இன்னும் தேவைகளைக் குறைத்துக் கொள்ள முடியும் என்பது. வாக்கிங்க் உடற்பயிற்சி வீட்டிற்குள்ளும் அல்லது மாடி இருந்தால் மாடியில் செய்து கொள்ளப் பழகியது. அடுத்து மிக மிக முக்கியமான சுத்தம். முன்பே அது உண்டு என்றாலும் இப்போது கூடுதல் கை கழுவுதல், கடையில் வாங்கியப் பேக்கட்டுகளைக் கூடச் சுத்தப்படுத்தி எடுத்தல் போன்றவை. (ஃப்ரிட்ஜ் இல்லாமல் ஒரு வருடம் 7 மாதங்கள் கடந்துவிட்டோமேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ)

    யார் வீட்டிற்குச் சென்றாலும் உள்ளே சென்றதும் அவர்கள் வீட்டிலேயே கை கால் கழுவிக் கொள்வேன். அது அவர்களுக்கு நல்லதுதானே? அது இடையில் விட்டுப் போனது. (ஒருவர் கொஞ்சம் சில சாஸ்திரங்கள் பேசுபவர் அவர் வீட்டுக்குச் சென்ற போது அவர் அப்படிச் செய்யக் கூடாது என்று சொல்லி என்னவோ சொன்னார்...எனக்கு அது விளங்கவில்லை. என் வீட்டில் உள்ளோரும் என்னை ஓவரா பெரிசா என்னவோ நீதான் உலகத்திலேயே சுத்தம் என்பது போலச்செய்யாதே ஓசிடி (என்று சொல்லியதால் விட்டது...) ஆனால் அதை இப்போது மீண்டும் தொடர வேண்டும்.

    2) முன்பு நீங்கள் அலட்சியமாக விட்ட சில செயல்கள் இனிமேல் கவனமாக பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் நினைப்பவை எவை?

    உடல்நலம். தொற்றை விடுங்கள் வேறு வந்தாலும் ஆஸ்பத்திரிக்குச் செல்ல கஷ்டம அப்படியே சென்றாலும் ட்ரீட்மென்ட் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் கிடைப்பதில்லை. எனவே உடல் நலத்தை இன்னும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்...இம்யூனிட்டியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

    3) ஊரடங்கு நேரத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு பின்பற்றிய சிலதை 'அப்பாடி இனிமேல் வேண்டாம் இது ' என்று நினைப்பது எதை?

    பல்லைக் கடித்துக் கொண்டு என்று சொல்வதற்கில்லை. அப்படி எதுவும் இல்லை. பானுக்கா, நெல்லை மற்றும் இங்கிருக்கும் நட்புகள், கௌ அண்ணா வீட்டிற்குப் போவோமா என்று நெல்லை என்னிடம் கேட்டிருந்தார். பானுக்கா வீட்டிற்கும். அது இப்போது இல்லை. இதுவும் கடந்து போகும். அடுத்து பயணம் செய்ய ரொம்பப் பிடிக்கும். இப்போது இல்லை என்றாலும் அதுவும் நடக்கும். மகனைக் காண வேண்டும் என்ற ஆவல் இருக்கு. அவனுக்கும். அது எப்போது என்ற ஓர் சிந்தனை. ஆனால் அது மனதைப் பாதித்து வருந்தி புலம்பும்படி எதுவும் இல்லை...வாழ்க்கையை அதன் போக்கிலேயே எடுத்துக் கொள்வதால் பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப் போனால் இதையும் நான் ரசிக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பதில்கள். // சொல்லப் போனால் இதையும் நான் ரசிக்கிறேன்.// சூப்பர்.

      நீக்கு
  32. ஹப்பா எங்க வீட்டுல சாப்பாட்டுல எதுவும் பிடிக்காதுன்னு இல்லவே இல்லை. மகன் உட்பட. எது இருக்கோ அதைச் சாப்பிடுவது. கஞ்சியாக இருந்தாலும் கூட ஓகே என்று. இதுதான் வேண்டும் என்பதும் இல்லை.

    மாமியார் வீட்டில் இருந்தப்ப கவனித்திருக்கிறேன் விளம்பரம் வரும் போது ஒலி கூடும். படம் வந்ததும் ஒலி குறையும் நானும் ஏன் என்று யோசித்ததுண்டு..(எங்க வீட்டில் டிவி பெட்டி மிகவும் சிறியது மட்டும் உண்டு ஆனால் கனெக்ஷ்ன் கிடையாது. )

    கௌ அண்ணா பதில் ஹா ஹா ஹா நல்ல தெக்கினிக்கி.

    கீதா

    பதிலளிநீக்கு
  33. போஸ்ட் ரிட்டையர்மென்ட் //

    பெரும்பாலான ஆண்களுக்குக் கஷ்டம் ஏனென்றால் பொழுது போக்கும் வழிகள் தெரியாமல் இருப்பதால். வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள், வீட்டு வேலைகளைப் பகிர்ந்தோ இல்லை செய்தோ பழக்கம் இல்லாதவர்கள், தன்னைத்தானே என்கேஜ் செய்து கொள்ளத் தெரியாதவர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள். தன்னைத்தானே என்கேஜ் செய்யத் தெரிந்தவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். தனியாக இருக்கும் ஆண்கள் கூட இருக்கிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிடயர்மெண்டுக்குப் பிறகு(ம்) என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பவர்களுக்கு வாழ்க்கை கஷ்டம்தான். காலத்திற்கேற்ப தன்னில் மாற்றம் கொண்டுவருபவர்கள்தான் சந்தோஷமாக வாழலாம்.

      நீக்கு
  34. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும், பிடிக்காது என இருப்பதால் மனைவி பாடுதான் கஷ்டம் (எல்லார் வீட்டிலேயும்)//

    ஹா ஹா ஹா உண்மைதான் நெல்லை. ஆனால் எங்க வீட்டுல பத்தி மேலே சொல்லிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  35. கேள்விகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன.
    பதில்களும்.

    1) இந்த ஊரடங்கு வாழ்க்கைக்குப் பின் உங்களுடைய வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் வரும்?

    பெரிதான மாற்றங்கள் இல்லை. இப்போது யோகா ரெகுலராகச் செய்கிறேன். தொடர வேண்டும் என்று நினைத்துள்ளேன். வீட்டுத் தோட்டத்திற்குள்ளேயே நடைப்பயிற்சி. அதையும் தொடரவேண்டும். சுத்தம் என்பதெல்லாம் இப்போது சொல்லப்படுவது எப்போதுமே வீட்டில் உண்டு.

    2) முன்பு நீங்கள் அலட்சியமாக விட்ட சில செயல்கள் இனிமேல் கவனமாக பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் நினைப்பவை எவை?

    ஹெல்த் தான் முன்பு சரியாகப் பேணியதில்லை. ஆனால் இப்போது அதைப் பேண வேண்டும் என்ற எண்ணம் வலுவாகியிருக்கிறது

    3) ஊரடங்கு நேரத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு பின்பற்றிய சிலதை 'அப்பாடி இனிமேல் வேண்டாம் இது ' என்று நினைப்பது எதை?

    அப்படி எதுவும் இல்லை. இதுவும் கடந்து போகும். நல்ல ஆஸ்பத்திரி செல்லவேண்டும் என்றால் 1 1/2 மணி நேரம், 2 மணி நேர தூரம். கொஞ்சம் கவலையான விஷயம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  36. 1) இந்த ஊரடங்கு வாழ்க்கைக்குப் பின் உங்களுடைய வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் வரும்?

    ஒரு மாற்றமும் வராது :) பொதுவாகவே நாங்கள் வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கத்தை கடைபிடிக்கிறோம் .மேக்டானால்ட்ஸ் kfc இதெல்லாம் நிரந்தரமா மூடினாலும் எங்களுக்கு நோ ப்ராப்லம் :) எப்பவும்போல் அப்பாவும் மகளும் கூட்டு சேர்ந்து என்னை கலாய்ப்பது இப்பவும் தொடர்கிறது ,அது எப்பவும் தொடரும் ஒரு சில வீடுகளில் ஊரடங்கில்  ( சில பிரபலங்கள் சொன்னதை வைத்து ) வீட்டில் பாத்திரம் கழுவாரோம் தோசை சுடறோம்னு போலெல்லாம் எங்கள் வீட்டிலில்லை :) எப்பவும் சமையலில் அவர் கைப்பக்குவம் உதவி என இருக்கிறார் .அது எப்பவும் போல் தொடரும் .ஒரேயொரு விஷயம் மட்டும் மாறும் அது வார இறுதிக்கு மட்டும் வருவாள் மகள் ஊரடங்குக்குப்பின் .வேணும்னா நான் வாலிண்டியரிங் செய்வது இன்னமும் அதிகரிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. anegamaa  நானே சொந்தமா ஆண்களுக்கான சிகை நிலையம் ஒன்று துவங்கலாம் :) ஹாஹாஆ 

      நீக்கு
    2. நான் ஏற்கனவே தொடங்கிட்டேன்:)).. புளொக்கேர்ஸ் க்கு 20 வீதம் ஓஃப் ல கட்டிங் செய்வேன்:)) தயங்காமல் அழைக்க வேண்டிய இலக்கம்.. 004407456403267

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி. அதிரா கால் செய்பவர்களை தேம்சில் தள்ளிடுவார் - உஷார் மக்களே !

      நீக்கு
    4. //kfc இதெல்லாம் நிரந்தரமா மூடினாலும் எங்களுக்கு நோ ப்ராப்லம் :) //

      ஹா ஹா ஹா சுடச்சுட ஒரு நியூஸ்.. பிரித்தானியாவில் பல கே எஃப் சி நிலையங்கள் இன்று திறக்கப் படுகின்றன, ஆனா ஹோம் டெலிவரி மட்டுமே:)) ஹா அஹ ஹா..

      நீக்கு
  37. ///2) முன்பு நீங்கள் அலட்சியமாக விட்ட சில செயல்கள் இனிமேல் கவனமாக பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் நினைப்பவை எவை? //

    அலட்சியமா இருப்பதெல்லாம் கிடையாது சில அனுபவங்கள் பண்படுத்தி விட்டன ஏற்கனவே என்னை :)

    பதிலளிநீக்கு
  38. //3) ஊரடங்கு நேரத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு பின்பற்றிய சிலதை 'அப்பாடி இனிமேல் வேண்டாம் இது ' என்று நினைப்பது எதை?//

    ஊரடங்கு என்பதை விட நோயடங்கு விற்குப்பின் நான் செய்யும் வேலை சம்பந்தமா சொல்லனும்னா இந்த quarantine டைமுக்கு பிறகு மாஸ்க் visor இதெல்லாம் போடவேண்டாம் ஸ்பெஷல் ஏப்ரன் க்ளவுஸ் இதெல்லாம் once in 5 minutes மாற்றி மாற்றி கைகழுவி கழுவி பைத்தியம் பிடிக்குது .இதெல்லாம்  இந்த நோயடங்குக்குப்பின்தான் சாத்தியம் அப்பாடி இனிமே இதெல்லாம் வேணாம்னு வரும் நாளை காண வெயிட்டிங் 

    பதிலளிநீக்கு
  39. //போஸ்ட் ரிடையர்மெண்ட் சிண்ட்ரோம் ஆண்களை பாதிப்பதை போல பெண்களை பாதிப்பதில்லையே ஏன்?//

    சில பெண்கள் ஒரு பொழுதுபோக்குக்காகவும்பல பெண்கள் குடும்ப வருமானத்துக்காவுமே வேலைக்குப் போகின்றனர், பெண்களுக்கு வீட்டில் நிற்பதுதான் அதுகம் பிடிக்குது, ஆனா ஆண்களுக்கு வெளியே ஒரு தடவையாவது போய் வந்தால்தான் திருப்தி:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி நினைக்கிறீர்களா! சொந்த அனுபவங்களா?

      நீக்கு
    2. ///சொந்த அனுபவங்களா?//

      இப்பவாச்சும் நம்புங்க 16 திருப்பி போட்டு இந்த ஞானி சுத்துறாங்க :)ரிட்டயர்மெண்ட் பற்றி இவ்ளோ க்ளியரா சொல்றவங்க சொந்த அனுபவம்தான் 

      பூனை கெட்டது தனது whiskers ஆலே :)))))))))))

      நீக்கு
    3. ஹா ஹா ஹா - அவங்க இதைப் பார்க்கவே இல்லைன்னு சொல்லுவாங்க பாருங்க!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா ஹா உம்மையாலுமே:)).. ஜச்சியமாலுமே:)) நான் இதை இப்போதான் பார்கிறேன்.. காசிக்குப் போகப் பிளேனில கால் வைக்க முன் பார்த்திருந்தால் பதில் போட்டிருப்பேன்ன்:)) இப்போ த்றீ லேட்டூஊ:))

      நீக்கு
  40. //துரோகம் செய்து விட்டு அதனை துளியும் உணராமல் பல வருடங்களாக இருப்பவர்களை எளிதாக மறந்து விடமுடியுமா ?///

    ஹா ஹா ஹா இதில இன்னொன்றும் இருக்குதாக்கும்:)).. நாம் துரோகம் என நினைப்பதை, அவர்கள் நமக்கு நன்மை செய்கிறேன் பேர்வழி என நினைச்சுச் செய்திருந்தால்:)) எனவே, துரோகம் என நாம் நினைப்பதை, நேரிடையாகக் கேட்டுப் பார்ப்பது நல்லது ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது நாம் அவரிடம் போய், "ஐயா / அம்மா - நீங்க எனக்கு செய்தது துரோகமா அல்லது நன்மையா " என்று கேட்க வேண்டும். அதற்கு அவர் " நான் உங்களுக்கு செய்தது பச்சை துரோகம் " என்று சொன்னவுடன், நாம் நன்றி சொல்லி விடைபெற வேண்டும். சரியா ?

      நீக்கு
    2. துரோகம் என்றால் என்னைப் பொறுத்தவரை நற்பெயரைக் கெடுப்பது. அதுவும் திட்டமிட்டு! character assasination. இத்தனைக்கும் நாம் அவருக்கு மனப்பூர்வமாக எல்லா உதவிகளையும் முழு மனதோடும் சந்தோஷமாகவும் செய்திருப்போம். ஆனால் அவங்க அதை மறந்துட்டு நம் பெயரைக் கெடுக்கும்படி ஏதேனும் செய்வார்கள்/சொல்வார்கள்.

      நீக்கு
    3. //கௌதமன் 29 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 6:12
      அதாவது நாம் அவரிடம் போய், "ஐயா / அம்மா - நீங்க எனக்கு செய்தது துரோகமா அல்லது நன்மையா " என்று கேட்க வேண்டும்.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)) விடுங்கோ நான் காசிக்கே போயிடுறேன்ன்ன்:))

      நீக்கு
    4. /நாம் துரோகம் என நினைப்பதை, அவர்கள் நமக்கு நன்மை செய்கிறேன் பேர்வழி என நினைச்சுச் செய்திருந்தால்// - இதற்கு உதாரணங்கள் தர முடியும். ஒருத்தன் ஒரு பெண்ணைக் காதலிப்பான். அவனுடைய நெருங்கிய நண்பன், 'காதல் பைத்தியம்' முற்றிவிட்ட தன் நண்பனிடம் சொன்னால் அவன் காதில் ஏறாது, அந்தப் பெண் இவனுக்குப் பொருத்தமானவனில்லை என்று கட் பண்ணிவிட்டுவிட்டாலோ அல்லது அவளுக்கு நெருங்கியவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, காதலைக் கலைத்துவிட்டாலோ, நண்பன் அதனை துரோகம் என்று எண்ணிக்கொள்வான், இவனோ நண்பனுக்கு நன்மை செய்தவனாவான். இன்னொரு விதத்தில் இந்த நண்பன் (நண்பனாக இருந்த போதிலும், அவன் உள் விஷயங்கள் குணங்கள் தெரிந்திருப்பதால்) அவளுக்குப் பொருத்தமானவன் இல்லை என்பதனால், தனக்கு மிகவும் தெரிந்த அந்தப் பெண்ணைக் காக்க வேண்டி, அவள் வீட்டாரிடம் சொல்லி, காதலுக்கு முடிவுரை எழுத வைத்திருப்பான். நண்பனுக்கு இவன் துரோகியாகத் தெரிந்தாலும், தன் மனதுக்கு இவன் சரியானதைத்தான் செய்திருக்கிறான்.

      'துரோகம்' என்பது அவரவர் பார்வையில்தான் இருக்கிறது என்பது என் எண்ணம்.

      நீக்கு
    5. ஆஆஆஆஆஆஅ நெல்லைத்தமிழன் கை குடுங்கோ:)) இல்ல இல்ல வாணாம் வணகம் சொல்லிக்கொள்கிறேன் 2 மீட்டர் தள்ளி நிண்டு:))

      இதைத்தான் நான் சொல்ல வந்தேன் அதுக்குள் ஒரு அப்பாவி சுவீட் 16 ஐ மிரட்டிப் போட்டார் கெள அண்ணன் கர்ர்ர்ர்ர்ர்:))....

      சில சமயம் நாம் நல்லது செய்கிறோம் என எண்ணியே செய்வோம்ம்.. ஆனா அது அவர்களுக்குத் துரோகம் போலாகிடும்.. அதை சொல்லி விளங்கப் படுத்தலாம் எனில், நம்மைக் கோபத்தில் நெருங்க விடமாட்டார்கள் ஹா ஹா ஹா..

      நீக்கு
    6. நெல்லைத்தமிழரே, ஒருவர் காதலித்த/விரும்பிய பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள விடாமல் செய்வது எல்லாம் துரோகத்தில் சேர்த்தியாக இருக்கலாம். ஆனால் நான் சொல்வது வேறே. முழுக்க முழுக்கக் கஷ்டப்பட்ட ஒருத்தரைப் பலவிதங்களிலும் கைதூக்கி விட்டவருக்கு அவருக்குத் தெரியாமலேயே கெட்ட பெயர் வாங்கிக் கொடுப்பதைத் தான் (கில்லர்ஜிக்குப் புரியும்) நான் துரோகம், பச்சை துரோகம் எனச் சொல்கிறேன்.

      நீக்கு
  41. //திருமணமே இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வது தானே ? எனக்கு ஒரு சில காய் பிடிக்காது அதனால் அதை செய்யக் கூடாதுனு சொல்ல முடியுமா ?//

    ஹா ஹா ஹா இதைக் கொஞ்சம் மாத்தி ஓசிச்சால் என்ன?:)).. அதாவது விட்டுக் கொடுத்துத்தான் வாழ்வது திருமணம் எனில், நமக்குப் பிடிக்காதெனினும், நம் துணைக்குப் பிடிச்சிருக்கு என்பதற்காக நாமும் அதனைச் சேர்ந்து சுவைக்கலாமே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்  சூப்பர் :) எங்காத்துக்காரர் இப்போ வெஜ் உணவுக்கு அப்டியே பழக்கிட்டேனே :) மோர்க்குழம்பு மிளகுக்குழம்புன்னு ருசி ரசிச்சு சாப்பிடறறாரே :) 

      நீக்கு
    2. //
      Angel29 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 5:54
      ஆங் சூப்பர் :) எங்காத்துக்காரர் இப்போ வெஜ் உணவுக்கு அப்டியே பழக்கிட்டேனே :)//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்கள் விட்டுக்குடுக்கவில்லை என்பது புரியுதூஊஊஊ:)).. கணவனே கண்ணில கண்ட தெய்வம் என.. அஞ்சுவெல்லோ ஆட்டுக்கு மாட்டுக்கு மேல ஜம்ப் ஆகியிருக்கோணும் ஹா ஹா ஹா ஹையோ நானில்ல நானில்ல..:))

      நீக்கு
    3. என் ஆத்துக்காரரும் திருமணத்துக்கு முன்னர் கந்த சஷ்டி மட்டுமே விரதமிருப்பார், ஆனா திருமணத்தின் பின்னர், நான் கேதார கெளரி விரதம் என்பதால தானும் 21 நாட்களும் சைவமாக இருப்பார்..

      கனம் கோட்டார் அவர்களே:
      நான் எதுவும் மிரட்டிச் செய்யச் சொல்லவில்லையாக்கும்... இது அன்பால் விளைந்த வழியம்மா:)) ஹா ஹா ஹா.

      எங்கட அப்பாவும் அப்படித்தான், அம்மா ஏதும் விரதம் எனில் தானும் விரதம் என்றிடுவார்.. அதனால அப்பா பாவமே என பின்னாளில் , தான் விரதம் என்பதை [சில விரதங்கள்] சொல்லாமல் மறைச்சிடுவா அம்மா..

      ஆனால் நான் மறைக்க மாட்டேனாக்கும்:)).. மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊ:))

      நீக்கு
    4. ஹல்லோ இல்வாழ்க்கையில் ஒருவர் விட்டுக்கொடுத்தாற் போதும் :)) அதோட அவர் ஆடு மாடு எல்லாம் நல்லா மேய்ப்பார் .ட்ரெயினிங் கொடுத்துட்டோம்ல 

      நீக்கு
    5. //Angel29 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 7:30
      ஹல்லோ இல்வாழ்க்கையில் ஒருவர் விட்டுக்கொடுத்தாற் போதும் :))//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
      வண்டி ஓடச் சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும், அதில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்ம்ம்ம்:)) மீ ஞானி ஆகிட்டேனெல்லோ:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    6. ஆஆஆ சொல்ல வந்த மெயின் பொயிண்ட்டை விட்டிட்டேன்ன்..

      ஆதலால அஞ்சுவும் விட்டுக்குடுத்து, நாளைக்கே கே எஃப் சி சாப்பிடோணுமாக்கும்:))

      நீக்கு
    7. // வண்டி ஓடச் சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும், அதில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்ம்ம்ம்:)) மீ ஞானி ஆகிட்டேனெல்லோ:))// வயல் டிராக்டர்களிலும், இங்கு நான் காணும் தண்ணி வண்டி டிராக்டர்களிலும், முன்சக்கரங்கள் அளவில் சிறியவை. அவைகள் ஓடிக்கொண்டுதான் உள்ளன, ஞானியே !

      நீக்கு
    8. //முன்சக்கரங்கள் அளவில் சிறியவை. அவைகள் ஓடிக்கொண்டுதான் உள்ளன, ஞானியே !//

      ஆஆஆஆவ்வ்வ் தப்புக் கணக்கை அவசரப்பட்டுப் போட்டு விட்டீங்கள் கெள அண்ணன்... முன்னால் இருக்கும் சிறியவை .. அவை குழந்தைகள்:)).. ஒரு குடும்பத்தில் ஒரு ஜோடிதானே இருக்க முடியும், ஏனையவை எல்லாம் குழந்தைகளே:))) ஹா ஹா ஹா இப்பூடிக்குப் புலாலியூர்ப் பூஸானந்தா:)).. புவஹா புவஹா புவஹா- இது ஞானி அவர்கள் சிரிக்கிறார்:).. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்..

      நீக்கு
  42. //1) இந்த ஊரடங்கு வாழ்க்கைக்குப் பின் உங்களுடைய வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் வரும்? //

    இங்கு வெளிநாட்டு வாழ்க்கையில் விடுமுறை நாட்கள் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது ஊரடங்கு நாளும் மிக்க மகிழ்ச்சியா எனக்கு, நல்ல சமையல் சாப்பாடு ரிவி என ஹா ஹா ஹா அதனால என்னைப்பொறுத்து பெரிய மாற்றம் எனச் சொல்லுமளவுக்கு ஏதும் இல்லை..

    ஆனால் நிலைமை நோர்மல் ஆகிட்டால் காலையில எழும்பி ஸ்கூலுக்குப் போகவேண்டி வந்திடுமோ எனத்தான் பயமாக இருக்குது ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ! இது நல்லா இருக்கே! ஊரடங்கு தொடர்ந்தால் உங்களுக்கு ஜாலிதான் போலிருக்கு!

      நீக்கு
  43. //3) ஊரடங்கு நேரத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு பின்பற்றிய சிலதை 'அப்பாடி இனிமேல் வேண்டாம் இது ' என்று நினைப்பது எதை?//

    இந்த ஷொப்பிங் தான்... நினைத்தவுடன் போக முடியாமல், லிஸ்ட் போட்டுப் போய் நினைவாக அனைத்தையும் வாங்கி வரவேண்டி இருக்கிறது,

    மற்றும் வீட்டுக்கு வந்ததும், அப்படியே நம்மையும் சேர்த்து வோஷிங் மெசின் உள்ளே போட்டு வெளியே எடுத்தபின்பே ரீ கூடக் குடிக்க முடியுது.. இது பெரிய கொடுமை:(.

    பதிலளிநீக்கு
  44. ஆங்ங்ங் எங்கட கொரொனா வந்து நலமாகி இப்போ வேலைக்குத் திரும்பியிருக்கும் மேன்மைதகு பிரதமர் ஜோன்ஸன் அவர்களுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்திருக்கு டும் டும் டும்.... அவரின் வயசு... உங்களுக்குத் தெரியும்தானே ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர் :) 55 வயசெல்லாம் ஒரு வயசா :)

      நீக்கு
    2. !!! ஹா ஹா ஹா !! 55 வயசெல்லாம் ஒரு வயசா? ஒரு வயசு இல்லீங்கோ அம்பத்தஞ்சு வயசு!

      நீக்கு
    3. ஹா ஹா ஹா பல்லிருப்பவர் கடலை மிட்டாய் சாப்பிடுகிறார்.. நமக்கெதுக்கு வம்பு.. ஹையோ மீ ஓடிடுறேன்..

      வெளிநாடுகளில் 55 என்பது 35 போலத்தானாக்கும்:))

      நீக்கு
    4. அவர் வயசென்னனு ஸ்டார்ட் பண்ணி வச்சதே நீங்கதானே பிஞ்சு :))  உங்களுக்கென்ன ஜெலஸ் இதில் 

      நீக்கு
    5. சே சே எனக்கு ஜெலஸா.. சே..சே.. “எனக்குக்” குட்டித்தம்பி பிறந்திருக்கிறார் எனும் சந்தோசத்தில் லட்டுச் செய்கிறேன் நான் ஹா ஹா ஹா:))

      நீக்கு
    6. ஹலோ பிஞ்சு Carrie Symonds உங்க பொண்ணு பெறா மகள் :) அப்போ அந்த குழந்தை உங்களுக்கு க்ராண்ட்ஸன் :)

      நீக்கு
    7. //அப்போ அந்த குழந்தை உங்களுக்கு க்ராண்ட்ஸன் :)//
      இந்தக் கொரோனா நேரத்தில பலரின் “வசந்திகளை” சே..சே... இதென்ன இது டங்கு ஸ்லிப்பாகுதே:)) வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசாங்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்குது:)).. அதானால மக்களே அதிரா தவிர:), வேறு ஆர் பேச்சையும் நம்பாதீங்கோ:))

      நீக்கு
    8. ஹா ஹா இது ஒரு பக்கம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு! ஆனா இன்டரஸ்டிங் !

      நீக்கு
  45. "காதைக் கிழிக்கும் விளம்பர சப்தம் முடிந்ததும், சிறிய ஒலி கேட்க ஆரம்பித்ததும் எல்லோரும் திரும்ப படம் பார்க்க வருவதற்கு சௌகரியமாக இருக்கும்". அடடே இப்படியும் ஒரு சௌகரியம் இருக்கிறதா !!! .... "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி" என்பார்களே அது இதுதானோ ? பாவம் ... விளம்பரதாரர்களுக்கு தெரிந்தால் நொந்து நூடுல்ஸாகி போவார்களே ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!