சனி, 4 ஏப்ரல், 2020

ஆதித்ய திவாரிக்கு சிறந்த தாய் விருது 


1)  "..........அந்த வகையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க புது நத்தம் ரோடு வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே உள்ள 12,000 சதுரடி கொண்ட எனது வணிக கட்டடத்தை இலவசமாக வழங்குகிறேன்........"  என்று கூறும் மதுரை புது நத்தம் ரோடு டைல்ஸ் விற்பனையாளர் வெங்கடசுப்பிரமணி தனது வணிக கட்டடத்தை கொரோனோ மருத்துவமனைக்காக வழங்க முன்வந்துள்ளார்.  






2)  இப்போது அல்ல, இவர் எப்போதுமே இப்படிதான்...   அது வெள்ள சமயமாகட்டும், வர்தா புயல் சமயமாகட்டும்...

இப்படியாகக் கரோனா எதிர்ப்புப் போரிலும் இன்னும் என்னென்ன தேவையோ அனைத்தையும் செய்யத் தயாராகக் காத்திருக்கிறார் தம்பு.





3)  பசிக்கொடுமையில் சிக்கிய இரு இளைஞர்கள், அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தங்கள் நிலைமையை விளக்க, அவர்களுக்கு உணவு வாங்கி தந்த போலீசார், பணம் மற்றும் அரிசி, பருப்பு வாங்கி தந்த நெஞ்சை கலங்க வைக்கும் சம்பவம் டில்லியில் நடந்துள்ளது....  






தமிழகத்திலும் இதே போன்றதொரு சம்பவம்....






4)  சென்னை வளசரவாக்கத்தில் மாஸ்க்குடன் வரும்  மனிதர்களை கண்டு மிரண்டு தெருநாய்கள் துரத்துகின்றனவாம்.  அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.  அவை ஏற்கெனவே பசியுடன் அலைகின்றன பாவம்...  இதுபோன்ற ஜீவன்களுக்கு உணவளித்து உதவும் நடிகை சம்யுக்தா ஒரநாடு...  (நன்றி ஏகாந்தன் ஸார்)





5)  இதோ ஒரு பாஸிட்டிவ் மனிதர்...  அச்சப்படாதீர்கள் என்கிறார்.




5)  கொரோனா இலலாமல் ஒரு பாஸிட்டிவ் செய்தியை எடுத்துக் கொடுத்த (காணாமல் போன கனவுகள்) ராஜிக்கு நன்றி! 

"மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் ஆதித்ய திவாரி. இவர் கடந்த 2016-ம் ஆண்டில் மனவளர்ச்சி குன்றிய சிறுவனை தத்தெடுத்தார். இதற்காக ஒன்றரை ஆண்டுகள் அவர் போராட வேண்டி இருந்தது. திவாரி தனியாக வசித்து வருவதால் அவர் குழந்தையை தத்தெடுப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. எனினும்,...."






6)  "......... இதைப் புரிந்துகொண்டு பழங்குடி மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை ஆட்சியர் நூஹ், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெனிஷ் ஆகியோர் தாங்களே தோளில் சுமந்து சென்று கொடுத்தனர். கூடவே, அங்கிருக்கும் பழங்குடி மக்களுக்கு கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வையும் ஊட்டித் திரும்பினார் ஆட்சியர்.  பத்தனம்திட்டா ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெனிஷ் ஆகியோரின் இந்த கரோனா சேவை பழங்குடிமக்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது......"





7)  இதைத் தனது பள்ளி மாணவர்கள் மூலம் தெரிந்துகொண்ட மு.க.இப்ராஹிம் இராமனூத்து கிராமத்தில் உள்ள 25 ஏழைக் குடும்பங்களுக்குத் தலா 600 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள்களை தனது சொந்தச் செலவில் சமூக விலகலைக் கடைப்பிடித்து வீடு வீடாக நேரில் சென்று வழங்கி வந்துள்ளார். ஆசிரியர் மு.க.இப்ராஹிமின் இந்த உதவியால் 25 குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த 25 குடும்பத்தைச் சேர்ந்த பல பிள்ளைகள் இவருடைய பள்ளி மாணவர்கள்தான்.  (நன்றி ஏகாந்தன் ஸார்)




===================================================================

கொரோனாவும் பேர் இடர் மேலாண்மையும்

*திரு கே ஸ்ரீனிவாசன்



உலகமே ஒரு ஆழ்ந்த கவலையில் இருப்பதை நான் என் வாழ்நாளில் முதன்முறையாக இப்பொழுதான் அனுபவிக்கின்றேன்.

எல்லோரும் கூறக் கேள்விப்பட்டுள்ளோம் - முதல் உலகப்போர், இரண்டாம் உலகப் போர், ப்ளேக், பெரிய அம்மை, எய்ட்ஸ் என்று. ஆனால், இந்த கொரோனா வைரஸ் தாக்கு எல்லா சம்பவங்களை விடவும் அதிக வீர்யம் உள்ளதாகவும், உயிர் கொல்லியாகவும் உருப்பெற்று மேலும் வலுப் பெற்றுள்ளது. அனைவரையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியும், பலரையும் வீழ்த்தியும் உள்ளது இந்த கொடிய நோய். 



இந்த மாதிரி ஒரு தருணத்தில்தான் உலக நாடுகளுகிடையே பெரிய ஒற்றுமையும், தோழமையும் இந்த சவாலை எதிர் கொள்ள வேண்டியும், அதனை உலகிற்கு நிரூபிக்க வேண்டியும் உள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பது ஒரு பெரிய விஷயம். உலக நாடுகள் பல்வேறு மக்களையும், பழக்க வழக்கங்களையும் மற்றும் கலாச்சாரங்களயும் தட்ப வெப்பங்களையும், பூலோக வித்தியாசங்கள் மற்றும் வினோதங்களையும் உள் அடக்கிய பெரிய தொகுப்பாகத் திகழ்ந்தாலும், இதற்கிடையில் ஒரு நாட்டு மக்கள் மற்றொரு நாட்டு மக்களுடன் நெருங்கிப் பழகி, உறவு கொண்டு, வர்த்தகத்தில் தொடங்கி கலாச்சாரம், இலக்கியம், விஞ்ஞானம், தொழில் நுட்பம், மருத்துவம் என்று எல்லை கடந்த அனுபவங்கள் எதிர் கொள்வதை நாம் கண்கூட காண்கிறோம்.

மருத்துவம் என்று கூறும்போது, நம் நினைவிற்கு உடனே வருவது, உலகை ஆட்டிப் படைக்கும் இக்கொடிய கொரோனா வைரஸ்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று நம்புகின்றேன். 

என்ன கூறினாலும், ஒரு பிரச்சினை என்று வந்து விட்டால் ஒவ்வொருவரும் தங்கள் நலனையே முன் வைப்பர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. எனினும், பிரச்சினை நாடளாவியது. உலக நாடுகளும் தம் நாட்டு மக்களை பிரச்சினையில் இருந்து காத்து, மீட்டெடுப்பது அந்தந்த நாட்டின் தலையாய கடமை என்பதை நாம் அனைவரும் உணர்வோம். ஆனால் அதே சமயம் ஒரு சிக்கலான சம்பவம் உலகளாவியதாக வந்து விட்டால், அதை ஒரு நாட்டை மட்டும் சம்பந்தப் பட்ட விஷயமாகக் கொள்வது முட்டாள்தனம் என்று கூட கூறலாம். ஏன் என்றால் ஒரு உதாரணத்திற்கு, ஒரு இடத்தில் தீ பிடித்து விட்டால் மற்றவர் அது அவர்களை பாதிக்கும் வரையில் நமக்கு சம்மந்தம் இல்லை என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதை விட பல மடங்கு முட்டாள்தனமானதுதான் கொரோனா போன்ற சம்பவங்கள். ஆனால் நாட்டளவிலும் உலகளவிலும் பேர் இடர் மேலாண்மை என்பதை சிந்திக்கவும் செயல் படுத்தவும் வேண்டிய கட்டாயத்திற்கு உலக சமுதாயமே தள்ளப் பட்டு உள்ளது. இதை நாம் அனைவரும் உணரும் தருணம் மற்றும் சம்பவம் நிகழ்ந்து, அதன் தாக்கத்தில் சிக்குண்டு தவிக்கும் நேரம் வந்து விட்ட நிலையில், நாம் எத்தகைய கூட்டு முயற்சியில் ஈடுபடப் போகின்றோம் – நாடளவில் மற்றும் உலகளவில் என்ற ஒரு பெரிய விஜாரத்தில், விழிப்புணர்வில் நாம் நம்மை பொருத்திக் கொள்வது அவசியமாகின்றது.

இதுவரை நாட்டளவிலும் மற்றும் சர்வ தேச அளவிலும் இத்தகைய இயற்கை பேரழிவை அதுவும் இத்தகைய பிணி, பசி, ஏழ்மை, மூப்பு, துன்பம் போன்றவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை ஆலோசிக்க முன்யோசனையாக உலக சுகாதார மையம், உலக வர்த்தக மையம், உலக பொருளாதார மையம், உலக பேரிடர் காப்பு மையம் என்று பல்வேறு உலகளாவிய நிறுவனங்களை ஏற்படுத்தினாலும், அதன் பலன்களை முழுமையாக எல்லா நாட்டு மக்களுக்கும் எடுத்துச் சென்று, அவர்களின் துயர் துடைத்து அவர்களுக்கு பயனளிக்கும் தருணத்திற்கு வித்திட்டதாகவே நாம் இந்த கொரோனா தாக்கத்தை கொள்ள வேண்டும். 

அதே சமயம், எந்த ஒரு பேரிடர் ஆயினும் அதற்கு எந்த ஒரு உறுப்பினர் நாடானது தனிப்பட்ட முறையில் காரணமானால், அத்தகைய உறுப்பு நாடு இவ்வுலக சமுதாயக் கூட்டமைப்பால் சரியான வகையில் தண்டிக்கப்பட வேண்டும். இதில் தவறினால் இத்தகைய கூட்டமைப்பு உருவாக்கப் பட்டதே அர்த்தமற்றதாகிறது என்பது உங்கள் யாவருக்கும் புரிகின்றதா?



இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறியதையே நாம் நினைவு கொள்ள வேண்டும்,. “ஓரு பேரிடரை நாம் ஒரு பயனும் அடையாது அத்தகைய அரிய வாய்ப்பை நழுவ விடக் கூடாது”. 

அது இந்த கொரோனாவிற்கும் மற்ற எல்லா இத்தகைய சம்பவத்திற்கும் சாலப் பொருந்தும் என்று கூறி அனைவரும் ஒன்று பட்டு வாழ, நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

எனவே, நண்பர்களே, “தனித்திருங்கள்; விழித்திருங்கள்; அரசாணைகளை மதித்திருங்கள்.”
   

* கட்டுரையாளர் : திருமதி ரமா ஸ்ரீனிவாசன் அவர்களின் கணவர், திரு K ஸ்ரீனிவாசன். 



========================================
                     

52 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம். ஆஹா எவ்வளவு நல்ல சிறப்பான செய்திகள்.

    திரு ஸ்ரீனிவாசனின் சிறப்புச் செய்தி வேறயா. மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா..   வாங்க...   ஆமாம்..  திரு ஸ்ரீநிவாசன் கட்டுரையும் உண்டு.

      நீக்கு
  2. .டைல்ஸ் விற்பனையாளர் வெங்கடசுப்பிரமணி யின் தாராள மனதுக்கு நன்றியும் வாழ்த்துகளுமதே போல பண்ணையார் போலக் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் தம்பு அவர்களுக்கும் மனப்பூர்வ வாழ்த்துகள்.
    இவரின் சேவைகள் எப்பொழுதும் தழைக்கட்டும். உண்மையிலேயே தாராள மனது

    பதிலளிநீக்கு
  3. தில்லி இளைஞர்களின் பசிக்கொடுமையைத் தீர்த்த போலீசாருக்கு மனம் நிறை நன்றிகள்.

    இன்னும் எத்தனை பேர் இப்படித் தவிக்கிறார்களோ.நம் ஊர்த் தண்ணீர்ப்பந்தல் கிராமத்தில்
    தங்கிய வட இந்திய இளைஞர்களுக்கு உதவியவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகள் .நவீன
    மீடியாக்கள் ட்விட்டர் இத்தனை உதவி இருக்கிறதும் நன்மையே.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. தேறான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம். வாழ்க வையகம். வீழ்க வைரஸ்.

      நீக்கு
    2. // வாழ்க நலம். வாழ்க வையகம். வீழ்க வைரஸ்.// அருமையான சிந்தனை மிக்க வெளியீடு. ஆறே ஆறு வார்த்தைகளில் உலகின் நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள் ஸ்ரீராம். நன்றி

      நீக்கு
  6. இன்றைய சிறப்புச் செய்திகள் அனைத்தும் பொக்கிஷம் ஆனவை...

    நல்லவர்களால் சிறக்கட்டும்
    இந்த நாடு...

    வாழ்க வையகம்...

    பதிலளிநீக்கு
  7. மீண்டும் காலை பார்க்கலாம். இனிய நாளுக்கானவாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம். தாயுமானவனாகிய ஆதித்ய திவாரிக்கு வணக்கங்கள். சமயத்தில் உதவிய மற்றவர்களுக்கும் பாராட்டுகள். அதை சுட்டிய ராஜி அவர்களுக்கும், வெளியிட்ட எ.பிக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஆதித்யா திவாரி ஒரு ஆணும் தாயாக முடியும் என்பதை அவரின் உன்னதமான சேவையாலும் அன்பாலும் நிரூபித்திருக்கிறார்.
    ஈர நெஞ்சங்கள் என்றுமே மண்ணில் குறைந்ததில்லை என்பதை இன்றைய வெங்கட சுப்ரமனி, தம்பு, சம்யுக்தா, நிரூபித்திருக்கிறார்கள். அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் காலைப்பொழுதின் இனிய வணக்கங்கள்!!!

    பதிலளிநீக்கு
  11. ஷாகிர் சுபான் மார்ச் 5ந்தேதி கிளம்பி வந்து கேரளா சென்று 8ந்தேதி அவருக்கு எதுவும் பாதிப்பில்லை என்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். நாங்களும் 8ந்தேதி சென்னை வந்து சோதனைகளுக்கு ஆட்பட்டு எந்தப்பிரச்சினையுமில்லையென்று விடுவிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு 21 அல்லது 28 நாட்கள் வரை மறைந்திருந்து வெளியில் வரும் வாய்ப்பு உண்டு என்று சொல்லித்தான் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கிருமியானது பதினைந்து தாட்களுக்குப் பின்னர்தான் வேலையைக் காட்டுகிறது என்று சொல்கிறார்கள்.

      நீக்கு
  12. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்...

    ராஜி சகோதரிக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  13. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம் வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
  14. நல்ல உள்ளங்கள் வாழ்க!
    கட்டுரை சிறப்பு

    பதிலளிநீக்கு
  15. தேவை அறிந்து உதவி செய்யும் அன்புள்ளங்கள் அனைவரையும் வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  16. விடுமுறைதின பொழுதுபோக்கு :(https://kasusobhana.blogspot.com//2020/04/blog-post.html)

    இரண்டு புதிர்களும் வரவில்லையே... என்னவாயிற்று...?

    பதிலளிநீக்கு
  17. நான் காலையில் என்னுடைய செல்போனில் பார்த்த பொழுது, தன் வணிக வளாகத்தை கொரோனா மருத்துவமனைக்காக கொடுத்த வேங்கடசுப்பிரமணி பற்றிய தகவலும், கடலூரைச் சேர்ந்த தொழிலதிபர் தம்பு அவர்களை பற்றிய செய்தியும் அதில் வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. அதே போல நாய்களுக்கு உணவளிக்கும் சம்யுக்தா, பாசிட்டிவ் மனிதர் ஷாகிர் பற்றிய செய்திகளையும் இப்போதுதான் பார்க்கிறேன். சாகிர் ஒரு நல்ல முன்னுதாரணம்.  

    பதிலளிநீக்கு
  18. எங்கள் ப்ளாகிற்கு வருகை தந்திருக்கும் திரு.ஸ்ரீநிவாசன் அவர்களை வரவேற்கிறோம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு, மிக்க நன்றி. எப்பொழுதும் அவர் தாயார் உணவு உண்ணும்போது தாயாருடன் கூட இருப்பார். தொண்டை அடைத்துக் கொள்ளாமல் இருப்பதற்காக. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. எனவே நான் நன்றி கூறுகின்றேன்.

      நீக்கு
    2. பொதுவாக தங்கள் தாயின்மீது அன்புகொண்டிருப்பவர்கள் தங்கள் அன்பினை ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்துவார்கள். வெளிப்படுத்த இயலாது, மனதில் வைத்து மருகுவோரும் உண்டு-காரணங்கள் இருக்கலாம். ஆனால், உங்கள் கணவர்பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது வித்தியாசமானது, பெற்றவரின் மீது ஆழ்ந்த அக்கறையைக் காட்டுகிறது. ’பெத்தமனம் பித்து. பிள்ளையின் மனமோ அவள் சொத்து’ என்று ஆகிறது இங்கே!

      நீக்கு
    3. ஏகாந்தன் சார், மன்னிக்கவும். என் பெண் இப்போதுதான் மதிய உணவு முடித்தாள். அவள் பூனாவிலிருந்து வந்திருப்பதால், கொஞ்சம் கவனித்துக் கொண்டிருக்கின்றேன். ஆகவேதான் இவ்வளவு தாமதம். அவர் தாயாரையும் தந்தையாரையும் கடவுளுக்கு அடுத்து பார்க்கின்றார். அந்த விதத்தில் நான் மிகவும் கொடுத்து வைத்தவள். என்னையும் அதே அன்புடன் பார்த்துக் கொள்வார். குழந்தைகளையும் அதே கருத்துடன் பார்த்துக் கொள்வார். மொத்தத்தில் மிகவும் அன்பு, தன்னடக்கம், தன்னம்பிக்கை உள்ளவர்.

      நீக்கு
    4. நல்ல குடும்பத் தலைவன் அந்த குடும்ப செய்த புண்யம்.

      நீக்கு
  19. கொரோனா பற்றிய ஒரு சந்தேகம் கொரோனாவுக்கு மருந்துகண்டு பிடிக்கவில்லை என்கிறர்கள்சிஅர் கொரோனாவிலிருந்து மீண்டுநலம்பெற்றதாகவும்செய்திகளிருக்கின்றன எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இம்யூனிட்டி உள்ளவர்களும், சிலருக்கு சாதாரண சளி, இருமல் போன்றவற்றிர்க்கான மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு ஓரிரு வாரங்களில் கொரோனா வைரசிடமிருந்து விடுதலை கிடைக்கிறது. இந்த கொரோனா வைரசே, நிமோனியா, ஃப்ளூ போன்றவற்றின் வேரியேஷன் என்கிறார்கள். நெஞ்சில் அதிக சளி தேங்கினால் ஆபத்து என்றும் இம்யூனிட்டி குறைவு என்பதால் 65 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு ரெகவரி கடினம் என்றும் கூறுகிறார்கள்.

      நீக்கு
  20. பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் மனித நேயத்தை சொல்கிறது.
    ஈரமுள்ள நெஞ்சங்கள் வாழ்க!

    பதிலளிநீக்கு
  21. விழிப்புணர்வு கட்டுரை சிறப்பு.

    பதிலளிநீக்கு
  22. பாசிட்டிவ் மனிதர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    நல்லதொரு கட்டுரை. திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் கட்டுரை சிறப்பாக இருக்கிறது. அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  23. ரமா அவர்களின் கணவர் திரு ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு நல்வரவு!

    நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை.

    பாசிட்டிவ் செய்திகளில் மனதைத் தொட்டுக் கவர்ந்தவர் திரு ஆதித்யதிவாரி!!! அவருக்கு மனமார்ந்த சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! மிகப் பெரிய மனம். தாயுமானவர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. ஷாகிருக்குப் பாராட்டுகள். நல்ல உதாரணம்

    இவரைப் போன்றே மற்றொருவர் அவர் தந்தை உடல்நலம் குன்றி சீரியஸ் என்று செய்தி போக அவர் கல்ஃபிலிருந்து திருவனந்தபுரம் வந்து அங்கு ஸ்க்ரீன் டெஸ்டில் ஜுரம் இல்லாமல் கடந்தாலும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு உறவினர் அருகில் செல்லாமல் தந்தையையும் மருத்துவமனையில் அருகில் செல்லாமல் தூரத்தில் நின்று வெளியே வரும் போது லைட்டாக இருமல் வர உடனே அதே மருத்துவமனையில் (கோட்டயம் என்று நினைவு) இத்தொற்றின் பிரிவிற்கு சென்று தன் பயணத்தைப் பற்றிச் சொல்லி தனிமைப்படுத்தப்பட்டு தொற்று உறுதியாக அடுத்த நாளே தந்த்தை இறந்துவிட அவர் தன் தந்தையைப் பார்க்க முடியாமல் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் மனம் அழுது என்றாலும் பிறருக்குத் தன்னிடமிருந்துப் பரவிடக் கூடாது என்பதுதான் மிக முக்கியம் என்பதால்தான் தான் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதைச் சொல்ல அதற்கு கேரள முதல்வர் இவரைப் போல் இருக்க வேண்டும் என்று பாராட்டியதாகச் செய்தி.

    காவல்துறையினர் மக்களின் மனதில் நல்ல இடம் பெறும் செய்திகள் பல வந்துகொண்டிருப்பதற்கும் இப்போது அவர்கள் தங்கள் உயிர் பார்க்காமல் சிறப்பாகப் பணியாற்றுவதற்கும் மக்களின் மனதில் இடம் பெறுவதற்கும் இந்த தொற்று உதவுகிறது. ப்ளெஸ்ஸிங்க் இன் டிஸ்கைஸ்!

    உணவளித்த காவலர்கள் வாழ்க! பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  25. நாலுகால் செல்லங்களுக்கு உணவளிக்கும் நடிகைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    ஆட்சியர் நூஹ், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெனிஷ் ஆகியோருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்.

    த்ன் கட்டிடத்தை தொற்று நோய் சிகிச்சைக்குக் கொடுத்து உதவும் திரு வெங்கடசுப்ரமணிக்கு மனமுவந்த பாராட்டுகள் வாழ்த்துகள்.

    கடலூர் தம்பு வாவ் போட வைக்கிறார். எத்தனை நல்லது செய்கிறார்..வாழ்த்துகள்!.செய்தியாளர் முடித்தவிதம் தம்பு போன்றோர் இருக்க தெம்பு என்று ரைமிங்காக முடித்தவிதம் அட!!

    பாசிட்டிவ் செய்தி கொடுத்த ஏகாந்தன் அண்ணா, ராஜிக்கும் நன்றிகள்.

    ஸ்ரீராம் தொற்று வந்தாலும் வந்தது நிறைய நல்ல உள்ளங்கள் தெரிய வர நிறைய பாசிட்டிவ் செய்திகள் வருகிறதே தொற்றுக்கும் நன்றி சொல்லிடலாமா?!! மீண்டும் கெட்ட நேரத்திலும் பல நல்லவை!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. பாஸிட்டிவ் செய்திகள் யாவும் அருமை
    சிந்திக்க வைக்கிறியள்

    பதிலளிநீக்கு
  27. நிறைய நல்ல உள்ளங்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது

    பதிலளிநீக்கு
  28. பாசிட்டிவ் செய்திகள் மனிதம் இன்னும் இம்மண்ணில் வாழுது என்பதற்கான ஆதாரம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!