சனி, 11 ஏப்ரல், 2020

பேரிடர்க் காலத்தில் உதவும் நல்ல உள்ளங்கள்
தெலுங்கின் டாப் ஹீரோயின்களில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh), கொரோனா பிரச்னையினால் வேலை இல்லாது தவிக்கும், டெல்லிக்கு அருகே உள்ள குருகாவ்(ன்) (அவர் குடும்பம் வசிக்கும் இடம்) குடிவாசிகள் 200 பேருக்கு தினமும் இரண்டு வேளை உணவு வழங்குகிறார். லாக்டவுன் நீட்டிக்கப்பட்டாலும் தருவேன் எனப் பிடிவாதம்!

லிங்க்: அன்னமிடும் கைகள் 

====================================

பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், கொரோனா கொடுத்திருக்கும் நெருக்கடியில் பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷன் தொழிலாளர்கள், தினப்படிக்கூலிகளுக்கு என,  தரமான 'N95' மற்றும்   ’FFP3’வகை முகக்கவசங்களை அளித்துள்ளார். 
   


செய்தது போதுமெனத் தோன்றவில்லையோ. இப்போது  மும்பையில் வசிக்கும் 1.2 லட்சம் கூலித்தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியோருக்கென, தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலமாக தரமாகத் தயாரிக்கப்பட்ட ‘சத்துணவுப் பேக்’குகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளார் ரோஷன்.  

லிங்க்: ஹ்ரித்திக் ரோஷண்முக கவசம் 

அன்புடன்,
ஏகாந்தன்.

நன்றி ஏகாந்தன் சார். 
===================================
=====================================

 
பூனாவின் ஜான்சி ராணி


ரமா ஸ்ரீநிவாசன் 

பூனாவின் வைராலஜிஸ்ட் மினால் தகாவே போசால் இந்தியாவிலேயே முதல் முதலாக கோவிட் 19 சோதனை கிட்டை தயாரித்து விற்பனை செய்வதற்கான ஒப்புதல் பெற்று, தன் பெண் குழந்தையின் பிரசவத்திற்கு முதல் நாள் பேத்தோ டிடெக்ட் என்கின்ற கிட்டை உற்பத்தி செய்து பரிசோதனைக்கு இந்நாட்டிற்கு அற்பணித்திருக்கும் அரிய தொண்டாறியிருக்கின்றார். அவருடைய வழிகாட்டலினாலும் உந்துதலினாலும் அவளது குழுமம் இச்சோதனை கிட்டை மிகச் சிறிய காலமான ஆறு வாரத்தில் செய்து முடித்துக் கொடுத்துள்ளார்கள்.

    மொத்த இந்தியாவும் 'எத்தை தின்றால் பித்தம் தெளியும்' என்று அலையும் நேரத்தில், இப்பெண்மணி இவ்விந்தையை நடத்தி காண்பித்திருக்கின்றார். இவர் இச்செயலால் இந்நாட்டின் அனைத்து மக்களின் மனங்களிலும் இடம் பிடித்து விட்டார். ஆனால் இதன் பின்னர் ஓர் உருக்கமான கதை மறைந்திருக்கிறது. இதை நடிகை சோனி ரஸ்தான் வெளி உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார். அதில்தான் மினாலின் தியாக மனசு நமக்கு தெரிய வருகிறது.

    மினால் தகாவே போசால் பூனாவின் மைலாப் டிஸ்கவரியின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தலைமை பொருப்பில் இயங்குபவர்.
நாளைக்கு டெலிவரி. கடைசி நேரம் வரை கொஞ்சமும் அது பற்றிக் கவலையே இல்லை. மினால் தகாவே போஸ்லேவின் மனசு பூராமே நம்ம மக்களுக்கு ஏதாச்சும் செய்யணும், நாடுதான் முக்கியம் என்ற ஏக்கப் பெருமூச்சுதான்.. கடைசியில் தனது மக்களுக்காக அந்த அரிய விஷயத்தைக் கையில் கொடுத்து விட்டு போய்த்தான் தனது குழந்தையை பெற்றுக் கொண்டார், மனசு நிறைந்த நிம்மதியோடு.
    அவர் பி.பி.சி. செய்தி சேனலிடம் பேசும்போது, “இது ஓர் அவசர நிலை என்பதனால், நான் இச்சவாலை எதிர் கொண்டேன்.  நான் என் நாட்டிற்கு பணி புரிய வேண்டும்” என்று கூறினார். 

    அவர் பிரெஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிடம் பேசுகையில் “இது இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொள்வது போல் இருந்தது” என்று கூறியிருக்கின்றார். 

    மினால் தகாவே போசாலின் இச்செயல், பெரும் தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா உட்பட பல பேருக்கு ஒரு உத்வேகமாகவே அமைந்து விட்டது என்று கூறினால் அது மிகையாகாது.

    ஆனந்த் மஹேந்திரா முன்னே தந்த அறிக்கையில் தன் நிறுவனம் வென்டிலேட்டர்கள் உற்பத்தி செய்யும் என்றும், மஹேந்திரா உல்லாச போக்கிடங்கள் மருத்துவ வசதி இல்லங்களாகும் என்றும் கூறியுள்ளார்.


ஆனந்த் மஹேந்திரா மேலும் கூறியதாவது : “போஸ்லே அவர்களே, நீங்கள் கொரோனா சோதனை கிட்டையும் உங்கள் அருமை குழந்தையை மட்டும் பிறப்பிக்கவில்லை.  இந்நாட்டிற்கே ஒரு நம்பிக்கை மின்னலை பிறப்பித்து இருக்கின்றீர்கள். நாங்கள் யாவரும் எழுந்து நின்று உங்களுக்கு தலை வணங்குகின்றோம்” என்று ட்வீட் செய்திருக்கின்றார்.  இந்த ட்வீட்டானது எல்லா ட்விட்டர் வாசகர்களிடத்திலுமிருந்தும் முகஸ்துதியையும் பாராட்டுகளையும் மினால் தகாவே போசாலிற்கு வாங்கித் தந்திருக்கின்றது.

அதே போல், Niti Aayog தலைமை அதிகாரி அமிதாப் கான்ட் அவர்கள் மினால் தகாவே போசாலின் செயல் இந்நாட்டிற்கே ஒரு உத்வேகத்தை அளித்திருக்கின்றது என்று பாராட்டினார். 

ஏப்ரல் பத்தாம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 5709 கொரோனா வைரஸ் நோயாளிகள் இருப்பதாகவும், 503 பேர் குணமடைந்து விட்டதாகவும், 199 பேர் மரணமடைந்து விட்டதாகவும் தெரிய வருகின்றது. 

இதற்கிடையே, இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிகல் ரிசெர்ச் தனியார்  ஆய்வகங்களை கோவிட் 19 ஆய்வு செய்ய அனுமதி வழங்கியிருக்கின்றது.

மினால் தகாவே போசாலின் அயரா முயற்சியினால், இப்போது இந்தியா சுய முயற்சியால் கோவிட் 19 ஆய்வு கிட்டை பெற்றிருக்கின்றது. 

பி.பி.ஸியுடனான நேர்காணலில் மினால் தகாவே போசால் கூறியது : “எங்கள் டெஸ்டிங்க் கிட் இரண்டரை மணி நேரத்தில் நோயறிதலைக் கூறிவிடும்.  ஆனால், இறக்குமதி கிட் ஏழு மணி நேரம் எடுக்கும். இது எப்படி அவருக்கும் அவர் குழுமத்திற்கும் ஒரு கெடிகாரத்திற்கெதிரானதும் சங்கடங்களுக்கு நடுவிலுமான சவாலாக இருந்தது என்பதையும் அவர் விவரித்தார்.

சரியான நேரத்தில் சரியான வழி காட்டும் கிட் :

சமீப காலத்தில் இந்தியாவில் போதுமான அளவு டெஸ்டிங்க் கிட் இல்லை என்ற குற்றசாட்டு ஒன்று இணைய தளத்திலும் ஊடகங்களிலும் உலா வந்து கொண்டிருந்தது.   ஒரு மில்லியன் நபர்களில் 7 பேர்களை மட்டுமே டெஸ்டிங் செய்ய முடியும் அளவிற்குதான் கிட்கள் உள்ளன என்றும், இதனால் பல நோயாளிகளைப் பரிசோதிக்க இயலாத நிலை இந்நாட்டில் பரவலாக இருக்கின்றது என்றும் பேசப் பட்டது. 

மினால் கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், கடந்த பிப்ரவரி மாதம் நிலையில் தான் விடுமுறையில் செல்லவிருந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்த உபகரணத்தை தயாரித்துக் கொடுக்க வேண்டி பணி வந்து சேர்ந்தது. இதையடுத்து தானே நேரடியாக களம் இறங்கி, தனது குழுவினரோடு இணைந்து இந்த உபகரணத்தை வெற்றிகரமாக முடிக்கும் பணியில் குதித்தார் மினால்.

    அரசின் “தனித்திரு விழித்திரு” ஆணைப்படி 1.3 பில்லியன் மக்களும் வீட்டிலிருந்த கால கட்டத்தில், இந்த டெஸ்டிங்க் கிட்கள் சரியான நேரத்திற்கு வந்து பரிசோதனையை இலகுவாக்கியது.

    மேலும் இறக்குமதி செய்யப் பட்ட கிட்கள் ரூ.4,500/- விலைக்கு விற்கப் பட்ட நிலையில் நம் நாட்டு கிட்கள் ரூ.1,200/-கே கிடைக்கின்றன.  அதல்லாமல், ஒவ்வொரு கிட்டும் 100 மாதிரிகளை (samples) பரிசோதிக்கும் வலிமையுடையவையாகவும் இருக்கின்றன. 

    மற்றுமொரு நற்செய்தி என்னவென்றால் நம் நாட்டின் 15 தனியார் ஆய்வகங்கள் ஐரோப்பவிற்கும் அமேரிக்காவிற்கும் டெஸ்டிங் கிட்கள் ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றுள்ளன என்பதே. 

    மினால் தகாவே போசால் மேலும் கூறியதாவது: “நாங்கள் சுலபமாக 100,000 கோவிட் 19 கிட்களை ஒரு வாரத்திற்குள் தயாரித்து வினியோகிக்க முடியும்.  அவசியமானால் நாங்கள் 200,000 கிட்கள் வரை கூட போகத் தயார்”.

     மினால் தகாவே போசாலின் பொது நலம் பற்றிய குறிப்புகள் :

இந்தியாவின் தாமதமான கோவிட் 19ற்கு எதிரான மருத்துவப் போர் பொது துறையில் இந்நாட்டின் குறைந்த பொது நல நிதி வசதிகளையும் பற்றாக்குறையான உள்கட்டமைப்புகளையுமே  சுட்டிக் காட்டுகின்றது என்று தன்னுடைய நுண்ணறிவு மற்றும் அனுபவத்திறனையும் முன் வைத்து மினால் தகாவே போசால் கருதினார். 

    கிராமப்புறங்களில் மேலும் பல மருத்துவ வசதிகளும் ஆய்வகங்களும் நிறுவப் பட வேண்டியது அவசியம் என்றும், அவை அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையையும் மேம்படுத்தும், அவர்களின் எதிர்காலத்தையும் பிராகசமாக்கும் என்று மினால் தகாவே போசால் நம்புகின்றார்.

மார்ச் 18ம் தேதி ஒரு வழியாக சாதனத்தை ரெடி செய்து தேசிய வைரலாஜி நிறுவனத்தில் சமர்ப்பித்தார் மினால். அதற்கு அடுத்த நாள் அதாவது மார்ச் 19ம் தேதி அவருக்கு பிரசவம் நடந்தது. அழகான மகளைப் பெற்றெடுத்தார் மினால்.. நினைச்சுக் கூட பார்க்க முடியவில்லை. அதாவது பிரசவத்திற்கு முதல் நாள் வரை அவர் நாட்டு மக்களை மனதில் வைத்து உழைத்துள்ளார். என்ன ஒரு வலிமையான பெண் இவர்! 

    மொத்தத்தில், மினால் தகாவேயின் வெற்றி கதை கோவிட் 19 வைரஸை வீழ்த்தும் ஏணியில் ஒரு படி மட்டுமல்ல.  இக்கதை ஒரு பெண்ணின் விடா முயற்சி, பிடிவாதம் மற்றும் நாட்டு நலத்திற்கு தன்னை அற்பணிக்கும் பண்பின் கொண்டாட்டம்.  இது உலகத்தின் நிச்சயமில்லா கட்டத்தில் தன் தனிப்பட்ட இடர்களைத் தாண்டி மற்றவர்க்கு உதவி இவ்வுலகை மேலும் ஒரு சிறந்த வாழ்விடமாக்கும் ஒரு பெண்ணின் முயற்சியின் வெற்றி காவியமாகும். 

நினைச்சுப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. இதுதான் தாய்மை. குழந்தையைப் பெறுவது மட்டுமல்ல. ஈர மனசுதான் உண்மையான தாய்மை. அந்த மனசு மினாலுக்கு நிறையவே இருக்கு. இன்று அவரது புண்ணியத்தால்தான் நமது டாக்டர்கள் அதிவேகமாக கொரோனா டெஸ்ட்டுகளை செய்ய முடிகிறது.

உண்மையான பாரதத் தாய் இவர்தான். இவருக்குத்தான் நமது மக்கள் நெஞ்சு நிறைந்த நன்றிகளைச் சொல்ல வேண்டும். 

மினால் போஸ்லேவின் உபகரணம் அத்தனை இந்தியர்களையும் காக்க வேண்டும். அவர் பட்ட பாடு, சிந்திய வேர்வை வீணாகக் கூடாது.  இந்தியா இந்த கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு, நலம் பெற வேண்டும். இதுதான் நமது மனதில் இப்போது எழுந்து நிற்கிற ஒரே சிந்தனை.

=======================================

50 கருத்துகள்:

 1. தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. கரோனாவின் பிடியிலிருந்து விடுபட வேண்டும்...

  அதுவே நமது பிரார்த்தனை...

  ஸ்ரீராம் ஜெயராம்...

  பதிலளிநீக்கு
 3. பேரிடர் காலத்தில் பெருந்தொண்டாற்றும் பெருந்தன்மையாளர்கள் வாழ்க... வளர்க...ம்

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்கள் பலவிதத்திலும் இவ்வாறு உதவி செய்வது ,தினசரி செய்திகளில் காண்கிறோம் .மிக மிக மகிழ்ச்சி தருகிறது.

  சரவணா உணவகத்தின் பசி தீர்க்கும் முயற்சிகள்
  மன நெகிழ்ச்சி.
  அதிலும்கொடுத்த உணவையும் பகிர்ந்து கொள்ளும் பெண் மிக உயர்ந்தவர்.
  பசித்தோர்க்கு உதவும் இந்த நல்ல உள்ளங்கள் வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம்.

   ஆமாம்..்். நெகிழ்வூட்டும் செய்திகள்

   நீக்கு
 5. அன்பு ரமாவின் பகுதி நாளுக்கு நாள் மெருகேறுகிறது.
  டாக்டர் மினாலின் முயற்சியினால்
  நம் நாட்டுக்குத் தேவையான உதவியாக டெஸ்டிங்க்
  எக்விப்மெண்ட்ஸ் கிடைக்கட்டும். உலகமெங்கும்
  இந்தக் குறை இருக்கிறது. நாம் வெற்றி பெற

  இந்த அருமையான பெண்மணி காரணம்.
  மிக நன்றி ரமா.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள். உயிரு போதுப்பா இந்த காலை சமையல். எங்கள் வீட்டில் காலை சிற்றுண்டி வழக்கம் கிடையாது. எனவே 10 மணிக்கே முழு சமையலும் முடிய வேண்டும். அதுவும் மாமியாரின் மெனுபடி. பெண்ட் கழுலுதுங்க. எனவே, இப்போதுதான் பிளாகிற்கு வர முடிந்தது. மிக்க நன்றி வல்லி மாமி.

   நீக்கு
  2. @ ர.ஸ்ரீ - என் அனுபவத்தில், எல்லா பசங்களுக்கும் கிச்சன் டிரெயினிங் கொடுக்கணும். (வரும் ஜெனெரேஷனில்.. ஏன் என் ஜெனெரேஷனிலும்) கணவர் கண்டிப்பாக சமையல் செய்யவேண்டும், கிச்சன்/வீட்டு வேலைகளில் ஈடுபடணும். அப்போதால் பெட்டர் ஹாஃப் என்ன வேலை செய்யறாங்க, நாம் என்ன வேலை செய்கிறோம் என்பது நமக்குப் புரிபடும். இல்லைனா, அவங்க வீட்டுல ஹாயா டிவி பார்க்கறாங்க, நாம ஆபீஸ்ல அல்லல் படறோம் என்ற எண்ணமே நமக்கு இருக்கும். வீட்டைச் சுத்தமாக வைப்பது, கிச்சன் வேலைகள், துணி உலர்த்துவது/தயார் செய்வது-அயர்னிங் போன்றவை.... என நெட்டி முறிக்கும் வேலை வீட்டில் உள்ளவர்களுக்கு உண்டு.

   நீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் சிறப்பு. சினிமா உலகத்தில் உள்ளோரின் சிறப்பான பணிகள் நன்று. நல்லது எதை செய்தாலும் செய்வதற்கும் ஒரு நல்ல மனம் வேண்டுமே.. அத்தகைய நல்ல உள்ளங்களை மனதாற வாழ்த்துவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா. இனிய காலை வணக்கம். அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   வாழ்த்திவோம் அனைவரையும்.

   நீக்கு
 7. அனைவருக்கும் காலை வணக்கம். பேரிடர் காலத்தில் எல்லோருக்கும் உணவு வழங்கும் நட்சத்திரங்கள் பாராட்டுதலுக்குரியவர்கள். சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் செய்யும் சேவை மகத்தானது. அதிலும் தனக்கு கிடைத்த உணவை காக்கைகளோடு பகர்ந்து கொள்ளும் பெண் சிலிர்ப்பூட்டுகிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா... காலை வணக்கம். நல்ல செய்திகள் மனதை நிறைக்கட்டும்.

   நீக்கு
 8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், கொரோனாவின் அசுரப்பிடியில் இருந்து விடுபடப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணைந்து பிரார்த்திப்போம். வாங்க கீதா அக்கா.. காலை வணக்கம், நல.வரவு.

   நீக்கு
 9. எல்லா நற்செய்திகளும் படித்தவை எனினும் இங்கே விரிவாகப் பார்க்கக் கொடுத்ததுக்கு நன்றி. மருத்துவ சேவை புரிந்த மினாலைப் பற்றியும் உபகரணம் பற்றியும் செய்தி ஏற்கெனவே படித்திருந்தாலும் அவர் பற்றிய மற்றச் செய்திகளை அறியத் தந்த ரமா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா அவர்களே, இது ஒன்றுதான் எனக்கு பிடித்தமான diversion. எனவே நீங்கள் யாவரும் பாராட்டும்போது, நிமிர்ந்து நடக்கின்றேன்.

   நீக்கு
 10. நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும்,covit-19 ஐ கண்டறிய உபகரணத்தை கண்டுபிடித்திருக்கும் மினால் போஸ்லே பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டதற்காக திருமதி.ரமா ஶ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுகள்... நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  சரவணா ஸ்டோர் அதிபர் செய்யும் உதவிகள் மகத்தானவை. இந்த நிலையிலும் காக்கைக்கு உணவளித்து சாபபிடும் அந்த பெண்மணியின் கருணையை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

  சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் கட்டுரை மூலம் மிகச்சிறந்த சேவை மனம் படைத்த மினால் போஸ்லே அவர்களைப் பற்றி அறிந்து கொண்டேன். அவர்களின் உடல் சிரமம் பாராமல் நாட்டுக்காக உழைத்த அவரது அசராத செயல் மிகவும் பாராட்டுக்குரியது. இந்த நல்ல செய்திகளை விவரித்து கட்டுரையாக இங்கே பதிவிட்ட சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும். பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கமலா. ஒவ்வொரு heroineனின் உழைப்பின் வரலாறையும் வடிக்குபோதுதான் உணர்கின்றோம் இவ்வுலகத்தில் எவ்வளவு நல்ல உள்ளங்கள் வாழ்கின்றன என்று.

   நீக்கு
 13. அனைத்தும் சிறப்பான செய்திகள். பாசிட்டிவ் மனிதர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 14. இவர்களால்தான் மனிதம் இன்னும் வாழ்கிறது.

  பதிலளிநீக்கு
 15. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 16. அனைத்து பாசிடிவ் செய்திகளும். அன்பும் கருணையும் நிறைந்தவர்களை சொல்கிறது.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுகள். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 17. //மினால் தகாவேயின் வெற்றி கதை கோவிட் 19 வைரஸை வீழ்த்தும் ஏணியில் ஒரு படி மட்டுமல்ல. இக்கதை ஒரு பெண்ணின் விடா முயற்சி, பிடிவாதம் மற்றும் நாட்டு நலத்திற்கு தன்னை அற்பணிக்கும் பண்பின் கொண்டாட்டம். இது உலகத்தின் நிச்சயமில்லா கட்டத்தில் தன் தனிப்பட்ட இடர்களைத் தாண்டி மற்றவர்க்கு உதவி இவ்வுலகை மேலும் ஒரு சிறந்த வாழ்விடமாக்கும் ஒரு பெண்ணின் முயற்சியின் வெற்றி காவியமாகும்./
  /
  மினாலை பாராட்டி வணங்க வேண்டும்.
  அவர் குழந்தைக்கும் வாழ்த்துக்கள்.

  இவர் கண்டுபிடிப்பு கருவியால் கோவிட் 19 தை கண்டு பிடித்து வைத்தியம் செய்து கொரோனா இல்லா நாடாக நம் நாடு மாற வாழ்த்துக்கள்.
  அருமையான மினாலைப் பற்றி கட்டுரை தந்த ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அவர்களே, நமக்கு தெரியாமல் நாமும் ஒரு நல்ல காரியம் செய்கின்றோம் என்றால் அது இது போல் உண்மை சம்பவங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதே. இதை படித்த நாம் என்றாவது எப்போதாவது ஒரு நல்ல காரியம் செய்ய முற்பட்டால், அதுவே இக்கட்டுரையின் வெற்றியாகும்.

   நீக்கு
 18. போற்றத்தக்கவர்களைப் பற்றிய வழக்கமான அறிமுகம் அரமை.

  பதிலளிநீக்கு
 19. தமிழ் திரை உலகத்தை ( சிலரை தவிர்த்து ) தவிர பலரும் பல உதவிகளை செய்து கொண்டு வருகின்றனர். ட்விட்டரில் பார்த்தல் தெரியும். பேஸ்புக்கில் இவை வர நேரமாகிறது

  பதிலளிநீக்கு
 20. எல் கே அவர்களே, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆயின் வருத்த்மென்னவென்றால், வட இந்திய முன்னனி நடிகர்கள் அளவு நம் முன்னனி நடிகர்கள் முன் வராததுதான். அதை விடுங்கள். திரு ரட்டன் டாடா அவர்கள் ரூ.1,500 கோடிகள் அரசுக்கு கொடுத்து மேலும் கொடுக்கத் தயார் என்ற அறிக்கையும் விட்டிருக்கின்றார். எல்லா மத்திய அமைச்சர்களும் தங்கள் சம்பளத்திலிருந்து ஒரு பங்கை ஒதுக்கியுள்ளார்கள். மத்திய அரசு ஊழியர்கள் யாவரும் ஒரு நாள் சம்பளத்தை வழங்க இருக்கின்றார்கள். இதை தவிற வசதி மிக்க பல நிறுவனத்தினர் தங்கள் வழியில் உதவ முன் வந்திருக்கின்றார்கள். இதுதான் இந்தியா என்பதை நினைக்கும்போது மிகப் பெருமையாக இருக்கின்றது.

  பதிலளிநீக்கு
 21. சிறப்பு.

  இந்த பதிவை பல்சுவை என வகைப்படுத்தியிருக்கலாம்.

  தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 26 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  பதிலளிநீக்கு
 22. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 23. உதவிடும் கரங்களை வாழ்த்துவோம்.
  மினால் போஸ்லேக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 24. எங்க போச்சு காலைல போட்ட பின்னூட்டம்?

  முதலிரண்டு என்னைக் கவர்ந்தது.

  பூனாவின் ஜான்சி ராணி - தலைப்பு என்னைக் கவரவில்லை. ஜான்சி ராணிக்கு கடைசியில் கிடைத்தது தோல்விதான். தைரியமாக முனைந்தார் என்ற பெருமை மட்டும்தான் மிஞ்சியது.

  நடிகைகளின் ஈகை மற்றும் இரக்கம் - நிறைய சந்தர்ப்பங்களில் படிக்க நேரிடுகிறது. அந்த ஈரமான உள்ளங்கள் என்றும் வாழட்டும்.

  வட இந்திய நடிகர்களில் ஒருவர் 28 கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் மாறன் சகோதரர்கள் எச்சில் கையால் காக்கை ஓட்டாதவர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்நாட்டிலிருந்து ராகவா லாரன்ஸ் (3 கோடி), அஜித் (1.3 கோடி) - இவர்கள்தான் கோடிக்கணக்கில் ஒரே ஷாட்டில் கொடுத்தவர்கள். மற்றவர்கள் அழகையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் - ED-இன் அறிக்கைப்படி ஒரு படத்துக்கு 50 கோடி, இன்னொன்றிற்கு 80 கோடி வாங்கியவர்களும் தமிழ்நாட்டில்தான் சம்பாதிக்கிறார்கள். குண்டுப்பேனாவில் நிறைய இங்க் போட்டுக்கொண்டு பிரதமருக்கு கடிதம் எழுதும் மய்யம் உட்பட ..!

   நீக்கு
 25. மினால் தகாவே போன்றவர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட வேண்டியவர்கள். அதைப் பற்றி எழுதிய ர.ஸ்ரீ அவர்களுக்கு நன்றி, பாராட்டுகள். தலைப்பை, நான் வைத்திருந்தால், 'புனேயில் ஒரு மின்னும் வைரம்' என்று வைத்திருப்பேன். (எல்லா வைரங்களும் மின்னுபவை அல்ல. பூமியில் புதையுண்டுகிடந்து காலம் காலமாக யார் கண்ணிலும் படாமல் இருப்பவைகள் நிறைய). அவருக்கு நிச்சயம் அரசு விருது கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை தமிழன் சார், நாம் செய்ய கூடிய ஒரே நல்ல காரியம் இவர்களின் சிறந்த சேவைகளை வெளிச்சம் போட்டு காமிப்பதுதான். அதை செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்த இந்த பிளாகிற்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி கூறுகின்றேன்.

   நீக்கு
 26. போகிற போக்கைப்பார்த்தால் வெண்டிலேடர்கள் உள்நாட்டில் உற்பத்தி ஆவதே மிக முக்கியம் நல்ல உள்ளங்களைப்பாராட்டுவோம்

  பதிலளிநீக்கு
 27. கர்ர்ர்ர்ர்ர்ர் நா கஷ்டப்பட்டு போட்ட கமென்ட் இங்கு பதியவே இல்லை....நெட் ஏன் இப்படிப் படுத்துகிறது..

  மினால் மிக மிக வியப்படைய வைக்கிறார். நாளை பிரசவம் இன்று வரை கோவிட் டெஸ்டிங்க் கிட் உருவாக்கி வெளியிட தன்னை அர்ப்பணித்து வாவ்...மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள் இவரைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் இங்கு தந்து எல்லோரும் அறிய வைத்த ரமா உங்களுக்குப் பாராட்டுகள்!

  கீதா

  கீதா

  பதிலளிநீக்கு
 28. அன்னமிட்ட/அன்னமிடும் கைகள் அனைத்துக் கைகளுக்கும் உரியவர்கள், வீடு தேடிச் செல்லும் உணவு அவர்கள் உட்பட அனைவரும் வாழ்க வளமுடன்! மனித நேய உள்ளங்கள். அனைத்துச் செய்திகளும் அருமை.

  கீதா

  பதிலளிநீக்கு
 29. உதவ வேண்டும் என்ற எண்ணம் படைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!