வியாழன், 23 ஏப்ரல், 2020

ஓரமாக ஒரு ஒற்றை யானை !


என் இளையவன் பாஸ் வயிற்றுக்குள் இருந்தபோது கடவுளிடம் என் வேண்டுதல் 'இரவு நேரத்தில் மட்டும் வலி வர வைத்து விடாதே...'  என்பதுதான்....  என்று சென்ற வாரம் முடித்திருந்தேன்...     அது தொடர்கிறது...
கடவுளுக்கு ஒரு பழக்கம் உண்டு.   சமயங்களில் எது நடக்கக்கூடாது என்று வேண்டுகிறீர்களோ, அதுதான் நடக்கும்.  கடவுள் கிண்டலாகச் சிரித்துக் கொள்வார்!  அதுபோல சரியாக நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு வலி வந்தது.  சாலைக்கு ஓடி, இங்கும் அங்கும் சைக்கிள் ஆட்டோவுக்கு அலைந்தேன்.  சாலையில் ஒருஇளநீர்க்கடையும், பெட்டிக்கடையும் இருக்கும்.  அதற்கு காவலுக்கு அந்த இளநீர்க் கடைக்காரர் அங்கு படுத்துக் கொள்வார்.  பாண்டியன் என்று பெயர்.


அவரை எழுப்பியதுமே  "என்ன வலி வந்து விட்டதா?" சரியாகக் கணித்துக் கேட்டுவிட்டு நீங்கள் இந்தப் பக்கம் போங்க...   நான் இந்தப் பக்கமாய் ஏதாவதுஆட்டோ வந்தால் வீட்டுக்கு அனுப்புகிறேன்"  என்றார்.  வீட்டில் இருபக்க பெரியவர்களும் இருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும்.


அதே போலவே ஒரு ஆட்டோவை மடக்கி உள்ளே அனுப்பியவர், தாண்டிச் சென்ற ஒரு பைக்காரரை நிறுத்தி, அவரிடம்  "சைக்கிளில் ஒருவர் அவர் மனைவிக்கு பிரசவ வலி கண்டு விட்டது என்று  ஆட்டோவுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்.  அழைத்து வர  சைக்கிளில் அங்கு சென்றிருக்கிறார்.   அவரிடம் பாண்டியன் ஆட்டோ நிறுத்தி அனுப்பிட்டார்னு சொல்லி உடனே அனுப்புங்க" என்று சொல்லி அனுப்ப, அவர் வந்து என்னைக் கண்டு  விசாரித்து விஷயம் சொல்ல, நான் திரும்பி ஓடி பாண்டியனுக்கு நன்றி சொல்லி உள்ளே சென்று ஆட்டோ ஏறி, ஏற்றி  ஆஸ்பத்திரி கிளம்ப....  களேபரம்.  

காலை நாலு மணிக்கு சுகப்பிரசவம் ஆனது.


ஸாரி, பாதுகாப்பு, திருட்டு சம்பந்தமாய் சொல்ல ஆரம்பித்து ஒரு கிளை பக்கவாட்டில் சென்று விட்டது!   மூன்று பாராக்கள் அதில் செலவழிந்து விட்டன!  மீண்டும் விஷயத்துக்கு வருகிறேன்.


ஆக, அப்படித் திட்டமிட்டு பாதுகாப்பாய் இருந்த காலங்களிலும் எனக்கு போலீஸைக் கண்டால்தான் அதிக பயம்.  ஒருவேளை அதற்கும் ஜூவியே காரணமாய் இருந்திருக்கும்.


அப்போது உள்ளூரில் இருந்த ஸ்டேஷன் போலீஸ்காரர்கள் ஒரு அறிவிப்பு செய்தார்கள்.  ஊருக்குச் செல்பவர்கள் முன்கூட்டியே எங்களிடம் தகவல் தெரிவித்து விட்டுச் செல்லுங்கள்.  நாங்கள் உங்கள் வீட்டுக்கு கூடுதல் கவனிப்பு தருவோம் என்பதே அந்த அறிவிப்பு. அந்த அறிவிப்பே கூடுதல் பயம் தந்தது!


எனக்கு என்ன சந்தேகம் வரும் என்றால்...


அலுவலகத்தில் ஒருமுறை ஒரு விஷயம் பேசிக்கொண்டார்கள்.  பிடிபட்ட திருடர்கள் எத்தனை வீட்டில் கை வைத்திருக்கிறார்கள் என்ற கணக்கு போலீசுக்குத் தெரியுமாம்.   அதற்கு சரியான கணக்கில் மாமூல் வராவிட்டால் அவர்களைத் துவைத்து விடுவார்களாம்.  அப்படித் துவைக்கப்பட்ட, அவர்களுக்குத் தெரிந்த ஒருவனைப் பற்றி பேசிக்கொண்டதிலிருந்து எனக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு!  பயம்!


எனவே முடிந்தவரை 'அவர்களி'டமிருந்து விலகியே இருப்பேன்.  ஊரில் திருடன், தாதா என்று அறியப்பட்ட ஓரிருவர் இருந்தனர்.  வேறு வழியில்லாத ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் எனக்கு அறிமுகமாகி இருந்தனர்.  அவர்கள் என்னிடம் மரியாதையாக இருந்ததோடு, ஓரிரு பிரச்சனையான சமயங்களில் உதவிக்கும் வந்தனர்.  அதற்காக என்னிடம் எந்தக் கட்டணமும் வாங்கிக் கொண்டதில்லை.  ஆனாலும் அவர்களிடமும் நான் ஜாக்கிரதையாக இருந்தேன்.  ஆனாலும் அவர்கள் எனக்கு உதவிதான் செய்திருக்கிறார்கள்.  ஆனாலும்...    ச்சே...   எத்தனை ஆனாலும்!


வீடு மாறிய நாளிலிருந்து அலுவலகம் சென்றுவர ஒரு இரு சக்கர வாகனம் வாங்குவது பற்றி யோசனை வந்திருந்தது.  ஆனால் மகன்கள் அதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.   முதலில் தலையாட்டிய பாஸும் இப்போது மகன்கள் பயமுறுத்துவதைப் பார்த்து வேண்டாம் என்றே சொல்கிறார்.


அலுவலகத்தில் முதலில் 'வண்டி வாங்குங்க ஸார்' என்றவர்கள்,  மகன், மனைவி கருத்தைப் பற்றி நான் சொன்னதும் "வேண்டாம்...   வாங்காதீங்க' என்கிறார்கள்.


பொதுவாய் நம்மிடம் ஒரு பழக்கம்.   நண்பர்கள் நம்மிடம் கேட்கும் கருத்துகளுக்கு அவர்கள் மனம் நோகாமல், அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்களோ அப்படியே பதில் கொடுத்து விடுகிறோம்.  அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்பது அவர்கள் பேச்சோட்டத்தில் தெரிந்து விடும்.  பல சமயங்களில் அனாவசியமான, அல்லது கேட்கப் படுபவர்களுக்கு தேவையில்லாத விவாதங்களில் அவர்கள் மாட்டிக்கொள்ள விரும்புவதில்லை என்பதுதான் காரணம்.  "எதற்கு வம்பு" மனப்பான்மை! .  


இதனால் என்ன ஆகிறது என்றால் அபிப்ராயம் கேட்பவர்களுக்கு அதனால் பெரிய நன்மை எதுவும் விளையாது. அவரவர்கள் சொந்த முடிவையே எடுக்க வேண்டும்.


நம்மிடம் இன்னொரு பழக்கமும் உண்டு.  என்னதான் எல்லோரிடமும் அபிப்ராயம் கேட்டாலும்,  நம் மனதில் என்ன முடிவு செய்து வைத்திருக்கிறோமோ அதைதான் பெரும்பாலும் செயல்படுத்துவோம்.  செய்ய நினைக்கும் செயலில் விருப்பம், பிடிவாதம்.


ரிசல்ட் நல்லதாய் அமைந்து விட்டால் "எல்லோரும் என்னென்னவோ சொல்லிக் கொடுத்தார்கள்...   நான் கேட்கலையே...   நான் இப்படிச் செய்தேன்...  பாருங்க இப்போ..." என்று பீத்திக் கொள்ளலாம்.


சரியான ரிசல்ட் கிடைக்காவிட்டால் அமைதியாக இருந்து விடலாம்.  எதிராளி மனதுக்குள் புன்னகைப்பார் என்று தெரியும்!


அந்த வகையில் என் டூ வீலர் வாங்கும் ஆசை இங்கிட்டும் அங்கிட்டும் தள்ளாட்டம் போட்டது. 


'நான் டூ வீலர் ஓட்டி முப்பது வருடங்கள் ஆகிறது' என்றேன்.  'இப்போது கற்றுக்கொண்டு ஓட்டுபவர்களே நன்றாய் ஒட்டுகிறார்களே' என்று சொன்ன அலுவலகத் தோழி ஒரு அனுபவம் சொன்னார்.  அந்த அனுபவம் பற்றி எழுத வந்துதான் இத்தனைக் கதையும் அடித்திருக்கிறேன்.


அவர்களுக்குத் தெரிந்தவர் தனது டூவீலரில் சாலையில் சென்றிருக்கிறார்.  ஒருமுச்சந்தியிலிருந்து திடீரென சாலையில் ஏறிய  ஒரு கார்க்காரர், தாண்டிவிட்ட இவரை இடித்துவிட்டு ஓடிவிட்டார்.


போலீஸ் வந்து கேஸ் போட்டது.  சிசி டீவி வைத்து ஓடிய கார்க்காரரையும் கண்டு பிடித்து விட்டார்கள் என்றாலும் நண்பரை குடித்து விட்டு வண்டி ஓட்டினார் என்று கேஸ் எழுதி விட்டனர்.  


நண்பரின் மனைவி மருத்துவர்.  நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்றவர் அவர்களை பிடி பிடி என்று பிடித்துவிட்டாராம்.  ஏனென்றால் நண்பர் ஒரு டீடோட்லர்,. அவரைப்போய் குடித்து விட்டு வண்டி ஓட்டினார் என்று கேஸ் பதிந்தால்....    இவர் (மனைவி)  மருத்துவர் என்பதாலும், அரசுப்பதவியில் இருப்பதாலும் இவர் பிடி எடுபட்டு கேஸ் கைவிடப்பட்டது.

[  டீடோட்டலர் என்பது இங்கிலாந்தின் பிரெஸ்ட்டான் மாகாணத்தில் 19 ஆம் நூற்றாண்டில் உருவான வார்த்தை.  எந்த விதமான போதை, அல்லது கெட்ட பழக்கங்களும் இல்லாத செயலுக்கு டீடோட்டலிஸம் என்று பெயர்.  அதிலிருந்து உருவான வார்த்தை இது.  பிரெஸ்ட்டான் டெம்பரன்ஸ் மூவ்மெண்ட் என்ற இயக்கத்தைத் தொடங்கிய ஜோஸப் லிவ்சி என்பவர்தான் இந்த வார்த்தையை முதலில் பயன்படுத்தினாராம்.]


பாருங்கள், அப்போதும் கேஸ் கைவிடப்பட்டதே தவிர, கார்க்காரர் மேல் தப்பு என்று பதியப்படவில்லை.  அப்புறம் எப்படி போலீஸ் மேல நம்பிக்கை வரும்?" என்று முடித்தார்.   அந்த வார்த்தைதான் என்னை என் பழைய நினைவுகளுக்குக் கொண்டுபோனது.  இந்த மினி தொடருக்கும் காரணமானது!


"நாம ஒழுங்காதான் ஓட்டுவோம்.   பின்னால, முன்னால ஓட்டுறவனும் ஒழுங்காய் ஓட்டணுமே...   இல்லையா?" என்று அவர் கேட்ட கேள்வியை என் மகன் எதிரொலித்தான்.


"ஆண்ட்டி..   இவர் ரோட்ல நடக்கறதே ஒழுங்காய் இல்லை ஆண்ட்டி...  ஓரமா நடக்க மாட்டேங்கறார்...  பிளாட்பாரத்தை விட்டு விட்டு தார் ரோட்லயே நடக்கறார்.  இப்போ கூட, சிக்னல் போட்டுட்டாங்கன்னு உடனே க்ராஸ் பண்ணினார்...  கடைசியா போன பைக்காரன் மோதியிருக்க வேண்டியது...  திட்டிட்டு போறான்.."  - மகன் 
                  
"டேய்..   அது என் தப்பு இல்லைடா...   சிக்னல் விழுந்தும் அவசரப்பட்டு அவன் வந்தது தப்பு.."   என்றேன்.

                             
"அதைதான் நாங்களும் சொல்றோம்" என்றனர் கோரஸாய்!  "போலீஸ் பிடிச்சா அவங்க மாதிரி அந்த  அளவு உங்களால் பேசமுடியுமா?"
                  
==============================================================================================


ஓரமாக ஒரு ஒற்றை யானை !====================================================================================================================================================================================================

சும்மா அப்பா அப்பாங்காதீங்க...!
=====================================================================================================


கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் முடிந்திருக்கும் நிலையில் இந்த திட்டமிப்போது என்ன நிலையில் இருக்கிறதோ?  எனக்கு ஒரு ஆசை உண்டு.  சென்னையில் கொஞ்சம் உயரத்தில் சாலைக்கு மேலாக ஒரு பாரலல் சாலை போடவேண்டும் என்று..   அப்போதாவது சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறையுமா என்று பார்க்க வேண்டும்.   "இதைப் பெரிதாகச் சொல்கிறீர்களே... பெங்களூரு நெரிசல் தெரியுமா உங்களுக்கு?" என்று கேட்பவர்களுக்கு....    "நீங்களும் இதுமாதிரி ஒரு ஆகாய சாலை போட்டுக் கொள்ளுங்களேன்...  யார் வேண்டாம் என்றார்கள்?!!"==============================================================================================

காய் ஆராய்ச்சி!  ராஜு ஜோக்.  இவர் குடி இருந்த வீட்டில்தான் எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம் தற்சமயம் குடியிருக்கிறாராம்.  ஒருசமயம் பேஸ்புக்கில் சொல்லியிருந்தார்.


193 கருத்துகள்:

 1. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. வணக்கம் துரை செல்வராஜு ஸார்.. வாங்க...

   நீக்கு
  2. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

   போன வாரத்தின் தொடர்ச்சியாகப் பல புது செய்திகள்.
   பாஸின் பிரசவகாலம். நீங்கள் சைக்கிளில்
   ஆட்டோ தேடி அலைந்தது அனித்தும் நெகிழ வைக்கிறது. அந்தக் கடை
   உரிமையாளர் பாண்டியனுக்கும் மன்ம் நிறை நன்றி.
   அவர்களைப் பற்றி பயம் ஆனால் கட்டப் பஞ்சாயத்துக்காரரையும் தெரியுமா.
   சாமீயீயீயி. பலே ஸ்ரீராம்.

   நீக்கு
  3. இனிய காலை வணக்கம் வல்லிம்மா. இப்போது அந்தப் பாண்டியன் எங்கிருக்கிறாரோ... நல்ல மனிதர்கள். அப்போதைய டென்ஷன்கள் இப்போதைய சுவாரஸ்யங்களாகி விடுகின்றன...

   நீக்கு
  4. கட்டப் பஞ்சாயத்து அதற்கும் முன்னர் மதுரையிலேயே அனுபவங்கள் உண்டு. :))

   நீக்கு
  5. அதை எப்போ சொல்லப் போகிறீர்கள் ஸ்ரீராம்.

   நீக்கு
  6. ஆ... அதையும் அப்புறமா சொல்லிடுவோம்! நன்றி அம்மா...

   நீக்கு
 3. ராஜு அவர்களின் வெண்டைக்காய் ஜோக் அட்டகாசம். ஹாஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த விதக் கெட்ட பழக்கம் இல்லாதவரின் ஆரிஜின்
   அற்புதம். இந்த ஊர் பாஸ் குடிப்பழக்கம் இல்லாதவர்.

   பழக்கத்தால் ஒரு மனிதர் நல்லவரோ கெட்டவரோ ஆக முடியுமா.
   எனக்குத் தெரிந்த நல்ல நண்பர்
   சிங்கத்தின் தோழர் அவர்கள் வழக்கப் படி தினம்
   இரண்டு அவுன்ஸ் குடிப்பார்.
   பக்கா ஜெண்டில்மென். என்னவோப்பா.
   ஆனால் உங்கள் நண்பர் கஷ்டப்பட்டதை நினைத்து வருத்தமாகிறது.

   அந்தக் கார் டிரைவரையும் கண்டு பிடிக்கவில்லை
   என்பதே அலுப்பாக இருக்கிறது.

   நீக்கு
  2. அந்தக் கார் டிரைவரை áவர்கள்'கண்டுபிடித்திருப்பார்கள்!  நம்மிடம் சொல்லி இருக்க மாட்டார்கள்!

   நீக்கு
  3. //வர்கள் வழக்கப் படி தினம்
   இரண்டு அவுன்ஸ் குடிப்பார்.//

   எனக்கு ஒரு மலையாள நண்பர் உண்டு.  தினசரி அவருக்கு இந்தப் பழக்கம் உண்டு.  Üன் மகன் இதே மாதிரி ஆரம்பிக்க மாட்டானா?"என்று கேட்டேன்.  "மாட்டான்.  அவனுக்கு இந்த பழக்கம் பிடிக்கவில்லை என்றவர், அவன் அப்படி ஆரம்பித்தாலும் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்றார்!

   நீக்கு
 4. சிங்கப்பூரை நினைத்தால் கவலையாகத் தான் இருக்கிறது.
  ஒன்று பிரம்மனைப் போல் மேலே போகிறார்கள்.
  இல்லை விஷ்ணுவைப் போல பாதாளம் பாய்கிறார்கள்.

  நலமாக இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பதிவை எழுதும்போது இருந்த சிங்கப்பூரின் நிலை வேறு...   இப்போதைய நிலை வேறு!  உலகமே இப்போது தடுமாறிக் கொண்டிருக்கிறதே!

   நீக்கு
 5. ஒற்றையானைப் பயம் தெரிந்ததே.
  உங்கள் கவிதை வரிகள் அச்சு அசல்
  சஞ்சலத்தை காட்டுகின்றன.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெங்கச்சி சுவாமினாதனின் subtle நகைச்சுவை மிகவும் பாராட்டத்தக்கது.
   இன்னும் அவர் குரல் காதில் ஒலிக்கிறது. நன்றி மா

   நீக்கு
  2. கவிதைப் பாராட்டுக்கு நன்றி அம்மா....

   நீக்கு
  3. ஆமாம் அம்மா..   தென்கச்சி சாறின் பாணியே தனி...   ஒரு ஆர்வத்தில் அவர் புத்தகம் வேறு நான் வாங்கி வைத்திருக்கிறேன்!

   நீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யானைகளைப் பற்றிய குறிப்பு அற்புதம். நமக்குத் தான் அந்தக் கடைக்காரன் கதை
   தெரியுமே. தேனாயில் ஊசிவைத்தவனைப் பந்தாடி விட்டதே.

   நீக்கு
  2. கதை முடிவில்:) நீங்கள் டூ வீலர் வாங்காததின்
   காரணம் புரிகிறது. கார் வாங்கும் காலம் வரட்டும்
   வாகனஓட்டியை வைத்துக் கொண்டும் செல்லும் யோகம்
   வாய்க்கட்டும்.
   புதல்வர்கள் மனைவி உரையாடல் படித்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

   நீக்கு
  3. வாங்க கமலா அக்கா...  நல்வரவும், வணக்கமும், இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றியும்!

   நீக்கு
  4. ஆமாம் அம்மா...   யானைகள் பற்றிய தகவல்கள் எப்போதுமே சுவாரஸ்யம்.

   நீக்கு
  5. உங்கள் ஆசீர்வாதம் அம்மா..    நடக்கட்டும்.  நன்றி.  உரையாடலைப் படித்து ரசித்ததற்கும் நன்றி அம்மா!

   நீக்கு
 7. காலை வணக்கம் அனைவருக்கும்.

  அனுபவம் ரசனை. ஒற்றை யானை திகில்.

  வயதுக்கும் அறிவுக,கும் - அனுபவ அறிவு வேறு. சமீபத்தில்தான் ஜப்பானில் ஒரு காலத்தில் வயதானவர்களை சொசையிட்டியிலிருந்து அப்புறப்படுத்தும் மன்னர் உத்தரவு, அனுபவ அறிவு பற்றிப் படித்தேன். தெ சு சொல்வது நகைச்சுவைக்குனு எடுத்துக்க வேண்டியதுதான். (2 அடி உயரப் பையனுக்கு கையில் ஐந்து விரல் என்றால் 6 அடி உயரமானவனுக்கு 15 விரலா என்பதைப் போல)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் நெல்லை...  வாங்க...

   தென்கச்சி அவர் உரையாடல்களை அல்லது அந்த íன்று ஒரு தகவலை'ஒரு நகைச்சுவைக்கு குறிப்புடனேயே முடிப்பார்.  கேட்டிருப்பீர்கள்!

   நீக்கு
  2. தென்கச்சி எல்லோராலும் ரசிக்கப்பட்டவர். ஒரு புத்தகம் நான்கூட வாங்கின நினைவு.

   நீக்கு
  3. படிக்கத்தான் இன்னும் மூட் வரவில்லை!

   நீக்கு
  4. ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகம் வாசிக்கும் அனுபவத்தை கம்ப்யூட்டர், கிண்டில் எல்லாம் தர இயலாது. கடிதம் எழுதும் கலானுபவத்தை, அதை ரிசீவ் செய்து ஆனந்தமாக உட்கார்ந்து வாசிப்போர் அனுபவிக்கும் சுகத்தை இ-மெய்ல், வாட்ஸப் -எல்லாம் தந்துவிடுமா, என்ன!

   நீக்கு
  5. இல்லைதான் என்பதை என் அனுபவத்திலேயே பார்க்கிறேன்!

   நீக்கு
 8. தாய்வானில், மேலே 30 மாடிக் கட்டடம்னா, பூமிக்குக் கீழே 8-10 மாடிக்கு கார் பார்க் பார்த்து வியந்திருக்கிறேன். பூமிக்குள் குடியிருப்பு சாத்தியம்தான். அதற்குப் பிறகு கடலுக்குள் குடியிருப்பு அமைக்க வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னே மக்கள் தொகை ஏறிக்கொண்டே போனால் என்னதான் செய்வது!  ஆமாம், இந்தியாவில் என்ன நடக்கும்?!

   நீக்கு
  2. இந்தியாவில் அடுக்குமாடி முழுமையா வரலை. அதனால் இன்னும் 100 வருடங்களுக்கு மேல் நமக்குக் கவலை கிடையாது. மும்பை போல சொசைட்டியே சென்னையில் இன்னும் வரலை.

   நீங்க அடுக்குமாடி என்று சொன்னதும் தண்ணீர் சம்பந்தமா ஒன்று தோணுது. இன்று எழுதறேன்.

   நீக்கு
  3. எங்கள் வீட்டின் அருகில் பிரெஸ்டிஜ் அபார்ட்மெண்ட்களைப் பார்க்கும்போது பிரமிப்பாய் இருக்கும்!

   நீக்கு
  4. /அபார்ட்மெண்ட்களைப் பார்க்கும்போது பிரமிப்பாய் இருக்கும்// - சென்னைல தண்ணிக் கஷ்டம். இதுல ஏகப்பட்ட அபார்ட்மெண்ட்ஸுக்கு அனுமதி தர்றாங்க. எப்படி தண்ணீர் தருவாங்கன்னு எனக்குத் தோணும். ஓ.எம்.ஆர்ல இருக்கும் ஆயிரக்கணக்கான அபார்ட்மெண்டுக்கே தண்ணீர் கிடையாது.

   இங்க பெங்களூர்ல, புது அபார்ட்மெண்ட்ஸுக்கு அனுமதி கிடையாது, தண்ணீரும் (வேறு என்ன... எங்க காவேரி தான் ஹா ஹா ஹா) கிடையாது என்று சொல்லியிருக்காங்களாம். ஏற்கனவே அனுமதி கொடுத்த லட்சம் அபார்ட்மெண்டுகளுக்கு எங்க தண்ணீர் தரப்போறாங்களோ.

   நீக்கு
  5. அதே தண்ணீர் பிரமிப்புதான் எனக்கும்! வருங்காலத்தை நினைத்து கவலையாகவும் இருக்கும்!

   நீக்கு
 9. பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா,  நல்வரவு....   காலை வணக்கம்.  

   நீக்கு
  2. அட... இங்கலீஷ்ல பின்னூட்டம் போட்டால் இரண்டு மறுமொழியா ல்லை கீசா மேடம் ஸ்பெஷலா? ஹா ஹா

   நீக்கு
  3. அப்படி இல்லை, ஒட்டும்போது பாதி வார்த்தை விட்டுப்போய் அங்கேயே தங்கி இட்டது.  அதைத் தனியாகச் சேர்த்தேன்!

   நீக்கு
 10. லாக்டவுன் சமயத்தில் போலீஸ் நம் நாட்டில் நன்றாகத்தான் வேலை செய்கிறது. பாராட்டக்கூடிய அளவுக்குப் போய்விட்டது அவர்களது வேலை! கொரோனா கொண்டுவந்து கொடுத்த நற்பெயர்.

  ஆனால், போலீஸிடம் போவது என்பது இன்னும் நம்பிக்கை தரும் செயலல்ல, சாமானியனுக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏகாந்தன் ஸார்...  உண்மை.  மேலும் நான் சொல்லிக் கொண்டிருப்பது பல வருடங்களுக்கு முற்பட்ட கதை!

   நீக்கு
  2. //லாக்டவுன் சமயத்தில் போலீஸ் நம் நாட்டில் நன்றாகத்தான் வேலை செய்கிறது.//  இப்போது போலீசுக்கு இருக்கும் அதிகாரம் எப்போதும் இருந்து சட்டம்,ஒழுங்கு நிறுவப்பட்டால், நம் நாடு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். 

   நீக்கு
  3. எங்கள் ஏரியாவில் இரண்டு போலீசுக்கே கொரானா என்று செய்தி பரவியபின் போலீஸ் குறைந்திருப்பதை பார்க்கிறேன்!

   நீக்கு
 11. இந்த ஊரில் (இந்தியாவில்) டிராபிக், மற்றவர்கள் கார் ஓட்டும் முறை, சாலைவிதிகளே ஓட்டுபவருக்குக் கிடையாது என்னும் நிலைமை, கல்ஃ்பில் 22 வருடங்கள் கார் ஓட்டினாலும், இங்கு ஓட்டும் கான்ஃபிடன்ஸ் வரவில்லை. இன்னும் லைசன்சே வாங்கவில்லை (ஒரே தயக்கம்தான்). என் மனைவியோ இந்த ஊரில் காரை வைத்துத்தான் மத்தவங்க மதிப்பாங்கன்னு அப்போ அப்போ தூபம் போடுகிறாள். (அடையாரில், நாங்கள் குடியிருந்த அடுக்குமாடியில் அப்படிப்பட்ட இம்ப்ரெஷன் எனக்கும் கிடைத்தது) இன்னும் இதுபற்றி முடிவு எடுக்கலை.

  22 வருடங்களில் இருமுறை பார்க்கிங் டிக்கெட் வாங்கியிருக்கேன். ஒன்று அங்கு எல்லோரும் பார்க் செய்திருந்ததை வைத்து நானும் பார்க்கிங் ஸோன் என நினைத்தது. இரண்டாவது கடை வாசலில் நிறுத்தி தைத்த துணி வாங்கப் போனது. நான் டிரைவிங் செய்யும்போது பெரும்பாலும் பேச மாட்டேன். ரோட்டில்தான் கவனம் (தவறு ஏற்பட்டால் ஆபத்து என்பதால்)

  ஓரிரு தடவை டிவிஎஸ் 50 ஓட்டின அனுபவம் தவிர (அது கல்லூரிக் காலத்தில்) எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது (சைக்கிள் விதிவிலக்கு ஹா ஹா.. அது ஒரு கதை). அதிலும் பில்லியனில் உட்காரவே மாட்டேன். எனக்கு அதில் ஃபோபியா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பெரும்பாலும் பில்லியன் அமர்வுதான்!   ஆனால் நான் கல்லூரிக்காலத்தில், சைக்கிள், கியர் இல்லாதது டூவீலர் ஒட்டி இருக்கிறேன்.  ஆரம்ப காலங்களில் அலுவலகம் செல்ல அவந்தி க்ரெலியில் மதுரை பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து வெளியூர் வேலைக்குச் செல்வேன்.  லைசென்ஸ் கிடையாது!  போலீசிடம் தப்பிப்பது ஒரு கலை...   அவை சுவாரஸ்ய அனுபவங்கள்.

   இப்போது நானும் கார் பார்க்கிங் ஏரியா வாங்கி வைத்திருக்கிறேன்.  (அது எப்படியும் உண்டு அல்லவா?)  அங்கு எதை நிறுத்துவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை!

   நான் கல்லூரியில் படித்த காலங்களில், வேலைக்குச் செல்ல ஆரம்பித்த காலங்களில் அப்பாவுக்கு நான் தான் டிரைவர்.  ஏதோ பிளைமவுத் வண்டியை டிரைவரை எடுக்க ஏவுவது போல, டிரெஸ் பண்ணிக்கொண்டு வந்து "ஸ்ரீராம்.  வண்டியை எடு என்பார்!"   ஒன்று என் அப்பா, இன்னொருவர் என் மாமா (அக்கா கணவர்)

   நீக்கு
  2. //கல்ஃ்பில் 22 வருடங்கள் கார் ஓட்டினாலும், இங்கு ஓட்டும் கான்ஃபிடன்ஸ் வரவில்லை.// அதேதான். கல்ஃபில் பல வருடங்கள் காரோட்டிய என் கணவரும், சகோதரரும் இங்கு வந்து ஓட்டவில்லை. ஆனால் அது ஒரு மெண்டல் பிளாக் என்றுதான் தோன்றுகிறது.  

   நீக்கு
  3. //இப்போது நானும் கார் பார்க்கிங் ஏரியா வாங்கி வைத்திருக்கிறேன்.  (அது எப்படியும் உண்டு அல்லவா?)  அங்கு எதை நிறுத்துவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை!// அங்குசத்தை வாங்கி விட்டீர்கள், யானையை வாங்கி விட வேண்டியதுதான்(இன்றைக்கு என்ன பின்னூட்டத்திலும் யானை).நீங்கள் கார் வாங்கும்வரை, பார்க்கிங் ஸ்லாட் இல்லாதவருக்கு அந்த இடத்தை வாடகைக்கு விடலாம். 

   நீக்கு
  4. வாடகைக்கு விடும் ஐடியாவை என் அலுவலக நண்பரும் சொன்னார்.  பார்ப்போம்.

   நீக்கு
 12. எனக்கும் இதுவரை பைக் ஓட்டத்தெரியாது வீட்டில் ஃபல்ஷர் இருக்கிறது ஓட்டிப் பார்ப்போம் என்ற எண்ணம் வரவேயில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கில்லர் ஜி...   ஆனால் நீங்கள் நான்கு சக்கர வாகனம் அனாயாசமாக ஓட்டுவீர்களே...

   நீக்கு
 13. எல்லோருக்கும் காலை வணக்கம். உங்கள் இரண்டாவது மகன் பிறந்த அனுபவத்தை நீங்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். நீங்கள் ஓட்ட வேண்டாம், உங்கள் மகன்களில் ஒருவர் டூ வீலர் வாங்கி அதில் உங்களை அலுவலகத்தில் இறக்கி விடலாமே? அவர்களுக்கு   உங்களுக்கு கார் வாங்கித் தர ஆசை போலிருக்கிறது. நானே டூ வீலர் ஓட்டும்பொழுது நீங்கள் ஓட்ட முடியாதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா...    காலை வணக்கம்.  அதது அனுபவத்தில் வருவதுதான்!  இப்போதைக்கு மகன்கள் வாங்கப்போவதும் இல்லை, ஓட்டப்போவதும் இல்லை!  பார்ப்போம்!

   நீக்கு
  2. //நானே டூ வீலர் ஓட்டும்பொழுது// - இறைவா...இந்த லேடீஸ் அலப்பறை தாங்க முடியலையே... பஹ்ரைன்ல இருக்கும்போது வார இறுதி நாட்களில் செளதியிலிருந்து வண்டி எடுத்துக்கொண்டு நிறையப்பேர் பஹ்ரைன் வருவார்கள். அவர்களை ரோட்டில் கண்டாலே நாங்கள் (கார் ஓட்டிக்கொண்டிருப்பவர்கள்) அலர்ட் ஆகிடுவோம். செளதியில் டிரைவிங் லைசன்ஸ் வேணும் என்று கேட்டாலே, கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்குவதுபோல கிடைத்துவிடும் போலிருக்கு. இண்டிகேஷன், ப்ரேக் என்று அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது புரியும். அதுபோலத்தான் சென்னை, பெங்களூரில் பெண்கள் டூவீலர் ஓட்டுவது என்று கேள்விப்பட்டிருக்கேனே. அவங்க எந்த side திரும்புவாங்கன்னு அவங்களுக்கே தெரியாதாமே... ஹா ஹா ஹா

   நீக்கு
  3. ஹா... ஹா... ஹா... இதற்கு அவங்கதான் பதில் சொல்லணும்!

   நீக்கு
 14. யானை பற்றிய தகவல்கள் படித்திருக்கிறேன். ஓரமாக ஒரு ஒற்றை யானை கவிதையில் உங்கள் டூ வீலர் ஓட்டும் பயத்திற்கு யானையை குறியீடாக்கியிருக்கிறீர்களாளோ? தென்கச்சி சுவாமிநாதனின் நகைச்சுவையும், ராஜுவின் நகைச்சுவை படங்களும் தனி ரகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...  ஹா...  ஹா...     நல்ல அவதானிப்பு!  நல்ல கற்பனை!  முன்பெல்லாம் சீனுதான் குறியீடு என்றெல்லாம் பேசுவார்!

   நீக்கு
 15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 16. வளரும் ஜனப்பெருக்கம்  
  திரிவிக்கிரமனாய் மாறி 
  பாதாளத்தில் தள்ளுகிறதோ 
  குடியிருப்புகளை?

  பதிலளிநீக்கு
 17. யானைகள் பற்றியச் செய்திகள் ஒவ்வொருமுறையும் மகிழ்வினை ஊட்டக் கூடியவை

  பதிலளிநீக்கு
 18. அத்தனை வலிமையுடைய ஆனையையும் ஒளிந்திருந்து பார்க்கச் செய்த காலக் கொடுமை தான் என்னே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது அதன் இடத்தில்தான் இருந்திருக்கிறது.   ஒளிந்திருந்து என்று நாம் எண்ணிக்கொள்கிறோம்!  எச்சரிக்கையாக உயிரினம் அல்லவா?!!

   நீக்கு
 19. மனம் நெகிழும் செய்திகளுடன்
  இன்றை பதிவு ....

  ஆகா.. வெண்டைக் காய் சாம்பார் மாதிரி அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதென்ன, வெண்டைக்காய் சாம்பார் மாதிரி?!!  நன்றி துரை செல்வராஜூ ஸார்...

   நீக்கு
  2. வெண்டைக்காயும் சிறு வெங்காயமும் போட்டு சாம்பார் வைத்துத் தான் பாருங்களேன்...

   பதின்ப வயதுகளில் வீட்டுக்கு முன்புற காலி இடத்தைக் கொத்திப் புரட்டி வெண்டை, கத்தரி பயிரிட்டு அவரைப் பந்தலிட்டு....

   அந்த வெண்டை ஒரு அங்குல அளவு தான் இருக்கும்..

   விடியற்காலையில் பச்சையாகத் தின்றால் மூளையில் சரஸ்வதி தாண்டவம் ஆடுவாள் என்பார்கள்...

   இதேபோல் விடியலில் தின்னும் எள் பூக்கள் கண்களைக் காக்க வல்லவை...

   அதெல்லாம் ஆனந்தக் கனாக் காலம்...

   நீக்கு
  3. ஆமாம், எங்கள் வீட்டுச் செடியிலும் குட்டி குட்டியாய் வெண்டை வந்திருக்கிறது... ம்.... வெண்டை சாம்பாரில் இதுவரை நாங்கள் வெங்காயம் சேர்த்ததில்லை. செய்து பார்ப்போம் ஒருமுறை!

   நீக்கு
 20. லாக்டவுன் சமயத்திலகூட காய்கறி கிட்டத்தட்ட சரியாத்தான் கெடைக்குது நாட்டுல.
  அந்தக் காலத்தில என்னடான்னா சாம்பாரில வெண்டைக்காய்த் தேடும்படி பண்ணியிருக்காங்களே! ஆனா அதுலயும் ஒரு விஷயம் சொல்லணும்.. ஆற, அமர ஒக்காந்து, எலயில எது இருக்கு, இல்லன்னு பாத்துப் பாத்து சாப்பிட்டிருக்காங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விருந்துகளில், பல பேருக்கு சமைக்கும் இடங்களில் காயைப் பெயரளவுக்குதானே போடுவார்கள்? ஆனால் லாக் டவுன் ஆரம்ப சமயத்தில் எங்கள் ஏரியாவில் வெண்டைக்காய் செம விலை விற்றது. இப்போ பரவாயில்லை!

   நீக்கு
  2. /செம விலை/ - என்பதே ஒரு கம்பேரிசன் அல்லவா? பெங்களூரில் (நகரில்) கிலோ 20 ரூபாய்க்கு வெண்டை வாங்கியிருக்கிறேன். லாக்டவுன் காலங்களில் 30, 40 என்று விலை. அனேகமாக எல்லாக் காயுமே 40 ரூபாய் (தக்காளி 15 ரூ) ஆகிவிட்டது. 30 ரூபாய்க்கும் கிடைக்குது.

   இன்றைக்கு ப்ளாட்பாரத்தில் காய்கறிகளை ஒரு 20 வயதுப் பையன் வைத்திருந்தான். இந்தக் கடையை இப்போதானே பார்க்கிறேன் என்றதற்கு, 'அங்கிள்.. நான் ஆட்டோ டிரைவர். இப்போ வேலை இல்லாததுனால சும்மா 4-5 காய்கறி வாங்கி விற்கிறேன் என்றான். கேரட் 30 ரூபாய், பீட்ரூட் 30 ரூபாய். அவங்களுக்கெல்லாம் கொஞ்சம் கஷ்டகாலம்தான்.

   இந்த லாக்டவுன் சமயத்துல சேப்பங்கிழங்குதான் 95 ரூபாய்க்கு விற்கிறார்கள் (ஹாப்காம்ஸில்). ரொம்ப அதிகம்.

   நீக்கு
  3. /சாம்பாரில வெண்டைக்காய்த் தேடும்படி// - ஏகாந்தன் சார்.. நான் சாம்பார் பண்ணும்போது, அதில் 'தான்' மிக அதிகமாகப் போடுவேன். பசங்களும் மனைவியும் என்ன 'கூட்டு மாதிரி' பண்ணறீங்க என்று சொல்வார்கள். 'அடப் போங்கடா.. நீங்க சாப்பிடலைனா நான் சாப்பிட்டுக்கறேன். ரொம்ப நல்லா இருக்கும். உங்களுக்கு சாம்பார் மட்டும்தான்' என்பேன்.

   புதன் கேள்வி - சாம்பாருக்கு ஏற்ற தான் எது? உங்களுக்குப் பிடித்த தான் எது?

   நீக்கு
  4. வெண்டை ஓரிரு நாட்கள் கிலோ இருநூறுக்கு விற்றது. இங்கும் ஸ்வீட் கடைக்காரர் முதல் டெய்லர் கடை வரை காய்கறி கடை வைத்திருக்கிறார்கள்.

   அதிலும் எனக்கு பயம் என்னவென்றால், காலை மூன்று அல்லது நான்கு மணி முதல் கோயம்பேடு பூ மார்க்கெட்டிலும், காய்கறி மார்க்கெட்டிலும் குவியும் வியாபாரிகள் கூட்டம். கட்டுக்கு அடங்காதது.

   நீக்கு
  5. இங்கும் (ஊரடங்குக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை) ஃபெப்ருவரியில் மாங்காய் (கிளிமூக்கு) 180க்கு விற்றார்கள். நான் 100 ரூபாய்க்கும் வாங்கியிருக்கிறேன் (ஆசையில்).

   சமீபத்தில் படித்தேன்... எல்லாக் காய்களும் கிலோ 10-20 ரூபாய்க்கும் குறைவாக விவசாயி விற்பனை செய்கிறார். நமக்கு வரும்போது அது கொள்ளை விலை ஆகிவிடுகிறது. இப்போவுமே பெரிய மார்க்கெட்டில் 20 ரூபாய்க்கு வாங்கிவந்து நமக்கு 40-80 ரூபாய் வைத்து விற்கிறார்கள். கோபம் வந்தாலும், இந்த வியாபாரிகள் செயின், இதைவைத்துத்தான் பிழைக்கிறார்கள் என்பது மனதில் தோன்றும்போது, சரி சரி என்று எண்ணுவேன்.

   என் FIL எப்போதுமே சொல்லுவார், ஆட்டோ டிரைவர், காய்கறிக் காரங்க ..இவங்கள்டலாம் பேரமே பேசக்கூடாது. நம்மகிட்ட 10 ரூபாய் அதிகம் வாங்கி அவர்கள் வீடு கட்டவா போகிறார்கள் என்பார். ஆனால் எனக்கு 'பேரம்' பேசாவிட்டால், இல்லை நாலு இடத்தில் விலையை செக் செய்துகொள்ளாவிட்டால் மனது வராது. ஹா ஹா

   நீக்கு
  6. இந்த சிரமமான காலத்திலும் என்னை வந்து அழைத்துப் போய், கொண்டுவிடும் என் ஆஸ்தான ஆட்டோக்காரருக்கும், பழைய வீட்டில் பற்பல வருடங்களாய் வாங்கிக் கொண்டிருந்த காரணத்தால் மளிகை, காய்கறிகளை முடிந்தவரை விலை ஏற்றம் இல்லாமல் என் அலுவலகத்தில் கொண்டுவந்து தந்துவிடும் ஆஸ்தான மளிகைக் கடைக்காரருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

   நீக்கு
  7. சாம்பாருக்கு ஏற்ற தான் எனில், நாங்கல்லாம் அரைத்துவிட்டால் தான் சாம்பார் என்போம். பொடி போடவே மாட்டோம். அப்படி சாம்பார் எனில் முருங்கை, சின்ன வெங்காயத்தை அடிச்சுக்க வேறே தான் இல்லை. அடியில் தாளித்துக் கொட்டிக் கொஞ்சமாய்ப் பருப்புப் போட்டுச் செய்யும் பருப்புக் குழம்பு எனில் (பெரும்பாலோர் இதைத் தான் சாம்பார் என்பார்கள். நம்ம ரங்க்ஸ் உள்பட) அதுக்கு வெண்டைக்காய்+குடமிளகாய்+தக்காளி, பறங்கிப் பிஞ்சு, கத்திரிக்காய் சின்னது முழுசாக நல்லா இருக்கும். பூஷணியெல்லாம் தனியாய்ப் போடுவதை விட 2,3 காய்கள் போட்டுச் சேர்த்துப் பண்ணினால் தான் சோபிக்கும். :)

   நீக்கு
  8. //..நான் சாம்பார் பண்ணும்போது, அதில் 'தான்' மிக அதிகமாகப் போடுவேன். //

   என்னை விட்டால் நான் ’நல்ல’ தான் போட்டு சரியாக, வாசனையாகப் பண்ணிவிடுவேன். விட்டால்தானே.
   ஆனால் சிலர்போல் சாம்பாரில் எந்தக் காயையாவது வெட்டிப்போட்டு அதுதான் ‘தான்’ என்றால் நான் அங்கீகரிப்பதில்லை. சாம்பாரோடு கொதிப்பதற்கு சில காய்கறிகள்தான் properly qualified என்பது என் அபிப்ராயம். சின்ன வெங்காயம், முருங்கக்காய், முள்ளங்கி, பரங்கி, தக்காளி, வெண்டை போன்றவை.

   நீக்கு
 21. எதையும் பிளான் பண்ணி செய்யனும்ன்ற வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருது. ஆயிரம் யோசிச்சு ஊருக்கு ஒதுக்குப்புறமா வீடு கட்ட தெரிஞ்ச உங்களுக்கு கார், ஆட்டோக்காரர் போன் நம்பர் வாங்க தெரிலயே! அப்பலாம் ஏதுங்க செல்போன்னு கேட்பீங்க?! லேண்ட் லைன் அனேக வீடுகளில் இருந்துச்சு. ஆங்காங்கு எஸ்.டி.டி பூத் இருந்துச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதசரி, அப்போது எங்களிடமே லேண்ட்லைன் ஃபோன் கிடையாது. அவர்களிடம் எப்படி? பழக்கமான ஆட்டோக் காரர்கள் இருந்தார்கள். ஆனால் அருகில் இல்லை.

   முதல் பையன் மூன்று மாதமாக இருந்தபோது நள்ளிரவில் ஆஸ்பத்திரி அழைத்துச் செல்ல வேண்டி வந்தபோது கிடைத்த அனுபவமே வேறு. பின்னர் ஒரு வியாழனை அதை வைத்து சமாளிக்கிறேன்!!!

   நீக்கு
 22. சமீத்துல ட்விட்டரில் ஒரு பதிவு பார்த்தேன். சத்தியமங்கலம் அருகே பாதையில் ஒரு யானை காரை நோக்கி வருது. இரவு நேரம் காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் யானையின் பிரம்மாண்டத்தினை பார்த்து பயம் வந்துச்சு. அந்த காரில் இருந்தவுங்களுக்கு அல்லு விட்டிருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யானை பற்றிய நிறைய மிரட்டும் வீடியோக்கள் இருக்கே.. ஒரு யானை ஒரு காரின் பானெட் மீது ஸ்டூலில் உட்காருவதுபோல உட்கார முயற்சிக்கும்!

   நீக்கு
 23. டீடோட்டலிஸம் எப்படியெல்லாம் டீடெய்யிலா சொல்ல வைத்திருக்கிறது...

  இப்படி யானையைப் பார்த்தால், யாருக்கும் பயம் தான் வரும்... இந்த நிலைக்கு அனைவரின் திருவிளையாடல்...!

  1. Big Ear - To Listen more
  2. Long Nose - To Smell more
  3. Big Head - To Think more
  4. Small Eyes - To concentrate more
  5. Closed Mouth - To talk less
  MORE AMICABLE BUT VERY DISCIPLINED
  ஒரு பதிவில் எழுதியது...!

  தென்கச்சி அவர்களின் பேச்சு, எப்போதும் சிந்திக்கத்தக்கவை...

  சேலம் to சென்னை மேலே மேலே சாலைகள் போடலாமே...! உண்பதற்கு உணவு கிடைக்காமல் மேலே மேலே உடனே செல்லலாம்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க DD..

   டீடோட்லர் என்றதும் எனக்கு சந்தானம் காமெனியும் நினைவுக்கு வந்தது!

   யானை பற்றிய விவரங்கள் சூப்பர். தென்கச்சி அவர்களின் இன்று ஒரு தகவல் இனிமை, சுவாரஸ்யம், பயனுள்ளதாய் இருக்கும்.

   மேலே மேலே சாலை நல்ல ஐடியா!

   நீக்கு
  2. ஏற்கெனவே கத்திப்பாராவில் கிட்டத்தட்ட அப்படித்தானே சாலைகள் வந்துள்ளன!

   நீக்கு
  3. கத்திப்பாராவில் மட்டுமா? ஆவடி உட்பட இன்னும் இரண்டு இடங்கள் உண்டு. க்ரோம்பேட் கூட!

   நீக்கு
 24. வணக்கம் சகோதரரே

  கதம்பம் அருமை. தங்கள் இளைய மகன் பிரசவத்திற்கு ஆட்டோ கிடைக்காமல் சிரமப்பட்டதை என் பதிவிலும் கருத்தாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனாலும், (உங்கள் ஆனால் என்னிடமும் ஏற்கனவே தாராளமாக இருப்பதுதான். ஹா.ஹா.) இப்போது உங்கள் பதிவு சொல்லி கேட்கும் போது உங்களின் படபடப்பு எப்படியென எனக்குப் புரிகிறது.அப்போது மிகவும் கஷ்டமான சூழ்நிலையை வேன்று வந்த பின்னர்தான் அந்த படபடப்பு நீங்கும்.

  பொதுவாக இறைவன் நம் வேண்டுதலை செவி மடுக்காமல் அப்போதைக்கு இருந்தால் கூட ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்யலாம் என தீடிரென முடிவெடுப்பார். ஆனால், அது எப்பொது என அவருக்கே தெரியாது.:) அங்கும் நமக்கு சாதகமாக திருப்பங்கள் நடக்க யாரேனும் வந்து பேச்சு வார்த்தை நடத்துவார்களோ என்னவோ? ஹா.ஹா.

  வீடு மாற்றலுக்குப்பின் நடக்கும் சம்பவங்களை மிகவும் நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள். படித்து ரசித்தேன். தங்களுடைய அலுவல தோழி சொன்ன அனுபவ கதை நமக்கும் ஒரு பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  என் கணவரும், சைக்கிள்,டூ வீலர் என எதுவுமின்றி எல்லாவற்றுக்கும்,நடராஜன் சர்வீஸைதான் நம்பி இருந்தார். ஆபீஸெல்லாம் இரண்டு, மூன்று பஸ் பிடித்துதான் சென்று வருவார். இப்போது மகன்கள் டூவீலர் வாங்கி அனுபவித்து வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் இந்த டிராபிக்கில் ஒவ்வொன்றிக்கும் வெளியே சென்று வரும் வரை பயத்துடன் இருக்க வேண்டியதாய் இருக்கிறது. மிகுதியையும் படித்து விட்டு வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... இந்த ஆட்டோ மேட்டரை உங்க பதிவிலும் சொல்லி இருக்கேனா? ஞாபகமே இல்லை!

   இறைவன் அவனையும் பெரியவன் போலவே திருவோண நட்சத்திரத்தில் பிறக்க வைக்கத் திருவுளம் கொண்டதால் அந்த சிரமமோ என்னவோ!

   ஓ.. உங்கள் வீட்டுக்காரரும் வண்டி இல்லாமல்தான் ஓட்டினாரா?!!

   நீக்கு
 25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 26. ஸ்ரீமான் பொதுஜன சிந்தனைகளிலிருந்து விசேஷ மனிதர்களாய் ஆவது எப்படி என்று இன்னொரு பாடமும் இருக்கிறது.

  ஆனால் அதில் ஒரு சிக்கல். 30 வயசுக்குள் மிஞ்சி மிஞ்சிப் போனால் 35-க்குள் அந்த 'விசேஷ மனிதர்' ஆசைக்கான தீவிரம் மனசை ஆட்கொண்டு ஆட்டுவித்தால் தான். அடுத்த சிக்கல், விசேஷ மனிதர் தன்மையிலிருந்து விடுபடுகிற வேகம், அதிவேகமாய் எப்படியும் 55
  -க்குள் ஆளை அமுக்கி விடும். ஆக, 35 to 55 விசேஷ மனிதராய் கிரீடம் சூட்டிக் கொள்ள தவிக்கிற காலம். இந்த வாழ்க்கையில் தப்ப விட்டவர்கள், தன் வாரிசுகளிடமாவது அந்த விசேஷ மனிதத் தன்மையை கண்டு ரசிக்க முயல்வார்களாம்.

  ஒரே பிறவியிலேயே மனிதன் தான் மீண்டும் மீண்டும் வாழ்ந்து பார்க்க முயல்வது தன் வாரிசுகளின் மூலமாகத் தான் என்பது மனவியல் உண்மை. "நான் தான் காலேஜூக்கெல்லாம் போகலை.. என் மகனாவது (மகளாவது) என்று ஆசைப்படுதல் எல்லாம் இதனால் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். ஆனால் நினைப்பதெல்லாம்... நடந்து விட்டால்...

   ஹா... ஹா.... ஹா.... நன்றி ஜீவி ஸார்.

   நீக்கு
 27. அனைவருக்கும் வணக்கம். காலை என்னமோ இப்போல்லாம் உட்காரமுடிவதில்லை. (அம்பேரிக்காவில் இருந்து திரும்பியதில் இருந்து) ஆதலால் வரமுடியலை. நேற்றுக் கூட புதன்கிழமைனும் மறந்து போச்சு. நேரமும் இல்லை. கௌதமன் சார் கூப்பிட்டிருந்தார். அப்புறமாத் தான் அடடா, நம்ம கேள்வி, பதில்களானு ஓடோடி வந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதனாலென்ன, பரவாயில்லை... வயசாறதோல்லியோ.... வாங்க கீதாக்கா...

   நீக்கு
  2. அட, ஸ்ரீராம், உங்களுக்கு வயசானால் நான் வரதுக்கு என்ன? இந்தக் கொரோனா வந்ததால் பெண், பிள்ளை எல்லோரும் வாட்சப்பில் வீடியோவில் கூப்பிட்டு விடுவாங்க. தொலைபேசியில் நாங்க safe custodyயில் வைச்சுட்டுப் போனதை ரிலீஸ் செய்யும்போது வெளிநாட்டு அழைப்புக்களை ரத்து செய்திருக்காங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!அதுக்குத் தனியா எழுதிக் கொடுத்திருக்கணுமாம். இத்தனை முறை வெளிநாடு போயிருக்கோம்'வந்திருக்கோம்' சேஃப் கஸ்டடியில் தொலைபேசியை வைச்சுட்டுப் போயிருக்கோம், பிரச்னையே வந்ததில்லை. இன்னிக்கு வரையிலும் அதைத் திரும்பக் கொடுக்கவில்லை. இன்னிக்குக் கேட்டதுக்கு லாக்டவுன் முடியணும்னு சொல்லிட்டாங்க! எங்கே! அதுவரை குழந்தைங்க வாட்சப்பில் தான் கூப்பிட்டாகணும் போல! பிஎஸ் என் எல் சேவையையே எடுத்துடலாமானு ஒரு யோசனை! தண்டமாகப் போய்க் கொண்டிருக்கிறது. :(

   நீக்கு
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கமென்டைக் காப்பி செய்ய மறந்துட்டேன். போட்டது எல்லாம் காக்கா உஷ்ஷ்ஷே! உஷ்!
   ஶ்ரீராம் உங்களுக்கு வயசானால் எனக்கு என்ன வரதுக்கு? இஃகி,இஃஃகி, நான் சொன்னதுக்குக் காரணம் காலையிலே வாட்சப் மூலம் வீடியோ காலில் குழந்தைங்க இருவரும் கூப்பிடுவாங்க.

   நீக்கு
  4. // அட, ஸ்ரீராம், உங்களுக்கு வயசானால் நான் வரதுக்கு என்ன? //

   வயசானாலும் இந்த லொள்ளு மட்டும் குறையறதே இல்லை!

   நீக்கு
  5. அதுவும் இந்தக் கொரோனா வந்ததில் இருந்து அன்றாட நடவடிக்கைகளுக்கு அவங்க தினமும் எங்களை அழைத்து வகுப்பு எடுப்பாங்க. அவங்க சொல்லுவதை எல்லாம் நாங்க கேட்டுக்கொண்டு "உம்" கொட்டிக் கொண்டு இருப்போம். தொலைபேசியில் அழைக்கலாம்னா, பிஎஸ் என் எல் தொலைபேசியை அம்பேரிக்கா போகும்போது சேஃப் கஸ்டடியில் வைத்துவிட்டுப் போனதைத் திரும்பப் பெறும்போது வெளிநாட்டு அழைப்புக்களை ரத்து செய்திருக்கிறார்கள். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுக்குத் தனியா எழுதிக் கொடுக்கணுமாம்! அன்னிக்கே சொல்லி இருக்கக் கூடாதோ? வெளிநாட்டு அழைப்பே வரலையேனு கேட்டால் அப்புறம் சொல்றாங்க. அதுக்குனு போய் எழுதிக் கொடுத்தும் இன்னும் வரலை. இன்னிக்குக் கேட்டால் லாக்டவுன் முடிஞ்சு தான் தருவாங்களாம்! எங்கே லாக்டவுன் முடியறது? எங்கே வரது?

   நீக்கு
  6. ஹாஹாஹா, உங்களுக்கு வயசானால் எனக்கு எப்படி லொள்ளு குறையும்? மீ த ஒன் அன்ட் ஒன்லி குட்டிப் பாப்பா இன் திஸ் வலை உலகம் பதினைந்து வருஷங்களாக!

   நீக்கு
  7. கஷ்டங்கள் ஒற்றையாய் வருவதில்லை போல... ஹூ...ம்...

   நீக்கு
  8. அடடா? நான் குட்டிப்பாப்பாவாய் இருப்பதில் உங்களுக்கு என்ன கஷ்டம்? :))))))))

   நீக்கு
  9. நேற்றுத் தான் ஒரு பிறந்த நாளுக்கு (இது அலுவலக ரீதியாய் பதிவு செய்யப்பட்டது) வாழ்த்து வந்திருக்கு. இன்னும் உண்மையான பிறந்த தேதிக்கும், நக்ஷத்திரப் பிறந்த நாளுக்கும் வாழ்த்து வரணும். முப்பெரும் விழாக் கொண்டாடணும்! எல்லோரிடமும் வசூல் பண்ணணும்! அப்பாடா! எம்புட்டு வேலை காத்திருக்கு! :))))

   நீக்கு
  10. BSNL  landline prepaid plan வருட சந்தா 1800 ரூபாய் என்னவோ. வரும் கால் இலவசம். போடுகின்ற கால் அப்போப்போ பில் வரும். நான் அப்படித்தானே கட்டிவிட்டு கால் எல்லாம் unlimited பிளானில் மொபைல் போனில் போட்டுக்கொள்வோம். 

   நீக்கு
 28. காலையிலே வந்தப்போ இரண்டு ஒற்றை யானைகளும் உள்ள படம் அதற்கு மேலுள்ள கவிதை எதுவும் வரலை. இப்போவும் கொஞ்ச நேரம் வராமல் இருந்தது. திரும்பத் திரும்ப ரீலோட் செய்ததும் அரை மனசா வந்திருக்கு. இரண்டுமே தென்னாப்பிரிக்கக் காட்டு யானைகள் மாதிரி இருக்குங்க, காதுகளைப் பார்த்தால்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பமொபைலா, கணினியா? ஏன் அப்படி?

   நீக்கு
  2. மொபைல் எல்லாம் நான் பேசறதுக்கும், வாட்சப் பார்க்க, எப்போவானும் முகநூலில் ஏதானும் பார்க்க, குட்டிக் குஞ்சுலுவை வீடியோவில் பார்க்க என வைச்சிருக்கேன். அதிலேருந்து இந்தப் பதிவுகளுக்கு எப்படிப் போகணும்னு கூடத் தெரியாது. தெரிஞ்சுக்கவும் விரும்பலை. கணினி தான் இதுக்கெல்லாம் லாயக்கு! மொபைலின் தேவை தனி. இது தனி! இரண்டையும் போட்டுக் குழப்பிக்கப் போறதில்லை! :)))))) கணினி தான் ஓர் 2 மாசமாக இப்படி வருது. செர்வர் சரியில்லை என்றார்கள் கேட்டதுக்கு. அது ஒரு மாசம் ஆச்சு. ஆனாலும் இன்னமும் இப்படித் தான்!

   நீக்கு
 29. ஒற்றையடி காட்டுப் பாதையில்
  நான் மட்டுமேயான நிலையில்
  ஓரத்தில் ஒதுங்கிப் பார்க்கும்
  ஓங்கி உயர்ந்த யானை நெருங்கி
  தும்பிக்கை மரம் பிடித்து ஏறி
  மத்கஜத்தில் ஆரோகணித்து
  காடு சுற்றி உலா வந்தேன்
  கனவில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசைதான்! ஆனால் ரிஸ்க்கு!

   நீக்கு
  2. கனவில் கூட ரிஸ்க் பார்த்தால் எப்படி?..

   பின்னூட்டங்களை வேக வேகமாய் கடப்பது தெரிகிறது.

   நீக்கு
  3. அவ்வளவு முன் ஜாக்கிரதை முத்துசாமி நான்!!!!

   நீக்கு
 30. கணினியில் ஜிமெயிலுக்குக் கடவுச்சொல்லி உள்ளிட்டு லாகின் செய்தா,"This site cannot be reached!" என்றே வருகிறது. அல்லது எரர் காட்டுகிறது. அதன் பின்னர் தொடர்ந்த முயற்சியில் ஒருதரம் போனாப்போகுதுனு திறந்துடும். கருத்துச் சொன்னாலும் அப்படித் தான், இப்போல்லாம் காப்பி செய்து கொண்டே வெளியிடுகிறேன். இல்லைனா கருத்துப் போகாது. கமென்ட் பொட்டி மட்டும் முகத்தைத் தூக்கி வைச்சுக்கொண்டு கம்ம்னு பேசாமல் இருக்கும். அதைத் தட்டிக் கொட்டி எழுப்பி விட்டுப் பின்னர் கமென்ட் நான்காவது முயற்சிக்குப் பின்னர் போகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா.... ஸ்ரீரங்கத்துக்கு வந்த சோதனை! என்னவாம்?

   நீக்கு
 31. யானை பற்றிய ஸ்ரீராமின் கவிதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்த தகவல்களும் ஏற்கெனவே அறிந்தவை எனினும் திரும்பப் படித்தேன். தென்கச்சி ஸ்வாமிநாதனின் இந்த, "இன்று ஒரு தகவல்!" ஏற்கெனவே கேட்டேன். வெண்டைக்காய் சாம்பாரிலே அவ்வளவு குறைவாகவா தான் போடுவார்கள்? ஆச்சரியம் தான். வெண்டைக்காயோடு குடமிளகாய் போட்டு சாம்பார் பண்ணினால் நன்றாக இருக்கும். எங்க மாமியார் வெண்டைக்காய்ப் பிட்லை என்று பண்ணுவார். ஙே!!!!! என்று விழிப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி. வெண்டைக்காய் சாம்பார் 1950 களில் செய்ததாய் இருக்கும். சத்திரத்தில் செய்த சாம்பாரில் தான் குறைவாய்தான் இருக்கும்!

   நீக்கு
  2. /சத்திரத்தில் செய்த சாம்பாரில் தான் குறைவாய்தான் இருக்கும்!// - ஸ்ரீராம்... எந்தக் கல்யாணத்தில் அல்லது விசேஷத்தில் (காண்டிராக்ட் விட்டது) காய்கள் போடறாங்க? போட்டால் விலை கம்மியான முட்டைக்கோஸ் போன்றவற்றைப் போடுகிறார்கள். பருப்புசிலி செய்தால், பவுடர் பருப்பை நீரில் கரைத்து கால் கரண்டி வெஜிடபிளில் அள்ளிப்போட்டு 50 பேருக்கு பரிமாறுகிறார்கள்.

   நீக்கு
 32. வாழ்ந்த காலத்து மனிதர்களை அச்சு அசலாக படம் பிடித்தாற் போல வரைவதில் அந்நாளைய சைத்திரிகர்களுக்கு
  ஈடு இணை இல்லை தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். அதிலும் சிறு துணுக்குகளில் கூட எவ்வளவு நுணுக்கம்...

   நீக்கு
 33. உங்கள் 2 ஆவது பையர் பிறக்கும்போது உங்கள் மனைவி பிரசவ வலியால் அவதிப்பட்டது பற்றியும் உங்கள் மனநிலை பற்றியும் (எல்லோரும் 2 ஆவது பையர் பிரசவம் என்றே சொல்றாங்க. பையருக்கு எப்படிப் பிரசவம் நடக்கும்?) :P நீங்க ஏற்கெனவே சொன்ன நினைவு. எப்போனு நினைவில் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரில் சொல்லி இருப்பேனோ? இப்போப் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லோருக்குமே முன்னாலேயே சொல்லி இருப்பேன் போலவே...

   நீக்கு
 34. வண்டி வாங்கலாம் தான்! ஆனால் இப்போதுள்ள போக்குவரத்து நிலைமையில் அதிகம் பழகாத நீங்கள் வண்டி ஓட்டிக் கொண்டு செல்வது என்பது! என்னைக் கேட்டால் அந்தப் பக்கம் செல்பவர்கள் யாரானும் உங்கள் குடியிருப்பிலோ அல்லது அந்தப் பகுதியிலோ இருந்தால் ஒரு டாக்சி ஏற்பாடு செய்து மாதம் இவ்வளவு எனக் கொடுத்துக் கொண்டு போய் வரலாம். இது தான் தேவலை. எங்கள் சிநேகிதியின் பெண் தரமணிக்கு அம்பத்தூரில் இருந்து அப்படித் தான் செல்வார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதையேதான் எங்கள் வீட்டில் எல்லோரும் எதிரொலிக்கிறார்கள்.

   நீக்கு
 35. உங்கள் குமாரர்கள் இருவருக்கும் வண்டி ஓட்டத் தெரியுமா, தெரியாதா? அவர்களில் ஒருவர் வண்டியில் தினம் தினம் உங்களைக் கொண்டு விட்டுவிட்டுப் பின்னர் அழைத்து வரலாமே! அல்லது தினம் ஒருத்தர் கொண்டு விட்டு, இன்னொருத்தர் கூட்டி வரலாம். அவங்க வேலை நேரமும் ஒத்து வரணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓட்டத் தெரியும். ஆனால் டிராஃபிக்கில் ஓட்டியதில்லை. சொந்த வண்டியும் இல்லை. எனவே லைஸென்சும் இல்லை!

   நீக்கு
 36. //சமயங்களில் எது நடக்கக்கூடாது என்று வேண்டுகிறீர்களோ, அதுதான் நடக்கும். கடவுள் கிண்டலாகச் சிரித்துக் கொள்வார்! //

  விந்தைகளின் ஆச்சரியங்கள் வித்தைகளின் கூட்டுக்கலவை கடவுள் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், ஆமாம் ஏஞ்சல். கோமதி அக்கா சொல்லி இருப்பது கண்களைத் திறக்கிறது.

   நீக்கு
 37. ஹை 5 ஸ்ரீராம் எனக்குமே கூட ரோட் க்ராஸ் பண்ண தெரியாது :) இங்காச்சும் சிக்னல் ரூல்ஸ் ஒழுங்கா பார்த்து நடப்பாங்க நம்மூரில் நித்தம் பயம்தான் .உங்க மகன்களுடன் நானும் சேர்ந்துக்கறேன் :) பேருந்தே பெட்டர்னு தோணுது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா, ஏஞ்சல்... பதிவின் இந்தப் பகுதிகளுக்கு பதில் சொல்லி இருப்பது (கவனத்தைப் பெற்றிருப்பது). மகிழ்ச்சி அளிக்கிறது.

   நீக்கு
 38. ஹாஹா நானும் கணவரும் எப்பவும் பிறரின் அட்வைஸ் ஏற்பதிலில்லை கேட்டதுமில்லை எதுனாலும் நாங்களே டிசைட் பண்ணுவோம் பிறகு அவரிடம் மொத்த பொறுப்பையும் விட்டுடுவேன் .யூ know நானும் முன் ஜாக்கிரதை முத்தக்கா :)

  பதிலளிநீக்கு
 39. எனக்கும் ஒரு யானையை கிட்ட சென்று தொட்டு  பழகிட ஆசை ..அதான் மனுஷங்க செஞ்ச வேலையால்  ஹோமோ சேப்பியன்ஸை பார்த்தாலே யானைகள் கோபப்படுமோன்னு பயமா இருக்கு .அவற்றை அவற்றின் இடத்திலேயே விடுவோம் நாம் அவங்க எல்லைக்கு போகாதிருப்பது நமக்கு நல்லது 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே... அதே... ஒரு நல்ல பிராணியை வில்லனாக்குவதில் நம் பங்கு அதிகம்!

   நீக்கு
 40. ஹாஹா தென்கச்சியின் பேச்சுசுவையை ரசித்தேன் இந்த famous quotes 
  பாருங்க :)

  https://cdn.quotesgram.com/img/61/15/1669139162-98734-Dad-s-Favorite-Sayings.png

  பதிலளிநீக்கு
 41. கடவுள் சிரித்தாலும், இளநீர் கடை வைத்து இருக்கும் பாண்டியனை உதவி செய்ய வைத்தாரே! கருணை மிகுந்தவர் தான்.
  கதை போலவே இருக்கிறது நீங்கள் சொல்லி வருவது நள்ளிரவில் வலி, உதவிக்கு யாரும் இல்லை, வசதி இல்லா இடம், கடைக்காரார் உதவி, திருடன் தாதா உங்களுக்கு உதவி. எல்லாம் வியப்பாக இருக்கிறது. இறையருள் இருக்கிறது என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அக்கா... // கடவுள் சிரித்தாலும், இளநீர் கடை வைத்து இருக்கும் பாண்டியனை உதவி செய்ய வைத்தாரே! கருணை மிகுந்தவர் தான்.//

   கன்னத்தில் அறிந்த மாதிரி இருக்கிறது. உண்மைதான் இல்லை?

   //இறையருள் இருக்கிறது என்று தெரிகிறது.//

   ஆஹா... நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 42. என்னதான் தாதாக்கள் உதவி செய்தாலும் கூட நாம் கொஞ்சம் தள்ளியே நிற்பது நல்லதுதான் ஸ்ரீராம்ஜி.

  நடு ராத்திரி பிரசவ வலி எல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான். நேரத்தில் வண்டி கிடைக்க வேண்டும் என்ற டென்ஷன் கூடுதலாக இருக்கும். ஆஸ்பத்திரியில் மருத்துவர் இருக்க வேண்டுமே என்ற கவலை இருக்கும். எப்படியோ சுகப்பிரசவம். இறைவன் நம்முடைய சில சிறுபிள்ளைத்தனமான கோரிக்கைகளுக்குச் சிரித்தாலும் உதவிடுவார். நாம் அவருக்கு எப்போதும் சிறுபிள்ளைகள்தானே.

  உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் எடுத்துச் சொல்லி வண்டி வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீடு சற்று தூரம் என்று பதிவில் சொல்லியிருந்த நினைவு.

  உங்கள் அலுவலக தோழி சொன்னது போல் ரோட்டில் விபத்து ஏற்பட்டால் இப்படித்தான் பொய்க்கேஸ் அல்லது தவறு செய்தவர்களைப் பிடிப்பதில்லை. கம்ப்ளெயின்ட் கொடுத்தால் நாம் அலையவிடுவார்கள்.

  உங்களின் முந்தைய பதிவுகளையும் வாசித்திருப்பதால் தொடர முடிகிறது. கருத்துதான் பதிய முடியவில்லை. கீதாவிடம் கணினி இல்லாததால் அவருக்கும் தற்போது பதிவு, கருத்துகள் எல்லாமே சிரமமாக இருப்பதால் நான் எழுதிய பதிவு கூட அனுப்பாமல் இருந்தேன். கருத்துகளையும். இப்போது அனுப்பச் சொல்லி சொன்னதால் கருத்துகளை அனுப்புகிறேன். இப்போது வலைப்பக்கம் வாசிக்க கொஞ்சம் நேரம் கிடைக்கிறது. வீட்டுப் பணிகள் இருந்தாலும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆவ் துளசி அண்ணன் நலமோ? உங்களை அடிக்கடி விசாரித்தோம், ஆனா கீதா அதை உங்களுக்குச் சொல்லவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

   நீக்கு
  2. வாங்க துளஸிஜி... இப்போதான் ஏஞ்சல் பக்கத்தில் உங்கள் பெயர் பார்த்து விசாரித்து விட்டு வந்தேன். நீண்ட நாளைக்குப்பிறகு வருகை தந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். நலம்தானே?

   கருத்துகளுக்கு நன்றி. வண்டி வாங்கும் எண்ணம் இல்லை இப்போதைக்கு... பார்ப்போம்!

   நீக்கு
  3. @ பிஞ்சு ஞானி அதிரா:)////

   கர்ர்ர்ர் :) நாம் கேட்டது பாவம் கீதா கவனித்திருக்க மாட்டார் இப்படியா மாட்டி விடறது கீதாவை :)

   நீக்கு
 43. தலைப்புப் பார்த்ததும்.. “ஒற்றைப் பனை” என நினைச்சிட்டேன், ஏனெனில் எங்கள் ஊரில் ஒரு பகுதியில் ஒற்றைப் பனை ஒன்று நின்று எல்லோரையும் பாடாய்ப் படுத்தி விட்டது... அதில் எதுவுமே நடக்கவில்லை, ஆனா அதில் என்னமோ இருக்குது, நைட்டில் அவ்வழியால் போகக்கூடாது என மிரட்டி... எல்லோருக்கும் போகப் பயம்.

  ஆனா அப்பம்மா வீட்டுக்கு அப்பதைதான் சோட் கட்..

  எனவே இரவில் போய் வருவதாயின் நான் தான் பலிக்கடா:)) அண்ணனுக்கு..

  வா வா சொக்கலேட் வாங்கி தருவேன் எனச் சொல்லி, ஏத்திக்கொண்டு போவார்ர்... ஈவினிங் போவோம், திரும்பி வர நைட் ஆகிடும்... நான் கண்களை இறுக்கி மூடிக்கொண்டிருப்பேன், ஆனா அண்ணனால மூட முடியாதே:) அதனால, தூரத்திலேயே தொடங்கிடுவார்ர்.. “ அதோ ஒற்றைப்பனை, உனக்கு தெரியுதோ?, பயப்படாதே.. அது ஒன்றுமில்லை, சும்மா கதை “ என்றெல்லாம் புலம்புவார் தன் பயத்தைப் போக்கா.. பூஸோ கொக்க்கோ.. மூடிய கண்களை வீடு வரை திறக்கவே மாட்டேன் நான்..

  இப்படித்தான் இன்னொரு ஊரில், சுடலை ஒன்று, அவ்வழி போக நேர்ந்தாலும் நான் தான் பலிக்கடா அண்ணனுக்கு ஹா ஹா ஹா.. சரி போஸ்ட்டுக்கு வாறேன்ன்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ... கற்பனையான தலைப்புக்கு எவ்வளவு விளக்கம்! ஆனாலும் சுவாரஸ்யம்.

   வாங்க அதிரா...

   நீக்கு
 44. கவிதை அருமை ஸ்ரீராம்ஜி.

  யானைகள் பற்றிய விவரம் எங்கள் ஊரிலும் நிறைய சொல்லுவதுண்டு. அதனால் தான் வெயில் காலத்தில் தண்ணீருக்காக அவை ஊருக்குள் வந்துவிடுகின்றன. எங்கள் பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாடு சைடு வசிப்பவை அங்கு இறங்குவது அதிகம்.

  வயதிற்கும் அறிவிற்கும் சம்பந்தமே இல்லை. ஒரு ஆசிரியனாக, அப்பாவாக இதை நான் ஆமோதிப்பேன். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்கிறேன்.

  சிங்கப்பூர் பற்றிய தகவல் எங்கேயோ வாசித்த நினைவு. இப்போது இங்கு முழுமையாக வாசித்துத் தெரிந்து கொண்டேன்.

  நகைச்சுவையை ரசித்தேன் ஸ்ரீராம்ஜி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 45. //என் இளையவன் பாஸ் வயிற்றுக்குள் இருந்தபோது கடவுளிடம் என் வேண்டுதல்//
  ஆவ்வ் போன வியாழன் கதையில மூத்தவர் குழந்தையாக இருந்தார்ர்.. ஒரு கிழமைக்குள் அடுத்த குட்டி வயிற்றில் ஹா ஹா ஹா..

  //கடவுளுக்கு ஒரு பழக்கம் உண்டு. சமயங்களில் எது நடக்கக்கூடாது என்று வேண்டுகிறீர்களோ, அதுதான் நடக்கும். //
  கரெக்ட் ஸ்ரீராம், பக்தர்களைச் சோதிச்சு விளையாடுவதுதான் அவருக்கு ரொம்பப் பிடிக்குது போலும் கர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லையே அதிரா... போன வாரம் மூத்தவன் என்றா சொல்லி இருந்தேன்?

   நீக்கு
 46. //ஆனாலும் அவர்கள் எனக்கு உதவிதான் செய்திருக்கிறார்கள். ஆனாலும்... ச்சே... எத்தனை ஆனாலும்!//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுதானே ஹா ஹா ஹா..

  //வீடு மாறிய நாளிலிருந்து அலுவலகம் சென்றுவர ஒரு இரு சக்கர வாகனம் வாங்குவது பற்றி யோசனை வந்திருந்தது. ஆனால் மகன்கள் அதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.//

  ஆஆஆஆஆஆ என்ன இப்போதானே சுகப்பிரசவம் ஆனது:) அதுக்குள் வளர்ந்து விட்டினமே ஹா ஹா ஹா...

  உங்களுக்கிருக்கும் மறதியாலதான் பயப்படுகின்றனர் போலும்:)).. நீங்க மறந்துபோய் வலது பக்கம் ஓட்டி விட்டால்ல்ல்:)) ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
 47. அது சரி. யானைக்கு கவிதைக்கு ஆப்ரிக்க யானை படம் தான் கிடைத்ததா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹி... ஹி... ஹி... தேடிய சௌகர்யத்தில் எது கிடைத்ததோ.. அது!

   நீக்கு
 48. //நம் மனதில் என்ன முடிவு செய்து வைத்திருக்கிறோமோ அதைதான் பெரும்பாலும் செயல்படுத்துவோம். செய்ய நினைக்கும் செயலில் விருப்பம், பிடிவாதம்.//

  நல்ல கொள்கை.

  உங்கள் மகன்களும் இரு சக்கர வாகனம் ஓட்டுவது இல்லையா? அல்லது உங்களை மட்டும் ஓட்ட வேண்டாம் என்கிறார்களா ?
  யானையைபற்றிய கவிதை, செய்தி எல்லாம் அருமை.

  தென்கட்சி சுவாமினாதன் அவர்கள் பேச்சை பொதிகையில், ரேடியோவில், நேரில் கேட்டு இருக்கிறேன். அவர் சிரிக்காமல் நம்மை சிரிக்க வைப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகன்கள் போக்குவரத்தில் ஓட்டியதில்லை. மைதானத்தில் ஓட்டியமோனு சரி;! கவிதையை ரசித்ததற்கு நன்றி்

   நீக்கு
 49. //பொதுவாய் நம்மிடம் ஒரு பழக்கம். நண்பர்கள் நம்மிடம் கேட்கும் கருத்துகளுக்கு அவர்கள் மனம் நோகாமல், அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்களோ அப்படியே பதில் கொடுத்து விடுகிறோம். ///

  இதில் நம்மிடம் ஒரு பழக்கம் எனச் சொல்வதை விட, ஒருவர் ஒரு கருத்துக் கேட்கும்போது, அவர் தன் மனதில ஏற்கனவே ஒரு பதிலை தயார் செய்து வைத்திருப்பார், அதே பதிலை நாமும் சொல்லிட்டால், நமக்கு நல்ல மரியாதை + வரவேற்புக் கிடைக்கும்.. அக்கருத்து உண்மையில் தப்பானதாயினும் ஹா ஹா ஹா..

  ஆனா அவர்கள் நினைப்பதற்கு எதிராக நம் கருத்து இருந்திட்டால், நம்மை அவர்களுக்குப் பிடிக்காமல் போயிடுது, எதிர்ப்பது போலாகிடுது... ஆனாலும்[இது 2 வது ஆனால்:)] நான் நினைப்பது, ஒத்த அலைவரிசை மனநிலை கொண்டோரின் கருத்துக்கள் 80 வீதமும் ஒரே மாதிரியே இருக்கும், அதனாலதான் நண்பர்களாக முடிகிறது...

  சிலர் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், நம்மால் அவர்களோடு ஒட்ட முடிவதில்லை, மனமும் விரும்புவதில்லை, ஏதோ ஒரு அன்கொம்பட்டபிள் நிலைமையாகவே இருக்கும்..

  //அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்பது அவர்கள் பேச்சோட்டத்தில் தெரிந்து விடும். ///

  ஆனால் நான் எப்பவும் இப்படி இருப்பதில்லை ஸ்ரீராம், அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரிஞ்சாலும், என் கருத்தைத்தான் சொல்ல விரும்புவேன், ச்சும்மா பேச்சுக்கு ஒப்புதல் கூறி, அதனால அதிரா நல்ல பிள்ளை எனும் பெயர் எடுக்க நான் எப்பவும் நினைப்பதில்லை.. ஆனா முடிஞ்சவரை, அவர்களின் மனம் நோகிடாமல் கருத்துக் கூற முயற்சிப்பேன், நம்மால் இன்னொருவர் கவலைப்பட்டிடக்கூடாது என நினைப்பேன்.

  //அவர்கள் மாட்டிக்கொள்ள விரும்புவதில்லை என்பதுதான் காரணம். "எதற்கு வம்பு" மனப்பான்மை! . //
  உண்மை, எப்பவும் நல்லவர்களாஅகவே இருக்கோணும் , பெயர் எடுக்கோணும் என விரும்புவோர் இவர்கள்...

  //இதனால் என்ன ஆகிறது என்றால் அபிப்ராயம் கேட்பவர்களுக்கு அதனால் பெரிய நன்மை எதுவும் விளையாது. அவரவர்கள் சொந்த முடிவையே எடுக்க வேண்டும்.
  //
  100 வீதமும் கரீஈஈஈஈஈஈஈஈடூஊஊஊ:))..

  ஒரு பொன்மொழி நினைவுக்கு வருது..

  “அனைத்துக்கும் ஆமா போடும் நண்பன் எனக்கு வேண்டாம், அப்பப்ப என்னை மிரட்டி தட்டிக் கொடுக்கும் நண்பனே வேண்டும்”:).

  //நம்மிடம் இன்னொரு பழக்கமும் உண்டு. என்னதான் எல்லோரிடமும் அபிப்ராயம் கேட்டாலும், நம் மனதில் என்ன முடிவு செய்து வைத்திருக்கிறோமோ அதைதான் பெரும்பாலும் செயல்படுத்துவோம். செய்ய நினைக்கும் செயலில் விருப்பம், பிடிவாதம்.//

  என் ஆத்துக்காரரும்.. எப்பவும் சொல்வது “எல்லோர் கருத்தையும் கேட்கோணும் அதிரா, ஆனால் முடிவை நாம் எடுப்பதே பெட்டர்”...

  இதில இன்னொன்றும் இருக்கு ஸ்ரீராம், விளைவு பாதகமாக அமைஞ்சிட்டால், நமக்கு யாரோடும் பகைமை வராது, நாமாகத் தேடியதுதானே என நினைச்சு ஆறுதல் அடையலாம்ம்.. ஹா ஹா ஹா.. இல்லை எனில் அடுத்தவர்களையெல்லோ திட்டிக் கொண்டிருக்கும் நிலைமை வரும்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஆஆஆஆஆ எந்தாப்பெரிய கொமெண்ட்.. கமலாக்காவையே மிஞ்சி விட்டது:) ரைப் பண்ணும்போது தெரியவில்லை ஹா ஹா ஹா அஜீஸ் பண்ணுங்கோ ஸ்ரீராம்.. வெரி சோரி:))

   நீக்கு
  2. கணினி கையில் இருக்கும் பெருமையில் டைப்போ டைப்பு என்று டைப்பில் விட்டீர்கள். பாதகமில்லை. சுவாரஸ்யமாய்த்தான் இருக்கிறது. மொபைல் என்பதால் என்னால்தான் அப்படி அடிக்க முடியாது! கமலா அக்காவையே மிஞ்சி விட்டீர்களா? அட்டென்ஷன் கமலா அக்கா..

   நீக்கு
 50. சிங்கப்பூர் அந்த திட்டத்தை கைவிட்டு இருக்கும் இப்போது.
  கொரோனா படுத்தும் பாட்டில்.
  சாம்பாரில் வெண்டைக்காயா? என்று தேடும் அளவுக்கும், அது தெரியாத அளவுக்கும் போட்டு இருக்கிறார்கள் போலும்.

  ராஜூ அவர்கள் வீட்டில் வித்யா சுப்பிரமணியம் குடியிருப்பது புது செய்தி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகமே ஒடுங்கிக் கிடக்கிறது. மண்டி இட்டு ஸரண்டராகி இருக்கிறது. என்ன ஆகுமோ.. எப்போ சரியாகுமோ...!

   நீக்கு
 51. //"டேய்.. அது என் தப்பு இல்லைடா... சிக்னல் விழுந்தும் அவசரப்பட்டு அவன் வந்தது தப்பு.." என்றேன்.


  "அதைதான் நாங்களும் சொல்றோம்" என்றனர் கோரஸாய்! "போலீஸ் பிடிச்சா அவங்க மாதிரி அந்த அளவு உங்களால் பேசமுடியுமா?"//

  ஹா ஹா ஹா சில விசயங்களுக்கு நாம் கையாள வேண்டியது “கோவணம் கட்டும் ஊரில், வேஸ்டி கட்டுபவர் பைத்தியக்காரர்:)..”.. இதுதான் ஒழுங்கு, இப்படித்தான் இருப்பேன் என எண்ணக் கூடாது, நாட்டு, மக்கள் நிலைமைக்கேற்ப நாம் பார்த்து நடக்கோணும்...

  இப்போ வெளிநாட்டில் வளரும் நம் பிள்ளைகளை ஊருக்குக் கூட்டிப் போக பயப்படுகின்றனர், ஏனெனில், இங்கு ரோட் விசயத்தில் பயங்கர ஒழுங்கு முறையில் பழகி விட்டனர், ஆனா இதே முறையை அங்கு கடைப்பிடிக்கும்போது பல அக்ஸிடெண்டுகள் நடக்கின்றன.

  சுவிஸ் இலிருந்து இரு பிள்ளைகளோடு கொழும்பு போன ஒரு குடும்பம்.... இரு பிள்ளைகளும், சிக்னலில் வெயிட் பண்ணி, லைட் விழுந்ததும், ரோட்டைக் குறொஸ் பண்ணியிருக்கின்றனர், எங்கிருந்தோ வந்த கார் அடிச்சு.. பிள்ளைகள் அவ்விடத்திலேயே சரியாம்ம்.. அப்போ என்னதான் பண்ணுவது, நாம் தான் கொஞ்சம் கிட்னியை பாவிச்சு நடக்கப் பழகோணும்...

  ஆனால் ஸ்ரீராம், நிலவுக்குப் பயந்து பரதேசம் போக முடியாது, அதுபோல, அலை ஓய்ந்தால்தான் குளிக்கலாம் என இருந்தாலும் முடியாது... நாம் தான் தெளிவாக வேணும்..

  இனொன்று மனதில் பயம் இருப்பின், வாகனம் வாங்க வேண்டாம், தைரியம் வரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை அதிரா.. வழக்கம்போல நான் எடுக்கும் முடிவுதான்! ஆனால் எல்லோர் சொல்வதையும் கேட்டு சீர்தூக்கிப் பார்த்துக் கொள்கிறேன்.

   நீக்கு
 52. கவிதை அழகு...

  ஓரமாக அனுக்கா:) ஒற்றையாக நின்றிருந்தாலும் இக்கவிதை பொருந்தும்தானே.. ஐ மீன் நெஞ்சு துடிப்பது ஒருகணம் நிற்கும்ம்ம்ம்ன்ன்னேன்ன்ன்ன் ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி.

   நானே அனுஷ் இருந்தாலும் நின்று துடிக்கும் இதயம் என்று சேர்க்க நினைத்தேன். செய்யவில.லை. ஆச்சர்யம்.

   நீக்கு
  2. நேற்று எதிலோ பார்த்தேன், அனுஷ்கா தன் பெற்றோர் திருமண நாள்? அல்லது இருவரில் யாரோ ஒருவரின் பிறந்த நாளுக்கு அவங்க இருவருடனும் சேர்ந்து செல்ஃபி? அல்லது புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார். @ஸ்ரீராம், உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். :))))

   நீக்கு
 53. அப்பா மகன் கரீட்டூஊஊஊஊ.. அப்பா அம்மா பேச்சைப் பிள்ளைகள் கேட்பது, நம் தலைமுறையோடு கப்பலேறி விட்டது.. இப்போ சின்னக் குட்டீஸ் கூட, உங்களுக்கு ஒன்றுமே தெரியாது எனச் சொல்லிக்கொண்டே வசனம் பேச ஆரம்பிக்கின்றனர் ஹா ஹா ஹா..

  //பெங்களூரு நெரிசல் தெரியுமா உங்களுக்கு?" என்று கேட்பவர்களுக்கு.... "நீங்களும் இதுமாதிரி ஒரு ஆகாய சாலை போட்டுக் கொள்ளுங்களேன்... யார் வேண்டாம் என்றார்கள்?!!"//

  அதானே.. ஸ்ரீராம் ஒண்ணும் வாணாம் ஜொள்ளலியே:)) ஹா ஹா ஹா..
  ------------------------------------------------

  ஆஆஆஆஆஆஆஅ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு ஜோக் புரியவில்லை:(..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெங்களூர்க் காரர்கள் யாருமே குரல் கொடுக்கவில்லை!

   ஜோக் புரியவில்லையா?!!

   நீக்கு
 54. ஸ்ரீராம் பாஸுக்கு மிட்னைட் வலியா...ஆ மீக்கும் அதே..ஆனால்.அது ஒரு பெரிய கதை..ஹா ஹா

  .உள்ளூரில் இருந்த ஸ்டேஷன் போலீஸ்காரர்கள் ஒரு அறிவிப்பு செய்தார்கள். ஊருக்குச் செல்பவர்கள் முன்கூட்டியே எங்களிடம் தகவல் தெரிவித்து விட்டுச் செல்லுங்கள். நாங்கள் உங்கள் வீட்டுக்கு கூடுதல் கவனிப்பு தருவோம் என்பதே அந்த அறிவிப்பு. //

  அதே அதே ஸ்ரீராம் ஆனால் நான் மூச்! ஹா ஹா ஹா நான் மிக மிக எச்சரிக்கை இதிலெல்லாம். காரனம் நீங்கள் அடுத்த வரிகளில் சொல்லியிருப்பதுதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிட்டத்தட்ட எல்லோருக்கும் அனுபவம் ஒன்றாய்த்தான் இருக்கும் போல கீதா..்

   நீக்கு
 55. நண்பர்கள் நம்மிடம் கேட்கும் கருத்துகளுக்கு அவர்கள் மனம் நோகாமல், அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்களோ அப்படியே பதில் கொடுத்து விடுகிறோம். அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்பது அவர்கள் பேச்சோட்டத்தில் தெரிந்து விடும். பல சமயங்களில் அனாவசியமான, அல்லது கேட்கப் படுபவர்களுக்கு தேவையில்லாத விவாதங்களில் அவர்கள் மாட்டிக்கொள்ள விரும்புவதில்லை என்பதுதான் காரணம். "எதற்கு வம்பு" மனப்பான்மை! . //

  உண்மைதான். ஆனால், நெருகியவர்கள் நம்மை நம்புபவர்கள் மற்றும் நம்மீது அன்புடையவர்கள் என்றால் மட்டும் சொல்லுவதுண்டு. அவர்கள் மனம் நோகாத வரையில்....எல்லாம் சொல்லிவிட்டு யோசித்து முடிவு எடு என்று சொல்லிவிடுவது.!!

  //ரிசல்ட் நல்லதாய் அமைந்து விட்டால் "எல்லோரும் என்னென்னவோ சொல்லிக் கொடுத்தார்கள்... நான் கேட்கலையே... நான் இப்படிச் செய்தேன்... பாருங்க இப்போ..." என்று பீத்திக் கொள்ளலாம்.


  சரியான ரிசல்ட் கிடைக்காவிட்டால் அமைதியாக இருந்து விடலாம். எதிராளி மனதுக்குள் புன்னகைப்பார் என்று தெரியும்!//

  ஹா ஹா ஹா அதே அதே..

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு பிரச்சனையின் முழுப் பரிமாணமும் நமக்கு மட்டுமே தெரியும். அப்போ அடுத்தவர்களிடம் எப்படி ஒபினியன் கேட்கமுடியும்? அதுவும் தவிர, பிரச்சனை நம்முடைய பார்வையில் மட்டும்தானே நாம் சொல்லுவோம். சும்மா நமக்கு வித வித ஐடியாக்கள் கிடைக்க வேணும்னா இந்த மாதிரி சிலரிடம் கேட்கலாமே தவிர செயல்படுத்துவது நம் அனாலிசிஸ் படித்தான் செய்யணும்.

   பையனை இந்த காலேஜில் சேர்க்கவா இல்லை அந்த காலேஜா? இந்த வேலையா அல்லது அந்த வேலையா? இந்தப் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்யலாமா இல்லை அந்தப்பெண்ணா? என்றெல்லாம் கேட்டால், அவர் சொன்னதற்கு மாறாகச் செய்து அதனால் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தால், 'நான் அப்பவே இவர்ட்ட சொன்னேன். கேட்கலை. இப்போ கஷ்டப்படுகிறார்' என்று அந்தப் பேச்சையும் கேட்கவேண்டியிருக்கும். நம் உள்ளுணர்வு என்ன சொல்லுதோ அதுபடி செய்யவேண்டியதுதான்.

   அதுவும் தவிர, 'இதா அதா' என்றமாதிரி பிரச்சனைக்கு யாரிடம் கேட்டாலும், 'எதற்கு நமக்கு பொல்லாப்பு' என்று இதுவும் சரிதான், ஆனால் இந்தப் பிரச்சனை வருமோ, அதுவும் சரிதான் எதுக்கும் இதையெல்லாம் சரி பார்த்துக்கோங்க என்று இரண்டுங்கெட்டானாகத்தான் சொல்வார்கள்.

   ஆனா இந்த மாதிரி தங்கள் பிரச்சனைக்கு அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்பவர்கள், சைகலாஜிகலாக, தாங்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டு, அந்த முடிவையே அடுத்தவர்கள் சொல்கிறார்களா, அப்படிச் சொன்னால் இன்னும் தைரியமாக இருக்கும் என்ற எண்ணத்தினால்தான் கேட்பார்கள். அதற்கு மாறாக ஆலோசனை சொன்னால் 'இவருக்கு எப்படி முழுப் பிரச்சனையும் தெரியும், அதனால் நாம் நினைத்ததையே செய்வோம்... அல்லது, அந்தப் பிரச்சனையில் தவறான ஆலோசனை சொன்னவர்தானே இவர், அதனால் இந்தப் பிரச்சனைக்கு அவர் சொன்னதற்கு மாறாகச் செய்வோம்' என்று நினைத்துக்கொள்வார்கள்.

   இது மனித இயல்பு. ஹா ஹா ஹா

   நீக்கு
  2. அன்புக்குரியவர்களிடம் அப்படிச் சொன்னாலும் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் வந்திருக்கு கீதா..

   நீக்கு
  3. நெல்லை.... உண்மை. பிரச்னைநின் முழுப் பரிமாணமும் தெரியாதவர்களிடம் யோசனை கேட்பது தவறு. அதே போல அவர்களும் யோசனை சொல்வதும் சரிப்படாதுதான். அதற்காக அவர்களிடம் "முழுப் பிரச்னையையும் சொல்லுங.க" என்று கேட்டுக்கொண்டு எதிரே அமரவும் நேரமிருக்காது. நீங்கள் சொல்லி இருப்பது சரி்

   நீக்கு
 56. பாருங்கள், அப்போதும் கேஸ் கைவிடப்பட்டதே தவிர, கார்க்காரர் மேல் தப்பு என்று பதியப்படவில்லை. அப்புறம் எப்படி போலீஸ் மேல நம்பிக்கை வரும்?" என்று முடித்தார். //

  அதே ஸ்ரீராம். இது ஒரு காலத்துல அதுவும் நான் வண்டி ஓட்டிய சமயத்தில் மனதுள் இந்த எச்சரிக்கை இருந்துகொண்டே இருக்கும். நல்ல காலம் 4 சக்கரமும் சரி 2 சக்கரமும் சரி என்னை இப்படியான இக்கட்டுகளில் மாட்டவில்லை. எனக்கு இரண்டுமே ஓட்ட ரொம்பப் பிடிக்கும். இருந்தாலும் இப்போது நோ 4, 2 இதுவும் ஜாலியாத்தான் இருக்கு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதா... உங்கள் புகழ்பெற்ற அந்த டூ வீலரை நான் பார்த்திருக்கேனே...

   நீக்கு
 57. "நாம ஒழுங்காதான் ஓட்டுவோம். பின்னால, முன்னால ஓட்டுறவனும் ஒழுங்காய் ஓட்டணுமே... இல்லையா?" //

  ஹையோ ஹையோ அவருக்கு ஹைஃபைவ்....நானே ஓட்டிய சமயத்திலும் கூட இந்த டயலாக் அடிக்கடி நான் விடுவது!!!!

  "ஆண்ட்டி.. இவர் ரோட்ல நடக்கறதே ஒழுங்காய் இல்லை ஆண்ட்டி... ஓரமா நடக்க மாட்டேங்கறார்... பிளாட்பாரத்தை விட்டு விட்டு தார் ரோட்லயே நடக்கறார். இப்போ கூட, சிக்னல் போட்டுட்டாங்கன்னு உடனே க்ராஸ் பண்ணினார்... கடைசியா போன பைக்காரன் மோதியிருக்க வேண்டியது... திட்டிட்டு போறான்.." - மகன் //
  "டேய்.. அது என் தப்பு இல்லைடா... சிக்னல் விழுந்தும் அவசரப்பட்டு அவன் வந்தது தப்பு.." என்றேன்.

  "அதைதான் நாங்களும் சொல்றோம்" என்றனர் கோரஸாய்!//

  ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம் இதெல்லாம் நம்ம வீட்டுல சகஜமப்பா....நான் இப்படித்தான் ரூல் பேசும் போது...குறிப்பா வண்டி ஓட்டிய காலங்களில், ரொட்டை க்ராஸ் செய்யும் போது...ஆனா இப்பல்லாம் ரொம்ப கான்ஷியஸ் ஆகிட்டேன்....என் பையன் ட்ரெய்னிங்க். னாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்னு..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிரித்துவிட்டு சும்மாதான் இருக்கேன் நானும்!

   நீக்கு
 58. ஓரமாக ஒற்றை யானையை மிக மிக மிக ரசித்தேன் ஸ்ரீராம்..

  யானை பற்றிய தகவல்கள் எவ்வளவு ஸ்வாரஸ்யம் இல்லையா? எந்த நாலு கால் செல்லம் பறக்கும் செல்லங்கள் என்று எந்த செல்லமானாலும் சரி அதைப் பற்றிய தகவல்கள் வியக்க வைக்கும்.

  அறிவுக்கு வயதுக்கும் சம்பந்தமில்லை// சிரித்துவிட்டேன் உண்மைதானே..அந்தப் பையன் கேட்டதில் தப்பே இல்லை. பல விஷயங்களில் பசங்க இன்னும் அதிகமாகச் சிந்திக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அறிவுக்கும் வயதுக்கும் சம்பந்தமே இல்லைதான். பல நிகழ்வுகள் இதுக்கு உதாரணம் உண்டு..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யானை பற்றிய தகவல்கள் எப்பவுமே சுவாரஸ்யம்தானே கீதா?

   நீக்கு
 59. வணக்கம் சகோதரரே

  தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் பேச்சுத்திறன் எப்போதும் ரசிக்கக் கூடியவை.. இன்று ஒரு தகவலில் கடைசியில் எப்போதும் நகைச்சுவையாகத்தான் முடிப்பார்.

  கவிதை அருமை. கவிதையின் அழகில் மயங்கிதான் யானை ஒத்தையடிப் பாதைக்கு வராமல், ஓரமாக நின்று ரசித்து கொண்டுள்ளளதோ என்னவோ? யானை பற்றிய தகவல்களும் அறிந்து கொண்டேன்.

  சிங்கப்பூர் தகவலும் தெரிய வந்தது. வெண்டைக்காய் வாசனையை மட்டும் வைத்துக் கொண்டு சாம்பாரில் அந்த தானைத் தேடும் படங்கள் சூப்பராக உள்ளது.அப்போது வெண்டை அவ்வளவு காஸ்டிலியோ? இல்லை கிடைப்பதரிதோ? அனைத்தையும் ரசித்தேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 60. யானையைப் பார்த்து பயந்து ஓடி வீட்டுக்கு வந்துதானே கவிதை எழுதினேன்? அதனால் அதற்குத் தெரியாது கமலா அக்கா!

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ..பயந்த பின்னாடி வந்த கவிதையோ..! நான் அதைப் பார்த்தவுடன் அதன் முன்னாடி வந்த கவிதை என நினைத்தேன். யானை விநாயகரின் அம்சம் என்றாலும். கோவில்களில் கூட பாகனுடனே அதை பார்க்கும் போதும், ஒரு பயம் வருவது உண்மைதான்.

   நீக்கு
  2. அது நம்மைப் பார்த்து பயப்படுகிறது. நாம் அதைப் பார்த்து பயப்படுகிறோம்!!

   நீக்கு
 61. ஸ்ரீராம் போக்குவரத்து நெரிசல் பற்றி வாசகர் ஒருவர் கேள்வி கேட்டிருக்க அதற்கு கார்ட்டூனிஸ்ட் மதன் - அவர் அப்போ கேள்வி பதில்கள்னு சொல்லிட்டிருந்தார்னு நினைக்கிறேன் - நான் ஏதேச்சையாக அந்த நேர ஆவி ஒன்று வாசிக்கக் கிடைத்தது. அது இன்னும் நினைவில். மதன் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வானில் கொஞ்சம் உயரே நிறைய் ஹெலிகாப்டர்கள் பறப்பதாகக் கார்ட்டூன் வரைந்து பதில் சொல்லிய நினைவு..

  // "இதைப் பெரிதாகச் சொல்கிறீர்களே... பெங்களூரு நெரிசல் தெரியுமா உங்களுக்கு?" என்று கேட்பவர்களுக்கு.... "நீங்களும் இதுமாதிரி ஒரு ஆகாய சாலை போட்டுக் கொள்ளுங்களேன்... யார் வேண்டாம் என்றார்கள்?!!"//

  ஹா ஹா ஹா ஹா அதானே!! ஆகாய சாலை நல்ல ஐடியா...பறக்கும் ரயில்னு பேர்லதானே வேளச்சேரி பீச் ரயில் போகுது அது போல நிஜமாவே பறக்கும் ரயில் வந்தா நல்லாத்தான் இருக்கும்! இரண்டடுக்கு மூன்றடுக்கு நான்கடுக்கு சாலைகள் கூட வரலாமா இருக்கும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதன் ஜோக் அல்லது பதில் எனக்கு நினைவில்லை. அப்பவே அப்படீன்னா, இப்போ?

   நீக்கு
 62. சிங்கப்பூர் விஷயம் 2013,,,இப்ப எப்படி மாறியிருக்கோ நிலைமை...

  ஜோக் ஹா ஹா ஹா ஹா எல்லாரும் காய தேடிட்டிருக்கானளோ...

  ஜோக்கோடு சேர்ந்து தகவலும்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 63. யாராவது என்னிடம் அட்வைஸ் கேட்டால் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு சின்சியராக அட்வைஸ் கொடுப்பேன். பெரும்பாலும் அதை யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் நான் எப்போதாவது அவர்களிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது சொல்லும் ஏதாவது விஷயத்தை கடை பிடிப்பதாக என்னிடம் பின்னால் கூறுவார்கள்( நீ அன்னிக்கு சொன்னாயே, அதனால்தான் இதைச் செய்தேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே... சிலர் என்னிடம் ஏதாவது கேட்பார்கள். நான் யோசித்து ஸீரியசாய் சொல்லத் தொடங்கியதும் பாதியிலேயே காணாமல் போய்விடுவார்கள்!

   நீக்கு
 64. நல்லதொரு தொகுப்பு. அனைத்தும் ரசிக்க முடிந்தது. இரவில் பிரசவம் - அனுபவம் இப்போது சுலபமாகத் தெரிந்தாலும் அப்போது நிறைய பதட்டப்பட வைத்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அப்போதைய பதட்டங்கள்... இப்போதைய நினைவுச்சரங்கள்!

   நீக்கு
 65. சும்மா அப்பா அப்பாங்காதீங்க...! மார்கோனியின் அப்பா ரேடியோவை கண்டுபுடிச்சிருக்கணும் .. சரிதான் .. ஆனால் இவன் எதிர்காலத்தில் ரேடியோவை கண்டுபிடிப்பான் என்று கரெக்டா கண்டுபுடிச்சு பெத்துபோட்டாரே அது பெரிய விசயமல்லவா? !!! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு
 66. பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து மிக சுவாரஸ்யமாக விவரித்துள்ளீர்கள். டூவீலரை தவிர்க்கலாம் என்பதே எனது கருத்தும்:).

  யானை பற்றிய கவிதையும், தகவலும் நன்று. தொகுப்பு அருமை. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!