வெள்ளி, 17 ஏப்ரல், 2020

வெள்ளி வீடியோ : கார்குழல் தடவி கனியிதழ் பருகி காதலை வளர்ப்பேன் இசைபாடி


​1976 இல் வெளிவந்த கருப்பு வெள்ளைத் திரைப்படம் ​முத்தான முத்தல்லவோ...  முத்துராமன்- சுஜாதா நடித்திருக்கும் இந்தப் படத்திலிருந்து இரண்டு மிக அருமையான பாடல்கள்.

இரண்டு பாடல் காட்சிகளிலும் வருபவர்கள் தேங்காயும், ஜெய்கணேஷும். 



வாலியின் பாடலுக்கு இசை எம் எஸ் வி.  திரைக்கதை வசனமும் வாலிதான் எழுதி இருக்கிறார்.    ஆர். விட்டல் இயக்கம்.  


முதல் பாடல் எம் எஸ் வியும் எஸ் பி பியும் இணைந்து பாடிய பாடல்.  இந்தப் பாடல் பதிவின்போது எஸ் பி பி ஓவராக கமகம் இழுக்க, எம் எஸ் வி பாதி விளையாட்டாகவும், பாதி சீரியஸாகவும் கடிந்துகொண்டதாக படித்த ஞாபகம்.  எம் எஸ் வி க்கு எஸ்பி பி  குரல் அலைவரிசையுடன் ஒத்துப்போக முடியவில்லை என்று சொன்னதாய் நினைவு.



இருவரும் இணைந்து சில பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.  இவர்கள் ஜோடிக்குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் "நித்தம் நித்தம் என் கண்ணோடு வண்ணக்கனா"  பாடல்.  முன்னரே பகிர்ந்திருக்கிறேன்.

இது அவர்கள் ஜோடிக்குரலில் எனக்குப் பிடித்த அடுத்த பாடல்.



தேங்காய் வழக்கம்போல கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்வதிப் பொறுத்துக்கொள்ளவேண்டும்.  அவருக்கு மிக செயற்கையான கிருதா , 'விக்'குடன் மேக்கப் செய்திருக்கிறார்கள். 

பல்லவி, மற்றும் சரணங்கள் கடைசி வார்தையைஇருவரும் எடுத்துக்கொண்டு இழைவது பாடலின் சிறப்பு.  அதிலும் எஸ் பி பி....    சொல்லவும் வேண்டுமா...

எனக்கொரு காதலி இருக்கின்றாள் - அவள்   
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் 
கீதம் அவளது வளையோசை 
கீதம் அவளது வளையோசை 
நாதம் அவளது தமிழோசை 
தமிழோசை   

பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும் 
பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும் 
பஞ்சணை போடும் எனக்காக 
தெய்வதம் என்னும் திருமகள் மேனி 
கைகளை அணைக்கும் இனிதாக 
இனிதாக  . 

என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன் 
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன் 
மெல்லிசை ஆகும் எந்நாளும் 
வையகம் யாவும் என் புகழ் பேச 
கைவசம் ஆகும் எதிர்காலம் 
எதிர்காலம்  . 

தேன்சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம் 
நான் தரும் பாடல் அவள் தந்தாள் 
மோகனம் என்னும் வாகனம் மீது 
தேவதை போலே அவள் வந்தாள்  . 
எனக்கொரு காதலி இருக்கின்றாள் - அவள்   
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் 
கீதம் அவளது வளையோசை 
நாதம் அவளது தமிழோசை 
தமிழோசை





இரண்டாம் பாடல் ஏற்கெனவே பகிர்ந்த ஞாபகமாகவும் இருக்கிறது.  எனினும் இந்தப் படத்தின் பாடல் பகிர்வு என்பதால், அந்தப் படத்தின் இந்த சூப்பர் ஹிட் பாடலைப் பகிராமல் இருக்க முடியவில்லை.  எஸ் பி பியின் குரல்  இந்தப் பாடல் முழுவதும் ஜாலம் காட்டும், மாயம் செய்யும்.  பிடித்த பாட்டை மறுபடி மறுபடி கேட்போம் இல்லையா, அதுபோல என்று வைத்துக்கொள்ளுங்களேன்.  அவ்வளவு பிடித்த பாடல் இது எனக்கு.



குரலை யோடெலிங் செய்வது என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்...   சரியான வார்த்தையா என்று தெரியவில்லை.  அதை எஸ் பி பி  இந்தப் பாடலில் செய்வார்.  பல்லவிவியை இரண்டாம் முறை பாடும்போது முதன்முறை அப்படிச் செய்வார்.  

கேட்டுப்பாருங்கள்.  ஹிந்தியில் கிஷோர் குமார் சில பாடல்களில் அப்படிச் செய்திருப்பார்.  உதாரணமாக 'மேரே ஜீவன் சாத்தி' திரைப்படத்தில் கிஷோர் தனித்துப் பாடும் 'சலா ஜாத்தா ஹூன்... '



ஒவ்வொரு வரியிலும் எஸ் பி பி குரலில் காட்டும் பாவம்...   குழைவு, காதல்...  அவரின் மிகச்சிறந்த பாடல்களில் இது ஒன்று என்று சொல்லலாம்.  'ஆசை நாடகம்' வரியையும்,  'தேவலோகமும்' வரியையும் பாடும்போது ட்யூனையும், எஸ் பி பி குரலையும் கேளுங்கள்   என்னை அறியாமல் நானும் பாட ஆரம்பித்து உடனே நிறுத்தி விடுவேன், எஸ் பி பி குரலை ரசிக்க!  வாழ்க எம் எஸ் வி...  வாழ்க எஸ் பி பி 

மார்கழிப் பனியில் மயங்கிய நிலவில் 
ஊர்வசி வந்தாள் எனைத்தேடி 
கார்குழல் தடவி கனியிதழ் பருகி 
காதலை வளர்ப்பேன் 
இசைபாடி 

வானத்தில் ஆயிரம் தாரகைப் பூக்கள் 
வேடிக்கை பார்க்கையிலே 
கானத்தில் நாங்கள் கலந்திருந்தோம் 
இனி வேறென்ன வாழ்க்கையிலே 
வேறென்ன வாழ்க்கையிலே 

மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் 
நீந்திவர 
மலர் இதழ் தன்னைப் பூங்கொடி ஒன்று 
ஏந்திவர 
ஆசைநாடகம் ஆடிப்பார்க்கவும் 
ஓசை கேட்குமோ பேசக்கூடுமோ 

கோமகன் என்னும் பூமகள் நெஞ்சில் 
சாய்ந்துவர 
தாமரைப்பொய்கை போலொரு வைகை 
பாய்ந்துவர 
தேவலோகமும் தெய்வகீதமும் 
ராஜயோகமும் சேர்ந்து வந்ததோ 
கார்குழல் தடவி கனியிதழ் பருகி 
காதலை வளர்ப்பேன் இசைபாடி இசைபாடி... 


56 கருத்துகள்:

  1. கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் அன்பின் வணக்கம்.. ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜு ஸார்... வாங்க...

      நீக்கு
    2. அனைவருக்கும் இனிய வெள்ளி காலை வணக்கம்.
      இரண்டுமே சிறந்த பாடல்கள்.
      இந்தப் பாடலில் விஸ்வனாதன் குரல் எனக்கு மிகப் பிடிக்கும்.
      ஏழு ஸ்வரங்களில் என்னும் போது மிக இனிமையும் கம்பீரமும்.
      மார்கழிப் பனியில் பாடலில்
      எஸ் பி பி இழைந்து பாடுவது இன்னும் அற்புதம் .
      பாடல் வரிகள் வாலியின் வண்ணப் பேனாவின்

      அருமையில் சிறந்து ஓடி வருவது இன்னும் அழகு.
      தேங்காய் பாவம். ஒரிஜினலாக நன்றாக
      இருப்பார் என்று கேள்வி.
      இங்கே பாகவதர் க்ராப் வைத்து , ஒரு வழி செய்து விட்டார்கள்.

      மிக அருமையான பாடல்களைப் பதிந்து ரசிக்க வைத்ததற்கு மிக நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் வல்லிம்மா. ஆமாம், இரண்டுமே இனிமையான, ரசிக்கத்தக்க பாடல்கள். கிஷோர் குரலுக்கு கேட்கவா வேண்டும்? நான் அவரின் பரம ரசிகன்.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் மனப்பூர்வமாக இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போனசாகக் கிஷோர் குரலையும் கேட்க முடிந்தது.
      yodeling ஆரம்பித்து வைத்ததே கிஷோர் குமார் தான் என்று
      சிங்கம் சொல்வார்.
      நூறு பாடல்கள் கிஷோர் குமார் பாடியதை எனக்கு ஒரு பிறந்த நாளைக்கு வாங்கிக் கொடுத்தார். மொத்தம் 5 ஓ ஆறோ இசைத்தட்டுகள்.
      நினைவுகளை மீட்டுக் கொடுத்ததற்கு மிக நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. வாங்க கமலா அக்கா... நல்வரவும், வணக்கமும். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல்களில் முதல் பாடல் நிறைய தடவை கேட்டு ரசித்திருக்கிறேன்.எஸ். பி. பியின் குரலும் எம்.எஸ்.வியின் குரல் வளமும் நீங்கள் சொல்வது போல் அதில் மிகப் பிரமாதமாக இருக்கும். ஆனால் அதில் இவ்வளவு தகவல்கள் இருக்கிறதென்பதை இன்றுதான் அறிகிறேன்.

    இரண்டாவது பாடலும் அதைப் போலவே ஒன்று உள்ளதா? இதில் பாடல் வரிகளை படிக்கும் போது அதையும் கேட்ட மாதிரி உள்ளது. பிறகு கேட்டு விட்டுச் சொல்கிறேன்.

    பாடல்களின் படமும் இன்றுதான் கேள்விப்படுகிறேன்.சுஜாதா நடித்த படமென்றால் நன்றாக இருக்குமே.! இன்றென்ன ஒரே படத்திலிருந்து இரண்டு பாடல்கள்.. இதுவும் நன்றாகத்தான் உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது பாடலைக் கேளுங்கள் கமலா அக்கா.. எஸ் பி பி யின் மிக நல்ல பாடல்களில் ஒன்று. அனுபவித்துக் கேட்கலாம்.

      நீக்கு
  6. தேங்காய் நடிப்பதில், சில படங்களில் சிவாஜியை மிஞ்சி விடுவார்...!

    இங்கும் கூட பாருங்கள், முதல் பாடலில் வாயசைப்பதை + ஊதுபத்தி ஊதும் வேகத்தை...!

    இரண்டாவது பாடலில்... "அப்படித்தான் அப்படித்தான்..." என்று ரசிக்கிறாராம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய் நடித்த கலியுகக் கண்ணன் படம் பார்த்திருக்கிறீர்களா DD?

      நீக்கு
    2. 'வியட்நாம் வீடு' சிவாஜி ஞாபகம் வருவார்... குரல் மட்டுமே மாற்றம் என தோன்றும்...

      நீக்கு
  7. இரண்டுமே ஸூப்பர் பாடல்கள் ஜி

    பதிலளிநீக்கு
  8. இரண்டாம் பாடல் கேட்டிருக்கிறேன். எஸ் பி பி-யின் இளங்குரல் இனிதாக இருக்கிறது.

    தேங்காயின் நடிப்புத் ’திறமை’யை சரியாகக் கவனிக்காது விட்டுவிட்டார்களோ? ’அடுத்தவீட்டுப்பெண்’ணின் ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே!’ பாட்டிற்கு தங்கவேலு பாட, ‘நடிக்க’ அந்த அசட்டு ராமச்சந்திரனுக்கு பதிலாக தேங்காயைப் போட்டிருந்தால்.. அஞ்சலிதேவி சொக்கி சரிந்திருப்பாரோ என யோசித்துப் பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அதிகப்படியான கற்பனை...

      அசட்டு ராமச்சந்திரனிடம் தான் அஞ்சலி (!) சொக்கிச் சரிந்திடுவாரே - திரைக்கதை முடிவில்...

      நீக்கு
    2. தேங்காய் இந்த வகையில் நிறையவே நடித்திருக்கிறார் ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
  9. இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்

    பதிலளிநீக்கு
  10. இன்றைய பாடல்கள் இரண்டுமே வெவ்வேறு கோணங்களில் பிடித்தமானவை....

    ஆள் நடமாட்டம் குறைவான கிராமத்துச் சாலையில் சைக்கிளில் செல்லும்போது வழித்துணையாகும் பாடல்களுள் இவை உண்டு...

    பதிலளிநீக்கு
  11. இனிய காலை வணக்கம்.

    பாடல் இப்போது தான் கேட்டேன். இதற்கு முன்னாடி கேட்ட நினைவில்லை.

    தே.சீ - ஓவர் நடிப்பு - :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. அவர் ரொம்பவே ஓவரா நடிப்பைப் பிழிந்து தருவார்!!

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    இரண்டு பாடல்களும் நல்ல பாடல் தான்.
    இரண்டாவது பாடல் இனிமை.
    இங்கு பகிர்ந்து இருக்கிறீர்கள் என்று நினைத்தவுடன் சொல்லி விட்டீர்கள்.
    மீண்டும் கேட்கலாம் தான் அருமையான பாடலை.
    தேங்காய் ஸ்ரீனிவாசன் நல்ல நடிகர் நன்றாக பயன்படுத்திக் கொண்டு இருக்கலாம். குணசித்திரம், சிரிப்பு, வில்லத்தனம் எல்லாம் நன்றாக வரும் அவருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கோமதி அக்கா... வாங்க..

      இரண்டாவது பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதால் தயங்காமல் இன்னொருதரம் பகிர்ந்து விட்டேன். தேங்காய் கொஞ்சம் ஓவராக நடிப்பார். அவ்வளவுதான்!

      நீக்கு
  13. இரண்டு பாடலும் மிகவும் பிடித்தமானவை.

    எம்எஸ்வி குரல் ஒரு ரகம். எஸ்பிபி -- ஆஹா அருமை

    தேங்காய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். நல்ல கலைஞர்களை குடிக்கு அடிமையாக்கும், அவர்கள் வாழ்வைக் குறுகச் செய்யும் திரைத்துரை வில்லன்களுக்கு எந்தத் தண்டனை கொடுத்தால் தகும்? (இதுமாதிரி நல்ல நடிகர்களுக்கு ஆசை வார்த்தை தூண்டி படமெடுக்க வைத்து அவங்களை அழிப்பவர்களும்தான்)

    பதிலளிநீக்கு
  14. 'எனக்கொரு காதலி இருக்கின்றாள்..' பாடல் எம்.எஸ்.வி. அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று நினைக்கிறேன். பல மேடை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். அவர் குரல் தேங்காய் சீனிவாசனுக்கு நன்றாகவே பொருந்துகிறது. இரண்டாவது பாடலின் வரிகளை மட்டும் படித்த பொழுது என்ன பாடல் என்று தெரியவில்லை, கேட்ட பிறகுதான் அட! இந்த பாடலை நிறைய கேட்டிருக்கிறோமே என்று நினைவுக்கு வந்தது. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் ஒரு கோச் வருவார், ஜெர்மனியா, பிரேஸிலா என்று தெரியவில்லை அந்த நாட்டு  வீரர்களின் ஆட்டத்திற்கு இவருடைய ரியாக்ஷன் பயங்கரமாக இருக்கும். தேங்காய் சீனிவாசனின் நடிப்பை பார்க்கும் பொழுது, அதுதான் நினைவுக்கு வந்தது. 

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் மதிய வணக்கம், வெளிநாடு வாசிகளில் சிலருக்குக் காலை வணக்கம், சிலருக்கு இரவு வணக்கம். அனைவரின் வாழ்வில் இருந்தும் கொரோனா தன் பிடியை விடுவிக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  16. "முத்தான முத்தல்லவோ" பாடல் தான் தெரியும். இப்படிப்படம் வந்திருப்பதும் தெரியாது. பாடல்களும் தெரியாது. ஆனால் ஒரு விஷயம், இன்னிக்கு எல்லாப் பாடல்களையும் கேட்டுவிட்டேக் கருத்தை எழுதுகிறேன். வழக்கம்போல் கிஷோர் தான் கவர்கிறார். மற்றபடி ராகங்களின் நுணுக்கங்கள் தெரியாது என்றாலும் எம்.எஸ்.வி. குரல் ஒரு மாதிரி எனில் எஸ்.பி.பி கொஞ்சம் பெண்மை கலந்த ஆண் குரல்! எஸ்பிபிக்கும் எம் எஸ்விக்கும் ஒத்துக்கலை என்னும் செய்தியை நானும் கேள்விப் பட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  17. காமாட்சி அம்மாவின் நினைவு வந்தது இடையே. வெகுநாட்களாக அவரிடமிருந்து பின்னூட்டம்/பதிவு இல்லை. சமீபத்தில் யாருடனாவது தொடர்பில் இருந்தாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி அம்மாவுக்கு இன்று ஆங்கிலத் தேதிப்படி பிறந்த நாள். முகநூல் மூலம் வாழ்த்தும் நமஸ்காரமும் தெரிவித்திருந்தேன். ஆசிகள் சொல்லி இருந்தார்கள். அதே போல் புது வருடப் பிறப்புக்கும் அனைவருக்கும் ஆசிகள், வாழ்த்துகள் முகநூல் மூலம் சொல்லி இருந்தார்கள்.

      நீக்கு
    2. பதிவுகளுக்கு வரும்படியான நிலைமையில் இல்லை எனக் கேள்வி.

      நீக்கு
    3. இன்று அவரின் பிறந்தநாளா! இறைவன் அருளால் அவர் ஆரோக்யத்துடன் நீடுழி வாழவேண்டும்.
      அப்டேட்டிற்கு நன்றி.

      கடந்த அக்டோபரில் பம்பாய் செல்வதாக (டெல்லியிலிருந்து) அவரது பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். பார்த்தேன். இன்றும் சென்று பார்த்தேன் - மேற்கொண்டு தகவல் இருக்கிறதா என. வயோதிகம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் படுத்துகிறதுபோலும்.

      நீக்கு
    4. காமாட்சி அம்மா பற்றி எபி வாட்சப் க்ரூப்பில் அப்டேட் ஆகியிருந்தது. முகநூலில் புதுவருட வாழ்த்துகள் சொல்லியிருந்ததாக. ஸ்ரீராம், கீதாக்கா சொல்லியிருந்தாங்க.

      ஓ அம்மாவுக்கு இன்று பிறந்த நாளா!

      அம்மாவின் நலத்திற்குப் பிரார்த்தனைகள். நமஸ்காரங்களும்.

      கீதா

      நீக்கு
    5. ஆம். தமிழ்ப் புத்தாண்டு அன்று காமாட்சி அம்மா பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். விசாரித்து முகமன் கூறியதும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ஏகாந்தன் ஸார், இன்று உங்களுக்கும் அவர், அவர் தளத்தில் பதில் அளித்திருந்ததைப் பார்த்தேன்.

      நீக்கு
    6. காமாட்சி அம்மாவின் சொல்லுகிறேன் தளத்தில் ரெகுலராக பின்னூட்டத்தில் அவருடைய நலனை விசாரிப்பேன். சமீபகாலமாக பதில் வராததால் அவர் இணையத்துக்கு வருவதில்லை என்று நினைத்திருந்தேன்.

      காமாட்சியம்மாவின் பிறந்தநாளுக்கு நமஸ்காரத்தைத் தெரிவித்திருக்கிறேன். உடல் நலம் சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்கணும்னு ப்ரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    7. //..உங்களுக்கும் அவர், அவர் தளத்தில் பதில் அளித்திருந்ததைப் பார்த்தேன்.

      நான் இப்போது அவர் தளத்தைப் போய்ப் பார்த்தேன். பதிலைக் காணவில்லையே!

      நீக்கு
  18. ஸ்ரீராம் ஆஹா ஆஹா எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனக்கொரு காதலி....ரொம்ப ரொம்ப பிடிக்கும்....அதுவும் எம் எஸ் வி எஸ்பிபி இருவரின் குரலில் அருமையான பாடல். எஸ்பிபி அதகளம்...என்ன வாய்ஸ் பா...வளையோசை நு சொல்ற இடத்தில் வளையல் வளைந்து ரவுண்டாக இருப்பது போலவே அவரது குரலும் வளையும்..வரி முடியும் போது செமையா இருக்கும் ..இன்னும் பசுமையாய் நினைவில்...கமகங்கள் எதிர்கா.....லம்....அது பொல முந்தையது வாவ்...

    பாட்டு கேட்க முடியலை நெட் படுத்தலால் ...காணொளிகள் பாடல்கள் எதுவும் வர மாட்டேங்குது.

    இந்தப் பாட்டு நிறைய கேட்டு மிகவும் ரசித்த பாடல்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா... கணினி இல்லாமல் வெறுப்பா இருக்கு.

      நீக்கு
  19. கடைசியில் இருவரும் சேர்ந்து பாடும் போதும் நல்லா சிங்க் ஆகும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  20. இரண்டாவது பாடல் வரிகள் பார்த்தால் தெரியவில்லை ஸ்ரீராம். கேட்க முடியவில்லையே...

    யோடெல் என்பது ஆங்கிலப் பாடல்களில் வருவது போல ஒரு விதமாகக் குரலில் பாடுவது. சிலர் அதை முயற்சிக்க மாட்டார்கள் குரல் க்ராக் ஆக நிறைய வாய்ப்புகள் குரல் மாறுவதற்கும் சான்ஸ் உண்டு என்பதால். இந்தப் பாட்டைக் கேட்டால் தெரியும். எஸ்பிபி எப்படிப் பாடினாலும் அவரது குரல் அப்படியேதான் இருக்கு இப்பக் கூட. ப்ளெஸ்ட் ஹீ இஸ்! ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டுக் கூடப் பாடுவார்.

    மீ க்கு நார்மலா பாடுவதற்கே கொஞ்சம் இரு முறை ப்ராக்டீஸ் செஞ்சா வோக்கல் கார்ட் க்ராக் ஆகிடும் அதுவும் இப்பல்லாம் ரொம்பப் பிரச்சனையா இருக்கு. இந்த யோடெலிங்க் ஒரு முறை முயற்சி செஞ்சு நல்லா வந்துச்சு ஆனால் ஹிஹிஹிஹி அதுக்கு அப்புறம் குரல் கொஞ்ச நாள் ஹா ஹா ஹா எழும்பவே இல்லை..!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... நீங்கள் அதெல்லாம் முயற்சி செய்திருக்கிறீர்களா?

      நீக்கு
  21. காமாட்சியம்மாவின் பிறந்தநாளுக்கு என் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. படித்ததும் எங்கள் அண்ணன் தேங்காயை மீண்டும் நினைத்து ஏங்க வைத்து விட்டீர்கள் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!