ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

நிழல் நாடகங்களும், நீல வானமும்!



ஏதோ ராமாயணமோ மஹாபாரதமோ நிழல் நாடகமாகப் பார்ப்பது போலில்லை?








அதோ அந்த டவர் கீழே தான் நாம் போகுமிடம்



அங்கே ராமாயணம் இங்கே கோலாட்டப் பெண்! 




நீலவான ஓடையில் நீந்துகின்ற ... ?



மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுபிடித்து லாக் டௌன் பொழுதை செலவிடலாம்




நியூஸ் ரூம் வாட்ச்மேன்! 



மீண்டும் மழை? 



குடிசைப் பானை? 



எங்கள் காட்டேஜூக்கு  எதிர்வீடு (மழைதான்!) 



Blue carpet? 


காலையில் இருட்டு விலகிய பின் எப்படி இருக்கும்?




காட்டேஜ் லிருந்து ஆபீஸ்





மற்ற காட்டேஜ்கள்



பின்புறம்




Coorg  heights  லிருந்து சப்தரிஷி மண்டலம் closeup இல் தெரியும் அவ்வளவு உயரம் இல்லை! 


==========================================

விடுமுறைதின பொழுது போக்கு : 

கணிதப்புலிகளுக்கு மட்டும். 

==========================================

90 கருத்துகள்:

  1. அறத்தாறிஃது என வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறள் 37:
      அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
      பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.


      மு.வரதராசன் விளக்கம்:
      பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.


      சாலமன் பாப்பையா விளக்கம்:
      அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

      நீக்கு
    2. இது ஒரு இன்டரெஸ்டிங் குறள். ஒருவர் சொல்ல வருவதை, காலத்தை ஒட்டி அல்லது காலத்துக்கு ஏற்றவாறு/தகுந்தவாறு புரிந்துகொள்வார்கள் என்பதற்கு உதாரணம். மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் என்பதற்கு, தாமரை மலரில் நின்றிருக்கும் விஷ்ணுவின் தாளினைப் பற்றியவர் வாழ்வால்கு வாழ்வர் என்ற பொருளும், இந்தக் குறள் கடவுளைப் பற்றியதல்ல என்று ஓரிருவரும் ஒரே காலத்தில் பொருளுரைக்கின்றனர்.

      ஆனால் இன்றைய குறளுக்கு, ஸ்டாண்டர்ட் உரையாசிரியர்கள் (மணக்குடவர், பரிமேலழகர் போன,றவர்கள், அறம் செய்வதால் பயன் என்ன என்று பல்லக்கில் அமர்ந்திருப்பவனிடமும், அந்த பல்லக்கைத் தூக்குபவனிடமும் சொல்லல் வேண்டா. அந்த நிலைமையைப் பார்த்த உடனேயே புரிந்துகொள்ளலாம் என்ற பொருளில் உரை கண்டுள்ளனர்.

      ஆனால் தற்கால திராவிடச் சிந்தனையுடைய (அட... இது புதுசா இருக்கே) உரையாசிரியர்கள் செய்த அறத்தால்தான் ஒருவன் பல்லக்கில் ஏறுவதும் இன்னொருவன் பல்லக்கு சும்ப்பதும் எனப் பொருள் கொள்ள வேண்டாம். தூக்குபவன் நல்லவனாகவும் ஏறிச் செல்பவன் அறம் பிறழ்ந்தவனாகவும் இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

      எந்த மாதிரி பொருள் கொள்வது அர்த்தமுடையது என உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

      அறத்தாறு - அறத்தின் வழி, சிவிகை - பல்லக்கு, பொறுத்தான் - சும்ப்பவன், ஊர்ந்தன் - பயணிப்பவன்

      நீக்கு
    3. இந்தக் குறள் மிகவும் பிடித்தமானது...

      தாங்கள் தான் சொல்லி விட்டீர்களே..
      அந்த அந்த காலத்துக்கும் பொருத்தம் உடையது என்று...

      அவரவர் மனோ பாவத்தில்
      இது கல்லென்றும் இது யானையென்றும்
      பொருள் கொள்ளட்டும்..

      நீக்கு
    4. ஸ்ரீ மஹாபாரதத்தின் தொடக்கத்தில் இப்படியொரு சம்பவம் சொல்லப் படுகின்றது...

      நகுஷன் என்பவன் ஆயிரம் யாகங்களைச் செய்து விட்டான்..அதனால் அவன் இந்திர பதவியில் அமர வேண்டும்...

      அவனைப் பல்லக்கில் ஏற்றி சப்த ரிஷிகளும் அழைத்து வருகின்றனர்...

      அமரர் கோமானின் அரண்மனையை நெருங்கும் வேளையில் மாடத்தில் இந்த்ராணி...

      அவளைக் கண்டதும் நகுஷனின் மனம் நச்சரவு ஆகிறது...

      விரைந்து செல்லவேண்டும்.. ஆனால்
      பல்லக்கின் பயணம் சரியில்லை...

      கவனிக்கிறான்... அகத்தியர் குறுமுனி அல்லவா.. மற்றவர்களுக்கு ஈடு கொடுத்து பல்லக்கைத் தாங்கி நடப்பதில் பிரச்னை..

      இதை உணராத நகுஷன் காலால் அகத்தியரை எற்றி - சர்ப்ப... சர்ப்ப.. என்றான்...

      வேகமாகச் செல் - என்பதாக அர்த்த்ம்...

      மா யாகம் செய்திருந்தும் மாபாவி ஆனான்

      குறுமுனி ஆனாலும் தமிழ் முனி அவராயிற்றே... காலால் எற்றலாமா?...

      தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்!... என்று சத்தம் போடுவதற்கு அகத்தியர் என்ன நாடகக் காவலரா?..

      பெரும் சினம் கொண்டார்..

      அடே.. நகுஷா.. சர்ப்ப.. சர்ப்ப என்ற நீ பாம்பாகி பாதாளத்தில் கிட!.. - என்று சாபமிட்டார்...

      அந்த அளவில் நகுஷன் பாம்பாகி பாதாளத்தில் வீழ்ந்து மனம் போல வாழ்வு பெற்றான்...

      யாகத்தின் புண்ணியம் அவனைக் காக்க வில்லை...

      காரணம் - தமிழை அவமதித்த பாவம்..
      பழைய இந்திரனின் தேவியைக் கண்டு மனதில் கொண்ட மோகம்...

      இப்போது சொல்லிப் பாருங்களேன்..

      அறத்தாறு இஃதென வேண்டா!...

      ஆனாலும் சொல்வார்கள்
      திருக்குறள் ஹிந்து சமய நூல் அல்ல என்று!..

      இதுபற்றி இன்னும் சொல்லலாம்...
      கைப்பேசியில் அச்சிடுதல் சற்றே சிரமமாக இருக்கிறது..

      சற்று பொறுத்து வருகிறேன்...

      வாழ்க குறள் நலம்...

      நீக்கு
    5. சரியாகச் சொன்னீர்கள். Beauty is in the eye of the beholder; Meaning is in the mind of the reader.

      நீக்கு
    6. காலைக் குறளில் மனது லயிக்கிறது. ஞாயிறில் ’படம்’ பார்க்க மனமில்லை! வாராது தப்பிக்க நினைத்தேன். கொஞ்சம் பார்த்துவிட்டுப்போவோம் என தலையை நுழைக்கையில் குறள் இழுத்துப்போட்டுவிட்டது!

      பல்லக்கில் இருப்பவன், பல்லக்கின் கீழிருப்பவன் - அறிதலில் இருக்கிறது வாழ்க்கையின் நுட்பம், ரகசியம். யாரும் எந்த இடத்திற்கும் தானாக வந்துவிடுவதில்லை. ஏதோ ஒரு உழைப்பு, சாதனா எங்கோ எப்போதோ நிகழ்ந்திருக்கிறது. இதைச் சொல்லும் நசமயத்தில் கீழே இருப்பவனின் கதை அதோகதிதான்; முடிந்துவிட்டது என்றும் அர்த்தமில்லை. அவனது அடுத்த அத்தியாயங்கள் இன்னும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பிரசுரத்துக்கு வர காலமாகும்.

      மேலிருப்பவனின் தகுதி பார்ப்பவனுக்குப் புரியாமல் இருக்கவே வாய்ப்பு அதிகம். ஏனெனில் ’பார்ப்பவன்’ மேலும் இல்லை. கீழும் இல்லை. இரண்டு நிலைகளோடும் அவன் தற்போது தொடர்பில் இல்லை. ஓரத்தில் நிற்கிறான்; பார்க்கிறான் என்பதைத் தவிர. அவன் கண்ட காட்சி, தொடர்பான புரிதல், அவனது தகுதிக்கேற்றபடி - அவனின் ஞானநிலைக்கேற்றவாறு - விரியும். தெரியும். ஒருவனின் அறியும் தன்மையே அவனின் யோக்யதை. அதுவே சொல்லிவிடும் அவன் மேலிருக்கவேண்டியவனா, கீழிருக்கவேண்டியவனா, ஓரமாக நின்று பார்த்து நடையைக் கட்டவேண்டியவனா என்று.

      நீக்கு
    7. ஆகா...
      தரமான விரிவுரை...
      மனோதர்மம் விளையாடுகின்றது...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    8. பிரமாதமான விளக்கம் ஏகாந்தன் சார். 

      நீக்கு
    9. ஏகாந்தனுக்கும் துரைக்கும் நன்றி. அருமையான விளக்கங்கள்.

      நீக்கு
    10. நல்ல விளக்கங்கள். எல்லோருக்கும் நன்றி.

      நீக்கு
  2. நிழல் நாடகங்களும் நீல வானமும்...
    புகழ் வேடங்களும் ஈர மேகங்களும்...

    இது எப்பூடி இருக்கு!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா இருக்கு. இப்போ இந்த நிமிடம் சென்னையில் செல மழை, இடி மின்னலுடன்.

      நீக்கு
    2. கடந்த வெள்ளியன்று காலை 6.30க்கு இங்கும் இதே போன்ற மழை. மழை நம் மனதுக்கு மகிழ்ச்சி. ஆனால் இப்போதுள்ள எதிரிக்கு குளிர்ச்சியும் கூடாதாமே ...!

      நீக்கு
    3. இது தான் காலத்தின் கூத்து....

      பார்க்கலாம்....
      கடும் மழையில் ஜலதோஷம் பிடித்து ஜூரம் வந்து ஒருவழியாய் கொரானா போய்ச் சேராதா.. என்று...

      வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு தானே!...

      நீக்கு
    4. நடப்பவை யாவும் நலமாக, நன்மையாக நடக்கட்டும்.

      நீக்கு
    5. கொரோனாவிற்கே ஜலதோஷம் ஜுரம் எல்லாம் வந்து அது படுத்தும் படுத்தல் தாங்காது,அது ஒரு வழியாக உலகை விட்டு ஓடி, நம் தோஷங்கள் பரிபூரணமாக நீங்கிட வேண்டும் என்ற உங்களுடைய நல்லெண்ணத்திற்கு என் நன்றிகள் துரை சகோதரரே.

      நீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம்....
    நேற்றொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேனே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். பதிலளிக்கிறேன் ஸார். கணினி இல்லாதது கையொடிந்த மாதிரி இருக்கிறது. கடந்த இரண்டு மணி நேரமாக கரண்ட்டும் இல்லை.

      நீக்கு
    2. ஓ... சிரமம் தான்...
      ஆற அமர பாருங்கள்.. ஒன்றும் பிரச்னை இல்லை...

      தங்களை அது அஐந்து விட்டதா.. என்பதில் தான் ஆவல்...

      சீக்கிரம் பிரச்னைகள் தீரட்டும்...

      இழுப்பு நோய் வந்ததாக இணையம்
      அதுவாகவே பதிவுக்குள் பதிவாக ஆறேழு பதிவுகளை C & P செய்து போட்டுக் கொண்டது...

      பெரும் சிரமத்துடன் ஒழுங்கு செய்திருக்கிறேன்...

      சீக்கிரமே நலம் சேரட்டும்...

      நீக்கு
    3. இங்கேயும் பதினொன்றரை மணியில் இருந்து மின்சாரம் இல்லை. ஏதோ பெரிசா மழை பெய்யப் போகிற மாதிரி மேகங்கள் பாவ்லா காட்டிவிட்டுப் போய்விட்டன. காற்று மட்டும் பிரமாதமாகக் கொஞ்ச நேரம் கூவிப் பார்த்தது. சூரியன் இடையில் தலைகாட்ட அவன் என்ன சொன்னானோ வாயு பகவான் பின்னர் அடங்க அடங்காப்பிடாரியான சில மேகங்கள் மூட்டம் போட்டுக்கொண்டு மழையை வரவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அப்போது போன மின்சாரம் இப்போத் தான் வந்திருக்கு.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் ஸூப்பர் ஜி
    தேவகோட்டையில் தொடர் மழை.

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம். சென்னையில்
    மழையின் நாட்டியத்தைப் பார்த்தேன். மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது.
    பால் சப்ளை செய்யும் ராணி,வீட்டோடு ஒதுங்கி நின்றாள்.

    பாலம் சில்க்ஸ் நடை மேடையில் படுத்திருந்தவர்கள்
    பாவம் ஓடிவிட்டார்கள்.

    சென்னையின் தாகம் தணியட்டும்.
    கூர்கின் காட்சிகள் அருமை.
    மழை முடிந்தவுடன் வெளியே போக முடியுமோ.

    பதிலளிநீக்கு
  7. இங்கே பலத்த இடியோசை கேட்டுக் கொண்டிருக்கிறது. மழை வந்த பாடில்லை.

    படங்கள் அழகு. பயணித்தபடியே எடுத்த படங்கள் - மரங்கள் காண்பித்த உருவங்கள் - சிறப்பு.

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் அனைவருக்கும்.

    இன்றைய படங்கள் குறித்துச் சொல்ல எதுவுமில்லை.

    கேஜிஜி சார், பத்தாம் வகுப்பு கணக்குத் தேர்வு நடத்த ஆரம்பித்துவிட்டார் போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி ஹி இதெல்லாம் எட்டாம்வகுப்பு படித்தவர்களாலும் சுலபமாக பதில் சொல்ல இயலுமே!

      நீக்கு
    2. எட்டாம் வகுப்பில் படித்ததை எல்லாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா?

      நீக்கு
    3. ஆ இது நல்லா இருக்கே! சம்பளம் வாங்கும்போது பணத்தை எண்ணி வாங்குவீர்களா இல்லை அதுவும் எப்போதோ படித்தது என்று எண்ணாமல் விட்டுவிடுவீர்களா? !!!

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். கொரோனாவிலிருந்து தப்பிக்க அரசு போடும் திட்டங்களையும் வழிமுறைகளையும் போட்டி போட்டுக்கொண்டு வீணடிக்கும் மக்களை அந்த ஆண்டவன் காப்பாற்றப் பிரார்த்தனைகள். நேற்று மட்டும் ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என அச்சமாக உள்ளது. :( நேற்றுடன் நாள் மட்டுமின்றிப் பொருட்களும் முடிவதைப் போல் மக்கள் கூடிப் பொருட்களை வாங்கினார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... வணக்கம், நன்றி.

      நீக்கு
    2. நாலு நாட்கள் முழு ஊரடங்கு என்று அறிவித்தவுடன் வந்த விபரீதம்.

      நீக்கு
  10. முதல் படம் நான் எடுத்தாப்போல் ஆட்டமா ஆடி இருக்கே! மற்றப்படங்களும் நன்றாக வந்துள்ளன. காட்டேஜ் நன்றாக இருக்கிறது. கடைசிப் படம் பார்க்கும்போது திருக்கயிலையில் மானசரோவரிலும் கயிலை பரிக்ரமாவின் முதல் நாள் இரவிலும் வானத்தைப் பார்த்துத் திகைத்த/ நம்மைச் சிறியவராக உணரச் செய்த அந்த அற்புத நிமிடங்கள் நினைவில் வருகின்றன. கையால் தொட்டுவிடும் தூரத்தில் வானம். எடுத்துப் பறித்துக் கோர்க்கலாம் போல் நக்ஷத்திரங்கள்.

    பதிலளிநீக்கு
  11. என்னமோ இப்போல்லாம் நேரம் ஓட்டமாய் ஓடுகிறது. பின்னர் வரேன் சாவகாசமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // என்னமோ இப்போல்லாம் நேரம் ஓட்டமாய் ஓடுகிறது //

      ஆ... அப்படியா? எப்படி?!

      நீக்கு
    2. அவங்க கடிகாரம் மட்டும் அவ்வளவு ஸ்பீடா, சூடு போட்ட ஆட்டோ மீட்டர் கணக்கா ஓடுது போலிருக்கு!

      நீக்கு
    3. கொரோனா வந்தாலும் வந்தது. என்னமோ அலுவலகம் விடுமுறை போல நினைப்பு. எழுந்திருக்கத் தாமதம் ஆகி விடுகிறது. ஐந்தரைக்குத் தான் எழுந்திருக்கிறோம். அதனாலோ என்னமோ நேரம் காலை வேளையில் ஓடிவிடுகிறது. அதோடு தொலைபேசி அழைப்புகள்.

      நீக்கு
    4. கீதாக்கா ஹைஃபைவ்...மீக்குமே....என்னவோ நேரமே இருப்பதில்லை போலவும் இருக்கு. ஹா ஹா ஹா ஹா...இன்னிக்கு அதிசயமா காலைல கணினி கிடைத்தது!!!!!!!! நெட்டும் வருது இதுவரை. நேற்று நெட்டு படுத்தல்..

      கீதா

      நீக்கு
    5. அம்பேரிக்காவில் இருந்தப்போ இருந்த வேகமும் இப்போது பதிவுகள் படிப்பதிலும் எழுதுவதிலும் இல்லையோனு நினைக்கிறேன். :)))) என்னமோ இந்தக் கொரோனா வந்து நம்மை எல்லாவற்றையும் மெதுவாகச் செய்யும்படி ஆக்கிவிட்டதோ?

      நீக்கு
    6. பழி போட இன்னும் ஒன்று கிடைத்துவிட்டதே!

      நீக்கு
  12. படங்கள் சில நன்றாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. படங்கள்...ம்ம்ம்ம்ம்ம் என்ன சொல்ல?

    நிறைய ஷேக் ஆகியிருக்கு என்று தெரிகிறது ஓடும் வண்டியிலிருந்து எடுத்ததால் என்று நினைக்கிறேன்.

    நன்றாக தெளிவாக இருக்கும் படங்களை மட்டும் போடலாமோ என்று தோன்றுகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஆ கணிதப்புலிகள்னு சொல்லிட்டீங்களே கௌ அண்ணா.. மீ கணிதப்புலிக்குட்டி ஸோ 16 அடி பாய்ந்து ஓடுகிறேன்..!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. துல்லியமான படம் 1! : ஆத்தாடி எத்தனை நியூஸ் பேப்பர்ஸ்...!

    பதிலளிநீக்கு
  16. கோலாட்ட பெண் நன்று.
    நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா இல்லை, மின்சார விளக்கு நிலாபோல் மயக்கம் தருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. ஆம், அதே. ஒருவேளை அது மாலைச் சூரியனோ?

      நீக்கு
    2. இல்லையே, அது நிலா தான் கோமதி, நீங்க சொன்னதும் மறுபடி போய்ப் படத்தைப் பெரிசாக்கிப் பார்த்தேன்.

      நீக்கு
    3. மின்சார விளக்குதான். ஒளி விளக்குக் கம்பத்தின் மீதும் படுவது தெரிகின்றதே!

      நீக்கு
  17. நான் பாரதி வம்சம். ஆகவே கணக்கு மணக்கு எனக்கு ஆமணக்கு! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க இதைத்தான் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

      நீக்கு
    2. கணக்குப் போடப் பையனைத் தகப்பனார் கூப்பிட்டால், பாரதியார் மனத்துக்குள்ளேயே, கணக்கு, பிணக்கு, வணக்கு, மணக்கு, ஆமணக்கு என்று தொடர் அடுக்கிக் கொண்டே போவார்.
      ஆனால் பாரதியார் கவிதைகள் புனைவதில் கெட்டி.
      நாம் எல்லோரும் பாதி பாரதிதான். கணக்கை மட்டும் பழித்து ...... !!

      நீக்கு
    3. ஏற்கெனவே சொல்லி இருக்கேனோ? :)))))

      நீக்கு
    4. உண்மையாகவே எனக்கு அல்ஜிப்ரா தெரியாது. நான் செக்ரடேரியல் கோர்ஸ் எடுத்ததால் புக் கீப்பிங், தட்டச்சு, வணிக விவசாயம், பொருளாதாரம், பணப்பயிர்கள் பயிரிடும் பூமிகள் அவற்றின் மண்வளம் போன்றவை குறித்துப் படித்ததால் தமிழில் இரண்டாம் தாளும் (அதில் தமிழ் இலக்கணமும் இருக்குமே, அதுவும் தெரியாது) கணக்கில் பொதுக் கணக்குப் போடும் முறை, விஞ்ஞானத்திலும் பொதுவானவை என்றே படிச்சேன்.

      நீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    படங்கள் நன்றாக உள்ளன. ராமாயணத்தில் ராமரின் போர்த்திறனைக் குறிப்பிடும் படமாய் முதல் படம். கோலாட்டமும் சிறந்த கற்பனை. நீலவானம், நீந்துகின்ற வெண்ணிலா, நீல மிதியடி, நீல ஸ்கிரீன், மழை பெய்த தரையில் தெரியும் நீல வானம் என அனைத்தும் முதல் கற்பனை படமான ராமரின் நீல நிறத்திற்கு பொருத்தமாய்... ரசித்தேன். காட்டேஜ்கள் அழகாக உள்ளது. இந்த வாரம் சற்றே வித்தியாசமான படங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. அன்பின் துரை செல்வராஜு ,
    சொல்வது போல ரிஷி ஜட பரதரின் கதையிலும்
    நடக்கும்.
    பல்லக்கில் இருக்கும் அரசன் பின் மன்னிப்புக்
    கேட்பான்.
    குஞ்சரம் ஊர்ந்தோர், நடை மெலிந்து ஓர் ஊர்
    நண்ணினும் நல்குவர் என்பதுதான் வழமை.

    பதிலளிநீக்கு
  21. படங்களும் காட்சிகளும்
    பலதைப் படிக்க வைக்கிறதே!

    பதிலளிநீக்கு
  22. படங்களும் வாசகங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  23. முதல் படம் நீங்க சொன்னது தான்!.. போர்க்களத்தில் வீரன் ஒருவன் குதிரை மீது ஆரோகணித்த தோற்றம்!..
    இரண்டாவது படம் கோலாட்டம்.. ஐ! நல்ல வர்ணனை!
    லேசான இருட்டு கவிந்த நீலம் என்றாலே, மனசை கொள்ளை கொள்கிற அழகு தான் போங்கள்!..

    பதிலளிநீக்கு
  24. நியூஸ் ரூம் வாட்ச்மேன் புதுமையாக இருக்கிறது... நலம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!