வெள்ளி, 10 ஏப்ரல், 2020

வெள்ளி வீடியோ : கன்னக்குழி நடுவே சிக்கிக் கொண்டேன் அழகே நெற்றி முடி வழியே தப்பி வந்தேன் வெளியே

2002 இல் வெளிவந்த ரன் திரைப்படம் பாக்ஸ் ஆபீசை முட்டி உடைத்த படம்!  மாதவன் முதன்முதலில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடித்த படம்.

ஒரு சாக்லேட் பாய் ஆக்க்ஷன் ஹீரோ அவதாரமெடுத்த கதை!அப்போது வந்த லிங்குசாமியின் படங்களெல்லாம் மக்களால் ரசிக்கப்பட்டு வெற்றிப்படமான காலகட்டம்.  இதுவும் அப்படியே 

கதாநாயகியாக முதலில் வித்யா பாலனையும், பின்னர் ரீமா சென்னையும் ஒப்பந்தம் செய்து (ரீமாவுக்கு தமிழ் வரவில்லையாம்) பின்னர் மீரா ஜாஸ்மின்னை ஒப்பந்தம் செய்த்தனராம்.  பரவாயில்லை, நல்ல தெரிவு என்பதுபோல ரசிக்கும்படி செய்திருப்பார்.  தமிழில் அவர் முதல்படம்.  அனுஹாசனும், ரகுவரனும் படத்தில் உண்டு.  அந்த வருடத்தில் வெளியான ரஜினியின் பாபா தோல்விப் படமாக, அதே போல விக்ரமின் கிங் இறைபபடத்துடனும் மோதி பெரிய வெற்றி பெற்ற படமாம்.

வித்யாசாகர் இசையில் இனிமையான பாடல்கள்.  இந்தப் பாடலை எழுதியிருப்பவர் தாமரை.ஹரிஹரன் குரலில் ஒரு மெலடி.  பொய் சொல்லக் கூடாது காதலி 

பொய் சொல்ல கூடாது காதலி பொய் 
சொன்னாலும் நீயே என் காதலி  
பொய் சொல்ல கூடாது காதலி 
பொய் சொன்னாலும் நீயே என் காதலி  
கண்களால் கண்களில் காயமாகினாய் 
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்  
பொய் ஒன்றை ஒப்பித்தாய் 
ஐய்யயோ தப்பித்தாய் 
கண் மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்  

அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன் 
ரகசியமாக உயிரை தோண்டி 
பதியம் போட்டுக் கொண்டேன் 
கண்டவுடன் என்னையே 
தின்றதடி விழியே 
என்னை விட்டு தனியே 
சென்றதடி நிழலே 
அடி சுட்டும் விழிச் சுடரே 
நட்சத்திர பயிரே ரெக்கை கட்டி வா நிலவே 

பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐய்யயோ தப்பித்தாய் 
கண் மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்  
பொய் சொல்ல கூடாது காதலி 
பொய் சொன்னாலும் நீயே என் காதலி 

ஒரு மழை என்பது ஒரு துளி தானா கண்ணே நீ 
ஒற்றைத் துளியா கோடி கடலா 
உண்மை சொல்லடி பெண்ணே 
கன்னக்குழி நடுவே 
சிக்கிக் கொண்டேன் அழகே 
நெற்றி முடி வழியே 
தப்பி வந்தேன் வெளியே 
அடி கட்டி வைத்த புயலே 
தத்தளிக்கும் திமிரே 
வெட்கம் விட்டு வா வெளியே 
நில் என்று கண்டித்தாய் உள் சென்று தண்டித்தாய் 
சொல் என்று கெஞ்சத்தான் சொல்லாமல் வஞ்சித்தாய்75 கருத்துகள்:

 1. தேறான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
  தீரா இடும்பை தரும்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 2. இந்தப் படத்தின் பாடலுக்குப் பதிலாக
  அந்தப் படத்தின் பாடலை ஒளிபரப்பி இருக்கலாம்...

  பதிலளிநீக்கு
 3. இந்தப் பாடலைக் கேட்டதாக நினைவு இல்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேளுங்கள்

   நன்றாய் இருக்கும்.

   நீக்கு
  2. >>> கேளுங்கள்.. நன்றாய் இருக்கும்...<<<

   பொழுது விடியட்டும்...

   நீக்கு
 4. இசையமைப்பாளர் திணறுவது அழகாக தெரிகிறது. இதுதான் இளையராஜாவுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.... ஹா... ஹா...்். ஆனாலும் இவர் திறமையான இசையமைப்பாளரே...!

   நன்றி ஜி.

   நீக்கு
 5. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நாளாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி!

   நீக்கு
 6. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், தேவகோட்டைஜி, துரை. இன்னாள் இனிய நாளாகட்டும்.

  வெகு இனிய பாடல். ரன் படப் பாடல்கள் எல்லாமே
  நன்றாக இருக்கும். உதித் நாராயணன் ஏதோ ஒரு பாடலில் தமிழைக் கடித்திருப்பார்.

  காதல் பிசாசு என்று நினைக்கிறேன்.:)

  தேரடி வீதியில் தேவதை வந்தால் பாட்டு அமர்க்களமாக இருக்கும்.
  இந்தப் பாட்டின் வரிகள் வெகு அழகு.

  பொய்யிலே பிறந்து ,பாடல் நினைவுக்கு வருகிறது.
  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா... வணக்கம். ஆமாம் உதித் காதல் பிசாசை கடித்துத் துப்புவார்! படம் சுவாரஸ்யமாய் பொழுது போகும்.

   நீக்கு
 7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், விரைவில் கொரோனா பிரச்னை முற்றிலும் தீரப் பிரார்த்தனைகள். ரொம்பக் கவலையாக இருக்கிறது. :(

  படம் பார்த்த நினைவு. ஆனால் மீரா ஜாஸ்மின் ஜோடி என இன்று தான் தெரியும். ஜெயம் படத்தில் நடித்திருந்த நடிகை. "சதா"வோ என்னமோ அவர்னு நினைச்சிருந்தேன். இஃகி, இஃகி, இல்லாட்டி மட்டும் கண்டுபிடிக்கத் தெரிஞ்சுடுமா என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா... பிரார்த்னைகளுக்கு நன்றி. வணக்கம், நல்வரவு.

   சதாவுக்கு மீஜா தேவலாம்!

   நீக்கு
 8. நேற்று என்ன படம் பார்த்தேன் அதன் கதை என்ன என்பது இன்று கேட்டால் எனக்கு நினைவிற்கு வருவதில்லை... நீங்கள் எல்லாம் எப்படித்தான் ஞாபகம் வைத்திருக்கிறீர்களோ?

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இரண்டு நாட்களாக மனதில் ஏன் இந்த ஶ்ரீராம் ஒரே பழைய பாடல்களாகவே போடுகிறார்? புதிய பாடல்களும் போட்டால் என்ன? என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ரொம்ப புதிது என்று சொல்ல முடியாவிட்டாலும் அரதப் பழசு இல்லை. இன்னும் கொஞ்சம் முன்னால் வந்து, காற்று வெளியிடை படத்திலிருந்து "அழகியே மேரி மீ,மேரி மீ அழகியே" பாடலையும் போடுங்கள். இப்படிக்கு பிஞ்சு அதிராவின் இளம் அக்கா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை பானுக்கா நீங்களும் சொல்லிருக்கீங்களா..பாடல்கள் போடுவது பற்றி...ஹைஃபைவ்!!!

   பிஞ்சு அதிராவின் ஈலம் அக்கா இளம்// ஹா ஹா ஹா ஹா

   நான் பிஞ்சின் பிஞ்சு தங்கையாக்கும்!!!! ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  2. வாங்க பானு அக்கா, கீதா ரெங்கன்... ச்ச்சும்மா ஒரு மாறுதலுக்கு புதுசா ஒரு பாட்டு!

   நீக்கு
  3. நீங்கள் சொல்லி இருக்கும் பாடல்கள் நான் கேட்டதே இல்லை!

   நீக்கு
  4. //நான் பிஞ்சின் பிஞ்சு தங்கையாக்கும்!!!! ஹிஹிஹி//கர்ர்ர்... இதெல்லாம் டூ...ஊ...ஊ.....ஊ.. மச். அதிரா கவனியுங்க

   நீக்கு
  5. இது எப்போ வந்தது? எனக்குத் தெரிஞ்சு மாதவன் இப்போப் படங்களில் நடித்திருப்பதாய்த் தெரியலை.

   நீக்கு
  6. //இப்படிக்கு பிஞ்சு அதிராவின் இளம் அக்கா//

   ஹா ஹா ஹா:))..

   //நான் பிஞ்சின் பிஞ்சு தங்கையாக்கும்!!!! ஹிஹிஹி

   கீதா//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா

   நீக்கு
 10. ஹரிஹரனுக்கு ஒரு பட்டு குரல். தாமைரையின் வரிகளில் வழுக்கிச் செல்லும் இந்தப் பாடல் மிக இனிமை.

  பதிலளிநீக்கு
 11. ஹை ஹை ஹை!!! ஸ்ரீராம் கறுப்பு வெள்ளையிலிருந்து ஈஸ்ட்மென் கலர் வந்து இப்போ நல்ல கலருக்கு வந்துவிட்டரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!!! ஹே ஹே ஹே!!! சமீபத்திய மற்றும் கொஞ்சம் முன்னே உள்ள நிறைய நல்ல பாடல்கள் இருக்கே...அதையும் போடலாம் ஸ்ரீராம்...

  ரன் படம் முழுவதும் பார்த்ததில்லை..எனக்கு அதில் தெரிந்த ஒரே பாடல் முதல் பாடல் ஏன்னா படம் ஆரம்பித்து கொஞ்ச்ம் தான் பார்த்தேன் மாமியார் வீட்டில் பார்த்ததால் அங்கு கிச்சனில் வேலை செய்து கொண்டே... மாதவன் அறிமுகமாகும் பாடல் தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோன்னு வருமே அது மட்டும் தான் ஹிஹிஹி...

  இது என்ன பாடல்னு கேட்டுவிட்டு வருகிறேன்...

  படம் நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்லிக் கேட்ட நினைவு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... படம் பார்க்கலாம் கீதா... டென்ஷனில்லாமல. ஜாலியாவே இருக்கும்!

   நீக்கு
 12. இந்தப் படத்தில் 7 பாடல்களுமே ஆகா... இன்று 'உலகம் சுற்றும் வாலிபன்' பதிவில் சொன்ன ஸ்வராஜ் த்வீப் ரிசார்ட்டில் தங்கி, சற்று முன் பாடி விட்டு வந்தேன்...


  பனிக் காற்றே...
  அழகிய திமிருடன்...
  தேரடி வீதில்...
  பொய் சொல்லக்கூடாது...
  காதல் பிசாசே...
  யே இச்சு தா... இச்சு தா...
  மின்சாரம் என் மீது பாய்கின்றதே...!

  'பாடல் வரிகளை தான் சொன்னேன்' என்று பொய் சொன்னால், ஐயன் வந்து குமட்டுலே குத்துவார்...!

  வரும் வாரங்களில் லிங்குசாமியின் 'பையா' படப் பாடல் போடும் போது, அங்கும் வந்து உண்மையை சொல்கிறேன்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ’உலகம் சுற்றும் வாலிபன்’ - ஹாஹா... இந்தியா சுற்றும் வாலிபன் - ந்னு சொன்னா ஒத்துக்கலாம் தனபாலன்! விரைவில் அந்த ரிசார்ட்டில் தங்கும் வாய்ப்பு உங்களுக்கும் கிடைக்கட்டும்!

   நீக்கு
  2. ஆமாம் DD... இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே நன்றாய் இருக்கும். அதிலும் அந்த 'மின்சாரம் என் மீது பாய்கின்றது..'

   நீக்கு
 13. பொய் சொல்லக்கூடாது என்று ஒரு மலையாளப் பெண்குட்டியிடம் தமிழில் சொல்வதற்கு ஸ்விட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் பின்னணியும், ஆள் அரவமற்ற வீதிகளும் தேவையா! வீண் செலவு.
  அது சரி, வெள்ளைக்காரக்குட்டிகள் இடுப்பை சுழற்ற ஆரம்பித்தவுடன் இடத்தைவிட்டு நழுவிவிட்டாரே மீரா கவனித்தீர்களா !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இப்படித்தான் கசா'நாயகன் கிராமத்தானாக இருப்பான்.

   டூயட் வந்தவுடன் ஜெர்மனி செல்வதுதான் முதல் காட்சி.

   நீக்கு
  2. ஹா...ஹா...ஹா.. ஏகாந்தன் ஸார்... இதில் மீஜா ஒரு ஸ்பெஷல் நடை வேற நடப்பார்!!!

   நீக்கு
  3. /ஸ்விட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் பின்னணியும், ஆள் அரவமற்ற வீதிகளும் // - ஏகாந்தன் சாருக்கு, காரணம்லாம் தெரிந்திருந்தாலும், தெரியாத மாதிரியே சொல்லுவார். இந்தக் காரணங்களை இங்கே எழுத முடியாது.

   மீரா ஜாஸ்மினும் கேட்டுப்பார்த்தார், ஏன் என்னை மாதிரி திறமையான நடிகைகளை உபயோகிக்காமல், சின்னப் பெண்களை கதாநாயகியாகப் போடுகிறீர்கள் என்று (இப்போ இல்லை. அவர், கதாநாயகியாகப் போடுமளவு இருந்தபோது). அப்புறம் மீராவே தன் வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டார்.

   நீக்கு
  4. @நெல்லைத்தமிழன்: மீரா ஜாஸ்மினின் நடிப்பை நான் பார்த்ததில்லை. மலையாளத்திலும் அவள் நிறைய வந்ததில்லை. சேட்டன்களின் பாலிடிக்ஸ் நெடி வேறுவிதமானது! இன்றைய தமிழ் சினிமா திறமையான நடிகைகளிடம் நெருங்குவதில்லை, அதுவும் தமிழ்ப்பெண்ணாக இருந்தால் கூடவே கூடாது! திறமையின்மையே ஒரு க்வாலிஃபிகேஷன் இங்கே! சராசரிக்குக் கீழுள்ளவர்களை வைத்தே பணம் பண்ண முடியும் எனத் தெரிந்துகொண்டுவிட்டார்கள்.

   @ஸ்ரீராம்: போன ஜென்மத்தில் நீங்கள் கிரேக்க நாட்டில் பிறந்திருக்கலாம். அதற்காக ?? - இப்படி அடிக்கடி கேட்கக்கூடாது!

   நீக்கு
 14. ஸ்ரீராம் இந்தப் பாட்டு கேட்டிருக்கிறேன் வரிகள் பார்த்ததுமெ இந்தப் பாடலாத்தான் இருக்கும் என்று நினைத்து கேட்டதும் தெரிந்துவிட்டது ஆனால் இது ரன் படத்தில் வந்த பாடல் என்பது மட்டும் தெரியவில்லை.

  அழகான பாடல் மிகவும் பிடித்த பாடல். துவஜாவந்தி ராகம் பேஸஸ். காபி கலந்தது போல் தெரிந்தாலும். த்வஜாவந்தியில் இப்படியும் சினிமா பாடல் போட முடியும் என்பது வித்யாசாகரின் திறமை. வித்யாசகர் நிறைய நல்ல பாடல்கள் போட்டிருக்கிறார். பெரும்பாலும் மெலடி ட்யூன் தான். கொஞ்சம் ஃபாஸ்ட் பீட் போட்டாலும் நல்ல்லாருக்கும்..

  மலரே மௌனமா பாடலும் சரி ஏய் ஷெப்பா பாடலும் சரி...செமையா இருக்கும்

  மலையாளத்திலும் நிறைய பாடல்கள் போட்டிருக்கிறார்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... 'அகிலாண்டேஸ்வரி..'. ராகமா? மலரே மௌனமா நான் கானடா என்று நினைத்திருந்தேன்!

   நீக்கு
 15. படம் பார்த்த நினைவு வருது. பாடல் இனிமை.

  தேரடி வீதியில் பாட்டு அடிக்கடி வானொலியில் கேட்டு இருக்கிறேன்.
  தொலைக்காட்சியில் பழைய பாடல்கள் மட்டுமே கேட்பதால் இந்த பாடல் கேட்டு நாள் ஆச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அக்கா.. இப்ப கிடைக்கற ஓய்வுல புதுப்பாட்டு, பழைய பாட்டு எல்லாம் கலந்துகட்டி கேட்கலாம்!

   நீக்கு
 16. கர்ணா படத்தின் ஏய் ஷெப்பா வின் ஒரிஜினல் இதோ இங்கருக்கு பாருங்க

  https://www.youtube.com/watch?v=bHd4UwJCLK0

  ஒரிஜினல் கேட்டப்பவே அட!! ஒரிஜினல் ஏதோ ஒரு படமோ ஆல்பமோ தெரியலை....எவ்வளவு அழகா ஹேமவதி/தர்மவதில போட்டுருக்காங்கன்னு தோன்றியது...இந்த ஒரிஜினல் லிங்க் எங்கேயோ எடுத்து வைத்திருந்த நினைவு அதான் தேடி எடுத்து இப்ப போட்டேன்.

  எப்படி அப்படியே உருவி எடுத்து கர்ணாவில் போட்டிருக்கார்னு. ஆரம்பம் இசை அந்த ராகத்தின் நம்மூர் ஸ்டைல்ல ராகத்துல போட்டுட்டு அப்படியே ஒரிஜினல் உருவல்....அதே போல அந்தக் காட்சி உட்பட...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹேமாவதி என்கிற மியூசிக் டைரக்டர், தர்மாவதி ராகத்துல பாட்டைப் போட்டிருக்காங்களா?

   நீக்கு
  2. இந்த ஒரிஜினல் முன்னாடியே பார்த்திருக்கேன் கீதா...

   நீக்கு
 17. இது என்ன அநியாயமா இருக்கு... புத்தம் புது படத்துலேர்ந்து (கீசா மேடம் பாணில இது புதுப்படம்) ஒரு நல்ல பாடலைப் போட்டிருக்கீங்க.

  நான் ரசித்துக் கேட்ட பாடல். படம் மிக அருமையா இருக்கும். ரகுவரன், அனுஹாசன் பாத்திரமும் ரொம்பவே ரசிக்கும்படி இருக்கும். அதைவிட வில்லன் கேரக்டர் மனதில் நிற்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நெல்லை... மொத்தத்தில் படமே ரசனையான படம். இந்த வில்லன் நடிகரை நான் முதலில் ரங் தே பஸந்தி படத்தில் பார்த்தேன். ஒருவேளை ரத்தி அக்னிஹோத்ரிக்கு உறவாய் இருப்பாரோன்னு கூட சந்தேகப்பட்டேன்,!

   நீக்கு
 18. நல்ல பாடல் இது. மீண்டும் கேட்டு ரசித்தேன்.

  எங்கள் திருமணத்திற்குப் பிறகு நாங்கள் பார்த்த முதல் படம். :) இப்படத்தின் சில காட்சிகள் படப்பிடிப்பு கூட திருவரங்கத்தில் தான் நடந்தது! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே வெங்கட்... உங்கள் நினைவுகளை கிளறி விட்டதா இந்தப் பாட்டு? ஸூப்பர்.

   நீக்கு
 19. உண்மையா சொல்லனும்னா இந்த படத்தில் அவருக்கு முரட்டு கேரக்டர் செட் ஆகலை. பாடல்கள் நல்லா இருக்கும் ஆனால் உச்சரிப்பு ???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாதவனை சாக்லேட் பாயாகவே பார்த்துப் பழகி விட்டோம்!

   நீக்கு
  2. மய்யத்தோடு மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ இங்கே எபி-யில் யாரும் பார்த்ததில்லையா ? மாதவன் திறன்மிகு கலைஞன். வடக்கோ, தெற்கோ அவரை சரியாகக் கையாளவில்லை.
   திடீரென, மாடலும் ஹிந்தி நடிகையுமான, அந்த பெங்காலிப்பெண் Bipasha Basu அவரைப்பற்றி அடித்த கமெண்ட் வேறு நினைவில் எட்டிப் பார்க்கிறது!

   நீக்கு
  3. அன்பே சிவம் பார்த்திருக்கேன். ஆனால் மாதவன் கவர்ந்த அளவுக்கு உலக்கை கவரவில்லை. அவர் ஃபௌஜி சீரியலில் ஷாருக் கானுடன் சேர்ந்து நடிச்சதில் இருந்து மாதவனின் ரசிகை நான்! :))))) ஆனால் எல்லாப் படங்களும் பார்த்ததில்லை. நாலைந்து பார்த்திருக்கேன்.

   நீக்கு
  4. உலக்கையார் நடிக்கும் எந்த படங்களையும் பார்ப்பதில்லை என்பது எனது முடிவு. என்னை விட என்ற தங்கமணிக்கு பிடிக்காது. மாதவன் அருமையான நடிகர். அதேபோல்தான் அரவிந்த் சாமியும்.

   நீக்கு
  5. நடிப்புத்துறையைப் பொறுத்தவரை கமல் ஓகே.்். அரசியல் உளறல்கள்தான் ஸஹிக்க முடிவதில்லை. மாதவன், அரவிந்தசாமி சந்தேகமில்லாமல் நல்ல திறமைசாலிகள்.

   நீக்கு
  6. உலக்கையார் அறிவுஜீவிக் கூட்டத்தில் சேர்ந்தவரே! அப்படித் தான் புரியாத மாதிரிப் பேசுவார். நீங்க தான் கவனமா அவதானிக்கணும். :P:P:P:P

   நீக்கு
 20. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 24 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  தற்போது, தங்களது இந்த பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

  உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை வெள்ளித்திரை என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. மாதவனை எனக்கு முழுமையாக பிடிக்காது. ஆனால் அவரது பல படங்கள் ரசிக்கும்படியாக அமைந்திருந்தன. மாதவனும் சதாவும் இணைந்து நடித்த ஒரு படம் (என்று நினைக்கிறேன்), மகளைப் பற்றியது, அருமையாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ப்ரியசகி என்று் என் மகன் சொல்கிறான்.

   நீக்கு
  2. மாதவனும் ஜோதிகாவும் நடித்த ஒரு படம். முதலில் அவங்களுக்கு நிச்சயம் பண்ணுவாங்க. இருவரும் ஊரை விட்டே ஓடி வருவாங்க. பின்னர் அவங்களே காதலித்துக் கல்யாணமும் செய்துப்பாங்க! யு.எஸ்ஸில் மருமகள் ரொம்ப சிபாரிசு செய்து சில வருடங்கள் முன்னர் பார்த்தது.

   நீக்கு
  3. ஓ, அப்படி ஒரு படமா? சமையல்காரராக வரும் படம் கூட நகைச்சுவைக்காட்சிகள் நிரம்பியவை. பொதுவாகவே நான் பார்க்கும் படங்கள் ஒண்ணு நகைச்சுவை, அல்லது த்ரில். அல்லது இரண்டும் கலந்தது. ஆகவே குறைவான எண்ணிக்கையில் தான் படங்கள் பார்த்திருப்பேன்.

   நீக்கு
  4. சமையல்காரராக வரும் படம் நளதமயந்தி. உலக்கையாரின் சொந்தத் தயாரிப்பு!

   நீக்கு
 22. அனைவர் மனதிலும் இடம் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று...

  ///பொய் சொல்ல கூடாது காதலி பொய்
  சொன்னாலும் நீயே என் காதலி ///
  ஹா ஹா ஹா பின்ன என்னதான் பண்ண முடியும்:)...
  அழகிய பாட்டு...

  பதிலளிநீக்கு
 23. இப்போதெல்லாம் மீரா ஜாஸ்மின் நடிப்பதில்லையோ அழகான நடிகை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை தனிப்பட்ட வாழ்க்கையில் ரணங்கள் ஏராளம்

   நீக்கு
 24. வணக்கம் சகோதரரே

  இந்தப்படம் கேள்விப்பட்டுள்ளேன். இன்றைய பாடலை இதுவரை கேட்டதில்லை. இப்போது கேட்டேன். இதில் வரும் பிற இரண்டொரு பாடலைக்கூட கேட்டதாக ஞாபகம். மாதவனின் நடிப்பு நன்றாக இருக்கும். அந்த கால ரவிச்சந்திரன் மாதிரி அழகாகவும் இருப்பார். அவரின் அன்பே சிவம், நள தமயந்தி தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். பாடலைப் பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 25. பாடல் கேட்டிருக்கிறேன். இனிய பாடல்.

  பதிலளிநீக்கு
 26. பாடலை கேட்டிருக்கிறேன். அருமையான பாடல்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!