சனி, 18 ஏப்ரல், 2020

கோவிட், கிரியேடிவிடி, சத்ரபதி





1)  
               >>> for further reading CLICK HERE 


2)

According to a popular view, creativity is a product of the brain's right hemisphere -- innovative people are considered "right-brain thinkers" while "left-brain thinkers" are thought to be analytical and logical. Neuro scientists who are skeptical of this idea have argued that there is not enough evidence to support this idea and an ability as complex as human creativity must draw on vast swaths of both hemispheres. A new brain-imaging study out of Drexel University's Creativity Research Lab sheds light on this controversy by studying the brain activity of jazz guitarists during improvisation.  
     
>>>> For further reading, CLICK HERE

==============================================
                
சத்ரபதி சிவாஜியை கலையாக வடித்த நிதின் தினேஷ் காம்ப்ளே 




ரமா ஸ்ரீனிவாசன் 

மராட்டிய பேரரசை ஆண்ட மன்னர்களில் தலை சிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி. மொகலாயர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக இருந்தவர். அவ்வலிமையான எதிரியின் படையை தனது போர் தந்திரத்தால் வீழ்த்தியவர். இப்படி புகழ் பெற்ற மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளை மராத்தியர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

மார்ச் 12-ஆம் தேதி சத்ரபதி சிவாஜியின் நினைவு நாள் மகாராஷ்டிரத்தில் விமரிசையாக நினைவு கூரப்பட்டது.

வீரத் திருமகன் “சத்திரபதி சிவாஜி மஹராஜ்” அவர்களின் 10 x 8 அடி உயரம் கொண்ட மொசைக் உருவப்படம் ஒன்றை வெறும் பத்தே நாட்களில் உருவாக்கி நிதின் தினேஷ் காம்ப்ளே என்னும் மும்பையைச் சேர்ந்த ஒரு இயங்கு படக் கலைஞர் வரலாறு படைத்திருக்கின்றார். இதை 'சத்திரபதி சிவாஜி மஹராஜ்' அவர்களின் பிறந்த நாள் ஆண்டு விழா பரிசாக அந்தேரிக்கு அளித்திருக்கின்றார். 

இந்த நிதின் தினேஷ் காம்ப்ளே என்பவர் ஒரு தனியார் நிருவனத்தில் ஒரு உயர்கலை அனிமேஷன் வல்லுனராக பணி புரிகின்றவர். இவ்வரிய உருவப் படத்தை 10 நாட்களில் 46,080 பிளாஸ்டிக் சில்லுகளை வைத்து உருவாக்கியிருக்கின்றார். 

அவர் ஏ.என்.ஐ.யிடம் சம்பாஷிக்கும்போது கூறியதாவது : “இந்திய மாநாட்டில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட ஒரு பொருளாகும். ஆயின், ஏற்கனவே சந்தையிலிருக்கும் பிளாஸ்டிக்கை ஒருவரும் அழிக்க முடியாது. எனவே, ஒரு தடை செய்யப்பட்டப் பொருளை கொண்டு இம்மாபெரும் உருவப் படத்தை தயாரிப்பதே எனக்கு ஒரு உத்வேகமாக இருந்தது”. 

அவர் "பிளாஸ்டிக்கை கொண்டு ஒரு பெருமை வாய்ந்த பரிசை அளிக்க வேண்டும் என்னும் குறிக்கோள்தான் இந்த செயலுக்கு பின்னிருந்த உந்துதல்" என்றும் கூறினார். 

“நான் ஒரு முழு நேரத் தொழிலாளி என்பதால், என் இரவுகளை இவ்வுருவப் படத்தை தயாரிக்கும் வேலையில் செலவிட்டேன். இதற்கு வேண்டிய மூலப் பொருட்களை புவனேஷ்வரிலிருந்து வாங்கி ஆறு வண்ணங்களில் நானே வர்ணமிட்டு 10 நாட்களில் இவ்வுயிர் ஓவியத்தை முடித்தேன்” என்கிறார். 
       

   

இவ்வுயிர் ஓவியம் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவாகியுள்ளது. இதுதான் நிதின் தினேஷ் காம்ப்ளேயின் முதல் உலக சாதனையாகும். இதைப் போல் மேலும் பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் உயிர் ஓவியங்களையும் வடித்து, நம் இளைய தலைமுறையினருக்கு தெரியப் படுத்துவதே அவரது குறிக்கோளாகும். இதுவே நம் இளைய தலைமுறையினருக்கு ஒரு நாட்டுப் பற்றின் உத்வேகம் பிறக்க ஏதுவாக இருக்கும் என்று நம்புகின்றார். 

   

மங்கேஷ் நிபானிகர் என்பவர் கடந்த ஆண்டு (2019) சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு லட்டூர் மாவட்டம், நிலங்கா என்னுமிடத்தில் 6 ஏக்கர் பரப்பளவுள்ள வயலில் 2.4 லட்சம் சதுர அடியில் சிவாஜியின் உருவத்தை அழகுற செதுக்கியுள்ளார். சிவாஜியின் பிறந்தநாளுக்கு சில நாட்கள் முன்னதாகவே 2500 கிலோ விதைகளை நிலத்தில் தூவி, அவை பசுமையாகக் காட்கியளித்தபோது அவரின் உருவப் படத்தை செதுக்கியுள்ளார். தலையில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தலைப்பாகை, காதணியுடன் கம்பீரமாக காட்சியளித்தார் வீர சிவாஜி. 


மங்கேஷ் நிபானிகரின் இச்சாதனையை ஒருவர் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவையும் நான் இங்கு இணைத்துள்ளேன்.
   



இதற்கு முன்னர், 2018-இல் 11,13,743 சதுர அடியில் ரங்கோலியில் பிரம்மாண்ட சிவாஜி உருவத்தை வரைந்தார். 


நிபானிகர் மற்றும் 50 பேர் சேர்ந்து சுமார் நான்கு நாட்கள் கடும் உழைப்பில் இச்சாதனையை செய்துள்ளனர். இதற்காக 50 ஆயிரம் கிலோ ரங்கோலி வண்ணப்பொடிகள் பயன் படுத்தப்பட்டன. 

நம் நாட்டின் சிறப்பு வாய்ந்த வரலாறும் அதைக் காப்பதற்காக உயிரையும் அற்பணித்துப் போராடிய நம் வீரத் திருமகன்களும் என்றும் நம் வரலாற்று ஏட்டில் பொன்னெழுத்துக்களால் செதுக்கப் பட்டவர்கள். அவர்களைப் போலவே நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் சாகஸங்களும் மறக்க முடியாது; மனதில் நிற்பவை. இவ்வரலாற்று சிறப்பு மிக்க மாமனிதர்களின் புகழைப் பரப்பும் ஒவ்வொரு செயலும் ஊக்குவிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டியது. 


அவ்வழியில் வந்த நிதின் தினேஷ் காம்ப்ளே மற்றும் மங்கேஷ் நிபானிகர் போன்றவர்களை நாம் சிரம் தாழ்த்தி வணங்குவதில் பேரானந்தம் அடைகின்றோம். 


முடிவாக, 


“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்பது போல் 
“சாதனைக்கும் உண்டோ அளக்கும் எல்லை” 
என்று கூறி விடை பெறுகின்றேன்.


================================================
                     

42 கருத்துகள்:

  1. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற
    மா மன்னர்களுள் சத்ரபதி சிவாஜியும் ஒருவர்....

    அவரது ஓவியத்தைப் பற்றிய செய்திகள்
    சிறப்புக் கட்டுரை மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் வணக்கம். சமையல் முடிந்தது. ஆனால் கொரோனா முடியவில்லை. விரைவில் முடிய இறைவனிடம் பிரார்த்திப்போம். மா மன்னர்களுள் சத்ரபதி சிவாஜி என் மனதில் அழியா இடம் பெற்றவர். எனவே அவருக்கு ஒரு அர்பணிப்பு என்றவுடன் மகிழ்ச்சியுடன் எழுதினேன். நன்றி.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம் . பாசிட்டிவ் இணைப்புகளுக்கு மிக நன்றி மா. சிவாஜி பற்றிய ,ரமா ஶ்ரீநிவாசனின் கட்டுரை அற்புதம். ஓவியம் வரைந்தவரின் முயற்சி மிகவும் சிறப்பு.பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் மனப்பூர்வமாக ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... காலை வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. தியாகங்கள் போற்றப்படல் வேண்டும் அதுவே மறைந்த தலைவர்களின் ஆன்மாக்களுக்கு நாம் செய்யும் மரியாதை.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் இணைப்புகளுக்கு நன்றி. சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் கட்டுரை மிக நன்றாக உள்ளது.
    படித்து ரசித்தேன்.

    ஓவியங்களின் அழகு பிரமிக்க வைக்கிறது. பொறுமையும், நிதானமுமாக வடித்த அந்தச் சிற்பிகளுக்கு வந்தனங்கள்.
    சத்ரபதி சிவாஜி மஹராஜின் உருவ படத்தை உருவாக்கி உலக சாதனையை அடைந்த திரு. நிதின் தினைஷ் காம்ளே அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
    இவ்விதமாக ஓவியங்களை அழகாக செதுக்கி சாதனை செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுக்கள். தகவலாக கட்டுரை தந்த சகோதரிக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், நல்வரவு. கொரோனா விரைவில் விட்டுவிட்டு ஒரேயடியாகக் காணாமல் போக/அழிந்து போகவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. கோல்ஹாப்பூர் போனப்போப் புனேயில் ஒரு நாள் தங்கி இருந்தப்போ வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பார்க்க நேர்ந்தது. அதோடு கோல்ஹாப்பூரில் இருந்த கோட்டையையும் பார்த்தோம். சிவாஜியின் மேல் அதாவது சத்ரபதி சிவாஜி/ (ஜிவாஜி இல்லை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) எனக்கு எப்போவுமே ஆழ்ந்த பக்தியும், பற்றுதலும் உண்டு. திருமதி ரமா ஸ்ரீநிவாசனின் கட்டுரையில் உள்ள விஷயங்கள் புதியன. தெரியாதன. தெரிந்து கொள்ளத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அவர்களே, நீங்கள் என் இனத்தை சேர்ந்தவர். சிவாஜி என்பவர் ஒரு சகாப்தம் படைத்தவர். மிக்க நன்றி.

      நீக்கு
  9. கடமை மறுமுறை அழைக்கும் முன்னர் ஓட்டம்! :)))))

    பதிலளிநீக்கு
  10. சிற்பிகளுக்கு வாழ்த்துக்கள்.
    தங்களின் முடிவுரை அருமை

    பதிலளிநீக்கு
  11. வலை ஓலை வலைத் திரட்டி ஊடாக ஒரு வருகை.

    தொகுப்பு அருமை.

    பொருத்தமான குறிச் சொற்களை சேர்த்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சிபா..்்

      பொருத்தமான குறிச்சொற்களைக் குறித்து வைத்து இணைக்க வேண்டும். சீக்கிரம் செய்கிறோம்.

      நீக்கு
  12. சத்ரபதி சிவாஜி கட்டுரை அருமை...


    சிவாஜியின் இரு படங்களும் கணினியில் வருகின்றன... கைப்பேசியில் வரவில்லை... ANI...? படங்கள் காப்புரிமை பெற்றதாக இருக்குமோ...?

    பதிலளிநீக்கு
  13. காலையிலேயே இடுகையைப் படித்தேன். சத்ரபதி சிவாஜி கட்டுரை அருமையாக இருந்தது. படங்களையும் கண்டேன்.

    இப்போ கூகிளாருக்கு, என்னடா இது..இத்தனை பேர் அந்தப் படங்களை பாராட்டணுமா என்று நினைத்து, படங்களை ஒளித்துவைத்துவிட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவர்களுக்கு இன்பம் கொடுத்த ஜோரில் நான் இன்பமாக இருக்கின்றேன்.

      நீக்கு
  14. அவர்களுக்கு எப்பவுமே சிவாஜி மேல் பெருமை பற்று அதிகம். நம்ம ஊர் மாதிரி அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான சனிக்கிழமை பதிவு.  சிவாஜியின் ஓவியம் அற்புதம். இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சகாப்தம் மராட்டிய சிவாஜி. சென்ற வருடம் புனே மற்றும் கோலாப்பூர்  சென்ற  பொழுது, சிவாஜியின் கோட்டைகளுக்கு சென்றிருந்தோம். தேவி பக்தி, தேச பக்தி, குரு பக்தி எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் சிவாஜி. 

      நீக்கு
    2. என் நன்றி உங்களுக்குரித்தாகுக பானு.

      நீக்கு
  15. //இவ்வுயிர் ஓவியம் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவாகியுள்ளது.//

    சாதனை படைத்தவர்களூக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    //நம் நாட்டின் சிறப்பு வாய்ந்த வரலாறும் அதைக் காப்பதற்காக உயிரையும் அற்பணித்துப் போராடிய நம் வீரத் திருமகன்களும் என்றும் நம் வரலாற்று ஏட்டில் பொன்னெழுத்துக்களால் செதுக்கப் பட்டவர்கள். அவர்களைப் போலவே நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் சாகஸங்களும் மறக்க முடியாது; மனதில் நிற்பவை. இவ்வரலாற்று சிறப்பு மிக்க மாமனிதர்களின் புகழைப் பரப்பும் ஒவ்வொரு செயலும் ஊக்குவிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டியது.


    அவ்வழியில் வந்த நிதின் தினேஷ் காம்ப்ளே மற்றும் மங்கேஷ் நிபானிகர் போன்றவர்களை நாம் சிரம் தாழ்த்தி வணங்குவதில் பேரானந்தம் அடைகின்றோம். //

    நாங்களும் உங்களுடன் சேர்ந்து தலை தாழ்த்தி வணங்குகிறோம்.
    நன்றி அருமையான கட்டுரைக்கு.



    காணொளி பார்த்தேன் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி, நீங்கள் ஒன்று கவணித்தீர்களா? உலகிலேயே, நாம் மட்டும்தான் நம் மாவீரர்களையும் சரி சுதந்திர வீரர்களையும் சரி, கர்வத்துடனும், பெருமிதத்துடனும் இவ்வுலகுக்கு எடுத்துக் கூறி அவர்களின் சாகஸங்களை பற்றி பேசாமல் இருந்து விட்டோம். நாம் இப்போதாவது நம் தவறை உணர்ந்து பிராயச்சித்தம் செய்வோம் என்ற முடிவுடன்தான் நான் என் கட்டுரைகளை வடிக்கின்றேன்.

      நீக்கு
  16. சாதனையாளர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  17. என் இளம்பிராயத்தின் இந்திய சரித்திர நாயகன் சிவாஜி. (மற்ற சிலரும் உண்டு).

    மராட்டியர்களுக்குத் தங்கள் பிரதேசத்தின் தலைசிறந்த மாவீரன், ராஜா அவன் என்பதில் மனங்கொள்ளாப் பெருமை. சரிதான். அப்படித்தான் ஒரு சரித்திரபுருஷன் மக்களால் கொண்டாடப்படவேண்டும்.

    இங்கு தமிழ்நாட்டில், பெருமைமிகக்கொண்ட பொன்னாட்டில் - சமகாலக் காட்சி: சினிமா நடிகர்களைக் கண்டு வாயெல்லாம் பல். நினைத்தாலே மக்களுக்கு மனமெலாம் ஒரு பரவசம். தினம் தினம் பாலாபிஷேகம், தேனாபிஷேகம். வாயைத் திறந்து நடிகன் என்பவன் ஏதாவது உளறினால்போதும், உடனே ஆஹாஹா.. ஓஹோஹோ..! சமூகதள வைரல்..

    சரி, வேண்டாம். சனிக்கிழமை இனிதாக நிறையட்டும்!

    பதிலளிநீக்கு
  18. அட்! இன்றைய பாசிட்டிவ் செய்திகள் வித்தியாசமாக இருக்கின்றன. ஏதோ ஒன்று செய்து அதை விரட்டினால் போதும்.

    சத்திரபதி சிவாஜி கட்டுரை சூப்பர் ரமா.

    நிறைய தகவல்கள். ஆமாம் மஹாராஷ்ட்டிரர்கள் அவரைக் கொண்டாடுவாங்க அதுவும் பக்தியுடன்.

    //இவ்வுயிர் ஓவியம் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவாகியுள்ளது.//

    நிதின் தினேஷ் காம்ப்ளேவின் சாதனைக்கு வாழ்த்துகள் சொல்வோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. படங்கள் வரவே இல்லை. கீதாக்கா தளத்திலும் கூட ஒரு படம் வரலை.

    வீடியோ இங்கு தெரிகிறது ஆனால் நெட் பிரச்சனையால் ப்ளே பண்ண முடியலை

    கீதா

    பதிலளிநீக்கு
  20. சாயிறு பதிவு வெளியாகலையே... ஆறு மணி ஆகப்போகிறது.

    பதிலளிநீக்கு
  21. ஆஹா ... தங்களின் திறமை மூலம் ஒவ்வொருவரும் மூக்கின் மீது விரலை வைக்க வைத்து விட்டார்களே !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!