வியாழன், 30 ஏப்ரல், 2020

கெட்டுப்போன நல்லவள்!



திருமணம், விருந்து விழாக்களுக்குப் போனால் பீடா இருந்தால் எப்போதாவது எடுப்பேன்.  பீடா போட்டால் அப்புறம் ரொம்ப நேரத்துக்கு வேறு எதுவும் சுவைக்க முடியாது.  வெற்றிலை இருந்தால் பெரும்பாலும் எடுக்க மாட்டேன்.   

வெற்றிலை மேல் தப்பில்லை.  அது போடும் கலை எனக்குத் தெரியாது.  வெற்றிலை போட்டவர்கள் வாயை இரண்டு விரல்களுக்கிடையே வைத்து புளிச் புளிச்சென்று கண்ட இடங்களிலும் சிகப்பு கலரில் துப்புவதைப் பார்த்ததிலிருந்து வெற்றிலை போடும் எண்ணம் மனதில் எழுந்ததில்லை.  இன்றைய நிலையில் அது சட்டப்படி மாபெரும் குற்றம்!

என் பெரிய மாமா மாபெரும் வெற்றிலை ரசிகர் - அவர் அப்பா, என் தாத்தா போல.  வெற்றிலையைப் பார்த்துவிட்டால் அதை ஆசையுடன் எடுத்து இரண்டு பக்கமும் பார்த்து, தொடை வேஷ்டியில் லேசாகத் துடைப்பர்.  பிறகு இரண்டு பக்கமும் நீவி, வருடி விட்டு, காம்பைக் கிள்ளி ஓரமாகப் போடுவார்.  பிறகு அந்த வெற்றிலையின் வயிற்றில் பட்டும் படாமலும் சுண்ணாம்பு தடவுவார்.  பிறகு அதைப் பாந்தமாக இரண்டாக, சமயங்களில் நான்காக, மடிப்பார்.  நாக்கிலோ, கடைப்பற்களுக்கு இடையிலோ வைத்து, வாயை மூடி சுவைக்க ஆரம்பிப்பார்.  இரண்டு பாக்கை அள்ளி வாயில் போடுவார்.  மெல்ல நாற்காலியில் சாய்ந்து வாய் திறவாது அதன் காரத்தை அனுபவிப்பார். கொஞ்சம் கொஞ்சமாக தொண்டைக்குள் அதன் சாற்றை இறக்குவார்.  பிறகு அடுத்த வெற்றிலை.   இப்படி எவ்வளவு வெற்றிலை உள்ளே போகுமோ...  ஆனால் அவர் கண்ட இடத்தில உமிழமாட்டார்!  பவ்யமாக பாத்ரூம், வாஷ்பேசின் என்று சென்று வருவார்.

ஆனால் பாருங்கள், இந்த வெற்றிலை போடும் விஷயத்தில் எனக்கு சுவாரஸ்யமில்லை.  எப்போதாவது ஜீரணத்துக்காக ஓரிரு வெற்றிலை சாப்பிட்டது உண்டு.  சமீபத்தில் இருமல், சளி  - கொரானா காலத்துக்கு முன் - என்று அவதிப் பட்ட ஒரு சமயத்தில் நான்கு டம்ளர் தண்ணீர் எடுத்து, அதில் நான்கு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு, நான்கு கற்பூரவல்லி இலைகளையும் கிள்ளிப்போட்டு, சிறிது மிளகு, ஒரு பல் பூண்டு,  கொஞ்சம் சீரகம், கொஞ்சம் உப்பு  போட்டுக் கொதிக்க வைத்து பிளாஸ்க்கில் ஊற்றி அவ்வப்போது குடித்திருக்கிறேன்.  அதை ஒருமுறை சுவைத்த எங்கள் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் கலைஞர் அப்புறம் நான் எப்போதெல்லாம் அதைச் செய்கிறேனோ அப்போதெல்லாம் அவருக்கும் அது வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தார்.  "தொண்டை சூப்பரா சரியாகுது சாமி..."

இந்த பீடா சாப்பிடுவது கூட ஏன் சுவாரஸ்யம் இல்லாமல் போகிறது என்றால் அதில் காரத்தைவிட இனிப்புச் சுவையே அதிகம் இருப்பதால்தான்.  அப்புறம் இன்னொரு விஷயம்.  வெற்றிலையை வீட்டில் வளர்ப்பது ''வளர கஷ்டம்'' என்பது என் அனுபவம்!  என் மாமா வீட்டில் வெற்றிலைக் கொடி பெரிய அளவில் வளர்ந்திருக்க அதிலிருந்து கொடி எடுத்து வீட்டில் வைத்து வைத்துப் பார்த்தும் வளரவில்லை.   ஓரிருமுறை, இரண்டு மூன்று இலை தலைகாட்டிவிட்டு அப்புறம் காணாமல் போய்விடும்.  அப்புறம் ஒருவழியாய் வளர ஆரம்பித்தது.  விதிக்குப் பொறுக்கவில்லை.  அந்நேரம்தான் நாங்கள் வீடு மாறும் சமயம் வந்தது.  வீட்டை மாற்றும் மும்முரத்தில் வெற்றிலையை மறந்தோம்.  இழந்தோம்.  இப்போது கடையிலிருந்து ஒரு வெற்றிலைச் செடி /கொடி வாங்கி வைத்திருக்கிறோம்.  சரியாக வருகிறதா என்று பார்க்க வேண்டும்.  அது போகட்டும்...   அது துணைக்கதை...   மறுபடியும் மெயின் லைனுக்கு மாறுவோம்...

கொய்யாப்பழம் பிடிக்குமோ உங்களுக்கு?  எனக்கும் பிடிக்கும்.  முன்பெல்லாம் செங்காயாக அப்படியே சாப்பிடுவேன்.  மரத்திலிருந்து பறித்து அப்படியே கடித்துச் சாப்பிடும் வழக்கம் உண்டு.  ஆனால் இப்போதெல்லாம் திருட்டுக் கொய்யா பறிக்கும் வழக்கம் இல்லை என்பதால் கடையில்  ரொம்பப் பழுக்காத பழமாகப் பார்த்து வாங்கி நறுக்கிச் சாப்பிடுகிறேன்.  சிலர் அதில் காரப்பொடி தூவி சாப்பிடுவார்கள்.  ஏனோ எனக்கு அது பிடிக்காது.  கொய்யாவை அதன் ஒரிஜினல் சுவையில் சாப்பிடவேண்டும்.   வாங்கிய கொய்யாப்பழம் தண்ணீர் குடிக்கிற மாதிரி ஒன்றுமில்லாத சுவையில் இல்லாமல் நல்ல தித்திப்பாய் இருந்தால் நலம்.  ஆனால் கொய்யாப்பழம் ரொம்பச் சாப்பிடக்கூடாதாமே...   அப்படியா?  



சமீபத்தில் சென்னை பாரிஸ்கார்னரில் ஒரு பெரிய சைஸ் கொய்யாப் பழத்தைப் பார்த்து விட்டு என் பழைய வத்ராப் ஞாபகம் வர - அங்கு கொய்யாப் பழங்கள் தேங்காய் சைஸில் இருக்கும் - வாங்கி ஏமாந்த அனுபவம் நினைவுக்கு வருகிறது.   ஒரு பழத்தை (கிலோ கணக்கில்தாங்க கொடுப்போம்) ஐம்பது ரூபாய் என்று வாங்கி...(என்ன செய்ய..   விலை பேசும்போது கைபட்டு தட்டி விட்டு மேலே இருந்த பழங்களை கீழே உருட்டி விட்டாச்சு...)  எந்த ஊரிலிருந்து வருகிறது என்று கேட்டால் பர்மாவோ, தாய்லாந்தோ என்று சொன்னார்கள்!  சாப்பிடும்போது கொய்யா மாதிரியே இல்லை என்பதை நான் பாஸிடம் சொல்லிக்கொள்ளவில்லை!



மாம்பழம் ரொம்பப் பிடிக்கும்.  சில மாம்பழங்களை நறுக்கிதான் சாப்பிடுவோம்.  ஒரு சில மாம்பழ வகைகளை அப்படியே சாப்பிடலாம்.  மதுரையில் அப்படி ஒரு ரகத்தை காசாலட்டு என்பார்கள்.  சென்னையில் மற்ற ஊர்களில் என்ன பெயரில் வருகிறதோ...  தோல் கெட்டியாக இருக்கவேண்டும்.  காம்பிருக்கும் முனைக்கு எதிர்முனையில் சிறிதாகத் துளையிட்டு மெல்ல உறிஞ்சத் தொடங்க வேண்டும்.  மெதுமெதுவாய் பழத்தின் கீழ்ப் பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அமுக்கிப் பிதுக்கி மேலே கொண்டு வந்து உறிஞ்சிச் சாப்பிடவேண்டும்.  

சதைப்பகுதி எல்லாம் காலியானதும் அதன் தோல் பகுதியை அகற்றி எடுத்து அதில் மிச்சமிருக்கும் சதையையும் வீணாக்காமல்  உண்டு விட்டு விதைப்பகுதியை உள்ளங்கைகளுக்குள் பிடித்தவண்ணம் அமுக்கி  கைகளில் வழியும் மாம்பழ ஜூஸை சாப்பிடவேண்டும்!  (கீதா அக்கா போட்டிருக்கும் பதிவில் வரும் விஷயங்களுக்கு நேர் எதிர் இந்த சமாச்சாரம்!  இல்லையா நெல்லை?!!)  இந்த மாதிரி மாம்பழம் சாப்பிட்டால்தான் முழு ரசனை!  சின்ன வயசில் தஞ்சாவூரில் ஜட்ஜ், வாண்டையார், கலெக்டர் வீடுகளில் காம்பவுண்ட் ஏறிக்குதித்து மாம்பழம் திருடிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

ஆமாம், ஏன் இவன் வெற்றிலை கொய்யா, மாம்பழம்  என்று இங்கும் அங்கும் அலைகிறான் என்று மனதில் எண்ணம் தோன்றுகிறதா உங்களுக்கு?  மூன்றிலுமே  ஒற்றுமையைச் சொல்ல ஒரு விஷயம் இருக்குங்க..

எப்பவுமே நான் சொல்ல வர்ற விஷயத்தை சொல்ல ஆரம்பிக்கும்போது அதற்கான அறிமுகத்தைச் சொல்லும்போது  திசை மாறி அதிலேயே கட்டுரை தங்கிவிடுகிறது...   அப்புறம் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது.  உண்ணும் கலை போலவே பழங்கள் பற்றியோ என்னவோ சொல்ல வர்றேன்னு நினைச்சிருப்பீங்க...  

இல்லீங்க...    அது இல்ல விஷயம்...   இது வேற...   அதாவது என்னன்னா...


================================================================================================

படித்ததில் நெகிழ்ந்தது...



=============================================================

பொக்கிஷம் :

இப்படி ஒரு பகுதி வந்து கொண்டிருந்தது...  மூர்மார்க்கெட் பற்றி  தெரிந்திருக்கும் உங்களுக்கும்!


=========================================

ஒரு வயசுக்கு மேல அவ்வளவுதான் கண் எல்லாம்..!  அவர் மேல் தப்பில்லை..   என்ன சொல்றீங்க...  



==============================================================

இந்தப் பெண் நல்லவளா கெட்டவளா?  2013 இல் பகிர்ந்து..    இப்போது அந்தக் குழந்தைக்கு 7 வயதிருக்கும்!  யாருடன் இருக்கிறதோ!



=======================================================================================

ஒரு சாமா ஜோக்...



==============================================


252 கருத்துகள்:

  1. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனத்தின் (எண்ணத்தின்) வாசல்களான வாய், கண், காது, மூக்கு, உடம்பு ஆகிய ஐம்பொறிகளையும் ஒருவன் அடக்கி ஆண்டால் அவனுக்கு ஏழ் பிறப்பிலும் துன்பமில்லாது நன்மை செய்யும். யாரைப்போல அடக்க வேண்டும்? ஆமை மனிதர்களோ பிறரோ அருகில் வருவதுபோலத் தெரிந்தால் தன் நான்கு கால்களையும் மற்றும் தலையையும் ஓட்டினுள் இழுத்துக்கொள்வதைப் போல.

      நீக்கு
    2. ஆகையால்
      தீங்கினர் தம் கணணில் படாமல் நீங்குதலே நல்ல நெறி...

      நீக்கு
  2. ம்...
    வெற்றிலை எச்சிலில் கிருமிகள் கிடையாது...
    சுண்ணாம்பு காரத்தில் அவை தொலைந்திருக்கும் என்று சொல்வார்கள்...

    நானும் ஊருக்கு வரும்போது தாம்பூலம் தரிப்பதுண்டு... ஆனாலும்

    கண்ட இடத்திலும் உமிழ்வதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான்... கண்ட இடத்தில் கறை ஏற்படுத்தாத தன்மைதான் முக்கியம்! இல்லையா?!

      நீக்கு
  3. தாம்பூலத்துடன் புகையிலையைச் சேர்த்ததும் தான் கண்ட இடத்திலும் புளிச்... புளிச்...

    ஆக, போயலைக்குத் தான் கசையடி கொடுக்க வேண்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ட்ரல் ஸடேஷன் ஸப்வே முன்பெல்லாம் இந்தக் கறையால் கண்றாவியாக இருக்கும். இப்போது சுத்தமாக, அழகாக வைத்திருக்கிறார்கள்!

      நீக்கு
  4. கல்யாண வீட்டிலும் சரி..
    துக்க வீட்டிலும் சரி...

    தாம்பூலத் தட்டு வைப்பது தஞ்சைப் பகுதியின் நாகரிகம்....

    இப்போது அதெல்லாம் இல்லல்...

    காவிரியின் கரையோர கொடிக்கால்கள் எல்லாம் அழிந்தே போயின....

    திரு ஆரூருக்கு அருகில் கொடிக்கால் பாளையம் என்றே ஒரு ஊர் உள்ளது...

    கொடிக்கால் என்றால் வெற்றிலை விளையும் நிலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  தெரியும்.  தஞ்சாவூருக்கு வெற்றிலையும் பிரிக்க முடியாதது.

      நீக்கு
  5. வெற்றிலையின் வயிற்றில் சுண்ணாம்பு (மூணாவது என்று சொல்வார்கள்) தடவுவார்களா இல்லை முதுகிலா?

    எங்களுக்கு வெற்றிலை போடும் வழக்கம் இல்லை. அபார்ட்மென்ட் பில்டிங்கில் (75 குடும்பங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இப்போ 50தான். மற்றவர்கள் இன்டீரியர் வேலை முடியலை, ஆரம்பிக்கலை) யாரோ ஒரு சிலர் பான் குதப்பித் துப்புகிறார்கள் என்று கம்ப்ளெயிண்ட். (பால்கனில இருந்து). சேட்டுகளாத்தான் இருக்கும். இன்னும் பிடிபடவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேட்டுகள் பான் போட்டுப் போட்டுத் துப்புவார்கள்.  இப்படிக்கு கூடவா பில்டிங்கையே அசிங்கம் செய்வார்கள்?!

      நீக்கு
    2. வடமாநிலத்தில் ரயில்களில் பயணம் செய்தால் ஜர்தா பீடா போட்டு ஆண், பெண் அனைவரும் சகட்டு மேனிக்குத் துப்புவார்கள். கொஞ்சம் கூச்சம், குற்ற உணர்ச்சி? ம்ஹூம் எதுவும் இருக்காது. அதுவும் லக்னோ, கான்பூர், அயோத்தி! :(

      நீக்கு
  6. அந்தவகை மாம்பழத்தின் மூக்கைக் கடிக்கும்
    முன்பாக பழத்தை அப்படியும் இப்படியுமாக கைகளால் உருட்டி கனிந்திருக்கும் சதைப் பகுதியை சாறாக மாற்றிக் கொள்வது தனிக் கலை..

    இந்தக் காலப் பிள்ளைகளுக்கு
    இதெல்லாம் தெரியுமா?.. தெரியாது!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப சாறாகவும் ஆக்கிக்கொண்டாள் சுவை இல்லடி துரை ஸார்...!

      நீக்கு
  7. ஊரு கெட்டுப் போனதற்கு
    மூரு மாருக்கெட்டு அடையாளம்...
    நாடு கெட்டுப் போனதற்கு
    மெட்ராசு நாகரிகம் அடையாளம்...
    - கவியரசு கண்ணதாசன்...

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் சொல்லியிருப்பதால் பால்கனுயில் வெற்றிலைக் கொடி வைக்க முடியுமான்னு பார்க்கிறேன். மிகுதிக்கு பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லக்கூடாது...   பரவாயில்லாமல் வருகிறது நெல்லை.  இன்னும் கொஞ்சம் மண் போடவேண்டும்.  அப்புறம் புகைப்படம் வெளியிடுகிறேன்!

      நீக்கு
  9. தாம்பூலம் ஒரு மருந்து... ஒரு மங்கலம்...

    நல்ல சேதிகளைத் தாம்பூலம் கொடுத்துத் தான் சொல்ல வேண்டும் என்பது ஒரு மரபு...

    இது குறித்து பழமொழிகளும் உள்ளன...

    இறுதிப் பயணத்தில் கூட தாம்பூலம் கொடுத்து அனுப்பி வைப்பார்கள்...

    பதிலளிநீக்கு
  10. காலையில் தாம்பூலம் தரிக்கும் போது
    (இப்படித்தான் ஜொள்ள வேணுமாம்..)
    ஒரு நெல்லளவுக்கு சுண்ணாம்பு அதிகம்...

    மதியத்தில் ஒரு வெற்றி அதிகம்...
    இரவில் ஒரு பாக்குத் துண்டு அதிகம்...

    வெற்றிலை மடிப்பதொரு கலை...

    சயன நேரத்தில் பாரியாள் மடித்துக் கொடுக்கும் வெற்றிலைக்கு மகத்துவம் அதிகமாம்...

    வெற்றிலைக்கு சுண்ணாம்பு தருவது தர்மம்...
    வெற்றிலையே தருவது மகா தர்மம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  இதில் இவவளவு இருக்கா...   வேளைக்குத் தகுந்த மாதிரி அளவும் மாறுமா?

      நீக்கு
    2. அந்த நெல்லளவு சுண்ணாம்பு உடலின் கால்ஷியத் தேவைக்கு....

      மதிய வெற்றிலை உச்சி வெயிலில் வியர்த்த உடம்பில் ஏற்படும் கபத்தை சரி செய்ய...

      இந்தப் பாக்கின் துவர்ப்பு ரத்தத்தை சுத்திகரிக்க...

      இரவு தாம்பூலத்தில் ஜாதிபத்திரி போன்ற சேர்மானங்கள் இருக்கும்...

      விடலைகள் பாக்கு போட்டால் வீட்டில் வசவு கிடைக்கும்...

      பெரிய ஆளு ஆயிட்டீங்களோ!.. என்று..

      பாக்கின் துவர்ப்பு வேறொரு வேலையையும் செய்யும்...

      அது என்னாங்கோ?..

      அது இங்கே எதற்கு!...

      நீக்கு
    3. சுவையான விவரங்கள். துவர்ப்பு இனிப்பைத் தேடும்!! இல்லையா?

      நீக்கு
    4. ஆகா...

      துவர்ப்பு இனிப்பைத் தேடும்!..
      கவித.. கவித!...

      நீக்கு
  11. வெற்றிலை போட்டு
    உன் வாய் சிவக்கும்..
    கன்னம் வெட்கத்தினாலே
    சிவந்திருக்கும்...

    சின்னச் சின்ன மூக்குத்தியாம்.. - எனும் பழம் பாடலின் வரிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க கிராமத்துப் பெண்டுகள் சிலதுகள் பாடும் பாட்டு ஞாபகத்தில்:

      வாட வெத்தல.. வதங்க வெத்தல
      வாய்க்கு நல்லால்ல ..
      நேத்து வச்ச குங்குமப் பொட்டு
      நெத்திக்கு நல்லால்ல !

      நீக்கு
    2. அப்போ மாத்திக்க வேண்டியது தான்...

      நீக்கு
    3. புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் செம்பாட்டூர் என்ற எங்கள் ஊரில் வயல்வெளிப்பகுதியில், வெற்றிலைக் கொடிக்கால் இருந்தது. பார்ப்பதற்கே பச்சைப்பசேல் என்று ரம்யமாக இருக்கும். புதுக்கோட்டை மார்க்கெட்டில் வெற்றிலைக்குத் தனி சந்துகள், கடைகள்.. கற்பூர வெற்றிலை தளிராக, இளம்பச்சை நிறத்திலிருக்கும். கேட்டு வாங்கிச்செல்வார்கள் -கவுலிக்கணக்கில். நாட்டு வெற்றிலை கொஞ்சம் தடியாக கரும்பச்சை நிறத்தில்.. காரசாரமாக இருக்கும். சிலருக்கு அது பிடிக்கும். வெற்றிலையை அடுக்கும் விதம், எண்ணும் விதமுமே ஒரு கலை. வியாபாரிகளில் சிலர் கைவந்த கலைஞர்கள்! வாடிக்கையாளர்களுடன் அவர்களது ஆரவாரச் சிரிப்பு, குசலவிஜாரிப்பு, சொல்லி விற்ற தரமான பொருட்கள் எல்லாம் ஒரு காலகட்டத்தின் மக்கள் வாழ்க்கையோடு, கலாச்சாரத்தோடு சம்பந்தப்பட்டவை.

      ஆன்-லைனில் கலையைப் பார்க்கமுடியுமா, ஆச்சாரத்தைப் பார்க்கமுடியுமா, கைவிரல்களில் சணல் கயிறு சுற்றும் அழகைத்தான் பார்க்கமுடியுமா?

      நீக்கு
    4. இனி அப்படியொரு வாழ்க்கை கிடைத்தால் மிகப் பெரிய அதிர்ஷ்டம்...

      நீக்கு
    5. ஏகாந்தன் ஸார்... நீங்க சொல்லி இருக்கும் பாட்டை வைச்சுதான் அப்போ "மூத்த மல்லியிலே... ஒரு பொண்ணு பின்னாலே..". பாட்டு போட்டாங்களோ?

      தஞ்சாவூரில் இருக்கும்போது வெற்றிலைக்கென்றே இருக்கும் கடைகள் பார்த்திருக்கிறேன். பக்கத்தில் ஈரமாக சந்தனக் குன்றும் இருக்கும்.

      நீக்கு
    6. இப்பவும் நினைத்தால் பழைய வாழ்க்கை வாழலாம்.. அதற்கான காலம்தான் கனிகிறது போல...

      நீக்கு
    7. //கற்பூர வெற்றிலை தளிராக, இளம்பச்சை நிறத்திலிருக்கும். கேட்டு வாங்கிச்செல்வார்கள் -கவுலிக்கணக்கில். நாட்டு வெற்றிலை கொஞ்சம் தடியாக கரும்பச்சை நிறத்தில்.. காரசாரமாக இருக்கும்.//

      ஆஆஆ ஏ அண்ணன், இதைத்தான் நான் என் முயற்சியில் கண்டுபிடித்து வைத்ததைக் கீழே சொல்லியிருக்கிறேன்... அப்போ அதன் பெயர் கற்பூர வெற்றிலையோ.. அதுதான் எனக்குப் பிடிக்கும்.

      நீக்கு
  12. அன்பின் துரை, ஶ்ரீராம், முரளிமா அனைவருக்கும் இனிய காலை வணக்கம். வெற்றிலைச் செடி எங்கள் வீட்டுக்குப் போனால் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...   வணக்கம்.  உங்கள் வீட்டில் கொடி இருக்கிறதா...   பலே...

      நீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  நல்வரவு, வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  14. தஞ்சாவூர் கொட்டைப்பாக்கு அல்லது சீவலுடன் தரிக்கும் தாம்பூலத்துக்கும்

    மதுரை களிப்பாக்குடன் தரிக்கும் தாம்பூலத்துக்கும் வித்தியாசம் உண்டு...

    திருவையாற்று வெற்றிலையும் சோழ வந்தான் வெற்றிலையும் நமது அடையாளங்கள்...

    அதனால் தான்
    காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் என்றார் மகாகவி...

    அவிங்களும் கோதுமையைக் கொடுத்துட்டு
    வெத்தலைய வாங்கிக்கிட்டுப் போய் இருக்குறானுவோ!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா. சிகப்புக கல்லு மூக்குத்திப் பாடல் காதில் ஒலிக்கிறது.நீண்ட பாடல் நன்றி துரை.

      நீக்கு
    2. தி ஜா கதைகளில் வெற்றிலைக்கு எப்போதும் தனி மகத்துவம்.

      நீக்கு
    3. எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் வெற்றிலைப்பாக்குப் ப்ரியர். வெற்றிலை டப்பா எப்போதும் இருக்கும். வெற்றிலை, காப்பி இல்லையென்றால் என்ன வாழ்க்கை என்றிருந்தவர்!

      சமீபத்தில் மறைந்த க்ரேஸி மோகன் சீவல் பைத்தியம்.
      வாயில் சீவல்போட்டு வாழ்வாரே வாழ்வர்-மற்றெல்லாம்
      வதைபட்டுப் பின்செல்பவர்

      என்கிற குறள்வழி சென்றவர்!

      நீக்கு
    4. செல்லப் பெட்டியும் கையுமாக அலைந்தவர் க்ரேஸி. பின்னர் குறைத்துக் கொள்ளத் தொடங்கிய நேரம் அவர் முடிவு வந்து விட்டது.

      நீக்கு
    5. மதுரைப் பாக்குடன் வெற்றிலை போட்டால்! அதுவும் ஒரு துண்டு பாக்கிலேயே சிவந்துவிடும். ஒன்றாகப் போடக் கூடாது என்பதால் இரண்டு பாக்கு. பிள்ளைப் பெற்றாள் வெற்றிலை என்றொரு வெற்றிலை உண்டு. எங்க மன்னியின் அப்பாவின் கொடிக்காலிலே அதைப் போட்டு எனக்குக் கொடுத்து அனுப்புவார் மதுரைக்கு! (2மணிநேரம் தான் பயணம்)நான் அப்போது எங்க பிள்ளையைப் பிரசவித்திருந்தேன். வெற்றிலைனா அது வெற்றிலை. மெத் மெத்தென்று குட்டிப் பாப்பாவின் உள்ளங்கை போல!

      நீக்கு
    6. //பின்னர் குறைத்துக் கொள்ளத் தொடங்கிய நேரம் அவர் முடிவு வந்து விட்டது.// - அவர் கடைசி வரை குறைக்கவில்லை. தினமும் 250 ரூபாய்(?)க்கு இவைகள் வரும். யார் சொல்லியும் நிறுத்தியதில்லை. ரஜினி வீட்டுக்கு பட டிஸ்கஷன்/வசனத்துக்குப் போனபோதும் அவருக்கு செளகரியமாக இல்லாதது கண்டு ரஜினி கேட்டபோது, சீவல் வாயில் இருந்தால்தான் எழுத முடியும், இங்கு அதற்கு வசதியும் இல்லை, துப்ப இடமும் இல்லை என்றபோது, தன் அறை வாஷ்பேசினைக் காட்டினாராம் ரஜினி. அப்படி இருந்த கிரேசி, திடும் என மனதில் தோன்றி, தனக்கு சீவல் தினமும் ஏற்பாடு செய்பவரிடம், இன்று எனக்கு வேண்டாம் என்றாராம். அவர் ஏற்கனவே ரூபாய் கொடுத்தாச்சு என்றதற்கு தேவையில்லை என்று சொன்ன கிரேசி, அன்றே மறைந்தார் என பேட்டியில் கேட்டேன்.

      நீக்கு
    7. கிட்டத்தட்ட இதைத்தான் நான் சுருக்கமாகச் சொன்னேன் நெல்லெ!

      நீக்கு
    8. // மதுரைப் பாக்குடன் //

      ஊர்வாரியாய் பாக்கின் விசேஷங்கள் எல்லாம் இப்போதுதான் அறிகிறேன்.

      நீக்கு
  15. வெற்றிலை ,பாக்கு தாம்பூலம் இல்லாமல் நல்ல நிகழ்ச்சி பூர்த்தியாகாது. இளந்தளிரஆக. ஆறாவது எடுத்துக் கொண்டு, வாசனை சுண்ணாம்பை அதன் முதுகில் ஆதரவோடு தடவி, ரசிக்லால் பாக்கை வாயிலில் போட்டு, வெற்றிலையையும் போட்டுக் கொண்டால் ஆஹா சுகம்.! இதைத். துப்ப வேண்டாம்:) அப்படியே மின்விசிறி அடியில் உட்காரந்து அரட்டை அடித்த நாட்கள் தான் எத்தனை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரசனையாக சொல்லியிருக்கிறீர்கள்!

      நீக்கு
    2. வல்லிம்மா... ரசனை... ரசனை... உங்கள் அன்பை வெற்றிலையிடமும் காட்டுகிறீர்கள்...

      நீக்கு
  16. தங்கத் தட்டில் பூச்சரத்தோடு
    வெற்றிலை களிப்பாக்கு
    வைத்துத் தாய் போல் உன்னை
    வருக என்றழைக்கும்
    உள்ளத்தைக் களிப்பாக்கு!..
    - கவியரசர்...

    அழகு மயில் கோலம் என - என்றொரு இனிய பாடலில் இருந்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. களிப்பாக்கு சில சமயம் தூக்கம் வரும்.கண்ணதாசன் வரிகளுக்கு நன்றி துரை.

      நீக்கு
    2. களிப்பைத் தரும் பாக்கோ?!

      நீக்கு
  17. வெத்தலை..வெத்தலையொ..
    கொழுந்து வெத்தலையோ...
    சின்னச் சின்ன கொழுந்து வெத்தலையோ...
    வண்டிச் சோலை செம்பட்டை தான்
    வித்து வாறேன் .. ஒங்கிட்டதான்!...

    - ஞாபகம் இருக்குதா!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெற்றிலை இன்று சிறப்பிடம் பெறுகிறது போல... "வெற்றிலை மடிச்சுக் கொடுத்த பொம்பிளை.." என்றும், வெற்றிலைநைப் போட்டேண்டி" என்றும் பாடல்கள் உண்டு!

      நீக்கு
  18. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். இன்று தளர்த்தப் போகும் ஊரடங்கினால் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று தாங்களும் கஷ்டப்பட்டு அரசையும் காவல்துறையையும், கஷ்டப்படுத்தாமல் இடைவெளியைக் கடைப்பிடித்துப் பொருட்கள் வாங்கும்படியாகப் பிரார்த்திக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாகவே தமிழ்நாட்டில் கொரோனா வேகம் எடுத்திருக்கிறது. குறிப்பாகச் சென்னையில். மக்கள் இதை உணரவேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணர்ந்து நடந்துகொள்வார்கள் என்று நம்புவோம்.

      நீக்கு
    2. சென்னை மக்கள் திருந்தவில்லை. இன்றைய அனுபவம்.

      நீக்கு
  19. கொய்யாப்பழம் டயபெடிஸ்ககு நல்லது. எனக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொய்யா சாப்பிடக் கூடாது என்றுதானே சொல்வார்கள்?

      நீக்கு
    2. இல்லை, சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடிய பழங்களிலே கொய்யா, பப்பாளி, அன்னாசி இவை எல்லாம் உண்டு.

      நீக்கு
  20. அப்பா... வெத்தலை போதும்..ப்பா!..
    இன்னுங் கொஞ்சநேரம் தூங்குவோம்...

    அந்தா ..இந்தா.. ந்னு மணி நாலு ஆச்சு!.. அஞ்சரைக்கு அலாரம் வை!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கிளம்பி பணிக்குச் சென்று வந்து விட்டேன்...

      நீக்கு
  21. மாம்பழம் அப்படியே சாப்பிடத்தான் பிடிக்கும். அது ஒரு காலம். 16 வருடங்களுக்கு முன்னால்.அதுவும் சேலம் மல்கோவா, கேட்கவே வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு பழம் ஒவ்வொரு ருசி...

      நீக்கு
    2. இங்க பெங்களூர்ல பதாமி என்று வரும் அல்ஃபோன்ஸா (பெரிய சைஸ்) ரொம்ப ருசியாக இருக்கும். அதற்கு அடுத்ததுதான் மல்கோவா. நல்ல சீசனில் பதாமி கிலோ 50-60 ரூபாய்க்கும் மல்கோவா 70-80 ரூபாய்க்கும் கிடைக்கும். ஆனா பாருங்க இந்த தடவை என்னாகுமோ தெரியலை. இரு நாட்களுக்கு முன்புதான் வளாகத்தின் அருகில் தள்ளுவண்டியில் அழகிய பதாமி பார்த்தேன். அவர், கிலோ 150 ரூபாய் என்று சொன்னார். நான் 100 ரூபாய் வந்தால் வாங்குவேன் என்று சொல்லிவிட்டேன். அடுத்த வாரம் அல்லது பத்து நாட்களில் அந்த விலைக்கு வந்துவிடும்.

      பஹ்ரைனில் இருந்தபோது மும்பையிலிருந்து வரும் ராஜ்பூரி (பெரிய மாம்பழம். செம வாசனையா இருக்கும். தோல் சில சமயம் பசும் மஞ்சளாக இருக்கும்போதே நல்லா பழுத்திருக்கும்) வாங்குவேன். மல்லிகா என்ற வகை பழமும் நன்றாக இருக்கும். பங்கனபல்லி வகைப் பழம் எப்போதும் சாப்பிடுவதுதான். பாகிஸ்தானிலிருந்து வரும் மாம்பழம் (தோல் கசக்கும் ஆனால் நல்ல மஞ்சள் நிறத்தில், வாசனை குறைவான பழம்) ஓரளவு குறைந்த விலை, ஆனால் எங்களுக்கு மிகவும் பிடித்தமானது.

      மேங்கோ ஃபெஸ்டிவல் என்று லுலு சூப்பர் மார்க்கெட்டில் ஆரம்பகாலத்தில் 50 வகையான மாம்பழங்கள் கிடைக்கும். ஒரு நாள் அந்தப் படங்களை இங்கு பகிர்கிறேன்.

      நீக்கு
    3. சில பெயர்கள் எல்லாம் எனக்கு புதுசா இருக்கு...

      நீக்கு
    4. மஹாராஷ்ட்ராவில் ரத்னகிரி அப்பூஸ் என்றொரு வகை மாம்பழம். அதைச் சாப்பிட்டால் வேறே சாப்பிடத் தோன்றாது. நான் என் பெண்ணை வயிற்றில் சுமந்திருந்த சமயம் மும்பையிலிருந்து வந்த உறவினர் எனக்கு அதை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். அப்போது அதைச் சாப்பிட்டது தான். பின்னர் கிடைக்கவில்லை. விலை யானைவிலையை விட அதிகம் என்றார்கள்.

      நீக்கு
  22. வெற்றிலை மஹாத்மியம் அருமை. வெற்றிலை எங்க ஊர்ப்பக்கம் (மேல்மங்கலம், பெரியகுளம்) ரொம்பவே பிரபலம். ஆனால் பட்டுப் போன்ற மென்மையான வெற்றிலைகள். மடித்தால் அப்படியே பட்டுத்துணியைப் போல் மடியும். என் கல்யாணத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்காகச் சிறப்பு கவனிப்புக்கு என இந்த வெற்றிலைகளை வாங்கி வைத்துவிட்டு எங்க வீட்டிலே எல்லோரையும் அவங்க கேலி பண்ணினாங்க. வெற்றிலை நன்றாகவே இல்லை. குட்டிக்குட்டியாகக் காரமே இல்லாமல் இருக்கு. இதெல்லாம் வெற்றிலையா என்று சொல்லிவிட்டார்கள். :))))) வட இந்தியாவில் கர்பூரி பான் என்றொரு வெற்றிலை உண்டு. அதுவும் இப்படித் தான் மிருதுவாக இருக்கும். அந்த வெற்றிலை கிடைத்தால் நானும் எப்போதேனும் போட்டுக்கொள்வேன். எங்க அம்பத்தூர் வீட்டில் வெற்றிலைக் கொடி இருந்தது. நாங்க அம்பேரிக்கா போயிருக்கும்போது கவனிப்பு இல்லாமல் வாடிப் போய்விட்டது. அதன் பின்னர் நாங்களும் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரமில்லாவிட்டால் அது வெற்று இலை!!! அதன் காரத்தால் உமிழ்நீர் அதிகம் சுரக்க சுர்ரென்று உறிஞ்சுவார்கள்.

      நீக்கு
    2. கப்பூரி பான், மதுரைப்பக்கம் பிள்ளை பெற்றாள் வெற்றிலை எல்லாம் காரம் குறைவாக இருக்கும். கும்பகோணம் வெற்றிலையை ஒரு தரம்போட்டுக் கொண்டு எனக்கு மயக்கமே வந்துவிட்டது. அதன் பின்னர் நம்ம ரங்க்ஸைக் கேட்டுக் கொண்டு தான் வெற்றிலையையே எடுப்பேன். இப்போதெல்லாம் போட்டுக்கொள்வதில்லை. வாயெல்லாம் வெந்து விடுகிறது.

      நீக்கு
  23. கனடியன் நாய்ச்செல்லம் பூனைக்குட்டிகளைக் காப்பாற்றியது அருமையிலும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்மா... முகத்தில் என்ன பொறுப்பு பாருங்கள்...

      நீக்கு
  24. என் மாமனார் விடாமல் வெற்றிலை, புகையிலை போட்டுக்கொள்ளும் வழக்கம் உள்ளவர். நம்ம ரங்க்ஸும் எப்போதேனும் போட்டுக் கொள்வார். இப்போது யாரோ சொன்னார்கள் வெற்றிலை போட்டுக்கொண்டால் சர்க்கரை குறையும் என. அதனால் கிடைத்தபோதெல்லாம் போட்டுக்கொள்வார்.

    பதிலளிநீக்கு
  25. சாமா, கோபு நகைச்சுவை நல்ல சிரிப்பு. மூர்மார்ககெட் சரித்திரம் பழைய நாட்களுக்கு அழைத்துச்சென்றது.

    பதிலளிநீக்கு
  26. கொய்யாப்பழம் எனில் மதுரையில் தான். சின்ன வயசில் வாசலில் வரும். அம்மா அரிசி போட்டு வாங்குவார். மேலே பச்சையாக இருந்தாலும் இரு கைகளாலும் பிய்த்துச் சாப்பிட்டால் உள்ளே செக்கச் செவேர்னு இருக்கும். அது மாதிரிப் பழம் இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. ஒரு தரம் சென்னை எழும்பூரில் காத்திருப்புக்காகக் குளிர்சாதன வசதியுள்ள காத்திருக்கும் அறையில் 2 பெண்மணிகள் கொய்யாப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். மேலே பச்சை, பழமும் பெரிது. ஆனால் உள்ளே சிவந்த நிறம், வாசனை வேறே! எங்கே வாங்கினீங்கனு கேட்டால் திருச்சியாம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நமக்குக் கிடைக்கலையே அப்படிப் பழம்னு சொன்னேன். ஜங்க்ஷன் பக்கம் என்றார்கள். எனக்கும் ஒரு பழத்தைக் கொடுத்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ நைஸாக ஒரு பழம் அவர்களிடமிருந்து அடித்து விட்டீர்கள்!!!!! சிவப்புக் கொய்யா இன்னும் இனிப்பாக இருக்கும்.

      நீக்கு
  27. ஜோக்கெல்லாம் நல்ல நகைச்சுவை உணர்வுள்ளது. இப்போதெல்லாம் பார்க்க முடியாது. அந்தச் செல்லம் பூனைக்குட்டிகளைக் காப்பாற்றியது அருமை. அதன் அடிப்படைப் போர்க்குணம் இல்லாமல் குட்டிகளைக் காப்பாற்றி இருக்கே! அந்தப் பத்தாம் வகுப்பு மாணவி பற்றி ஏற்கெனவே படிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு தூக்கி வாரி போட்டது. என்னடா இது வில்லங்கமான தலைப்பாக இருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் உள்ளே மணக்கும், ருசிக்கும் வெற்றிலை சமாசாரம்! பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாயிருக்கு. 

      நீக்கு
    2. ஆமாம் கீதா அக்கா.. அங்கே நீங்களும் கமெண்ட் செய்திருந்தீர்கள்.

      நீக்கு
    3. வாங்க பானு அக்கா... ரசித்ததற்கு நன்றி. முதலில் வேறு தலைப்பு வைத்திருந்தேன். அப்புறம் இப்படி மாற்றினேன்!

      நீக்கு
  28. இனிய காலை வணக்கம்.

    சுவைத்துச் சாப்பிடுவது ஒரு வகை என்றால் பசிக்குச் சாப்பிடுவது ஒரு வகை. பலரும் பசிக்கு மட்டுமே சாப்பிடுகிறார்கள். வெகு சிலரே ஸ்லாகித்து, சுவைத்து சாப்பிடுகிறார்கள்.

    மாம்பழம் - ஆஹா நெய்வேலி நினைவுகள் எனக்குள் - நறுக்கி சாப்பிட்டு பழக்கமே இல்லை. முழுப் பழமும் நீங்கள் சொன்னது போல சிறு துளையிட்டு கசக்கிப் பிழிந்து உறிஞ்சி உறிஞ்சி சாப்பிடுவதில் உள்ள சுவை அலாதியானது தான். எத்தனைக்கு எத்தனை அங்கே மாம்பழம் சாப்பிட்டோமோ அத்தனைக்கு அத்தனை இங்கே குறைவு. பெரும்பாலும் சாப்பிடுவதே இல்லை.

    பான் - வடக்கில் தான் விதம் விதமான பான் வகைகள் - ஏகப்பட்ட வகைகளில் இங்கே பான் சுவைக்கக் கிடைக்கிறது ஸ்ரீராம். ஃபையர் பான் என்று கூட ஒன்று உண்டு இங்கே! இணையத்தில் Fire Paan என தேடிப் பாருங்கள் - சில காணொளிகள் கிடைக்கலாம்!

    நகைச்சுவை துணுக்குகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்.. வணக்கம். ஃபயர் பான் சென்னையில் பார்த்திருக்கிறேன். அதில் என்ன சுவையோ?!! வெறும் த்ரில்தான் இல்லை?

      நீக்கு
  29. நான் அசைவம் சாப்பிட்டால் பாக்கு மட்டுமே போடுவேன்.

    வெற்றிலை போட்டால் மாடு குத்தும் என்பார்கள் இதனால் போடுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன வயசுல நம்ம கிட்ட பெரியவங்க எல்லாம் கன்னா பின்னானு ரீல் சுற்றியதை எல்லாம் இன்னமும் நம்பிகிட்டு இருக்கீங்களா!

      நீக்கு
    2. முதல்முறை பாக்கு மட்டும் போட்டு நெஞ்செல்லாம் அடைப்பது போல இருந்தது எனக்கு... பாக்கு போட்ட உடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பார்கள்.

      நீக்கு
    3. பொதுவாக சாஸ்திரம் பார்க்கிறவர்கள் எனில் பிரமசாரிகள் வெற்றிலை தரிக்க மாட்டார்கள். திருமணம் ஆனவர்களே வெற்றிலை தரிப்பார்கள். இது ஒரு காலத்தில் கட்டாயமாக இருந்து வந்தது.

      நீக்கு
    4. ஆம்... சந்நியாசிகளுக்கும் ப்ரம்மச்சாரிகளுக்கும் - தாம்பூலம், பூமாலை, பொண் அணிகள் ஆகாது.. என்றொரு நியதி உண்டு...

      அதெல்லாம் இந்தக் காலத்துக்குப் பொருந்தாது...

      நீக்கு
    5. யாரும் பின்பற்றுவதும் இல்லை!

      நீக்கு
    6. //பாக்கு மட்டும் போட்டு நெஞ்செல்லாம் அடைப்பது போல இருந்தது எனக்கு// - அளவில்லா சாப்பாடு என்று போட்டிருக்கும் ஹோட்டல்களில் சாதம் வடிக்கும்போது ஒரு துணிமுடிச்சில் பாக்கையும் வைத்து அதனை சாதத்தோடு வடிப்பார்கள். அப்போ பாக்கின் தன்மை சாதத்தில் இறங்கி, அதிகமான சாதம் சாப்பிடமாட்டோம் என்று படித்திருக்கிறேன் (உண்மையாக இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு).

      //பிரமசாரிகள் வெற்றிலை தரிக்க மாட்டார்கள்.// - ஆமாம். இது உண்டு. ஆனால் எனக்கு அடுத்த ஜெனெரேஷனில் இதைப் பின்பற்றுபவர்கள் குறைவு (எங்க ஜெனெரேஷன்லயே கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டதனால், நாங்களே கன்வின்ஸ் ஆகவில்லை)

      //வெற்றிலை போட்டால் மாடு குத்தும்// - என் சின்ன வயசில் என் அம்மா இதையும் சொல்லியிருக்கிறார்கள் (மாடு முட்டும்). அப்புறம் பெண்ணைத் தொட்டுப் பேசினால் காது அறுந்துவிடும் என்று 3வது படிக்கும்போதே சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கிறார்கள். நானும் நம்பினமாதிரி காட்டியிருந்திருக்கிறேன் ஹா ஹா ஹா.

      நீக்கு
  30. துரை செல்வராஜூ சார் சொல்லியிருப்பது போல் வெற்றிலை கொடிக்கால் என்றுதான் கூறுவார்கள். அந்த கொடிக்கால்களில் விளையும் வெற்றிலையின் சுவை வீட்டில் வளரும் வெற்றிலைகளில் இருப்பதில்லை. அதனால்தானோ என்னவோ வெற்றிலையை வீட்டில் வளர்க்கக்  கூடாது என்பார்கள். எனக்கு சென்னையில் கிடைக்கும் வெற்றிலை மிகவும் பிடிக்கும். அதிகம் காரம் இல்லாமல் இருக்கும். கீதா அக்கா சொல்வதைப் பார்த்தால் அது மதுரை பிராண்ட் போலிருக்கிறது. ஆனால் என் வீட்டில் மற்றவர்களுக்கு        திருச்சியில் கிடைக்கும் வெற்றிலைதான் பிடிக்கும். அது மிகவும் காரமாக இருக்கும். பெங்களூரிலும் வெற்றிலை என்று ஒன்று கிடைக்கிறது ஹூம்! வெள்ளை வெற்றிலை என்று கேட்டால் நம்மூர் வெற்றிலை கிடைக்கும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெற்றிலையில் காரம் இருக்கக் கூடாது என்கிறீர்களா? துரை செல்வராஜு ஸார் இன்று வெற்றிலையில் புகுந்து விளையாடி விட்டார்.

      நீக்கு
    2. பனாரசி பானும் நன்றாக இருக்கும். கங்கைக்கரையில் விளைவது அல்லவா? சென்னையில் காரமான வெற்றிலையும் கிடைக்கும். நாம் பார்த்து வாங்கணும்.
      இந்த மாம்பழம் இருக்கே அதைச் சின்ன வயசில் சாப்பிடக் கொடுத்து வைக்கவில்லை. பெரியப்பா சென்னையிலிருந்து வரும்போது டஜன் கணக்கில் வாங்கி வருவார். அப்பா அதைச் சுற்றுவட்டாரங்களுக்குத் தானம் கொடுத்துவிடுவார். எங்களுக்கு ஒரு பழத்தை எடுத்து நறுக்கி மூன்று பாகம் ஆக்கி இரண்டு பக்கக் கதுப்புக்களையும் அண்ணன், தம்பிக்குக் கொடுத்துவிட்டுக் கொட்டையை நன்றாகச் சுரண்டிவிட்டு என்னிடம் கொடுப்பார். அதுவே அப்போது பெரிய விஷயமாக இருக்கும். பதினைந்து வயதில் தான் என் சித்தி வீட்டில் முழு மாம்பழம் சாப்பிட்டேன். அப்போக் கூட மனசுக்குள் ஓர் குற்ற உணர்வு, அப்பாவுக்குத் தெரிந்தால்! ஆனால் ஆசை விடலை. அதன் பின்னர் புக்ககத்தில் வீட்டிலும் மாம்பழம் காய்த்துப் பழுத்துப் பார்த்தாச்சு, குடி இருந்த அம்பத்தூரிலும் மாந்தோப்பு வீட்டிலேயே குடி இருந்தோம். அங்கேயும் ஒரு மாம்பழம் இரண்டு கிலோ என்னும் அளவுக்குப் பெரிதாக எல்லாம் பார்த்தாச்சு! ஆச்சரியமா இருக்கும், அந்த மாம்பழத்தைப் பார்த்தால். அத்தகைய மாங்காய்களோ, பழங்களோ இப்போது கண்களில் படுவதே இல்லை. நம்மவரே அதன் பின்னர் கூடையில் மாம்பழம் வாங்கியும் பார்த்தாச்சு. பெரிய அளவில் ஆசை இருந்தது இல்லை. பங்கனபள்ளி எனில் ஓரிரு துண்டங்கள். ருமானி எனில் சின்னதாக ஒரு பழம் என்ற அளவோடு சரி. இப்போது ஏழெட்டு வருடங்களாக அதுவும் இல்லை. எப்போவானும் யாரானும் வாங்கி வந்தால் உண்டு.

      நீக்கு
    3. அதுன்ன? ஏன் மாம்பழம் தருவதில் இப்படி ஒரு ஓரவஞ்சனை? சாப்பிடுவதில் என்ன தப்பு?

      நீக்கு
    4. மாம்பழம் மட்டுமில்லை, எந்தப் பழமுமே அப்பா சாப்பிட விடமாட்டார். வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாது என்று மறுத்துவிடுவார். அவர் வரை வாங்கிக் கொள்வார். அது என்னமோ அவருக்கு அதெல்லாம் ஆடம்பரச் செலவு என்னும் எண்ணம்! மற்றபடி ஓர வஞ்சனை னு சொல்ல முடியாது. அவருக்கு இதெல்லாம் செலவு செய்யணும்னா ரொம்ப யோசிப்பார். நாங்களும் கேட்டுப் படுத்த மாட்டோம். சமர்த்துக் குழந்தைகள்!

      நீக்கு
  31. அந்தக் காலத்துல
    தலையணை மந்திரம் என்று பிரசித்தம்...

    மாமியார்கள் வாயில் விழுந்து வரும்..

    ஆனால் உண்மையிலேயே தலையணை மந்திரம் ஒன்று உண்டு...

    அதைத் தாம்பூலத்தில் தான் உருவேற்றுவார்கள்..

    பேத்தி கால்..லய விழுந்து கெடக்கான்..ல!..

    கிழவிகளுக்கு ரொம்பப் பெருமையாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  32. நாக்கு நன்றாக சிவக்கும் என்பதற்காக சிறு வயதில் வெற்றிலை போட்டதுண்டு சென்னையில் வசிக்கும் போது இரவு நேரங்களில் சாப்பிட்ட பின் பீடா போட பிடிக்கும் சிறுவயதில் கொய்யா பழத்தை விட காய் ரொம்ப பிடிக்கும் அது ஒரு வகையான சுவை இப்போது இங்கே பழம் தான் கிடைக்கிறது..

    வாரத்தில் 3 நாட்கள் இரவு சாப்பிட்ட பின்பு மாம்பழம் சாப்பிடுவதுண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெற்றிலை போட்டுக்கொண்டு நாக்கை நீட்டி நீட்டி எவ்வளவு சிவந்திருக்கிறது என்று ஆராய்வோம்!

      நீக்கு
    2. பெண்களுக்கு உதடு சிவந்தால் ஓர்ப்படி பிரியமாய் இருப்பாள் எனவும் பற்கள் சிவந்தால் பர்த்தா பிரியமாய் இருப்பார் எனவும் நாக்குச் சிவந்தால் நாத்தனார் பிரியமாய் இருப்பாள் எனவும் சொல்வார்கள்.

      நீக்கு
    3. ஓர்ப்படி, பர்த்தா என்றால் ஆர் கீசாக்கா?

      நீக்கு
    4. இதுகூடத் தெரியலையா அதிரா? ஓர் அகத்தி, ஓர் படி (நேர் உறவு இல்லை. ஒன்று விட்ட உறவு, ஒரே வீட்டில் மணமுடித்தவர்கள் - இரு சகோதரர்களில் ஒருவரின் மனைவிக்கு, இன்னொருவரின் மனைவி, ஓர்ப்படி/ஓரகத்தி.

      பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால்
      எத்தாலும் கூடியிருக்கலாம் - - சற்றேனும்
      ஏறுமாறாக யிருப்பாளே யாமாகில்
      கூறாமல் சந்நியாசம் கொள்!! - இது ஒளவையாரின் தனிப்பாடல். புரியுதா?

      நீக்கு
  33. வெற்றிலைக்கு துணைக்கு களிப்பாக்கு, மதுரை வெட்டுப் பாக்கு (my favourite), ரக்ஷிக்ளால் என்று எல்லாம் சொன்னவர்கள் சீவலை விட்டு விட்டார்கள். சீவல்   சற்று  மென்னியை பிடிக்கும். திருச்சி  மலைக்கோட்டையில் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் அய்யர் கடையில்  கிடைக்கும் நெய்யில் வறுத்த சீவல் நன்றாக இருக்கும். சென்னையில் துரைசாமி சப் வே அருகில் இருக்கும் பாம்பே ஸ்டோர்ஸில் மதுரை பாக்கு என்று கிடைக்கிறது. வாங்கிப் பாருங்கள் வெற்றிலை வேண்டாம், வெறுமனவே  சாப்பிடலாம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசிக்லால் பாக்கு நானும் விரும்பிப் போடுவது உண்டு.

      நீக்கு
    2. ரசிக்லால் எல்லாம் ஒன்றுமே இல்லை என்னும்படி மதுரைப்பாக்குக்கு வெற்றிலையோடு சேர்ந்து சுண்ணாம்பு அளவாய்த் தடவிச் சாப்பிட்டால்! ருசியும் மணமுமாக இருக்கும். என் பெரியப்பா பிள்ளை (அண்ணா) மதுரையில் இருந்தவரை எங்களுக்கு ஒரு கிலோ பாக்கும் மொச்சைப்பருப்புப் பிதுக்குப் பருப்பும் வந்துவிடும். இப்போதெல்லாம் நாங்க மதுரை போனால் தேடிப் பிடித்து வாங்குகிறோம்.

      நீக்கு
    3. ரசிக்லால் எங்கள் வீட்டில் விசேஷமாக பார்க்கப் பட்டது!

      நீக்கு
  34. அடடே... // அது இல்ல விஷயம்... இது வேற... // நல்லாயிருக்கு... இதே போல் தொடரலாம்...

    முக்கனிகளுக்கு என்னை பிடிப்பதில்லை... அதனால் விட்டுவிடுகிறேன்...

    கொய்யாப்பழம் நல்லதொரு மலமிளக்கி...!

    செங்காம்பு வெத்திலை உடனே கரைந்து விடும்...
    "புளிச் புளிச்" காரணம் புகையிலையுடன் போடுவதால்... இதற்காகவே வெத்திலை போடுபவர்கள் தான் அதிகம்...

    அப்புறம், அனைத்து நோய்களுக்கும் தீர்வு - வெத்திலை பாக்கு சுண்ணாம்பு...!

    வெத்திலையின் உரைப்பு - கபத்தை எட்டி உதைக்கும்...!
    பாக்கின் துவர்ப்பு - பித்தத்தை கோபிக்கும்...!
    சுண்ணாம்பின் காரம் - வாதத்தை வீண்வாதமாக்கும்...

    பாக்குடன் ஏலம், கிராம்பு, சாதியில்லாத பத்திரி - என பல இருந்தால், வாயில் கிருமிகளுக்கு டாடா சொல்லிவிடும்...

    முடிவாக எங்கிருந்தும் கீழே விழுந்தால் கூட, சிலருக்கு எலும்பு முறிவு ஏற்படாது... காரணம் தினம் ஒரு வெத்திலை... எதையும் சேர்க்காமல், வெத்திலையை மட்டும் அப்படியே சாப்பிடலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெற்றிலையின் பயன்களை அடுக்கடுக்கி விட்டீர்கள் DD...

      நீக்கு
  35. ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே :-

    திருமணம் ஆன புதிதில்...மாப்ள வெத்திலை போடுவதை பார்க்க சுற்றிலும் கூட்டம்...

    தட்டில் செங்காம்பு வெத்திலை + மற்றவை... மூன்றையும் சரிவிகிதத்தில் சேர்த்து - அவை இருமுறை உள்ளே சென்று கொண்டிருக்கிறது... தனக்கும் வேண்டும் என்று ஒருவர் கேட்க...

    மாமனார் வீட்டில் விருந்து என்றால், விருந்து முடிந்தவுடன் உடனே எனது வீட்டிற்கு வரமுடியாது... அனைவரும் சாப்பிட்டு முடித்தபின், ஒரு கட்டைப்பை முழுக்க வெத்திலை, சுண்ணாம்பு டப்பா, எங்க ஊர் பேமஸ் ரோஜா பாக்கு + அதை கட் செய்ய கத்திரிக்கோல் - எனது பக்கத்தில் வரும்... அப்புறம் கிள்ளி கிள்ளி + கட் கட் + தடவி தடவி...!

    மாமியார், "மாப்ள, பேசிட்டே நேரம் போச்சி, இன்னும் கொஞ்ச நேரத்திலே 6 ஆகிவிடும்... டிபன் சாப்பிட்டு போகலாம்...!"

    இதில் வாய் சிவக்கவிட்டால் சிலர் எனக்கு "டூ" விடுவதெல்லாம் வேறு கதை... இப்படியும் ஒரு நம்பிக்கை... ஐயனே...! என்னது மூட நம்பிக்கையை விடுவதற்கு தான் குறள்கள் உள்ளதா... சரி ஐயனே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... ஸூப்பர் DD.. வாய் சிவக்கா விட்டால் அன்பில்லை என்று விடுவார்கள்!

      நீக்கு
  36. சென்னையில் நான் பார்க்க விரும்பி பார்க்காமல் தவற விட்ட இடங்களுள் மூர் மார்க்கெட் முக்கியமானது. அங்கிருந்த பழைய புத்தகக் கடை பற்றி சுஜாதா எழுதியிருக்கிறார். ஜோக்குகள் பிரமாதம்.பூனை குட்டிகளை காப்பாற்றிய நாயின் கருணை மானுடத்தை வென்றதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1971 ஆகஸ்டு மாதம் சென்னைக்கு - புரசவாக்கத்திற்கு வந்து சேர்ந்தேன். வாரத்தில் ஒருமுறையாவது நடந்தே மூர் மார்க்கெட் சென்றுவிடுவேன். எல்லா கடைகளையும் நோட்டம் விடுவேன். புத்தகக் கடையில் பல புத்தகங்கள் வாங்கியதுண்டு. அங்கே புத்தகம் வாங்குவது என்பது தனி டெக்னிக். அதை போகப்போகத்தான் தெரிந்துகொண்டேன்!

      நீக்கு
    2. நானும் மூர்மார்க்கெட் சென்றதில்லை. நாயின் கருணை... நாவை தா ரீப்ளேஸ் செய்கிறது!

      நீக்கு
    3. அந்த தக்கினிக்கியை எழுதலாமே கேஜிஜி....!

      நீக்கு
    4. மூர்மார்க்கெட்டில் அதிகம் ஏதும் வாங்கியதில்லை. ஆனால் குழந்தைகளுக்கு ஆயத்த ஆடைகள் வாங்கி இருக்கேன். மதுரை புதுமண்டபத்தில் தைத்துக் கொடுக்கிறாப்போல் அங்கேயே துணி வாங்கி அளவு கொடுத்துத் தைத்து வாங்கி இருக்கேன். புத்தகக்கடைகளில் எதுவும் வாங்கினதில்லை. மயிலை லஸ்கார்னர் ஆழ்வாரின் புத்தகக்கடையும், திருவல்லிக்கேணிப் புத்தகக் கடைகளும் தான்! (பைகிராப்ட்ஸ் சாலை) பாரதியார் சாலைனு பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

      நீக்கு
  37. ரிஷி கபூர் இறந்து விட்டாராமே  :((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடிகர் இர்ஃபான் கான் தான் இறந்து விட்டார் என்று படித்தேன், ரிஷ் கபூரும் இறந்து விட்டாரா?

      நீக்கு
    2. ஆமாம். இருவருமே கான்சர் காரணமாக இறந்துவிட்டார்கள். இ நேற்று, ரி இன்று.

      நீக்கு
    3. ரிஷி இறந்தது அதிர்ச்சி ப்ளஸ் வருத்தம். இன்னமும் பாபி ராஜா மனதில் நிற்கிறார். ராஜா மட்டுமா?

      நீக்கு
    4. ஆமாம், இரண்டு பேருக்கும் புற்று நோய்தான்.
      ரிஷி கபூர் பாபி படம் என் கணவருடன் முதன் முதலில் பார்த்த படம் கோவையில்.
      நல்ல குழந்தை முகம் சிரித்த முகம்.

      நீக்கு
  38. நேற்று இர்ஃபான் கான், இன்று ரிஷி கபூர். இதோ நிறுத்திக்கட்டும் இந்த வருடம்.

    பதிலளிநீக்கு
  39. விருந்தில் பீடாவை கண்டால் முதலில் எடுப்பது பீடாவைதான். மத்ததுலாம் கிடைக்கும். பீடா எப்பவாவது மட்டுமே கிடைக்குமென்பதால் அசிங்கம் பாராமல் சிலபல பீடாக்களை வாங்குவேன்.

    பெரிய சைஸ் கொய்யாவில் எப்பவும் சுவை இருப்பதில்லை. நாட்டு பழங்களில்தான் சத்தும், சுவையும் அதிகமா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீடாவில் கொஞ்சம் காரம் இருந்தால் நன்றாய் இருக்கும்.

      வத்றாப் கொய்யா தேங்காய் சைஸில் இருந்தாலும் வெகு சுவையாய் இருக்கும்.

      நீக்கு
  40. என் அண்ணியின் முதல் சிரார்தத்துக்கு பாலக்காடு சென்றிருந்தேன் வரும்போது அங்கிருந்து வெற்றிலை கொடியை சிறிது கிள்ளி எடுது வந்தேன் அது இப்போது எங்கள்வீட்டில் வளர்ந்து தழைத்து ஓங்கிஇருக்கிறது வெற்றிலையை ஓசி கொடுக்கக் கூடதுஎன்பாள் என் மனைவி விஜ்யவாடாவில் கொய்யாவை ஜாம் ப்ண்ட்லு என்பார்கள் தேங்காய் போல் பெரிதாய் இருக்கும் நான்கொய்யா தின்பதில்லை விதைகள் பல்லிடுக்கில் சிக்கிக் கொள்ளூம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வெற்றிலைக் கட்டி முதலில் வாங்கியது கேஜிஎஸ்ஸிடம்! அப்புறம் கடையில்!

      நீக்கு
    2. /அங்கிருந்து வெற்றிலை கொடியை சிறிது கிள்ளி எடுது வந்தேன்// - அப்போ, உங்க வீட்டுக்கு வந்தால் 'வெற்றிலைக் கொடியிலிருந்து சிறிது கிள்ளி எடுக்கலாமா' அல்லது கூடாதா?

      நீக்கு
    3. எடுக்கலாம்... பெரிதாக வளர்ந்திருந்தால். அதற்கு பதில் நான் வாங்கிய கடையிலேயே வாங்கிக் கொடுத்து விடுவேனே... முன்னரே சொன்னால்!

      நீக்கு
  41. மாம்பழத்தில் ரசாலி என்னு வகை உண்டு பழத்தை உறிஞ்சி சாப்பிட வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விப்பட்ட மாதிரியும் இருக்கிறது, இல்லை மாதிரியும் இருக்கிறது.

      நீக்கு
    2. உத்தரப் பிரதேசத்தில் இவ்வகை மாம்பழங்கள் அதிகம்.

      நீக்கு
  42. வெற்றிலையை சின்ன வயதில் பள்ளிக்கூடக் காலத்தில் கல்யாணவீடுகளில் பெரியவர்களுடன் சேர்ந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு போட்டு இருக்கிறேன் , மாடு முட்டும், படிப்பு வராது, கோழி கண்ணை குத்தும் என்று சொல்லிக் கொண்டே எனக்கு தேவையான சுண்ணாம்பு பாக்கு எல்லாம் வைத்து மடித்து தருவார்கள், எப்படி சிவந்து இருக்கு இவளுக்கு என்று பேசுவார்கள்.

    அப்புறம் நானாக போடும் காலத்தில் கும்பகோண வெற்றிலை பெரிதாக இருக்கும் அதுதான் கிடைத்தது அது மிகவும் காரம். அப்போது விட்டது வெற்றிலை அதன் பின் போடவே இல்லை.

    குழந்தை பிறந்த வீட்டில் பிரசவ லேகியம் சாப்பிட்ட பின் வேற்றிலை போட வேண்டும் கண்டிப்பாய். அதனால் அம்மா சின்ன சின்ன வேற்றிலை தளிர் வெற்றிலை தருவார்கள் அது காரமே இருக்காது.

    அப்புறம் வெற்றிலை போட ஆசையே இல்லை. பீடாவும் போட மாட்டேன்.

    மாம்பழம் வெட்டி தான் சாப்பிடுவேன். உறிஞ்சி சாப்பிட்டதே இல்லை.
    சில பழங்களில்(நீல்ம்) வண்டு இருக்கும் பார்த்து சாப்பிட வேண்டும்.

    கொய்யாபழம், முன்பு காய் , பழம் எல்லாம் சாப்பிடுவேன். இப்போது பழம் மட்டும்.
    சுவாமி மலை கொய்யா சிவப்பு கொய்யா நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது நான் வாங்கி வைத்திருக்கும் வெற்றிலையும் நல்ல பெரிய இலையாக உள்ளது.

      நீக்கு
  43. ஏன் ஸ்ரீராம் , தலைப்பு ஒரு மாதிரி இருக்கிறது...

    //

    திருமணம், விருந்து விழாக்களுக்குப் போனால் பீடா இருந்தால் எப்போதாவது எடுப்பேன். //
    நான் போவதே பீடாவுக்காகத்தான், ஆனால் பெரும்பாலும், பீடா என்பது டக்கென முடிஞ்சுபோகும், நாம் சாப்பிட்டு முடிச்சு பீடா எடுப்பதற்கும், அதனால என் கணவர் மற்றும் அண்ணி, அக்கா எல்லோரும் எனக்காக கையில முதலில் பீடா எடுத்து வைச்சிருப்பார்கள் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிஞ்சு ஞானி அதிரா:)30 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 2:18
      ஏன் ஸ்ரீராம் , தலைப்பு ஒரு மாதிரி இருக்கிறது...//

      இப்போதான் மனம் ஆறுதலைடைந்தது :) ஒரே சிந்தனை 

      நீக்கு
    2. நானும் நினைத்தேன் ஏஞ்சல், அதிரா, முதலில் வேறு தலைப்பு வைக்க நினைத்தராம்,அதையே மீண்டும் வைக்கலாம்.

      நீக்கு
  44. எனக்கு வெத்தலை பாக்குப் போடுவது எனில் ரொம்ப ரொம்பப் பிடிச்ச விசயம், ஆனா துப்பவே மாட்டேன்.. எனக்கது நினைச்சாலே சத்தி வரும்... பாக்கு என்பது, நல்ல சீரகம் கடுகு கலந்த சுவீட் பக்கட்டுக்கள் கிடைக்குதெல்லோ அதனோடு கறுவாவும் சேர்ப்பேன் ஹா ஹா ஹா.. அதைவிட நம் நாட்டுத் தமிழ்க் கடைகளில் பீடா பக்கட் எனக் கிடைக்கும், அதனுள் வெறும் தேங்காய்ப்பூவும் சீனியும் தான் இருக்கும், அதனை வெற்றிலையில் வைத்துச் சாப்பிடுவேன்... எங்கள் சின்னவர் என்னைச் சாப்பிட விடமாட்டார்ர். அந்த தேங்காய்ப்பூக் கலவை தனக்கும் வேணுமென்பார் கர்ர்:)).. ஆனா இங்கு கிடைப்பதில்லை, அது கனடாவிலதான் வரும்போது வாங்கி வருவோம் ஃபிரிஜ்ஜில் வைத்து எடுப்பேன்..[கொஞ்சம் ஈரப்பதமாக இருக்கும் தேங்கய்ப்பூ எல்லோ:)].. வெத்தலை என்பது வெளிர் மெல்லிய பச்சை நிறத்தில் இருப்பது வாயை ஒன்றும் பண்ணாது, ஆனா கடும் பச்சை நிறத்தில் பெரிய பெரிய இலையாக இருப்பது வாயை அள்ளிப்போடும்.. அது ஒரு தடவை போட்டால் ஒரு கிழமைக்கு வாயில் சுவை தெரியாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). என் கணவர் எங்கு வெற்றலை கண்டாலும் வாங்கி வந்து தருவார்.. ஆனால் இப்போ பாருங்கோ என் நிலைமையை:))..

    அதாவது மூத்தவருக்கு யுனீயில் லெக்சர் கிளாஸில் பெரிசாக ஸ்கிரீனில்.. வெற்றலையின் படத்தைப் போட்டுவிட்டு.. படிப்பித்தார்களாம்.. இந்த இலையாலதான் மெளத் கான்சர் வருகிறது என.. அதை டக்கெனப் படம் பிடிச்சு எடுத்து வந்து, அம்மா நீங்கள் இனி இந்தக் கிரீன் லீவ் சாப்பிடக்கூடாது என்றிட்டார்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. வெற்றலையின் பயன்கள் பற்றி எவ்வ்வளவோ எடுத்துச் சொல்லியும், அது புகையிலை பாக்கு சுண்ணாம்பு எனப் போட்டால்தான் கூடாது எனச் சொல்லியும் அவர் கேட்பதாய் இல்லை:))... எனக்கு வியாழமாற்றம் போலும் ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த தேங்காய்ப்பூ சாப்பிட எனக்கும் பிடிக்கும். வெற்றிலையால் கேன்ஸரா? புதுத் தகவலா இருக்கே...

      நீக்கு
  45. நான் ஊரில் இருந்த காலட்த்ஹில் ஆர் வீட்டிலும் வெற்றலைக்கொடி இருக்கவில்லை, ஆனால் இப்போ வீட்டுக்கு வீடு வெற்றிலைக் கொடி, சும்மா பூமரம்போல நிற்கிறதாம்.. எங்கள் வீட்டிலும் நிற்குதாம், அப்படியே பாக்கு மரங்களும் நிறைய நிக்குது, அண்ணன் இப்போ ஊருக்குப் போகிற நேரமெல்லாம், எங்கள் வீட்டு வெத்தலையில் இலை பிடுங்கிச் சாப்பிட்டுக் கொண்டு, எனக்கு வீடியோக் கோல் பண்ணி . இங்க பார் நான் வீட்டில பிடுங்கிய வெத்தலை சாப்பிடுகிறேன் என வெறுப்பேத்துவார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

    எங்கள் அம்மா அப்பா வெத்தலை பாக்கு தொடுவதில்லை, ஆனா நாங்கள் மூவரும், எங்கு கண்டாலும் எடுப்போம் ஹா ஹா ஹா.. அது அப்பம்மாவில் இருந்து வந்த பழக்கம்:)).. இங்கு நமக்கு வெத்தலை கிடைப்பதும் கஸ்டம், எப்போதாவது தமிழ்க் கடைக்கு வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே கூட நாங்கள்தான் வெற்றிலைக்கொடி வைப்பதில் தாமதம்! பொதுவாக செடிகள் வளர்ப்பதில் பாஸுக்கு விருப்பம் உண்டு. ஆனால் மெனக்கெடுவது கஷ்டமாய் இருக்கிறது.

      நீக்கு
  46. பனியிலிருந்து பூனைகுட்டிகளை காப்பாற்றிய செல்லகுட்டியின் கருணை மகிழ்ச்சி அளிக்கிறது.
    பொக்கிஷ பகிர்வு அருமை.
    முன்பு இரண்டு தடவை மூர்மார்கெட் போய் இருக்கிறேன்.
    தலைப்பு வைத்த காரணச் செய்தி படித்தேன்.

    பதிலளிநீக்கு
  47. வலைப்பக்கம் திறந்ததும் தலைப்பு         ????    சற்றுஅமைதிப்படுத்திவிட்டு இறுதியில் வருகின்றேன் அதற்கு 

    பதிலளிநீக்கு
  48. கொய்யாப்பழம் மாம்பழம் நெல்லிக்காய்.. இவை மூன்றும் சொல்லி வேலையில்லை ஸ்ரீராம், நாங்கள் சின்ன வயதில் இருந்தே இந்தப் பழமரங்களோடுதான் வளர்ந்தோம்... சிவப்புக்கொய்யா, மஞ்சள்க்கொய்யா பின்பு “யானைக்கொய்யா” என ஒன்று... அதைத்தான் நீங்கள் சொல்லியிருப்பது தேங்காய் சைஸ் என, ஆனா அது உரம்போட்டால்தான் அப்படி வரும்போல, எங்களுக்கு ஓரளவு பெரிய விழாம்பழ சைஸில் கிடைத்தது...

    பகலில் பொழுது போகவில்லை எனில், கொய்யா மரத்தடியில் போய் இருந்து அண்ணாந்து பார்த்தால் அங்கங்கு பல்ப் பூட்டியதுபோல பழுத்திஒருக்கும், சிலது அணில் வவ்வால் கோதியிருக்கும், ஆய்ந்து சாப்பிட்டு அலுத்துப் போகும்... நிறைய காய்க்கும்போது என்ன பண்ணுவது, வீட்டுக்கு வருவோர் ஆய்ந்து சாப்பிடுவினம்..

    அப்படித்தான் மாம்பழமும் பென்னாம் பெரிய இரு மரங்கள்.. கற்கண்டு போல கட்டியாக, நார் இல்லாத மாம்பழம்... இலங்கையில் அதன் பெயர் “கறுத்தக் கொழும்பான்”.. தோல் கடும் பச்சை நிறமாக இருக்கும், பழுத்தால் மஞ்சள்...

    ஆனா இதன் பிஞ்சு கயரும், பெரிசாக சாப்பீட முடியாது, பச்சையாக சாப்பிடுவதெனில் கிளிச்சொண்டு மாங்காய்தான் சுவை. புட்டுக்கு அதிகம் சேர்த்துச் சாப்பிடுவோம்.

    //உண்ணும் கலை போலவே பழங்கள் பற்றியோ என்னவோ சொல்ல வர்றேன்னு நினைச்சிருப்பீங்க...

    இல்லீங்க... அது இல்ல விஷயம்... இது வேற... அதாவது என்னன்னா...//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது தெரியாமல் நானும் புலம்பிட்டனே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் சிறுவயதில் ஏகப்பட்ட செடி மரங்களோடு வளர்ந்திருக்கிறேன். கொய்யா, நெல்லி, மா மரங்கள். எலுமிச்சை, நாரத்தை, அப்புறம் பவழமல்லி, ரோஜா, செண்பகப்பூ (என்று ஞாபகம்) என்று... போகப்போக நான் வளர்ந்த இடங்களில் அதற்கு வாய்ப்பில்லாமல் போனது.

      நீக்கு
  49. //படித்ததில் நெகிழ்ந்தது...//

    ஓ நெகிழச் செய்கிறது.. இவரை நான் எங்கோ பார்த்திருக்கிறேனே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர் எனக்கு மெயிலில் இந்த தகவலை அனுப்பியதே நீங்கள்தான் ஞானி .வரவர வயசாவதால் மறதி அதிகரிக்குது உங்களுக்கு 

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நேரிலும் அங்கு பார்த்ததைப்போல இருக்குதென்றேன்:))

      நீக்கு
    3. அப்படியா... இவரை ஏற்கெனவே நீங்கள் இருவரும் அறிவீர்களா?

      நீக்கு
  50. இங்கே லண்டன் வந்த புதிதிதில் imli ஸ்வீட் அப்புறம் இந்த பான் முஃவாஸ் இதெல்லாம் ஒரு கடையில் பார்த்தேன் அந்த கலந்த பாக்கு இனிப்பில் பொரித்த பாகு சேர்த்த பெருஞ்சீரகம் எல்லாம் செம டேஸ்டியா இருந்துச்சா ஒரு பாட்டில்  வாங்கி ஒரு வாரத்தில்  முடிச்சேன் பாக்கு இனிப்பை மட்டும் அது அதிக இனிப்பில்லை ஆனா  வாசனையா இருக்கும் ஒரு வார முடிவில் நெஞ்சு அடைக்கும் உணர்வு வந்துச்சி அதோட விட்டேன் .வெற்றிலை தோட்டத்தின்  பக்கத்தில் ஊரில் இருந்திருக்கோம் அது பார்க்கவே அழகு .மற்றபடி அது ஈர்க்கவில்லை உணவாய் ..ஆனால் ரசம் வைக்கும் போது ஒன்றிரண்டு வெற்றிலைகளை துண்டாய் கிள்ளி போடணுமாம் அது நெஞ்சு சளிக்கு நல்லதுங்கறாங்க .மற்றபடி வெற்றிலை சாப்பிட்டு  கண்ட இடத்தில துப்புவோருக்கு நான் அன்னியள் :) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அஞ்சு இப்போ இப்போதான் அறிகிறேன், வெத்தலையை, கிறீன் ஸ்மூத்திக்கும் உபயோகிக்கலாமாம்.

      நீக்கு
    2. பாக்கின் பழக்கம் அதிகம் இருந்ததில்லை. ரசத்தில் வெற்றிலையா? முயற்சிக்கிறேன்!

      நீக்கு
  51. ஹா ஹா ஹா..கண் டாக்டர் என பேசுவதைப்பார்க்க எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருது... இந்த ரெலிபோன் கோலில், நம் குரலில் வொயிஸ் ரெக்கோடிங் செய்து போட்டு விடலாம் எல்லோ.. லாண்ட் லைனில்.. அது அப்படி ஆரம்பிச்சிருந்த காலத்தில்.... எங்கள் ஒரு அப்பம்மா கோல் பண்ணுவா, எதிரே வொயிஸ் ரெகோர்ட் ஹலோ.. எனத் தொடங்கியதுதான் தாமதம், மிகுதியைக் கவனிப்பதில்லை, பேரன் தான் ஹலோ சொல்லிட்டாரே என, மளமளவெனப் பேசிக்கொண்டு போவா, கதைக்கிறாவாமாம்ம் ஹா ஹா ஹா பின்பு அருகில் இருப்ப்போர் சொல்ல்லுவினமாம், இல்லை அது ரெக்கோடட் வொயிஸ், கட் பண்ணுங்கோ என்றபின்புதான் கட் பண்ணுவாவாம் ஹா ஹா ஹா ஹையோ ஆண்டவா.

    இப்படித்தான் ஈமெயில் வந்த ஆரம்ப காலத்தில, ஒரு அம்மம்மா தன் மகனுக்கு ஏதோ ஒரு அவசர மெசேஜ் அனுப்பச் சொல்ல, பேரன் சொன்னாராம், ஈமெயிலில் அனுப்பி விடுகிறேன் அம்மம்மா என.. அதுக்க்கு இவ கேட்டாவாம்.. “அது ஒரு கிழமைக்குள் போய்ச் சேர்ந்திடுமோ தம்பி” என.. இப்படிக் கதைகள் பல...

    இனி வருங்காலத்தில், நாம் என்ன கூத்தெல்லாம் பண்ணுவோமோ ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைவி இங்கேதான் இருக்கீங்களா அந்த தலைப்பை பற்றி ஒண்ணுமே சொல்லலியே நீங்க ??

      நீக்கு
    2. அதுதானே என் முதல் கொமெண்ட்டே:))... ஏனோ மனதுக்கு சங்கடமாக இருக்கு அத் தலைப்பு.. ஒருவரை டக்கெனக் குறை சொல்வது சுலபம், ஆனா அவர் அவர் இடத்தில் இருந்துதான் யோசிக்க வேஎண்டும்.

      நீக்கு
    3. அப்போ அந்தப் பெண்ணைக் கெட்டுப்போக வைத்த “நல்லவர்” எங்கு போயிட்டார்ர்?????

      நீக்கு
    4. இருங்க கடைசியில் வந்து சொல்றேன் அந்த விஷயத்துக்கு 

      நீக்கு
    5. கண் டாக்டர் சம்பவம் நீங்கள் சொல்லி இருக்கும் உதாரணம் படிக்கையில் எனக்கும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது... மொபைலில் டைப் அடிக்க அலுப்பாய் இருக்கிறது.

      நீக்கு
  52. கொய்யா செங்காய் தான் மிகவும் பிடிக்கும் .எங்க வீட்டில் மரமுண்டு பச்சை இளம்பச்சை நிறத்தில் காய்த்து பழுக்கும் .அணில்களுக்கு போக மிஞ்சியதை எப்போவாவது சாப்பிடுவோம் .வெட்டி உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிட செம சுவை .மாம்பழங்களில் மல்கோவா பங்கனப்பள்ளி கிளிமூக்கு எனது favourite  

    பதிலளிநீக்கு
  53. சாமா எப்படி இவ்ளோ தைரியமா பேசறார் :))

    பதிலளிநீக்கு
  54. /படித்ததில் நெகிழ்ந்தது...//
    எனக்கு  இந்த செய்தி முன்பு பிஞ்சு அனுப்பியிருந்தார் .
    ///  சினையுறும் சிறு உயிர்கூட உறவென புரிந்திடப்பாரு //என்ற எங்கள் அங்கிள் பாடிய வரிகள் எவ்ளோ பொருத்தம் 

    பதிலளிநீக்கு
  55. மூர் மார்க்கெட் எரிவதற்குமுன் எத்தனை அழகு விதவிதமான பொருட்கள் மற்றும்  காமிக்ஸ் எங்கம்மா எனக்கு ஒரு சூட்கேஸ் நிறைய Enid Blyton புக்ஸ் காமிக்ஸ் எல்லாம் வாங்கி  தந்தாங்க .பிறகு எல்லாம் நாசம் அகையது அவ்விடம் .செகண்ட் ஹேண்ட் புக்ஸ் கூட நிறைய கிடைக்கும் .

    பதிலளிநீக்கு
  56. ஒருவர் நல்லவரா கெட்டவரா என்று தீர்மானிக்க நாம் யார் ? பொதுவில் நான்  கவனித்தது ஒருவரை சுலபமாக ஜட்ஜ் செய்கிறாரகள் .அவள் ஒரு 10 ஆம் வகுப்பு பெண் .இந்த செய்தியை இப்படி பத்திரிகையில் போட்டதே மாபெரும் தவறு .உண்மையில் அப்பெண்ணுக்கு நல்லது செய்யணும்னு நினைத்திருந்தா குழந்தையை  தத்துக்கொடுத்து அப்பெண்ணுக்கு வாழ்க்கையை கற்பித்து மேலே படிக்கசெய்திருப்பார்கள் .இப்படி பெட்டிச்செய்தியாக போட்டு அசிங்கப்படுத்தமாட்டார்கள் கேவலம்பிடித்த ஊடகங்கள் .அவளுக்கு குழந்தை பிறக்க அவள்மட்டுமே காரணமா ? எத்தனை பொறுக்கிகள் பசுத்தோல் போர்த்தி அலைகின்றனர் நேற்றுகூட பெண்களை படமெடுத்து அதனால் வீடுகட்டி ஒரு கயவன் பற்றிய செய்தி படித்தேன் .அந்த பெண்ணை பற்றிய செய்தி போட்ட ஊடகங்களால் அந்த கேவலமான ஐந்து அவளை கெடுத்த பேய்யை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே .நியாயப்படி அந்த ஜென்மத்தை பற்றியுமல்லவா செய்தி போட்டிருக்கணும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. யார் என்ன சொன்னாலும், நாம் பல பெண்கள் வந்துபோகும் இடத்தில், இப்படி ஒரு தலைப்பு வைத்துவிட்டாரே ஶ்ரீராம் எனத்தான் எனக்கு வேதனையாக இருக்கு:(...

      நீக்கு
  57. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  58. வெற்றிலை பீடா போடும் பழக்கம் இல்லை. இதுவரை போட்டதும் இல்லை. குழந்தை பிறந்த போது வெற்றிலை போடச் சொன்னார்கள். போட்ட பழக்கம் இல்லாததால் மருந்து என்று கூடப் பழகிக் கொள்ளவும் இல்லை.

    ஹையொ துப்புவது பற்றிச் சொல்லாதீங்க. பொது இடங்களில் எல்லா இடங்களிலும் சிவப்புதான்...உவ்வே...சாதாரணமாகத் துப்புவதைக் கண்டாலே நான் கடுப்பாவேன். இது இன்னும் கடுப்பாகும். பொதுச் சுகாதாரக் கேடு.

    கீதா

    பதிலளிநீக்கு
  59. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி - பயத்தில் செய்து பிறகு தாய்மை உணர்வு வந்திருக்குமோ? இருந்தாலும் இவற்றிர்க்கெல்லாம் காரணமானவனுக்குத்தான் தண்டனை கொடுக்கணும். எப்போதும் ஊடகங்கள் பெண்களைப் பற்றிப் பேசுவதே வழக்கம். இந்த விஷயத்தைத் தலைப்பாக்கினது அவ்வளவாக நன்றாக இல்லை.

    நான் சேலம் பக்கத்தில் வேலை பார்த்த ஊரில் (அப்போ எனக்கு உலகம் அவ்வளவு தெரியாது), எனக்குத் தெரிந்த ஒருவர், அருகில் எங்கோ முள் வேலியில் பிறந்த பெண் குழந்தையைத் தூக்கி எறிந்துவிட்டிருந்ததைப் பார்த்து, போலீஸின் அனுமதியுடன், தன் குழந்தையாக வளர்த்தார். (எனக்கு அந்த நியூஸெல்லாம் அப்போ அதிர்ச்சிதான். எப்படி..எங்கோ கிடந்த குழந்தையை தன் மகளாக வளர்க்க நினைத்திருக்கிறாரே என்றெல்லாம்). அவர் வீட்டிற்கும் பிறகு-அடுத்த முறை அதே கம்பெனியில் திரும்பவும் வேலைக்குச் சேர்ந்தபோது போயிருக்கிறேன். மனதுக்கு சிலிர்ப்பாக இருந்தது. எவ்வளவு பெரிய உள்ளம் என்று நினைத்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  60. வெற்றிலையில் இரு பக்கமும் தேன் தடவி அதில் மிளகு வைத்துச் சாப்பிட்டால் இருமல் சளிக்கு டைரக்ட்டாக ரொம்ப எஃபெக்ட்டிவ் நல்லது என்று சொல்லியும் நான் இப்படி நீங்கள் சொல்லிருப்பது போல் தான் குடித்தேன்.

    //சமீபத்தில் இருமல், சளி - கொரானா காலத்துக்கு முன் - என்று அவதிப் பட்ட ஒரு சமயத்தில் நான்கு டம்ளர் தண்ணீர் எடுத்து, அதில் நான்கு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு, நான்கு கற்பூரவல்லி இலைகளையும் கிள்ளிப்போட்டு, சிறிது மிளகு, ஒரு பல் பூண்டு, கொஞ்சம் சீரகம், கொஞ்சம் உப்பு போட்டுக் கொதிக்க வைத்து //

    கீதா

    பதிலளிநீக்கு
  61. என் மாமா வீட்டில் வெற்றிலைக் கொடி பெரிய அளவில் வளர்ந்திருக்க //

    கௌ அண்ணா வீட்டில் வெற்றிலை வெற்றி நடை போடுதே...படம் பார்த்தேன். ஏன் ஸ்ரீராம் வளரவில்லை? இது டக்குனு வளர்ந்திருமே...எங்க மாமியார் வீட்டில் ஹையோ கௌ அண்ணா வீட்டில் வளர்ந்திருப்பது போல அவ்வளவு வளர்ந்திருக்கு.

    சீக்கிரம் வளருமே ஸ்ரீராம்...ஏன் வளரவில்லை??????????????????

    அப்புறம் ஒருவழியாய் வளர ஆரம்பித்தது. விதிக்குப் பொறுக்கவில்லை. அந்நேரம்தான் நாங்கள் வீடு மாறும் சமயம் வந்தது. வீட்டை மாற்றும் மும்முரத்தில் வெற்றிலையை மறந்தோம். இழந்தோம். இப்போது கடையிலிருந்து ஒரு வெற்றிலைச் செடி /கொடி வாங்கி வைத்திருக்கிறோம். சரியாக வருகிறதா என்று பார்க்க வேண்டும். //

    இது வளரும் ஸ்ரீராம் நன்றாக...நான் அடுத்த முறை வரும் போது அது கொடியாக வெற்றியுடன் என்னை வரவேற்கும் பாருங்க...உங்க கிட்டருந்து நான் ஒரு கொடி எடுத்து வருவேன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  62. கொய்யா ரொம்பப் பிடிக்கும். இனிப்புக்காரர்களும் சாப்பிடலாம். ஆனால் ரொம்பப் பழமாகச் சாப்பிடக் கூடாதாம். கொஞ்சம் பழமாக என்று சொன்னாலும், நாம விடுவமா..

    கொய்யா சளிக்கு ரொம்ப நல்லது. இப்போது கூட மருத்துவர்கள் இந்தத் தொற்று சமயத்தில் கொய்யா சாப்பிடுங்க என்று சொல்லிக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்காங்களேஏஏஏ

    அது சரி ஏன் கொய்யா அதிகம் சாப்பிடக் கூடாது? (எதுவுமெ அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுனு சொல்லப்டாது!!!) எனக்குத் தெரிந்து கொய்யா டக்குனு வெயிட் போடும் என்று சிறு குழந்தைகளுக்கு ஊட்டம் அளிக்கக் கொடுக்கச் சொல்லுவாங்க. மற்றப்படி தெரியவில்லை..

    கீதா

    பதிலளிநீக்கு
  63. காம்பிருக்கும் முனைக்கு எதிர்முனையில் சிறிதாகத் துளையிட்டு மெல்ல உறிஞ்சத் தொடங்க வேண்டும். மெதுமெதுவாய் பழத்தின் கீழ்ப் பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அமுக்கிப் பிதுக்கி மேலே கொண்டு வந்து உறிஞ்சிச் சாப்பிடவேண்டும். //

    ஹையோ ரொம்பப் பிடிக்கும். இதை துளசியின் வீட்டிற்குச் சென்ற போது அவங்க தோட்டத்தில் இருந்து வந்தவை என்று கூடை கூடையாக இருந்தது! செம டேஸ்ட்...(துளசியின் கருத்திலும் இது வரும் எனவே இதைப் பற்றி இத்தோடு .)

    விதைப்பகுதியை உள்ளங்கைகளுக்குள் பிடித்தவண்ணம் அமுக்கி கைகளில் வழியும் மாம்பழ ஜூஸை சாப்பிடவேண்டும்! //ஆஹா!!! ஹைஃபைவ்!! கீதாக்காவைக் கண்ணை மூடிக்கச் சொல்லிடலாம் ஸ்ரீராம்!!!

    இது வேற... அதாவது என்னன்னா...// ?????????

    ஆடுத்த வாராம் என்னன்னா தொடருமோ?!!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  64. செல்லம் நா செல்லம் தான்...என் செல்லமே உன்னை வாரி அணைத்துக் கொஞ்ச வேண்டும் போல இருக்குடி!! அந்தப் பூனைக்குட்டிகள் என்ன அழகு! ஹப்பா காப்பாற்றப்பட்டனவே எனக்கும் ரொம்பப் பிடித்து ரசித்தேன்...செல்லங்களை..

    கீதா

    பதிலளிநீக்கு
  65. கண் டாக்டர் ஜோக் ஹா ஹா ஹா ஹா ஹா ...கண்ணாடியை "மாற்றியே" போட்டுக் கொண்டுவிட்டாரோ?!!!!!

    அந்தப் 10 ஆம் வகுப்புப் பெண் நல்லவள் கெட்டவள் என்று எப்படி நாம் சொல்லிவிட முடியும்? இதற்குக் காரணங்கள் எவ்வளவோ உள்ளன. அந்த்ப் பெண் குழந்தை போலீஸிடம் மீண்டும் வந்த போது அக்குழந்தையை ஏமாற்றியவன் யார் என்று கேட்டார்க்ளோ? ஏன் அவன் பற்றிய செய்தி இல்லை? சரி இப்பெண் குழந்தையே உடன்பட்டு செய்திருந்தாலும்...எப்படி அவள் பெற்றோருக்குத் தெரியவில்லை? பல கேள்விகள் எழுகின்றன. இக்குழந்தையை நல்லவள் கெட்டவள் என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? சமூகம் எளிதில் ஒரு பெண்ணைக் கெட்டவள் என்று ஜட்ஜ் செய்கிறது. நாம் யார்? சொல்வதற்கு? போலீஸ் அபெண்ணைப் பற்றிய செய்தியை இப்ப்டி வெளியில் விடாமல் அவள் பெற்றோர் யார்? அவளைக் கெடுத்த அந்தப் பாதகன் யார் என்பதை எல்லாம் கேட்டு அப்பாதகனைப் பிடிக்காமல் இவளைப் பற்றி மட்டும் ஊடகத்தில் செய்தி வரலாமோ? அப் பெண் குழந்தைக்கு நல்ல கவுன்சலிங்க் கொடுத்து அவளை மேலும் படிக்க ஆதரவு கொடுத்து அல்லது நல்ல தொழிற்கல்வி கற்க வைத்து அவளுக்கு ஒரு வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாமோ? இதுதானே ஒரு சமூகத்தின் கடமை? பிறந்த குழந்தையை நல்லதொரு காப்பகத்தில் சேர்த்து வளர வைத்திருக்கலாம். அல்லது தத்தெடுக்கும் நல்ல பெற்றோரிடம் ஒப்படைத்து வளர வைத்திருக்கலாம்...இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்..ஒரு நல்ல கதைக்கரு கிடைத்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  66. >>> ஸ்ரீராம் - சென்னை மக்கள் திருந்தவில்லை. இன்றைய அனுபவம்.<<<

    அப்போது பெருமழையில் சென்னை மிதந்ததே..
    இனிமேல் ஊரை சுத்தமாக வைத்துக் கொள்வோம் என்றெல்லாம் சபதம் எடுக்கப்பட்டதே!..
    சென்னை திருந்தியா விட்டது?...

    அது போலத்தான் இதுவும்...

    காய்கனிக் கடைகளை விட இறைச்சிக் கடைகளில் கூட்டம் அதிகம் என்று செய்திகள் வருகின்றன... அரசு - இறைச்சிக்கு விலை நிர்ணயம் செய்யும் அளவுக்கு ஆகி விட்டது...

    ஆக, ஒட்டு மொத்தத்தில் தமிழகம் திருந்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகின்றது...

    பதிலளிநீக்கு
  67. அதிரா @
    >>> இந்த இலையாலதான் மெளத் கான்சர் வருகிறது என.. <<<

    இப்படியான புரிந்துணர்வு இல்லாத செயல்களினால் தான்
    அடிப்படையான சில கலாசார பழக்க வழக்கங்கள் சிதைக்கப்படுகின்றன...

    உடனடியாக நெஞ்சு சளியை அகற்றும் கற்பூரவல்லி, வெற்றிலை, துளசி இவை போல எளிய செலவில்லாத மருந்துகள் உண்டா ஆங்கில முறையில்!?...

    நல்லவேளை இப்படியான இய்ற்கைச் செல்வங்கள் நிறைந்த நாட்டில்
    நம்மைப் பிறக்க வைத்தான் - இறைவன்!...

    பதிலளிநீக்கு
  68. இங்கு கேரளக் கல்யாணங்களில் வெற்றிலை பாக்கு வைக்கும் வழக்கம் இல்லை.பீடாவும் கிடையாது.

    எங்கள் வீட்டில் மாம்பழம், பலா எல்லாம் இம்முறையும் நிறைய. பலாப்பழம் பறித்துவிட்டோம். மனைவியின் தங்கையின் மலைத் தோட்டத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சிறிய சிறிய மாம்பழங்கள் நிறைய விளையும். கூடை கூடையாக இங்கும் வரும். வெகு அருகில் தான். அதனை நீங்கள் வர்ணித்திருப்பது போல் தான் நாங்கள் சாப்பிடுவோம். அதில் தனி இன்பம் தான். மாம்பங்களும் மிக மிகச் சுவையாக இருக்கும். பெரிய மாம்பழங்களைக் கூடச் சில சமயம் அப்படியே சாப்பிடுவதுண்டு. கட் செய்தும் சாப்பிடுவதுண்டு. அப்படிச் சாப்பிடுவது ஒரு சுவை என்றால் சிறு மாம்பங்களை இப்படிச் சாப்பிடுவது தனி சுவைதான்.

    ஜோக்குகள் ரசித்தேன்.

    அப்பெண் குழந்தை பாவம். யார் ஏமாற்றினார்க்ளோ? நீங்கள் கேட்டிருப்பது போல் இப்போது அந்தச் சிறிய குழந்தை எங்கிருக்கிறதோ? எப்படி இருக்கிறானோ? இந்தப் பெண் குழந்தை என்ன ஆனாளோ? இப்படி எத்தனை பேர் நம்மூரில் உள்ளனரோ? பெண் குழந்தைகள் செய்திகள் மட்டும் வருகின்றன. இப்படித் தவறு செய்யும் ஆண்கள் எத்தனையோ பேர் தப்பித்துவிடுகிறார்கள். நிர்பயா கேஸ் போல் ஏமாற்றும் ஆண்கள் தண்டிக்கப்பட வேண்டும். வெளியில் தெரியாமல் போகும் விபரீதங்கள் எத்தனையோ?

    அந்த நாயின் செயல் வியக்க வைக்கிறது. அதனையும், பூனைக்குட்டிகளையும் மீட்ட அந்த மனிதருக்கும், அதைக் காப்பாற்றிய விலங்கின ஆர்வலர்களுக்கும் பாராட்டுகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  69. ஸ்ரீராம் தலைப்பு கொஞ்சம் சரியா இல்லியோ? ஒரு வேளை எஃப்பியில் அந்த கருத்தில் உள்ள அந்த வாசகத்தைத் தலைபப வைச்சிட்டீங்களோ?!!!!!! ம்ம்ம்ம்ம் இருந்தாலும்...ஏனோ...மனம் ...ஏற்க வில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  70. பெரிய கொய்யா நானும் சாப்பிட்டிருக்கிறேன் சென்னையில் தான். தாய்லாந்து என்றுதான் பாரிஸ் கார்னரில் சொன்னாங்க...ஆனால் ஏனோ நம்மூர் சின்ன கொய்யா சிவப்புக் கொய்யா போல இல்லை சுவை. ஆனாலும் விரும்பிச் சாப்பிட்டிருக்கிறேன் ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!