நெல்லைத்தமிழன் :
நிருபர்களுக்கு அவங்க போகும் இடத்தில் (பெரிய கம்பெனி ஷோக்களுக்கு செய்தி சேகரிக்க) Press Kit என்று தருகிறார்களே. அது லஞ்சம் இல்லையா?
# இது மாதிரியான "அளிப்புகள்" பல இடங்களில் தரப் படுகின்றன. கம்பெனிகள் விஷயத்தில் இது விளம்பரச் செலவினமாக எழுதப் படும். அதில் ஒரு சிறு நியாயமும் உண்டுதான். நவீன வியாபார யுக்தி. லஞ்சத்துக்கு கிட்டத்து உறவு .
* மருத்துவப் பிரதிநிதிகள் ஸாம்பிள் என்ற பெயரிலும், டாக்டர்களுக்கு டூர் பேக்கேஜ் ஆஃபரும் தருகிறார்கள். பத்திரிகைகள் வாசகர்களுக்கு இலவச இணைப்பு தருகிறார்கள். ஊறுகாய் கம்பெனியிலிந்து பெரிய விஷயங்கள் வரை ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ தருகிறார்கள். மக்கள் வோட்டுக்குப் பணமும் இலவசங்களையும் பெறுகிறார்கள்...
ஒவ்வொருத்தரும் ஏதோ ஒண்ணுக்கு பயப்படுவாங்க (நான் சொல்வது மாரல் பயம் இல்லை). எனக்கு இடி மின்னல் பயம் உண்டு. வீட்டில் இருந்தாலும் பயம். உங்களுக்கான பயம் என்ன?
# சின்ன வயதில் கனமழை என்றால் பயப்பட்டேன். இப்போது யாருக்கு எந்த மாதிரி பாரமாக இருப்போமோ என்ற அச்சம் அவ்வப்போது.
& எனக்கு டினோசரைப் பார்த்தா ரொம்ப பயமா இருக்கும்.
எங்கள் பிளாக்குக்கான ஆரம்பப் புள்ளி எப்படி உருவாகியது?
& ரொம்ப சுருக்கமா சொல்றேன், கேட்டுக்குங்க. பதினொரு வருடங்களுக்கு முன்பு ஒருநாள், என் கற்பனைக் குதிரை தன் பொல்லாச்சிறகை விரித்து, திக்குத்திசை தெரியாமல் பறந்தது. அப்போ எனக்குத் தோன்றிய சில சிந்தனைகளை, புதிதாகக் கற்றுக்கொண்ட தமிழ் font மூலம் டைப் செய்து, அப்போது வலையுலகில் நம்பர் ஒன் ஆக இருந்த இட்லிவடை வலைப்பூ மெயில் விலாசத்துக்கு ஜிமெயில் செய்தேன்.
அதுதான் ஆரம்பப் பாடங்கள் (LINK) என்னும் ஆரம்பப் புள்ளி.
அது அங்கே வெளியான உடன், அதைப்பார்த்து எனக்கு ஒரே சந்தோஷம்! அது வெளியிடப்பட்ட தேதி ஜூன் 22, 2009.
அன்றிலிருந்து , 'நாமே ஒரு blog ஆரம்பித்தால் என்ன?' என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கி, கிட்டத்தட்ட blog பற்றி LKG நிலையில்தான், 'எங்கள் ப்ளாக்' எங்களால் ஆரம்பிக்கப்பட்டு, முதல் blog post ஜூன் 28, 2009 அன்று வெளியிட்டோம். எங்கள் ஆரம்பக் காலத்தில், இட்லிவடை 'மானஸ்தன்' google chat மூலம் BLOG எழுதுவது, வெளியிடுவது பற்றி, என்னுடைய பல சந்தேகங்களுக்கும் விளக்கமளித்து உதவினார்.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
அம்மா சமைத்துப் போட்டதை விட அதிக காலங்கள் மனைவி சமைத்துப் போட்டாலும், ஆண்களுக்கு பட்சணங்கள்,அல்லது பிடித்த உணவு என்றால் அம்மாவின் நினைவு வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும்?(இதற்கு எந்த சாயமும் பூசாமல் உளவியல் காரணம் கூற வேண்டுகிறேன்)
* First impression is the best impression என்பார்கள். நாம் பார்த்த முதல் சமையல்காரர் அம்மா. ருசித்த முதல் சுவை அவரவர் அம்மா கைப்பக்குவம். ஆண்கள் என்ன, பெண்கள் மனதில் கூட அவரவர் அம்மாவின் கைப் பக்குவம் நினைவில் தங்கி இருக்கும். அவர்கள் தாங்களே சமைத்த உணவின் சுவைத் தரத்துக்குக் கூட தன் அம்மாவின் கைப்பக்குவச் சுவையை நிர்ணயக் கோடாக மனதுக்குள் வைத்திருப்பார்கள்.
# பிடிப்பதும் அல்லாததும் கால அடிப்படையில் அமைவதல்ல. அபிமானம், ருசி இவற்றால் உருவாவது.
நகைச்சுவை உணர்ச்சியை வளர்த்துக் கொள்ள முடியுமா?
# நகைச்சுவை உணர்வுக்கான மனப்பாங்கு இருக்க வேண்டும். மற்றபடி, வேண்டும் என்பதால் அடையக் கூடியதல்ல.
& இப்போ அதுக்கு என்ன வயது என்று சொல்லுங்க, அப்புறம் அது வளருமா / வளராதா வளர்த்துக்கொள்ள முடியுமா என்று சொல்கிறேன்!
இலக்கியத் தரம் என்கிறார்களே அப்படி என்றால் என்ன? அதை யார் நிர்ணயம் செய்கிறார்கள்?
* (இ தரம் )நிர்ணய சபையா இருக்கிறது? பொதுஜன, வெகுஜன அபிப்ராயம்தான்!!!
# காலம் கடந்து ரசிக்கப் படுவதும், எல்லாக் காலத்திலும் அறிவார்ந்த விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருவதும் ஒரு பிரதேசத்தின் அடையாளமாக அறியப் படுவதும் இலக்கியத் தரத்துக்கான யோக்கியதைகள். நிர்ணயம் செய்யப் படுவதல்ல நிகழ்வாக இருப்பது.
புராண உபன்யாசம் செய்பவர்கள் பணத்தில் குறியாக இருப்பதை சிலர் விமர்சனம் செய்கிறார்களே, அதில் என்ன தவறு?
# நிலையாமை பணம் முக்கியமல்ல என்றெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்வது விமர்சனத்துக்குத் தப்ப முடியாது.
முன் காலத்தில் தட்டு நீட்டி, மனமுவந்து தரப்படும் காணிக்கைகளை மட்டும் பெற்றுக் கொண்டு மிக நன்றாக உபன்யாசம் செய்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.
ஏஞ்சல் :
1, நாம் ஒன்றை நினைத்து பேச அதை அருகிலிருப்பவர் கேட்டு பின்பு மயங்கிய (பேயறைஞ்சு போன ) தருணங்கள் இருக்கா ?
# இருக்கலாம்.
& அதாவது, நாம் ஒன்றை நினைத்து எதிரிலிருப்பவரிடம் பேச, அதை அருகிலிருப்பவர் கேட்டு பேயறைந்து போயிருக்கவேண்டுமா?
நாகையில் ஒரு பஸ் ஸ்டாப்பின் பெயர் 'குடை' (அது ஒரு முச்சந்தி, அங்கே டிராஃபிக் போலீஸ் நிற்கின்ற நிழற்குடை இருப்பதால், 'வெளிப்பாளையம் குடை' என்று அந்த ஸ்டாப்பிற்கு பெயர். சுருக்கமாக 'குடை' என்றே குறிப்பிடுவார்கள். ) ஒருநாள் நான் பயணித்த 'நாகூர் - நாகை' டவுன் பஸ் அந்த ஸ்டாப் அருகே வந்தபோது மழை பெய்யத் தொடங்கியது. நடத்துனர் " குடை எல்லாம் எறங்குங்க" என்று சொன்னார். நான் உடனே எனக்கு எதிரிலிருந்த ஒருவரை (அவர் ஏற்கெனவே என்னிடம் வெளிப்பாளையம் ஸ்டாப் வரும்போது சொல்லு தம்பி என்று சொல்லியிருந்தார். கையில் குடை வைத்திருந்தார். ) " சார் - நீங்க இங்கே இறங்கிடுங்க " என்று சொன்னேன்.
அதைக் கேட்ட எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிராமவாசி ஒருவர் என்னிடம் " தம்பி நான் நாகை பஸ் ஸ்டாண்டுக்கு டிக்கெட் எடுத்திருக்கேன். என் கிட்டே குடை இருக்கு. நானும் இங்கே இறங்கிடணுமா? " என்று கேட்டார் பயந்து போய்!
2, மனித பலவீனங்களில் கிடைத்த தருணத்தை பயன்படுத்தி ஏறி சவாரி செய்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ?
# பலவீனப் பட்டவருக்குதான் ஆலோசனையோ அறிவுரையோ எச்சரிக்கையோ தரலாம். பொய் சொல்லி ஏமாற்றவில்லை என்றால் அடுத்தவர் அறியாப் பருவத்தவராக இல்லாத வரையில், தருணத்தைப் பயன்படுத்துவது தண்டனைக்குரியதாகாது.
& எதிலே சவாரி செய்கிறார்கள் என்பதைப் பொருத்தது. ரயிலோ அல்லது பஸ்ஸோ என்றால், டிக்கெட் பரிசோதகர்கள் உரிய தண்டனை கொடுப்பார்கள். ஆட்டோ / டாக்சியில் அப்படி சவாரி செய்ய முடியாது. குதிரை சவாரியாக இருக்குமோ?
3, வாய்ப்பும் சக்தியும் சூழலும் அமையும்போது அதை பயன்படுத்தினால் அது சந்தர்ப்பவாதமா ?
# இல்லை. சாமர்த்தியம்.
& எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தது அது. சுயநல நோக்கம் எதுவும் இல்லை என்றால், டபிள் ஓ கே.
4, சாகசங்கள் நிறைந்ததா மனித வாழ்க்கை ?
# அவரவர்க்குத் தக்க அளவில் - ஆம்.
& அது நாம் எதை சாகசம் என்று நினைக்கிறோம் என்பதைப் பொருத்தது. எங்கள் ஊரில் எம்ஜியார் சினிமாவுக்கு, முதல் நாள், முதல் ஷோவுக்கு அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கி, போலீசிடம் அடி வாங்கி, வேட்டி கிழிந்து வந்தவன் கூட அதை ஒரு வீர சாகசமாக ஒரு வாரத்துக்கு சொல்லிக்கிட்டுத் திரிவான்.
5, வாழ்க்கையின் யதார்த்தத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு கனவுலகில் வாழ்கிறோமா நாம் ?
# இதற்கு விடை அவரவர் மனதில் இருக்கும்.
& வாழ்க்கையின் யதார்த்தத்தை ஐம்புலன்களும் அன்றாடம் நம் மூளைக்கு உணர்த்திக்கொண்டுதான் உள்ளன. மனம் / புத்தி மட்டும் அப்பப்போ கனவுலகில் கனி உண்ணும்.
6, சமீபத்தில் நீங்கள் ரசித்து துக்கத்திலும் விழுந்து புரண்டு சிரித்த ஒரு பின்னூட்டம் எது ? //If this isn't played at my funeral I'm not going//
Vera Lynn - We'll Meet Again யூடியூப் காணொளியில் வந்த பின்னூட்டம் இதுதான் நான் நேற்று பார்த்து வலியுடன் சிரித்தது காரணம் உலகப்போரில் செல்லுமுன் சோல்ஜர்ஸ் இந்த பாட்டை பாடினாங்கன்னு பிரிட்டிஷ் மஹாராணி கொரோனா வைரஸ் பற்றிய உரையில் கூறினார்.
# அப்படி ஏதுமில்லை. ரசித்தது நிறைய உண்டு.
& துக்க சூழ்நிலையில் கூட்டத்தின் நடுவே சிரிப்பு வராது.
7, அடையாளங்கள் அவசியமா ?தற்போதைய சூழலில் ஏறக்குறைய அனைவரும் தங்களுக்கான அடையாளத்தை வெளிப்படுத்தனும் நிலைநிறுத்தணும் என்கிற முனைப்புடன் இருக்கிறார்கள் ஏன் ?அல்லது இருக்கிறாற்போல் தோன்றுவது ஏன் ?
# அவசியமிருந்தாலும் இல்லாமல் போனாலும் அடையாளம் நிழல் போல அவரவர்க்கு இருக்கும். மாறுபட்ட மேலான அடையாளங்களை விரும்பி அல்லது லாபம் கருதி ஏற்படுத்திக் கொள்பவர் மட்டுமே பொய்முகத்தோடு காணப்படுவார்.
8, மறைமுகமா நட்பு பாராட்டுவது நேரடியா நட்பு பாராட்டுவது இதை பற்றி இப்படிப்பட்ட மன நிலை உள்ளவர்களைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? **** இந்த கேள்விக்கு பிஞ்சு சொற்பொழிவாளர் பதில் சொல்ல தடை போடப்பட்டுள்ளது :))))))))
# நட்பில் மறைமுகம் ஏது ? ஒருதலை நட்பு நட்பாகாது.
& எல்லா வகையிலும் நட்பு பாராட்டுவதுதானே? தவறு எதுவும் இல்லை.
9, இந்த மினி இட்லின்னு சொல்றாங்களே அது பார்க்க குட்டியா இருக்கே அதை சாப்பிட்டா மற்ற இட்லிமாதிரி சுவை திருப்தி வருமா ? நான் இதுவரை சுவைத்ததில்லை அதான் கேட்கிறேன்.
# ஏன் சுவைத்ததில்லை என முதலில் சொல்லுங்கள். தின்று பாருங்கள் உங்கள் விடை என்ன என எங்களுக்கும் சொல்லுங்கள்.
10, ஒரு தலைமுறை செய்யும் தவறுகளுக்கு அவர்களின் அடுத்த தலைமுறையையும் (அவர்களுக்கு பெற்றோர் செய்யும் செய்த எந்த ஒரு விஷயத்திலும் சம்பந்தமில்லாதபோதும் ) அவர்களையும் சேர்த்து திட்டுவது சரியா ?
# திட்டுவதே தவிர்க்க வேண்டிய விஷயம்தான்.
& ரொம்பத் தப்பு. யார் தவறு செய்கிறார்களோ அவர்களை மட்டும்தான் கண்டிக்கவேண்டும். ஏன் தவறு செய்தார்கள் என்று அறிந்து, அதை அவர்கள் திருத்திக்கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும்.
11, உண்மையான கம்யூனிசம் என்பது என்ன ? வெள்ளிக்கிண்ணத்தில் உணவுண்டு எல்லாவித வசதிகளுடன் வளர்ந்த ஒருவரால் பாட்டாளி வர்க்கத்தின் அல்லல்களைப்பற்றியம் புரட்சி நிஜ கம்யூனிசம் பேசுவது இயலுமா ?
# கம்யூனிசம் என்றால் என்ன என்பது பற்றி இனிச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. நடைமுறைச் சிக்கல்கள் நிறைந்த நல்ல கொள்கை.
12, 1. வாழ்க்கையில் தனக்கு பிடித்த விஷயங்களை செய்வதில் கிடைப்பது.
2. பிறருக்காக சில விஷயங்களை செய்வது.
இவ்விரண்டில் எதில் கிடைக்கும் சந்தோஷம் நிரந்தரமானது ?
# சந்தோஷமோ துக்கமோ எதுவும் நிரந்தரமானவை அல்ல.
& வாழ்க்கையில், தனக்குப் பிடித்த விஷயங்களை பிறருக்காக (பொதுநலத்திற்காக) செய்வது சந்தோஷம்.
# ஒன்றிரண்டு அல்ல நூறு அல்லது ஆயிரக் கணக்கில் எல்லாருக்கும் இருப்பார்கள். குறிப்பாக ஆசிரியர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், தீர்க்க தரிசிகள், உறவினர்கள் இப்படி. இவர்களில் யாரைச் சொல்வது யாரை விடுவது ?
& ஒருநாள் மாலை ஆறுமணி இருக்கும். பீச் ஸ்டேஷனில், மூன்றாவது பிளாட்ஃபார்மில் குரோம்பேட்டை செல்ல மின்வண்டித் தொடருக்காகக் காத்திருந்தேன். லேசான மழை. நடைமேடை தூண் ஒன்றின் கீழே சற்றேறக்குறைய எட்டு வயதுள்ள சிறுவன் ஒருவன். கண்களில் கண்ணீரோடு உட்கார்ந்திருந்தான்.
போர்ட்டர் ஒருவர், அந்தப் பையனுக்கு, ரயில்வே சிற்றுண்டி நிலையத்திலிருந்து இட்லி பார்சல் மற்றும் டீ வாங்கி வந்து கொடுத்தார். அவன் நடுங்கும் விரல்களோடு அந்த பார்சலைப் பிரித்து இட்லியைத் தின்றான். போர்ட்டர் திரும்பவும் எங்கிருந்தோ வந்து அவனிடம் ஒரு மாத்திரையைக் கொடுத்து, " இந்தாடா - இதைப் போட்டுக்கிட்டு, டீயைக் குடிடா " என்றார். அவன் அவ்வாறே செய்தான். டீ கிளாசை அவனிடமிருந்து பெற்றுத் திரும்பி வந்து சிற்றுண்டிச்சாலை மேடையில் வைத்தார் அவர். " பையனுக்கு என்ன உடம்புக்கு?" என்று அவரிடம் கேட்டேன். " ஜுரம் சார்." என்றார். "பக்கத்திலே ஏதாவது டாக்டரிடம் அழைத்துச் செல்லலாமே " என்றேன். "என்ன சொன்னாலும் அந்த இடத்தைவிட்டு நகரமாட்டேங்குறான் சார்." என்றார்.
" பையன் பேர் என்ன? " என்று கேட்டேன். " தெரியாது சார்" என்றார்.
இது நடந்தது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு. இருவருமே ஏதோ ஒரு பாதிப்பை எனக்குள் ஏற்படுத்திவிட்டார்கள்.
14, இன்றைய வெற்றி நாளைய தோல்விக்கு மனதை பண்படுத்துமா ?
# வெற்றி மகிழ்ச்சியை, சில சமயம் ஆணவத்தைத் தருவது. பண்படுவது வெற்றியால் வருவது அல்ல.
& தோல்விதான் வெற்றிக்கு முதல் படி என்று சொல்வார்கள். ஒருவேளை அதையே உல்டா செய்தால், வெற்றிதான் தோல்விக்கு கடைசி படியோ?
15, பொழுது போகாத மாலை வேளையில் வானத்தை பார்த்தபோது அதில் இருந்த விதவிதமான டிசைன் பஞ்சு பொதிகளை பார்த்து உதித்த கேள்வி இது ஆறுக்கு பெயர் இருக்கு, மரத்துக்கு பெயர் இருக்கு, நிலத்துக்கு பெயர் இருக்கு, ஆனா ஏன் மேகத்துக்கு மட்டும் பெயர் வைக்கலை நம் முன்னோர் ?
# வெண்மேகம், கருமேகம், மழைமேகம் என்றெல்லாம் பேர் இருக்கிறது போதாதா ?
& ஆக்சுவலா முன்னோர்கள் அவற்றுக்குப் பேர் வைத்தார்களாம். ஆனால் அவற்றை ஸ்கூலில் சேர்க்கமுடியவில்லை. எல்லா மேகக் குழந்தைகளும் வகுப்புகளில் கம்முனு உட்காராம உலா போயிட்டே இருந்ததால, ஹெட் மாஸ்டர் அவைகளின் பெயரை அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரிலிருந்து தூக்கிட்டாராம்.
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ!
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ!
அதிரா :
1. அல்லிக்கும் சந்திரனுக்கும்தான் பொருத்தம் என்பார்கள், மாலையில் மலர்வதைத்தவிர வேறேதும் காரணம் உண்டோ?
# இல்லை.
& அல்லிக்கும் சந்திரனுக்கும்தான் பொருத்தம் என்பவர்கள், தாமரைக்கும் சூரியனுக்கும்தான் பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆனா தமிழகத்தில் சூரியனுக்கும் தாமரைக்கும் சண்டைதானே நடக்குது!
2.சிலர் ரிவி, மற்றும் சினிமா பார்க்கும்போது, மற்றவர்கள் இருப்பதையும் கவனிக்காமல், சத்தமாக பேசுவார்கள்.. அடி அடி விடாதே, துரத்து, ஆஆ பாவம் விட்டிடு...., ஆஆஆ ஓகே பண்ணிடுவார் பாரு.. ஹா ஹா ஹா இப்படிப் பல.. இவர்கள் மனநிலையில் எப்படியானவர்கள்?
[[[சமீபத்தில் பாட்டி ஒருவர், இப்போ வீட்டுக்குள் ரிவி பார்க்கும்போது லொக்டவுன் நேரத்தில்.. இப்படிச் சத்தம் போடுகிறாவாம் என ஊரிலிருந்து வந்த செய்தி கேட்டதும் உதிச்ச கேள்வி:))] ஆனா இப்படிப் பலரைப் பார்த்திருக்கிறேன்.]].
# ரசனைக்கேற்ற ஈடுபாடு.
& கஷ்டம், கஷ்டம். நாட்டில் படிப்பறிவு வளர்ந்தால்தான் இந்த நிலை மாறும்.
3.கிராமத்து வாழ்க்கையை விரும்பிக் கொண்டும் ரசிச்சுக் கொண்டும், ஆனா கிராமத்தில் போய் வாழ விரும்பாமல் நகரத்திலேயே வாழ்க்கை நடத்துவோர் பற்றி என்ன நினைக்கிறீங்க?
# ரசனை/விருப்பம் உண்மையாக இருந்தாலும் வசதி வாய்ப்பு இல்லாதிருக்கலாம். அல்லது விருப்பம் மேம்போக்கானதாக இருக்கலாம்.
& நான் வானத்தில் இருக்கின்ற நிலாவை விரும்பி, ரசித்துக்கொண்டு இருப்பேன். அதுக்காக என்னை உடனே ராக்கெட்டில் ஏற்றி அங்கே அனுப்பிவைத்து, அங்கேதான் வாழவேண்டும் என்று சொல்வீர்களா!
4.ஒருவரின் நடை உடை பாவனையைப் பார்த்து ஓரளவாவது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனக் கணக்கெடுக்க முடியுமோ? அது சரியாக வருமோ?
# முடியாது. சரியாக வந்திருந்தால் அது தற்செயல்.
& முடியும். சில விதிவிலக்குகள் உண்டு. அதாவது சில சமயங்களில் நம்முடைய கணிப்பு தவறாக போய்விடும். சில பொய்த் தோற்றங்கள்தான் இதற்குக் காரணம்.
5.மனிதர்களில்தான் அதிக அன்பு பாசம் நேசம் இரக்கம் வைப்பது நல்லதோ? இல்ல 5 அறிவான பறவை விலங்குகளில் வைப்பது நல்லதோ? ஒன்றை மட்டும் கூறவும்:))[இது அஞ்சு சம்பந்தப்பட்ட கேள்வி அல்லவாக்கும்:))].
# அன்பு நேசம் அல்லது இரக்கம் வரவழைக்கப்படும் இயல்பல்ல; இயற்கையாக அமைந்திருப்பது.
& எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருக்கலாம். ஓரறிவு, ஈரறிவு என்றெல்லாம் ஏன் பிரித்துப் பார்ப்பது?
6. முற்காலத்தில் கணவனோடு உடன்கட்டை ஏறும் பழக்கம் ஏன் ஏற்பட்டது? அன்பால இல்லை என்பது மட்டும் புரிந்தது.. ஏனெனில் பாண்டு இறந்தபோது இரு மனைவிகளும் பேசி, ஒரு முடிவுக்கு வந்த பின்னர் ஒருவர் உடன்கட்டை ஏறினாராம்.. அப்போ இது கட்டாயத்தின் பேரிலதானே நடந்திருக்குது.
# கைம்பெண்களுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகள் கொடூரமானவையாக இருந்ததும் சுற்றி நிற்பவர்களின் நிர்ப்பந்தத்தாலும் உடன்கட்டை இருந்திருக்கும்.
# கிடைக்காமலா இருக்கும் ?
===================================================
செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை..
பதிலளிநீக்குநலம் வாழ்க...
வாழ்க நலம்.
நீக்குவாழ்க.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜு ஸார்... வாங்க...
நீக்குஅன்பு துரை, அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கங்கள்.
நீக்குஇடி,மின்னலுக்கு இன்னும் பயம்.
மற்ற கேள்விகளையும் படித்துவிட்டு வருகிறேன்.
தலைவலித் தொந்தரவு விடவில்லை.
சரியான குளிர். பனிமழை பெய்தாலும் பெய்யுமாம்.
வாங்க வல்லிம்மா... இனிய வணக்கம். தலைவலியா? ஏன்? சரியாய்த் தூங்கவில்லையா? ஓய்வெடுங்கள் அம்மா.
நீக்குதலைவலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தலையாய காரணம் மலச்சிக்கல். பெரும்பாலான தலைவலிகள், ஒருகைப்பிடி துளசி இலைகளை கழுவி எடுத்து, மூன்று மிளகுகளோடு சேர்த்து நன்கு மென்று தின்றுவிட்டு, வெந்நீர் ஒரு டம்ளர் குடித்தால், ஒரு நிமிடத்திற்குள் நிவாரணம் பெறலாம். துளசி இலை கிடைக்கவில்லை என்றால், துளசி பவுடர் இருந்தால் வெந்நீரில் கரைத்துக் குடிக்கலாம்.
நீக்குநன்றி கௌதமன் ஜி.
நீக்குசத்தமே ஆவதில்லை. பசங்க இருக்கும் இடத்தில் சத்தம் இல்லாமல் இருக்குமா.
அவர்கள் படுக்கப் போகும் நேரம்,
என் தூக்க நேரம் எல்லாம் க்ளாஷ் ஆகிறது.
வயிற்றுப் பிரச்சினை ஓய்ந்து, தலைக்குப் போயிருக்கிறது,.
அப்படியே வெளியில் போய்விடும்.
துளசி வைத்தியம் சொன்னதற்கு மிக நன்றி.
துளசிச் செடி இங்கே வீட்டுக்குள் வளர்வதில்லை.
கருவேப்பிலை இருக்கிறது.
பாட்டி இஞ்சி அரைத்துத் தலையில்
வைத்திக் கொண்டு பிறகு குளிப்பார்கள்.
நன்றி கௌதமன் ஜி. இங்கே 24 மணி நேரமும் ஹீட்டர் ஓடுகிறது. அதனால்
ரத்த நாளங்கள் சுருங்கி
தலவலி வரும் என்கிறார்கள்.
பார்க்கலாம்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்கு
பதிலளிநீக்குகற்றல் நுட்பத்தில்
கேள்வி பதில் முறை
சிறப்பான உத்தி
ஆகவே நாம் இதிலும்
அறிவைப் பெற முடிந்திருக்கிறது
உண்மை. நன்றி ஐயா.
நீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
பதிலளிநீக்குஇனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
நன்றி, உங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
நீக்குஎங்கள் பிளாக்கில் வெளியாகும் எல்லாப் பதிவுகளுமே தனி ரகம் தான். இந்தக் கேள்வி, பதிலும் சிறப்பு. இந்த கேள்விகளுக்கு எனது வலையில் எனது பதில்களை வழங்க எண்ணம் உண்டு. கேள்விகளை எடுத்துக் கொள்ளலாமா?
பதிலளிநீக்குதாராளமாக. அந்தப் பதிவில், எங்கள் ப்ளாகின் இந்தப் பதிவுக்கு ஒரு சுட்டி கொடுத்துவிடுங்கள். நன்றி.
நீக்குபதிவுக்கு குறிச்சொற்களை வழங்குவதில் சற்று கவனம் செலுத்தலாமே?
பதிலளிநீக்குசெலுத்துகிறோம்.
நீக்குதமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பதிலளிநீக்குதற்போது, தங்களது இந்த பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை பொது அல்லது அரசியல் என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.
இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு
நன்றி.
நீக்கு//..தாமரைக்கும் சூரியனுக்கும்தான் பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆனா தமிழகத்தில் சூரியனுக்கும் தாமரைக்கும் சண்டைதானே நடக்குது! //
பதிலளிநீக்குஅதுவும் பொருத்தம்தான். ஏழாம் பொருத்தம்!
ஹா ஹா ஹா !! பொருத்தமான பார்வை. நன்றி!
நீக்குசூரியனுக்கும் தாமரைக்கும் பொருத்தம் இங்கே வேண்டவே வேண்டாம்...
நீக்குகாரியம் முடிந்ததும் -
காவியே... கமண்டலமே... பரதேசியே... பச்சோந்தியே...
என்ற ஆலாபனை ஆரம்பம் ஆனால்!?..
அட... போங்கப்பா!...
அரசியல் சூறாவளியில் கிழியாத இலைகளும் உண்டோ!..
யாருங்க அங்கே சிரிக்கிறது?..
நாந்தானுங்க..
உலகத்தை நெனைச்சேன்... சிரிச்சேன்!..
உருவகக் கதை! நன்றாக உள்ளது!
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதிலைப் படித்துவிட்டேன். நிறைய கேள்விகளுக்கு மற்ற ஆசிரியர்களும் பதில் சொல்லாத்து கேள்வி அவைகளுக்கான பதிலைச் சொல்லத் தூண்டுவதாக இல்லை என்று எடுத்துக்கொள்வதா இல்லை அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள் என்று எண்ணுவதா?
முதலில் சொல்லப்பட்ட பதிலே தன்னுடைய கருத்தும் என்று நினைத்தோம் என்றால், அப்படியே விட்டுவிடுவோம்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்.
நீக்குகேள்விகளும், பதில்களும் அருமை.
பதிலளிநீக்குநானும் வலைத்தளம் ஜூன் 1ம் தேதி 2009 ல் ஆரம்பித்தேன்.
சூப்பர்!
நீக்குகேள்வி பதில்கள் சுவாரஸ்யம்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குகேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.
நன்றி.
நீக்குகேள்வி பதில்கள் ரசிக்க வைத்தன.
பதிலளிநீக்குஇட்லி வடை போய் வந்தேன் எனக்குத் தெரிய 2003-ல் வலைப்பதிவு ஆரம்பித்தவர்கள் இவர்கள்தான் போலும்.
ஆம்! நன்றி.
நீக்குஒரு முறை தோழிகள் நாங்கள் ஒரு ஹோட்டலில் மீட் பண்ணுவதாக முடிவு செய்தோம். ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் வந்து விட்டோம். அவர் நெருங்கி விட்டதாக தகவல் அனுப்பினார். சரி என்று அவரவர் தங்கள் தங்கள் விருப்பப்படி ஆர்டர் செய்யத் தொடங்கினர். எல்லோரும் ஆர்டர் கொடுத்து முடித்து விட்டோம், லேட்டாக வந்த தோழியும் வந்து விட்டார். அவரிடம் சர்வர்,"உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்க, அவர்,மினி இட்லிகளை குறித்து "ஐ வாண்ட் சிக்ஸ்ட்டீன் இட்லிஸ்" என்றதும் அந்த சர்வர்,"சிக்ஸ்டீன் இட்லீஸ்..??" என்று திடுக்கிட்டதை மறக்க முடியாது. இந்த நிகழ்ச்சியை வைத்து அந்த தோழியை நீண்ட நாட்கள் கலாய்த்துக் கொண்டிருந்தோம்.
பதிலளிநீக்குஇதில் ஏஞ்சலினின் இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன்.
ஹா ஹா ! நன்றி! நாங்களும் ரசித்தோம்!
நீக்குமினி இட்லியைப் பற்றி ஒரு கொசுறு செய்தி: ஒரு முறை சரவண பவனில் மினி இட்லிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அது வந்ததும், என் தோழியின் மகள்,"ஆண்டி, இதில் பதினாறு இட்லிகள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்கள், சில சமயம் இருக்காது, கேட்டால் கொண்டு வருவார்கள்" என்றாள். சாம்பாரில் மூழ்கியிருந்த இட்லிகளை ஸ்பூனால் அப்படி இப்படி தள்ளி, எண்ணி, தோராயமாக 16 இருக்கும் என்று கூறி விட்டேன்.
பதிலளிநீக்குஆ! கணக்குல நீங்க D+ ஆ!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு//இலக்கியத் தரத்துக்கான யோக்கியதைகள். நிர்ணயம் செய்யப் படுவதல்ல நிகழ்வாக இருப்பது. // சரியான பதில்.
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஅனைவருக்கும் வணக்கங்கள். பானுவின் முதல் கேள்விக்கு என்னுடைய பதில். எதையும் நமக்கு காட்டி விளக்கி அடையாளம் காட்டுவதே அம்மாதான் எங்கின்ற பட்ஷத்தில், உணவும் அவர்தான் முதலில் நமக்கு அறிமுக படுத்துபவர். முதல் சுவை முற்றும் சுவை என்றாகி விடுகின்றது. நம் மனதிலும் நாவிலும் அது ஆழமாக பதிந்து அதுவே பிரமாதமான சுவை என்றாகி விடுகின்றது. காலம் செல்ல செல்ல, மற்ற சுவைகளும் ரசனைக்குட்பட்டாலும், அம்மா கை மனம் என்றும் உயர்ந்து நிற்கின்றது.
பதிலளிநீக்குஆம், உண்மைதான்.
நீக்குஉண்மையேதான்!
நீக்குஏன்ஜல் அவர்களின் நான்காவது கேள்வி. மற்றவரைப் பற்றி எனக்கு தெரியாது. என் வாழ்க்கையை பொருத்த மட்டும், மிகவும் சாகசம் வாய்ந்தது. சிறு வயதிலேயே தந்தையை இழந்து முயற்சி செய்து முன்னேறி, பின்னர் வேலைக்கு சென்று, அன்கு என் கணவரை சந்தித்து, மணம் புரிந்து 30 வருடங்களாக என் வாழ்க்கையை மற்றவருக்காகவே வாழ்ந்து, இப்பொழுதுதான் என் 55 வயதிலிருந்து நாம் படிக்க நினைத்ததெல்லாம் (M.A. Economics, M.Sc. Psychology, M.B.A. Finance) படித்து பட்டங்களும் பெற்றேன். என் தந்தையின் ஆசை நான் doctorate வாங்க வேண்டும் என்பது. எனவே, என் கணவரின் ஒத்துழைப்புடன் இப்போது arunachal universityஇல் Ph.D (Economics) நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று சேர்ந்திருக்கின்றேன். இவை யாவும் முடிப்பதற்கு நான் பட வேண்டிய கஷ்டங்களும் துன்பங்களும் மாபெறும் சாகசங்கள் என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன். ஆனால், மனம் இருந்தால் மார்கம் உண்டு.
பதிலளிநீக்குபாராட்டுகளும், வாழ்த்துகளும்.
நீக்குநீங்கள் செய்துகொண்டிருப்பது academic சாகஸம். இருந்தும் ஒரு சாகஸம்தான்!
நீக்கு@Rama Srinivasan, உங்களின் விடாமுயற்சிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
நீக்குஉங்களுடைய உழைப்பு, உங்கள் கணவரின் ஒத்துழைப்பு இரண்டுமே பாராட்டுக்குரியவை.
நீக்கு@ரமா ஸ்ரீனிவாசன் ..
நீக்குஉங்கள் பின்னூட்டம் படித்ததும் ஒன்று மனதில் இருந்து உறுத்திக்கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்தாச்சு .அது நாம்தான் ஏற்கனவே 3 டிகிரி வாங்கியாச்சே இனிமே எதுக்கு படிக்கணும்னு ஒரு அலுப்பு இருந்தது இந்த செப்டம்பர்அல்லது கூடிய விரைவில் துறையில் கால்பதிக்க இருக்கிறேன் .சாகசங்கள் வாழ்க்கைக்கு அவசியமே
ரமா குடோஸ்!!! பாராட்டுகள்.
நீக்குபடித்துக் கொண்டே இருந்தால் அதாவது சாகஸம் செய்து கொண்டே இருந்தால் மனம் அதில் லயித்துவிடும். வேறு சிந்தனைகளுக்குப் போகாது. வாழ்வில் சாலஞ்சஸ் தேவைதான் என்றும் தோன்றும்.
வாழ்த்துகள் ரமா. கூடவே பாராட்டுகள் உங்கள் கணவருக்கும்.
கீதா
ஏஞ்சல்!!! வாவ்! அடுத்த சாகசமா...குட். வாழ்த்துகள் ஏஞ்சல். நீங்க எது செஞ்சாலும் அதில் மிளிர்வீர்கள் தனித்தன்மையுடன்! மனமார்ந்த வாழ்த்துகள்.
நீக்குகீதா
எல்லோருக்கும் பாராட்டுகள்.
நீக்குஅதிரா அவர்களின் 4வது கேள்விக்கு என் பதில் : கண்டிப்பாக இல்லை. என் வாழ்க்கை பயணத்தில் நான் பல பேரை ஒரு மாதிரி எடை போட்டு விட்டு வேறு மாதிரி அவர்கள் இருப்பதை உணர்ந்திருக்கின்றேன். நாம் மிக நம்புபவர்கள் கழண்டு கொள்வார்கல். தாம் இருப்பதையே காமித்து கொள்ளாமல் இருப்பவர்கள், அவர்கள் நடை உடை பாவனை நம்மை சிறிதும் அவர்கள் பக்கம் இழுக்காமல் இருப்பவர்கள் நக்கு தோள் கொடுத்து உதவுவார்கள். எனவே மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை நான் பல முறைகள் உணர்ந்திருக்கின்றேன்.
பதிலளிநீக்கு///என் வாழ்க்கை பயணத்தில் நான் பல பேரை ஒரு மாதிரி எடை போட்டு விட்டு வேறு மாதிரி அவர்கள் இருப்பதை உணர்ந்திருக்கின்றேன். ///
நீக்குஎனக்கும் இதே போல நடந்திருக்குது, அதனால தான் இப்போ ஆரையும் நம்பப் பயம்:)
அனைவருக்கும் மதிய வணக்கம். கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடப் பிரார்த்தனைகள். ஊரடங்கு நீட்டிப்பினை எதிர்கொள்ளும் மனோபலம் அனைவருக்கும் வாய்க்கவும் பிரார்த்திக்கிறேன். இந்த வாரம் ஸ்ரீராம் ஓரிரு கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கார். $ஐக் காணவே காணோம். அல்லது என் கண்களில் படலையா?
பதிலளிநீக்கு$ வேறு ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்குதலில் ரொம்ப பிசியாக இருந்தார். குடும்ப உறுப்பினர்களின் குழு - அது கொஞ்சம் வித்தியாசமான பாசிடிவ் திங்கிங் குழு. இப்போ அதை வெற்றிகரமாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.
நீக்குஎங்கள் ப்ளாக் ஆரம்பிச்சதெல்லாம் சரியா நினைவில் இல்லை. அப்போதெல்லாம் அதிகம் வந்தது இல்லை. ஆனால் கௌதமன் மட்டும் நான் கந்த சஷ்டிப் பதிவுகள் முருகனைப் பற்றி எழுதியபோதெல்லாம் வந்துக் கருத்துகள் சொல்லி இருக்கார். அதன் பின்னர் நான் அவங்க நடத்தின ஒரு போட்டியில் கலந்து கொண்டேன். அப்போக் கூட ஸ்ரீராமைத் தெரியாது. கௌதமன் சார் தான் முதலில் "திங்க" ஆரம்பித்தார். ஒரு தரம் என்னை பாம்பே சட்னி செய்முறை கூடக் கேட்டிருந்தார். அதன் பின்னர் ஸ்ரீராம் தோசையாயணம் எழுத ஆரம்பிச்சுப் பின்னர் மெல்ல மெல்ல ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு செய்முறை என வந்து முதலில் செய்முறை எழுதின வெளியார் ரேவதி. கத்திரிக்காய்த் தொக்கு எழுதி இருந்தாங்கனு நினைக்கிறேன். அதன் பின்னர் ஸ்ரீராம் என்னையும் கேட்டிருந்தார்.
பதிலளிநீக்குநான் அதற்கும் முன்னாலேயே உங்கள் தளம் வந்திருக்கும் நினைவு. வல்லிம்மா உட்பட நண்பர்களின் வித்தியாசமான பங்களிப்புகள் நம்ம ஏரியா தளத்தில் இருக்கிறது. வல்லிம்மா பாடிய பாடல் "அன்பு நெஞ்சம் கொண்டவர்க்கே அச்சம் தேவையா" என்ற பாடல் என்று நினைவு.
நீக்கு*அன்பு மனம் கனிந்தபின்னே...
நீக்கும்ம்ம்ம்ம் இருக்கலாம் ஸ்ரீராம். ஆனால் நான் கவனிக்க ஆரம்பிச்சது எங்க அம்பத்தூர் வீட்டில் பிரச்னைகள் ஆரம்பிச்சப்போ! அதை எல்லாம் நான் எழுதினப்போ நீங்க ரொம்பக் கோபப்பட்டீங்க! விட்டால் எங்க சார்பில் அங்கே வந்து அந்த ஆட்களை எல்லாம் அடிச்சுடுவீங்க போல இருந்தது. அப்போத் தான் புரிஞ்சது நாம் எழுதுவது எதிராளியின் உணர்வுகளை எப்படி எல்லாம் கிளறி விடும் என்பது! :))))))
நீக்குஹா... ஹா... ஹா... அவ்வளவா உணர்ச்சி வசப்பட்டேன்..?
நீக்குயெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு!
நீக்குநெல்லைத்தமிழன் கேட்டது, ஆரம்பப்புள்ளி பற்றி. அதை மட்டும்தான் பதிலில் குறிப்பிட்டிருந்தேன். கீதா மேடம் ஸ்ரீராம் எல்லோரும் சொல்லியிருப்பது அந்தப்புள்ளியைச் சுற்றி பாசமிகு வாசகர்கள் அன்போடு வரைந்த வண்ண வட்டங்களை. எல்லோருக்கும் நன்றி.
நீக்குரேவதி பாட்டெல்லாம் பாடிப் பதிந்து எ.பி.க்கு அனுப்பி இருக்கிறார். அது ஒரு காலம். அப்போக் கருத்திட்டவர்களில் பலரும் இப்போது வருவதில்லை என்னையும், ரேவதியையும் தவிர்த்து. :)))) ஞாயிற்றுக்கிழமைப் படம் கௌதமன் மட்டும் போடுவார். அதுக்குப் போட்டியாக நானும் கிட்டத்தட்ட அதேபோல் படம் தேர்ந்தெடுத்துப் போடுவேன். அதெல்லாம் எப்போ மாறினதுனு தெரியாமல் மாற்றம் வந்திருக்கு. ஹிஹிஹி, எனக்கு ஒருவேளை மன முதிர்ச்சி வந்துடுத்தோ? (யாரோ அங்கே அதெல்லாம் இல்லைனு மெதுவாச் சொல்றது காதில் விழுதே!)
பதிலளிநீக்குநல்ல மலரும் நினைவுகள்! இப்படி ஒவ்வொருவரும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டு, அதை தனிப்பதிவாக போடலாம்.
நீக்குகௌதமன் அப்போ அமானுஷ்யம் எழுதுவார். ஒரு தரம் "பெண்"களூரில் பால்காரர் பத்தி எழுதின அமானுஷ்யம்! :))))) அதன் பின்னர் ஸ்ரீராமும் பதிவுகளில், முகநூலில் என அமானுஷ்யம் எழுதினார்.
நீக்குஆம். எங்கள் கற்பனைகளை கொஞ்சம் கொஞ்சமாக அப்போதான் எழுத ஆரம்பம் செய்தோம். ஒவ்வொருவரும் அளித்த பின்னூட்டங்கள் எங்கள் ஆர்வத்திற்கு உரமிட்டு வளர்த்தன.
நீக்குநடை, உடை, பாவனைகள் பெரும்பாலும் பொய் சொல்லும். ஆனால் உள்ளுணர்ச்சி பொய் சொல்லாது. எனக்குத் தெரிந்து நான் பலரைப் பற்றியும் கணித்திருந்த/கணித்திருக்கும்/கணித்துக் கொண்டிருக்கும் கணிப்புகள் எல்லாம் சரியாகவே இருக்கின்றன. (உறவு, நட்பு வகைகளில்) ஆனால் நம்மவர் அப்பாவி! எளிதில் நம்புவார், ஏமாந்தும் போவார். மன வருத்தம், உளைச்சல் வரும். சில சமயம் எனக்குக் கொஞ்சம்கோபம் வரும். நான் ஏற்கெனவே உங்களை எச்சரித்தேனே என்றும் சொல்லி விடுவேன். ஆனாலும் ஏமாற்றம் தவிர்க்க முடியாது தானே! எ3ன்ன செய்ய முடியும்! உள்ளுணர்ச்சி சொல்லுவது என்னைப் பொறுத்தவரை சரியாகவே இருக்கிறது.
பதிலளிநீக்குகீசா மேடம்... நட்பு வகையில் நீங்கள் கணித்திருப்பவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாமே.... ஏன் ரகசியமாக வைத்துக்கொள்ளணூம்? ஹா ஹா ஹா
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் கேட்டிருந்த கேள்விகளை எல்லாம் விழுங்கினது யார்? அதிசயமாக இருக்கிறதே! :(
பதிலளிநீக்குஆஆஆஆ விடாதீங்கோஒ கீசாக்கா:)
நீக்கு1. நடை, உடை, பாவனைகள் ஒழுங்காக இருந்தாலும் மனதளவில் பலரும் வேறே முகத்தைக் கொண்டிருக்கிறார்களே? அது ஏன்?
பதிலளிநீக்கு2. ஒருவர் மேல் பகைமை 50 வருடங்கள் ஆனாலும் நீடிக்குமா என்ன? தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களில் வருகிறாப்போல்! அப்படி ஒருத்தர் இருக்கார். அவர் தன் எதிரியின் பெயரை எப்படியானும் நாசமாக்கவேண்டும் என்றே செயல்படுபவர்!
3. ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள நம்மை அழைத்தவர்கள், நமக்கு முன்னுரிமை எனச் சொன்னவர்கள், நாம் அங்கே போய்ச் சேர்வதற்குள்ளாக அதை நடத்தி முடிப்பது பற்றி? கடைசியில் நாம் வந்திருக்கிறவங்க கிட்டே கெட்ட பெயர் வாங்கிப்போம், முன்னாடியே வரமாட்டியானு! ஆனால் நமக்குச் சொன்ன நேரமும் அவங்க நடத்தி முடிச்ச நேரமும் வேறேயாக இருக்கும்!
4. இன்னும் சிலர் இருக்கிறார்கள். தாய், தந்தையிடமிருந்தே சகோதர, சகோதரிகளைப் பிரித்துவிடுவார்கள். அப்படிப் பிரிக்கிறார்கள் என்பதை சம்பந்தப் பட்டவர் உணரும் முன்னரே இது நடந்து முடிந்து விடும். கடைசியில் பாதிக்கப்பட்டவர் வார்த்தைகள் சபையில் ஏறாது! இப்படியான மனிதர்களைக் கையாளுவது எப்படி?
பதிலளிநீக்குபதில்கள் அளிப்போம்.
நீக்குஆரம்பப்பாடங்கள்...ரசித்தேன். நீண்ட நெடிய பயணம். தொடர்ந்து பரிணமிக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நீக்குநெல்லையின் முதல் கேள்விக்கு இரண்டாவது பதிலை டிட்டோ....இந்த லஞ்சம் வீட்டிலேயே தொடங்குதே நெல்லை...!! ஹா ஹா ஹா
பதிலளிநீக்குபானுக்காவின் முதல் கேள்விக்கு....இது ஆண் என்றில்லை அக்கா...பெண்ணாகிய நாமுமே முதலில் அம்மா அல்லது நம் பாட்டியின் கை ருசி (அந்தக் காலத்தில் குழந்தைகள் பாட்டியிடம் வளர்ந்த குழந்தைகளுக்கு பாட்டிதான் அம்மா என்று...) தானே நினைவுக்கு வரும். அந்தச் சாப்பாடு வெறும் மோர் சாதமாக இருந்தாலும் ஏன் பழையதாகவே இருந்தாலும் கூட அதில் கூடவே போனஸாக வரும் அந்த அன்பும், அக்கறையும் வேறு எதில் இருக்கும்? நாம் சமைத்து ருசியாகச் சமைத்திருக்கிறோம் என்று மற்றவர் சொன்னாலும் கூட என்னதான் இருந்தாலும் என் அம்மா, பாட்டி, என் மாமியார் கைமணம் வராது.
கீதா
உண்மைதான். மோர் சாதத்தைப் பிசைந்து நமக்கு ஊட்டிவிடும் அம்மா - நம்முடைய முகக் குறிப்பைப் பார்த்தே மோர் சாதத்தில் இருக்கும் நிறை குறையை ஊகித்து விடுவார்.
நீக்குநகைச்சுவை உணர்வு க்கான இரு பதில்களுமே சரிதான். நகைச்சுவை உணர்வு என்பது இயல்பாக நம்முடனேயே இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு அது பல அனுபவங்கள் சுழற்றி அடிக்கும் போது இயல்பு மாறும் போது அதுவும் இழக்க நேரிடுகிறது நேரில் கண்டது.
பதிலளிநீக்குவளர்த்துக் கொள்வது என்பதும் முதலில் நகைச்சுவையை ரசிக்கத் தெரிய வேண்டுமே இல்லையா? எதற்கும் சிரிக்க மாட்டேன்னு இருந்தா வளராதே.
கீதா
ஆம், அதே !
நீக்குஎல்லாக் கேள்விகள் பதில்கள் ஸ்வாரஸியம். மீண்டும் வருகிறேன்..
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குஎனது கேள்விகளுக்கு பதிலளித்த ஆசிரியர்களுக்கு மற்றும் நினைவை பகிர்ந்த பானு அக்காவுக்கும் நன்றி.
பதிலளிநீக்குஅந்த மினி இட்லி சாப்பிட சந்தர்ப்பம் அமையலை :) அந்த குட்டி தட்டுகள் என்னிடமில்லை .இருந்தா செய்திருப்பேன் .சரி பார்ப்போம் லாக் டவுன் முடிஞ்சு அமேசனில் கிடைக்குதான்னு
இருக்கு என்றுதான் நினைக்கிறேன்.
நீக்குவிதவிதமான வற்றல்கள் போடுவது மற்றும் தோட்டத்தில் பாத்தி கட்டி தோட்டவேலையென்று பிசியாக இருப்பதால் இவ்வாரம் கேள்விகளுக்கு ஒரு பிரேக் :)
பதிலளிநீக்குஏஞ்சல் மீ யும் வற்றல் வடாம், இலை வடாம் வேலைகளில் பிஸி!!!!!!!!
நீக்குகீதா
இருவரும் பார்சல் அனுப்புவீர்களா?
நீக்குஏஞ்சலின் - ஒரே வற்றல் போட்டு அது வித விதமாக வந்தனவா? Clarification please
நீக்குகீதா ரங்கன் - 5 நாள் சுளீர் வெயில் பெங்களூர்ல என்று வெதர் ரிப்போர்ட் வந்துவிட்டால் இந்தப் பெண்கள் உடனே வற்றல் வடாம் என்று கிளம்பிடறாங்க.... சரி சரி... அடுத்த முறை சாப்பிட்டுப்பார்க்கிறேன்.
///நெல்லைத் தமிழன்15 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 7:19
நீக்குஏஞ்சலின் - ஒரே வற்றல் போட்டு அது வித விதமாக வந்தனவா? Clarification please///
🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️😂😂😂😂😂😂😂😂😂
//& ஆக்சுவலா முன்னோர்கள் அவற்றுக்குப் பேர் வைத்தார்களாம். ஆனால் அவற்றை ஸ்கூலில் சேர்க்கமுடியவில்லை. எல்லா மேகக் குழந்தைகளும் வகுப்புகளில் கம்முனு உட்காராம உலா போயிட்டே இருந்ததால, ஹெட் மாஸ்டர் அவைகளின் பெயரை அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரிலிருந்து தூக்கிட்டாராம். //
பதிலளிநீக்குஅடடா முகில்குட்டீசின் படிப்பை பாதியிலேயே நிறுத்திய HEADமாஸ்டர் வெறி :) BAD
ஹா ஹா ! குட்டிக் குழந்தைகள் படிக்க வந்தால், அவைகளைப் பார்த்து உற்சாகத்தைக் கற்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்தான். அதைக் கற்காமல், கடுமை காட்டும் ஆசிரியர்களைத்தான் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரிலிருந்து தூக்கவேண்டும்!
நீக்குஎந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தது அது. சுயநல நோக்கம் எதுவும் இல்லை என்றால், டபிள் ஓ கே. //
பதிலளிநீக்குஅதே அதே....சாமர்த்தியம் என்றதும் கூட பொருத்தம்தான்.
சாகஸம் என்பது ஒவ்வொருவரது வாழ்க்கையைப் பொருத்தது. முதல் பதிலில் சொன்னது போல...
பொதுவாக எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையில் சாகசம் செய்திருப்பார்கள்தான். அதுவும் எதிர்நீச்சல் போட்டு. நம்மைச் சுற்றி எத்தனை மக்கள் அப்படியானவர்கள் இருக்கிறார்கள். எண்ணிலற்றோர்.
//அது நாம் எதை சாகசம் என்று நினைக்கிறோம் என்பதைப் பொருத்தது. // எக்ஸாக்ட்லி.
நாம் என்னவோ நம் வாழ்க்கையில் பெரிய சாகஸம் செய்துவிட்டோம் என்று நினைப்போம். அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்க்கையைப் பார்த்தால் அதுவும் அவர்கள் குழந்தைகள் படித்து நல்ல நிலையில் ஒழுக்கமாக வருவதைப் பார்க்கும் போது ஹப்பா எப்படியான சாகசம் என்று நினைக்கத் தோன்றும்....
கீதா
முற்றிலும் உண்மை. நன்றி.
நீக்குஏஞ்சலின் 5 வதிற்கு.
பதிலளிநீக்குஏஞ்சல் கண்டிப்பா பெரும்பான்மையோர் கொஞ்சமேனும் கனவுலகில் இருப்பார்கள் என்றுதான் உலக மனோதத்துவ ஆராய்ச்சி சொல்கிறது. ஏனென்றால் பெரும்பாலோர் அதை விரும்புவதால்..ஆனால் ஒன்றே ஒன்று கனவுலகில் இருந்துவிட்டு யதார்த்தம் வரும் போது மனம் நார்மலாக இருக்க வேண்டும். இல்லையேல் வேறு வகை ஆகிவிடும்...ஃப்ராக்ஷன் ஆஃப் எ செகன்ட்/மயிரிழைதான். சிலரால் யதார்த்தத்தில் வாழ முடியாமல் போவது இதனால்தான். நான் ரொம்ப இந்த சப்ஜெக்டில் போகலை.
என்னைப் பொருத்த வரை கனவுலகம் என்பது நம் தனிப்பட்ட உலகம் அது எத்தனை சந்தோஷமானது தெரியுமா!! அங்கு எல்லாமே ஹாப்பியாகத்தான் இருக்கும். பின்ன யதார்த்தத்தில் இல்லாததை யோசித்து யதார்த்தம் ரொம்பவே வேதனையாக அச்சுறுத்தும் போது கொஞ்சம் ஃபேண்டஸி வேர்ல்டில் இருந்துவிட்டு வருவோமே.... கதைகள் பிறப்பதற்கும் கூட வழி வகுக்குமே!! ஹா ஹா ஹா ஹா...
கலாம் அவர்கள் கூட கனவு காணுங்கள்னு சொல்லிருக்காரே!!!!!!
கீதா
கனவுகள் காணலாம்தான். ஆனால் கனவுகள் காண்பவர், கனவுகளைத் தேர்ந்தெடுக்க இயலாதே!
நீக்குஏஞ்சலின் 7 வது..
பதிலளிநீக்குஆமாம் ஏஞ்சல் பார்க்க நேரிடுகிறது. எனக்குன்னு ஒரு அடையாளம் வேணும் என்று. நினைப்பதில் தவறு இல்லை ஆனால் அது கிடைக்க தாமதமானாலோ அல்லது கிடைக்காமல் போனாலோ கையாளத் தெரிய வேண்டும் இல்லையேல் அது எங்கு முடியும் என்பதும் கண்டதுண்டு.
ஆ இந்த சப்ஜெக்ட்டும் மனோதத்துவத்துல போயிட்டா ஆழமான சப்ஜெக்ட்...நான் கூட இந்த ஐடென்டிட்டி க்ரைஸில் பேஸ்ல ஒரு கதை எழுதியிருந்தேன்...
கீதா
எங்கே? எப்போ?
நீக்குஆஹா மினி இட்லி இன் சாம்பார் சூப்பர் அதில் மேலே கொஞ்சம் நெய், வெங்காயம் போட்டு ஜூப்பரா இருக்கும். அதையே தயிர் இட்லியாகவும் செய்யலாம் தயிர் வடை செய்வது போல. பொடி இட்லி...மினி இட்லி ரெசிப்பிஸ் வெரைட்டிஸ் உண்டே...
பதிலளிநீக்குபிறருக்காகச் செய்வதிலும் (சுயநலம் இல்லாமல், முழு மனதோடு) மிகுந்த சந்தோஷம் ஏற்படும்...கூடவே நாம் தாம் செய்தோம் நம்மால் தான் என்று மண்டைக்குள் கொண்டு போகாமல், வலது கை செய்வது இடது கைக்குக் கூடத் தெரியாமல் செய்வது...மகா பெரியவர் சொன்ன வாக்கு இது.
ஏஞ்சல் பஞ்சுப் பொதி மேகம் ஷேப் மாறிட்டே போகுமே எப்படிப் பெயர் வைக்கிறது?!!! ஹிஹிஹிஹி
கீதா
ரசனையா சொல்லியிருக்கீங்க!
நீக்குஅதிரா ரிவி பார்க்கறவங்களில் பலர் ரொம்ப அதுலேயே இன்வால்வ் ஆகி எமோஷனலாகப் பார்ப்பதால் ஹா ஹா ஹா..மாமியார், மருமகள்கள் ரிவியில் வரும் காட்சிகளில் வரும் வார்த்தைகள் எல்லாம் சொல்ல முடியாது இங்கு...ஹா ஹா ஹா அது போல நல்ல மாமியார் மருமகள் வந்துவிட்டால் ...பாரு இப்படியா இருக்குது நம்ம வீட்டுல என்றும் சத்தமாகச் சொல்லும் மாமியார், மருமகளும் உண்டு.!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
நல்லவேளை ! நான் சீரியல்கள் பார்ப்பதில்லை!
நீக்குஆக்சுவலா முன்னோர்கள் அவற்றுக்குப் பேர் வைத்தார்களாம். ஆனால் அவற்றை ஸ்கூலில் சேர்க்கமுடியவில்லை. எல்லா மேகக் குழந்தைகளும் வகுப்புகளில் கம்முனு உட்காராம உலா போயிட்டே இருந்ததால, ஹெட் மாஸ்டர் அவைகளின் பெயரை அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரிலிருந்து தூக்கிட்டாராம்.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா செமையா சிரித்துவிட்டேன்...
கீதா
நன்றி.
நீக்குஅருமை சுவாரசியமான கேள்வி பதில்கள்
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு//அதில் ஒரு சிறு நியாயமும் உண்டுதான்// - அன்பளிப்புகளை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? நிருபருக்கு அவங்க பத்திரிகை காசு கொடுக்குது. அப்புறம் எதற்கு கை நீட்டணும்? அப்புறம் எப்படி அவங்க நியாயமா எழுதுவாங்க?
பதிலளிநீக்கு//மறைமுகமா நட்பு பாராட்டுவது// - இது ஆபீஸ்களில் நிறைய நடக்கும். மேனேஜருக்கு ஒரு சிலருடன் நல்ல புரிதல் (அவங்க ஊர்க்காரங்க அல்லது வேண்டப்பட்டவங்களா இருப்பாங்க) இருக்கும். ஆனா மீட்டிங்ல திட்டறமாதிரி திட்டுவாங்க. ஆனா மறைமுகமா அவங்களுக்கு நல்லதே செய்வாங்க. வெளில பார்க்கிறவங்களுக்கு biasedஆ இல்லாததுபோலத் தெரியும். ஆனா உள்ளுக்குள் எல்லா நல்லதையும் செய்வாங்க. நானும் இதை அனுபவித்திருக்கேன்.
//மரத்துக்கு பெயர் இருக்கு// - மரத்துக்கு எங்க பெயர் இருக்கு? ஒரேவித காய் கனிகளைக் கொடுக்கிற பல மரங்களுக்கும் ஒரே பெயர்தானே. அதுபோல மேகத்துக்கும் அதன் ஷேப்/அமையும் விதம் இவற்றைப் பொருத்து சில பெயர்களில் வகைப்படுத்துவாங்க. சில மேகங்கள் பஞ்சுப்பொதிகள்..... விமானத்திலேர்ந்து பார்த்தால் சில சமயம் சடை வளர்ந்தார்ப்போல் அடைத்துக்கொண்டு மைல் கணக்கா மேகம் இருக்கும், அதுக்கு ஒரு பெயர் என்று பலவிதமாக வகைப்படுத்தியிருக்காங்க.
//அன்பு பாசம் நேசம் இரக்கம் வைப்பது// - மனிதன் எதிர்பாராமல் யாரிடமும் அல்லது எவையிடமும் அன்பு பாசம் நேசம்லாம் வைப்பதில்லை. ஏதோ ஒரு புள்ளியில் அவனது உள் மனது வெளிப்பட்டுவிடும் (எவ்வளவு பாசம் வைத்தேன்..நான் சாப்பிடாமல்கூட அவனைக் கவனித்துக்கொண்டேன். பொண்டாட்டி வந்ததும் மாறிட்டான் என்று சொல்வதை நிறைய தடவை கேட்டிருப்பீர்களே)
கொட்டித் தீர்த்துவிட்டீர்கள்!
நீக்கு//கிராமத்து வாழ்க்கையை விரும்பிக் கொண்டும்// - பெரும்பாலும் நாம் எல்லோரும் நிகழ்காலத்தில் வாழ்வதில்லை, ரசிப்பதில்லை. காணாமல் போன ஆட்டின்மீது அதிக ஆசை கொள்வதுபோல, கடந்த காலத்தை நாம் அதிகமாக ரசிக்கிறோம், மிஸ் பண்ணுவதாக நினைத்துக்கொள்கிறோம். இன்னும் சில வருடங்கள் போனால், இப்போதிருந்த வாழ்க்கையையும் நாம் மிஸ் பண்ணுவதாக நினைப்போம். நிகழ்காலத்தில் வாழாத எல்லோரும் நினைப்பது இது.
பதிலளிநீக்கு//கணவனோடு உடன்கட்டை// - இது வயதானவளை எப்படிப் பார்த்துக்கொள்வது என்ற சிந்தனையால் வந்த வழக்கம். இன்னும் பழங்காலத்தில் மிக வயதானவர் கஷ்டப்படும்போது, அவரைப் பார்த்துக்கொள்வது இயலாததால், பெரிய பானைக்குள் அவரை வைத்து, ஓரிரு நாட்களுக்கு உணவையும் வைத்து காட்டில் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். சில நாட்களில் அப்படியே அந்தப் பானையோடு அவரை/ளை புதைத்துவிட்டு வந்துவிடுவார்கள். 'சதி' என்று சொல்லப்படும் உடன்கட்டை ஏறுதல், எங்கள் குடும்பத்தில் 4 தலைமுறைக்கு முன் நடந்ததாக என் அப்பா எனக்குச் சொல்லியிருக்கிறார். அதற்கு அடுத்த ஸ்டேஜ், பெண்ணுக்கு தலைமுடியை எடுத்துவிட்டு வெள்ளைப் புடவை மட்டும் கட்டிக்கொள்ளுமாறு செய்வது... காலம் இவற்றையெல்லாம் மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது, தவறுகள் திருத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
Again.
நீக்குஉடன்கட்டை பற்றிய விளக்கமே நெல்லைத் தமிழரால் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. இதை விரிவாக எழுதினால் பதிவாகி விடும். பின்னர் ஒருமுறை சொல்லப் பார்க்கிறேன்.
நீக்குகாத்திருக்கிறோம்.
நீக்குசதியைப் பற்றி எழுதும்போது சில வாரங்களுக்கு முன்பு நான் பார்த்த பத்மாவதி படம் நினைவுக்கு வந்துவிட்டது.
பதிலளிநீக்குபொதுவா நாம, கதாநாயகன்/நாயகி வில்லனிடமிருந்து தப்பிக்கணும் என்றுதான் நினைப்போம். இந்தப் படத்தில் கிளைமாக்ஸில் அலாவுதீன் கில்ஜி படைகள் கோட்டைக்குள் வந்துவிடுகின்றன (அதற்கு முன்பு மன்னன் தோற்கடிக்கப்படுகிறான்). உள்ளே பத்மாவதியும் மற்ற அரண்மனைப் பெண்டிரும் பெரும் தீ வளர்த்து அதில் குதித்துவிடத் திட்டமிடுகின்றனர். அவங்க மெதுவா தீ இருக்கும் கூடத்தை நோக்கிச் செல்கின்றனர். இந்தப் பக்கம் கோட்டையைத் தகர்த்துக்கொண்டு உள்ளே கில்ஜி வந்துகொண்டிருக்கிறார்.... பார்க்கும் ரசிகர்கள், 'பத்மாவதி...கில்ஜி உன்னைப் பிடித்துவிடப் போகிறான். சீக்கிரம் தீயில் குதித்துவிடு' என்று எண்ணும்படி டைரக்டர் அந்தக் காட்சியை மெதுவாக எடுத்துள்ளார். (கதாநாயகி வெற்றி பெறணும் என்று எண்ணாமல், சீக்கிரம் செத்துவிடு என்று எண்ணும்படி அந்தக் காட்சி இருந்தது) நினைத்துப் பார்க்கும்போது டைரக்டர் செய்த குளறுபடி மனதில் தோன்றியது. வரலாற்றின்படி, கில்ஜி நுழைவதற்கு முன்னாலேயே அனைத்துப் பெண்டிரும் தீயில் குதித்து இறந்துவிடுவர். அவன் உள்ளே நுழையும்போது தீயில் கருகிய சடலங்களைத்தான் பார்ப்பான்.
இப்போப் போனாலும் சிதோட்கடில் அந்த இடங்களைப் பார்க்கலாம். நீங்க பஞ்ச துவாரகா பயணத்தின்போது இங்கேயும் போய் வந்திருக்கலாம். நாத் த்வாரகாவிலிருந்து அப்படி ஒண்ணும் தூரம் இல்லை சிதோட்கட்.
நீக்குஇந்தச் சிதோட்கடைத் தான் தமிழர்கள், "சித்தூர்" என்கின்றனர். சித்தூர் ராணி பத்மினி என்றால் தான் தெரியும், ட்ரம்பைத் துரும்பு என ஆக்கி இருப்பதைப் போல! தூய தமிழில் சொல்கிறார்களாம்! :(
நீக்குசுவையான தகவல்கள்.
நீக்குவரலாற்றை சிதைப்பதில் நமது சினிமாக்காரர்களும், அரசியல்வியாதிகளும் போட்டிபோடுவது வழக்கம். அ.வியாதிகள் இன்னும் மேலேபோய் வரலாற்றின் சில அத்தியாயங்கள் வெளிவராமலேயே பார்த்துக்கொள்வார்கள்! இப்படி நிறைய சதிகள்...
பதிலளிநீக்குஅதானே!
நீக்கு5. உள்ளுணர்ச்சி சொல்லுவதை நீங்கள் நம்புவீர்களா? எனில் அப்படி நம்பி நடந்த ஏதேனும் நிகழ்ச்சி?
பதிலளிநீக்கு6. மனித குணங்களை உள்ளுணர்ச்சியால் கண்டு பிடிக்கலாம் என்பதை நான் நம்புகிறேன். நீங்கள்?
7. திட்டம் போட்டுப் பழி வாங்குபவர்கள் தொலைக்காட்சிகளில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறார்களே! அவங்களுக்குக் குற்ற உணர்வே வராதா?
8. காரணமே இல்லாமல் ஒருவரை அவர் ரொம்பவே பெர்ஃபெக்டா இருக்கார் என்பதாலும் எல்லாவேலைகளையும் திறம்படக் கையாளுகிறார் என்பதாலும் வெறுப்பது சரியா?
9. பலருக்கும் ஸ்ட்ரெயிட் ஃபார்வர்ட் என்றால் பிடிக்கவில்லை. ஏன்? அப்படி இருப்பவர்களைப் பின்னால் கேலி செய்கின்றனரே! ஏன்?
10.இந்தக் கொரோனா ஊரடங்கினால் பொது மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன? தீமை என்ன?
11. குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து இருந்தாலும் கணவன் இருப்பதால் மனைவிக்கும், மனைவியுடன் வீட்டில் தங்கி இருப்பதால் கணவனுக்கும் அவரவர் தனிப்பட்ட உரிமைகள் போய்விட்டன எனச் சண்டை வருவதாகப் பத்திரிகைகள் சொல்கின்றன. அப்படியா?
12. கணவன்மார்கள் மனைவிக்கு உதவலாம், ஆனால் இந்தப் பாத்திரம் தேய்ப்பது, துணி தோய்ப்பது போன்ற நகைச்சுவைத் துணுக்குகள் அனைத்தும் பொய் தானே? உண்மையிலேயே செய்வாங்களா?
//கணவன்மார்கள் மனைவிக்கு உதவலாம், ஆனால் இந்தப் பாத்திரம் தேய்ப்பது, துணி தோய்ப்பது // - இது என்னா கேள்வி கீசா மேடம்... மனைவிக்கு உதவணும்னா, அவங்க வேலைகள்லதான் உதவ முடியும். அது எந்த வேலையா இருந்தா என்ன? இந்த வேலை இவங்கதான் செய்யணும்னு எழுதியிருக்கா என்ன? (ஆனா இந்த மாதிரி கணவன் உதவுவதை கட்டுப்படுத்துவது அல்லது செய்யவிடாமல் பண்ணுவது, இன்னொரு பெண் (மாமியார் ரூபத்தில்) என்பதையாவது ஒத்துக்கொள்கிறீர்களா? ஹா ஹா ஹா)
நீக்கும்ம்ம்ம்ம் மாமியார் என்ன நாத்தனார் கூடச் சொல்லுவது உண்டு. பல மாமியார்களைத் தூண்டி விடுவதே நாத்தனார்கள் தான்.
நீக்குபெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்று இருப்பதுதான் சோகம்.
நீக்குபதில்கள் அளிப்போம்.
நீக்குநான் ரொம்ப லேட் என்பதால அடக்கொடுக்கமாகத் திரும்பிச் செல்கிறேன்:)....
பதிலளிநீக்குஇம்முறை கேள்விகள் அதிகமாகி விட்டனவோ? பதில்களில் உற்சாகமில்லை, ஏனோதானோ என்பதைப்போல குடுத்திருப்பதைப்போல ஒரு பீலிங்...
அனைத்துக்கும் நன்றி.
என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க ! நல்லா நிதானமா ஒவ்வொரு பதிலா மீண்டும் படிச்சுப் பாருங்க. எவ்வளவு கஷ்டப்பட்டு பதில்கள் சொல்லியிருக்கோம்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குநாம் மற்றவர்களை நம்பி ஏமாறுவது என்ற எண்ணம்
எனக்கு வந்ததே இல்லை. என் நண்பர்கள் அனைவருமே என்
மதிப்பைப் பெற்றவர்கள்.
நாணயம் தவறாமல் நடப்பவர்கள்.
அப்படி மீறி யாராவது நடந்திருந்தால் ஏதாவது
காரணம் இருக்கும் என்பதில் ஆக்ஷேபணையே இல்லை.
ஏதோ ஒரு இழை நம்மைக் கட்டுகிறது.
கண்ணுக்குத் தெரியாத அந்தப் பாசத்தை நான் மிகவும் நம்புகிறேன்.
அடிக்கடி சொல்லி வலியுறுவதில்லை
அந்தப் பாசம்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வளர்ந்த இணைய நேசம்.
நீங்கள் எல்லாம் இல்லாவிடில்
என்ன் செய்திருப்பேன் என்று நினைக்க அச்சமாக இருக்கிறது.
இத்தனை நாட்களுக்குப் பிறகு ஸ்ரீராம் ,அன்பு மனம் கனிந்த பின்னே
நினைவில் வைத்திருப்பது மிக அதிசயம். நன்றி மா.
அதே போல கௌதமன் ஜி ,நடத்திய மிஸ்ஸ்ட் கால் நினைவில் இருக்கிறது.
தவளை இளவரசி மறக்க முடியாது.
குடும்பத்தில் ஒரு அங்கம் போல எங்கள் ப்ளாக்.
என்றும் வளர ஆசிகள்.
கொடுத்து வைச்சிருக்கீங்க ரேவதி. நாங்க இருவருமே பலரையும் நம்பி ஏமாந்திருக்கோம். இத்தனைக்கும் அவங்களை நம்பலாமா என உள்ளுக்குள் ஒரு கேள்வி ஓடிக் கொண்டே இருக்கும். அப்படியும் நம்பி ஏமாந்திருக்கோம். வீட்டுக்கு வரும் எலக்ட்ரீஷியன் கூட நல்லவர் என நம்பி ஏமாந்திருக்கோம். :((((( இம்மாதிரி நிறையப் பொருள் நஷ்டம் ஆகி இருக்கு.
நீக்குநிறைவான நன்றிகள் வல்லிம்மா. கருத்துரைக்கு நன்றி கீ சா மேடம்.
நீக்குஅப்போ எங்கள் ப்ளாக் ஸ்ரீராமால் துவக்கப்படவில்லையா
பதிலளிநீக்குஎங்களில் அவரும் உண்டுதானே!
நீக்குஅருமையான கேள்வி பதில்கள்.
பதிலளிநீக்கு