வியாழன், 2 ஏப்ரல், 2020

ஈரலில் இனிஷியல் போட்ட டாக்டர்.. - பொறுமையா காத்திருக்க மருந்து இருக்கா டாக்டர்?

ஒரு நோயாளியின் க்ளினிக் அனுபவங்கள்...


உள்ளே நுழையும்போதே பத்து பேருக்கு குறைவில்லாமல் காத்திருந்தார்கள்.  இதில் எல்லோரும் தனித்தனியாகவா, சேர்ந்து எத்தனைபேர் டாக்டரைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நன்றி இணையம்.

ஏதாவது டோக்கன் எண் போல தருவார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை.  நாமே ஒரு சுய ஒழுங்கு முறையில் வரிசை அமைத்துக்கொள்ள வேண்டியதுதான் என்றார்கள்.

அப்படிதான் நடந்தது.   நடுநடுவே 'அடுத்தது நான், எனக்கடுத்தது இவர், இவருக்குப் பின்னால்தான் நீங்கள்' என்று குறுக்கே சடாரென சந்தடி சாக்கில் எழுந்தவரிடம் விளக்கம் தரப்பட,  அப்படிச் சொன்னவரிடம் 'உங்களுக்கு அடுத்தது நான்' என்று தொடர்ந்து ஒருவரும், 'அதுக்கும் அடுத்தது நான்' என்று அடுத்தவருக்கு வரிசை அமைத்துக் கொண்டு எங்களை கைநீட்டி 'இவர்கள்தான் கடைசி' என்றார்கள்.

கொஞ்ச நேரத்திலேயே எங்கள் அந்த 'கடைசி' பெருமை பறிபோனது.  அடுத்தடுத்து ஆட்கள் வந்தவண்ணம் இருக்க, உட்கார, காத்திருக்க இடம் இல்லாத சிறிய, மிகச்சிறிய ஹால்.  அவர்கள் வெளியே காத்திருக்கத் தொடங்கினார்கள். உள்ளே முதலில் வந்தவர்  'யார் லாஸ்ட்'  என்று கேட்டு எங்களைப் பார்த்து அடையாளம் வைத்துக்கொண்டு போனார்.


ருத்துவரைப் பார்க்க ஒரு க்ளினிக்கில் காத்திருக்கிறீர்கள்.  

உங்களுக்கு முன் ஏழெட்டு பேர் காத்திருக்கிறார்கள்.  மருத்துவரைப்பார்க்க உள்ளே போகும் ஒவ்வொருவரும் உங்கள் பொறுமையைச் சோதிக்கும் அளவு நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.  எப்படி ஃபீல் செய்வீர்கள்?    

உங்கள் முறை வரும்போது உங்களுக்குப் பின்னே வந்து காத்திருப்பவர்களை மனதில் கொள்வீர்களா?  இல்லை 'மாமியாராக மாறிய மருமகள்' போல ரியாக்ட் செய்வீர்களா?!

'ஆ...  என் கம்ப்ளெயின்ட் சொல்ல வேண்டாமா?​'​ என்று நீங்களும் பேசிப் பேசி நேரம் எடுத்துக் கொள்வீர்களா?  இல்லை,  கடகடவென்று பேசி, மாத்திரை வாங்கி, வெளியே வந்து விடுவீர்களா?  அப்படி வந்து விட்டு நஷ்டம் நமக்குதான் என்று ஃபீல் செய்வீர்களா?

டுவில் ஓரிருவர் வேகமாகப் பார்த்து வெளிவந்து நம் ஆவலைத் தூண்டுவார்கள்.  ஆனால் நமக்கு முன்னால் போனவர் இருக்கிறார் பாருங்கள்...  இருவர் உள்ளே போவார்கள்...  குடும்பத்துக்கே ட்ரீட்மெண்ட் எடுப்பார்கள்.  "டாக்டர் என் அம்மாவுக்கு மூட்டு வலி இன்னும் அதிகமாயிருக்கு...   அப்பா காலில் அரிக்கிறது என்கிறார்.  பையனால் வர முடியவில்லை. அவன் இருமல் சரியாகவில்லை டாக்டர்...."   

போதிய இடைவெளிகளில் ஒவ்வொருவர் குறையாகச் சொல்லப்பட்டு, வெடிச் சிரிப்புகளுக்கிடையில் மருத்துவம் பார்க்கப்பட்டு மாத்திரை தரப்படும்!  அப்புறம்தான் வந்திருக்கும் ஜோடி, தங்கள் குறைகளைச் சொல்ல ஆரம்பிப்பார்கள்!

நன்றி இணையம்.

நடுவில் குடும்பத்தலைவியின் குரல் இடைவெட்டும்...  "பொண்ணுக்கு டானிக் தரேன்னீங்களே..."

வெளியில் அத்தனையும் காதில் விழ,  காத்திருக்கும் நமக்கோ...

அதேசமயம் ​எங்களுக்குப் ​பின்னால் வந்த இரண்டு மூன்று பேர்கள் 'மாத்திரை மட்டும் போதும்' என்று சீட்டைக் காட்டி வாங்கிப் போவார்கள்.  ​எங்களுக்கு ​முன்னால் வந்த யாரும் அந்த ஆப்ஷன் தேர்ந்தெடுக்காதது நம் துரதிருஷ்டம்.  

இன்னொரு கடுப்ஸ்...  ​எங்களுக்கு ​முன்னால் இருந்த நபர் ஒருவர் திடீரென எழுந்து காணாமல் போனார்.  நீண்ட நேரம் காணோம்.  சரி பொறுமை இழந்து சென்று விட்டார் போல என்று நம் எண்ணம் ஓடும்.    'ஒரு ஆள் முன்னதாக நாம் உள்ளே செல்லலாமே!'  நம் டர்ன் நெருங்க நெருங்க, கடைசி நொடியில் "ப்ரசன்னவதனம் த்யாயேத் " என்று பிரசன்னமாக, மறுபடி எங்களுக்கு முன்னால் இருவர்....  

பசி நேரம்...  சாப்பிட்டே வந்திருக்கலாம்.   டாக்டரோ ஒரு மணிக்குதான் வருவார்.  நாங்கள்  போனால் எங்களுக்கு முன்னால் பத்து பேர்!  பத்து பேர்தானே என்று ஆறுதல் அடைய முடியாது.  டாக்டரின் பேச்சும், நோயாளிகளின் உரையாடலும் அப்படி!  மேலும் பத்து பேர் எத்தனை பேரின் குறையைச் சொல்லி மருந்து வாங்குவார்களோ...  டாக்டரே மருந்தை எடுத்துக் கொடுத்து, பணம் எவ்வளவு என்று சொல்லி, பில் செட்டில் செய்யவேண்டும்!

நன்றி இணையம்.

அந்த க்ளினிக் வாகு..  டாக்டர் பேஷண்ட்ஸ் பேசுவது அனைவருக்கும் கேட்கும்.  ப்ரைவஸியே கிடையாது.  ​நடுவில் ஒரு சிறு தடுப்புதான்.​

"வயிறு சாந்தமா இருக்கணும்னா தயிர் மோர் சேர்த்துக்குங்க..."  

​"அப்படிச் சேர்த்துக்கிட்டா இருமல் வந்துடுது டாக்டர்..."

"சுகர் இருந்தா டானிக் வேணாம்..."  

"ஒரு நாளைக்கு மினிமம் மூணு லிட்டர் தண்ணி குடிக்கணும்...  இது மாதிரி கம்ப்ளெயிண்ட் இருந்தால் அதை இன்னும் ஸ்ட்ரிக்ட்டா,  கண்டிப்பா ஃபாலோ பண்ணணும்..."  

​"சரியாயிடுமா டாக்டர்?"

"ஒண்ணு ரெண்டு வருஷமாகும் பரவாயில்லையா,?  கண்டிப்பா க்யூர் பண்ணிடலாம்...  பொறுமைதான் வேணும்..."

ஏழெட்டு கம்பிளெயின்ட் சொல்றீங்க...    ஒரே சமயத்துல ட்ரீட் செய்ய வேணாம்...    ஒண்ணொண்ணா சரிசெய்வோம்...   கொஞ்சம் டைம் எடுத்துக்கும்..    கவலைப்படாதீங்க...  க்யூர் பண்ணிடலாம்... "

"ஒரே சமயத்துல வேணாம்..  ஒண்ணொண்ணுக்கும் ஏழு செட் மாத்திரை சாப்பிடணும்.  கன்ஃப்யூஸ் ஆயிடக்கூடாது பாருங்க...  எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்..."  

"ஒரு வருஷம் கூட யூஸ் பண்ணலாம்...  கொஞ்சம் ஹார்டா இருக்கும்...  அவ்வளவுதான்...."  

"தூரம் அதிகமா?  வர்றது கஷ்டமா இருந்தா ரெண்டு செட் கூட தர்றேன்....  அலைய வேண்டாம்"

சில பேஷண்ட்ஸ் கவலையின்றி சத்தமாகப் பேசுவார்கள்.   சில பேஷண்ட்கள் கூச்ச சுபாவம் போல...   அவர்கள் குரல் முணுமுணுவென்று கேட்கும்.  வெளியிலிருந்து மற்றவர்கள் பேசுவது காதில் விழுவதைக் கேட்டிருப்பார்களில்லையா?  ஆனால் டாக்டர் சத்தமாகத்தான் பதில் சொல்வார்.  நடுநடுவே ஒரு வெடிச்சிரிப்பு சிரிப்பார்.

"பையனுக்கு பொண்ணு அமைஞ்சிடுச்சா?"  

"இன்னும் இல்லை டாக்டர்... எங்கே...   எந்த கம்யூனிட்டிலயும் இப்பலாம் பெண் கிடைக்கறது ரொம்ப சிரமமா இருக்கு...  உங்களுக்குத் தெரிஞ்ச யாரோ இருக்காங்கன்னு சொன்னீங்களே...."

டாக்டர் தன் ட்ரேட்மார்க் வெடிச்சிரிப்பை உதிர்க்கிறார்...

"யோவ்...   வியாதியைப் பத்தி பேசிட்டு வெளியே வாங்கய்யா..   மணி ரெண்டே முக்கால் ஆவுது...   நாங்க இன்னும் சாப்பிடலை!"  -  வெளியே காத்திருப்போரின் மைண்ட்வாய்ஸ்!

உள்ளே போனதும் 'பொறுமையா காத்திருக்க ஏதாவது மருந்திருக்கா?' என்று டாக்டரிடம் கேட்கவேண்டும்!   என்ன,   "கவலைப்படாதீங்க...    சரி பண்ணிடலாம்...   நான் பார்த்துக்கறேன்" என்றுதான் சொல்வார்!

ஹோமியோபதி க்ளினிக்கில்தான் எவ்வளவு கூட்டம்...

மதுரையிலும் நாங்கள் ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் சிகிச்சை எடுத்திருக்கிறோம்.  ஆனால் அவர் ஒரு அலோபதி சர்ஜனும் கூட.  டாக்டர் கே வி அனந்தநாராயணன்.  அவரிடமும் செம கூட்டம் இருக்கும்.  மருத்துவக் கல்லூரி, ஆஸ்பத்திரியில் வேலை செய்பவர்கள் நிறைய வருவார்கள்.  டி என் சேஷகோபாலன் கூட வந்து வரிசையில் காத்திருப்பார்.  

ஆனால் அங்கு வேறொரு முறை கடைப்பிடிப்பார்கள்.  காலை பதினொரு மணிக்கு மேல் சென்று பெயர் பதிந்து வந்து விட்டால், எத்தனையாவது பெயர் என்று தெரிந்துகொண்டு,  நமக்கே எத்தனை மணிக்கு அங்கு செல்லலாம் என்று ஒரு ஐடியா கிடைத்துவிடும்.  மதியம் சென்றவுடன், எந்த நம்பர், எந் பெயர் ஓடிக்கொண்டிருக்கிறது, நமக்கு முன்னால் இருப்பவர் பெயர் என்ன என்று பார்த்துக் காத்திருக்கலாம்.

================================================================================================


இதுவும் ஒரு டாக்டர் செய்திதான்...  வித்தியாசமான டாக்டர்!  ஆட்டோகிராஃப் எங்கே போடுவது என்று விவஸ்தை இல்லையா?!!





=======================================================================================================================

ஹிஹிஹி....



=========================================================================================

கேரள முதல்வர் திரு பினராயி விஜயன் பற்றி அவர் மனைவி திருமதி கமலா சொன்னது பற்றி படித்தேன்.  அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.  இவர் பெயரைக் கேட்கும்போதெல்லாம் முன்னர் வாட்ஸாப்பில் வந்த ஒரு ஆடியோ நினைவுக்கு வருகிறது.  இவர் பதவிக்கு வந்த புதிதில் ஒரு குழந்தை இவர் பெயரைச் சொல்ல முயற்சிக்கும் ஆடியோ...    பிரியாணி விஜயன் என்றுகூட ஒருமுறை சொல்லும்!





"எனக்கு பூர்வீகம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் உள்ள ஓஞ்சியம் கிராமம். என் தந்தை பெயர், ஆண்டி மாஸ்டர்; பள்ளி தலைமை ஆசிரியர்; கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். கல்லுாரியில் நான் படித்து கொண்டிருந்த போது, கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய, கேரள மாணவர்கள் கூட்டமைப்பில் இருந்தேன்.

'எமர்ஜென்சி' எனப்படும், அவசர நிலை காலத்தில், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் விஜயன். வெளியே வந்ததும், 'கம்யூனிச பின்னணியைச் சேர்ந்த பெண்ணை தான் மணம் முடிப்பேன்' என, கூறியுள்ளார். இதை அறிந்த என் தந்தை, விஜயனை சந்தித்து, 'என் மகளை, நீங்கள் மணக்கலாம்... எனினும், அவளின் சம்மதத்தை பொறுத்து தான்' என கூறியுள்ளார். பின், என்னிடம் சம்மதம் கேட்டனர். இருவரும் ஒரு நாள் சந்தித்தோம். என்னை அவர் பார்த்தார்; அவரை நான் பார்த்தேன். 'சரி, நான் கிளம்பட்டுமா?' என்றார். நானும், 'சரி' என்றேன். இவ்வளவு தான், இருவரும் பேசிக் கொண்டது. எங்களின் திருமணம், 1978ல் நடந்தது. கேரள முன்னாள் முதல்வர், இ.கே.நாயனார், எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். மணமான புதிதில், தொடக்கப் பள்ளி ஒன்றில், தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தேன். அவர், அமைச்சரான தும், திருவனந்தபுரம் வந்தோம்; எனினும், ஆசிரியை பணியில் தொடர்ந்தேன். நான் எதை செய்தாலும், அதற்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுப்பார். என் மீது அன்பு, அக்கறை கொண்ட கணவர் அவர். மணமானதும், நாங்கள் எங்கும், தேனிலவுக்காக செல்லவில்லை; ஆனால், கன்னியாகுமரிக்கு மட்டும் சென்று வந்தோம். அப்போது அவர், இந்த அளவுக்கு பிரபலமான தலைவர் இல்லை.அரசியலில் இருப்பதால், பிறர் போல, மனைவியை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்ல முடியாது என்பதை நன்கு அறிந்ததால், நான் எதிர்பார்ப்பதில்லை.

பார்க்கத் தான் அவர், சிரிக்காதது போல இருப்பார். ஆனால், வீட்டில் சிரித்து சிரித்து தான் பேசுவார்; அவரிடம் நிறைய நகைச்சுவை உணர்வு உண்டு. வீட்டை விட்டு, வேறு எங்காவது வெளியூர் சென்றிருந்தால், தினமும், மூன்று, நான்கு முறை போன் செய்து, அனைவர் நலமும் விசாரிப்பார். உணவுப் பிரியர் தான்; எனினும், இது தான் வேண்டும் என கூற மாட்டார். சாதம் சாப்பிட்டால், மீன் இருக்க வேண்டும். எல்லா காய்கறிகளையும் சாப்பிடுவார்; இரவில், பழங்கள் மட்டும் தான் சாப்பிடுவார்.அரசியல் தொடர்பாகவோ, அரசு தொடர்பாகவோ நான் அவரிடம் பேசுவதில்லை; அவரும் விரும்புவதில்லை. ஓய்வு நேரத்தில் நிறைய புத்தகம் படிப்பார். தமிழ் படங்களை ஆர்வமாக பார்ப்பார். எங்கள் இருவருக்கும், கடவுள் நம்பிக்கை கிடையாது!


=================================================================================================

போதும்....  டைம் ஆயிடுச்சு...  இந்த வாரம் பொக்கிஷம் வேண்டாம்ப்பா...  கிளம்பறேன்....  


182 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், அண்ட் எல்லோருக்கும்….


    ஆ தலைப்பு பயமுறுத்துதே ஈரல் நு ஏதோ சொல்லி..

    கடைசில ஆஹா ஆஹா!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலை..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு...

      ஆனால்
      மிச்சப்படுவது அவமதிப்பும் மனவருத்தமும் தானே....

      நீக்கு
    2. வாழ்க நலம்.   என்ன ஆச்சு?   ஏதோ குறைப்படுகிறதே மனம்?

      நீக்கு
    3. நலம் தான்..

      மனதிற்கு என்ன குறை?..

      வாழ்க நலம்...

      நீக்கு
  3. அன்பு ஸ்ரீராம் ,
    மற்றும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இன்னாள் நன்னாளாகப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா...   உங்களுக்கும் அதே எங்கள் பிரார்த்தனைகள்.  காலை வணக்கம்.  வாங்க...

      நீக்கு
  4. கேரள முதல்வர் பற்றி அவரது மனைவி சொன்னவை ஸ்வாரஸ்ய தகவல்கள். அப்புற்ம வருகிறென் கணினி என்கேஜ்ட்!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கொடுத்து வச்சது வேதாளமா!..
    முருங்க மரமா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...   குண்ட்ஸா புரியறா மாதிரியும் இருக்கு...  இல்லை மாதிரியும் இருக்கு!

      நீக்கு
  6. அனுஷ்கா படம் மிக இனிமை. நன்றி.
    கேரள முதல்வர் மனைவியின் பதிவைப்
    படித்தேன். எளிமையும் இனிமையும்.
    சுவாரஸ்யம். வித்தியாசம்.

    பதிலளிநீக்கு
  7. ஜாலி கிளினிக்....

    பாக்கெட் காலி இல்லாம
    நோய்க்கு வேலி!....

    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாக்கெட் காலி இல்லாமலா?  அப்படி எல்லாம் சொல்ல முடியாது துரை செல்வராஜூ ஸார்...

      நீக்கு
    2. கிளினிக் அனுபவம் வாசித்து வரும் போதே ஹோமியோ க்ளினிக் போல இருக்கே என்று தோன்றியது..அதுவும் மருந்து பற்றிய டாக்டரின் விவரணம் கன்ஃபெர்ம் பண்ணிடுச்சு..ஸ்ரீராம். இந்தக் காத்திருப்பு பெரும்பாலும் எல்லா க்ளினிக்குகளுக்கும் பொருந்தும் தான். எங்க குடும்ப ஆயுர்வேத டாக்டர் (இப்போது அவர் இல்லை) முதலில் க்ருஷ்ணா ஸ்வீட்டில் என்ன புதிய ஸ்வீட் அறிமுகம் ஆகியிருக்கு என்று பேசிவிட்டுத்தான் தொடங்குவார்!!! ஹார்லிக்ஸ் மைசூர்பா போர்ன்விட்டா மைசூர்பா போட்டுருக்கான் பாரு. என்னமா இருக்கு தெரியுமா! இனிய தொடக்கம்?!!! ஹா ஹா ஹா

      அவரிடம் வருபவர்கள் நீங்கள் சொல்லியிருப்பது போல் நிறைய குடும்பக் கதைகள் எல்லாம் பேசிவிட்டுத்தான் நகர்வார்கள்.

      நமக்கு அம்புட்டு அனுபவம் இல்லை. இங்க தான் நீட்டி முழக்கி கருத்து, கதை எல்லாம் எழுதறது...டாக்டரிடம் போனால் சுருக்கமான வார்த்தைகள். ஹா ஹா ஹா என்னான்னு சொல்லி டக்குனு வந்திடுவேன்!!!! கும்மி எல்லாம் அடித்தது இல்லை..ஹா ஹா ஹா

      இன்னும் சொல்லப் போனால் பொது மருத்துவம், மகளிர் மருத்துவமனை எல்லாம் விட மற்றொன்று மிக மிக அதிகமான நேரம் எடுக்கும்.

      பொதுவாக க்ளினிக்கில் ஒரு வாசகம் இருக்குமே..அதூவ்ம் அலோபதி க்ளினிக்குகளில். பொறுமையாக இருங்கள் உங்கள் டர்ன் வரும் வரை என்றும்.

      உங்களுக்குப் பின் ஒருவர் காத்திருக்கிறார் என்பதை மனதில் கொள்ளவும் ..சர்யாக வார்த்தைகள் நினைவில்லை...ஆனால் இது போன்ற வாசகங்கள்.

      கீதா

      நீக்கு
    3. துரை அண்ணா ஹோமியோ மருந்து ஆயுர்வேத மருந்த்து எல்லாமே இப்போது அலோபதியை விட காஸ்ட்லி.

      கீதா

      நீக்கு
    4. வாங்க கீதா...   அப்படி ஒரு வாசகம் நான் க்ளினிக்குகளில் பார்த்ததில்லை.  வெவ்வேறு இடங்களில் பார்த்த ஒரு படம் ஒரு குழந்தை உதட்டில் விரலை வைத்திருக்கும்.  கீழே "உஷ்...." என்று எழுதி இருக்கும்.

      நீக்கு
    5. அலோபதியில் சில மாத்திரைகள் ரொம்பவே காஸ்ட்லி.  நிறைய மாத்திரைகள் சகாய விலையில் கிடைக்கின்றன.

      நீக்கு
    6. மதுரையின் பழைய ஆட்சியாளர்!

      நீக்கு
  8. அழகு யாரிடம் இல்லை.?
    இல்லாத ஒன்றைத் தேட
    கவிதை பிறந்திருக்கிறது.
    அதுவும் அழகுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   நன்றி வல்லிம்மா.

      நீக்கு
    2. அழகு என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறது...  இல்லையா வல்லிம்மா...

      நீக்கு
  9. பைத்தியக்கார வைத்தியர் லண்டனில் இருந்திருக்கிறார். கடவுளே காப்பாத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...    அவரிடம் நாம் சென்றிருக்க வாய்ப்பு குறைவுதானே?!!

      நீக்கு
  10. ஈரலுக்குள் நுழைந்து....
    சிறப்பு

    பதிலளிநீக்கு
  11. மருத்துவ மனை/க்ளினிக் அனுபவங்கள் அத்தனையும் நிஜம்.
    எங்கள் டாக்டர் நம்பியிடம் வைத்தியம் பார்ப்பதற்கு மூன்று மணி நேரம் தேவை. ஆனால் நல்ல மருந்து கிடைக்கும்.

    டோக்கன் இல்லை. ரிசப்ஷனிஸ்ட் கடாக்ஷம் தான்.
    வைத்தியரைப் பார்ப்பதற்கு முன் ஜுரம் கூட போய்விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருத்துவ மனைகளில் ஒரு நோயாளியாக காத்திருத்தல் என்பது உலகத்திலேயே படா பேஜார் சமாச்சாரம்.

      நீக்கு
    2. கௌ அண்ணா அதே அதே....அதுவும் வல்லிம்மா சொன்னது போல்...

      ஆனால் இப்பல்லாம் பொதுவா இப்படிக் காத்திருப்பிற்கு காத்திருக்கும் அறையில் டிவி ஒன்று வைத்துவிடுகிறார்கள். சில க்ளினிக்கில் அதில் மருத்துவ சமாச்சாரமா இருக்கும் அது இன்னும் மனதை பயமுறுத்தும்..

      கீதா

      கீதா

      நீக்கு
    3. //மருத்துவ மனைகளில் ஒரு நோயாளியாக காத்திருத்தல் எ// - எனக்கு, மருத்துவமனையில் மற்றவர்களிடமிருந்து புதிய நோய் வந்துவிடப்போகிறதே என்ற கவலையும் வரும்.

      நீக்கு
    4. இப்போதைய சூழ்நிலையில் வேண்டுமானால் அந்தக்கவலை வரலாம் நெல்லை...    பொதுவாக அது நேராது!

      டிவி வைத்தாலும் அது சத்தமின்றி ஒரே சேனல் ஓடுவதை பார்ப்பதும் ஒரு கொடுமை கீதா!

      மருத்துவமனை என்றில்லாமல், காத்திருத்தல் என்பதே எப்போதும் பேஜார்தான் கேஜிஜி!

      நீக்கு
  12. காலை வணக்கம்

    லண்டன் டாக்டர் பெயர் குறிப்பிடலையே.... அவருடைய நேஷனாலிடி (ஒரிஜினல்) போட்டிருக்காங்களா?

    பொதுவா கல்ஃப்ல, ஈஜிப்ட் மருத்துவர்னா நாங்க, அவருக்கு அவ்வளவு தெரியாது என்று நினைத்துக்கொள்வோம். அவங்க சரியா மருத்துவம் பார்க்கமாட்டாங்க என்பது எங்கள் அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பொதுவா கல்ஃப்ல, ஈஜிப்ட் மருத்துவர்னா நாங்க, அவருக்கு அவ்வளவு தெரியாது என்று நினைத்துக்கொள்வோம்.//  உண்மைதான். அந்த ஊர்காரர்களே அப்படித்தானே நினைத்துக் கொள்வார்கள். அங்கு இந்திய மருத்துவர்களுக்கு மரியாதை அதிகம். 
      ஒரு முறை விடுமுறையில் சென்றிருந்த பொழுது, என் பெண்ணுக்கு நான்கு நாட்களாக விடாமல் கடும் தலைவலி, வாந்தி என்று தொடர்ந்து இருக்க, கண் டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். அவளை பரிசோதித்த பிரிட்டனை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் அவளுக்கு மூளையில் கட்டி என்று கூறியதோடு, உடனே சி.டி. ஸ்கேன் எடுக்கவும் அறிவுத்தினார். பெரும் கலக்கத்தோடு சி.டி. ஸ்கேன் எடுத்து முடிவுக்காக காத்திருந்தபொழுது அவளை பரிசோதித்த ஓமானிய மருத்துவர்,"ஹூ செட் ஷி ஹாஸ்ப்ரைன் டியூமர்?"என்று அந்த யூ.கே. மருத்துவர் கொடுத்த ரிப்போர்ட்டை டேபிளில் வீசி எறிந்தார். எங்கள் கவலையையும்தான்.  இந்தியாவிற்கு வந்த பிறகு நாங்கள் வழக்கமாக காண்பிக்கும் கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவர், அவளுக்கு கண்களில் பவர் வந்துள்ளது என்றும் அதுவும் சிலிண்டரிகல் பவர் என்பதால் கடுமையான் தலைவலி,வாந்தி எல்லாம் இருந்திருக்கும் என்றார்.

      நீக்கு
    2. சரியாக நினைவில்லை நெல்லை...    படித்தத்தைச் சுருக்கமாக எடுத்துக் போட்டேனா, அல்லது செய்தியே அவ்வளவுதானா என்று நினைவில்லை.  

      இந்திய மருத்துவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் மதிப்பு பற்றி நீங்கள் சொல்லி இருபிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது பானு அக்கா.

      நீக்கு
  13. டாக்டரைப் பற்றிய நீளமான பதிவைப் படித்தேன்.

    எங்க வளாகத்தில் வாரம் இருமுறை காய்கறி வண்டி வரும். பொதுவா நமக்கு முன்னால் பில்லிங்கிற்கு 10 பேர் இருந்தாலே, நம் முறை வருவதற்கு குறைந்தது 1/2 மணி நேரம் ஆகிவிடும். ஒரு வாரத்திற்கு முன்பு, கொஞ்சம் லேட்டாக 9 1/2 க்குச் சென்று 11 1/2 க்கு காய் வாங்கிவந்தேன். காத்திருத்தலைவிட மற்றவர்களிடமிருந்து தொத்திக்கொள்ள்பபோகிறதே என்ற பயம்தான் (சோஷியல் டிஸ்டன்ஸ் மெயிண்டெய்ன் செய்தாலும்). அதற்கு அடுத்த முறை நான் முதலில் நின்றுகொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் 30 பேர். இப்போ, 5 நபர் தள்ளி இருந்தவர், தான் கொத்தமல்லியும் தக்காளியும் மட்டும்தான் வாங்கியிருக்கிறேன். பில்லிங் முதலில் போடவா என்று என்னைக் கேட்டார். நான் பதிலே சொல்லவில்லை (எனக்குப் பின் இருக்கும் 4 பேர் என்ன நினைத்துக்கொள்வார்களோ).

    இப்படித்தானே மருத்துவர் கிளினிக்கில் நாம் இருக்கும்போது, நமக்குப் பின்னால் இருப்பவர், ஒரே ஒரு சந்தேகம் டாக்டரிடம் கேட்கணும், மருந்தைக் காண்பிக்கணும், நான் முதலில் போகவா என்று கேட்டால், நமக்குத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரோம்பேட்டையில் ஒரு பிரபல மருத்துவர், காலை நேரத்திலும், மாலையிலும் வருபவர்களுக்கு வைத்தியம் பார்ப்பார். ஒவ்வொரு நோயாளிக்கும் ஆலோசனை நேரம், குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஆகும். அந்தப் பகுதியின் அ தி மு க பிரமுகர் ஒருவர் மட்டும், எப்போது வந்தாலும், காத்திருப்பவர்களை லட்சியம் செய்யாமல் டாக்டர் அறைக்குள் சென்று தனக்கு வேண்டிய வைத்திய ஆலோசனைகளை, மருந்துகளைப் பெற்று செல்வார். ஒருமுறை நான் அறைக்குள் செல்வதற்கு முன்பு அவர் சென்று வந்தார். டாக்டரிடம் " ஏன் சார் இப்படி இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள்?" என்று கேட்டேன். டாக்டர் சிரித்துக்கொண்டே, " சில வைரஸ்களை தங்க விட்டால் அல்லது டிலே செய்தால், நம் யாருக்கும் நல்லது இல்லை. உடனே அனுப்பிவிட்டால் நலம்" என்றார்.

      நீக்கு
    2. க்ரோம்ப்பேட் வைராலஜிஸ்ட். நேஷனல் டூட்டில போடுங்க..!

      நீக்கு
    3. அந்த டாக்டர் இப்போது உயிரோடு இல்லை. அந்த அ தி மு க பேஷண்ட் டாக்டருக்கு முன்பே அகால மரணம் அடைந்துவிட்டார்.

      நீக்கு
    4. நெல்லை...   உண்மை, நாம் அந்த வேலையை முடித்தபின்தான் அடுத்த நபர் அந்த இடைத்தைப் பிடிக்க முடியும் என்கிற எந்த இடத்திலும் நமக்கு குற்ற உணர்ச்சி வரும்...

      கேஜிஜி...   அந்த மருத்துவர் பெயர் எம்மில் தானே தொடங்கும்?  அவர் இப்போது உயிரோடு இல்லையா?

      நீக்கு
  14. கடைசிப் படத்துடன் இன்னொரு படத்தை கேஜிஜி சார் (தற்போதைய படம்) இணைத்திருந்தால், 'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' என்று தலைப்பு கொடுத்திருக்கலாமோ? இருந்தாலும் படம் அழகுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வம்புதானே வேண்டாங்கிறது!

      நீக்கு
    2. எடது கைல அடுக்கிட்டு, வலது கைய சும்மா விட்டுருக்கே.. ஏதாவது சூசகமா ஸ்ரீராமுக்கு சொல்லப் பாக்குதா பொண்ணு!

      நீக்கு
    3. எனக்கென்னவோ ஸ்ரீராம், தன் ரசிகர் மன்றத்திற்கு புது ஆட்களை வலைபோட்டுப் பிடிக்க முயற்சிக்கிறார் என்று தோன்றுகிறது.

      நீக்கு
    4. நெல்லையையே அழகு என்று சொல்ல வைத்திருக்கிறார் அனுஷ்!  சூப்பர்!  இந்தப்படத்தில் அவர் அழகாய் இருக்கார்.  அவ்வளவுதான்.  இப்போது எப்படி இருந்தால் என்ன?!!

      ஏகாந்தன் ஸார்...   என்ன சொல்ல நினைக்குதுன்னு நீங்கதான் சொல்லுங்களேன்...    சஸ்பென்ஸ் தாங்கலே!

      ஹா..  ஹா..  ஹா...   நெல்லை.... இப்போது எத்தனை பேர் புதுசாக சேர்ந்திருப்பப்பதாய் நினைக்கிறீர்கள்?!

      நீக்கு
    5. கௌ அண்ணா அது வேறு ஒன்றுமில்லை..த......னா படம் கொஞ்ச நாளா போடவே மாட்டேன்றாங்கன்னு புகை...அது சரி ஸ்ரீராமைத்தானே இழுக்கணும் எதுக்கு உங்களை? ஸ்ரீராமா ஸ்ரீராமா!!!

      கீதா

      நீக்கு
    6. தமன்னா படம் நலலதா கிடைச்சா போட மாட்டேனா கீதா?    நான் என்ன செய்ய?!!

      நீக்கு
  15. மருத்துவரைப் பார்க்கும்போது நம் பிரச்சனையை விளக்கமாகத்தான் சொல்லணும். அவர்கிட்ட சம்பந்தமில்லாம கடலை போடக்கூடாதே தவிர, நம் முறை வரும்போது நாம் ஏன் மற்றவர்களைப் பற்றி யோசிக்கவேண்டும்? மருத்துவர் என்ன, நாம் செலவழித்த நேரத்திற்கேற்றபடியா சார்ஜ் செய்யப்போகிறார்? இல்லை..இன்னொரு முறை வந்து நாம் சொல்லவிட்டுப்போனவைகளைச் சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் புதன் கிழமைக்கான கேள்விகளா?

      நீக்கு
    2. ஐயோ... இன்னும் புதன் ஹேங்ஓவர் போகலையா? பு. கே. இ.

      நீக்கு
    3. மீயும் நெல்லைத்தமிழனை வழிமொழிகிறேன்ன்ன்:)).

      ///
      நெல்லைத் தமிழன்2 ஏப்ரல், 2020 ’அன்று’ முற்பகல் 9:31
      ஐயோ... இன்னும் புதன் ஹேங்ஓவர் போகலையா? பு. கே. இ.//

      ஹா ஹா ஹா கேள்விகள் போதாதாம்ம் அதனால எல்லா இடத்திலும் தூண்டில் போடுறார்போலும் கெள அண்ணன்:))

      நீக்கு
    4. அப்படி இல்லை நெல்லை...    நமக்கு அது கஷ்டமாய் இருந்தது என்று இருக்கும்போது அதே கஷ்டத்தை நாம் மற்றவர்களுக்குத் தரலாமா?  அட்லீஸ்ட் தேவை இலலாத கதைகள் பேசுவதைக் குறைக்கலாம்!

      ஹா...  ஹா...  ஹா...   ஏஞ்சல் இன்னும் புதன் கேள்விகள் லிஸ்ட் தரவில்லையா?  எனக்கும் பார்த்த ஞாபகம் இலையே...!

      நீக்கு
    5. //ஹா... ஹா... ஹா... ஏஞ்சல் இன்னும் புதன் கேள்விகள் லிஸ்ட் தரவில்லையா? எனக்கும் பார்த்த ஞாபகம் இலையே...!//

      ம்ஹூம் இல்ல ஸ்ரீராம்:))..
      கெள அண்ணன்..., “ஏஞ்சல் நீங்க பாவம்” எண்டும் சொல்லிப்பார்த்திட்டார்ர்:)).. ஆனா இன்னும் அஞ்சுவுக்கு மூடு வரலியாம் கொஸ்ஸன்ஸ் கேய்க்க:)) இதுக்காக நான் என்ன் ஊமத்தங்காயா அரைச்சுக் குடுக்க முடியும்?:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  16. கவிதை நல்லா இருக்கு. ஆனால் அ படத்தைப் பார்த்து இந்தக் கவிதையை எழுதியிருந்தால், படம், கவிதைக்குக் கீழேதானே வந்திருக்கணும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒன்றும் சொல்லமாட்டேன். ஹரே ஸ்ரீராம்!

      நீக்கு
    2. அப்பூடி “அவருக்கே”:) எழுதப்பட்ட கவிதை எனில், கீழே நான் ஜொல்லியிருக்கும் வசனமும் சேர்க்கப்பட வேணும் கவிதையில:)) இல்லை எனில் ராம நவமியில உண்ணாவிரதம் இருப்பேன்ன்ன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. சேச்சே...   மனச தொட்டு சொல்லுங்க நெல்லை...   அந்தப் படத்துக்கு கீழே வரக்கூடிய கவிதையா அது!   அப்புறம் தனியா இந்தப் படத்துக்கு என்றே ஒன்று எழுதுகிறேன்!  (சும்மா இருந்திருக்கலாம் இல்லை?!!)

      நீக்கு
    4. உண்ணாவிரதம் இருங்க அதிரா...  உடம்புக்கு நல்லது.  உடம்பு இளைக்கும்!!

      நீக்கு
    5. ////
      ஸ்ரீராம்.2 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 3:20
      உண்ணாவிரதம் இருங்க அதிரா... உடம்புக்கு நல்லது. உடம்பு இளைக்கும்!!/////

      ஹா ஹா ஹா “ கோடைக்கானல்ல இடி இடிச்சா, கடலூரில மழை கொட்டின கதையா” எல்லோ இருக்கு இக்கதை:).... கர்ர்ர்ர்ர்ர்:)...

      அவுகளைக்:) குறை ஜொள்ளக்கூடாதாம் ஹா ஹா ஹா:)

      நீக்கு
  17. நமக்குத்தான் பினரயி விஜயன் 'முதல்வர்' பதவியில் இருப்பவர். மனைவிக்கு அவர் சாதாரண கணவன் தானே.... இதைப்போல்தான் எடப்பாடி அவர்களின் மனைவியும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இருந்தாலும் எளிய முதல்வர்களைப் பற்றிப் படிக்கும்போது ஆச்சர்யம் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ’எளிய’ முதல்வரா? வேட்டி கட்டி, குழப்பமான முகத்துடன் திரிவதாலா!

      நீக்கு
    2. எடப்பாடி பற்றி பேஸ்புக்கில் பாவலசங்கரி மேடம் ஒரு பதிவு எழுதி இருபப்தை சற்றுமுன்தான் படித்தேன்.  நன்றாய் எழுதி இருந்தார்.

      நீக்கு
    3. //பாவலசங்கரி//

      மன்னிக்கவும்...  அவர் பெயர் பவளசங்கரி.

      நீக்கு
    4. நான் பாவ்லா சங்கரியாக்கும் என நினைத்தேன்...

      நீக்கு
    5. இல்லை, ஏகாந்தன் ஸார்...   நித்திலம் - சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் எழுதிய பழைய பதிவர் அவர்.

      நீக்கு
  18. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    தலைப்பு கொரோனா மாதிரி பயமுறுத்துகிறதே. முழுமையாக படித்தால் பயம் விட்டுப் போகும் என நினைக்கிறேன். கொஞ்ச நேரம் மகரிஷியின் வேதத்தில் லயித்து விட்டு வருவதற்குள் இத்தனை கமெண்ட்ஸ் வந்து விட்டதே.. அப்போ. பயமில்லாததாகத்தான் இருக்குமென நினைக்கிறேன். ஹா.ஹா.ஹா.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. மகரிஷி என்று பொதுவாகச் சொன்னால்? ஏகப்பட்ட மகரிஷிகள் உலவிய நாடாயிற்றே இது!

      நீக்கு
    3. மகரிஷி என்று ஒரே ஒரு எழுத்தாளர்தான் உண்டு.

      நீக்கு
    4. மேலே குறிப்பிட்டது எழுத்தாளரையா!

      நீக்கு
    5. ஆமாம் ஏகாந்தன் ஸார்...   மகரிஷி என்பது இங்கு எழுத்தாளரைதான் குறிக்கிறது.  வெங்கட் நாகராஜின் இன்றைய பதிவு அவர் தளத்தில்...  புவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்துக்குள் சதுரம், பத்ரகாளி, நதியைத்தேடி வந்த கடல்...  போன்ற கதைகளை எழுதிய மகரிஷி.

      வாங்க கமலா அக்கா...   இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.  காலை கிளம்பும் முன் சட்சட்டென வந்த கமெண்ட்ஸுக்கு பதில் எழுதி விட்டு காணாமல் போனேன்!

      நீக்கு
    6. வணக்கம் ஏகாந்தன் சகோதரரே

      அநாவசியமாக காலையில் மகரிஷியையும். வேதத்தையும் பற்றி தெளிவின்றி எழுதி தங்களை குழப்பி விட்டேன் போலிருக்கிறது. ஸ்ரீராம் சகோவும், கொளதமன் சகோவும் தெளிவாக சந்தேகத்தை நிவர்த்தி செய்து விட்டார்கள். அவர்களுக்கு நன்றி. வெங்கட் சகோதரர் அவரகளின் தளத்தில் எழுத்தாளர் மகரிஷி பற்றி கூறியிருப்பதை ரசித்துக் கொண்டிருந்து விட்டேன். வேதத்திற்கும், ரிஷி களுக்கும் வார்த்தைகளின் முடிச்சில் கூட சம்பந்தம் உண்டென்பதை உணர்த்திய தங்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  19. இனிய காலை வணக்கம்....

    காத்திருப்பதற்கு நிறையவே பொறுமை வேண்டும். அது டாக்டர் க்ளினிக் மட்டுமல்லாது இது போன்ற எல்லா இடங்களிலும்! சிலர் நிறையவே படுத்துவார்கள் - காத்திருப்பவர்கள் அனைவருக்குமே எரிச்சல் வருவது நிஜம்.

    அடுத்த டாக்டர் பயமுறுத்துகிறார்.

    கவிதை - :)))

    அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  காத்திருத்தல் என்பது எங்குமே சகிக்க முடிவதில்லைதான்!

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  20. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இதே போல், 'காத்திருந்து காத்திருந்து' அனுபவம் உண்டு...

    // மாமியாராக மாறிய மருமகள் // எழுதுவதற்கு நல்ல தலைப்பு...

    கேரள முதல்வரின் மனைவி பேட்டி அருமை...

    "என்னை நினைக்காமல் தானே, 'இல்லாத ஒன்றின்' என்று எழுதியிருக்கிறாய்...? இருக்கட்டும், இனி கனவிலும் வர மாட்டேன்..."

    ஸ்ரீராம் சார், உங்களைப் பார்த்து அனுஷை இப்படி சொல்ல வைத்தது நியாயமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் பதில் சொல்லுங்க!

      நீக்கு
    2. வாங்க டிடி...   வழக்கமாக பார்க்கும் மருத்துவர் - ஒரே மருத்துவர்தான் என்றால் அவரிடம் பேசி கொஞ்சம் சகாயம் செய்து கொள்ளலாமே...

      மாமியாராக மாறிய மருமகள் நல்ல தலைப்பா...   அடடே...

      அட, நீங்க வேற DD...   கனவில் எல்லாம் அனுஷ் வரப்போறாரா என்ன!  இது சும்மா உளஉலாக்கட்டிக்கு!

      நீக்கு
  21. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நேற்றிலிருந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்திருக்கின்றன என்பதால் அனைவரும் ஞானசம்பந்த மூர்த்திப் பெருமானின் "கோளறு பதிகம்" படிப்போம். கோள்களின் தாக்கத்தைக் குறைத்து அதைத் தாங்கும் மன வலிமை பெறுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...  வணக்கம்...  நல்வரவு.  நன்றி. 


      //நேற்றிலிருந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்திருக்கின்றன//

      எத்தனை நாட்களுக்கு அப்படி இருக்குமாம்?  என்ன செய்யுமாம்?

      நீக்கு
  22. இன்றைக்கு ஸ்ரீராமநவமி. இந்த வருஷம் எங்க ராமருக்கு வெறும் பழம் மட்டுமே! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளன்போடு படைக்கப்படும் எந்த எளிய பொருளுளையும் கடவுள் ஏற்றுக்கொள்வார்.

      நீக்கு
    2. எங்கள் வீட்டில் ராமனுக்குத் தேங்காய் மட்டுமே.. முந்திரியும் வால்நட்டும் கூடவே உண்டெனினும், பழமில்லை. எனினும் பயமில்லை!

      நீக்கு
    3. ஆஹா நான் இதுவரை இப்படி நவமி கொண்டாடியதில்லை, அப்போ இன்று மீயும் ராமருக்குப் படைக்கப்போறேன்ன்ன்...

      நீக்கு
    4. எங்கள் வீட்டில் இன்று ஸ்ரீராமருக்கு பானகம், நீர் மோர் பின்னே பாயசமும்!

      நீக்கு
    5. அதே இங்கும் பானகம் நீர் மோர், பாசிப்பருப்பு கோசுமல்லி (இது மாமியார் செய்வது என்பதால்...)

      கீதாக்கா சபரி கதையை நினைத்துக் கொள்ளுங்கள்! கௌ அண்ணாவின் வரியை அப்படியே வழி மொழிகிறேன்..

      கீதா

      நீக்கு
  23. மருத்துவரிடம் காத்திருப்பதில் அநேகமாக வெளியே ஒரு நபர் இருந்து வரிசைப்படி உள்ளே அனுப்பியே பார்த்துப் பழக்கம். உள்ளே நோயாளிகள் போனால் அவர்கள் உடல்நிலைக்கேற்பத் தான் மருத்துவர்கள் நேரம் எடுத்துக் கொள்கின்றனர். சாதாரணமான வழக்கமான செக் அப்புக்குப் போனால் சீக்கிரம் வந்து விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக ஆர்த்தோ டாக்டர், இதய மருத்துவர் போன்றவர்களிடம் நேரம் அதிகம் எடுக்கும்.  அவர்கள் எக்ஸ்ரே, ஸ்கேன் என்று எழுதித்தந்து அதை எடுத்து வந்து காட்ட இன்னும் கொஞ்சம் நேரம்...  சமயங்களில் அதற்கு மறுபடியும் வரிசையில் காத்திருக்க நேரிடும்.  உதவியாள் நம்மை அழைக்க ரெடியாக இருந்தாலும் காத்திருக்கும் நோயாளிகள் முறைப்பர்!

      நீக்கு
  24. கையெழுத்துப் போட்ட மருத்துவரைப் பற்றியும், முகநூல் கவிதையையும் இப்போத் தான் படிக்கிறேன். அனுஷ்காவா அது? ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி இருப்பதால் முகம் மனதில் பதியவே இல்லை! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுஷ்காவா ! ஹி ஹி நல்லா பாருங்க நெ த வே புகழ்ந்திருக்கிறார் என்றால் அது தமன்னா என்று தெரியவில்லையா உங்களுக்கு!

      நீக்கு
    2. சமீபத்தில் ரொம்பவும் இளைத்துப்போன (பாலிவுட் சான்ஸுக்காக!) கீர்த்தியாகவும் இருக்கலாமோ..

      நீக்கு
    3. என்ன இப்படி சொல்லிட்டீங்க...   அந்த அழகு மனதில் பதியவில்லையா?  என்ன ஆச்சர்யம்!

      நீக்கு
  25. கல்லீரலில் கையெழுத்தா?? கடவுளே! மருத்துவமனையில் காத்திருப்பது கொஞ்சம் கொடுமைதான். அதுவும் சிறு குழந்தைகளோடு காத்திருக்க வேண்டும் என்பது மஹா கொடுமை! நாம் காத்திருக்கும் பொழுது மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவ்களை பார்த்தால் எரிச்சலாக வரும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். குரோம்பேட்டை டாக்டர், மெடிக்கல் ரெப்களுக்கு, நோயாளிகள் நேரம் முடிந்தபின்புதான் சந்திப்பார். எப்போது அவர்கள் வந்தாலும், காத்திருக்கவேண்டும்.

      நீக்கு
    2. ஆமாம், ஆமாம்..   இந்த மருத்துவப் பிரதிநிதிகளின் தொல்லை பெரிய தொல்லை.

      நீக்கு
  26. முகத்தில் ஒரு குறும்பு சிரிப்பு, உட்கார்ந்திருக்கும் தோரணை, செருப்பை வேறு தூக்கி காட்டுகிறார்.. கொஞ்சம் வில்லங்கமான அனுஷ்காவாக தெரிகிறாரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பயந்துதான் போனேன்.

      நீக்கு
    2. //முகத்தில் ஒரு குறும்பு சிரிப்பு, உட்கார்ந்திருக்கும் தோரணை, செருப்பை வேறு தூக்கி காட்டுகிறார்.//

      ஆஹா...   ரசித்திருக்கிறீர்கள்.  செருப்பைக் காட்டவில்லை..   காலை ஆட்டிக்கொண்டு உல்லாசமாக இருக்கிறார்.  அல்லது காலை உதறி புறப்படத் தயாராகிறார்!

      நீக்கு
    3. //ஆஹா...   ரசித்திருக்கிறீர்கள்.//  அனுஷ்காவை ரசிக்காமல் இருக்க முடியுமா? இன்று மதியம் ஒரு மணிக்கு   கே டி.வி.யில்  தெய்வத்திருமகள் போட்டார்கள். அனுஷ்காவிற்காக பார்க்கலாம் என்றால் விக்ரமை சகித்துக் கொள்ள வேண்டுமே..? அனுஷ்காவிற்காக மட்டும் மீண்டும் மீண்டும் பார்க்கும் படம் தாண்டவம். அதிலும் விக்ரம்தானே என்று கேட்பீர்கள். better version of Vikram.  

      நீக்கு
  27. //காலை பதினொரு மணிக்கு மேல் சென்று பெயர் பதிந்து வந்து விட்டால், எத்தனையாவது பெயர் என்று தெரிந்துகொண்டு, நமக்கே எத்தனை மணிக்கு அங்கு செல்லலாம் என்று ஒரு ஐடியா கிடைத்துவிடும். மதியம் சென்றவுடன், எந்த நம்பர், எந்த‌ பெயர் ஓடிக்கொண்டிருக்கிறது, நமக்கு முன்னால் இருப்பவர் பெயர் என்ன என்று பார்த்துக் காத்திருக்கலாம்.//
    இங்கும் ஒரு பிரபல ம‌ருத்துவர் இந்த சிஸ்டத்தைத்தான் தொடர்கிறார். நோயாளிகள் அதிகம் காத்திருக்கத்தேவையில்லை. பொதுவாய் மருத்துவ மனைகளில் காத்திருப்பது பற்றி ஒரு பெரிய பதிவே போடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ சாமிநாதன் மேடம்...   நலம்தானே?    வீடு பதிவு மாதிரி இதுவும் ஒரு மினி தொடர் பதிவுவ வரட்டுமே...!

      நீக்கு
  28. சாதாரண தலைவலி என்றுதான் மருத்துவமனைக்கு சென்று இருப்போம் .. ஆனால் காத்திருந்து காத்திருந்து ஏகத்திற்கு பிளட்பிரஷர் ஏறி கடைசியல் உங்களுக்கு பிரஷர் ஜாஸ்தியா இருக்கு என்று டாக்டர் சர்டிபிக்கேட் கொடுக்க கடைசியில் தலைவலி மாத்திரைக்குப் பதிலாக பிரஷர் மாத்திரையுடன் வீடு திரும்புவோம். போதுமடா சாமி உங்க பாழாய்ப்போன டிரீட்மென்டு ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சிவா..   பொறுமை குறைவான சிலருக்கு இது வழக்கம்!  உங்கள் வரவு நல்வரவாகுக...

      நீக்கு
  29. கேரள முதல்வர் பற்றி அவர் மனைவி சொன்ன செய்திகளைப் படித்து ரசித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி  ஜி...   மற்றவற்றை எதையும் ரசிக்கவில்லை என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்!

      நீக்கு
  30. புழங்கும் இடம் அப்படி. அதனால் மருத்துவரைக் காண காத்திருக்கும் லிஸ்டில் இருப்பவர்கள் பற்றி நிஜமான தகவல்கள் நிறையச் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    என் அனுபவம் என்னவென்றால் பல தனியார் க்ளினிக்குகளில் வரும் பேஷண்டுகளை ஒழுங்குபடுத்தி டாக்டரைப் பார்க்க உள்ளே அனுப்பும் நபருக்கு இருக்கும் மரியாதை டாக்டருக்குக் கூட இருக்காது என்று நினைக்கிறேன். அந்த ஆளின் தீர்மானப்படி நம் பி.பி. எகிறும்; இல்லை, நார்மலாகும். இரத்த அழுத்தத்தைக் கூட தீர்மானிப்பது அவராகத் தான் இருப்பார். இந்த ஆளின் க்யாதிக்கு
    பல சம;யங்களில் அறை உள்ளே இருக்கும் டாக்டர் கூட பூச்சி போல தெரிவார் எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்...   இது மருத்துவமனை என்றில்லை.  பொதுவாக பல அரசாங்க அலுவலகங்களில் நிலைமை அப்படிதான் இருக்கும்!  அதிகாரியை விட அங்கிருக்கும் பியூனுக்கு அதிகம் சோப் அடிப்பார்கள்.

      நீக்கு
  31. இந்தப் 'பார்க்கையில்' எல்லாம் மாறி மாறிப் போனால் எப்படியிருக்கும் என்ற நினைப்பு புன்முறுவலை இலவசமாகத் தந்தது. அதற்கு நன்றி.

    எப்படி மாறி, மாறி? ...

    இப்படி: 'அன்னத்தைப் பார்க்கையில் உன் குரலும், குயிலைப் பார்க்கையில் உன் நடையும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா! மாற்றி யோசிக்கிறீங்க!

      நீக்கு
    2. இப்படி எழுதினால் அப்படித் தோன்றும்.  அப்படி எழுதினால்?  வேறு மாதிரித்தொண்டும்.  அல்லது இப்படித் தோன்றும்!

      நீக்கு
  32. //நடுநடுவே 'அடுத்தது நான், எனக்கடுத்தது இவர், இவருக்குப் பின்னால்தான் நீங்கள்' என்று குறுக்கே சடாரென சந்தடி சாக்கில் எழுந்தவரிடம் விளக்கம் தரப்பட, அப்படிச் சொன்னவரிடம் 'உங்களுக்கு அடுத்தது நான்' என்று தொடர்ந்து ஒருவரும், 'அதுக்கும் அடுத்தது நான்' என்று அடுத்தவருக்கு வரிசை அமைத்துக் கொண்டு எங்களை கைநீட்டி 'இவர்கள்தான் கடைசி' என்றார்கள்.//

    எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு மருத்துவர் இருக்கிறார், அவரிடம் நீங்கள் சொல்வது போல்தான் வரிசை இருக்கும். டோக்கன் கொடுக்க வரிசையை சரி செய்து டாகடரிடம் அனுப்ப எல்லாம் உதவியாளர்கள் கிடையாது.

    நிறைய படித்தவர் மருத்துவ கல்லூரியில் ஆசிரியாராக இருந்தவர். வயது 80 இருக்கும் எப்போதும் கூட்டம் தான் அவரிடம். இரண்டு மூன்று முறை அவரைப் பார்க்க போய் விட்டு கூட்டத்தைப் பார்த்து விட்டு திரும்பி இருக்கிறேன் வீட்டுக்கு.

    ஒரு முறை எப்படியும் பார்த்து விடுவது என்று 4 மணியிலிருந்து காத்து இருந்து 8 மணிக்கு பார்த்து வந்தேன்.
    உள்ளே போனவரிகளில் சீக்கீரம் வந்தவள் நான் மட்டுமே!

    மருத்துவர் இரவு 7.30 மணிக்கு சாப்பிட வீட்டுகுள் போய் விட்டு எட்டுமணிக்கு திரும்பி வருவார்.

    இப்போது நினைத்து கொள்கிறேன் அவரிடம் வைத்தியம் பார்க்க வருபவர்கள் இப்படி மணி கணக்காய் பார்க்க முடியுமா என்று.

    இடைவெளி விட்டு அமர கூட இடம் இருக்காது அவர் வீட்டு வாசலில்.(வாசலில் தான் காத்து இருக்க வேண்டும் (15 நாற்காலி போட்டு இருப்பார்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா...   வயதான மருத்துவர் என்றால் அனுபவம் மிக்கவர் என்று கூட்டம் அதிகம் வருகிறதோ...!  ஆனாலும் அப்படி இடமடைசலாய் வைத்து நோயாளிகளை பார்ப்பது அவருக்கு நியாயமல்ல!  கொஞ்சம்வி வசதி செய்யக்கூடாதோ!  ஆனால் அவரும் எப்படித்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவார்!

      நீக்கு
  33. பதிவில் யார் யாரைப் பற்றியோ செய்திகள் கடைசியில் புகைப்படத்திலிருப்பவர் பற்றி ஏதும் இல்லையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..   ஜி எம் பி ஸார்...  நீங்கள் என்னைத் தூண்டி விடுகிறீர்கள்!  பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?

      நீக்கு

  34. இல்லாத ஒன்றின் மேல் ஏன் ஆசை பட வேண்டும்? இருக்கும் அழகை ரசிக்ககூடாதா?

    //அரசியல் தொடர்பாகவோ, அரசு தொடர்பாகவோ நான் அவரிடம் பேசுவதில்லை; அவரும் விரும்புவதில்லை. ஓய்வு நேரத்தில் நிறைய புத்தகம் படிப்பார். தமிழ் படங்களை ஆர்வமாக பார்ப்பார். எங்கள் இருவருக்கும், கடவுள் நம்பிக்கை கிடையாது!//

    இருவருக்கு ஒத்த கருத்து என்றால் பிரச்சனை இல்லை.


    //போதும்.... டைம் ஆயிடுச்சு... இந்த வாரம் பொக்கிஷம் வேண்டாம்ப்பா... கிளம்பறேன்....//

    போதும் என்று கிளம்பற மாதிரி இல்லையே அவர் அமர்ந்து இருக்கும் நிலை.
    "அப்புறம் சொல்லுங்கள் என்று மதில் மேல் குதித்து அமர்ந்து ஒரு காலை நீட்டிய நிலையும் பார்க்கும் பார்வையும்.

    பகிர்வு பெரிதாகி விட்டது என்பதால்
    பொக்கிஷபகிர்வை பகிராமல் அன்ஷ் மேல் பழியை போட்டு விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //போதும் என்று கிளம்பற மாதிரி இல்லையே அவர் அமர்ந்து இருக்கும் நிலை.//

      ஆவ்வ்வ் கோமதி அக்காவும் என்னைப்போலவே நினைக்கிறா:))

      நீக்கு
    2. ஹா..  ஹா..  ஹா..   கோமதி அக்கா...   அனுஷ் சொன்னால் கேட்டுக்கொள்வீர்கள் என்றுதான்!

      நீக்கு
  35. பிணராயி விஜயனின் கல்யாண வாழ்க்கை பற்றியது சுவாரஸ்யமாக இருந்தது.

    துணிச்சலான முதல்வர்.

    பதிலளிநீக்கு
  36. ஆஹா இன்று போஸ்ட் முழுவதும் படிச்சுப்போட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன், ஏனொ இது சனிக்கிழமை போஸ்ட் போல பீலிங் வருது. முடிவில அனுக்காவைப் பார்த்ததினால்.. இல்ல இன்று சனி இல்லை எனக் கொஃபோம் ஆச்சு:)) ஹா ஹா ஹா.. இது 15 வருசத்துக்கு முந்தைய படமெல்லோ ஸ்ரீராம்?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்...   சனிக்கிழமை போஸ்ட் மாதிரி என்று சொல்வதை ஆட்சேபிக்கிறேன்.   எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?  எபப்டியோ அனுஷ் காப்பற்றினார்.

      நீக்கு
  37. //'அதுக்கும் அடுத்தது நான்' என்று அடுத்தவருக்கு வரிசை அமைத்துக் கொண்டு எங்களை கைநீட்டி 'இவர்கள்தான் கடைசி' என்றார்கள்.//

    பறவாயில்லையே சண்டை இல்லாமல் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்கிறார்கள்.

    //மருத்துவரைப் பார்க்க ஒரு க்ளினிக்கில் காத்திருக்கிறீர்கள். //
    இதில 3 கொஸ்ஸன்ஸ் வருதே:)) இதை அப்படியே புதன் கிழமையில போட்டிருக்கலாமெல்லோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஒரு வரி எப்படி கேள்வி ஆகும்?  மேலும் பதில் சொல்பவர்கள் கேள்வி கேட்டால் யார் பதில் சொல்வார்கள்?

      நீக்கு
  38. //உங்களுக்கு முன் ஏழெட்டு பேர் காத்திருக்கிறார்கள். மருத்துவரைப்பார்க்க உள்ளே போகும் ஒவ்வொருவரும் உங்கள் பொறுமையைச் சோதிக்கும் அளவு நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். எப்படி ஃபீல் செய்வீர்கள்?//

    இது மக்களின் மேல் கோபப்படும் விசயம் அல்ல, மருத்துவமனையில் ஒரு ஒழுங்கு இருக்கோணும், அதாவது ஒருவர் 20 நிமிடங்களுக்கு மேல் எடுக்கக்க்கூடாது என[ஒரு டோக்கினுக்கு].. அதுக்கு இதை முறையாக நகர்த்துவது டொக்டரின் கையிலதான் இருக்குது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை...   டாக்டர்தான் இதைத் திறமையாகக் கையாள வேண்டும்.  ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் அப்படிச் செய்வதில்லை.

      நீக்கு
    2. ஸ்ரீராம் -இது ரொம்ப வருஷத்துக்கு முன்னால பெங்களூர்ல நடந்தது. நான் ரூட் கேனால் ட்ரீட்மெண்டுக்காக ஒரு கிளினிக் போயிருந்தேன். அப்போ அந்த டாக்டர், இன்னொரு அசிஸ்டெண்ட சொல்றார்.. 'என்ன அந்த பேஷண்ட் பல்லை இவ்வளவு நேரம் க்ளீன் பண்ற? அவர் வருஷக்கணக்கா பல்லை க்ளீன் பண்ணாம, குட்கா பான்லாம் சாப்பிட்டுட்டு நம்மட்ட வந்தா ஒரே சிட்டிங்லலாம் பண்ணிடக்கூடாது. ஒரு பேஷண்டுக்கு 20 நிமிஷம்தான். அப்புறம் அடுத்த சிட்டிங் என்று சொல்லி அனுப்பிடணும் என்றார்.

      நீக்கு
    3. ஒருவகையில் சரி என்பேன். காத்திருக்கும் எனக்கு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும். எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக செய்தால் கஷ்டம் தெரியாது. எங்கள் டென்டல் டாக்டர் எத்தனை சிட்டிங் போட்டாலும் முதலிலேயே அந்த ட்ரீட்மென்ட்டுக்கு இவ்வளவு என்று சொல்லி விடுவார். எத்தனைமுறை சிட்டிங் என்பதைப் பொறுத்து கட்டணம் மாறாது! நமக்கு அலைச்சல். அவ்வளவுதான்.

      நீக்கு
    4. ஆனால் அந்த டாக்டர் அந்த பேஷன்ட் பற்றி பேசிய விதம் சரியல்ல.

      நீக்கு
    5. //ஆனால் அந்த டாக்டர் அந்த பேஷன்ட் பற்றி பேசிய விதம் சரியல்ல.//  அந்த பேஷண்ட்டின் பெயர் எஸ்.இல் ஆரம்பித்து எம்.இல் முடியுமோ? ஹாஹா!

      நீக்கு
  39. //உங்கள் முறை வரும்போது உங்களுக்குப் பின்னே வந்து காத்திருப்பவர்களை மனதில் கொள்வீர்களா? இல்லை 'மாமியாராக மாறிய மருமகள்' போல ரியாக்ட் செய்வீர்களா?!//

    நோய் எனக் ஹொஸ்பிட்டல் போனால் அடுத்தவரை எண்ணிக்கொண்டிருக்க அங்கு மனதில் இடம் இருக்காது என்றே நினைக்கிறேன், நம் வேதனைதான் நமக்குப் பெரிதாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் உண்மை.  ஆனாலும் காத்திருந்த கஷ்டத்தை அனுபவித்த மனதின் ஓரத்தில் அதுவும் நினைவில் ஆடும்!

      நீக்கு
  40. ///ஆ... என் கம்ப்ளெயின்ட் சொல்ல வேண்டாமா?​'​ என்று நீங்களும் பேசிப் பேசி நேரம் எடுத்துக் கொள்வீர்களா? இல்லை, கடகடவென்று பேசி, மாத்திரை வாங்கி, வெளியே வந்து விடுவீர்களா? அப்படி வந்து விட்டு நஷ்டம் நமக்குதான் என்று ஃபீல் செய்வீர்களா?///

    இதில் ஒரு சம்பவம் ஜொள்ளட்டோ.. இங்கு ஹொஸ்பிட்டல்களில் ரைம் போட்டு புக் பண்ணித்தான் பேஷண்ட் போவார்கள்.. அப்போ ஒவ்வொரு பேசண்ட்டுக்கு 30 நிமிடம் ஒதுக்கப்பட்டால்[ஒரு பேச்சுக்கு], அடுத்த 30 ஆவது நிமிடத்தில் அடுத்த பேசண்டை உள்ளே அழைத்திட வேண்டும்... அப்படிச் செய்தால்தான் கிளினிக்கும் சரியான நேரத்தில் முடியும், டொக்டரும் ரைம் க்கு வீட்டுக்கு வரலாம்.. ஓவர் ரைம் ஆனால் பேஸண்ட் கொம்பிளைண்டும் பண்ணலாம், என்னைக் காக்க வைத்து விட்டார்கள் என.

    ஆனா பெரும்பாலும் கொஞ்சம் வயதானோர் டொக்டரிடம் போவதே, மருந்தைக் காட்டிலும் தம் நோயைச் சொல்லி கொஞ்சம் மன ஆறுதல் அடையவே... டொக்டர் அவர்களோடு நீண்ட நேரம் பேசினால், ஹப்பியாகி நோய் குறைஞ்சு விட்டதைப்போல ஃபீல் பண்ணுவார்கள்... ஆனா அது நேரத்தைக் கணக்கெடுக்கும்போது டொக்டேர்ஸ் ஆல் முடியாதெல்லோ, சட்டுப்புட்டென வருத்தத்தைக் கேட்டு மருந்தை எழுதி வெளியே அனுப்பி விடுவர்.

    இதனால, வெளியே ஹொஸ்பிட்டல் ஹொரிடோக்களில் டொக்டரைக் கண்டால், வயதானோர் விடாமல் மறிச்சு பேச முற்படுவினமாம், இதை மறுக்க முடியாமல்,

    ஒருநாள் என் கணவர் சொன்னார், ஹொரிடோவில் என் பேசண்ட்டைக் கண்டால், நான் குறுக்குப் பாதையால ஒளிச்சு மற்ற வோட்டுக்கு போயிடுவேன் , இல்லை எனில் விட மாட்டார்கள் என...

    நான் சொன்னேன், எதுக்கு அப்படிச் செய்யிறீங்க, இனிமேல் அப்படிச் செய்யாதீங்கோ, பாவம் அவர்களுக்கு ஒரு மன ஆறுதலுக்காகத்தானே அப்படிக் கதைக்க நினைக்க்கினம், அதனால ஒரு 5 நிமிடம் அவர்களுக்காக ஒதுக்கிப் பேசுங்கோ , சந்தோசப்படுவார்கள் என[இங்கு சொல்வது சுலபம் , ஆனா நேரம் முக்கியமெல்லோ].. இருப்பினும் என் ஆத்துக்காரர் நான் கீறிய கோட்டை எண்டுமே தாண்ட மாட்டார்ர்.. உண்மையில நம்போணும் ஜொள்ளிட்டேன் ஹா ஹா ஹா..

    அதன் பின்னர் சொன்னார், அதிரா நீங்கள் சொன்னதை நினைச்சுப் பார்த்தேன் அதுவும் சரிதான் எனப் பட்டுது, நீங்கள் சொன்னதே சரி, இப்போதெல்லாம் அப்படி குறுக்கே எங்காவது அவர்கள் பேச வந்தால், நின்று பேசிவிட்டுப் போகிறேன் என்றார்...

    அதனால இந்த நேர மனேஜ்மெண்ட், நோயாளி கையில இல்லை, டொக்டேர்ஸ் தான், அடுத்த நோயாளி காத்திருப்பாரே என நினைச்சு, குடும்பக் கதை பேசாமல் மருந்தைக் கொடுத்து அனுப்போணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   நல்ல காரியம். 

      ஆனால் அதிரா...   மருத்துவர்களுக்கு சமயங்களில் அதுவே தேவை இலலாத ஸ்ட்ரெஸ் ஆகிவிடவும் வாய்ப்பு இருக்கிறதே...

      நீக்கு
    2. //நான் சொன்னேன், எதுக்கு அப்படிச் செய்யிறீங்க, இனிமேல் அப்படிச் செய்யாதீங்கோ, பாவம் அவர்களுக்கு ஒரு மன ஆறுதலுக்காகத்தானே அப்படிக் கதைக்க நினைக்க்கினம், அதனால ஒரு 5 நிமிடம் அவர்களுக்காக ஒதுக்கிப் பேசுங்கோ , சந்தோசப்படுவார்கள் என[இங்கு சொல்வது சுலபம் , ஆனா நேரம் முக்கியமெல்லோ].. இருப்பினும் என் ஆத்துக்காரர் நான் கீறிய கோட்டை எண்டுமே தாண்ட மாட்டார்ர்.. உண்மையில நம்போணும் ஜொள்ளிட்டேன் ஹா ஹா ஹா..//

      அதிராவின் நல்ல மனம் தெரியாதா என்ன !
      ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசினால்தான் நோயாளிக்கு நோய் பறந்து போகும் மருத்துவர் மேல் நம்பிக்கையும் வரும்.

      நீக்கு
    3. ////அதிராவின் நல்ல மனம் தெரியாதா என்ன !////

      ஆஆஆஆ கோமதி அக்கா உங்களுக்குப் புரியுது, இங்கின பலருக்குப் புரியுதில்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).... ஹா ஹா ஹா நன்றி கோமதி அக்கா... உண்மையோ பொய்யோ ஆனால் கேட்கும்போது மனம் மகிழுது.

      நீக்கு
  41. //குடும்பத்துக்கே ட்ரீட்மெண்ட் எடுப்பார்கள். "டாக்டர் என் அம்மாவுக்கு மூட்டு வலி இன்னும் அதிகமாயிருக்கு... அப்பா காலில் அரிக்கிறது என்கிறார். பையனால் வர முடியவில்லை. அவன் இருமல் சரியாகவில்லை டாக்டர்...."//

    ஹா ஹா ஹா உண்மைதான், என்னைப்பொறுத்து, இதுக்கு மருத்துவமனையில் ஒவ்வொரு பேசண்டுக்கும் நேரம் போட்டு புக்கிங் செய்யப்பட்டால், இப்படித் தொல்லை இருக்காது.

    //ஏழெட்டு கம்பிளெயின்ட் சொல்றீங்க... ஒரே சமயத்துல ட்ரீட் செய்ய வேணாம்... ஒண்ணொண்ணா சரிசெய்வோம்... கொஞ்சம் டைம் எடுத்துக்கும்.. கவலைப்படாதீங்க... க்யூர் பண்ணிடலாம்... "
    //

    இஞ்கு நாம் கெல்த் செண்டர் போனால், ஒருநேரம் ஒரு பிரச்சனை அல்லது 2 பிரச்சனைக்கு மேல் சொன்னால், டொக்டர் சொல்வார், இப்போ இதுக்கு மருந்து தாறேன், மீண்டும் புக் பண்ணி வாங்கோ மிகுதி பற்றிப் பேசலாம் என ஹா ஹா ஹா. ஏனெனில் இங்கு நேரம் முக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி...  ஸ்ட்ரிக்ட்டான மருத்துவரிடம் இங்கு அப்புறம் அந்த பேஷண்ட் போகமாட்டார்!!!

      நீக்கு
  42. //"பையனுக்கு பொண்ணு அமைஞ்சிடுச்சா?"

    "இன்னும் இல்லை டாக்டர்... எ//

    ஹா ஹா ஹா இது பேஸண்ட்டின் தப்போ?:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்பு இல்லை, ஆதங்கம்!   பார்பபவரிடம் எல்லாம் புலம்பும் வியாதி!

      நீக்கு
  43. ஓட்டோகிராப்பை அங்கின போட்டால்ல்.. அதை ஆருக்குத் தெரியப்போகுது:)).. கடவுளே எனக்கும் ஆரெல்லாம், உள்ளே ஓட்டோகிராப் எழுதி வச்சிருக்கினமோ.. சிசேரியனின்போது ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...    பயப்படாதீங்க...  அவர் ஒருவர்தான் ஆட்டோகிராப் ஸ்பெஷலிஸ்ட் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  44. கவிதை ஆஹா அழகூ.. ஆனா அதைப் படிச்சதும் மனதில டக்கென ஒரு வரி கூடவே எனக்கு உதிச்சது:)).. அதைச் சொன்னால் அடிக்க வருவீங்க ஹா ஹா ஹா ஆனாலும் ஜொள்ளட்டோ:))..

    “ஆனையைப் பார்த்தால்
    உன் உடலும்”..

    ஹா ஹா ஹா சும்மா ஜோக்குக்குச் சொன்னேன் தப்பாக எடுத்திட வேண்டாம் ஆரும்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   இருங்க அனுஷ் கிட்ட சொல்றேன்...   உங்களை அதிரா அப்படிச் சொல்றாங்கன்னு!

      நீக்கு
  45. //என்னை அவர் பார்த்தார்; அவரை நான் பார்த்தேன். 'சரி, நான் கிளம்பட்டுமா?' என்றார். நானும், 'சரி' என்றேன். இவ்வளவு தான், இருவரும் பேசிக் கொண்டது. எங்களின் திருமணம், 1978ல் நடந்தது. //

    ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  46. //போதும்.... டைம் ஆயிடுச்சு... இந்த வாரம் பொக்கிஷம் வேண்டாம்ப்பா... கிளம்பறேன்.... //

    இது கிளம்புவதைப்போல தெரியல்லியே:)) ஆருக்காகவோ காத்திருப்பதைப்போல எல்ல்லோ இருக்கு:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..   இன்னமும் அவர் காத்திருக்கிறார்... பொருத்தமான துணைக்கு!

      நீக்கு
  47. முன்னலாம் டாக்டர்கள் இப்படிதான் இருந்தாங்க. வீட்டு கன்னுக்குட்டி முதற்கொண்டு சைக்கிள் பஞ்சராஅனது வரை தெரிஞ்சு வச்சிருப்பாங்க.

    ஆனா, இப்ப மருத்துவம் வியாபார தலமாகிட்டதால் ஒரு பேஷண்டுக்கு 5 நிமிசம் எடுத்துக்கிட்டாலே அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமயங்களில் சட்டுபுட்டுன்னு பார்த்துட்டு வந்தாலே தேவலாம் என்றும் தோன்றுகிறதே!

      நீக்கு
  48. மருத்துவமனையில் காத்திருப்பு பத்தி சொல்லிருக்கீங்க ஸ்ரீராம் கூடவே நான் இதையும் சேர்த்துக்குவேன்....நெட் ஹிஹிஹி...பின்ன எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கு வருவதற்கும்., வந்தாலும் பேஜ் வர...பேஜ் வந்தாலும் கமென்ட் பாக்ஸ் வர...பாக்ஸ் வந்தாலும் கமென்ட் போட்டு அது வெளியிடுகிறதுன்னு சொல்வதை பார்த்துட்டே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருந்து அப்புறம் போடாம ப்ளாகர் எரர் காமிக்க...மீஈண்டும் ரிஃப்ரெஷ் செய்து....செய்து செய்து இந்த பாக்ஸ் கிட்டி கமென்ட் போட்டு ...என்னத்த சொல்ல...ஹப்பா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...    அதுதான் சொன்னேனே...   காத்திருத்தல் எங்கும் எதிலும் கஷ்டம்!

      நீக்கு
  49. கவிதை அழகு!!! மிக மிக ரசித்தேன் ஸ்ரீராம்.

    அழகு என்பது நம் மனதில்தானே!!! இல்லாத ஒன்னுன்னு இல்லாம கவிதைக்குப் பொய் அழகுன்னு எடுத்துக்கலாம் விடுங்க!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.   பார்ப்பவர் ரசனையில் இருக்கிறது.  நன்றி கீதா!

      நீக்கு
  50. அந்த டாக்டர் ஏதேனும் மன நோய் உள்ள டாக்டர் அல்லது வக்ரபுத்தி உள்ள டாக்டராக இருப்பார் போல...

    நல்லகாலம் சஸ்பெண்டட்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  51. ஸ்ரீராம் எல்லா மருத்துவர்களுக்கும் பொறுமை ரொம்ப அவசியம் என்றால் மனநல மருத்துவருக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே தேவை. ஒரு சில மருத்துவர்களே அக்கலையில் வல்லவர்கள். அப்படியான மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கையாள்வதில் சிறப்பானவர்கள். பலரும் சும்மா மருந்து எழுதிக் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் மருந்தைவிட அவர்களுடன் பேசி கவுன்சலிங்க் என்பதே மிக மிக முக்கியம் ஆனால் அப்படிச் செய்பவர்கள் மிக மிக க் குறைவு விரல் விட்டு எண்ணிவிடலாம்....

    அதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் மருத்துவர்கள் போன்றவர்கள் மக்களின் மன நிலை அறிந்து செயல்படுபவர்கள் என்றே சொல்லலாம்...இப்படிப் பேசும் போது சிகிச்சைக்கு வருபவர்கள் கண்டிப்பாக இவரைத்தானே அணுகுவார்கள்!!! நான் சொல்லியிருந்த எங்கள் குடும்ப ஆயுர்வேத மருத்துவரும் அப்படித்தான் இருந்தான் தன்னிடம் வரும் நோயாளிகளின் பல்ஸ் பிடித்துப் பார்ப்பதில்-இது இரு வகையிலும்...கையில் பல்ஸ்....மனதின் பல்ஸ் - இரு வகையிலும் கில்லாடியாக இருந்தார். இத்தனை செய்தவர் தன் உடல் நலத்தில் கவனமில்லாமல் உணவே மருந்துன்னு எங்களுக்குச் சொன்னவர் உணவை விருந்தாகவே உண்டு...ஸ்வீட் எல்லாம் சாப்பிட்டு டயபட்டிக். பிபி என இருந்திருக்கிறது என்பது அவர் இறந்த பிறகுதான் தெரிந்தது. 48 வயதில் போய்விட்டார். என் வயது அவருக்கு. பிபி எகிறி மூளையில் பர்ஸ்ட் ஆகி....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ’ஃபிட்’ ஆக இருக்கும் டாக்டர்கள் அரிதினும் அரிது.
      தங்களைக் கவனித்துக்கொள்ளவே நேரமில்லையோ, என்னவோ..

      நீக்கு
  52. வணக்கம் சகோதரரே

    நான் இன்று பயங்கர தாமதம். எப்படியும் மன்னிப்பு கோரத்தான் வேண்டும். இல்லாவிட்டால், ஏற்கனவே பொக்கிஷ பதிவு இல்லையென்ற கோபத்திலும் பொறுத்துக் கொண்டு அழகாக மதில் சுவரில் அமர்ந்திருக்கும் அனுஷ்கா கோபித்துக் கொண்டு கீழே குதித்து ஓடி விடுவார். அப்புறம் அனுஷ் ரசிகர்கள் அனைவரும் என் மேல் பாய்ந்து விடுவார்கள். ஹா.ஹா.ஹா.

    கவிதை அருமை.

    /இல்லாத ஒன்றின் மேல் ஆசை வருவது இயற்கைதானே/

    அப்போ எல்லாமும் கவிதைப் பொய்யா? ரசித்தேன்.

    கேரள முதல்வரின் மனைவி பேட்டி நன்றாக உள்ளது. உண்மையாக பேசி பேட்டி தந்ததை ரசித்தேன்.

    மனநோயாளி டாக்டரை நினைத்தாலே சாதரணமாக மருத்துவரிடம் போக பயப்படும் எனக்கு ஈரக்குலை நடுங்குகிறது. அவருடைய காதலிக்கோ, இல்லை மனைவிக்கோ இருதயத்திலேயே இன்ஷியல் எழுதினாலும் எழுதியிருப்பார். யார் கண்டது? ஹா.ஹா.ஹா.

    டாக்டரிடம் சென்று நம் முறை வரும் வரை காத்திருத்தல் பற்றி மிகவும் நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள். இரண்டு மூன்று இடத்தில் சிரிப்பு வந்தது.

    அவர்கள் அடிக்கடி ஒரே டாக்டரை சந்திக்கும் போது வருவதால் வரும் நோய் இது. ஆனால் சில டாக்டர் எதைப் பேச வேண்டுமோ அதை மட்டும் கேட்டு விட்டு, அடுத்த பேஷண்ட் வருவதற்கு மணியை அழுத்தி விடுவார். அவ்வளவு கறார்.. அப்படிபட்டவர்களிடம் வைத்தியத்திற்கு சென்றுதான் எனக்கு டாக்டர் அலர்ஜியே வந்துள்ளது என நினைக்கிறேன்.உங்கள் கட்டுரையை படித்த பின், "டாக்டர் அமைவதெல்லாம் நோய்கள் கொடுத்த வரம்" என்று பாட்டுப்பாடத் தோன்றுகிறது. சுவையான கதம்பம். படித்து ரசித்தேன்.

    அப்பாடா..! வெள்ளி முளைக்கும் முன் கருத்துரை இட்டு விட்டேன். இனி அனு மன்னித்து விடுவார். முன் வைத்த காலை எக்காரணமுமின்றி தரையில் வைக்க மாட்டார். ஹா. ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  53. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  54. "//'பொறுமையா காத்திருக்க ஏதாவது மருந்திருக்கா?' என்று டாக்டரிடம் கேட்கவேண்டும்! //" - நீங்கள் மருத்துவரிடம் கேட்காமல், நீங்களே அவர் யூகத்தில் பதில் சொல்லிவீட்டீர்கள். உண்மையிலேயே உங்களுக்கு அதற்கான மருந்து கிடைத்தால் சொல்லுங்கள். நானும் வாங்கிக்கொள்கிறேன்.

    கடைசியில், ஒரு புகைப்படத்தை போட்டு ஏதும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே. ஒரு வேளை நீங்கள் அவருடைய ரசிகை மன்ற தலைவராக இருப்பீர்களோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!