சனி, 25 ஏப்ரல், 2020

ஊரடங்கு காலத்தில் இலவச உணவு




1)
 நன்றி: தினமலர்.
======================

2)





நன்றி : தினமலர் .

3)

                              __/\__  NAMASTE

இப்பொழுது பலரும் உபயோகிக்கும் ஜூம் ஆப் பாதுகாப்பற்றது என உலகம் முழுவதும் சொல்லி வரும் நிலையில் ஒரு இந்திய நிறுவனம் அதற்கு பதிலாக ஒரு வீடியோ கான்பரென்சிங் பிளாட்பார்மை சோதித்து வருகிறது. Inscripts என்ற நிறுவனத்தின் வீடியோ கான்பரன்ஸிங்க் பிளாட்பார்ம் தான் இந்த Namaste.

மேலும் விவரங்களுக்கு :  CLICK HERE


(நன்றி : திரு எல் கே ::  lkarthik.in



======================================================


4)   வாட்ஸ் அப் தகவல். உண்மையா இல்லையா தெரியாது. 
ஆனாலும் இங்கே பகிர்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன் :  

சென்னை: கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் முதல் கட்டமாக வெற்றி பெற்றிருக்கிறோம் என்று எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

200க்கும் மேற்பட்ட நாடுகளை அலற வைத்திருக்கும் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளோ, மருந்துகளோ இதுவரை இல்லை. அதற்கான ஆராய்ச்சிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந் நிலையில் அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகவும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும்பட்சத்தில், தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்றும் எம்ஜிஆர்  மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரசை தடுக்கும் புரதமானது, ரிவர்ஸ் வேக்ஸினாலஜி என்ற முறையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகமே முயன்று வருகிறது. அதற்காக ஆயிரக்கணக்கான டாலர்களை உலக நாடுகள் செலவழித்து வருகின்றன. இந் நிலையில் தமிழகத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதல்கட்ட வெற்றி அடைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

நன்றி :- அப்டேட் நியூஸ் 360 . காம்.

22 April 2020,

===========================================



கொரோனாவும் அதன்  பின்விளைவுகளும்


ரமா ஸ்ரீனிவாசன் 

தனது வரலாற்றில் இதுவரை சந்தித்திராத, எதிர்கொள்ளாத மிகப் பெரிய சவாலை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இரண்டு உலகப் போர்கள் நடந்த போதும், இதற்கு முன்னால் பிளேக், காலரா உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவிய போதும், நிலநடுக்கம், சுனாமி, புயல்கள் தாக்கியபோதும்கூட மூன்றில் ஒரு பகுதி உலகம் இதுபோல் முடக்கப் பட்டதில்லை. உயிரிழப்பும், பொருளாதார இழப்பும், பீதியும் ஒருசேர ஒட்டுமொத்த மனித இனத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஓர் அசாதாரண சூழல் இது.



சீனாவின் வூஹான் நகரில் கடந்த செப்டம்பர் மாதமே தனது பேரழிவுப் பயணத்தை தீநுண்மி நோய்த்தொற்று தொடங்கிவிட்டது. ஏறத்தாழ எட்டு மாதங்களாகியும் இன்னும்கூட அந்த நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. இப்படியே போனால், எத்தனை லட்சம் பேரை இந்த நோய்த்தொற்று பலிவாங்கப் போகிறதோ தெரியவில்லை.

தீநுண்மி நோய்த்தொற்றின் ஆபத்து, அது ஏற்படுத்த இருக்கும் பேரழிவுகள் குறித்து சாமானிய மக்களில் பலருக்குத் தெரியாமல் இருப்பதில் தவறில்லை, வியப்புமில்லை. எனவேதான் இக்கட்டுரையை நான் வரைந்தேன்.

ஆம். நான் மீண்டும் கொரோனாவைப் பற்றிதான் பேசுகின்றேன். நாம் யாவரும் அசந்திருந்த நேரம் பார்த்து இவ்வுலகையே சூறையாடிக் கொண்டிருக்கும் அந்நோயைப் பற்றிதான் வேதனையுடன் சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

உலகலவில் 1,92,206 உயிர்களையும் இந்தியாவில் மட்டும் 723 உயிர்களையும் விழுங்கி விட்டு இன்னும் விடாமல் நம்மை மிரட்டிக் கொண்டிருக்கின்றது. நாம் செய்யாத தவறுக்கு நாம் யாவரும் தண்டிக்கப் படுகின்றோம் என்பதுதான் மிகவும் வருந்தத் தக்கது.

சரி. இந்த உலகளவிலான உயிர்கொல்லியிடமிருந்து எப்படி தப்பிப்பது? அனைத்துலக விஞ்ஞானிகளும் மருத்துவ வல்லுனர்களும் ஒன்றிணைந்து கூறுவதென்னவென்றால் : “தனித்திரு; விழித்திரு” என்பதை மூலமந்திரமாகக் கொண்டு நம் வீட்டினுள் நாமிருக்கும் வரை தப்பிக்கலாம் என்பதுதான்.

நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 22ஆம் தேதி 2020 “ஜனதா கர்ஃப்யூ” அறிவித்த போது, பல பேர் அதற்கு பின் என்னவிருக்கும் என்று குழம்பிக் கொண்டிருந்தனர்.

 



அதற்குப் பின் நமது பிரதமர் 21 நாள் ஊரடங்கையும் அறிவித்து அதற்குப் பின் மேலும் ஒரு 14 நாள் 03 மே 2020 வரை ஊரடங்கையும் அமல் படுத்தி இந்நாட்டு மக்களின் பாதுகாப்பை மட்டும் மனதில் வைத்து செயல்பட்டார்.

நாம் இப்போது ஏப்ரல் 26, 2020ஐ நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றோம். கட்டாயமாகும் இன்றியமையாத வணிக நடவடிக்கைகள் மிகச் சொற்பமான வேலையாட்களுடன் மறுபடியும் மே 3 ஆம் தேதி முதல் ஆரம்பிக்க இருக்கும் இத்தருணத்தில் இந்த “லாக்டௌன்” என்பது ஒரு போர்க்கால நடவடிக்கைதான் என்பதையும் அது இந்நோயை மேலும் பரவாமல் தடுப்பதற்கு எடுக்கப்படும் ஓர் பாதுகாப்பு நடவடிக்கை என்பதையும் நன்றாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

உலகமொத்த விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் இந்நோயைத் தடுக்க ஓர் தடுப்பு மருந்தைக் கண்டு பிடிக்க இராப் பகலாகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும் நாம் நோய் வளையத்தின் ஆரம்பத்தில்தான் இன்னும் இருந்துக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. நான் இதை கூறுவதற்கு ஓர் முக்கிய காரணம் உண்டு. நாம் மே மாதம் 2020 முடிவதற்குள் நம் மாநில மற்றும் மத்திய அரசுகள் இக்கொடிய நோயை எப்படியாவது அடித்து நாட்டை விட்டே விரட்டி விடுவார்கள் என்று தவறாக நம்பி வாழ்ந்திடக் கூடாது.

நாம் வெகு விரைவில் வாழ்க்கை இயல்பு நிலையை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் பீடு நடை போடக் கூடாது. ஏனெனில், இனி வாழ்க்கை கூறும்படி இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் அது ஓர் மாற்று “இயல்பு நிலை”யாகவே இருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயம் வேண்டாம்.

நண்பர்களே, உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை ஒரு சிட்டிகை போடும் நேரத்தில் மொத்தமாக மாறிவிட்டது என்பதை மனதளவில் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த அபாய நோயின் அறிகுறிகள் நம்மை ஜனவரி 2020லிருந்தே பயமுறுத்த ஆரம்பித்து விட்டன. நாம்தான் அதை பார்த்தும் பாராதது போல் இருந்துவிட்டு இப்போழுது அதன் வலியை சுமக்கின்றோம்.

உலகளவில் நாம் யாவரும் “இது ஒன்றுமில்லை; இதுவும் தானாகக் கடந்துபோகும்” என்று மருட்சியுடன் “லாக்டௌன்” எப்போது முடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், நம்மை விட  ஏமாளிகள் எங்கும் இருக்க முடியாது.

ஆகவே, அம்மாதிரியான மருட்சிக் கொண்ட மக்களுக்கு நான் உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றேன்.

முதலில் நமக்கு புரிய வேண்டியது என்னவென்றால், கொரோனா நோயின் பாதிப்பு வளைவு மெல்ல சமநிலையை அடைய முற்படுகின்றது என்றால், நோயின் பாதிக்கும் தன்மையை அரசின் ஊரடங்கு சட்டத்தால் மேலும் அதிகம் பாதிப்பில்லாமல் கட்டிக் காக்கும் முயற்சிகள் பயனளிக்கின்றன என்றே பொருள். இந்த சமநிலையை தொடும் முயற்சி மருத்துவ மனைகள் மேலும் சிறப்பாகப் பணி புரிய ஏதுவாக இருக்கும். ஆயின், இந்நோயை மொத்தமாக ஒழிக்கும் முயற்சி வெற்றி பெற்று விட்டது என்று பொருளல்ல.

இரண்டாவதாக, உலக அரசுகளோ வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷனோ இவ்வருடமே இக்கொடிய நோயை ஒழித்தல் எவ்விதத்திலும் சாத்தியமில்லை. கோவிட்-19 வேக்ஸினோ மருந்தோ கண்டு பிடிக்கப்படும் வரை இந்நோயின் பிடியிலிருந்து உலகம் வெளியேறுவது மிக மிகக் கடினம்.

எனவே நண்பர்களே, இந்நோயின் தடுப்பு மருந்து உறுதி செய்யப்பட  ஏறக்குறைய ஏப்ரல் 2021 ஆகிவிடும். முதல் வேக்ஸின் சோதனைகள் ஒரு மாதத்திற்கு முன்னர்தான் தொடங்கியுள்ளன. அவசியம் 18 முதல் 24 மாதங்கள் சோதனைகள் செய்யப் பட்டு, அவ்வேக்ஸினின் ஆற்றலை ஊர்ஜிதப் படுத்திய பின்னரே, அது தடுப்பு மருந்தாக உருவெடுக்கும். எனவே, எப்படி பார்த்தாலும், குறைந்த பட்சம் ஒரு வருடம் என்பது “கடவுள் காப்பார்” என்னும் நம்பிக்கையாகும்.

மிக முக்கியமாக நாம் வெகு சீக்கிரம் இயல்பு நிலை அடைவோம் என்று மட்டும் கனவு காணாதீர்கள். குறைந்த பட்சம் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு இயல்பு நிலை என்னவென்றே தெரியாமல் வாழ நாம் கற்றுக் கொள்ளும் இக்கட்டிற்கு தள்ளப் படுவோம்.

உலகளவில்,பொருளாதார நிலை தத்தளிக்கும், திக்கு முக்காடும். ஒரு நிரந்திர தடுப்பு மருந்து கிடைக்கும் வரையில் மறுபடியும் மறுபடியும் ஊரடங்குகள் சகஜ நடவடிக்கைகளாக மாறும்.

இந்த ஊரடங்குகள் பிற்காலத்தில் மறைந்து போனாலும், சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் பல பல தொழில்கள் மரண அடி வாங்கித் தவிக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. ஊரடங்குகளுக்குப் பின்னரும் மக்கள் தற்காப்பிற்காக தனித்திருந்து உயிர் காப்பதில் கவனம் காட்டுவார்கள்.

உலகத்தில் ஒரே நல்ல வானவில் எதுவாக இருக்கும் என்றால் நம் யாவரிடமும் உருவாகும் மந்தை நோய் எதிர்ப்பு சக்திதான். நோய் வாய்ப்பட்ட லட்சக் கணக்கானவரும், மீண்டு வந்த பல்லாயிரம் பேரும் மீளாமல் மாண்ட லட்சக் கணக்கானோரும் சேர்ந்து இந்த மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை நம்முள் உருவாக்க காரணமாக இருந்திருப்பார்கள்.

மற்றுமொரு பெரிய எதிர்பார்க்கப் படுகின்ற ஆபத்து என்னவென்றால், எப்போது வேண்டுமானாலும் இந்நோய் மீண்டவரை திரும்பவும் பதம் பார்க்கலாம். ஆகவே, நண்பர்களே, ஒரு சோதிக்கப் பட்ட தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப் படும் வரையில் மக்கள் தங்கள் நலத்திற்காகவும் நன்மைக்காகவும் தனித்திருப்பதயும் விழித்திருப்பதையும் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்.

ஆனால், இவை யாவும் ஆறு மாதங்களை தாண்டி வரும் நிகழ்வுகள். உலக மருத்துவ நிறுவனங்கள் யாவையும் இந்தியா இந்நோயின் உச்சத்தை செப்டம்பர் 2020தான் அடையும் என்று பல ஆராய்ச்சிகளின் அடிபடையில் கூறுகின்றனர். எனவே, பொருளாதார சரிவிற்கும், விட்டு விட்டு வரும் ஊரடங்குகளுக்கும், மனித இறப்புகளுக்கும், மற்ற ஏனைய குழப்பங்களுக்கும் நாம் நம்மை தயாராக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு முக்கியமான அரசாங்க அறிக்கையை நீங்கள் கவனிக்க வேண்டும். அது மது விற்பனைக்கும் தெருவில் செல்லப் பிராணிகளை ஊரடங்கின் போது நடத்திச் செல்வது போன்றவைகளுக்கும் தடை விதித்தது. இம்முடிவு பணக்காரர்களையும் வசதி படைத்தவர்களையும் வைத்து எடுக்கப் பட்டதல்ல. மக்களின் நலனை மனதில் கொண்டு எடுக்கப் பட்ட முடிவாகும். ஆயின் வெவ்வேறு இடங்களில் அமல் படுத்தப் படும்போது அதன் தாக்கம் வேறுபட்டு இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நம் மத்திய மாநில அரசின் கொவிட்-19 சேவைகளுக்கும் அதன் தாக்கத்தை சமாளிக்கும் விதத்திற்கும் தலை தாழ்த்தி வணங்குகின்றோம். அதே நேரம் நம் மாநில அரசுகளும் ஒன்றை ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு செயலாற்றும் விதத்தையும் கைதட்டி வாழ்த்துகின்றோம். நம் அரசானது மற்ற வளர்ந்த நாடுகளையும் விட வேகமாகவும் விவேகமாகவும் செயல் பட்டிருக்கின்றது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நாம் யாவரும் பி.சி.ஜி வேக்ஸின் நமக்கு எதாவது ஒரு நல்ல வழியைக் காட்டும் என்று நம்புகின்றோம். ஆனால், இது இன்னும் ஆராய்ச்சி செய்யப் பட்டு உறுதியாகவில்லை. எனவே இது இன்னும் கனவாகவே இருக்கின்றது.

இந்த சங்கடமான சூழலில், நாம் யாவரும் சேர்ந்து நம் நாட்டின் மத்திய/ மாநில அரசிற்கு உதவியாகவும் பொறுப்பாகவும் செயல் பட சபதம் எடுப்போம். நம்முடைய ஒற்றுமையான தொய்வில்லா முயற்சியால் நாம் உலக நாடுகளின் புருவங்களை உயர்த்தச்செய்வோம். அவர்கள் யாவரையும் நம்மை ஆச்சரியத்துடன் பார்க்க வைப்போம். நம் தோழர்களுக்கும், ஒருவர் மற்றவருக்கும், நம் மருத்துவர்களுக்கும், நம் சுகாதாரத் தொழிலாளர்களுக்கும் முழு ஆதரவையும் கொடுத்து, நம் நன்றியை பறை சாற்றுவோம்.

முடிவாக மறுபடியும் அழுத்தமாகக் கூறுகின்றேன். இந்த மாதத்தின் முடிவில் கோவிட்-19 என்னும் நோய் நம்மை விட்டு வியக்கத் தக்க வகையில் ஓடி விடும் என்று மட்டும் நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். அது ஒழியும் வரை பொறுமையுடன் புத்திசாலித்தனமாக வாழ்க்கையை தள்ளிக் கொண்டு செல்வோம்.

ஏனினில் என்று கோவிட்-19 இவ்வுலகிற்குள் நுழைந்ததோ அன்றே இயல்பு வாழ்க்கை நம்மை விட்டு பறந்தோடி விட்டது என்பதை நாம் உணரும் நேரம் இது.

எனினும் நம்பிக்கை உலகளவிற்கு நம் யாவரிடமும் கொட்டிக் கிடக்கின்றது. ஆகவே, நம்பிக்கையுடன் இறைவனை பிரார்த்தித்து இவ்வுயிர் கொல்லி நோயிடமிருந்து தப்பிக்க வழி தேடுவோம்.

 =====================================

                       

59 கருத்துகள்:

  1. அன்றறிவாம் என்னாது அறம் செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. கொரோனாவின் பின் விளைவுகளைப் பற்றிய கட்டுரை நிதர்சனம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிதர்சனம், உண்மை, கசப்பான சூழல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... காலை வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  4. கட்டுரை மனதை கசக்க வைத்து கலங்கடிக்கிறது என்றாலும் இதுதான் நடைமுறை உண்மை. உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.

    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அனைத்துப் பாஸிடிவ் செய்திகளும் நன்று. இலவச உணவளிக்கும் அரசு திட்டத்தையும், சுகாதாரத்திற்காக பாடுபடும் மருத்துவர், செவிலியர்களை காரணமின்றி தாக்குபவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை பற்றிய செய்திகளை அறிய தந்தமைக்கும் நன்றி.

    இந்த நோயை கட்டுப்படுத்த முதல் கட்டமான மருந்து தயாரித்த செய்தியை பகிர்ந்தமைக்கும் நன்றி.

    சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் கட்டுரை இப்போதுள்ள உண்மை நிலையை அழகாக விளக்குகிறது.

    இந்த உயிர்க்கொல்லி நோய் முற்றிலும் மனித உடலை தாக்காதிருக்க மருந்து கண்டு பிடிக்கும் வரை நாம் அனைவரும் அரசுக்கு ஒத்துழைத்து, நம்மை காத்து கொள்ளவதோடு நம் ஜனநாயகத்திற்கும், அனைத்து மக்களுக்கும் எந்த ஒரு கஸ்டங்கள் ஏற்படாதவாறு, தனித்திருந்து விழிப்புணர்வோடு இருப்போம். மருந்து கண்டு பிடிக்க ஒவ்வொரு நாளும் போராடும் விஞ்ஞானிகளும், இந்த நோயினால் அல்லல்படும் மனிதர்களை காக்க போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் நலமாக இருக்க ஆண்டவனை பிரார்த்தித்து கொண்டேயிருப்போம். கட்டுரை நெகிழ்ச்சியாக இருக்கிறது. சுய சிந்தனை கட்டுரை எழுதிய சகோதரிக்கும், பகிர்ந்த தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் எங்கள் ப்ளாக் குழுவின் அனைவருக்கும் எல்லா
      நட்புகளுக்கும் என் இனிய காலை வணக்கம்.

      அம்மா உணவக சாப்பாடுகள்,

      அனைத்து ஏழைகளுக்கும், வயோதிகருக்கும் போய்ச் சேரும் காணொளிகளையும் கண்டேன்,.
      நீங்கள் கொடுத்திருக்கும் நேர்மறை செய்திகளுக்கும்
      மனம் நிறை நன்றி.
      ரமா நல்ல எழுத்தாளர். அறிவார்ந்த சிந்தனையும்
      முன்னோக்கு பார்வையுடன்
      அருமையான கட்டுரையைக் கொடுத்திருக்கிறார்.

      எத்தனையோ நெகடிவ் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
      மாமலையிலிருந்து உருகி விழும் பனிவெள்ளம் அடித்துச் செல்லும் உயிர்களைப்
      போல
      இங்கே லக்ஷக் கணக்கான பாதிப்புகள்.
      மனித தவறும் சேர்ந்திருக்கிறது.
      எல்லாவற்றுக்கும் ஒரு நல்ல முடிவு காத்திருக்கிறது.
      நம் நாட்டில் எத்தனையோ கட்டுப்பாடுகள்.
      அங்கே அரசாங்கம் கவனம் எடுப்பது போல எங்கேயும் நடக்கிறதா
      தெரியாது.
      அறிவும்,ஞானமும், இறை வழிபாடும் நம்மைக் காக்கும்.
      கட்டுப்பாடுடன் இருப்போம்,
      பயத்தை விரட்டுவோம்.

      நீக்கு
    2. சரியாகச் சொன்னீர்கள். நன்றி.

      நீக்கு
    3. //நம் நாட்டில் எத்தனையோ கட்டுப்பாடுகள்.
      அங்கே அரசாங்கம் கவனம் எடுப்பது போல எங்கேயும் நடக்கிறதா தெரியாது.// சரியாக சொன்னீர்கள் வல்லி மாமி. முதல் முறையாக நாடே திரண்டு அரசுக்கு உறுதுணையாக நிற்கின்றது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது பார்பதற்கு.

      நீக்கு
    4. கமலா, சுய சிந்தனை மட்டும் இல்லை. உள்மனதில் சுழண்று வந்து கொண்டிருக்கும் குழப்பமும் பயமும் சேர்ந்து என்னை இப்படி எழுத வைத்தது. எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்டு வாழ வாழ்த்துகள், பிரார்த்தனைகள். விரைவில் கொரோனாவுக்குத் தடுப்பு ஊசி அல்லது மருந்து கண்டுபிடிக்கவும் பிரார்த்திக்கிறேன். திருமதி ரமா ஸ்ரீநிவாசனின் கட்டுரை உண்மையை அப்பட்டமாகச் சொல்லுகிறது. நாம் அனைவருமே அதைப் புரிந்து கொண்டு கொரோனாவுக்கு எதிராகப் போரிட ஆயத்தம் ஆவோம். மத்திய, மாநில அரசுகளோடு ஒத்துழைத்து ஊரடங்கில் இருந்து நம்மையும் எதிர்காலத்தையும் காத்துக்கொள்ளுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், சரியாகச் சொன்னீர்கள்.

      நீக்கு
    2. கீதா, பயந்து ஒளிவதை தவிற்த்து, அரசின் ஆணைகளை வழுவாமல் கடை பிடித்து இந்த இக்கட்டிலிருந்து எவ்வளவு விரைவில் வெளியேருவது என்பதை பார்ப்போம். எதிர்காலமே இருண்டு கிடக்கின்றது. எல்லாம் சரியாக இறைவனை வேண்டுவோம்.

      நீக்கு
  7. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் சிறப்பு.

    ரமா அவர்களின் கட்டுரை - வெகு சிறப்பு. பாராட்டுகள்.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  8. கட்டுரையில் சொன்னதனைத்தும் உண்மை...

    பசிப்பிணியை போக்குவதே முதல் செயலாக இருக்க வேண்டும்... அதையும் இந்த தீநுண்மி ஒரிரு மாதங்களில் உணர்த்தி விடும்...

    பதிலளிநீக்கு
  9. நம்பிக்கையும், கட்டுப்பாடும் நல்ல தீர்வினைத் தரும். நேர்மறையான செய்திகள் மனதிற்கு சுகத்தைத் தருகின்றன. (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

      நீக்கு
  10. கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதற்கட்டமாக இருந்தாலும் வெற்றி பெற்றிருப்பதாக தமிழக மருத்துவ பல்கலை கழகம் அறிவித்திருப்பதாக படித்து கொஞ்சம் சந்தோஷமாக கீழே வந்தால், நிதர்சனம் என்ற பெயரில் ஏகத்துக்கு பயமுறுத்தும் ரமாவின் கட்டுரை. மனம் குழம்பித் தவிக்கிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

      நீக்கு
    2. பானு, ஏகத்துக்கு பயமுறுத்தும் ரமாவின் கட்டுரை என்றாலும் உண்மை நம்மை முகத்தில் அறைந்து வெளிச்சம் போடும்போது மறுபுரம் திரும்ப முடியாதே. மேலும் பயங்கரம் ஆனால் உண்மை என்ற விளிம்பில் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். பிறகு தெரிந்து கொண்டு திண்டாடுவதை வீட இப்போதை தெரிவது நல்லதல்லவா? அப்போதைக்கிபோதே சொல்லி வைத்தேன் அரங்கமாணகருளானே என்பது போ.

      நீக்கு
  11. //
    __/\__ NAMASTE

    இப்பொழுது பலரும் உபயோகிக்கும் ஜூம் ஆப் பாதுகாப்பற்றது என உலகம் முழுவதும் சொல்லி வரும் நிலையில் ஒரு இந்திய நிறுவனம் அதற்கு பதிலாக ஒரு வீடியோ கான்பரென்சிங் பிளாட்பார்மை சோதித்து வருகிறது. Inscripts என்ற நிறுவனத்தின் வீடியோ கான்பரன்ஸிங்க் பிளாட்பார்ம் தான் இந்த Namaste.

    மேலும் விவரங்களுக்கு : CLICK HERE

    (நன்றி : திரு எல் கே :: lkarthik.in ) //

    நன்றி எங்கள் பிளாக்

    பதிலளிநீக்கு
  12. /சென்னை: கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் முதல் கட்டமாக வெற்றி பெற்றிருக்கிறோம் என்று எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

    // இது உண்மை. ஆனால் மருந்தாக வர பல காலமாகும்

    பதிலளிநீக்கு
  13. நேர்மறைச் செய்திகள் நன்று.

    கொரோனா தடுப்பூசி/மருந்து - நாட்களாகும்னு தோணுது.

    ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் நம் வாழ்க்கை முறை மாறிவிடும் என்பது நிதர்சனம். யார் தும்மினாலும் இருமினாலும் இன்னும் 2 வருடங்கள் ஆனாலும் நாம் அலர்ட் ஆகிவிடுவோம். போர் வந்ததைச் சந்தித்த தலைமுறை போல, நாமும் புதிதாக இதனைச் சந்தித்திருக்கிறோம். கட்டுரை நன்று.

    பதிலளிநீக்கு
  14. இன்றைய பாஸிடிவ் செய்திகள் சிறப்பு .

    //நம்பிக்கை உலகளவிற்கு நம் யாவரிடமும் கொட்டிக் கிடக்கின்றது. ஆகவே, நம்பிக்கையுடன் இறைவனை பிரார்த்தித்து இவ்வுயிர் கொல்லி நோயிடமிருந்து தப்பிக்க வழி தேடுவோம்.//
    நம்பிக்கை கொள்வோம், நம்பிக்கையுடன் இறைவனிடம் பிரார்த்திப்போம்.

    ரமா அவர்களின் கட்டுரை அருமை.

    பதிலளிநீக்கு
  15. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் சிறப்பு.

    வேக்சின் வர பல மாதங்களாகும் என்று தெரிகிறது. தமிழ்நாட்டு செய்தி நானும் பார்த்தேன். வேறு சில நாடுகளும் கூடக் கண்டுபிடிப்பதாகத் தெரிகிறது. எப்படியோ வந்து எல்லாம் சரியானால் நல்லது.

    சகோதரி ரமா ஸ்‌ரீனிவாசன் அவர்களின் கட்டுரை வெகு சிறப்பாக உள்ளது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  16. Covid-19 உலகக்கோப்பை விளையாடிக்கொண்டிருக்கிறது. உலகமோ அந்த விளையாட்டின் நுணுக்கங்கள்பற்றி ஏதும் அறியாமல், அங்குமிங்குமாக மைதானத்தில் வியர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டிருக்கிறது. சரியான மருந்தில்லா நிலையில், ஒரு தொற்றுவியாதி தலைவிரித்துத் தாண்டவம் ஆடத்தானே செய்யும். அமைதியாக மூலையில் உட்கார்ந்து டீ குடித்துவிட்டுப் போவதற்கா அது வந்திருக்கிறது! பிராணனை வாங்குவதல்லவா அதன் குறிக்கோள்..

    லாக்டவுனைத் தவிர, சமூகவிலகலைத்தவிர பாதுகாப்பான நோய்த்தடுப்பு ஏற்பாடுகள் ஏதுமில்லை என்பதை இந்த மூன்று மாதங்களில் உலகம் பார்த்திருக்கிறது. அனுபவித்திருக்கிறது. இருந்தும் அமெரிக்கா போன்ற ‘பெரீசா முன்னேறிவிட்ட’ நாடுகளில் என்ன நடக்கிறது? அங்கிருந்து வெளிவரும் பத்திரிக்கைகள் படம்போட்டுக் காண்பிக்கின்றன. அங்குள்ள ஒவ்வொரு மாநிலமும் லாக்டவுனை செயல்படுத்துவதில் திணறுகின்றது. கவர்னரின் உத்தரவை மதிக்காத மேதைகள், படிப்பாளிகள் பலர் மக்களின் கூட்டத்தில். மக்கள் வெளியே வந்து உலவுகிறார்கள் - ஒரு கையில் அமெரிக்க கொடியுடனும் (விசிறிக்கொள்வதற்கா, சொரிந்துகொள்வதற்கா), இன்னொரு கையில் ப்ளே-கார்டுடனும். ப்ளேகார்டில் வாசகங்கள்: ' Freedom is essential'. அட, அறிவுகெட்ட புத்திசாலியே! ’சுதந்திரம்’ உனக்கு ’அத்தியாவசியம்’ என்றால், கொரோனாவுக்கு உன் உயிர் அத்தியாவசியமாயிற்றே. புரியவில்லையே உனக்கு ! உனது நாட்டிலேயே 50000 பேரை மென்று தின்று ஏப்பம் விட்டுவிட்டதே மூன்றே மாதத்தில். இன்னும் வெளிக்காற்று, ‘சூரியக்குளியல்’ தேவைப்படுகிறதா உந்தன் மேனிக்கு! - இது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலை நாடுகள் சிலவற்றின் பரிதாப நிலை.

    இத்தகைய உலகப்பின்புலத்தில், சிரமங்கள், வேதனைகள் பலவற்றிற்கும் இடையில் (சில விபரீதங்கள் தவிர்த்து), நமது மாபெரும் நாட்டின் சாதாரண மக்கள் ஒத்துழைக்கிறார்கள், அரசின் ஆணைகளுக்கு, வழிநடத்தல்களுக்கு. பாராட்டுகள் பல நெஞ்சிலிருந்து - மருத்துவர்கள், செவிலியர்கள், பாதுக்காப்பு, சுகாதாரம் எனக் கண்காணிப்பவர்களுக்கு. அவர்களது குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள் எப்போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆழ்ந்த, அறிவார்த்தமான கருத்துரை. மிகவும் நன்று.

      நீக்கு
  17. எனக்குத் தெரியாத விஷயங்களை தடாலடியாக எழுத மிகவும் யோசிப்பேன். திருப்பித் திருப்பி அது பற்றிய செய்திகளையெல்லாம் வாசித்து எனக்குள் தெளிவடைய முயற்சிப்பேன். முதலில் என் சந்தேகங்கள் களைய வேண்டும். அதற்குப் பிறகு பிறருக்கு அது பற்றி
    எடுத்துரைப்பதும், பிறர் கேட்கும் ஐயங்களுக்கு தெளிவாக பதிலளிக்கவும் என்னைத் தயார் நிலையில் வைத்துக் கொள்வேன்.

    சாதாரண கட்டுரை, கதை விவரங்களுக்கு இவ்வளவு ஏற்பாடுகள் எனக்கு வழக்கமானவை.

    //இரண்டாவதாக, உலக அரசுகளோ வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷனோ இவ்வருடமே இக்கொடிய நோயை ஒழித்தல் எவ்விதத்திலும் சாத்தியமில்லை. கோவிட்-19 வேக்ஸினோ மருந்தோ கண்டு பிடிக்கப்படும் வரை இந்நோயின் பிடியிலிருந்து உலகம் வெளியேறுவது மிக மிகக் கடினம்.

    எனவே நண்பர்களே, இந்நோயின் தடுப்பு மருந்து உறுதி செய்யப்பட ஏறக்குறைய ஏப்ரல் 2021 ஆகிவிடும்... //

    இந்த மாதிரி நம்மைத் தளரச் செய்யும் கருத்துக்களை அவர் எங்கிருந்து பெற்றார் என்று தெரியவில்லை.
    'ஆகி விடலாம்' என்று கூட இல்லை. ஆகி விடும் என்று தீர்மானமாகச் சொலவதையெல்லாம் தவிர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எச்சரிக்கை மணி (யை கொஞ்சம் பலமாகவே அடித்துவிட்டாரோ?) கட்டுரை. ஆனாலும் யோசிக்கவேண்டிய எச்சரிக்கை மணி. காலம் பதில் சொல்லட்டும்.

      நீக்கு
  18. முதல் இரு செய்திகளும் எனக்கும் கூகுள் அனுப்பும் செய்திகளில் வந்தது. இப்போது தமிழில் படித்துக் கொண்டேன்.

    ஜூம் ஆப் பாதுகாப்பற்றது என்றுதான் அறிந்தேன். என் மகன் சொல்கிறான் அதில் நிறைய சேஃப் ஆப்ஷன்ஸ் இருக்கிறதாம். அவர்கள் கல்லூரி க்ளினிக்கில் அதுதான் பயன்படுத்துகிறார்களாம். தற்போது கல்லூரி மற்றும் க்ளினிக் மற்ற டாக்டர்ஸோடு பேசுவது முழுவதும் அதிலதானாம்.

    நம் எல்கே பகிர்ந்திருந்ததைப் பார்த்தேன் ஸ்ரீராம். நல்ல விஷயம். டெஸ்டிங்க் பாசாகி வெளிவந்து பாதுகாப்புடன் வர வேண்டும்.

    மருந்து கண்டுபிடிப்புல் முதற்கட்டம் பற்றிய செய்து உண்மையானதுதான் ஸ்ரீராம். சுதா சேஷையன் பேசும் காணொலி வந்ததே.

    நல்ல விஷயம் ஆனால் இது பல ஸ்டேஜ் கடந்து வெளியுலகிற்கு வர பல மாதங்கள் ஆகும். மிகப் பெரிய ப்ராஸஸ். இப்போது சில வெளிநாடுகளும் கண்டுபிடிப்பின் வெகு அருகில் இருப்பதாகச் சொல்கின்றன. அமெரிக்காவிலும் நடந்து கொண்டிருக்கிறதாம்.

    யுகே மற்றும் ஜெர்மனி, ஃப்ரான்ஸ் அமெரிக்கா சேர்ந்து அவரவர் வெர்ஷன் ஆஃப் வேக்சின் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கு. ஜெர்மனியில் ஹ்யூமன் ட்ரையல் அப்ரூவ் ஆகிவிட்டதாகச் செய்தி சொல்கிறது. இந்த மாதம் ஹூமன் ட்ரையல் தொடங்குமாம். நல்லது நடந்தால் சரி

    கீதா

    பதிலளிநீக்கு
  19. இக்கால கட்டத்தை அப்படியே எடுத்துக் கூறும் கட்டுரை. தடுப்பு மருந்து முதல் கட்டத்தை தாண்டி வெற்றி பெற வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  20. ரமா உங்கள் கருத்துகள் யதார்த்தமானவை. உண்மைதான். உண்மை கொஞ்சம் பயமுறுத்தும்தான்.

    இதைத்தான் சில நாட்கள் முன் அதாவது மார்ச் இறுதியில்...ஏப்ரல் தொடக்கம்.. நானும் மகனும் பேசிக் கொண்டோம் அவன் மருத்துவ ரீதியாகச் சிலது சொன்னான். ஆனால் அதன் பின் இருவரும் தீர்மானித்தோம் இது பற்றி இனி பேச வேண்டாம் என்று. ஏனென்றால் இப்போது எல்லாமே ப்ளாங்க் தான். நாம் பயப்படத் தேவையில்லை. எதிர்கொள்வோம் என்று. எனவே நானும் மகனும் பேசும் போது செய்வது நம் பூஸாரின் பாஸ் செய்யும் காமெடிகளை - அவர் தினமும் ஏதேனும் ஒரு காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

    இன்று கூட செம காமெடி ஒன்று...அமெரிக்க மக்கள் ஒருவகையில் பாவம்...இன்னொரு வகையில் அவங்கதானே தேர்ந்தெடுத்தாங்க...

    இதனிடையே இன்று ஒரு நல்ல செய்தி அமெரிக்காவின் ஆராய்ச்சிப் பிரிவு சொல்லியிருப்பது...

    அதிக வெப்பம், ஈரப்பதம் தொற்றின் எதிரி அதனால் இந்தியாவிற்கு அதிர்ஷ்டம் என்று சொல்லியிருக்கிறது. இறப்பு விகிதமும் குறைவாக இருக்கிறது என்று ...

    யப்பா கண்னு போட்டுடாதீங்கப்பா...எங்க நாடு பாவமப்பா...நாங்க பாவம்...கண்ணுபடப் போகுதப்பா இந்திய நாடே உனக்கு சுத்திப் போட வேணுமப்பா நு பாடத் தோன்றியது...அந்தச் சுட்டியைத் தேடிக் கொண்டிருக்கிறென்

    கீதா

    பதிலளிநீக்கு
  21. என்க்கும் ஜீவி சார் போன்றே தோன்றுகிறது அதுவரை பவித் ரணாய சாதூனாம் என்று அவன் மீதுநம்பிக்கையோடு இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  22. ஊரடங்கு காலத்தில் இலவச உணவுக்கு வெளியில்வர முடியுமா

    பதிலளிநீக்கு
  23. ஊரடங்கு காலத்தில் இலவச உணவு
    உயரிய பணி - கொரோனா வந்து
    ஏழைகளைத் தான் வாட்டி வதைத்ததே!

    பதிலளிநீக்கு
  24. "தனிமை கண்டதுண்டு அதில் தனிசுகம் இருக்குதம்மா" என்ற பாரதியின் வழிகாட்டுதலே கொரனாவுக்கு தற்போதைய சிறந்த தடுப்பு மருந்து !!! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!