வெள்ளி, 29 மே, 2020

வெள்ளி வீடியோ : தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்பட்டாள்..

நேயர் விருப்பப் பாடல்.  கேட்டிருப்பவர் பானு அக்கா.


பார்த்திபன் கனவு 2003 இல் வந்த படம்.​  ஸ்ரீகாந்த், சினேகா நடித்த திரைப்படம்.  சினேகா முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம்.  அப்புறம் அவர் எத்தனை படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தார் என்று கேட்கக்கூடாது!




​ கரு பழனியப்பன் இயக்கம்.  வித்யாசாகர் இசை.  

பல விருதுகளை அந்த ஆண்டு வாங்கிக்குவித்த இந்தப் படத்திலிருந்து ஏதாவது ஒன்று என்று இரண்டு பாடல்களைக் கேட்டிருக்கிறார் பானு அக்கா.  ஒன்று பக் பக் பக் பக் மாடப்புறா, இன்னொன்று இன்று பகிரப்படும் 'ஆலங்குயில் கூவும் ரயில்...'



முதல் பாடலை பழைய பாணியில் அமைத்திருக்கிறார்கள்.  காட்சி கானம் இரண்டுமே அப்படிதான்.



நாம் பகிரப்போகும் பாடல் பாடலாசிரியருக்கான விருதை, அந்தப் பாடலை எழுதிய கபிலனுக்குப் பெற்றுத்தந்தது.  சிறந்த பாடகிக்கான விருதை ஹரிணிக்குப் பெற்றுத்தந்தது.  அந்த வருடத்தின் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நகைச்சுவை நடிகர், நடிகை, இயக்குனர் என்று விருதுகளை வாங்கிக்குவித்த படம்.

ஆலங்குயில் கூவும் ரயில் 
ஆரிராரோ ஏலேலேலோ 
யாவும் இசை ஆகுமடா கண்ணா }  
நான் பாடிட அரங்கேறிடும் 
  காதல் இசை கண்ணா 

ஆண் : ஆன் செல்போன் 
பெண் : இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது
 தொலைவினில் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே  

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் சிகரெட்  

விரல்களின் இடையே புது விரல் போல 
சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்  

ஆண் : ஓகே ஹா ஆன் வெட்கம்  

பெண் : இது பெண்மை பேசிடும் 
முதல் ஆசை வார்த்தைதான்  

ஆண் : மீசை  

பெண் : இது எனக்கு மட்டும் சொந்தமாகும் 
கூந்தல் குழந்தைதான் ஆலாபனை 
நான் பாடிட அரங்கேறிடும் 
காதல் இசை கண்ணா  .  

ஆண் : திருக்குறள்  

பெண் : இரு வரி கவிதை ஒரு பொருள் தருமே 
இருவரும் இது போல இருந்தால் சுகம்  

ஆண் : நிலா  

பெண் : இரவினில் குளிக்கும் தேவதை 
இவளோ வளர்ந்தே தேய்கின்ற 
வெள்ளை நிழல்  

ஆண் : சரி, கண்ணாடி  

பெண் : இதில் என்னை பார்க்கிறேன் 
அது உன்னை காட்டுதே  

ஆண் :    ம்ம் ஹ்ம்ம் காதல்  

பெண் : க ரி நி ச ரி க ரி க ரி க ம்ம் ம்ம் ம்ம்  

ஆண் : ம்ம்  

பெண் : நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற 
ஒற்றை கனவு தான்  

ஆண் : வாவ் பியூட்டிஃபுல்  

பெண் : ஆலாபனை  நான் பாடிட 
அரங்கேறிடும் காதல் இசை கண்ணா 
ஆலங்குயில் கூவும் ரயில் 
ஆரிராரோ ஏலேலேலோ யாவும் இசை 
ஆகுமடா கண்ணா  




================================================================================================

இன்றைய என் விருப்பப் பாடல்...

படம் கண்ணன் ஒரு கைக்குழந்தை.  இந்தப் படத்திலிருந்து ஒரு சிறப்பான பாடலை முன்னரே பகிர்ந்திருக்கிறேன் என்று நினைவு.  அது "மேகமே தூதாக வா...   அழகின் ஆராதனை.."  பாடல்.  சிறப்பான பஹாடி ராகப் பாடல் அது.

இன்று பகிரப்போவது வேறொரு பாடல்.  இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே நன்றாய் இருக்கும்.  பி சுசீலாவின் மோக சங்கீதம் உட்பட.



1978 இல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் இயக்கம் வெங்கடேஷ்.  சிவகுமார், சத்யராஜ், சுமித்ரா நடித்திருக்கிறார்கள்.  சத்யராஜுக்கு இது இரண்டாவது தமிழ்ப்படமாம்.  இவரின் உண்மையான எஸ் என் ரெங்கராஜ் என்கிற பெயரில் தயாரிப்பு நிர்வாகியாகவும் இந்தப் படத்துக்கே இருந்திருக்கிறார்!



இன்று பகிரப்படும் பாடலின் ஆசிரியர் பாரதிதாசன்.   

பாடும் குரல்?  

ஹிஹிஹி....  வேறு யார்?  SPB தான்.  

இது எந்த ராகத்தில் அமைந்தது என்று சந்தேகமே இருக்காது! 

காலை இளம் பரிதியிலே 
அவளைக் கண்டேன்...
கடற்பரப்பின் ஒளிப்புனலில் 
கண்டேன்..
அந்தச் சோலையிலே மலர்களிலே 
தளிர்கள் தன்னில் 
தொட்ட இடமெல்லாம் 
கண்ணில் தட்டுப்பட்டாள்..




89 கருத்துகள்:

  1. இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந்தற்று..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனி இருக்க, காயும் கவரலாமே. காய்தான் அவனுக்குப் பிடித்ததென்றால் ! இந்தமாதிரி ஆட்கள் அதிகமாகி வருகிறார்களோ என்னவோ?

      நீக்கு
    2. ஏகாந்தன் சார்.... திருவள்ளுவர் சமையலுக்குப் பயன்படும் கோவைக்காயை மனதில் நினைத்திருந்தால், ஒருவேளை

      காயிருப்பக் கனி கவர்ந்தற்று

      என்று எழுதியிருப்பார். இங்க சென்ற வாரம் கோவைக்காய் (தொண்டங்காய்) கிலோ 10 ரூபாய். ஆனா 25% உள்ள சிவந்திருந்தன. அந்தக் காய்களைத் தூரப்போட்டு மிச்சதைத்தான் உபயோகித்தோம்.

      நீக்கு
    3. காய் கவர்கின்றது என்று எட்டிக் காயின் பின் சென்றால் என்ன ஆவது?...

      நீக்கு
    4. கோவைப் பழங்களை கடித்துச் சாப்பிட்டால், பல்வலி சரியாகும் என்று ஒரு மருத்துவக்குறிப்பு படித்திருக்கிறேன். நெல்லை இப்படி பல்வலி மருந்துகளை அநியாயமாக தூரப்போட்டுவிட்டாரே!

      நீக்கு
    5. // இங்க சென்ற வாரம் கோவைக்காய் (தொண்டங்காய்) கிலோ 10 ரூபாய் //

      சென்னையில் பெரிய வெங்காயம் கிலோ 12 ரூபாய். 100 ரூபாய்க்கு கணக்குப்பண்ணி விற்கிறார்கள்! சாத்துகுடி இரண்டு கிலோ நூறு ரூபாய்!

      நீக்கு
    6. சிறுவயதில் மாமரங்கள் அதிகம் கிராமங்களில். இருந்தாலும் மாங்காய்களை -அதுவும் கிளிமூக்கு மாங்காய்ப் பிஞ்சுகளை, உடைத்து கொஞ்சம் கல்லுப்பை அழுத்தி ரசித்துத் தின்போம் நாங்கள் -சிறுவர் கூட்டம். எங்களிடம்போய் ’அதத் தூக்கிப்போடு..காயி! இந்தா பழம்!’ என்றிருந்தால் ’சும்மா கெட, ஒனக்கு ஒன்னும் தெரியாது’ என்றுதான் சொல்லியிருப்போம்!

      கோவைக்காய், ..பழம்.. அதை நாங்கள் ஆட்டுக்கு விட்டுவிடுவோம் அப்போது. தழையோடு காயையும் கடித்துச் சாப்பிடும். இப்படி இது மனுஷனுக்கான ஒரு ’காய்கறி’ லெவலுக்கு ப்ரொமோட் ஆகும் எனத் தெரியாது அப்போ!

      நீக்கு
    7. இங்க 7 கிலோ, 8 கிலோன்னு போய், இப்போ 10 கிலோ வெங்காயம் 100 ரூபாய்னு பார்த்தேன். தேங்காய் கொஞ்சம் சிறியது, ஐந்து தேங்காய் ஐம்பது ரூபாய்னு வாங்கினேன். சென்னையைவிட இங்க காய் மலிவு. சாத்துக்குடி 3 கிலோ 100 ரூபாய், ஆனா பசங்க விரும்பாததுனால நான் வாங்கலை. இப்போ அனேகமா தினம் வித வித மாம்பழம் வாங்கறேன்.

      ஏகாந்தன் சார் - எங்க வீட்டுல (அம்மா) நான் கோவைக்காய் சாப்பிட்டதே இல்லை. இந்த மெட்ராஸ் காரங்கதான் கோவைக்காய் சாப்பிடுவாங்க. வீட்டில் செய்தாலும் நான் சாப்பிடுவதில்லை.

      நீக்கு
    8. நெல்லை, நான் டெல்லி டாபாவில் ஒருமுறை இந்த பர்வல் சப்ஜி சாப்பிட நேர்ந்தது. நம்ப ஊர்ல ஆடு சாப்பிடுமேடா அதுதான் என அண்ணா மூலமாக அறிமுகம் செய்யப்பட்டேன்! கஷ்டம்..
      எங்கள் வீட்டில் நார்த் இண்டியன் நிறையப் பண்ணுவோம் ரோட்டி, பராட்டாவுக்காக. கோவைக்காய் உள்ளே வருவதில்லை. டெல்லியிலும் இதைத் தவிர்த்துவிடுவோம்.
      பெங்களூரில் -ப்ரூக்ஃபீல்ட் ஏரியா - ஒரு தேங்காய் 39 ரூ. என இரண்டு நாள் முன் வாங்கினேன். அதற்குமுன் ரூ. 35. ரொம்பச் சின்னதாக இருந்தால் ரூ.30. அதற்குக் குறைந்து பெங்களூரில் வாங்கியதில்லை.

      நீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. மிகவும் ரசிக்கும் பாடல்... மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று இரண்டு பாடல்கள் உள்ளனவே...   ஒரு பாடலைக் குறிப்பிடுகிறீர்கள்.  எது என்று சொல்லவில்லையே?!!!

      நீக்கு
    2. >>> ஒரு பாடலைக் குறிப்பிடுகிறீர்கள். எது என்று சொல்லவில்லையே?!!..<<<

      இரண்டாவதைக் கேட்ட நினைவு இல்லை...

      மற்றபடிக்கு பிடிக்கும் என்று சொன்னது அந்த முதல் பாடலைத்தான்..

      ஈற்றடிகளில் வரும் என்ன தவம் செய்தனை எனும் இனிய வரிகளுக்காக.. ஹரிணியின் குரலுக்காக.. சிநேகாவுக்காக...

      சிகரெட் ஆறாவது விரல் என்பது எனக்குப் பிடிக்காத விஷயம்...

      நீக்கு
    3. சிகரெட் என்பது அடியோடு பிடிக்காத விஷயம்...
      அதை ஆறாவது விரல்... ஏழாவதுவிரல் என்று பினாத்திக் கொண்டிருந்தால்?...

      இதேபோல மதுப்புட்டியை இரண்டாவது இதயம் என்று எழுதினால்
      ஒத்துக் கொள்ள முடியுமா?..

      நீக்கு
    4. சி, ம இரண்டுமே எனக்கும் பிடிபப்தில்லை!

      நீக்கு
  4. இனிய வெள்ளிக்கிழமைக்கான காலை வணக்கம். அனைவரும் நலமுடன் இருப்பது இறைவனின் பொறுப்பு.

    பதிலளிநீக்கு
  5. முதல் படமும் பாடலும் மிக மிகப் பிடிக்கும். சினேஹாவின் நடிப்பு,
    ஸ்ரீகாந்தின் மாற்றம் எல்லாமே நன்றாக இருக்கும்.
    இந்தப் பாடல் மிக இனிமை. என்ன தவம் செய்தனை
    பாடலுடன் ஒட்டி வரும் இந்த இனிமை நல்லதொரு புதுமை. தேர்ந்தெடுத்த பானுமாவுக்கு மனம் நிறை வாழ்த்துகளும் நன்றிகளும்.

    பதிலளிநீக்கு
  6. அடுத்து வருவது குட்டிப் பாடல். பாரதி தாசன் வரிகளால்
    மிளிர்கிறது.
    கேட்க அருமை.ஸ்ரீராம் எங்கிருந்தெல்லாம் இத்தனை நல்ல
    பாடல்களைத் தேர்ந்தெடுப்பாரோ.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..   நன்றி வல்லிம்மா..   அப்போதெல்லாம் எஸ் பி பி என்ன பாடினாலும் ஒருமுறையாவது காதில் வாங்கி விடுவேன்!  அதே போல ஹிந்தியில் கிஷோர்குமார்.

      நீக்கு
    2. ..எஸ் பி பி என்ன பாடினாலும் ஒருமுறையாவது காதில் வாங்கி விடுவேன்! அதே போல ஹிந்தியில் கிஷோர்குமார்.//

      இந்த மாதிரி obsession சரியில்லை - அப்படியென்றால், சங்கீதத்தை விட ஆளைத்தான் தேடிப்போகிறீர்கள்..!

      நீக்கு
    3. ஆளைத் தேடிப்போவதில்லை சார்; குரலுக்கு + பாடும் ஸ்டைலுக்கு அடிமையாகுதல்.
      ஒரே பாடல், ஒரே ராகத்தில் அமைந்த 'வாதாபி கணபதிம்பஜே ஹம்' பாடலை, எம் டி ராமநாதன், மதுரை மணி ஐயர், மகாராஜபுரம் சந்தானம், கே ஜே யேசுதாஸ் எல்லோர் பாடுவதையும் கேட்டிருக்கிறோம். எதை ரசித்திருக்கிறோம்?

      நீக்கு
    4. கேஜிஜி சொல்லி இருப்பதும் சரி. பாடல்கள் நன்றாயிருந்து மனதில் பதிந்தால்தான் தொடர்ந்து கேட்க முடியும்.
      மேலும் நான் அனைவர் பாடலும் கேட்பேன்.

      நீக்கு
    5. அதுசரி. சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட குரல், பாடும் ஸ்டைல் கவரத்தான் செய்யும். கர்னாட்டிக் மியூஸிக்கில் இது அதிகம் தென்படுகிறது.

      போனமாதம் .. ஒரு அதிகாலையில் என்னை ஏனோ ‘சபாபதிக்கு வேறு தெய்வம்.. சமானமாகுமா..!’ பிடித்துக்கொண்டது. அந்த நாள் முழுதும் எனக்குள் ரீங்கரிக்க, நான் அதைப்பாட முயற்சித்துக்கொண்டே இருந்தேன். (எனக்கு கர்னாடிக் சங்கீத ஞானமில்லை. ரசனை உண்டு.) அடுத்த நாளும் என்னை அது வேறு எதையும் சிந்திக்கவிடவில்லை! எனக்கு இந்தமாதிரி சமயங்களில் ஒன்றும் புரிவதில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட பாடகரும் இல்லை நினைவில். ஒருவேளை மகாராஜபுரம் இதைப் பாடி சின்னவயதில், ஆல் இந்தியா ரேடியோ தயவில் அப்பாவோடு உட்கார்ந்து கேட்டிருப்பேனோ? இந்தப்பாட்டு என்னை சுற்றோ சுற்றென்று சுற்றிக்கொண்டிருக்க, அன்று மாலை யூ-ட்யூபில் அந்தப் பாட்டைப் போட்டு சில தடவைகள் கேட்டேன். சும்மா random-ஆக சில பாடகிகள் - சுதா ரகுநாதன், சூலமங்கலம், அருணா சாய்ராம் என.. அவற்றில் அருணா சாய்ராம் பாடியது என்னை நெருங்கியது. ரசித்தேன்.
      இப்படி சங்கீதமும், சிலரின் குரல்களும் அல்லது பாடிச்செல்லும் விதமும் நம்மை இழுத்துவிடும்தான்.

      நீக்கு
    6. ஏகாந்தன் சார்! ஆஹா ! என்ன இனிமையான பாடல்! சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா ! கோபாலக்ருஷ்ண பாரதியின் பாடல், ஆபோஹி ராகம். முதலில் கேட்டது மதுரை மணி ஐயர் பாடியது - சென்னைத் தமிழ் இசைச்சங்கம் அரங்கத்தில் பாடியதை, ரேடியோவில் இசைவிழா அஞ்சல் செய்யக் கேட்டேன். 1963 ஆம் வருடம் என்று ஞாபகம்.

      நீக்கு
    7. ஏகாந்தன் சார்... 'சபாபதிக்கு வேறு தெய்வம்' - இந்தப் பாடல் ஆண்குரலுக்குத்தான் நல்லா இருக்கும். போனாப்போறதுன்னு டி.கே.பட்டம்மாள் குரலிலும் ரசிக்கலாம். மற்றபடி நீங்கள் சொல்லியிருப்பவர்களில் அருணா சாய்ராம் - ஏதோ ஓகெ. அவ்ளோதான். ஆண் குரலில் தேடிப்பாருங்கள். மயங்குவீர்கள்.

      எனக்கு மிகவும் பிடித்த பாடல். நானும் பாட முயற்சிப்பது. இதுவும், கா வா வா பாடலும் மனதுக்குப் பிடித்தவை. (கா வா வா - டிகே பட்டம்மாள் அல்லது .. அடடா பெயர் மறந்துவிட்டதே.. அந்த வெளிநாட்டு பாடகர் பாடிக் கேட்கணும்)

      நீக்கு
    8. //'சபாபதிக்கு வேறு தெய்வம்' - இந்தப் பாடல் ஆண்குரலுக்குத்தான் நல்லா இருக்கும். போனாப்போறதுன்னு டி.கே.பட்டம்மாள் குரலிலும் ரசிக்கலாம். மற்றபடி நீங்கள் சொல்லியிருப்பவர்களில் அருணா சாய்ராம் - ஏதோ ஓகெ. அவ்ளோதான். ஆண் குரலில் தேடிப்பாருங்கள். மயங்குவீர்கள்.//


      அருணா சாய்ராமே ஆண்குரல்தானே நெல்லை...  ஹிஹிஹி....!

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய ப்ரார்தனைகளுடன் வந்திருக்கும் கமலா அக்கா...   வாங்க..  வணக்கம்.  நன்றி.

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம். என்னுடைய விருப்பப் பாடலை வெளியிட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எதிர்வரும் நாட்களில் மனம் வலிமையுற வேண்டி ஆண்டவனைப் பிரார்த்திப்போம். இந்த மோசமான நாட்களைக் கடந்து செல்லும் மன வலிமை பெறப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோசமான நாட்கள் நம்மைக் கடந்து செல்கின்றன...

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா.. வணக்கம். நன்றி. நல்ல நாட்கள் வரவேண்டும் என்பதைவிட நிலைமைக்குத் தக்கபடி இதைவிட மோசமாகாமல் இருந்தாலே போதும் என்பதும் பிரார்த்தனை.

      நீக்கு
  10. முதல் பாடல் ரசித்தேன்
    இரண்டாவது பாடல் ஒரு நிமிடம்கூட இல்லையே... இதுவரை கேட்டதாக ஞாபகமும் இல்லை ஜி

    பதிலளிநீக்கு
  11. பாட்டுக்கிடையே வசனங்கள். செல்ஃபோன், சிகரெட்டோடு.. திருக்குறள்? ஏன், திரிகடுகம் ஞாபகம் வரவில்லையாமா பாட்டெழுதிய ஆளுக்கு?

    ஒன்றுமில்லாத ஒன்றை, தன் திறமையினால் ஒரு பாட்டுப்போலக் கேட்கப் பாடுபட்டிருக்கிறார் வித்யாசகர்.

    பதிலளிநீக்கு
  12. இரண்டு பாடல்களையும் ரசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  13. ஒரு மாறுதலுக்கு மற்ற பாடகர்கள் பாடிய பாடலை பகிருங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நெல்லை, நான் பகிர்ந்திருந்த பாடல்கள் நினைவில்லையா?

      நீக்கு
  14. ஆலம்க்குயில் பாட்டு அரவாரமில்லாத அழகியபாட்டு ரசிக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  15. இரண்டாவது..
    பாட்டுதான் அது. அதற்காக ’தட்டுப்பாட்டாள்’ என்றா போடுவது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... அப்புறம் சரி செய்கிறேன் ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
  16. ஆலங்குயிலின் கூவல் கவரும்:) இரண்டு பாடல்களும் இனிமையானவை.

    பதிலளிநீக்கு
  17. பாரதிதாசனின் அழகின் சிரிப்பில் வரும் வரிகள் இவை.

    'அந்தச் சோலையிலே மலர்களிலே
    தளிர்கள் தன்னில்
    தொட்ட இடமெல்லாம்
    கண்ணில் தட்டுப்பாட்டாள்..'

    'தளிர்கள் தம்மில்' என்பது தான் பாடம். 'தம்மில்' இசை அமைப்பிற்கு ஒத்து வரவில்லையோ என்னவோ, 'தம்'மோடு நின்று விட்டது.

    'பாட்டாள்' ஏற்கனவே ஏகாந்தன் சார் பார்வையில் பட்டுவிட்டது.

    பதிலளிநீக்கு
  18. //ஆலாபணை நான் பாடிட//

    ஆலாபனை

    பதிலளிநீக்கு

  19. //இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது
    தொலைவினில் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே

    //விரல்களின் இடையே புது விரல் போல
    சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்

    //இது எனக்கு மட்டும் சொந்தமாகும்
    கூந்தல் குழந்தைதான் ஆலாபனை //

    பாடல் ஆசிரியர் விருது?.. வேடிக்கை தான்.

    பதிலளிநீக்கு
  20. பாடல்கள் கேட்டேன்.
    இரண்டு பாடல்களும் இனிமை.
    முதல் பாடல் அடிக்கடி கேட்டு இருக்கிறேன். படமும் பார்த்து இருக்கிறேன்.
    இரண்டாவது பாடல் கேட்டதே இல்லை, படமும் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. நான் இரண்டு படங்களுமே பார்க்கவில்லை!

      நீக்கு
  21. //பார்த்திபன் கனவு 2003 இல் வந்த படம்.​ பார்த்திபன், சினேகா நடித்த திரைப்படம்.//பார்த்திபனா அந்தக் கதாநாயக நடிகர் பெயர்? நான் ஏதோ ஸ்ரீகாந்த் என்னும் பெயரில் வந்திருக்கும் புது நடிகர்னு நினைச்சேன். ஏனெனில் இந்தப் படம் பார்த்திருக்கேன் தூர்தர்ஷன் தயவில்! இதே ஸ்ரீகாந்த் நடித்த இன்னொரு படமும் பார்த்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீகாந்த் நடித்த படம்தான்.  மாற்றி விட்டேன்!

      நீக்கு
  22. அடுத்த படமும் பார்க்கவில்லை, பாடலும் கேட்டதில்லை. ராகங்களைச் சொல்ல தி/கீதா வரணும்.

    பதிலளிநீக்கு
  23. இரண்டாவது பாடல் இப்போதுதான் கேட்கிறேன். பாடலாக இல்லாமல் விருத்தம் போல் முடிந்து விட்டது. 

    பதிலளிநீக்கு
  24. பார்த்திபன் கனவு படத்தில் விவேக் காமெடி நன்றாக இருக்கும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனோ விவேக் எனக்கு அவ்வளவு கவர்வதில்லை!

      நீக்கு
    2. இன்றைக்கு ஸ்ரீகாந்தைப் பற்றி 'கிசுகிசு' எழுதாமல் விட்டுவிட்டார் பா.வெ. மேடம்.

      ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா, வீட்டின் எதிரே போராட்டம் நடத்தி ஸ்ரீகாந்த் வேறு வழியில்லாமல் திருமணம் செய்துகொண்டார். அவரும் ஒரு நடிகையாக இருந்தவரா என்பது நினைவிலில்லை.

      நீக்கு
    3. நடிகை இல்லை என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  25. இரு படங்களுமே பார்த்ததில்லை. பாடல்களும் இப்போதுதான் கேட்கிறேன். கேட்டேன். இரண்டுமே நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் நான் எப்போதுமே பார்ப்பதில்லை துளசி ஜி.  நன்றி.

      நீக்கு
  26. ஆஹா மிகவும் பிடித்த பாடல் ஸ்ரீராம். முதல் பாடல். பானுக்கா சாய்ஸா!!!

    காபி ராகம்...நல்லா போட்டிருக்கிறார் வித்தியாசாகர். அவரும் பல நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார்.

    படமும் பார்த்திருக்கிறேன்.

    இரண்டாவது படம் பார்த்ததில்லை. பாடலும் இப்போதுதான் முதல் முறையாகக் கேட்கிறேன். சின்ன பாடல் நல்லாருக்கு.

    இதன் ராகம் எனக்கு டவுட்டு இருக்கு. பௌலி, பூபாளம், ரேவகுப்தி மூன்றும் ஒரே போல இருக்கும். எனக்கு இந்த மூன்று ராகங்களின் ஸ்வரங்கள் தெரிந்தாலும் இந்த மூன்றையும் பிரித்தரியும் அறிவு இன்னும் வரவில்லை!! ஹிஹிஹிஹி. என் சின்ன அறிவுக்கு பூபாளம் னு நினைச்சாலும் இது பௌலி போலவும் இருக்கோன்னு சந்தேகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காபி ராகம்...//

      நோ கீதா ரீ வாசம்தான் வருதாக்கும்:))..

      //இதன் ராகம் எனக்கு டவுட்டு இருக்கு. பௌலி,//
      அச்சச்சச்சோ இதிலெல்லாம் என்ன டவுட்டூஊஊ கீதா... அது சந்திரமெளலியேதான் ஹா ஹா ஹா.. டவுட் எனில் உடனே அதிரா நினைக்கோணும் சொல்லிட்டேன்ன்... இதுக்காகத்தானே.. ஐ மீன் உங்கள் டவுட்டை எல்லாம் கிளியர் பண்ணோனும் எனும் ஒரே நோக்கத்தாலதான் நான் இன்னும் தேம்ஸ்ல குதிக்காமல் இருக்கிறேனாக்கும்:))..

      அதிராவின் நல்ல மனசுக்கு நன்றி எனச் சொல்வது கேய்க்குது.. நன்றி நன்றி:))

      நீக்கு
    2. வாங்க கீதா...   வாங்க அதிரா...

      கீதா ராகத்தில் கவுத்துட்டீங்களே!

      நீக்கு
  27. //ஒன்று பக் பக் பக் பக் மாடப்புறா, இன்னொன்று இன்று பகிரப்படும் 'ஆலங்குயில் கூவும் ரயில்...'//

    உண்மையில் மிக அருமையான பாடல்கள்... இதைப் பார்த்ததும் மீண்டும் ஒருதடவை இப்படம் பார்க்கோணும் எனும் எண்ணம் வந்துவிட்டது.. கதையை மறந்திட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனோ எனக்கு படம் பார்க்கும் ஆர்வமே வரவில்லை அதிரா!

      நீக்கு
  28. அச்சச்சோ ஆவ்வ்வ்வ்வ்வ் என்ன ஸ்ரீராம் நீங்கள் பகிர்ந்திருப்பது பாட்டுத்தானோ ஹா ஹா ஹா.. பல்லவி போகுது என நினைச்சேன் சட்டென நிண்டிட்டுது, ஓ பாதிதான் இங்கின வருதோ என யூ ரியூப்பில் போய்க் கேட்டால்ல்ல்.. அவ்ளோதேன் ஹா ஹா ஹா..

    ஆனாலும் நல்லா இருக்குது.. முன்பு கேட்டதாக நினைவில்லை..

    பதிலளிநீக்கு
  29. முதல் பாடல் எனக்கும் பிடித்தது. நிறைய கேட்டிருக்கிறேன் முன்னர்.

    இரண்டாவது பாடல் - ஒரு சிறு துளி தான் போல!

    இரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!