செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கேட்டு வாங்கிப்போடும் கதை : சாபம் 1/3 ----- ஜீவி


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
                                                                                             
                       
                                                                                                 


             -- ஜீவி

    1
ரம்பத்தில் என்னவோ பத்து மணிக்குத் தான் தில்லி போட் கிளப்பில் அந்த விஞ்ஞானிகளின் கூட்டம் கூடுவதாக இருந்தது.

ஆனால் ஆச்சரியம்,   ஒன்பதரை மணிக்கே இருக்கைகள் எல்லாம் நிறைந்து அத்தனை பேரும் ஆஜர்.   எல்லாத்துக்கும் காரணம் பாபு தான்.    அவன் புதிதாகக் கணினியியலில்  மகத்தான ஆராய்ச்சி ஒன்றை   வெற்றிகரமாக முடித்து   அந்த ஆராய்சியின் அடிப்படையில்   கம்ப்யூட்டர் ஒன்றை வடிவமைத்திருந்தான்.


அதுவும் அது சாதாரண கம்ப்யூட்டர் இல்லை.  அசாதாரணத் திறமைகள்  கொண்ட  காலக்கணினி  மாதிரியான அதிசயக் கண்டுபிடிப்பு  என்று  தெரிந்திருந்தார்கள்.  மனிதர்களை அதன்  முன்  நிறுத்தி,  அவர் சம்பந்தப்பட்ட தகவல்களை உட்செலுத்தினால்  தன் முன் நிறுத்தப்பட்ட மனிதரின்  தொடர் பிறவி நிஜங்களைப் பிட்டு பிட்டு வைக்குமாம்.    முந்தைய  பிறவிகளில் அவர்கள் என்னவாக இருந்தார்கள் என்பதைத்  துல்லியமாக எடுத்துச்  சொல்லும்  கம்ப்யூட்ராம்.    சும்மாச் சொல்லக்கூடாது,  பல துறை சார்ந்த விஞ்ஞ்சானிகளின்  கூட்டம்  அன்றைக்கு போட் கிளப்பில் அம்மியது.

ஆரமபத்தில் அவர்கள் அந்த இளம் விஞ்ஞானி பாபு   சொன்னதை நம்பத்தான் இல்லை.

ஆனால் அவன் தான் சொன்னதை அவர்களுக்குப் பரிசோதித்துக் காட்டியபொழுது அவர்களின் வியப்பு எல்லை மீறியது.   சரியாகச்   சொல்ல வேண்டுமானால், அவர்களுக்கு அவன் மேல் ஒரு பயம் கலந்த மரியாதை ஏற்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

முதலில் பாபு அந்த கம்ப்யூட்டரின் தலைப் பாகத்தில் இருந்த நீலநிறப் பிடி ஒன்றைத் திருகியவுடன் அவன் செல்லக் குழந்தைக்கு உயிர்ப்பு வந்தது. தனது வெள்ளைத் திரையில் நீலநிற ஒளிபாய்ச்சித் தயாராகி விட்டது.

முதல் வரிசையில் முதல் நபர் விலங்கியல் பேராசிரியர் சுந்தரேசன்..

பாபு  பேராசிரியர்  சுந்தரேசனை  மேடைக்கு அழைத்தான்.  தனது வயதுக்குச் சம்பந்தப்படாத நடவடிக்கை மாதிரி சுந்தரேசன் துள்ளி ஓடி வந்து ஆர்வத்துடன் மேடையேறினார்.  அவரைக் கைகுலுக்கி வரவேற்ற பாபு  லேசான புன்முறுவடன்  பேராசிரியரை தனது அதிசய தயாரிப்பின் முன்  நிறுத்தினான்.

 கீழே அமர்ந்திருந்த பேராசிரியர் சுந்தரேசன்  நண்பர்களிடையே ஒரே ஆரவாரம்.  பேராசிரியரை நோக்கி  கை அசைத்து  உற்சாகமூட்டினார்கள்.  மொத்தத்தில்  பாபுவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரிந்து  கொள்ளும் ஆர்வத்தில் மொத்த கூட்டமும் மேடையையே விழி அசைக்காதுப்  பார்த்துக்  கொண்டிருந்தது.

சுந்தரேசன் தன் தலையைக் குலுக்கிக் கொண்ட மாதிரி  இருந்தது. , இனம் தெரியாத ஒரு விதிர்விதிர்ப்பு அவரை ஆட்கொண்டிருப்பது வெளிப்படையாகத்  தெரிந்தது..  "பாபு! தங்களுடைய சமீபத்தியக் கண்டுபிடிபான இந்த நவீன கம்ப்யூட்டரைக் கண்டு நாங்கள் பிரமித்துப் போயிருக்கிறோம். .  உங்களுக்கு இந்த விஞ்ஞானப் பேரவையே நன்றி சொல்கிறது.  நம்  காலத்திய ஒரு  புகழ் வாய்ந்த கண்டுபிடிப்பாக எதிர்காலத்  தலைமுறை  இதைச் சொல்லப்  போகிறது." என்றவர் லேசாக  நாவால் மேலுதடைத் தடவிக் கொண்டுத் தொடர்ந்தார்:

"இந்த அதிசய கம்ப்யூட்டர் பற்றி எங்களுக்கு வழங்கப்பட்ட விவரக் குறிப்புகளை சற்று முன் பிரமிப்புடன் வாசித்தேன்.  அந்தத் தகவல்கள் இப்படியெல்லாம் கூட  முடியுமா என்று எங்களுக்கு ஆச்சரியமூட்டியது. தொடர்ந்து  உங்களது இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் எங்களை பல வழிகளில் வியக்க வைக்கப் போகிறீர்கள் என்று தெரிகிறது.   உங்களது முதல் நிகழச்சியில்  முதல் ஆளாக பங்கு  கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது குறித்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.." என்றவர் அமைதி காத்த சபையை ஒரு தடவை கூர்ந்து பார்த்து விட்டுச் சொன்னார்:

"பல ஜென்மங்களாகத் தொடர்ந்து  வரும் இந்த பிறவிச் சங்கிலி பற்றி சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருந்த தகவல்கள் என்னை ஆச்சரியத்தில் அமுங்க வைத்தன.  அந்தப் புத்தகத்தை வாசித்ததிலிருந்து முந்தைய ஜென்மத்தில் நான் என்னவாக இருந்தேன்,  என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விவரிக்கத் தெரியாத  ஒருவித உந்துதல் என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது.  பொதுவாக இரவு உறங்கப் போகும் முன் இந்த நினைப்பு வந்து விட்டால், முன்னிரவு கழியும் வரை இதே நினைப்பில் மூழ்கிப் போகிறேன்.  அசதியில் தூங்கினால் தான் உண்டு.   இந்த நிலையில் உங்கள் ஆராய்ச்சியும் இந்தக் கம்யூட்டரும்  வானிலிருந்து குதித்து வந்த தேவனாக எனக்குத் தோன்றுகிறது. சமீப காலமாக என்னை வாட்டிக் கொண்டிருக்கும் கேள்விக்கு விடை கிடைக்கும் நேரம் வந்து விட்டதை என்னாலேயே நம்ப முடியவில்லை.. எல்லாம்  இறைவனின் அருளாக நினைக்கிறேன்.." என்று  அதற்கு மேல் பேச முடியாத உணர்ச்சி வசப்பட்டவர் போலக் காட்சியளித்தார் பேராசிரியர் சுந்தரேசன்..                                                                                                                                                   
                                                                               
"புரொபசர்  சார்!  என்னால் உங்களுக்கு உதவ முடியும் என்று நினைக்கிறேன்..  உங்கள் மனதில் இருப்பதைச் சொல்லுங்கள்.. முயற்சி செய்கிறேன்.." என்றான்  பாபு.  கொஞ்சம் கூட பதற்றமின்றி நிதானமாக இருந்தது அவன் குரல்.   நடுவில் சபையில் அமர்ந்திருப்பவர்களை எடை போடுவது போல தீர்க்கமான பார்வை வேறு.

"சொல்கிறேன்.." என்று லேசாகத்  தயங்கிச் சொன்னார்  புரொபசர் சுந்தரேசன். .   "எங்களுக்கு இப்பொழுது வழங்கப்பட்ட தகவல் குறிப்புகளில் நம் முந்தைய ஜென்ம வாழ்க்கையைப் பற்றியெல்லாம் மிகத் தெளிவாக இந்தக் கம்யூட்டர் சொல்லும் என்று சொல்லப்பட்டிருந்தது.  இப்படி ஒரு அதிசய கம்ப்யூட்டரை கண்டுபிடித்த உங்களுக்கு ஒரு சல்யூட்!   நான் மிகுந்த ஆர்வத்துடன்  உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால   போன ஜென்மத்திற்கு முந்தைய ஜென்மத்தில் நான் என்ன செய்தேனென்று என் வாழ்க்கையிலிருந்து ஏதாவது நிகழ்ச்சி ஒன்றை இந்த கம்ப்யூட்டரின் துணை கொண்டு காட்டி என்னைப் பரவசத்தில் ஆழ்த்த முடியுமா, நண்பரே?" என்று அவர்  நெகிழ்ந்த குரலில் கேட்டது அந்த அமைதியான சபையில் அத்தனை பேருக்கும்  துல்லியமாகக் கேட்டது..

"ஓ," என்று பாபு சொன்ன உடனே அந்த ஹால் முழுக்க நிறைந்திருந்த விஞ்ஞானிகள், "யா,யா!" என்று மகிழ்ச்சியில் திளைத்தனர்.

"போன ஜென்மத்திற்கு முந்தைய ஜென்மம் என்றால் இரண்டு ஜென்மங்கள் முந்தி, இல்லையா" என்று ஏதோ தனக்குள் பேசிக் கொள்கிற  மாதிரி முணுமுணுத்த  பாபு,  புரொபசர் சுந்தரேசனை அருகில் அழைத்து தன் அதிசய கம்ப்யூட்டரின் முன் நிற்க வைத்தான்.   இப்பொழுது தனக்கு எதிராக இருந்த அந்த கம்ப்யூட்டரின் திரையை கனிவுடன் பார்த்த நிலையில் நின்றிருந்தார் சுந்தரேசன்.  'காலக்கணினியே!  உனக்கு வணக்கம்.  என் கடந்த ஜென்மம் பற்றிய தகவல்களை நல்லபடியாகக் காட்டு அதிசய  கம்ப்யூட்டரே!' என்று அந்த  கணிப்பொறியை அவர்  பரிதாபத்துடன் வேண்டிக் கொள்வது போல அவர் தோற்றம் இருந்தது.

தனது அதிசயக் கண்டுபிடிப்பான அந்தக் கணினியை உயிர்ப்பித்தான் பாபு.     சுந்தரேசனிடம்   அவரது   இந்த ஜென்மத்துப் பிறந்த  தேதியைக் கேட்டு திரையின் மார்புப் பகுதியில் பதிந்தான்.  தொலைக்காட்சி பெட்டி போலிருந்த அந்தக் கணினியின்  கீழ்ப்பகுதி வலது பக்கத்தில்   அடைசலாக    நிறைய குமிழ்கள் இருந்தன.   அதில்   ஒரு குமிழைத் தொட்டு பாபு திருகியதும்  திரையில் 'தலைமுறை' என்ற எழுத்துக்கள் தோன்றின.  அந்த எழுத்துக்களின் கீழிருந்த பெட்டியில் 2  என்று சுந்தரேசன் விரும்பிக் கேட்ட ஜென்மத்தின் எண்ணை  பொறித்தான்.  உடனே அந்த அதிசயக் கணினி தன் தேடுதலைத் தொடர்வது திரையில் பளிச்சிட்டுத் தெரிந்தது.  சட்டென்று தேடுதல் வேலை முடிந்த மாதிரி திரையில் பனிப்படலம் போர்த்திய மாதிரி காட்சிகள் தென்படத் தொடங்கின.

சுந்தரேசனின் முகத்தில்    திடீரென்று பற்றிக்கொண்ட   பரவசம்.  அந்த பரவசம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி  தன்னுள் புதைந்து குழப்பம் மேலோங்குவது அவருக்கு  நன்றாகவே தெரிந்தது..


(வளரும்)

படங்கள் உதவிய நண்பர்களுக்கும் நன் றி.

66 கருத்துகள்:

  1. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. அன்பு கெளதமன்,

      //பல துறை சார்ந்த விஞ்ஞ்சானிகளின் கூட்டம் அன்றைக்கு..//

      விஞ்ஞானிகளின் என்று பிழைத்திருத்தம் செய்திட வேண்டுகிறேன். பின்னால் 'மின் நிலா' இதழில் பிரசுரமாகப் போவதால் இந்தத் திருத்தம் முக்கியத்துவம் பெறுகிறது.

      நீக்கு
  3. இன்று ஜீவி அண்ணாவின் கதை..

    நவீன விஞ்ஞானிகள் கூடியிருக்கின்ற்னர்...
    முற்பிறவியைக் காடும் காலக் கணினி உருவாக்கம்..
    அதிரடியான ஆரம்பம்... ஆகா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம்.
      அன்பு துரை,அன்பு ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்
      நல்ல நாளாக அமைய வாழ்த்துகள்.
      ஜீவி சாரின் கதை பிரமிப்பு கொடுக்கிறது. மீண்டும் படித்து விட்டு வருகிறேன்.

      நீக்கு
    2. தம்பி துரையின் முதல் வருகை கண்டு சந்தோஷம்.

      பதிவுலகைப் பொறுத்த மட்டில் பதிவுகளின் முதல் பின்னூட்டத்திற்கு இருக்கும் அலாதியான மகிமைகளின் அடிப்படையில் மேலும் சந்தோஷம்.

      மேலும் தொடரும் கதையில் தொடரப்போகும் அதிரடிகள் தாம் கதையை நகர்த்திச் செல்லத் துணையாக இருக்கப் போகிறது, தம்பி.

      நீக்கு
    3. வாங்க, வல்லிம்மா. பிரமித்ததில் மகிழ்ச்சி. மேலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாருங்கள். நன்றி.

      நீக்கு
  4. முன்பிறவியை உணர்ந்து கொள்ள தியான முறை ஒன்று உண்டு...

    ஆயினும் அதை வெளிப்படையாக சொல்லுத்ல் ஆகாது..

    எத்தனையாவது புறவி என்று தெரியாவிட்டாலும் என்னென்ன பிறவிகள் என்னென்ன காரியங்கள் என்பவை எனக்கு ஓரளவுக்குப் புலனாகியிருக்கின்றன...

    நாடி ஜோதிடமும் உதவி செய்துள்ளது...

    காணற்கரிய காட்சிகளையும்
    தேடற்கரிய செய்திகளையும்
    குலதெய்வம் முதலான உபாசனா மூர்த்திகள் உணர்த்தியுள்ளனர்...

    இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் -
    விநாயக வழிபாடு..

    அது
    சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டும்..
    சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணங்கிக்கறேன். இந்த தியான முறை பற்றி ஓரளவுக்குத் தெரிந்தாலும் எல்லோராலும் செய்ய முடியாது. உங்களுக்கு வசப்பட்டிருப்பது மகிழ்ச்சி. விநாயகன் துணை இருக்கிறான்.

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்.... உங்களை நான் தென் தமிழகத்தின் சிறிய நகர்ப்புறமும் கிராம்முமான ஒரு கடை வீதியில் யதேச்சையாகப் பார்க்கிறேன். அந்த ஊர்தான் உங்கள் ஊர் எனத் தெரிகிறது (நீங்கள் சொல்லாமலேயே). கேள்விக்கு பதில் சொன்னாலும் முகத்தில் உற்சாகம் இல்லை. உங்கள் அலைபேசி எண் கேட்கிறேன். பதில் சொல்லாமல் சட் என்று சைக்கிளில் ரோடில் வேகமாகச் செல்கிறீர்கள். கொஞ்சம் டிராபிக் இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு உங்களைப் பிடிக்க சைக்கிளில் விரைகிறேன். ஆனால் கண்டுபிடிக்க இயலவில்லை. ரோடு, நீங்க திரும்பின பகுதி, அங்கு இருக்கும் வயல், பலா மரங்கள் இன்னும் பல மரங்களை ஒட்டிய பகுதிலாம் இன்னும் படம் போல மனதில் இருக்கு. இது இன்றைய அதிகாலைக் கனவு.

      இது சொல்ல வருவது என்ன என்று யோசிக்கிறேன்.

      நீக்கு
    3. அன்பின் நெல்லை..

      நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்.. சில தினங்களுக்கு முன் ஸ்ரீராம் அவர்களுடன் பேசிவிட்டுத் திரும்பும்போது ஒருவர் ஓரமாகச் செல்கின்றார்.....

      சற்று உயரம் .. மா நிறம்...வெண்பட்டு பஞ்சகச்சம்..

      அட.. நம்ம நெல்லை அல்லவா செல்கின்றார் - என்று தங்களைத் தொடர்கின்றேன்...

      அத்துடன் கனவு முடிந்து விட்டது..

      நாம் இருவருமே ஒன்றைத் தேடுகின்றோம் என நினைக்கின்றேன்...

      கீதா அக்கா அவர்கள் இதற்கு விளக்கம் சொல்லக்கூடும்...

      நீக்கு
    4. விளக்கம் சொல்லும் அளவுக்குக் கனவுகள்/பலன்கள் பற்றித் தெரியவில்லை. ஏனெனில் எனக்குக் கனவுகளே மனதில் நிற்பதில்லை. ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் காண மிக ஆவலோடு இருக்கிறீர்கள் என்பதே நான் புரிந்து கொண்டது! விரைவில் உங்கள் சந்திப்பு நடக்க அந்த ஆண்டவன் அருள் புரியட்டும். நெல்லை எங்க வீட்டுக்கு வந்தப்போ சம்பிரதாய உடையில் பஞ்சகச்சம் அவர் மனைவி மடிசாருடன் வந்தார்கள். எல்லா இடங்களுக்கும் அப்படிப் போவாரா என்பது தெரியலை.

      நீக்கு
    5. பாருங்கள்... உங்கள் வீட்டுக்கு வந்தது போல என் கனவிலும் பஞ்ச கச்சத்துடன் வந்திருக்கிறார் நெல்லை....

      நீக்கு
    6. @ துரை செல்வராஜூ

      முற்பிறவிகளை அறிந்து கொள்ள தியான முறைகள் உண்டா?.. ஆச்சரியம். அந்த சக்தி உங்களுக்கு கைவரப் பெற்றதில் வியப்பும் அதிகரித்தது.

      நீக்கு
    7. @ நெல்லை

      உங்களுக்கு ஏற்பட்டதாகச் சொல்லப்படும் இந்த கனவிற்கான காரணத்தை என்னால் யூகிக்க முடிகிறது, நெல்லை.

      நீக்கு
    8. @ துரை செல்வராஜூ

      உங்கள் கனவில் வந்த வெண்பட்டு பஞ்சக்கச்சம் என்ற வார்த்தை என்னை மிகவும் ஆகர்ஷித்தது, தம்பி.

      நீக்கு
  5. திரு ஆரூருக்கு அருகில் கீழ்வேளூர் என்றொரு தலம்.. இன்று கீவளூர் எனப்படுகின்றது..
    முருகப்பெருமான் சிவபூஜை செய்த திருக்கோயில்...

    இங்கே சென்று வணங்குங்கள்.. கிடைக்கும் என்ற விதி இருந்தால் முற்பிறவியைப் பற்றிய செய்திகள் அங்கே சிவ சந்நிதியில் உணர்த்தப் படும்..

    மன்னன் ஒருவன் முனிவரிடம் தவறு செய்ததால் கழுதையாகி விட்டான்... அவன் இங்கே வந்து வழிபடு முற்பிறவியை மீண்டும் அடைந்தான் என்பது ஐதீகம்...

    நேற்று தான் இந்தக் கோயிலைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்... இன்று எழுதும் படிக்கு பேறு பெற்றேன்...

    இங்கே இலந்தை மரம் தல விருட்சம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது புதிய செய்தி. ஆனால் கீவளூர் போனதில்லை. பக்கத்தில் அஞ்சுவட்டத்தம்மனைப் போய்ப் பார்த்திருக்கோம். கீவளூர் போவதற்கும் கொடுப்பினை இருக்கணும் போல!

      நீக்கு
    2. நன்றி அன்பு துரை. மேலும் மேலும் நற்செயல்கள் மட்டுமே செய்ய இறை அருள் இருக்கட்டும்

      நீக்கு
    3. கீதாக்கா!...
      தாங்கள் சொல்லியிருக்கும் அஞ்சு வட்டத்து அம்மன் குடிகொண்டிருப்பதே கீவளூர் சிவாலயத்தின் உள்ளே தான்!...

      சென்ற ஆண்டில் கீவளூர் ஸ்ரீகேடிலியப்பர் கோயிலைப் பற்றி சில பதிவுகள் தந்திருக்கிறேன்...

      நீக்கு
    4. அப்படியா துரை? உண்மையிலேயே இது புதிய செய்தி! கீவளூருக்கு அருகே தனிக்கோயில் அஞ்சுவட்டம்மன் குடியிருப்பது என்றே நினைத்திருந்தோம். பத்து வருஷங்களுக்கும் மேல் ஆவதால் சரியாக நினைவிலும் இல்லை. ஆனால் அஞ்சுவட்டத்தம்மன் எனத் தேடிக்கொண்டு போனோம். கேடிலியப்பரைப் பார்த்தோமா என்பது நினைவில் இல்லை! போன வருஷத்துப் பதிவைத் தேடிப் படிக்கிறேன். நன்றி தகவலுக்கு!

      நீக்கு
    5. @ துரை செல்வராஜூ

      முருக பெருமான் சிவபூஜை செயத திருக்கோயில்...

      நினைக்கவே மனம் தெய்வானுபவத்தில் பூரிக்கிறது. கந்தனின் பெருமையே பெருமை!

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரின் வாழ்விலும் நலம் பெருகி ஆரோக்கியமாகவும், மன மகிழ்வுடனும் வாழ வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. ஜீவி சாரின் கதை திக் திக் எனத் திகிலுடன் ஆரம்பித்துள்ளது. ஆனால் முன்னால் படித்தேனோ என்றும் தோன்றுகிறது. பார்ப்போம், அடுத்த வாரம் வரை காத்திருக்கணும் போல! ஆனால் இதே மாதிரிக் கதை படித்த நினைவு இருக்கு. அதைக் கண்டு பிடித்த விஞ்ஞானி திகைத்துப் போனதாகப் படித்த நினைவு இருக்கிறது. ஒரு வேளை அது சுஜாதா அல்லது வேறே யாரேனும் எழுதி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கீதா சாம்பசிவம்

      முற்பிறவிகளை--

      அதுவும் அவை பற்றிய தகவல்கள் நமக்கு எந்த வழியிலாவது கிடைக்கப் பெறின் நிச்சயமாக நீங்கள் சொல்கிற மாதிரி 'திக் திக்' தான்.

      இங்கு வெளிவரும் என் கதைகள் பெரும்பாலும் பத்திரிகைகளில் பிரசுரமானவை தாம். என் சிறுகதைகள் தொகுப்பாகவும் வெளிவந்திருக்கின்றன. சில கதைகளை என் பதிவுகளிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஆதலால் அவற்றை நீங்கள் படித்திருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. அவற்றை வாசிக்காதவர்களுக்கு எபியின் வாயிலாக படிக்கக் கிடைக்கிறது என்பதிலும்
      இந்தப் பகுதியின் முதல் கதையை அன்பு ஸ்ரீராம் என்னிடம் கேட்டு வாங்கி வெளியிட்டார் என்பதில் எனக்கும் பெருமை தான்.

      நீக்கு
  8. ஸ்ரீராம் உடல் நலம் தானே, நாலு நாட்களாகப் பார்க்க முடியலை. வேலை மும்முரமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதேதான் நேற்றும் நான் கேள்வியாக கேட்டிருந்தேன். அதற்கு பதிலளித்திருந்த கெளதமன் சகோதரருக்கு உடனே வந்து பதில் சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும்.

      ஸ்ரீராம் சகோதரரை எங்குமே பார்க்கவில்லையே ஏன் அப்படி என்ற கவலையில் நேற்றும் கேட்டிருந்தேன். பணிச்சுமைதான் என நினைக்கிறேன்.

      நீங்கள் அனைவரும் வாட்சப் குழுமத்தில் இருப்பதால் உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைத்தேன். இப்போது உங்கள் கேள்வியும் ஆச்சரிய மூட்டுகிறது.!

      நீக்கு
    2. ஶ்ரீராம் ரொம்பவே பிசியா இருக்கார் போல! பதில் இல்லை. நல்லபடியாக உடல் நலத்தோடு இருந்தால் சரிதான்!

      நீக்கு
    3. நானும் அதைதான் விரும்புகிறேன். இன்று பார்த்து கெளதமன் சகோதரரும் இன்னமும் காணோம். அவர் வருகை சற்று ஆறுதலை தரும்.

      நீக்கு
    4. இப்போல்லாம் இந்தியர்கள் இருக்கும் பகுதியில் கமலா ஹாரிஸ் (அமெரிக்க துணை அதிபராக போட்டியிடுபவர்) தானும் இந்தியர்தான் என்று காட்டிக்கொள்வதைப் போல, இப்போ எங்கள் பிளாக்கிலும் பின்னூட்டம் போட ஆரம்பித்துவிட்டாரா என்று நினைத்தேன்.

      இல்லை.. இது நம்ம கமலா ஹரிஹரன் மேடம். வாழ்த்துகள்.

      நீக்கு
    5. நன்றி சகோதரரே உங்கள் வாழ்த்துகளுக்கு.

      நானும் இப்படித்தான் எப்போதும் இல்லாவிடினும், அவ்வப்போது எம்பியின் வாசகி என்ற கணக்கில் அனைவருக்கும் பின்னூட்டங்கள் போட்டு வருகிறேன். சில பல சமயங்களில் அதை யாரும் கண்டு கொள்ளாமல் போவது என்னுடைய துரதிர்ஷ்டம்.

      நீக்கு
    6. தவறாக பிழை வந்து விட்டது. எ. பி. என திருத்தி படிக்கவும்.

      நீக்கு
    7. இன்று காலை முதல் மதியம் வரை வீட்டு வேலைகளில் பயங்கர பிஸியாக இருந்தேன். புதன் பதிவை சற்றேறக் குறைய தயார் செய்து பதிவேற்றலாம் என்று வந்தால் நெட் பிரச்சனை. மதியத்திலிருந்து மாலை வரை நெட் இணைப்பு பழுதுபட்டு காணாமல் போய்விட்டது. இப்போதான் புதன் பதிவை தயார் செய்து வெளியிட ஏற்பாடு செய்தேன். ஸ்ரீராம் விரைவில் திரும்புவார். உடல் களைப்பாக இருப்பதால் தற்சமயம் நெட் / சமூக தளங்கள் யாவற்றிலிருந்தும் விலகி ஓய்வு எடுத்து வருகிறார். யாரும் தொந்தரவு செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். விரைவில் திரும்புவார். கவலை வேண்டாம்.

      நீக்கு
    8. //சில பல சமயங்களில் அதை யாரும் கண்டு கொள்ளாமல் போவது // - இல்லை கமலா ஹரிஹரன் மேடம். எபியில் பின்னூட்டம் இடுபவர்கள் ஓரிரு நாட்கள் வரவில்லை என்றாலே தேடுவார்கள். பெரும்பாலும் அனைத்து பின்னூட்டங்களுக்கும் இங்கு மறுமொழி பார்க்கிறேனே. நீங்கள் சொல்வது அதிசயமாக இருக்கிறது.

      நீக்கு
    9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    10. வணக்கம் கௌதமன் சகோதரரே

      எங்கள் குழப்பம் தீர தாங்கள் வந்து அனைத்திற்கும் விபரமான பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. ஸ்ரீராம் சகோதரருக்கு உடல் நலம் தற்சமயம் எப்படி உள்ளது? விரைவில் அவர் பதிவுகளுக்கு பதில்கள் இட வருவார் எனச் சொன்னது ஆறுதலை தருகிறது அவர் பூரண நலமடைந்து வர இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். அவரையும் மிகவும் விசாரித்தாக கூறவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    11. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

      உடன் வந்து பதில் தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.

      /பெரும்பாலும் அனைத்து பின்னூட்டங்களுக்கும் இங்கு மறுமொழி பார்க்கிறேனே. நீங்கள் சொல்வது அதிசயமாக இருக்கிறது. /

      எப்போதும் அல்ல.. சில நேரங்களில் என்று நான்தான் சொல்லியிருக்கிறேனே
      இன்று உங்களின் பதில் மகிழ்வை தந்தது. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  9. ஜீவி சாரின் கதை,
    புதிதாக இருக்கிறது. அடுத்தாப்புல என்ன நடக்குமோ என்ற
    ஆவல் வருகிறது.
    நிஜமாகவே இப்படி ஒரு கணினி வந்தால் நன்றாகத் தான் இருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ வல்லிசிம்ஹன்

      //நிஜமாகவே இப்படி ஒரு கணினி வந்தால் நன்றாகத் தான் இருக்கும்..//

      நிகழ் வாழ்க்கையில் நடந்த சில செயல்களை மனசில் ஓட்டிப் பார்க்கவே பலருக்கு சங்கடமாக இருக்கும் என்ற நிலையில் முற்பிறவி தரிசனங்கள் வேறா என்று ஒருவகையில் திகைப்பாக இருக்கும் தான்.

      முற்பிறவி பற்றி தெரிந்து கொள்வதில் ஒரு 'த்ரில்' இருக்கிறது என்பது மட்டும் உண்மை. அது நிகழ் வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பதும் நிஜம் தான்.

      இந்த மாதிரியான நிஜங்களுக்கும் நமது புராண இதிகாச நிகழ்வுகளுக்கும் நெருங்கிய பிணைப்பு உண்டு என்பதினால் இததகைய கண்டுபிடிப்புகளினால் எதிர்காலத்தில் இந்திய தத்துவ ஞானத்தின் செல்வாக்கு உலக அரங்கில் மேலும் பெருமை கொள்ளும் என்பது மட்டும் உறுதி.

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் எல்லோரின் நலனுக்கும் இறை அருள் துணை நின்று பாதுகாக்க நானும் மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன், சகோதரி.

      நீக்கு
  11. பலவகைக் கதைகளில் இன்று கைதேர்ந்த சிற்பி மூலம் ஒரு ஃfantacy கதை எனக்கு மிகவும் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, ஜிஎம்பீ ஐயா..

      தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. ஃfantacy கதைகளுக்கு இயல்பாகவே நாம் நம்மை மறந்து திகைக்கிற கற்பனையின் வீச்சு உண்டு. தாங்கள் சொல்வது உண்மை தான். இந்த மாதிரி கதைகளை வாசிக்க பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும் தான். இதில் மாறுபட்ட கருத்து இருக்காது என்றே நினைக்கிறேன்.

      நீக்கு
  12. கதையின் போக்கு ஆவலைத் தூண்டுகிறது தொடர்கிறேன்.

    கதையில் இன்றைய காலத்தில் நிகழும், அல்லது நிகழப் போகும் சாத்தியக்கூறுகள் உண்டுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, தேவகோட்டையாரே!

      எதற்காக எதை எழுதுகிறேன் என்று என்னை அறிந்து கொள்வதில் உங்களுக்கு கூர்மையான பார்வை வாய்த்திருப்பதை பல சந்தர்ப்பங்களில் அறிந்தவன் என்பதில் எனக்கும் சந்தோஷமே. தொடர்ந்து வர வேண்டுகிறேன். நன்றி.

      நீக்கு
  13. பல நேரங்களில் வேடிக்கை தரும் இதுபோன்ற கதைகள், வாசிக்க மட்டும் சுவாரஸ்யமானவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, டி.டி.

      வாசிப்பதை நமது விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து விட்டால் வாசிக்கும் எல்லா படைப்புகளுமே நம்மை சுவாரஸ்யப்படுத்தும் தான். இதையும் வாசிக்கலாம், அதையும் வாசிக்கலாம் என்று நம் விருப்பங்கள் வேறுபடும் பொழுது தான் அதற்கேற்ப நம் சுவாரஸ்யங்களும் வேறு படுகின்றன, இல்லையா? எல்லா நேரங்களிலும் எல்லா சுவாரஸ்யங்களும் நம்மை ஆளும் இரகசியம் இது தான்.

      நீக்கு
  14. விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. ஆவலோடு அடுத்த செவ்வாய்க்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் எதையுமே தொய்வில்லாமல் தொடரும் கடப்பாடும் நமதாகி விடுகிறது. காத்திருப்பதற்கு நன்றி, பா.வெ.

      நீக்கு
  15. //மனிதர்களை அதன் முன் நிறுத்தி, அவர் சம்பந்தப்பட்ட தகவல்களை உட்செலுத்தினால் தன் முன் நிறுத்தப்பட்ட மனிதரின் தொடர் பிறவி நிஜங்களைப் பிட்டு பிட்டு வைக்குமாம். முந்தைய பிறவிகளில் அவர்கள் என்னவாக இருந்தார்கள் என்பதைத் துல்லியமாக எடுத்துச் சொல்லும் கம்ப்யூட்ராம். //

    முந்தைய பிறவிகளின் என்னவாக இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள ஆசைபடுபவர்களுக்கு உதவும் போலவே!

    படிக்க விறு விறுப்பாய் இருக்கிறது.
    அடுத்த பதிவை படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய பிறவியில் என்னவாக இருந்தோம் என்பதனை அறிய ஆசைப்படாதோரும் இருப்பார்கள் என்று நினைப்பதற்கில்லை. அதற்கு ஆசைப்பட்டுப் பின் வருத்தப்படுவாரும், மகிழ்ச்சி கொள்வாரும் இருப்பார்கள் என்பது வேண்டுமானாலும் இருக்கலாம்.

      'முற்பிறவியாவது, வெண்டைக்காயாவது?.. எல்லாம் கயிறு திரிக்கும் சமாச்சாரம்' என்று ஒரேயடியாக புறக்கணிப்போரையும் ஏதாவது ஒரு தருணத்தில் அறிந்து கொள்ள ஆசைப்பட வைக்கும் சமாச்சாரம் இது
      என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

      அடுத்த பதிவு அடுத்த செவ்வாய் தானே? இதோ வந்து விடும். திங்கற நாளுக்கு அடுத்த நாள் இதன் தொடர்ச்சியை வாசித்து மகிழலாம், கோமதிம்மா.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    சகோதரர் ஜீவி அவர்கள் எழுதிய கதை நன்றாக விறுவிறுப்பாகச் செல்கிறது. கற்பனை கதை என்றாலும் கண்ணெதிரே காட்சிகள் நடப்பது மாதிரியான பிரமை ஏற்படுகிறது. அடுத்த பகுதியை விரைவில் காண மனமும் எதிர்பார்க்கிறது. நாட்கள், அதன் நேரங்கள் விரைவில் ஓடி அடுத்த செவ்வாயின் கே.வா.போ பகுதி கண்ணில் தெரியுமாறு ஒரு கணினியை யாராவது கண்டு பிடிக்க கூடாதா என்ற பேராசை எழுகிறது. அந்தளவுக்கு கதையை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதன் நேரங்கள் விரைவில் ஓடி அடுத்த செவ்வாயின் கே.வா.போ பகுதி கண்ணில் தெரியுமாறு// - என்ன கமலா ஹரிஹரன் மேடம்... அந்த மாதிரி கணிணியில் கதையின் கடைசிப் பகுதி தெரியும்படி, அடுத்த செவ்வாய்க்கு அடுத்த செவ்வாய் கண்ணில் தெரியுமாறு என்று எழுதுவீர்கள் என்று பார்த்தால்.

      நீக்கு
    2. @ Kamala Hariharan

      //அடுத்த செவ்வாயின் கே.வா.போ பகுதி கண்ணில் தெரியுமாறு ஒரு கணினியை யாராவது கண்டு பிடிக்க கூடாதா... //

      ஆஹா. Timely Realise சகோதரி.

      வருகிற பகுதியையும் நீங்கள் ரசிப்பீர்கள். ஆதம்பூர்வமான அனுபவிப்புக்கு நன்றி, சகோ.

      நெல்லையின் அவருக்கு வழக்கமான, பழக்கமான கடைசிப் பகுதியை வாசித்து விடும் ஆசையைப் பார்த்தீர்களா?..

      நீக்கு
    3. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

      /அந்த மாதிரி கணிணியில் கதையின் கடைசிப் பகுதி தெரியும்படி, அடுத்த செவ்வாய்க்கு அடுத்த செவ்வாய் கண்ணில் தெரியுமாறு என்று எழுதுவீர்கள் என்று பார்த்தால்./

      ஹா ஹா. அப்போதைக்கு அப்படித் தோன்றவில்லை. இரண்டாவதாக எதையும் (எழுத்துக் கலையையும்) படிப்படியாக ரசித்தால் அதுவே ஒரு அழகுதான்..அப்படியே கடைசி பகுதியை படித்து முடிவை தெரிந்து கொண்டாலும், நடுவில் என்னவாயிற்றோ என்ற எண்ணம் மீண்டும் வந்து மேலோங்குவதை தடுக்க முடியாது. கதைகளை முறையாக ரசித்து முழுவதுமாக படித்தால்,நினைவிலும் தங்கும் வாய்ப்பு கொஞ்சமாவது இருக்கும் எனவும் நம்புகிறேன்.

      நான்கைந்து வார தொடர்கதை என்றால் வெளியீட்டுக்கு பின் மொத்தமாக படித்து விடுவது சிலருக்கு பிடிக்கலாம். அதேப் போல தொடரை ரசித்து எப்போது அதன் அடுத்த பகுதி வருமென ஆவலோடு, வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் காத்திருப்பவர்களும் இருக்கின்றனர். இது ரசிப்பவர்களின் மனநிலையை பொறுத்தது.

      நெல்லை சகோவும் ஒரு தொடரை முழுதாக படிப்பதுதான் தனக்கு விருப்பமானது என்பதை எப்போதோ கூறியிருப்பதாக நினைக்கிறேன். நீங்களும் இது விஷயத்தில் அவரைப்பற்றி என்னை விட நன்கு அறிந்திருப்பீர்கள்தானே... ஜீவி சகோ..
      கருத்துக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  17. அன்பின் ஜீவி ஐயா...
    வித்தியாசமான கதைக்களம்...
    அருமையாப் போன கதை 'வளரும்' என்றது காத்திருக்க வேண்டுமே என்று என்ன வைத்தது.
    அருமை.

    அலுவலகம் வந்திருப்பதால் கருத்திடலில் பிரச்சினை இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை இங்கு பார்த்ததில் மமிழ்ச்சி, குமார். பாம்பின கால் பாம்பறியும்.

      அடுத்த செவ்வாய்க்கும் அலுவலகம் வரும் பொழுது இங்கேயும் வந்து வாசித்து பின்னூட்டமிட்டு விடுங்கள். நன்றி.

      நீக்கு
  18. அன்பின் ஜீவி அண்ணா..

    வணக்கம்..
    ஆத்மா ஒன்று அடுத்த பிறவியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதை அம்மா காத்திருக்கிறாள் என்று முன்பே எபியில் எழுதியிருக்கிறேன்...

    தற்சமயம் முன்பிறவி அதில் செய்த தவறு அதற்கான சாபம்/தண்டனை என்று உண்மை நிகழ்வை எழுதி -

    அந்தக் கதை வரிசையில் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  19. அப்படியா? அறிந்ததில் மிகவும் சந்தோஷம். தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    எந்த உண்மை நிகழ்வையும் கதைப்படுத்துதல் தான் சுவாரஸ்யம்.

    டிடி சொன்னது தான் இந்த மாதிரியான கதைகளில் வாடிக்கையான நிகழ்வு. அந்தத் தடம் பதியாமல் அறிவியல் பூர்வமாக அலசும் பேறு பெற்றால் எதையும் சுவாரஸ்யமாக்கலாம்.

    பதிலளிநீக்கு
  20. இந்தக் கதையைப் பாராட்ட பல ஜென்ம வாழ்க்கையில் நம்பிக்கை இருக்க வேண்டும். கோடிக்கணக்கானோர்ர்க்கு உண்டுதான். என்னைப்போல் ஒரு சிலருக்கு அந்த நம்பிக்கை இல்லததை "சாபம்"னு கூட சொல்லிக்கலாம்.

    கணிணி சொல்வதை சில ஜோதிடர்கள்கூட சொல்வதுண்டு. அதை நம்புபவர்களும் உண்டு. எனக்குத் தெரிய ஒரு வைட் அம்மா, இதுபோல் நம்பிக்கை உள்ளவர். அவர் தோழி ஒருவர் கடந்த காலத்தை பத்தி எல்லாம் சொல்வார்னு இவர்தான் என் கடந்த காலத்தில் எனக்கு தோழி, இவர்தான் என் சித்தினு எதையாவது சீரியஸாக சொல்லுவார். நல்ல தோழி, சிரித்தால் கோவிச்சுக்குவாரேனு சிரிக்காமல் அவர் சொல்வதை கஷ்டத்துடன் கேட்பது உண்டு. நம்பிக்கை இல்லாத ஒரு விசயத்தை மெனக்கட்டு கேட்பதே "உண்மையற்ற போலித்தனம்" தானே? என்கிற உறுத்தலுடன். இருந்தாலும் நாகரிகம், அல்லது "பொலைட்னெஸ்" கருதி கேட்கிறோம். நம்பிக்கை இல்லாத ஒரு கான்சப்ட்டை கருவாக எழுதிய கதையை பாராட்டுவதும் போலித்தனம் தான் என்பதால்..நான் விட்டுவிடுகிறேன்..

    இதை சொல்லாமேலே போயிருக்கலாம்தான். வந்தாச்சு, வாசிச்சாச்சு, இதை வாசிக்காததுபோல் போவதும் போலித்தனம்தானே? சொல்லிடலாமே னுதான்.. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம்பிக்கை இல்லாத ஒரு விசயத்தை மெனக்கட்டு கேட்பதே "உண்மையற்ற போலித்தனம்" தானே?// - வருண்... உங்க பாயிண்ட் சரிதான். நானும் பலப் பலருடைய இடுகைகளைப் படிக்கும்போது, அந்த இடுகையின் கருத்துக்கு உடன்பட மாட்டேன். அதை ஒரு வரில சொல்லிவிட்டுப் போயிடுவேன். இன்னொருவரிடம் நம்பிக்கை/நம்பிக்கையின்மையை விதைப்பதே பெரும்பாலும் பயனுள்ளதாக இருக்காது.

      ஆனா வருண்...உண்மையிலேயே கடந்த காலம் என்பது உண்மை. விஞ்ஞான பூர்வமாகவும் நடந்த நிகழ்ச்சிகளை ஆதாரத்துடன் (அல்லது அது எப்படி? என்ற ஆச்சர்யத்தில்) எழுதிவைத்துள்ளார்கள். தில்லி பகுதியில் இருந்த பெண், சம்பந்தமே இல்லாத உ.பி. ஊரில் உள்ளவரை முற்பிறவி கணவன் என்று ஐடெண்டிஃபை பண்ணி எல்லாவற்றையும் விவரித்தது...இன்னும் பல நிகழ்ச்சிகள்).

      Just for your interest, Vijay TV, with the help of somebody conducted late night program on முற்பிறவி. அவங்களை தூக்கத்தில் ஆழ்த்தி என்னவா இருந்தாங்க என்றெல்லாம் ஒவ்வொரு பிறவியா போக வைத்து அவங்க சொல்வதைவைத்து அந்த நிகழ்ச்சி. கொஞ்சம் fascinating ஆக இருந்தது (ஒருத்தர் பறவையா இருந்தது, நடிகை பாபிலோன் 'அந்த' வாழ்க்கை வாழ்ந்தது என்பது போல).

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. வருண், வாங்க.. பார்த்து ரொம்ப நாளாச்சு..

      கதை எழுதறவனுக்கு ஒரு விஷயத்தை வைத்து கதை பண்ணுவது தான் வேலையாகிப் போகிறது. அந்த விஷயத்தில் அவன் கொண்டுள்ள விஷயத் தெளிவு தான் அந்தப் பொருளை வைத்து கதை எழுதுவதற்காக ஆற்றலாகிறது. அவ்வளவு தான்.

      அந்தக் கதையை வாசிக்க நேர்ந்தோர் கொள்ளும் அபிப்ராயங்கள் வாசிக்கிறவர்
      சம்பந்தப்பட்டதாகி விடுகிறது. ஆக, எது குறித்தும் அபிப்ராயம் கொள்வது என்பது தனி நபர் சம்பந்தப்பட்டதாகி விடுகிறது.

      உதாரணத்திற்கு சந்திர மண்டலத்தை நிலைக்களனாக வைத்து ஒரு கதை எழுதுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த கதையின் முதல் வரி--

      'சந்திரனில் நாங்கள் வந்து இறங்கிய பொழுது நல்ல குளிர் தான். பத்தே நிமிட பயணத்தில் மூன் ஸ்ட்ரீட் வந்து விட்டோம். மூன் ஸ்ட்ரீட்டில் அந்த பகல் தாண்டிய நேரத்திலும் நல்ல நிசப்தம். நண்பனின் வீட்டைக் கண்டுபிடிப்பது சிரமமாக இல்லை. வீட்டின் முகப்பு உச்சியில் உதய சூரியனின் சிம்பல் பெரிதாகப் பொறிக்கப்பட்டிருக்கும் என்று விவரமாகச் சொல்லியிருந்தான்...'.

      -- என்று கதையைப் படிக்க ஆரம்பித்தீர்கள் என்றால் அது பாட்டுக்க வெண்ணை வழுக்கலில் போய்க் கொண்டே இருக்கும். சந்திரனில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா, இல்லையா என்ற ஞானங்கள், அது பற்றி இது காறும் கொண்டுள்ள நம்பிக்கைகள் என்ற எல்லைகளையெல்லாம் எல்லாம் புறக்கணித்து விட்டு கதையில் ஆழ்ந்து விடுவீர்கள்.

      இது தான் பொதுவாக கதைகளுக்கான இலட்சணங்கள் கூட. வாசிப்பவரை
      இந்தண்டை அந்தண்டை கவன ஈர்ப்புகளை அலட்சியம் செய்ய வைத்து வாசிக்கும் கதையின் பிடியில் பத்து-- பதினைந்து நிமிடங்கள் சிக்க வைத்தால் போதும். அது சிறப்பான சிறுகதையாய் அமைந்து விடும் என்பது உறுதி.

      நீக்கு
    4. **கவன ஈர்ப்புகளை அலட்சியம் செய்ய வைத்து வாசிக்கும் கதையின் பிடியில் பத்து-- பதினைந்து நிமிடங்கள் சிக்க வைத்தால் போதும்.**

      போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. :)
      ---

      ***ஆனா வருண்...உண்மையிலேயே கடந்த காலம் என்பது உண்மை.***

      நெல்லைத் தமிழர்: "உண்மை" "பொய்" என்பதெல்லாம் அவரவர் நம்பிக்கையை பொறுத்ததே. உண்மை எது பொய் எது என்று அனலைஸ் செய்வது ஒரு தனிப்பட்ட மனிதரின், அனுபவம், சூழல், புரிதல், முக்கியாக நம்பிக்கை.

      உங்களுக்கு கொஞ்சம் விளக்குகிறேன். நம்மில் ஒரு சிலருக்கு ஒரு சில சுவைகளை உணர தேவையான என்சைம் அல்லது புரதம் இருப்பதில்லை. கசப்புத் தன்மையை உணர ஒரு என்சைம் இருக்க வேண்டும். நம்மில் ஒரு சிலருக்கு அந்த என்சைம் சுரப்பதில்லை. அந்த ஒரு சிலருக்கு கசாயம் "கசப்பு" என்றூ ஆயிரம் பேர் "உண்மையை" உணர முடியாது. அவருக்கு அது கசப்பாக இருக்காது. என்னென்றால் அவருடைய உடலில் அந்த என்சைம் இயற்கையாகவே சுரப்பதில்லை. கசப்பு என்று சொல்வது உண்மைதான். கசக்கவில்லை என்று ஒரு சிலர் சொல்வதும் உண்மைதான். உண்மையில் கசாயம் கசப்பா இல்லையா என்றால் அது கேட்கும் ஆளைப் பொறுத்து. :)

      அந்தக்காலத்தில் க்சாயம் கசக்கவில்லை என்று சொன்னவன் பைத்தியக்காரன். அவன் உண்மை சொன்னதுக்கு அவனுக்கு அந்தப் பட்டம். அவன் 1000 பேர் கசக்குதுனு சொல்றாங்க, நம்மளும் சொல்லிடுவோமெதுக்கு வம்புனு சொல்லி இருந்தால் அவன் பைத்தியம் அல்ல! ஏன் என்றால் மரபியல், ஜெனடிக்ஸ் புரிதல் எல்லாம் அந்தக் காலத்தில் கிடையாது. மெஜாரிட்டி மைனாரிட்டியை தட்டி கழித்துவிடுவார்கள்! :)

      நீக்கு
  21. டைம் மெஷினில் ஏறி முந்தைய வருடங்களுக்குச் செல்வது போல, கணினி வழி இரண்டு தலைமுறை முன்னர் சென்று பார்க்கப் போகிறார்! என்ன நடக்கப்போகிறது.

    வில விஷயங்கள் கற்பனை செய்வதற்கு நன்றாகவே இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. //சில விஷயங்கள் கற்பனை செய்வதற்கு நன்றாகவே இருக்கிறது.//

    ஆமாம், வெங்கட். அன்ன பட்சி பற்றி இலக்கியங்களில் பேசப்பட்டிருக்கு. ஆனால் நம் தலைமுறையின்ர அதைப் பார்த்ததே இல்லை. ரவிவர்மா எப்படி தன் கற்பனையில் அந்த பட்சியை ஓவியமாக்கினாரோ அப்படித்தான் அன்ன பட்சி இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த மாதிரி தான்.

    கற்பனையின் அரசாட்சி அந்தந்த மனிதரின் மன வளத்திற்கேற்ப, அனுபவங்களுக்கு ஏற்ப செழுமை கொண்டிருக்கும். கற்பனையிலேயே மகாபாரதப் போரை கண்டு களிக்கலாம்; அல்லது வெகுண்டு எழலாம். அது தனிநபரின் வாசிப்பு அனுபவ அடிப்படையில் இருக்கிறது. மகாபாரதப் போர் நிகழ்ந்ததா, இல்லையா என்பதெல்லாம் அதற்கு அப்பாற்பட்ட விஷயங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!