13.8.20

யார் நீ?

அந்த மாலை 1/4
ஸ்ரீராம் 


"உங்க ரசனையைதான் பார்க்கறேனே...   எனக்கு நீங்க பொண்ணு பார்க்க வேணாம்...   பழம் பழமா பார்ப்பீங்க..   நானே பார்த்துக்கறேன்...  இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்..."

வினோத் சத்தமாக பேசினான்.

"இப்படியே சொல்லு...  நாலு வருஷமா கேட்டுக்கிட்டிருக்கோம்...   பொண்ணு கிடைக்கறது அவ்வளவு சுலபம்னு நினைச்சியா?  இப்படியே போனா கல்யாணமே ஆகாதுடா..."  மூர்த்தியும் எரிச்சலுடன் கொஞ்சம் சத்தமாகவே பேசினார்.  அது அவர் இயல்புக்கு மாறானது.

"அப்படியே இருந்துட்டுப் போறேன் போ..."  

ஸ்வாமி முன் அமர்ந்து ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருந்த ரேணு மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அப்படியே கணவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஸ்லோகத்தில் கவனமானாள்.

"எப்படியோ உன் அக்கா இந்துவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டோம்...  உங்க ரெண்டு பேரோட பெரிய பாடா இருக்கு...   ச்சே...."

மூர்த்தி வெளியேறினார்.  வாரத்தில் மூன்று நாட்கள் அவர் அந்தத் தெரு முனையில் இருக்கும் உணவகத்துக்குச் செல்வார்.  அங்கு கிடைக்கும் பொங்கலும், இட்லி சாம்பாரும் அவருக்கு அவர் பழைய நாட்களை நினைவு படுத்துகிறதாம்.  அங்கே ஆற அமர அமர்ந்து சாப்பிட்டு விட்டு மெதுவாகத்தான் வருவார்.  ஓய்வுபெற்று ஒரு வருடம் ஆன நிலையில் இது சமீப காலங்களின் வழக்கம் ஆகிப் போயிருந்தது.

அதுவும் இது மாதிரிப் பேச்சுகள் சமீப காலமாய் வீட்டில் அதிகமாகி இருந்தன.  'அவர்கள் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள்.  நீங்கள்தான் பார்க்கவேண்டும், முடிக்க வேண்டும்' என்று நண்பர்களும் உறவினர்களும் சொல்லிக் கொண்டிருக்க, அவர்களுக்கு தன் வீட்டின் நிலை தெரியவில்லையே என்று நினைத்துக் கொள்ளுவார் மூர்த்தி.  பிடிவாதக்கார மகன்.  'உனக்கு முடிச்சுட்டுதான் சின்னவனுக்குப் பார்க்கவேண்டும்' என்று சொன்னால் கூட, 'ஓ..  அப்படி எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறீர்களா?'  என்பவனை என்ன சொல்வது?

இந்துவிடம் சொல்லிப் பேசிப்பார்க்கச் சொன்னார்.  அவளும் முயன்று பார்த்து "அப்பா...   பேச்சை எடுத்தாலே கத்தறான்.." என்று விட்டாள்.

ஹோட்டல் வந்து விட்டது.  உள்ளே நுழையும்போதே கல்லாவில் இருப்பவர் புன்னகைத்து, தலையசைத்து வரவேற்பை வெளிப்படுத்தினார்.  உள்ளே பார்த்தார்.



ஏ ஸி அறையினுள் நுழைந்து இருப்பதிலேயே கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டார்.  அப்படி அமர்ந்தால் பரிமாறுபவர் மெதுவாகத்தான் அவர் இருப்பிடம் வருவார்.  அது அவர்களுக்குள் உடன்பாடு.  மெதுவாய் யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்.  வருபவர்கள் போகிறவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்.  சமயங்களில் கையில் டைரியோடு வருவார்.  எதையாவது எழுதிக் கொண்டிருப்பார்.  

உடனே செல்ல வேண்டும் என்றால் முன்னாலேயே அமர்ந்து சாப்பிட்டுவிட்டுக் கிளம்புவார்.   ஆனால் அங்கு எந்த வேளைகளிலும் நெருக்கும் கூட்டம் எப்போதுமே இருக்காது. 

இவர் அமர்ந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் உள்ளே நுழைந்த ஒரு இளம்பெண் அங்குமிங்கும் பார்த்துவிட்டு, போன் பேசியபடியே இவர் இருக்கைக்கு வந்தாள்.  சின்ன குரலில் பேசியபடியே எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.  அழகாக இருந்தாள்.

அவள் வந்ததால் அருகே வந்தார் சர்வர்.  வந்தவள் ஃபோனை அமர்த்திவிட்டு "ஸ்டார்ட்டர் என்ன இருக்கு?" என்று கேட்க, அவளிடம் மெனு கார்டை கொடுத்துவிட்டு இவரைப் பார்த்தார் சர்வர்.  

"சாம்பார் இட்லியா?  கொண்டுவந்து விடவா?"  

தலையாட்டினார் மூர்த்தி.  சர்வர் அகன்றார்.

நேரம் ஊர்ந்தது.

அவள் ஓரிருமுறை இவரைப் பார்ப்பதும், ஏதோ யோசிப்பதுமாக இருந்தாள்.  ஏதோ ஒரு தவிப்பு அலலது ஆயத்தம் தெரிந்தது அவளிடம்.  வேறு இருக்கைக்கு மாறலாமா என்று யோசித்தார் மூர்த்தி.  நல்ல யோசனை என்று தோன்றவே எழ ஆயத்தமானார்.

இவரைப்பார்த்து புன்னகைத்தாள் அந்தப்பெண்.  "குட் ஈவினிங் அங்கிள்...   ரொம்பக் கவலையாய் இருக்கீங்க போல.."

'அதைப்பற்றி உனக்கென்ன' என்பது போல  ஆச்சர்யத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தவர் நெற்றியைச் சுருக்கினார்.  "என்னையா கேட்கிறாய்?" என்றது நெற்றிச் சுருக்கம்.

"என் பெயர் வினோதினி அங்கிள்...  இன்ஃபோசிஸ்ல வேலை பார்க்கறேன்.  இப்போதைக்கு 70,000  தர்றாங்க..."

"இதை எல்லாம் ஏன் என் கிட்ட சொல்றீங்க?"

"நீன்னே சொல்லலாம் அங்கிள்...     சின்னப் பொண்ணுதான் நான்.."

அதற்குள் சர்வர் அவளுக்கு அவள் கேட்ட மஷ்ரூம் சூப் கொண்டுவந்து கொடுக்க, அவளை அதை எடுத்து ஸ்பூனால் அளைந்தாள்.  எதிரில் இருந்த சிறு டப்பாவிலிருந்து பெப்பர் எடுத்து சூப்பில் தெளித்துக்கொண்டாள்.

'பெயர் விநோதினியா?  என் பையன் பெயர் வினோத்...  என்ன பொருத்தம்! இப்படிப் பேர் இருந்தாலே அனா பினாவா இருப்பாங்க போல'

"ஸாரி அங்கிள்...   அதிகப்ரசங்கி போல பேசறேனா?  உங்க ஏகாந்தத்தைக் கெடுக்கறேனா?"  புன்னகையுடன் கேட்டாள் அந்தப் பெண்.  

ஒன்றும் பேசாமல் அவளை பார்த்துவிட்டு சர்வர் வருகிறாரா என்று பார்த்தார் மூர்த்தி.  'ஏதாவது ஏமாத்துப் பொண்ணோ?  பணம் கிணம் பறிப்பாளோ...   ஏதாவது ஏடாகூடம் ஆகிடுமோ...'

இட்லி சொல்லாமல் கிளம்பி இருக்கலாம் என்று தோன்றியது மூர்த்திக்கு.  இப்போதான் என்ன போச்சு?   கிளம்பி சர்வரிடம் போய் வேண்டாம்னு சொல்லிட்டு நடந்துடலாம்.  மறுபடியும் எழ நினைத்தார்.

அதற்குள் சிறு இட்லிகளை சாம்பாரில் குளிப்பாட்டிக் கொண்டுவந்து வைத்து விட்டு, 'வடை வேணுமா?' என்று கேட்டு விட்டு ஒரு அதிருப்தியான மறுப்பை பதிலாய்ப் பெற்றுக்கொண்டு நகர்ந்தார் சர்வர்.



ஸ்பூனால் இட்லிகளை யோசனையுடன் மெதுவாய்ச் சிதைத்து சாம்பாரில் ஊறவிட்டார் மூர்த்தி.  ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.

தொடர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் பார்வை சங்கடப்படுத்தியது.  சாம்பாரில் ஊறிய இட்லியின் ருசி கூட மனதில் பதியவில்லை.

"வினோத் ரொம்பப் படுத்தறானா அங்கிள்? 

சட்டென நிமிர்ந்தார் மூர்த்தி.  "யார் நீ?"

[அடுத்த வாரம்.....]

==============================================================================================

கவிதை ஒன்று!


ராஜஸ்தான் வெட்டுக்கிளிகளாய்
சுற்றிப்பறக்கின்றன 
எண்ணங்கள் மனதில்..

அதை
எழுத நினைக்கும்போது
ஊரடங்கு நேரத்தில்
ட்ரோன் கண்டு ஓடிஒளியும் 
விளையாட்டுப் பிள்ளைகளாய்
மறைந்துபோகின்றன வார்த்தைகள்

கொட்டிக்கிடக்கும் எழுத்துகளிலும்
வார்த்தைகளிலும் 
என்
எண்ணங்களை வடிவமாக்க
பொறுக்கி எடுத்துப் 
போராடினாலும் 
தொடர்பறுந்துபோன தொலைக்காட்சி போல
வெற்றுத்திரையாகவே 
இருக்கிறது மனவெளி.

==============================================================================================

இது ஜோக் என்றும் கொள்ளலாம்.  அரசியல் கார்ட்டூன் என்றும் சொல்லலாம்!



இதுவும் அங்ஙனமே...!


ஆனா  இது நிஜமாகவே ஜோக்..   ரசிக்கக்கூடிய ஜோக்!


இங்கே போயிருக்கிறீர்களா" என்று சாவி ஒரு தொடர் எழுதினார்.  அதற்கான கோபுலு ஓவியம்..  ஓவியத்தை விளக்கமாகப் பார்த்து முடிக்கவே நேரமாகும்!  எவ்வளவு காட்சிகள்!


இன்னொரு தொடர்.. இதுவும் சாவி, கோபுலு இணையில்...   தலைப்பிலேயே ஓவியர் பெயரும் இடம்பெற்றிருக்கிறது பாருங்கள்!



===============================================================================================



சிந்தனை
ரமா ஸ்ரீநிவாசன் 

அமைதியான மனம், எண்ண அலைகள் அற்ற நிலை;
ஆயின் அதன் மூலம் நமக்கு புதிராகவே இருக்கின்றது.
என்னால் அதை அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை;
ஆனால் அதன் தாக்கத்தை உணர முடிகிறது.
அதற்கு பெயரிட முடியாது
ஆயின் அதன் அத்தனை பரிணாமங்களையும் காணலாம்.
அது ஆக்கிரமித்துள்ள பஞ்ச பூதங்களும்
நேரத்தின் தொடர்ச்சியை ஊர்ஜிதப் படுத்துகின்றது.
கடந்தோடிய நேரமும் வரப் போகிற நேரமும்
இன்றைய நேரத்தில் ஐக்கியம்.
யாவையும் ஒரே நேரமாக உருண்டு திரண்டு என் முன்னால்.
பறந்தோடும் நேரமும் இல்லை; மிதக்கும் சிந்தனையும் இல்லை.
வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் இல்லை;
யாவையும் நிறைவேறி விட்ட மாயை.
செடி, கொடி, மரம், மிருகம் மற்றும் மனிதன்
போன்ற படைப்பொற்றுமையின் ஆச்சரியத்தில் தெரிகிறது.
என்னால் பெயரிட இயலவில்லை
ஆயின் என் இதயத்தின் இறுதியில் தெரிகிறது.
உன் வாழ்வின் மூலம் அங்கிருப்பதை நீ அறிவாய்.
அதுவேதான் மற்றெல்லா வாழ்க்கையின் மூலமும் ஆகும்.
என்னுள் ஓர் அசைவற்ற நதியைப் போல் ஓடுகிறது.
ஆயின் அது புயலெடுக்கும்போது,
எல்லா இதயங்களுக்கும் திகில் மூட்டுகிறது.
நான் இச்சிந்தனையில் மூழ்கியிருக்கும்போதே
ஓர் கரை புரண்ட வெள்ளம் போல் என்னை அடித்துச் செல்கின்றது.
                 

164 கருத்துகள்:

துரை செல்வராஜூ சொன்னது…

வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது..

நலம் வாழ்க..

துரை செல்வராஜூ சொன்னது…

அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்க நலம்.

ஸ்ரீராம். சொன்னது…

வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...   வாங்க...

துரை செல்வராஜூ சொன்னது…

நாலில் ஒன்றான அந்த மாலை..
இந்நாளில் நன்றான தங்க மாலை..
தோளில் துணையாக வந்த மாலை..
தோன்றாத சிந்த்னைக்கு இந்த மாலை!..

ஸ்ரீராம். சொன்னது…

வண்ணமாலை வசந்த மாலை 
ஒருவருக்கு கசந்த மாலை 
மற்றவருக்கு இசைந்த மாலை 
வந்தது இந்தக் காலை!

துரை செல்வராஜூ சொன்னது…

பிடிச்சிருந்தா இன்னொன்னு... இந்த மாதிரி கடி ஜோக்குகள் எல்லாம் அப்போது வெகு பிரபலம்... வெ. சீதாராமன், உ. ராஜாஜி , சாரதி டேச்சு என எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதினார்கள்...

ஒவ்வொன்று நன்றாக இருந்தாலும் நிலை கொள்ளாமல் போய் படுதலம் சுகுமாரனின் நகைச் சுவை என்ற துணுக்கு பெருத்த பிரச்னையை உண்டாக்கி விட்டது..

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம் ஆமாம்...   நினைவிருக்கிறது!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும். மாலை வணக்கம் வல்லிம்மாவுக்கு

கதை வெகு சுவாரசியமா இருக்கே!! பெரும்பாலும் சுபம்னு தான் நினைக்கிறேன்

"பின்ன என்ன அங்கிள் எனக்குக் கடுப்பா இருக்கு" என்று கொஞ்சம் நிறுத்தியவள் மூர்த்தி அடுத்து யோசிப்பதற்குள்
"வீட்டுல கல்யாணம் பண்ண நச்சரிக்கிறாங்க. இவங்க பார்த்தா பழமா பார்ப்பாங்க சார்" அவள் ஸ்டார்ட்டரை அளைந்து
இட்லி சாம்பாரில் மூழ்கியிருந்த மூர்த்தி சட்டென்று நிமிர்ந்தார். அவர் விட்டு டயலாக். வினோதிற்குப் பொருத்தமோ? இப்ப இளசுகள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்களோ? அடுத்து அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று அறிய ஆவலுடன் காதைத் தீட்டிக் கொண்டு இட்லி சாம்பாரில் ........

ஹா ஹா ஹா ஸ்ரீராம் ஸாரி....வெரி வெரி ஸாரி. உங்கள் கதை வாசித்ததும் டக்குன்னு தோன்றிட எழுதிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க...எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதேன் ஹிஹிஹி

ஸ்டார்ட்டர் நல்ல ஸ்டார்ட்டரா வும் இருக்கு வினோக்களுக்கும் நல்ல ஸ்டார்ட்டராகவும் அமையுமா? காத்திருக்கணும் அடுத்த வியாழன் வரை! ஹா ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

விட்டு-வீட்டு

மத்ததுக்கு அப்புறமா வாரேன். கடமைகள்

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

வணக்கம் கீதா ரெங்கன்..   வாங்க....

நன்றி.  உங்கள் கற்பனையும் ரொம்ப சுவாரஸ்யம்.   இணைக்கதையும் கூடவே வருமோ!

வாங்க மெதுவா வாங்க...  நானும் அப்புறமா வரேன்!

வல்லிசிம்ஹன் சொன்னது…

அன்பு கீதாமா, அன்பு ஸ்ரீராம்.அன்பு துரை இன்னும்
வரப்போகும் அனைவருக்கும் இனிய வணக்கம்.
இறைவன் நல்ல செய்திகளையும் நல்ல எண்ணங்களையும் தரட்டும்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

கீதாமா, எனக்கு இப்போது இரவு நேரமாக
இருப்பதால் பின்னூட்டம் இடுவது சுலபமே.
இத்தனை நேரம் மனதுக்குப் பிடித்த தோழியுடன் பேசிவிட்டு, சிரித்துவிட்டு வந்தேன்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

இந்த மாலை வந்த வேளை
இன்ப மாலை கொண்டு வருமோ.

அந்தி மாலை வந்த பாவை
எண்ணம் தான் திரு மணமோ..அன்பு
மாமன் தேடும் மருமகள் தன்
வீடும் வந்து சேருவாளோ.//ஸ்ரீராமின் கதை சுபம் தான்.
அதுதான் வினோதினியே வந்து விட்டாளே தூதாக.

நல்ல கதை. இந்த நிலையைக் கடந்து வந்ததால்
மூர்த்தி சாரின் விரக்தி புரிகிறது.
வாழ்த்துகள் ஸ்ரீராம்.

Kamala Hariharan சொன்னது…

காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

தொடரை படித்தபின் இப்போது எம்முள் "யாரவள்"...?

வல்லிசிம்ஹன் சொன்னது…

நகைச்சுவையும்,
கோவாவும் மஹாபலிபுரம் கட்டுரையும் மிக அருமை.
எத்தனை உருவங்கள் எத்தனை வசனங்கள்.
கோபுலு சாரை மிஞ்சுவதற்கு இனி ஒருவர் பிறக்க வேண்டும்.

சாவி சாரின் கட்டுரையும் நினைவிருக்கிறது.
சாரதி டேச்சு...அப்பாடி எத்தனை நாட்களாகிறது இந்தப் பெயரைப்
பார்த்து. நன்றி ஸ்ரீராம்.
இதே போல திருவனந்தபுரம் எஸ் எஸ் மணி நினைவுக்கு வருகிறார்.
எத்தனை நன்மைகளைக் காலம் நமக்கு வழங்கி இருக்கிறது.!!!!!

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

கதையின் விறுவிறுப்பில் கதையை ஆரம்பித்த என்னை கவிதையும் கட்டிப் போட்டு விட்டது. படித்து முடித்து காலை வணக்கம் சொல்ல தாமதமாகி விட்டது.

கதை அருமை.. "யார் நீ" என்பவரிடம் நான்தான் "உங்கள் மருமகள்" என்ற உண்மையை உடைக்கப்போகிறாளோ அந்த தைரியமான விநோதினி. இதெல்லாம் விநோத்தின் ஏற்பாடாக கூட இருக்கலாம். நீங்கள் கதையை பாதியில் நிறுத்தப்போய் எங்கள் கற்பனைச் சிறகுகள் முழுதாகவே விரிகின்றது. ஹா. ஹா. ஹா.

கவிதை அருமை. பாராட்டுக்கள்.
மிகுதியையும் படிக்கிறேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

ரமாஸ்ரீயின் எண்ணமற்ற மனம் அதிசயப் படுத்துகிறது.
என்னால் எண்ணங்களை விடவே முடிவதில்லையே.

உடல் படுத்தாலும் மனம் ஓடுகிறது.
நூறு எண்ணங்கள் நூறு உறவுகள்
எப்பொழுதும் என்னுடன்.
எப்பொழுதே படித்த Motionless Pond கதை நினைவுக்கு வருகிறது.
திடிரென்று வரும் ஒரு சின்ன அலை
கரையைத் தொட்டு சிரிக்கும் அழகும் நினைவுக்கு வருகிறது.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நன்றி ஸ்ரீராம் கூடவே அந்தப் பொண்ணு "எனக்கு இப்ப கல்யாணத்துல இன்ட்ரெஸ்டே இல்லை அங்கிள் நும் சொல்றாப்ல தோணிச்சு...

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

கதை விறுவிறுப்பாக வந்து திடீரென தொடரும்..என்றாகிவிட்டதே.

நெல்லைத்தமிழன் சொன்னது…

யார் நீ - கதை மிக நன்றாகச் சென்றது. பெண் அவர் எதிரே உட்கார்ந்து பேச்சை ஆரம்பித்தபோது என்ன இது அதிகப்பிரசங்கித்தனமா என்று தோன்றியது. தொடரும் இடம் வரை ரொம்ப நல்லா வந்திருக்கு. இயல்பா நல்லா எழுத வருது ஶ்ரீராமுக்கு.

கவிதை நல்லாருக்கு. ஆனா உங்களுக்குப் பொருந்தலை. வார்த்தைகள்தான் நல்ல கதையாக வடிவம் எடுக்குதே

நெல்லைத்தமிழன் சொன்னது…

பாக்கி உள்ள வார்த்தைகளையும் விட்டு வைப்பானேன்.

பார்த்த இடமெலாம் கருப்பஞ் சோலை
கரும்பை முழுவதும் அரைத்தது ஆலை
நிலமெலாம் ஆனது வெறும் பாலை

கௌதமன் சொன்னது…

குறள் 377:
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.


மு.வரதராசன் விளக்கம்:
ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

(ஜெ ஜெ ஞாபகம் வருகிறது!)

கௌதமன் சொன்னது…

வணக்கம் துரை செல்வராஜூ ஸார்!

கௌதமன் சொன்னது…

ஆ விடுங்க ஐயா ஆளை!

கௌதமன் சொன்னது…

பிரார்த்தனைகளுக்கு நன்றி.

கௌதமன் சொன்னது…

முதல் முறையாக அ படம் போடாமல் வந்திருக்கு ஒரு கவிதை - அதைப் பாராட்டுவதை விட்டு ...... !!

KILLERGEE Devakottai சொன்னது…

வினோத், வினோதினி பொருத்தம் நன்றாகத்தான் இருக்கிறது ஜி. பொருத்திருந்து பார்ப்போம்....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வினோத் விநோத(தினி)மா மாட்டியிருக்கான் போல...

(கேபிள் வயரையும் வெட்டிய) வெட்டுக்கிளி எண்ணங்கள், சட்டென சிரிக்க வைக்கும் ஜோக்ஸ், ஓவியத்தில் கதை...!, முடிவில் திருமிகு ரமா ஸ்ரீநிவாசன் அவர்களின் சிந்தனையும் அருமை...

ஏகாந்தன் ! சொன்னது…

"யார் நீ?” என்றுதான் கேட்கமுடியும். பின்னே - “யாரடி நீ மோகினி..!” என்றா பாடமுடியும். வயசாயித்தொலஞ்சிருச்சே !

ஏகாந்தன் ! சொன்னது…

//..மெதுவாய் யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். வருபவர்கள் போகிறவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார். சமயங்களில் கையில் டைரியோடு வருவார். எதையாவது எழுதிக் கொண்டிருப்பார். //

Autobiographical-ஆகத் தெரிகிறதே !

துரை செல்வராஜூ சொன்னது…

இந்தக் கொரானா காலத்திலும் கொள்ளை அடித்து கூடாரத்தை நிரப்பிக் கொள்ளும் அனைவருக்கும் பொருந்தும்..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஸ்ரீராம் இங்க சொல்லிருக்கும் உரையாடல்கள் நான் இன்னும் முடிக்காத ஒரு கதையில் எழுதி வைத்தது. எப்போ என்றால் நம் பரிவை சே குமாரின் கதை இங்கு வந்திருந்தது ஒரு பெண் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லுவது அந்த ஆரம்ப வரி என்னை ஈர்க்க அப்போ சொல்லியிருந்தேன் அன்று கருத்தில் எனக்கு இதை வைத்து எனக்கு ஒரு கதை தோன்றுகிறது எழுதுகிறேன் என்று. ஹிஹிஹிஹி இன்னும் முடிக்கலை. அந்த உரையாடல்கள்தான் டக்குனு நினைவுக்கு வர....அப்புறம் எழுதி வைத்ததைத் தேடி எடுத்தேன்...

நீங்க சொல்லிருப்பது போல் இணைக்கதை?!!!!! ஹா ஹா ஹா ஹா பார்ப்போம் இந்த கீதா அதை முடிக்க வேண்டுமே.

கீதா

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

யார் நீ? தொடக்கமே அருமை

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

'மூர்த்தி' யில் ஸ்ரீராம் கொஞ்சம் தெரிகிறாரே!!! பரவால்ல இப்படி சில கேரக்டர் எழுதும் போது நாம் பார்க்கும் மனிதர்கள், நிகழ்வுகள், அல்லது நம்முடையது சில வெளிப்படும்தான்.

அந்தப் பெண் டக்கென்று முன்னபின்ன தெரியாதவரிடம் தொடங்குகிறாளே என்று தோன்றியது. ஆனால் ஒரு பெண் அப்படித்தான் என்னிடம் ரயிலில் தானாகவே தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள். ஒரு வேளை அவள் மனதில் அதைப் பற்றி சில கோபனள், குமுறல்கள் இருந்திருக்கலாம். தெரிந்தவரிடம் சொன்னால் வெளியில் பரவும். தெரியாதவர் என்றால் கோபம், குமுறல்களை அந்த சமயத்தில் வடிகாலாக....என்று இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. சென்னை வரும் வரை அவள் கதை நீண்டது. 6.30 மணி நேரம். இடையில் ஒரே ஒரு இடைவேளைதான்!! ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கோபனள் - கோபங்கள்

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஓ கதை 4 பார்ட்டில் ஒன்று முதல் பார்ட்டா!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

"வினோத் ரொம்பப் படுத்தறானா அங்கிள்? //

ஆஹா கதை இங்கிட்டு சூடு பிடிக்குது!!! ஸோ அவள் மூர்த்தியைத் தெரிந்தேதான் வந்திருக்கிறாள். இப்ப கொஞ்சம் கதை புரியுதே...அட இந்த வரி இத்தனை நேரம் கண்ணில் படவே இல்லை. பதிவு மெதுவாக மெதுவாக வருது.. நெட் மெதுவாக இருப்பதால் ...ஹையோ சுவாரசியம் கூடியே விட்டது

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கவிதை சூப்பர்! ஸ்ரீராம். நல்ல ஒப்பீடு! ரசித்தேன்.

வெற்றுத் திரையில் கூட சில சமயம் புள்ளிகள் வரிகள் என்று கூட வருமே!! அப்படி இக்கவிதையும் வந்துவிட்டதே!

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

முதல் ஜோக்கு ரொம்பவே சிரித்துவிட்டேன்.

இரண்டாவது சிரிப்பு வருது கூடவே அணுகுண்டு பயமுறுத்துதே!! ஹா ஹா ஹா

மூன்றாவது ஹா ஹா ஹா ஹா

கீதா

Ramah Srinivsan சொன்னது…

காலை வணக்கம். ஆரம்பித்த வேகத்தில் 'தொடரும்' போட்டு விட்டீரே ஸ்ரீராம்.
இந்த மனக் குழப்பமான சூழலின் தாக்கத்தில் பிறந்தது இந்த கவிதை. மனத்திலும் நடைமுறையிலும் இல்லாத தெளிவு கவிதையிலாவது இருக்கட்டுமே என்று எழுதியது. அவ்வளவே.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கோபுலு சித்திரங்கள் அருமை. இங்கு போயிருக்கிறீர்களா தொடர் மஹாபலிபுரம் என்று தோன்றுகிறது படங்கள் பார்த்தால். எழுத்துகள் வாசிக்க இயலவில்லை.

ஆமாம் கோபுலுவின் பெயரும் வந்திருக்கிறதே எழுத்தாளருடன். நல்ல விஷயம்தான் அதாவது சித்திரமும் பேசுகிறது எழுத்தாளுருக்கு இணையாக என்று. அன்னியர் ஆண்ட பூமியும் வெகு சுவாரசியமாக இருக்கும் என்று தோன்றுகிறது. இங்கு பகிர்ந்திருப்பதை மட்டும் கொஞ்சம் எழுத்துகள் பெரிதாக்கிப் பார்த்த போது தெரிந்தது..வாசித்தேன்.

கோவாவில் ஓடும் நதிகளைக் கடந்து செல்ல நிறைய 'மோட்டார் படகுகள்' என்றதை கோபுலுவின் சித்திரம் செம கற்பனை....

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ரமா நல்ல இலக்கியவாதியாகிட்டாங்களே!!!

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

ஹா...  ஹா...  ஹா...  

இல்லை வேற வேலை - அதனால் 
எழுதறோம் இப்படி ஓலை!

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க வல்லிம்மா...   அன்பான வணக்கங்கள்...

ஸ்ரீராம். சொன்னது…

//மனதுக்குப் பிடித்த தோழியுடன்//

புதிர்!   

அவரும் வலையுலகில் இருப்பவரா?

ஸ்ரீராம். சொன்னது…

கீதா...   இதே போல நீங்களும் ஒரு கதை எழுதி வருகிறீர்களா?  நான் இணைக்கதை என்று சொன்னது இங்கு வரும் சில உரையாடல்களை இங்கேயே சும்மா மாற்றி, சேர்த்து, அழித்து ஒரு இணைக்கதையை உருவாக்குவது...   தனியாக அல்ல!  தனியாக உருவாவது தனியாக வரட்டும்.

ஸ்ரீராம். சொன்னது…

வல்லிம்மா...    இது நீங்கள் எழுதியதா?  இல்லை திரைப் பாடலா?  நன்றாக இருக்கிறது.  ஆம்...   எல்லோரும் ஒரு ஸ்டேஜில் கடக்கும் நிலை அது!

ஸ்ரீராம். சொன்னது…

அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி கமலா அக்கா..   வாங்க... வணக்கம்.

ஸ்ரீராம். சொன்னது…

அவள் வினோதினி!  வினோதமான ஒரு பெண்!

ஹா..  ஹா...  ஹா...   நன்றி ரமணி ஸார்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி வல்லிம்மா...    சாவி-கோபுலு இணை பார்க்கவே சுவாரஸ்யம் இல்லையா?

ஸ்ரீராம். சொன்னது…

கமலா அக்கா...  கற்பனை வானில் நீந்தி வருகிறாள் வினோதினி எனும் கதாநாயகி...  ஒரு எஸ் பி பி பாடல் நினைவுக்கு வருகிறதா?  உங்கள் கற்பனையும் சிறகடிக்கிறது!  கவிதையைப் பாராட்டியதற்கு நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

எண்ணங்களற்ற நிலை என்பது சாத்தியமா?   சித்தர்களுக்கும், ரிஷிகளுக்கும்தான் சாத்தியம்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்...   அடுத்த வாரம் வந்து தொடருங்கள்.  நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

//தொடரும் இடம் வரை ரொம்ப நல்லா வந்திருக்கு. இயல்பா நல்லா எழுத வருது ஶ்ரீராமுக்கு.//

ஆஹா நன்றி நெல்லை.  மொத்தமாதான் படிப்பேன் என்று சொல்லி விடுவீர்களா என்று பயந்தேன்.

//ஆனா உங்களுக்குப் பொருந்தலை. வார்த்தைகள்தான் நல்ல கதையாக வடிவம் எடுக்குதே//

ஹா...  ஹா...  ஹா...   தன்யனானேன்.  நன்றி.

//முதல் முறையாக அ படம் போடாமல் வந்திருக்கு ஒரு கவிதை - அதைப் பாராட்டுவதை விட்டு ...... !!//

அட, ஆமாம்ல...    வடை போச்சே!

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி ஜி.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி DD.

ஸ்ரீராம். சொன்னது…

அதைச் சொல்லுங்க ஏகாந்தன் ஸார்...   பாவம் மூர்த்தி!

ஸ்ரீராம். சொன்னது…

பி பி ஸ்ரீனிவாஸ் ஞாபகத்துக்கு வரவில்லை?!!

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

ஸ்ரீராம். சொன்னது…

//'மூர்த்தி' யில் ஸ்ரீராம் கொஞ்சம் தெரிகிறாரே!!//

மட்டும்தானா?

ரயில் பயணத்தில் கதை :  அதில் ஒரு சௌகர்யம் என்ன என்றால் தெரியாத ஒருவரிடம் சொல்வதால் மறுப்படியும் அவரைப் பார்க்கப் போவதில்லை.  எனவே குறுகுறுப்பு இருக்காது.  தெரியாதவர் என்பதால் எண்ணக்குமுறல்களை பகிர்ந்து கொள்ளலாம்!

ஸ்ரீராம். சொன்னது…

ஓ..   முதலில் அந்த வரி படிக்கவில்லையா...    இப்போது எண்ணங்களில் கரு மாறும்!  இல்லையா?

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி கீதா.

ஸ்ரீராம். சொன்னது…

இதற்கு மேல நீட்டினால் மற்ற விஷயங்களுக்கு இடம் இருக்காதே...   உங்கள் கவிதை நன்று.   சொல்ல வரும் விஷயம் என்ன என்பது அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளலாம்.

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம் கீதா...   படங்களும் சுவாரஸ்யம்.  எழுத்துகளும் படிக்க சுவாரஸ்யம்.

Ramah Srinivsan சொன்னது…

மிக்க நன்றி டீ. டீ.

Jayakumar Chandrasekaran சொன்னது…

கனவு.

பறக்கும் வெட்டுக்கிளிகள்.
ஓடி ஒளியும் சிறார்கள்.
மறைந்து வரும் வர்ணனைகள்.
வாயால் சொல்லமுடியாது.
வார்த்தைகள் வராது.
ஆம் அதுவே கனவு 

கனவு கலைந்து நினைவானால் 

வெற்றுத்திரை

இதன் தொடர்வாக திருமதி ரமா ஸ்ரீனிவாசன் எழுதிய கவிதையும் அற்புதம். அந்த வெற்றுத் திரையைத்தான் முக்கால சந்தியாக, ஆழ்மன அமைதியாக transcendental meditation ஆக பிரதிபலிக்கிறது. 

 Jayakumar

Ramah Srinivsan சொன்னது…

😊😊😊

Ramah Srinivsan சொன்னது…

கருத்துக்கு நன்றி கீதா.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்...

இரண்டையும் இணைத்தது அற்புதம்.  நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

சேலை வேலை ஆலை பாலை
தமிழ்ச் சொற்கள் தொடுத்த மாலை
அன்பெனும் அரும்பு மலர்ந்த காலை
நட்பினில் பூத்தது ஆனந்த மாலை!..

G.M Balasubramaniam சொன்னது…

வியாழக்கிழமையை கொஞ்சம் எதிர்பார்ப்பேன் ஸ்ரீ ராமின் ஒரிஜினல் எழுதத்தை எபியில் படிக்கும் வாய்புக்காக

Geetha Sambasivam சொன்னது…

"கோமதியின் காதலன்" நாவலை நினைவூட்டுகிறது, இந்தப் ப்ராசங்கள் எல்லாம். தேவன் அதிலே இப்படி நிறைய எழுதுவார். முதல் அத்தியாயத்திலேயே ஆரம்பித்திருக்கும்.

ஸ்ரீராம். சொன்னது…

எது?  இந்த ஓலை, பாலை, காலை, வேலை எல்லாம் போலவா?

Geetha Sambasivam சொன்னது…

கதை விறுவிறு. அதைப் பற்றிய யூகங்களை அநேகமாக அனைவரும் சொல்லிவிட்டதால் நான் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. ஸ்ரீராமின் கவிதையும் அருமையாக இருக்கிறது. துணுக்குகள் அனைத்தும் எப்போதும் போல் நல்ல தேர்வு. மஹாபலிபுரம் கட்டுரைக்கு கோபுலு வரைந்திருக்கும் படங்கள் எல்லாம் காலத்தால் அழியாதவை. கோவா பற்றிய தொடர் நாங்க எண்பதுகளில் கோவா சுற்றுலா சென்றதை நினைவூட்டுகிறது, மறக்க முடியாத பயணம்.

ஸ்ரீராம். சொன்னது…

மகிழ்ச்சி.  நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி ஜி எம் பி ஸார்.   தன்யனானேன்.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி கீதா அக்கா.

Geetha Sambasivam சொன்னது…

ரமா ஸ்ரீநிவாசனின் சிந்தனையின் வேகமும் எழுத்தில் வடித்திருக்கும் வசனக்கவிதையும் நன்றாக உள்ளது. ஸ்ரீராமின் வெற்றுத்திரையைப் போல் அவர் எண்ணங்களும் இல்லாத அண்டப்பெருவெளியில் ஐக்கியமானதைச் சொல்லி இருக்கார். இரண்டும் இன்று வந்தது ஓர் தற்செயலாக இருந்தாலும் நன்றாக அமைந்து விட்டது.

Geetha Sambasivam சொன்னது…

அந்தப் பெண் விநோதினி, விநோதைப் பற்றியும், மூர்த்தி தினம் தினம் அந்த ஓட்டலுக்கு வருவதையும் பற்றி நன்கு தெரிந்து கொண்டே அங்கே வந்திருக்கிறாள். ஆகவே விநோத் திருமணம் செய்து கொள்ள மறுப்பதன் காரணம் விநோதினி மூலமாய் வெளிப்படுமோ?

ஸ்ரீராம். சொன்னது…

ஜெயக்குமார் ஸாரும் அவ்வண்ணமே சொல்லி இருக்கிறார்.  தற்செயலாக அமைந்துவிட்ட ஒற்றுமை.  ரமாவின் நேற்றைய கேள்விகளுக்கும் இன்றைய கவிதைக்கும் தொடர்பு உண்டு.  இன்றைய கவிதைக்கும் சனிக்கிழமைக் கட்டுரைக்கும் கூட தொடர்பு உண்டு.

ஸ்ரீராம். சொன்னது…

Good guess கீதா அக்கா...

Geetha Sambasivam சொன்னது…

ஆமாம், ஆனால் அதிலே ஒரு சாஸ்திரிகள்/ஜோசியர்/சொல்லுவதாகவும் அதை ஒட்டிக் கதாநாயகன் பேசுவதாகவும் வரும். அப்புறமா சில எடுத்துக்காட்டுகள் போடறேன். புத்தகம் தேட வேண்டி இருக்கு! :(

Geetha Sambasivam சொன்னது…

அப்படிச் சொல்ல முடியாது. அந்த Blank நிலை எனக்கும் அவ்வப்போது வரும். சிந்தனையே இல்லாமல் வெற்று வெளியில் கரைந்து விட்டாற்போல் இருக்கும். அநேகமாய் எல்லோருக்கும் இப்படி இருக்கும் என நினைக்கிறேன்.

ஸ்ரீராம். சொன்னது…

ஓ...   காத்திருக்கிறேன்.

ஜீவி சொன்னது…

அப்போ நெல்லை என்ன தெரியாமத் தான் சமீபத்தில் சொல்லியிருந்தாரா?.. '
'Not many will be interested in இலக்கியம், நாவல், பழைய எழுத்தாளர் topic etc..'" என்று..

இப்படி ஒரு பக்கத்தில் சொல்லவும் செய்வார், ரா.கி.ர.வின் படகுவீடை உங்களை அனுப்பி வைக்கவும் செய்வார்.

அபுரி..

Geetha Sambasivam சொன்னது…

அவர் கையில் டயரி இருந்ததாய் நினைவில் இல்லையே! உட்லண்ட்ஸில் நிறையத் தரம் பார்த்து அறிமுகம் செய்து கொண்டு பேசி இருக்கோம்.

ஸ்ரீராம். சொன்னது…

டயரிதான் இருக்கணுமா என்ன?  பேப்பர்...  பேனா...   ஏதோ தோன்றியதைக் குறித்துக் கொள்ளவேண்டும்...அவ்வளவுதானே?

ஸ்ரீராம். சொன்னது…

அவர் தன்னைப்பற்றி சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.  பொதுவாகச் சொல்லி இருந்தார் ஜீவி ஸார்...

ஜீவி சொன்னது…

கவிதையில் ஏன் வழக்காய் இருக்கும் உயிரோட்டம் இல்லை?.. வார்த்தைகளை எடுத்து அசுவாரஸ்யமாய் விழுகிற இடத்தில் விழட்டும் என்று தூவிவிட்ட மாதிரி?...

ஜீவி சொன்னது…

ஏதோ முயன்றிருக்கிறேன். பாருங்கள்:

ராஜஸ்தான் வெட்டுக்கிளிகளென
எண்ணங்களின் வட்டாடலுக்கு
என்னவோ குறைச்சலில்லை
அவற்றை வார்த்தைகளில்
வடிக்க நினைக்கும் பொழுது தான்
மனசில் பறந்தது மாயமாய் மறைந்து
இயலாமையை இடித்துக் காட்டுகிறது.
வாரி இறைந்து கிடக்கும்
வார்த்தைகளை எழுத்து மணிகளை
சேகரித்துச் சேர்த்து எண்ண நூலில்
கோர்த்து மாலையாக்கிச் சூடவும்
முடியவில்லை; முயன்ற போதும்
தொடர்பறுந்த வெள்ளை நிற
வெளிச்சத் திரையாகிப் போனது
மனத் தொலைக்காட்சி..

ஜீவி சொன்னது…

அவரைப் பற்றிச் சொன்னார் என்றும் நான் நினைக்கவில்லை.
என் ஏரியா அது. இது விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கிறீர்களே என்று சொல்கிற மாதிரி தான் சொல்லியிருந்தார்.

ஜீவி சொன்னது…

ஆண்களை ஜோக்காக்கினால் என்ன என்று தோன்றியதால் விளைந்த வினை:

என் பெண்ணுக்கும் இன்னொண்ணு ஆசை சின்ன வயசிலிருந்தே.. இப்பக்கூட உங்களை மாதிரியே இன்னொண்ணுக்கும் ஆசைப்படறா.. உங்க தம்பிக்கு இன்னும் கல்யாணமாகலை, இல்லையா?..

ஜீவி சொன்னது…

//ஓவியத்தை விளக்கமாகப் பார்த்து முடிக்கவே நேரமாகும்! எவ்வளவு காட்சிகள்!//

ஆனால் மஹாபலிபுரம் என்று ஒன்றை தலைப்பில் அத்தனைக் காட்சிகளையும் அடக்கி விடலாம்!

Geetha Sambasivam சொன்னது…

ரொம்ப நாட்களாக் கேட்க நினைச்சது! அது என்ன "பழம்?" பக்தி அல்லது ஆன்மிகத்தேடல் இருந்தால் அப்படிச் சொல்வாங்களோ?

Geetha Sambasivam சொன்னது…

இப்போ என் தம்பி பையர் விஷயத்தில் அந்த நிலை எங்க இருவருக்கும் ஏற்பட்டிருக்கு! எப்போச்சரியாகுமோ? தம்பி கூட இத்தனை கவலைப்படறதாத் தெரியலை!

Geetha Sambasivam சொன்னது…

அது சரி, "அ"நடிகை பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போதும், அவங்க திரை உலகுக்கு வந்து குறிப்பிட்ட ஆண்டுகள் ஆனதின் கொண்டாட்டத்தின் போதும் அங்கே ஸ்ரீராமைக் காணோமே! அழைப்பு இல்லையோ? :)))))

ஜீவி சொன்னது…

//திருமணம் செய்து கொள்ளப் போகும் ஜோடிகள் போர்ச்சுகீசிய மொழி தெரிந்திருந்தாலொழிய மணம் புரியக் கூடாது.//

இந்த வரிகள் இந்த பதிவில் எங்கு வருகிறது என்று சொல்லுங்கள், பார்ப்போம்.

ஸ்ரீராம். சொன்னது…

வெட்டுக்கிளிகளாய் வார்த்தைகள் பறந்துவிட, பிடித்திழுத்து எண்ணங்களைக் கோர்ப்பதற்குள் கவிதையின் ஜீவன் போய்விட்டதோ என்னவோ!

ஸ்ரீராம். சொன்னது…

உங்களுக்கு நீங்கள் எழுதி இருப்பது சரி, எனக்கு நான் எழுதி இருப்பது சரி...   சரியா?!!!

ஸ்ரீராம். சொன்னது…

உல்டா!   ஆண்களை மாப்பிள்ளைப் பார்க்கப்போய்  திருமணம் செய்யும் பெண்கள் பற்றிய அந்தக்காலக் குமுதம் கதை போல!

ஸ்ரீராம். சொன்னது…

அப்படியும் ஒவ்வொரு படமாய்ப் பார்த்து ரசிக்கணுமே!

ஸ்ரீராம். சொன்னது…

அ ஆ பூ சாவி கட்டுரையில்!

கோமதி அரசு சொன்னது…

கதை நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்.

//பெயர் விநோதினியா? என் பையன் பெயர் வினோத்... என்ன பொருத்தம்! இப்படிப் பேர் இருந்தாலே அனா பினாவா இருப்பாங்க போல'//
அவருக்கே தெரியாமல் மனம் பொருத்தம் பார்த்து விட்டதே!
அனா பினாவிற்கு அர்த்தம் யோசித்து கொண்டு அடுத்த வரியை படித்தால் விநோதினி சொல்லி விட்டார் அர்த்தம்.

என் அம்மா தன் தோழியோடு எங்களுக்கு தெரிய கூடாது என்பதற்காக கானா பேச்சு பேசுவார்கள் நான் அதை என் அம்மாவிடம் கற்றுக் கொள்ளவே இல்லை. அதுவும் அவர்கள் இருவரும் வேக வேகமாய் பேசுவார்கள்.

Geetha Sambasivam சொன்னது…

கநாகன் கநகல்கலாப் கபேகசுகவேகன். கஎகங்கக ககுகழகந்கதைகககள் கரொகம்கப கவிகருகம்கபுகவாகங்கக.

Geetha Sambasivam சொன்னது…

இய்நந்தபாய்னஷையும் தெய்னரியும்.

கோமதி அரசு சொன்னது…

//எண்ணங்களை வடிவமாக்க
பொறுக்கி எடுத்துப் //

எண்ணங்கள் மனதில் தோன்று போதே எழுதி வைத்து விடுங்கள் ஒரு டையிரியில் . வெட்டுக்கிளியாக பறக்காது ,அப்புறம் அவற்றை பொறுக்கி எடுத்து கவி மாலையாக தொடுத்து விடலாம்.

கோமதி அரசு சொன்னது…

முன்பு சொல்லி இருக்கிறீர்கள் இந்த பாஷை தெரியும் என்று.

Geetha Sambasivam சொன்னது…

கஅகப்கபகடிகயா? கநிகனைகவு கஇகல்கலை. :)))))))

கோமதி அரசு சொன்னது…

"நான் நல்லா பேசுவேன், எங்க குழந்தைகள் ரொம்ப விரும்புவாங்க" சரியா

கோமதி அரசு சொன்னது…

அப்படியா? நினைவு இல்லை
சரியா?

Geetha Sambasivam சொன்னது…

கசகரி. கஇகரகண்கடுகம் கசகரி. :)))))))))))))))

Bhanumathy Venkateswaran சொன்னது…

ரேவதி பிரியாவை விட்டு விட்டீர்களே?

கோமதி அரசு சொன்னது…

அரசியல் கார்ட்டூன் , ஜோக் எல்லாம் நன்றாக இருக்கிறது.

பொக்கிஷ பகிர்வு அருமை.

//ஓவியத்தை விளக்கமாகப் பார்த்து முடிக்கவே நேரமாகும்! எவ்வளவு காட்சிகள்!//

ஆமாம் உண்மை, அருமையான ஓவியம்.

கோமதி அரசு சொன்னது…

மகிழ்ச்சி

Bhanumathy Venkateswaran சொன்னது…

//சிந்தனையே இல்லாமல் வெற்று வெளியில் கரைந்து விட்டாற்போல் இருக்கும்.// ஆனால் அந்த நிலை ஒரு நிமிடம் நீடித்தால் அதிசயம்! அட! எண்ணங்களே எழவில்லையே..? என்று எண்ண ஓட்டம் தொடங்கி விடும். ஆனால் அந்த ஒரு நிமிடம்.. அடடா!!

கோமதி அரசு சொன்னது…

சட்டைபையில் நிறைய பேனா வைத்து இருப்பார்

Bhanumathy Venkateswaran சொன்னது…

Dindigal Dhanabalan என்பதை சுருக்கி தமிழில் எழுதும் பொழுது டி.டி. என்றுதான் எழுத வேண்டும். நீங்கள் குறிலை நெடிலாக்கி டீ டீ என்று ரெயில்வே ஸ்டேஷனை நினைவு படுத்தி விட்டீர்களே?  

கோமதி அரசு சொன்னது…

ரமா அவர்கள் கவிதை அவர்கள் மன நிலையை சொல்கிறதோ!
வேலைக்கு போய் கொண்டு சுறு சுறுப்பாய் இருந்தவர்கள் ஓய்வு பெற்றதும் கொஞ்சம் டல்லாக இருப்பது போல் உணர்வு வருகிறது போல.
வரப்போகும் நேரத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க தயார் ஆகுங்கள் ரமா.

நெல்லைத் தமிழன் சொன்னது…

கோபுலு அவர்களின் ஓவியம் சிம்ப்ளி சூப்பர்ப். என்ன ஒரு திறமையான மனுஷன். ஓவியத்தில் அவர் ஒரு ஜாம்பவான். வாழ்க அவரது புகழ்.

Bhanumathy Venkateswaran சொன்னது…

கதை சிறப்பாக தொடங்கி இருக்கிறது.  அந்த விநோதினியை வினோத் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அவனுடைய காதலி கிடையாது. தோழியாக இருக்கலாம். 

Bhanumathy Venkateswaran சொன்னது…

சாவியோடும் கோபுலுவோடும் மாமல்லபுரம் சென்ற நினைவு இருக்கிறது.கோபுலுவின்  ஓவியங்கள்  அல்டிமேட்!      

Bhanumathy Venkateswaran சொன்னது…

ரமாவின் கவிதை.. நம்பவே முடியவில்லை. என்னவொரு கங்காரு ஜம்ப்!

Bhanumathy Venkateswaran சொன்னது…

இந்த கானா பாஷையெல்லாம் ஜுஜுபி!. ஸ்ரீரெங்கத்தில் இட்ல,அட்ல என்று ஒரு பாஷை பேசுவார்களே?புதுக்கோட்டையில் வார்த்தையை உல்ட்டாவாக்கி பேசுவார்கள். பாட்டி என்பதை டிட்பா என்பார்கள். கீதா அக்கா தாகி காக்க ஆகும். 

G.M Balasubramaniam சொன்னது…

வெறுமே அப்ஸ்ட்ராக்ட் ஆக எழுதுவது கவிதையா

Kamala Hariharan சொன்னது…

சகோதரிகள் க பாஷை பேசும் போது என் பழைய தோழிகளுடனான சிறு வயது நினைவுகள் வந்து எனக்கும் கமககிகழ்கச்கசி தருகிறது. அது ஒரு ஜாலியான காலம். இப்போது இந்த பாஷை பேசினால், கவிகசிகத்கதிகரகமாகக பார்க்கிறார்கள்.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

ஜோக்ஸ் அனைத்தும் அருமை. பெண் பார்க்கும் படலம் ஜோக்கில் அனைவரின் முகத்திலும் அத்தனை இயல்பு.. மிகவும் நன்றாக உள்ளது ரசித்தேன். கோபுலு அவர்களின் ஓவியங்கள் அவரது திறமையை பறைசாற்றுகிறது. எத்தனை வித விதமான ஓவியங்கள். அனைத்தும் ஆச்சரியம் அளிக்கிறது.

சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் சிந்தனைக் கவிதை அருமை. நிறைய யோசிக்க வைக்கும் வார்த்தைகளை வெகு சுலபமாக வரிகளாக்கி கவிதை புனைந்துள்ளார். அவருக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்.

"விநோதினி யார்" என்பதை அறிந்து கொள்ள அடுத்த வியாழன் கதம்பத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

அன்பு ஸ்ரீராம்.
அட திரைப்பாடல் மாதிரி தெரிகிறதா. அந்த நேரத்தில் வந்த வார்த்தைகள்.
அதற்குக் கவிதை என்றேல்லாம் பெயர் வைக்க முடியாது.:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் சொன்னது…

Yes Sriram. She is also a blogger.:) Srimathi Gomathy Arasu

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆமாம் ஸ்ரீராம். இப்போ கதையின் போக்கு கொஞ்சம் புரிந்தது. என்னன்னா இந்தப் பொண்ணு வினோதின் ரகசியம் அறிந்த தோழியாக இருக்கணும்னு தோணுது. தூது?!!! நிறைய கற்பனைகள் விரியுது ஸ்ரீராம்..

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆமாம் அதே அதே.

மட்டும்தானா?//

வேறும் தோன்றியது இதில் வரும் கேரக்டர்ஸ் கொஞ்சம் புரியுது. ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆமாம் கீதாக்கா பழம் நு சொல்றது அதுக்குத்தான்

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வல்லிமம வாவ்!! சூப்பரா எழுதியிருக்கீங்க

கீதா

Geetha Sambasivam சொன்னது…

நாங்களும் "இட்ல" போட்டும், வார்த்தைகளைத் திருப்பிப் போட்டும் இப்போவும் பேசுவோம், குழந்தைகளுடன். எங்க பெண் தன் குழந்தைகளிடம் என்னை டிட்பா என்றே சொல்லுவாள்.

வல்லிசிம்ஹன் சொன்னது…


வியாழன், 13 ஆகஸ்ட், 2020
யார் நீ?
அந்த மாலை 1/4
ஸ்ரீராம்





ஸ்பூனால் இட்லிகளை யோசனையுடன் மெதுவாய்ச் சிதைத்து சாம்பாரில் ஊறவிட்டார் மூர்த்தி. ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.அப்படியே சாப்பிடக் கூடாதோ.
எல்லாம் நல்ல படங்களாப் போட்டு பசி பறக்கிறது ஸ்ரீராம்.

பட்டாம்பூச்சி சிந்தனைகள்
மீண்டும் வந்து புகுந்து கொள்ளும்.
கவலை வேண்டாம். அருமையான எழுத்துமா.

ஸ்ரீராம். சொன்னது…

சூப்பரா எழுதி இருக்கீங்க அம்மா...   சினிமா பாடல் வரி போல மனதில் தோன்றும் அளவு எழுதி இருக்கீங்க.  அருமை.  நாமெல்லாம் ஹோட்டலுக்குப் போனால் இட்லி எங்கே சாப்பிடறோம் அம்மா?  அதுதான் வீட்டில் கிடைக்குமே என்று புதிதாய் ஏதாவது ஆர்டர் செய்வோம்!  என் மாமா ஒருவர், என் தாத்தா எல்லாம் ரெகுலராய் ரெண்டு இட்லி ஒரு தோசை ஆர்டார்தான் எப்போது ஹோட்டல் போனாலும்!

ஸ்ரீராம். சொன்னது…

முழுதாக ஒரு நிமிடம் எண்ணமில்லாமல் இருப்பது கூட சாத்தியமா?   கொடுத்து வைத்தவர்.

ஸ்ரீராம். சொன்னது…

ஆ...    அப்படி வேற நடந்ததா?  எனக்குத்தெரியாமல்?  போன நவம்பரிலா சொல்கிறீர்கள்?

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம்...   தலையில் உருமா கட்டி இருப்பார்!  (உருமா என்றுதானே சொல்வார்கள்?!!)

ஸ்ரீராம். சொன்னது…

யாருக்கு உதவப்போகிறாளோ...   என்ன திட்டமோ அவள் மனதில்!

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி கீதா.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கோமதி அக்கா...   ரசித்ததற்கு நன்றி.

// கானா பேச்சு பேசுவார்கள் //

அதெல்லாம் சாதாரணம்!  என் நண்பன் தேவன் என்றொருவர் இருந்தான்.  அவன் வார்த்தையின் கடைசி எழுத்தை முதல் எழுத்தாக்கி .வேகமாகப் பேசுவான்.  நானும் கொஞ்சம் பழகினேன்.  நாங்கள் வேறு மாதிரி பேசுவோம்.  இரண்டாவது எழுத்தை முதல் எழுத்தின் உச்சரிப்பில் பேசுவோம்.  உதாரணமாக பேசுவோம் என்பதை சேபுவோம் என்று சொல்லலாம்.  முதல் என்பதை துமல் என்று சொல்லலாம்.

ஸ்ரீராம். சொன்னது…

//ஸ்ரீரெங்கத்தில் இட்ல,அட்ல என்று ஒரு பாஷை பேசுவார்களே?//

பானு அக்கா...  நீங்கள் சொல்லும் அந்த பாஷை ஜெயம் படத்தில் அந்தத் தங்கை கேரக்டர் பேசுமே...

ஸ்ரீராம். சொன்னது…

சும்மா இதெல்லாமே கற்பனைதானே கோமதி அக்கா...   எனக்கு அப்படி மறப்பதில்லை.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி கோமதி அக்கா.

ஸ்ரீராம். சொன்னது…

இல்லை அக்கா...   அவர்கள் டல்லாக எல்லாம் இல்லை.  ஒரு குறிப்பிட்ட சம்பவம் அவர் மனதை பாதித்து விட்டது.  நெருங்கிய நண்பர் ஒருவரின் இழப்பு.

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம்...   எளிமையாக இருப்பது போல தோன்றினாலும் இயல்பாய் வரையப்படும் ஓவியங்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

Good guess பானு அக்கா.

ஸ்ரீராம். சொன்னது…

//சாவியோடும் கோபுலுவோடும் மாமல்லபுரம் சென்ற நினைவு இருக்கிறது.//

?????

ஸ்ரீராம். சொன்னது…

ஆமாம்...   மனதின் எண்ணங்களை கவிதையாக வடித்து விட்டார்.

ஸ்ரீராம். சொன்னது…

ஜி எம் பி ஸார்...   நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி உங்கள்  லெவல் வேற...   வார்த்தைகள் மிக அழகாய் வந்து சந்தத்துடன் விழும் உங்களுக்கு.

ஸ்ரீராம். சொன்னது…

மீண்டும் வந்து விட்டுப்போன பகுதிகளையும் ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஸ்ரீராம்ஜி வெகு நாட்களுக்குப் பிறகு நீங்கள் எழுதும் கதை இங்கு இல்லையா. மிகவும் அருமையான தொடக்கம். இப்பெண் மூர்த்தி மகன் வினோதிற்குத் தெரிந்த பெண்ணோ? அவள் வினோதைக் குறித்து ஏதேனும் சொல்லப் போகிறாளோ? என்னவாக இருக்கும் அவள் யாராக இருக்கும் என்று அறிய இன்னும் மூன்று வியாழன் - முழுவதுமே கொடுத்திருக்கலாமோ?

நல்ல இடத்தில் தொடரும் போட்டு சஸ்பென்ஸ்.

கவிதையை மிகவும் ரசித்தேன். நல்ல கற்பனை. கவிதையும், கதையும் எல்லாமுமே உங்களுக்குத் திறம்பட எழுத வருகிறது.

ஜோக்குகளையும் ரசித்தேன்.

சகோதரி ரமா அவர்களின் சிந்தனை வெளிப்பாடு தத்துவமுத்துகளாகச் சிறப்பாக இருக்கிறது.

துளசிதரன்

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க துளஸிஜி...   வெகு நாட்களுக்குப் பிறகா?   ஆமாம் என்று நினைக்கிறேன்.  மூன்றையும் கொடுத்தால் இரண்டு நஷ்டம்...   பதிவு நீளமாகிவிடும், வேறு விஷயங்கள் பகிர முடியாமல் போய் போரடிக்கும்!  இன்னொன்று, அப்புறம் நான் எப்படி மூன்று வியாழன்களை ஒப்பேற்றுவது?!!!

கவிதையை நீங்கள் ரசிக்காமல் யார் ரசிப்பார்கள்?! 

நன்றி ஜி.  

கோமதி அரசு சொன்னது…

ஓ ! அது வருத்தம் கொடுக்கும் தான்.
கொஞ்ச நாள் ஆகும் இழப்பின் வேதனை மறைய

ஏகாந்தன் ! சொன்னது…

ராஜஸ்தான் வெட்டுக்கிளிகளாய் என்கிற முதல் வரியில் கண்போனதும், அவை பாகிஸ்தான் வெட்டுக்கிளிகளல்லவா என மனம் சொல்ல, மேற்கொண்டு படிப்பதே கஷ்டமாகிவிட்டது! இருந்தும் முயன்று.. முடித்துவிட்டேன்.

வெற்றுத்திரையாகவே
இருக்கிறது மனவெளி.//

பாக்யமாயிற்றே! குப்பைமேடாக இல்லாதிருக்கிறதே...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆஹா... மீண்டும் ஒரு வியாழன் தொடரா? நல்லதொரு ஆரம்பம் - எனக்கு மட்டும் மொத்தமா அந்தக் கதையை அனுப்பிடுங்கன்னு கேட்கத் தோணுது! :)

வார்த்தைகள் சிக்காத கவிதை.

ஜோக்குகளும் ரசிக்கும் விதமாக.

பதிவின் அனைத்து பகுதிகளும் நன்று.

ஜீவி சொன்னது…

ஒரு குறுந்தொடரின் தலைப்பு போல பிரிண்ட் அமையாததால் வாசிக்க தவற விட்டேன் போலிருக்கு.

யார் நீ (கொட்டை எழுத்தில் மத்தியில் தலைப்பு)
கீழே இடைவெளி விட்டு
அந்த மாலை -- 1
தலைப்புக்கு கொஞ்சம் தள்ளி ஒரு முலையில் குறுந்தொடர்
(Underline)
பார்க்க அழகாக இருக்குமே?

ஸ்ரீராம். சொன்னது…

ராஜஸ்தானில் வந்த வெட்டுக்கிளிகள்.  அந்தக் கூட்டத்தை மனக்கண்ணில் கொண்டுவர பொருத்தமாய் வரிகள் இருக்கவேண்டுமே!

ஸ்ரீராம். சொன்னது…

ஹா...   ஹா...   ஹா...   நன்றி வெங்கட்.  மொத்தமாக படித்தால் சே  இவ்வளவுதானா என்று கூட ஆகிவிடும்!

ஸ்ரீராம். சொன்னது…

நன்றாயிருக்கும்தான்.  ஆனால் சொல்லாமலே 1/4 என்பதில் குறுந்தொடர் என்பது அடங்கிவிடுகிறது.  யார் நீ யம் அந்த மாலையும் தற்காலிக, மொத்தத் தலைப்புகள் என்பதும் தெரிந்து விடுகிறது.  முதலிலேயே வைத்துவிடுவதால் தவற விட மாட்டார்கள் என்றும் ஒரு எண்ணம்.  அதையும் தவிர, வெளியிடப்படும் எல்லாவற்றையும் படிப்பார்கள் (படிப்பீர்கள்) என்கிற நம்பிக்கையும் காரணம்!

Geetha Sambasivam சொன்னது…

just a few weeks ago! :)

Geetha Sambasivam சொன்னது…

சிவப்பு வண்ணத்தில் ஜரிகை வைத்த தலைப்பாகை/தொப்பி! குடகுச் சிறப்புத் தலைப்பாகைனு நினைக்கிறேன்.