ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

தரிசாக் கிடக்குது பூமி... இதுக்கா படைச்சான் சாமி?



கருப்பு வெள்ளைக் காலத்தை நினைவு படுத்துகிறதோ...


பசுமையையும் மறக்கடிக்கும் ஏதோ வெறுமை...


தரிசாக் கிடக்குது பூமி...   இதுக்கா படைச்சான் சாமி?



அடடே...  செடிகளுக்கெல்லாம் சக்கரம் வைத்து நகர்த்த முடியுமா?


ஏழு ஸ்வரங்களுக்குள்...


அந்த ஒலிபெருக்கிகள்...   அந்த மோனோ டேப்ரெக்கார்டர்...  அந்தக் காலமும் நெஞ்சிலாடுதே...


இசையால் மயங்காத இதயம் உண்டோ...


கடிகாரங்களை வேறு இடத்தில் வைங்கப்பா....


அந்தக் காலத்துல இங்கே ஒரு மரம் இருந்தது...


சரிகான்...   தனியா எடுத்தாச்சா?


இன்னும் பிரிச்சாச்சா? ஏன் இப்படி?





தொடர்ந்து நடக்க முடியாதுப்பா....  கொஞ்சம் ரெஸ்ட்டு...!


அப்புறம் தொடரலாம் பயணத்தை...


இயற்கைச்சூழலில் ஒரு வீடு...   காய்கறி, மளிகை எல்லாம் நீங்க எங்கப்பா வாங்கறீங்க?  ஸ்விக்கியா?


விவசாயம் செய்கிறோமோ இல்லையோ...


ஜாலியா ஒரு ரைட் போயிட்டு வரேன்!

                    

                  குட்டி ஹாஜின்னு பெயர் இருந்தாலும் பெரிய ஆள்தாங்க அவரு...



                           நம்ம காரை பத்திரமா வெளில வைக்கணும்.   உள்ள                                                           கூட்டத்தோட சேர்த்துடப் போறாங்க....

74 கருத்துகள்:

  1. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. படங்களும் தலைப்புகளும் அழகு.. அருமை..

    தலைப்புகளில் ஒன்றைச் சுட்டு விட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...   எந்தத் தலைப்பு?  கண்டுபிடிக்க முடியுமா என்று சென்று பார்த்தால் எல்லாம் பத்திரமா அங்கே இருக்கே!!!

      "அந்தக் காலத்தில் இங்கே..."  ???

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    பாதுகாப்பான நாட்களாகக் கடக்க வாழ்த்துகளும்
    பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...   வாங்க...

      நீக்கு
    2. மிக சுவாரஸ்யமான தலைப்புகள்.
      கறுப்பு வெள்ளைப் படங்கள் வெறுமையாகத் தான் தெரிகின்றன.

      வண்ணத்தில் எடுத்த படங்கள், களைத்த மாடு, நடக்கும் மாடுகள்,
      மாங்கொட்டை, கொட்டையிலிருந்து தளிர்
      எல்லாமே சுவை.

      அந்த விண்டேஜ் கடை ஒரு அற்புத சுரங்கம்.
      உள்ளே இருக்கும் வண்டிகளைப்
      படம் எடுக்கவில்லையா.
      வானொலியும், க்ராமஃபோனும் பழைய நினைவுகளை
      மீட்டுகின்றன.
      எங்கள் வீட்டிலும் பழைய கடிகாரங்கள்
      பத்திரமாக இருக்கின்றன.
      சுவை நகைச்சுவையோடு அருமையான பதிவு.

      நீக்கு
    3. நன்றி வல்லிம்மா...  உள்ளே இருக்கும் வண்டிகள் அடுத்த வாரம் அணிவகுக்கக் கூடும்.

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரும் சர்வ சுதந்திரத்துடன் வெளியே நடமாடும் நாட்கள் திரும்பப் பிரார்த்தனைகள். அனைவர் இல்லங்களிலும் அச்சம் விலகி அமைதி திரும்பவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க கீதா அக்கா..  வணக்கம்.

      நீக்கு
  5. இன்று/நாளை(?) திருமண நாள் கொண்டாடும்/கொண்டாடப் போகும் ஸ்ரீராமுக்கும் அவர் பாஸுக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள். இன்று போல் என்றும் இதே மன ஒற்றுமையுடனும், மகிழ்வுடனும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா...   நாளைதான் திருமண நாள்.  நமஸ்காரங்கள்.  வாழ்த்துகளுக்கும் ஆசீர்வாதத்துக்கும் நன்றி.

      நீக்கு
    2. ஸ்ரீராமுக்கும் அவர் 'பாஸு"க்கும் இனிய திருமணநாள் வாழ்த்துகள். எப்போதும் சந்தோஷமாக வாழ்க்கை தொடரணும் என்று ப்ரார்த்திக்கிறேன். (வாழ்த்தியாச்சு. பந்தி எப்போ போடப்போறீங்க? )

      நீக்கு
  6. அத்தனை கருமேகக் கூட்டங்கள் அணி வகுத்து நிற்கையில் முதலிரண்டு படங்களில் வெறுமை எங்கிருந்து வந்தது? வருணன் பூரணமாகப் பொழியக் காத்திருப்பதைத் தான் நினைவூட்டியது. மாடு சாவகாசமாகக் கிடைத்த இடத்தில் அமர்ந்து ஓய்வு எடுக்கிறாப்போல் நமக்கும் கிடைத்த இடத்தில் உட்கார முடிந்தால்?

    பழைய கடிகாரங்கள் எங்க மாமனாரின் பழைய/மிகப் பழைய கடிகாரத்தை நினைவூட்டியது. நாங்க வடக்கே மாற்றலாகிப் போயிருக்கும் சமயம் யாரோ கொண்டு போய்விட்டார்கள்! :((( கிராமஃபோன் ரிகார்டெல்லாம் மாமாக்களிடம் பார்த்திருக்கேன். அது ஒரு காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருமேகக் கூட்டம் இருந்தாலும் ஏதோ ஒரு...  ஏதோ ஒரு...!

      நாமும் திருப்பதியோ வேறெங்கோ சென்றால் முடியவில்லை என்றால் கிடைத்த இடத்தில் உட்காருவோம்னுதானே!

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி.  இனைந்து பிரார்த்திப்போம்.  வாங்க கமலா அக்கா..  வணக்கம்.

      நீக்கு
  8. மூன்றாம் படத்தில் ட்ராக்டர் வயலை நோக்கிப் போகிறது. ட்ராக்டர் செல்லும் அந்த இடத்தில் உழுதாலும் பயிர் செய்ய முடியாது. கட்டாந்தரை! 16,17 ஆம் படங்களிலே வயல் உழுவதற்குத் தயார் செய்கிறார் உங்கள் உறவுப் பையர்! :))))) கேஜிஎஸ்ஸின் பேரர்? படங்களும் தலைப்புக்களும் நன்றாக உள்ளன. மற்றவற்றையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கு திருமண நாள் நல்வாழ்த்துகள். இன்று போல் நீங்கள் என்றும் சிறப்பாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் முன்மொழிய நான் வழி மொழிகிறேன். நன்றி அவர்களுக்கும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா...   நாளைதான் திருமண நாள்!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      அப்படியா.. . இன்றைய வாழ்த்தை அட்வான்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். என்றும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள் உண்டு. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. 16 ஆம் தேதி திருமண நன்னாள் காணும் Sriraamukkum அவரின் பாஸ்க்கும் இனிய வாழ்த்துகள். என்றும் ஒருமையோடும் மன மகிழ்ச்சியோடும் இருக்க இறைவன் அருள் பொழிய வேண்டும். Manappoorva ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா..   திருமண நாள் நாளை.  எங்கள் நமஸ்காரங்கள்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய படங்களும், அதன் விரிவாக விமர்சனங்களும் நன்றாக உள்ளது.

    முதலிரண்டு படங்களும் நீங்கள் கூறியபடி கறுப்பு வெள்ளையை நினைவூட்டினாலும், அந்த காலத்தில் முதலில் (கேவா கலர்?) கலர் படமென்று வந்ததே.. அதையும் சற்று நினைவூட்டுகிறது.

    வானம் தன் இயற்கையழகை விதவிதமாக மெருகூட்டி காட்டும் திறமைக்கு முன் எந்த செயற்கை அழகு நிலையமும் தோற்றுத்தான் விடும்.

    இப்போது மரங்களை வேரோடு பெயர்த்து வேறு இடங்களில் அதன் இருப்பிடத்தை நிலைநாட்டுவதாக எங்கோ படித்தேன்.
    ஒரு வேளை "உனக்கும் எங்களைப் போல் வாழ்க்கை சக்கரம் உண்டு" என நினைவுபடுத்தவோ அந்த சக்கரங்களை பொருத்தி அந்த உண்மை நிலையினை உணர்த்தியிருக்கிறார்களோ? படங்களை ரசித்தேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா...   எப்ப்பவுமே உங்கள் கற்பனைப் அப்பறவை இன்னும் சிறகடித்துப் பறக்கும்.  உங்கள் கற்பனையும் நல்லா இருக்கு.

      நீக்கு
  12. வாக்கியங்கள் ரசிக்க வைத்தன...

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இசை சம்பந்த பட்ட படங்கள் நன்றாக உள்ளன. இந்த ஒலிப்பெருக்கிகளை பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டது.

    "அந்தகால கிராமஃபோன் மாடல்களுடன் நாங்களும் அந்த காலத்தவர்கள்.. எங்களை யார் வேறு இடத்தில் வைக்கச் சொல்வது..? நாட்டாண்மை தீர்ப்பை (வாசகங்களை) மாத்தி போடு.." எனச் சொல்லப் போகிறது அந்த கடிகாரங்கள். ஹா.ஹா.ஹா.

    /அந்தக் காலத்துல இங்கே ஒரு மரம் இருந்தது.../

    இந்தப்படம் அழகு."அந்த மரத்தின் மன ரணத்தைப் போக்க இணைபிரியாது தோழமை நினைவுகளுடன் நாங்களும் இருக்கிறோம்... ஆனால், எங்களை யாருமே கவனிக்கவில்லையே..!" என்கிறது அந்த மரத்தின் பழுத்து,காய்ந்து உதிர்ந்திருக்கும் இலைகளும், காய்ந்த ஓரிரு குச்சிகளும். எப்படியும், ஒரு அழகான கவிதை பிறப்பதற்கு இந்தப்படம் உதவியாக இருக்கும்.

    மாடு நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொள்ளும் படம் அழகு. தன் முடிவை பிறரை கேட்காமல், செயலாக்கும் விதத்தில் அது மனிதரை விட சுதந்திரம் பெற்றவை. ஹா. ஹா.

    தங்கள் உறவுகள் மாதிரி டிராக்டரை ஓட்டிப்பழகும் படங்களையும் மற்றப் படங்களையும் மிகவும் ரசித்தேன்.

    தனிமை வீடு அழகாக உள்ளது. கூடவே நட்பாக இயற்கையும், இயற்கை வாழ் நட்பினங்களும் இருக்கும் போது வேறு எதைப்பற்றியும் கவலை எதற்கு.. ஹா.ஹா.ஹா.

    இந்த தடவை அனைத்துப் படங்களும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாங்களும் அந்த காலத்தவர்கள்.. எங்களை யார் வேறு இடத்தில் வைக்கச் சொல்வது..? நாட்டாண்மை தீர்ப்பை (வாசகங்களை) மாத்தி போடு.." //

      அந்தக் காலத்தவர்தான்.  ஆனால் இன்னமும் அவர்களுக்கு வேலை இருக்கிறது!  மேலும் அவர்களை வெளியே போக சொல்லவில்லையே அவர்கள் இடத்துக்குதானே அனுப்ப நினைக்கிறோம் நாம்!

      நீக்கு
    2. //ஆனால், எங்களை யாருமே கவனிக்கவில்லையே..!" என்கிறது அந்த மரத்தின் பழுத்து,காய்ந்து உதிர்ந்திருக்கும் இலைகளும், காய்ந்த ஓரிரு குச்சிகளும். எப்படியும், ஒரு அழகான கவிதை பிறப்பதற்கு இந்தப்படம் உதவியாக இருக்கும்.//

      ஆஹா...   நல்லதொரு கற்பனை.  இந்தப் பொருளில் ஏற்கெனவே நான் ஒரு கவிதை எழுதியும் இருக்கிறேன்.

      நீக்கு
    3. //பிறரை கேட்காமல், செயலாக்கும் விதத்தில் அது மனிதரை விட சுதந்திரம் பெற்றவை.//

      உண்மை.  உண்மை.  நம்மைவிட அவற்றுக்கு சுதந்திரம் அதிகம்!

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      /அந்தக் காலத்தவர்தான். ஆனால் இன்னமும் அவர்களுக்கு வேலை இருக்கிறது! மேலும் அவர்களை வெளியே போக சொல்லவில்லையே அவர்கள் இடத்துக்குதானே அனுப்ப நினைக்கிறோம் நாம்!/

      உண்மை.. என்னால் கொஞ்சம் அவசரப்பட்டு பஞ்சாயத்துக்கு வந்தவர்கள்.. ஹா.ஹா.

      /இந்தப் பொருளில் ஏற்கெனவே நான் ஒரு கவிதை எழுதியும் இருக்கிறேன்/

      ஆகா.. வியழனில் பகிரலாமே.... அல்லது ஏற்கனவே பகிர்ந்து விட்டீர்களா? ஆனால்,எப்படியும் மறுபடியாக அதை எப்போது பகிர்ந்தாலும், தங்கள் அழகான கவிதையை மனமாற படித்து ரசிக்கலாம். எனவே எதிர்பார்க்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. //ஆகா.. வியழனில் பகிரலாமே.... அல்லது ஏற்கனவே பகிர்ந்து விட்டீர்களா? ஆனால்,எப்படியும் மறுபடியாக அதை எப்போது பகிர்ந்தாலும், தங்கள் அழகான கவிதையை மனமாற படித்து ரசிக்கலாம். எனவே எதிர்பார்க்கிறேன். நன்றி./

      ஏற்கெனவே இரண்டு மூன்று முறை பகிர்ந்து விட்டேன் என்று ஞாபகம்.  ஆனாலும் உடனே எடுக்கும்படி சேமிப்பில் இல்லை.  தேடிப்பார்க்கிறேன்!

      நீக்கு
    6. வாடியதால்
      வாசம் தொலைத்த
      மலரொன்று
      விழுந்து கிடக்கிறது
      வற்றிய குளத்தில்

      ஏற்கெனவே
      விழுந்து கிடந்த
      மஞ்சள் இலைகள்
      காற்றில் நகர்ந்து
      ஆதுரத்துடன்
      அணைத்து மூடுகின்றன
      மலரை

      நீக்கு
    7. ஆஹா.. கவிதை அருமை. இதுதான் அப்போது எழுதிய கவிதையா? வியாழன் வரை காத்திருக்கச் செய்யாமல் உடனே தேடி எடுத்து கவிதையை பகிர்ந்தமைக்கு என் பணிவான நன்றிகள்.அற்புதமான பொருள் நிறைந்த கவிதைக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள்

      "உன்னுடனே வளர்ந்த நான் உன்னை விட்டு பிரிந்திங்கு வாழ்ந்திருந்தாலும்,நீ எப்போது வரப்போகிறாய் என நாட்கள் பல காத்திருந்ததற்கு இன்றுதான் அதற்குரிய பலன் கிடைத்தது என்று மலரை அணைத்து மூடும் போது அந்த மஞ்சள் இலைகள் வாய்க்குள் முணுமுணுத்திருக்குமோ..!"

      கவிதை பிரமாதம்.! என்ன ஒரு ஆதூரமான அரவணைப்பு வரிகள்..

      அந்த அன்பெனும் அரவணைப்பு
      உங்கள் நெஞ்சமெங்கும்
      பொங்கும் மணம் வீசி
      பரவி உள்ளதால், உங்கள்
      படைப்பெனும் கவிதையிலும்
      கடுகளவும் அது குறையாமல்
      காற்று களைந்து வீசிய
      மஞ்சள் இலைகளுக்கும்
      மாசற்ற அன்புள்ளம் தந்து
      வாடி வதங்கிய மலரானாலும்
      அவற்றிற்கும் அன்பை பகிர்ந்து
      அதையும் நாளும் வற்றாதிருக்க
      வழி செய்கின்றன.

      உங்கள் இயல்பான கவிதை கை கொட்டிச் சிரிக்கும் வண்ணம் எழுந்த இது என் உளறல் கசடுகள்..மிக்க நன்றி சகோ..

      நீக்கு
  14. ஆகா..
    இன்று திருமண நாளா?...
    அன்பின் நல்வாழ்த்துகள்...

    பூமகளின் பொற்கரத்தினைப் பற்றிய புண்ணியன் - எங்கள் அப்பன் ஒப்பிலியப்பன் திருவருளால் எல்லா நலன்களும் பெற்று வாழ்வீர்களாக!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜூ ஸார்.   நாளைய திருமண நாளுக்கு அட்வான்ஸாக வாழ்த்துகள்  மகிழ்ச்சி.

      நீக்கு
  15. இனிய காலை வணக்கம்.

    முதல் இரண்டு படங்கள் வெகு அழகு. மற்றவையும் நன்று.

    பதிலளிநீக்கு
  16. அழகான படங்கள்...

    தலைப்பால் :

    கண்டதனால் பித்தம்...
    நான் கொண்டதுதான் மிச்சம்...
    தந்திடவா முத்தம் - அடி
    வந்திடுமா சத்தம்...?

    வெவகாரமான பாடலாச்சே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...   ஹா...  ஹா...   நினைத்தேன், யாராவது நினைவுகூர்வார்கள் என்று.  ஆனால் இங்கு இந்தப் படத்துக்குப் பொருத்தமாக அந்த வரி மட்டுமே எடுத்தாளப்பட்டிருக்கிறது!

      நன்றி DD.

      நீக்கு
  17. சுவரில் இருந்த சுவர்க்கெடிகாரங்களில் ஒன்று வீட்டில் எங்கள் தாத்தா வைத்திருந்த கெடிகாரத்தை நினைவுபடுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ...   நாங்கள் எடுக்கவில்லை முனைவர் ஐயா...   யாரோ எடுத்து அங்கே வச்சிருக்காங்க போல!!!!

      நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.

      நீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. படங்கள், அதற்கு கொடுத்து இருக்கும் வர்ணனைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    மாடு கட்டம் போட்ட சட்டை போட்டு இருப்பது போல் படம்!

    //ஜாலியா ஒரு ரைட் போயிட்டு வரேன்!//

    நல்லா இருந்து இருக்கும் ரைட்.


    பதிலளிநீக்கு
  20. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம் , உங்கள் பாஸுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    ஒப்பிலியப்பன் எல்லா வளங்களையும், நலங்களையும் தருவார்.
    அங்கு தானே திருமணம் நடந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா..   ஆம், எங்கள் திருமணம் ஒப்பிலியப்பன் கோவிலில்தான் நடந்தது.  நாளை எங்கள் திருமண நாள்.  வாழ்த்துகளுக்கும், ஆசீர்வாதத்துக்கும் நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  21. //இசையால் மயங்காத இதயம் உண்டோ?//

    யார் பாடல் வரி இது?.. மயங்குதலுக்கும் இதயத்திற்கும் என்ன தொடர்பு?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "இசையால் வசமாகா இதயமெது?" என்றொரு டி எம் எஸ் பாடல் உண்டு. அதையொட்டி எழுதப் பட்டது.

      நீக்கு
  22. அன்பான திருமணத் திருநாள் வாழ்த்துக்கள், ஸ்ரீராம் தம்பதியருக்கு.

    கோமதிம்மா, என்னப்பன் ஒப்பிலியப்பன் தான் எங்கள் குல தெய்வம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்னப்பன் ஒப்பிலியப்பன் தான் எங்கள் குல தெய்வம்!//

      அப்படியா சார் , மாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி போகும் கோவில்.

      நீக்கு
  23. படங்கள் எல்லாமும் அழகாக இருக்கின்றன. அதற்கான வரிகளும் சிறப்பு

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  24. ஆஹா முதல் இரு படங்கள் வெகு அழகு.!

    மத்ததும் ஓகே.

    பயணம் செய்யும் போது பார்ப்பதில் எங்கேயோ ஒரு வீடு இருக்கும் அப்புறம் தூரத்தில் ஒரு வீடு இருக்கும் சுற்றிலும் வெட்ட வெளி அல்லது வயல்கள் இப்படித்தான் இருக்கும் இவர்கள் எங்கு சென்று சாமான் எல்லாம் வாங்குவார்கள் என்று தோன்றும். தண்ணீர் இருக்குமோ என்றெல்லாம் கூடத் தோன்றும். டில்லி செல்லும் போது பல பெண்கள் அடுக்டுக்காகக் குடங்களைத் தலையில் வைத்துக் கொண்டு வெட்ட வெளியில் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். மனது கஷ்டமாக இருக்கும். நாமெல்லாம் எத்தனை வசதியாக இருக்கிறோம் என்று தோன்றும். அதிலும் குறை காண்கின்றோமே என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. மாடு எல்லாம் ஜாலியா உக்கார்ந்திருச்சு பாருங்க!!

    விண்டேஜ் படங்கள் நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  26. ஸ்ரீராம் அண்ட் பாஸ் அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. தலைப்புகள் மி ரசிக்கும்படி இருந்தன

    முதலிரண்டு படங்கள் அழகா இருக்கு

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!