திங்கள், 17 ஆகஸ்ட், 2020

திங்கக்கிழமை :  கத்தரிக்காய் அடைத்த கறி - ரமா ஸ்ரீநிவாசன் ரெஸிப்பி 

கத்தரிக்காய் அடைத்த கறி
ரமா ஸ்ரீநிவாசன் 

பழமுதிர் நிலையத்திற்கு காய்கறி வாங்கச் சென்ற என் கணவர்
வளமான காய்களை கண்டவுடன் சொக்கிப் போய் எல்லாக் காய்களையும் அள்ளி போட்டுக் கொண்டு வந்து விட்டார். அதுவும் பள பளவென இருந்த கத்தரிக்காய்களை பார்த்தவுடன் இரண்டு கிலோ பிடித்துக் கொண்டு வந்து விட்டார். நாம்தான் தின்றே தீர்க்கும் கும்பல் ஆயிற்றே.

எனவே, ஒரு வாரத்திற்கு முன் ஒரு கிலோவை எடுத்து கத்தரிக்காய்
அடைத்த கறி சமைத்தேன்.  என் கணவர் வாயிலிருந்து முத்து உதிராது.
அவரே, சுவைத்து விட்டு “அட, கத்தரிக்காய் அடைத்த கறி என் பாட்டி
சமைப்பது போலவே செய்திருக்கிறாய்” என்றார் பாருங்கள். உலகமே என் கண் முன் சுழன்றது.

அதை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 

வேண்டிய பொருட்கள் :
கத்தரிக்காய் : 1 கிலோ
கடலை பருப்பு : 2 டேபிள் ஸ்பூன்
தனியா : 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த சிவப்பு மிளகாய் : 8
உப்பு : வேண்டிய அளவு
மஞ்சள் பொடி : ¼ டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் : 2 சிட்டிகை
நல்லெண்ணை : ஒரு கப்

செய்முறை :

வானலியை அடுப்பிலேற்றி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை சேர்க்கவும். சூடாகிய பின்னர் முதலில் கடலை பருப்பை போடவும். ஒரு நிமிடம் அதை வறுத்த பின்னர், தனியாவை சேர்க்கவும். பின்னர் கடைசியாக மிளகாயை சேர்க்கவும். இது கலர் மாறாமலிருப்பதற்காக.  நான் ஒரு சிட்டிகை பெருங்காயமும் சேர்ப்பேன். நன்றாக வறுபட்டு வாசம் வரும்போது கீழே இறக்கி வைக்கவும். நன்றாக சூடு ஆறிய பின்னர் இவை யாவையையும் மிக்ஸியில் சேர்த்து கொர கொரவென அரைக்கவும்.

இப்போது மறுபடியும் வாணலியை அடுப்பிலேற்றி இரண்டு டேபிள்
ஸ்பூன் எண்ணை சேர்த்து, சூடான பின் கடுகு, சிறிது உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். கடுகு வெடித்து பருப்பு பொன் நிறமாய் மாறிய பின்னர், வெட்டி அலம்பி வைத்த கத்தரிக்காய்களை வாணலியில் போடவும். இங்கும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும். வேண்டுமானால் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.


சிறிது நீர் தெளித்தும் வதக்கலாம். எங்கள் வீட்டில் சிறிது சிறிதாக எண்ணை சேர்த்து வதக்குவோம். ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடியை இப்போது சேர்த்து விடுங்கள். நன்றாக கரண்டியால் கிளறி வதக்கவும்.


காய் நன்றாக வதங்கிய பின், வேண்டிய அளவு உப்பும், அரைத்து வைத்த
பொடியையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின்னர் இறக்கி
வையுங்கள்.


வேறு பாத்திரத்திற்கு மாற்றுங்கள்.


இப்போது கத்தரிக்காய் அடைத்த கறி தயார். சிலர் கத்தரிக்காய்களை
காம்பை மட்டும் வெட்டி விட்டு துண்டுகளாக வெட்டாமல் நான்கு பங்குகளாக பிளந்து அதற்குள் பொடியை அடைத்தும் சமைப்பார்கள். அவை யாவும் உங்கள் சௌகரியம்.

இந்த காய் செய்யும் நாளில் எங்கள் வீட்டில் ஒரு வற்றல் குழம்பும்
வேண்டுமென்றால் பொரித்த அப்பளமும் இருக்கும்.

சமைத்துப் பாருங்கள். சாப்பிட்டுப் பாருங்கள். ரசித்துப் பாருங்கள்.

================

                       >>>  மின்நிலா 013 LINK



================

80 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா அக்கா...   இப்போதுதான் உங்கள் வீட்டு கிருஷ்ணரை தரிசித்து விட்டு வந்தேன்.  உங்கள் / நம் இனிய பிரார்த்தனைகளை கிருஷ்ணன் நிறைவேற்றித்தர வேண்டுவோம்.

      நீக்கு
    2. அன்பு கமலாமா,அன்பு ஸ்ரீராம்,வரப்போகும் அனைவருக்கும்
      இனிய திங்கள் காலை வணக்கம்.

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...   வாங்க...

      நீக்கு
  2. இன்று மணநாள் கொண்டாடும் ஸ்ரீராமுக்கும் அவர் பாஸுக்கும் மீண்டும் இனிய திருமண நாள் வாழ்த்துகள். (எத்தனாவது?) இன்று போல் சேச்சே, இந்தக் கொரோனா காலம் போல் இல்லாமல் நல்லபடியாகப் பழைய நிலைமைக்கு வந்து மகிழ்வுடனும், சந்தோஷத்துடனும் பிள்ளை, மாட்டுப்பெண்களுடனும், பேரன், பேத்திகளுடனும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி...   நன்றி...  நன்றி கீதா அக்கா.

      நீக்கு
    2. ஸ்ரீராம் தம்பதியினருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்......

      நீக்கு
  3. வந்திருக்கும் சிநேகிதிகளுக்கும் வரப்போகும் நண்பர், நண்பிகளுக்கும் இனிய காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா தாக்கம் பற்றிய செய்தி எதுவானாலும் அது உண்மையாக இருக்கவும் பிரார்த்தனைகள். மக்கள் வாழ்வில் பழையபடி இயல்பான நிலைமை திரும்பி அனைவரும் மகிழ்வுடன் இருக்கவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம்.  வாங்க.  அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. இன்னிக்கு ரமா ஸ்ரீநிவாசன் செய்முறையா? இந்தக் கறியை நாங்கச் சின்னச் சின்ன முழுக் கத்திரிக்காயில் தான் அதிகம் பண்ணுவோம். நறுக்கிப் பண்ணுவது எப்போதாவது தான். ஆனால் கத்திரிக்காயை எப்படிச் சமைத்தாலும் சாப்பிடப் பிடிக்கும். ரமா ஸ்ரீநிவாசன் பண்ணி இருக்கும் கத்திரிக்காய்க் கறி நன்றாக வந்துள்ளது. எங்க வீட்டிலும் கத்திரிக்காய்க் கறி எனில் அன்னிக்கு வெறும் குழம்பு அல்லது வற்றல் போட்டு வற்றல் குழம்பு தான்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்று திருமணநாள் காணும் தங்களுக்கு எங்களுடைய இனிய வாழ்த்துகள். இதேப் போல் தொடர்ந்து வரும் திருமணநாட்கள் அனைத்தும்,ஆரோக்கியமாக, ஆனந்தமாக அமைந்து இன்று போல் என்றும் சிறப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நீங்கள் வந்து கிருஷணரை தரிசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றும் நலவாழ்த்துகளை
      அன்பு ஸ்ரீராமுக்கும் அவர் பாசுக்கும் சொல்கிறேன்.
      என்றும் நலமுடன்,அமோகமாக,
      ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
      நல் ஆசிகள்மா.

      நீக்கு
  6. ரமாஸ்ரீ யின் அடைத்த கத்திரிக்காய் பிரமாதமாக வந்திருக்கிறது.
    கத்திரிக்காயை எந்த ரூபத்தில் சாப்பிட்டாலும் எனக்கு ஓகே.
    நன்றி ரமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமி, நீங்கள்ளாம் நள பாகத்தின் மேல்ல்ல்ல்ல்ல்ல் படியில் நிற்பவர்கள். எனினும் பாராட்டுதலுக்கு நன்றி.

      நீக்கு
  7. மின் நிலா பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
    அன்பு கௌதமன் ஜிக்கு நன்றி.
    என் நாடி ஜோதிடப் பதிவு
    மின் நிலாவில் வந்தது மகிழ்ச்சி.

    எல்லோருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
    அடுத்த திங்களுக்குள்
    இறுதிப் பகுதியையும் எழுதி விடுகிறேன்,
    மீண்டும் நன்றி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. நாடி ஜோதிடம் நான்கு பகுதிகள் என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம் !

      நீக்கு
    2. அப்படியா.நாலு இல்லாட்டாலும் மூன்றாவது இருக்கும். என்னால் சுருக்கி எழுதவே முடியவில்லைமா.

      நீக்கு
  8. கத்தரியை நாலாகப் பிளந்துவிட்டு பொடி சேர்த்தால், அதனை கத்தரி பொடிதூவிக் கரேமது என்போம்.

    வெறும்ன பிளந்து பொடி அடைத்தால் கத்தரி பொடி அடைத்த கறி என்போம். தி பதிவில் அது வெளிவந்திருக்கிறது.

    என் மனைவி, கத்தரியை திருத்தி பொடி தூவித்தான் செய்வாள். ஒன்று, பொடி முழுமையாகச் சேரும், இரண்டு, கத்தரில உள்ள புழு இருக்கான்னு செக் பண்ணணும்னா கத்தரியை முழுவதுமாகத் திருத்தினால்தான் செரியும் என்பாள்.

    இன்றைய கத்தரி பொடிதூவிக் கரேமது நன்றாக வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  9. Sriram & his boss - இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் கைப் பக்குவத்தில் தயாரான கத்திரிக்காய் கறி நன்றாக வந்துள்ளது. படங்களும், செய்முறைகளும் கண்களையும், மனதையும் கவர்கின்றன. கத்தரிக்காய் எல்லோருக்குமே பொதுவாக பிடித்தமான காய்தான். எங்கள் மாமியாருக்கு வாரத்தில் இரண்டு மூன்று முறை கத்திரிக்காய் சம்பந்தபட்ட ரெசிபிகளை செய்து தந்தால் ஆனந்தமாக விரும்பி உண்பார்.

    நானும் இப்படித்தான் காயுடன் கூட சேரும் சாமான்களை வறுத்தரைத்து சேர்ப்பேன். கத்திரிக்காய் காரக்கறி என்றால், அதற்கு மோர் குழம்பும் பொருத்தமாக இருக்கும் என்பது என் எண்ணம். மணம் வீசும் கத்திரிக்காய் பதிவு தந்த சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. இன்று திருமண நாள் காணும்
    ஸ்ரீராம் தம்பதியருக்கு அன்பின் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  12. எனக்கு சிறுவயதில் கத்தரிக்காய் என்றால் பிடிக்காது... ஆனால் இப்போது கத்தரிக்காய் இல்லாமல் சமையல் இல்லை என் வீட்டில் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு வெங்காயம் தக்காளி இந்த நான்கு காய்யும் எப்போதும் ஸ்டாக் செய்து வைத்திருப்பேன்...


    ராமா ஸ்ரீனிவாசன் அவர்களின் கத்தரிக்காய் சமையல் நன்றாக வந்திருக்கிறது.... இங்கு சொன்ன பொருட்களை அரைத்து போடுவதற்கு பதிலாக அவசரத்திற்கு சாம்ப்பார் பொடியை போட்டும் செய்யலாம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரமாக செய்ய வேண்டுமெனில் அவ்வாறும் செய்வேன்.

      நீக்கு
  13. இதை செய்வதற்கு நல்ல கத்திரிக்காயாக இருக்க வேண்டும் உள்ளே பூச்சி இருக்ககூடாது. காரணம் க.காய் வெட்டுவதில்லையே....

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜீ சார், ரெலெவென்ட்டான கருத்து. நன்றி.

      நீக்கு
  14. சுவையான குறிப்பு. கத்திர்க்காய் அவ்வளவு பிடித்தமானது அல்ல!

    திருமண நாள் காணும் திருமதி/திரு ஸ்ரீராம் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. ஸ்ரீராம் தம்பதியருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  16. தம்பதியருக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  17. கத்தரிக்காய் அடைத்த கறியை நன்றாக செய்துள்ளார்கள்...

    கிடைக்கும் கத்தரிக்காய் தரத்திற்கேற்ப சுவை மாறுபடும்...

    பதிலளிநீக்கு
  18. அட இன்று எங்கள் வீட்டிலும் இதே தான். ஸ்டஃப்ட் கத்தரிக்காய். இதே ரெசிப்பிதான். ஒரே ஒரு வித்தியாசம் இன்று நான் தேங்காய்ப்பால் விட்டுச் செய்த பால் கறி கத்தரிக்காய். செய்முறை ஃபோட்டோ எடுக்க முடியவில்லை.

    நல்ல ரெசிப்பி ரமா...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. திருமணநாள் வாழ்த்துக்கள் ஸ்ரீ ராம் சார்!!
    சமையல் குறிப்பை பொறுத்தவரையில் இதை கத்திரிக்காய் பொடிக் கறி என்றும் ஸ்டஃப் செய்து செய்தால் அதை அடைத்த கறி என்றும் சொல்வது எங்கள் வழக்கம். நன்றாக வந்து இருக்கிறது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. ஸ்ரீராம் அண்ட் சுஜா உங்கள் இருவருக்கும் மகிழ்வான திருமண நாள் வாழ்த்துகள்! என்றேன்றும் நீங்கள் மற்றும் குழந்தைகள் மகிழ்வுடன் இருந்திடவும் வாழ்த்துகள் மனமார்ந்த பிரார்த்தனைகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. செய்முறையும் மாறுபட்டிருக்கு. வழக்கமாக செய்யும் கத்திரிக்காய் கரியிலிருந்து இது எந்த விதத்தில் மாறுபட்டிருக்கிறது என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  22. கத்திரிக்காயை முழுசாக நறுக்கிக் கொள்ளாமல் இதழ் இதழாகப் பிரிகிற மாதிரி கத்தரியின் அடிபாக (base)
    -ஐ அப்படியே வைத்துக் கொண்டு குறுக்காக நறுக்க வேண்டும்.
    பிறகு ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் பொடியை இதழ் பகுதியைப் பிரித்து உள்ளே வைத்து அடைத்து மூடி என்ணை விட்ட வாணலியில் இட்டு வதக்க வேண்டும்.

    இதுவே இதற்கான செய்முறை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திங்கக் கிழமை பதிவுக்கு ஜீவி சாரின் அதிசய வருகை.

      https://engalblog.blogspot.com/2016/11/161114.html

      இது இங்கு 2016ல் வெளிவந்த கத்தரி பொடி அடைச்ச கரேமது. இதைத்தான் நீங்க சொல்றீங்கன்னு நினைக்கிறேன்.

      இதுல ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா, ஒழுங்கா கத்தரியை நாலாப் பிளந்து உள்ள செக் பண்ணலைனா, கத்தரிக்காய் சுத்தமா இருக்கான்னு தெரியாது.

      நீக்கு
    2. கத்தரிக்காயை கூட குறுக்காக நறுக்கும் போதே தெரிந்து வணக்கம் விடும் நெல்லை.
      கத்திரிக்காய் கறி என்று அவர்கள் தலைப்பிட்டிருந்தது தான் உசுப்பி விட்டு விட்டது.

      நீக்கு
  23. இதற்கு குண்டு கத்தரிக்காய் தான் லாயக்கு.

    பதிலளிநீக்கு
  24. அந்த 'அடைத்த' என்பதற்கான தாத்பரியத்தை நெல்லை வந்து தான் விளக்க வேண்டும். அவர் தான் இதற்கெல்லாம் அத்தாரிட்டி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை, பெரும்பாலும் என் மனைவி எபி பதிவுகளைப் படிப்பதில்லை. இந்தப் பின்னூட்டத்தைப் படித்தால், சிரித்துக்கொள்வாள் (பாரேன்...தக்கனூண்டு தெரிஞ்சு வச்சிக்கிட்டு, நளபாக அதாரிட்டி மாதிரி வேஷம் போட்டிருக்கார் என்று. ஹாஹா)

      நீக்கு
  25. ஸ்ரீராம் தம்பதியருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் !
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  26. கத்திரிக்காய் கறி செய்முறை நன்றாக இருக்கிறது.படங்கள் நன்றாக இருக்கிறது.
    நானும் இப்படி செய்வேன்.
    அடைத்து செய்வதை விட இப்படி செய்வதுதான் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் என் பெண்களுக்கும். அடைத்து செய்தால் heavyயா இருப்பதாக கூறுகிறார்கள்

      நீக்கு
  27. ஸ்ரீராம் தம்பதியருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  28. கத்திரிக்காய் அடைத்த கறி , நாங்கள் வறுத்த எள்ளு தேங்காய்த்துருவல் சேர்த்து அரைப்போம்

    பதிலளிநீக்கு
  29. தங்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  30. மின்னிலா - வெறும்ன எ.பியின் காப்பி பேஸ்டாக இல்லாமல், ஏதேனும் மாற்றங்கள் இருக்கணும் என்று கேஜிஜி சார் மெனெக்கிட்டிருக்கீங்க. (தி.பதிவுக்கு கடைசில ஒரு ரெலெவண்ட் ஜோக், அப்புறம் வியாழன் எழுத்தில் நீங்கள் போட்டுள்ள பெண் படம், ஸ்ரீராம் போஸ்டில் இருந்ததா என்று தேட வைக்கிறீங்க ஹாஹா) பாராட்டுகள். அந்த இதழிலேயே அந்த வாரங்களில் உங்களைக் கவர்ந்த பின்னூட்டங்களையும் ஒரு பகுதியாகப் போடலாம். 'கவர்வது' மட்டுமே CRITERIAவாக இருந்தால் அந்தப் பகுதி நல்லா இருக்கும்.

    வல்லிம்மா நாடி ஜோதிடம் பற்றி எழுத ஆரம்பித்ததும் நல்லா இருக்கு. ஆனா அடுத்த வாரத்தில் இறுதிப் பகுதியாமே...கொஞ்சம் நீட்டி எழுதினா என்னவாம்? இல்லை 'நாடி ஜோதிடம்' என்ற தலைப்பில் எழுதுங்க, மின்னிலாவில் ஒரு தொடரா கொண்டு செல்ல எண்ணம் என்று நீங்க இங்க சொல்லியிருக்கலாமே

    மின்னிலா நல்லா வந்திருக்கு. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி நெல்லை. இன்னும் நிறைய செய்யவேண்டும் என்னும் ஆர்வம் இருக்கிறது. செய்வோம்!

      நீக்கு
    2. நீட்டுவது சிரமம் இல்லை முரளிமா.! இன்று கடைசி போஸ்டர் நினைவிருக்கிறதா:) அது போட்டால் அடி பிடி சண்டையோடு எல்லோரும் சினிமா பார்கக ஓடுவார்கள்.:).என்பதிவில் எழுத செய்தி இருந்தாலும் பார்த்து எழுத வேண்டும். பசங்களும் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.ஜாக்ரதையா எழுதணும்.!நன்றி மா.

      நீக்கு
  31. கத்திரிக்கா ரெசிப்பி நல்லா இருக்கு .ஆனா இங்கே நம்மூர் கத்திரிக்கா கிடைக்கறதில்லை .முள்ளு கத்திரிக்காய் என்று ஊரில் முந்தி அப்பா வாங்கிட்டு வருவார் .அதில் அம்மா செய்வார் .நம்மூர் கத்திரி கிடைச்சா செய்து பார்க்கிறேன் 

    பதிலளிநீக்கு
  32. ஸ்ரீராமுக்கும் திருமதி ஸ்ரீராமுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  33. இதைக் கத்தரிக்காய் பொரியல் கறி என்றும் சொல்லலாம் போல, பார்க்கவே நன்றாக இருக்கிறது.. ஒரு தடவை செய்ய வேண்டும்

    பதிலளிநீக்கு
  34. அனைவரும் நலமாக இருக்கிறீங்கள் என்பது தெரியுது.. நலம் வாழ என் நாளும் என் வாழ்த்துக்கள்.

    என் வாலிலே, தன் ஒரு தலைமயிரைக் கட்டி இழுத்தா அஞ்சு... இக்கடச்சூடு என:)).. நான் வந்து இங்கு விழுந்து விட்டேன்:).. இதிலிருந்து என்ன தெரியுது உங்களுக்கு?:).. மீ ரொம்ப வெயிட் குறைஞ்சிட்டேன்:)) ஹா ஹா ஹா சரி அது போகட்டும்..

    ஸ்ரீராமுக்கும் அண்ணிக்கும் ஆஆஆஆஆ கீதா மேலே பெயர் சொல்லிப்போட்டா:)).. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்... இன்று அண்ணிக்கு என்ன கிஃப்ட் குடுத்தீங்க ஸ்ரீராம்?:)...

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு.. தம்பதிகள் வாழியவே நல்லறம் கண்டு...

    பதிலளிநீக்கு
  35. ஸ்ரீராம் தம்பதியினருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!