செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : மழையிலே ஒரு பூனை. ஏகாந்தன்



அன்பு ஸ்ரீராம் / கௌதமன் சார்,

இத்துடன்  ’எர்னஸ்ட் ஹெமிங்வே’யின்  ‘மழையிலே ஒரு பூனை’  சிறுகதையை, மொழியாக்கம் செய்து இணைத்திருக்கிறேன். ஒரு சிறு ‘ஆசிரியர் அறிமுகமும்’ கூடவே.

படித்துப் பாருங்கள்.  சரியாக வந்திருக்கிறதென நம்புகிறேன்.

நன்றிகள் பல.

அன்புடன்,
ஏகாந்தன்

==================================





அயல்நிலத்திலிருந்து ஒரு கதை.



கதைக்கு முன் கொஞ்சம் : அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway (1899-1961) உலக இலக்கியத்தின் மறக்கமுடியாத முகங்களில் ஒன்று. ஒரு எழுத்தாளராக, விளையாட்டுப் பிரியராக, யுத்த பத்திரிகையாளராக பன்முகம் கொண்டிருந்தவர்.

மனிதமனத்தின் மென் உணர்வுகளை நுட்பமாக அவதானித்து, அனாயாசமாக எழுத்தில் கொண்டுவந்த படைப்பாளி. நீண்ட, அலுப்புதட்டும் வார்த்தைப் பிரயோகங்கள், பத்திகளை இலக்கியம் தாங்கிவந்த காலத்தில், அதனை உடைத்துப் புதுமை புகுத்திய ஆளுமை. ரத்தினச்சுருக்கமாக, லாவகமாகப் பேசும் எழுத்து. 1953-ல் Pulitzer Prize; 1954-ல் இலக்கியத்திற்கான நோபல். ‘The Old Man and the Sea', ’For Whom The Bell Tolls’, ’A Farewell To Arms’, 'Men Without Women' போன்ற புகழ்பெற்ற நாவல்கள் அவர் பெயரைக் காலமெலாம் சொல்லும். சிறுகதைகளிலும் ஹெமிங்வேயின் ஸ்டைல் அலாதி.

தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது சிறுகதைகளில் ஒன்றை மொழியாக்கம் செய்திருக்கிறேன் எபி - வாசக, வாசகியருக்காக. கதைக்களன் இத்தாலி. படியுங்கள்:

- ஏகாந்தன்


சிறுகதை: எர்னஸ்ட் ஹெமிங்வே

மழையிலே ஒரு பூனை
Cat in the rain | Cats illustration, Cat art, Cat illustrationஅந்த ஹோட்டலில் இரண்டு அமெரிக்கர்கள்தான் தங்கியிருந்தார்கள். அவர்கள் தங்கள் ரூமுக்குப் போகப் படிகளில் ஏறும்போதோ, கீழே இறங்கி வந்துகொண்டிருக்கையிலோ எதிர்ப்பட்ட எவரையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இரண்டாவது மாடியிலிருந்த அவர்களது ரூம் கடலைப் பார்த்தவாறிருந்தது. அதன் முன்னிருந்த சதுக்கத்தில் யுத்தகாலத்து நினைவுச்சின்னம் ஒன்று கம்பீரமாக நின்றது. சுற்றிலும் பரந்திருந்த வனப்பான தோட்டம். ஆங்காங்கே பெஞ்சுகள். நிறையப் பனைமரங்கள். தட்பவெப்பநிலை உகந்ததாக இருக்கையில், அங்கே யாரேனும் ஒரு ஓவியன் கையில் தூரிகையுடன் உட்கார்ந்து வரைந்துகொண்டிருப்பான். ஓவியர்களுக்கு என்னமோ உயர்ந்து வளர்ந்த பனைமரங்களைக்கொண்ட தோட்டங்களையும், கடலையும், தோட்டத்தையும் பார்த்தவாறு எதிர் நின்று பிரகாசிக்கும் பிரும்மாண்ட ஹோட்டல்களையும் பிடித்துப்போய்விடுகிறது. அந்த நினைவுச்சின்னம் அமைந்திருக்கும் சதுக்கத்தைச் சுற்றிப்பார்க்கவென, வெகுதூரத்திலிருந்தும் இத்தாலிய சுற்றுலாக்காரர்கள் வருவதுண்டு

மழை பெய்துகொண்டிருந்தது. பித்தளையினாலான நினைவுச்சின்னம் மழைநீரில் மின்னிக்கொண்டிருந்தது. பனைமரங்களிலிருந்து மழைநீர் சீராக விழுந்து சிதறியது. கூழாங்கற்பாதையின் சிறுசிறுகுழிகள் நீர்த்தேக்கங்களாகிவிட்டிருந்தன. வேகமாக அடித்த மழை கடற்பரப்பைத் தாக்க, நீளவாக்கில் எழுந்துயர்ந்த கடல், கரைநோக்கி சீறியது. விளாசும் மழையில் சிலிர்த்து உள்வாங்கியது. நினைவுச்சின்ன சதுக்கத்திற்கு அப்பால் செல்லும் சாலையில் வாகனங்கள் இல்லை. அதன் நேர் எதிரே, சாலையின் மறுபக்கத்தில் இருந்த கஃபேயின் முன் ஒரு வெய்ட்டர் நின்று சதுக்கத்தையே வெறித்தவாறிருந்தான்.

அந்த அமெரிக்க மனைவி தன் ரூமின் ஜன்னலிலிருந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது ஜன்னலுக்கு நேர்கீழே பூனை ஒன்று, விளிம்புகளில் நீர் கசியும் அந்த பச்சை மேஜையின் அடியில் புகுந்து குன்றியிருந்தது. தன்னை நனைந்துவிடாதபடிப் பார்த்துக்கொள்வதற்குப் ப்ரயத்தனப்பட்டது.

அந்தப் பூனையை எடுத்து வர நான் கீழே போகிறேன்” என்றாள் அவள் கணவனிடம்.

நோ! நான் போகிறேன்..” என்றான் அவன், படுக்கையில் புரண்டவாறே.
நானே போகிறேன். பாவம் அந்தப் பூனை, மழையில் நனையாமல் இருக்க மேஜைக்கடியில் நுழைந்துகொண்டு படாதபாடு படுகிறது..”
மழையில் நீ நனைந்துவிடாதே!” என்றுவிட்டு, அவளது கணவன் இரண்டு தலையணைகளைக் காலுக்கடியில் அழுத்திக்கொண்டான். படிப்பதைத் தொடர்ந்தான்.

கீழே இறங்கிய அவள், வாசலை நோக்கி நடந்தாள். அந்த மூலையில் ரிஸப்ஷன் -ஆஃபீஸின் உட்புறமாக நின்றுகொண்டிருந்த ஹோட்டல் உரிமையாளர் அவளைப் பார்த்தவுடன் பௌவ்யமாகக் குனிந்து வணக்கம் தெரிவித்தார். உயரமான, கம்பீர உருவம். மத்திம வயது. அவர் பக்கம் பார்த்தவாறே தலையசைத்தாள். ”இப்படி ஒரு பேய்மழையாக இருக்கிறதே!” என்றாள்.

ஸி, ஸின்யாரா! (யெஸ், மேம்) மகா மோசமான வெதர்!” என்றவாறு மெல்ல முன் வந்தவரின் முகபாவத்தில், அவளுக்கு ஏதாவது தேவையோ என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலிருந்தது. வாசலின் அந்த மூலை மெல்லொளியில் திளைத்திருந்தது. அங்கே அவர் நின்றிருந்த தோற்றம், உடல்மொழி, மரியாதை எல்லாம் அவளைக் கவரத் தவறவில்லை. கஸ்டமர் ஒருவர் வந்து ஏதோ குறைசொல்ல, சிரத்தையோடு தாழ்த்திய தலையுடன் கேட்டு, மென்மையாக அவர் பதிலளிப்பதை அவள் கவனித்தாள். ஹோட்டல் உரிமையாளராக, பொறுப்பானவராக அவர் தன்னை உணர்த்திய விதம், வெளிப்படுத்திய கண்ணியம், அவளுக்கு உதவ விரும்புவதாய் நளினமாக முன்னே வந்தது - எல்லாம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவரது உயரம், முதிர்ந்த பெரிய முகம், நீளமான கைகள்.. என்பனவும்தான்.

இவ்வாறு அவளுக்குப் பிடித்திருக்க, வாசல் கதவை மெல்லத் திறந்து வெளியே நோக்கலானாள். மழை கடுமை காட்டிக்கொண்டிருந்தது. ரப்பர் ஜாக்கெட் அணிந்திருந்த ஒரு மனிதன், எதிரே இருந்த சதுக்கத்திலிருந்து ஹோட்டலை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தான்

அந்தப் பூனை வலதுபக்கமாகத்தான் இருக்கவேண்டும். மெல்ல தாழ்வார ஓரமாகப் போனால் கிடைக்குமோ என நினைத்து தயங்கி நிற்கையில், குடையொன்று அவளுக்குப் பின்புறமிருந்து விரிந்தது. ஆச்சரியத்துடன் திரும்பினாள். அவளது ரூமைக் கவனித்துக்கொள்ளும் பணிப்பெண். ‘நீங்கள் மழையில் நனைந்துவிடக்கூடாது!’ எனச் சிரித்தாள் கையில் பிடித்திருந்த குடையுடன். ‘ஹோட்டல் உரிமையாளர்தான் என்னை அனுப்பினார்..’ எனவும் சொன்னாள்.

பணிப்பெண் தலைக்குமேல் குடைபிடித்துப் பின்னால் வர, கூழாங்கல்-பாதையில் மெல்ல நடந்த அந்த அமெரிக்கப் பெண், தன் அறையின் ஜன்னலுக்குக் கீழ் வந்து நின்று பார்த்தாள். அந்தப் பச்சை மேஜை மழைநீரில் கழுவப்பட்டுப் பளிச்சிட்டது. ஆனால் அதன்கீழே பூனையைக் காணவில்லை. ஏமாற்றம் மனதைத் தாக்க, விக்கித்து நின்றாள்.

எதைத் தேடுகிறீர்கள், ஸின்யாரா ?’ கேட்டாள் பணிப்பெண்.

ஒரு பூனை.. இங்கிருந்தது!’

பூனை?’ புருவத்தை உயர்த்தினாள் பணிப்பெண்.

ஆம். பூனை ஒன்று..’ என்றாள் இத்தாலிய மொழியில், அமெரிக்கப் பெண்.

பூனையா? இந்த மழையிலே பூனையா?’ சிரிப்பில் கலகலத்தாள் பணிப்பெண்.

ம். இந்த மேஜைக்குக் கீழேதான் உட்கார்ந்திருந்தது. .. எங்கே போய்விட்டது? எனக்கு அது வேணுமே..’ என்றாள் ஏக்கம் ததும்பும் குரலில், அமெரிக்கப் பெண்.

அவள் இங்கிலீஷிற்கு மாறியதும், பணிப்பெண்ணின் முகம் இறுகியது.
வாருங்கள் ஸின்யாரா! உள்ளே போய்விடுவோம். நீங்கள் நனைந்துவிடப்போகிறீர்கள்..” என்று திரும்பினாள் அவள்.

ம்... சரி!” என்றாள் இவள் சுவாரஸ்யமின்றி. ஓரப்பாதையில் திரும்பி நடந்து வாசலுக்கு வந்தார்கள். இவளை உள்ளே நுழையவைத்து, வாசலின் வெளியே நின்று, குடையைச் சுருட்டிக்கொண்டிருந்தாள் பணிப்பெண். அமெரிக்கப் பெண் அந்த ரிஸப்ஷன் ஆஃபீஸைக் கடக்கையில், அங்கு இன்னும் நின்றுகொண்டிருந்தார் ஹோட்டல் உரிமையாளர். இவளைப் பார்த்ததும் மீண்டும் தலையை மென்மையாகத் தாழ்த்தி நிமிர்ந்தார். லேசாகத் தலையசைத்துக் கடக்கையில், அவளுக்குள் ஏதோ ஒன்று சிறிதானது, இறுகியது. அவளைச் சின்னவளாக அதே சமயம், முக்கியமானவளாக அது காட்டியது. தன்னை மிகவும் பிரதானமானவளாக ஒரு கணம், அவள் உணர்ந்தாள். சற்று வேகமாக நடந்து படிகளில் ஏறினாள். ரூம் கதவைத் தள்ளித் திறந்தாள். அவளது கணவன் ஜார்ஜ் இப்போது படுக்கையில் உட்கார்ந்திருந்தான். படித்துக்கொண்டிருந்தான்.
பூனை கிடைத்ததா?” என்றான் கீழே புத்தகத்தை வைத்துக்கொண்டே.

அது போய்விட்டது!”

எங்கே போயிருக்குமோ..” என ஆச்சரியப்படுவதுபோல் கேட்டான் ஜார்ஜ்.

அதன்மேல் அவ்வளவு இஷ்டம் எனக்கு!” என்றாள் மனைவி. ”ஏன் அதை அப்படிப் பிடித்துப்போயிற்று எனத் தெரியவில்லை. மழையின் நடுவில் ஒரு பூனை மாட்டிக்கொண்டு தவிப்பது.. என்ன ஒரு கஷ்டம்.. பாவம். அது வேண்டும் எனக்கு..”

ஜார்ஜ் புத்தகத்தைக் கையிலெடுத்து விரித்தான். தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தான்.

அவனைச் சற்றுநேரம் கவனித்தவள், ட்ரெஸ்ஸிங் டேபிள்பக்கம் சென்றாள். ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு கண்ணாடியில் தன்னைக் கூர்ந்து அவதானிக்க ஆரம்பித்தாள். ஒரு பக்கம் திரும்பிப் பக்கவாட்டாகப் பார்த்தாள். பின் இன்னொரு பக்கம்.. தன் தலையின் பின்பக்கத்தை கவனமாக நோக்கினாள். மேலும், தன் கழுத்தை...
தன் வடிவத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே கணவனிடம் கேட்டாள்: ”நான் என்னுடைய கூந்தலை அடர்த்தியாக வளர்த்துக்கொண்டால், நன்றாக இருக்கும் இல்லை?”

ஜார்ஜ் புத்தகத்திலிருந்து கண்ணை எடுத்தான். அவளது பின்னே, கழுத்துப்புறம் பார்த்தான். ஒரு பையனின் க்ராப்பைப்போல், அவளது முடி நெருக்கமாக வெட்டப்பட்டிருந்தது. ‘எப்படி இருக்கிறதோ அப்படி இருப்பது எனக்குப் பிடிக்கிறது!’ என்றான்.

எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு பையனைப்போல் நான் காட்சி தருவது எனக்குக் களைப்பைத் தருகிறது.” என்றாள் அவன் மனைவி.
அவளைப் பார்த்துக்கொண்டே ஜார்ஜ் நிமிர்ந்து சரியாக உட்கார்ந்தான். ‘நீ நன்றாகத்தான் இருக்கிறாய்!’ என்றான் மேலும்.
தன் கையில் வைத்திருந்த கைக்கண்ணாடியை கீழே வைத்தாள். மெல்ல நடந்து ஜன்னலுக்கருகில் சென்றவள், வெளியே பார்த்தாள். இருட்ட ஆரம்பித்திருந்தது.

... என் கூந்தலை நன்றாக வளர்த்து, இழுத்து வாரிக்கொள்ள விரும்புகிறேன். பின்பக்கம் அழகாக ஒரு கொண்டை. மடியில் ஒரு பூனை. நான் தடவிக்கொடுக்கையில் அது ‘பர்ர்...’ என்று மெதுவாக... ” என்று மிதந்தாள்.

அப்படியா?’ என்றான் அவன்.

மேலும் நான் ..” கண்களில் கனவு மலர, தொடர்ந்தாள். “..கேண்டில்-லைட் டின்னரில், சில்வர் ஸ்பூனுடன் உட்கார்ந்து சாப்பிட ஆசைப்படுகிறேன். ஒரு வஸந்தமான காலகட்டத்தில்.. ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடிமுன் உட்கார்ந்து, என் நீண்ட கூந்தலை முன்னே கொண்டுவந்து, ஆசையாக வாரிக்கொள்ளவேண்டும். எனக்கொரு... பூனை வேண்டும். ம்... அழகான நாகரீக உடைகள்...!”

, ஷட் அப்!” எரிச்சலில் சீறினான் ஜார்ஜ். ”ஏதாவது புத்தகத்தை வைத்துக்கொண்டு படி!” கடுகடுத்துவிட்டு, வாசிப்பதைத் தொடர்ந்தான்.
அவனது மனைவி இப்போது ஜன்னல்பக்கம் வந்து, வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். இருட்டிவிட்டிருந்தது. பனைமரங்களின் மீது இன்னும் பெய்துகொண்டிருந்த மழை, மங்கலான வெளிச்சத்தில் தெரிந்தது.
Cat in the Rain Summary & Analysis From Good Study
எப்படியிருந்தாலும் எனக்கு ஒரு பூனை வேண்டும். இப்போதே வேண்டும். நீண்ட கூந்தல் கிடையாதென்றால், வேறு சந்தோஷமுமில்லை என்றால்... பூனையாவது எனக்குக் கிடைக்கலாமே’ ஒரு ஆழத்திலிருந்து ஆதங்கம் காட்டியது அவளது ஹீனமான குரல்..

ஜார்ஜின் காதில் எதுவும் விழவில்லை. அவன் தன் புத்தகத்தை வாசிப்பதிலேயே இருந்தான். அவனது மனைவியின் கண்கள் ஜன்னலுக்கு வெளியே வெறித்தவாறிருந்தன. சதுக்கத்தில் ஒளிர ஆரம்பித்திருந்தன மின் விளக்குகள். யாரோ மெல்லக் கதவைத் தட்டும் ஓசை.

அவந்தி! (வரலாம்)” என்றான் ஜார்ஜ். புத்தகத்திலிருந்து கண்களை எடுத்துப் பார்த்தான்.

மெல்லத் திறந்தது கதவு. வாசலில் பணிப்பெண் நின்றிருந்தாள். அவளது கையில் ஆமை ஓடு நிறத்திலான- அழகான பெரிய பூனை ஒன்று, உயிர்ப்போடு உட்கார்ந்திருந்தது. தன் மார்போடு அணைத்திருந்தாள்.

எக்ஸ்க்யூஸ் மீ!’ பணிவுடன் ஆரம்பித்தவள், “ஹோட்டல் உரிமையாளர் ஸின்யாராவுக்கு இதைக் கொடுத்துவிட்டு வரச் சொன்னார்!” என்றாள்.
***

62 கருத்துகள்:

  1. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அயலகக் கதை என்றாலும்..
    மழைச் சத்தத்தின் ஊடாக
    அன்பின் மெல்லிசையும் கேட்கின்றது...

    நல்லதொரு உணர்வின் வெளிப்பாடாக கதை...

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். காற்று வேகமாக மிக வேகமாக வீசிக் கொண்டிருக்கிறது. இந்தக் காற்று அத்தனைக் கொரோனா வைரஸையும் அடித்துப் போக முடிந்தால் நன்றாக இருக்கும். அனைவருக்கும் சேர்த்துப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். தொலைக்காட்சிச் செய்திகளே பார்க்காமல் இருந்தால் பரவாயில்லை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா வணக்கம்.  இங்கு காற்று இல்லை.  ஆனால் குளிர் இருக்கிறது.  இரண்டு நாட்களாய் ஏ ஸி போட்டுக் கொள்வதில்லை!  சீக்கிரம் இது தொலைய இணைந்து பிரார்த்திப்போம்.  நானும் செய்திகளே பார்ப்பதில்லை.  ஏன், மறுபடியும் ஏதாவது அதிகமாகிறதா என்ன?

      நீக்கு
    2. //ஆனால் குளிர் இருக்கிறது. இரண்டு நாட்களாய் ஏ ஸி போட்டுக் கொள்வதில்லை! சீக்கிரம் இது தொலைய இணைந்து பிரார்த்திப்போம். // - கொரோனா வைரஸைத்தானே சொல்றீங்க. 20 நவம்பருக்கு மேல்தான் முழுவதும் நீங்குமாம். (அப்படீன்னு ஜோசியர்கள் இப்போ சொல்றாங்க)

      நீக்கு
    3. அப்போ இந்த வருடம், கொரோனா அரக்கன் ஒழிந்ததற்கு தீபாவளி நவம்பர் பதினான்காம் தேதி கொண்டாடிவிடுவோம்!

      நீக்கு
  4. ஓட்டல்காரர் தன் வாடிக்கையாளரைத் திருப்தி செய்த விதம் நன்றாக இருக்கிறது. ஏகாந்தன் நல்லதொரு கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். பூனைக்காக அவர் ஏங்குவதைப் பார்த்தால் துளசி கோபால், அதிரா, ஏஞ்சல் ஆகியோர் மனதில் தோன்றுகிறார்கள். நாங்க அம்பத்தூரில் இருந்தப்போப் பூனைகள் நாங்கள் வளர்க்காமலேயே வீட்டில் வந்து திரிந்து கொண்டு குட்டிகள் போட்டு விளையாடிக் கொண்டிருக்கும். தினம் சாதம் வைப்பேன். பால் ஊற்றுவேன். அக்கம்பக்கத்தினர் பால் ஊற்றாதே என்பார்கள். வீட்டுக்குள் வர விட்டதில்லை என்பதால் பிரச்னை வந்ததில்லை. ஜன்னல் கதவுக்கெல்லாம் வலை போட்டிருந்தோம். பூனை உள்ளே வர முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று ஏஞ்சல் கூட ஒரு பூனைப் பதிவு போட்டிருக்கிறார்.  சுவாரஸ்யமான பதிவு.

      நீக்கு
    2. ஏஞ்சலும் பூனைப்பதிவு போட்டிருக்கிறாரா!

      பூனை பூனை எனப் பல ஏத்தி
      ஒருவர் புகழ்வர் செந்நாப்புலவர்..

      அந்த செந்நாப்புலவர், பிஞ்சு ஞானி, தமிழ் 'D' - எங்கே ? இந்த ‘அன்லாக்’ பீரியடிலும் ஆளைக் காணலியே!

      நீக்கு
    3. @ கீதா சாம்பசிவம்: கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்.
    மழையும்,பூனையும, மென்மையை மதிக்கும் இத்தாலிய விடுதி உரிமையாளரும், அலட்சியம் செய்யும் கணவனும் மிகவும் இயல்பாக மனதை தொடுகின்றனர்.
    ஈர வாசனையுடன் ஒரு நிகழ்ச்சி. ஹெமிங்வேயின் உணர்சசிப் பின்னலகள் ஒரு சித்திரமாக. வி
    ரிகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...   வணக்கம்.

      //ஈர வாசனையுடன் ஒரு நிகழ்ச்சி.//

      ஆம்.  நல்ல வார்த்தை.

      நீக்கு
  6. மொழிமாற்றம் அந்தக் கதையுடன் அப்படியே ஒன்றுகிறது. வித்தியாசம. தெரியவில்லை.ஆர்பபாட்டமில்லாத அழகான இயற்கையான கதை..இப்போது அவர் இருந்து மறைந்த நிலப் பகுதியில் மழையும் புயலும்.
    ஆங்கில எழுத்தின் ஈர்ப்பு, தமிழிலும் உயிர் பெற்றதுதான். அருமை. மிக நன்றி ஏகாந்தன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி.
      ஹெமிங்வே க்யூபாவிலும் அடிக்கடி தங்கி கதைகள் எழுதியிருக்கிறார். பெரிய உலகம்சுற்றி !

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா அக்கா...  நன்றி அன்பான பிரார்த்தனைகளுக்கு..    வாங்க...

      நீக்கு
  8. வாசகர்களை நன்கு கவனிக்கவைத்த பூனை. மொழிபெயர்ப்பு என்று சொல்லமுடியாத அளவிற்கு இயல்பான நடை, அழகான சொற்களின் பயன்பாடு. திரு ஏகாந்தன் அவர்களுக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. கட்டிய கணவனைவிட ஹோட்டல் உரிமையாளர் நல்ல விதமாக புரிந்து வைத்து இருக்கிறார்.

    வாடிக்கையாளரை திருப்திபடுத்த என்ற வகையோடு இருக்கட்டும்.
    (காரணம் சம்பவம் இந்தியாவில் அல்ல இத்தாலியில்)

    மொழி பெயர்த்து தந்த ஏகாந்தன் ஸாருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி... ஹாஹாஹா. நான் இந்த சந்தன வீரப்பன் அந்த சமயத்தில் தலைமறைவாக இருந்தபோது கோபால் அவனை காட்டில் சந்தித்தார். அவனும் நிறைய கேசட்டுகளில் பேசி நாட்டுக்கு அனுப்பி வைத்திருந்தால். அதில், ஈழப் பிரச்சனை பற்றி (அதில் இந்தியா தலையிடுவதை, அமைதிப்படை அனுப்பியதை) அவன் பேசும்போது, 'அடுத்தவன் பொண்டாட்டிக்கு நீ ஏன் சேலை கட்டி விடற? உன் நாட்டிலேயே ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு' என்று சொல்லியிருப்பான். அது என் நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    2. ஹோட்டல் உரிமையாளரின் மனைவி தற்போது விவாகரத்தாம் அது உங்களுக்கு தெரியுமா ?

      நீக்கு
    3. கருத்து சுவாரஸ்யம் கில்லர்ஜி ஜி!

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக உள்ளது. கதையை படித்து வரும் போது மிக மென்மையான மனதுடைய அந்த அமெரிக்க பெண்மணியின் ஈரமுடைய மனதின் அன்பு நம் மனதிலும் நிலைத்து கண்களிலும் சற்றே ஈரத்தை வரவழைக்கிறது.ஓட்டல் உரிமையாளரின் பண்பு இறுதியில் அவரை மிகவும் உயர்த்தி விட்டது.

    /மழை பெய்துகொண்டிருந்தது. பித்தளையினாலான நினைவுச்சின்னம் மழைநீரில் மின்னிக்கொண்டிருந்தது. பனைமரங்களிலிருந்து மழைநீர் சீராக விழுந்து சிதறியது. கூழாங்கற்பாதையின் சிறுசிறுகுழிகள் நீர்த்தேக்கங்களாகிவிட்டிருந்தன. வேகமாக அடித்த மழை கடற்பரப்பைத் தாக்க, நீளவாக்கில் எழுந்துயர்ந்த கடல், கரைநோக்கி சீறியது. விளாசும் மழையில் சிலிர்த்து உள்வாங்கியது./

    இந்த மாதிரி மழை நிகழ்வுகளை விவரிக்கும் போது என் கற்பனைகளிலும் கதையின் நிஜங்கள் வந்து அழுத்தமாக நிற்கின்றன. அருமை. மிகவும் ரசித்தேன்.

    இந்தக் கதையை படிக்கும் போதும் மொழிப்பெயர்ப்பு மாதிரியே தெரியவில்லை. அந்தளவுக்கு அழகாக மொழிப் பெயர்ப்பு செய்து தந்திருக்கும் ஏகாந்தன் சகோதரருக்கு பாராட்டுகளுடன் நன்றிகளும். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துரைக்கு நன்றி. இங்கு வரும் பாராட்டுகள் எல்லாம் கதாசிரியருக்கே போய்ச்சேரட்டும்!

      நீக்கு
  11. ஜார்ஜ்க்கு புத்தகம் ஒன்றே ரசனை போல...!

    ஏகாந்தன் ஐயாவிற்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தப் பரீட்சைக்குப் படிக்கிறாரோ !
      கருத்துக்கு நன்றி DD.

      நீக்கு
  12. அருமையான கதை ஏகாந்தன் அண்ணா. cat in the rain. உங்கள் மொழியாக்கம் அருமை அண்ணா. பூனைப் படத்தைப் பார்த்ததுமே இன்று கதை பூனையைப் பற்றியது என்று நினைத்து அப்புறம் வந்து பார்த்தால் உங்கள் மொழி பெயர்ப்பில் வந்த கதை.

    வாசித்த நினைவு இருந்தது. மகன் வாசித்த போது நானும் கூடவே. இப்போது தமிழில் உங்கள் மூலம் வாசித்ததும் இக்கதை மனதிற்கு இன்னும் நெருக்காமானது போல் இருந்தது. அத்தனை இயல்பான நடையில் மொழியாக்கம் செஞ்சுருக்கீங்க.

    அந்த ஹோட்டல் உரிமையாளருக்குத்தான் என்ன ஒரு ஈரம்! இல்லையா அது ஒரு வேளை வாடிக்கையாள்ரைக் கவனிக்கும் விருந்தோம்பலாகக் கூட இருக்கலாம் இருந்தாலும்...

    இவரது சிறு கதைகள் தொகுப்பு இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்தது இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஆங்கிலக் கதைகளில் அந்த ஊரின் சில மனித இயல்புகள் வெளிப்படும் இடையில் அதனால் கொஞ்சம் டிவியேட் ஆவது போல் தோன்றும் - எனக்கு அப்படித் தோன்றுகிறது என்று நினைக்கிறேன். இக்கதையில் கூட அப்பெண் ரூமுக்கு வந்ததும் தன்னைக் கண்ணாடியில் தன் அழகைப் பார்த்துக் கொண்டு...பேசுவது...
    நம் பக்கம் என்றால் அவள் ரூமிற்கு வந்த பின்னும் அப்பூனை பற்றியே யோசித்துக் கொண்டிருப்பாள் அல்லது அப்பூனை சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகள் அல்லது நினைவுகள் இடையில் கொண்டுவரப்பட்டு கதை முடிவடையும்..

    இவரது கதைகளில் ஏதேனும் விலங்குகள் கண்டிப்பாக வரும்

    எனக்கு Old man at the bridge கதை ரொம்பப் பிடித்தது. மனதைத் தொடும் கதை அது. அவர் விட்டு வரும் விலங்குகள் பத்தி சொல்லுவார் பூனை கூடத் தன்னைப் பார்த்துக் கொண்டு விடும் ஆனால் மற்றவை என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லது அப்பூனை சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகள் அல்லது நினைவுகள் இடையில் கொண்டுவரப்பட்டு கதை முடிவடையும்..//

      அப்பூனை என்று வந்துவிட்டது/.....அப்பூனை இல்லை பொதுவாகப் பூனை பற்றிய...

      கீதா

      நீக்கு
    2. @ கீதா: அந்த அமெரிக்கப் பெண்ணின் மனமெலாம் நிறைவேறா ஆசைகள்.. பூனையாவது எனக்குக் கிடைக்கலாமேகூ- என்பதாக அரற்றும் மென்மனத்தை highlight செய்கிறார் ஹெமிங்வே. சிறுகதையில்கூட, ஒவ்வொரு பாத்திரத்துக்கு ஒரு செறிவு, அழுத்தம் கொடுக்கப்பார்க்கிறார்...

      Old man at the Bridge நான் இன்னும் படிக்கவில்லை. இவரையும், Chekov-ஐயும் படித்துக்கொண்டிருக்கையில் இடையில் புகுந்துவிட்டார் யூ.ஜி.!

      நீக்கு
  14. மேற்பள்ளி நாட்களிலும் கல்லூரி நாட்களிலும் ஹெம்மி௩்வேயின் படைப்புகள் லைப்ரரியில் கடன் வாங்கி படித்துள்ளேன். அதே மனமும் வாசமும் உங்கள் மொழிபெயர்ப்பில் கண்டேன். கீதா கூறியது போல் ஓல்ட் மேன் அட் த பிரிட்ஜ் அம்சமான கதை. இந்த படிக்கும் பழக்கத்தை எனக்கு கற்றுத் தந்த என் சகோதரனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
    ஏகாந்த சார் ஸூப்பர் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் சகோதரரும் நிறையப் படிப்பவரா? எங்கள் வீட்டில் என் அண்ணா புத்தகமும் கையுமாக இருப்பவர். நான் selctive-ஆக படிப்பவன். இருந்தும், அவ்வப்போது புத்தகங்கள் வாங்கிக்கொண்டு இலவச இணைப்பாக வீட்டில் திட்டும் வாங்கிக்கொண்டிருப்பவன்!

      கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. மொழிபெயர்ப்பு இயல்பாக வந்திருக்கு ஏகாந்தன் சார். Palm trees என்பதைத்தான் பனைமரங்கள் என்று மொழிபெயர்த்திருக்கீங்க. Technically இது சரி என்றாலும், பேரீச்சை மரங்கள் என்று சொல்லியிருக்கலாமோ? பனை என்றதும் நம்ம ஊர் பனைமரங்கள்தாம் நினைவுக்கு வரும். அதெல்லாம் அந்த ஊர்ல, அதுவும் கடற்கரையில், கற்பனை செய்ய முடியவில்லை.

    வித்தியாசமாக நல்ல ஒரு கதையை மொழிபெயர்த்து கேவாபோக வில் வெளியிட்டிருக்கிறார்கள்.

    நல்ல படைப்பு. நம் நாட்டு mentalityக்கு இதில் உள்ள மென் உணர்வுகள் பிடிபடுவது கஷ்டம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @நெல்லைத்தமிழன்: பேரீச்சை மரங்கள் என்றும் எழுதியிருக்கலாம்தான் - நமது வாசகர்களுக்காக. ஆனால் ’பேரீச்சை’ வகை மரங்களும் ’Palm’ குடும்பத்து உறுப்பினர்கள்தான் என்பதால் ’பனை’ என்கிற பொதுப்பெயரைப் போட்டேன்.

      நான் வசித்த க்யூபாவில் அழகான கடற்கரைகளோடு, 85 வகைப் ’பனை’மரங்கள் ஆங்காங்கே மண்டியிருப்பதைப் பார்த்திருக்கிறேன் -அதில் நீங்கள் குறிப்பிட்ட மரமும் வருகிறது. ஃப்ளாரிடாவில் (கரீபியன், ஆசிய தட்பவெப்பநிலை என்பதால்) அங்கு முளைக்காத பனைவகையே இல்லையாம். பொதுவாக சுமார் 2500 பனைவகைகள் இவ்வுலகில் என ஒரு கணக்கீடு சொல்கிறது.

      ஒவ்வொரு கமெண்ட்டுக்காகப் பின்னால் வருகிறேன்...

      நீக்கு
  16. ஆங்கில நாவல்களை படிக்கும் பொழுதெல்லாம் நாடும்,மொழியும் மாறினாலும் மனிதர்களின் உணர்வுகள் மாறுவதில்லை என்று தோன்றும். ஹெமிங்வேயின் கதையும் அதைத்தான் சொல்கிறது. மொழி பெயர்ப்பு இயல்பாக இருப்பது சிறப்பு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹெமிங்வே-யை அநேகமாகப் பெரும்பாலான ஆங்கில இலக்கிய வாசகர்கள் படித்திருப்பார்கள். அவரது எழுத்தே அலாதி.
      கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. விரிவான பின்னூட்டதுடன்  பின்னர்  வரேன்  :)

    பதிலளிநீக்கு
  18. கதைக்காக, இந்த மழைநேரத்தில் அலைந்து, குடையுடன் பூனையைப் பிடித்துக்கொண்டு வந்த கௌதமன் சாருக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  19. //..என்னுடைய கூந்தலை அடர்த்தியாக வளர்த்துக்கொண்டால், நன்றாக இருக்கும் இல்லை?”//

    ‘இல்லை’யில் ‘லை’ விசித்திர வடிவத்தில் வந்திருக்கிறதே! கொஞ்சம் கவனியுங்கள் கே.ஜி.ஜி. சார்..

    பதிலளிநீக்கு
  20. நீங்களே கதை சொல்லியாக இருந்திருந்தால் --------------!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்களே கதை சொல்லியாக இருந்திருந்தால் --------------!//

      இப்படி ஒரு கற்பனை ஏன் வந்தது!

      நீக்கு
  21. மிகவும் அழகான  மனஉணர்வுகளை வெளிப்படுத்திய கதை .ஒருவேளை அந்த ஜார்ஜ் க்கும் அந்த மனைவிக்கும் பெரிய வயது வித்யாஸமோ பொதுவா இளம் கணவன்மார்னா உடனே ஓடியிருப்பார்கள் மனைவிக்கு பூனையை எடுத்துக்கொடுக்க :) பற்பல யோசனைகள் வருது ஒருவேளை அப்பெண்  அன்புக்கோ எதற்கோ ஏங்கும்  ஒருவரோ தனை பற்றி தலைமுடி பற்றிலாம் கவலைப்படுபவர் .இன்னமும் மனத்தால் வளர்ச்சியடையாத சிறுபெண்ணொ என நினைக்க வைக்கிறார் .ஒரு சிறு டவுட் ஆமை ஓட்டில் பூனை ?? அது பொம்மையா அல்லது cat நிறத்தை குறிப்பதா ?
    இது பூனையின் நிறத்தை குறிக்கிறது .எங்கள் ஜெஸியும் tortoise ஷெல் நிற பூனைதான் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. i am confidant because in jessies medical record book vet wrote coat color = tortoise shell.
      normally here they say ginger cats tortoise shell cat ,tabby cat and so on :) ekanthan sir will come and clear our doubts whether thats a ornament cat figure or a real one :)

      நீக்கு
    2. @ Angel, @ Vallisimhan :

      அடடா! அடியேனின் எழுத்தில்தான் தவறு! கண்டுபிடித்துச் சொன்னதற்கு நன்றி ஏஞ்சல்.

      //..அவளது கையில் ”ஆமை-ஓட்டினால் ஆன” அழகான பெரிய பூனை ஒன்று, உயிர்ப்போடு உட்கார்ந்திருந்தது//
      என்பதற்கு பதிலாக ”ஆமை ஓடு நிறத்திலான” அழகான பெரிய பூனை ஒன்று, உயிர்ப்போடு உட்கார்ந்திருந்தது - என திருத்திவிடுமாறு கௌதமன் சாரை வேண்டுகிறேன்.

      என் கவனக்குறைவுக்கு, விளைந்த சிரமத்துக்கு வருந்துகிறேன்.

      நீக்கு
    3. இல்லையில்லை அது தவறுன்னு நினைக்கலை ..இரண்டு விதமா நினைச்சேன் ஒருவேளை அந்தப்பெண் பார்த்ததே பொம்மையையோன்னு அப்புறம் தான் பார்த்தேன் டார்ட்டாய்ஸ் ஷெல் என்பது இங்கே பூனையின் கோட் /fur நிறத்தை குறிப்பது .மிக்க நன்றி சார் .ஆனாலும் எர்னஸ்ட் ஹெம்மிங் எங்களை அதிகமா யோசிக்க வச்சிருக்கார் :) இது போன்ற நிறைய கதைகளை மொழிபெயர்த்து எங்களை நிறைய ஆராய்ச்சி செய்ய வைக்கவும் :) நான் இக்கதைக்குள் டீப்பா   இன்வால்வ் ஆகிட்டேன் 

      நீக்கு
    4. //..எர்னஸ்ட் ஹெம்மிங் எங்களை அதிகமா யோசிக்க வச்சிருக்கார் :).. நான் இக்கதைக்குள் டீப்பா இன்வால்வ் ஆகிட்டேன் //

      ஆஹா! ஹெமிங்வே சார்! காதுல விழுந்ததா?

      நீக்கு
  22. //ஆசையாக வாரிக்கொள்ளவேண்டும். எனக்கொரு... பூனை வேண்டும். ம்... அழகான நாகரீக உடைகள்...!”//

    நிஜமாக பூனையை பார்க்கவில்லையோ ! அவளின் ஆசை, கனவின் வெளிப்படோ?

    எப்படியோ நீண்ட கூந்தலை உடனே வளர்க்க முடியாது , பூனை கிடைத்தது
    ஓரளவு மகிழ்ச்சி அடையலாம்.

    கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  23. @ கேஜிஜி: திருத்தத்திற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  24. மதியமே படித்தேன் - நன்றாக வந்திருக்கிறது மொழியாக்கம். மழை பெய்வது பற்றிய வர்ணனை மிகவும் சிறப்பு. நல்லதொரு கதைப் பகிர்வுக்கு நன்றி.

    ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  25. நேற்று இறுதியில் சொல்ல விட்டுப்போனது:
    கதையைப் படங்களுடன் அழகாகப் பிரசுரித்ததற்கு எ.பி. ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!