வியாழன், 24 டிசம்பர், 2020

பெண்ணிடம் வம்பு செய்தால்...

 சமீபத்தில் தொலைக்காட்சியில் செய்திச்சேனலுக்கு ஓடிக்கொண்டிருந்தபோது ஏதோ ஒரு சேனலில் மாதவன் நடித்த ரன் படக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது.  தனது தங்கையைக் காதலிக்கும் மாதவனைக் கண்டுபிடித்து விடும் அதுல் குல்கர்னி மாதவன் வீட்டுக்குள் நுழைந்து குடும்பத்தினரை மிரட்டுவார்.  மாதவனுக்கு ஃபோனைப் போட்டால் அவரிடமிருந்து கவுண்ட்டர் அட்டாக் வரும். "எனக்கு மட்டும்தான் குடும்பமா?  உனக்கு குடும்பம் கிடையாதா?  நான் உன் பொண்ணு பக்கத்துலதான் இருக்கேன்" என்று மிரட்டும் குரலில் பேசுவார்.  ஆனால் அந்தக் குழந்தையிடம் மென்மையாகத்தான் நடந்து கொள்வார்.  கதாநாயகனாச்சே...! 


இந்தக் காட்சி எனக்கு ஒரு சம்பவத்தை நினைவு படுத்தியது.  அது என் கல்லூரிக்கு காலத்தில் நடந்தது.   இதே போல ஒரு செயலை நான் செய்தேன்!

அப்போது என்னிடம் சைக்கிள் இருந்தது.  என் வேலைகளைத்தவிர, வீட்டுக்கு மளிகை வாங்கி வருவது, கரி வாங்கி வருவது, B 4 போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்று காய்கறி மார்க்கெட் சென்று காய்கள் வாங்கி வருவது, அவ்வப்போது என் அப்பாவை ஆபீசில் விடுவது என்று வேலைகள்...

என் தங்கையை சைக்கிளில் அமர வைத்து பள்ளியில் கொண்டு விட்டு வருவேன்.   பள்ளி இறுதி வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள் அவள்.  பின்னால் சில சைக்கிள்கள் பின்தொடர்வதை ஒருநாள் என்னிடம் சொன்னாள்.  முடிந்தவரை அவர்களை லட்சியம் செய்யாமல் இருந்தாலும், சில சமயம் சைக்கிளை வேகமாக ஓட்டி, திடீரென மிக மெதுவாக ஓட்டி என்றெல்லாம் அவர்களைக் குழப்பி, தடுமாற வைத்திருக்கிறேன். 

இதில் ஒருவன் அடிக்கடி வீட்டு வாசல் வழியாக சைக்கிளில் செல்லத் தொடங்கினான்.   வீட்டு வாசல்களுக்கு எதிராக நடைபாதை போல இருக்கும்.  அதற்கு அப்பால் செடிகளாலான சிறு சிறு வேலிகள்.  நான்கு வீடுகளுக்கு ஒருமுறை ஒரு இடைவெளி இருக்கும்.  அந்த வேலிக்கு அப்பால் பஸ், வாகனங்கள் செல்லும் சிறு தார் ரோட்.  பெரிய சாகசச் செயல் செய்வது போல ரோட்டிலிருந்து இறங்கி எங்கள் வீடு இருக்கும் பாதை வழியாக வீட்டு வாசலை நெருக்கி சைக்கிளை ஒட்டிச் செல்லத்தொடங்கினான்.  எங்கள் வீட்டைத் தாண்டியதும் அடுத்த பிரிவில் மறுபடி வாகனங்கள் செல்லும் அந்த ரோடில் ஏறிவிடுவான்!

அதில்தான் எரிச்சல் அடைந்தேன்.  அப்படி அவன் வாசலை ஒட்டி சைக்கிள் வரும்போது எதிர்பாராவிதமாக குறுக்கே குதிப்பது, எதையாவது போடுவது என்று செய்தாலும் அவன் தொல்லை முடியவில்லை.  கண்டுக்காமல் இருக்க இருக்க தொல்லை அதிகமாகத் தொடங்கியது.  வீட்டுக்கெதிரே சைக்கிளை நிறுத்தி செயினை சரிசெய்வது, காற்று சோதிப்பது என்றெல்லாம் அவன் 'வீரச்செயல்கள்'  தொடர்ந்தன.

அவன் நண்பர்கள் கூடி இருப்பார்கள்.  நான் சைக்கிளில் அங்கு தாண்டிச் சென்றால் JB... JB... JB  (அவன் பெயர்) என்று குரல் கொஞ்சம் சத்தமாக வரும்.  என்னைக் கலாய்க்கிறார்களாம்!  கடுப்பானது.

தேவை ஒரு அதிரடி ஆக்க்ஷன்!  

மறுநாள் அவன் சைக்கிளில் வரும் வழியில் குறுக்கே நின்று வழிமறித்து, சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவனை கீழே இழுத்துப் போட்டு, அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி, அப்படியே அவனைத் தூக்கி எறிந்து...    இப்படி எல்லாம் நினைத்தீர்களானால் அது மாபெரும் தவறு.  மனதில் வீரம் இருந்தாலும், ஓமகுச்சிக்கு அண்ணன் போல உடல்வாகு பெற்றிருந்த என்னால் அதெல்லாம் செய்ய முடியாது.  எனவே வேறு மாதிரி முடிவெடுத்தேன்.

எப்போதுமே அதிகாலை குளித்துவிடும் பழக்கம் எனக்கு உண்டு.  குளித்து முடித்து லுங்கி, மேலே வெள்ளை சட்டை பளிச்சென அணிந்து சைக்கிளில் புறப்பட்டேன்!

இணையான அடுத்த சாலையில் நான்கு தெரு தள்ளி அவன் வீடு.  அவன் வீட்டில் வண்டியை நிறுத்தி உள்ளே நுழைந்து விட்டேன்.   "JB இருக்கானா?"  என்று கேட்டேன்.  

அவன் அப்பாதான் வீட்டில் இருந்தார்.  அவரை நான் முன்னேபின்னே பார்த்தது கிடையாது.  ஆனால் வீட்டுக்குள் சென்று நின்று விட்டேன்.

"யாருப்பா நீ?"

"ஸ்ரீராம்னு சொன்னா தெரியும்..."

"எதுக்கு காலங்கார்த்தால வந்திருக்கே?  நான் இதுவரை உன்னை பார்த்ததில்லையே..."

"ஆமாம்..   பார்த்திருக்க மாட்டீங்க...  நான் வந்ததில்லை.  சொல்றேன்...  அவனையும் வச்சுக்கிட்டு பேசலாம்னு..." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பேச்சுக்குரல் கேட்டு உள்ளிருந்து வெளியில் வந்த JB என்னைக் கண்டதும் எக்ஸ்சார்சிஸ்ட் பேயை எதிரில் கண்டவன் போல ஆனான்.  என்னை வெளியே தள்ளிக்கொண்டு செல்ல முயற்சித்தான்.  நல்லவேளையாக அவன் அப்பா உள்ளே சென்று விட, நான் அவனிடம் "உன் அப்பா கிட்ட பேசத்தான் வந்தேன்.  அவர் உள்ளே போய்விட்டார்.  கூப்பிடு அவரை..   நீயும் இங்கேயே நில்லு..   உன் தொல்லைக்கு எனக்கு இன்று ஒரு முடிவு தெரியணும்" என்று சொன்னேன்.

அங்கிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்!

"கால்ல விழறேன் தோஸ்து.... வெளில வா...ங்க..."

"தோஸ்தா...  நானா...  உனக்கா...  அப்பா கிட்ட பேசிடுவோம்..."

உள்ளே பார்த்தவன், பயத்துடன் அருகில் வந்தான்.  எதிர்பாராத இந்த நிலைமையை அவன் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டான்.

"வாங்க தோஸ்து...  இனி தொல்லை பண்ண மாட்டேன்...  ப்ராமிஸ்..."  என்னை வெளியே இழுக்காத குறையாக தள்ளிக்கொண்டு வந்தவன் கைகளை பிடித்துக் கொண்டான்.

பிரச்னை சுமுகமாக முடிவதையே நானும் விரும்பினேன்.  அவன் அப்பாவிடம் சொல்வது என் நோக்கமில்லை.  யாருக்குமே அவர்கள் வீடு ரொம்ப முக்கியம்.  வீட்டில் நல்ல பெயர் தொடர்வதையே விரும்புவார்கள்.  அதுவும் குறிப்பாக அப்பாவிடம்.  ஆனால் தொல்லை தொடர்ந்தால் சொல்லி விடுவது என்றும் முடிவு செய்திருந்தேன்.

இப்போது புரிந்திருக்கும் ரன் படக்காட்சி எனக்கு இந்த நினைவு கொண்டுவந்ததன் காரணத்தை!

எனவே தாமதம் செய்யாமல் அவனை விரைவாக ஓரிரு வார்த்தைகளில் எச்சரித்து விட்டு உடனே கிளம்பி விட்டேன்.  அவன் அப்பா வெளியில் வந்து பார்த்தால் நான் இருக்கக் கூடாது!  அவ்வளவு அதிகாலையில் மகனைப் பார்க்க வந்த ஒரு தெரியாத பையன், ஏதோ பூடகமாய் சொல்ல வந்து விட்டு, உடனடியாகக் கிளம்பிச் சென்று விட்டான், மகனின் முகம் சரியில்லை என்று அவர் உணரவேண்டும் என்பது என் எண்ணம்.  இது நடந்ததா என்று எனக்குத் தெரியாது.

அதன்பிறகு அவன் தொல்லை பெருமளவு குறைந்தாலும், அவ்வப்போது என்னிடம் வந்து வேறு சில பெயர்களை சொல்லி அவர்கள் உன் சிஸ்டருக்கு தொல்லை கொடுக்கிறார்கள் என்பான்.  

"அதைப்பற்றி நீ கவலைப்படாதே..   நான் பார்த்துக் கொள்கிறேன்" என்பேன்.

அப்படி அவன் சொன்ன பெயர்களில் ஒன்று "சித்தப்பா.."   சித்தப்பா என்பது பட்டப்பெயர்.  அந்த ஏரியாவின் ரௌடி.   நானும் கவனித்திருந்தேன்.

முதலில் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அவனையும் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் விரைவிலேயே வாய்த்தது எனக்கு!

=========================================================================================================

ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் விடுமுறையில் வீடு வரும்போது அவர்தம் மனைவியரும், குழந்தைகளும் காட்டும் உணர்வுகள் பற்றி காணொளிகள் வந்து கொண்டிருந்த / நான் பார்த்த நேரம்.  அப்போது தோன்றிய வரிகளை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.



============================================================================================================


இதுவும் முருகன் இட்லி கடை பற்றிய செய்தி!  ஆனால் பழசு!




======================================================================================================

எத்தனை​ முறை படித்தாலும் கண்களை ஈரமாக்கும் ஒரு...



===================================================================================================


மாஸ்டர் பிளான்!


ஒரு கோடு...  இரு கோடு...

========================================================================================================

அந்தக் கால தூர்தர்ஷன் தொலைக்காட்சி  ஆரம்பிக்கும்போது வரும் டியூன் நினைவிருக்கிறதா?  மாலை ஐந்தரை மணிக்குத் தொடங்கும் என்று ஞாபகம்.  அப்போது ஆவலுடன் காத்திருந்த நாட்கள்.  இப்போது கேட்கும்போது சற்றே சோகமாக ஒலிக்கிறதோ என்று தோன்றுகிறது!

119 கருத்துகள்:

  1. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்..

    என்றென்றும் நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. நட்பின் இலக்கணம்...
    மனதை நெகிழ வைத்தது..

    பதிலளிநீக்கு
  3. செம ரவுடியா இருந்திருப்பிங்க் போலருக்கே?

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    கதம்பத்தின் முதல் பகுதி விவேகமான ஸ்வாரஸ்யத்துடன் இருந்தது. அத்தோடு பிரச்சனையை அகற்ற துணிந்து செயல்பட்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். படிக்கும் போது உங்களை ரன் மாதவன் மாதிரியே கற்பனை பண்ணி படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. உங்கள் அதிரடியான தைரியம் வியக்க வைத்தது.

    கவிதை நன்றாக இருக்கிறது. இதற்கு முன் எப்போதாவது இங்கு இதை பகிர்ந்திருக்கிறீர்களோ? படித்த நினைவாகவே உள்ளது. மற்ற பகுதிகளுக்கு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா..   தொல்லை தாங்க முடியாமல் போனால் எரிச்சல்தானே வரும்?!!

      கவிதைகள் அவ்வப்போது சுழற்சியில் மறுபடி வந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு!

      நீக்கு
  6. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    நம் ப்ளாக்(மாதவ) ஸ்ரீராமின் துணிச்சல் சூப்பர்.
    இந்த மாதிரி என் தம்பிகளும் எனக்குக்
    காவலாக வருவார்கள்.
    சரியாகக் கையாண்டிருக்கிறீர்கள்.
    நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கம்மா...   வணக்கம்!  என்ன செய்ய?  உடம்பில் வலு இல்லை அவர்களை பிடித்து உதைக்க!

      நீக்கு
  7. உண்மைதான் தூர் தர்ஷன் இசை இப்போது
    கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அப்போது ரசித்தோம்..  ஆர்வமுடன் காத்திருந்தோம்.

      நீக்கு
    2. எனக்கு அதன் ஒலி சரியாக வரலை. மத்தியானமும் போட்டுப் பார்த்தேன். இப்போவும்.

      நீக்கு
  8. வயலின் ஜோக் மிகப் பிரமாதம்.
    அதே போலப் பெண் பார்ப்பதும். ஹாஹாஹா.

    பதிலளிநீக்கு
  9. போர்க்களத்து வீரனின் கதை மிக மிக நெகிழ வைத்தது. நன்றி மா.ராணுவ வீரத்துக்கு ஒரு சல்யூட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீரத்தை விட நட்பு.  இறுதித் தருவாயிலும் நண்பனின் மேல் இருந்த நம்பிக்கை.

      நீக்கு
  10. வீரனைக் கண்டு கண்ணீர் திரையிடும் படம் மிக சிறப்பு.
    ஏதோ திரைப்படம் நினைவுக்கு வந்தது.
    அதற்கு நீங்கள் எழுதி இருக்கும் கவிதை வரிகள் அற்புதம்,
    எத்தனை ஏக்கம் அந்த விழிகளுக்கு:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது இணையத்தில் எடுத்த ஏதோ ஒரு படம்.  என் கற்பனையில் அதற்கு கவிதை வரிகள்!

      நன்றி அம்மா.

      நீக்கு
    2. //எத்தனை ஏக்கம் அந்த விழிகளுக்கு:(// எனக்கும் இதேதான் தோன்றியது.

      நீக்கு
    3. அந்தப் பெரிய விழிகளிலிருந்து விழக் காத்திருக்கும் கண்ணீர்த்துளி...!

      நீக்கு
    4. This picture is from the movie 'Ghost". DEMI MOORE. Actress. Ninaivukku vara iththanai neramaachchu.

      நீக்கு
  11. முருகன் இட்லிக் கடைக்குப் போயிருக்கிறோம்.
    அவ்வளவாக ஈர்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மைலாப்பூர் சங்கீதாவுக்கு, கிண்டி சங்கீதாவுக்கு, போரூர் சங்கீதாவுக்கு வேறுபாடுகள் இருக்கிறது என்று பார்த்தேன்.  ஒரே இடத்தில சமையல் செய்து அனுப்புகிறார்கள் பெரும்பாலும்.  ஆனாலும் கிண்டி சங்கீதா நன்றாய் இருக்கிறது.  அதுபோல சில முருகன் இட்லிஸ் நன்றாய் இல்லை.  போரூர் ஓகே!

      நீக்கு
    2. மைலாப்பூர் சங்கீதாவில் சூடான கொத்துமல்லி வடை சாயந்திரம் ஐந்து மணிக்குக் கிடைக்கும். நல்ல பெரிசாவும் இருந்தது. இப்போவும் உண்டானு தெரியலை. கீரை வடைன்னா 3, 31/2 மணிக்கே கற்பகாம்பாள் மெஸ்ஸில் கிடைக்கும். சாம்பாரோடு நல்லா இருக்கும்.

      நீக்கு
    3. நம்ம நேரம்...  நான் சென்ற வருடம் இதை அறிந்திருக்கவில்லை!

      நீக்கு
    4. ஒரு லக்ஷம் தரமாவது இதைச் சொல்லி இருப்பேன்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    5. நான் போனபோது இதை அறிந்திருக்கவில்லை.  நான் போனது நான்கைந்து வருடங்களுக்கு முன்...

      நீக்கு
    6. //நான் போனது நான்கைந்து வருடங்களுக்கு முன்...// - அதுபோல கீசா மேடம் போனதும் பத்துவருடங்களுக்கு முன்பாக இருக்கலாம். அதற்கும் செஃப்லாம் மாறியிருப்பாங்க....நம்பிப் போய் ஏமாறாதீங்க, நான் ஏமாந்தமாதிரி

      நீக்கு
  12. இந்த வியாழன் பதிவு மிக மிக இனிமை. வாழ்த்துகள் அன்பு ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  13. இப்போது கேட்கும்போது சற்றே சோகமாக ஒலிக்கிறதோ என்று தோன்றுகிறது!//

    தோன்றும், தோன்றும். இப்போ வாழ்க்கை படுஜாலியாகிவிட்டதல்லவா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லைதான்.  ஆனாலும் மெல்லிய சோகம் அதில் தெரிகிறதே!

      நீக்கு
    2. இருக்கட்டுமே. சோகமும் வாழ்வின் ஒரு தவிர்க்கமுடியா அங்கம்தானே..

      நீக்கு
  14. வழக்கம் போல ஜோக்குகள் பிரமாதம்! கவிதையும் அதற்கான படமும் அருமை! ராணுவ வீரன் பற்றிய செய்தி ஏற்கனவே படித்திருந்தாலும் நெகிழ்ச்சி!
    தூர்தர்ஷன் இசை.... மறக்க முடியுமா?
    இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகிறதே..? கண்டுபிடித்து விட்டீர்களா..! ஆம் அதுதான்.. அதேதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானா? 

      அதானே பார்த்தேன்! 

      ஆமாம் எது?

      நீக்கு
    2. அதே தான்! அ. த. இரண்டும் இல்லாத குறைதான் பானுமதிக்கு! அதுவும் உங்களுக்காக!

      நீக்கு
    3. ஹா..  ஹா..  ஹா...    கீதாக்கா கண்டுபிடிச்சுட்டாங்க!

      நீக்கு
  15. சொல்ல மறந்து விட்டேனே.. அண்ணன் உடையாள் ரெளடிக்கு அஞ்சாள் என்று நிரூபித்த எங்கள் அண்ணனுக்கு ஜே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கையைக் காப்பாற்றிய அண்ணன்.வீரம் மனதில் இருந்தால் போதுமே! நானெல்லாம் தனியாய் எங்கேயும் போக முடிந்ததில்லை. அப்பாவுக்குத் தெரியாமல் போனால் தான்! :)

      நீக்கு
    2. எங்கள் காலத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் இல்லை, நல்லவேளையாய்!

      நீக்கு
    3. நாங்களும் எங்க பெண்ணுக்கோ, பையருக்கோக் கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை. இருவருக்கும் ஆண் சிநேகிதர்கள், பெண் சிநேகிதிகள் என வீட்டுக்கு வந்து அரட்டை அடித்துவிட்டுத் தேநீர், பக்ஷணங்கள்னு சாப்பிட்டுப் போவாங்க. ஆனால் இதெல்லாம் குஜராத்தில் இருந்தவரை தான். சென்னை மாற்றலாகி வந்தப்புறமாப் பெண் சைகிளை எடுக்கவே பயந்தாள். :(

      நீக்கு
    4. ஆம்.   இப்போதெல்லாம் அப்படி இல்லைதான்.  நண்பர்களே வம்பிழுப்பவர்களை மொத்தி விடுவார்கள்!

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    ஆமாம்.. தூர்தர்ஷன் இசை அதே போலத்தான் இருந்தாலும் சற்று மாறுபட்டுத்தான் இருக்கிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் மனக்கலக்கத்தையும் தோற்றுவிக்கிறது. அப்போதெல்லாம் அதனுடேயே சேர்ந்து நானும் ஹம்மிங் செய்து தினமும் ரசித்த இசை.

    நீங்களும் இன்று கதம்பத்தில், "தொலைக்காட்சியில்" என்று ஆரம்பித்து, "தொலைக்காட்சியில்" என்று முடித்த விதம் நன்றாக உள்ளது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்று கதம்பத்தில், "தொலைக்காட்சியில்" என்று ஆரம்பித்து, "தொலைக்காட்சியில்" என்று முடித்த விதம்//

      அடடே...   நல்ல அவதானிப்பு...!

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  17. ரௌடி பெயர் சித்தப்பாவா ?
    புதுமையாக இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர்கள் இப்படி வித்தியாசமாகத்தான் இருக்கும்.  ஏதாவது காரணப்பெயராக இருக்கும்.  நன்றி ஜி.

      நீக்கு
  18. நிஜமாகவே ஒரு ஹீரோவாக, அதுவும் புத்திசாலியான ஹீரோவாக, ஒரு பொறுப்புள்ள அண்ணனாக, அந்தக்காலத்தில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறீர்கள் ஸ்ரீராம் ஸார்! கொடுத்து வைத்தவர் உங்கள் தங்கை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மனோ சாமினாதன் மேடம். அந்த வயதில் இயல்பாகத் தோன்றும் உணர்வுகள்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் போதுமே...  ஸார் வேண்டாமே...

      நீக்கு
  19. ராணுவ வீரர்களை கவிதையாலும் கதையினாலும் கெளரவித்திருக்கிறீர்கள்! ராணுவ வீரர்களை முன்னிலைப்படுத்தி வந்த படங்களெல்லாம் ஒரு நிமிடம் நினைவில் வந்து போயின! பதிபக்தி, பார்த்தால் பசி தீரும், தாயே உனக்காக போன்ற அருமையான படங்கள், அதுவும் தாயே உனக்காக ஒரு ராணுவ வீரனின் உண்மையான வாழ்க்கையை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டிய திரைப்படம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மனோ சாமினாதன் மேடம்.

      நீக்கு
    2. ஜிவாஜி, சாவித்திரி நடிச்ச "ரத்தத் திலகம்" படத்தை விட்டுட்டீங்களே!

      நீக்கு
    3. ராணுவ வீரன் என்றே ஒரு படம் வந்ததது!  ரசினி நடித்தது.

      நீக்கு
  20. ஆகா...! இப்படியே அதிரடியை எதிர்பார்க்கவில்லை...!

    நண்பன் சொன்ன வரிகள் மனதை உலுக்கின...

    பதிலளிநீக்கு
  21. அட! அன்றைய மேடி!!!இதுக்குத்தான் அண்ணன் வேண்டும் என்பது! லிங்குசாமி ஊங்களை ஃபாலோ பண்ணிட்டிர்ந்துப்பாரோ!!! அடுத்து அந்த ரௌடியை எப்படி ஃபேஸ் பண்ணீங்கனு ஒரே குடைசல்..

    கீதா

    பதிலளிநீக்கு
  22. போர் வீரன் செய்தி மனதை நெகிழ வைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  23. தூர்தர்ஷன் இசை//.....உங்களுக்கு வயசாகிடுச்சுன்னு சொல்லலாமோ!!!!

    படித்ததில் பிடித்தது// மனதை என்னவோ செய்துவிட்டது.

    ஜோக் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அந்த தூர்தர்ஷன் இசை, சாரே ஜகான் சே அச்சா. பாட்டு முதல் இரு வரி தானே...அது ரொம்பவும் இழுத்து போட்டிருப்பதால் சோகமா இருக்கு..

      கீதா

      நீக்கு
    2. தி/கீதா சொல்வது சரியில்லைனு நினைக்கிறேன். ஸாரே ஜஹான் ஸே அச்சா வை எல்லாம் சிக்னேச்சர் ட்யூனில் வைக்க மாட்டாங்க. அது வேறே பாடல்/ராகம்/வாத்தியக்கருவிகளில் இழுப்பு! சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற நாட்களில் தான் "ஸாரே ஜஹான் ஸே அச்சா!" "வந்தேமாதரம்" போன்ற இந்தப் பாடல்கள் எல்லாம் ராணுவ அணீவகுப்பின்போது வரும்.

      நீக்கு
    3. ஆம், எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.

      நீக்கு
  24. அந்த வய்தில் ஏற்படும் அநுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஓரோர் விதம்

    பதிலளிநீக்கு
  25. சற்றுமுன் இந்தப் பதிவைப் படித்த என் தங்கை, இதனோடு சம்பந்தப்பட்ட இன்னொரு சம்பவத்தை 90 களில் ஆனந்த விகடனுக்கு எழுதி அனுப்பி மதன் சித்திரத்துடன் வெளியகி முதல் பரிசு முந்நூறு ரூபாய் பெற்றதை நினைவு கூர்ந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா! சுவாரஸ்யமாக இருக்கிறதே! அடுத்த வார பொக்கிஷத்தில் எதிர்பார்ககலாமா?

      நீக்கு
    2. பாராட்டுகள்..உங்கள் தங்கைக்கு..அட ஆச்சரியம்... சொல்லல வைத்தது..நீங்க மறந்துட்டீங்களா இங்கு சொல்ல...

      கீதா

      நீக்கு
    3. அந்த விகடனை எங்கே போய்த் தேட?  தங்கையிடம் கேட்கவேண்டும், வைத்திருக்கிறாளா என்று!  91 அல்லது 92 ஆம் வருடம் வந்த விகடன், ஜெயலலிதா அட்டைப்படம் என்று சொன்னார்.

      நீக்கு
  26. ராணுவ வீரர்களை கௌரவித்தமைக்கு நன்றி. துணுக்குகள் ஏற்கெனவே பார்த்தாலும் இப்போவும் ரசித்தேன். உங்கள் கவிதைகளும் அருமை. கண்ணீர்த்துளியுடன் கூடிய கண்கள் மனதைக் கவர்ந்தன.

    பதிலளிநீக்கு
  27. ராணுவ வீரர்கள் ஆம் ஸ்ரீராம் அந்த தருணங்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை உங்க கவிதை செம...எடுத்துக்கொண்டேன். மீதி இங்கு சொல்ல மாட்டேனே.!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. //மறுநாள் அவன் சைக்கிளில் வரும் வழியில் குறுக்கே நின்று வழிமறித்து, சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவனை கீழே இழுத்துப் போட்டு, அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி, அப்படியே அவனைத் தூக்கி எறிந்து... இப்படி எல்லாம் நினைத்தீர்களானால் //

    ஹா ஹா ஹா சத்தியமாக ஸ்ரீராமா இது என ஒரு கணம் ஷொக்ட் ஆகிட்டேன் ஹா ஹா ஹா.. புது வருடம் பிறக்கப்பொகின்ற காலங்களில் இப்பூடி எல்லாம் ஷொக்ட் ட்ரீட்மெண்ட் தராதீங்கோ ஸ்ரீராம் பிளீஸ் ஹா ஹா ஹா:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எப்போ? மோதி அங்கிளோட "செக்"? புதுசா இருக்கே! இன்னிக்குத் தொலைக்காட்சிச் செய்திகளில் கூட வரலையே!:)))))))

      நீக்கு
    2. ஹா..   ஹா...   ஹா...     அப்படியெல்லாம் ஆகாதே அதிரா!

      நீக்கு
    3. //Geetha Sambasivam24 டிசம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 5:21
      இது எப்போ? மோதி அங்கிளோட "செக்"? புதுசா இருக்கே!//
      ஹா ஹா ஹா கீசாக்கா அது ட்றம்ப் அங்கிள் இந்தக் கிழமையோடு மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு காசிக்குப் போறாரெல்லோ:)).. அதனால விட்டால் சைனாக்காரர் எடுத்திடுவினம் அதிராவின் கிட்னியை என:) மோடி அங்கிள் லபக்கென தன் செக்:) ஆக்கிட்டார்ர்:)).. அநேகமாக கிறிஸ்மஸ் க்கு தலைப்புச் செய்தியாக வரலாம் நாளைக்கு.. மாமா திட்டினாலும் பறவாயில்லை நீங்கள் ரிவியை விட்டு எழும்பிடாதையுங்கோ:))

      நீக்கு
  29. //அப்படி அவன் சொன்ன பெயர்களில் ஒன்று "சித்தப்பா.." சித்தப்பா என்பது பட்டப்பெயர். அந்த ஏரியாவின் ரௌடி. நானும் கவனித்திருந்தேன்.//

    இருப்பினும் ஒற்றை ஆளா நிண்டு கதைச்சிருக்கிறீங்களே என்னால நம்ப முடியவில்லை ஹா ஹா ஹா:)).. வடிவேல் அங்கிள் தான் நினைவுக்கு வருகிறார் உங்கள் எழுத்துப் படிக்கும்போதெல்லாம்.. அதுசரி தொடருதோ..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமெடியனாக்கி விட்டீர்களே!  எவ்வளவு சீரியஸா சொல்லிக்கொண்டிருக்கேன்....

      :))

      நீக்கு
    2. இல்ல ஸ்ரீராம், வெளியில வீரம் பேசிப்போட்டு, கதவைச் சாத்திப்போட்டுக் கால்ல விழுவாரெல்லோ வடிவேல் அங்கிள்:) அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டது ஹா ஹா ஹா:))

      நீக்கு
  30. குறை நினைச்சிடாதையுங்கோ நான் ஒன்று எப்பவும் பெண்களுக்குச் சொல்லுவது, எந்த ஆணாயினும் நம்மில் கொஞ்சம் இன்றஸ்ட் காட்டுகிறார்கள் எனில், இக்னோர் பண்ணுவதுதான் நல்ல வழி, அதை நம் குடும்பத்துக்கு தெரியப்படுத்தினால் ரிவெஞ் தான் அதிகமாகும்.. எவ்வளவோ படங்களிலும் பார்க்கிறோம். அதே நேரம் அவர்களுக்கு நம்மை பிடிச்சிருக்குது, அதனால இன்றஸ்ட் காட்டுகினம், என்னைப்பொறுத்து அதில் தப்பில்லை, நாமும் பிடித்தால் பதிலுக்கு ஏதும் பண்ணலாம் பிடிக்கவில்லையா ஒதுங்கிவிடலாம் இல்லை எப்படியாவது பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்கலாம்.. அதையும் மீறி நம்மை அதிகம் தொல்லை தரும் பட்சத்தில் மட்டுமே வீட்டுக்கு எடுத்துப் போகோணும் என்பது என் வேண்டுகோள்.. இது இதைப் படிக்கும் அனைத்து சுவீட் 16 பெண்களுக்குமானது:)) ஹா ஹா ஹா.

    எனக்குப் இப்படி [அன்புத்:)?] தொல்லைகள் பல வந்திருக்குது, அந்நேரம் நான் நினைப்பது, என்னில ஏதோ ஒன்றை விரும்பித்தானே என்னை ஃபலோ பண்ணுகிறார்[அப்போ ஒருவிதத்தில் பெருமையகவும் பாவமாகவும் இருக்கும் ஹா ஹா ஹா.. என்னையும் ஒருவர் விரும்புகிறாரே என:)] நான் எந்த ரியக்சனும் காட்டாமல் ஒதுங்கிட வேண்டியதுதான் இல்லை தவிர்த்திடோணும் என, என்னால கையாள முடியாத ஒரு நிலை வந்தால் மட்டுமே வீட்டில் சொல்லோணும் என நினைச்சிருக்கிறேன்.

    நண்பிகளோடு போகும்போது என் சட்டையின் கலரைச் சொல்லி.. அந்த boy இன் பெயர் சொல்லிக் கத்துவார்கள்... எனக்கு பில்டிங் ஸ்ரோங்கூஊஊஊ பேஸ்மெண்ட் வீக்கூஊஊஊ..:)) அதனால எந்த சஞ்சலமும் இல்லாமல் கத்தினால் கத்துங்கோ என்பது போல நடப்பேன், ஆனா உள்ளே கார்ட் 200 இல் அடிக்கும், கால் துடை எல்லாம் தூக்கித் தூக்கி அடிக்கும் ஹா ஹா ஹா..

    ஆனால் என்னால் கண்டில் பண்ண முடியாமல், வீட்டில் சொல்லும் நிலைமை எப்பவும் வந்ததில்லை.

    என்னைப்பொறுத்து அண்ணன், தம்பி தலையிட்டால் பிரச்சனை பெரிசாகிடும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணன் தம்பியிடம் சொன்னால் பிரச்னை பெரிதாகத்தான் ஆகும்.  உண்மை.  சில விஷயங்கள் நம் கண்முன்னாலேயே நடக்கும்போது?  எங்கள் வீட்டிலும் இதை மீறியும் சில விஷயங்கள் நடந்தன.  அதைத்தான்  பின்னர் என் தங்கை விகடனுக்கு எழுதி அனுப்பி முதல் பரிசு பெற்றார்.

      நீக்கு
  31. இராணுவக் கவிதை மிக அழகு.... உண்மைதான் மனம் கிடந்து தவித்துக் கொண்டே இருக்கும்... பைலட் எனினும் பயம்தான்.. என் கணவருக்கு பைலட் ஆகும் ஆசை இருந்ததாம், அவரின் அம்மா விடவில்லை.

    பின்பு எங்கட மகனும் கேட்டார், நான் மறுத்தே விட்டேன், எனக்கு கடலில் இறங்கிக் குளிக்கவே விடமாட்டேன் இதில இப்பூடி எனில் ... விதிதான் எல்லாம் இருப்பினும், சில விசயங்கள் நமக்குப் பயம் எனில் தவிர்ப்பது நல்லதுதானே என நினைப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  உங்கள் வீட்டில் அப்படி ஒரு ஆசை எல்லாம் வந்ததோ...  எனக்கு அப்படி எல்லாம் ஆசை வரவில்லையப்பா!

      நீக்கு
  32. இட்லி தோசை சாப்பிட்டு கிட்டத்தட்ட 6 மாதங்களாகின்றன, இந்த ஹொலிடேயில் செய்யோணும்.. ஆசையைத்தூண்டி விட்டீங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறு மாதங்களாக இட்லி தோசை சாப்பிடாமலா!

      நீக்கு
    2. இதே வேலையாக உடனேயே ஊறப்போட்டு கம்பு சேர்த்து என் புது பிரீத்தி லவண்டர் கிரைண்டரில.. சுத்தவிட்டுக் குழைச்சு வச்சிட்டேன்ன் நாளை வெள்ளிக்கிழமைக்கு எங்கள் வீட்டில மசாலா ஓசை:)) எல்லோரும் வாங்கோ:)).. மறக்காமல் சில்லறைக் காசு எடுத்து வரவும்:)).. கொரோனா என்பதால மிச்சம் தரப்படமாட்டாது:))

      நீக்கு
    3. கொரோனா காலத்தில் கையில் காசே வைத்துக் கொள்வதில்லை அதிரா...   நீங்கள் காந்தி படம் போட்ட நோட்டு ஒன்று வைத்திருக்கிறீர்கள் இல்லையா?  அதில் கணக்கு குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

      நீக்கு
  33. //எத்தனை​ முறை படித்தாலும் கண்களை ஈரமாக்கும் ஒரு...//

    ஆஆ உண்மையில் நெஞ்செல்லாம் என்னமோ பண்ணுகிறது, ஏன் இன்று கவலையை நடுவில் கலந்திருக்கிறீங்கள்.. வருடம் முடியப்போவதால் எல்லோர் ஃபீலிங்ஸ் ஐயும் வெளியே கொண்டுவரும் முயற்சியோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலை என்று சொல்லாமல் நெகிழ்ச்சி என்று சொல்லிப் பாருங்கள்.  நன்றாய் இருக்கும்.

      நீக்கு
  34. மாஸ்டர் பிளான் யூப்பர் ஹா ஹா ஹா கொஞ்சக் காலத்துக்கு நெல்லைத்தமிழனின் கிச்சினை வாடகைக்குக் கேட்கப்போகிறேன்:)) சமைக்கவல்ல இதேபோல ச்சும்மா வச்சிருக்கத்தான்:))....

    பெரும்பாலும் குறூப் படமெடுக்கும்போது அருகில் நல்ல குண்டுகள் நிற்கும்படி பார்த்துக் கொண்டால் நாம் மெல்லிசாகத் தெரிவோம் ஹா ஹா ஹா இதுவும் ஒரு தக்கினிக்கி தேன்:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா சகோதரி

      /மாஸ்டர் பிளான் யூப்பர் ஹா ஹா ஹா கொஞ்சக் காலத்துக்கு நெல்லைத்தமிழனின் கிச்சினை வாடகைக்குக் கேட்கப்போகிறேன்:)) சமைக்கவல்ல இதேபோல ச்சும்மா வச்சிருக்கத்தான்:))..../

      ஹா.ஹா.ஹா. அவர் வெளியூரிலிருந்து வேகமாக கிளம்பி வந்து கொண்டிருக்கிறாராம்.. :) ஜோக்கில் வயலினை அவர் அநியாயமாக இரவல் அல்லவா வாங்கி வைத்துள்ளார். ஆனால், நீங்கள் வாடகை என்ற பெயரில் வாங்குவதால் ஓரளவு ஒத்து வருமென நினைக்கிறேன். பார்க்கலாம்.
      ஹா.ஹா.ஹா.

      நீக்கு
    2. ஹா...   ஹா...  ஹா...   இன்று நெல்லைத்தமிழனைக் காணோம்.  பயணத்தில் இருக்கிறார்.

      நீக்கு
    3. @கமலாக்கா ஹரிஸ்:))
      //அவர் வெளியூரிலிருந்து வேகமாக கிளம்பி///

      நெல்லைத்தமிழன் வேகமாக .. புயல்போல:)) புறப்பட்டு வருவதை ஓல் இந்தியா நியூஸ்ல சொன்னார்களோ?:)) எல்லோரும் சொல்றீங்க நான் தான் நியூஸ் கேட்கத் தவறிட்டேன் போல:)).. ஹா ஹா ஹா எனக்கு டக்கென நினைவு வரும் ஜோக் ஒன்று:))..

      1,.புலி போல வெளியே போகும், ஆடுபோல உள்ளே வரும் அது என்ன?
      2,.அது எங்கட அப்பா:))

      ------------------------------------------------------

      //ஆனால், நீங்கள் வாடகை என்ற பெயரில் வாங்குவதால் ஓரளவு ஒத்து வருமென நினைக்கிறேன்//
      ஆஆஆஆ தவறு செய்து விட்டேனோ:)).. இரவல் கேட்டிருக்கோணுமோ:)) சே..சே... நெ தமிழன் கவனிச்சிருக்கமாட்டார் கிளம்பிவரும் வேகத்தில:)) ஆனால் நீங்கள் போட்டுக் குடுத்துவிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்:)).. ஹா ஹா ஹா..
      ........................................
      நெ தமிழன் உங்கட கட்டுரை எழுதுவதில பிசியாம் ஸ்ரீராம்:).. இப்போதான் என் வட்சப்புக்கு மெசேஜ் போட்டார்ர்:))

      நீக்கு
    4. ஹா..  ஹா..  ஹா..  எத்தனை பாரா எழுதி இருக்காராம்...  கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க!

      நீக்கு
    5. வைகுண்ட ஏகாதசிக்கு விழுப்புரம் அருகிலுள்ள கோவிலுக்கு உதவிகளுக்கு நான்கு-ஐந்து நாட்கள் வந்திருக்கிறேன்.

      இந்த வாரம் புதன்-சனி/ஞாயிறு வரை மிஸ்ஸிங். பிறகு படிப்பேன்.

      நீக்கு
  35. மீரா ஜாஸ்மின் எனும் அனுஷ் எங்கே காணாம்...?

    வம்பு புரிந்தவர் இடத்தினிலே...
    வாஞ்சை பிறந்தது கணத்தினிலே...

    மனசை வாயாடிப் பெண்பாவை இழுக்குது...
    மயங்கி ஆணுள்ளம் திண்டாடித் தவிக்குது...

    மகுடி முன்னே நாகம் போலே...
    வசியமாகி அன்பினால் இன்பமாய் ஆடுதே...

    நினைக்கும் போதே ஆஹா...

    இந்த கதை எந்த வியாழனில்..?

    பதிலளிநீக்கு
  36. புத்திசாலி நாயகனாய் செயல்பட்டிருக்கிறீர்கள்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் சகோதரரே

    அந்த ராணுவ வீரரின் நட்பு மனதை இளக்கியது. தன் நண்பர் அவர் மேல் வைத்த நம்பிக்கையை அவர் தம் கேப்டனிடம் வெளிப்படுத்திய விதம் கண்டு நம் கண்கள் என்றும் ஈரமாகுந்தான்...

    ஜோக்ஸ் அருமை. தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. அடுத்த வீட்டுக்காரனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டுமென்ற பரந்த எண்ணம்...

    இருகோடு தத்துவமும் நன்றாக உள்ளது. அனைத்து பகிர்வினுக்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  38. //குளித்து முடித்து லுங்கி, மேலே வெள்ளை சட்டை பளிச்சென அணிந்து சைக்கிளில் ///

    அந்த லுங்கியும் வெள்ளைச்சட்டையும் இப்பவும் இருக்குதோ ஸ்ரீராம்?:) ஏனெனில் அதனைப் போட்டுக் கொண்டு ஒருக்கால் வாங்கோ.. இங்கின ஒருத்தர் என் காரை முந்துவதும் பிந்துவதுமாக சைக்கிளில வாறார்:)).. ஹா ஹா ஹா ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   அந்த லுங்கியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.  அவர்களை அப்படியே கொஞ்ச நேரம் போக்கு காமிங்க...   பிடித்து வைத்து அட்ரஸ் கேட்டு வைங்க அதிரா!

      நீக்கு
    2. ///அவர்களை அப்படியே கொஞ்ச நேரம் போக்கு காமிங்க... பிடித்து வைத்து அட்ரஸ் கேட்டு வைங்க அதிரா!//

      ஹா ஹா ஹா அப்போ வயசானாலும்:))))) வீரம் இன்னும் குறையவில்லை:)))

      நீக்கு
  39. அதிரடி ஆக்‌ஷன்.. நெத்தியடிதான்:)! சஸ்பென்ஸோடு நிறுத்தியிருக்கிறீர்கள்.

    கவிதை நெகிழ்வு.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  40. நல்லதொரு கதம்பம்!

    முதல் பகுதி என் நினைவுகளையும் மீட்டெடுத்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!