புதன், 14 ஏப்ரல், 2021

பேரன், பேத்திகளுக்கு எந்த விதத்தில் நீங்க உதவியாக இருக்கீங்க?

 

நெல்லைத்தமிழன் : 

1. எனக்கு ஒரு விநோத சந்தேகம். கோவில்கள்ல, சில சமயம் பிரசாதமாக தோசை தருகிறார்கள். ஆனால் தொட்டுக்க சட்னியோ சாம்பாரோ தருவதில்லை. இதுபோல தயிர் சாதமும் அப்படித்தான்.  கடவுளுக்கு தொட்டுக்க எதுவும் தேவையில்லைன்னு இவங்க எப்படி முடிவெடுத்தாங்க?   

$ பிரசாதத்துடன் சட்னி, சாம்பார், நாட்டு சர்க்கரை, ஏன் மிளகாய்ப்பொடி கூட கொடுக்கும் கோவில்களை நிறையப்பார்த்திருக்கிறோம். ஒரு தமிழ் படப்பாட்டு கூட நினைவுக்கு வருகிறது.

# கடவுளுக்கு தோசையோ தயிர்சாதமோ கூடத் தேவையில்லையே. கோயிலுக்குச் செல்வது ரசித்து ருசித்துச் சாப்பிடுவதற்கல்ல.  பிரசாதம் திருநீறு குங்குமம் துளசி என்று மட்டும் இல்லாமல் ஒரு விரும்பத் தக்க எக்ஸ்ட்ரா. அங்கே குருமா கொத்சு எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.

2.  தில்லிக்குப் போனால் இதைச் சாப்பிடாமல் வரக்கூடாது, கர்னாடகாவில் இது, ராஜஸ்தானில் இது, கொல்கத்தாவில் இது என்று ஒரே ஒரு ஐட்டம் சொல்லச்சொன்னால் எதைச் சொல்வீங்க?  

$ மணப்பாறை முறுக்கு,  ஊட்டி  நெய் வர்க்கி.

# பெங்களூர் வித்யார்த்தி பவன் மசாலா தோசை என்று கேள்விப்பட்டு ஆனால் பார்த்திராததைத் தான் சொல்லத் தோன்றுகிறது.

& மங்களூர் போன போது தங்கியிருந்த ஒரு ஓட்டலில் மங்களூர் போண்டா இருக்கா என்று கேட்டேன். என்னை வீசித்திரமாகப் பார்த்தார்கள். 

// கர்னாடகாவில் இது, ராஜஸ்தானில் இது, கொல்கத்தாவில் இது என்று ஒரே ஒரு ஐட்டம் சொல்லச்சொன்னால் எதைச் சொல்வீங்க?  // 

!! "இது" 

3.  உணவை விமர்சனம் செய்வீங்களா இல்லை அவுக் அவுக் என்று போட்டதைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும் வழக்கமா?   

$ நிவர்த்தி செய்ய முடிந்தால் குறிப்பிட்டு சொல்வேன். 

# பாராட்டுக்கள் விரும்பப் படுமேயல்லாது விமர்சனங்கள் அல்ல என்பதை உணர்ந்து இருப்பதால் பாராட்டுவதுடன் சரி.

& போட்டதை சாப்பிட்டுவிடுவது செல்வதுதான் என் வழக்கம். சிலாகித்துச் சொல்லவேண்டியதை மட்டும் சொல்வேன்.  

4.  காபி, டீ, பால் என்று எதையும் சாப்பிடாத ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்தால் அவருக்கு எதைத்தான் கொடுப்பீங்க? இல்லை, எதைக் கொடுக்கிறோமோ அதை அவர் சாப்பிடணும்னு எதிர்பார்ப்பீங்களா?   

$ சென்ற வருடம் பட்டுப்போன எலுமிச்சை மரத்தை நினைவு கூர்கிறேன். 

# எலுமிச்சை ரசம், நீர்மோர், ஹார்லிக்ஸ் ஏதாவது ஒன்றைக் கொடுக்கலாமே. 

& வெந்நீர் அல்லது குளிர்ந்த நீர் - அவர் கேட்டால் மட்டும். 

5. பேரன், பேத்திகளுக்கு எந்த விதத்தில் நீங்க உதவியாக இருக்கீங்க?

$ எங்கள் வீடு ஒரு project workshop.

# அவர்களுடன் கேம்ஸ் ஆடுவதோடு சரி. 

& அவர்களுடைய சிறு வயதில் அவர்கள் வீட்டுப் பாட வேலைகளை செய்யும்போது அவர்களுக்கு guidance கொடுத்ததுண்டு. (ஒரு வினோதமான செய்தி : எங்கள் ஆசிரியர்கள் யாருக்குமே பேத்தி கிடையாது! பேரன்கள் மட்டுமே! ) 

6. சில சமயங்களில் ஓவியத்தைப் பார்த்து பாராட்ட மறந்துவிடுகிறேன். ஒரு கலைஞனுக்கு அவன் படைப்பைப் பற்றி விமர்சனம் செய்தாமல் இருந்தால் அது வருத்தத்தை உண்டாக்காதா?   

$ உங்கள் விமர்சனம் பயன் தரும் என்றால் இருவரும் வருத்தப்படும் விஷயம் தான். 

# சமையல் போலத்தான் கலையும். பாராட்டு விரும்பப்படும் , விமர்சனம் அல்ல.

& அதனால் என்ன - கதைகளுக்கு kgg போடும் ஓவியங்களை இங்கே பாராட்டிவிடுங்கள். 

7.  என்ன பரிசு வழங்கலாம் என்று சந்தேகம் வரும்போது எளிய பரிசாக,  ஓவியம் வரையும் பென்சில் செட் போன்று வேறு எவை எவை உங்கள் நினைவுக்கு வரும்?  

$ நம் கையால் செய்த பொருள்கள், சின்ன டூல் box

# பணம் கொடுத்து விரும்பியதை வாங்கிக்கொள் என்று சொல்வதே பொருத்தமாகத் தோன்றுகிறது.

& // என்ன பரிசு வழங்கலாம் என்று சந்தேகம் வரும்போது.. // யாருக்கு பரிசு ? 

8. நீங்கள் படித்த பள்ளிக்கூடத்திற்குச் சென்றிருக்கிறீர்களா-மூணாப்பு, ஆறாப்பு போன்ற வகுப்பு   

$ 5..8 வரை படித்த St ஜோசப் பள்ளியை வார்தா புயலுக்குப் பின் போய் பார்த்தேன்.

 # செல்ல தீவிரமான ஆசை இருந்தது வாய்க்கவில்லை.

& ஐந்தாம் வகுப்பு படித்த பள்ளிக்கூடத்திற்கு செல்ல  பாஸ் செய்த நான்கு வருடங்கள் கழித்து வாய்ப்புக் கிடைத்தது. அங்கு அக்காவின் திருமணம் + எனக்கு உபநயனம் நடந்தது. அப்போ அந்தப் பள்ளிக்கூடத்தில் நான் எந்தெந்த வகுப்பில் எந்தெந்த இடத்தில் அமர்ந்து பாடம் கற்றேனோ அந்தந்த இடங்களில் உட்கார்ந்து பழைய நினைவுகளில் மூழ்கி சந்தோஷப்பட்டேன். நாங்கள் பிரேயர் செய்த இடத்தில் எனக்கு பிரம்மோபதேசம் நடந்தது. 

9 . எதற்கும் எங்கேயும் செல்லவேண்டாம், எப்போதும் லேப்டாப் முன்னால் இருந்தாலே பொழுது போகும் என்று இந்த கொரோனா ஆக்கிவைத்திருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?   

$ corona வந்தது முதல் குழந்தைகள் குண்டாகி வருவது சற்றுக் கவலை அளிப்பதால் - ஒருவர் டென்னிஸ் விளையாடுகிறார்; மற்றவர் காலையில் சைக்கிள் ஓட்டுகிறார்.

# ஏற்கனவே இந்தத் தலைமுறை நிறைய மிஸ் செய்திருக்கிறது இப்போது கொரோனா வந்து இருப்பதையும் தடுத்து விட்டதே என்று ஆற்றாமைப் படுகிறேன்.

& சமீப கால கட்டுப்பாடுகளால் என்னுடைய வாழ்க்கை முறையில் மாற்றம் எதுவும் பெரிதாக இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே மாதிரிதான் உள்ளது. 

10. பேசாம இந்த ஊரை விட்டு, 'அங்க' போய் செட்டிலாயிடலாம் என்று நீங்கள் நினைக்கும் ஊர் எது? ஏன்?

$ இக்கரைக்கு அக்கரை பச்சை! 

# திருவரங்கம், திருக்குடந்தை. எனக்குக் கோயில் விஸிட் பிடிக்கும். இந்த வயதில் இதெல்லாம் அதீத ஆசைகளாகிவிட்டன.

& அதற்காகத்தான் நித்யானந்தாவின் நாட்டை தேடிக்கொண்டிருக்கிறேன். எங்கே இருக்கு என்றே தெரியவில்லை! 

= = = = =

நண்பர்களுக்கு வணக்கம். 

எல்லோருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 

எல்லோரும் நலமாக, சுகமாக சொந்த பந்தங்களுடன் சந்தோஷமாக வாழ பிரார்த்தனைகள். 

முன்னர் அறிவித்திருந்தபடி மின்நிலா சித்திரை சிறப்பிதழை இன்று வெளியிட இயலவில்லை. 

அதில் வெளியிடுவதற்காக வந்துள்ள கதை, கவிதை, கட்டுரை இத்யாதி விஷயங்களை சேர்த்து, மே மாதம் வெளியிடுகிறோம். மே மாதத்தில் அப்படி என்ன சிறப்பு - என்று கேட்டால் - மின்நிலா ஆரம்பித்து ஒரு வருடம் முடிகிறது. 

மின்நிலா முதல் இதழ் - 2020 மே மாதம் மூன்றாவது வாரத்தில் வெளிவந்தது. ஓராண்டு முடிகின்ற  மே 2021 - இருபதாம் தேதி மின்நிலா ஆண்டுமலர் வெளியாகும். 

மின்நிலா சிறப்பு மலருக்கு மேலும் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதி அனுப்புபவர்கள் இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் அனுப்பவும். நன்றி. 

= = = = =


107 கருத்துகள்:

 1. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
  மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

  அனைவருக்கும் அன்பான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வாழ்த்துகளுக்கு.   இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  வாங்க ஜீவி ஸார்...

   நீக்கு
 2. எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர் குழுவினருக்கும், மற்றும் இங்கே வருகை தந்திருக்கும்/தரப்போகும் நண்பர்கள்/சிநேகிதிகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஆரம்பித்திருக்கும் பில்வ ஆண்டில் இருந்து தொற்றெல்லாம் முழுமையாக மறைந்து உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமஸ்காரம் அக்கா.    நன்றி வாழ்த்துகளுக்கு.   இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  

   நீக்கு
 3. கேள்வி/பதில்கள் சுவாரசியம். !!!!! என்று புதிதாக ஒருத்தர் பதில் சொல்லி இருக்காரே! யார் அவர்? **** ஸ்ரீராம், ##### கேஜிஒய், $$$ கேஜிஎஸ், & கேஜிஜி ஆகியோரைத் தவிர்த்துப் புதிதாக !!!!!! வந்திருக்கார். காசு சோபனாவோ? எப்படிக் காசை விட்டுட்டு வந்திருக்காங்க? :))))))

  பதிலளிநீக்கு
 4. எப்போவும் லாப்டாப் முன்னாடியே உட்காருவது என்பது கொஞ்சம் அதீதமாகத் தோன்றுகிறதே! என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு வேலைகளுக்கும் குறிப்பிட்ட நேரம். இதில் பூத்தொடுப்பது மட்டும் கொஞ்சம் மாறும். வாங்கும் நாளையும், பூக்களின் அளவையும் பொறுத்து. அநேகமாய் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பூத்தொடுப்பது இருக்கும் என்பதால் அதற்கும் முன்கூட்டியே நேரத்தை யோசித்து வைக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்.  ஒரு குறிப்பிட்ட நேரத்தை செலவழிப்பதும் உத்தமம்.

   நீக்கு
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஸ்ரீராம்,முந்தைய கேள்விக்கு பதில்? :))))))

   நீக்கு
  3. ஹிஹிஹி...  ஆமாம்..  'இணைந்து பிரார்த்திப்போம்' விட்டுப் போயிருக்கு!

   நீக்கு
  4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், யார், யார், யாரவர் யாரோ? ஊர், பேர் தான் தெரியாதோ?

   நீக்கு
 5. 1.இந்தக் காலக் குழந்தைகள்/குறிப்பாய்க் கடந்த பத்து வருடங்களுக்குள்ளாகப் பிறந்த குழந்தைகள் செல்ஃபோன்/ஐ பாட் போன்றவற்றில் கார்ட்டூன்கள் பார்ப்பதில் நேரத்தைச் செலவு செய்வது சரியா? சொல்லப் போனால் தாய்மாரே குழந்தையின் கையில் செல்ஃபோனைக் கொடுப்பதும், அந்தக் குழந்தை அதுவாகவே விரும்பிய கார்ட்டூன் சானலைப் போட்டுப் பார்ப்பதையும் கண்டு வருகிறேன். இது சரியா? கண்கள் பாதிப்படையாதா?
  2. இன்றைய குழந்தைகளுக்கு இந்த விஷயங்களில் ஆர்வமும், கையாளுவதில் இலகுவான தன்மையும் இருப்பதைப் போல் பாட விஷயங்களிலும் அவர்களுக்கு இது உதவுகிறதா?
  3. குழந்தைக்கெனத் தனியாக ஐபாட், செல்ஃபோன் ஆகியவை வாங்கிக் கொடுப்பது சரியா?
  4.வெளியில் போய் விளையாடும் சந்தர்ப்பங்கள்/இப்போதைய வாழ்க்கை முறையில் முற்றிலும் தொலைந்து போய்விட்டன/போய்க்கொண்டிருக்கின்றன. இது ஆரோக்கியமான சூழ்நிலையா?
  5.அடுக்குமாடிக் குடியிருப்புக் குழந்தைகள் பொதுவான ஓர் இடத்தில் விளையாடிக் களிக்கவென அந்தக் குடியிருப்பில் ஏற்பாடுகள் செய்யலாம். ஆனால் பெரும்பாலானோர் இதை ஓர் இடைஞ்சலாகவே கருதுகிறார்கள். குழந்தைகள் விளையாடுவதை எதிர்ப்பவர்களே அதிகம். இது குழந்தையின் மன/உடல் வளர்ச்சியைப் பாதிக்காதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம், பதில் எழுதணுமாக்கும். அப்போத்தான் தேர்வில் மதிப்பெண்கள் கிடைக்கும். கேள்வியை மட்டும் குறிச்சுண்டால்? என்ன கிடைக்கும்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
 6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அக்கா.  இனிய பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
  2. இனிய பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 7. அனைவருக்கும் இனிய புத்தாண்டு பில்வ
  வருடத்துக்கான வாழ்த்துகள். அனைவரின் பிரார்த்தனைகள்
  தொற்று விலக வேண்டும் என்பது.
  அதையே இறைவன் வரமாக நமக்கு அளிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா.  வாழ்த்துகளுக்கு நன்றி.   இனிய பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
  2. இனிய பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 8. கேள்வி பதில்கள் விறுவிறுப்பு சுவாரஸ்யம்.
  வேலைகள் இருப்பதால் நிதானமாகத்தான் வரவேண்டும்.
  அனைவரும் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 9. முதல் கேள்வி சிந்திக்க வைத்தது.

  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜி.   இனிய பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். 

   நீக்கு
  2. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கேள்வி பதில்கள் அருமை. முதல் கேள்வியும், பதில்களும் நன்றாக உள்ளது. நேற்றும் இன்றுமாக வருடப்பிறப்பு வேலைகள் சரியாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
  2. வாங்க கமலா அக்கா.  வாழ்த்துகளுக்கு நன்றி.   இனிய பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  இணைந்து பிரார்த்திப்போம்.


   நன்றி.

   நீக்கு
  3. இனிய பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 11. அனைவருக்கும் காலை வணக்கம். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! பிலவ வருடத்தில் நோய் நொடி இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ பிரார்த்திக்கிறேன். சமஸ்த லோகா சுகினோ பவந்து!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி பானு அக்கா.  வாங்க.  இனிய பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
  2. சமஸ்த லோகா சுகினோ பவந்து!

   நீக்கு
 12. //காபி, டீ, பால் என்று எதையும் சாப்பிடாத ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்தால் அவருக்கு எதைத்தான் கொடுப்பீங்க? இல்லை, எதைக் கொடுக்கிறோமோ அதை அவர் சாப்பிடணும்னு எதிர்பார்ப்பீங்களா?

  சின்ன பெக் சிங்கில் மால்ட் ஸ்காச்.
  அதுவும் வேணாம்னு மறுத்தா இதுல ஒண்ணு அதுல ஒண்ணுனு நான் சாப்பிடுறதைப் பார்க்கும் பாக்கியத்தைக் கொடுப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா, எங்க வீட்டில் நன்னாரி சர்பத் இருந்தது/இருக்கிறது, (பாட்டிலை எங்கேயோ வைச்சுட்டேன்.) ஆகவே எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து நன்னாரியை இரண்டு மேஜைக்கரண்டி விட்டு ஜில்லென்ற பானைத் தண்ணீரை விட்டுக் கொடுத்தால் ஆஹா, ஓஹோ, பேஷ், பேஷ் என அனுபவித்து ருசிப்பார்கள்.

   நீக்கு
  2. அதெல்லாம் சரிதான்...ஆனால் நீங்கள் நன்னாரி சர்பத் பாட்டில் எங்க வச்சேன் என்று வருபவர், திரும்பக் கிளம்புவதற்குள் கண்டுபிடிக்கணுமே..

   நீக்கு
  3. வடை, இட்லி, தோசை, ஊத்தப்பங்களுக்கிடையே சிங்கிள் மால்ட் Scotch -ம் இங்கு வருகிறதென்றால்... ப்லவ வருஷம் ஜோர்தான் !

   நீக்கு
  4. // (பாட்டிலை எங்கேயோ வைச்சுட்டேன்.)// ஃபிரிஜ் ல இருக்கும் பாருங்க.

   நீக்கு
  5. தேடிண்டு இருக்கேன் நெல்லை. அன்னிக்குனு பார்த்து இந்தச் சமையலறைக் காபினெட் சுத்தம் செய்யும் ஆட்களும் வந்திருந்தார்களா! திரும்பச் சமையலறையைச் சரி பண்ணியதில் இது மட்டும் எங்கேயோ போய் ஒளிஞ்சுண்டு இருக்குப் போல! :))))))

   நீக்கு
  6. @கௌதமன் சார், குளிர்சாதனப் பெட்டியில் இதை எல்லாம் வைப்பதே இல்லை. உறைந்து விடும்! வெளியே தான் வைப்பேன். வீணாகாது!

   நீக்கு
 13. //என்ன பரிசு வழங்கலாம் என்று சந்தேகம் வரும்போது எளிய பரிசாக, ஓவியம் வரையும் பென்சில் செட் போன்று வேறு எவை எவை உங்கள் நினைவுக்கு வரும்?

  பணம், பை.

  பதிலளிநீக்கு
 14. //சில சமயங்களில் ஓவியத்தைப் பார்த்து பாராட்ட மறந்துவிடுகிறேன். ஒரு கலைஞனுக்கு அவன் படைப்பைப் பற்றி விமர்சனம் செய்தாமல் இருந்தால் அது வருத்தத்தை உண்டாக்காதா?

  நீண்ட நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்ததை இது ஓவியம் தான் என்று யாராவது சொன்னதும் கண்டிப்பாகப் பாராட்டிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு ஒதுங்கியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரையாவது அளவுக்கு அதிகமாகப் பார்த்துவிட்டு, என்ன அவளை இப்படி வெறிச்சுப் பார்கறீங்க என்ற கேள்விக்கு, சாரி... ஓவியமோ அல்லது சிலையோன்னு ஆச்சர்யமாப் பார்த்தேன்... என்று சொல்லியிருப்பாரோ?

   நீக்கு
 15. //உணவை விமர்சனம் செய்வீங்களா இல்லை அவுக் அவுக் என்று போட்டதைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும் வழக்கமா?

  உங்களுக்கென்ன சுவாமி நல்லா சமைக்கத் தெரிந்தவரு, விமரிசனம் பண்ணுவிங்க. மேலயும் பண்ணுவிங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையில் பாசிடிவ் விமர்சனம் தவிர வேறு எதையும் பண்ணக்கூடாது.

   எனக்கு உப்பு காரம் சரியா இருக்கான்னு பார்த்துத்தான் சமைப்பேன். பெருமாளுக்கு சரியா இருக்கணும் என்று. ஆனால் மனைவி அதெல்லாம் சரிபார்க்காமல்தான் கண்டருளப் பண்ணுவார்.

   உணவைச் சமைப்பவர்களுக்கு சிறிய எதிர்மறை விமர்சனமும் எவ்வளவு மனவருத்தம் தரும் என்பதை உணர்ந்தவன் நான்.

   நீக்கு
  2. அவர்களுக்கு மன வருத்தமும் நமக்கு பசியும்... எதுக்கு தரணும்?

   நீக்கு
  3. உப்புச் சேர்ப்பதெல்லாம் கண்ணளவு தான், நான் தினம் தினம் சமைத்துவிட்டு ஸ்வாமிக்கு நிவேதனம் செய்துவிட்டுச் சாப்பிடும்போது தான் அதில் உப்புக்காரம் சரியா இருக்கா/இல்லையா என்பதே தெரியவரும். அநேகமாய்ச் சரியாகவே இருக்கும். நாம் சாப்பிட்டுவிட்டு ஸ்வாமிக்குப் படைக்கக் கூடாது! இன்னும் சொல்லப் போனால் ரொம்பவே மடி/ஆசாரம் பார்ப்பவர்கள் உப்புச் சேர்க்காமலேயே சமைத்து நிவேதனம் செய்வார்கள். சிலர் உப்பைத் தனியாக ஒரு கிண்ணத்தில் வைப்பார்கள். உப்பு ஆசாரக்குறைவு என்பதோடு சக்தியை அதிகம் தருவதாலும் உப்பைக் குறைத்தே உண்ணச் சொல்லுவார்கள். பண்டிகைகள், விசேஷ நாட்கள், ஸ்ராத்தம் போன்ற தினங்களில் நாம் வாழை இலை போட்டுப் பரிமாறும்போது உப்புச் சேர்த்த பண்டங்கள் இலையின் மேல் பகுதியிலும் உப்பில்லாத பண்டங்கள் இலையின் கீழ்ப்பகுதியிலும் பரிமாறுவோம்/பரிமாற வேண்டும். கலத்துக்குப் போடும் பருப்பில் உப்புச் சேர்த்திருந்தால் அதைப் பாயசம் அருகே பரிமாறக் கூடாது. இலைக்கு மேலே தயிர்ப்பச்சடிக்கும், இனிப்புப் பச்சடிக்கும் நடுவிலே உள்ள இடத்தில் பரிமாற வேண்டும்.

   நீக்கு
  4. இத்தனை விவரம் இருக்குதா!

   நீக்கு
 16. உளவியல் ரீதியாக குழந்தைகளுக்கும் நிறைய பாதிப்புகள்...

  பதிலளிநீக்கு
 17. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ஆட்சி மாற்றம் ஏற்படினும் நம் வாழ்க்கையில் அது எதிர்மறையான பாதிப்பைக் கொண்டுவரக் கூடாது என்று ப்ரார்த்திப்போம்

  பதிலளிநீக்கு
 18. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்.
  ப்லவ வருஷம் அமைதியும், ஆனந்தமும் அனைவருக்கும் நல்க, ஆண்டவனிடம் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 19. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 20. அன்பின் இனிய
  தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

  எங்கெங்கும் நலமும் வளமும் பெருகிட வேண்டிக் கொள்வோம்...

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
 21. /பிரசாதத்துடன் சட்னி, சாம்பார், நாட்டு சர்க்கரை/ - கோவில் பெயர் சொல்லுங்க. சிங்கப் பெருமாள் கோவிலில் தோசையுடன் "இட்லி மிளகாய்ப்பொடி எண்ணெய்" ப்ரசாத ஸ்டாலில் கொடுப்பதைப் பார்த்தேன். மற்றபடி பெருமாளுக்கு இவற்றையெல்லாம் (சட்னி சாம்பார்) கொண்டுபோக மாட்டாங்கன்னு நினைக்கிறேன். தோசை எனக்கு ரொம்பவே odd ஆக இருக்கு. தொட்டுக்க இல்லாமல் எப்படிச் சாப்பிடுவது?

  பதிலளிநீக்கு
 22. திருப்பதியில் முன்பு, வெளிப்பிராகாரத்தில் 10 ரூபாய்க்கு 5 பெரிய ஊத்தாப்பம் போன்ற நெய் தோசை வாங்கியிருக்கிறேன். தொட்டுக்க இல்லாமல் சாப்பிட முடியலை.

  பதிலளிநீக்கு
 23. //// யாருக்கு பரிசு ? // - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 24. //திருவரங்கம், திருக்குடந்தை.// - எனக்கு மிகவும் பிடித்த இரண்டு ஊர்கள். இங்க செட்டில் ஆனா பக்கத்தில் உள்ள கோவில்களுக்குப் போய்வரலாம். தண்ணீர் பிரச்சனை மின்சாரமின்மை இருக்கக்கூடாது. அவ்ளோதான்

  பதிலளிநீக்கு
 25. //பெங்களூர் வித்யார்த்தி பவன் மசாலா தோசை// - நீங்க எதையும் மிஸ் பண்ணலை. நம்ம ஊர் மசால்தோசை, சாதா தோசை, சாம்பார் சட்னிக்கு ஈடு எதுவுமே கிடையாது. எனக்கு வித்யார்த்திபவன் உணவு பிடிக்கலை (for that matter பெங்களூர் தோசைகளே). Am missing நம்ம ஊர் தோசை.... மதிய உணவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த சென்னை பிரயாணத்தில் இரண்டு நல்ல ஹோட்டல்ல மதிய உணவு, இரவுக்கு தோசை சாப்பிடணும்னு நினைத்துள்ளேன். இரண்டு நல்ல ஹோட்டல் சொல்லுங்க. நான் முதல் ஆளா சாப்பிடப் போயிடுவேன்.

   நீக்கு
 26. பிரசாதங்கள் பற்றிய கேள்விக்கு நான் # அவர்கள் சொல்லி இருக்கும் பதிலோடு ஒத்துப் போகிறேன். கோயிலில் கொடுப்பது/கோயில்களில் கொடுப்பது பிரசாதம் தான். அதை வாங்கி உடனே வாயில் போட்டுக்கொண்டே இறையருளை நினைக்க வேண்டும். பார்க்கப் போனால் வீட்டுக்கெல்லாம் எடுத்து வருவதில்லை. வரவும் கூடாது தான். ஆனால் இப்போதெல்லாம் கோயில் பிரகாரங்களிலேயே இந்தப் பிரசாதங்களை எச்சில் பண்ணீச் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தொன்னை, ப்ளாஸ்டிக் கிண்ணங்கள், டப்பாக்கள், குடிநீர் பாட்டில்கள் எனப் போட்டுவிட்டுப் போவது சகஜமாக ஆகிவிட்டது. உண்மையில் பிரசாதம் எனில் துளிப்போல் கையில் தருவது தான். பிரசாத ஸ்டால்களில் விற்பவை எதுவும் பிரசாதங்கள் அல்ல. ஒப்பந்த அடிப்படையில் செய்து தருகின்றனர். பிரசாதம் என்பது நேரே கோயில் மடப்பள்ளியில் இருந்து வரணும். அது வெகு சில கோயில்களிலேயே அப்படித் தரப்படுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது சரிதான்.

   நீக்கு
  2. பிரசாதம் குறைவாகத்தான் வழங்கப்பட வேண்டும். நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் கட்டி முடிக்கப்பட்டதும், அந்த கோவிலின் நிர்வாகிகளில் ஒருவர் காஞ்சிப்  பெரியவரிடம் சென்று, தாங்கள் கோவிலுக்கு வருகிறவர்களுக்கு தாராளமாக நிறைய பிரசாதம் வழங்குவதாக பெருமையாக கூறிக்  கொண்டாராம். அப்போது மஹா பெரியவர்," பிரசாதமெல்லாம்  அதிகம் கொடுக்க கூடாது, நீயே புரிந்து கொள்வாய்" என்றாராம். தன்னை பாராட்டப் போகிறார் என்று எதிர்பார்த்தவருக்கு  ஏமாற்றமாக  இருந்ததாம். இருந்தாலும் பிரசாதத்தை குறைக்காமல் வழங்கி வந்தாராம். 
   ஒரு நாள் சாம்பார் சாதத்தை பெற்றுக் கொண்ட ஒருவர் இவரிடம், "நீங்க சாம்பார் சாதம் மட்டும் கொடுக்கிறீர்கள், அதோடு ஏதாவது பொரியல் போடுங்கள், தயிர் சாதத்திற்கு ஊறுகாய் கொடுங்கள் அப்போதுதான் சாப்பிட முடியும்" என்றதும் மகா பெரியவரின்  வாக்கு நினைவுக்கு வந்ததாம்.  பிரசாதத்தை அளவிற்கு அதிகமாக விநியோகம் செய்தால் அதற்குரிய மரியாதை குறைந்து விடுகிறது. 

   நீக்கு
  3. உண்மைதான். திருப்பதியில் வேண்டிய மட்டும் லட்டு (அதாவது பரவாயில்லை. ஒன்று ஐம்பது ரூபாய்), கீழ்திருப்பதில 10 ரூபாய்க்கு சூப்பர் லட்டு.. அதன் மகிமை குறைந்துவிடுகிறது.

   நீக்கு
  4. பிரசாதம் பற்றிய சுவையான தகவல்களுக்கு நன்றி.

   நீக்கு
 27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 29. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 30. கேள்வி பதில்கள் நன்று.

  அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  சித்திரை சிறப்பிதழ் - மே சிறப்பிதழாக! ஓகே... வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 31. /அதனால் என்ன - கதைகளுக்கு kgg போடும் ஓவியங்களை இங்கே பாராட்டிவிடுங்கள். // எ.பி.யில் வெளியாகும் கதைகளுக்கு பொருத்தமாக படம் வரையும் திரு.கே.ஜி.ஜி. அவர்களுக்கு பாராட்டுகள். 

  பதிலளிநீக்கு
 32. இன்று தோசை புராணம் கூடுதல். ஆனால் எல்லோரும் மதுரை அழகர் கோயில் பிரசாதத்தை விட்டு விட்டார்கள். தொட்டுக்க ஒன்றும் கிடையாது. கேக் மாதிரி இருக்கும். அங்கு விற்கப்படும் தயிர்சாதத்திற்கு புளி சிவப்பு மிளகாய் துவையல் தருவார்கள். அருமையாக இருக்கும்.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குத் தெரிந்து எந்தக் கோயிலிலும் தோசைக்கோ/தயிர்சாதத்திற்கோ தொட்டுக்கக் கொடுப்பதில்லை. ஆனால் அது பிரசாதமாக இருக்கணும். பலரும் பிரசாதத்தையும் கோயில்களில் ஸ்டாலில் வாங்கும் உணவையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. ஸ்டாலில் விற்கும் தயிர்சாதத்திற்குத் தொட்டுக்கத் துவையல் கொடுத்திருப்பாங்க. காசு கொடுத்து வாங்குவதால்! ஆனால் பிரசாதம் என்பதே தனி! அதன் தாத்பரியமும் தனி!கோயில்களில் கிடைப்பதெல்லாம் பிரசாதம் இல்லை. அழகர் கோயில் ஸ்டாலில் விற்கும் தோசை கோயில் பிரசாதம் அல்ல. நாம் தளிகைக்குச் சொன்னால் எல்லாவற்றோடும் சேர்த்து தோசையும் வேண்டும் எனில் பட்டாசாரியார் அன்னிக்கு தோசை போட்டுத் தளிகையைப் பெருமாளுக்குக் காட்டிவிட்டு நமக்குரிய பங்கைத் தருவார்.

   நீக்கு
  2. அழகர் கோயில் தோசையும் சரி, ஶ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி சமயம் விற்கப்படும் தோசையும் சரி, அப்படியே சாப்பிடலாம்.

   நீக்கு
  3. ச்சே...   கோவில்களில் பிரசாதமே வாங்கி சாப்பிடாமல் இத்தனை வருடங்கள் வேஸ்ட் செய்திருக்கிறேனே...

   நீக்கு
  4. அழகர் கோவில் தோசை - சூப்பர்தான், எண்ணெயில் பொரிப்பதால். அரங்கன் தோசை - எப்படி இருக்கும்னு தெரியாது. பிரசாத ஸ்டால்களில் புனிதம் மிஸ்ஸிங்

   நீக்கு
  5. எப்போவும் எல்லாக் கோயில்களிலும் பிரசாதம் கிடைக்காது ஸ்ரீராம், கோயில்களின் வெளியே பெரிய அடுக்கை வைத்துக்கொண்டு புளியோதரை, சாம்பார் சாதம், பொங்கல், தயிர் சாதம் என்று தொன்னைகளில் விநியோகிப்பது எல்லாம் பிரசாதங்களும் அல்ல. கருவறையில் நிவேதனம் செய்த பிரசாதம்/உணவு தான் உண்மையான பிரசாதம். அது எல்லோருக்கும் எப்போவும் கிட்டுவதில்லை. ஶ்ரீரங்கத்தில் மதியம் மூன்று மணிக்கு அரங்கனைத் தரிசனம் செய்துவிட்டு வந்தால் உள்ளே நிவேதனம் செய்த செல்வரப்பம் கிடைத்துக் கொண்டிருந்தது. அது அங்கே மட்டும் தான் தருவார்கள். சந்தனு மண்டபம் தாண்டிக் கீழே இறங்கிவிட்டால் கிடைக்காது. பல சமயங்களில் பட்டாசாரியார்கள் அவர்கள் பங்கைக் கூறு போட்டு விற்பார்கள். அவை எல்லாமும் பிரசாதங்களே! ஆனால் அவற்றை எல்லாம் இப்போது தடை பண்ணி விட்டார்கள். பட்டாசாரியார் தெரிந்தவராக இருந்தால் முன் கூட்டியே கேட்டால் ஒரு வேளை பிரசாதம் அவர் கொடுக்கலாம். இப்போ ஶ்ரீரங்கத்தில் பிரசாத ஸ்டாலில் கிடைப்பது தான் பிரசாதம் என்று பெயர்!

   நீக்கு
  6. புரிந்துகொண்டேன்.  அதுதான், அதனால்தான் எனக்கு எங்கும் பிரசாதம் கிடைக்கவில்லை போல...

   நீக்கு
 33. எங்கள் பிளாக் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி.  உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

   நீக்கு
  2. நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

   நீக்கு
 34. எங்கள் ப்ளாக் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். காலையிலேயே வந்து சொல்ல கைபேசியில் சொன்னால் நாமொன்று சொல்ல என் கைபேசி தானொன்று எழுதுகிறது. அதன் ஸுபாவமது. கணினியில் சாயங்காலம்தான் சற்று உட்காரமுடிகிரது. கேள்வி பதில்கள் அருமை. எதையும் சாப்பிடாமலேயே பிரஸாதங்கள் சாப்பிட்ட உணர்ச்சி. சித்திரைமலரைப்பற்றி எதுவும் அறிவிப்பு காணோமே என்று நினைத்தேன். வருடாந்திர மலராகப் பூக்கும். நல்லது. பாராட்டுகள் யாவருக்கும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 35. கேள்விகளும் பதில்களும் அருமை.
  மாயவரத்தில் "திருஇந்தளூர் பரிமளரெங்கநாதர்" கோவிலில் இரவு பூஜை முடிந்து தோசை தருவார்கள் ஆளுக்கு ஒரு துண்டு. மிகவும் ருசியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!