புதன், 2 ஜூன், 2021

மஹா புருஷர்கள் பிறந்தநாளை ஏன் ஜெயந்தி என்கிறோம்?

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

ஆன்மீகவாதிக்கும், மதவாதிக்கும் என்ன வேறுபாடு?

# "வாதி" யாக இல்லாவிட்டால் ஆன்மீகம் பக்குவம் தரும்.  மதம் அடக்கம் தரும். வாதி பிடிவாதத்துக்கும்  பிளவுக்கும் வன்முறைக்கும் காரணமாவார்.

ஆன்மீகவாதிக்கு மதம் தேவையா?

# தேவையில்லையானாலும் இருந்தால் கூட கெடுதல் செய்யாது.

இளையராஜாவின் குக்கூ.., சந்தோஷ் நாராயணனின் குக்கூ,. எதை ரசித்தீர்கள்?

# இரண்டுமே கேட்டறியேன்.

& அவர்களுடைய குக்(கூ)களின் சமையலை அவர்கள்தானே  ரசித்திருப்பார்கள்? (எனக்குத் தெரிந்த சில குக்கூ: சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா, கூ கூ என்று குயில் கூவாதோ - நீங்கள் சொன்ன பாட்டு இதில் ஏதாவது ஒன்றா? )  

அட்ரஸ் தேடி அலைந்த அனுபவம் உண்டா?

# அட்ரஸ் இல்லாத நபராக இருந்து அவதிப் பட்டதுண்டு.

$ ஒரு கதவு எண்,  சௌந்தரராஜன் தெரு, தி நகர் என்று எழுதிய சீட்டுடன் நண்பர் பத்மநாபனைத் தேடி அலைந்தது இன்றும் நினைவில் நிற்கிறது.

சென்னைவாசிகள் விலாசம் தெரியாது என்று சொல்லவே மாட்டார்கள்.(1975)

உனக்கு பனகல் பார்க் தெரியுமா?

ராமகிருஷ்ணா ஸ்கூல்?

Caltex பங்க்?

Henchman பார்க்? 

சரி அத்தெ உடு... அதோ தெரியுது பார்க்.. அத்தேத்தாண்டி போய்க்கினே இரு.

Henchman ரோடு தெரியுதா? அங்கே சோத்துக்கை பக்கம் திரும்பி...

( இதில் நடுவில் கண்ணதாசன் வீடு தெரியுமா? பெருமாள் டாக்டர் தெரியுமா? என்ற கொசுறுகளும்.. !) 

& அலுவலகத்தில் சில prototype development வேலைகளுக்காக அடிக்கடி அலைய நேர்ந்தது உண்டு. பத்து வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் Money Work Shop நடக்கின்ற ஒரு இடத்தைத் தேடி அலைந்தது மாபெரும் அனுபவம். city மேப் எல்லாம் பார்த்து நான் முதலில் சென்று விசாரித்த இடத்தில் இருந்த செக்யூரிட்டி ஆள் - அங்கே அப்படி ஒரு இடமே இல்லை என்று சொல்லி என்னைத்  திருப்பி அனுப்பினார். கிட்டத்தட்ட எட்டு கிலோ மீட்டர்கள் நடந்து சுற்றி வந்து - திரும்பவும் அதே இடத்திற்கு வந்து பார்த்தால் - அதே இடம்தான். அந்த ஹோட்டலின் குறிப்பிட்ட ஹாலின் பெயர் அந்த செக்யூரிட்டி ஆளுக்குத் தெரிந்திருக்கவில்லை. மேலும் நான் ஆங்கிலத்தில் கேட்டது அவருக்குப் புரியவில்லை. 

ஏன் மஹா புருஷர்கள் ஜனித்த நாளை பிறந்த நாள் என்று சொல்லாமல் ஏன் ஜெயந்தி என்கிறோம்? மஹாவீர் ஜெயந்தி, புத்த ஜெயந்தி, சங்கர ஜெயந்தி, ராமானுஜ, காந்தி ஜெயந்தி... இப்படி?

 # ஜா என்றால் தோன்றுதல் (பிறப்பு) உதாரணமாக பத்மஜா பூமிஜா க்ஷிதிஜா (இலக்குமி). ஜா விலிருந்து ஜயந்தி அல்லது ஜெயந்தி பெறப்பட்டது. (சும்மா சமாளித்துதான்  பார்ப்போமே !)

மேலும் ஜெயந்தி குறித்து ஆராய்ந்ததில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்தது. (Jayanthi பெயர் விளக்கம்!) 


தொலைகாட்சியில் எந்த சேனலின் செய்திகள் பார்ப்பீர்கள்? வானொலியில் இப்போதும் செய்திகள் கேட்பதுண்டா?

# வானொலி செய்திகள் கேட்பது வழக்கம். பழக்கம் காரணமாக பாலிமர் செய்திகள் எப்போதோ ஒரு முறை, டைம்ஸ் நௌ, ரிபப்ளிக் டிவி காண்பதும் உண்டு.

 & முறையே Republic TV, Polimer news, Podhigai. 

நெல்லைத்தமிழன்: 

ஒருவரின் மறைவு நமக்கு ஏன் அழுகையையும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது?

# நாம் இழந்தது அனைத்தையும் எண்ணி துயரப் படுகிறோம்.  சில சமயம் மறைந்தவருடன் நமது பிணக்குகளும் நம்மை வருத்துவது இயல்பு.

1. இன்று, ரொம்ப வருடமா என்னிடம் இருந்த மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தைப் பார்த்தேன். எப்படி கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் இந்த மாதிரி இயக்குநர்கள், கதையைக் கையில் வைத்துக்கொள்ளாமல் தயாரிப்பாளர்களைப் போண்டியாக்கறாங்க? 

# சினிமாவை சகல ஆயத்தங்களும் செய்து கொண்டு திட்டமிட்டு எடுப்பது நம் வழக்கமல்ல. கிடைத்த கால்ஷீட்டுக்கு இருக்கும் பணவசதிக்கு ஏற்றவாறு  அவ்வப்போது தோன்றிய வண்ணம் படம் எடுப்பது தமிழ்ப்பண்பு.

2.  திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கவிடாமல் செய்கிறது இந்த மாதிரி வெட்டி இயக்குநர்கள்தான்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கறீங்க?

 # படம் பார்த்த பின்தானே பாடாவதி என்று தெரியும் ? மூட நம்பிக்கைகளும் லாப நோக்கும் நட்சத்திர மோகமும் மட்டுமே இருந்து, திறமை பின்தள்ளப் படுமேயானால் புளிய மரத்தில் பூசனிக்காய் காய்க்க வாய்ப்பில்லை.

கீதா ரெங்கன் : 

வரம் என்பதும் வேண்டுதல் என்பதும் வேறு இல்லையோ?

# கேட்காமல் வருவது அருள்,  எல்லாருக்கும் பொதுவாக இருக்கும். கேட்டுக் கிடைப்பது வரம். எனவே வரம் வேண்டுதல் இரண்டும் ஒன்றே.

= = = = = = =

படம் பார்த்துக் க(வி)தை சொல்லுங்க !

இந்தப் படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? கருத்துரை பதியுங்கள் : 

= = = = =


117 கருத்துகள்:

  1. அட? எங்கே எல்லோரும்? ஓ! நான் வந்துட்டேன்னு பயந்து ஒளிஞ்சுட்டு இருக்கீங்களா? ஓகே, ஓகே! அந்த பயம் இருக்கட்டும்! இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஞ்சி போட இரண்டு மணி நேரமா? வர்றது லேட்டு... இதுல அடுத்தவங்களை அதட்டறது....

      நீக்கு
    2. பார்த்தேன், பார்த்தேன், என்ன எழுதினீங்கனு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!கஞ்சி எல்லாம் அப்போவே போட்டாச்சு. வேறே சில வேலைகள், முக்கியமா காஸ் புக்கிங்க் எல்லாம் இருந்தது. அதை எல்லாம் முடிச்சுட்டுத் தான் கணினிக்கு வந்தேன்.

      நீக்கு
    3. சரி...  சரி..   உங்களுக்கும் தெரியுமா...  இஃகி இஃகி வாபஸ்!

      நீக்கு
    4. // காஸ் புக்கிங்க் எல்லாம் இருந்தது. அதை எல்லாம் முடிச்சுட்டுத் தான் கணினிக்கு வந்தேன்.// அடேங்கப்பா இரண்டுமணி நேர வேலை அல்லவா காஸ் புக்கிங் !!!

      நீக்கு
    5. With god's grace, gas booking வேலைலாம் இங்க இல்லை. பைப் gas. இன்று ஹாப்காம்ஸ் காய்கறி வேன் வந்தது. காய் வாங்கி பில் போடறதுக்குள்ள ஒரு மணி நேரமாயிடுது. அதனால கியூல மனைவி பையைப் போட்டா, நான் வெண்டை, வாழை மட்டும் வாங்கினேன்.

      நீக்கு
    6. காஸ் புக்கிங்குக்கு 2 மணி நேரமா? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! நிஜம்மாச் சொல்றீங்களா? இல்லாட்டி விளையாட்டா? எனக்கு அதற்கு ஐந்து நிமிஷம் தான் ஆனது. குறிப்பிட்ட எண்ணுக்கு டயல் செய்து, அவங்க சொன்னபடி எண் 1 ஐ இரண்டு முறைகள் அழுத்தினதும் காஸ் புக்கிங் ஓவர்! பில்லும் வந்துவிட்டது. டிஏசி எண்ணுடன். சிலிண்டர் தான் வரணும். :)

      நீக்கு
    7. மும்பையிலும் பைப் லைன் தான். இன்னும் சில ஊர்களிலும் உண்டு. குஜராத்திலும் உண்டு.

      நீக்கு
  2. கேள்வி/பதிலெல்லாம் படிச்சுட்டேன். அது சரி, கிருஷ்ண ஜயந்தி, காந்தி ஜயந்தினு எல்லாம் சொல்றோமே! ஏன் ராமர் ஜயந்தினு சொல்றதில்லை? அனுமத் ஜயந்தி கூடச் சொல்றோம்! பாவம் ராமர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று இளையராஜா ஜெயந்தி...!   ஹிஹிஹி...

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. //அது சரி, கிருஷ்ண ஜயந்தி, காந்தி ஜயந்தினு எல்லாம் சொல்றோமே! ஏன் ராமர் ஜயந்தினு சொல்றதில்லை?// கேள்வியை எழுதும் பொழுது எனக்கும் இதே சந்தேகம் வந்தது? Great women think alike.(சந்தடி சாக்கில் உங்களோடு சேர்ந்து கொண்டு விட்டேன்)

      நீக்கு
    4. Great Men என்றுதானே சொல்லுவாங்க. இந்தப் பெண்களுக்கு, ஆண்களிடமிருந்து எதைத்தான் லவட்டுவது என்பதற்கு எல்லையே இல்லாமல் போயிட்டுது

      நீக்கு
    5. அதைச் சொல்லுங்க நெல்லை!!

      நீக்கு
    6. சும்மா காசு சோபனா என்று நாம்கீ வாஸ்திக்கு போட்டிருக்காங்களே தவிர எங்கள் பிளாக் ஆசிரியர் குழு முழுவதும் ஆண்களால் ஆனது என்பதையும் பா.வெ., கீசா, கீ.ர. போன்றவர்கள் நினைவில் கொள்ளட்டும். ஹாஹா (நாராயண நாராயண)

      நீக்கு
    7. நட்சத்திரத்தை வைத்து ஸ்ரீஜெயந்தி என்று கிருஷ்ணர் பிறந்தநாளையும் (மத்தவங்க கோகுலாஷ்டமின்னு சொல்லுவாங்க), திதியை வைத்து ராம நவமி என்றும் சொல்கிறோம் என ஒருவர் சொன்னார்.

      அது சரி.. பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை, அம்பாளுக்கு சுண்டல், ராம நவமிக்கு பானகம் மோர் என்று டபாய்க்கும் நாம், கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டும் வித விதமான பட்சணங்கள் செய்து இறைவனுக்குப் படைக்கிறோமே அதன் காரணம் என்ன?

      நீக்கு
    8. நெல்லை நீங்க சொல்வது சரியே! ஆனால் நக்ஷத்திரம் பார்த்துக் கிருஷ்ணர் ஜயந்தி, ராமநவமி கொண்டாடுவது வைணவர்கள். ரோஹிணி நக்ஷத்திரமும் ஆவணி மாதமுமாக (தமிழில் வரும் ஆவணி) இருக்கணும். ஆனால் எங்களைப் போன்றவர்கள் ஆடி மாதம் (இந்தியக் காலன்டரின் படி அப்போது ச்ராவண் எனப்படும் ஆவணி மாதம்.) அஷ்டமி திதியில் ஜன்மாஷ்டமி கொண்டாடுகிறோம். அதே போல் ஶ்ரீராமநவமி சில சமயங்களில் பங்குனி மாத அமாவாசைக்குப் பின்னர் வரும் வளர்பிறை நவமியில் வரும். இந்த வருஷம் பங்குனி மாத அமாவாசை மாசக் கடைசியில் வந்ததால் ஶ்ரீராம நவமி சித்திரைக்குப் போனது. ஆனால் ஶ்ரீரங்கத்தில் பங்குனி மாத நவமியில் கொண்டாட மாட்டார்கள். சித்திரை மாதம் புனர்பூச நக்ஷத்திரத்தன்றே ஶ்ரீராம நவமி.

      நீக்கு
    9. // சும்மா காசு சோபனா என்று நாம்கீ வாஸ்திக்கு போட்டிருக்காங்களே தவிர எங்கள் பிளாக் ஆசிரியர் குழு முழுவதும் ஆண்களால் ஆனது என்பதையும் பா.வெ., கீசா, கீ.ர. போன்றவர்கள் நினைவில் கொள்ளட்டும். ஹாஹா (நாராயண நாராயண)// கா சோ இதைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்ததாக என்னிடம் அலைபேசியில் சொன்னார்.

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. வாங்க நெல்லை...   வணக்கம்...   மொபைல்/விரல் தட்டச்சின் விளைவா?!!!

      நீக்கு
    2. நல்லவேளையா எட்டிப்பார்க்கலையோ, பிழைச்சீங்க! அது ஏன் முதல் கருத்தை எடுத்துட்டீங்க? பயந்துண்டு தானே! இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    3. //அது ஏன் முதல் கருத்தை எடுத்துட்டீங்க? பயந்துண்டு தானே!//

      அது எனக்கும், நெல்லைக்கு மட்டுமே தெரியும்...  சொல்லமாட்டோமே...இஃகி,இஃகி,இஃகி!இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    4. நான் பார்த்துப் படிச்சுட்டும் வந்தேன். இங்கே வேணா காப்பி,பேஸ்ட் பண்ணவா? ஒரே அவசரத்தில் தட்டச்சி இருந்தார்.

      நீக்கு
    5. தேவையா?  சொ செ சூ?  ஹிஹிஹி...   இந்தக் கேள்வியை நெல்லைக்கே பாஸ் செய்கிறேன்!

      நீக்கு
    6. அட! சுவாரசியமா இஃகி இஃகி போகுதே!!! ஹிஹிஹி!

      நெல்லை அந்தக் கருத்தை எனக்கும் மட்டும் ரகசியமா அனுப்பிடுங்க!!!!

      கீதா

      நீக்கு
    7. என்னவோ நடக்குது, மர்மமா இருக்குது !!

      நீக்கு
    8. கௌ அண்ணா, பேயார் ஏதேதோ மர்மங்கள் செய்கிறார் போல மறைஞ்சு இருந்து!!!

      கீதா

      நீக்கு
    9. அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ஒரே அவசரம் அவருக்கு! ஏகத்தப்பு! அதான் எடுத்துட்டார்.

      நீக்கு
  5. இந்தப் படம் ஏதோ வங்காளக் கதையை நினைவூட்டியது. அதிலே தான் இப்படி சாப்பாடைப் போட்டுட்டு மனைவி கணவன் பக்கத்திலே அமர்ந்து விசிறிக்கொண்டிருப்பார். இதிலே விசிறி இல்லை. அதோடு தட்டை ஒரு பலகையின் மீது போட்டிருப்பாங்க. அதுவும் இல்லை. சரத் சந்திரரின் ஏதோ வங்காள சீரியல் நினைவு வருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே....    பரிந்தாவா,  தேவதாஸா?

      நீக்கு
    2. இரண்டும் இல்லை. தேவதாஸ் திரைப்படமா வந்திருக்கு! நெடுந்தொடரா வந்ததில்லை. சாவித்ரினு ஒரு சீரியல், ம்ஹூம், சாவித்ரி இல்லைனு நினைக்கிறேன், ஆனால் சரத்சந்திரரின் கதை! அதிலே அடிக்கடி இப்படி ஒரு காட்சியைக் காட்டுவாங்க. கதாநாயகிக்கு அதிகமான அலங்காரங்கள் எல்லாம் இருக்காது. முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே தூர்தர்ஷனில் வந்து கொண்டிருந்தது. இரு பெண்களின் குணநலன்களைப் பற்றி அலசிய நாவல்.

      நீக்கு
    3. சாவித்ரின்னுதான் முதலில் அடிச்சேன்...   அப்புறம் அது இவர் இலையேன்னு விட்டுட்டேன்!   அட!

      நீக்கு
  6. படத்தைப் பார்த்தவுடன், ஃபேக்டரி ஷிஃப்ட் வேலை முடிந்துவரும் அண்ணணுக்கு சாதம் போடும் தங்கைதான் தெரிகிறாள். சாப்பாட்டை ருசிச்சு சாப்பிடறானா எனவும் பார்க்கிறாள். பெற்றோர் இல்லாத வீடு. அண்ணன் என்ற கொழுகொம்பைப் பற்றிக்கொண்டு வீடு நல்ல நிலைக்கு வரணும்....


    யப்பா கதாசிரியர்களே... துரை செல்வராஜு சார்... இதுக்கு கதை எழுதுங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ...   துரை செல்வராஜூ சாரும், கீதா ரெங்கனும் வந்து விடுவார்கள்!

      நீக்கு
    2. இது அண்ணாவும் இல்லை, தங்கையும் இல்லை. கழுத்தில் மங்கல சூத்ரம் (கருகமணியில்) இருக்கு. அதோடு அந்தப் பெண்ணின் பார்வையே சொல்கிறது, அண்ணன் இல்லை என. நெல்லை பதிவையே கவனிச்சுப் படிக்கிறதில்லை. படத்தை மட்டும் எங்கே ஒழுங்காப் பார்த்திருக்கப் போறார். இஃகி,இஃகி,இஃகி! நான் வரேன். ஊரிலேயே இல்லை, சாயந்திரம் வரைக்கும்!

      நீக்கு
    3. ஊரில் இல்லையா?  இந்நேரத்தில் வெளியூர்ப் பயணமா?

      நீக்கு
    4. நெல்லை அவர்களது அன்பினுக்கு நன்றி...

      கதை இதோ தயார்... ஆனாலும்
      பதிவில் வருவதற்கு ஏழெட்டு மாதங்களுக்கு மேல் ஆகுமே!..

      அதற்குள் எத்தனை எத்தனை காட்சிகளோ.. எத்தனை எத்தனை கற்பனைகளோ!..

      நீக்கு
    5. நெல்லை பதிவையே கவனிச்சுப் படிக்கிறதில்லை. படத்தை மட்டும் எங்கே ஒழுங்காப் பார்த்திருக்கப் போறார். //

      ஹாஹாஹாஹாஹாஅஹஹாஹஹஹ ஹையோ விவிசி!!! கரீக்டு கீதாக்கா ஹைஃபைவ் நிறைய தட்டறேன்.....நான் ரொம்ப நாளா சொல்ல நினைச்சு விட்டுப் போனது. இப்ப எனக்கு சீனியர் சப்போர்ட்டும் கிடைச்சிருச்சு தைரியமா சொல்லலாம் ஹா ஹா ஹா ஹா
      அந்தப் பெண்ணின் முக உணர்வுகள் நெல்லை சொன்னது போல இல்லவே இல்லை...

      ஸ்ரீராம் மிக்க நன்றி நம்ம பெயரைச் சொன்னதுக்கு.

      துரை அண்ணா கதை வர மாதங்கள் ஆகும்ன்றது சரிதான் நீங்க சீக்கிரம் கதை உடனே முடிச்சிருவீங்க ஆனால் நான் ஹிஹிஹிஹிஹிஹி எழுதி முடிக்கவே வருஷக் கணக்காகும்!!!!!! அதுக்குள்ளே வேறு யாராச்சும் அதே கருவில் எழுதி வெளியாகிடும்!!!! ஹா ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    6. படத்தைப் பார்த்தவுடன், ஃபேக்டரி ஷிஃப்ட் வேலை முடிந்துவரும் அண்ணணுக்கு சாதம் போடும் தங்கைதான் தெரிகிறாள்.//

      கீதாக்கா நெல்லை மனசு தங்கமான மனசு!!!..அதை வேறு மாதிரி பார்க்காத நல்லெண்ணம் அவருக்குக் கூடப்பிறந்த சகோதரிகள் இல்லையே ஸோ தனக்கு இப்படி ஒரு தங்கை/அக்கா இருந்திருந்தா எப்படி இருக்கும் என்று கல்யாணமான ஒரு அக்கா/தங்கை பரிமாறுதல் போல....தோன்றியிருக்கும்...கரீக்டா நெல்லை!!? பாருங்க உங்க சேச்சியா/அன்னியத்தியா உங்களுக்கு வக்காலத்து வாங்கிருக்கேன்!! ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    7. // இது அண்ணாவும் இல்லை, தங்கையும் இல்லை. கழுத்தில் மங்கல சூத்ரம் (கருகமணியில்) இருக்கு. அதோடு அந்தப் பெண்ணின் பார்வையே சொல்கிறது, அண்ணன் இல்லை என.// கரெக்ட்.

      நீக்கு
    8. கீதாக்கா இந்தக் கொரோனா காலத்துல எங்க வெளிய போறீங்க? கவனமா இருங்கக்கா

      கீதா

      நீக்கு
    9. சரி... எந்த வீட்டுல இப்படி மனைவி ஈஷிண்டு, கணவன் சாப்பிடும்போது உட்கார்ந்திருப்பாங்க? கீதா சாம்பசிவம் மேடம் கற்பனையே அலாதிதான்.

      இந்தத் தடவையாவது கருவிலி கோவில் படம், அம்பாள் படம்லாம் பளிச்சுனு எடுத்துண்டு வாங்க.

      நீக்கு
    10. அட? நிஜம்மாவே வெளியே போறதாவா நினைச்சீங்க? என்ன போங்க! ஒரு நகைச்சுவையைக் கூடப் புரிஞ்சுக்க ஆளே இல்லை இங்கே! நான் நெல்லையைக் கலாய்த்ததால் ஊருக்குப் போறேன் னு சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவானும் சொன்னேன்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    11. சரிதான், நெல்லை, நீங்க ஹிந்தி/வங்காளப்படங்கள் அதிகம் பார்க்கலை போல! ஒண்ணும் வேண்டாம், ஒரே ஒரு படம் சொல்றேன். "ஸ்வாமி"னு ஒரு வங்காளக்கதையை ஹேமமாலினியின் அம்மா ஹிந்தியில் எடுத்திருத்தாங்க. அதிலே கதாநாயகன் கிரீஷ் கர்னாட் சாப்பிடும்போது கதாநாயகி ஷபனா அஸ்மி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சாப்பாடு பரிமாறிக் கொண்டே விசிறுவார். :))))

      நீக்கு
    12. பல வீடுகளில் கணவன்/மனைவி அருகருகே உட்கார்ந்து சாப்பாட்டு வேளையில் பேசுவது உண்டு. அந்தக் காலத்திலேயே எங்க சித்தி/சித்தப்பா (சின்னமனூர்) இப்படித் தான் பேசுவாங்க. முக்கியமான விஷயங்கள் எல்லாம் அலசப்படும். அதே போல் என் அம்மாவின் அம்மாவும்/தாத்தாவும் சாப்பாட்டு வேளையில் தான் முக்கியமான பேச்சு வார்த்தை/முடிவுகள் எல்லாம் எடுப்பாங்க. அப்போ வேறே யாரும் அங்கே போகமாட்டாங்க! அது அவங்க இருவருக்கான நேரம்.

      நீக்கு
    13. //நகைச்சுவையைக் கூடப் புரிஞ்சுக்க ஆளே இல்லை இங்கே! //

      நகைச்சுவைன்னு முதலிலேயே சொல்லி இருந்தா சிரிச்சிருப்பேன்...  ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு


    14. மனைவி ஏற்கெனவே கணவனை விட்டு விட்டு சாப்பிட்டு விட்டால், அந்தக் குற்ற உணர்ச்சியில் கணவனை ஐஸ் வைக்க அன்பாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே பரிமாறுவார்.  இதுவா தெரியாது அந்தக் கணவனுக்கு...   நிமிர்ந்து பார்க்கிறானா பாருங்க....

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜூ சார்..  வாங்க...  வணக்கம்.

      நீக்கு
  9. ஆன்மீகவாதிக்கும், மதவாதிக்கும் என்ன வேறுபாடு?//

    ஆன்மீகவாதி-பக்குவம். மதவாதி - வெறி

    ஆன்மீகம் என்பதே மதத்திற்கு அப்பாற்பட்டது இல்லையோ இது என் தனிப்பட்ட புரிதல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் காலத்தில் பக்தியையே "ஆன்மிகம்" என்று சொல்கிறார்கள். சித்தர்கள் எல்லோரும் ஆன்மிகவாதிகள். ஶ்ரீரமணர் ஆன்மிகவாதி, மஹா பெரியவர் இப்படிச் சொல்லலாம். ஆனால் பெரியவர் போன்றவர்கள் பூஜை, புனஸ்காரங்களையும் வைத்துக் கொண்டிருந்தனர். ஶ்ரீரமணர் அந்த அளவுக்கு வைச்சுக்கலைனு நினைக்கிறேன். சேஷாத்ரி ஸ்வாமிகள், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் இவங்கல்லாம் சுத்தமான ஆன்மிகவாதிகள். பிரம்மேந்திரரின் "பிரம்மம் ஒன்று தான், பரப்பிரம்மம் ஒன்றுதான்!" பாட்டு ஒண்ணு போதுமே!

      நீக்கு
  10. சுவாரஸ்யமாக இருந்தது பதில்கள்.

    பதிலளிநீக்கு
  11. அட்ரஸ் தேடி அலைந்த அனுபவம் உண்டா?//

    ஆஹா உண்டே..கூகுள் மேப் வந்த பிறகும் கூட அலைந்தது உண்டு...நம்மூரில் இன்னும் கூகுள் மேப் சரியாக உள்ளிடப்படவில்லை என்றே தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))) நீங்கள் சொல்வது சரிதான்.

      நீக்கு
    2. விலாசம் தேடாமலேயே நாங்க சில சமயம் அநாவசியமா அலைந்து சண்டை போட்டுப்போம்! என்னன்னா நம்ம ரங்க்ஸுக்கு இல்லாத ஒரு ஓட்டலைக் கண்டுபிடிக்கணும்னு ஆசை பொங்கி வரும். நான் கண்ணெதிரே இருப்பதிலே என்ன கிடைக்குமோ சாப்பிட்டுக்கலாம் என்னும் கட்சி! ஆனால் அவரோ பாரம்பரியம்னு தேடிட்டுப் போவார். கால் வலிதான் மிஞ்சும். கடைசியில் கிடைத்ததைச் சாப்பிட்டு வருவோம்.

      நீக்கு
    3. நானும் அப்படித்தான் தேடிக்கிட்டுப் போவேன். சில சமயம் கிடைக்காது. ஆனா பாருங்க... நல்லா சாப்பிட்டப்பறம், அந்த பாரம்பர்ய ஹோட்டல் கண்ணுக்குப் பட்டால் சாப்பிடமுடியுமா? சின்னச் சின்ன ஆசையையெல்லாம் இந்தப் பெண்கள் குத்தம் சொல்றாங்களே.. எனக்கு காளியாகுடி ஹோட்டல்ல சாப்பிடணும்னு ஆசை. இப்படித்தான் தேடிக்கொண்டு பார்த்தசாரதி விலாஸுக்குச் சென்றோம் (திருவானைக்கா). பல சமயங்கள்ல, சின்ன வயசுல சாப்பிட்டுட்டு மனசுல இருந்த திருப்தி இப்போ போய்ப் பார்க்கும்போது கிடைக்காது. உதாரணம் மதுரை ரயில் நிலையம் வெளியில் உள்ள கற்பகம் ஹோட்டல் (அதுபோலத்தான் காலேஜ் ஹவுஸும் இப்போ நல்லா இருக்காதுன்னு தோணுது).

      நீக்கு
    4. கற்பகம் ஹோட்டல் எல்லாம் எப்பவோ கண்ராவி ஹோட்டல் ஆயிடுச்சு! காலேஜ் ஹவுஸும் தண்டம்!

      நீக்கு
    5. ஶ்ரீரங்கத்தில் பாரம்பரியம்னு சொல்லப்படும் எந்த ஓட்டலும் திருவானைக்கா பார்த்தசாரதி உள்பட தண்டமோ தண்டம் மதுரை காலேஜ் ஹவுஸுக்குள் நுழையவே நுழையாதீங்க. காளியாகுடி இப்போ அதில் வேலை பார்த்தவரால் நடத்தப்படுவதாகச் சொன்னாலும் முன்னத்தனை ருசியோ, கவனிப்போ கிடையாது. மடிப்பாக்கம் கூட்டு ரோடில் காளியாகுடி பெயரில் ஒரு ஓட்டல் இருப்பதாகவும் ஒரிஜினல் காளியாகுடிக்காரங்க வைச்சதுனும் எங்க சம்பந்தி சொல்லுவார். ஆனால் எங்களுக்கு அது பத்தித் தெரியாது.

      நீக்கு
    6. மடிப்பாக்கம் கூட்டு ரோடில் இருந்த காளியாக்குடி ஹோட்டலில் ஒருமுறை டிஃபன் சாப்பிட்டுப் பார்த்தேன். (அண்ணன் வீட்டுக்கு மிக அருகே அமைந்திருந்த ஹோட்டல்) ஆனால் டிஃபன் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

      நீக்கு
  12. எம் கேள்விக்கும் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. கேள்வி கேட்டதே மறந்து போனேன்!! ஹா ஹா ஹா...

    பதில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

    மனைவி/கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!!! அப்படிப் பார்க்கும் போது நீங்கள் சொல்லுவது முதல் பாதி ரைட்டு. அதாவது அருள் என்பதை வரம் என்று பொருள் கொண்டால். ஆனால் எல்லாருக்கும் பொதுவாக இருக்கும் என்பது யதார்த்தத்தில் இல்லைதானே. எல்லோருமே எல்லா அருள்/வரமும் கிடைக்கப்பெறவில்லை தானே

    கவித்திறமை, பாடும் திறமை, கல்வித்திறமை என்ற பல திறமைகள் எல்லாம் ஒருவருக்கு இருக்கென்றால் இயற்கையாகக் கிடைக்கப்பெற்ற வரமே. ஆனால் இந்த வரங்கள் பெற்றிருந்தும் அதை முன்னெடுத்துச் செல்ல இயலாமல் பல தடைகள் என்ன உழைத்தாலும் நிறைவேறாதது என்றும் இருக்கிறது...

    உதாரணத்திற்கு - "உனக்கு அசாத்திய கற்பனை வளம், நல்ல குரல் யு ஆர் ப்ளெஸ்ட். உனக்கு இயற்கையாவே இறைவன் கொடுத்திருக்கார். அதை யூஸ் பண்ணு உன்னை வெளிப்படுத்த முயற்சி பண்ணு" என்று ஒரு நபருக்குச் சொல்லபடுகிறது என்று கொள்வோம். அவர் முயற்சிகள் திருவினையாகவில்லை...அடுத்து தடங்கல்கள், சூழல்கள் அப்போ சுற்றியுள்ளவர்கள் அவருக்கு வேண்டிக்கொள்ளுங்கள் இந்த இறைவனுக்கு இப்படி வேண்டிக் கொள்ளுங்கள் என்ற நல்லெண்ணப் பரிந்துரைகள்...

    வேண்டுதல் என்பது பொதுவாக எல்லாரும் செய்வது தம் மனதில் உள்ள சில நோக்கங்கள் நிறைவேற, அபிலாஷைகள் நிறைவேற சில மண்டலம், இத்தனை நாள் என்று ஒரு கணக்குப் படி அல்லது தினமுமே சில பிரார்த்தனைகளின் மூலம். அல்லது சில விதிமுறைகளின் படி...

    அப்படி வேண்டினாலும் நமக்குக் கிடைக்கப்பெறும் அருள் இருந்தால் தானே நடக்கும். இயற்கையாகவே கிடைக்கப்பெற்ற வரத்தை முன்னெடுத்துச் செல்ல இயலாத போது அது வரம்? வரம் தான் ஆனால் அதிகம் அறியப்படாமல் ஒரு சிறு வட்டத்திற்குள் இருப்பது, அந்த வரத்தை முன்னெடுத்துச் செல்ல அருள் இருந்தால்தனே நடக்கும்...? இது என் சிற்றறிவுக்கான புரிதல். தவறென்றால் மன்னிக்கவும்.

    இதற்கு மற்றொரு கோணத்திலும் சொல்லப்படும். நீ எடுக்கும் முயற்சி, உழைப்பு இதில் எங்கேனும் குறை இருக்கும் நீ அறியாமலேயே அல்லது உன் உழைப்பு, முயற்சி சரியான பாதையில் இல்லை என்றும் எனவே தொடர்ந்து உழை என்று சொல்லபடுவதும் உண்டு. என்றாலும் இயற்கையாகக் கிடைத்த வரமும், மனிதர் நாம் செய்யும் வேண்டுதலும் கூட நிறைவேற வேண்டுமென்றால் அதற்கான ஆசீர்வதாம்/அருள் வேண்டும் என்றே தோன்றும். என் சிற்றறிவில் இப்படித் தோன்றியதுண்டு. (எல்லாம் சொந்த அனுபவத்தில் வந்தது தான் ஹிஹிஹிஹிஹி)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. //அப்படி வேண்டினாலும் நமக்குக் கிடைக்கப்பெறும் அருள் இருந்தால் தானே நடக்கும். இயற்கையாகவே கிடைக்கப்பெற்ற வரத்தை முன்னெடுத்துச் செல்ல இயலாத போது அது வரம்? வரம் தான் ஆனால் அதிகம் அறியப்படாமல் ஒரு சிறு வட்டத்திற்குள் இருப்பது, அந்த வரத்தை முன்னெடுத்துச் செல்ல அருள் இருந்தால்தனே நடக்கும்.// நீங்கள் சொல்வதை 100% ஒப்புக் கொள்கிறேன் கீதா.

      நீக்கு
    3. கேள்வி பதில்லாம் ஒரு மார்க் ரெண்டு மார்க் கொஸ்டின் மாதிரி. அதுக்கே 15 மார்க்குக்கு பதில் எழுதினா, 35 மார்க்குக்கு விடை அளிப்பதற்குள் நேரம் முடிந்துவிடாதா கீதா ரங்கன்(க்கா)

      சுருக்கமா, நமக்கு ப்ராப்தம் இல்லாத எதுவும் வரத்தால நமக்குக் கிடைக்காது. கிராமத்துல, உடம்பு முழுக்க எண்ணெயைத் தடவிட்டு உருண்டாலும் ஒட்டற மண்ணுதான் ஒட்டும்பாங்க

      நீக்கு
    4. இதுக்கு நான் காலம்பரவே பதில் அளிக்க நினைச்சேன். பெரிசாயிடும் என்பதாலும் நேரம் இல்லை என்பதாலும் எழுந்து போயிட்டேன். வரம் வேறே/வேண்டுதல் வேறே! வரம் தானாகக் கிடைக்கும் ஒன்று. அந்த வரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளணும். குழந்தை மேதைகள் எல்லாம் வரம் பெற்றுப் பிறந்தவர்கள். ஆனால் எல்லோருமே சோபிப்பதில்லை. வேண்டுதல் என்பது நாம் தனியாக நமக்கே நமக்கு எனப் பிரார்த்தித்துக் கொள்ளுவது. கிடைத்த வரத்தைத் தக்க வைச்சுக்கணுமேனு வேண்டிக்கலாம். எல்லோருக்கும் வரம் கிடைக்காது. ஆனால் எல்லோரும் வேண்டிக்கலாம். வரம் பெற்றவர்கள் எல்லோருமே முன்னுக்கு வருவதும் இல்லை. வரம் பெற்றிருக்கோம் என்பதே தோன்றாமல் இருப்பவர்கள் உண்டு. அதற்கும் ஒரு தூண்டுதல் வேண்டும். சிலருக்கு நல்லப் படிக்க வாய்ப்பு இருக்கும்/ பாட வாய்ப்பு இருக்கும்/குரலும் ஒத்துழைக்கும் ஆனால் முயற்சி இருக்காது. அப்போ அவங்க கிடைத்த வரத்தைச் சரியாகப் பயன்படுத்தலைனு வைச்சுக்கலாம். முயற்சியின் மூலம் முன்னுக்கு வரலாம். வெறும் வரம் மட்டும் இருந்தால் போதாது. நம்மிடம் இருப்பதைச் சரியாகப் பயன்படுத்திக்கணும் என்னும் முயற்சியும் சேரணும். சிலருக்குச் சுற்றி இருப்பவர் ஒத்துழைப்பு இருக்காது. ஆனால் தடையையும் மீறிச் சிலர் பிரகாசிப்பார்கள். அது எல்லோராலும் முடியறதில்லை. தடை பட்டவுடன் மனம் சுருங்கி ஆசை சுருங்கி ஒடுங்கிப் போகிறவர்கள் அதிகம்.

      நீக்கு
    5. நெல்லை சொல்வது தப்பு, வரம் கிடைக்கவும் ப்ராப்தம் வேண்டும். அது இருந்தால் தான் வரமே கிடைக்கும். என் அம்மா நன்றாகப் பாடுவார். சில நாட்களுக்கு முன்னர் சிவானந்த விஜயலக்ஷ்மி பற்றிப் படித்தேன். அவரும் நன்றாகப் பாடுவார். அம்மா, சிவானந்த விஜயலக்ஷ்மி இருவரும் ஒன்றாக மதுரை தானப்பமுதலி அக்ரஹாரத்தில் முனிசிபல் பள்ளியில் படித்தவர்கள். என் அம்மா அந்தக் காலத்து எட்டாவது ஈஎஸ் எல் சி என்பார்கள்/ பொதுத் தேர்வு அத்துடன் நின்று விட்டார் மேற்கொண்டு ஆசிரியப் பயிற்சி படிக்க நினைத்தும் தாத்தா/பாட்டி சம்மதிக்கவில்லை. திருமணம் நிச்சயித்துவிட்டார்கள். ஆனால் சிவானந்த விஜயலக்ஷ்மி நன்கு படித்தார். கதா காலட்சேபங்களிலும் இசை நிகழ்ச்சிகளும் நடத்தி நன்கு பெயர் வாங்கினார். இது வரம். அம்மாவுக்கு அந்த வரம் கிடைக்கப் பிராப்தம் இல்லை. அப்பாவும் அவ்வளவெல்லாம் சங்கீதம் பிடித்தவர் இல்லை என்பதால் அம்மா எப்போவோ பாடுவதோடு சரி! நல்ல குரல் வளம், ராகம், பயிற்சி எல்லாம் இருந்தும் சோபிக்க முடியலை!

      நீக்கு
    6. விளக்கறேன்னு நினைச்சு குழப்பறீங்களே..... இசைவித்தகர் வேதவல்லி, எம்.எஸ்.எஸ், இன்னும் பலர் - எல்லோருக்கும் நல்ல குரல் வளம், முயற்சி, பயிற்சி இருந்தாலும் அவங்க எட்டும் உயரம் மட்டும் வேறு வேறாக இருக்கிறதே.. அதுதான் ப்ராப்தம். அதைத்தான் நீங்க வரம் வாங்கிவந்து பிறந்திருக்காங்க என்று சொல்றீங்க.

      குரல் வளம் என்பது இறைவன் கொடுப்பது. அதைக் கொண்டு சோபிப்பதற்கு நமக்கு ப்ராப்தம் இருக்கணும். வெறும் முயற்சி மட்டும் போதாது. என் மகளுக்கு ரொம்ப நல்ல குரல் (இன்னும் சின்ன வயசுல. சாதகம் பண்ணலாம் அவள் முயற்சிக்கலை. அதனால் இப்போ குரல் சுமாராயிடுச்சு என்பது என் அபிப்ராயம்). இன்னொரு உறவினரின் பெண்ணுக்கு குரல், இயல்பான பாடும் திறமை கிடையாது என்பது என் அபிப்ராயம். ஆனால் முயற்சி, பயிற்சி தொடர்ந்து கச்சேரி செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். காலம் பெரிய இடத்தில் கொண்டு வைக்குமா என்பது தெரியலை. ப்ராப்தம் இருந்தால் முயற்சி தானாகவே வரும், அல்லது காலவெள்ளம் அப்படி கஷ்டப்படவைத்து மேலே கொண்டுபோய் உட்காரவைக்கும். காளிதாசன் கதை தெரிந்துமா இப்படிக் குழப்பியிருக்கீங்க?

      நீக்கு
    7. // அம்மா, சிவானந்த விஜயலக்ஷ்மி இருவரும் ஒன்றாக மதுரை தானப்பமுதலி அக்ரஹாரத்தில் முனிசிபல் பள்ளியில் படித்தவர்கள்.// என்னுடைய மாமியார் ராமலக்ஷ்மி அவர்களும் சிவானந்த விஜயலக்ஷ்மி அவர்களுடன் ஒன்றாகப் படித்தவர் என்று அவர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது என் மனைவியிடம் கேட்டேன். அவரும் அதை உறுதிப்படுத்துகிறார். சிவானந்த விஜயலக்ஷ்மி பூணூல் அணிந்தவர் என்னும் தகவலைக்கூட என் மாமியார் கூறியிருக்கிறார்.

      நீக்கு
    8. சிவானந்த விஜயலஷ்மி பாடிய 'அம்ப லலிதே.்மாம்பாலய பரம் சிவம் லலிதே' என்கிற பாடல் எனக்கு ரொம்ப நாட்களாக கிடைக்காமல் இருந்தது. போனவாரம் வாசு பாலாஜி ஸார் மூலம் கிடைத்தது.

      நீக்கு
    9. குழப்பல்லாம் இல்லை நெல்லை. உங்களுக்குப் புரியலை அவ்வளவே! எங்க பெண்ணுக்கு நன்றாய்ப் பாட்டு வரும், பாட்டு வகுப்பிலும் சேர்த்தோம். ஆனால் அவள் வாயையே திறக்க மாட்டாள். அவளுக்குள்ளாக முணுமுணுக்கையில் என்ன நல்ல குரல் என்று தோன்றும். நாம் கவனிக்கிறோம்னு தெரிஞ்சால் நிறுத்திடுவா. ஒரு சில நல்ல உண்மையான ஜோசியர்கள் அவளுடைய குரல் வளத்தைப் பற்றியும் அதை அவள் கிரஹக் கோளாறால் பயன்படுத்துவதில்லை எனவும் பயன்படுத்தினால் உச்சிக்குப் போயிருப்பாள் என்றும் சொல்லுவார்கள். அதிலே திருப்திப் பட்டுக்குவேன். வேறென்ன செய்யறது? :(

      நீக்கு
    10. என் பெண் சின்ன வயசுலயே கல்பனா ஸ்வரங்கள் போடுவா. நானோ எதையும் போட்டோ, வீடியோ எடுக்கும் டைப் (பிற்கால நினைவுகளுக்காக). நான் கேமராவைத் தூக்கினாலே ஸ்டாப் பண்ணிடுவாங்க ரெண்டு பேரும். ஒரு நாள், அவளுக்குத் தெரியாமல், கதவு இடுக்கிலிருந்து ஒரு மூவி க்ளிப் எடுத்தேன். குரல் மட்டும் இருந்தால் போதாது. அசுர உழைப்பும் வேண்டும். அவளுக்கு ஒரு சேனல்ல மட்டும் உழைப்பதில் இஷ்டமில்லை. இதுலவேற அவ, இன்னொரு மாமிக்கு வேற மியூசிக் டியூஷன் எடுத்தாள். ஹாஹா.

      நீக்கு
  13. படத்துக்குப் பாட்டு :
    உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே!
    உப்புமா கொடுத்தே ரசித்திருப்பாயே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா கௌ அண்ணே அப்படிப் போடுங்க!

      அது சரி அது உப்புமா? அட உப்புமாவைக் கூட ரசிக்கிறார் மாப்பிள்ளை?!!!

      ஆமா பின்னெ கல்யாணமான புது பெண்ணுக்கு வேற என்ன சமைக்கத் தெரிஞ்சுருக்கும் உப்புமா தான் அதுவும் உதிர் உதிரா?!

      பாருங்க மாப்பிள்ளை கன்னத்தை. உப்புமாவால உப்பி இருக்கு!!!! உப்புமாவை வாயில் ஒதுக்கி வைச்சு முழுங்க முடியாம....பேசவும் சொல்ல முடியாம!!! ஹாஹாஹா..

      கீதா

      நீக்கு
  14. //அதோடு அந்தப் பெண்ணின் பார்வையே சொல்கிறது, அண்ணன் இல்லை என.// அதானே! இதையெல்லாம் புரிந்து கொள்ளும் திறன் ஆண்களுக்கு கொஞ்சம் குறைவுதான். அதுவும் நெல்லை போன்றவர்களுக்கு...;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை பானுக்கா வாங்க வாங்க...ஆஹா இன்று நெல்லைக்கு எதிரா எனக்கு சப்போர்ட்டுக்கு இரு அக்காக்கள்!!!! எனக்குத் தலை கால் புரியலை.!!!

      கீதா

      நீக்கு
    2. // இதையெல்லாம் புரிந்து கொள்ளும் திறன் ஆண்களுக்கு கொஞ்சம் குறைவுதான். அதுவும் நெல்லை போன்றவர்களுக்கு...;)// அப்படிப் போடுங்க அருவாள !!

      நீக்கு
    3. கேஜிஜி சார்... இந்தப் பெண்களை எப்போதுமே நம்பிடாதீங்க (கவிஞர்களும் அப்படியேதான் எழுதியிருப்பாங்க). நான் மட்டும், அந்தப் பெண்ணுக்கு கருகமணி போட்ட தாலி, அனேகமா தெலுங்கு பேசுபவர்கள், கழுத்துல டாலர்ல அம்மன் படம் தெரியுது என்றெல்லாம் எழுதியிருந்தால், 'காலைல எழுந்து பதிவை ஒழுங்காப் படிக்காம கண் எங்கெல்லாம் போகுது இந்த நெல்லைக்கு' என்று சண்டைக்கு வந்திருப்பாங்களா மாட்டாங்களா?

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. //நான் வரேன். ஊரிலேயே இல்லை, சாயந்திரம் வரைக்கும்!// இந்த லாக் டவுன் காலத்தில் எங்கே புறப்பாடு?

    பதிலளிநீக்கு
  17. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

    கொரோனா கால்த்தில் இருக்கும் உணவை இருவரும் "அவர் சாப்பிட்டும் என்று மனைவியும் அவள் சாப்பிடட்டும் என்று கணவரும்" உண்பது போல் பாவனை செய்வதாக தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  18. காலை மீதமான இட்லியை இட்லி உப்புமா செய்து இருப்பது போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. ப.பெ.: ஐயோ பாவம்! க்வாரண்டைன் இருந்ததில் ரொம்பவும் காய்ந்துதான் போய் விட்டார். உப்புமா என்றால் முகத்தை சுளிப்பவர் எப்படி லபக் லபக்கென்று முழுங்குகிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "நீ வேறு என்ன போட்டு விடப் போகிறாய்...   சொல்லி என்ன ஆகப்போகிறது?  எதற்கு வம்பு..   சாப்பிட்டு விட்டு நிறைய ஜோலியிருக்கு  "  என்று கூட அவன் மனதில் ஓடலாம்!

      நீக்கு
    2. அதேதான்! அதை அவனால் வெளியே சொல்ல முடியவில்லை, பாவம்!

      நீக்கு
  20. ஆணையிட்டேன் நெருங்காதே என்று பாடியவர்தானே படத்தில் இருக்கும் நடிகை? கே.பாலசந்தரின் ஆஸ்தான நடிகைகளுள் ஒருவர். நம் பிரசாரத்திற்கு பாட்டி முறை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! ஜெயந்தி : பெக்கெட்டி சிவராமின் மனைவி.

      நீக்கு
    2. //நம் பிரசாரத்திற்கு பாட்டி முறை.// ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ???????????????????

      நீக்கு
    3. நடிகர் பிரசாந்த். இதில் ஏடாகூடமான விஷயங்கள் இருக்குன்னு நினைக்கிறேன்

      நீக்கு
    4. சாரி, பிரசாந்திற்கு என்பதற்கு பதிலாக பிரசாரத்திற்கு என்ற டைபிங்க் எரரை கவனிக்கவில்லை.
      //ஜெயந்தி : பெக்கெட்டி சிவராமின் மனைவி.// ஜெயந்தி பெக்கெட்டி சிவராமின் இரண்டாவது மனைவி. முதல் மனைவியின் மகள் தியாகராஜனின் மனைவி,பிரசாந்தின் அம்மா.

      நீக்கு
    5. அடேங்கப்பா.. எனக்கு இதுவரை தெரியாது.

      நீக்கு
    6. // ஜெயந்தி பெக்கெட்டி சிவராமின் இரண்டாவது மனைவி. முதல் மனைவியின் மகள் தியாகராஜனின் மனைவி,பிரசாந்தின் அம்மா.// ஆ ! தலை சுத்துதே!

      நீக்கு
  21. சில வாரங்களுக்குப் முன்பு, கீதா அக்கா, "இப்பொதெல்லாம் பூஜை செய்வது கிடையாது, தெரிந்த ஸ்லோகங்கள் சொல்வதோடு சரி" என்று சொல்லியிருந்தார். ஸ்லோகங்கள் சொல்வது பூஜை ஆகாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அடுத்த வாரத்துக்கான கேள்விதானே?

      நீக்கு
    2. அதோடு மட்டும் இல்லை. விரதங்களும் இருப்பதில்லை இப்போது! முன்னெல்லாம் வாரா வாரம் செவ்வாய்க்கிழமைகளில் உப்பில்லா விரதம், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம்னு இருப்பேன். இப்போல்லாம் நோ விரதம். மூணு வேளையும் சாப்பாடு. என்ன ஒண்ணு! பூண்டு, மசாலாப் பொருட்கள்/வெங்காயம் இல்லாமல் பார்த்துப்பேன்.

      நீக்கு
  22. வல்லி அக்காவை எங்கே காணவில்லை?

    பதிலளிநீக்கு
  23. சென்னை ராகவ ரெட்டி காலனியில் ஒரு நண்பர் வீட்டிற்கு செல்ல வேண்டும். அசோக் நகரில் இருக்கும் என் சகோதரியின் வீட்டிலிருந்து நடந்தே சென்று விடலாம் என்பதால் நடக்க ஆரம்பித்தோம். ராகவ ரெட்டி காலனி சென்று விட்டோம், ஆனாலும் நண்பர் வீட்டை கண்டு பிடிக்க முடியாமல் சுற்றினோம். அந்த நண்பர் நடிகை சரிதாவின் வீட்டிற்கு எதிர் வீடு என்று சொல்லியிருந்தாலும் என் கணவருக்கு அதைச் சொல்லுவதில் தயக்கம், தயக்கத்தை உதறி நான் சரிதாவின் வீடு என்று சொன்ன அடுத்த நொடி எங்களுக்கு சரியான வழி காட்டப் பட்டது.

    பதிலளிநீக்கு
  24. தில்லியில் யாரிடம் வழி கேட்டாலும், அவர்கள் சொல்லும் பதிலில் “பஸ் தோ மினிட் கா ராஸ்தா ஹே” (இரண்டு நிமிடம் தான் ஆகும் என்பதாக) என்று சொல்வார்கள் - இரண்டு நிமிடம் என்பது இருபது நிமிடமாகக் கூட இருக்கலாம்!

    கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.

    படம் - நம்மை சமைச்சதையும் சாப்பிட ஒரு ஆள் மாட்டினாண்டா என்று நினைத்து அந்தப் பெண் சிரிக்கிறாரோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!