திங்கள், 14 ஜூன், 2021

'திங்க'க்கிழமை : வெள்ளரிக்காய் தோசை - கீதா ரெங்கன் ரெஸிப்பி

 

வெள்ளரிக்காய் தோசை

 அனைவருக்கும் எபி கிச்சன் அன்பர்களின் அன்பான வணக்கம்! இன்றைய எபி சமையலறையில் வெள்ளரிக்காய் தோசை. எல்லொருக்கும் தெரிந்திருக்கும்தான்.

இதை, நான் திருவனந்தபுரத்தில் இருந்த போது ஒரு கொங்கணி குடும்பத்தாரிடம் கற்றுக் கொண்டேன். மங்களூர், உடுப்பி பக்கம் இது பிரபலமானது என்றும் தெரிந்தது.

வெள்ளரிக்காய், தேங்காய் அளவு இப்படித்தான் என்றில்லை. கொஞ்சம் கூடக் குறைய இருந்தாலும் அத்தனை பிரச்சனை இல்லை. இதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஜீரகம் எல்லாம் போடுவது உங்கள் விருப்பம். ஆனால் நான் கற்றுக் கொண்டதில் அதெல்லாம் இல்லை.

குறிப்புகள், படங்கள் பெட்டியில். ரொம்பவும் எளிமையான செய்முறைதான்.

பிடிக்கும் என்றால் செய்து பாருங்கள்.


வாசிக்கும், வாசித்துக் கருத்திடும் நட்புகள் மற்றும் என்னை ஊக்கப்படுத்தி இதை வெளியிடும் எபி ஆசிரியர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. 

அடுத்த குறிப்புடன் சந்திக்கும் வரை எபி கிச்சன் குழுவின் நன்றி + வணக்கம்.

58 கருத்துகள்:

 1. நான் இப்பொழுதுதான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
   இந்த நாளும் வரும் நாட்களும் நன்மையே தர
   இறைவனிடம் பிரார்த்தனைகள்.

   நீக்கு
  2. இதுக்கே அதிர்ச்சியாகலாமா? அடுத்து கத்தரிக்காய் தோசை, புடலங்காய் தோசை, முருங்கை தோசைனு வரப்போகுது. எல்லாம் காய்தானே...

   நீக்கு
  3. @கௌதமன் சார், இன்னிக்கு நீங்க வரலைனா "காணவில்லை" அறிவிப்புக் கொடுக்கலாம்னு இருந்தேன். நல்லவேளையா வந்துட்டீங்க. :)

   நீக்கு
  4. நேத்திக்கு KG கூடத் தான் வந்திருந்தார். எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை.

   நீக்கு
  5. அடுத்தவாரம் வருமோ என்று நினைத்திருந்தேன் இந்த வாரமே வந்துவிட்டது என்பதை காலையில் தெரிந்து கொண்டாலும் கருத்து போடுவது ரொம்பப் பிரச்சனையாக இருக்கு. ப்ளாகர் வூப்ஸ் என்று சொல்லி மன்னிக்கச் சொல்லிக் கொண்டே இருக்கு...என்னென்னவோ செய்து பார்த்தும், ப்ளாகர் ஐடி காட்டவே மாட்டேங்குது தில்லைஅகத்து தளத்திலும் கூட....அங்கும் பதில் கொடுப்பதற்குள் நொந்து போய்விட்டேன்...அதன் பின் இன்றுகாலை போகுது என்று கண்டதும் உடனே அங்கு முடித்து இங்கு வந்தால் மீண்டும் இங்கு பிரச்சனை போகவில்லை....அப்புரம் கணினி கிடைக்கும் போதுவந்து பார்ப்போம் என்று போய்விட்டேன்.

   இப்பவும் போகுதா என்று தெரியவில்லை முயற்சிக்கிறேன்....

   கீதா

   நீக்கு
  6. நெல்லை ஹாஹாஹாஹா

   புடலங்காய் தோசை ஏஞ்சல் செய்திருந்தாங்க. நானும் செய்து அவங்களுக்குப் போட்டோ அனுப்பியிருந்தேன்.

   நான் சுரைக்காய், பீர்க்கங்காயிலும் செய்வதுண்டு.

   அதிரா கூட பீர்க்கங்காய்ல தோசை போட்டிருந்தாங்க.

   நீங்க சொல்லிருப்பது போலும் நல்ல வித்தியாசமா சுவையானதா முயற்சி செஞ்சு இங்கு போடுறேன்!!!!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  7. கில்லர்ஜி இது மங்களூர் உடுப்பி பக்கம் பிராபல்யம் .

   மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
  8. நேற்றுக் கேஜி எவர்சில்வர் வெண்கலப்பானை பற்றிச் சொல்லி இருந்தார். நினைவில் இருக்கு. முன்னாடி கேஜிஜியும் அதைப் பற்றிக் கேட்டதாக நினைப்பு. என்னோட எவர்சில்வர் வெண்கலப்பானையைப் படம் எடுக்கணும்னு நினைச்சு/நினைச்சு மறந்து போகிறது. ஹிஹிஹி! அதே மாதிரித் தான் செம்பருத்தி எந்த நிறத்தில் இருந்தாலும் செம்பருத்தி என்றே அழைக்கப்படும்.

   நீக்கு
 2. வெள்ளரிக்காய் தோசையா. பிரமாதம். நன்றி . படிக்கிறேன். சுவாரஸ்யம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எஸ். வெங்காயத்திற்கு பதில் வெள்ளரிக்காய். அவ்வளவு தானே? சிலருக்கு புதுமை - புரட்சி என்றாலே அலர்ஜியாக இருக்கிறது.

   கீதா ரெங்கன் சகோ.. இதுக்கெல்லாம் அசந்திடாதீங்க..

   நீக்கு
  2. வல்லிம்மா இது மங்களூர் உடுப்பி பக்கம் கொங்கணி குடும்பங்களில் பிராபல்யம். காலை உணவாகச் செய்வாங்க. சௌதேகாய்/கச்சடிக்காயி தோசா ந்னு கன்னடத்துல, கொங்கணி பாஷைல magge/mogge pOlo ன்னு சொல்றாங்க. அந்த உச்சரிப்பை சரியா எழுத வரலை...

   கீதா

   நீக்கு
  3. கீதா ரெங்கன் சகோ.. இதுக்கெல்லாம் அசந்திடாதீங்க..//

   ஹாஹாஹாஹா ஜீவி அண்ணா...

   ஆனால் இங்க வல்லிம்மா, அக்காஸ் எல்லாரும் புதுசா இருந்தாலும் ரொம்ப அன்போடு ஆதரவும் பாராட்டும் தான் தராங்க ஜீவி அண்ணா!

   //எஸ். வெங்காயத்திற்கு பதில் வெள்ளரிக்காய். //

   அட! ஐடியா!!! கிடைச்சிருக்கு அஅப்படியும் செய்து பார்த்திருலாமே!!!

   மிக்க நன்றி ஜீவி அண்ணா

   கீதா

   நீக்கு
 3. காலை வணக்கம் அனைவருக்கும்.

  சிலருக்கு, கேள்விப்படாத செய்முறை வந்தால், அன்று பார்த்து தாமதமாக வருகிறார். சீக்கிரம் வரும் அன்று, பூ இவ்வளவுதானா... இதெல்லாமா அனுப்புவாங்க என்று கேட்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா, எனக்கெப்படித் தெரியும் இன்னிக்குச் செய்முறை யார்/எப்படினு? என்னோட சௌகரியப்படி வருவேன். சில/பல சமயம் வராமலும் இருப்பேன். :)

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா...டாம் அண்ட் ஜெர்ரி தொடங்கியாச்சா....ஆதானே, கீதாக்கா விடாதீங்க நெல்லைய.!!!!!!

   கீதா

   நீக்கு
  3. எங்கே போனாலும் இந்த "டாம்" தொல்லை தாங்கலை! :)))))

   நீக்கு
  4. ஹாஹாஹா ஆமாம் என்னையும் இந்த டாம் வம்புக்கிழுப்பதே...என்னவோ இப்ப பானுக்கா தப்பிச்சுட்டாங்க!! ஹாஹாஹா

   கீதா

   நீக்கு
 4. புதிய செய்முறைதான்.

  வீட்டில் இருக்கும் காய்களை, பசங்களை எப்படியாவது சாப்பிட வைக்க இப்படி அஜால் குஜால் வேலைகள் செய்ய வேண்டியிருக்கோ?

  அல்லது, அன்று பார்த்து உளுந்து மிக கம்மியாக ஸ்டாக் இருக்கு, வெள்ளரியை வீணாக்குவானேன் என்று ஒரு புண்ணியவதி இதனை ஆரம்பத்தில் செய்திருப்பாரோ? கண்டுபிடிப்புகளெல்லாம் அவசித் தேவை கருதி என்பது எவ்வளவு சரியா இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி எல்லாக் காய்கறி பருப்பு வகைகளை வைத்து தோசை சுட்டபின் அதற்கு அப்புறம் கீதா சுட்ட தோசை நெல்லை தமிழன் சுட்ட தோசை ஸ்ரீராம் சுட்ட தோசை என்று வரும் போல இருக்கிறதே

   நீக்கு
  2. ஹாஹாஹாஹா நெல்லை சிரிச்சு முடில..

   ஸ்வீட் ப்ரியர் உங்களுக்கு...இந்தத் தோசை இனிப்பாகவும் செய்யலாம்.

   அரிசி வெள்ளரி தேங்காய் இதே அளவு...தேங்காய் 3/4 கப் எடுத்துக்கோங்க...வெல்லம் உங்களுக்கு ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும்ன்றதுனால 3/4கப். நான் 1/2 கப் தான் எடுத்துக்குவேன். ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு..

   இந்த தோசை நீர் தோசை ரவா தோசை போல இல்லாமல் நாம நார்மலா வார்ப்பது போல் வார்க்கலாம். இனிப்பு தோசையும் நல்லாருக்கும்.

   இங்க கொடுத்திருக்கும் உப்பு தோசையும் இப்படி ரவா தோசை நீர் தோசை போலல்லாமல் கொஞ்சம் தண்ணீர் குறைத்து திக்காகவும் வார்க்கலாம்

   மிக்க நன்றி நெல்லை

   கீதா

   நீக்கு
  3. இப்படி எல்லாக் காய்கறி பருப்பு வகைகளை வைத்து தோசை சுட்டபின் அதற்கு அப்புறம் கீதா சுட்ட தோசை //

   ஹையோ சிரித்துவிட்டேன் மதுரை. எந்த ரெசிப்பியும் என் ஒரிஜினல் ரெசிப்பி கிடையாது எல்லாம் கற்றுக் கொண்டவைதான். அதில் நான் மாற்றங்கள் செய்து செய்வதுண்டு அவ்வளவுதான். நானாக முயற்சி செய்வது என்று சொன்னாலும் கண்டிப்பாக அது வேறு யாரேனும் செஞ்சிருப்பாங்க.

   மிக்க நன்றி மதுரை

   கீதா

   நீக்கு
 5. அருமையான செய்முறை அன்பு சின்ன கீதாமா.
  எல்லா வெள்ளரிக்காயிலும் செய்யலாம் போலிருக்கிறது.
  படத்தைப் பார்த்தால் கரகரப்பாகத் தெரிகிறது. நல்ல பழுப்பு
  வர்ணத்தில் தோசை மொறு மொறப்பாக இருக்கின்றது.

  இங்கே உளுந்து ஒத்துக்காத ஆசாமிகளுக்கு இதை
  செய்து கொடுக்கலாம்.
  வெகு சுலபமான இன்ஸ்டண்ட் தோசை குறிப்புக்கு மிகவும்
  நன்றி மா. மீண்டும் வருகின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா. ரொம்ப கரகரப்பாக இல்லை. பெரிய ரவையாக இருக்கக் கூடாதுமா மாவு. ஜஸ்ட் கர கரன்னு நைஸ் மணல் போல...

   தோசை நல்ல மொறுமொறப்பாக வரும். நீர் தோசை போல ரவா தோசை போலச் செய்தால்.

   தித்திப்பும் செய்யலாம் ஆனல் கொஞ்சம் கனமாக...நெல்லைக்குக் கொடுத்த பதிலில் சொல்லிருக்கேன் அம்மா.

   உளுந்து ஒத்துக்காதவர்களுக்கு இப்படி பல இருக்கு அம்மா..

   மிக்க நன்றி அம்மா

   கீதா

   நீக்கு
 6. 2 இஞ்சுக்கு 2 இஞ்சு இடத்தில் இருபது படங்களை அடைத்துவிட்டு, ஒரு படத்தில் கரண்டியில் மாவு டெக்சர் தெரியுதான்னு கேட்கும் தைரியம், அவங்களுக்கு அடுத்து எங்க கூதா ரங்கன்(க்கா)வுக்குத்தான் உண்டு. ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // கீதா ரங்கன்(க்கா)வுக்குத்தான்//

   நீக்கு
  2. ஹாஹாஹாஹாஹா நெல்லை!!!!!

   அந்த "அவங்களுக்கு" அது யாரு!!??? மண்டை காயுது!!

   டெக்சர் தான் பெட்டிக்குள்ள கொடுத்திருக்கேனே..நல்ல நைஸ் மணல் போலன்னு...

   நெல்லை டைப்போ வருவது சகஜம் தான்.. நோ ப்ராப்ளம்.

   அப்பால வர ரெசிப்பிஸ் கு படம் எல்லாம் கொஞ்சம் பெரிசா போட்டுருக்கேன் ...ஆனா பாக்ஸ் 2, 3 ந்னு வரும்.. இந்த ரெசிப்பி முன்னாடி அனுப்பினது

   நன்றி நெல்லை...

   கீதா

   நீக்கு
 7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை அண்ணா உங்கள் உடல் நலம் உடனே சரியானது மகிழ்ச்சி..

   கீதா

   நீக்கு
 8. வெள்ளரிக்காயில் எல்லாம் தோசை உண்டுனு கேள்விப் படவே இல்லை. இங்கே போணி ஆகுமானும் தெரியலை. இங்கே நாங்க வாங்குவது சின்னச் சின்னப் பிஞ்சு வெள்ளரிக்காய், குட்டிக் குஞ்சுலுவின் குட்டி விரல் மாதிரி இருக்கும். அதில் எப்படி தோசை எல்லாம் பண்ணிச் சாப்பிடுவது? குஞ்சுலு நினைப்பு வந்துடாதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா இது மங்களூர், உடுப்பி பக்கம் கொங்கணி குடும்பங்களில் காலை உணவு. கோவால கூட செய்வாங்கனு நான் என் மகன் கூடப் படித்த கோவா நட்புகளுக்குச் சென்ஞ்சு கொடுத்தப்ப சொல்லிருக்காங்க.

   இங்கே நாங்க வாங்குவது சின்னச் சின்னப் பிஞ்சு வெள்ளரிக்காய், குட்டிக் குஞ்சுலுவின் குட்டி விரல் மாதிரி இருக்கும். அதில் எப்படி தோசை எல்லாம் பண்ணிச் சாப்பிடுவது? குஞ்சுலு நினைப்பு வந்துடாதோ?//

   ஆமாம் கரெக்ட்..

   நாங்களும் குட்டி பிஞ்சு வெள்ளரி வாங்குவதுண்டு இங்கு. இங்கு வெள்ளரி ரொம்ப நிறையவே கிடைக்கிறது.

   அக்கா இது குண்டு வெள்ளரிலதான் செய்வாங்க பிடித்தா போணியாகும்னா செஞ்சு பாருங்க

   மிக்க நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
  2. குண்டு வெள்ளரி கிடைச்சால் இந்தத் தோசை கொஞ்சமானும் பண்ணி (என்னனு சொல்லாமலேயே) நம்ம சோதனை எலி கிட்டே பெயர் வாங்க முடியுமானு பார்க்கிறேன்.:))))

   நீக்கு
 9. நாடெங்கும் நலம் சூழ்க...
  நல்லோர் தம் மனம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 10. ஆகா... வெள்ளரிக்காய் தோசை!..

  வெள்ளரிக்காயையும் விட்டு வைக்க வில்லையா!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா துரை அண்ணா ஆமா விட்டு வைக்கலை..

   மிக்க நன்றி அண்ணா.

   கீதா

   நீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 12. வெயிலுக்கு வெள்ளரிக்காய் தோசை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  படங்களும், செய்முறையும் மிகவும் நன்றாக இருக்கிறது கீதா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கோமதிக்கா நல்லாருக்கும். வெள்ளரி சுவை பிடிப்பவர்களுக்கு.

   மிக்க நன்றி கோமதிக்கா

   கீதா

   நீக்கு
 13. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 15. வெள்ளரிக்காயில் உப்பு சேர்த்தால் நீர் விட்டுக் கொள்ளுமே? அதனால் மாவு சற்று கெட்டியாக வைத்துக் கொள்ளலாமா

  வெள்ளரிக்காய் போட்டு அரைப்பதால் மாவை உடனே தீர்த்து விட வேண்டுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா அப்படி ரொம்ப நீர்க்காது. அரிசியை ஊற வைக்கும் போதே நான் தோசை இட்லிக்கு ஊற வைப்பது போல அளவா ஊற வைச்சு, தண்ணீரை எடுத்து வைத்துவிட்டு வெள்ளரி போட்டு அரைத்து வேண்டும் என்றால் அந்த எடுத்து வைத்த நீரைச் சேர்த்துக் கொள்ளலாம்.

   நான் அதிக கனமான தோசையாகச் செய்யாமல் மெல்லிய நீர் தோசையாகச் செய்ததால் வெள்ளரி உப்பு சேர்க்கும் போது அது நீர்க்க ஆனது போல் இல்லை. அதுவே கொஞ்சம் திக்கான தோசையாக வரும். நான் நீர் தோசை போல் செய்ததால் கூடக் கொஞ்சம் நீர் சேர்த்துதான் செய்தேன். நல்ல கனமாக வேண்டும் என்றால் இங்க மேலே முதல்ல சொன்னது போலச் செய்யலாம்

   காலையில் இருந்து மாலை வரை, எனக்கு இங்கு அடுத்த நாளும் நன்றாக வந்தது. அதுவும் ஃப்ரிட்ஜ் இல்லாமலேயே. எனவே ஒரு நாளைக்குள் முடித்துவிடுவது நல்லது.

   மிக்க நன்றி பானுக்கா

   கீதா

   நீக்கு
  2. அக்கா அப்படி ரொம்ப நீர்க்காது. அரிசியை ஊற வைக்கும் போதே நான் தோசை இட்லிக்கு ஊற வைப்பது போல அளவா ஊற வைச்சு, தண்ணீரை எடுத்து வைத்துவிட்டு வெள்ளரி போட்டு அரைத்து வேண்டும் என்றால் அந்த எடுத்து வைத்த நீரைச் சேர்த்துக் கொள்ளலாம்.

   நான் அதிக கனமான தோசையாகச் செய்யாமல் மெல்லிய நீர் தோசையாகச் செய்ததால் வெள்ளரி உப்பு சேர்க்கும் போது அது நீர்க்க ஆனது போல் இல்லை. அதுவே கொஞ்சம் திக்கான தோசையாக வரும். நான் நீர் தோசை போல் செய்ததால் கூடக் கொஞ்சம் நீர் சேர்த்துதான் செய்தேன். நல்ல கனமாக வேண்டும் என்றால் இங்க மேலே முதல்ல சொன்னது போலச் செய்யலாம்

   காலையில் இருந்து மாலை வரை, எனக்கு இங்கு அடுத்த நாளும் நன்றாக வந்தது. அதுவும் ஃப்ரிட்ஜ் இல்லாமலேயே. எனவே ஒரு நாளைக்குள் முடித்துவிடுவது நல்லது.

   மிக்க நன்றி பானுக்கா

   கீதா

   நீக்கு
 16. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

  ரெசிபி மிக அருமையாக உள்ளது. இன்று தங்கள் ரெசிபியான வெள்ளரிக்காய் தோசை இதுவரை கேள்விபட்டதேயில்லை. தக்காளி தோசைதான் உண்டு. படங்களும் செய்முறைகளும் அருமையாக உள்ளது. தோசை நல்ல கலராக மெலிதாக வந்துள்ளது. என்னிடம் இரு நாட்களுக்கு முன் வெள்ளரிக்காய் கூட்டு செய்தது போக மிச்சம் வெள்ளரிக்காய் இப்போது கைவசம் உள்ளது. உடனடியாக செய்து பார்த்து விடுகிறேன். புதிதாக இவ்வாறு செய்து காண்பித்ததற்கு மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரு நாட்களுக்கு முன் வெள்ளரிக்காய் கூட்டு செய்தது போக மிச்சம் வெள்ளரிக்காய் இப்போது கைவசம் உள்ளது. உடனடியாக செய்து பார்த்து விடுகிறேன். புதிதாக இவ்வாறு செய்து காண்பித்ததற்கு மிக்க நன்றிகள்.//

   செஞ்சு பாருங்க கமலாக்கா. எல்லோருக்கும் பிடிக்க வேண்டுமே.

   இதில் ஸ்வீட்டும் செய்யலாம். நெல்லைக்குக் கொடுத்திருக்கும் பதிலில் கொடுத்திருக்கிறேன் பாருங்க.

   அதுவும் செய்து பார்க்கலாம்.

   மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
  2. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி.

   இன்று மதியம் சாப்பாட்டுடன் இந்த தோசைகாயை (வெள்ளரிக்காய்) தோசை செய்து சாப்பிட்டாகி விட்டது. தொட்டுக் கொள்ள கொத்தமல்லி துவையல். நன்றாக இருந்தது. ஏற்கனவே அதை வைத்து கூட்டு பண்ணினேன். மிகுதியாக ஒரு வெள்ளரி கு.சா.பெட்டியில் ஜாலியாக அமர்ந்திருந்தது..அதை என்ன செய்யலாம் என்று காலை எழுந்திருக்கும் போதே யோசனையுடன் எழுந்தேன். நீங்களும் தோசை செய்யலாம் என படங்களுடன் ஐடியா கொடுத்ததில் இன்று அந்த ஒன்றை காலி செய்து விட்டேன். ஆனால் அரைத்த மாவு நாளைக்கும் தோசைக்கல்லுடன் உறவாடும் என நினைக்கிறேன். (கொஞ்சம் உள்ளது.) நல்லதொரு ஐடியாவுக்கு மிக்க நன்றி சகோதரி. உங்களால் இன்று வெள்ளரி தோசை சாப்பிட்டாகி விட்டது. நன்றி. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. வணக்கம் சகோதரி

   இதை வைத்து இனிப்பு இன்னுமொரு நாள் வெள்ளரி வீட்டுக்கு வரும் போது செய்து பார்க்கிறேன். அந்த பக்குவத்திற்கும் நன்றி.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 17. பதில்கள்
  1. மிக்க நன்றி டிடி. ரொம்ப எளிதான தோசை. ஜீரணமும் நல்லாகும்.

   நன்றி டிடி.

   கீதா

   நீக்கு
 18. முதல் முறையாக கேள்விபடுகின்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ அப்படியா?

   செஞ்சு பாருங்க மதுரை பிடித்தால்

   மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
 19. இந்த வெள்ளரிக்கா தோசை பெங்களூர் இல்TELLEVU DOSA பிரபலம் இல்லையா . முந்தி செஞ்சிருக்கேன் .அழகா டிஸ்யூ போலெ வரும் ஆனாலும் நம்மூர் பேப்பர் ரோஸ்ட் தான் தனி சுவை :)

  பதிலளிநீக்கு
 20. வெள்ளரி தோசை - கேள்விப்பட்டதுண்டு. சுவைத்ததில்லை கீதா ஜி! செய்முறை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. செய்து பார்த்து விடலாம்! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!