வெள்ளை செம்பருத்தி மாலையில்
இன்னும் கொஞ்சம் விரியுமோ?
அடுக்கு நந்தியாவட்டை
அப்போவே பறிச்சு வந்துட்டோமே
நித்யமல்லி இடத்தை மாற்றியதுமுதல் இப்போதான்
ஒற்றை நந்தியாவட்டை
ஒரே காம்பில் எவ்வளவு!
இட்லிப்பூ எனப்படும் வெள்ளை இருவாட்சி
மொட்டு அழகு தான்
நாளைய மலர்கள்
அவரை பூத்திருக்கிறது
புடலை . இவ்வளவு சிக்கலா? இடியாப்பம் மாதிரி
மீண்டும் ஒற்றை நந்தியாவட்டை
அடுக்கு நந்தியாவட்டை கூட
மொட்டுக்களுடன்
இன்னும் இன்னும்
செடியை விட மலர் கனமோ?
இட்லிப்பூ இப்போதான் பூக்க ஆரம்பித்திருக்கிறது. சீக்கிரத்தில் நிறைய...
சின்னவனாக இருந்த போது கண்வலி வந்தால் இப்பூவை கண்ணில் வைத்துக் கட்டிவிடுவார்கள்
பிரங்கிபானி வாசனை நாள்கணக்கில்...
ஆயிரம் மலர்களே மலருங்கள்
பதிலளிநீக்குJayakumar
வாங்க JC சார்.. நன்றி.
நீக்குஅழகான மலர்கள். கண்களுக்கும் மனதுக்கும் விருந்து. கடைசியில் சொல்லி இருப்பது பிரங்கிபானிக்கு வேறே பெயர் இருக்கு! நினைவில் வரலை. யோசிக்கணும்.
பதிலளிநீக்குஅப்படியா... யோசிச்சு சொல்லுங்க...
நீக்குஹிஹிஹி, கடைசிப் பூவைப் பார்த்ததிலே அனைவருக்கும் வணக்கம் சொல்ல மறந்துட்டேன். தொடர்ந்து வரும் தொல்லைகள் குறைந்து அனைவரும் மன நிம்மதியுடனும் அச்சமில்லாமலும் வாழப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா அக்கா.. வாங்க.. இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்கு//தொடர்ந்துவரும் தொல்லை//- ஏதோ நான் எழுதுவதைச் சொல்கிறாரோ இந்த கீசா மேடம்?
நீக்குஹா. ஹா.. ஹா.. சேச்சே.. அப்படி எல்லாம் இருக்காது நெல்லை!
நீக்குஹிஹிஹி, நெல்லை, சரியாக் கண்டு பிடிச்சுட்டீங்களே! அப்பாடா! காலம்பரத்துக்கு ஒரு வம்பு கிடைச்சதுமே மனதில் புத்துணர்ச்சி! :)))))
நீக்குபிரங்கி பானினு கூகிளில் தேடினால் பானிபட் யுத்தம், பானிபூரி பற்றி எல்லாம் செய்திகள் கிடைக்கின்றன. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... அதுல நம்ம 'திங்க' பதிவு ஏதாவது வந்ததா?
நீக்குஇன்னொரு தரம் பார்க்கிறேன். திங்க வருதானு. பிரங்கிபானினு திங்கறதுக்குப் பானி பூரியை விட்டால் வேறென்ன இருக்கு?
நீக்குFrangiPani என்று தேடுங்கள் கீதாமா.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் என்றும்
எப்போதும் நோயில்லாமல்
இருக்க இறைவன் அருளட்டும்.
ஓ, ஆங்கிலத்தில் தேடணுமா? நான் தமிழில் தேடினேன். :)
நீக்குசம்பா,சமேலி ஹிந்தியில்.
நீக்குஅவரை இங்கே வெள்ளை அவரை பூத்திருக்கு. பட்டை அவரையின் பூக்கள் நீலம்(ஊதா?) நிறத்தில் இருக்கும். இந்த அவரை விதையை வைத்துப் பள்ளிக்குப் பரிசோதனைகள் எல்லாம் செய்து எடுத்துக் கொண்டு போனது எல்லாம் நினைவில் வருகின்றன.
பதிலளிநீக்குஓ பாட்டனி வகுப்புக்கா? நல்லவேளை எனக்கு அந்த சோதனை எல்லாம் நேரவில்லை!
நீக்குநாங்க நிறையவே எடுத்துட்டுப் போவோம். சூரிய ஒளியைச் செடிகள் தேடிச் செல்வது பற்றி ஒரு பரிசோதனை. இருட்டான அறையில் வைச்சுட்டுச் செடியின் கிளை ஒளியைத் தேடிச் செல்வது பற்றிப் பார்த்துக் குறிப்பெல்லாம் எடுக்கணும். இத்தனை படிச்சு என்ன? கல்யாணம் ஆகிப் போனதும் ரொம்ப எளிதாக செடி, கொடிகள் பத்தி உனக்கு என்ன தெரியும்? உதிரி மல்லிப்பூவை எல்லாம் பார்த்திருக்கியா? தொடுக்க வருமா? என்று கேட்டுட்டாங்க! :))))) அதிலும் மதுரைக்காரியைப் பார்த்து மல்லிப்பூவைத் தெரியுமானு கேட்டாங்க பாருங்க! :))))) மல்லிகைப் பூக்காலத்தில் மதுரையில் வீட்டுக்கு வீடு லக்ஷம் மல்லி கொடுப்பாங்க/அந்த நாட்களில்/அறுபதுகளில். வீடூ வீடாய்ப் போய்ப் பூக்களைச் சேகரம் செய்து விதம் விதமாகக் கட்டி வைச்சுப்பேன். பிச்சோடா போட்டுக் கொண்டு தலையில் செண்டு போல் மல்லிகைச் சரம் வைத்துக்கொண்டு ஸ்கூலுக்குப் போயிருக்கேன்! கிருஷ்ணன் கொண்டை போட்டுக் கொண்டு போயிருக்கேன். சுற்றி மல்லிகை, கனகாம்பரச் சரம். :))))) அதுக்கெல்லாம் கூச்சமே பட்டது இல்லை. விதம் விதமாய்ப் பூத் தைத்துக் கொண்டிருக்கேன். எல்லாம் எங்க வீட்டுச் சுப்பம்மா கைவண்ணம். சொல்லிக் கொடுத்தது.
நீக்குநான் கரப்பு, எலி எல்லாம் எடுத்துட்டுப் போயிருக்கேன்!
நீக்குதலையில் வைத்துக்கொண்டா? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
நீக்குஅழகிய மலர்கள் ஸூப்பர்
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குஅருமையான வெள்ளைப் பதிவு.
பதிலளிநீக்குஎத்தனை மலர்கள் . எத்தனை விதங்கள்.
அருமையான தோட்டத்தின் உரிமையாளருக்கு வாழ்த்துகள்.
நன்றிம்மா.
நீக்குமல்லிகைப் பாடல்கள் வெள்ளிக்கிழமை.
பதிலளிநீக்குஅத்தனை மலர்களும் இங்கே ஞாயிறு அன்று மலர்ந்திருக்கின்றன.
மனம் நிறைந்த பாராட்டுகள் ஸ்ரீராம்.
நந்தியாவட்டையும் கண் எரிச்சல்
நாட்களும் எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு
போல.
வெள்ளி மல்லிகை, ஞாயிறு வெள்ளைப்பூக்கள்... அட.. இப்படிக்கு கூட நினைக்கலாமா? நன்றிம்மா.
நீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி ஸார்.. வாங்க...
நீக்குசெம்பருத்தி -- பெயர்க் காரணம் ஏதாவது உண்டா ஸ்ரீராம்?
பதிலளிநீக்குவெள்ளை செம்பருத்தி என்பதால் இந்த சந்தேகம்.
இது உங்களுக்கே நியாயமா ஜீவி ஸார்? படம் நானா போட்டேன்?!!! ஏற்கெனவே கேள்வி கேட்டால் பின்வரிசையில் சென்று ஒளிந்து கொள்பவன் நான்...
நீக்குபூக்களின் நிறம் தவிர்த்து மற்றவை எல்லாம் இலை, தண்டு, பூக்கும் விதம் எல்லாம் ஒன்றே. Hibiscus என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இதன் பூக்களில் மட்டும் நூற்றுக்கணக்கான நிறங்கள் இருக்கின்றன. நம்ம ஊர்களில் இருப்பவை ட்ராபிகல் ஹிபிஸ்கஸ். ரோஸ் மாலோ/ரோஸ் ஷாரன் என்றெல்லாமும் அழைக்கப் படும். இதில் அடுக்கு வகை தான் ரோஸ் மாலோ என நம்புகிறேன். இதயத்துக்கு, ரத்த விருத்திக்கு மிக நல்லது. செம்பருத்திப் பூக்களைச் சேகரம் செய்து இலைகளோடு சேர்த்து அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் ஷாம்பூ போட்டுக் கொண்டு குளிப்பதை விட மிருதுவான தலை மயிர் கிடைக்கும். நிறமும் கறுக்கும். சின்ன வயசில் அம்மா இவற்றோடு கரிசலாங்கண்ணி, பூந்திக்கொட்டை, பயறு, சின்ன வெங்காயம் போட்டு எண்ணெய் காய்ச்சித் தலைக்கும், உடம்புக்கும் தேய்த்துக் கொள்ளச் சொல்லிக் கொடுப்பார். என் குழந்தைகள் கூட இந்த எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் காய வைத்து ரோஜாப்புக்களையும் சேர்த்துச் சீயக்காயோடு சேர்த்து அரைத்தும் தேய்ச்சுக்கலாம்.சோம்பல் பார்க்காமல் செய்யணும்.
நீக்குசெம்பருத்திப் பூக் கஷாயம் போட்டுக் குடிக்கலாம். முக்கியமாய்ப் பெண்களுக்கு கர்ப்பப் பைக் கோளாறுகளுக்கு மிக நன்மை தரும்.
நீக்குஸ்ரீராம், எல்லாக் கிழமை பதிவுக்களுக்கான ரசனைகளும் வழக்கத்திலிருந்து லேசான மாற்றம் கொண்டு வருவதை அனுமானிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
நீக்குபதிவுகளுக்கான பின்னூட்டங்கள் ஒரு காலத்தில் அரட்டையாக இருந்தது. இப்பொழுதெல்லாம் பதிவுகளின் தன்மையை தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லி அறிவுபூர்வமாக அலசுகிற காலம். அந்த மாதிரியான
யோசனைகளைக் கிளர்த்தவே இப்படியான பின்னூட்டங்கள். செம்பருத்தியைப் பற்றி கீதாம்மா எவ்வளவு தகவல்களைச் சொல்லியிருக்கிறார், பாருங்கள்.
பதிவுகளின் இன்றைய மாற்றத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் தான் ஃபேஸ் புக்கிற்கு மாறி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
நல்ல வழக்கம் எதுவுமே என்னிடம் இருந்ததில்லை கீதா அக்கா... எனவே நோ கஷாயம் பிசினஸ்!
நீக்குஜீவி ஸார்... அதுவும் சரிதான்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குஅழகான வெள்ளை மலர்கள்! வெள்ளை என்பதால் பரிசுத்தமும் தூய்மையும் நினைவுக்கு வருகின்றன! காலையில் பார்த்தது மனதுக்கு ஒரு வித அமைதியை தருகிறது. எத்தனையோ வருடங்களாயிற்று அடுக்கு நந்தியாவட்டையையும் புடலைப்பூவையும் பார்த்து!! புடலைப்பூ இத்தனை அழகா என்று வியக்க வைக்கிறது புகைப்படத்தின் நேர்த்தி!! இத்தனை துல்லியமாக புகைப்படம் எடுத்தவரைத்தான் பாராட்ட வேண்டும்!!
ஆமாம். கேஜிதான் எடுத்தார். அவர் மகனும்! நன்றி மனோ அக்கா.
நீக்குயாரும் பார்த்ததில்லை போல புடலைப்பூவை! நம்ம வீட்டில் எல்லாமும் போட்டிருப்பதால் பார்த்திருக்கோம். அடியில் காம்பு பாகத்தில் சின்னதாய்ப் புடலை போன்றதொரு தோற்றத்துடன் வந்தால் அது தான் பெண் பூ. மகரந்தச் சேர்க்கை முடிந்ததும், பூ உதிர்ந்து அந்தச் சின்னப் புடலை தான் பெரிய புடலையாகக் காய்க்கும். தொட்டால் கையெல்லாம் மணக்கும்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க...
நீக்குரசித்தேன்... அழகு...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குமலர்கள் படங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குபுடலை . இவ்வளவு சிக்கலா? இடியாப்பம் மாதிரி //
புடலை பூவா இது?
மிக அழகாய் இருக்கிறது.
அடுக்கு நந்தியாவட்டை அழகு.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஅழகு
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குவெள்ளையோ வெள்ளை!!! அத்தனையும் அழகான வெள்ளைப் பூக்கள்!
பதிலளிநீக்குகண்ணையும் மனதையும் கொள்ளை கொள்ளுகின்றன. படங்கள் எல்லாம் மிக ரசித்தேன்.
மஞ்சள் வந்தாச்சு, வெள்ளை வந்தாச்சு, சிவப்பு வந்தாச்சு, ரோஸ் வாரமும் வந்தாச்சு! அடுத்து நீலமா!!!!!! பச்சையா!!! க்ரோட்டன்ஸ் வகையறாக்கள்?
கீதா
தெரியலையே... அடுத்து என்ன என்று தெரியலையே கீதா!
நீக்குமலர்கள் அனைத்துமே அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குநெய்வேலி நாட்களை நினைவுக்குக் கொண்டுவந்தது மல்லியும் நந்தியாவட்டையும்!
அப்படியா... மிக்க மகிழ்ச்சி. நன்றி வெங்கட்.
நீக்குஇன்று வெள்ளைக் கிழமை!
பதிலளிநீக்குபடங்களாகப் பார்க்கையிலேயே சுகம் தரும் பூக்கள். நேரிலே சந்தித்தால்..!
அது சரி, புடலைப் பூவா அது?
அப்படித்தான் கேஜி சொல்லி இருக்கிறார். நானும் பார்த்தது இல்லை. புடைவை கட்டிய பூவை பார்த்திருக்கிறேன். புடலைப் பூவைப் பார்த்ததில்லை!
நீக்குபூவை -- பூவையை
நீக்கு// புடலைப் பூவைப் பார்த்ததில்லை!..//
நீக்குஇதற்கொரு கவிதை வந்தது..
சொல்லலாமா?..
ஆனாலும் மோசம் துரை செல்வராஜூ ஸார்... இப்போதெல்லாம் சொல்லவா சொல்லவாங்கறீங்களே தவிர, சொல்வதில்லை! சொன்னால்தான் என்ன?
நீக்குஅதானே!
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
வாங்க துரை செல்வராஜூ ஸார்... அத்யாவசிய சோதனைகள் செய்தாச்சா இல்லையா?
நீக்குஅழகு மலர்களின் அணிவகுப்பு
பதிலளிநீக்குநறு மணம் வீசுகின்றது பதிவில்..
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..
நன்றி நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதூய்மையின் அடையாளமாகிய வெள்ளை மலர்கள் மனதுக்கு இதமளிக்கிறது. படங்களை பார்த்ததுமே "வெள்ளைப்புறா ஒன்று" என்ற பாடலும், "மலரே வான் நிலவே" என்ற பாடலும் ஏனோ தெரியவில்லை மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. (வெள்ளியின் மிக அருகில் ஞாயறு இருப்பதால்தான் என்னவோ...!) மலர்களின் படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன. வெள்ளை இட்லிப்பூ அழகாக உள்ளது.
புடலைப்பூவை நானும் எங்கள் வீட்டு தொட்டியில் பூத்ததை படம் எடுத்து வைத்துள்ளேன். தகுந்த பராமரிப்பு தர இயலாததால்/தெரியாததால் புடலைக்கொடி மேற்கொண்டு வளராமல் போயிற்று. ஆனால் பூக்கள் தினமும் பூத்தபடி இருந்தன. என்னவோ... சிலநாட்கள் அதனுடன் வாசம் செய்ய எனக்கு கொடுப்பினை கிடைத்தது.
உங்கள் வீட்டு மலர்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மலரே வான் நிலவே என்ன பாடல் என்று சட்டென நினைவுக்கு வரவில்லை. ஆனால் இந்த வார்த்தை எனக்கு 'மலரும் வான் நிலாவும்' பாடலை நினைவூட்டி விட்டன... இதோ கேட்கப்போகிறேன்.
நீக்குஅதேதான். மலரும். வான் நிலவும்... ஹா ஹா. நான்தான் தவறுதலாக மாற்றிச் சொல்லி விட்டேன். இந்தப்பாடலை ஏதேனும் வெள்ளியன்று போட்டால் கேட்டு ரசிக்கலாம். போடுவீர்களா..... நன்றி.
நீக்குஎவர் சில்வர் வெண்கலப்பானை அலு மினிய இருப்புச்சட்டி இவை இருக்கிற ஊரில் வெள்ளை செம்பருத்தி!
நீக்குNice to see the flowers! so pure and lovely!
பதிலளிநீக்குநன்றி வானம்பாடி.
நீக்கு// ஆனாலும் மோசம் துரை செல்வராஜூ ஸார்... இப்போதெல்லாம் சொல்லவா சொல்லவாங்கறீங்களே தவிர, சொல்வதில்லை! சொன்னால் தான் என்ன?.. //
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் தளத்துக்கு வருவதற்கே மிகவும் நேரமாகி விடுகின்றது..
அதிலும் புடலையின் பூவைப் பார்த்ததில்லை என்று சொன்னதற்காக சில வரிகள்...
பால் மிஷினில் இருந்து வருகிறது என்று சொல்லும் இளந்தலைமுறையின் காலம் இது..
அதற்காகக் கேட்டேன்...
இப்போதே நேரம் இரவு ஏழரையை நெருங்குகின்றது....
பதிலளிநீக்குஇதற்குமேல் இங்கு வந்து படிப்பவர்களுக்காக - இதோ அந்தப் பாடல்!.
புடலைப் பூவும் புரியாது
கடலைப் பூவும் தெரியாது..
புல்லின் பூவும் கேட்டதில்லை
நெல்லின் பூவைப் பார்த்ததில்லை..
கடலைக் காட்டில் பூப் பறித்து
காதல் வளர்த்ததும் ஒரு காலம்
பூவும் மடலும் மறந்த தெல்லாம்
கலியில் விளைந்த அலங் கோலம்..
தாமரை மலரில் மனதினை வைத்த
தமிழும் மறந்து போனதம்மா..
மடலாய் மலராய் மனதினில் விரிந்த
தடமும் மறைந்து போனதம்மா..
தமிழே என்றிங்கு பெருங்கூச்சல்
தமிழின் மலரும் தெரியாமல்
தமிழின் மணமும் புரியாமல்
தமிழே தமிழே நீ வாழ்க!...
ஃஃஃ
அப்படி.. சூப்பர். ஆதங்கக்கவி.
நீக்குஆஹா! கடைசி நான்கு வரிகள்! அருமை.
நீக்குஅன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா...
நீக்குஅழகு.
பதிலளிநீக்கு