வெள்ளி, 4 ஜூன், 2021

வெள்ளி வீடியோ : உன் அங்கம் தமிழோடு சொந்தம்... அது என்றும் திகட்டாத சந்தம்..

 பாக்யராஜ் ஒரு சிறந்த திரைக்கதை மன்னர்.  அவர் படங்கள் பலவும் ரசித்துப் பார்க்க வைப்பவை.  நடுநடுவில் கொஞ்சம் "ஒருமாதிரி" சமாச்சாரங்கள் வரும். 

அதையெல்லாம் பிடிக்காதவர்கள் அதை ஒதுக்கி விடலாம்.  மௌனகீதங்கள், முந்தானை முடிச்சு, எங்க சின்ன ராசா, ராசுக்குட்டி...   கதையில் என்ன இருக்கிறது?  எல்லாம் கொடுக்கும் விதத்தில்தான் என்று நிரூபிப்பவர் அவர்.  

தமிழில் கைதியின் டைரி அவர் கதைதான் என்றாலும், கிளைமேக்ஸை பாரதிராஜா தன் இஷ்டத்துக்கு வைத்துக் கொள்ள, அதையே ஹிந்தியில் அமிதாப்பை வைத்து 'ஆக்ரீ ராஸ்தா' வாக பாக்யராஜ் இயக்கியபோது தான் நினைத்த கிளைமேக்ஸை அதில் வைத்து எடுத்தார்.

அந்த 7 நாட்கள்.  அப்போது மிகவும் ரசித்து பார்க்க வைத்த அவர் படங்களில் ஒன்று.  பாலக்காடு மாதவனாக அவரும் அவர் அஸிஸ்டன்ட்டாக ஹாஜா ஷெரீப்பும் வந்து கலக்கி இருப்பார்கள்.  அப்போது கவர்ச்சியை மட்டுமே காட்டிக்கொண்டிருந்த அம்பிகாவை இந்தப் படத்தில் சற்று கனமான பாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார்.

'ரூப்தேரா மஸ்தானா' தனது டியூன் என்று பாக்யராஜ்..  இல்லை, இல்லை பாலக்காட்டு மாதவன் கிளெய்ம் செய்யும்போது ஜாலியாக இருக்கும்!

எம் எஸ் வி யின் இசையில் இரண்டு ஜெயச்சந்திரன் பாடல்கள் இந்தப் படத்தில் எனக்குப் பிடிக்கும்.

சந்திரபாபுவின் மனைவி பற்றி எல்லோரும் அறிந்த ஒரு கதை உண்டு.  அதை மையமாக வைத்து பாக்யராஜ் எடுத்த இந்தப் படத்தில், சந்திரபாபுவின் இடத்தில் தான் நடிக்க நினைத்திருந்தாராம்.  அதாவது ராஜேஷ் செய்த அந்த டாக்டர் பாத்திரத்தில்.  ஆனால் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன், தன் தமிழ் தபலா வாசிக்கும் உதவியாளருடன் 'சம்சாரிப்பதை'க் கண்டதும் பாலக்காட்டு மாதவன் பிறந்தாராம்.  அப்படி திடீரென பிறந்த கேரக்டரை எந்த அளவு மெருகேற்றி இருக்கிறார் அவர்...   கேரளா பக்கம் சென்றால் அவரை இந்தப் படத்திலிருந்து சில வசனங்களை பேசச்  சொல்லி  ரசிப்பார்களாம்.

1981 இல் வெளியான படம்.  டிக் டிக் டிக், ராணுவவீரன் போன்ற படங்களுடன் இணைந்து வெளியாகி வெற்றி கண்ட படம்.  பின்னர் இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிளில் எடுக்கப்பட்டது.

பொதுவாக என் விருப்பத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள பாடலை முதலாவதாகவும், ரொம்பப் பிடித்த பாடலை இரண்டாவதாகவும் பகிரும் வழக்கம்.  ஆனால் இன்று  ந்த இரண்டு பாடல்களும் ஒரே அளவில் பிடித்தமானவை.  ஜெயச்சந்திரன் குரலும், எம் எஸ் வியின் டியூனும் பாடலுக்கு வலு.

முதலில் சுத்த தன்யாசி  ராகத்தில் அமைக்கப்பெற்ற 'கவிதை அரங்கேறும் நேரம்' பாடல்.  பாடலை எழுதி இருப்பவர் குருவிக்கரம்பை ஷண்முகம்.

சப்த ஸ்வர தேவி யுனரு
இனி என்னில் வர தானம் அருளு
நீ அழகில் மம நாவில் வாழு
என் கழுவில் ஒளி தீபம் ஏற்று
சப்த ஸ்வர தேவி யுனரு

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்

பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி…..
பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்

உன் அங்கம் தமிழோடு சொந்தம்
அது என்றும் திகட்டாத சந்தம்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

கைகள் பொன்மேனி கலந்து
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து
கைகள் பொன்மேனி கலந்து
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து
இனி சொர்க்கம் வேறு ஒன்று எதற்கு
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு

மனம் கங்கை நதியான உறவை
இனி எங்கே இமை மூடும் நிலைமை
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்த மாயம்
இந்த நிலைமை எப்போது மாறும்

என் இளமை மழை மேகம் ஆனால்
உன் இதயம் குளிர் வாடை காணும்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்


அடுத்த பாடல் கண்ணதாசன் எழுதியது. இரண்டு பாடல்களிலுமே ஜெயச்சந்திரன் குரல் ஸ்பெஷல். இந்தப் பாடலில் "பெண்மையின் சொர்க்கமே..." என்று வரும் வரியை ஜெயச்சந்திரன் ஒரே ஒருமுறைதான் பாடுவார்... அதுவும் உணர்ச்சி பொங்க...!

தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த
சேதி என்னவோ

பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ

தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த
சேதி என்னவோ

உள்ளம் எங்கும்
பொங்கும் ஆசை
இன்று தங்கரதம் ஏறியது

உள்ளம் எங்கும்
பொங்கும் ஆசை
இன்று தங்கரதம் ஏறியது

உன்னைப் பார்த்து
சொல்லும் வார்த்தை
இன்று கங்கை என மாறியது

உன்னைப் பார்த்து
சொல்லும் வார்த்தை
இன்று கங்கை என மாறியது

இதுவரை கனவுகள்
இளமையின் நினைவுகள்
ஈடேறும் நாள் இன்றுதான்

எது வரை தலைமுறை
அது வரை தொடர்ந்திடும்
என்னாசை உன்னோடுதான்

பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ

தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த
சேதி என்னவோ

சந்தம் தேடி சிந்து பாடி
உந்தன் சன்னதிக்கு
நான் வருவேன்

சந்தம் தேடி சிந்து பாடி
உந்தன் சன்னதிக்கு
நான் வருவேன்

தஞ்சை கோவில் சிற்பம் போலே
ஒரு முத்திரையை
நான் பதிப்பேன்

தஞ்சை கோவில் சிற்பம் போலே
ஒரு முத்திரையை
நான் பதிப்பேன்

அனுதினம் இரவெனும்
அதிசய உலகினில்
ஆனந்த நீராடுவோம்

தினம் ஒரு புதுவகை
கலைகளை அறிந்திடும்
ஏகாந்தம் நாம் காணுவோம்

பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ

தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த
சேதி என்னவோ

பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ  
காவியம் தந்ததோ

                                     

82 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை வணக்கம்.

  இன்றாவது விரைவில் இணையத்துக்கு கீதா சாம்பசிவம் மேடம் வருவாரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை,  வணக்கம்.  கீதா அக்கா இன்று கொஞ்சம் தாமதமாகத்தான் வருவார்.  வெள்ளிக்கிழமை.

   நீக்கு
  2. ஹாஹாஹா, அதனால் எல்லாம் இல்லை. காய்கள்/கீரைகளுக்குத் தொலைபேசியில் ஆர்டர்கொடுக்க முயன்று கொண்டிருந்தோம். பின்னர் பெண் பேசினாள். அதுக்கப்புறமாப் பத்து நிமிஷம் வரலாம்னு வந்திருக்கேன். இப்போப் போயிடுவேன்.

   நீக்கு
  3. நாங்கள் சென்ற வாரம் வாங்கிய காய்கள் நிறைவடைந்தன!  இனி புதிதாய் வாங்கவேண்டும்.  வண்டி வரவேண்டும்.

   நீக்கு
 2. தலைப்பைப் படிக்கைம்போதே முதல் பாடல் நினைவுக்கு வந்துவிட்டது. படம் சூப்பர் என்று சொல்லவும் வேண்டுமோ?

  இரண்டு பாடல்களில், முதல் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் பாடல்களைக் கேட்டு எத்தனை எத்தனை வருடங்களாகறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.   ஆனால் நான் அவ்வப்போது கேட்டு ரசிக்கும் பாடல்கள்.  ஜெயச்சந்திரன் பாடல்களில்தான் எத்தனை இனிமையான பாடல்கள் இருக்கின்றன....

   நீக்கு
 3. திரைப்படத்துக்கு கதை என்பது மிகவும் முக்கியம் என்றாலும், பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களின் ரசனை மாறிவிடுவதால் எந்தப் படைப்பாளியாலும் அதற்குமேல் தாக்குப்பிடிப்பது கஷ்டமாக இருக்கிறது. இதற்கு விதிவிலக்குகள் அபூர்வம் என்றே நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெற்றிபெற்ற திரைக்கதை எழுத்தாளர்களும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் என்று சொல்கிறீர்களா?  மக்களின் ரசனை மாறுகிறது.  அதற்கேற்ப மாற்றிக்கொள்ள முடியவில்லை. விதிவிலக்கே இல்லை என்றும் தோன்றுகிறது.  சரண் வாழ்வு வெற்றிப்படங்கள் எடுத்தார்?  தரணி எவ்வளவு வெற்றிப்படங்கள் கொடுத்தார்?  அட, நம்ம பாசிட்டிவ் விக்ரமன்...

   நீக்கு
  2. //பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களின் ரசனை மாறிவிடுவதால்.../ இந்த விஷயத்தை எப்படி புதனுக்குரிய கேள்வியாக்குவது என்று யோசித்து க் கொண்டிருக்கிறேன்.

   நீக்கு
  3. நம்ம பாசிட்டிவ் விக்ரமன்...//

   இதைப் பற்றி யாரோ சொல்லிருந்தாங்க...கே எஸ் ரவிக்குமார்? இப்போதைய ட்ரெண்டிற்கு விக்ரமன் ரவிக்குமார் போன்றவர்கள் படம் எடுக்கத் தயாராக இருந்தாலும் தயாரிப்பாளர்கள் யாரும் கேட்பதில்லை இவங்களும் அவர்களிடம் சென்று வாய்ப்பு கேட்பதில்லை என்றும் சொல்லியிருந்த நினைவு..அவரே சொல்லியிருந்தார் இப்போதைய இளைஞர்கள் நன்றாக எடுக்கிறாங்க நடிக்க நிறைய வாய்ப்பு வருவதாகவும்...

   கீதா

   நீக்கு
 4. பழைய பெருங்காயத்தை நினைத்துக்கொண்டு மக்கள் ரசனை மாறிய காலங்களில் சொந்தப்படமோ இல்லை நண்பர்களால் படம் எடுப்பவரோ மறக்க முடியாத தோல்வியைச் சந்தித்து முடங்க வேண்டிய நிலைமை.

  எம் கே டி, சந்திரபாபு....ஶ்ரீதர், பாலசந்தர், பாக்கியராஜ், ராஜ்கிரண், மைக் மோகன்.... லிஸ்ட் மிகவும் பெரியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடிப்பவர்களை விடுங்கள் நெல்லை...   கதை எழுதுபவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முடியாமல் போகிறதே..   

   நீக்கு
  2. கதை எழுதுபவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முடியாமல் போகிறதே.. //

   யெஸ். இதையும் ரவிக்குமார் சொல்லியிருந்தார். அவர் பெரும்பாலும் கதைகளை வெளியில் வாங்குவதாக...தான் கதைகள் பெரும்பாலும் எழுதுவதில்லை என்று...எனவே வெளியில் வாங்கும் போது இப்போதைக்கான ட்ரெண்டிற்குக் கதை கிடைக்கும்...அப்படித் தானும் ஒன்று யோசித்திருப்பதாகச் சொன்னார். ஆனால் கதையில் மாற்றங்களை இவர் ஏற்படுத்தினாலும் கதாசிரியர் பெயர் கண்டிப்பாகப் போடுவேன் என்று தன் பெயர் போட மாட்டேன் என்று சொல்லியிருந்தார். ஆனால் விக்ரமன் அவர் ஸ்டைல் அவர் கதையாகத்தான் இருக்கும் அதனாலும் என்று வாய்ப்பு பற்றிச் சொல்லியிருந்தார்

   கீதா

   நீக்கு
  3. கதையில் மாற்றங்கள் ஏற்படுத்தும் போது என்பதற்கு கதையின் ஒன் லைன் எடுத்துக் கொண்டு பல மாற்றங்கள் செய்வாங்களாம் அதற்கும் கதாசிரியர்கள் ஒத்துக் கொள்கிறார்களே என்று தோன்றியது...

   கீதா

   நீக்கு
  4. ஒரே மாதிரி பாணி கதைகளுக்குப் பழகி விடுகிறார்கள் போல.

   நீக்கு

 5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  ஆரோக்கியம் மிகும் நாட்கள் தொடர
  இறைவன் அருளட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் வல்லிம்மா...   இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 6. 'அந்த ஏழு நாட்கள்' படம் கமலா தியேட்டரில் இரவுக் காட்சி
  பார்த்தது நினைவில்.
  தோழியின் குடும்பத்தோடு நானும் மகளும்
  சென்று வந்தோம்.

  இத்தனை செய்திகள் ஒரு படத்துக்கா!!அதிசயமாக இருக்கிறது.
  நல்ல பாடல்கள் ஸ்ரீராம். இரண்டாவது கேட்க மிக இனிமை.
  நீங்கள் சொல்லி இருக்காவிட்டால், ஜேசுதாஸ் என்று நினைத்திருப்பேன் மா.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ...  நிறையபேர் யேசுதாஸ்-ஜெயச்சந்திரன் குரலைக் குழப்பிக் கொள்கிறார்கள்மா...  ஆனால் எனக்கு குழப்பம் வந்ததில்லை!

   நீக்கு
  2. எனக்கும் குழப்பம் இல்லை ஜி

   நீக்கு
  3. ஆம்.  குரலை இனம் காணமுடிகிறது ஜி.

   நீக்கு
 7. பாக்கியராஜ் படங்கள் எப்போதும் சுவாரஸ்யம்தான்.
  அவரின் 'ஒரு கை ஓசை' படம் கூட மிக நன்றாக
  இருக்கும்.
  அந்த ஏழு நாட்களின் 'ஈ பாலக்காட்டு மாதவன்:"
  மறக்க முடியாது:_)

  அம்பிகா, ராஜேஷ், பாக்கிய ராஜ் அனைவரும்
  மிக அருமையாக நடித்திருப்பார்கள்.
  இந்த இரு பாடல்களுமே மிகச் சிறப்பான
  சாய்ஸ் மா. வெகு நாட்கள் கழித்துக் கேட்கும்போது
  அந்த நாட்களும் நினைவுக்கு வருகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு கை ஓசை மட்டுமா..  இன்று போய் நாளை வா, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு எல்லாமே ரசிக்கக் கூடியதாய் இருக்கும்.

   நீக்கு
  2. ஒரு கை ஓசையில் ஊமையாக நடித்திருப்பார் இல்லையா.
   எல்லாப் படங்களும் பிடிக்கும் மா.

   நீக்கு
 8. பாக்கியராஜ் படங்களில் நான் திரை அரங்கில் சென்று பார்த்தவை தூறல் நின்னு போச்சு படமும், டார்லிங், டார்லிங், டார்லிங் படமும். இரண்டுமே மதுரைக்குப் போனப்போத் தங்கம் தியேட்டரில் பார்த்தது. இந்தப் படம் "அந்த ஏழு நாட்கள்" தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு பாத்திரத்தில் அம்பிகா நடித்து வெளியான "எங்கேயோ கேட்ட குரல்" படமும் இந்தச் சமயம் தான் வந்ததோ? அதுவும் தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
 9. இரண்டு பாடல்களுமே அடிக்கடி கேட்டவை. நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு மயக்கம் வந்துவிட்டது. யாராவது சுடுநீரைத் தெளித்து எழுப்பினால்தான் உண்டு.

   நீக்கு
 10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 11. வீடும் நலம் பெறட்டும்..
  நாடும் வளம் பெறட்டும்.

  பதிலளிநீக்கு
 12. இரண்டு பாடல்களும் ஸூப்பர் பாடல்களே... பல ஆயிரம் முறைகள் கேட்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 14. நல்ல இனிமையான பாடல்கள். திருச்சி கலையரங்கத்தில் பார்த்த படம். பாக்யராஜ் படங்களில் கடைசி வரை க்ரிப் இருக்கும். அவருடைய அசிஸ்டெண்ட் ஒருவர் ,"அவர் சண்டை போட தொடங்கியதும்தான் அவர் படங்கள் தோல்வி அடைய ஆரம்பித்தன" என்றார். அளவுக்கு மிஞ்சிய ஆசை, அதை விசிறி விடும் அல்லக்கைகள் இவைகள் நல்ல கலைஞர்களை வீழ்த்தி விடுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த நல்ல கலைஞர்களில் சசிகுமார், வடிவேலு, சந்தானம் இவர்களும் உண்டு என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. சசிகுமார்?   இயக்குனர் சசிகுமாரையா சொல்கிறீர்கள்?

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 16. காலை வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல்கள் பலமுறை கேட்டு ரசித்துள்ளேன். பாக்கியராஜ் எடுத்த எல்லாப் படங்களும் எப்போதுமே நன்றாக இருக்கும். ஜெயசந்திரனும் குரல் இனிமையுடன் கூடிய நல்ல பாடகர். இந்தப் படம் பற்றிய தகவல்களும், சுவாரஸ்யமாக தந்துள்ளீர்கள். அனைத்திற்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. கேட்டு இரசித்தோம்..
  பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 18. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 19. இரண்டு பாடல்களும் கேட்டு பல நாளாகிவிட்டது. இன்று இரண்டு பாடல்களையும் கேட்டேன்.
  முன்பு வானொலியில், வீட்டில் கேஸட்டிலில் ஒலித்து கொண்டே இருக்கும்.
  பாடலுடன் 'அந்த 7 நாட்கள்' பட செய்திகளும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  மிகப் பிரபலம் அடைந்த பாடல்கள்.  நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 20. பாடல்கள் இனிமை. பாக்கியராஜ் படங்கள் பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. பாக்கியராஜ் படங்கள் ஜாலியாக தொய்வு இல்லாமல் போகும். ரசிக்கலாம். நானும் ரசித்துப் பார்த்ததுண்டு. மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள் இ பாலக்காட்டு மாதவன் செம! நீங்கள் சொல்லியிருப்பது போல் அப்படியும் இப்படியும் இருப்பதை ஒதுக்கிவிட்டால்...அவர் திரைக்கதை அருமையா இருக்கும். தொய்வு என்பதே இல்லாமல்.

  நீங்கள் சொல்லிருக்காப்ல கதை என்ன? கொடுக்கும் விதம்தான் ந்னு...சாதாரன தயிர் சாதம் தானே என்றில்லாமல் அதையும் அழகா கொடுப்பது போல!!!!!!!! வெள்ளியிலும் ஒரு திங்க!

  கீதா

  பதிலளிநீக்கு
 22. கதையில் என்ன இருக்கிறது? எல்லாம் கொடுக்கும் விதத்தில்தான் என்று //

  கதையில் என்ன இருக்கிறது, நடிப்பில் என்ன இருக்கிறது, இயக்கத்தில்தான் என்ன பெரிசாக இருக்கிறது என்றெல்லாம் யோசித்துத்தான் இப்போதைய தமிழ்ப்படங்கள் மழைக்காலக் காளான்களாக முகிழ்க்கின்றன. தங்கள் விதிவழி மறைகின்றன..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், அதனால் தான் "கைதியின் டயரி"யை விட "ஆக்ரி ராஸ்தா" நன்றாக இருந்தது. இப்போவும் ஹிந்தியில் பல படங்கள் புதுமையாகவும் நல்ல கதையம்சத்துடனும் வருகின்றன. தமிழில் தேடித்தான் பார்க்கணும்! திரும்பத் திரும்பப் பாசமலர் வகையறாக் கதைகள்! இல்லைனா எம்ஜிஆர் மாதிரிச் சண்டை போட்டுக் கொள்ளும் (ஆனால் நவீனமாக) காட்சிகள் நிறைந்த படங்கள். வன்முறை/ரத்தம் தெறிக்கும் காட்சிகள்! :(

   நீக்கு
  2. கதை என்று எடுத்துக் கொண்டால் மொத்தமே  36 பிளாட்தான் என்று ஒரு வெளிநாட்டுக்காரர் சொல்லி இருக்கிறாராம்,.  திருப்பித் திருப்பி அதையேதான் சொல்லி ஆகவேண்டும்.

   நீக்கு
 23. மௌனகீதங்கள் படத்தில் மூக்குத்தி பூ மேல பாட்டு ரொம்பப் பிடிக்கும்.

  'ரூப்தேரா மஸ்தானா' தனது டியூன் என்று பாக்யராஜ்.. இல்லை, இல்லை பாலக்காட்டு மாதவன் கிளெய்ம் செய்யும்போது ஜாலியாக இருக்கும்!//

  ஆமாம் ஆமாம்! ஹையோ அவங்க ரெண்டு பேரும் அடிக்கும் கூத்து செம ஜாலி!!! வாய்ஸ் மாடுலேஷன்...அது போல கடைசில க்ளைமாக்ஸ்ல அந்த வாய்ஸ் மாடுலேஷனும் செமையா இருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///மூக்குத்தி பூ மேல பாட்டு//

   அந்தப் பாடல் ஒரு பழைய பாடலின் உல்ட்டா...   என்ன பாடல் என்று தெரிகிறதா?

   நீக்கு
 24. இரண்டு பாடல்களும் நான் மிகவும் ரசித்த பாடல்கள். ரசிக்கும் பாடல்கள்.

  நானும் ஜெ ச, கேஜே குழம்பியதுண்டு. அதிகம் பாடல்கள் அடிக்கடி கேட்காததால் எனக்கும் வரும் முன்பு. இப்ப? அப்படினு கேட்கறீங்களா? ஹிஹி...இப்ப எங்க பாட்டு கேட்கிறேன்? ரொம்ப அபூர்வம். இப்படி யாராச்சும் பகிர்ந்தால் கேட்பதோடுசரி..கச்சேரி செய்யும் அளவு நன்றாகப் பாடும் என் தங்கை ஏதாச்சும் அனுப்புவா..தமிழ், மலையாளம் என்று.அப்படிக் கேட்பதுதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இப்போ வரும் பாடல்கள் 99 சதவிகிதம் கேட்பதில்லை.

   நீக்கு
 25. ஜெ ச நிறைய நல்ல பாடல்கள் பாடியிருக்கிறார். மலர்களே நாதஸ்வரங்கள்...பாடல் அப்புறம் ராசாத்தி உன்னை நினைச்சு (பள்ளி, கல்லூரி சமயத்துல நிறைய காதுல விழும். நட்பு வட்டம் கல்லூரில விழாக்கள் என்று) செமையா இருக்கும்...மலையாளத்தில் நிறைய நன்றாக இருக்கும் ஒரு காலத்தில் நிறைய பாடினார். (Bha)பாவ காயகன் என்ற ஒரு டைட்டிலும் கூடக் கிடைத்தது அவருக்கு. அரச பரம்பரைப் பின்னணியில் வந்தவர்.

  கேரளத்தில் பெரும்பாலும் அரச குடும்பத்தில் இருந்து ஏதேனும் ஒருவர் பாடகராக, நடனக்காரராக, கலைத்துறையில் இருக்கிறார்கள். பிரின்ஸ் ராம வர்மா கர்நாடக சங்கீதத்தில் விற்பன்னர் நிறைய புதுமைகள் செய்துவருகிறார். மாணவர்கள் பெரிய பட்டாளமே இருக்கிறது. நல்ல ஆசிரியர்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியெல்லாம் லிஸ்ட் எடுத்துக் கொண்டிருக்க முடியாது கீதா...   அவர் பாடிய பாடல்களில் 94 சதவிகிதம் இனிமையான பாடல்களே!

   நீக்கு
 26. இன்றைய பதிவின் பாடல்கள் இரண்டுமே இனிமையாவை...

  பதிலளிநீக்கு
 27. அந்தக் காலத்தில் இளைய் ராஜாவின் திரையிசைத் தொகுப்பில் மெல்லிசை மன்னர் வழங்கிய - 'எண்ணியிருந்தது ஏதேதோ..' பாடலும் 'உனக்கென்ன மேலே நின்றாய் .. ஓ.. நந்தலாலா ..' - பாடலும் தானாகவே சேர்ந்திருக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னமும் கூட சொல்லலாம்.  வி எஸ் நரசிம்மன், மரகதமணி பாடல்களைக் கூட இளையராஜா லிஸ்ட்டில் சேர்த்திருப்பார்கள் அறிவாளிகள்!

   நீக்கு
 28. அனைவரும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள்! நோய்த்தொற்று குறைந்து எல்லோரும் நலமுடன் வாழ எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
  இன்றைய பாடல்கள் இரண்டும் அருமை. அந்த 7 நாட்கள் தூர்தர்ஷனில் பார்த்தது.

  பதிலளிநீக்கு
 29. ஜெயச்சந்திரனின் பாடல்கள் இனிமை. பெண்குரல்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜானகியம்மா குரல் நல்லாயில்லாமல் இருக்குமா ஏகாந்தன் சார்?  பாதி இனிமை இல்லாவிட்டால் பாடல்தான் இனிமையாகுமா?!

   நீக்கு
 30. இரண்டுமே இனிமையான பாடல்கள். கேட்டு ரசித்த பாடல்களும் கூட!

  பதிலளிநீக்கு
 31. காலையில் தான் தெரிந்தது, இன்னிக்கு எஸ்பிபி பிறந்த நாள் என்பது. ஆகவே ஶ்ரீராமிடமிருந்து எஸ்பிபி பாடல்களைத் தான் எதிர்பார்த்திருந்தேன். என்றாலும் இவையும் நல்ல பாடல்களே! கேட்டிருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///காலையில் தான் தெரிந்தது, இன்னிக்கு எஸ்பிபி பிறந்த நாள் என்பது. //

   ஓ அவரும் 4 ம் நெம்பரூஊஊஊஊஊஊஊஊ:))

   நீக்கு
  2. எப்பவும் எஸ் பி பி தானே...  என் மனதில் எஸ் பி பி க்கு தினம் தினம் பிறந்த நாள்தான் கீதா அக்கா...!!

   நீக்கு
 32. ஆஹா மிக அருமையான பாடல்கள்.. அடிக்கடி கேட்டுக் கேட்டு ரசித்த பாடல்கள்..

  //அடுத்த பாடல் கண்ணதாசன் எழுதியது. இரண்டு பாடல்களிலுமே ஜெயச்சந்திரன் குரல் ஸ்பெஷல். ///

  இதனாலதான் என்னை அறியாமல் இப்பாடல்களுக்கு மயங்கி விடுகிறேன், ஆனா இப்போதான் தேடிப்பார்க்கிறேன், எனக்குப் பிடிச்ச பாடல் எனத் தேடினால் அது கண்ணதாசன் அங்கிள் எழுதியிருப்பார்.. அல்லது ஜேசுதாஸ் அங்கிள், ஜெ.ச மாமாவின் குரலாக இருக்கும் ஹா ஹா ஹா:))..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  சில இனிமைகள் நம்மை இழுத்து விடுகின்றன அதிரா..  நல்வரவு.

   நீக்கு
 33. இன்று என்பக்கத்தில் நெ தமிழனுக்குப் பதில் போட்டபின்பே வேறு இடம் போகோணும் எனக் கங்கணம் கட்டி கொம்.. வந்து முடித்து விட்டேன். இல்லை எனில் என் பகம் திறக்காமல், ஊரெல்லாம் சுத்தியபின், நேரம் போய் விடும் பின்பு பதில் போடலாம் எனப் போய் விடுவேன்:)).. ஓகே மீண்டும் சந்திப்போம் எங்களுக்கு சூப்பர் வெயில் இன்று.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!