வெள்ளி, 11 ஜூன், 2021

வெள்ளி வீடியோ: வெள்ளி முளைக்கும் வேளை வரை சொல்லி முடிப்போம் காதல் கதை..

 1973 லேயே வாணி ஜெயராம் தமிழில் ஒரு பாடல் பாடி விட்டாலும் (தாயும் சேயும்)  படமும் பாடலும் வெளிவராமல் போனது.  அந்தப் படத்துக்கு இசை எஸ் எம் சுப்பையா நாயுடு.  பின்னர் 'வீட்டுக்கு வந்த மருமகள்' என்கிற படத்தில் டி எம் எஸ்ஸுடன் ' ஓரிடம்...  உன்னிடம்' என்கிற பாடல்தான் தமிழில் முதல் பாடல் என்று சொல்லலாம்.  இசை சங்கர் கணேஷ்.

அதன் பின்னர் சங்கர் கணேஷ் இசையில்தான் நிறைய பாடி இருக்கிறார்.  எம் எஸ் விஸ்வநாதன் இசையில் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் பாடிய பிறகு 1974 ல் தீர்க்க சுமங்கலியில் இந்தப் பாடல்.  இந்தப் பாடல்தான் வாணி ஜெயராம் அவர்களுக்கு பெரிய ப்ரேக்கைக் கொடுத்தது.​  முத்துராமன்-கே ஆர் விஜயா நடித்துள்ள இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது அப்போது.   சோக முடிவு.  பிழிய பிழிய கண்ணீர்.  தாய்மார்களின் ஆதரவு!  இந்தப் படத்தில் எஸ் பி பி குரலில் ஒரு பாடல் இருக்கிறது.   அதுவும் எனக்கு மிகவும் பிடிக்கும்.


அந்த எஸ் பி பி பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை! வரிகளைச் சுட்டினால் அங்கு சென்று அந்தப் பாடலையும் கேட்கலாம்.  எஸ் பி பி குரலை ரசிக்கலாம்.

இன்றைய நம் முதல் பாடலுக்கு வருவோம்.  வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடல் ஒலிக்காத வீடே இருந்திருக்காது அப்போது.  ஒலிக்காத நாளே இருந்திருக்காது..  வாலியின் வரிகள்.. அழகான குடும்பத்தில் கணவனும் மனைவியும்தான் கடைசி வரை என்று சொல்லும் படம்.  நன்றி மறக்கும் மகன்கள் பற்றிய படம்.  பயங்கர சூப்பர் ஹிட் பாடல்.

​மல்லிகை என் மன்னன் மயங்கும்  
பொன்னான மலரல்லவோ 
எந்நேரமும் உன்னாசைபோல் 
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ 
மல்லிகை என் மன்னன் மயங்கும் 
பொன்னான மலரல்லவோ

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் 
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் 
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது 
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி 
கொஞ்சிப்பேசியே அன்பைப் பாராட்டுது 
என் கண்ணன் துஞ்சத்தான் 
என் நெஞ்சம் மஞ்சம்தான் 
கையோடு நானள்ளவோ 
என் தேவனே உன் தேவி நான் 
இவ்வேளையில் உன் தேவை என்னவோ

பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம் 
பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம் 
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது 
ஓராயிரம் இன்பக்காவியம் 
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது 
நம் இல்லம் சொர்கம்தான் 
நம் உள்ளம் வெள்ளம்தான் 
ஒன்றோடு ஒன்றானது 
என் சொந்தமும் இந்த பந்தமும் 
உன்னோடுதான் நான் தேடிக்கொண்டதுமுதலில் சொன்ன தீர்க்க சுமங்கலியும் சரி, இப்போது சொல்லப் போகும் 'அன்பே ஆருயிரே' படமும் சரி ஏ ஸி திருலோக்சந்தரால் இயக்கப்பட்டது. 

1975 ல் வெளியான அன்பே ஆருயிரே சிரிப்புப் படம் வகையில் சேர்ந்தாலும் ஏ சர்டிபிகேட் பெற்ற படம்!  இது 1967 ல் வெளியான நாகேஸ்வரராவ் - பானுமதி நடித்த கிருஹலக்ஷ்மி தெலுங்குப்படத்தின் தழுவலாம்.

இந்தப் படத்தை தஞ்சாவூர் ஞானம் தியேட்டரில் பார்த்ததாக நினைவு.

எம் எஸ் விஸ்வநாதன் இசையில் எல்லாம் சுமாரான பாடல்கள் என்றாலும் எனக்கு இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் பிடிக்கும்!  "பட்டணத்து மாப்பிள்ளைக்கு" பாடலும், மல்லிகை முல்லை பூப்பந்தல்"  பாடலும்.

மறுபடியும் மல்லிகை..  மறுபடியும் வாணி ஜெயராம்.  மறுபடியும் வாலி, மறுபடியும் எம் எஸ் விஸ்வநாதன்.

மஞ்சுளாவும், சிவாஜி கணேசனும் நடித்திருக்கும் படத்தில் சற்றே அசட்டுத்தனமான பயந்த பிள்ளையாக சிவாஜி!

மல்லிகை முல்லை பூப்பந்தல்
மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக

மல்லிகை முல்லை பூப்பந்தல்
மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக

மஞ்சள் நீரினில் காலையில் குளித்து
தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து
மஞ்சள் நீரினில் காலையில் குளித்து
தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து
பட்டுச் சேலையும் மெட்டியும் அணிந்து
பக்கம் தோழியர் துணை வர நடந்து

மந்திரம் சொல்லும் மேடையிலே
மங்கல வாத்தியம் முழங்கையிலே
அழகன் உந்தன் அருகினிலே
அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே

அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக

அந்தி மாலையில் சாந்தி முகூர்த்தம்
வண்ண பூவினில் ஆனந்த கோலம்
அந்தி மாலையில் சாந்தி முகூர்த்தம்
வண்ண பூவினில் ஆனந்த கோலம்
அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம்
அந்த நாடகம் ஆரம்பம் ஆகும்
அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம்
அந்த நாடகம் ஆரம்பம் ஆகும்

பள்ளியின் வாசல் கதவடைத்து
பஞ்சணை பைங்கிளி கையணைத்து
வெள்ளி முளைக்கும் வேளை வரை
சொல்லி முடிப்போம் காதல் கதை
சொல்லி முடிப்போம் காதல் கதை
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக

116 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. இல்லீங்..   நீங்கதானுங்க ஃபர்ஸ்ட்டு!

   நீக்கு
  2. நான் விட்டுக்கொடுக்கும் நாள்களில், ஏதோ தான் முதலில் வெகு அதிகாலையிலேயே வந்துவிட்டதாக சிலர் எழுதும் பின்னூட்டம் ஆச்சர்யமா இருக்கு. ஹாஹா

   நீக்கு
  3. நெ.த. உங்களை யாரு விட்டுக் கொடுக்கச் சொன்னாங்க? நான் கிட்டத்தட்ட ஆறரை மணிக்கு வந்திருக்கேன். அது வரை தூங்கிட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் அதிகாலையில் வந்ததாயும் சொல்லலை. இத்தனை நேரம் ஆகியும் யாரும் வரலையா என்னும் அர்த்தத்தில் தான் கேட்டிருக்கேன். உங்களுக்குத் தான் புரியறதே இல்லை. ஒழுங்காப் படிச்சாத்தானே! :)))))

   நீக்கு
 2. யாரேனும் எட்டிப் பார்த்திருந்தால் சொல்லிடுங்க. அப்புறமா நான் ஃபர்ஷ்ட்டு இல்லைனதும் எனக்கு அழுகை வரும் இல்ல? :)))))

  பதிலளிநீக்கு
 3. தனியாத் தான் பேசிக்கணும் போல! நேத்தாவது பேயார் வந்திருந்தார். இன்னிக்கு யாருமே இல்லை. இனிமேல் வரப்போறவங்களுக்கெல்லாம் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். விரைவில் அனைவர் வாழ்க்கையிலும் சாதாரணமான நடைமுறை திரும்பப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ...   நேற்று என்னைதான் பேய் என்று சொல்லி இருந்தீர்களா?

   நீக்கு
  2. ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அப்போ நிஜம்மாவே பேயார் வரலையா? ஏமாந்துட்டேனா? இன்னிக்கு எங்கே கௌதமன் சாரைக் காணோம்?

   நீக்கு
 4. பாடல்கள் எல்லாம் வானொலி, தொலைக்காட்சி தயவில் அடிக்கடி கேட்டவையே! ஆனால் இரண்டு படமும் பார்த்ததில்லை. அதிலும் ஶ்ரீராம் சொல்லி இருக்காரே! சற்றே அசட்டுத்தனமான பயந்த ஜிவாஜி என! இஃகி,இஃகி,இஃகி, ஜிவாஜி எப்போதுமே அப்படித்தானேனு நினைச்சேன். காலம்பர சிரிக்க ஒரு நல்ல விஷயம் கிடைச்சது. யாரானும் வந்து அடிக்கறதுக்குள்ளே காணாமப் போயிடறேன். வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது என்ன உப்புச்சப்பில்லாத ஒரு "ஆம்!"? நான் ஜிவாஜி பத்திச் சொன்னதை ஆமோதிச்சிருக்கிறதா எடுத்துக்கவா? அப்பாடா! இன்னிக்கு வேலை முடிஞ்சது!நாராயணா!

   நீக்கு
 5. அன்பின் அனைவருக்கும் இனிய வெள்ளி காலை வணக்கம். கீதாம்மாவுக்கு ஸ்பெஷல் வணக்கம்.
  என்றும் தொற்று இல்லாத வாழ்வு தொடர இறைவன் அருளட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா..  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
  2. வணக்கம், வணக்கம், வல்லி.

   நீக்கு
 6. காலை வணக்கம் எல்லோருக்கும்...கீதாக்கா நான் வந்திருக்கிறேன்

  இங்க கமென்ட் போகுதான்னு செக்கிங்க்...உங்க தளத்துல ஒரு கமென்ட் அப்புறம் வந்துச்சான்னு கேட்டதும் மட்டும் வந்திருக்கு. இடையில் பொட்ட கமென்ட் ஸ் எதுவ்மே வரலை போல....இப்பவும் அங்கு இதைச் சொல்லிக் கருத்துப் போட்டேன் ஆனால் ப்ளாகர் ஐடி காட்டவே மாட்டேங்குது அதனால இங்க எபி ல இப்ப செக்கிங்க போகுதான்னு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது என்னமோ தெரியலை! எனக்கு அடிக்கடி இணைய இணைப்புப் போயிடும். அந்த மாதிரி சமயத்திலே நீங்க வந்தீங்களோ? ஆனால் உங்க இணைப்பு நல்லா இருந்திருந்தாக் கருத்துரை போகணுமே! ???????????

   நீக்கு
 7. பயந்த சிவாஜி படம் பார்த்ததில்லை. பாடல் நன்றாக இருக்கும்.
  எனக்கென்னவோ மஞ்சுளா அவ்வளவு ரசிக்காது.திருச்சியில் இருக்கும்
  போது வந்த படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாட்டுதான்மா..   பாடுதான் நானும் கூட எப்போதுமே ரசிப்பது.  அந்தக் காட்சி, அதன் படம் பற்றிச் சொல்லும்போது இந்த விவரங்கள் தர வேண்டி இருக்கிறதே தவிர....  நான் பெரும்பாலான படங்கள் பார்ப்பதில்லை.  ஆனால் நல்ல பாடல்களை ரசிக்கத் தவறுவதில்லை!

   நீக்கு
  2. ஆமாம் .பாடலை மிக ரசித்தேன்.
   இரண்டும் மணக்கும் மல்லிகையாக அமைந்தது விசேஷம்.

   வாணி ஏனோ பிரகாசிக்கவில்லை. பக்திப் பாடல்களில்
   இறங்கி விட்டார் என்று நினைக்கிறேன்.
   மிக நன்றியும் வாழ்த்துகள் ஸ்ரீராம்.

   நீக்கு
  3. //திருச்சியில் இருக்கும்
   போது வந்த படங்கள்.// திருச்சியில் இருந்தீர்களா? அடடா! அப்போது தெரியவில்லையே?

   நீக்கு
  4. //வாணி ஏனோ பிரகாசிக்கவில்லை.// இல்லையே.. நிறைய பாடியிருக்கிறாரே.

   நீக்கு
  5. ஆம்.  வாணி ஜெயராம் ஏராளமான இனிய பாடல்கள் பாடி இருக்கிறார்.  அந்தக் காலத்தில் என்னிடம் இரண்டு கேசட்டுகள் வாணிஜெயராம் பாடிய பாடல்கள் இருந்தன.

   நீக்கு
 8. இங்க வந்திருக்கு ஆனால் கீழ கூகுள் கணக்குன்னு மட்டும்தான் காட்டுது. ப்ளாகர் ஐடி காட்டவே மாட்டேங்குது...

  அப்ப கீதாக்கா உங்களுக்கும் இப்ப வந்திருக்கும்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறுபடியும் லாகின் செய்ய வேண்டியதாயிருக்கும் கீதா.

   நீக்கு
  2. உங்கள் தளத்திலும் கூகுள் கணக்குன்னுதான் கீழ காட்டுது ப்ளாகர் ஐடி காட்டலை..அதனால் வந்திருக்கும்னு நினைக்கிறேன்..இப்ப போட்ட கருத்தும்

   கீதா

   நீக்கு
  3. கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன கீதா...

   நீக்கு
  4. மீண்டும் மீண்டும் லாகின் செய்தும் ரெஃப்ரெஷ் செய்தும் அப்படித்தான் வருது ஸ்ரீராம்...

   கீதா

   நீக்கு
  5. ஆமாம் ஸ்ரீராம். நேற்று கீதாக்காவுக்கு போட்டுக்கிட்டே இருந்தப்ப திடீர்னு ப்ளாகர் வூப்ஸ் உன் ஐடி தப்புன்னு சொல்லியது. திரும்ப ஐடி லாகின் பண்ணி, ரெஃப்ரெஷ் செஞ்சு பார்த்தப்ப உனக்கு உங்கு அனுமதி இல்லைனு வந்து சொல்லியது...அப்ப போட்ட கமென்ட்ஸ் போகவே இல்லை அங்கு.

   இன்னிக்குக் காலைல இங்க செக் பண்ணிப் பார்த்தா கூகுள் ஐடி காட்டவில்லை என்றாலும் போகுது எரர் எதுவும் காட்டலை..ஸோ கமென்ட் மாடரேஷன் வைத்திருக்கும் தளங்களிலும் போகும்னு நினைக்கிறேன்... அங்கும் இப்ப போட்டது போயிருக்கும்னு நினைக்கிறேன்.

   என்னவோ போங்க!! இங்கு நெட்டும் சரியா இல்லை

   கீதா

   நீக்கு
  6. சமயங்களில் எல்லா இடங்களிலும் வெளியேற்றிவிட்டு ரீலாகின் செய்ய வேண்டியதாயிருக்கும் கீதா!  எனக்கு பாஸ்வெர்டே மறந்து போகும்!

   நீக்கு
  7. அப்படியும் செய்து பார்த்தாச்சு....ப்ளாகர் ஐடி ஒப்பன் செஞ்சு வைத்து ஒவ்வொரு ப்ளாக்லயும் கூட சைன் இன் செஞ்சு போய்ப் பார்த்தும்....இப்படித்தான் வருது...

   பரவால்ல ஸ்ரீராம் போறபடி போகட்டும்...கமென்ட் போனா சரி..

   எனக்கு பாஸ்வெர்டே மறந்து போகும்!//

   ஹாஹாஹாஹா....நான் அப்பப்ப வெளியேறி வந்து வந்து போக வேண்டியது என்பதால் இப்பல்லாம் நினைவிருக்கு ஒரு வேர்டில் போட்டு சேவ் பண்ணியும் வைத்திருக்கிறேன்!

   கீதா

   நீக்கு
  8. வந்திருக்கு, வந்திருக்கு/ தி.கீதாவின் இரு கருத்துகள் வந்திருக்கின்றன.

   நீக்கு
 9. தீர்க்க சுமங்கலி படம் அனாவசியத்துக்கு ஓவர் செண்டிமெண்ட்.
  ரொம்ப முக்கியமாகக் குழந்தைகளையும்
  அழைத்துக் கொண்டு பக்கத்து வீட்டாரோடு
  (சிங்கம் வரமாட்டார்) போய்விட்டுச் சின்னவனைத் தூக்கிக் கொண்டு வெளியே நின்று பார்த்துவிட்டுச் சோகப்பட்டு வந்த படம்.:(

  பட்டி தொட்டி எங்கும் சிலாகிக்கப் பட்ட வாணியின் குரல்.
  அந்தக் காட்சி நினைவில் இருக்கு.
  காணொளி வரவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி எனக்கு வருகிறதே அம்மா...  ஆமாம், தீர்க்க சுமங்கலி போன்ற படங்கள் உணர்ச்சிகரமாக எடுக்கப்பட்டாலும் குடும்பத்தினருக்கு ஒருவர்மேல் ஒருவர் சந்தேகத்தைத் தூவி விட்டு விடும் அபாயம் உள்ள படம்.  ஓவர் உணர்ச்சிக்கலவை!

   நீக்கு
  2. நம் இல்லம் சொர்கம்தான்
   நம் உள்ளம் வெள்ளம்தான்
   ஒன்றோடு ஒன்றானது
   என் சொந்தமும் இந்த பந்தமும்
   உன்னோடுதான் நான் தேடிக்கொண்டது///மிக உன்னதமான வரிகள்.
   ஏன் எனக்கு வரவில்லை?

   எனக்கு அந்தக் கடைசி சீன் ரொம்பவே பிடிக்காமல்
   போச்சு.சின்னவன் அழுத அழுகையால்
   இருக்கலாம்.
   என் அறியாமை குழந்தைகளை அழைத்துப் போனது.((

   நீக்கு
  3. மற்றவர்கள் வந்து காணொளி தெரிகிறதா என்று சொல்கிறார்களா என்று பார்ப்போம்.  

   ஆமாம் அம்மா.  வரிகள் அற்புதம்தான்.  வாணிஜெயராம் குரலும் அருமையாக இருக்கும்.

   நீக்கு
  4. காணொளி தெரிகிறது ஸ்ரீராம், வல்லிம்மா

   கீதா

   நீக்கு
  5. இரண்டு காணொளிகளும் தெரிகின்றனவா?

   நீக்கு
  6. இரண்டும் தெரியுது ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
  7. இரண்டு காணொலிகளும் வருகின்றன.

   நீக்கு
  8. நன்றி கீதா..  நன்றி பானு அக்கா.

   நீக்கு
  9. //எனக்கு அந்தக் கடைசி சீன் ரொம்பவே பிடிக்காமல்
   போச்சு.// ஹாஹா! என் பெரிய அக்கா கூட அப்படித்தான் சொன்னார். "ஓவர் மெலோ டிராமா" என்று. என் பெரிய அக்காவிற்கு சோகம் பிடிக்காது, மெலோ டிராமா பிடிக்காது. அதனால் சிவாஜியும் பிடிக்காது.
   வீட்டில் ஒரு பெரிய அக்கா, ப்ளாகில் ஒரு பெரிய அக்கா.இஃகி!இஃகிி! இஃகி!

   நீக்கு
  10. அழுதாலும் சிவாஜி படங்கள் பார்க்காமல் இருப்பதில்லை.  அழுவதற்கென்றே பிறந்த நடிகை சௌகார் ஜானகி!

   நீக்கு
  11. @பானுமதி! யாரு அது ப்ளாகில் ஒரு பெரிய அக்கா? இஃகி,இஃகி,இஃகி! புதுசா இருக்காங்களே!

   நீக்கு
  12. @கீதா அக்கா: இஃகி!இஃகி!இஃகி!

   நீக்கு
  13. நன்றி நன்றி இப்படிக்குப் பெரிய அக்கா!

   நீக்கு
 10. இரு பாடல்களுமே நிறைய கேட்டிருக்கிறேன் வானொலி உபயத்தால். மிகவும் பிடித்த பாடல்கள். வரிகள் ரொம்ப நல்ல வரிகள்...ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இப்ப மீண்டும்...நன்றி ஸ்ரீராம்

  பாட்டு கேட்ட விதம், புத்தகம் வாசித்தது எல்லாம் இங்கு போட்டால் கருத்து நீ.....ளும் ஹா ஹா ஹா அப்பப்ப கருத்தா போட்டிருக்கிறேன் என்றாலும்....பதிவுக்கு தேத்திடலாம் ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  எப்பவும் அந்தப் பாடல்களை நாம் எப்போ முதலில் கேட்டோமோ நினைவுகள் அங்கே சென்றுவிடும்.   

   நீக்கு
 11. 1975 ல் வெளியான அன்பே ஆருயிரே சிரிப்புப் படம் வகையில் சேர்ந்தாலும் ஏ சர்டிபிகேட் பெற்ற படம்! //

  ஏன் அப்படி ஸ்ரீராம்?

  //இந்தப் படத்தை தஞ்சாவூர் ஞானம் தியேட்டரில் பார்த்ததாக நினைவு.//

  ஆ ஆ ஏ ந்னு போட்டுமா!!! ஹாஹாஹாஹா. பார்த்த நீங்களே சொல்லிடுங்க ஏ யா யான்னு!! ஒரு வேளை இரட்டை அர்த்த வசனங்களோ?

  அப்ப சின்ன பையனாச்சே நீங்க!! அனுமதி கிடைத்ததா?!! ம்ம்ம்ம் சின்ன வயசுலேயே இந்தப் படம் எல்லாம் பார்த்திருக்கீங்க ஹிஹிஹிஹி!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் ஏ சர்டிபிகேட் போட்டாங்களே தவிர தடை ஒன்றும் சொல்லவில்லை.  மேலும் அப்போ நான் குழந்தைதானே!

   நீக்கு
 12. மறுபடியும் மல்லிகை.. மறுபடியும் வாணி ஜெயராம். மறுபடியும் வாலி, மறுபடியும் எம் எஸ் விஸ்வநாதன்.//

  அட ஆமாம் ல!!!

  இப்படிக் கூடச் சும்மா கேள்வி போடலாம் மல்லிகை என்று தொடங்கும் பாடல்கள், பூக்கள் பெயரில் தொடங்கும் பாடல்கள், நிலா, காய், இல்லைனா ஒரு ட்விஸ்ட் வைச்சு புதிர் போல...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் பழசு கீதா...   நான் கடகடன்னு நிறைய சொல்லி விடுவேன்!

   நீக்கு
 13. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா..   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 14. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 15. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 16. இரண்டு பாடல்களும் நிறைய தடவை கேட்ட பாடல்கள். தீர்க்கசுமங்கலி படம் பார்த்து விட்டு வந்த என் அக்கா இறந்தால் இப்படி இரண்டு பேரும் ஒன்றாக இறக்க வேண்டும் என்று சொன்ன போது அம்மா திட்டினார்கள். சோக கதை என்பதால் பார்க்க கூட்டி போகவில்லை அம்மா. ஆனால் அப்புறம் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன்.

  //நன்றி மறக்கும் மகன்கள் //

  அப்படி இல்லை, அப்பாவின் கோபத்திற்கு பின் உள்ள பாசத்தை புரிந்து கொள்ளாத குழந்தைகள்அப்பாவை வெறுக்கும்.
  தனக்கு வாய்க்கும் கணவரும் அப்பா போல் கோபக்கார கணவராக இருந்து விட்டால் என்ன செய்வது திருமணமே வேண்டாம் எனும் மகள்.

  தன் மனைவி இறக்க போகிறாள் என்பதால் அவள் முன் தன்னை குழந்தைகள் விரும்புவதாக நடிக்க சொல்வார்.

  முத்துராமன் நன்றாக நடித்து இருப்பார்.

  அடுத்த பாடல் வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.

  இரண்டு பாடலையும் மிகவும் நன்றாக பாடி இருப்பார் வாணி ஜெயராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ..   படம் பார்க்காததன் விளைவு.   கதை சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் போல.

   நீக்கு
 17. @வல்லி அக்கா: தீர்க்க சுமங்கலி படம் திருச்சியில் பார்த்தீர்களா? ராஜா டாக்கீஸிலா? அங்குதான் இந்தப் படம் வெளியானது. கடைசி காட்சியில் நான் அழுததை யாரும் பார்த்துவிட்டு கூடாதே என்று நினைத்தேன்.ஆனால் அதை கவனித்து விட்ட பெரிய அக்கா(அப்போதெல்லாம் பெரிய அக்கா,அத்திம்பேர்தான் சினிமாக்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.)கேலி செய்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பானுமா. அங்கே தான் பார்த்தேன். உங்களை பார்ககாமல் விட்டு விட்டேனே! திருச்சியில் தான் பாபி, யாதோன் கி பாராத், வெள்ளிக் கிழமை விரதம் படங்கள் பார்த்தேன். மன்னார்புரத்தில். சிவசக்தி என்ற தியேட்டரில் சில படங்கள் பார்த்தேன்:)

   நீக்கு
 18. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை செல்வராஜூ ஸார்...   வணக்கம்.  முற்றிலும் நலம்தானே?  செய்யவேண்டிய அத்யாவசிய சோதனைகள் செய்தாயிற்றா?

   நீக்கு
  2. உடல் நலம் பரவாயில்லையா துரை? முழுப் பரிசோதனையைச் சீக்கிரம் செய்து கொள்ளுங்கள்.

   நீக்கு
 19. //நன்றி மறக்கும் மகன்கள் பற்றிய படம் //

  அந்த வயதில் இந்த காட்சிகளைப் பார்த்து உங்கள் மனசில் என்ன தோன்றியது ஸ்ரீரான்? நாம் இவர்கள் மாதிரி இருக்கக்கூடாது என்று நினைத்தீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் அப்படிதான் நினைத்திருப்பேன்.  என் இயல்பு அது ஜீவி ஸார்..   என் அண்ணனையும் என் அப்பாவையும் பார்த்து கோபத்தைக் கட்டுபப்டுத்த முயன்றவன் நான்.  ஆனால் நான் இந்தப் படம் பார்க்கவில்லை.  மேலும் கோமதி அக்கா இந்தப் படத்தில் மகன்கள் நன்றி மறக்கவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்!

   நீக்கு
  2. படங்களில், கதைகளில் வரும் சில எதிர்மறை கருத்துக்கள், நாம் அப்படி இருக்கக்கூடாது என்று நமக்குள்ளேயே சூளுரைத்துக் கொள்வதற்காகத் தான்.

   நீக்கு
 20. இன்றைய பதிவின் பாடல்கள் இரண்டுமே பிடித்தமானவை... இரண்டு திரைப் படங்களையும் பார்த்திருக்கிறேன்... அன்பே ஆருயிரே.. மட்டும் கதை நினைவில் இல்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வளவு வலுவான கதை இல்லை என்பதால் நினைவில் இல்லை போல!

   நீக்கு
 21. வாணி ஜெயராம் பற்றிய தகவல்கள் நன்று. 'கு(G)ட்டி' ஹிந்தி படத்தில் அவர் பாடிய 'போலுரே பப்பி..' பாடலை குட்டி யின் தமிழ் ரீமேக்கான சினிமா பைத்தியம் படத்தில் ' என்னுள்ளம் அழகான வெள்ளித்திரை' என்று பாடியிருப்பார். அதுதான் தமிழில் அவருடைய முதல் பாடல் என்று நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
 22. ​//மல்லிகை என் மன்னன் மயங்கும்//

  இலங்கை வானொலியில் முன்பு தினமும் கேட்கும் பாடல் அருமை.

  பதிலளிநீக்கு
 23. //குடும்பத்தில் கணவனும் மனைவியும் தான் கடைசி வரை.//

  இதுவும் அவரவர் வாழ்க்கையில் பெற்ற பாடங்களுக்கு ஏற்ப உரைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று தான். !

  பதிலளிநீக்கு
 24. ஸ்ரீராம் நான் சு.சுந்தரியிலிருந்து "ஒரு தரம், ஒரே தரம்" பாடல் கேட்டிருந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றே மூன்று பாடல்கள்...   அதனால் விட்டுப்போகிறது.  நினைவில் வைத்துக் கொள்கிறேன்.

   ஒற்றைப்பாடலாய் அமையும் ஒருநாளில் ஒருதரம் போட்டு விடுகிறேன்!!

   நீக்கு
  2. சுமதி என் சுந்தரி பார்த்திருக்கேன். ஶ்ரீதர் படமோ? அல்லதுசித்ராலயா தயாரிப்பில் சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் வந்ததோ? இந்தப் படங்களுக்கெல்லாம் பாஸ் கிடைச்சிருக்கும். அதனால் பார்த்திருப்பேன்.

   நீக்கு
  3. //இன்றே மூன்று பாடல்கள்...// மூன்றா? இரண்டுதானே பார்க்க கிடைக்கிறது???!!

   நீக்கு
  4. அன்பு சொந்தம் பாசம் எல்லாம் வரிகளை சுட்டுங்கள்!

   நீக்கு
 25. இரண்டு பாடல்களும் நிறையதடவை, சிறிய வயதில் காதில் விழுந்த பாடல்கள்.

  மல்லிகை - இந்தப் பாடலை மேடையில் (அனேகமாக வாணி ஜெயராமே இருக்கும்) நான் 5வது படிக்கும்போது, பொன்னமராவதி சென்று வந்த அன்று கேட்டிருக்கிறேன்.

  அன்பே ஆருயிரே - இது மௌலி கதை, வசனம் பண்ணின கதையா? நினைவுக்கு வரவில்லை. நேற்று மௌலியில் பேட்டிக் காணொளி பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தப் படத்தைக் குறிப்பிட்டாரா தெரியவில்லை.

  கூகுளில் தேடினால், விக்கிபீடியாவில் Box Office என்பதற்கு சீட்டுக் கூண்டு என்று தமிழில் போட்டிருந்தான். //மேலும் இத்திரைப்படம் சீட்டுக் கூண்டுவில் (box-office) மிகச் சிறப்பான வெற்றியைத் தேடித்தந்தது.// - எந்த தமிள் புளவற் இந்த மாதிரி தமிழ்ப்படுத்தினாரோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மெளலியா! எந்த மெளலி?

   அபுரி

   நீக்கு
  2. மௌலி திரைக்கதை எல்லாம் எழுதி இருக்காரா? நாடகங்களோடு சரினு நினைச்சிருந்தேனே! இப்போது கொஞ்ச நாட்களாகச் சின்னத்திரையில் மௌலி நடித்து எந்தத் தொடரும் வரலை.

   நீக்கு
  3. நன்றி நெல்லை.  கீதா அக்கா...  மௌலி பல திரைபபடங்கள் எடுத்திருக்கிறாரே..

   நீக்கு
  4. ஆமா இல்ல? அப்புறமா கூகிள் பண்ணிப் பார்த்தேன். அ.வ.சி.யா இருந்தது. :)

   நீக்கு
 26. இரண்டு பாடல்களையும் கேட்டுள்ளேன்... முதல் பாடல் அடிக்கடி பண்பலையில் வரும்...

  பதிலளிநீக்கு
 27. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள். தொற்று நீங்கி மக்கள் நலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  வாணி ஜெயராமின் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடல் மிகவும் பிடித்த இனிமையான பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ..  நீங்களும் ரசிக்கும் பாடலா?  நன்றி வானம்பாடி.

   நீக்கு
 28. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ...

  உன்னதம்.. தாம்பத்யத்துக்கு உகந்த மலர்..
  இது தான் வாழ்வியல்... அந்தப் பாடலின் நேர் பொருள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.  மணமுள்ள மலர்.  மனதுக்கு சுகந்தம் தரும் மலர்.

   நீக்கு
 29. இரண்டாவது பாடலிலும் மல்லிகை..
  அதே மல்லிகை.. அதே.. அதே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதனுடன் இப்போது முல்லையும் சேர்ந்துள்ளது!

   நீக்கு
 30. படங்கள் பார்த்ததில்லை. பாடல்கள் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல்கள் மூன்றும் நல்ல பாடல்கள். எஸ்.பி.பி பாடியது எப்போதோ கேட்டு ரசித்தது. இன்று மறுபடியும் உங்களால் கேட்டு ரசித்தேன்.

  இரு மல்லிகைகளும் நிறைய தடவை கேட்டிருக்கிறேன். வாணிஜெயராம் குரல் அற்புதமானது. முதல் படம் பார்த்ததில்லை இரண்டாவது தொலைக்காட்சியில் பார்த்ததாக நினைவு. ஆக இன்றைய மூன்று பாடல்களும் முத்துக்கள்தான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள்தான் கமலா அக்கா மூன்றாவது பாடலையும் சேர்த்து சொல்லி இருக்கிறீர்கள்!  அதுவும் என் அபிமான பாடகர் குரலில் வரும் பாடல் அது!

   நீக்கு
  2. எனக்கும் மிக பிடித்தமான பாடகர். எஸ்.பி.பி பாடல் என்றால் எப்போதும் நான் விரும்பி கேட்பேன். அதனால்தான் பதிவில் முதலாவதாக வந்த அந்த பாடலை கேட்டு ரசித்தேன்.

   நீக்கு
 32. மல்லிகை முல்லை... பாடலை பல வருடங்கள் கழித்து கேட்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு நன்றிகள் திரு ஸ்ரீராம் . மல்லிகை என் மன்னன் பாடலின் வீடியோ இயங்கவில்லை. அருமையான குரலுக்கு சொந்தக்காரர்.

  பதிலளிநீக்கு
 33. இரு பாடல்களும் அருமையோ அருமை.. இதுவரை இதை நீங்கள் பகிராமலா இருந்தீங்கள் ஸ்ரீராம்?...

  முதல் பாட்டு வீடியோ வேலை செய்யவில்லை..

  ///மல்லிகை முல்லை பூப்பந்தல்
  மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
  மஞ்சள் வாழை மாமரங்கள்
  பச்சை மாவிலை தோரணங்கள்
  எல்லாம் எதற்காக
  நமக்கு கல்யாணம் அதற்காக///

  இதை சின்ன வயசிலிருந்து இன்றுவரை, இந்தவரிகள் கேட்கும்போதெல்லாம் நெஞ்சுக்குள் ஏதோ செய்யும்...

  அதிலயும் பல பழைய பாடல்கள் அப்பா அம்மா வோடு நாம் எல்ல்லோரும், சின்னவர்களாக இருந்த காலத்தில் ரேடியோவில் அடிக்கடி கேட்ட பாடல்கள், அவற்றை இப்போ கேட்கும்போது, பழைய நினைவுகள் வந்து, நெஞ்செல்லாம் அடைச்சு.. மனித வாழ்க்கையே எதுக்கு, என வெறுப்பாகும்....

  பதிலளிநீக்கு
 34. இரண்டு பாடல்களுமே சிறப்பான பாடல்கள். கேட்டு ரசித்த பாடல்களும் கூட - குறிப்பாக முதல் பாடல்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!