புதன், 9 ஜூன், 2021

ரசனை முப்பது அல்லது முப்பத்தைந்து வயதோடு நின்று விடுகிறது போலிருக்கிறதே ..

 

நெல்லைத்தமிழன்: 

அது சரி.. பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை, அம்பாளுக்கு சுண்டல், ராம நவமிக்கு பானகம் மோர் என்று டபாய்க்கும் நாம், கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டும் வித விதமான பட்சணங்கள் செய்து இறைவனுக்குப் படைக்கிறோமே அதன் காரணம் என்ன?

$ ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படும் காலம், கிடைக்கும் பண்டங்கள், சாப்பிடப்போகும் நபர்கள், காலம் இவை மாறும்.

மாவு இடித்து சலித்து, வேக வைத்து... .ஒரு குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்த மாதிரி கொழுக்கட்டை.

சுண்டல் சீக்கிரம் கெடாது. தினம் ஒரு விதம் 10 நாளும்.. ஆளுக்கு ஒரு கரண்டி என்று distribution..

ராமநவமி கோடைகால ஆரம்பத்தில் ஆரோக்கிய உணவு..சமைக்காதது.

ஸ்ரீஜயந்திக்கு சற்று யோசித்தோம் என்றால் ஸ்ரீகண்ட், இனிப்பு சீடை தவிர அடிப்படை மாவு ஒன்றே..சிறு சிறு உரு மாற்றங்களுடன்.

எல்லாமே எண்ணெயில் பொரித்து டப்பாவில் வைத்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

ஆமாம் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் இவை கூட விதவிதமான தின்பண்டங்களுடன் கொண்டாடப்படும் பண்டிகைகள்தானே?

# குழந்தையாகவும் பார்க்கப் படும் கடவுள் என்பதால் பட்சணங்கள் பிரதானமாகிவிட்டது.

& யாருக்காக செய்தாலும் எல்லாவற்றையும் சாப்பிடுவது சாமிகள் அல்ல; ஆசாமிகள்தானே! 

பானுமதி வெங்கடேஸ்வரன் :

கீதா அக்கா, "இப்பொதெல்லாம் பூஜை செய்வது கிடையாது, தெரிந்த ஸ்லோகங்கள் சொல்வதோடு சரி" என்று சொல்லியிருந்தார். ஸ்லோகங்கள் சொல்வது பூஜை ஆகாதா?

# பூஜை என்பதன் பின்புலம் இறை மீது நாம் கொண்டுள்ள அன்பு-நம்பிக்கை இவற்றின் வெளிப்பாடு. பஜனை, ஜபம், பாராயணம், நாமஸ்மரணை போன்ற ஒவ்வொன்றும் அது போன்ற ஒருவகை வெளிப்பாடே என்று நான் நினைக்கிறேன்.  எனினும் இது பற்றி உண்மை நிலை அறிந்து சொல்லும் தகுதி எனக்கு இல்லை.

& பூஜைக்கு புஷ்பம், மூர்த்தி எல்லாம் கிடைக்காத சூழ்நிலையில், மானசீக பூஜை கூட செய்யலாம் என்று படித்துள்ளேன். இரவில் தூக்கம் வராத சில நாட்களில் நானும் மானசீக பூஜை செய்வது உண்டு. பிரம்மாண்டமான சிவலிங்கம் கற்பனை செய்து, அதற்கு குடம் குடமாக பால் அபிஷேகம், நெய் அபிஷேகம், தேன் அபிஷேகம் எல்லாம் செய்து, லாரி லாரியாக வகை வகையான பூக்கள் கொண்டு பூஜை செய்வேன். 

உங்களிடம் இருக்கும் ஏதோ ஒரு பழக்கத்தை நண்பர்களும், உறவினர்களும் கேலி செய்தாலும்,விமர்சித்தாலும், நீங்கள் ரசிப்பது உண்டா?

$ ஆமாம்,உன்னோட செடியில் காய் வந்து நாங்கள் எப்போ சாம்பார் சாப்பிடறது என்பது முதல் - ஒரு ஹாலில் இவ்வளவு ஸ்விட்ச் போர்டு எதற்கு என்பது தாண்டி, இவ்வளவு குப்பையை  ஏன் அறியாமல் வைத்திருக்கிறாய் என்பவர் வரை எல்லோரும் என்னை ஏளனம் செய்வதாகத்தான் எனக்குத் தோன்றும்.

# உண்டு, சிலசமயம் எரிச்சல் படுவதும் உண்டு.

& என்னிடம் நேரடியாக யாரும் எந்தப் பழக்கத்தையும் கேலி செய்ததாக ஞாபகம் இல்லை. அப்படி யாராவது செய்திருந்தாலும் ரசிப்பேன்.  

சிறு வயதிலிருந்து வளரும் நம் ரசனை முப்பது அல்லது முப்பத்தைந்து வயதோடு நின்று விடுகிறது போலிருக்கிறதே.? என்ன காரணம்?

$ இக்கூற்றிலிருந்து நான் வேறு பட்டவன். வயதுட ன் ரசனையும் கூடுகிறது.

# சரியான அடிப்படை அல்லது ஆழம் இல்லாத ஆர்வங்கள் - ரசனைகளின் இயல்பு இதுதான்.

& ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு ரசனைகள் அமைகின்றன. நான் சிறு வயதில், 'பெரியவர்கள் எல்லோரும் இவ்வளவு காசு சம்பாதிக்கிறார்களே ஏன் இவர்கள் மூட்டை மூட்டையாக அரிசி மிட்டாய், கமர்க்கட், தேன் மிட்டாய், நெய் சாக்கலேட் என்றெல்லாம் வாங்கி சாப்பிடாமல் இருக்கிறார்கள்?' என்று நினைப்பேன். நான் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவற்றை வாங்கி சுவைத்தது உண்டு. என் குழந்தைகள் சாப்பிடும் விஷயங்களில் ஆர்வம் காட்டியது இல்லை. விளையாட்டுப் பொருட்களில் அதிக ஆர்வம் காட்டினார்கள். பேரன்களுக்கு தின்பண்டம் எது வாங்கிக் கொடுத்தாலும் (அவர்களுக்கு அது பிடித்திருந்தாலும்) என் மகனோ அல்லது மகளோ - junk food என்று காரணம் சொல்லி அதை ஒதுக்கிவிடுவார்கள்!     

 = = = = =

இந்த வாரத்துக்கான comment படம் :

படத்தைப் பார்த்தவுடன், என்ன தோன்றுகிறது? 


= = = = =


82 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்.

  கேள்விகள் குறைகின்றனவா இல்லை பதில் வாங்கிப் போடுவதில் சுணக்கமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்.  வாங்க நெல்லை..  வந்த கேள்விகளுக்கு பதில்...!

   நீக்கு
 2. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். குறையும் கடும் நோய்க் கொடுமையிலிருந்து அனைவரும் முற்றிலும் விடுபட்டு ஆரோக்கியமான சகஜமான நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 4. கல்லைத் தூக்கிக் கொண்டு பின்னால் தொடர்ந்து ஓடுவது பெண் எனில் முன்னால் தப்பிக்க ஓடும் ஆண் அந்தப் பெண்ணை ஏதோ தொந்திரவு செய்திருக்கணும். இருவரின் முகபாவங்களும் காணக் கிடைக்கலை. எனினும் ஒருவர் தப்பிக்க நினைக்கிறார். ஒருவர் துரத்துகிறார். தப்பித்தாரா இல்லையானு தெரியலை. மலைப்பாதை! பாறாங்கற்கள் நிறையவே கிடைக்கும் இடம். சாலையிலும் அதிகம் போக்குவரத்து இல்லை. என்ன நடந்திருக்கும்? ஆவல் தூண்டுகிறது! யாருப்பா இதுக்குக் கதை எழுதப் போகிறது? துரை? தி/கீதா? பானுமதி? அல்லது இருவரும்? ஶ்ரீராம்? கௌதமன் சாரே எழுதப் போறாரோ?

  பதிலளிநீக்கு
 5. கனவுகள் பலித்தது உண்டா?
  கனவு கண்டு கத்தினால் பின்னர் எழுந்ததும் என்ன கனவு என்பது நினைவில் இருக்குமா?
  சில சமயங்கள் நமக்கு வீட்டு வேலைகளை ஒட்டியே கனவு போல் வரும். அது உண்மையான கனவா? இல்லைனா நமக்குச் செய்ய வேண்டிய வேலைகளை நினைவூட்டும் நம் மனமா?
  (உதாரணமாகக் காலையில் எழுந்திருக்க நேரம் ஆகும்போதெல்லாம் எனக்குக் காஃபி போடுகிறாப்போல்/அல்லது வாசலில் கோலம் போடுவது போல் எல்லாம் கனவு மாதிரித் தோற்றங்கள் வரும். திடுக்கிட்டு எழுந்தால்/சில சமயங்கள் ரங்க்ஸ் எழுப்பினால் நேரம் ஆகிவிட்டது என்பதே தெரியவரும். இன்னிக்கும் அப்படித் தான்! சுவாரசியமாகக் காஃபி குடிப்பது போன்ற கனவுத் தோற்றம். நம்மவர் வந்து, "மணி ஐந்தரை ஆகிவிட்டது!" என எழுப்பினார். எனக்கு ஒரு நிமிஷம் எது கனவு/எது நினைவு என்பது தெரியலை. பின்னர் எழுந்து உட்கார்ந்ததும் தான் நிலைமை புரிந்தது. சொல்லப் போனால் இம்மாதிரி அதிகாலைக் கனவு/தோற்றம் தவிர்த்து இரவு தூக்கத்தில் எல்லாம் நான் என்ன கனவு காண்கிறேன் என்பதே நினைவில் வருவதில்லை. காலையில் சொல்லுவார் நான் கனவு கண்டு அலறினேன் என்பதை! அத்தோடு சரி! அப்போவும் நினைவில் வராது. நீளமான கருத்துரைக்கு மன்னிக்கவும். _/\_

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த வாரத்துக்கான கேள்விகளை இதிலிருந்து கண்டுபிடிக்க வேண்டுமா!!

   நீக்கு
  2. ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! 3 கேள்விகள் கேட்டிருக்கேனே! கனவுகள் பத்தி! நிஜம்மாவே தெரியலையா? அல்லது சும்மா உள உளாக்கட்டிக்கா?

   நீக்கு
 6. கனவில் ஆழ்மனம் விழித்துக் கொள்ளும் என்கிறார்கள். அதை நம்மால் உணர முடியுமா?
  உள்ளுணர்வு சொல்வதை நம்புவீர்களா?
  உங்கள் மனைவி/அல்லது கணவன் உள்ளுணர்வால் எதற்கானும் உங்களை எச்சரிக்கை செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
  உள்ளுணர்வு சொன்னது அப்படியே நடக்கும்போது/நடந்தால் என்ன தோன்றும்?

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் அன்பின் வணக்கம். இறை அருளால்
  தொற்றில்லா வாழ்வு தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 8. படம் ஏதோ நடக்கப் போகிறது என்று தெரிகிறது.

  அடி பட்டாரா.??? இருவரும் சேர்ந்து யாரையாவது காப்பாற்றப் போகிறார்களா. ????
  நடுவில் ஆட்டோ நிற்கிறது.அதற்கு முட்டுக் கொடுக்க கல்லா?
  வித விதமாகத் தோன்றினாலும்

  சண்டைதான் கல்லுக்குக் காரணம் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழம்பித் தெளிந்துவிட்டீர்கள் போலிருக்கு!

   நீக்கு
  2. ஆட்டோவில் ஏறித் தப்பிக்கப்பார்க்கிறாரோ!

   நீக்கு
  3. அப்படியும் இருக்கலாம்!

   நீக்கு
 9. ''பேரன்களுக்கு தின்பண்டம் எது வாங்கிக் கொடுத்தாலும் (அவர்களுக்கு அது பிடித்திருந்தாலும்) என் மகனோ அல்லது மகளோ - junk food என்று காரணம் சொல்லி அதை ஒதுக்கிவிடுவார்கள்! ""இது தான் யதார்த்தம். நாம் நினைப்பது போல
  நம் பசங்கள் நினைப்பது இல்லை. பல விஷயத்தில்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க பேரக்குழந்தைகளுக்கு அநேகமாக இந்திய/வட இந்திய பக்ஷணங்களும் பிடிக்கின்றன! ஆகவே பிரச்னை இல்லை.

   நீக்கு
 10. முரளியின் கேள்விக்குப் பதில் ரொம்பச் சரி. என்ன செய்தாலும் நாம் தான் சாப்பிடப் போகிறோம்.

  பதிலளிநீக்கு
 11. பழக்கங்களுக்குக் கேலி பசங்க கிட்டயிருந்து வரும்.
  நானும் எங்க அம்மாவைக் கேலி செய்வேன்.

  தமாஷ் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமாஷாகப் பார்த்துப் பழகிவிட்டால் பிரச்சனை இல்லை.

   நீக்கு
  2. நாங்க எங்க அம்மாவைக் கேலி செய்ததே இல்லைனு நினைக்கிறேன். ஆனால் அம்மா எப்போதும் எல்லாக் குழந்தைகளுக்கும், "ஜகதீஸ்வரி நம்பினேன்! ஜகதாம்பிகே! ராஜ ராஜேஸ்வரி, ராஜ பரமேஸ்வரி! அகிலாண்டேஸ்வரி, கற்பூர சுந்தரி!" என்னும் பாடலையே பாடுவார். அதுக்குத் தான் நான் இது ட்ரேட் மார்க் தாலாட்டு என்று சொல்வேன். என்னோட குழந்தைகளுக்கும் இதைத் தான் பாடினார். அண்ணா/தம்பி குழந்தைகளுக்கும் பாடி இருப்பார்! :)

   நீக்கு
  3. என் அம்மாவுக்கு சுத்த பத்தம் ஜாஸ்தி. தயிர் மத்தை நன்றாக
   அலம்பி கூடையில் வைத்திருந்தாலும்,
   சாபிட மோர் கடையும் போது ,அதில் எறும்பு இருக்கோ இல்லையோ
   தட்டி விட்டுத் தான் கடைவார்.
   அப்பா எங்களுக்குக் கண்காட்டுவார். ;அதோ பாரு, இல்லாத எறும்பை
   ஓட்டுகிறாள் அம்மா!!!!!''
   என் பசங்களும் நான் கைப்பை எடுத்துக் கொள்வது
   பற்றியும், கடைசியில் சாப்பிடுவது பற்றியும்
   பலவிஷயங்களில் தமாஷ் செய்வார்கள்.

   நீக்கு
  4. சுவையான தகவல்களுக்கு நன்றி.

   நீக்கு
 12. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் நன்றாக உள்ளது. கேள்வி கேட்டவர்களுக்கு, பதில்கள் தந்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  பண்டிகைகள், பட்சணங்கள் குறித்த பதில்களும், பூஜைகள் குறித்த பதில்களும் சிறப்பாக உள்ளது. நம்மிடம் உள்ள பழக்க வழக்கங்களை மற்றவர் எப்போதும் முகத்திற்கு நேரே கேலிதான் செய்கிறார்கள். ஆனால் நம்மால் அப்படி நேரடியாக சொல்ல முடியவில்லை. மனதுக்குள்ளேயே புழுங்குகிறோமோ எனவும் தோன்றும்.

  படத்தில் பொய் கோபம் கொண்டு விளையாட்டுக்காக கல்லை எடுத்துக் கொண்டு அந்தப் பெண் அவரை துரத்துவதாக பாவனை செய்கிறாரோ என்னவோ... அவரிடமே கேட்(பார்க்)கலாமென்றால், அவர் முகத்தையும் திருப்பாமல் ஓடுகிறார்.:)
  அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமலாக்கா நேற்று .பேரக் குழந்தைகள் பாட்டி லிஸ்டில்!!! உங்களைச் சொல்ல விட்டுவிட்டேன்...அப்போ நீங்க யங்கோ யங்க்!!! ஹா ஹா ஹா ஹா கீதாக்கா ஓடி வந்துருவாங்க. நான் ஓடுகிறேன்...

   கீதா

   நீக்கு
  2. நான் நேற்றே கவனித்தேன் தி/கீதா. கேட்கணும்னு நினைச்சுக் கேட்காமல் விட்டிருக்கேன் பாருங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (இது எனக்கே எனக்கு) நேற்றுப் புழுங்கலரிசித் தட்டை பல மாதங்களுக்குப் பின்னர் பண்ண ஏற்பாடுகள் செய்திருந்ததால் மனம் எல்லாம் அதிலேயே இருந்தது. ஆகவே கணினியில அதிக நேரம் உட்காரவும் இல்லை. மூன்று மணிக்கு ஆரம்பிச்சு நாலரை வரை ஆயிடுச்சு. ராகுகால விளக்கெல்லாம் ஏற்றி விட்டுப் பின்னரே ஆரம்பித்தேன். சாஸ்திரத்துக்குப் பிள்ளையாரை மட்டும் ராகுகாலத்துக்கு முன்னே பிடிச்சுட்டு நாலு தட்டை பண்ணி எண்ணெயில் போட்டுவிட்டு விளக்கேற்றிவிட்டு மறுபடி தட்டை தட்டும் வேலைக்கு வந்தேன். இப்போதெல்லாம் முன்னத்தனை வேகம் இல்லை என்னிடம். குறைந்து கொண்டே வருகிறது. :(

   நீக்கு
  3. கொஞ்சம் தீவிரமான பதில்! அநேகமாய்க் கமலா என்னைவிட இரண்டு/மூன்று வயதுக்குள் சின்னவங்களா இருக்கலாம். கோமதி அரசும் அவங்களும் ஒரே வயசாய் இருக்கலாம். :)))) கோமதி என்னை விடக் கொஞ்சம் சின்னவங்க!

   நீக்கு
  4. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

   /கமலாக்கா நேற்று .பேரக் குழந்தைகள் பாட்டி லிஸ்டில்!!! உங்களைச் சொல்ல விட்டுவிட்டேன்...அப்போ நீங்க யங்கோ யங்க்!!!/

   ஹா.ஹா.ஹா. நேற்றே நானும் கவனித்தேன். சகோதரி பானுமதி அவர்கள் சொன்னது போல் பா.மு.க வில் எனக்கு இடமில்லை போலும்... பிறகு இடவசதி வந்ததும் பார்த்துக் கொள்ளலாமென்று மனதையும் இளமையாக்கிக் கொண்டு பேசாமல் நகர்ந்து விட்டேன். :) (இன்று நினைவாக பா.மு.க வில் இடம் பிடித்து தந்து விட்டீர்கள்..ஆனால், நான் இள வயது பாட்டித்தான் என நினைக்கிறேன். ஹா.ஹா.ஹா. நன்றி.)

   சும்மா ஜாலிக்கு இப்படி பேசுவது நன்றாக உள்ளது. நெ. தமிழருக்கும் திங்கள் பதிவில் இப்படி ஒரு (ஜாலியாக) பதில் கருத்து தெரிவித்திருந்தேன்.அவர் இன்னமும் அதை கவனிக்கவில்லை.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  5. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

   /அநேகமாய்க் கமலா என்னைவிட இரண்டு/மூன்று வயதுக்குள் சின்னவங்களா இருக்கலாம்/

   நான்தான் என் வயதை என் பதிவுகளிலும், பழைய காலத்தில் எழுதிய கதைகளிலும் கூறியிருந்தேனே...உங்களோடு என் வயது வித்தியாசம் தெரிய வேண்டுமென்றால் எனக்கு மட்டும் உங்கள் வயதை ரகசியமாக கூறி விடுங்கள். ஹா. ஹா. ஹா.

   புழுங்கலரிசி தட்டை நன்றாக இருக்கும். அம்மா வீட்டில் கோகுலாஷ்டமி சமயம், நிவேதனத்திற்கு பச்சரிசி தட்டை, முறுக்கு செய்து எடுத்துக் கொண்டு, பிறகு கண்டிப்பாக புழுங்கலரிசி தட்டை, முறுக்கு செய்வார்கள். அப்போதெல்லாம் ஒரு மாதத்திற்கும் மேலாக பட்சணங்கள் எடுக்க எடுக்க நிறைந்து இருக்கும். அந்த நினைவுகள் உங்கள கருத்தை பார்த்ததும் வந்தது. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 14. ரசனையான கேள்வி - பதில்கள்.

  பதிலளிநீக்கு
 15. ரசனைகள் பலவிதம்
  ஒவ்வொன்றும் ஒருவிதம்
  ஈடுபாடுகள் பலவிதம்
  ஒவ்வொன்றும் வேறுபடும்

  பதிலளிநீக்கு
 16. ரசனைகள் தாம் நம் உயிர் நிலை மாதிரி. நம்மை யார் என்று தீர்மானிப்பது அவை தான். ரசனையில்லா மனிதன் வெற்று மனிதன். சாரமற்றவன். உடல் சுமந்து திரியும் ஜடம். சீரான இரத்த ஓட்டத்திற்கு நம்க்கான ரசனைகள் வெளிக்குத் தெரியாமல் பெரும் பங்காற்றுகின்றன.

  பதிலளிநீக்கு
 17. பல்லில்லாத பிறந்த குழந்தையான கிருஷ்ணனுக்கு முறுக்கு, சீடை, தட்டை, கர்ச்சிக்காய், வடை, பாயசம், அப்பம் போன்றவை. பற்கள் உள்ள திடகாத்திரமான ராமனுக்கோ மிருதுவான பானகம், பாயசம், வடை, வடைப்பருப்பு/சுண்டல், நீர்மோர் போன்றவை. இதுக்குக் காரணமாக என் பெரியப்பா சொல்லுவது ராமர் பிறந்தது கோடைக்காலம் என்பதால் சூட்டைத் தணிக்கும் ஆகாரங்களை அப்போது பிரசாதமாக வைத்துச் சாப்பிட்டோம். கிருஷ்ணர் பிறந்தது நல்ல மழைக்காலம் மழைக்காலத்துக்கு ஏற்ற எண்ணெய் பக்ஷணங்கள். விநாயகருக்குக் கொழுக்கட்டை என்பதும் அப்படியே தத்துவார்த்தமான கருத்துச் சொல்லுவார். நவராத்திரிச் சுண்டல் முக்கியமாய்ப் பெண்களுக்குப் ப்ரோட்டீன் தேவை என்பதால் மழையும்/குளிருமாக மாறி மாறி வரும் அந்தப் புரட்டாசி மாதத்தில் பெண்களின் உடல் சூட்டைச் சமன் செய்யும் விதமான சுண்டல்கள்/புட்டு/பொங்கல்/கலந்த சாத வகைகள் போன்றவை என்பார்.

  பதிலளிநீக்கு
 18. பண்டிகைகளுக்கான நிவேதனங்களை விலைக்கு வாங்கி ஸ்வாமிக்கு நிவேதனம் செய்வது சரியா?
  ஒண்ணும் பண்ணவே முடியலைனால் பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய் வைத்து நிவேதனம் செய்யலாம் இல்லையா? வாங்கிச் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. :( வாங்குபவர்கள் மன்னிக்கவும். __/\_

  பதிலளிநீக்கு
 19. //இந்த வாரத்திற்கான comment படம்.//

  உயரம் குறைவான பெண்கள் பக்கவாட்டில் கோடுகள் அல்லாத
  மேல் - கீழாக நீட்டவாக்கில் கோடுகள் உள்ள உடைகளை அணிந்தால் சற்று உயரமாகத் தெரிவார்கள்.

  (யாருக்காவது உபயோகமாக இருந்தால் சந்தோஷம்.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் நாலடியார்!!!!!! எனக்குக் கூட இப்படி ஒரு யோசனை சொல்லியிருக்காங்க.

   கீதா

   நீக்கு
  2. இது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும் தி/கீதா! உடை உடுத்த ஆரம்பிக்கையிலேயே நமக்கு இந்த நிறம்/இந்த டிசைன் பொருந்தும்/பொருந்தாது என்பது புரிந்துவிடும். மற்றவர்களும் சொல்லி இருப்பாங்க! ஆனாலும் பெண்களுக்கு அழகு உணர்ச்சி அதிகம் என்பதால் பார்த்துப் பார்த்தே ஆடை அணிவார்கள். படத்தில் காணப்படும் பெண் அதிகம் குண்டும் இல்லை. ஒல்லியும் இல்லை. ஆகவே எப்படி உடை அணிந்தாலும் பொருந்தும்னு நினைக்கிறேன்.

   நீக்கு
  3. தி.கீதா,

   ஆண்கள் பெண்களுக்கு ஆலோசனைகள் சொல்வது விசேஷம். இல்லையா?

   பொதுவாக சமையற்கலை இயல்பாகவே பெண்கள் வசப்பட்டது.
   இருந்தாலும் செஃப் தாமு போன்றவர்கள் இந்த ஏரியாவிலேயேயும் சமையற்கலை பேராசிரியர்களாய் பெண் கூட்டத்தினருக்கு வகுப்புகள் எடுக்கிற அள்வில் தொலைக்காட்சி சேனல்களில் டாமினேட் செய்வதில்லையா?
   அது போலத் தான் இதுவும் என்று சொல்லி விடுங்களேன்.

   நீக்கு
  4. சுவையான விவாதங்களுக்கு நன்றி.

   நீக்கு
 20. & யாருக்காக செய்தாலும் எல்லாவற்றையும் சாப்பிடுவது சாமிகள் அல்ல; ஆசாமிகள்தானே! //

  ஹாஹாஹாஹா அதானே!!!

  எங்கள் நட்பில் ஒரு மாமா சொல்வார் தினமும் பூஜை செய்து நெய்வேத்தியம் படைக்கும் போது, நான் அவர்கள் வீட்டிலிருந்தால் நெய்வேத்தியம் செய்துவிட்டு சொல்லுவார், "ஆவி உமக்கு, அமுது எமக்கு"!!! என்று சொல்லி, கீதா வா இந்தா பிரசாதம் என்று தருவார்.

  கீதா

  பதிலளிநீக்கு
 21. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 22. உங்களிடம் இருக்கும் ஏதோ ஒரு பழக்கத்தை நண்பர்களும், உறவினர்களும் கேலி செய்தாலும்,விமர்சித்தாலும், நீங்கள் ரசிப்பது உண்டா?//

  சிறு வயதில் ஒரு சிலதை ரசித்ததில்லை. கோபம் வரும். ஆனால் கோபம் வெளியில் தெரியாமல் மனம் சுருங்கிவிடும். கொஞ்சம் வளர்ந்து மனம் பக்குவம் பெற்ற போது ரசித்தேன்....சிரிப்பதுண்டு. அதுவும் என் தம்பி தங்கைகள் (கஸின்ஸ்தான் ஆனால் அப்படித்தான் சொல்வது வழக்கம் ஒரே கூரையின் கீழ் வளர்ந்ததால்) என்னைக் கலாய்த்து தள்ளுவார்கள். சிரித்து முடியாது. இன்னும் வளர்ந்த பிறகு பழைய நினைவுகளைப் பேசும் போது நானே என்னைக் கலாய்த்து அதைச் சொல்லிவிடுவேன்!
  ஆனால் அதில் நான் கற்ற பாடம் யாரையும் இதைக் குறித்து கேலியோ விமர்சிக்கவோ கூடாது என்று. ஏனென்றால் ஒரு சிலர் மனது மிகவும் தொட்டாலே உடைந்துவிடும் கண்ணாடி போன்றதாக இருக்கும் போது அது உளவியல் பிரச்சனைக்கு உள்ளாகிறது என்ற காரணத்தினால்.

  கீதா


  பதிலளிநீக்கு
 23. நேற்று எனது கதை வெளியிடப்பட்டிருந்த சூழ்நிலையில் கருத்துரை செய்திருந்த அன்பு நெஞ்சங்களைக் கண்டு மகிழ்ச்சி. ஆனாலும் நன்றியுரைக்க இயலவில்லை..அதன் காரணத்தை எனது தளத்தில் இப்போது தெரிவித்துள்ளேன்...

  கண்டு கொள்க..
  நன்றி.. வணக்கம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடல் நலத்தில் கவனம் வைக்கவும். பிரார்த்தனைகள்.

   நீக்கு
  2. துரை அண்ணா உடல் நலம் முக்கியம்...கவனமாக இருங்க..

   அங்கும் கருத்துசொல்லியிருக்கிறேன்.

   கீதா

   நீக்கு
  3. விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள்.

   நீக்கு
 24. சிறு வயதிலிருந்து வளரும் நம் ரசனை முப்பது அல்லது முப்பத்தைந்து வயதோடு நின்று விடுகிறது போலிருக்கிறதே.? என்ன காரணம்?//

  சில ரசனைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுவதுண்டு. மாறலாம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. சில படங்களை நாம் அன்று ஒரு முறையேனும் ரசித்திருப்போம் ஆனால், இப்போது அதனை மீண்டும் ஒரு முறை கூடப் பார்க்கப் பிடிக்காமல் போகலாம்...

  ஆனால், அடிப்படை அதாவது நம் கூடவே இன்பில்ட்டாக இயற்கையாக நம் குணமாக வரும் ரசனைகள் மாறுவதில்லை மாறாது. ரசனை இல்லா மனிதர்களையும் பார்த்திருக்கிறேன்.

  ஆனால் இந்த ரசனைகள் கூட வயதாகும் போதும் இருக்கும் மனதிற்குள்...குடும்பப் பொறுப்புகள், சில சமயம் நம்மை ஆட்டுவிக்கும் சூழல்கள் இவை அவற்றைப் புறம் தள்ளி வைத்திருக்கும் அவ்வளவுதான். இவற்றைக் கடந்து வாய்ப்பு வரும் போது இந்த ரசனைகள் மேலேழும்பும் கண்டிப்பாக நாம் ஒன்றையேனும் செய்ய முயற்சிப்போம்.

  ரசனை இல்லா வாழ்க்கை வாழும் மனிதர்கள் ரோபோக்கள் எனலாம். ரசனைகள் தான் ஒருவரை உத்வேகப்படுத்தி உயிரோட்டமான வாழ்க்கையைத் தருகிறது. லைவ்லியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ரசனை இல்லை என்றால் மனம் கூட இறுக்கமாக இருக்கும்...என்னைக் கேட்டால் அதுதான் ஜீவன் எனலாம்.

  நல்ல கேள்வி பானுக்கா. உங்கள் கேள்வியை மிகவும் ரசித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் சரியான, அற்புதமான கருத்து. நன்றி.

   நீக்கு
 25. அந்தப் படத்தைப் பார்த்ததும் தோன்றியது ..

  1. நடைப்பயிற்சி அல்லது ஜாகிங்க்...முன்னால் போகிறவன் இப்பெண்ணிடம் சில்மிஷம் செய்திருக்காலாம் அதனால் கோபமடைந்த அப்பெண் அவனைக் கல்லெறிந்து தாக்கப் பார்த்து ஓடுகிறாளொ..

  2. அந்தப் பெண் முன்னால் சென்று கொண்டிருக்கும் கணவன்? அல்லது சகோதரனுடன் சேர்ந்து நடந்து கொண்டிருப்பார்கள். பேச்சில் வாக்குவாதம் வந்திருக்கும். அவன் முன்னே ஓட இவள் கல்லெடுத்துகோபத்தில் வீச முயற்சி....ஓடிக் கொண்டே...அத்தனை பெரிய வாக்குவாதம் என்றால் கண்டிப்பாகக் கணவனாக இருக்குமோ?!!!!!! ஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலைப்பாதை..ஏனவே ஆள் நடமாட்டம் குறைந்த பகுது போலவும் இருக்கு...கல்லு நிறையவே இருக்கிறதே!!!

   இல்லை இரு நட்புகளாகக்/காதலர்களாக கூட இருக்கலாம். நட்புகள்/காதலர்கள் என்றால் ஒருவருக்கொருவர் செல்லமாக????? கோபத்தில் பொருட்கள் எறிவது போல் இங்கு கல்லைத் தூக்கியிருக்கிறார்? போலும் அப்பெண்!!

   கீதா

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   உங்கள் கடைசி கருத்துரையைதான் நானும் முன் மொழிந்து இருக்கிறேன். பாருங்கள். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 26. இன்றைய பதிவில் கேள்விகள் குறைவு! :) எல்லோரும் பிசி!

  தொடரட்டும் பதிவு.

  பதிலளிநீக்கு
 27. நல்ல கேள்வி பதில்கள் .

  துரத்தும் சிறுமி விளையாட்டுக்காக ஓடுவது என்றால் மகிழ்ச்சி.விபரீதம் என்றால் மனம் பதறும்.

  பதிலளிநீக்கு
 28. கேள்விகளும், பதில்களும் அருமை.
  பின்னூட்டங்களும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 29. என்னைப் பொறுத்தவரை வீட்டில் ஆட்கள் குறைந்தால் பூஜை ஐட்டங்கள் குறைகிறது (ஸ்வீட்ஸ் ,காரம் )
  என்னையும் எல்லோரும் ஏன் இத்தனை சாமான்கள் என்று கேட்பார்கள் . என் தாய் தந்தையர் கொடுத்த ஒரு சின்னக் கிண்ணம் தூக்கி எறிந்தால் கூட எதோ ஒரு கஷ்டம் வருகிறது எனக்கு

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!