புதன், 23 ஜூன், 2021

நீங்கள் மிகவும் பார்க்க விரும்பிப் பார்க்க முடியாமல் போன படம் எது?

 

நெல்லைத்தமிழன்: 

தர்மபத்தினி என்று ஏன் சொல்கிறோம்? கன்னிகா தானத்தில் FREEயா மனைவி கிடைப்பதால், தர்மத்துக்கு வந்த பத்தினி என்பதாலா?

# கிரகஸ்தாஸ்ரம கடமைகளில் மனைவியோடு செய்தால் மட்டுமே பலன் என்று சாஸ்திரம் சொல்கிறதாம். இல்லற தர்மத்துக்குத் துணை நிற்பதால் தர்மபத்தினி. கிரமமாக மணமுடிக்காத நபர் மனைவியின் இடத்தை நிரப்ப இயலாது என்பதையும் தர்ம என்ற முற்சேர்க்கை உறுதி செய்கிறது.

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

இப்போதெல்லாம் அப்பர் மிடில் கிளாஸ் என்று ஒன்று சொல்கிறார்களே? அது என்ன?அப்படியென்றால் லோயர் மிடில் கிளாஸ் என்று ஒன்று உண்டா?

# உண்டு. அடிப்படை வசதிகளோடு கடன் சுமை இல்லாமல் இருப்பது மிடில் கிளாஸ். சற்று ஆடம்பரத்துக்கு வசதியும் நாட்டமும் உடையது அப்பர் மிடில் கிளாஸ்.

கீதா சாம்பசிவம் : 

1. நீங்கள் பார்த்த முதல் திரைப்படம் நினைவில் இருக்கா? எந்த வயசில் பார்த்தீங்க?

$ 3 வயதில் ஜகதலப்ரதாபன்.

# சரியாக நினைவில்லை. கங்காவதார், ஹரிதாஸ், ஜகதலப்ரதாபன் இவற்றில் எது முதல் என்று தெரியவில்லை. 1944 ஆக இருக்கலாம்.

& நான்கு வயதில் குலேபகாவலி படம் பார்த்தேன் என்று ஞாபகம். யாரோ ஒருவர் (MGR?) ஒரு புலியோடு சண்டை போடும் காட்சி  லேசாக ஞாபகம் உள்ளது. 

2. படம் வெளி வந்த அன்றே திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

# ஆர்வம் எல்லாவற்றிலும் யாருக்காவது இருக்கும். அது பெரிய குறைபாடு அல்ல.

& வேலையற்றவர்கள். 

3. திரைப்படத்தைப் பார்த்து அந்தக் கதையம்சத்தில் ஆழ்ந்து போய் மனம் வருந்தி அழுதது உண்டா?

# உண்டு. துக்கம் தொண்டை வரை அடைத்ததும் பலமாக சிரிப்பு வந்ததும் உண்டு.

& முன்பு இல்லை; இப்போது உண்டு. 

4. நடிகர்களை தெய்வமாய்க் கொண்டாடும் ரசிகரா நீங்கள்? எனில் எந்த நடிகரை?

# அவ்வளவு தீவிர ரசிகன் அல்ல. 

& யாரையும் தெய்வமாக எல்லாம் எப்போதும் கொண்டாடியது இல்லை. 

5. திரைப்படங்களால் சமூகத்துக்கு ஏதேனும் நல்லது கிடைக்கின்றனவா? திரைப்படங்களைப் பார்த்துத் திருந்தியவர்கள் உண்டா?

# ஏதேனும் நன்மை யாருக்காவது இருப்பதோ யாரேனும் மனம் மாறியதோ இருக்கலாம். 

& திரைப்படத்தைப் பார்த்துத் திருந்தியவர்களைவிட கெட்டுப்போனவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். 

6. நடிகர்களின் கட் அவுட்டுக்குப் பாலபிஷேஹம் பண்ணுவது பற்றி உங்கள் கருத்து என்ன? (முன்னாடியே கேட்டேனோ? ஜந்தேகமா இருக்கே)

# வீண் விரயம் தான். 

& கேட்டிருக்கிறீர்கள். 

7. பாசமலர்/பாலும் பழமும் போன்ற படங்களைப் பார்த்துவிட்டு அதில் மூழ்கி மனதில் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா?

# அதிகம் உணர்ச்சி வசப்பட்டதில்லை. இரண்டுமே செயற்கையாக மிகைப் படுத்தப்பட்ட படங்கள் என்று எண்ணியதுண்டு. 

& அந்தப் படங்கள் வந்த காலகட்டத்தில் எனக்கு பாடல் காட்சிகள் மட்டுமே பிடிக்கும். கதை எல்லாம் கவனிக்கத் தெரியாது. 

8. படங்களைப் படமாகப் பார்க்க வேண்டும். அதோடு நாம் ஒன்றிப் போகக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து! இது சரியா?

 # சரிதான். 

& அதே, அதே. 

9. நீங்கள் மிகவும் பார்க்க விரும்பிப் பார்க்க முடியாமல் போன படம் எது?

# அப்படி எதுவும் இல்லை. 

& Bobby. இதுவரை பார்க்கவில்லை . 

10. இப்போது வரும் படங்களில் நல்ல கதையம்சம் உள்ளதா? காலத்துக்கும்/நடிகர்களுக்கும் ஏற்றாற்போல் படக்கதைகள் மாறுவது சரியா?

# எல்லாவற்றையும் சரியா தப்பா என்று யோசிப்பதை விட காலக்கிரமத்தில் மாறாதது எதுவுமில்லை என்ற தெளிவு முன் வைக்கப்பட வேண்டும். 

& நல்ல சதையம்சம் மட்டுமே உள்ளன. 

11. வன்முறைச் சம்பவங்களைத் திரைப்படங்களில் காட்டுவது சரியல்ல என்பது என் கருத்து! உங்கள் கருத்து என்ன?

 # எது விலை போகிறதோ அது சந்தைக்கு வரும். 

& உங்கள் கருத்துதான் என் கருத்தும். 

12. வெளிநாடுகளில் கிரஹணம் போன்றவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நம்மைப் போல் கிரஹணத்தன்று அந்தச் சமயங்களில் சாப்பிடக் கூடாது என்பதை எல்லாம் அவர்கள் கடைப்பிடிப்பது இல்லை. இது அவர்களையும் பாதிக்காதா?

 # கொஞ்ச காலத்தில் இங்கும்  இந்த நம்பிக்கைகள் நசித்துப் போகும். 

& நகர்ப்புறங்களில் கிரகணம், அமாவாசை எல்லாம் பார்ப்பவர்கள் மிகவும் குறைவு. வேலை பார்த்த நாட்களில் இயந்திரம் போல தினமும் நாலரை மணிக்கு எழுந்து, ஐந்தரை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி, ஏழரை மணிக்கு வேலை பார்க்க ஆரம்பித்து, மாலை நாலரை / ஆறு மணிக்குத் திரும்பக் கிளம்பி, இரவு வீடு வந்து சேர்ந்த நாட்களில் - அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் - எதுவும் யோசித்தது இல்லை.  

13. கிரஹண சமயங்களில் ஏதேனும் வேலை செய்தால்/சாப்பிட்டால் வயிறு, மனம் பாதிக்கப்படும், அந்த நேரம் ஜபம் செய்ய மட்டுமே என்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

 # எனக்குக் கிடையாது. 

& எனக்கும். 

14. கர்ப்பிணிகளைக் கிரஹணத்தின் போது மறைந்திருக்கச் சொல்லுவது உண்டு. அது சரியா? வெளிநாட்டுக் கர்ப்பிணிகள் அப்படி மறைந்திருப்பதில்லை. அவர்களுக்குப் பாதிப்பு உண்டாகாதா?

# வெளிநாட்டில் பாதிப்பு இல்லை என்றால் நம்பிக்கை ஆதாரமற்றதுதான்.  ஏன் அநாவசிய ரிஸ்க் என்றே பலரும் நினைக்கலாம். 

15. இந்தியா கர்மபூமி எனச் சொல்லுவதால் இங்கே மட்டும் தான் இந்தச் சட்டதிட்டங்கள் செல்லும் என்பது உண்மையா? வெளிநாட்டு வாழ் மக்கள் எதையும் கடைப்பிடிப்பதில்லை என்பது உண்மையா? அவர்களுக்கெனத் தனியான விதிகள் உண்டா?

# வெளிநாட்டில் இந்த மாதிரி ஆசாரங்கள் இல்லை என்பது சரிதான். கர்ம பூமிக்கு சலுகைகள் இருப்பதுதான் நியாயம். கடவுளுக்கு இது தெரியாமலா இருக்கும் ?

= = = = =

வாசகர்களுக்கு ஒரு கேள்வி : 

கேட்டிருப்பவர் : நெல்லைத்தமிழன் 

ஒருவனிடம் 3 ரொட்டிகள் இருக்கின்றன. இன்னொருவனிடம் 5 ரொட்டிகள் இருக்கின்றன. மூன்றாவதாக ஒருவன் வந்து சேர்கிறான். மூவருக்கும் சரி சமமாக அந்த ரொட்டியை பிரித்துக்கொடுப்பது எப்படி?  மூன்றாமவன், மறுநாள் 8 தங்கநாணயங்களை அவர்களிடம் கொடுத்து பிரித்து எடுத்துக்கொள்ளச் சொல்கிறான். அதனை எப்படி பிரித்தெடுத்துக்கொள்வார்கள்?

இந்தக் கேள்விக்கு, எனக்கு பதில் தெரியும் - ஆனால் - சரியான பதில் சொல்லத் தெரிந்த வாசகர்கள் ஓரிருவர் மட்டும்தான் என்று நெல்லைக்கு சொல்லியிருக்கிறேன். பார்ப்போம் என்ன பதில்கள் வருகின்றன என்று! 

இந்தக் கேள்விக்கு சிலர் என்ன பதில் அளிப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தேன் . 

1) ** " கணக்கு பிணக்கு ஆமணக்கு " 

2) ** " நல்ல கேள்வி. யாரெல்லாம் பதில் கூறுகிறார்கள் என்பதை அறிய ஆவலாகக் காத்திருக்கிறேன். " 

3) ** ஆ ! ரொட்டித் துண்டுகளுக்கு தங்க நாணயமா !! " 

4) ** பதில் அளித்தால் எனக்கு எவ்வளவு தங்க நாணயம் கொடுப்பீர்கள் ?" 

- -- - - 

கமல் ட்வீட் : 

பட்டினி மக்கள் பகிர்ந்துண்ணும் 

ரொட்டிக்கும் தங்கம் கொடுத்து 

வாங்கி உண்ணும் பணப்பேய் 

ஏங்கித் தவிக்கும் பொன்னாள் 

தாங்கி நிற்கும் அரசியலார் 

நீங்கி நிலைக்கும் அறம் ! 

 = = = = =


101 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இன்ய காலை வணக்கம்.
    இறை அருளால் எல்லோரும் நோயில்லாமல் அமைதியுடன்
    வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறை அருளால் எல்லோரும் நோயில்லாமல் அமைதியுடன்
      வாழ வேண்டும். ஆமோதிக்கிறோம்.

      நீக்கு
  2. //ஒருவனிடம் 3 ரொட்டிகள் இருக்கின்றன. இன்னொருவனிடம் 5 ரொட்டிகள் இருக்கின்றன. மூன்றாவதாக ஒருவன் வந்து சேர்கிறான். மூவருக்கும் சரி சமமாக அந்த ரொட்டியை பிரித்துக்கொடுப்பது எப்படி?//

    மிக்ஸியில் போட்டு அரைத்து பிரித்து கொடுக்கலாமே ஹீஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையெல்லாம் உங்க வீட்டம்மா படிக்க நேர்ந்தால், வர்க் ஃப்ரம் ஹோம் சமயத்தில் வீட்டு வேலைகளைச் செய்யாமல் இணையத்தில் என்ன வேலை என்று கேட்டு பூரிக்கட்டை வந்துவிடப்போகிறது

      நீக்கு
  3. அனைவருக்கும் காலைவணக்கம்.

    தேர்தலுக்குப் பின்னால், அற்ற குளத்து அறுநீர்ப் பறவை' போல, கமலை விட்டு அனேகமாக எல்லோரும் விலகிவிட்டனர். அவருக்கு எழுதிக்கொடுப்பவர் இடம் காலியாக உள்ளது. வேலை நிச்சயம் கிடைக்கும். தகுதி உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ! இதுக்கு மட்டும்.... பதில் - கௌதமின்னு டக்குன்னு என் கண்ணுல மட்டும்? பட்டதே!!

      நெல்லை அண்ட் மதுரை உங்க கண்ணுல படலையா?!!!!!!

      கீதா

      நீக்கு
    2. ஹப்பா இப்பத்தான் இந்தக் கருத்து போனது...

      ப்ளாகர் மட்டும் படுத்துகிறது அதுவும் கருத்து போட மட்டுமே படுத்துகிறது. தளங்கள் வாசிக்க முடியுது இணையம் வேலை செய்கிறது ஆனால் ப்ளாகர் மட்டும்...அதுவும் கருத்து போட மட்டும் ..நேரம் விரயம் ஆகிறதா அதனால் நொந்து ப்ளாக் பக்கம் வரவே கஷ்டமா இருக்கு இன்னும் எங்கள் தளத்தில் பதில் கொடுக்கவே முடியலை..இந்த வூப்ஸ் வூப்ஸ் பார்த்து கடுப்பாகிறது.

      கீதா

      நீக்கு
  4. இன்றைய கேள்வி பதில்களில் திரைப்பங்களும், கூத்தாடிகளும் நிறைய இடம் பெற்று இருக்கிறார்களே... சுவாரஸ்யம்.

    இந்தக்கணக்கு பண்ணுற வேலையெல்லாம் என்னிடம் எப்போதுமே கிடையாது.

    பதிலளிநீக்கு

  5. 3 ரொட்டியை கொடுத்தவனுக்கு 3 தங்ககாசும் 5 ரொட்டி கொடுத்தவனுக்கு 5 தங்ககாசும் கொடுத்தால் போச்சு

    பதிலளிநீக்கு
  6. ரொட்டிக் கேள்வி சுவாரஸ்யம்.
    மூன்றாமவன் 8 தங்க நாணயம் கொடுக்கும் போது
    மற்ற இருவரும் பாதிப் பாதி எடுத்துக் கொள்கிறார்கள். இது என் யூகம்.
    எட்டு பை மூன்று.
    இன்னோரு ரொட்டியை வாங்கி '
    மூவரும் பிரித்துக் கொள்ளலாம்.
    இரு ரொட்டியைக் காகம், நாய் எல்லோருக்கும் கொடுத்து
    விட்டு,
    மிச்சம் இருப்பதை ஆளுக்கு இரண்டா எடுத்துக்கலாம்.
    கணக்கு அவ்வளவாகத் தெரியாது சார்.!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழப்பிட்டீங்களே !! :((

      நீக்கு
    2. நல்லா யோசிக்கத் தெரிந்த வல்லிம்மாவை, மகலஹாசன் ட்வீட் என எழுதி, குழப்பிவிட்டீர்கள் போலிருக்கு.

      நீக்கு
    3. நான் தான் சொன்னேனே கௌதமன் ஜி.சாயந்திரமானா யோசிக்க முடியாது:))))

      நீக்கு
    4. முரளி மா.இரவு வந்தாச்சு. Thoongap போகணும்.கணக்குப் பொட முடியாது.தப்பு தப்பா கனவு வரும்.

      நீக்கு
    5. அட இது நன்றாக இருக்கிறதே?வாழ்க உங்கள் மிருக நேயம்!

      நீக்கு
  7. கன்னிகா தானம் செய்வதே ,
    கணவனின் தர்ம நெறிகளுக்குக் கை கொடுப்பதற்காக.

    வெளி நாடுகளில் கடை பிடிப்பதில்லை
    என்றால் தமிழ்க்காரர்கள், மற்ற மானிலத்தவரும்
    இந்தியக் கொள்கைகளை விடுவதில்லை.
    மற்றவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் இல்லைதான்.
    நம் ஊரிலேயே அப்படி நடப்பவர்கள் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  8. குழந்தைகள் வளரும் பருவத்தில் பல படங்கள் பார்த்ததில்லை.

    நஷ்டமும் இல்லை.
    பன்னிரண்டு வயதில் பாச மலர் படத்துக்கு அழுதிருக்கிறேன்.
    இப்போது அதுபோலக் கிலேசம் தரும் காட்சிகளைக் காண்பதில்லை.

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் எல்லோருக்கும்...

    அம்மா அண்ட் மதுரை மாலை வணக்கம்.

    என்ன இன்னிக்கு கில்லர்ஜி காலையிலேயே ஆஜர்!!!!! என்னென்னமோ நடக்குது பாருங்க...இன்னொன்னும்...மேல வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேல வர்றது, இணையம், லேப்டாப் ஒத்துழைப்பதைப் பொறுத்து இருக்குன்னு எழுத மறந்துட்டீங்களே

      நீக்கு
  10. 8 ரொட்டிகளையும், ஒவ்வொன்றும் 3 வீதம், 24 துண்டுகளாக்கி, தலைக்கு 8 துண்டு எடுத்து கொள்கிறார்கள். 5 கொண்டு வந்தவன் 7 துண்டுகள் தியாகம் செய்ததால் 7 காசுகளும், 3 கொண்டு வந்தவன் 1 துண்டு தியாகம் செய்ததால் 1 காசும் கிடைக்கும். ஏற்கனவே படித்திருக்கிறேன். Viswanathan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் என்னவோ சரியாக இருக்கலாம். ஆனால் இந்த தீர்ப்பிற்கு பிறகு என்ன நடந்தது? அவர்களில் சிலர் கண்டிப்பாக மருத்துவமனைக்கும்(அடிதடியில் மண்டை உடைந்ததால்), சிலர் கோர்ட்டுக்கும் சென்றிருப்பார்கள் என்பது என் யூகம்.

      நீக்கு
    2. அடக்கடவுளே! நாட்டிலே நியாயம் நீதி நேர்மை எல்லாம் நிலைக்க விடமாட்டீர்கள் போலிருக்கிறதே!

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி நல்வாழ்வு வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. //1) ** " கணக்கு பிணக்கு ஆமணக்கு " // ம்ஹூம், நானில்லை, அவள் நானில்லை. இதுக்கு விடை தெரியும். ஆகையால் சொல்லப் போறதில்லையே! இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்ன செய்வீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //) ** " கணக்கு பிணக்கு ஆமணக்கு " // ம்ஹூம், நானில்லை, அவள் நானில்லை//ஓகே கீதா அக்கா நீங்கள் அந்த குதிருக்குள் இல்லவே இல்லை. ஹா ஹா!

      நீக்கு
  13. என் கேள்விகளுக்கு பதில் அளித்த திரு # திரு $ திரு & ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  16. மை லார்ட்! காலை வேளையில் இப்படி கணக்குகள் போட்டு படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  17. எனக்கும், நெல்லைக்கும் எண்ணங்களில் ஒற்றுமை இருக்கிறது.ஆனல்,மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ்' பற்றிய நான் அனுப்பிய கேள்வியை வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் அவரும் கேட்டிருக்கிறார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
    //இப்போதெல்லாம் அப்பர் மிடில் கிளாஸ் என்று ஒன்று சொல்கிறார்களே? அது என்ன?அப்படியென்றால் லோயர் மிடில் கிளாஸ் என்று ஒன்று உண்டா?// இதையேதான் நானும் கேட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாட்சாப் செயலியை செக் பண்ணுங்கள். நான் அனுப்பியிருக்கும் குருஞ்செய்தி கண்களில் படலாம். மற்றபடி நெல்லை தமிழன்தான் தெளிவு படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஊடகங்களில் இதெல்லாம் சகஜமப்பா என்று விட வேண்டியதுதான்.

      நீக்கு
    2. இப்போதான் பார்த்தேன். எப்படியோ கவனிக்காமல் விட்டிருக்கிறேன். மன்னிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
    3. நன்றாக ஆராய்ந்து பார்த்ததில், தவறு என் பக்கம் என்று தெரிகிறது. பானுமதி வெங்கடேஸ்வரன் கேட்ட கேள்வியை, நெல்லைத்தமிழன் கேள்வியோடு என்னை அறியாமல் சேர்த்து, பா வெ பெயரை குறிப்பிட மறந்திருக்கிறேன். இப்போ சரி செய்துவிட்டேன்.
      சம்பந்தப்பட்டவர்களும், வாசகர்களும் என்னை மன்னிக்கவும்.

      நீக்கு
  18. நமக்கும் கணக்குக்கும் எட்டாத தூரம். எண்கள் என்றாலே கண் இமைகள் மூடிடும்!!! நமக்குத் தெரிஞ்சதெல்லாம் இதோ இதுதான் இந்தக் கணக்குதான்

    மொத்தம் 8 ரொட்டி....3 பேர் ஆளுக்கு 2. 6 போச்சு மீதி 2 அதை ஏதேனும் பசியால் வாடும் ஒருவருக்குக் கொடுக்கலாம். அல்லது நம்மைச் சுற்றி இருக்கும் வாயில்லா (ஆ யாராச்சும் கேட்டுருவாங்க வாயில்லைனா எப்படிச் சாப்பிடும்னு!!!!) ஜீவன்களுக்குக் கொடுக்கலாம்.நாலு கால் காக்காய்க்கு இப்பல்லாம் ரொட்டிதான் பிடிக்குது தெரியுமோ அதனால அதுக்கும் கொடுக்கலாம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலு கால் காக்காய்க்கு//

      ஆ! கௌ அண்ணா!, உங்க வீட்டு காக்காய்க்கு 4 காலா ந்னு நெல்லை வந்து கேட்டா நான் அவுட் ஆஃப் கவரேஜ்னு சொல்லிடுங்க!!!!!!!

      நாலு கால், ஜீவன், அப்புறம் காக்காய்க்கு நு சொல்ல விட்டது!! கமா கூடப் போடாம விட்டுவிட்டேன்..

      கீதா

      நீக்கு
    2. நெல்லைக்கு முன்னே நானே கேட்பதாக இருந்தேன்.

      நீக்கு
    3. ஹாஹாஹா கௌ அண்ணா!

      வூப்ஸ்! மன்னிக்கவும் நான் அவுட் ஆஃப் நெட்வொர்க்!!!!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  19. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  20. விடியற்காலையில் கணக்கு!..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  21. திரைப்படம் பற்றிய கேள்வி பதில்கள் நிறைந்து இருந்தாலும் அருமை...

    பதிலளிநீக்கு
  22. தர்மபத்தினி என்று ஏன் சொல்கிறோம்? கன்னிகா தானத்தில் FREEயா மனைவி கிடைப்பதால், தர்மத்துக்கு வந்த பத்தினி என்பதாலா?//

    நெல்லை! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
    அப்ப ஆண் ஏகபத்தினி விரதன்!!!

    (கண்ணாலும் பார்க்கக் கூடாது, மனதாலும் நினைக்கக் கூடாது பார்த்தாலும் அதாவது சும்மா பார்த்தா கூட ............!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  23. ஹூம், காலம்பரவே "தர்ம பத்தினி"க்கு பதில் சொல்ல நினைச்சுப் பெரிசா வரும் என்பதால் நேரமாச்சுனு போயிட்டேன். தர்மம் என்பதன் அர்த்தமே இந்தக் காலங்களில் மாறிப் போச்சு. பிச்சை போடுவதைப் பெரும்பாலும் "தர்மம்" என்று எண்ணிக் கொள்கிறார்கள். தர்மம் செய் என்பது எல்லோருக்கும் பிச்சை அளி என்ற பொருளிலேயே பார்க்கப் படுகிறது. அப்படி இல்லை. இங்கே சொல்லப்பட்டிருக்கும் "தர்மம்" கீதையிலே பகவான் சொல்லி இருக்கும் தர்மம். அவனவன் தர்மத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லுவாரே! யாருக்கானும் நினைவில் இருக்கா? நம்ம குடும்ப தர்மம் என்னவோ அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அதைத் திருமணம் ஆனவன் பத்தினியோடு சேர்ந்து இருந்து கடைப்பிடிக்கணும். தர்மத்திற்குத் துணை நிற்பவளே தர்ம பத்தினி! இந்தக் காலத்துப் பொருளின்படி தர்மமா வந்ததால் அல்ல. இன்னும் சொல்லப் போனால் பெண்ணிற்குப் பணம், ஶ்ரீதனம் எல்லாம் திருமணம் செய்து கொள்ளப் போகும் பிரமசாரி தான் கொடுத்துவிட்டுப் பெண்ணை தானம் வாங்கிக்கணும்.இப்போதெல்லாம் மாங்கல்ய தாரணத்தின்போது பெண் கட்டிக்கும் புடைவை கூட (கூறைப்புடைவை) பெரும்பாலும் பெண் வீட்டிலேயே எடுக்கப் படுகிறது. ஆனால் சபையில் வைத்து மாப்பிள்ளையால் கொடுக்கப்படும். உண்மையில் அந்தப் புடைவையை மாப்பிள்ளை வீட்டாரே வாங்கிப் பெண்ணுக்குப் பையர் மூலமாக அளித்து இதைக் கட்டிக் கொண்டு வந்து என் மகனைத் திருமணம் செய்து கொண்டு சப்தபதி முடித்து அவன் கடைப்பிடிக்கப் போகும் தர்மத்திற்குக் கடைசி வரை துணையாக இருப்பாயாக! என்று தான் பெண்ணை வேண்டுவார்கள். இதை எல்லாம் ஒரு காலத்தில் எழுதி இருக்கேன். இப்போதும் அதைப் புத்தகமாய்ப் போடும் ஆவல் இருக்கு. நடக்கணும். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் இன்றைய கேள்வி பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது. கேள்வி கேட்டவர்களுக்கும், பதில் தந்தவர்களுக்கும் வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    எங்களிடம் கேட்ட அந்த கணக்கு கேள்விக்கு பதிலை நாங்கள் எப்படிச் சொல்வோம் என நீங்கள் யோசித்த வகையில் 2 ஆவதை சொல்லலாம் என நினைத்தேன்.:) ஆனால் அதற்குள் ஒரு பதில் வந்து கரெக்ட் என்ற பாராட்டையும் பெற்று விட்டது. ஆனாலும் பல விதத்திலும் (வடிவேலு பாணியில் நம்ப மூளைகளை மூலைக்கொன்றாக செலுத்தி அலசி ஆராய்ந்து) வாசகர்கள் கண்டு பிடிக்கலாம்/பிடிப்பார்கள் எனத் தோன்றுகிறது. சகோதரர் நெல்லைத் தமிழரே வந்து கூட புதுமையான விடை தரலாம். எதற்கும் காத்திருக்கிறேன்.:) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. பதினாறு வயதினிலே படத்திற்கு எங்கள் வீட்டிலிருந்து மூன்று பேர், எங்கல் பக்கத்து வீட்டிலிருந்து மூன்று பேர் கிளம்பினோம். எங்கள் அம்மா, "இப்போது விடுமுறைதானே? நாளைக்குப் போகலாம்" என்றார். எங்களுக்கோ அன்றே சென்றாக வேண்டும் என்று ஆசை. எல்லோரும் கிளம்பியாச்சு, எங்கள் அம்மாவிற்கு என்னவோ கோபம், யாராவது ஒருத்தராவது வீட்டில் இருந்துதான் ஆக வேண்டும் என்று கண்டிப்பாக கூறி விட, நான் தியாகம் செய்தேன். அதன் பிறகு அந்தப் படத்தை தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பே கிட்டவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காந்தி படம் பார்க்க மதுரை சினிப்ரியா சென்று அந்தப் படம் பார்க்க கூட்டம் அடித்துக்கொள்ள, தியேட்டர்காரர்கள் சவுக்கால் விளாசியதில் சம்பந்தமில்லாமல் ஓரமாக நின்றுகொண்டிருந்த எனக்கும் ஒரு அடி காலில் விழ, அப்புறம் எங்குமே அந்தப் படத்தையும் பார்க்கவில்லை.  அந்தத் தியேயேட்டருக்கும் அப்புறம் செல்லவில்லை.

      நீக்கு
    2. இப்படி எல்லாம் கூட்டத்தில் அடிச்சுப் பிடிச்சுக் கொண்டு எந்தப் படமும் பார்த்த அனுபவம் இல்லை. எங்க கல்யாண நாள் முதலாம் ஆண்டு நிறைவின் போது ஜிவாஜி நடிச்ச ஏதோ ஒரு படம்/ஜெயலலிதா கதாநாயகினு நினைக்கிறேன். மவுன்ட் ரோடு சாந்தி தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது. அதுக்குப் போகலாம்னு மாட்னிக்குப் போனால் கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பனை. வாங்கிக் கொண்டு போகலாம் என ரங்க்ஸ் சொல்ல நான் படமே வேண்டாம்னு சொல்லக் கடைசியில் பக்கத்தில் இருந்த வேறொரு திரை அரங்கில் ஹிந்திப்படம் ஒன்று பார்த்தோம். நவீன் நிஸ்சல் கதாநாயகர். பின்னர் அந்தப் படம் தமிழிலும் வந்ததுனு நினைக்கிறேன்.

      நீக்கு
    3. பதினாறு வயதினிலே படமெல்லாம் தொலைக்காட்சி தயவில் தான் பார்த்தோம். பாரதிராஜாவின் இன்னொரு படம் ரதி அக்னிஹோத்ரி கதாநாயகி, அப்பா நாதஸ்வர வித்வான் அந்தப் படம் மட்டும் மவுன்ட் ரோடின் ஏதோ ஒரு தியேட்டரில் தம்பி அழைத்துச் சென்றார். ஒரு பொங்கல் சமயம். டிக்கெட்டெல்லாம் முன் பதிவுனு நினைக்கிறேன். அதே போல் வேதம் புதிது படமும் அம்பத்தூரில் பழனியப்பா திரை அரங்கில் படம் வந்த சில நாட்களிலேயே பார்க்க நேர்ந்தது.

      நீக்கு
    4. ம்ஹூம், இல்லைனு நினைக்கிறேன். படம் பெயர் நினைவில் இல்லை. அந்த பாரதிராஜா படம் பெயர் நினைவுக்கு வந்து விட்டது. "புதிய வார்ப்புகள்" படம் பார்த்து முடிந்ததும் இதைப் போய் முன் பதிவு செய்து வந்து பார்க்க வேண்டி இருந்ததா என மனதினுள் நினைத்துக் கொண்டேன். :))))

      நீக்கு
  26. //வன்முறைச் சம்பவங்களைத் திரைப்படங்களில் காட்டுவது சரியல்ல என்பது என் கருத்து! உங்கள் கருத்து என்ன?// வன்முறை சம்பவங்களை திரையில் காட்டாமல் அதில் இருக்கும் வன்முறையை நம்மை உணரச் செய்ய வேண்டும் என்றால் அதற்கு இயகுனர்கு திறமை வேண்டும். மிஸ்டர் & மிஸஸ்.அய்யர் படம் பார்த்திருக்கிறீர்களா? 14,பார்க் அவென்யூ போன்ற படங்களை பார்திருக்கிறீர்களா? முதலாவதில் பேருந்தை நிறுத்தி அதில் இருக்கும் இஸ்லாமிய இளைஞனை ஹிந்து தீவிரவாதிகல் கொலை செய்வார்கள், ஒரு பொட்டு ரத்தம் திரையில் பார்க்க முடியாது. இரண்டாவதில் துடிப்பான இளம் பெண் பத்திரிகையாளர் ஒரு ஹோட்டல் அறையில் காங்க் ரேப் செய்யப்படுவார். ஒருவன் தன் பேண்ட் பெலட்டை உருவுவான், ரூம் பாய் அந்த அறையை திரும்பி பார்த்தபடி நீண்ட காரிடாரில் நடந்து செல்வான், நாராய் கிழிக்கப்பட்ட பெண் அறைக்கு வெளியே தள்ளப்படுவாள். ஒரு அலறல் சத்தம் கூட கிடையாது,ஆனாலும் நம் வயரு கலங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கும்போதே மனசு கலங்குது. இதைப் பார்த்திருந்தால் ஒரு மாதம் வருத்தப்பட்டிருப்பேன்.

      நீக்கு
    2. பா.வெ. நீங்கள் சொன்ன இரு படங்களையும் பார்த்திருக்கேன். மனம் வருந்தி வேதனையில் ஆழ்ந்திருக்கேன். இதை எல்லாமும் சேர்த்துத் தான் நான் வன்முறை என்பது பொழுதுபோக்குக்கான படங்களில் வேண்டாம் என்று கருதுகிறேன்.

      நீக்கு
  27. //பாசமலர்/பாலும் பழமும் போன்ற படங்களைப் பார்த்துவிட்டு அதில் மூழ்கி மனதில் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா?// சமீபத்தில் நான் பார்த்த படம் இல்லை,வெப் சீரீஸ் ஆன தி ஃபேமிலி மேன் பார்த்த பொழுது நாட்டின் பாதுகாப்பிற்காக, மறைமுகமாக நம்முடைய பாதுகாப்பிற்காக எங்கேயோ, யாரோ தங்கள் விருப்பங்களை, உயிரை தியாகம் செய்து கொண்டிருகிறார்கள். அவர்கள் குடும்பம் சிதறும் வாய்ப்பு இருக்கிறது..நமக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்று தோன்றியது. இப்போது என்னுடைய தினசரி பிரார்த்தனையில் அப்படிப்பட்டவர்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நாட்டின் பாதுகாப்பிற்காக, மறைமுகமாக நம்முடைய பாதுகாப்பிற்காக எங்கேயோ, யாரோ தங்கள் விருப்பங்களை, உயிரை தியாகம் செய்து கொண்டிருகிறார்கள்// சுடும் உண்மை.

      நீக்கு
    2. எனக்கு/எங்களுக்கு நேரிடையாகவே ராணுவத்தோடு நெருங்கிய தொடர்பு என்பதால் எங்கள் நண்பர்கள் பலரையும் பல தாக்குதல்களில் இழந்திருக்கோம். அஸாமில் விசாகன் என்னும் கர்னல், ஶ்ரீலங்காவில் பரமேஸ்வரன் எனப் பலர்! ஆகவே எப்போதும் எங்கள் பிரார்த்தனைகளில் இவர்களைப் போன்ற நாட்டுப்பாதுகாப்புக்காகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பவர்களுக்கு இடம் உண்டு.

      நீக்கு
  28. நெல்லைத் தமிழன் கேட்ட கேள்விக்கான பதிலாக கொடுத்திருப்பதில் இரண்டாவது பதில் என்னை நினைவில் வைத்து எழுதியது போல இருக்கிறது! ஹாஹா...

    பதிலளிநீக்கு
  29. அடுத்த வாரத்திற்கான கேள்வி: WWF போன்ற வன்முறை நிகழ்சிகளை ஆண்கள் விரும்பி பார்க்க காரணம் என்ன?

    பதிலளிநீக்கு
  30. இரண்டு நாட்களாக ஓய்வில்லை. எப்போதோ அனுப்பி வைத்திருந்த என் கதையை சென்ற செவ்வாய் கே.வா.கதைப் பகுதியில் வெளியிட்டிருந்தார்கள். இன்று பதிலளிக்க வேண்டிய பின்னூட்டங்களுக்கு பதிலளித்துக் கொண்டு வருகிறேன்.

    அந்தப் பகுதியில் பின்னூட்டமிட்டிருந்த நண்பர்களின் கவனத்திற்காக இது.
    நன்றி,நண்பர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! சில பத்திரிகைகளில் விஜி என்ற பெயரிலும் எழுதியிருக்கிறேன் கல்கண்டிலும், காதல் பத்திரிகையிலும் ஜி.வி. இராமன் என்ற பெயரில்..

      குறும்புக்கார கேஜிஜி!

      நீக்கு
    2. ஹி ஹி கதையில் வந்த கதாசிரியாரும் விஜி தானே!

      நீக்கு
  31. வணக்கம், வாழ்க வளமுடன்
    அனைத்து கேள்விகளும், அதற்கு பதில்களும் அருமை.
    பின்னூட்டங்களுக்கும் படிக்க நன்றாக இருக்கிறது.

    //அடிப்படை வசதிகளோடு கடன் சுமை இல்லாமல் இருப்பது மிடில் கிளாஸ். சற்று ஆடம்பரத்துக்கு வசதியும் நாட்டமும் உடையது அப்பர் மிடில் கிளாஸ்.//

    பிடித்த பதில்.

    பதிலளிநீக்கு
  32. மொத்த ரொட்டிகள் 8
    மொத்த நபர்கள் 3

    LCM of 8 and 3 is 24.
    8 ரொட்டிகளையும் 3 சமபாகமாகப் பிரித்து, 24 பாகங்களையும் மூன்று பேரும் தலா 8 பாகங்களாக சாப்பிடலாம்.

    பணத்தையும் 3 ரொட்டி கொண்டு வந்தவர் 3x3 =9 பாகமாக்கி தானே 8பாகத்தை சாப்பிட்ட காரணத்தால் அவருக்கு 1 தங்க காசு.
    மற்றவருக்கு 7தங்க காசு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சரியான பதில். நெல்லைத்தமிழன் சார் - உங்க பரிசை இவருக்கு அனுப்புங்க!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!