வியாழன், 10 ஜூன், 2021

எதிர் சுவரில் ஏசுபிரான்

 முதல் மாதம் கவனிக்கவில்லை.   இரண்டாவது மாதம் கவனித்ததும் பாஸ் மனதில் சந்தேகமும், கேள்வியும் வந்தது.  மூன்றாவது மாதம் கவலை வந்தது.

மாதம் மாதம் என்றதும் கற்பனையை எங்கோ ஓட விடுபவர்களை பசியில்லா சிங்கம் துரத்தட்டும்!

மாமியாரின் குடும்ப ஓய்வூதியம் பற்றிதான் முதல் பாரா பேசுகிறது.  "சே..   இவ்வளவுதானா?' என்று அடுத்த பகுதிக்கு அல்லது ப்ளாக்குக்கு தாவுபவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் முழுவதும் படித்து விடவும்!

'உயிர்ச்சான்றிதழ்' இந்த வருடம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தது நினைவில் இருந்ததால் வங்கிக்கே செல்வது என்று முடிவெடுத்தார்.  

ஆம்.  முடிவெடுத்தார்.  என்னைக் கேட்கவில்லை.  

என்னைக் கேட்டால் என்ன பதில் வரும் என்று அவருக்கென்ன, உங்களுக்கே தெரியும்.  வரமாட்டேன், அல்லது இதோ அதோ என்று காலம் தாழ்த்துவேன் என்றும் தெரியும்.  இந்த மாதிரி வேலையெல்லாம் அவரை தானாகவே செய்துகொள்ள பழக்கி இருந்தேன்.  (ஹிஹிஹிஹி)  எதையும் ஒத்திப்போடும் நல்ல வழக்கம் அவரிடம் இல்லாதிருந்தது!  எதையும் உடனே உடனே முடிக்கவேண்டும் என்கிற மோசமான வழக்கத்துக்குப் பழகி இருந்தார்.  என்ன செய்வது...   வளர்ப்பு அப்படி...  

இது நடந்தது இப்போதல்ல...  இடைக்கொரோனா காலம்!  


எனவே ஆஸ்தான ஆட்டோவை வைத்துக் கொண்டு வங்கிக்கு கிளம்பிவிட்டார்.  இந்தியாவின் மாநில வங்கி!  அங்கு சென்று விவரம் கேட்டதும் அங்கிருந்த 'ஆப்ப்பீசர்' கணினியை லொட் லொட் லொட் டென்று தட்டிப்பார்த்து கையை விரித்து (மாஸ்க்குக்குள் உதட்டைப் பிதுக்கிஇருக்க வேண்டும் - அநேகமாக) நிரூபணத்துக்கு இலவச இணைப்பாக மண்டையையும் இடம் வலமாக நினைத்தாலே இனிக்கும் ஜெயப்பிரதா மாதிரி ஆட்டினார்.  

இருங்கள் இலக்கியப்பிழை...   சே..  எப்போது பார்த்தாலும் இலக்கிய ஞாபகமாகவே இருக்கிறேன்.  வரவர வியாழன் ரொம்ப ஓவராத்தான் போகுது...  திருத்தம் ; இலக்கணப்பிழை.  நானோ போகவில்லை.பாஸும் அவர் அம்மாவும்தான் போயிருக்கின்றனர்.  "மண்டையை ஆட்டினார்" என்று நேரில் பார்த்தது போல நான் எப்படி சொல்ல முடியும்?  நான் என்ன ஜூவி, ஆவி நிருபரா என்ன, எல்லா இடத்திலும் நானே இருந்து பார்த்தது போல சொல்ல...  எனவே அங்கு அதை 'மண்டையை ஆட்டினாராம்' என்று திருத்தி வாசிக்கவும்.  அப்புறம் பாஸ் என்னிடம் விவரம் சொன்னதிலிருந்து...

"லைவ்" கொடுத்திருக்க மாட்டீங்க..."

"எப்படிங்க...   இப்போதான் நேரில் வரவேண்டாம் என்று சொல்லியிருக்காங்களே..."

"அப்படிதான் சொல்வாங்க..  சிலசமயம் ஆன்லைன்ல கூட செய்ய முடியும்..  எதுக்கும் அங்கே கேட்டுப்பாருங்க..."

பாஸ் எனக்கு ஃபோன் பேசினார். ( நான் சொல்லலை, அவர் எல்லாவற்றையுமே என்னைக் கேட்டு விட்டுதான் செய்வார் என்று?)   நானும் லைவ் சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய தேவையின்மையை எதிரொலித்தேன்..  

"ஆன்லைன்ல செய்யலாமாமே..."

எனக்கு அதைப் பற்றிய அறிவு(ம்) இல்லாதிருந்தது.

"சரி...   வீட்டுக்கு வந்திடு...   நாம விசாரிச்சு அப்புறம் என்ன செய்யலாம்னு பார்க்கலாம்..."

சாதாரணமாக இது மாதிரி சந்தேகம் எல்லாம் என் மாமா விசுவிடம்தான் கேட்பேன்.  அவரும் தெளிவாய் விளக்கி உதவுவார்.  அரசு ஆணை பற்றிய விவரங்களில், அவற்றை எப்படி கையாளவேண்டும் என்பதுபோன்ற விவரங்களில் கில்லாடி.  ஆனால் அவரும் சென்ற நவம்பரில் கொரோனாவில் மறைந்து விட்ட சோகம் மறுபடி என்னை அழுத்தியது.

நீண்ட நேரமாகியும் பாஸைக் காணோம்.  கவலைப்பட்டு ஃபோனியபோது "ஒரு நிமிஷம்...  பத்து நிமிஷம் கழிச்சு பேசறேன்..." என்று துண்டித்து விட்டார்.

ஒரு நிமிஷமா, பத்து நிமிஷமா, சே..  எதையும் தெளிவாய் சொல்லத் தெரியவில்லை இவருக்கு  என்று யோசித்துக் கொண்டே வேறு வேலையில் மூழ்கி விட்டேன்.

முக்கால் மணிநேரம் சென்றது தெரியவில்லை.  மறுபடி பாஸே அழைத்தார். 

"எங்கே இருக்கே?"

பேங்கில்தான்"

"இன்னமுமா?"

"பாஸ்புக்கை வாங்கிக்கொண்டு இன்னொருத்தர் உள்ளே போயிருக்கார்... "

"ஏன் இவ்வளவு எல்லாம் அங்கேயே உட்கார்ந்திருந்தே?"

"இங்கேயே எங்கே உட்கார்ந்திருந்தேன்?  உங்களிடம் பேசினேனா...   இப்போ விட்டா மறுபடி ஆட்டோ எப்போ கிடைக்குமோ, நேரம் எப்போ கிடைக்குமோ...  கிடைத்தாலும் வீட்டிலிருந்து மறுபடி புதுசாக கிளம்பணும்... இந்த விஷயமாக கிளம்பிட்டோம், ஒருதரமா முடிச்சுடுவோம்னு நேரா பென்ஷன் ஆபீஸ் போயிட்டேன்.  அப்போதான் நீங்க ஃபோன்ல கூப்டீங்க....

அங்கே இருந்த வாட்ச்மேன் "நீங்கள்லாம் படிச்சவங்கதானே..  வர்ற செப்டம்பர் வரை லைவ் கொடுக்க வரவேண்டாம்னு தனித்தனியா மெஸேஜ் வந்திருக்கும் இல்லை...  ஊருக்கே தெரியும்ல...அங்க பாருங்க போர்ட்...அப்படீன்னுல்லாம் படபடன்னு பேசி உள்ளேயே போக விடமாட்டேன்னுட்டார்.   'அதையேதான் நானும் கேட்கிறேன்...   லைவ் கொடுக்க வேண்டாம்னு போட்டுட்டு ஏன் என் அம்மாவுக்கு பென்ஷன் போடவில்லைன்னு கேட்கத்தான் வந்திருக்கேன்..  இந்த வயசான காலத்தில இப்படி அலைய விடலாமான்னு கேட்கணும்...  பேங்க்லதான் சொல்லி அனுப்பினாங்க'ன்னு நானும் எகிறவும் உள்ள போகச் சொன்னார் அந்த வாட்ச்மேன்.   உள்ளே போனதும் இதே மாதிரி அவர்களும் பேச, நானும் வாட்ச்மேனிடம் பேசியதுபோலவே  பேச,  'இல்லை..  பென்ஷன்லாம் யாருக்கும் நிறுத்தவில்லை...  இதோ இந்த அம்மாவுக்கும் நிறுத்தவில்லை' ன்னு செக் பண்ணிட்டு சொன்னாங்க...   அங்கேயிருந்து அப்புறம்தான் கிளம்பினோம்.   வர்ற வழியில்தானே பேங்க்...  மறுபடி உள்ளே வந்து கேட்டிருக்கேன்..."

அப்புறம் நடந்ததை பாஸ் அவர் வாயாலேயே சொன்னபடி..  (டைப் பண்ண வசதியாக) 

"வாங்கம்மா...    அம்மா வந்திருக்காங்களா?  அவங்களை எல்லாம் ஏன் இந்த நேரத்தில் அழைச்சுக்கிட்டு வர்றீங்க?"   இந்த முறை ஒரு புதியவர் பாஸிடம் கேட்டபடியே அவர் கம்பியூட்டரைத் தட்டி செக் செய்தார்.

"பென்ஷன் போடலைன்னு உங்க கிட்ட யார் சொன்னது..  உங்களை அங்க போகச் சொல்லி யார் சொன்னது?"

அவரும் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாலும் ஏனோ காட்டிக்கொடுக்க தோன்றவில்லை.  அந்தக் கேள்வியைத் தவிர்த்து "அப்போ பென்ஷன் வந்துடுச்சா?" என்றுகேட்க,  மூன்று மாதக் கணக்கையும் பாஸ்புக்கில் வரவு வைத்துத் தந்தவர், அங்கேயே இருந்த ஏ டி எம்மில் பணம் எடுக்க கூடவே வந்து உதவி இருக்கிறார். 

இப்படியாக அந்தப் பிரச்னை ஓய்ந்தது.  சில நாட்களுக்குமுன் இந்த வருடமும் ஓய்வூதியதாரர்கள் 'லைவ் சர்டிபிகேட்' கொடுக்க வேண்டிய தேவை இலை என்று அரசாணை வெளியிடப்பட்டது.  அதைப் பார்த்ததும் இந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

இடையில் ஆஸ்தான ஆட்டோக்காரரும் நீண்ட நேரம் இவர்களைக் காணோம் என்றதும் ஏதாவது உதவி தேவையா என்று உள்ளே வந்து விட்டார்.  

கூடவே "நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கற  ஏ டி எம் தண்டம்மா...   இங்கே எடுத்தால் ஏகப்பட்ட எரர் மெஸேஜ் வரும்.  பணம் எடுக்கணும்ங்கும்போது சொல்லுங்க..  வண்டி கொண்டு வர்றேன்..  அங்கே மெயின் ரோட்ல ஏ டி எம் மெஷின் சரியா இருக்கும்" என்றும் சொல்லி இருக்கிறார்.

இப்போது விக்ரமாதித்தனிடம் வேதாளம் கேட்டது...

ஓய்வூதியம் வரவில்லை என்றதும் தாமதம் இல்லாமல் உடனே செயலில் இறங்கிய மகள், துணைக்கு அழைத்தும் வராமல் சாக்கு சொல்லிய அவள் கணவன், வங்கியில் சரியாய்ப் பார்க்காமல் இது பற்றிய விவரங்களும் தெரியாமல் ஓய்வூதியம்  க்ரெடிட் ஆகவில்லை என்று சொல்லி, ஓய்வூதிய அலுவலகத்துக்குப் போகச் சொன்ன பொறுப்பற்ற வங்கிப்பணியாளர்,  ஃபோன் செய்து கேட்டும் சரியாய் பதில் சொல்லத் தெரியாத கணவன், சளைக்காமல் உடனே ஓய்வூதிய அலுவலகத்துக்கும் சென்று விவரம் கேட்டுப் பெற்று, மறுபடி வங்கிக்கும் வந்து விஷயங்களை நேர் செய்துகொண்ட மகள், அதே சமயம் தவறாய் வழிநடத்திய பணியாளர் அருகேயே இருந்தும் காட்டிக் கொடுக்காமலும் இருந்த அவர் செயல், அசாதாரணமான நேரம் இவர்களைக் காணோம் என்றதும் ஏதாவது பிரச்னையா என்று உள்ளே உதவிக்கு வந்த ஆட்டோக்காரர்...  பிரச்னையை மொத்தமாக ஒரே நாளில் சில மணி நேரங்களில் முடித்த பெண்...   இவர்களை பற்றி என்ன சொல்வாய்?"

விக்ரமாதித்தன் யோசிக்கத் தொடங்கினான்.

===========================================================================================================

தவிர்க்க முடியாத காரணங்களால் ஜீவி ஸார் எழுதும் 'எஸ் ஏ பி - குமுதம்' நான்காம் பகுதி இப்போது இடம்பெறவில்லை.  ஜீவி ஸார் மனைவியின் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவருக்கு உதவியாக இருக்க வேண்டிய சூழல்.  எனவே பின்னர் அவர் அனுப்பும்போது தொடரும்.

=======================================================================================================


எனக்கு உயிரை விட மானம் பெரிது! - தினமலரிலிருந்து 


லட்சுமி ராமகிருஷ்ணன்: 



"சினிமாவுக்கு நான் வந்ததே, ரொம்ப காலம் கடந்து தான். அதாவது, நடுத்தர வயதில் தான் சினிமாவுக்குள் நுழைந்தேன். அதற்கு முன், 22 ஆண்டுகள் வெளிநாட்டில், ஒரு நல்ல பணியில் இருந்தேன். இந்தியாவுக்கு திரும்பியதும், சினிமா வாய்ப்பு கிடைத்ததும், அதை ஒரு மகிழ்வான பணியாகத் தான் செய்தேன்.பிறரைப் போல, வருமானத்திற்காகவோ, வாழ்வாதாரத்திற்காகவோ நான் சினிமாவுக்குள் வரவில்லை. அதனால் தான், எனக்கு பிடித்தால், சினிமாவில் படங்கள் செய்வேன், நடிப்பேன்.
மரியாதை இருந்தால்தான், அதையும் நான் செய்வேன். எனக்கு பிடிக்கவில்லை என்றால், எவ்வளவு பெரிய வாய்ப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். என் அப்பா, அம்மாவுக்கு என் ஒழுக்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாகவே இப்போதும் விளங்கி வருகிறேன். என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒழுக்கத்தை என் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறேன். அதையே என் மூன்று பெண் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்து, உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.மேலும், நான் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை விட, என் கணவர் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அவர் நம்ப மாட்டார்.


என்னைப்பற்றி அவருக்கும் ரொம்ப நல்லா தெரியும்.சினிமாவில் பல சவால்கள் உண்டு. குறிப் பாக சொல்ல வேண்டும் என்றால், நான்கு நல்ல படங்களை இயக்கியுள்ளேன். எனினும், என்னைப் பற்றி கூறும் போது, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணா என்று தான் சொல்வரே தவிர, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணா என சொல்ல மாட்டார்கள். அதற்கு காரணம், நான் பெண் என்பது தான். உயிரை விட, மானத்தை பெரிதாக கருதும் என்னைப் போன்ற பல பெண்கள் சினிமா உலகில் உள்ளனர். அதே நேரம், எல்லா பெண்களும் என்னைப் போன்றவர்கள் என்றும் சொல்ல மாட்டேன். சிலர் தவறாக இருக்கலாம். அதுவும், அவர்களாக தவறாக ஆவதில்லை; ஆக்கப்படுகின்றனர். 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி, இந்த அளவுக்கு பரபரப்பாக பேசப்படும் என நான் நினைக்கவே இல்லை. அந்த நிகழ்ச்சி செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.


அந்த நிகழ்ச்சியால் தங்கள் வாழ்க்கை நிலையை மாற்றிக் கொண்ட பலர், இப்போதும் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களில் பலர் என்னை தொடர்பு கொள்ள மறந்தாலும், அவர்கள் எப்படி இருக்கின்றனர் என்பதை அறிய விரும்பி, தொடர்பு கொண்டு பேசி வருகிறேன்.


நானோ, என் குடும்பத்தினரோ ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இல்லை. ஒரு சில சம்பவங்களால் தவறாக அவ்வாறு பேசப்பட்டேன். என் எண்ணம் என்ன என்பதை என் படங்கள் பேசும்!"


================================================================================


இவர்களை எப்படி நினைவில் வைத்திருக்கிறீர்கள்?  இவர்கள் பெயர் சென்னதும் நினைவுக்கு வருவது?

அசோகர்

அக்பர் 

ஒட்டக்கூத்தர்

கம்பர்

ராபர்ட் க்ளைவ்

மவுண்ட் பேட்டன்.



===============================================================================================================


சஹானா இணைய இதழ் 2010 லேயே இருந்ததுன்னு சொன்னா நம்பணும் !





=================================================================================================

2016 ​ல் வைகையில்​ ஒரு பயங்கரம்...


==================================================================================================

ஆனால்​ தாகூர் டால்ஸ்டாய் என்றெல்லாம் குழம்பக்கூடாது!

ஒருவழியாய் ஜீசஸ் தேடி எடுத்துட்டேன் நெல்லை...   இதன் மூக்கில் உள்ள மூன்று புள்ளைகளை கொஞ்ச எல்லாம் உற்றுப்பார்த்து விட்டு எதிரே சற்று இருளான சுவரைப் பார்க்கவும்!  கீதா அக்கா, பானு அக்கா ஆகியோருக்கெல்லாம் தெரியாது!



203 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    அமாவாசை தினம்... மத்தியானமாத்தான் கீதா சாம்பசிவம் மேடம் வருவாங்கன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லை.   வாங்க..   ஆம் அமாவாசை.  வல்லிம்மா தளம் சென்றால் பூண்டு, வெங்காயம் எல்லாம் போட்ட குழம்பு புடம் போட்டு டெம்ப்ட் பண்ணி இருக்காங்க!!!

      நீக்கு
    2. எங்களுக்கும் அமாவாசை. நாளைக்கு. இந்தக் குழம்பு சனிக்கிழமை பெரிய பேரனுக்காகச் செய்தது:)
      சின்னவன் சாப்பிட மாட்டான்.

      நீக்கு
    3. ஆமாம் அம்மா..   சென்ற வாரம் செய்தது என்று பதிவிலேயே சொல்லி இருக்கிறீர்கள்.  நான் தவறாகச் சொல்லவில்லை.

      நீக்கு
    4. //குழம்பு புடம் போட்டு டெம்ப்ட் பண்ணி இருக்காங்க!!! //


      படம்!!

      நீக்கு
  2. //மூக்கில் உள்ள மூன்று புள்ளிகளை//- அது சரி.. மூக்கு எங்கே இருக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குண்ட்ஸா மூக்கு உள்ள இடம்னு வச்சுக்குங்களேன்!

      நீக்கு
    2. நெல்லை...   இயேசு தெரிந்தாரா என்று சொல்லவே இல்லையே...

      நீக்கு
    3. ஒரே வெளிச்சமாக இருக்கிறது. இரவு ஆகட்டும். பார்த்துவிட்டுச் சொல்கிறேன்

      நீக்கு
    4. கிர்ர்ர்ர்ர்.. அவர் என்ன நைட் டியூட்டியா பார்க்கிறார்? ஒரு பேச்சுக்கு இருட்டு என்று சொன்னால்... பகலிலும் தெரிவார் பாருங்கள்.

      நீக்கு
  3. அசோகர்-மரம் நட்டார், அக்பர்-பீர்பால், ஒட்டக்கூத்தர்-ரெட்டைத் தாழ்ப்பாள், கம்பர்-இராமாயணம், ராபர்ட் கிளைவ்-ஊழல் அரசாங்க அதுகாரி, மவுண்ட் பேட்டன்-மனைவியை விட்டுக்கொடுத்தவர். ... இப்படித்தான் சட்னு தோணுது... ஒருவேளை இதைவைத்து ஜோசியம் சொல்லப் போறீங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை, படிக்கும் காலத்தில் நாம் படித்த பாசிட்டிவ் விஷயங்கள் நினைவுக்கு வரும் வயது வேறு, அப்புறம் படித்த அவர்கள் பற்றிய உண்மையான விவரம் வேறு இல்லையா?  ஒட்டக்கூத்தர் என்றால் அவருக்கும் புகழேந்திப் புலவருக்கு நடக்கும் சண்டை!

      நீக்கு
  4. பஜ்ஜி மகாத்மியம் புரியவில்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீரங்கியில் போடும் குண்டு போன்ற வஸ்துவை பஜ்ஜி என்று விற்றார்கள்.

      நீக்கு
    2. பஜ்ஜி படம் அழகாக உள்ளது. இப்போது சில இடங்களில் முழு மிளகாயை உபயோகிக்காமல் பாதியா கட் பண்ணின மிளகாயை உபயோகித்து, நமக்கு அல்வா கொடுத்திடறாங்க.

      இங்க ஏகப்பட்ட பஜ்ஜி மிளகாய்களைப் பார்த்தேன். கொஞ்சம் வாங்கிக்கொண்டு வந்தேன். வீணாகியிருக்கும். பஜ்ஜி இன்னும் வரலை. உள்ளே எப்படி ஸ்டஃப் பண்ணறது, என்னத்மை வைப்பது என்பதில் குழப்பம்.

      நீக்கு
    3. பொட்டுக்கடலை மாவில் மி.பொ., உப்பு, பெருங்காயப் பொடி, தேவையானால் கரம் மசாலாப் பொடி, ஜீரகம், ஓமம் சேர்த்து எண்ணெயில் கலந்து பஜ்ஜி மிளகாயைக் கீறிக் கொண்டு இரண்டாகப் பிளந்து உள்ளே உள்ள விதைகளை நினைவாக எடுத்துட்டு இவற்றால் அதை நிரப்பிப் பின்னர் சிறிது நேரத்தில் பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜியாகப் போடணும். விதைகளை நீக்கிய பின்னர் எலுமிச்சைச்சாறு+உப்பு+ம.பொடியில் மிளகாயைக் கலந்து சிறிது நேரம் வைத்தால் மிளகாய் பஜ்ஜி போடும்போது உப்பு/காரம் சேர்ந்து சுவை அதிகரிக்கும்.

      நீக்கு
    4. நான் எப்போவுமே தாளித்தால் கூடப் பச்சை மிளகாய்/வற்றல் மிளகாய் ஆகியவற்றின் விதைகளை முழுவதும் நீக்கிவிடுவேன். பின்னரே சமைக்கப் பயன்படுத்துவேன்.

      நீக்கு
    5. விளையாட்டுப் பொருளாக கையில் வைத்துக்கொள்ளச் சிறந்ததது அந்த பஜ்ஜி!

      நீக்கு
    6. விதைகளை நீக்கி விடணும்னு புரியுது. வட இந்தியர்கள் கடையில் (பஹ்ரைனில்) உள்ளே புளிப்புச் சுவை இருக்கும்.

      நீக்கு
    7. நெல்லை, அம்சூர் பவுடர் சேர்த்திருப்பாங்க வட மாநிலங்களில்! அதான் புளிப்புச் சுவை!

      நீக்கு
    8. பஜ்ஜி மிளகாயை லேசாக கீறி அதனுள் தக்காளி கெட்சப் ஊற்றி பின் பஜ்ஜியாக போட்டாலும் சுவை அதிகம்தான்.

      நீக்கு
  5. ஜீவி சாரின் மனைவி விரைவில் குணமடையப் பிரார்த்தனைகள்

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கி எப்போதும் போல் இருக்கப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க கீதா அக்கா..  வணக்கம்.

      நீக்கு
  7. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கருத்துப் போகவில்லை. :(

    பதிலளிநீக்கு
  8. ஹை! போயிருக்கே! என்னைத் தேடியதுக்கு நன்றி நெ.த. பஜ்ஜி பார்க்க நன்றாய்த் தான் இருக்கு! சாப்பிட நன்றாய் இல்லை. இந்தத் தொட்டுக்க அவங்க கொடுக்கும் வஸ்துவை நான் வேண்டாம்னு சொல்லிடுவேன். நம்ம புத்தி சாப்பாட்டிலே தானே இருக்கும். அதான் முதல் கருத்துரை பஜ்ஜி பற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஜ்ஜி பார்க்க நன்றாய் இருந்ததால்தான் நம்பி வாங்கி ஏமாந்தேன்!  

      நீக்கு
    2. பாக்க நல்லாத்தான் இருக்கு பஜ்ஜி..பஜ்ஜியின் ட்ரேட் சீக்ரெட்!

      நீக்கு
  9. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். சுகம் நிறை வாழ்வு தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  10. நம்ம ரங்க்ஸ் ஆன்லைனிலேயே சான்றிதழ் கொடுத்து வருகிறார். 2013-14 ஆம் ஆண்டுகளில் இருந்தே கொடுக்கிறார். இந்த வருஷம் அவங்களே தொலைபேசியில் அழைத்துப் பேசிச் சான்றிதழுக்கு உறுதி செய்து கொண்டார்கள். இப்போ ஸ்டேட் வங்கியின் ஒரு அலுவலகக் கடிதம் இதைப் பற்றி (அதாவது வீட்டில் இருந்தே லைஃப் சர்டிஃபிகேட் கொடுப்பது) பற்றி ஏதோ சொல்லி இருக்கு. நான் முழுதும் படிக்கலை. ஆனால் இது வசதியானது என ரங்க்ஸ் சொன்னார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இரண்டு வருடங்களில் அது தேவையில்லை என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.  மேலும் வங்கியிலேயே லைவ் தருவது மிகக் கம்மி.

      நீக்கு
    2. ம்ம்ம்ம்ம்??????? என் அப்பாவை நான் அழைத்துச் சென்றிருக்கேனே ஶ்ரீராம்? இப்போதில்லை தொண்ணூறுகளில் இருந்து 2002 ஆம் ஆண்டு வரை! ஆட்டோவில் அழைத்துச் சென்று ஆட்டோவிலேயே உட்கார்த்தி வைத்துவிட்டு உள்ளே போய்த் தெரிந்த அலுவலரிடம் சொன்னால் அவரும் மானேஜரும் வெளியே வந்து பார்த்து அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிட்டுப் போய்ப் பின்னர் சான்றிதழ்/அல்லது வேறே என்னமோ? நினைவில் இல்லை. பென்ஷன் பணம் வங்கியில் சேர்க்கப்பட்டிருப்பதற்குப் பாஸ் புக்கில் என்ட்ரி போட்டுத் தருவார்கள். பென்ஷன் அவர்களுக்கு அனுப்பப்பட்டு விடும். ஆனால் லைஃப் செர்டிஃபிகேட் வந்ததும் தான் அக்கவுன்டில் கிரெடிட் ஆகும். இல்லைனாலும் அந்த மாதப் பென்ஷன் அக்கவுன்டில் சேர்ந்துவிடும். அதன் பின்னர் தான் என்ன ஏது எனக் கேட்பார்கள் என்று சொல்லிக் கேள்வி. எப்படியோ உங்கள் பாஸின் விடாமுயற்சியால் எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கிறதே! என்னதான் தொலைபேசியில் பேசினாலும் இப்படியான வேலைகளையும் அவங்கதானே முன்னெடுத்துச் செய்ய வேண்டி இருக்கு! இஃகி,இஃகி,இஃகி! நாராயணா! :)))))

      நீக்கு
    3. நடைமுறைகளில் மாற்றமில்லை கீதா அக்கா.   என் அப்பா, மாமாக்கள், என் மாமியார் எல்லோரும் சென்று தந்து வருவதுதான்.  இந்தக் கொரோனா காலத்தில் வேண்டாம் என்று சொல்லி இருந்தார்கள்.  ஆனாலும் அந்த வாங்கி அதிகாரி குழப்பின்னர்.  அதுதான் சொன்னேன்.

      நீக்கு
  11. திரு ஜீவி அவர்களின் மனைவியின் உடல்நிலை பூரண குணமடையப் பிரார்த்தனைகள். ரொம்ப நாட்களாகவே அவர் இணையத்திற்கு வரலையேனு நினைச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் அனுமதி பெறாமலேயே செய்தியை வெளியிட்டிருக்கிறேன்.  ஜீவி ஸார் மன்னிக்க...

      நீக்கு
    2. கீதாமா, செவ்வாய் கதைக்கு வந்தாரே!

      நீக்கு
    3. பார்த்தேன் வல்லி. அதற்கு முன்னர் பதினைந்து நாட்களாக வரலை.

      நீக்கு
  12. மூன்று புள்ளைகள் ! வழி ஜீஸஸ் தெரிந்தார்,!!அமேசிங்க். ஜீவி சார் மனைவியின் நலத்துக்குப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குத் தெரிந்தாரா?   பாவம் கீதா அக்காவுக்குத் தெரிவது கடினமே!

      நீக்கு
    2. ஹிஹிஹி, எனக்கு நம்ம பேயார் சிரிப்பது போல் தெரிஞ்சது. பார்த்து ரொம்ப நாளாச்சா, குசலம் விசாரிச்சுட்டு வந்தேன். இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    3. கீதா அக்கா...   இது அநியாயம்!

      நீக்கு
    4. அட? ரொம்ப மாதங்கள் கழிச்சு வருபவரை வரவேற்க வேண்டாமா? நல்ல கதை!

      நீக்கு
    5. அட.. ஆமாம்.. பேயாரை மறந்து விட்டோமே...

      நீக்கு
    6. நான் அந்த ரிஸ்கே எடுக்கவில்லை. எப்படியும் தெரியப் போவதில்லை.

      நீக்கு
  13. அந்த மூக்குப்புள்ளிகளைப் பார்த்துட்டு இருட்டா இருக்கிற இடத்தைப் பார்க்கணும்னு சொல்றீங்க! இருட்டுக்கு எங்கே போறது? எனக்கு ஜே என்னும் ஆங்கில எழுத்து மட்டும் தெரியுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...    சொன்னேன்ல...!  இருட்டா இருக்கணும்னு அவசியமில்லை.  சாதாரணமாகவும் பார்க்கலாம்.

      நீக்கு
  14. // அசோகர்// என் நினைவுக்கு வருவது : "அசோகரு உங்க மகருங்களா ?" காதலிக்க நேரமில்லை பாலையா !

    பதிலளிநீக்கு
  15. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதினதை எங்கேயோ படிச்சிருக்கேன். இப்போவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வராங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கோ, ஏதோ  பத்திரிகையில் வருவதை தினமலர் 'சொல்கிறார்கள்' பகுதியில் எடுத்துக் போடுவார்கள்.  எந்தப் பத்திரிகையிலிருந்து எடுத்தார்கள் என்று சொல்லவும் மாட்டார்கள்!

      நீக்கு
  16. பாஸின் பெருமையே பெருமை. நல்ல பெண்ணைப் பெற்ற மாமியாருக்கு வாழ்த்துகள். இதே முனைப்பில் எல்லா நல்ல காரியங்களும் நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..  நன்றி அம்மா.  ஒரு சௌகர்யம் பாஸ் பிளாக் எல்லாம் படிக்க மாட்டார்!  அவருக்கு ஃபோன் பேசவே நேரமிருக்காது!!!

      நீக்கு
  17. // மவுண்ட் பேட்டன்// எட்வினா, நேரு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நினைவில் வந்தது என்றாலும் எல்லோரும் அதைத் தானே சொல்வாங்கனு நான் குறிப்பிடலை. மவுன்ட் பேட்டனிடம் எனக்கு மரியாதையே கிடையாது. (ஹிஹிஹி, அவருக்கு என்ன வந்தது என்கிறீர்களா?) அதுவும் சரிதான்.

      நீக்கு
    2. ஒருவரும் அவர்தான் சுதந்திர ஆணையில் கையெழுத்திட்டார் என்று சொலல்வில்லை பாருங்கள். 

      நீக்கு
    3. ஆமாம், பெரிய கையெழுத்து! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அவர் இந்தியாவைப் பிரிக்கிறதுன்னா கையெழுத்துப் போட மாட்டேன்னு இல்லையோ சொல்லி இருக்கணும். அதனால் அதெல்லாம் இங்கே செல்லுபடியே ஆகாது.

      நீக்கு
  18. உண்மையில் அசோகச் சக்கரவர்த்தி காமக்கொடூரன் என்பதோடு மக்களைக் கொன்றவன். உடன் பிறந்தவனைக் கொன்றவன். :(
    அக்பர் என்றால் பீர்பல் தான் நினைவில் வந்தாலும் அவரும் சுமார் ரகம் தான்.
    ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்தாழ்ப்பாள் எனச் சோழன் பட்டமஹிஷி போட்டாலும் ராமாயணத்தின் உத்தரகாண்டத்தை எழுதியவர் அவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
    கம்பர் என்றால் ராமாயணம் மட்டும் நினைவுக்கு வராது. கூடவே அம்பிகாபதி/அமராவதி காதல்/ஒட்டக்கூத்தரின் பகை உணர்வு/கம்பருக்குக் கிடைக்கப்பெற்ற சரஸ்வதி கடாக்ஷம், சடையப்ப வள்ளல் போன்றவர்கள் நினைவில் வருகிறார்கள்.
    க்ளைவ் கடைந்தெடுத்த அயோக்கியர்! :(
    மவுன்ட்பேட்டன் ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. இந்தியாவைப் பிரிக்க ஒரு காரணமாய் இருந்தவர். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்...  அதேதான்.   உடனே நினைவுக்கு வருவது, அப்புறம் யோசிக்க யோசிக்க நினைவுக்கு வருவது...   எல்லாமே சுவாரஸ்யம்தான் இல்லையா?

      நீக்கு
  19. // ஒட்டக்கூத்தர் // ரெட்டைத் தாழ்ப்பாள்.

    பதிலளிநீக்கு
  20. அசோகர் மரம் நட்டு புத்த சந்நியாசி ஆனார்
    ராபர்ட் க்ளைவ் முதல் கவர்னர். மௌண்ட்பாட்டன் கடைசி வைஸ்ராய்.
    பம்பர் வீட்டுக் கட்தடுத்றியும கவி பாடும்.

    பதிலளிநீக்கு
  21. கம்பர் என்ற பெயருக்கு காரணம். வேளுக்குடி. சொல்வார். ஒட்டக்கூத்தர் ஓவையார் தானே ‘எட்டேகால் லட்சணம் எமனேறும் வாகனமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேளுக்குடி என்ன சொல்வார் என்றும் சொல்லி இருக்கலாம்.

      நீக்கு
  22. லக்ஷ்மி ராமகிருஷ்ணா நல்ல நடிகை. யுத்தம் செய் படம் நினைவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் நடிகை என்பதைவிட, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியினால்தான் அதிகம் பிரபலம் அடைந்தார்!  சின்னக்கவுண்டர் தீர்ப்பு போல சட்சட்டென தீர்ப்பு வழங்குவார்!

      நீக்கு
    2. உண்மை சொன்னவர் சிலர். பிரபலமானவர் இவர் !

      நீக்கு
    3. ஹா..  ஹா..  ஹா...   ஆமாம்!  அவர்கள் சொன்னதெல்லாம் உண்மைதான் என்றும் நம்புவோம்!

      நீக்கு
  23. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  24. ..பசியில்லா சிங்கம் துரத்தட்டும்!

    அனாவசியமாக ஒரு அடி எடுத்துவைக்காது அந்த மிருகம். அதாவது மிருகங்களின் ராஜா! பசியில்லாத சிங்கம் படுத்துக்கிடக்கும். நேரடியாகப் பார்த்திருக்கிறேன் -ஜூவில் அல்ல. நேரடியாக ஆஃப்ரிக்காவில்.. குறிப்பாகக் கென்யாவில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏகாந்தன் ஸார்...   நம்ம வாசகர்களை சிங்கத்திடம் மாட்டி விடுவேனா நான்?  அதனால்தான் அப்படிச் சொல்லி இருக்கிறேன்.  சுஜாதாவின் பிரபல வாசகம் "அவர்களை பசித்த புலி தின்னட்டும்   அதை உல்ட்டா செய்திருக்கிறேன்!

      நீக்கு
    2. சுஜாதாவின் பிரபல வாசகம் "அவர்களை பசித்த புலி தின்னட்டும் அதை உல்ட்டா செய்திருக்கிறேன்!//
      அட! சுஜாதா இங்கே வருவதில்லையா!

      நீக்கு
    3. //சுஜாதாவின் பிரபல வாசகம் "அவர்களை பசித்த புலி தின்னட்டும் அதை உல்ட்டா செய்திருக்கிறேன்!// இதை நான் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், நீங்களே சொல்லி விட்டீர்கள்.

      நீக்கு
    4. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு..   உள்ளங்கை நெல்லிக்கனி!!!

      நீக்கு
  25. அசோகன் என்றாலே ஹா... ஹா.... ஹா... என்ற சிரிப்புதான் நினைவுக்கு வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...   அருமை ஜி...  அசோகனின் இன்னொரு வாசகம்..  "நீங்க இதுவும் சொல்லுவீங்க...   இதுக்கு மேலயும் சொல்லுவீங்க..."

      :-))

      நீக்கு
  26. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  27. மாதம் மாதம் என்றதும் கற்பனையை எங்கோ ஓட விடுபவர்களை//

    ஹாஹாஹாஹாஹா சிரித்து முடியலை...

    நல்லகாலம் பசியில்லா சிங்கம்!!! ஹா ஹா ஹா. சிங்கம் பொதுவாகவே பசியில்லைனா அடிக்காது.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. எதையும் உடனே உடனே முடிக்கவேண்டும் என்கிற மோசமான வழக்கத்துக்குப் பழகி இருந்தார். என்ன செய்வது... வளர்ப்பு அப்படி... //

    ஆஹா! எனக்கும் இந்தக் குணம் உண்டு...ப்ளாக் எழுதுவதைத் தவிர ஹிஹிஹிஹி. என் அப்பாவின் பயிற்சி. அப்பாவும் சரி அம்மாவும் சரி எதையும் ஒத்திப் போடமாட்டாங்க. அப்பா எதையும் அலைந்து திரிந்து அதை முடிக்கும் வரையில் ஓயமாட்டார். எனக்கும் இது உண்டு ஆனால் தீர யோசித்துச் செய்வது வழக்கம் எல்லாம் விசாரித்து வைத்துக் கொண்டு...அப்படிப் பழக்கப்பட்ட, செய்த எனக்கு இங்கு செல்லுபடியாகாததால் இப்போது அப்படியும் இப்படியுமாய் ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களெல்லாமே அவசரக்காரர்கள் யுவர் ஹானர்..

      நீக்கு
    2. ஸ்ரீராம் வாதத்தை ஏற்றுக்கொண்டுவிட்டேன்.. அதுபற்றி கீதா ரங்கன் விவாதம் செய்யவேண்டாம். நான் (நீதிபதி) ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டேன். ஹாஹா

      நீக்கு
    3. நான் நெல்லையின் இந்தக் கமெண்ட்டைப் படிக்கவில்லை!!

      நீக்கு
  29. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  30. பெட்டியில்....ஹையோ சிரித்து முடியலை....

    ஸ்ரீராம் பதிவு எழுதும் போது செம மூட் போல!!! நகைச்சுவையோடு எழுதியிருக்கீங்க!

    இருங்கள் இலக்கியப்பிழை... சே.. எப்போது பார்த்தாலும் இலக்கிய ஞாபகமாகவே இருக்கிறேன். வரவர வியாழன் ரொம்ப ஓவராத்தான் போகுது...//

    நானும் முதலில் என்னது இது நேர்ல பாத்தாப்லனு யோசித்து வரவும் (நாங்க பிழை எங்கன்னு பார்க்கறதுக்குன்னே!!! ஹிஹிஹிஹி) அடுத்து செமையா சிரிச்சுட்டேன்... அதுவும் அடுத்த வரிகள் வாசித்து...

    கீதா

    பதிலளிநீக்கு
  31. //எதையும் உடனே உடனே முடிக்கவேண்டும் என்கிற மோசமான வழக்கத்துக்குப் பழகி இருந்தார். என்ன செய்வது... வளர்ப்பு அப்படி... //

    சார் என்னிடம் சொல்வது எதையும் உடனே உடனே முடிக்கவேண்டும் என்று நினைக்காதே! என்றுதான்.
    அவர்களும் உங்களை போல் ஒத்தி போடவே பார்ப்பார்கள்.

    //பிரச்னையை மொத்தமாக ஒரே நாளில் சில மணி நேரங்களில் முடித்த பெண்... இவர்களை பற்றி என்ன சொல்வாய்?"//

    அவர்களை பாராட்டவேண்டும்.

    பதிலளிநீக்கு
  32. ஜீவி சாரின் மனைவி நலம்பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. ( நான் சொல்லலை, அவர் எல்லாவற்றையுமே என்னைக் கேட்டு விட்டுதான் செய்வார் என்று?) //

    ஹாஹாஹாஹா ஆமா ஆமா..அதான் கேள்வி கேட்டாலே ஒருத்தருக்கு ஆகாதே!!ஹிஹிஹிஹி

    பாஸ் சூப்பர் பாருங்க எப்படி இறங்கியதும் காரியத்தை முடிச்சுட்டு வந்திருக்காங்க!!!

    அரசு அலுவகங்கள் இப்படி அலைய விடுவது ரொம்ப மோசம். இன்னும் ஆன்லைனில் ஆதாரை பான் கார்டோடு இணைக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன். இத்தனைக்கும் மெசேஜ் வந்துட்டே இருக்கு இந்த சுட்டிக்குப் போய் இணைங்க.....எஸ் எம் எஸ் இந்த நம்பருக்குக் கொடுங்கன்னு. ஆனால் எச் எம் எஸ் கொடுத்தாலும் எந்தவித ரிப்ளையும் இல்லை. ஆன்லைன் சுட்டி வேலை செய்யவே இல்லை. அடுத்து என்ன செய்ய என்று விசாரித்துக் கொண்டிருக்கிறேன். ஆதார் இந்த அட்ரெஸ் இன்னும் மாறி வரலை அது வேறு...எனக்குத் தனியான ப்ரூஃப் அதாவதி இந்த முகவரியில்தான் இருக்கிறேன் என்ற ஆதாரம் வேண்டுமாம். எனக்கென்று தனியாக அப்படி எதுவும் இல்லை. முன்பு அப்படி இல்லை கணவர் ஆதார் முகவரி ப்ரூஃப் போதும் ஆனால் இப்போது அப்படி இல்லை.....என்னவோ போங்க. இப்ப அதுக்கும் முயற்சி...

    கீதா

    பதிலளிநீக்கு
  34. //மூக்கில் உள்ள மூன்று புள்ளைகளை கொஞ்ச எல்லாம் உற்றுப்பார்த்து விட்டு எதிரே சற்று இருளான சுவரைப் பார்க்கவும்! //

    நீங்கள் சொன்னது போல் பார்த்தேன்,ஏசுநாதர் தெரிந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாகூர் தெரியவில்லையா?!!!

      நீக்கு
    2. தாடி வைத்த முகம் தெரிந்தது நல்ல கறுப்பு முடி. இளம் வயது தாகூரா?

      நீக்கு
    3. அது ஜீசஸ் என்றே அறியப்படுவது.  ஆனால் நம் கண்ணுக்கு எப்படி எல்லாம் தெரிகிறது என்று சொல்ல வந்தேன்.  அவ்வளவுதான் அக்கா.

      நீக்கு
  35. "பென்ஷன் போடலைன்னு உங்க கிட்ட யார் சொன்னது.. உங்களை அங்க போகச் சொல்லி யார் சொன்னது?"

    அவரும் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாலும் ஏனோ காட்டிக்கொடுக்க தோன்றவில்லை. அந்தக் கேள்வியைத் தவிர்த்து "அப்போ பென்ஷன் வந்துடுச்சா?" என்றுகேட்க, மூன்று மாதக் கணக்கையும் பாஸ்புக்கில் வரவு வைத்துத் தந்தவர், அங்கேயே இருந்த ஏ டி எம்மில் பணம் எடுக்க கூடவே வந்து உதவி இருக்கிறார். //

    நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்
    எப்படியோ வேலை முடிந்ததே..

    கீதா

    பதிலளிநீக்கு
  36. வேதாளத்தின் கேள்வியை மிகவும் ரசித்தேன்!!1
    விக்கிரமாதித்தனின் பதிலையும் சொல்லியிருக்கலாமே!!ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் இப்பகுதி நல்ல கற்பனை அழகாக இயல்பாக எழுத வருது ஸ்ரீராம் உங்களுக்கு..

      கீதா

      நீக்கு
    2. //விக்கிரமாதித்தனின் பதிலையும் சொல்லியிருக்கலாமே//

      நீங்களெல்லாம்தான் விக்ரமாதித்தன்கள்!

      நீக்கு
    3. அதற்கீடு செய்ய வியாழக்கிழமையும் அதுவுமா விக்கிரமாதித்தியன் கவிதை ஒன்றையாவது போட்டு,எபிக்கு அவரை அறிமுகப்படுத்தியிருக்கலாம்.

      நீக்கு
    4. எப்படியும் ஏதோ ஒரு குறை வந்து விடுகிறது,  இல்லை!!

      நீக்கு
  37. ஜீவி அண்ணாவின் மனைவி சீக்கிரம் குணமடைந்திட பிரார்த்தனைகள் அதான் அவரைக் காணவில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  38. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சொல்லியிருப்பது நல்லாருக்கு. ஒரு பெண் சினிமாத்துறையில் மிளிர, ஒழுக்கமும், குடும்பத்து நம்பிக்கையும் மிக மிக முக்கியம்..அந்த நம்பிக்கை அவருக்குக் கிடைக்கப்பெற்றது அருள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அவரைப்பற்றியும் மோசமாகத்தான் பேசுவார்கள்.

      நீக்கு
  39. அசோகர் என்றாலே மரம், பௌத்தம் என்பது போய் இப்போது காலச்சக்கரா நரசிம்மாவின் கதையில் சொல்லப்பட்டதுதான் நினைவுகக்கு வருது!!!

    ஒட்டக்கூத்தர் - “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ”

    அக்பர் - பீர்பால், தீன் இலாஹி

    கம்பர் நாலே ராமாயணம்

    ராபர்ட் கிளைவ் -கிழக்கிந்தியக் கம்பெனி அவர் பற்றிய ஒரு செய்தியை வாசிக்க நேர்ந்த போது செய்த அட்டூழியங்களுக்குத் தண்டனையோ என்று தோன்றியது...50 வயது ஆகும் முன்னே தூக்கமின்மையால் அவதிப்பட்டு மனநோய் போல வந்து தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து இறந்தார்.என்பது...

    மவுன்ட்பேட்டன் -சுதந்திர இந்தியா இந்தியா ஒப்படைக்கப்பட்டது..ப்ரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராய்...நம் வரலாறே நினைவுக்கு வரும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராபர்ட் கிளைவின் ஊழலும், நிம்மதியற்ற பிற்கால வாழ்க்கையும்தான் எனக்கும் நினைவுக்கு வந்தது. சாண்டில்யன் கதை ஒன்றில் இவனை கௌரவமான கேரக்டராகக் காட்டி இருப்பார்.

      நீக்கு
  40. ஓ! சஹானா இணைய இதழ் 2010 லிருந்தா அட!!! 11 வருடமாக!! வாழ்த்துகள்! இதழுக்கும் ஆசிரியருக்கும். வாசிப்பதுண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
  41. ரயிலில் வரும் தின்பண்டங்கள், சாப்பாடு பற்றி சொல்லாதீங்க ஸ்‌ரீராம்..

    அதைச் சாப்பிடறவங்க கண்டிப்பா மனசுக்குள்ளேயாவது வீட்டம்மாவின் சமையலைப் பாராட்டாமல் இருக்க மாட்டாங்க..ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளைகளும் கணவனும்னு விட்டுப்போச்சு கருத்துல!!!

      கீதா

      நீக்கு
    2. இப்போல்லாம் ரயிலில் வரும் சாப்பாடு அவ்வளவு மோசமா இருக்கு. எனக்குத் தெரிந்து எண்பதுகளின் கடைசி வரையிலும் ஒரு சில ரயில் நிலையங்கள் குறிப்பிட்ட உணவுக்குப் பெயர் போனது. உதாரணமாகக் கடம்பூர் போளி, மாயவரம் வடை, செங்கல்பட்டு காஃபி, மணப்பாறை முறுக்கு இப்படிப் பல ஊர்கள் இருக்கின்றன. சென்னையிலிருந்து மும்பை செல்லும்போது ஒரு காலத்தில் மந்த்ராலயம் ரோடில் காலை நிறுத்தினாங்கன்னா (மும்பை மெயிலில் போனால் மட்டும் காலை வேளையில் வரும்) காஃபி, டிஃபன் எல்லாம் நல்ல சுவையானதை வாங்கிக்கலாம். அதே போல் கடப்பாவில் சாப்பாடு, கூடவே கடப்பைக்கற்களும் வந்து விற்பாங்க! அதெல்லாம் ஒரு பொற்காலம். நவஜீவனில் வந்தால் பலார்ஷாவின் திராக்ஷை, கொய்யா, சப்போட்டாப் பழ வகைகள், புள்ளி கேலா என பழங்களின் வாசனை ஊரைத் தூக்கும். கொட்டையில்லா பச்சை திராக்ஷை மட்டுமில்லாமல் காய்ந்த திராக்ஷை (கிஸ்மிஸ்) கூட வாங்கலாம். முன்னெல்லாம் அதிகம் போனால் கிலோ 60 ரூ 70 ரூபாய்க்குள் காய்ந்த திராக்ஷை கிடைக்கும்.

      நீக்கு
    3. வரலாறு முக்கியம்! திருப்பதிக்கு முந்தின ஸடேஷனில் மசால் வடை, புக்கோட்டை ஸடேஷனில் வடை, முறுக்கு..

      நீக்கு
    4. திருப்பதிக்கு ஓரிருமுறைகளே ரயிலில் போயிருக்கேன். அரக்கோணத்தில் மசால் தோசை/சாம்பார்/சட்னி இல்லாமல் கொண்டு வருவாங்க. அதனால் நாங்க திருவள்ளூரில் வண்டி நிற்கும்போதே கீழே இறங்கி வடை/சாம்பார்/சட்னினு வாங்கி வைச்சுப்போம். மு.ஜா. மு.அ. இரண்டு பேருமே! தொட்டுக்க வகையா வேணும். மத்தியானம் சாப்பிடக் கீழத்திருப்பதியில் ரயில் நிலையம் அருகே உள்ள பீம விலாஸ். :))))

      நீக்கு
    5. திருப்பதி குறைவான முறைகளே போயிருக்கிறேன். எனவே தெரியாது. அது சரி, திருச்சி, ஸ்ரீரங்கத்தில்?

      நீக்கு
    6. நான் சுமார் பத்து வயசில் இருந்து திருப்பதி போய் வந்து கொண்டு இருந்திருக்கேன். :)))) இங்கே திருச்சி, ஶ்ரீரங்கம் எனில் எதுவுமே நன்றாக இல்லை இப்போது என்பதே உண்மை. ஆதிக்குடி ஓட்டல் புராதனமானது என்பார்கள். மலைக்கோட்டையிலிருந்து கொஞ்சம் தள்ளி உள்ளது. நாங்க ஒரே முறை போனதில் விட்டால் போதும்னு வந்துட்டோம். அதே போல் வைகோ வீட்டுக்கு எதிரே உள்ள ராமவிலாஸும்! மயூரா ஓட்டலும் மதுரா பவனும்! ஶ்ரீரங்கத்தில் எந்த ஓட்டலும் சாப்பிட லாயக்கில்லை. திருவானைக்காப் பார்த்தசாரதி ஓட்டல் பற்றி யூ ட்யூபெல்லாம் வந்திருக்கு. ஆனால் இங்கே எங்க குடியிருப்பில் எங்கள் தளத்தில் ஒருத்தர் நெய் ரோஸ்ட் வாங்கி இருக்கார். ஒரே சொத சொத என்றார். என்னைப் பொறுத்தவரை "கீதா பவன்" தான் இருப்பதிலேயே பெஸ்ட்! இஃகி,இஃகி,இஃகி! நம்ம ரங்க்ஸிடம் சார்ஜ் பண்ணலாமானு யோசிச்சிங்!

      நீக்கு
  42. ஸ்ரீராம் இருட்டில்லாத வெளிச்சமான சுவற்றிலும் ஏன் இந்தக் கருத்தை அடிக்கும் போது கணினித் திரையிலும் கூடத் தெரிந்தாரே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நல்லாவூ தெரிவார். அப்படியும் தெரியலைன்னாதான் அந்த டிப்ஸ்.

      நீக்கு
  43. ஆனால் நகரும் போது ஏசு முகம் மாறி ஒருவரின் முக வடிவமும் வந்தது....

    ஹையோ என்னமா டை அடிச்சிருக்காங்க!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அடையாளங்கள் மாறும்.

      நீக்கு
    2. நாம் நினைப்ப்து போல்தெரியும்ஆங்கிலத்தில்ஒரு சொல்வழக்கு வழக்கு உண்டுthe clock clicketh as the fool thinketh

      நீக்கு
  44. பானுக்கா, கீதாக்கா எல்லாம் 3 புள்ளிகளை கொஞ்ச நேரம் உற்றுப் பார்க்காம டக்குனு பார்த்துட்டு டக்குனு சுவர் பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்!!!!!! அதான் தெரியலைன்னு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    2. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

      நீக்கு
  45. "லைவ்" சம்பவத்தை தரமா முடித்து விட்டார்கள்...

    ஏசுபிரான் தெரிகிறார்...!

    பதிலளிநீக்கு
  46. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  47. வலைத்தள உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கமும் நன்றியும்..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் நலமாயிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.  ஆனாலும் செய்ய வேண்டிய சோதனைகளை செய்து விடுதலே நலம்.

      நீக்கு
  48. அனைவரது அன்பின் வலிமையால் நலம் பெற்றிருக்கின்றேன்...

    நன்னெஞ்சங்களின் திசை வணங்கிக் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      இப்போதுதான் கருத்துரைகளை படித்து வருகிறேன். உங்களை காணவில்லையே என நினைத்தேன். நீங்கள் நன்றாக நலம் பெற்றிருப்பதாக கூறியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. முருகன் உங்களுக்கு (நம் அனைவருக்கும்) எப்போதும் பக்கபலமாக இருப்பான். கவலை வேண்டாம். நானும் அனைத்திற்கும் முருகா சரணம் என அவனைத்தான் அன்போடு வேண்டியபடி உள்ளேன்.. 🙏. நன்றி

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
  49. ஜீவி அண்ணா அவர்களது துணைவியார் விரைவில் நலம் பெறுவதற்கு வேண்டிக் கொள்வோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தம்பி. இப்பொழுது நலம் பெற்று வீட்டு ஓய்வில் இருக்கிறார்கள். அனைவர்க்கும் நன்றி.

      நீக்கு
  50. வணக்கம் சகோதரரே

    இன்று அருமையான கதம்பம். எப்போதும் போல் முதல் பகுதி தங்கள் எழுத்தாற்றலால் ரொம்பவே கலகலப்பாக உள்ளது. நிறைய நகைச்சுவையுடன் வரிகளை ரசனையாக கோர்த்து எழுதியுள்ளீர்கள். நினைத்ததை ஆற்றலுடன் திறம்பட முடிக்கும் உங்கள் பாஸுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். எங்கள் வீட்டிலும் என்னிடம் இந்த தைரியமான ஆற்றலை எதிர்பார்த்தார்கள்/ பார்க்கிறார்கள். அது மட்டும் இதுவரை (தனியாக) நடக்க மாட்டேன் என்கிறது.:))

    இதில் விக்கிரமாதித்தன் யார்.. நாங்களா? என கேட்க நினைத்தேன். ஆமாம்.. நாங்கள்தான் என அதற்கும் பதில் தந்து விட்டீர்கள்.

    இன்றைய தலைப்பும் நன்றாக உள்ளது. மற்ற பகுதிகளும் வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. எல்லோருடைய கருத்துக்களும் சுவாரஸ்யமாக, அருமையாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். கருத்துக்களும், தங்கள் பதில் கருத்துக்களும் மனம் விட்டு கவலை மறந்து சிரிக்க வைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  51. ஸ்ரீராம் எப்படி அலுவலக வேலை பிசியிலும், ப்ளாக் வேலைகளையும் பார்த்துக் கொண்டு, எல்லோருடைய பதிவுகளுக்கும் பின்னூட்டமும் போடுகிறார் என்று ஆச்சர்யமாக இருக்கும்.இப்போதுதானே தெரிகிறது எல்லாப் புகழும் பாஸுக்கே என்பது:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிர்ர்ர்ர்...   என் அலுவலக வேலையை பாஸா செய்கிறார்?!!!

      நீக்கு
  52. அசோகர் - மரங்கள். தடாலடியாய் ஒன் ஃஃபைன் மார்னிங்க் அல்லது ஈவினிங்க் யுத்தம் வேண்டாம் என்று முடிவெடுத்ததுதான் மௌரிய சாம்ராஜ்யம் வீழ்வதற்கு காரணமானது.

    அக்பர் - சாதுர்யம். முடிந்தால் யுத்தம் செய்து அல்லது எதிரி அரசனின் மகளை திருமணம் செய்து கொண்டு நாட்டை பிடிக்கலாம். அக்பர் த க்ரேட் என்னும் பெயரில் உள்ள தவறு என்ன? என்று ஒரு முறை போர்ன்விடா க்விஸ் கான்டெஸ்டில் கேட்டார்கள். அக்பர் என்றாலே க்ரேட் என்றுதான் பொருள், அக்பர் த கிரேட் என்றால் கிரேட் த கிரேட் என்று வரும்.

    ஒட்டக்கூத்தர் - ராமயணதின் உத்திர காண்டம், கூத்தனூர்(ஓட்டக்கூத்தருக்கு சோழ மன்னன் அளித்த ஊர், அங்கிருக்கும் சரஸ்வதி கோவில் ஒட்டக்கூத்தரால் கட்டப்பட்டது. திறமையான இரண்டு பேர்கள் ஒரே சமயத்தில் வாழும் பொழுது சரித்திரத்தில் ஒருவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் இன்னொருவருக்கு கிடைக்காமல் போவது சோகம்தான். போதும் போதாததற்கு நம் சினிமா அவரை வில்லனாக மாற்றி விட்டது.

    கம்பர் - ராமாயணம். அவர் அதை அரங்கேற்றம் செய்த ஸ்ரீரெங்கம்,மேட்டழகிய சிங்கர்.

    ராபர்ட் க்ளைவ் - ஆற்காட்டு யுத்தம், திருச்சி கிளைவ்ஸ் ஹாஸ்டல்.

    மவுண்ட் பேட்டன் - இந்தியாவின் கடைசி வைஸ்ராய். இவர் விடுமுறைக்காக சென்ற படகின் அடிபாகத்தில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு நடுக்கடலில் வெடிக்க ஜல சமாதியானார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸிட்டிவான உங்கள் பார்வை எனக்கு மிகவும் பிடித்துப் போனது பா.வெ.

      நீக்கு
    2. ரொம்ப சந்தோஷம் ஜீ.வி.சார். மிக்க நன்றி.

      நீக்கு
    3. அருமை.  ஜலசமாதி விஷயம் எனக்குப் புதிது.

      நீக்கு
    4. ஸ்ரீராம், அதுமட்டுமா? வேறு எதெது புதுசு என்று சொல்லுங்கள்.
      இல்லை, நான் பட்டியலிடுகிறேன்.

      நீக்கு
    5. பட்டியலிடுங்கள் ஜீவி ஸார்.  

      நீக்கு
    6. முரடொலி மாறன் வசனத்தில் சிவாஜி நடித்த 'சாம்ராட் அசோகன்' ஓரங்க நாடகம் வரும் என திரைப்படம் எது என்றால் பா.வெ. டக்கென்று சொல்லி விடுவார்கள்

      நீக்கு
    7. திருத்தம் : முரசொலி

      நீக்கு
    8. ஸ்ரீராம். நீங்கள் சாம்ராட் அசோகன் கேள்விக்கு பதில் சொல்லுவீங்களாம். நான் பட்டியல் இடுகிற வேலையைச் செய்வேனாம். சரியா?..

      நீக்கு
    9. அது அன்னையின் ஆணை திரைப் படத்தில்..

      நீக்கு
    10. ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாவீரன் சிவாஜியாக..

      நீக்கு
    11. அன்னையின் ஆணை பதில் தான் சரி.

      நீக்கு
    12. இதற்கெல்லாம் முன்னாடியே அண்ணா எழுதிய 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' நாடகத்தில் நடித்தார். அதனால் தான் அவருக்கு சிவாஜி என்ற பட்டப் பெயரே.

      அண்னாவின் ஆக்கத்தில் நாடகத்தின் பெயரே இன்றைய தலைமுறையினர்
      புருவம் உயர்த்தக் கூடியது.

      அல்லது அண்ணா கூடவா என்று முகஞ்சுளிக்க வைப்பது.

      நீக்கு
    13. சரியாக கவனிக்கவில்லை நீங்கள்! அசோகனாக அன்னையின் ஆணை படத்தில், மராட்டிய வீரன் சிவாஜியாக ராமன் எத்தனை ராமனடி படத்தில், ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டாக ராஜபார்ட் ரங்கதுரையில், ஒதெல்லோவாக ரத்தத்திலகத்தில்..

      நீக்கு
    14. பட்டியல் ரெடி:

      1. நான் இத்தனை காலம் ஒன் ஃபைன் நான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஹி..ஹி..

      2. ஒட்டக்கூத்தர் சமாச்சாரத்தை விவரித்த அழகு. (தக்கயாகப்பரணியை மறந்து போனாலும்)

      3. அறியாத அக்பரின் சாதுர்யம்.

      4. மேட்டழகிய சிங்கர்

      5. கட்டக்க்டைசியாக ஜலசமாதி.

      நீக்கு
    15. திருத்தம்: ஒன் ஃபைன் நூன் Noon.

      நீக்கு
    16. முரசொலி மாறன். வசனத்தில் --

      அது தாம் கேட்ட கேள்வியில் முக்கியம் ஸ்ரீராம்.

      நீக்கு
  53. ஜீவி சாரின் மனைவி விரைவில் குணமடையப் பிரார்த்தனைகள்

    அசோகர் என்றால் சிவாஜி நாடகம் நினைவுக்கு வருகிறது
    ராபர்ட் கிளைவ் அவரை இ Impeachment செய்தபோது சொன்ன வார்த்தை "என் கண் முன்னே அவ்வளவு பொன்னும் பணமும் கொண்டு வைத்த போது என் மனத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை "

    பதிலளிநீக்கு
  54. லக்சுமி ராமகிரிஷ்ணன் நல்ல நடிகை மட்டுமல்ல, திறமையான இயக்குனரும் கூட. இவர் இயக்கத்தில் அம்மணி, என்று ஒரு படமும், 2015ல் சென்னையில் வெள்ளம் வந்த பொழுது டிஃபென்ஸ் காலனியில் ஒரு வயதான தம்பதியர் பூட்டிய கதவை திறக்க முடியாமல் இறந்து போனதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தையும் தொலைகாட்சியில் பார்த்திருக்கிறேன். இப்பொழுது கலைஞர் தொலைகாட்சியில் 'நேர் கொண்ட பார்வை' என்னும் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

    பதிலளிநீக்கு
  55. ஜீ வி ஐயா அவர்களின் துணைவியார் விரைவில் நலம் பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  56. அபயா அருணா
    கரந்தையார்

    -- மிக்க நன்றி,நண்பர்களே..

    பதிலளிநீக்கு
  57. பதிவின் பகுதிகள் அனைத்தும் நன்று.

    பென்சன் - இன்னமும் பல வங்கிகளில், பென்ஷன் அலுவலகங்களில் சரியான பதில் சொல்வதற்கு தயாரான ஊழியர்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்! அவர்கள் வேலையைச் செய்வதற்கு அப்படி ஒரு சுணக்கம். எப்படியாவது தட்டிக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே பலர் இருக்கிறார்கள் என்பது வேதனை. Public Dealing கடினமான வேலை என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம் என்றாலும், அப்படியான வேலையில் இருக்கும்போது அவரது பணியே அது தான் என்பதையும், அதற்காகத் தான் சம்பளம் கிடைக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது நல்லது! நானும் பல சமயம் Public Dealing Seat-இல் இருந்திருக்கிறேன் - முடிந்த வரை பலருக்கு உதவியிருக்கிறேன் என்பதால் இதனை இங்கே பதிவு செய்தேன்.

    ஜீ ஐயா அவர்களின் துணைவியார் விரைவில் உடல் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பொதுச்சேவையில் பொறுமையும் அர்ப்பணிப்பும் அவசியம்.  ஆனால் காண்பது அரிது.

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  58. அட....டா..ஜீசஸ் தெரிந்தார்.

    ஜீவி அவர்களின் மனைவி விரைவில் நலமாக வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  59. நடிகர் திலகத்தின் ரோஜாவின் ராஜா எனும் திரைப்படத்திலும் சாம்ராட் அசோகன் நாடகம் இடம் பெற்றிருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?..அந்த
      முரசொலி மாறன் சாம்ராட் அசோகனில்,அன்பு எனற மூன்றெழுத்து என்பது மாதிரி, மூன்றெழுத்துகளில் கோர்க்கப்பட்ட நீண்ட வசனம் வரும்.

      நீக்கு
  60. வணக்கம் ஜீவி சகோதரரே

    தங்கள் மனைவி உடல் நலம் தேறி என்றும் நலமுடன் வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!