சனி, 5 ஜூன், 2021

ஆம்புலன்ஸ் இல்லாட்டா  ஆட்டோ...

 அருப்புக்கோட்டைநன்கு படித்து நல்லதொரு பணியில் சேர்ந்து கை நிறைய சம்பாதித்து திருமணம் செய்து 'செட்டில்' ஆவது இன்றைய இளைஞர்களின் கனவு. இதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுவதில் பெரும்பாலான இளைஞர்கள் உள்ளனர்.

இவர்களை போல் நன்கு படித்து நல்லதொரு வேலை கிடைத்து வெளி நாட்டில் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு பெற்ற 23 வயதான ஒரு கிராமத்து இளைஞர் விவசாயம் மீதான நாட்டத்தால் வேலையை விட்டு விவசாயம் செய்து வருகிறார் அருப்புக்கோட்டை அருகே சந்தையூரை சேர்ந்த கற்குவேல்.


======================================================================================================================
திருப்பூரில் மருத்துவ தேவைக்காகவும், தன்னார்வலர்களாக பணியாற்றவும், சுகாதாரப் பணியிலும் ஈடுபட்டுள்ள பலர் ரோட்டில் காணப்படுகின்றனர்.இது போல் பல்வேறு காரணங்களுக்காக வெளியே வரும் பலரும் தாகத்துக்கு குடிநீர், களைப்பு நீங்க டீ என எதுவும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.



இது போன்றவர்களுக்கு உதவும் வகையில், திருப்பூர் பிராசஸ் சர்வர் வீதியை சேர்ந்த கலாமணி, 27 அவரது தம்பி மோகன், 24 ஆகியோர் தங்கள் சேவையை துவங்கினர்.பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர்கள் இருவரும் தற்போது ஊரடங்கு காரணமாக வேலையின்றி உள்ளனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் எண்ணத்தை செயல்படுத்தும் வகையில், தங்கள் வீட்டிலேயே டீ தயாரித்து, இலவசமாக வினியோகித்து வருகின்றனர்.  இருவரும் கூறுகையில், ''இந்த கொரோனா காலத்தில் பலரும் பல விதங்களில் தங்களால் இயன்ற உதவியை செய்கின்றனர். தினக் கூலி வேலை செய்து வந்தோம். தற்போது வருமானம் இல்லை.இருப்பினும் எங்களால் இயன்ற இந்த சிறிய சேவையைத் துவங்கினோம். பலருக்கும் உதவும் வகையில் இந்த டீ வழங்கினோம். எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. முடிந்த வரை தொடர திட்டமிட்டுள்ளோம்,'' என்றனர்.
===================================================================================================
இங்குள்ள காத்னே என்ற கிராமம், கொரோனா இல்லாத கிராமமாக உருவாகி உள்ளது. 1,500 பேர் வசிக்கும் இந்த கிராமத்தின் தலைவரான ருத்துராஜ் தேஷ்முக் எடுத்த நடவடிக்கைகளே, இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 21 வயதான இவர், மாநிலத்தின், மிகக் குறைந்த வயதான கிராமத் தலைவர். இதுகுறித்து ருத்துராஜ் தேஷ்முக் கூறியதாவது:எங்கள் கிராமத்தில் ஏப்ரலில் கொரோனாவால் இரண்டு பேர் உயிரிழந்தனர். அதனால் பீதியடைந்த கிராம மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி விளை நிலங்களில் தங்க சென்றனர்.
இதையடுத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். நானும், என் குழுவும் சேர்ந்து, ஐந்து அம்ச திட்டத்தை வகுத்தோம்......
======================================================================================================================
கொரோனா ஊரடங்கில், வாழ்வாதாரத்தை இழந்து தவிப்போருக்கு, தமிழக சிறப்பு காவல் ஆயுதப்படை போலீசார், உணவு மற்றும் அடிப்படை தேவைக்கான பொருட்களை வழங்கி வருகின்றனர்.
தமிழக சிறப்பு காவல் ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி உத்தரவின்படி, அப்பிரிவு போலீசார், கொரோனா கால நிவாரண உதவிக்காக, www.letsfightcorona.com என்ற, இணையதளத்தை துவக்கி உள்ளனர். இதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர்....
==================================================================================================
சக மனிதன் வயிறு பசித்திருக்கும் போது தான் சாப்பிடுவதை அவமானமாகக் கருதிய முகமது ரபி தனது வருமானம், சேமிப்பு என்று எல்லாவற்றையும் எடுத்து வடமாநில தொழிலாளர்களின் சாப்பாட்டிற்கு செலவிட்டார்.  தனது பகுதிகளில் இருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு சாப்பாடு போட்டவர் பலரின் வேண்டுகோள் காரணமாக கோவை முழுவதும் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மற்றும் தெருவோர மக்கள் என பலருக்கு சாப்பாடு வழங்கினார்.  நன்கொடை வாங்குவதில்லை தனது சொந்த பணத்தில் இருந்து மட்டுமே செலவு செய்வது என்பதில் உறுதியாக இருந்த முகமது ரபி ஒரு கட்டத்தில் கையில் பணம் இல்லாமல் தவித்தார்
அந்த நேரம் அவரது மனைவி ஆயிஷா தன்னிடம் இருந்த நுாற்று ஏழு பவுன் நகையை கொஞ்சமும் தயக்கமின்றி கொடுத்து,‛ இதை விற்று வரும் பணத்தில் அன்னதானம் செய்யுங்கள்' என்று சொல்லி விட்டார்.  இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்து இப்போது கோவையை தொற்றாளர்கள் அதிகம் கொண்ட நகரமாக்கியிருக்கிறது.  இந்தக் கொரோனா தந்த வித்தியாசமான அனுபவம் என்னவென்றால் ரயில்கள் ஒடுவதால் பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு போய்விட்டனர், ஆனால் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்களும் மருத்துவ மனை நோயாளிகளும் அதிகரித்துவிட்டனர்.  இவர்களுக்கு முதல் மருந்தே சத்தான சாப்பாடுதான்.சாப்பாடு என்ற உடனேயே பலருக்கு நினைவிற்கு வந்த பெயர் முகமது ரபிதான்.  தனக்கு தற்போது தொழில் சரியில்லை எப்படி நம்மால் சாப்பாடு தரமுடியும் என்று தயக்கத்துடன் முகமது ரபி தயக்கத்துடன் மீண்டும் போய் நின்ற இடம் அவரது மனைவி ஆயிஷாவிடம்தான்.  அவரோ அதே சிரித்த முகத்துடன் இதைச் செய்ய இறைவன் உங்களை தேர்ந்து எடுத்துள்ளான், நன்றி சொல்லுங்கள் தானே எல்லாம் நடக்கும் என்று நம்பிகை வார்த்தை சொன்னவர் நிலப் பத்திரங்களை விற்று அன்னதானம் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்......
==================================================================================================================
கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்ல, ஆம்புலன்ஸ் வாகனங்களின்றி கஷ்டப்படுவதை அறிந்த குடகு மடிகேரியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் பிரசாந்த் குமார்,  தனது ஆட்டோவில் பாதிக்கப்பட்டோரை இலவசமாக அழைத்து செல்கிறார்.  தனது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த கொரோனா நோயாளிகள் படும் கஷ்டத்தை பார்த்தார்.அதிகாரிகள் உதவியுடன், கொரோனா நோயாளிகளை அழைத்து செல்வதற்கான அடையாள அட்டையை பெற்றார்.இதையடுத்து நோயாளிகளை தனது ஆட்டோவிலேயே இலவசமாக அழைத்து சென்று வருகிறார்.
==================================================================================================================

நன்றி பானு அக்கா...  அரசியல்வாதிகள் கொரோனா நோயாளிகளை சென்று சந்தித்து விசாரிப்பது பெருஞ்செயலாக சித்தரிக்கப்படும் நேரம் இது.  இந்நேரத்தில் இவர்கள் சேவை அளப்பரியது.  யாரும் இதை எல்லாம் பாராட்டவும் மாட்டார்கள்.





41 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    நல்ல செய்திகள் போடும் நாளில் அட்டென்டன்ஸ் எடுத்தால் இன்னும் யாரும் வரலையே

    பதிலளிநீக்கு
  2. உதவி என,று வரும்போது, அதில் ஒப்பீட்டுக்கு இடம் இல்லை. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

    இங்க நான் காய் வாங்கப்போகும் தெருவுல் டக் என பெரிய வேன் நின்றது. பெரிய அண்டாவிலிருந்து தட்டுகளில் உணவை இட்டு (காலை நேரம். ஏதோ கலவை சாதம்) வழங்க ஆரம்பித்தார்கள். டக் என்று கியூ நிற்க ஆரம்பித்தது. இரு வருடங்களுக்குமுன் காஞ்சீபுர யாத்திரையில் கோவில் திருவிழா என, மண்டபத்துக்குச் சற்று தொலைவில் வேறில் லட்டு, உணவு பாக்கெட்டுகள் வழங்கினார்கள். நடக்கும் இடங்களில் சில லட்டுகள், சாதம் சிதறிக்கிடந்தது.

    எனக்கு எப்போதும் வரும் சந்தேகம்தான். உணவு, என்பது தேவையானவர்களுக்கா இல்லை யார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்வதா? (அரசு தரும் இலவசங்களை வகை தொகை இல்லாமல் எல்லோரும் பெற்றுக்கொள்வது போல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  இலவசம் என்று எது கொடுத்தாலும் முடிந்தவர்கள், முடியாதவர்கள் என்று எல்லோரும் வரிசை கட்டி நின்று விடுகின்றனர்!

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்து, பிரார்த்தனை. அனைவர் வாழ்விலும் இந்தப் பெருந்தொற்றைப் பற்றிய பேச்சு மறைந்து நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. சென்ற முறையை விட/சென்ற வருடம் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை விட/இந்த வருடத்து ஊரடங்கு பலருக்கும் பிரச்னையாக இருப்பதைப் பார்க்கவும்/கேட்கவும் நேரிடுகிறது. கடைகள் இல்லாததாலும், தெருவோர வியாபாரிகள் விற்பனை செய்ய முடியாததாலும் மாவு மில்கள்/காஃபிப் பொடிக் கடைகள் இயங்காததாலும் பலருக்கும் பிரச்னைகள்! வரப்போகும் வாரத்தில் இருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எனச் சொல்லப்படுகிறது. அதனால் பிரச்னைகள் ஏற்படாமல் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொண்டால் தான் முற்றிலும் விடுபட முடியும். என்ன நடக்கப் போகிறது என்பதை அந்தக் கடவுளே அறிவார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அடுத்த வாரம் முற்றிலும் திறந்து விடப் போவதாயும் தகவல் வருகிறது.   என்ன ஆகுமோ..

      நீக்கு
    2. நல்லவேளையாகக் காஃபிப் பொடி தீரப் போகிறதே என நினைத்தேன். எங்களுக்குக் கொடுப்பவர் பாவம் அவருக்கே காஃபிப் பொடி இல்லாமல் பத்து நாட்களாய்க் கஷ்டப்படுவதாய்ச் சொன்னார். இனிமேல் பிரச்னை இருக்காது.

      நீக்கு
  5. எல்லாச் செய்திகளும் கொரோனா காலச் செய்திகளே. பானுமதி கொடுத்திருப்பது அறியாத ஒன்று. நல்ல செய்திகளுக்கு நன்றி. அனைவரின் சேவைகளும் பாராட்டத்தக்கவையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  வேறு செய்திகள் எதுவும் கண்ணில் படவில்லை!

      நீக்கு
  6. விளம்பரத்துக்காகவே சில அரசியல்வாதிகள் உதவும் நேரத்தில் சத்தமில்லாமல் பலரும் உதவுவது மகிழ்ச்சியான விடயமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஜி.  பார்த்து விட்டு வந்து விடாமல் தினமும் அவர்கள் தேவையை நிறைவேற்றுகிறார்கள்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. உதவும் உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    அனைத்தும் நல்ல செய்திகள்.
    நல்லவர்கள், கருணை உள்ளவர்கள் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம். எல்லாமே சிறப்பான செய்திகள்தான் என்றாலும், ஆளில்லாத ஊரில் விவசாயம் செய்யும் இளைஞர் கற்குவேலும், தன்னுடைய கிராமத்தை கொரோனா இல்லாத கிராமமாக மாற்றிய இளம் கிராமத் தலைவரும் மனதை கவர்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  10. முகக்கவசத்தின் முக்கியத்துவம் போலவே கையுறைகளும். சகல மட்டத்திலும் உணரப்படாமலேயே இருக்கிறது. அடுத்த முறை தொலைக்காட்சி காட்சியில் யாராவது எதையாவது எவருக்காவது கொடுத்தால், இந்த குறிப்பு உங்கள் நினைவுக்கு வரும்.

    பதிலளிநீக்கு
  11. எங்கள் ஊரிலும் யாரையும் வற்புறுத்தாமல் பணம் சேர்த்து உதவும் குழுக்கள் உண்டு... சிலர் தினமும் சாப்பாடு தருவதும் உண்டு... நல்ல பல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  12. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள். தொற்று நீங்கி மக்கள் நலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    உதவிகள் பல புரிந்திடும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும்.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  15. பதிவு முழுதும் மனித நேயச் செய்திகள்.. மனிதம் செழிக்கட்டும்..
    மாநிலம் தழைக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  16. அனைத்துச் செய்திகளும் நல்ல செய்திகள்.

    கற்குவேல், தேஷ்முக், ஆட்டோ ஓட்டுநர் பிரசாந்த்குமார், ரஃபி, வாவ்!அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  17. இங்கு எங்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் உள்ளவர் தினமும் எங்கள் ஏரியாவில் இருக்கும் ஏழைகள், எங்கள் தெருவில் இருக்கும் திருநங்கைகள் இவர்களுக்குத் தினமும் உணவு அலுமினியம் ஃபாயிலில் அல்லது பார்சலாக கொடுக்கிறார்.

    கோயம்புத்தூரில் இருக்கும் என் தம்பி மகள் (இங்கு ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத கல்லூரியில் மருத்துவம் பயில்பவள். இப்போது தொற்றின் காரணமாக வீட்டில்) அங்கு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெரும் இடத்தில் தன்னார்வலாராகச் சேவை செய்து வருகிறார். நோயாளிகளுக்கு பிபி, ஆக்சிஜன், சர்க்கரை சோதிப்பதிலிருந்து, மூச்சுப் பயிற்சி, யோகா இவையும் சொல்லிக் கொடுக்கிறாள். அவள் தந்தை ( என் தம்பி) ஸ்ரீ ஸ்ரீ யின் ஆர்ட் ஆஃப் லிவிங்க் அட்வான்ஸ்ட் கோர்ஸ் செய்தவன். வகுப்பு எடுக்கிறான். மற்றும் மத்திய அரசின் யோகா கற்பிக்கும் சான்றிதழ் வாங்கியிருக்கிறான். அவனும் கொரோனா வார்ட் சென்று யோகா, மூச்சுப் பயிற்சி சொல்லிக் கொடுத்து அவர்களைச் செய்ய வைக்கிறான். சமீபத்தில் எங்கள் உறவில் தொற்று ஏற்பட்ட 6 கொரொனா நோயாளிகளுடன் அவன் கூடவே இருந்து ஆஸ்பத்திரிக்குச் செல்வது அவர்களை அழைத்து வருவது வீட்டில் அவர்களுக்கு உதவுவது, யோகா, மூச்சுப்பயிற்சி கொடுத்து என்று 20 நாட்கள் இருந்துவிட்டு வந்தான். அவன் கிளம்பும் சமயம் அவர்கள் அவனுக்கும் டெஸ்ட் செய்து அது நெகட்டிவ் என்று வந்ததும் அனுப்பினார்கள்.

    முகக்கவசம் தவிர வேது எதுவும் அவன் அணியவில்லை. இரண்டாவது வாக்சின் எடுத்த 2 நாட்களில் அவன் செல்ல நேர்ந்தது. நானும் அவன் மனைவியும் அவன் நல்லபடியாகத் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்...இப்போது கொரோனா வார்டில் பயிற்சி கொடுக்கச் சென்று வருகிறான். தன்னார்வலராக..

    கீதா

    பதிலளிநீக்கு
  18. இக்கட்டான காலத்தில் உதவும் கரங்களை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
    அனைத்து நல்ல+ செய்திகளுக்கும் நன்றி. மனம் சந்தோஷப்படும் ஒரே நாள் எபியின் சனிக்கிழமை.
    இவ்வளவு நல்ல உள்ளங்களையும் செய்திகளையும்
    படித்து நல்ல உணர்வு கொடுப்பதற்கு மிக நன்றி.

    அன்பின் சின்னகீதா குடும்பம் சிறந்தது.
    பாதிக்கப் பட்டவர் முழுவதும் குணமடைய பிராத்தனைகள்.

    பதிலளிநீக்கு
  20. அனைத்துமே சிறப்பான செய்திகள். சில செய்திகள் எனக்கும் வந்தன.

    அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    இன்றைய செய்திகள் அனைத்தும் நன்றாக உள்ளன. நல்ல உள்ளங்கள் கொண்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அனைவரையும் நாம் நன்றியோடு வாழ்த்துவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!