வியாழன், 17 ஜூன், 2021

"பூச்சி.... பூச்சி... பூச்சி... பூச்சி...."

 சம்பவம் ஒன்று :  பல வருடங்களுக்கு முன்பு..

என் அம்மா சமயங்களில் BHAAவங்களுடன் பேசுவார்.  அதுமாதிரி ஒருமுறை அம்மாவும் பாட்டியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.  அப்பா கீழே அமர்ந்து பேடில் பேப்பர் வைத்து ஏதோ எழுதி க்கொண்டிருந்தார். இவர்கள் பேச்சில் அவருக்கு பெரிய கவனமில்லை என்றுதான் நினைக்கிறேன்.  யோசித்து யோசித்து கற்பனையைத் தட்டி ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.

நான் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். மோதி என் மடியில் படுத்துக் கொண்டிருந்தது!  அம்மாவும் அம்மம்மாவும் ஏதேதோ விஷயங்களைத் தொட்டுப் பேசிக்கொண்டிருக்க, இடையில் ஏதோ பெண் வளர்ப்புப் பற்றியோ ஏதோ பேச்சு வந்திருக்கிறது.  கான்டெக்ஸ்ட் சரியாய் நினைவில்லை எனினும் கிட்டத்தட்ட அதுதான்.  

அம்மா பாத்திரம் தேய்க்க எழுந்திருக்கும் தருணம் என்று ஞாபகம். அப்போது பேச்சின் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே எழுந்தாள்.  "பூச்சி.... பூச்சி... பூச்சி... பூச்சி.ன்னு வளர்த்தால்...?" என்று கேள்விக்குறியோடு முடித்திருக்க வேண்டிய வாசகம் என்று நம்புகிறேன்.  நான் நாற்காலியில் அமர்ந்திருந்தால் அம்மா எழுவதை கவனம் கலைந்து பார்த்ததால் அப்படிதான் தெரிந்தது.

ஏனெனில் வாசகம் முடியும் முன்னரே சம்பவங்கள் அணிவகுத்து விட்டன!

அம்மா புடைவையை லேசாகப் பிடித்து ஆட்டியபடியே எழுந்து  'பூச்சி பூச்சி பூச்சி' என்று வித்தியாசமாக இரண்டு அடி எடுத்து நடந்தபடி ஆரம்பித்தாரோ இல்லையோ, அப்பா 'பேடை'த் தூக்கி எறிந்துவிட்டு அலறி அடித்துக்கொண்டு சடாரென எழுந்ததில் அருகிலிருந்த சொம்பு தட்டிவிடப்பட்டு, தண்ணீர் கவிழ்ந்து, எழுதிக் கொண்டிருந்த பேப்பர் எல்லாம் நாசம்.   அப்பா பதறி எழுந்த வேகத்தைப்  பார்த்த கணத்தில் அம்மா பகபகவென்று சிரிக்க, அப்பா எழுந்த வேகத்தைப் பார்த்து நானும் காலைத் தூக்கி நாற்காலி மேல் பாதுகாப்பாய் வைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனாலும் எனக்கு அது அம்மாவின் பேச்சின் தொடர்ச்சி என்று புரிந்திருந்தது.  பூச்சி பயமெல்லாம் இல்லை.  அப்பாவின் பதட்டம்தான் என்னை பாதுகாப்பாக இருக்க வைத்தது!  என் மடியிலிருந்த மோதி அசுவாரஸ்யமாக தூக்கத்திலிருந்து பாதிக்கண்களைத் திறந்து பார்த்தது!

வந்ததே பார்க்க வேண்டும் அப்பாவுக்கு கோபம்.   செம விடு விட்டார்.  அம்மா அலட்டிக்கவே இல்லை.  "நாங்கள் என்னவோ பேசிக் கொண்டிருந்தோம்" என்றபடியே வேலையைப் பார்க்கக் கிச்சனுக்குள் நுழைந்து விட்டார்!  அப்புறம் அப்பாவின் முகத்திலும் ஒரு (அசட்டுப்) புன்னகை மலர்ந்தது! 

இன்னொரு விஷயம் சொல்லவேண்டும்.  அப்பா கோபப்பட்டு கத்தியதும் மோதி என்ன நினைத்ததோ, என் மடியிலிருந்து இறங்கி பதிவிசாய் கீழே சென்று படுத்துக் கொண்டிருந்து விட்டு, அப்பா நார்மலானதும் மறுபடி என் மடிக்கு வந்தது!


சம்பவம் இரண்டு :  இப்போது 

எங்கள் நட்பில் ஒருவர் ஸார் என்று கூப்பிடுவது சற்றே வித்தியாசமாய் இருக்கும்.  "ஸேர்.." என்பது போல இருக்கும் கேட்பதற்கு.  நாங்கள் அடிக்கடி அதைக் கிண்டல் செய்வோம்.  என்ன மெதுவாய் சொல்லிப் பழகினாலும் சரமாரியான பேச்சில் அவருக்கு அப்படிதான் உச்சரிப்பு வந்தது.   அவரேயும் தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வார்.  அதேபோலத்தான் ஆக்சிஜன் என்பதை ஆக்ஜிசன் என்பார்!  ஓரொரு எழுத்தாக சொல்லி சரி செய்வோம்.  ஆனாலும் சேர்ந்து சொல்லும்போது அப்படிதான் சொல்வார்! படித்தவர்தான்.

ஒருநாள் மதியம் உணவருந்தும் நேரம் பேசிக்கொண்டே சாப்பிடும்போது இவர் பற்றிய பேச்சும் வந்ததது.  மதியம் நான், பாஸ், இரண்டு மகன்கள் சேர்ந்துதான் சாப்பிடுவோம்.  பெரும்பாலும் ஏதாவது வாக்குவாதம் வந்துவிடும்.    அன்றும் அப்படியே...   நான் சாப்பிட்டு கைகழுவி கணினிக்கு வந்து விட்டேன்.  அவர்கள் சாப்பிட்டுக்கொண்டே பேசிக் கொண்டிருக்க மகன்களும் எழுந்து கைகழுவி விட்டனர்.  பாஸ் பேச்சை நகைச்சுவைக்குத் திருப்ப, அந்த நண்பரைப்போல "ஸேர்...   ஸேர்.."  என்று பேசிக் காட்டினார்...

நான் வாசலுக்கு நேராய் அமர்ந்து கணினியைத் தட்டிக் கொண்டிருக்க, வாசல் கதவு திறந்திருந்தது.   அங்கோ அப்போது வேறு யாருமில்லை. 

முன்னர் சொன்னேனே..  என் அலைபேசி க்ராஸ்ட்டாக்கில் வந்த நாயகி...    அவர் கணவர் வெளியில் சென்றிருந்தவர், படியேறி அவர் வீட்டுக்குள் நுழைய முற்படுகையில் என் பாஸின்  "ஸேர்...   ஸேர்.." குரல் அவரை தயங்கி நிற்க வைத்தது.  கணத்தில் புரிந்துபோய் நான் உஷாராகி அவர் பக்கமே திரும்பவில்லை.  எதற்கு வம்பு?   அதற்குள் வெவ்வேறு ஸ்ருதியில் இன்னும் இரண்டு முறை பாஸ் கூப்பிட அவர் சுற்றுமுற்றும் பார்த்து டென்ஷனானார்!

கண்ணெதிரே இருக்கும் நான் அதனாலேயே பாஸை எச்சரிக்க முடியவில்லை.  

நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, அப்புறம் எங்களிடமிருந்து பதிலுக்கு 'போதிய வரவேற்பு' இல்லாததால் நல்லவேளை, பாஸ் தானாகவே நிறுத்திவிட,  அவரும் உள்ளே சென்று விட்டார்.

சற்றுப்பொறுத்து எழுந்துபோய் பாஸிடம் நடந்ததைச் சொன்னேன்.  அவர் சிரித்து முடிக்க வெகு நேரமாயிற்று.  இதுதான் எனக்கு, மேலே நான்  முதலில் சொன்ன பழைய சம்பவத்தையும் நினைவுக்கு கொண்டு வந்தது!

=========================================================================================================

பொக்கிஷம்:

இப்போது ஆன்லைன் வகுப்புக் காலம்.  இன்றைய மாணவமணிகள் என்னென்ன 'தக்கினிக்கு'கள் கையாளுகிறார்களோ!


பாசம் என்றால் என்னென்ன தெரியுமா உனக்கு...


குமுதம் தலையங்கங்கள் பற்றி ஜீவி சார் முன்பு சொல்லி இருந்தார்.  என்னிடம் துக்ளக் தலையங்கங்கள் இருப்பதாகச் சொல்லி இருந்தேன்.  அப்பா குமுதம் தலையங்கங்களும் சேர்த்து வைத்திருக்கிறார்.


தலையங்கங்களில் படிக்க என்ன இருக்கிறது என்றுதான் நினைத்திருந்தேன்.  ஆனால் இதைப் படிக்கும்போது அவை காலத்தைக் காட்டும் கண்ணாடி என்று தெரிந்தது.  அப்போது வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்திருந்த திமுக, கலைஞர் பற்றியும் எஸ் ஏ பி நிறைய எழுதி இருக்கிறார்!  திருமதி சாஸ்திரி பற்றி எஸ் ஏ பி எழுப்பி இருக்கும் கேள்வியை கவனித்தீர்களா?

===========================================================================================================

இன்னும் நிறைய விவரம் சொல்லி இருக்கிறார் விகடனில் அன்று இந்தப் புத்தகத்தை விமர்சித்தவர்.

........பங்க ளார் என்பது வங்க தேசத்தில் பிரபலமாயிருந்த ராகத்தை அனுசரித்ததாகும். இதே மாதிரி ஸிந்து பைரவி, ஸௌராஷ்டிரம், திலங் (திரிலிங்கம்) ஆகியவை அந்தந்தப் பெயருள்ள பிரதேசங்களில் பழக்கத்தில் இருந்த நாதத்தையொட்டி அமைந்ததென்று கொள்ளலாம்.
இதே மாதிரி புஷ்பங்கள், பட்சிகள், பிராணிகள், இவற்றின் பெயர்களைக் கொண்ட ராகங்களும் இருக்கின்றன. நாகஸ்வராளி (பாம்பு), படஹம்ஸா (அன்னம்) பெஹாக் (ஒருவித பட்சி), பீலு (மரத்தின் பெயர்) சாவேரி (சவேரா என்கிற மலைஜாதியினர்,) ஆஹிரி (அரிடாஸ் என்கிற மலைஜாதியினர்) முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
ருதுக்களுக்கேற்ற ராகங்களும் உண்டு. அவை பைரவி, மேகா, பஞ்சமா, நட நாராயணா, ஸ்ரீவசந்தா ஆகியவை. இன்னின்ன நேரத்தில் இன்னின்ன ராகங்களைத்தான் பாடலாம் என்று முறைப்படுத்தியவர் சாரங்க தேவர்.
வட இந்திய சங்கீதத்தில் தான்ஸேன் காலத்தில் 4000 ராகங்கள் இருந்தனவாம். அவற்றைப் பண்படுத்தி 400 ஆக அவர் அமைத்தார். தர்பாரி முறையைக் கண்டுபிடித்தவரும் அவரே....
- The story of Indian Music - Goswami. -

=====================================================================

அப்போதே இங்கு பிளாக்கிலும் பேஸ்புக்கிலும் பகிர்ந்ததுதான்.பேஸ்புக்கில் பகிர்ந்ததும் அங்கு எனக்கு வந்த பதில்....

'ஐந்து நிறங்களுக்கு இரண்டரை நாழிகைக்கொருமுறை மாறுவார்' என்று வாக்கிய அமைப்பு இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்!

===============================================================================

134 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லா நாட்களும்

  ஆரோக்கியம் நிறைந்த நாட்களாக இருக்க இறைவன்
  அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க வல்லிம்மா...   வணக்கம்.

   நீக்கு
 2. மிக மிக சுவாரஸ்யமான அப்பா,அம்மா பதிவு.
  ஸ்ரீராம் ,பாஸ் பதிவு. சிரித்துக் கொண்டே இருக்கிறேன். உங்க அம்மா மகா குறும்பு.ஹாஹ்ஹஹஹ்ஹாஹஹஹஹ்ஹஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா.   ஆனான்ல் அந்த சம்பவத்தில் அம்மா வேண்டுமென்று அபப்டிக் செய்யவில்லை!  யதேச்சையாக செய்தது அப்படி விளைவை ஏற்படுத்தியது!

   நீக்கு
  2. ஓஹோ. அம்மா சிரித்தது வெகு சுவை.
   அப்பா ரியாக்ஷன் இன்னும் சுவை.:)

   நீக்கு
  3. ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் அப்பாவின் கோபம் அம்மாவிடம் செல்லுபடியாகாமல் போனது.   அப்பாவும் அபப்டி எல்லாம் கோபித்துக் கொள்வதும் இல்லை!

   நீக்கு
 3. "ஸேர்... ஸேர்.." குரல் அவரை தயங்கி நிற்க வைத்தது. கணத்தில் புரிந்துபோய் நான் உஷாராகி அவர் பக்கமே திரும்பவில்லை. எதற்கு வம்பு? அதற்குள் வெவ்வேறு ஸ்ருதியில் இன்னும் இரண்டு முறை பாஸ் கூப்பிட அவர் சுற்றுமுற்றும் பார்த்து டென்ஷனானார்!//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////ஹைய்யோ:) சூப்பர்.

  பதிலளிநீக்கு
 4. விகடன் ஜோக் மாணவர்கள் நிஜ வாழ்க்கையிலும் உண்டு. ஸ்பெஷலாக
  திங்கள் கிழமை வயிற்று வலிகளை நான் நிஜமென நம்பி இருக்கிறேன்!!!!!
  தம்பிக்கு ஊசி குத்தச் சொல்லும் அண்ணா !!!!
  ஆஹா எத்தனை நல்லவன் டா நீ:)))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா அம்மாக்களும் ஏமாந்து விடுவார்கள் இல்லை?  ஒருவேளை உண்மையாயிருந்தால் குழந்தை கஷ்டப்படுவானே என்று பதைபதைத்துப் போவார்கள்!

   நீக்கு
  2. ஆமாம் மா. ஒன்பது , பத்து வயதில்
   இந்தப் பசங்க பயங்கள் வயிற்று வலியாக உருவெடுக்கும் என்று
   அப்போது தெரியாதும்மா.

   லஸ் டாக்டரிடம் போய் வருவதற்குள் காலை மணி பத்தாகிவிடும்.
   போய் வந்ததும்
   வலியும் போய் விடும். வாசலில் கிரிக்கெட் பயிற்சி
   ஆரம்பிக்கும்.:)
   சிங்கம் சும்மா விடும்மா. ஹோம் வொர்க் முடித்திருக்க மாட்டான் என்று சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்.
   அஞ்ஞானம்:))))

   நீக்கு
  3. அஞ்ஞானமா, பாசமா...    அதுதான் குழந்தைகள் அப்பாவை விட அம்மாவிடம் ஒட்டிக்கொள்ள நினைப்பர்.  அம்மா என்றால் அன்பு.

   நீக்கு
  4. அம்மா என்றால் அன்பைவிட, அவங்களுக்கு பாசம் கண்ணை மறைக்கும். அப்பா பிசினெஸில் குறியா இருப்பதால் டூப் அடிக்க முடியாது. பசங்க ஸ்கூலுக்குப் போகலைனா (உடம்பு சரியில்லை போன்று) நான் விளையாடவோ டிவி பார்க்கவோ விட மாட்டேன். ஏண்டா லீவு போட்டோம்னு ஆக்கிடுவேன்.

   எனக்கு 9ம் வகுப்பில் உடம்பு சரியில்லை என லீவு போட்டபோது சாயந்திரம் ஜவ்வரிசி கஞ்சி ஜீனி, பால் போட்டு என் பெரியம்மா தந்தார். நான் சாப்பிடாமல் வீம்பு பண்ணிக்கொண்டிருந்தேன். பெரியப்பா காலேஜ் விட்டு வந்ததும், உடம்பு சரியில்லைனா, ஜீனி போட்ட கஞ்சியா எனக்கேட்டு, அதை எடுத்துவைத்துவிட்டு, எனக்கு உப்பு, மோர் விட்ட கஞ்சியைக் குடிக்கச் சொன்னார். ஏண்டா வீம்பு பிடித்தோம் என எனக்கு ஆனமு.

   நீக்கு
  5. எங்களுக்கெல்லாம் ஜூரம் வந்தால் ஹார்லிக்ஸ், பன், பால் எனக் கிடைக்கும். அதுக்காகவே ஜுரம்னு படுத்துக்கலாமோனு தோணும். இல்லைனா அப்போதெல்லாம் பன்னெல்லாம் எங்கே இருந்து வாங்கித் தருவாங்க? :))))

   நீக்கு
  6. பசங்க பொய் சொல்றங்கன்னு தெரிஞ்சா கூட அம்மா எளிதாகக் அக்கடந்து விடுவாள்.  அபபாக்கள்தான் போவார்.  ஆனால் என் வீட்டில் இப்போது இது தலைகீழ் என்பதையும் சொல்லவேண்டும்!!

   நீக்கு
  7. நானெல்லாம் கண்டிப்பான அம்மாவாகவே இருந்திருக்கேன். நம்மவர் இதில் எல்லாம் தலையிட்டுக் கொள்ளவே மாட்டார். எந்த வகுப்புப் படிக்கிறாங்க என்பதோடு அவர் வேலை முடிஞ்சுடும். தினமும் நோட்டுப் புத்தகங்களைச் சோதனை போட்டு வகுப்பு அசைன்மென்ட் மார்க், வீட்டு அசைன்மென்ட் மார்க், என மதிப்பெண்கள் சரியா வந்திருக்கானு பார்த்துக் கொண்டே இருப்பேன். இதனால் எனக்குத் திட்டும் கிடைக்கும். :)))))

   நீக்கு
  8. எங்க பெண்ணெல்லாம் குழந்தைகளைக் குடைஞ்சு எடுத்துடுவா. அவள் விரல் நுனிக்கு ஏற்றாப்போல் குழந்தைகளும் ஆடுவார்கள். :))))

   நீக்கு
  9. என் பாஸ் உங்க டைப்புதான் கீதா அக்கா.  நானும் மாமா மாதிரிதான்!   ஹிஹிஹி...

   நீக்கு
 5. முக நூல் பதிவுகள் நான் பார்த்ததில்லை மா.
  அருமையாக இருக்கிறது.
  எனக்கும் பழைய கோவில்களுக்குப் போகும்போது இந்த நினைவுகள் தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா.   புதுப்பிக்கப்பட்டு வர்ணமடித்தால் கோவிலின் அழகு, அப்பழமை போவிடுவதோடு நமக்குள் ஏற்படும் சில அதிர்வுகளையும் அது நீக்கி விடுகிறதோ என்றும் தோன்றும் எனக்கு.

   நீக்கு
  2. வர்ணம் அடிப்பதால் எல்லாம் இல்லை, ஶ்ரீராம், பழைய அந்தக் கல்லால் ஆன தளங்களை எடுத்துட்டுக்கான்க்ரீட் போட்டு, அதன் மேலே இப்போதைய டைல்ஸ் எல்லாம் போட்டுப் புதுமை என்ற பெயரில் சீரழித்து விடுகிறார்கள். இப்படிப் பண்ணியதால் தான் எட்டுக்குடியில் நம்மவர் சனைஸ்வரரைச் சுற்ற மேலே ஏறிப் போயிட்டுக் கீழே இறங்கும்போது எண்ணெயும் தண்ணீரும் சேர்ந்து வழுக்கப் படிகளில் விழுந்து எக்கச்சக்கமாக அடிபட்டுக் கொண்டார். :(

   நீக்கு
  3. அச்சச்சோ...   சொல்லி இருக்கிறீர்கள்..  நினைவிருக்கிறது.  ஆனால் புதுப்பிக்கைறேன் என்று வர்ணமடிக்கும் கோவில்கள் உள்ளன.

   நீக்கு
 6. தலையங்கங்கள் சேர்த்து வைத்திருக்கிறார் என்பது
  அதிசயம்.
  அதிலும் சாஸ்திரி தலையங்கம் ...மிக சுவாரஸ்யம்.
  இப்படி ஒரு சந்தேகம் அப்போது இருந்தது நிஜமே.
  இவ்வளவு விரிவாகப்
  படிக்கவில்லை. ஆனால் அண்டை நாடு பற்றி சந்தேகம் எழுந்தது உண்மைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்தேகம் எழுந்தது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.  சாஸ்திரி மனைவியே பேசி இருக்கிறார் என்பதும், அது இபப்டியான விமர்சனத்துக்குள்ளானது என்பதும் செய்திதானே...

   அப்பா துக்ளக் தலையங்கங்கள் கூட சேர்த்து வைத்திருந்தார்.  இப்போது காணோம்!

   நீக்கு
  2. ஓ. யெஸ்.
   அவர் அதுவரை மிகச் சாதுவான பெண்ணாகத்தான் தெரியும்.
   இது புது செய்திதான்.

   நீக்கு
  3. சாஸ்திரியைப் பற்றி படித்த அளவு அவரைப்பற்றி நான் அறிந்தததே இல்லை!

   நீக்கு
 7. பஞ்ச வர்ண ஈஸ்வரர் செய்தியும் எனக்குப் புதிது. திருவிசை நல்லூர்
  ஏதோ நாவலில் படித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஹோ..   உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை.  நிறம்மாறும் செய்தி ப்பற்றிய போர்ட் இருந்தது.  அதை ரகசியமாக எடுத்தேன்.  தெளிவில்லாமல் வந்திருந்தது.

   நீக்கு
 8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொற்றுத் தொடராமல் அனைவரும் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் வாழப் பிரார்த்தனைகள். பதிவை இன்னமும் படிக்கவில்லை. நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாய் இருக்கு. படிச்சுட்டு வரேன். அதுக்குள்ளே வல்லி ஏழெட்டுக் கருத்துச் சொல்லி விட்டார். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா..  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.   நீளமாவா இருக்கு?  நல்லா பாருங்க...   சின்ன பதிவு!  இணைப்புகள் படம் பெரிசாத் தெரியுதோ என்னவோ!

   நீக்கு
 9. பஹ்ரைனில் என் பெண்ணின் சின்ன வயதில் தடுப்பூசிக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். நர்ஸ் ஊசிபோட வந்தபோது, "No. Thanks. It is okay. உங்களுக்கே போட்டுக்கொங்க' என்று என் பெண் சொன்னது நினைவுக்கு வருது. கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் ஊசி போட்டுக்கொள்ள வைத்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா...  ஹா...    என்ன வில்லத்தனம்!   என்ன சாமர்த்தியம்!!!

   நீக்கு
  2. ஹாஹாஹாஹா செம!!! உங்க மகள்! நெல்லை!

   கீதா

   நீக்கு
 10. பூச்சி பற்றிய சம்பவமும் அடுத்து ஸேர் பற்றியதும் ரசனைக்கு உரியது. எங்க புக்ககத்தில் யாரையுமே அவர் வந்தார்/சென்றார் எனச் சொல்ல மாட்டார்கள். வந்"தேர்", சொன்"னேர்" சென்"றேர்" என்பார்கள். அதே போல் நாமெல்லாம் கற்றுக் கொண்டால் அவங்க கத்திக்குவாங்க. :))))) பாட்டுக் கத்திண்டேன் என்பார்கள். நிஜம்மாவே அது கத்தல் தானேனு எனக்குத் தோணும். இஃகி,இஃகி,இஃகி! வெட்கம் என்பதை "வக்கம்" என்றே சொல்வார்கள். சிவப்பு "சேப்பாக" இருக்கும். இதெல்லாம் அந்த அந்த மாவட்டத்து உச்சரிப்பாக இருக்கலாம். அது போல் உங்கள் நண்பரும் "ஸேர்" எனச் சொல்லுவார் போலும். :)) எம்புட்டுப் பெரிய விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கு! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது மதுரை ஸ்டைல் பேச்சு இல்லையா? எனக்குத் தெரிந்து தஞ்சாவூர்ப் பக்கம்லாம் கொஞ்சம் தெளிவாக இருக்கும் - எம்ப்ளது போன்ற சிலவற்றைத் தவிர..

   நீக்கு
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மதுரைத் தமிழ் சுந்தரத் தமிழ்! அங்கன, இங்கன, அம்புட்டு, இம்புட்டு! வந்தாஹ! போனாஹ என்று தான் இருக்கும். இதெல்லாம் சுத்தமான கும்பகோணம் பக்கம் உள்ள தமிழ். நீங்க நன்றாய்க் கவனிச்சுப் பேசலையோ/சே, கவனிக்கலையோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  3. கும்பகோணம் பக்கம் என்பதை விட மன்னார்குடி பக்கம் என்று கூறலாம். அவர்கள்தான் மன்னி என்பதை மென்னி, என்றும், வலி என்பதை வெலி என்றும் கூறுவார்கள்.
   இப்படி எந்த ஸ்லாங்கும் இல்லாத தமிழ் திருச்சி தமிழ்.

   நீக்கு
  4. சரியாச் சொன்னீங்க. என் புக்ககத்திலும் வெலி என்று தான் சொல்வார்கள். மணத்தக்க்காளியை மரத்தங்கிளி என்பார்கள். முதல்லே எனக்குப் புரியவே இல்லை. என் மாமியார் என்னிடம் ஒரு நாள் மரத்தங்கிளிக்குழம்பு வைனு சொல்லிட்டுப் போயிட்டார். எந்த மரத்திலே போய்க் கிளியைப் பிடிச்சுட்டு வரதுனு தெரியாமல் முழிச்ச நான் வெகு சாமர்த்தியமாகச் சின்ன நாத்தனாரை எடுத்துத் தரச் சொல்லிக் கேட்க, அவரும் எடுத்துக் கொடுத்தார். கடைசியில் பார்த்தால் (முதல்லே இருந்தே) மணத்தக்காளி வற்றல், பள்ளிக் கூடத்தையும் "பள்டம்" என்பார்கள். இதையும் முன்னரே ஒருதரம் சொல்லி இருக்கேன். அதை ஏதோ ஓர் ஊர் என நினைச்சுட்டு இருந்தேன். பின்னாடி புரிஞ்சதும் அ.வ.சி.

   நீக்கு
  5. கீதாக்கா...   வந்தேன் போனேன் அவந்தேன் என்பதெல்லாம் மதுரை ஸ்டைல்தான்.  தஞ்சை க்ளியராய் இருக்குமாக்கும்.  மேலும் நான் சொன்னது சுத்தத்த தஞ்சாவூர்.  அங்கிட்டு இங்கிட்டு அக்கம் பக்கம் எல்லாம் இல்லை!

   நீக்கு
  6. பானு அக்கா..  நீங்கள் சொல்லி இருப்பது தின்னவேலி ஸ்டைல் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  7. சுத்தத் தஞ்சாவூரும் கொஞ்சம் கொஞ்சம் வழக்காடு மொழியில் கொச்சைத்தனம் உண்டு! பின்னர் குறிப்பிடுகிறேன் இந்த அங்கிட்டு, இங்கிட்டு எல்லாம் மதுரைக்கே உரியவை! நம்ம ஊருனு சொல்ல மாட்டாங்க. "அம்மூரு" என்பாங்க. மதுரைக்காரங்க பேசுவதிலிருந்தே கண்டு பிடிக்கலாம் எளிதாக. என்னைக் கல்யாணம் ஆன புதுசிலே பலரும் "மதுரையா?" என்று கேட்டிருக்காங்க. தண்ணீர் என்றே சொல்ல மாட்டாங்க. "தண்ணு"வரலை என்போம். இப்போதெல்லாம் என்னோட பேச்சும் மாறி விட்டது. எந்த ஊர்னு எளிதாய்க் கண்டு பிடிக்க முடியாது. இதோ பாரு என்பதை மதுரைக்காரங்க "இந்தாரு" என்பார்கள். இங்காரு எனச் சொல்பவர்களும் உண்டு.

   நீக்கு
  8. தப்புத்தப்பாய்ச் சொல்றீங்களே ஶ்ரீராம். பானுமதி சொல்லி இருப்பது மன்னார்குடி/கும்பகோணம்/தஞ்சாவூர் ஸ்டைல் வழக்காடு மொழி தான். தின்னவேலியில் இப்படி எல்லாம் இல்லை. தின்ன வேலி என்றும் சொல்ல மாட்டாங்க. தின்னேலி, அல்லது தினேலி! என்பார்கள். கும்பகோணத்துக்காரர்கள் கும்பகோணம் என்று சொல்லாமல் "கும்மாணம்" என்பது போல்!

   நீக்கு
  9. அது சரி...   திருத்திக் கொள்கிறேன்.  ஆனால் கும்மாணம் இல்லை, கும்மோணம்!

   நீக்கு
  10. வத்திராயிருப்பு என்பதை அந்த ஊர் மக்கள் வத்ராப் என்பார்கள்.  ஸ்ரீவில்லிபுத்தூரை சில்த்தூர் என்பார்கள்.

   நீக்கு
  11. மாமனார், பெரிய மாமனார் எல்லாம் கும்மாணம் என்றே சொல்லுவார்கள். இப்போதும் என் கடைசி நாத்தனார் கும்மாணம் என்றே சொல்லுவார். :)

   நீக்கு
  12. எங்கள் ஊருக்கு அருகில் திருக்காட்டுப்பள்ளி என்ரு ஒரு இடம் உண்டு. சுற்றி இருக்கும் 18 பட்டி கிராமங்களுக்கு அதுதான் தலைமை. அங்குதான் பேருந்து நிலையம், ஹாஸ்டலோடு உயர்நிலைப் பள்ளி தற்போது மேல்நிலைப் பள்ளி(சிவசாமி அய்யர் மேல் நிலைப் பள்ளி) போன்றவை உண்டு. அதை எங்கூரில் திருகாட்ளி என்பார்கள்.

   நீக்கு
  13. திருக்காட்டுப்பள்ளி - எங்கள் சொந்தங்கள் இருந்த ஊர்.  சித்தப்பாக்கள்.  என் அக்கா திருமணமாகி முதலில் சென்ற ஊர். அவரைக் குடித்தனம் வைக்கச் சென்றபோது நானும் என் அண்ணனும் கூட சென்றிருந்தோம்.

   நீக்கு
 11. சாஸ்திரியின் மனைவி அவருடன் சென்றதாக நினைவில் இல்லை. ஆனால் படுக்கும் முன்னர் அவர் இந்தியாவுக்குத் தொலைபேசி மனைவியுடன் பேசியதாகச் சொல்வார்கள். மேலும் இந்த சந்தேகம் சாஸ்திரி இறந்தப்போ அந்தக் காலத்திலேயே அப்போதே பேசப்பட்டது.எத்தனை வருஷங்கள் ஆனால் என்ன? அவருக்கு மீண்டும் கணவன் நினைவு வந்திருக்கலாம். புலம்பி இருக்கலாம். தன் சந்தேகங்களை வெளிப்படையாகச் சொன்னாலாவது யாரானும் கண்டு பிடித்துச் சொல்வார்கள் என்றும் நம்பி இருக்கலாம். அவர் மகன்கள் இருவரையும் காங்கிரஸ் கட்சி முற்றிலும் ஒதுக்கியே வைத்திருந்தது என்பதும் கவனிக்கக் கூடியது. எஸ்.ஏ.பி இதில் என்ன தப்புக் கண்டார் என்பது தான் எனக்குப் புரியலை. திருமதி லலிதா சாஸ்திரிக்குத் தன் கணவர் எப்படி இறந்தார் எனத் தெரிந்து கொள்ள முழு உரிமை உண்டு. அதனால் எல்லாம் அவருடைய மதிப்புக் குறையப் போவதில்லை/குறையவும் இல்லை. ஏனெனில் அவங்களைத் தான் முழுக்க முழுக்க இருட்டடிப்பில் வைத்திருந்தார்களே. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ என்ன அரசியல் நிர்ப்பந்தமோ, குறிக்கீடோ..!

   நீக்கு
  2. இது குறித்துப் புத்தகங்கள் வந்துவிட்டன.

   நீக்கு
  3. குமுதம் எப்போதுமே pro congress! அதனால் அவருக்கு சாஸ்திரியின் மனைவியின் நியாயமான வருத்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இந்த காலமாக இருந்தால் என்னவாகியிருக்கும்

   நீக்கு
  4. எஸ் ஏ பி சொல்லி இருப்பது சாஸ்திரியின் மனைவி அதைக் காலம் கடந்து சொல்கிறார் என்று நினைக்கிறேன் கீதா அக்கா.

   நீக்கு
  5. பானுக்கா...  இந்தக் காலமாக இருந்தால் தொலைக்காட்சியில் சுமன் வி ராமனும் மற்றவர்களும் காச் காச்சென்று கத்திக் கொண்டிருப்பார்கள். 

   நீக்கு
  6. சாஸ்திரியின் மனைவி மட்டுமல்ல, பிள்ளைகளும் அப்போதே சொன்னார்கள். அதாவது சாஸ்திரியின் இறுதிச் சடங்குகளின் போதே! ஆனால் எடுபடவில்லை. காலம் கடந்து சொல்வதெனில் அதற்கும் காரணம் இருந்திருக்கணுமே! அவங்க சும்மாவானும் போகிற போக்கில் தன் கணவர் மரணம் பற்றிச் சொல்லி இருக்க மாட்டார். ஏதேனும் பேச்சு வந்திருக்கணும். சொல்லி இருப்பார்.

   நீக்கு
  7. அப்போது நான் பிறக்கவே இல்லை என்பதால் எனக்கு அதெல்லாம் தெரியாது!

   நீக்கு
  8. இஃகி,இஃகி,இஃகி! நல்ல சமாளிப்ஸ். ஆனால் உண்மையிலேயே நீங்க பிறந்திருக்க வாய்ப்பு இல்லை. :)

   நீக்கு
  9. சாஸ்திரி அவர்களின் மனைவியை நினைத்து வருத்தமாக இருந்தது. சாஸ்திரி அவர்களின் மரணம் போலவே, சுபாஷ் சந்திர போஸ் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. மர்மங்களுக்கு காரணமான மர்ம மனிதர்கள் எவரோ...சர்வம் கிருஷ்ணார்ப்பணம். அவர் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

   நீக்கு
  10. சுபாஷ் சந்திரபோஸ் அப்புறம் இந்தியாவில் காணப்பட்ட கும்நாமி பாபா என்பார்கள்.  என்னவோ மர்மங்கள்.  இப்போதென்ன, ராஜீவைக் கொன்றது மட்டும் யாரென்று எல்லோரையும் கண்டு பிடித்து விட்டோமா என்ன?

   நீக்கு
  11. அப்போது நான் பிறக்கவே இல்லை.../ஐயே! ரொம்பத்தான்..!
   லால் பகதூர் சாஸ்திரி இறந்த சமயத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்த பூர்ணம் விஸ்வநாதன் சாஸ்திரியின் இறுதிச் சடங்கின் நேர்முக வர்ணனை செய்தாராம். சாஸ்திரியின் மனைவியின் சோகத்தை
   பார்த்த அவரால் முப்பது செகண்டுகள் பேச முடியவில்லையாம். நேரடி ஒலி பரப்பில் 30 செகண்டுகள் மிக அதிக நேரம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

   நீக்கு
  12. அப்போது நேரலையில் நீங்கள் எல்லாம் அதைக் கேட்டுக் கொண்டிருந்திருப்பீர்கள்.

   நீக்கு
 12. நானெல்லாம் சமர்த்தாகப் பள்ளிக்குப் போயிட்டு ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய சமயத்தில் சமர்த்தாக ஊசியும் போட்டுக் கொண்டிருக்கேன். ஆனாலும் இதில் அந்தப் பிள்ளைகளின் முக பாவங்கள் அபாரம். அந்த மருத்துவரும் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் பிற்காலப் பள்ளி வாழ்க.கை தனிரகம்! ஊழல் நிறைந்தது..்

   நீக்கு
  2. ஒன்பதாம் வகுப்பில் எனக்கும் ஒரு சில பிரச்னைகள் இருந்தன. ஆனால் பொதுவாக எப்போதும் முதல் மூன்று இடத்திற்குள் இருந்ததால் அதிகம் ஆசிரியர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதில்லை, கணக்கு ஆசிரியை தவிர்த்து! அவருக்கும் எனக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். சரியாய்ப் போட்டிருக்கும் கணக்கைக் கூடத் திருத்தறேன் பேர்வழினு தப்பாக்கிடுவேன். :(

   நீக்கு
  3. நானும் முயற்சித்ததுண்டு.  என் நண்பர்கள் திருடர்கள்.  முதல் பத்து இடங்கள் எனக்கு கிடைக்காமல் எப்போது பார்த்தாலும் அவர்களே எடுத்துக் கொண்டு என்னை ஏமாற்றினார்கள்!!!

   நீக்கு
  4. என் நண்பர்கள் திருடர்கள். முதல் பத்து இடங்கள் எனக்கு கிடைக்காமல் எப்போது பார்த்தாலும் அவர்களே எடுத்துக் கொண்டு என்னை ஏமாற்றினார்கள்!!!//

   ஹாஹாஹாஹா

   கீதா

   நீக்கு
 13. நீங்க முகநூலில் பகிர்ந்த தாராசுரம் கோயில் பற்றிய பதிவை நானும் பார்த்த நினைவு. ஆனால் பதிலெல்லாம் சொன்னேனோ தெரியலை. திருவிசநல்லூர் போயும் அங்கே கோயிலுக்குப் போக முடியலை. நடை சாத்திட்டாங்க. மாலை வரை காத்திருக்க முடியாமல் கிளம்பி வந்துட்டோம்.அப்புறமாப் போக வாய்ப்பே கிடைக்கலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா அங்கே நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

   நீக்கு
  2. திருவிசைநல்லூர் சென்ற நாங்கள் கர்கடேஸ்வரர் கோவிலுக்குத்தான் சென்றோம். பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலுக்குச் செல்லவில்லை.
   திருச்சி உறையூரிலும் ஒரு பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் உண்டு. அங்கு லிங்கம் நிறம் மாறுமா என்று தெரியவில்லை.

   நீக்கு
 14. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 15. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 16. பூச்சி.. பூச்சி.. பூச்சி...
  ரசனையான பதிவு...

  பதிலளிநீக்கு
 17. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா அக்கா..  வாங்க...   இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 18. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் எடுத்துட்டீங்கனு தெரியலை. ஒண்ணும் குத்தமா இல்லையே அதில்! :)))) உண்மை அது தானே!

   நீக்கு
  2. என் மாமியார் ப்ளேன் என்பதை, அழுத்தம் திருத்தமாகப் ப்ளான் என்பார். அதே போல் போபால் அவர்களுக்கு "கோபால்" சிலிண்டரை அழுத்தம் திருத்தமாக "சிகிண்டர்" என்பார். அந்தக் காலத்து மனிதர்களின் புரிதலும் உச்சரிப்புமே தனி. இப்போதுமே எங்கள் உறவினர்களில் சிலர் Palm Oil என்பதற்கு farm oil என்பார்கள். இதெல்லாம் நாம் ரசிக்கத் தானே!

   நீக்கு
  3. அச்சச்சோ...  நானும் மெயிலில் அழித்து விட்டேனே...   இங்கு என்ன இருந்தது என்று எனக்கும் நினைவில்லையே...

   நீக்கு
  4. அது ஒண்ணும் இல்லை. அவங்க அம்மாவின் உச்சரிப்பைப் பத்தித் தான் சொல்லி இருந்தாங்க. ஒண்ணும் தப்பாச் சொல்லலை. ஆனாலும் என்னமோ அழிச்சுட்டாங்க! :(

   நீக்கு
  5. எங்கள் அம்மா பா(B)ல்கனி என்பதை பா(P)ல்க(G)னி என்பார். என் அக்கா பையன்,"அம்மம்மா,எப்படி கரெக்ட்டா மாத்தி சொல்கிறீர்கள்?" என்று கிண்டல் செய்வான். எங்கள் அத்தை அதே போல அங்கிள் என்பதை அங்கி(g)ள் என்பார்.  

   வார்த்தைகள் மாறிப் போயிருந்ததால் திருத்த வேண்டும் என்பதற்காக நீக்கினேன். அதற்குள் வேலைகள் வரிசை கட்டி வந்து விட்டன.   

   நீக்கு
  6. அதனால் என்ன? நான் சொல்லிட்டேனே! :))))

   நீக்கு
 20. ..வநததே பார்க்க வேண்டும் அப்பாவுக்கு கோபம். செம விடு விட்டார். அம்மா அலட்டிக்கவே இல்லை. //

  முன்பிலிருந்தே குளிர் விட்டுப் போயிருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் குளிர் எல்லாம் இருக்கவே இருக்காது!

   நீக்கு
 21. The story of Music - Goswami

  கோஸ்வாமி? எந்த கோஸ்வாமி? யார் கோஸ்வாமி? Goswami is just a surname. ஐயர், செட்டியார், கவுண்டர், பிள்ளை என்பதுபோல. ஆயிரம் கோஸ்வாமிகள், பேனர்ஜிகள், சாட்டர்ஜிகள், முகர்ஜிகள் வங்கத்தில். ஆயிரமாயிரம் கபூர்கள், அகர்வால்கள், யாதவ்கள், ஷர்மாக்கள், வர்மாக்கள் வடநாட்டில். அது அவர்களின் சர்நேம்/ஜாதிப்பெயரும்கூட.

  தமிழ்ப் பத்திரிக்கைகளில் எழுதிய, எழுதுபவர்களுக்கு (so-called journalists, editors)-பெரும்பாலோருக்கு, தமிழ்நாட்டுக்கு வெளியே, குறிப்பாக வடநாட்டில், வங்கம், குஜராத்தில் பெயர்கள் எப்படி அமைந்துள்ளன, எப்படி அழைக்கப்படுகிறார்கள், இரண்டு பகுதிப் பெயர்களில் முதல் பகுதி, இரண்டாம் பகுதி எதைக் குறிக்கிறது என்கிற ஞானமில்லை. தெரிந்துகொள்ளும் அக்கறையும் இருந்ததில்லை, இன்றுமில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. பலரும் பெயரே அதுவாக நினைப்பதும் உண்டு. சொன்னாலும் புரிஞ்சுக்கறதில்லை. ஆனால் அந்தக் காலத்தி தினசரிகளில் (தினத்தந்தி உட்பட) ராமசாமி ஐயர், ராகவ ஐயங்கார், லக்ஷ்மணசாமி முதலியார் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். நான் சொல்வது ஐம்பதுகளுக்கு முன்னர் உள்ள தினசரிகளில். அதே போல் திருடன் பிடிபட்டான் எனில் திருடன் பிடிபட்டான் என்றே சொல்லி இருப்பார்கள். இப்போது போல் "திரு"டர் பிடிபட்டார் என வந்திருக்காது. நடிகை நடித்திருக்கிறாள் என்றே போட்டிருப்பார்கள்.

   நீக்கு
  2. அர்னாப் கோஸ்வாமியோட எள்ளு தாத்தாவோ என்னவோ...   அந்தப் புத்தகத்தில் அப்படிதான் போட்டிருந்தது.  அதையே நானும் எடுத்துக் போட்டேன்.  ஆனால் சப்ஜெக்ட் சுவாரஸ்யமான சப்ஜெக்ட்.

   நீக்கு
  3. நடிகை நடித்திருக்கிறாள் என்றே போட்டிருப்பார்கள்//

   ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன் நூலின் தலைப்பு!

   நீக்கு
  4. படமாகவும் வந்திருக்கிறது.  லட்சுமி-ஸ்ரீகாந்த்.

   நீக்கு
 22. ..சற்றுப்பொறுத்து எழுந்துபோய் பாஸிடம் நடந்ததைச் சொன்னேன். அவர் சிரித்து முடிக்க வெகு நேரமாயிற்று.//
  உங்களுக்குப் படபடப்பு. அவருக்கோ வாய்கொள்ளா சிரிப்பு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தன்னால் நிகழ்ந்த குழப்பம் குறித்து மனதுள் மகிழ்ச்சி போல!

   நீக்கு
 23. குமுதம் தலையங்கங்கள்! என்னத்தச் சொல்ல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போதெல்லாம் தலையங்கங்கள் - குறிப்பாக தினசரிகளின் தலையங்கங்கள் வாசகர்களால் சீரியஸாக வாசிக்கப்பட்டவை. விவாதிக்கப்பட்டவை. தினமணி, சுதேசமித்திரன், நவசக்தி போன்ற தமிழ் நாளேடுகள் இவ்வாறு தரமான தலையங்களைத் தந்திருக்கின்றன. ஆங்கிலப் பத்திரிக்கை வாசகர்கள் தி ஹிந்து, இண்டியன் எக்ஸ்ப்ரெஸ், வடக்கே தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ட்ரிப்யூன், கிழக்கே தி ஸ்டேட்ஸ்மன் போன்ற பத்திரிக்கைகளில் செய்தி அலசலோடு, தலையங்கம் என்ன சொல்கிறது எனப் படித்து அதைப்பற்றிய மாலை விவாதங்கள், காஃபி டேபிள் டிஸ்கஷன்ஸ் (டெல்லி காஃபி ஹவுஸில்) களில் விவாதிப்பார்கள். அந்தத் தலையங்கம் தொடர்பாகவும் மேற்கொண்டு விமரிசனம், செய்திகள், வாசகர் விளாசல்கள் தொடர்வதுண்டு அப்போது. சிலவற்றில் கலந்துகொண்டதுண்டு. இந்தியப் பத்திரிக்கை உலகம், நடுநிலை காட்டி, அதே சமயத்தில் அரசுக்கெதிரான கறாரான விமர்சனத்தை, காழ்ப்புணர்ச்சி இல்லாது, தனிமனித வெறுப்பு காட்டாது வெளியிட்ட காலம். அவைதான் தலையங்கங்களுக்காக புகழ்பெற்றவை.

   அதே காலத்தில் குமுதமும் எழுதியது தலை அங்கம்! பீடிகையோடு ஆரம்பித்து எதையும் தெளிவாகத் தீர்மானமாகச் சொல்லாமல், இடியாப்பம் சுட்டு, கொழகொழ, வழவழவென வாழைப்பழத்தில் விளக்கெண்ணெயைப் பிசைந்ததுபோல் எழுதி வெளியிட்டார்கள் பெரும்பாலும். வாரப்பத்திரிக்கைகளின் தலையங்கம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை -இந்த மாதிரி எல்லோரையும் சரிக்கட்டி, சிலரைத் தடவிக்கொடுத்துச் செல்லும் போக்கிற்காகத்தான்!

   நீக்கு
  2. பத்திரிக்கைகளில் துக்ளக் மட்டும் எக்ஸெப்ஷன். தலையங்கத்தைத் தேடிப் படிப்பார்கள். க்ரிஸ்ப்பாக, சூடாக, கூர்மையாக இருக்கும். சொல்லவேண்டியதை சரியாக அலசி, சொல்லவேண்டியதை -யாருக்காவது கோபம் வருமோ எனத் தயங்காமல்- அஞ்சாது சொல்லியிருப்பார் சோ. அவர் வழி தனி வழி! அப்படி ஒரு நேர்மையாளரை, தெளிவான சிந்தனை உடையவரை தமிழ்நாடு இனி காணுமா? சந்தேகம்தான்.

   நீக்கு
 24. அம்மாவின் மேல் அப்பாவின் பாசம் தெரிகிறது. பதட்டம் அதன் பின் சிரிப்பு படிக்கவே மகிழ்ச்சி.


  //பாஸ் பேச்சை நகைச்சுவைக்குத் திருப்ப, அந்த நண்பரைப்போல "ஸேர்... ஸேர்.." என்று பேசிக் காட்டினார்..//

  நல்ல நகைச்சுவை பகிர்வு.

  பொக்கிஷம் அருமை.
  முகநூல் பகிர்வுகளும் அருமை.
  கதம்பம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 25. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள். தொற்று நீங்கி மக்கள் நலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  இன்றைய கதம்பம் அருமை! நீங்கள் சொல்வது போல bhaaவத்துடன் பேசுபவர்களை பார்க்க பிடிக்கும். எனக்கு தெரிந்த ஒருவர் தலை அசைத்து, கைகளை ஆட்டி அபிநயத்துடன் பேசுவார். அவர் அணிந்திருக்கும் தோடுகளும் தனியாக ஒரு நாட்டியமாடும். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் நடிகை ஊர்வசியின் நினைவு வரும்.

  நகைச்சுவை பகுதியும் அருமை! ராகங்களை பற்றி தெரிந்துகொண்டோம்

  ஐராவதேஸ்வரர் , பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் புகைப்படங்கள் பதிவிட்டமைக்கு நன்றி! கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வானம்பாடி..   மலர்ச்சியான வணக்கங்கள்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   //எங்கள் வீட்டில் எல்லோருக்கும் நடிகை ஊர்வசியின் நினைவு வரும்.//

   கேளடி கண்மணி ராதிகா நினைவுக்கு வரமாட்டாரா?!

   நீக்கு
  2. தொலைக்காட்சிச் செய்திகள் வாசிப்பவர்கள் எல்லோருமே தலையைத் தலையை ஆட்டியே பேசுவார்கள். ஒரு சிலர் ஜிமிக்கி போட்டுக் கொண்டு தலையை ஆட்டுகிற ஆட்டத்தில் ஜிமிக்கிக் கழன்று வந்துடுமோனு எனக்கு பயம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும்.

   நீக்கு
 26. அரட்டை நன்று.

  லால் பகதூர் சாஸ்திரி - பல மர்மங்கள் விடுவிக்கப் படாமலே இருப்பது காலத்தின் கட்டாயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்ப்போது தான் சில வருடங்களாக கோட்சே எழுதிய/சொன்ன "May I Please Your Honour" முழுவதும் கிடைக்கிறது. அது போல் சாஸ்திரி பற்றியும் பின்னாட்களில்/வருடங்களில் வரலாம். சுபாஷ் சந்திரபோஸ் விஷயம் என்றென்றும் மர்மம் தான். அவர் மகளோ யாரோ சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார். நான்கைந்து வருடங்கள் முன்னர் என நினைவு.

   நீக்கு
 27. வணக்கம் சகோதரரே

  இன்றைய கதம்பம் அருமை. முதல் பகுதி சுவாரஷ்யமாக இருந்தது. மற்றவர் பேச்சை கவனிக்காமல் இருந்து விட்டு தீடிரென கவனிப்பதில், வார்த்தைகளின் அர்த்தங்கள் மாறித்தான் விடும் போலும். தங்கள் அப்பாவின் பதட்டத்தைப் தீடிரென பார்த்ததும் அம்மாவுக்கும் சட்டென சிரிப்பு வந்திருக்கும். அம்மாவின் பூசியை கவனிக்காமல், தான் பூச்சி எனப் புரிந்து கொண்டதை நினைத்து அவரே ரசித்து சிரித்திருப்பார்.அந்த நிலையை உணரும் போது நானும் சிரித்தேன்.

  உங்கள் பாஸின் ஸேரும் சிரிக்க வைத்தது. அவர் நீங்கள்தான் அழைத்திருப்பீர்கள் என உங்களையே அடிக்கடிப் பார்த்திருப்பார். நீங்களும் எவ்வித பாவங்களும் காட்டாது அமர்ந்திருக்கவே அவருக்கு ஏகத்துக்கும் சந்தேகம் டென்ஷன் வந்திருக்கும். நல்ல ரசனையான சிரிப்பை வரவழைத்த அனுபவங்கள்.

  ஜோக்ஸ் நன்றாக உள்ளது. வயிற்றுவலி அந்த கால குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் நேரத்தில் அடிக்கடி வருவதுதான். எனக்கும், டிராயிங் கிளாசுக்கு கலர் பென்சில், தையல் கிளாசுக்கு டீச்சர் கேட்கும் துணி வகையறாக்களை வீட்டில் வாங்கித்தர அன்றைய தினம் இயலவில்லை/நேரமில்லை என்றால் இந்த வயிற்று வலி டாண்னென்று ஒன்பது மணிக்கு வந்து விடும்... ஹா ஹா ஹா.

  ஊசி போட்டுக்கும் பையன் முகபாவம் நன்றாக உள்ளது. சாதுர்யமாக அப்போதைக்கு தப்பி விடுவோம் என்ற நம்பிக்கைத்தான். ரசித்தேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா...  வயிற்று வலி சின்ரோம் உங்களுக்கும் இருந்திருக்கிறதா?  ஆனால் அது உங்கள் தவறல்ல என்று தெரிகிறது!

   நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 28. உங்கள் தந்தையாரின் குமுதம் தலையங்க கலெக்‌ஷன் பிரமிப்பு ஏற்படுத்தியது.

  ஜூலை 1970 லிருந்து ஏப்ரல் 1981 வரை. கிட்டத்தட்ட 11 வருஷங்கள்.
  570 தலையங்கங்கள் (இதழ்கள்) என்ற குறிப்பு வேறே! நூலிழைத் தையல் போட்டு, பாதாம் பேப்பர் அட்டையிட்டு.... எவ்வளவு ஈடுபாடும்,
  ஆர்வமும், பொறுமையும், அதன் அருமையும் தெரிந்திருந்தால் இதைச் செய்திருக்க வேண்டும் என்ற நெகிழ்வில் அவரைக் கையெடுத்துக் கும்பிட மனம் விழைகிறது.

  பாம்பு படம் எடுத்தாற்போன்ற அக்காலத்து 'லை' ஒரு அழகு.
  'ஜூ'வுக்கான கொம்பு மட்டும் கொஞ்சம் தாழ்ந்து இறங்கி..
  'குமுதம்' -- குறியிடலில் தெரியும் பத்திரிகை உலக பெர்பெக்‌ஷன்..
  அவர் வழி வழி வந்த தலைமுறையினரின் இன்றைய ஈடுபாடுகள் மிகுந்த அர்த்தம் நிரம்பியதாக எனக்குப் படுகிறது.

  மனம் தளும்பிய வாழ்த்துக்கள் ஸ்ரீராம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  பைண்டிங் புத்தக சேகரிப்புகளில் மட்டுமே காணமுடியும் அந்தக் கால எழுத்துகள்! 

   அப்பா ஐநூற்று எழுபது என்று போட்டிருப்பது புத்தகத்தின் நம்பர் ஜீவி ஸார்..

   நீக்கு
 29. 'பூச்சி, பூச்சினு பார்த்தா ஆகுமா?' என்ற அந்த நாட்கள் சொல்லாட்சி ஒன்று உண்டு..

  பதிலளிநீக்கு
 30. தாஷ்கண்ட் ஒப்பந்தம் உலக அரங்கில், அன்றைய அரசியல் சூழலில் மிகப் பெரும் வெற்றியாகக் கருதப்பட்டது. இந்திய - ரஷ்ய கூட்டுச் சாதனைகளின் அடுத்த கட்ட நகர்விற்கு இன்னொரு ஆதர்சமாக வழி நடத்தியது.
  இந்த வெற்றி விம்மிதத்தின் நடுவில் சாஸ்திரியாரின் இழப்பு ஒரு இடி போலத்தான் இறங்கியது.
  ஸ்ரீமான் பொதுஜனம் இந்த மாதிரி விஷயங்களில் எப்படியான வதந்திகளை எப்படி எப்படி பரப்ப வேண்டும் என்று திட்டமிட்டு வளர்க்கப் படுகிறார். நம் சிந்தனை வட்டத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களில் யார் எது சொன்னாலும் நம்பும் குழந்தை மன நிலையினையே கொண்டுள்ளோம். நம் பங்கின் காணிக்கையாக நமக்குத் தெரிந்த இன்னும் சில செய்திகளைப் பரப்புவோம். நம்மால் உச்ச பட்சம் முடிந்தது அவ்வளவு தான்.

  தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் நினைவாக
  ருஷ்ய நாட்டில் தாஷ்கண்ட் நகரே உருவானது.

  நம் நாட்டில் அந்த வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பத்தந்தின் நினைவாக என்ன செய்தோம் என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாவற்றையும் அப்படி ஒதுக்கி விட முடியாது ஜீவி ஸார்.  பத்திரிகையில் பொய் மட்டுமே சொல்வார்கள் என்றால் பத்திரிகையை யாரும் வாங்க மாட்டார்கள்.

   நீக்கு
  2. பொய் என்று நான் சொல்லவில்லை. எதற்காக எது நடக்கிறது என்று தெரியாமலேயே இய்க்கப்படுவோம் ந்சம் என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறேன்.

   நீக்கு
 31. நகைச்சுவை துணுக்குகளுக்கான படங்களில் சூப்பர் எக்ஸ்பிரஷன்! ஓவியர் யார்? கோபுலுவா? வாணியா?

  பதிலளிநீக்கு
 32. ஸ்ரீராம் மோதி நீங்கள் வளர்த்த முதல் செல்லம் இல்லையா? மோதி உங்கள் மடியில்!! சொகுசு ராஜா!

  எங்கள் வீட்டில் ப்ரௌனி மடியில் படுப்பதை விரும்புவாள் ஆனால் இந்தக் கண்ணழகி கொஞ்சம் புகு செய்யும். சோசியல் டிஸ்டன்ஸ் ஹாஹாஹா ஆனால் நாம் படுத்தால் அருகில் ஒட்டிக் கொண்டு படுப்பாள் ஆனால் நாம் அவளை மடியில் படுக்க வைக்க விடமாட்டாள்..

  கீதா

  பதிலளிநீக்கு
 33. பூச்சி பூச்சி!!! ஹாஹாஹா சுவாரசியமானதா இருக்கு.

  அப்பா சத்தம் போட்டதும் மோதி விலகிச் சென்று அப்புறம் வந்து படுத்தது..பெரும்பாலும் எல்லா பைரவச் செல்லங்களும் செய்யும் போலத்தான் தெரிகிறது.

  //அருகிலிருந்த சொம்பு தட்டிவிடப்பட்டு, தண்ணீர் கவிழ்ந்து, எழுதிக் கொண்டிருந்த பேப்பர் எல்லாம் நாசம்.//

  பாவம் மீண்டும் எழுத வேண்டியிருந்திருக்குமே. அதுவும் கற்பனையில் வந்தது நினைவில் இருக்க வேண்டும்...மீண்டும் எழுத முடிந்ததா அப்பாவால் அப்புறம்?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதில் இருக்குமே..  சமயங்களில் இன்னும் சிறப்பாக மறுபடி எழுதி விடலாம்!

   நீக்கு
  2. ஆமாம் ஆமாம் ஆமாம் அதே ....அதே.

   கீதா

   நீக்கு
 34. அப்புறம் எங்களிடமிருந்து பதிலுக்கு 'போதிய வரவேற்பு' இல்லாததால் நல்லவேளை, பாஸ் தானாகவே நிறுத்திவிட, //

  ஹாஹாஹாஹா சேர் சேர்...ஹையோ சிரித்து முடியலை...செமையா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்.

  எங்கள் வீட்டில் உறவினர்கள் சிலர் மன்னார்குடி பக்கம். அவர்கள் "வந்தேர்" "சொன்னேர்" அப்புறம் வலி என்பதை வெலி ன்னு சொல்வாங்க. கம்பு - கொம்பு, மேடை - மோடை ன்னு சொல்வாங்க இன்னும் இருக்கு...வானில் மழை மேகம் கூடினால் அதை மோடம் கட்டியிருக்கு என்பார்கள். மாங்காய் பறிக்க என்று சொல்வதற்குப் பதில் மாங்காய் பொறிக்க என்று சொல்வாங்க...

  நான் புகுந்த ??!! புதியில் என்னது இது மாங்காய பொறிக்க ? நான் முழிக்க....என்னது இது இது கூடத் தெரியாதா? ஓ திருனெல்வேலி/மலையாளத்து சைட்??

  நான் பறிக்கன்னு சொல்லிப் பழக்கம் பொறிக்கன்னா அதை உச்சரிக்கும் போது (ரி ஒலிதான் அவங்க சொல்லும் போது) பொரிக்கன்னும் அர்த்தம் ஆகிடுதே அதனால குழப்பம் என்று சொன்னேன்.

  ஹாஹாஹா

  நான் அந்தப்பக்கம் என்றாலும் படித்தது தமிழ் மீடியம் நல்ல தமிழ். நாரோயில் மலையாளத் தமிழில் பேசினாலும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 35. ஹப்பா இப்பத்தான் இந்தக் கருத்தை ப்ளாகர் போட்டுச்சு....வூப்ஸ் வூப்ஸ் நு படுத்தி எடுத்திருச்சு..

  கீதா

  பதிலளிநீக்கு
 36. பொக்கிஷம் ரசித்தேன் ஸ்ரீராம்

  ஆன்லைன் வகுப்புகள் பாவம் ஸ்ரீராம்....அதுவும் எல் கே ஜி உகேஜி பசங்க எல்லாம்...நாற்காலில உட்கார்ந்து கம்ப்யூட்டர் எட்டக் கூட இல்லை. அதுவும் நட்பு ஒருவருக்கு இரட்டையர் எல் கே ஜி...இரண்டிற்கும் தனி தனி கம்ப்யூட்டர்!!! என்ன சொல்ல!

  மத்தியதர அதற்கும் கீழ் இருக்கும் மக்களின் பாடு கஷ்டமாக இருப்பதாகத் தெரிகிறது கணினி இல்லாமல் வாங்கவும் முடியாமல்...

  பாசம் : ஹாஹாஹா செம ஸ்மார்ட் அண்ணன் போல!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 37. அன்பின் ஸ்ரீராம் ..
  நேரமிருப்பின் மின்னஞ்சலைக் கவனிக்கவும்.. நன்றி..

  பதிலளிநீக்கு
 38. வூப்ஸ்! நானும் ப்ளாகருக்குப் போட்டியாக !!!!!!! ஹாஹாஹா
  பின்னே கருத்து வெளியிடாமல் சும்மா வூப்ஸ் வூப்ஸ்னு...சொல்லிட்டே இருக்குது . இதுல மன்னிப்பு வேற கேக்குது!

  தலையங்கத்தில் அந்தக் கேள்வி சரியாகப்படவில்லை. மனைவி கேட்பதில் என்ன தவறு? சாஸ்திரி அவர்களின் மரணம் மர்மம் என்று பல காலமாகப் பேசப்படுவதுதான் ஆனால் உண்மை என்ன என்பது வந்ததோ?

  இதே போன்று நேதாஜி யின் மரணமும். அவர் மகள் என்று நினைவு சில வருடங்களுக்கு முன் பேட்டி எல்லாம் கொடுத்திருந்தார் அதன் பின்ன என்ன என்பது தெரியவில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
 39. ராகங்கள் பற்றி சொல்லியிருப்பது சுவாரசியம்.

  ஆமாம் சில ராகங்கள் சில நேரங்களில் பாட வேண்டும் என்றும் பாடக் கூடாது என்றும் உண்டு என்பார்கள்.

  மியூசிக் தெரபி கூட உண்டுதான்.

  கோஸ்வாமி இவரது முழுப்பெயர் தெரியாது. ஆனால் O. Goswami, இந்தப் புத்தகத்தை இசையில் ஆர்வம் மிக்க நட்பு ஒருவரின் வீட்டில் பார்த்திருக்கிறேன். வாசிக்கா ஆசையாக இருந்தது ஆனால் கேட்கத் தயக்கம்.

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!