சனி, 12 ஜூன், 2021

மலை போலே வரும்..

 மருத்துவர்களையும், செவிலியர்களையும் காவலர்களையும் பாராட்டிய அளவு இவர்களை யாருமே கண்டுகொள்ளவில்லை...

அஞ்சல் துறையின் அபார சேவை  :  சென்னையில் பரங்கிமலையில் உள்ள பரங்கிமலை தபால் பிரிப்பு அலுவலகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மருந்து மாத்திரை மற்றும் மருத்துவ உபகரணங்கள் பார்சல்கள் வருகை அதிகரித்துள்ளது, இவை இங்கு மலை போல குவிந்து வருகிறது.  கூரியர் உள்ளீட்ட தனியார் தபால் நிறுவனங்கள் கொரோனா காரணமாக நேரிடையாக தபாலைக் கொடுக்கும் சேவையை நிறுத்தி வைத்துள்ளதால், இந்திய அஞ்சல் துறையினர்தான் தற்போது அனைவருக்கும் கைகொடுத்து வருகின்றனர்.  அவர்கள் எப்போதும் போல மக்களை நேரடியாக பார்த்து தபால்களை வழங்கி வருகின்றனர், அடுக்கு மாடிவீடுகள் என்றாலும் அசராது படியேறிச் சென்று பார்சல்களை கொடுக்கின்றனர்,கையெழுத்து போடத்தெரியாத வயதானவர்களின் கைகளைப் பிடித்து கைரேகை வாங்கிக் கொண்டு அவர்களுக்கான உதவித் தொகையினை வழங்கி வருகின்றனர்.
======================================================================================================
திருப்புத்துார் அருகே சிறு கூடல்பட்டியில் இயற்கை முறையில் நெல், வாழை சாகுபடி செய்வதோடு,ஆண்டுக்கு 15 டன் விதை நெல் விளைவித்து சாதித்து வருகிறார் விவசாயி பழனியப்பன்.  இயற்கை முறை விவசாய சாகுபடியில் இவர் நெல், வாழை, காய்கறி உற்பத்தியில் சாதிப்பதைப் பார்த்து வேளாண்துறையினர் விதை நெல் உற்பத்தியை இவரிடம் அளித்துள்ளனர். அதில் ஆண்டு தோறும் 10 ஏக்கரில் 15 டன் விதை நெல் உற்பத்தி செய்து கொடுக்கிறார். இத்துடன் வாழை பயிரிட்டு ஆண்டு தோறும் இலை, காய் விற்பனையும் செய்கிறார். மேலும் கூட்டுப் பண்ணைய முயற்சியாக பசுக்கள், கோழி வளர்ப்பிலும் வருவாய் ஈட்டி வருகிறார்.

==============================================================================================

கோவிட் தொற்றுக்கு புதிய சிகிச்சை: 12 மணி நேரத்தில் குணமடைந்த நோயாளிகள்!

டில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில், 36 வயதான சுகாதார ஊழியர் மற்றும் 80 வயது முதியவர் ஆகிய இரண்டு பேருக்கு மருத்துவர்கள் மோனோகுளோனல் ஆன்ட்டி பாடி தெரபி எனப்படும் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொண்டனர். ஆர்.இ.ஜி.கவ்.2 (REGCov2) டோஸ்கள் செலுத்தப்பட்ட அந்த நோயாளிகள் 12 மணி நேரத்தில் குணமடைந்து உள்ளனர்.

=========================================================================================

44 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  தொற்றில்லா உலகம் எங்கும் நிலைக்க வேண்டும்,
  இறைவன் அருளால்,.

  பதிலளிநீக்கு
 2. வரப்போகிற கீதாமாவுக்கும், நல்ல செய்திகளைப்
  பதிவிட்ட ஸ்ரீராமுக்கும் மற்றும் அனைவருக்கும் இன்னாள் நன்னாளாக வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் அனைவருக்கும்.

  இன்று வல்லிம்மா முதலில் வந்துள்ளாரே... அட..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு முரளிமா,
   இன்று வெளியில் செல்ல முடியாத அளவு
   வெயில் அதிகம்.
   அதனால் இணையத்துக்கு வந்துவிட்டேன்.
   காலை வணக்கம்மா.

   நீக்கு
 4. திருப்பத்தூர் சிறுகூடல் பட்டி விவசாயி பழனியப்பனுக்கு மனம் நிறை
  வந்தனங்கள்.
  விதை நெல் எத்தனை வீர்யத்துடன் இருக்கிறதோ அத்தனை வளப்பமும் கூடும்
  என்பதில் எத்தனை மகிழ்ச்சி.!!!!

  பதிலளிநீக்கு
 5. 12 மணி நேரத்தில் குணமாக்கிய தில்லி கங்காராம் மருத்துவமனைக்கு

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. மிக உன்னதமான சேவை செய்து வரும் பரங்கிப்பேட்டை தபால் அலுவலக ஊழியர்களுக்குக் கோடானு கோடி நன்றி சொல்ல வேண்டும். வெய்யில் ,மழை என்றுபாராமல்
  அலைந்து
  அத்தனை மக்களையும் நேரில் சென்றடையும்
  உதவியைச் செய்பவர்களுக்குத் தனி நன்றி.

  இந்த வார பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும்
  மனம் மகிழ்ச்சியை அதிகரிக்கின்றன. நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா. பரங்கிப்பேட்டை அல்ல, பரங்கிமலை! தாமஸ் மவுண்ட்.

   நீக்கு
  2. ஓ. மன்னிக்கணும் பா. அவசரத்தில் மலை பேட்டையாகிவிட்டது. கீதாவை எங்கள் காணோம்?

   நீக்கு
  3. விசாரித்ததுக்கு நன்றி வல்லி. காலையில் இருந்து வேலைகள்/வேலைகள்/வேலைகள். இப்போக் கூட வந்தேன். உடனே பூவும் வந்துவிட்டது. ஆனால் மல்லிகைப்பூ. அதனால் சீக்கிரம் தொடுத்துடலாம்.

   நீக்கு
 7. ஆசிரியர்கள் எல்லோரும் ரொம்ப பிசி போல. அவசர கோலம் அள்ளித்தெளித்த கோலம் என்று இன்றைய பதிவு அமைந்து விட்டது. ஹி ஹி.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை JC ஸார்...  வித்தியாசமான செய்திகளும் சேர்ந்தே இடம்பெற்று வந்தன  இந்தப் பகுதியில்.  இந்த வாரம் அதை மட்டுமல்லாது கொரோனா கொரோனா என்று வந்த செய்திகளையும் முடிந்தவரை தவிர்க்க நினைத்ததன் விளைவு.  

   நீக்கு
  2. கடைசிச் செய்தி கொரோனா இல்லை. கோவிட் 19. இஃகி,இஃகி,இஃகி.

   நீக்கு
 8. அனைவருக்கும் காலை வணக்கம். கொரோனா இல்லாத வித்தியாசமான செய்திகளுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 9. நல்ல செய்திகள் பகிர்வு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. இயற்கை விவசாயி பழனியப்பனை வணங்குகிறேன். சுற்றி அத்தனை பேரும் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் பொழுது நாம் நம் பயிர்களை காப்பாற்றுவது ரொம்ப கடினம். அவருடைய சாதன மிகப்பெரியது.

  பதிலளிநீக்கு
 11. சிறுகூடல்பட்டி கவிஞர் கண்ணதாசன் ஊர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் சொல்ல இருந்தேன். நீங்க காலம்பரயே முந்திட்டீங்க! :))))

   நீக்கு
 12. அஞ்சலக ஊழியர்கள் மட்டுமல்ல எல்லா அரசு ஊழியர்களும் பணிபுரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் அவர்களை கண்டு கொள்ளவேயில்லை.We took them for granted.

  பதிலளிநீக்கு
 13. விதை நெல் விவசாயிக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 14. //அஞ்சல் துறையின் அபார சேவை..//

  ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற முது மொழி தான் நினைவுக்கு வருகிறது.

  இந்தத் துறை ஊழியர்கள் என்ன தான் செய்யவில்லை?

  மாலேரியாவின் கொடுமையான ஆட்ட காலங்களில் கொய்னா மாத்திரை சப்ளைக்கு தபால் இலாகா தான் சேவைக் களம் ஆயிற்று.

  தீவிர குடும்பக் கட்டுப்பாடு பிரச்சார காலங்களில் நிரோத் சப்ளை களமும் ஆயிற்று.

  தனியார் முதலை வாய் அகப்படாமல் குற்றுயிரும் குலையுருமாய் கிடக்கிற ஆகப்பெரிய அகில இந்திய இலாகா!
  குட்டி குட்டி கிராமங்களிலெல்லாம் கிளைகள் பரப்பி நிற்கும் ஆல விருஷம்.

  தபால் இலாகா சேமிப்பு வங்கிப் பிரிவை சரியான முறையில் ஊட்டச் சத்திட்டு வளர்த்தால் இந்திய அளவில் மிகப் பெரிய வங்கிச் சேவையை வழங்கும் நிருவனமாகத் திகழும்.

  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தபால் இலாகா சேமிப்பு வங்கிப் பிரிவை சரியான முறையில் ஊட்டச் சத்திட்டு வளர்த்தால் இந்திய அளவில் மிகப் பெரிய வங்கிச் சேவையை வழங்கும் நிறுவனமாகத் திகழும்..//

   ஜீவி அண்ணா அவர்களது கருத்து சிறப்பு..

   நீக்கு
  2. தபால் இலாகா சேமிப்பு வங்கிப் பிரிவை சரியான முறையில் ஊட்டச் சத்திட்டு வளர்த்தால் இந்திய அளவில் மிகப் பெரிய வங்கிச் சேவையை வழங்கும் நிருவனமாகத் திகழும்.//

   அதே...ஜீவி அண்ணா.

   தபால் துறை பத்தி நல்ல கருத்து..

   கீதா

   நீக்கு
  3. தபால் இலாகா மூலம் சேமிக்கும் சிறு சேமிப்பு முகவராக நாலைந்து ஆண்டுகள் இருந்திருக்கேன். அலைச்சல் அதிகம் இருக்கும். என்றாலும் வருமானமும் வரத்தான் செய்தது. மத்திய அரசு 3% கொடுக்கும். அதில் இரண்டு சதவீதம் வாடிக்கையாளர்களுக்கே போயிடும். அதைத் தவிர்த்து மாநில அரசு கொடுக்கும் ஊக்கத்தொகை 1%. அது வாங்கி முழுக்க முழுக்க வாடிக்கையாளருக்கே கொடுக்கும்படி இருக்கும். என்றாலும் நமக்கு ஒரு சதவீதத்திலேயே நல்ல வருமானம் வரும். பின்னாட்களில் நம்மவருக்கு மறுபடி ராஜஸ்தான் மாற்றல் கிடைக்கவே எல்லாத்தையும் ஏறக்கட்டினேன். எல் ஐசி முகவர், பியர்லெஸ் முகவர், (இதில் நல்ல கமிஷன் வரும்) புடைவை வியாபாரம்னு எல்லாமும் செய்து பார்த்தாச்சு! புடைவை வியாபாரம் உண்மையிலேயே லாபம் வரும் தொழில். நல்ல சாமர்த்தியம் இருக்கணும்.

   நீக்கு
 15. நேர்மறையான எண்ணங்கள், செய்திகள் அருமை! விதைநெல் விளைவித்து கொடுக்கும் நல்ல உள்ளத்துக்கு நன்றி! அஞ்சல் துறைக்கும் salute. இவர்களும் முன்களப்பணியாளர்களே. தொற்று குறைந்து இவ்வுலகம் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. எல்லாம் நற்செய்திகள்.பகிர்ந்த உங்களுக்கும், ஏனைய அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. அஞ்சல் துறை சேவைகள் பற்றி நான் இரு வருடங்கள் முன்னால் (?) ஒரு பதிவே போட்டிருக்கேன். இப்போதும் எங்களுக்குத் தபால்கள் தபால் துறையிடம் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. ஸ்பீட் போஸ்டுகளும் வருகின்றன. பெண்/பையருக்கு ஆயுர்வேத மருந்துகள், சில சாமான்கள் அஞ்சல் துறை மூலமே அனுப்புவோம். இது தான் கூரியரை விடப் பாதுகாப்பானது என்பதால். இப்போவும் இந்தச் செய்தியை ஏற்கெனவே படிச்சிருக்கேன். சிறுகூடல் பட்டி விவசாயி பற்றியும் பார்த்தேன். கங்காராம் மருத்துவமனைபற்றிய செய்தியைத் தொலைக்காட்சி/தினசரிகள் மூலம் பார்த்தேன். அனைத்தும் நல்ல செய்திகள்.

  பதிலளிநீக்கு
 18. பூத்தொடுக்கப் போகிறேன்/பூத்தொடுக்கப் போகிறேன். என்ன பூ தொடுக்கப் போறீங்க?என்ன பூ தொடுக்கப் போறீங்க? மல்லிகைப் பூ தொடுக்கப் போறேன், மல்லிகைப் பூ தொடுக்கப் போறேன். வரேன், அப்புறமா முடிஞ்சா! இன்னிக்குக் குஞ்சுலு வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் இடைவெளி விட்டு தொடுங்க. நூல் விலை அதிகமில்லை. ஹாஹா

   நீக்கு
  2. நெ.த. பேத்தலா இருக்கே! நூல் விலை அதிகம் இல்லைனால் எதுக்கு இடைவெளி விட்டுத் தொடுக்கணும்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கெட்டியாகக் கட்டினால் பூக்கள் மலரும்போது பார்க்கக் கண்ணுக்கும் தலைக்கு வைக்கும்போதும்/உம்மாச்சிங்களுக்கு வைக்கும்போதும் பார்க்க அழகாயும் இருக்கும்.

   நீக்கு
 19. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 20. செவிலியர் தம் பணிச் சிறப்பு சொல்லுதற்கு அரியது..

  பதிலளிநீக்கு
 21. நம் வீட்டில் அஞ்சல் சேவையைத்தான் பயன்படுத்திவருகிறோம். துரித அஞ்சல் சேவை என்று..எல்லாமும்.

  பார்க்கப் போனால் சேமிப்பு நல்ல விஷயம் ஆனால் ஏனொ அது அத்தனை பேசப்படுவதில்லை. ஊரில் இருந்தவரை அஞ்சல் சேமிப்புதான் அதிகம் பயன்படுத்தினோம்.

  அவர்கள் சேவை மகத்தானது இங்கு அந்த பாசிட்டிவ் செய்தி சொன்னதுக்குப் பாராட்டுகள்.

  கண்டிப்பாக அவர்களை மட்டுமின்றி எல்லா அரசு சேவைகளைச் செய்யும் பணியாளர்களை வாழ்த்துவோம் பாராட்டுவோம்.

  அவ்வளவு ஏன் இங்கு நம்ம ஸ்ரீராம், வெங்கட்ஜி எல்லாரையும் பாராட்ட வேண்டும்..வேறு யாரேனும் விடுபட்டால் அவங்களையும் இதில் சேர்த்ததா நினைச்சுக்கோங்க!!

  கீதா

  பதிலளிநீக்கு
 22. 12 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகளைக் குணமாக்கிய தில்லி கங்காராம் மருத்துவமனைக்கப் பாராட்டுகள், வாழ்த்துகள்! நல்ல விஷயம்

  கீதா

  பதிலளிநீக்கு
 23. இயற்கை முறை விவசாய சாகுபடியில் இவர் நெல், வாழை, காய்கறி உற்பத்தியில் சாதிப்பதைப் பார்த்து வேளாண்துறையினர் விதை நெல் உற்பத்தியை இவரிடம் அளித்துள்ளனர். //

  வாவ்!! விவசாயி பழனியப்பன் அவர்களை மனதாரப் பாராட்டுவோம்..

  கீதா

  பதிலளிநீக்கு
 24. விவசாயி பழனியப்பன் அவர்களைப் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
  அஞ்சலக துறையில் தங்கள் சேவையை தொடர்ந்து செய்து வரும் அனைவரையும் மனதாற பாராட்டுவோம்.

  விவசாயி பழனியப்பன் அவர்களுக்கும், 12மணி நேரத்தில் தொற்றை குணப்படுத்திய தில்லி கங்காராம் மருத்துவமனைக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 26. //இந்திய அஞ்சல் துறையினர்தான் தற்போது அனைவருக்கும் கைகொடுத்து வருகின்றனர்.//
  அவர்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்.
  விவசாயி பழனியப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  12மணி நேரத்தில் நோய் தொற்றை குணப்படுத்திய தில்லி கங்காராம் மருத்துவமனை மருத்துவர்களுக்கும், பாராட்டுக்களும், வாழ்த்துக்கள். விரைவில் தொற்று முற்றிலும் ஒழியட்டும்.

  நல்ல செய்திகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!