வெள்ளி, 25 ஜூன், 2021

வெள்ளி வீடியோ : உவமை வேணாம் உண்மை சொல்லு மாமா

கிருஷ்ணசந்திரன்.
இவரை ஒரு பாடகராக மட்டுமே அறிவேன்.  அதுவும் சொற்ப பாடல்கள் பாடிய பாடகராக நினைத்திருந்தேன்.  பி சுசீலாவுடன் இணைந்து இவர் பாடிய பாடல் கேட்டதும் பரவாயில்லை, சுசீலாம்மா புதுப் பாடகர்களுடன் எல்லாம் பாடி இருக்கிறார்களே என்று அப்போது நினைத்துக் கொண்டேன்.  

அப்புறம்தான் தெரிகிறது, கிருஷ்ணசந்திரன் மலையாளத்தில் புகழ் பெற்ற பாடகர் என்று.  ஜெயச்சந்திரனுக்கு போட்டி போடும் குரல் நிறைய இனிமையான பாடல்களை மலையாளத்தில் பாடியுள்ளார்.

அதைவிட எனக்குத் தெரியாத ஒரு விஷயம், தமிழில் காமெடி ரோல் எல்லாம் செய்து கொண்டிருந்த நடிகை வனிதாவைத்தான் அவர் திருமணம் செய்திருக்கிறார் என்று!

மேலும் தொலைக்காட்சி தொடர்களில் எல்லாமும் நடித்திருக்கிறார் என்றும் தெரிந்தது.

இளையராஜாதான் இவரை தமிழில் முதலில் பாட வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

கோழி கூவுது படத்தில் வரும் "ஏதோ மோகம்...  ஏதோ தாகம்.."  பாடல் இவர் பாடியதுதான்.  பாடல் செம ஹிட் அடித்தது. 

அந்தப் பாடலில் இவர் குரலைவிட இளையராஜாவின் இசை ஜாலம்தான் முன்னிலை பெற்றது என்று எனக்குத் தோன்றும்.  ஆரம்பத்தில் வரும் அந்தப் பின்னணி இசை, பாடல் வரி தொடங்கியதும் பின்னால் ஒலிக்கும் குழுவினர் குரல்..  இடையில் வரும் இசை என்று இளையராஜா அந்தப் பாடலில் தூள் கிளப்பி இருப்பார்.

ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வக்கிளியே..

ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே...


தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட‌ நேரமாச்சு
சூடு கண்ட ஈர மூச்சு தோளச்சுட்டு காயமாச்சு
பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே...

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டு பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து
அக்கம் பக்கம் சுத்தி பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச்சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது


முதலில் வந்ததது கிருஷ்ணசந்திரன் என்றதும் என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பாடல்.  அது அவர் ஜானகி அம்மாவுடன் பாடியது.  இன்று பகிர்வதாக இருக்கும் பாடலுக்கு வருகிறேன்.  இந்தப் பாடல் சுசீலாம்மாவுடன் பாடியது.

இனிமை இதோ இதோ என்று ஒரு படம் வந்ததும் தெரியாது..  போனதும் யாருக்கும் தெரிந்திருக்காது.  எனக்குத் தெரியும்.  காரணம் இந்தப் பாடல்!  நான் படம் பார்க்கவில்லை.  பார்க்கவும் மாட்டேன்.  தெறலுக்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தும், நிஷாவும் நடித்திருள்ள படம் என்று நினைக்கிறேன்.  காட்சியில் அவர்கள்தான் வருகிறார்கள்!.  இதில் நிஷா என்கிற அந்த நடிகை கல்யாண அகதிகள் படத்திலும் நடித்தவர், 2007 ல் மறைந்து விட்டதாக விக்கி சொல்கிறது.

​1983 ல் வந்த இந்தப் படத்துக்கு இசை இளையராஜா.  வைரமுத்துவின் பாடல்வரிகள்.  இந்தப் படத்தின் மற்ற பாடல்கள் பற்றி எதுவும் நினைவில்லை.  அப்போது அடிக்கடி வானொலியில் கேட்ட பாடல் இது.

முதல் சரணத்தில் மனங்கள்  பரிமாறிக்கொள்ள, இரண்டாவது சரணத்தில் வாயசைக்கிறார்கள்!​

காதலுக்கே உரித்த பொய்மொழிகளை உவமைகளாக காதலன் அடுக்கியதும் காதலி 'உள்ளங்கை எங்காவது உடலைத் தாங்குமா' என்று கேட்பதும், 'உவமை வேண்டாம் உண்மை சொல்லு மாமா' என்று பாடுவதும் ரசனை.

இளையராஜாவின் வெற்றிப்பாடல்களில் ஒன்று.


அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன்மயிலே

என்ன தயக்கம் என்ன மயக்கம் 
என்ன தயக்கம் என்ன மயக்கம் 
நீ சிரிச்சா போதும்
குறிஞ்சி பூக்கும் 

அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன்மயிலே 

ஓ.. ராமனே
உன் ஆசை மெய்யானதா 
ஏ..பூங்கொடி
இந்த பூமி பொய்யானதா 

காதில் சொன்ன வார்த்த
என்னை காவல் காக்குமா 
நேத்து சொன்ன பேச்சு
நெறம் மாறிப்போகுமா 

தங்கம் நெறம் கருக்குமா
ஊர் ஒலகம் பொறுக்குமா 
நம்பித்தானே
வந்து விழுந்தேனே 

அள்ளி வச்ச மல்லிகையே..ம்..ம்..
புள்ளி வச்ச பொன்மயிலே..ம்..ம் 
என்ன தயக்கம் என்ன மயக்கம் 
நீ சிரிச்சா போதும்
குறிஞ்சி பூக்கும் 

அள்ளி வச்ச மல்லிகையே..ம்..ம்..
புள்ளி வச்ச பொன்மயிலே 

ஆகாயமும்
இந்த மண்ணும் சாட்சியடி 
யார் கேட்டது
மனசாட்சி போதும் இனி 

பாதம் நோகும் போது
உள்ளங்கையால் தாங்கவா 
பொய்யே சொல்ல வேணாம்
சின்ன கையே தாங்குமா 

வெண்ணிலவு உதிருமா
நட்சத்திரம் நகருமா 
உவம வேணாம்
உண்ம சொல்லு மாமா 

66 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம். இன்னும் வரப்போகும் அனைவருக்கும்
  எல்லா நாட்களும்
  இனிமையும்,
  எந்தத் தொற்றும் இல்லா நாட்களும்
  தொடர் இறைவனே துணை.

  பதிலளிநீக்கு
 2. இரு பாடல்களும் மிக மிக அருமை.
  ஏதோ மோகம் மலேசியா வாசுதேவன் என்றே
  நினைத்திருந்தேன் மா.

  இந்தப் படத்தில் தான் அந்த' அண்ணே அண்ணே
  சிப்பாய் அண்ணே'' பாட்டு வருமா.
  நினைவில் இல்லை.
  கிருஷ்ண சந்திரன் ,துபாய் கலை நிகழ்ச்சிகளில்
  பாடி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
  நல்ல குரல்.

  அள்ளி வச்ச மல்லிகையே!!! அட இந்த வாரமும் மல்லிகை
  வந்து விட்டது.
  அப்போதெல்லாம் ரேடியோ சிலோனும் , விவித் பாரதியும் தான்

  பாட்டுகள் கேட்க மிகத் தோது.
  சமையல் அறையில் , கூடவே வரும் புஷ் ட்ரான்ஸிஸ்டர்
  என் அன்புத் துணை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா..  அண்ணே அண்ணே பாடலும் இந்தப் படத்தில்தான்.  டாக்டர் கிரப் என்பவர் பாடி இருப்பார்.

   //அட இந்த வாரமும் மல்லிகை வந்து விட்டது.//

   அட...   ஆமாம்ல... 

   நீக்கு
  2. உடனே நினைவுக்கு வந்தது 'பொத்தி வச்ச மல்லிக மொட்டு'
   தான்:)

   நீக்கு
  3. அம்மா...  எத்தனை பாடல்கள் இருக்கின்றன மல்லிகையில்...  'மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்..   புன்னகையின் நினைவாக....'

   நீக்கு
  4. உடனே நினைவுக்கு வந்தது 'பொத்தி வச்ச மல்லிக மொட்டு'
   தான்:)//

   அம்மா செம போங்க! பாருங்க இந்தப் பாட்டு கேட்டதும் பொத்தி வைச்ச மல்லி பாட்டு டக்குனு தோணிருக்கு..!! இரண்டு பாடல்களும் ஒரே ராகம் ரெண்டு பாட்டையும் சூப்பரா மெட்லி பண்ணலாம்.

   கீதா

   நீக்கு
  5. காலம்பர இருந்து "பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு" பாடலே சுற்றிக் கொண்டிருக்கு. இங்கே வந்தால் இந்தப் பாடல் பற்றிய பேச்சு. :)

   நீக்கு
  6. கீதாக்கா உங்களுக்கும் தோன்றியதா!! ஜூப்பற்!!! இங்க நிறைய இசையோடு ஒன்றியவர்கள் இருக்காங்க!!!

   இந்த அள்ளி வைச்ச மல்லிகை ல 2.35 கிட்ட வரும் போது ஒரு ஃப்ளூட் வரும் செம ம்யூஸிக் அதுலருந்து அப்படியே துள்ளி துள்ளினு போயிடலாம்...அப்படியே மத்யமாவதி போய் டக்குனு பாட்டு ஹிந்தோளத்துக்கு வரும்.

   மல்லிகை மொட்டை பொத்தி பொத்தி வைச்சு விரிஞ்சதும் அள்ளி வைச்ச மல்லிகையேன்னு ஹாஹாஹா !!!!

   கீதா

   நீக்கு
  7. இப்படி எல்லாம் வேற இருக்கா?   பாட்டு ஹிந்தோளமா கீதா?

   நீக்கு
  8. ஆமாம் ஸ்ரீராம் ஹிந்தோளம் பொவைம வும் அவைம வும் ரெண்டுமே.

   கீதா

   நீக்கு
 3. கிருஷ்ண சந்த்ரன் குரலுடன்
  சுசீலாம்மா குரல் என்னமாகத் தான் இழைகிறது.
  'என்ன பார்வை' பாடலில் இருந்தே
  புதுப் பாடகர்களுடன் சுசீலாம்மா குரல் ஒலிக்கிறதே.

  பாடல்வரிகளும் அருமை. நீங்கள் சொல்வது போலப் பார்க்க வேண்டாம்.
  கேட்கலாம்.

  மிக மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  அப்போது அவரும் புதுப்பாடகர்தானே...   அப்படிச் சொல்லும்போது 'ஆயிரம் நிலவே வா'வையோ 'இயற்கை எனும்' பாடலையோதான் விட்டுவிட முடியுமா?!!

   நீக்கு
  2. மிக மிக உண்மை. எப்படி மறக்க முடியும் .
   நல்ல தாய் போல அவர் அவர்களுக்கு நல்ல ஆரம்பம்.

   நீக்கு
  3. இந்த வருடம் எஸ் பி பி பிறந்த நாளில் சுசீலாம்மா வெளியிட்டிருந்த ஒரு தெலுங்கு வீடியோ நேற்று பார்வைக்கு வந்தது.

   நீக்கு
 4. எங்களுக்கு இன்னும் 24 ஆம் தேதிதான்.
  பல ஆனந்தத் தருணங்களுக்குக் காரணமாக
  இருந்த மெல்லிசை மன்னருக்கும்
  ஆகிக் கொடுத்த அன்புக் கவிஞருக்கும் இனிய பிறந்த நாள் நமஸ்காரங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறைவன் இந்த உலகுக்கு அனுப்பிய தேவதூதர்கள்.  தமிழ் ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியவர்கள்.

   நீக்கு
  2. ஆமாம் மா. எத்தனை பாடல்களை
   அவர்களுக்காகப் பதிவிடுவது?
   எல்லாமே அவர்கள் கொடை.

   நீக்கு
 5. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 6. இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்கள். இன்றும் கேட்டேன்.
  கிருஷ்ணசந்திரன் நல்ல பாடகர். இனிமையான குரல்.
  பிரபலமான நடிகருக்கு பாடி இருந்தால் நிறைய பாடல்கள் பாடி இருப்பார் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 8. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  இன்றைய இரு பாடல்களை பற்றிய விபரங்களுடன் பதிவு அருமை. கிருஷ்ண சந்தர் என்ற பாடகர் முன்பு வானொலியில் அடிக்கடி கேட்ட பெயர்தான். இப்போது நீங்கள் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. வனிதாவை நினைவிருக்கிறது. ஒய். ஜி மகேந்திரனுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குணசித்திர வேடங்களிலும் பல படங்களில் வந்துள்ளார் என நினைக்கிறேன்.

  முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். இரண்டாவது கேட்டதாக நினைவில் இல்லை. இந்தப் படமும் கேள்விபட்டதேயில்லை. ஆனால்,படத்தின் வரிகளில் பிரபலமான பாட்டுதான் வந்துள்ளது இல்லையா?

  இரண்டாவது பாடலை கேட்டால் நினைவுக்கு வருமோ என்னவோ...! கேட்கிறேன். கோழி கூவுவது விஜி என்ற நடிகையும் இப்போது இல்லை என நினைக்கிறேன். அவரும் பல படங்களில் நன்றாக நடித்திருப்பார். திறமையானவர்களினால் சில சமயம் பிரகாசிக்க முடியாமல் போவதும் விதிதான். இன்றைய இரண்டு நல்ல பாடல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோழி கூவுது விஜியைப் பார்த்ததுமே "காலச்சக்கரம் நரசிம்மா" அவரைப் பற்றி எழுதி இருந்தவை நினைவில் வந்து மனது வேதனைக்குள்ளாகி விட்டது. பாவம், வாழ வேண்டிய வயசில்! :(((((

   நீக்கு
  2. ஆமாம் கீதாக்கா எனக்கும் நினைவு வந்தது.
   பாவம்.

   கீதா

   நீக்கு
  3. நன்றி கமலா அக்கா, கீதா அக்கா, கீதா!

   நீக்கு
 11. இரண்டு பாடல்களுமே கேட்டு இருக்கிறேன் ஜி நல்ல பாடல்களே...

  "இனிமை இதோ இதோ" என்று ஒரு படம் வந்ததும் தெரியாது. எனக்கு ஞாபகம் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ...   அப்படியா?  எனக்கு பாட்டு மட்டும்தான் நினைவில்!  நன்றி ஜி.

   நீக்கு
 12. இரண்டு பாடல்களுமே மிகவும் இனிமையான பாடல்கள் - கேட்டு ரசித்த பாடல்களும் கூட! இரண்டாவது பாடல் படம் குறித்து அறிந்திருக்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வெங்கட்.  முதல் பாடலில் இசை பிரதானம்.  இரண்டாவது பாடலில் குரலும் வரிகளும்.

   நீக்கு
 13. அரே வாவ்! நம்ம கிருஷ்ணசந்திரன்! ஸ்ரீராம் நினைவுபடுத்தியதுக்கு மிக்க நன்றி. நல்ல பாடகர். கேரளச்சேட்டன். அங்கு ரொம்ப ஃபேமஸ். நடிகர், டப்பிங்க் ஆர்டிஸ்ட். துளசியின் ஊரைச் சேர்ந்தவர்.

  (துளசியின் ஊர் என்றதும் சொல்ல விட்டுப் போனது நினைவுக்கு வர...துளசிக்கு உடல்நலம் சரியில்லை. கொஞ்ச நாட்களாகவே. நல்ல காலம் தொற்று எதுவுமில்லை...)

  ஜெயசந்திரனுக்கும் இவர் குரலுக்கும் கூட நாங்கள் குழம்பியதுண்டு (போட்டி வைத்து அந்தப் போட்டி என்னன்றது அப்புறம்....)

  பிடித்த பாடகர். வொய் ஜி யோடு நகைச்சுவையில் கூட வருவாரே வனிதான்னு நம்மூர்? அவங்களைத்தான் கல்யாணம் செய்துகொண்டார்.

  இந்தப் பாட்டு மிகவும் பிடித்த பாட்டு ஏதோ மோகம்...வரேன் அடுத்த கருத்திற்கு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வனிதா இப்போவும் நெடுந்தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

   நீக்கு
  2. ஓ! இப்பவும் நடிக்கிறாரா வனிதா?

   கீதா

   நீக்கு
  3. முன்னெல்லாம் நிறையத் தொடர்களிலே நடிச்சுட்டு இருந்தார். அதுவும் விகடன் எடுக்கும் தொடர்களில் கட்டாயம் இருப்பார். இப்போ விகடன் குழுமத்தின் தொடர்கள் ஏதும் வருவதில்லை. ஸரிகம தான் முன்னணி இப்போ. வனிதா அவ்வப்போது வருகிறார். இப்போ ஓர் தொடரில் முக்கியப் பாத்திரத்தில் வருகிறார்.

   நீக்கு
  4. அட்டா... வேலை இருக்கு.. ரொம்ப பிசி... இன்று ரொம்ப லேட்டா வந்தாலும் சட்னு போகணும்.... இதெல்லாம் சீரியல்கள் பார்க்கத்தானா? நானொரு அப்பாவி.. இன்று ஏதேனும் விசேஷம், பிரதோஷம், பூசை என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன்.

   கொஞ்சம் விட்டால் இதிலேயே பிஎச்டி பண்ணிவிடுவார் போலிருக்கே

   நீக்கு
  5. நன்றி..  நன்றி..  நன்றி....

   நீக்கு
  6. நெல்லை, வீட்டில் தொலைக்காட்சியில் தொடர்கள் ஓடும்போது அங்கேயே உட்கார்ந்து கொண்டு கண்ணையும்/காதையும் பொத்திக்கொள்ளவா முடியும்? அதுக்காக அதிலேயே ஆழ்ந்தும் போவதில்லை. எட்டு மணிக்குள் போய்ப் படுத்தால் பின்னர் நடு இரவு தாண்டி உறக்கம் வராமல் கொட்டுக் கொட்டுனு படுக்கையில் புரண்டு கொண்டிருக்கணும். அதனால் ஒன்பது/ஒன்பதரைக்குப் படுக்கப் போவேன். அதுவரையில் புத்தகம் இல்லைனா மொபைல்னு பார்த்தாலும் அவ்வப்போது காதில் விழும் வசனங்கள்!

   நீக்கு
 14. நீங்களும் சொல்லிருக்கீங்க இந்த தகவல் எல்லாம்...கிருஷ்ணசந்திரன் பார்த்ததும் தோன்ற சொல்லிட்டேன் முந்தைய கருத்தில்

  ரெண்டாவது பாட்டும் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம் மிகவும் பிடிக்கும். படம் பெயர் இப்ப நீங்க சொல்லித்தான் தெரிகிறது. அழகான இசை அழகான குரல்...அந்தக் குரலுக்கு இப்படி ஒரு கதாநாயகர்...யாரப்பா அங்கே இந்தக் கதாநாயகரை படத்தில் போட்ட அந்த ஆளை கர்ர்ர்ர்ர்ர் நற நற...ஹாஹாஹாஹாஅ

  கீதா

  பதிலளிநீக்கு
 15. பாடல்கள் நன்றாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  நீங்கள் பகிர்ந்ததில் இப்போது இரண்டாவது பாடலும் கேட்டேன். கேட்டவுடன் இதுவும் முன்பெல்லாம் வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. ஆக இன்றைய இரண்டு பாடலும், அழகான இசையுடன், பாடியவர்களிளின் (கிருஷ்ண சந்திரன், எஸ்.ஜானகி, பி.சுசிலா) இனிய குரல்களுடன் கூடிய பொருத்தமான தேர்வு. பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. இரண்டாவது பாடல் எப்போதோ கேட்ட நினைவு. ஏனாதானோ இசையோ?

  முதல் பாடல் நிறையதடவை கேட்டு ரசித்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் பாடல் ரசிக்கும் அதே அளவு இரண்டாவது பாடலையும் நான் ரசிப்பேன்!

   நீக்கு
 18. அந்த முதல் பாடல்... இசை!..

  கோழி கூவிய போது ஸ்டீரியோ ஒலியமைப்புடன் பாடல்கள் வெளிவரத் தொடங்கின.. காலம் மாறிக் கொண்டிருந்தது.. வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு விடலைக் காதல்...

  Head phone ஐ மாட்டிக் கொண்டு பாடலைக் கேட்டால் பாடலின் துவக்கத்தில் உச்சந்தலையில் தண்ணீர் கொட்டுவது போலிருக்கும்... நூறு முறைகளுக்கு மேல் இந்தப் பாடலைக் கேட்டிருப்பேன்.. ஆனால் ஒருமுறை கூட பாடல் காட்சியை முழுதாகப் பார்த்தது இல்லை.. இப்போதும் கூட!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  அந்த இசை...    தூள் கிளப்பி இருப்பார் இளையராஜா.

   நீக்கு
 19. இரண்டாவது பாடலை அதிகமாகக் கேட்டதில்லை..

  பதிலளிநீக்கு
 20. அடுத்த மல்லிகைப் பாடலுக்கு ஒரு நேயர் விருப்பம். ஸ்ரீராம்.
  'மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் பேர் சொல்லு'

  படம் பெயர் மறந்துவிட்டது 98இல் கேட்டது
  ரம்பா தேவயானி ,விஜய் படம்.
  பேரன் பிறந்த போது டெட்ராய்ட்டில் இந்தப் பாடல்கள்
  கஸ்ஸெட் வடிவத்தில் இருந்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரேவதி சொல்லும் இந்தப் படம் தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். ரம்பா முன்னணியில் இருந்தப்போ வந்ததுனு நினைக்கிறேன். ரம்பாவைக் கனவில் கண்டு காதலித்துவிட்டு தேவயானியோடு விஜய்க்கு நிச்சயம் ஆகும்னு நினைக்கிறேன்.பின்னர் உண்மை தெரிந்து தேவயானி தியாகம் செய்வார் போல!

   நீக்கு
 21. ராஜபாளையம் கல்லூரி காலம் ஞாபகம் வந்தது... இனிமையான பாடல்கள்...

  பதிலளிநீக்கு
 22. இரண்டு பாடல்களுமே நிறைய கேட்டிருக்கிறேன். முதல் பாட்டிற்கு இரண்டு மதிப்பெண்கள் அதிகம் கொடுக்கலாம். நான் முதல் பாடலை பாடியிருப்பது மலேஷியா வாசுதேவன் என்று நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ...   அவர் குரல் வேறு மாதிரி அல்லவா இருக்கும்!

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!