ஒரு வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படம் அன்பைத்தேடி. கலைஞானத்தின் கதை. இயக்கம் முக்தா ஸ்ரீநிவாசன். கண்ணதாசன் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். படம் வெளியான ஆண்டு 1974.
சிவாஜியின் வித்தியாசமான வியாதியும், அதனால் ஏற்படும் விளைவுகளும். எனக்குத் தெரிந்து முன்னரும் பின்னரும் இப்படி ஒரு கதையை யாரும் யோசித்ததில்லை என்று நினைக்கிறேன். பிற மொழியிலிருந்து இறக்குமதி செய்யவில்லை. இதுவும் பிறமொழிகளுக்குச் செல்லவில்லை என்று நினைக்கிறேன்.படத்தின் ஐந்து பாடல்களில் எனக்கு நான்கு பாடல்கள் பிடிக்கும் என்றாலும் இன்று பகிரப்போவது வாணிஜெயராம் பாடல் மட்டும். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள "சித்திர மண்டபத்தில்" பாடல் மிகவும் பிடிக்கும். டி எம் எஸ் - ஜெயலலிதா பாடிய பாடல் அது. ஜெயலலிதா எல்லோருக்கும் முன்பே செட்டுக்கு மேக்கப்புடன் வந்து காத்திருப்பாராம். முக்தா தகவல் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பாடலில் கண்ணதாசன் இலக்கியத்தை அழகாகப் பிழிந்து தந்திருக்கிறார். பிறக்கப்போகும் குழந்தையை அக்கா-மாமாவுக்கு இழப்பீடாய் கொடுப்பதாய் வாக்குறுதி வாங்கிக்கொண்ட கணவன். சரி என்று ஒத்துக்கொண்டாலும் தாய்மை தினங்களின்போது மனம் மயங்கும் மனைவி. கூட இருக்கும் உதவி ஆள் கூட அம்மணியின் நிலை கண்டு உருகுகிறார். கணவனும் கலங்கினாலும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமே என்கிற தவிப்பும் அவனிடம் தெரிகிறது.
சிவாஜி, ஜெயலலிதா, மனோரமா காட்சியில். பாடலின் சிறப்பு வரிகளிலும், வாணி ஜெயராமின் குரலிலும். எம் எஸ் வி இல்லாமல் பாடலுமில்லை.
சிப்பியிலே முது அது சிப்பிக்கென்ன சொந்தம்
தென்னையி;லே இளநீர் அது
தென்னைக்கென்ன சொந்தம்
ஓங்கி வரும் முல்லை அது
ஒரு கொடியின் பிள்ளை
எடுத்துக் கொண்டு போனால் அது
கொடிக்கு சொந்தமில்லை
ஜனகன் மகள் இல்லையடி வேகவதி சீதை
வேடன் மகள் இல்லையடி வள்ளி என்னும் கோதை
இருவருமே போன கதை இரண்டு வழிப் பாதை
எழுதியவன் எழுதி விட்டான் எனக்கு என்ன வாதை
கர்ணன் எனும் வள்ளலுக்கு அன்னை சொந்தமில்லை
கண்ணன் எனும் தெய்வம் கூட இரண்டு வீட்டுப் பிள்ளை
அன்னை என்ன அன்னை இதில் தந்தை என்ன தந்தை
ஆணையிடும் தலைவனுக்கு ஈடு இணையில்லை
அன்பைத்தேடி வெளியான ஆண்டுக்கு அடுத்த வருடம் வெளியானது அவன்தான் மனிதன். சிவாஜியின் 175 வது படம்,. உண்மையில் முன்னரே இந்தப் படத்தின் கதையை பாலசுப்ரமணியம் (என்பவர்) எழுதியிருக்க, அதை எடுத்துக்கொண்டு இயக்குனர் சங்கர் சிவாஜியை அணுகியபோது அவருக்கு கதை பிடிக்கவில்லை. அப்புறம் அது கன்னடத்தில் கஸ்தூரி நிவாஸா என்று வெளியாகி வெற்றிபெற, தமிழில் அதில் நடிக்க சம்மதித்திருக்கிறார் சிவாஜி.
கன்னடத்தில் ஒரு மைல்கல்லாக மதிக்கப்பட்ட இந்தப் படத்தில் ராஜ்குமாரும், சமீபத்தில் மறைந்த நடிகை ஜெயந்தியும் நடித்திருக்க, ஜி கே வெங்கடேஷ் இசை அமைத்திருந்திருக்கிறார்.
தமிழில் முதலில் 25,000 ரூபாய்க்கு கதை வாங்கப்பட்டு, பின்னர் கன்னடத்துக்காக 38, 000 ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது! கன்னடத்தில் படம் வெற்றி அடைந்ததும் அதன் ரீமேக் தொகை இரண்டு லட்சமாம்! இயக்குனரும் மாறி விட்டார். இப்போது இயக்குனர் ஏ ஸி திருலோக்சந்தர். கதை வசனம் பஞ்சு அருணாச்சலம்.
திருலோக் பற்றி ஒரு தகவல் ஏ வி எம் சரவணன் சமீபத்தில் சொல்லக் கேட்டது.. ராமு திரைப் படத்தில் வீடு பற்றி எரியும் காட்சியில் முதலில் மண்ணெண்ணெய் உபயோகப் படுத்தப்பட்டதாம். தொடர்ச்சியான பட ஆக்கத்தின்போது மண்ணெண்ணெய் கிடைக்காததால் பெட்ரோல் வாங்கி வைக்க, அது வேகமாகப் பற்றி, செட்டே பெரிய அளவில் எரியத் தொடங்க, எல்லோரும் தப்பி வெளியில் ஓடி வந்தனராம். ஆனால் உரலில் கட்டிப்போடப்பட்டிருந்த சிறுவனால் மட்டும் தப்பிக்க முடியாத நிலை. யாராலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் திருலோக்சந்தர் உள்ளே ஓடி, உரலுடன் சேர்த்து சிறுவனை வெளியே தூக்கிக்கொண்டி ஓடிவந்து விட்டாராம். எப்படி முடிந்ததோ என்று எல்லோரும் ஆச்சர்யப்பட்டனராம்.
அன்பைத்தேடி, அவன்தான் மனிதன் இரண்டு படங்களுமே நான் தஞ்சையில் இருந்தபோது வெளியானவை. இரண்டுமே நான் பார்த்து விட்டேன்.
இதிலும் கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன் ஜோடி. அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். இதிலும் வாணி ஜெயராம் பாடல்தான் பகிரப் போகிறேன். அவன்தான் மனிதன் பாடல்கள் அத்தனையும் மறக்க முடியாதவை. எதைச் சொல்ல, எதைப் பகிர, எதை விட?
வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடல் மிக இனிமையானது என்றாலும் மற்ற பாடல்களின் புகழினால் அடிக்கடி கேட்கமுடியாமல் போனது. எனவே அதை இன்று பகிர்கிறேன். நிச்சயம் பாடல் தேவதையின் குரல்தான்.
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ
தாழங் குடைகள் தழுவும் கொடிகள்
தாமரைப் பூக்களின் தோட்டம்
தாழங் குடைகள் தழுவும் கொடிகள்
தாமரைப் பூக்களின் தோட்டம்
மாலை மணிகள் மந்திரக் கனிகள்
மழலை என்றொரு தோட்டம்
மாளிகையில் ஒரு மதி வந்தது
அது எந்த வானத்து மதியோ
மாளிகையில் ஒரு மதி வந்தது
அது எந்த வானத்து மதியோ
மாயமாக ஒரு ஒலி வந்தது
அது எந்த ஆலயத்து மணியோ
கதிரொளி தீபம் கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு
கதிரொளி தீபம் கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு
கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன்...
கண்கள் தூங்காத இரவு
கங்கையிலே புது புனல் வந்தது
அது எந்த மேகம் தந்த புனலோ
கங்கையிலே புது புனல் வந்தது
அது எந்த மேகம் தந்த புனலோ
மங்கையிடம் ஒரு அனல் வந்தது
அது எந்த மன்னன் தந்த அனலோ
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது..
பதிலளிநீக்குகுறள் நெறி வாழ்க..
வாழ்க குறள் நெறி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...
வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் ஆடி வெள்ளி காலை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்னையின் அருளால் அதிக நலம் பெற்று வாழ்வோம்.
வாங்க அம்மா.. வணக்கம்.
நீக்குஇந்த இரண்டு படங்களையும் பார்த்திருக்கின்றேன்... பட்டுக்கோட்டை திரையரங்குகளில் படங்கள் வெளியாகி இருந்தாலும் தஞ்சைக்கு வந்து பார்ப்பதில் தனியானதொரு மகிழ்ச்சி...
பதிலளிநீக்குஒருவேளை என் அருகில் அமர்ந்திருந்தது நீங்கள்தானோ... அப்பவே நினைத்தேன்!!! பட்டுக்கோட்டையில்தான் என் மாமாக்கள் இருந்தனர். மேலும், சுகுமாரின் அப்பா அங்கு ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார்.
நீக்குஇருக்கலாம்... இருக்கலாம்!..
நீக்கு:-)
நீக்குஇரண்டுமே சிவாஜி, ஜெயலலிதா பாடல்கள்.
பதிலளிநீக்குஎன்ன நடிப்பு!!!
இருவருமே நல்ல presense மிகச் சரியான ஜோடி.
நல்ல கதை அமைப்பு. அன்பைத்தேடி, அவன்தான் மனிதன்
பாடல்கள் திருச்சியில் இருக்கும் போது கேட்ட பாடல்கள்.
அருமையான இசை, அர்த்தம் பொதிந்த பாடல் வரிகள்,, பாடலைக் கேட்டவுடன்
புரியும் சூழ்னிலை .
நல்ல பாடல்களைத் தேர்ந்தெடுத்த ஸ்ரீராமுக்கு மிக மிக நன்றி.
மற்ற பாடல்களையும் கேட்கப்
போகிறேன்.
ஆமாம் அம்மா.. இரண்டுமே சிவாஜி, ஜெ, அவன்தான் மனிதனில் மஞ்சுளாவும் உண்டு. என்ன இனிமையான, பொருட்செறிவுள்ள பாடல்கள்.. நன்றி அம்மா.
நீக்குஆமாம். கண்ணாடி போட்ட மஞ்சுளாவோ?
நீக்குஇல்லை.... மலேசியா சிங்கப்பூரில் எடுத்த சினிமா
என்று நினைவு. ஊஞ்சலுக்குப் பூச் சூட்டி ஊர்வலத்தில் இட்டாரோ.
சென்று பார்க்கிறேன்.
கண்ணாடி போட்ட மஞ்சுளா அன்பே ஆருயிரே!
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா வாங்க...
நீக்குஇரண்டு பாடல்களும் வானொலியில் அடிக்கடி கேட்கும் பாடல்.
பதிலளிநீக்குபிடித்த பாடல்கள்.
இரண்டு படங்களும் பார்த்து இருக்கிறேன். அன்பு, தியாகம் இவற்றை சொல்லும் படங்கள்.
ஆமாம் அக்கா. நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமையான நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வாங்க...
நீக்குதலைப்பைப் பார்த்த உடனேயே (4:57 மணி) பாடல் நினைவுக்கு வந்துவிட்டது. முதல் பாடல், பிறகு கேட்டு நினைவுக்கு வருதான்னு பார்க்கணும்.
பதிலளிநீக்குசாகா வரங்கள் பெற்ற பாடல்களைத் தவிர (பி சுசீலா வாஜெ சி எஸ்ஜா, எம் கேடி ..), சிவாஜி படப் பாடல்கள் பலவற்றை இப்போ ரசிக்க முடிவதில்லை, இளையராஜா பாடல்கள் போல. இப்போ உள்ள பசங்களுக்கு இளையராஜா பாடல்களைப் பற்றி அப்படி நினைக்கத் தோணும்னு நினைக்கிறேன்.
அதிகாலையிலேயே பார்த்து விட்டீர்களா? 4;57? வெளியாகும் நேரமே ஐந்துதானே! பாடலை அடையாளமும் கண்டு விட்டீர்களா?
நீக்குஎன்னுடைய ஐபோன்ல 4:57... நான் இந்த இடுகையைப் படித்தேன் பாடல் உள் மனத்தில் படிந்திருக்கிறது என்று தோன்றுகிறது. இல்லைனா எத்தனையோ வருடங்களுக்கு முன்பு கேட்ட பாடல் எப்படி நினைவுக்கு வரும்?
நீக்குசாகா வரங்கள் பெற்ற பாடல்கள்... முன்பு இரவின் மடியில் என்று ஒலிபரப்பாகும் தனிப் பாடல்கள். (அனேகமா சுசீலா பாடல்கள்)
பதிலளிநீக்குசுசீலா பாடல்கள் மட்டுமல்ல, பி பி ஸ்ரீனிவாஸ், ஏ எம் ராஜா பாடல்களும்!
நீக்குமுன்பு - அப்படீன்னா நான் சின்னப் பையனா, அதாவது கீதா சாம்பசிவம் மேடத்தைவிட முப்பது வயது குறைவாக இருந்தபோது... ஹாஹாஹா. (என்ன. கர்ர்ர்ர்ர்ர் இன்னும் காணோமே)
பதிலளிநீக்குஎழுந்து நடப்பதில் சிரமம் இருப்பதால் அக்கா இரண்டு நாட்களாய் பிளாக் பக்கம் வர முடியவில்லை. மருத்துவர் வந்து பார்த்து, மெதுவாய்த்தான் சரியாகும் என்று சொல்லி இருக்கிறாராம்.
நீக்குஇனிமையான பாடல்கள்... (கோடை பண்பலையில் கேட்டவை)
பதிலளிநீக்குநன்றி DD
நீக்கு// சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் .. //
பதிலளிநீக்குஇந்தப் பாடலை அப்போது கேட்டுக் கேட்டு ரசித்து மகிழ்ந்திக்கின்றேன்...
சின்ன வயதிலேயே - சக்ரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து - எனப் படித்திருந்ததால் -
இந்தப் பாடலின் கருத்து உள்ளங்கை நெல்லிக்கனி...
இப்படியெல்லாம் இயற்றுவதற்கு கவியரசர் ஒருவருக்கே ஆகும்...
ஆம். கவிஅயரசர் இலக்கியத்திலிருந்து தான் சொல்ல வரும் கருத்துக்கு எப்படி வலு ஊட்டுகிறார் பாருங்கள்...
நீக்குஅவன் தான் மனிதன் படம் வெளியாகும் போது அர்த்தமுள்ள இந்து மதம் - எனும் அமுதத்தைக் கவியரசர் வழங்கிக் கொண்டிருக்கின்றார்..
பதிலளிநீக்குமனிதன் நினைப்பதுண்டு, ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா - எனும் பாடல்களில் முதிர்ந்த ஞானம் வெளிப்படும்..
எப்படியோ ஞான அருவியில் குளித்தாயிற்று..
எல்லாம் அருமையான பாடல்கள். நன்றி துரை செல்வராஜூ சார்.
நீக்குஇனிய பாடல்களை இன்று பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..
பதிலளிநீக்குநன்றி துரை செல்வராஜூ சார்.
நீக்குபாடல்கள் கேட்ட நினைவில்லை.
பதிலளிநீக்குஅப்படியா? ஆச்சர்யம்! ஆனால் நீங்கள் அதிகம் பாடல்கள் கேட்பதில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள் இல்லையா?
நீக்குஇரண்டுமே அற்புதமான பாடல்கள் ஜி
பதிலளிநீக்குரசித்ததற்கு நன்றி ஜி.
நீக்குஇரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஅருமையான பாடல்கள்
பதிலளிநீக்குபுதுசு புதுசாப் பாடல்கள் போடறீங்க. கேட்டதில்லை.
பதிலளிநீக்கு