புதன், 9 மார்ச், 2022

வசதிக்குறைவுகள், சுத்தக்குறைவு இருந்தாலும் யாத்திரை செல்லும் எண்ணம் வருவது ஏன்?

 

நெல்லைத்தமிழன்: 

1. ஆயுதச் சண்டையில் அணு ஆயுதத்துக்கு மட்டும் கண்ட்ரோல் வைத்திருப்பது அமெரிக்காவின் தந்திரம் தானே? சண்டைன்னு வந்தப்பறம் எதுக்கு கட்டுப்பாடு?  

# " வல்லான்  'வகுத்ததே வாய்க்கால் "  என்று ஒரு வழக்கு உண்டு. அணு ஆயுதங்களைக் கையில் வைத்திருக்கும் நாடுகளுக்கு ஒரு சண்டியர் மனப்பான்மையும் , ரவுடி போல் நடந்து கொள்ளும் பாங்கும் இயல்பாகவே வந்து விடுகிறது. என்ன செய்ய?

& எல்லைப் பகுதிகளில் அத்து மீறுதல் : ஒற்றை இலக்க எண்ணிக்கையில் உயிர் சேதம். 

நாடுகளுக்கிடையே சண்டை (அணு ஆயுதம் தவிர்த்து ) : ஆயிரக்கணக்கில் உயிர்ச் சேதம். 

அணு ஆயுதப் போர் : சர்வ நாசம் = லட்சக் கணக்கில் உயிர் பலி, பொருட்சேதம். ஏதோ இதில் ஒன்றிலாவது கட்டுப்பாடு என்று புரிந்துணர்வு இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டுக்கொள்வோம். 

போர் என்பது நாகரீக முன்னேற்றம் இல்லை. அனாவசிய ஈகோ. 'விநாச காலே - விபரீத புத்தி ' என்று தெரியாமலா சொல்லி வைத்தனர் நம் மூத்தோர் ? 

2. யாத்திரைன்னு சென்றால் ஒவ்வோர் பகுதியிலும் வெவ்வேறு சூழல், வசதிக்குறைவுகள் இருக்கும். சில இடங்களில் சுத்தக்குறைவும் இருக்கும். இருந்தாலும் யாத்திரை செல்லவேண்டும் என்ற எண்ணம் வருவது எதனால்?

# பிடித்ததும் பிடிக்காததும் சேர்ந்தது தானே வாழ்க்கை. பிடித்தது அதிகமாக இருக்கும்போது பிடிக்காததை  நாம் லட்சியம் செய்வதில்லை.

& என்னுடைய தற்போதைய யாத்திரைகள் :

புனித யாத்திரை : ஜோதி டி வி 

உல்லாச யாத்திரை : TravelXP (தமிழ்) 

வேண்டும்போதெல்லாம் வீட்டில் சௌகரியமாக அமர்ந்தபடி பார்த்து அனுபவித்துவிடுவேன். 

== == == ==

இந்த வார (மார்ச் 7 2022 ) மின்நிலா இதழின் கடைசி பக்கம் இது :

படத்திற்கான உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்புங்கள். 

எங்கள் கேள்விகள் :

1 ) கீழ்க் கண்டவற்றில் எவற்றை எல்லாம் தினமும் சரியாகப் பின்பற்றி வருகிறீர்கள் ?

a ) வெளியில் செல்லும்போது முகக் கவசம் (முக்கியமாக மூக்கை மறைக்கவேண்டும் - இல்லையேல் பயன் இல்லை) 

b ) அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதல். 

c ) சுத்திகரிப்பான் (sanitizer ) உபயோகித்து கையை கழுவிக்கொள்ளுதல். 

d ) கூட்டங்களைத் தவிர்த்தல். 

e ) சமூக இடைவெளி - மற்ற நபர்களுடன் ஆறு அடி இடைவெளி 

2 ) நீங்கள் இதுவரையிலும் அதிக தடவைகள் படித்த புத்தகம் எது? 

3) நீங்கள் பெற்ற பரிசுகளில், உங்களால் மறக்க முடியாத பரிசு எது? ஏன்? 

= = = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்க :

1) 

2) 

3) 


(பின் குறிப்பு - நேற்று : மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினம் ) 

= = = = =

125 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும் (இந்த மதிய இரவு வணக்கம் சொல்றவங்களெல்லாம் தான் மெதுவாக இணையத்துக்கு வருவதால் அப்படிச் சொல்றாங்கன்னு நினைக்கறேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.. வணக்கம் இப்போது எந்த ஊரில்?

      நீக்கு
    2. பெங்களூருக்குத் திரும்பியாச்சு. க்வாரண்டைனில் (ஒரு முன்னெச்சரிக்கையாக) இருக்கிறேன். இதற்கிடையில் மேல்கோட்டை வைரமுடி சேவைக்கு 4 நாட்கள் நாளையிலிருந்து போவேனோ என்று சந்தேகமாக உள்ளது.

      நீக்கு
    3. நல்லதுதான். பயணம் இனிதாக இருந்திருக்கும்.

      நீக்கு
    4. நம்புங்கள் நாராயணனை - நல்லதே நடக்கும்.

      நீக்கு
    5. வந்ததும் வராததுமா என்னை வம்புக்கு இழுக்கலைனா சிலருக்குப் பொழுதே போகாது. சாப்பிட்ட சாப்பாடும் ஜீரணம் ஆகாது. :)))))

      நீக்கு
    6. உங்கள் கண்களிலிருந்து இது தப்பவில்லை என்று நினைக்கும்போதே சந்தோஷமா இருக்கு கீசா மேடம்

      நீக்கு
    7. ஹாஹாஹா. நாங்க க.வி.எ. ஊற்றிக் கொண்டு இல்ல படிப்போம்/பார்ப்போம்/கவனிப்போம்.

      நீக்கு
    8. கண்களில் விளக்கெண்ணெய் எடுத்து ஊற்றிக்கொண்டால் - தெளிவான பார்வையும் கொஞ்ச நேரத்துக்குக் கலங்கிப் போய்விடுமே!!

      நீக்கு
    9. சிறு குழந்தைகளுக்குக் குளிப்பாட்டும்போது காதில்/மூக்கில்/கண்ணில் எண்ணெய் கட்டுவது என ஒன்று அந்தக் காலங்களில் (இன்னும் சொல்லப் போனால் நான் கல்யாணமாகிப் போன காலத்தில் கூட) இருந்தது. கேள்விப் பட்டிருக்கீங்களா? கண் பார்வை தெளிவாகவும் கூர்மையாகவும் இருக்கத் தான் இதை எல்லாம் செய்வார்கள்.

      நீக்கு
    10. கண்ணுக்கு எண்ணெய் கட்டுவது குறித்து யூ ட்யூப் சானல் ஒண்ணு இருக்கிற நினைவு.

      நீக்கு
  2. 1. நீங்கள் சொல்லியிருக்கும் எந்த விதத்திலும் மாஸ்க் அல்லது முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்வது இயலாது. நடைப்பயிற்சியின்போது மாஸ்க் கீழே இறக்கிவிடுவேன் ஆட்கள் இல்லாத போது. மார்க்கெட்டுக்குச் செல்லும்போது மாஸ்க் முழுமையா இருக்கும், ஆறடி இடைவெளி கடைபிடிக்க இயலாது. சோப்பு போட்டு கழுவுதல், சானிடைசர் இவைகளை நான் கடைபிடிப்பதில்லை, பெரும்பாலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது இன்னும் மாஸ்க் அணிகிறீர்களா? ஹீஹீ அதை யெல்லாம் விட்டு நாட்களாச்சு என் மனைவி மட்டும் இன்னும் அணிகிறாள்

      நீக்கு
    2. நான் மாஸ்க் அணிவதோடு வீட்டில் வந்துதான் கழற்றுகிறேன்.  கைகளை அவ்வப்போது சானிடைசரில் சுத்தம் செய்கிறேன்.

      நீக்கு
    3. அமெரிக்காவில் கொரோனா காணாமல் போய்விட்டதா மதுரை?

      நீக்கு
    4. பாதிப்பு சிறிதளவு இருக்கிறது ஆனால் மரணங்கள் இல்லை அப்படி ஒரு சில இருந்தாலும் அவர்கள் ஊசி போடாதவர்களாகவே இருக்கிறார்கள் இந்த வாரத்தில் இருந்து அனேக மாநிலங்களில் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விரும்பினால் அணிந்து கொள்ளலாம் நான் கடந்து சிலவாரங்களுக்கு முன்பு தினமும் அணிந்து கொண்டுதான் இருந்தேன் இப்ப அணியாமல் வேலை செய்ய்யும் போது பேண்டுக்கு ஜிப்பை போட மறந்ததுபோல உணர்வு முககவசம் அணியாமல் இருக்கும் போது தோன்றுகிறது

      நீக்கு
    5. மதுரைத்தமிழன் - மாஸ்க் அணிவதனால் என் காது இரண்டும் ரொம்பவே வலிக்குது. 14 நாட்கள் பிரயாணத்துக்குப் பின் வந்திருப்பதால், தனி அறையில் இருக்கிறேன். பசங்கள்ட பேசணும்னா மாஸ்க் இருக்கணும். ஹா ஹா

      நீக்கு
    6. ஆம்.  எனக்கும் தோன்றும்.  முகக்கவசம் போடவேண்டாம் என்று சொன்னாலும் நம் பயம், எச்சரிக்கை உணர்வு அப்படி நம்மை அனுமதிக்குமா என்று யோசித்ததுண்டு.  இந்தியாவிலும் இந்நிலை விரைவில் ஏற்படுமென்று நினைக்கிறேன்.  இடையில் யாரோ ஒரு அறிஞர் ஜூன் 22 ஆம் தேதி அன்று நான்காம் அலை தொடங்கும் என்று தேதி குறித்திருக்கிறார்!!! 

      நீக்கு
    7. நான் பெரும்பாலும் தலைக்குப் பின்னால் எலாஸ்டிக் வரும் மாஸ்க்கே அணிகிறேன் நெல்லை.  ஆனாலும் மூச்சுப் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது.  ஆக்சிஜன் குறைவால்தான் நம் சுறுசுறுப்பு குறைகிறதோ என்று சந்தேகம் வரும்.  சோம்பேறியாக இருப்பதற்கு ஏதோ ஒரு சாக்கைத் தேடுகிறது மனம்!

      நீக்கு
    8. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  3. மறக்கமுடியாத பரிசு என்று எதுவும் இல்லை. சில பரிசுகள் இன்னும் இருக்கும், நினைவை மீட்டெடுக்கமுடியும். அவ்ளோதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்க முடியாத பரிசு மனைவியும் குழந்தைகளும்தான். :)

      நீக்கு
    2. அருமையான பதில் ஶ்ரீராம். மனம் மகிழ்ச்சியில் நிறைவடைந்தது. என்னைப் பொறுத்தவரையிலும் எங்க குழந்தைகள் விபரம் தெரிஞ்சப்புறமா அவங்களாக் காசு சேர்த்து எங்களுக்கு வாங்கிக் கொடுத்த வாழ்த்து அட்டைகள். அதுக்கப்புறமாக் கல்யாணம் ஆகிப் பதினைந்து வருஷங்களுக்குப் பின்னர் நம்ம ரங்க்ஸுக்கு முதல் முதலாக வந்த போனஸில்(?) e gratia? அந்தப் பணத்தில் எனக்கு வாங்கிக் கொடுத்த எச் எம்டி கைக்கடியாரம். ஷோபா என்னும் பெயரில் அறிமுகம் ஆகி இருந்தது. கீ கொடுக்கும் மாடல் தான். ஆனாலும் ஸ்டெயின்லீஸ் ஸ்ட்ராப்புடன் நன்றாகவே இருந்தது/இருக்கிறது. இன்னமும் வைச்சிருக்கேன் பொக்கிஷமாக. அதுக்கு முன்னாலெல்லாம் குடும்பப் பொறுப்புகள் நிறைய இருந்ததால் எனக்குனு எதுவும் வாங்கித் தந்ததில்லை. இதற்குப் பின்னரும் வாங்கினதில்லை. அந்த ஒரு வருஷத்தோடு அவருக்கு போனஸும் அப்புறம் இல்லை. சம்பளம் போனஸ் வாங்கும் அடிப்படைக்கு மேல் போய்விட்டதால் அடுத்த வருஷத்தில் இருந்து இல்லைனு சொல்லிட்டாங்க! :))))))

      ஶ்ரீராமின் பதில் நெகிழ்த்தி விட்டது. ஆசிகளும் பிரார்த்தனைகளும்.

      நீக்கு
    3. ex gratia. "x" அடிச்சா விழ மாட்டேன்னு அடம். :(

      நீக்கு
  4. //ஆயுதச் சண்டையில் அணு ஆயுதத்துக்கு மட்டும் கண்ட்ரோல் வைத்திருப்பது அமெரிக்காவின் தந்திரம் தானே? சண்டைன்னு வந்தப்பறம் எதுக்கு கட்டுப்பாடு?

    அமெரிக்காவை விட அதிக அளவு அணு ஆயூதத்தை ரஷ்யா வைத்திருப்பதினால் இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வேளை, அணு ஆயுதம் எல்லாப்பசங்கள்டயும் இருந்துட்டா, மற்ற ஆயுதங்களை விற்பனை செய்யமுடியாது என்ற எண்ணத்தின் காரணமாக இருக்குமோ மதுரைத் தமிழன்?

      உங்களைப் பார்த்துத்தான் (இணையம் வழியாக) எவ்வளவு காலமாக ஆகிவிட்டது?

      நீக்கு
    2. அணு ஆயுதங்கள் ஒருநாள் புஸ்ஸென்று காற்று போனது போல பயனற்றுப் போய்விட வேண்டும்.  அப்போது பார்க்கவேண்டும் இந்த வல்லரசுகளின் வள்ளல்களை!

      நீக்கு
    3. // அணு ஆயுதங்கள் ஒருநாள் புஸ்ஸென்று காற்று போனது போல பயனற்றுப் போய்விட வேண்டும். // எனக்கும் அப்படி தோன்றுவது உண்டு!

      நீக்கு
    4. @நெல்லைத்தமிழன் நான் அடிக்கடி வருகின்றேன் சில சமயங்களில் இங்கு கருத்துப் போட முடிகிறது பல சமயங்களில் முடியவில்லை ERROR என்று வருகிறது திங்கள்ன்று இங்கு வந்தேன் பாஸ்தா ரிசிப்பிக்கு யாரும் கருத்து சொல்லவில்லை நான் சரி முதல் போணி நான் தான் என்று பலமுறை கஜினி போல வந்து முயற்சித்து கடைசியில் முடியாமல் போய்விட்டது

      நீக்கு



    5. ஸ்ரீராம் இந்த வல்லரசு நாடுகள் வைத்து இருக்கும் அணு ஆயுதங்கள் புஸ் என்று போனாலும் மக்களை கொத்து கொத்தாக கொல்ல அவர்கள் மாற்று ஏர்பாடுகளை தயார் செய்து வைத்து இருப்பார்கள் அவர்களுக்கு மக்கள் அழிவதை பற்றி கவலைகள் இல்லை..

      நீக்கு
  5. நான் எல்லாப் புத்தகங்களையும் ஒரு தடவைக்கு மேல் படிக்கும் இயல்புடையவன். ஸ்ரீ எம். புத்தகம், ஸ்வாமி ராமா அவர்களின் புத்தகங்கள் போன்றவற்றை சில முறைகளுக்கு மேல் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கூட படித்த புத்தகத்தையே மறுபடி படிப்பேன் - ஒரு குற்ற உணர்வோடு...   'படிக்காத புத்தகங்கள் நிறைய இருக்கு தம்பி...'

      நீக்கு
    2. புதிய படம் பார்த்து அல்லது புதிய புத்தகம் படித்து ஏமாறும் நேரத்தில், ஏற்கனவே பார்த்த படமோ படித்த புத்தகமோ பார்த்து/படித்துவிடலாம் என்பது என் எண்ணம்.

      நீக்கு
    3. படித்தால்தானே தெரியும் நல்ல புத்தகமா, இல்லையா என்று!  
      ஒன்று செய்யலாம்..  நான்கு படித்த புத்தகங்கள் படித்தால் ஒரு புதிய புத்தகம் படிக்கவேண்டும் என்று ஒரு விதி வைத்துக் கொள்ளலாம்!!

      நீக்கு
    4. யோசித்துப் பார்த்தால் - நான் சமீப காலத்தில் எந்தப் புத்தகத்தையும் இன்னொருமுறை (முழுமையாகப்) படித்த ஞாபகம் இல்லை. சந்தேகத்துக்காக சில பகுதிகளை அப்பப்போ திரும்பிப் படித்தது உண்டு. சிறிய வயதில் ராப் ராய் என்ற காமிக்ஸ் புத்தகத்தை நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி படித்தது உண்டு.

      நீக்கு
    5. தேவனின் எல்லாப் புத்தகங்களும். எத்தனை முறைனு கணக்கெல்லாம் இல்லை. அதே போல் பொன்னியின் செல்வனும். கணக்கே இல்லை. ஆங்கிலத்தில் அகதா கிறிஸ்டியின் சில நாவல்கள், ஆர்ச்சி/ஆர்க்கி/காமிக்ஸ்.

      நீக்கு
  6. நான் அதிகம் திரும்ப திரும்ப படித்த புத்தகம் மகாபாரதம்.. கல்கியில் வந்த மகாபாரத தொடரை பைண்டிங்க் செய்து அதை எங்களுக்கு தெரிந்தவர் கொடுத்து இருந்தார் அதை அதில் வரும் யுத்த காண்ட பகுதி என்னை மிகவும் கவர்ந்தது அதற்காக அதை பலமுறை படித்து இருக்கின்றேன் சிறுவயதில் அதை ஒரு நண்பணுக்கு கொடுக்க அதை அவன் தொலைத்துவிட்டான் அதன் பிறகு அமெரிக்க வந்த பிறகு மகாபாரதம் புக்கை வாங்கி படித்தாலும் கல்கியில் படத்துடன் வந்தது போல சுவராஸ்யமாக இல்லை கலைஞர் எழுதிய சங்கத்தமிழ் நூலும் தென்பாண்டிய சிங்கமும் அதிகம் படித்து இருக்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கூட மகாபாரதம் சம்பந்தமாக எது வந்தாலும் படிக்கும் இயல்புடையவன்.  சிறுவயதில் மிக விளக்கமாக, முழுமையாக  ஒரு மகாபாரதம் புத்தகம் படித்தேன்.  அது என்ன புத்தகம், யார் எழுதியது என்று நினைவில் இல்லை.  இப்போது வரும் புத்தகங்கள் அப்படி இல்லை.

      நீக்கு
    2. மஹாபாரதம், ராமாயணம் போன்றவற்றைப் பற்றி எது வந்தாலும் நானும் படிப்பேன். ஆனால் இதெல்லாம் திரும்பத் திரும்பப் படிக்கும் புத்தகக் கணக்கில் வராதுனு நினைக்கிறேன்.

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஆரோக்கிய வாழ்வு தொடர
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  8. இங்கு தொற்று குறைந்தாலும் மாஸ்க் அணியாமல்
    வெளியே இறங்குவதில்லை.

    பசங்களுக்குத் தான் அதிக சிரமம்.
    பெரியவனுக்கு மூக்கு காது எல்லாம் சிவந்து போய்
    காய்த்துப் போயிருக்கிறது.'

    சின்னவனுக்கும் மாஸ்கை கழற்ற மனம் இல்லை.

    தடுப்பூசி போடாதவர்கள் இருக்கும் போது முன்னெச்சரிக்கையுடன் இருப்பதில்
    தவறில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மனதைரியம் வர நமக்கெல்லாம் கொஞ்ச நாளாகும்.  முகத்தில் மாஸ்க் போட்ட அடையாளம் தங்கி விட்டது!!

      நீக்கு
  9. மகளிர் தினப் படங்கள் அருமை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம்.
    வர வர உங்களை கேள்வி கேட்க ஆளில்லாமல் போய் கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. மாஸ்க் அணிவதை மட்டுமே விடாமல் கடைபிடிக்கிறேன்(அவ்வப்பொழுது மூக்கிற்கு கீழே இறங்கி விடும்;))

    பதிலளிநீக்கு
  12. என் யாத்திரை எல்லாம் இணைய வழிதான்.

    மாஸ்க் போடாமல் ஸ்வாமி தரிசனம்.
    இன்னும் ஆறு மாதங்களுக்குப் பிறகு
    இந்தியா வரவேண்டும் என்று நினைக்கும் போது

    சந்திக்கப் போகும் சவால்களை நினைத்து
    இப்போதே உதறல்:)

    நான் தொடர்பில் இருக்கும் அத்தனை நட்புகளும் வெளியில்
    செல்வதைத் தவிர்த்து வருகிறார்கள்.

    நாட்டுக்கு நாடு வித்தியாசப் படலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோதனையான காலம் சீக்கிரம் முடிவுக்கு வரட்டும். பழைய நாட்கள் திரும்ப வரட்டும்.

      நீக்கு
  13. கிடைத்த பரிசை மறக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது எந்தப் பரிசு என்று சொல்லிவிடுங்களேன் !!

      நீக்கு
  14. அதிக தடவை படித்த புத்தகம் திரு கொத்தமங்கலம்
    சுப்பு, கி.ராஜ நாரயணன் ஐயா புத்தகங்கள்..
    அலுப்பதே இல்லை.

    விலை மதிக்க முடியாத பரிசாகக் கருதுவது,
    சிங்கம் வாங்கித்தந்த புத்தகங்கள் தான்.

    பதிலளிநீக்கு
  15. பொன்னியின் செல்வன்(எத்தனை முறை என்று தெரியாது), Autobiography of a Yogi(3 முறை), தெய்வத்தின் குரல், மகாபாரதம், இவைகளையும் வேறு சில ஆன்மீக, ஜோதிட புத்தகங்களையும் முழுமையாக இல்லாவிட்டாலும் ஆங்காங்கு பல முறை படிப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெய்வத்தின் குரலை எல்லாம் நான் கணக்கில் எடுத்துக்கலை. சந்தேகங்கள் வந்தாலோ, மனசு சரியில்லை என்றாலோ தெய்வத்தின் குரலையோ, மாரியம்மன் தாலாட்டு, கந்த சஷ்டி கவசம் போன்றவற்றையோ பிரித்துப் படிப்பேன். பக்கத்தில் எப்போவும் இருக்கும் புத்தகங்கள்.

      நீக்கு
  16. இந்த வாரம் கேள்விகள் கம்மி. வழக்கமாக கேள்வி கேட்பவர் இந்த வாரம் ஒரு கேள்வியையும் கேட்காதது ஆச்சரியம்.இந்த வாரம் கேள்விகள் கம்மி. வழக்கமாக கேள்வி கேட்பவர் இந்த வாரம் ஒரு கேள்வியையும் கேட்காதது ஆச்சரியம்.
    கோவிட் எச்சரிக்கை பின்பற்றுவது. 
    b, d, e. 
    வெளியில் செல்வதே இல்லை. வீட்டுக்கும் யாரும் வருவதில்லை, மீட்டர் ரீடர் தவிர. 
    படக்கருத்துக்கள். 
    1. பேத்தியை நினைவூட்டியது. 
    2. நல்லவேளை. எல்லா முதலையின் வாயும் கட்டப்பட்டுள்ளது. 
    3. குதிரை போல் ஒரு பெண்?

    Jayakumar

    கோவிட் எச்சரிக்கை பின்பற்றுவது. 
    b, d, e. 
    வெளியில் செல்வதே இல்லை. வீட்டுக்கும் யாரும் வருவதில்லை, மீட்டர் ரீடர் தவிர. 

    படக்கருத்துக்கள். 

    1. பேத்தியை நினைவூட்டியது. 
    2. நல்லவேளை. எல்லா முதலையின் வாயும் கட்டப்பட்டுள்ளது. 
    3. குதிரை போல் ஒரு பெண்?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைகளுக்கு நன்றி.
      கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி, குபுக்க்னு சிரிப்போ சிரிப்பு! நன்னியோ நன்னி! :)))))))

      நீக்கு
    3. வழக்கமா யாரெல்லாம் கேள்வி கேட்பாங்க?

      நீக்கு
    4. கௌதமன் சார், இந்தக் கேள்விக்கு பதில் அடுத்த புதனா? :))))))

      நீக்கு
  17. சில கருத்துக்கள் மீண்டும் வந்திருக்கின்றன. தவித்து விடவும். 

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  19. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
    போரில்லா இல்லா உலகம் வேண்டும்.

    புனித யாத்திரை செய்யும் போது வசதி குறைவுகள் தெரியாதுதான்.

    பதிலளிநீக்கு
  20. வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிகிறேன்.

    இயற்கையை ரசிக்க போன இடங்களில் நடக்கும் போது யாரும் இல்லா இடங்களில்
    மாஸ்கை மூக்கை விட்டு கீழே இறக்கி கொண்டேன். (மலையேற்றம்)
    டாக்டர் நடைபயிற்சி செய்யும் போது ( ஆள் இல்லா இடத்தில்) மாஸ்கை தவிர்த்து விடுங்கள் என்றார்.

    என் கணவர் வாங்கி தந்த திருக்குறள், பாரதியார் கவிதைகள் அடிக்கடி படிக்கிறேன்.
    கதை புத்தகம் படிக்க ஆரம்பிக்கும் போது முன்பு படித்தது நினைவு வந்தால் வைத்து விடுவேன். நினைவு வரவில்லை என்றால் தொடருவேன்.

    பதிலளிநீக்கு
  21. மகளிர் தினத்திற்கு என்று பகிர்ந்து இருக்கும் படங்கள், கருணை, வீரம், குறும்பு இவற்றை அழகாய் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  22. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  23. இப்பொழுதும் மாஸ்க் பாக்கெட்டில்தான் இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  24. எங்கே போனாலும் காரில் வெளியூர் போகும்போதும் (கட்டாயமாய்) முகக் கவசம் அணிந்து கொள்வோம். வீட்டுக்கு வேலை செய்ய வரும் பெண்மணியை முகக் கவசம் அணிந்தே வரணும்னு கண்டிப்பாய்ச் சொல்லி இருக்கோம். கார் ஓட்டுநர் முகக் கவசம் அணியலைனால் அவரை வற்புறுத்தி அணிய வைப்பது உண்டு. பொதுவாக நான் எங்கேயுமே போவதில்லை. அப்படிப் போக நேர்ந்தால் கட்டாயமாய் முகக்கவசம் உண்டு. கைகளை இங்கே ஹான்ட் வாஷ் லைஃ1பாய் கம்பெனியினுடையது பாட்டிலில் விட்டு எல்லாக் கழிவறை, வாஷ் பேசின் ஆகிய இடங்களில் வைச்சிருக்கோம். அடிக்கடி கை கழுவுவோம். அதிலும் நான் சின்ன சந்தேகம் வந்தால் கூட உள்ளங்கைகளின் தோலை உரித்துப் பார்த்துட்டு வருவேன். :)

    பதிலளிநீக்கு
  25. குதிரை போல் நாக்கை நீட்டும் பெண்ணையும், முதலைகளுக்கு நடுவே இருக்கும் பெண்ணையும் தொலைக்காட்சி சானல்களில் பார்த்தாப்போல் இருக்கு.
    முதல் படத்துக் குட்டிப் பெண்ணும், குஞ்சுக்குட்டி நாயும் எப்படி ரசிச்சு விளையாடறாங்க. அந்தக் குட்டி நாயின் உடல்மொழியே சொல்கிறது அது அந்தக் குழந்தையை எந்த அளவுக்கு நேசிக்கிறது என்பதை.

    பதிலளிநீக்கு
  26. நான் போன வாரம் ஏதோ கேள்வி கேட்டேன்னு நினைச்சுட்டு இருந்தேன். கேட்கலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு கேஜிஜி சார், 'நன்றி ... அடுத்த வாரம் பதில் சொல்லுவோம்' னு எழுதினாலும் எழுதுவார்

      நீக்கு
    2. கேள்விக்கு நன்றி. அடுத்த வாரம் பதில் சொல்வோம்!! :))

      நீக்கு
  27. உங்களுக்கு மிகப் பிடித்த எழுத்தாளர் யார்? ஏன்? சுஜாதா தான் என்னும் பதிலைத் தவிர்க்கவும்.
    சின்ன வயசில் முதல் முதல் படித்த கதைப்புத்தகம்/நாவல்/சித்திரத் தொடர் நினைவில் இருக்கா?
    காமிக்ஸ் புத்தகங்கள் எத்தனை வயசு வரை படிச்சிருப்பீங்க? (ஹிஹ்ஹிஹிஹி, நானெல்லாம் இப்போவும் படிப்பேன். டாம்&ஜெரி கார்ட்டூன் இப்போவும் ரசிக்கிறேன்.) அதிகம் முகநூலில் பார்ப்பதே டாம்&ஜெரி தான்.

    பதிலளிநீக்கு
  28. அம்புலி மாமா, கண்ணன் பத்திரிகை, மஞ்சரி ஆகியவற்றைப் படிச்சிருக்கீங்களா?
    அம்புலி மாமாவின் முன்னெல்லாம் அதிகம் வங்காள மொழிபெயர்ப்புக் கதைகளே வரும். ஏன்? தமிழில் சிறந்த குழந்தை எழுத்தாளர் யாருமே இருந்ததில்லையா?
    சரித்திரம் என்றாலே தமிழகத்தில் வெளிவந்த புத்தகங்களில் வட நாட்டுச் சரித்திரங்கள் தான் நாவல்களாகவும்/கதைகளாகவும் எழுதப்பட்டு வந்த ஒரு காலம் இருக்கு. இதை மாற்றியவர் யார்?

    பதிலளிநீக்கு
  29. இப்போ வெளிவரும் புத்தகங்களில் அச்சுப் புத்தகங்கள் படிக்க வசதியா? இணையம் மூலம் படிப்பது வசதியா?
    எனக்கெல்லாம் கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு பக்கத்தில் பகோடா/மிக்சர் போன்றவை இருக்கக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொரித்த வண்ணம் புத்தகம் படிக்கப் பிடிக்கும். ஆனால் இப்போல்லாம் அச்சுப் புத்தகங்கள் அவ்வளவாய்க் கிடைப்பதில்லை. :( புத்தகக் கண்காட்சியில் இருக்கும் தான். ஆனால் எனக்கு ஏனோ புத்தகக் கண்காட்சி பிடிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  30. புனித யாத்திரையில் உண்மையில் சிரமங்களை அனுபவித்த்து திருக்கயிலை யாத்திரையின் போது தான். தங்குமிடம், கழிப்பிடம் எல்லாமுமே சுமார் தான். என்றாலும் படுக்கக் கட்டில், போர்த்திக்க ரஜாய்/கம்பளி போன்றவற்றைக் கொடுத்த்தோடு கேட்கும்போதெல்லாம் வெந்நீர், காஃபி, தேநீர், ஹார்லிக்ஸ் போன்றவை, காலை ப்ளாக் தேநீர் /மாலை/உணவுக்கு முன் சூடாக சூப் எனக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள், சாப்பிடத் தான் முடியலை.என்னோட வயிற்றுத் தொந்திரவை எப்படிச் சமாளித்தேன் என இப்போ நினைச்சாலும் எனக்கே ஆச்சரியமா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  31. வெளியில் செல்லும் போது முகக் கவசம்,.... ஸாரி, முகச் சவரம் என்று படித்து விட்டு திகைத்து திருத்திக் கொண்டேன்.. :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ், தமிழ்னு சொல்லறவங்க யாரும் எளிதான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியது/பயன்படுத்துவது இல்லை. நான் தெளிவாய் இடைவெளி விட்டே எழுதி இருக்கேன். தவறாகப் புரிந்து கொண்டால் அவரவர் பார்வை தான் குறை!

      நீக்கு
    2. கேள்வியிலேயே "முகக் கவசம்" அணிவதுண்டா என்றே கேட்கப்பட்டிருக்கிறது. ஆகவே இது புரியலைனு சொல்லுவதெல்லாம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா!

      நீக்கு
    3. இது என்னடா வம்பாப் போச்சு புரிலேன்னு யார் சொன்னாங்க?

      .கேள்வியில் இருப்பதைக் குறித்துத் தான் என் பின்னூட்டமும்! :)))

      நீக்கு
  32. புனித யாத்திரையும் போனதில்லை/உல்லாச யாத்திரையும் போனதில்லை. இப்படி எல்லாம் சானல்கள் இருக்குனே தெரியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ! இங்கே அரசு அளித்த செட் டாப் பாக்ஸ்/எஸ்சிவி. அது அளிக்கும் சானல்கள். விஜய் தொலைக்காட்சி வந்தே நான் பார்த்தது இல்லை.

      நீக்கு
    2. இரண்டு நாட்கள் முன்னர் ஜோதி சானலையும் பார்த்தேன். அது பாலிமர் தொலைக்காட்சியைச் சேர்ந்தது என நம்மவர் சொன்னார்.

      நீக்கு
  33. அமைதி உலகம் வேண்டும் இது நிறைவேறுமா ?
    கேள்விகள் 1) a,b,c,d, கடைப்பிடிப்பேன் e ஆறு அடி இடைவெளி முடியாதது நமதுவேலை.அப்படி. .

    பதிலளிநீக்கு
  34. யாத்திரைன்னு சென்றால் ஒவ்வோர் பகுதியிலும் வெவ்வேறு சூழல், வசதிக்குறைவுகள் இருக்கும். சில இடங்களில் சுத்தக்குறைவும் இருக்கும். இருந்தாலும் யாத்திரை செல்லவேண்டும் என்ற எண்ணம் வருவது எதனால்?//

    பயணத்தில் ஆர்வம் இருக்கும் இடங்களையும் இயற்கையையும் மக்களையும் ரசிக்கும் ஆர்வம் இருக்கும் போது இதெல்லாம் ஜுஜுபி...முக்கியத்துவம் எதற்கோ அதுதானே முன்னிலையில் இருக்கும். ஆர்வமுள்ள மனசுதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
  35. ஆஆஆஆ படத்திற்கு ஏற்ற கதை அதுவும் மார்ச் 20 க்குள்!!! ஆஆஆஆ !!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இல்லையேல் பபுள்கம்தான்!!

      நீக்கு
  36. மாஸ்க் அணிவதுண்டு. மாஸ்க் வேண்டாம் என்று சொல்லப்பட்டாலும் ஆப்ஷனல் என்றாலும் அணிவதுண்டு. எதுக்கு ரிஸ்க்? ஆனால் நடைப்பயிற்சியின் போது யாரும் இல்லை என்றால் கொஞ்சம் தழைத்துக் கொள்வதுண்டு. நன்றாக மூச்சை இழுத்துப் பயிற்சி செய்து கொண்டே நடை. யாரேனும் அருகில் எதிரில் வந்தால் உடனே மாஸ்கை ஏற்றிக் கொண்டுவிடுகிறேன். வீட்டிற்கு யார் வந்தாலும் மாஸ்க் போட்டுக் கொள்வதுண்டு. இடைவெளி. கை கழுவுதல் சோப் போட்டு வெளியில் போய் காய் பொருள் வாங்கி வந்தால் மட்டும் சுத்திகரிப்பான். இன்னும் கொரோனா பயம் விலகவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  37. மறக்க முடியாத பரிசு என்றால் இறைவன் கொடுத்திருக்கும் என் மகன் மற்றும் அன்பு உறவுகள், நட்புகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  38. வெளியில் செல்லும் போது மாஸ்க், கை கழுவுதல் சோப், சானிட்டைஸர் என்று பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். வீட்டிற்கு வந்தால் குளியல் எல்லாம். ஆனால் மாஸ்க் அவ்வப்போது தழைக்க வேண்டியதாகிறதுதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  39. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  40. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  41. முகக்கவசம்.... பல இடங்களில் பயன்பாடு குறைந்து கொண்டு வருகிறது. இன்னும் பயணிக்க ஆரம்பிக்கவில்லை. அலுவகத்தில் இருக்கும் போது முகாக்கவசம் பயன்பாடு குறைந்து விட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!