திங்கள், 2 மே, 2022

"திங்க"க்கிழமை - காராவடை - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 அரிசி+து.பருப்பு மி.வத்தல், உப்பு, பெருங்காயத்தோடு அரைக்க ஜாரில் போட்டிருக்கேன்.

காராவடை கேள்விப் பட்டிருக்கீங்களா? இது அநேகமா மதுரைப் பக்கம் மட்டுமே செய்யற ஒண்ணுனு நினைக்கிறேன். செய்முறை கீழே!

அரிசி+துவரம்பருப்பு = ஒரு கப் அரிசின்னால்  கால் கப் து.பருப்பு சின்னக் கிண்ணம் அரிசின்னால் ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்புப் போதும்.

உளுந்து அரைக் கிண்ணம், கொடகொடவென்று அரைக்கவும்.

அரிசி+துவரம்பருப்போடு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் தேவையான அளவு சேர்த்து நன்கு நைசாக (வெழுமூண என்று நாங்கள் சொல்வோம்) அரைத்துக் கொள்ளவும். கொட கொடவென அரைத்த உளுந்து மாவையும் போட்டுக் கலந்து அரைக்கிண்ணம் கடலை மாவையும் போட்டு நன்கு கலக்கவும். புளிப்புச் சுவை வேண்டும் எனில் ஒரு கரண்டி தயிர் சேர்க்கலாம். கடலைப்பருப்பை நன்கு ஊற வைத்து இதில் சேர்த்துக் கொண்டு கருகப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். இஞ்சி, பச்சை மிளகாய் தேவை எனில் சேர்க்கவும். சேர்க்காமலும் இருக்கலாம். கருகப்பிலை முக்கியம்.  கீழே அரைத்த மாவு!

இங்கே எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கும் காராவடைகள்!

 நல்ல நிறமாக இருக்கும்! மஞ்சள் பொடியெல்லாம் போடவே வேண்டாம்! அதுவே நல்ல நிறமாக வந்துடும். சட்னி தேவை எனில் தேங்காய்ச் சட்னியோடு சாப்பிடலாம். நாங்க அப்படியே சாப்பிட்டோம்!



சூடான காராவடைகள் இங்கே! இதன் செய்முறையில்   ஒரு திப்பிச வேலையும் செய்யலாம்.   ஹிஹிஹி, வடைக்கு ஏற்கெனவே அரைத்து மீந்திருந்த உளுத்த மாவை அரிசி+துபருப்பு அரைத்த கலவையோடு கலந்துடுங்க.. அதோடு கடலை மாவு சேர்த்துச் செய்யலாம் . வித்தியாசம் ஒண்ணும் தெரியாது. ஆனால் பொதுவாக உளுந்து தனியாகக் கொட, கொடவென அரைத்துச் சேர்த்தால் தான் காராவடை நன்கு உப்புக் கொண்டு பெரிது பெரியதாகவும் மேலே மொறு மொறுவெனவும் உள்ளே ஸ்பாஞ்ச் மாதிரியும் வரும்.  

இதையே கொஞ்சம் சுலபமாகச் செய்ய வீட்டிலேயே பலகாரங்கள் தயாரிக்கும் அரிசி மாவு   ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டு இதற்கு உளுந்து ஒரு கிண்ணம் ஊற வைத்துக் கொடகொடவென அரைத்துக் கொள்ளவும். இதோடு கடலை மாவு ஒரு கிண்ணம் சேர்த்து அதோடு மிளகாய்ப் பொடி, பெருங்காயம் மற்றும்  உப்புச் சேர்த்துக் கலக்கவும். இதோடு ஊற வைத்த கடலைப்பருப்பு, கீறிய தேங்காய்,  கருகப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக மாவைக் கலக்கவும். ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல் தளரவும் இல்லாமல் உருட்டிப் போடும் பதத்தில் மாவைத் தயாரிக்கவும். பின்னர் எண்ணெயைக் காய வைத்து போண்டோ போல் உருட்டிப் போடவும். அரிசியை ஊற வைத்து அரைத்துச் செய்வதிலும் இதிலும் ருசி மாற்றம் இருக்கும்.

[மாவு தயாரித்ததும் உடனேயே பொரித்தெடுக்கலாமா, இல்லை கொஞ்ச நேரம் ஊற வைக்கவேண்டுமா என்று சொல்லவில்லையே...!]

82 கருத்துகள்:

  1. பெயரில்லா2 மே, 2022 அன்று AM 6:04

    திருச்சியில் தெருவுக்கு தெரு எண்ணெய் சட்டி வைத்து பஜ்ஜி, போண்டா, வடை, காரவடை எல்லாம் போடுவார்கள். சின்ன வயதில் சுட சுட  வாங்கி சாப்பிட்டிருக்கிறேன்.  ஒன்று காலணா. அதாவது ஒரு ரூபாய்க்கு 64 கிடைக்கும். இப்போதும் திருச்சியில் தள்ளுவண்டிகளில் சுட சுட செய்து விற்கிறார்கள். ஒன்று 2 ரூபாய். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போல்லாம் இரண்டு ரூபாய்க்குக் கொத்துமல்லி கூடக் கிடைப்பதில்லை. காராவடை இரண்டு ரூபாய்க்கா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஆனால் நான் திருச்சியில் காராவடையே பார்த்தது இல்லை. உளுந்து வடை(வெங்காயம் சேர்த்து/சேர்க்காமல்) பஜ்ஜி எல்லாவிதமானதும், சமோசா, மசால் வடை, பெருமாள் வடை(இங்கே பிரபலம்) ஆகியவையே அதிகம்.

      நீக்கு
    2. இங்கு 3 பெரிய கட்டு மிண்ட் இலைகள் 10 ரூபாய். ஒரு மாதத்திற்கு முன் பெரிய கட்டு கீரை 2 - 10 ரூபாய். நிறைய காய்கறிகளும் கிலோ 10 ரூபாய். இப்போ 30 ரூபாய் என்று விலையேற்றம்.

      இந்த 'பெருமாள் வடை' எங்கன கிடைக்கும் உங்க ஊர்ல? அஸ்வின்ஸ் சமோசா....ஆஹா சூப்பரோ சூப்பராக இருந்தது.

      நீக்கு
    3. ஆமாம். நெல்லிக்காய் சைசில் இருக்கும். அப்படியே வாயில் போடலாம். 10ரூபாய்க்கு 5.

      நீக்கு
    4. உண்மையிலேயே இங்கே வெளி ஆண்டாள் சந்நிதிக்கு அருகே கடை போடும் ஒரு மாமி மூன்று வடைகள் பத்து ரூபாய்க்குக் கொடுப்பார். நெல்லிக்காய் அளவில் தான் இருக்கும். நம்மவர் போயிட்டு ரொம்பப் பெருமையாப் பை நிறைய வாங்கிண்டு வருவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு வாய்க்குக் காணாது.

      நீக்கு
    5. பெருமாள் வடை அங்ஙன மதுரையில் எல்லாம் கிடைக்காது. ஶ்ரீரங்கம் தான் அதுக்குப் பிரபலம். அநேகமாக எல்லா வடை, பஜ்ஜி போடுபவர்களும் பெருமாள் வடையும் போடுகின்றனர். வடக்கு கோபுர வாசலில் தசாவதார சந்நிதி போற வழியில் ஒரு மாமா போடுவார். அதைத் தவிர்த்தும் சில கடைகளில் போடுவார்கள். சில ஓட்டல்களில் சாப்பிட்டவரைக்கும் தற்சமய்ம் முழுவதும் மூடி விட்ட ராம விலாஸ் கடை பெருமாள் வடைக்கு ஈடு, இணை இல்லை.இங்கே எங்க தெருவிலேயே ரங்காபவனிலும், சித்திரை வீதி மடப்பள்ளியிலும் வடக்கு வாசலில் கோரத மூலையில் ஆர்.கே.காடரிங் (எப்போவானும்) பெருமாள் வடை போடுகின்றனர். நான் அஸ்வின் முறுக்கு அல்லது தட்டை வாங்கின அன்னிக்கு மட்டும் எடுத்துப்பேன். அப்புறமா ஒத்துக்கறதில்லை சமோசா நன்றாக இருப்பதாகப் பையரும், மாமாவும் சொல்வாங்க. நான் வடக்கே இருந்த வந்தப்புறமா இங்கெல்லாம் சமோசாவே சாப்பிடறதில்லை. சாப்பிட்ட மாதிரி இருக்கிறதில்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  2. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. மதுரையில் தெருக்கடைகளில் காணலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், வீதிக்கு வீதி கிடைக்கும். எனக்கு நினைவில் இருப்பது குட்ஷெட் தெருவில் வல்லப ஐயர் ஸ்டேஷனரி ஸ்டோர்ஸுக்கு எதிரே ஒரு மருந்துக்கடைக்குப் பக்கத்தில் இருந்த பக்ஷணக்கடை தான். பெரிது பெரிதாகச் செக்கச் சிவந்த காராவடைகள் வாங்கு! வாங்கு! எனச் சொல்லும். வீட்டிலே அம்மாவும் அடிக்கடி பண்ணுவார்.

      நீக்கு
    2. ஆனால் இப்போ போனால் கடை இருக்குமா? இல்லை இது 1850ம் வருட நிலைமையா?

      நீக்கு
    3. ஹாஹாஹா, குட் ஷெட் தெருவில் சின்ன வயசில் இருந்து பார்த்து வந்திருக்கேன். கிட்டத்தட்ட எண்பது வரை பார்த்தேன். அதுக்கப்புறமான மதுரை விஜயமெல்லாம் நாள் கணக்கில் தான்.

      நீக்கு
    4. குட்ஷெட் தெருவில் நீங்கள் சொல்வது போல நான் கடை பார்த்த ஞாபகமில்லை!  ஆதிகாலத்தில் இருந்திருக்கலாமோ என்னவோ!

      நீக்கு
    5. நேரு பிள்ளையார் கோயிலில் இருந்து நேரே தமிழ்ச்சங்கம் சாலையை நோக்கிப் போனால் வரும் முதல் பகுதியில் இருந்தன இவை எல்லாம். வல்லப ஐயர் ஷாப், எஸ்.எஸ்.பிள்ளை ஷாப் என்றெல்லாம் ஸ்டேஷனரி, பள்ளிப் புத்தகங்கள், நோட் புத்தகங்கள், அட்லஸ், கலர் பேனா/பென்சில் வகைகள், வார்னிஷ் பேப்பர், ப்ராஜெக்ட் செய்ய ப்ரவுன் பேப்பர் என எல்லாமும் கிடைக்கும். அதுக்குக் கொஞ்சம் தள்ளி மேல வெளி வீதி வரும். எதிர்சாரியில் வலப்பக்கம் காமாட்சி அம்மன் கோயில். அந்தப் பக்கம் திரும்பாமல் நேரே போனால் இடப்பக்கம் ஆஞ்சநேயர் கோயில். ஓர் மாத்வ மாமா தான் பூஜைகள் செய்வார். வடைமாலை ரொம்பச் சுவையாக இருக்கும். ஒரு வடை உள்ளங்கை அளவுக்குப் பெரிதாகவும் இருக்கும். அதைத் தாண்டிப் போனால் இடப்பக்கம் கிருஷ்ண ராஜபுர அக்ரஹாரம், நேரே சந்தை, தமிழ்ச்சங்கம் ரோடு, இன்னும் நேரே சந்தில் புகுந்து போனால் தியேட்டர் ஒண்ணு வருமே! லக்ஷ்மி தியேட்டரா? அங்கே தான் "லக்ஷ்மி கல்யாணம்" படம் பார்த்தேன் என் சிநேகிதியோடு! (இதை ஓர் பத்தாயிரம் தரம் சொல்லி இருப்பேனோ)

      நீக்கு
    6. பெயரில்லா4 மே, 2022 அன்று AM 6:37

      தேவி டாக்கீஸ்??

      நீக்கு
    7. ஹாஹாஹாஹா, ஆமா இல்ல! படத்தின் பெயரைத் திரை அரங்கின் பெயராகக் குழப்பிண்டேன். :))) ஒரே அவசரம்!

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்கியம் நிறை வாழ்வு தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  5. மிக அருமையான கார வடை படங்களைப் பார்த்ததும்
    சாப்பிட ஆசையாக இருக்கிறது.
    எந்த உணவு செய்தாலும் படம் எடுக்க மட்டும் கை வருவதில்லை.

    அன்பின் கீதா , மெனக்கிட்டு செய்திருக்கிறார்கள்.. எங்கள் பிளாகிற்கு
    என்று செய்முறை, படம் என்று அசத்திய அன்பின் கீதாவுக்கு
    மனம் நிறை வாழ்த்துகள்.
    இது போல மதுரையில் சாப்பிட்டிருக்கிறேன்.

    செய்தது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ''வடைக்கு ஏற்கெனவே அரைத்து மீந்திருந்த உளுத்த மாவை அரிசி+துபருப்பு அரைத்த கலவையோடு கலந்துடுங்க.. அதோடு கடலை மாவு சேர்த்துச் செய்யலாம் . வித்தியாசம் ஒண்ணும் தெரியாது. ஆனால் பொதுவாக உளுந்து தனியாகக் கொட, கொடவென அரைத்துச் சேர்த்தால் தான் காராவடை நன்கு உப்புக் கொண்டு பெரிது பெரியதாகவும் மேலே மொறு மொறுவெனவும் உள்ளே ஸ்பாஞ்ச் மாதிரியும் வரும். ''

      ஆஹா இது தான் எனக்கு வேண்டும்.
      உளுந்து அரைக்கும் போது துளி ஜலம் அதிகமானாலும்
      அது வடையாக இல்லாமல் போண்டா ஆகிறது.
      அதற்கு மேல் ரவை ,அரிசி மாவு என்று சேர்த்து ரெண்டுங்கெட்டான் வடை வரும்.
      இனிமேல் கார வடை என்று இதற்குப் பெயர் வைத்து
      கீதா ஸ்பெஷல் ரிலீஸ் செய்யப் போகிறேன்.
      மிக மிக நன்றி கீதா,.
      நமக்கும் திப்பிசத்துக்கும் தான் சரி:)

      நீக்கு
    2. ஆமாம், ரேவதி! மதுரை தான் இம்மாதிரித் தின்பண்டங்களுக்குப் பிரபலம் ஆனது. தவலை வடையும் கிடைக்கும். ஆனால் குறிப்பிட்ட ஓட்டல்களில் மட்டும். மதுரை மேலமாசி வீதி எஸ்.எஸ். கஃபேயின் ஸ்பெஷல் உளுந்து வடை முந்திரிப்பருப்பெல்லாம் போட்டு ஒரு தோசை அளவுக்குப் பெரிதாகவும் எப்போப் போய்க் கேட்டாலும் சூடாகவும் கொடுப்பாங்க. அதே ஓட்டலில் வெஜிடபுள் போண்டாவும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
    3. ஹாஹாஹா, ரேவதி, கௌதமன் சார் எங்கள் ப்ளாக் திங்கள் பதிவுக்கு எஸ் ஓ எஸ் கொடுத்திருந்தார். அதைப் பார்த்துட்டு அவசரம் அவசரமாக என்னோட வலைப்பக்கம் வந்ததைக் காப்பி, பேஸ்ட் பண்ணி அனுப்பி வைச்சேன். ஶ்ரீராம் இது இன்னமும் போடலை, இந்த வாரத்துக்கு வைச்சுக்கறேன்னு சொன்னார். அதான் இது! :)))))

      நீக்கு
    4. அதே எஸ் ஓ எஸ் அடுத்த வாரத்துக்கும் இப்போதுவரை தொடர்கிறது!

      நீக்கு
    5. ஓஹோ! தேடணும். ஆனால் வீட்டில் வேலை அதிகம். அதிலும் நாளைக்கெல்லாம் நான் ஊரிலேயே இல்லை. :))))

      நீக்கு
    6. இதோ இங்கே சொல்லி இருக்கேனே, செவ்வாயன்று ஊரில் இருக்க மாட்டேன் என்பதை! :) யாரும் கண்டுக்கலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரி

    இன்றைய தங்கள் செய்முறையான காராவடை படங்களுடன் அருமையாக இருக்கிறது. எண்ணெய்யில் காராவடை வேகும் படங்கள் மிகவும் அழகாக வந்திருக்கின்றன. நிதானமாக ஒவ்வொரு விதமான பக்குவத்தையும் விளக்கியிருப்பது சிறப்பு. செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா. சாதாரணமான இட்லி மாவிலும் பண்ணலாம். கடலை மாவு கொஞ்சம் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு பண்ணலாம். என்றாலும் ஒரிஜினல் அளவுக்கு ருசி வராது. ஏதோ அவசரத்துக்குப் பண்ணி இருக்கலாம்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      நான் கூட சமயத்தில் விஷேட தின வாரத்தில் உளுந்து வடை மாவு அதிகமாகி அப்போதைக்கு பொரித்தெடுக்க வேண்டி அவசியம் இல்லாமல் போய் விட்டால், அதை கு. சா. பெட்டியில் வைத்து மறுநாள் கடலை மாவு, அரிசிமாவு, வேண்டிய காரப்பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து போண்டாக்களாக பொரித்தெடுப்பேன். இப்போ போனவாரம் கூட இப்படித்தான் இதை செய்து சாப்பிட்டோம். ஆனால் நீங்கள் கூறுவது போல் ஒரிஜினல் பக்குவத்தில் செய்து சாப்பிடும் ருசி அமையாது. தாங்கள் தந்த அளவுபடி ஒருநாள் செய்கிறேன். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நன்றி கமலா. எப்படியோ அதை உருப்படியாக்கி வீணாக்காமல் சாப்பிட்டு விடவேண்டும். அவ்வளவு தான்! நமக்கும் ஏதோ ஒரு மனத்திருப்தி.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரி

      உங்கள் முறைப்படி, பக்குவப்பிரகாரம் காராவடை ஒரு தடவை செய்து பார்க்க வேண்டுமென்ற அவா வந்து விட்டது. செய்து விடுகிறேன். நன்றி.

      நீக்கு
  8. பல வருடங்களுக்கு முன்பு மதுரையில் இருந்த போது சாப்பிட்டிருப்பதாக பட்சி சத்தம் போடுகின்றது..

    பலவகையான சிற்றுண்டிகளுக்கு பேர் போனதல்லவா மதுரை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அச்சு முறுக்கும் கோகோ மிட்டாய் என்னும் பெயரில் கிடைக்கும் காரமல் செய்த சர்க்கரையில் கலந்த கடலை மிட்டாயும் மதுரைச் சிறப்பு உணவு.

      நீக்கு
  9. மதுரையின் பிட்டு கயிலாயம் வரைக்கும் போயிருக்கே... போதாக்குறைக்கு மதுரையோட பாலதயிர் மோர் பற்றி சிலப்பதிகாரம் சொல்லுது..

    அந்தப் பக்கம் ஆண்டாளம்மா வேற.. கேக்கவா வேணும்!..

    ஆனா காரவடையைப் பற்றி ஒன்னும் ஜொல்லலை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனா காரவடையைப் பற்றி ஒன்னும் ஜொல்லலை!..// ஏன்? பிடிக்காதா? அல்லது சாப்பிட்டுப் பார்க்கலையா? :))))

      நீக்கு
    2. மதுரையில் பால் உண்மையாகவே சுவை தான். பெரும்பாலும் (இப்போத் தெரியலை) பசும்பால் தான். ஒரு தரம் மதுரையின் எந்தக் காப்பிக்கடையிலாவது காஃபியோ, தேநீரோ வாங்கிக் குடிச்சுப் பாருங்க. அந்தச் சுவையே தனியாத் தெரியும். அதிலும் தெற்கு கோபுரத்துக்கு எதிரே சொக்கப்ப நாயக்கன் தெருவில் ஒரு கடையில் அமிர்தம் தான். பால் குடித்தால் சர்க்கரையே சேர்க்காமல் குடிக்கணும். அப்போத் தான் பாலின் சுவை நன்றாகப் புரியும்.

      நீக்கு
    3. இப்போவும் பலருக்கும் காராவடைன்னா என்னனு தெரியலை.

      நீக்கு
  10. எல்லா ப்ரோட்டீனோடு, இஞ்சியும் சேரும்போது வாயு இல்லாமல்
    இருக்கும்.

    தள தள வென்று வடை எண்ணெயில் கொதிக்கும் அழகும் தனி தான்.
    வடைக்கு ஏன் இவ்வளவு சொல்கிறேன்
    என்று யாருக்காவது தோன்றினால்,
    பெருமூச்சோடு காரணத்தையும் சொல்கிறேன்.
    உளுந்து மட்டும் சேர்ந்த வடை அரை வடைக்கு மேல் என் வயிறு ஏற்காது,.
    இன்று இந்த காரவடையை வேறு விதமாகச் செய்து கொடுத்திருக்கும் கீதா மாவுக்கு
    மிக நன்றி. எங்கள் ப்ளாகிற்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியுது ரேவதி. இப்போ எங்க பெண்ணிற்கும் உளுந்து சேர்த்தால் ஒத்துக்கலை என்கிறாள். :( என்னமோ போங்க! இந்த வயிற்றுக்கு மட்டும் கேடு வந்தால் மனிதனுக்கு வாழ்க்கையில் ருசியே இருப்பதில்லை. ஏனோதானோவென்றே இருப்பாங்க. :( விரைவில் அனைவருக்கும் சரியாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    2. சரி, இன்னிக்கு என்னோட செய்முறை என்பதால் காலையிலேயே வந்தேன். பின்னர் வரேன். ஆட்கள் வந்துடுவாங்க வேலைக்கு. சீக்கிரமாய்த் தயாராகணும்.

      நீக்கு
    3. அடடே...   நல்லது வல்லிம்மா.  நான் நல்லதொரு மெதுவடையோ, மசால் வடையோ சாப்பிட்டே பல மாதங்கள் ஆகின்றன.

      நீக்கு
  11. காரா வடையா - அல்லது கார வடையா? எது சரி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைக்காரங்களுக்கு அது "காரா வடை" தான்! :)))))

      நீக்கு
    2. அப்போ என் மனைவிக்கு காரா வடை. எனக்கு கார வடை!

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      /காரா வடையா - அல்லது கார வடையா? எது சரி?/

      இது வரும் புதனுக்கு நீங்களே கேட்கும் கேள்வியா ? ஹா.ஹா.ஹா
      கார வடை என்பது காறல் இல்லாத வடையாகிப் போனதில் காரா வடையாகி இருக்கும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. சும்மா ஜோக்காகத்தான் சொன்னேன். தவறாக நினைக்க வேண்டாம்.

      நீக்கு
    5. இது கண்டுபிடிப்பது சுலபம். மிளகாய் வற்றல் 4 போட்டால் காரா வடை. 15 போட்டால் காரவடை

      நீக்கு
    6. ஹா ஹா சரியான பதில். இப்படியும் சொல்லலாம். நல்ல கடலை எண்ணையில் பொரித்தால் காரா வடை. காரல் அடித்த எண்ணையில் பொரித்தால் கார வடை.

      Jayakumar

      நீக்கு
  12. நேற்று மாலையிலிருந்து செமை மழை இங்க பெங்களூர்ல. பையன் உடனே பஜ்ஜி-புடலங்காய் பஜ்ஜி கேட்டான்... புடலை ஸ்டாக் இல்லை. அப்புறம் தேங்காய் வடை செய்தாள். நல்லாவே இருந்தது. இந்த காரவடை இரு நாட்களுக்கு முன் வந்திருந்தால் செய்துபார்த்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய் வடை செய்முறை எப்போ வரும் நெல்லை?

      நீக்கு
    2. மழையா?  ஆ...     தேங்காய் வடையா?     புச்சா கீதேப்பா...

      நீக்கு
    3. செய்முறை வந்தப்பறம் எழுதவேண்டியதை அதாவது...'ப்பூ... நானும் என்னவோ ஏதோன்னு நினைத்துவிட்டேன். என் புகுந்த வீட்டுல இதைப் பண்ணுவாங்க, அதுக்குப் பேர் அவசர வடைன்னு சொல்வாங்க. நான் சின்ன வயசுல, மதுரைல கோபு ஐயங்கார் கடைல ஒரு வடை சாப்பிட்டிருக்கேன். இங்க சொல்லியிருக்கறமாதிரி கொஞ்சம் புளிப்பும் தேங்காய்ச் சுவையோட இருக்கும். ஒருவேளை அதைத்தான் நெல்லை புதுப் பேர் கொடுத்து எழுதியிருக்கார்னு நினைக்கறேன். இதுலயே கொஞ்சம் மாங்காயை அரைத்துச் சேர்த்தால் மாங்காய் வடை, நாங்க ஒரிஸ்ஸால இருந்தபோது இதில் இம்லி அதாவது புளி கொஞ்சம் சேர்ப்பாங்க. அது இன்னும் சுவையா இருக்கும்' என்றெல்லாம் அதுக்குள்ள ட்ராஃப்டில் எழுதிவைச்சிருக்கீங்களே

      நீக்கு
    4. என் புகுந்த வீட்டிலே எல்லாம் இப்படி விதம் விதமா எல்லாம் பண்ண மாட்டாங்க. பாரம்பரியப் பக்ஷணங்கள் தான். அதிலும் நான் புதுமையாகப் பண்ணுவதே அவங்களுக்கு அலர்ஜி! எது எதுவோ எல்லாத்தையும் பண்ணிச் சாப்பிடச் சொல்லிடறே எனக் கோபம் வரும். மாமியாருக்குப் பயந்து கொண்டு மாமனாரோ, மைத்துனர்களோ சாப்பிட மறுப்பார்கள். என் ஓர்ப்படி மட்டும் எடுத்துப்பா எனக்கு இதெல்லாம் பழக்கம் என்பாள். மாமனார் சில/பல சமயம் ரகசியமாக வாங்கிக் கொண்டு பக்கத்து வீடுகளுக்குப் போய் உட்கார்ந்து சாப்பிட்டு வருவது உண்டு. :)))))

      நீக்கு
  13. செய்முறை நன்று. படங்களும் அழகு

    பதிலளிநீக்கு
  14. மொத்தம் பொரித்ததே நாலு காராவடைகள்தாம், அதில் 2 மிஞ்சிவிட்டது, இரவுக்கு, பீன்ஸ் திருத்தி, அதில் இந்த வடைகளைப் பொடித்துப்போட்டு பருப்புசிலி மாதிரி பண்ணிச் சாப்பிட்டீர்கள் என்று கேள்விப்பட்டேனே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமாவுக்கு பீன்ஸ் பிடிக்கவே பிடிக்காது. ஹிஹிஹி!

      நீக்கு
    2. இதுக்கும் கருத்துக் கொடுத்திருந்தேன். பீன்ஸ் என்றாலே மாமாவுக்கு அலர்ஜி என்பதாக! எங்கே தான் போகுமோ அந்தக் கருத்துரைகள் எல்லாம். அதோடு பொரிச்ச வடைகளைப் பருப்புசிலி மாதிரி எல்லாம் போட்டால் யார் சாப்பிடுவது? உங்க விலாசம் தெரிஞ்சால் "பெண்"களூருக்கு அனுப்பிவிடலாம்.

      நீக்கு
  15. படங்களுடன் செய்முறை அருமை... 'கடகட'வென 'கொட, கொட'வென்று அரைத்து செய்து பார்க்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  16. கீதாக்கா, கார வடை எங்கூரிலும் பேமஸ் ஆக்கும். திருவனந்தபுரத்திலும். அங்கு ஆனைவால் தெருவில் தினமும் போடுவாங்க. இப்போது தெரியவில்லை.

    எங்கள் ஊரில் நவராத்திரியின் போது ஒரு மாமி வீட்டில் கண்டிப்பாக இது ஒரு நாள் உண்டு. அந்த மாமியிடம் தான் நான் கற்றேன்.

    இந்த ரெசிப்பி என் பாட்டி செய்வது. து ப இப்படிப் போட்டு. ஆனால் பாட்டியும் சரி அந்த மாமியும் சரி, திருவனந்தபுரத்திலும் அரிசி புழுங்கலரிசி. நானும் அப்படியேதான் மாமியிடம் கற்றதும், பாட்டியிடம் கற்றதும் செய்வது. இதே பொருட்கள்தான் மற்றபடி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் தி/கீதா. புழுங்கலரிசி தான் இதுக்குப் போடுவோம். நான் தான் அதைக் குறிப்பிடவில்லை. நான் அநேகமாகப் புழுங்கலரிசியோடு பச்சை அரிசியும் கலந்து போடுவேன். எங்க வீட்டு நவராத்திரியில் என்னோட தவலை வடை ஒரு நாள் கண்டிப்பாக இருக்கும். இங்கே அதுக்கு அடிச்சுப்பாங்க! சிலர் தேடிக் கொண்டு கேட்டு வருவதும் உண்டு.

      நீக்கு
    2. அப்படி வருபவர்களிடம், அடடா..... தவலைவடை நவராத்திரி 2ம் நாளுக்குன்னா பண்ணுவேன், நீங்க 3ம் நாள் வந்துட்டீங்களே என்றெல்லாம் டபாய்க்க மாட்டீங்கன்னா, நவராத்திரிக்கு உங்க வீட்டுக்கு விசிட் பண்றேன். சும்மா சுண்டல், பானகம்னு ஜல்லியடிக்கக்கூடாது சொல்லிட்டேன்

      நீக்கு
    3. இல்லை, இல்லை, நவராத்திரி சூடு பிடிச்சதும் நான்கு/ஐந்து நாட்களில் பண்ணுவேன். அன்னிக்குத் தான் எல்லோரையும் கூப்பிடவும் கூப்பிடுவேன். தினம் வந்தாலும் சுண்டலோ அன்னிக்கு என்ன நிவேதனமோ அது உண்டு கட்டாயமாய். ஆனால் அதெல்லாம் சென்னைக்கப்புறமா நின்னு போச்சு! இங்கே எல்லாம் நவராத்திரிக்கு என்னிக்குக் கூப்பிடறோமோ அன்னிக்கு மட்டும் வராங்க. தினம் தினம் வந்து வெத்திலை பாக்கு எடுத்துக்குங்க என்றால் இகழ்ச்சியுடன் மேலும்/கீழும் பார்க்கிறாங்க. அப்புறம் வரதே இல்லை என்பதோடு நம்மையும் கூப்பிடுவது இல்லை.

      நீக்கு
  17. மிகவும் பிடிக்கும் காரவடை. முன்புஅடிக்கடி செய்து வந்தேன் இப்போது எப்போதேனும். குறிப்பாக இட்லிக்கு அரைக்கும் போது கொஞ்சம் கூடுதலாக ஊறப் போட்டு, மற்றபடி து பருப்பு மட்டும் தனியாக ஊற வைத்து அரைச்சு சேர்த்து டக்கென்று செய்வதும் உண்டு.

    வெழுமூன// அதே எங்கள் பிறந்த வீட்டிலும் இந்தச் சொல் தான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா! இங்கேயும் இப்போல்லாம் எண்ணெய் பக்ஷணங்கள் அதிகம் பண்ணுவதில்லை. வெயிலில் அடுப்புக் கிட்டே நிற்க முடியலை. அதோடு அதிக வெயிலினால் வயிறும் கெட்டு விடுமோனு கவலை.

      நீக்கு
    2. அதை முதல்ல சொல்லுங்கோ.வெளியிலிருந்து வந்த வடை , பாதி வடையை சாப்பிட்டது நேற்று முழுவதும் வயிற்று வலி.

      நீக்கு
  18. சூப்பராக வந்திருக்கு கீதாக்கா. படங்களும் நன்றாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. ஆமாம் கீதாக்கா, உளுந்து நன்றாகக்கொட கொட என்று புஸ்ஸென்று அரைக்க வேண்டும் அப்போதுதான் காரவடை நன்றாக வரும்.

    எங்கள் ஊர் அந்த மாமி இதோடு சில சமயம் தேங்காயைச் சிறியதாகக் கீறியும் போடுவார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய்க்கீற்று நானும் போடுவது உண்டு. அந்தச் சமயம் தேங்காய் வீட்டில் இருக்கணும்.

      நீக்கு
  20. காரவடை அருமை. படங்களுடன் காரவடை செய்முறையும் நன்றாக இருக்கிறது. தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி போடுவோம். கடலை மாவு இல்லாமல் கடலைபருப்பு அரைத்து போடுவோம். மேலே மொறு மொறு என்றும் உள்ளே பஞ்சு போல இருப்பதுதான் காராவடையின் சிறப்பு. திருவனந்தப்புரத்திலும் காராவடை நன்றாக இருக்கும். மிக அருமையாக செய்து காட்டி விட்டீர்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்காய் இருந்தால் போடுவது உண்டு. அன்னிக்குத் தேங்காய் இருந்திருக்காது. அதோடு தவலை வடை எனில் கட்டாயம் தேங்காய் வாங்கி வந்தாவது உடைச்சுச் சேர்த்துடுவேன். இதுக்கெல்லாம் அவ்வளவு பாடு படறதில்லை. :)

      நீக்கு
  21. மாவு தயாரித்ததும் உடனே போடணுமானு கடைசியில் ஶ்ரீராம் கேட்டிருக்கார். அது நீங்க மாவு தயாரிக்கும் நேரத்தைப் பொறுத்து. நானெல்லாம் சாயங்காலம் 3 மணிக்குத் தேவைன்னா ஒரு மணிக்கே தயார் செய்து போட்டுப் பொரிச்செடுக்கணும் என்ற அளவில் வைச்சிருப்பேன். ஆகவே உங்கள் நேரத்தைப் பொறுத்தது அது. உடனே போட்டாலும் தப்பில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்ன புதிய மாதிரி கருத்து தெரிவிக்கும் பெட்டி இருக்கிறது நேற்று என்னால் முடியவில்லை கார வடை மிக நன்றாக இருக்கிறது மருமகளை செய்யச் சொன்னேன் நன்றாக வந்தது டேஸ்ட்டும் அபாரம் மிக்க நன்றி அன்புடன்

      நீக்கு
    2. இதிலே உங்களுக்கு பதில் கொடுத்திருந்தேன் அம்மா. வரலை! :( காணாமல் போயிருக்கு. பாராட்டுக்கும் உடனே செய்து பார்த்ததுக்கும் ரொம்ப நன்றி. உண்மையிலேயே நன்றாக இருக்கும் இந்தக் காராவடை.

      நீக்கு
  22. காராவடை புதிதாக இருக்கிறது. செய்முறையும் படங்களும் நன்று. செய்து பார்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!