செவ்வாய், 5 டிசம்பர், 2023

சிறுகதை : மௌனத்தின் புன்னகை.. - துரை செல்வராஜூ

 மௌனத்தின் புன்னகை..

துரை செல்வராஜூ 

*** *** *** *** ***

" அம்மா.. அகிலாண்டேஸ்வரி.. எல்லோரும் நல்லாருக்கணும்... "

ஜானகியம்மாள் மனமுருகி நின்றிருக்க - 

' நாநாவித பத்ர புஷ்பாஞ்சலீம் கற்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி..
அகிலாண்ட ஈஸ்வரி அம்பிகாயை நமோ நம: .. '

கற்பூரச் சுடருடன் மூலஸ்தானத்தில் இருந்து  வந்த  குருக்கள் குங்குமப் பிரசாதம் வழங்கினார்.. 

ஒரு சாண் அளவு மல்லிகைச் சரத்துடன் எலுமிச்சை அளவுக்கு - அபிஷேக  மஞ்சளையும் கொடுத்தார்.. 

அத்துடன், " நேத்திக்கு சுக்ர வாரம்.. அம்பாளுக்கு அர்த்தஜாம பூஜை ல சாத்தினது.. ரெண்டாவது பெண்ணுக்குத் தைச்சுக் கொடுங்கோ.. சீக்ரமா நல்ல வரன் வருவான்.. " - என்று சொல்லி மஞ்சள் நிற ஜாக்கெட் துணியையும்  கொடுத்தார்..

ஜானகியம்மாளுக்கு மகிழ்ச்சி.. 

" ஸ்வாமி.. இந்தத் துணியில தைக்கிற ஜாக்கெட்டை எந்த நாளும் போட்டுக்கலாமா!.. ஏதும் தோஷம் வந்திடாதே.. "

ஜானகியம்மாளுக்கு இயல்பான சந்தேகம்...

" தாராளமா போட்டுக்கலாம்... அம்பாள் அனுக்ரஹம் பரிபூர்ணம்.. " 

" அடுத்த வெள்ளிக்கிழமை பேத்தி ஜனனியோட ஜென்ம நட்சத்திரம்.. "

" சுகன்யாவோட மகளா.. " 

" ஆமா!.. "

" அடுத்த வெள்ளி... " - விரல் விட்டு எண்ணினார் குருக்கள்..

" சுக்ல பட்ச ம்ருகசீர்ஷம்.. "

" ஆமா!.. "

" குழந்தைக்கு கொஞ்சம் கோபம் வரும்.. இருந்தாலும் மனஸ்  ஸ்படிகம் மாதிரி.. நன்னா படிப்பா..  பிறத்தியார்க்கு ஆலோசனை சொல்லுவா.. நீதி நேர்மை.. ன்னா ரொம்பவும் பிடிக்கும்..  கணக்கு, கம்யூட்டர், தொழில் நுட்பம் எல்லாம்  வசப்படும்.. பெரிய வேலை.. நல்ல வாழ்க்கை கிடைக்கும்.. நல்ல பொண்.. தீர்க்க சுமங்கலியா இருப்பா.. "

ஜானகியம்மாளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..

" ஜென்ம நட்சத்திரத்தில சுவாமி அம்பாள்க்கு அபிஷேகம் அர்ச்சனை.. மத்யானமா அன்னதானம் செய்யணும்.. அதான் உங்ககிட்ட அபிப்ராயம் கேட்க வந்தேன்... அன்னதான நன்கொடை எவ்வளவு ன்னு தெரிஞ்சா இப்பவே கொடுத்துடுவேன்... "

" அபிஷேக திரவ்யம், வஸ்த்ரம் புஷ்பம் எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. ப்ரசாதம் என்னென்ன செய்றது ன்னு நீங்க தான் சொல்லணும்.. அப்றமா அமௌண்ட் கொடுத்தா போதும்.. அந்த அன்னதான விஷயம் மட்டும் அங்கே ஆபீஸ்ல கேட்டுக்கோங்க.. இவ்விடத்தே ஒன்னும் சொல்லப்படாது.. " கை காட்டினார் குருக்கள்..

" சரி.. பிரசாதமா சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் 
ஓரோரு படி.. சுண்டலும் செஞ்சுடுங்கோ.. மற்றதெல்லாம் எப்பவும் செய்றதைப் போல!.. "

" அப்படியா.. சரி.. வெள்ளிக் கிழமை ஒம்பதரைக்கெல்லாம் வந்துடுங்க.. துர்காம்பிகா ராகு கால அபிஷேகமும் தரிசனம் செய்திடலாம்... வியாழக்கிழமை சாயந்தரமா ஒரு வார்த்தை சொல்லி ஞாபகம் பண்ணிடுங்கோ..  "

" நல்லது.. இதை கைச் செலவுக்கு வச்சிக்குங்க.. " - என்றபடி இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு குருக்கள் கை காட்டிய அலுவலகத்தை நெருங்கினார் ஜானகியம்மாள்..

" அதெல்லாம் சரிதான்... " 

குனிந்தபடி கைப்பேசியில்  பேசிக் கொண்டிருந்த இளைஞன் நிமிர்ந்து பார்த்து - " உட்காருங்கம்மா!.. "  என்றான்..

" சரி.. சரி.. நான் அப்புறமா பேசறேன்.. நீ தொந்தரவு செய்யாம இரு.. நீங்க சொல்லுங்கம்மா!.." 

" அன்னதானத்துக்கு பணம் கொடுக்கணும்.. "

" எந்த தேதியில ம்மா?.. "

" வர்ற வெள்ளிக்கிழமை.. "

" சரி.. இங்கே ஷெட்யூல்படி அம்பது பேருக்கு அன்னதானம் .. ஆனா எக்ஸ்ட்ரா பதினைஞ்சு நம்பர் வரும்.. "

" அது பிரச்னை இல்லை.. எவ்வளவு பணம்.. ன்னு சொல்லுங்க.. என்னென்ன பரிமாறுவீங்க!.. "

" அன்னதான நன்கொடை ரெண்டாயிரம் ரூபாய்..  இன்னைய வெலைவாசி உங்களுக்கே தெரியும்.  இது கம்மி தான்.. "

" கூடுதலா வந்தா நான் கொடுத்துடறேனே.. "

" வேண்டாம்.. வேண்டாம்.. ரெண்டாயிரம் மட்டும்.. அது கூட  பாத்திரம் கழுவுறவங்களுக்காக ஐநூறு  சேர்த்துக் கொடுத்துடுங்க.. கூடுதல் செலவு ங்கறது காய்கறி ல தான் வரும் .. அப்படி  வந்தால் நாங்க கோயில் திட்டத்தில இருந்து எடுத்துக்குவோம்... வேற என்னமோ கேட்டீங்களே!.. "

சற்று யோசித்தான் அந்த இளைஞன்..

 " ம்ம்.. பொன்னி அரிசி சாதம், கோஸ் பொரியல்,  உருளைக் கிழங்கு மசாலா, சாம்பார், ரசம் மோர், அப்பளம் - அவ்வளவு தான்.. இந்த சுற்று வட்டார அன்னதானத்தில் அப்பளம் போடறது எங்க கோயில்ல தான்.. "

' அப்பளம் போடறது ஒரு பெருமையா.. ஈஸ்வரா!.. '  - நினைத்துக் கொண்ட ஜானகியம்மாளின் அடுத்த கேள்வி..

" பாயசம்?.. "

" இதுவரைக்கும் இல்லை..பாயசம் செய்றதுக்கு இங்கே எக்ஸ்ட்ரா பாத்திரங்களும்  கிடையாது.. "

"  இனிப்பு?.. "

"  உங்க இஷ்டம்.. நீங்க வாங்கிக் கொடுத்துடுங்க!.. "

" அப்போ சரி.. நான் லட்டு வாங்கி வந்துடறேன்.. "

" ஒரு நிமிஷம்... எதுவா இருந்தாலும் கொடுக்கிறத சந்நிதியில வச்சி கொடுத்துடுங்க.. இங்கே பந்தியில வேணாம்.. அப்புறம் அதுவே பழக்கமா ஆயிடும்..  "

" சரி.. இந்தாங்க அமௌண்ட்.. வவுச்சர் கொடுப்பீங்க தானே.. "
ஜானகியம்மாள் கையில் பணத்தை எடுத்தாள்..

" அது நடைமுறையில இல்லை.. இது தனியார் கோயில்.. இருந்தாலும் அப்பப்போ பெரிய செலவு எல்லாம் இருக்கு.. உங்களுக்கு புரியும் ன்னு நெனைக்கிறேன்..  நாங்க வேற என்னம்மா செய்றது?.. "

ஜானகியம்மாள் அமைதியாக பணத்தை நீட்டினார்கள்..

" ஐம்பது பேர் வந்துடுவாங்க தானே.. சாப்பாடு வீணாகிடாதே... "

" அந்தக் கவலையே வேண்டாம்.. வர்றவங்க எல்லாம் கோயிலைச் சுற்றி இருக்கிற ஆளுங்க தான்.. மணியடிச்ச மாதிரி  வந்துடுவாங்க!.. "

பணத்தை வாங்கிக் கொண்ட இளைஞன் சிரித்தான்..

" நீங்க வேணா மூனு பேர் கலந்துக்கலாம்.. உங்களுக்கு இஷ்டம் ன்னா நீங்களே கூட பரிமாறலாம்.. "

" சரி.. நாங்க மூனு பேர் வர்றோம்.."

" உச்சிக்காலம் முடிஞ்சதும் பந்தி ஆரம்பமாயிடும்..மா!.. "

" சரிப்பா.. நான் போய்ட்டு வர்றேன்!.. "

" வாங்கம்மா!.. "

' இது என்ன அநியாயம்!.. ரசீது கொடுக்கற வழக்கம் இல்லையாமே.. கோயில்ல   சாப்பிடுறாங்க.. கோயிலயும்   சாப்பிடுறாங்க.. அது போய்த் தொலையட்டும்.. நாம கொடுக்கிற அன்னதானத்தில் நாமே வந்து சாப்பிடுறது சரியா?.. அது ஒரு பார்வைக்குத் தான்.. அதுவும் இல்லாம  நாலு பேருக்கு நம்ம கையால சாப்பாடு போடும் புண்ணியம் கிடைக்குதே.. அது ஒன்னு போதும்!.. "

சிந்தனையுடன் ஜானகியம்மாள் வடக்கு பிரகாரத்தில் நடந்த போது - சிறிய சந்நிதிக்குள்  ஸ்ரீதுர்காம்பிகை.. அவளது  திருக்கரத்தில் விசேஷமாக பிரயோகச் சக்கரம்..

துர்க்கை புன்னகைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது..

அந்தப் புன்னகைக்கு அர்த்தம் தான் புரியவில்லை..

வாங்குகின்ற பணத்துக்கு ரசீது கிடையாது என்ற நடைமுறை  ஜானகியம்மாள் நினைவுக்கு வந்தது..

" நீ பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் தானே இருக்கின்றாய்!.. "

ஜானகியம்மாள் கேள்வியை முன் வைக்க - துர்க்கையின் திருவாய் மலர்ந்தது..

" என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?.. "

" இந்தத் தவறையெல்லாம் தட்டிக் கேட்கக்கூடாதா?.. "

" யார்?.. "

" நீ தான்!.. "

" நான் தட்டிக் கேட்பதா?.. "

" பின்னே வேறு யார்!.. "

" நீ என்ன வேண்டிக் கொண்டாய்?.. சொல்!.. "

" அம்மா.. அகிலாண்டேஸ்வரி.. எல்லோரும்  நல்லாருக்கணும்!.. "

புன்னகைத்தாள் துர்காம்பிகை..

***

57 கருத்துகள்:

  1. அன்னதானம் என்பதன் அர்த்தமும் மாறிவிட்டது.

    கோயில்ல இவ்வளவாவது செய்கிறார்களே என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். ஏதலிகள் சாப்பிடுகிறார்கள் என்று ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கோயில்ல இவ்வளவாவது செய்கிறார்களே என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.//

      இதுதான் நியாயம்..

      நீக்கு
  2. நான் பல வருடங்களுக்கு முன்பு நங்கநல்லூர் எஓவிலுக்குச் சென்றிருந்தபோது, எங்களிருவருக்கும் மதிய உணவுப் பிரசாத்த்துக்கு டோக்கன் கொடுத்தார்கள். அன்புடன் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். தேவையானவர்கள் பெறுவதுதானே அன்னதானம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தேவையானவர்கள் பெறுவதுதானே அன்னதானம் //

      இதுவும் சரிதான்..
      ஆனாலும் வேறொரு கருத்தும் உள்ளது...

      நீக்கு
    2. அது மதிய உணவா? அன்னதானமா!
      தானமெனில் அதுக்குமா டோக்கன்?

      நீக்கு
    3. பெரும்பாலான கோயில்களில் நித்ய அன்னதானம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான்!....

      நீக்கு
  3. எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற வேண்டுதல் மாத்திரம் போதும். நம் பணம் எப்படி எப்படியெல்லாம் செல்கிறது என்ற ஆராய்ச்சி வேண்டாம். எல்லாவற்றையும் நம்மால் நம் விருப்பப்படி சரி செய்ய முடியாதல்லவா? கதை நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எல்லாவற்றையும் நம்மால் நம் விருப்பப்படி சரி செய்ய முடியாதல்லவா? கதை நன்று..//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துக்களும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  6. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் படத்துடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  7. சென்னையைச் சூழ்ந்துள்ள

    எல்லா வகையான இடுக்கண்களும் தீர்வதற்கு வேண்டிக் கொள்வோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கு அடுத்த தேர்தலும் வரணுமே

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா எத்தனை தேர்தல்கள் வந்து ஆட்சி மாறினாலும் சென்னைக்கு இப்படியான வெள்ளத்திலிருந்து விடிவுகாலம் என்பதுக்கு ரொம்ப வருஷம் எடுக்கும்...எல்லாப் பிரச்சனைகளுக்குமே.....ஏனென்றால் அடியோடு மாற்றவேண்டும் வடிகால் வசதி மற்றும் கழிவு நீர் வெளியேறும் பாதைகள்...நிறைய விஷயங்களுக்கு லீகல் டீலிங்கில்மாட்டிக் கொள்ளும்.

      நிறைய நிறைய நிறைய செலவாகும் அத்தனை எளிதல்ல. ஏனென்றால் இவங்க சரி பண்ணினாலும் எங்கு தேங்கும் தேங்காது ஒழுங்கா போகுதான்னு பார்க்க புயல் மாதிரி வந்து பரிசோதனையா பண்ண முடியும்? trial and error process ஆ செய்ய முடியும்?

      முழு அபார்ட்மென்ட் கட்டிடமும் தரையில் அழுந்தியிருக்காமே வேளச்சேரியில..கேள்விப்பட்டேன்...எப்படி கொலாப்ஸ் ஆகி விழாம இருந்ததுன்னு ஆச்சரியம். தப்பிச்சாங்க ஜனங்க.

      கீதா

      நீக்கு
  8. நல்ல கதை. கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து, அம்மனை வேண்டி அம்மனோட பதிலும் கிடைத்த திருப்தி. கதை மிக அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி துளசிதரன்..

      நீக்கு
  9. துரை அண்ணா கதை நன்றாக இருக்கிறது. நேர்மறை முடிவு. அம்மனின் புன்னகையில் பல அர்த்தங்கள் இருப்பதாத எனக்குப் படுகிறது. அவரவர் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம்!!!!!!

    கீழே என் தனிப்பட்டக் கருத்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அம்மனின் புன்னகையில் பல அர்த்தங்கள் இருப்பதாக எனக்குப் படுகிறது... //

      இதுதானே கதை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோதரி..

      நீக்கு
  10. ஸ்ரீராம் அவர்களுடன் பேசுவதற்கு முயன்றேன்...

    முடியவில்லை..

    இன்னும் கரண்டு வர்லயா?..

    பதிலளிநீக்கு
  11. கதை குருக்களின் பேச்சில் இயல்பாக நகர்கிறது.

    ' தவறை எல்லாம் தட்டிக் கேட்கக் கூடாதா"" ?
    'புன்னகைத்தாள் துர்க்காம்பிகை"
    எல்லோருமே அவளுடைய குழந்தைகளாக இருக்கும் போது அவள் என்ன செய்வாள் பார்த்துக் கொண்டு இருப்பதை தவிர்த்து யதார்த்தம்.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் கதை நன்றாக இருக்கிறது.
    அன்னதானம் வழங்க போகும் போது அங்கு என்ன சொல்கிறார்களோ, அல்லது அங்கு என்ன சட்ட திட்டமோ அதைதான் நாம் கடைபிடிக்க வேண்டும். அம்மாவுக்கு தெரியும் நாம் கொடுத்தது. வேறு என்ன வேண்டும். எல்லோரும் அம்மன் அருளால் நன்றாக இருக்கட்டும்.

    கதையும் கதைக்கு பொருத்தமான படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  14. " நீங்க வேணா மூனு பேர் கலந்துக்கலாம்.. உங்களுக்கு இஷ்டம் ன்னா நீங்களே கூட பரிமாறலாம்.. "//

    என் கணவரின் முதல் திதி சமயம் இரண்டு இடங்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்து இருந்தோம். ஒன்று முதியோர் இல்லம் அங்கு காலை உணவு மட்டும் போதும் எளிமையான உணவு தான் வேண்டும்.
    வயதானவர்கள் வெளி உணவு ஒத்துக் கொள்ளது.

    நீங்கள் வெளியே இருந்து வாங்கி தரக்கூடாது . நீங்கள் பணம் கொடுத்தால் போதும், நாங்கள் அவர்களுக்கு தயார் செய்து கொடுத்து விடுவோம். குறிப்பிட்ட நேரத்தில் உணவு வழங்க வேண்டும் அதனால் நேரத்திற்கு நீங்கள் வந்து விட வேண்டும்.
    நீங்கள் யாராவது வரலாம் அவர்கள் உங்கள் பேரை சொல்லி வாழ்த்துவார்கள் என்றார்கள். என் சார்பில் என் தம்பி மனைவி போய் வந்தாள்.(நான் மகன் வீட்டில் அரிசோனாவில் இருந்தேன்)அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு அவர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடி வாழ்த்தை பெற்று வந்தாள்.

    மதியம் ஆதரவற்ற குழந்தைகள் உள்ள இடம் . அவர்களுக்கு மதிய உணவு வடை பாயாசம் உடன் வெளியிலிருந்து வாங்கி கொடுத்தாள் அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். ஒன்று மட்டும் சொன்னார்கள் தரமான ஓட்டலிருந்து வாங்கி கொடுங்கள் என்று.
    தப்பி மனைவி, தங்கை இருவரும் போய் மதியம் அந்த குழந்தைகளுடன் சாப்பிட்டு உணவுக்கு முன் அவர்கள் பாடிய இறைவன் துதி பாடலை கேட்டு வந்தார்கள்.

    மூன்றாவது நினைவு நாளில் நான்" இம்மையில் நன்மை தருவார் "கோவில் வாசலில் அமர்ந்து இருக்கும் கஷ்டபடும் அன்பர்களுக்கு கொடுத்து வந்தேன். அவர்களின் அன்பான ஆசி, மகிழ்ச்சியான புன்னகையை பெற்று வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா - இது இதுதான் நான் விரும்புவதும். இப்படிக் கொடுப்பது நன்று என்பதே எனக்கும் தோன்றும். அதுவும் முதியோர் இல்லத்தில் அவங்க சொன்னது ரொம்பப் பிடித்தது. உணவுவெளியில் இருந்து வேண்டாம்...அவங்களே செய்துகொடுப்பது....

      அடுத்ததும் அருமை தரமான ஹோட்டல் அனுமதி வழங்கியது எல்லாமே......மூன்றாவதும் இப்போது நீங்க செய்தது...அருமை கோமதிக்கா மனம் நெகிழ்ந்துவிட்டது. கண்களில் நீர்துளிர்த்தது

      கீதா

      நீக்கு
  15. எனக்குப் பொதுவாகவே பள்ளி, கல்லூரி படித்த நேரத்தில் நிறைய கேள்விகள் எழுந்ததுண்டு. அதன் பின் அப்போதிலிருந்தே பல புரிந்து தனிப்பட்டக் கருத்துகளாயின.

    தானம் என்பதே இல்லாதவர்களுக்குக் கொடுப்பதுதான் இல்லையா? அல்லது என் மனதில் அப்படிப் படிந்த கருத்தாக இருக்கலாம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டுத் திவசத்திற்கு வந்தவர்கள் பாவப்பட்டவங்களாக இருந்தாங்க. வயிறார சாப்பாடும், கொடுக்கப்படும் தானமும் உபயோகமாக இருக்கும்.
    ஆனால் திவசத்திற்கு இப்போதெல்லாம் ஆள் கிடைக்காததால் நல்ல படித்து ரிட்டையர் ஆனவர்கள் கூட வராங்க. அவங்களுக்குச் சில தானங்கள் - கொடுக்கறப்ப இது அவர்களுக்கு எதற்கு என்று தோன்றும், அவர்களுக்கும் சில தர்மசங்கடங்கள். பலருக்கும் பல ஐட்டங்கள் சாப்பிட முடிவதில்லை. சர்க்கரை, இரத்த அழுத்தம் இதயப் பிரச்சனைகள். சாதாரண நிலையில் இருப்பவங்க வந்தாலும் அவங்களுக்கும் இப்படியான பல உடல் நலக் குறைவுகள். வேறு வழியில்லாமல் வராங்க. அவர்களால் சாப்பிட முடிவதில்லை. அப்படி ஆகும் போது என்ன நோக்கத்திற்காக அப்படி அழைக்கிறோமோ அது நிறைவேறுகிறதா என்ற கேள்வி. அப்படியே அவர்கள் இலையில் போடும் பக்ஷணங்கள், இனிப்புகள் எல்லாம் சாப்பிட்டு அவர்கள் உடல் நிலையில் கஷ்டம் வந்தால் அவர்கள் குடும்பம்தானே அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்?

    சமீபத்தில் நடந்த எங்கள் வீட்டு விசேஷத்துக்கு இப்படியான பிரச்சனைகள் எழுந்தன. நெருங்கிய பந்தம் வரலாம் என்றால் அவர் மாட்டேன் என்று சொல்லிவிட்டார். வந்தால் நான் அந்த இலையில் உட்காரத் தகுதியற்றவன் என்னால் சாப்பிட முடியாது. நீங்கள் பித்ருக்களை நினைத்து அவர்களை உருவகப்படுத்திக் கொண்டு உணவு அளிக்கறீங்க ஆனால் என்னால் சாப்பிட முடியாத போது உங்களுக்கும் மனத் திருப்தி இருக்காது எனக்கும் மனதில் சங்கடம் தோன்றும் எனவே இலைக்கு நானில்லை என்று சொல்லிவ்ட்டார்.

    தானம் என்ற சொல்லைக் கண்டதும் தோன்றியது, துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் இப்படியானதற்கு விட்டுக் கொடுக்கக் கூடாது என்று சென்ற நெருங்கிய உறவு - கஷ்டத்தில் இருந்தவர். அங்கு வைத்துக் கொடுக்கும் அந்தப் பணம் அவருக்கு உபயோகம் என்பதால் - சென்றவருக்கு சர்க்கரை வியாதி, பிரஷர் என்று ஆனால் கிடைக்கும் பணம்...இதுக்காக இலையில் போடுவதை நெருங்கிய உறவு அவர் திருப்தியடையணுமே என்று சாப்பிட்டு எல்லாம் கூடி மருத்துவ மனையில் இருந்து இறைவண்டி சேர்ந்தார். வைத்தியம் கூடப் பார்க்க முடியாத நிலை.

      என்மனம் இப்படியானவற்றை நினைத்து வேதனை யடைய வைக்கும். பல கேள்விகள் எழுந்ததுண்டு. இதில் எது முக்கியம் என்று. ஆனால் என் தனிப்பட்ட பதிலை இங்கு தரவில்லை.

      கீதா

      நீக்கு
    2. இறைவண்டி - இறைவனடி. தட்டச்சும் போது கீ கள் ஓடுது..எ

      கீதா

      நீக்கு
    3. திருவிசை நல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் அவர்கள் நினைப்பும் இதுதான் கீதா. அவர் கார்த்திகை அமாவாசை அன்று தன் வீட்டு கிணற்றில் கங்கையை பொங்க வைத்தார். இன்று மக்கள் அதில் குளித்து மகிழ்கிறார்கள். பசித்தவருக்கு உணவு அளித்தவர்.
      எல்லா மதத்தினரும் இந்த கிணற்றில் அன்று நீராடுவார்கள்.
      நாங்களும் போய் நீராடி இருக்கிறோம். அங்கு கொடுக்க படும் அன்னதானத்திலும் கலந்து கொண்டு இருக்கிறோம். நாமும் அன்னதானத்திற்கு விருப்பபட்டதை கொடுக்கலாம்.

      நீக்கு
    4. என் அம்மாவின் நினைவு நாளும் அன்று தான்.

      நீக்கு
    5. கோமதிக்கா மிக்க நன்றி அக்கா. இது எனக்குத் தெரியாத தகவல். அவரைப் பற்றி வாசிக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    6. திருவிசநல்லூர்
      கங்கை பெருக்கு நானும் கேள்விப்
      பட்டுள்ளேன்..

      இன்னும் தரிசித்ததில்லை..

      நீக்கு
    7. /// திருவிசநல்லூர்
      அன்னதானத்திலும் கலந்து கொண்டு இருக்கிறோம்.. ///

      நிறைவான செய்தி.
      மகிழ்ச்சி..

      நீக்கு
  16. நாம் ஒருவருக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் வலது கை செய்வது இடதுகைக்குக் கூடத் தெரியக் கூடாது என்று சொல்வதுண்டு. அப்படிக் கொடுக்கும் போது அதன் பின் அதைப் பற்றி ஆராயக் கூடாது கொடுத்தபின் மறந்துவிட வேண்டும் என்று தோன்றும்.

    இல்லை இப்படியான கேள்விகள் மனதில் எழுந்தால் கொடுக்காமல் இருந்துவிட வேண்டும். முரண்பட்ட மனதுடன் செய்ய வேண்டுமா என்று தோன்றும். செய்தால் நல்லது என்று ஒரு மனம்....இல்லை அது ஒழுங்கா போகுமா? இப்படி எல்லாம் கொள்ளை அடிக்கறாங்களே என்று மனதில் எழுந்தால் முரண்படுகிறது மனம்..சந்தேகம் எழுந்துவிட்டால் நல்லது என்று செய்வது அடிபட்ட்டு விடுகிறது இல்லையா? பெரும்பாலும் சாப்பிடுபவர்கள் நல்ல நிலையில் இருப்பவர்களே என்று தோன்றும்.

    ஜானகி அம்மாளைப் போலத்தான் பலரும்.

    கடைசி இரு வரிகள் நல்லாருக்கு. எல்லாரும் நல்லாருக்கணும் அம்புட்டுதான்....அதில் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன. வாசிக்கும் ஒவ்வொருவரும் அதை அவர்களுக்குப் புரிந்த வகையில் எடுத்துக் கொள்ளலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// எல்லாரும் நல்லாருக்கணும் அம்புட்டுதான்.. அதில் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன.///

      ஒவ்வொருவரும் அதை அவர்களுக்குப் புரிந்த வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

      மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
    2. ///வலது கை செய்வது இடதுகைக்குக் கூடத் தெரியக் கூடாது என்று சொல்வதுண்டு///

      எல்லா தான தர்மங்களையும் அப்படிச் செய்ய முடியாது..

      அன்னதானத்தை
      ஒளித்துச் செய்ய முடியுமா?..

      நீக்கு
  17. மௌனத்தின் புன்னகை. தலைப்பு அருமை.

    தலைப்பில் சொன்னது போல மெளனமாக அனைத்தையும் ஒருவன் பார்த்து கொண்டு இருக்கிறான் என்று நினைத்தாலே போதும்.

    எளிமையான மக்கள் சொல்வது எல்லாம் அவன் செயல், அவன் பார்த்து கொள்வான், மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான். என்று சொல்லி இறைவன் மேல் பாரத்தை போட்டு விட்டு தங்கள் கடமைகளை செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  18. அன்பின் கோமதி அரசு அவர்களும் சகோதரி கீதா ரங்கன் அவ்ர்களும் தெரிவித்துள்ளகருத்துகள் மிகவும் நெகிழ்ச்சியானவை..

    மகிழ்ச்சி.. நன்றி

    பதிலளிநீக்கு
  19. எனது பிரார்த்தனை பெரும்பாலும் "உலக மக்கள் அனைவரும் நல்லா இருக்கணும்" என்பதாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
    2. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
    3. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஜி..

      நீக்கு
  20. இங்கே திரு ஐயாற்றுக்கு அடுத்துள்ள கடுவெளி கிராமத்தில் ஆதரவற்றோர்க்கு ஆசிரமும் பிள்ளைகளுக்கு பள்ளியும் இயங்கி வருகின்றன..

    மூன்று மாதங்களுக்கு முன்பு உறவுமுறைப் பேத்திக்கு என மதிய உணவுக்காக பணம் கொடுத்தோம்.. எங்களையும் வந்து சாப்பிடச் சொன்னார்கள்.. அதன் பொருள் ஆதரவற்றோர்க்கு ஆறுதலும் மகிழ்ச்சியும்...

    வீட்டில் இருந்த மரக் கட்டிலை அப்புறப்படுத்த வேண்டிய நிலை.. அதனை ஆசிரமத்திற்குக் கொடுத்து விட்டோம்..

    சென்ற மாதம் பேத்தியின் பிறந்த நாளை முன்னிட்டு கண்டியூர் வீரட்டம் கோயிலில் ஐம்பது பேருக்கு அன்னம் வழங்க பணம் கொடுத்தோம்..

    ஏழை எளிய மக்களுடன் சாப்பிடும் போது மனதிற்கு இதம்..

    அன்னதானம் எளியோர்க்குத் தான் என்றில்லை..

    அன்ன தானத்தில்
    அன்னம் என்று அமரும்போது ஐயனும் அருகே அமர்வதாக உணர்வு..

    சொல்வோர் ஆயிரம் சொல்வார்கள்.. எல்லாவற்றிலும் அர்த்தம் இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  21. இத்தனைக்கும் நான் குவைத்தில் இருந்து திரும்பிய பின்னர் எனது நிலையை இறைவன் அறிவான்..

    அவன் ஒருவன் தான் ஆறுதல்..

    பதிலளிநீக்கு
  22. அமாவாசையின் போது திருவையாற்றில் நாலு பேருக்காவது உணவு வாங்கிக் கொடுக்கின்றேன்..

    தீபாவளியின் போது போர்வை தானம் செய்ய வைத்தான் இறைவன்..

    குவைத்தில் இருந்தபோது
    கஜா புயலில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நேரிடையாக பண உதவி செய்தோம்..

    இப்போது அப்படி இயலவில்லை..

    பதிலளிநீக்கு
  23. அம்மா.. அகிலாண்டேஸ்வரி.. எல்லோரும் நல்லாருக்கணும்!.. "

    புன்னகைத்தாள் துர்காம்பிகை..

    நல்லவர்களும் கெட்டவர்களும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல...

    பதிலளிநீக்கு
  24. சில கோவில்களிலாவது நித்ய அன்னதானம் நிகழ்வது நல்லதுதான். திக்கற்றவர்களுக்குத் தின்பதற்குக் கொஞ்சமாவது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      ஏகாந்தன் அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  25. இது ஒரு மணி நேரத்தில் தட்டச்சு செய்யப்பட்டது..

    வரவேற்பு எப்படியிருக்குமோ என்று நினைத்தேன்..

    பதிலளிநீக்கு
  26. எண்ணம் அருமை...

    ஆனால் செயல்... (நிகழ்வு...?)

    பதிலளிநீக்கு
  27. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      அப்பாதுரை ஐயா அவர்களுக்கு நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!