வியாழன், 21 டிசம்பர், 2023

விக்டர் ஹியுகோவும், வியட்நாம் வீடு சுந்தரமும் 

 வெட்டி ஆராய்ச்சி மறுபடி...

பாடக நடிகர்களுக்கு, அவர்களுக்கு அவர்களே பாடிக்கொண்டதைத் தவிர, வேறு யாரும் திரையில் அவர்கள் பாடலுக்கு மாற்றுக்குரல் கொடுத்ததில்லை என்றே நினைக்கிறேன்.

அந்தக் காலத்து நடிகர்கள் பி யு சின்னப்பா, எஸ் ஜி கிட்டப்பா, டி ஆர் மகாலிங்கம், காளி என் ரத்தினம், ஹொன்னப்ப பாகவதர், எம் கே டி பாகவதர் எல்லோருமே பாடகர்கள், நடிகர்கள்.

இந்துநேசன் ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு விடுதலைக்குப் பின் என் எஸ் கிருஷ்ணனுக்காவது திரையுலக மீள் வருகையில் வரவேற்பு கிடைத்தது.  எம் கே தியாகராஜ பாகவதருக்கு திரையில் அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிட்டவில்லை.  

அதிசயமான, வினோதமான ரசிகர்கள்.  

வழக்குக்கு முன் அவரை அந்த அளவு ஆராதித்தவர்கள் அதற்குப்பின் சடாரென மாறியது ஆச்சர்யம்.  விடுதலைக்குப் பின் அவர் நடித்த படங்கள் நன்றாய்ப் போகவில்லை - அவர் நிரபராதி என்று நீதிமன்றம் சொல்லியும் கூட...

பின்னாட்களில் சிவாஜிக்கு அப்பாவாக நடிக்க அவருக்கு வந்த அழைப்பைக் கூட நிராகரித்தார் பாகவதர்.  ஹீரோவாக இருந்து விட்டு துக்கடா வேஷங்களில் நடிக்க பிரியப்படவில்லை அவர்.  

MKT பாகவதர்தான் முதன் முதலில் தமிழ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தவர் என்று அறிகிறேன்.  அவரின் முதல் இரண்டு படங்களையும் கே சுப்பிரமணியம் இயக்கத்தில் வேறொருவர் தயாரிப்பில் இருக்க, மூன்றாவது படத்திலேயே சொந்தப்படம் எடுத்து நடித்து விட்டார் பாகவதர்.  சத்தியசீலன் என்கிற அந்தப் படத்தில்தான் 1936 ல் இரட்டை வேடம் அவருக்கு.  மிகச்சில காட்சிகள்தான் என்றாலும் அப்போது அது புதுமை.

பாகவதர் வேண்டுதலின் பெயரில் எம் ஏ வேணு தயாரித்த படம்தான் சிவகாமி,  சிவகாமி படத்துக்கென்று பாகவதர் தனியாக எதுவும் பாடவில்லை; பாடக்கூடிய நிலையிலும் இல்லை.  ராஜமுக்தி என்ற வெளிவராத படத்துக்கு அவர் பாடியிருந்த பாடல்களை இதற்கு உபயோகித்துக் கொள்ளச் சொல்லி தயாரிப்பாளரைக் கேட்டுக்கொண்டார்.  எனவே பாபநாசம் சிவன் எழுதி, பாகவதர் பாடிய சில பாடல்கள் சிவகாமி படத்தில் இடம்பெற, கா மு ஷெரிஃப் எழுதிய இரண்டு பாடல்களை பாகவதருக்கு T M சௌந்தரராஜன் குரல் கொடுக்க, அவையும் படத்தில் இடம்பெற்றன.  அந்த வகையில் 'வானில் முழு மதியைக் கண்டேன்' பாடல் வெகு இனிமை;பிரபலம்.  படத்துக்கு இசை கே வி மகாதேவன்.படம் பாதித் தயாரிப்பில் இருந்தபோதே பாகவதர் மறைந்துவிட, படத்தை எப்படியோ தட்டி கொட்டி முடித்திருக்கிறார்கள்.

எப்படியும் பழைய சில தீவிர பாகவதர் ரசிகர்களாவது இந்தப் படத்தைக் காண ஆவலுடன் காத்திருந்து பார்த்திருப்பார்கள் என்று நம்புவோம்.

TMS 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' போன்ற சில பாகவதர் பாடல்களை ரீமேக் போல பாடி இருந்தாலும், பாகவதருக்கே குரல் கொடுத்த விவரம் இங்கு முடிய, இன்னொரு விவரம் தொடர்கிறது..

இந்த சிவகாமி படத்துக்கு இயக்கம் மித்ராதாஸ். இவரைப்பற்றி சில சுவாரஸ்யமான விவரங்கள் உண்டு.  

1913 ல் மதுரையில் பிறந்த இவர் முழு பெயர் அன்டனி மித்ராதாஸ்.  கல்லூரி முடித்த பிறகு  சினிமா மீது இருந்த காதலினால் பம்பாய் சென்று திரைப்படக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.  அங்கு கெஸ்ட் லெக்சருக்கு வந்த புகழ்பெற்ற இயக்குனர் எல்லிஸ் ஆர் டங்கன் மித்ராதாஸின் திறமையை அடையாளம் கண்டு அவரை மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்துக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.  

[இப்போது தமிழ்நாட்டில் இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்தான் சூடாக நடந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்!]

மித்ராதாஸ் காலமானது 2017 ல் சென்னையில்.  நூறு வயது கடந்து வாழ்ந்தவர்.  மிகச்சில படங்களே இயக்கி இருக்கும் இவர் இயக்கிய முதல் படம் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி, மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம் தயாரிப்பில் தயாளன் என்கிற படம்.  பி யு சின்னப்பா கதாநாயகன்.  இந்த தயாளன் படத்தில் டி ஆர் மகாலிங்கமும் நடித்திருக்கிறார், பாடியும் இருக்கிறார்.  ஆனால் இந்த விவரம் டி ஆர் மகாலிங்கம் பக்கத்தில் குறிப்பிடப்படாமல் இருக்கிறது.   

இன்னும் கூட ஒரு சுவாரஸ்யம் 'தயாளன்' படத்து பாடல்களுக்கு இன்னார் இசை என்று யாரையும் குறிப்பிடவில்லையாம்.  ஏனெனில் எல்லா பாடல்களும் பெரும்பாலும் பெங்காலி மற்றும் ஹிந்தியிலிருந்து எடுக்கப்பட்ட டியூன்கள்.  'தயாளன்' சுதந்திரத்துக்கு முன் 1941 ல் வெளியான படம்.  இந்தப் படத்தின் நாயகன் பி யு சின்னப்பா இள வயதிலேயே, 28 வயதிலேயே, மறைந்து விட்டார்.

மித்ராதாஸ் மலையாளம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளில் சேர்த்து மொத்தம் ஏழே படங்கள் இயக்கி இருக்கிறார்.  அல்லது இவர் ராணுவத்திலிருந்து திரும்பிய பிறகு பணியாற்றிய படங்கள் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை, சேர்க்கப்படவில்லை.    

ராணுவம்?  

ஆம்.

அது இவர் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான குறிப்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் B A (stastics) படித்திருந்த இவர் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நாட்டுக்கு சேவை செய்வது தம் கடமை என்று எண்ணி ராணுவத்தில் இணைந்தார்.  1942 முதல் 1945 வரை சிங்கப்பூர், சிட்டகாங் ஆகிய இடங்களில் பணியாற்றி, பின்னர் வந்து, மறுபடி திரையுலகில் சில படங்கள் இயக்கி இருக்கிறார்.  இவர் சிங்களத்தில் 1956 ல் இயக்கிய படம் ஒன்று Duppathage Duka.  இது தமிழில் வெளிவந்த 'ஏழை படும்பாடு' என்கிற படத்தின் ரீமேக்.

ஒரு இயக்குனர், அந்த வேலையின் நடுவே திடீரென நாட்டுக்கு சேவை என்று ராணுவத்தில் சேவை செய்யச் சென்றது வியப்பு.  சரி//  அவர் ரீமேக் செய்த படம் பற்றி பார்க்கலாம்.

ஏழை படும் பாடு.  இப்போது சுவாரஸ்யம் இடம் மாறுகிறது.  இந்த ஏழை படும் பாடு என்னும் படம் பற்றி சில குறிப்புகள்.. 

விக்டர் ஹ்யுகோ பற்றி தெரியும் உங்களுக்கு.  1802 ல் பிரான்சில் பிறந்தவர்.  1885 ல் காலமானார்.

அவர் எழுதி உலகப்புகழ் பெற்ற ஒரு நாவல் Les Miserables. 1830களின் ஆரம்பத்தில் இந்த நாவலை எழுத நினைத்து விதை விழுந்தது அவர் மனதில்.  ஆனால் 17 வருடங்கள் ஆயின அவை ஒரு உருவத்துக்கு, முடிவுக்கும் வர.  கடைசியில் புத்தகம் வெளியானது 1862 ஆம் ஆண்டு.  புத்தகம் வெளியான சமயம் விடுமுறையில் அல்லது அரசியல் காரணங்களால்  உல்லாசப் பயணத்தில் இருந்தாராம் ஹியூகோ.  அவர் புத்தக வெளியீட்டாளருக்கு ரத்தினச் சுருக்கமாக  ? என்று மட்டும் ஒரு தந்தி அனுப்பினாராம்.  பப்ளிஷரும் சளைத்தவரல்ல.  புத்தகத்தின் மாபெரும் வெற்றியைக் குறிக்கும் வகையில் ! என்று பதில் தந்தி அனுப்பினாராம்.

1862 ல் வெளியான இந்த நாவலின் கதையை தமிழில் சுத்தானந்த பாரதியார் எடுத்து எழுதியிருந்தகாராம்.  பின்னர் ஏழை படும்பாடு எடுக்கப்படும்போது, அதை இளங்கோவன் எனும் தணிகாசலம் தமிழ்த் திரைக்கு தக்கவாறு மாற்றி எழுதினாராம்.

1950 ல் ஏழை படும்பாடு வெளியானது..  வெற்றி பெற்றது.  நாகையா தான் கதாநாயகன்.  ஜீன்வால்ஜீன் பாத்திரத்தைத்தான் அவர் ஏற்றிருந்தார்.

இந்தப் படத்தில்தான் சீதாராமன் அறிமுகமானார்.  இன்ஸ்பெக்டர் ஜாவெர்ட் எனும் பாத்திரத்தில் நடித்த அவர் அதன் பின்னர் ஜாவர் சீதாராமன் என்றே அறியப்பட்டார்.

இந்தப் படத்தைத் தயாரித்த பக்ஷிராஜா நிறுவனம்.  அதன் உரிமையாளர் ஸ்ரீராமுலு நாயுடு.    இவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான கேரக்டர்.  ஒரு முறை இந்தப் படத்தின் இயக்குனர் ராம்நாத் வர தாமதமாக, இன்று படப்பிடிப்பு இருக்காது என்று நினைத்து அன்று காட்சியில் நடிக்க வேண்டிய வி. கோபாலகிருஷ்ணன் ஜூட் விட்டு விட்டாராம்.  வந்து பார்த்து கடுப்பான நாயுடு அன்றைய காட்சியில் எடுக்க வேண்டிய டூயட் பாடல் காட்சியில் ஒரு பெண்ணுக்கு ஆண் வேடமிட்டு எடுத்து விட்டாராம்.

சரி இருக்கட்டும்..  படத்துக்கு என்ன என்று கேள்வி வருகிறதா? ஒரிஜினல் கதையில் குற்றம் செய்த ஒருவனை - சில்லரைத் திருடனை பிடிக்கிறார் இன்ஸ்பெக்டர்.  அவன் சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஒரு பாதிரியார் உதவியுடன் திருந்தி தொழிலதிபராகிறான்.  அதற்கு சற்று முன் அவன் செய்த ஒரு குற்றத்துக்காக இன்ஸ்பெக்டர் அவனை விடுவதாயில்லை.  அவன் திருடன் என நிரூபிக்க பாடுபடுகிறார்.  ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் உயிரை திருடன் காப்பாற்றுகிறான்.  கடைசியில் இன்ஸ்பெக்டர் ஒருவகை நன்றியில் தற்கொலை செய்துகொண்டு உயிர் துறக்கிறார்.  ஜீன்வால்ஜீன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களோ?


அது சரி, மேலே சொன்ன கதை எங்கேயோ கேட்ட கதை போல இல்லை?   19 ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான Les Miserables. பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள,  மற்றும் அதைத் தழுவி வெவ்வேறு கதைகள் எழுதப்பட்டதும் காரணம்.

இதை கொஞ்சமே கொஞ்சம் மாற்றி எழுதி, 1972 ல் பி மாதவன் இயக்கத்தில் சிவாஜி, மேஜர், சாரதா நடிக்க 'ஞான ஒளி' படம் எடுத்தார்கள்.  இந்தப் படத்துக்கு கதை வசனம் பொறுப்பை வியட்நாம் வீடு சுந்தரம் எடுத்துக்கொண்டார்.  'ஏழை படும்பாடு' படத்தின் டைட்டிலில் மூலக்கதை என்று Les Miserables.  பெயரை போடுவார்கள்.  'ஞான ஒளியில்' கண்டு கொள்ளவே இல்லை.  எத்தனையோ பேர் அடித்திருக்கிறார்கள், நாமும் அடிப்போம் என்று கதையை எடுத்துக் கொன்டு விட்டார்கள் போலும்!  ஆனாலும் அவர்கள் விடவில்லை!  Les Miserables ன் தழுவல்கள் என்கிற லிஸ்ட்டில் ஞான ஒளியும் தப்பாமல் இடம்பெற்றிருக்கிறது 


சரி, எங்கோ ஆரம்பித்து எங்கோ கொண்டு வந்து முடித்து விட்டேன்.  இதிலிருந்தும் ஒரு கண்ணி பிடித்து தொடரலாம்.  

ஆனால் அளவுக்கு மீறினால்....

====================================================================================================


==================================================================


==============================================================================================

ஏகாந்தமாய்...

மாநகர் டெல்லி காட்டிய மாலைப்பொழுதுகள்
ஏகாந்தன் 

அமைச்சரவையில் நான் பணிக்கு ரிப்போர்ட் செய்த பத்து நாளில், அங்கு
வந்து சேர்ந்து நண்பனான் மோகனன். கே.எஸ்.மோகனன்.

வடக்கத்தியர்கள் அவனை சீண்டுகையில் ” பாய்! கேஎஸ் கா மத்லப் க்யா ஹை!” (கே.எஸ்.க்கு என்னப்பா அர்த்தம்) எனச் சீண்டுவார்கள். அவனும் பொறுமையாக ’குன்னக்கல் மேட்டம் சுகுமார பிள்ளை மோகனன்’ என்று விளக்குவான். அவர்கள் அதைத் திருப்பிச் சொல்ல முயற்சி செய்து, உடன் தோற்று விலகுவார்கள். அவனது அலுவலக ரூமில் அமர்ந்திருந்த ஒரு சீனியரான, பஞ்சாபியான ஆனந்த் இதை ஆர்வத்துடன் கவனித்து, அவரிஷ்டப்படி அவனது பெயரை மாற்றிவைத்தார் – கேஎஸ். மோகனன் – அதாவது கர்த்தார் சிங் மோகனன்! வடக்குகள் சிரிப்புடன் ஏகமனதாக, ஏற்றுக்கொண்டன. இப்படிச் சொல்கையில் நாக்கு வலிக்காதே இனி அதுகளுக்கு !

இருவரும் ஒரே செக்‌ஷனில் இரண்டு வருடம் வேலை பார்த்தோம்.  எங்களிடையே ஒரு கெமிஸ்ட்ரி மெல்ல உருவாக அதுவல்ல காரணம்.  இருவரும் முறையே, ஒரு சராசரித் தமிழனோ, மலையாளியோ அல்ல என்பதே இங்கு பிரதானம். வேறுபட்ட தனிரசனைகள், கருத்துகள்,
வித்தியாசமாகத் தென்படும் இயல்புகள் என ஒரு பொதுமை எங்களிடம்
இருந்தது. இலக்கியம், நாட்டியம், சினிமா போன்றவற்றில் தரமானவற்றை நோக்கியிருந்த ஒரு மனநிலையும் கூடவே இருவரிடமும் - என இப்படிச் சொல்லலாம்.

வார இறுதிகளில் டெல்லியின் புகழ்பெற்ற கலையரங்கங்களான கமானி
ஆடிட்டோரியம், மவ்லாங்கர் ஆடிட்டோரியம், ரபீந்திர பவன், த்ரிவேணி
கலா சங்கம், சிரிஃபோர்ட் ஆடிட்டோரியம், ஃபிலிம்ஸ் டிவிஷன் ஆடிட்டோரியம் போன்றவற்றில் நடக்கும் பரதநாட்டியம், குச்சிப்புடி, கத்தக், மோஹினியாட்டம் போன்ற நடன நிகழ்ச்சிகளின் விளம்பரங்களை நாளிதழ்களில் கவனித்து, மாலையில் அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். இரண்டு மணிநேரத் தரமான பொழுதுபோக்கு கிடைத்தது. இரவில் எங்காவது ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு செல்வோம். அப்போது இருவரும் ஆளுக்கு ஒரு ரூமென மிஸஸ் பல்லாவின் வீட்டில்தான் தங்கியிருந்தோம். சேர்ந்து ஆஃபீஸுக்கு வருவது, திரும்புவது என்பது வழக்கமாயிருந்தது.

சர்வதேசத் திரைப்பட விழாக்கள் டெல்லியில் நிகழ்கையில், விடாமல்
செல்வோம். மலையாள கலைப்படங்கள் பொதுவாக மோகனன் மூலமே
எனக்கு அறிமுகமாகின. குறிப்பாக இந்தியாவின் மதிக்கப்பட்ட சினிமா
இயக்குனர்களில் சிலரான மிருணாள் சென், ஜி.அரவிந்தன், அடூர்
கோபாலகிருஷ்ணன், சத்யஜித் ரே, ஷ்யாம் பெனகல், ஜான் ஆப்ரஹாம்
போன்றோர் இயக்கியிருந்த திரைச்சித்திரங்களை அப்போதுதான்
ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். என்னோடு வங்காள, ஹிந்தி
ஆர்ட் படங்களுக்கும், வித்தியாசமான ஆங்கிலப் படங்களுக்கும் மோகனன் வருவான். ஒருசமயம், திரைவிழாவின் ஒரு பகுதியாக டைரக்டர் டேவிட் லீனின் படங்கள் திரையிடப்பட்டன, சௌத் டெல்லியின் சிரிஃபோர்ட் ஆடிட்டோரியத்தில். முதல் நாள் மாலையே ஆடிட்டோரியம் சென்று டிக்கட் வாங்கிவைத்துவிடுவோம். அடுத்தநாள் மாலையில் செல்வோம்.  பார்த்து ரசிப்போம். 

தியேட்டரிலிருந்து வெளிவந்து கொஞ்சம் நடந்ததும் தென்பட்டுவிடும் ஏதோ ஒரு சாலையோர க்யோஸ்க்கில் ’அதிரக் சாய்’ (இஞ்சி டீ) குடித்தவாறு, சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு படம்பற்றிப் பேசுவோம். டெல்லி குளிரில் புகைபிடிப்பதில் இருவருக்கும் ஒரு ஆனந்தம் இருந்தது அப்போது!

அக்டோபர் மாத இறுதி. வருடம்1984. மறக்கமுடியாத காலகட்டம். டைம்ஸ்
ஆஃப் இந்தியாவிலோ, ஹிந்துஸ்தான் டைம்ஸிலோ ஒரு கால்பக்கத்தில்
அன்று கண்ணில்பட்டது அது. ரயில் பவனுக்கு அருகிலிருந்த மவ்லாங்கர்
ஆடிட்டோரியத்தில் தொடர்ந்து மூன்று மாலைப்பொழுதுகள் – (ஆன்மீக)
சிந்தனையாளர் அல்லது தத்துவ ஞானி என்று பரவலாக அவதானிக்கப்பட்டிருந்த ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பிரசங்கம் அல்லது ‘பொது உரையாடல்’- இப்படியானது நிகழவிருக்கிறது. இலவச நுழைவு.

அப்பாடி.. முன்கூட்டியே புக் செய்யவேண்டாம். மிஸ் செய்யக்கூடாது.
போய்விடவேண்டியதுதான் என முடிவு செய்துகொண்டேன்.  இலவச எண்ட்ரி என்பதால், இதுக்கெல்லாமா கூட்டம் இருக்கும். வரும்?  பட்டூரே-(ச்)சோலே, குல்ச்சா, கோல்கப்பா (golgappa), காஜர் ஹல்வா (carrot halwa), காலா ஜாமுன் (லட்டு போன்ற சைஸில் கருப்பாக குலோப் ஜாமுன்) என்று பரவலாக உள்ளே தள்ளும் டெல்லியின் ஜனத்திரளும், ஒருமாதிரியான கலவைதான். இதிலும் சிலர் இருக்கலாம் அங்கே வந்து உட்கார,  பெரிசொன்றின் பேச்சை, பொறுமைகாட்டிக் கேட்க.. எதற்கும் நேரத்துக்கு முன்னாலேயே போய்விடவேண்டும் என முடிவு செய்தேன்.  விளம்பரத்தைக் காண்பித்து ”நான் போகப்போறேன். நீயும் வர்றியா?” என மோகனனிடம் கேட்டேன். ஏற்கனவே என் அறையில் ‘The Second Penguin Krishnamurti Reader’ என்கிற தலைப்பில் ஒரு சிறு புத்தகம் இருப்பதை, நான் அவ்வப்போது அதில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்து அவனும் புரட்டியிருக்கிறான். ”இவர் என்னதான் சொல்ல வர்றாரு..” என இன்னும் ஒரு ரீஜண்ட் கிங்கைப் பற்றவைத்தவாறு பால்கனியில் ஒரு மாலையில் நின்று கேட்டிருக்கிறான்! அந்தப் பின்புலத்தில் தயங்கியவாறு, ”வர்றேன்..”  என்றான் இப்போது.  போனோம். வித்தியாசமான ஒரு கூட்டத்தை மவ்லாங்கரில் காணமுடிந்தது. கல்லூரி மாணவ, மாணவிகள்போன்று காட்சிகொடுத்த இளைஞர்கள், சில முதியவர்கள், சர்தார்ஜிகள், புத்த பிக்ஷுக்கள்..  இப்படி சிலர். நகரின் பிரபல முகங்கள் சிலவற்றையும் அடையாளம் காண முடிந்தது: அருண் ஷோரி (முன்னாள் ஆசிரியர், இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், பின்னாள் கேபினெட் மினிஸ்டர்), கார்ட்டூனிஸ்ட்கள் ஓ.விஜயன், அபு அப்ரஹாம்(?) போன்றோர்). உட்கார இடமில்லை. ஓரத்தில் பலர் நின்றுகொண்டிருந்தனர்.

ஆறுமணிக்கு சில நிமிடங்கள் முன், அந்த அம்பாஸடர் வளாகத்துக்குள் வந்து நின்றது. மெல்லக் கதவு திறக்க, இறங்கி நடந்து அவருக்கான சிறுமேடையில் ஏறி அமர்ந்தார் ஜேகே. சரியாக ஆறுமணிக்கு ஆடியன்ஸிற்கு கைகூப்பிவிட்டு பேச ஆரம்பித்தவர், எதிர் இருப்போருடன் அமைதியான கலந்துரையாடல்போல் ஒன்றை நிகழ்த்தினார். இளைஞர்களில் சிலரிடமிருந்து ஒன்றிரண்டு கேள்விமுயற்சிகள் தவிர்த்து, அமைதியான சூழல். சரியாக இரவு ஏழுமணிக்கு முடித்துக்கொண்டார்.

மேடையிலிருந்து இறங்கி வெளியே சற்றுத் தள்ளி இருந்த பார்க்கிங் நோக்கி நடந்தார், கிருஷ்ணாஜி என்று மிகவும் மரியாதையுடன் அங்கு குறிப்பிடப்பட்ட ஜே.கே. கூடவந்திருந்த நண்பர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரிடமிருந்து வெகுவாகத் தள்ளி நடந்தார்கள். ஒருவித பிரமிப்புடன் நாங்கள் பார்த்திருக்க, அவரது கார் மெல்ல நகர்ந்து வளாகத்தைவிட்டு வெளியேறியபின் நாங்களும் அங்கிருந்து கிளம்பினோம். (மேற்கொண்டு இந்த நிகழ்வுபற்றித் தெரிந்துகொள்ள ஆவல், பொறுமையுள்ளவர்கள்(!), www.solvanam.com-ல் ’ஏகாந்தன்’ எனத் தேடி, ’ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது’ என்கிற தலைப்பிலான அடியேனுடைய சிறுகட்டுரையை வாசிக்க முயலலாம்) அடுத்தநாள் ஜேகே-யின் பிரசங்கத்திற்கு மோகனன் வரவில்லை. என் மனைவியுடன் சென்றிருந்தேன். சுவாரஸ்யமான கூட்டம். இதமான மன அனுபவம். டெல்லிப் பிரசங்கத்தொடரின் கடைசி நாளான அக்டோபர் 31 நடக்கவிருந்த ஜேகே-யின் பிரசங்கத்திற்கும் செல்ல ஆவலாயிருந்தேன்.

ஆனால் அது நிகழவில்லை. நிகழமுடியவில்லை. எதுவும் சரியாக நடக்காத நாளாக அது ஆகிவிட்டிருந்தது. அன்று காலையில் டெல்லியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரமும், அதைத் தொடர்ந்து எங்கும் தீயாய்ப் பரவிய கொடும் வன்முறை சம்பவங்களும் தலைநகரை அடுத்த மூன்று, நான்கு நாட்களுக்கு ஸ்தம்பிக்கவைத்து, இயல்பு வாழ்க்கையை
நாசமாக்கிவைத்தன. மாலைக்குள், டெல்லி என்கிற நகரமே இனி அவ்வளவுதான் என்கிற ரீதியிலான பயம், பீதி எல்லோர் மனதிலும்
உறைந்துவிட்டிருந்தது. அன்றைய காலையில்தான் தன் வீட்டு
வளாகத்திலேயே கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார் பிரதமர் இந்திரா காந்தி. கோபமும், வெறுப்புமாய் உருவெடுத்திருந்த ஆளும் காங்கிரஸ் கட்சியின் சில நகர்ப் பிரபலங்கள், அப்பாவி
சீக்கியர்களுக்கெதிரான வன்முறைகளை நகரின் நிழல் முகங்கள், விஷமிகள் மூலம் தூண்டிவிட்டு தலைநகரையே சில மணிநேரத்தில் எரியவைத்து வேடிக்கைபார்த்தனர். எங்கிருந்தோ எதிர்ப்பட்ட துரோகம், சுயநலம், பேடித்தனம் என்பதெல்லாம், நாட்டின் அழிவை விரும்பிய உள், வெளிச் சக்திகளோடு கூட்டுசேர்ந்து கூத்தாடிய அபத்தமான காலகட்டமது.

போலீஸ் படையெல்லாம் காணாமற்போயிருக்க, ஜனங்கள் பூட்டிய வீடுகளுக்குள் உறைந்துகிடக்க, வேறுவழியின்றி, நான்காவது நாள், ’ஷூட் அட் ஸைட்’ உத்தரவுடன் இந்திய ராணுவ டேங்குகள் டெல்லி
மாநகரத்தின் வெறிச்சோடியிருந்த விசாலமான சாலைகளில் பவனி
காட்டின. விஷமிகள் பலர் பாய்ண்ட்-ப்லாங்க் ரேஞ்சில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பல பேடிகள் ஓடி ஒளிந்தார்கள், காணாமற்போனார்கள். சில மணிநேரங்களில் நிலமை கட்டுக்குள் திரும்பியதெனினும், மயான அமைதியை நகரெங்கும் பரவவிட்டு நடுங்கவைத்தது.

எந்த வாகனமும் சாலைகளில் தெரிய வாய்ப்பில்லாத அந்த நாட்களிலும்,
பலர் ஒருவித “ஃபோர்ஸ்டு லீவில்’ வீட்டிலிருக்க, ஷிஃப்ட் டூட்டியை விடாமல் நான் செய்தது இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது.  சொன்னாலும், நிலமையை அனுபவித்திராதவர்கள், நம்பக் கஷ்டப்படுவார்கள்தான். தெற்கு டெல்லியின் லட்சுமிபாய் நகரிலிருந்த வீட்டிலிருந்து, சௌத் ப்ளாக் வரை சுமார் ஆறு கி.மீ. தூரத்தைப் பெரும்பாலும் நடந்தே சென்றிருக்கிறேன். சில சமயங்களில் கீழ்நிலை ஊழியர்கள் சிலர் அந்தப்பக்கம் தங்கள் சைக்கிள்களில் பயணிப்பதைப் பார்த்து அவர்களை நிறுத்தி, சைக்கிள் கேரியரில் தொற்றிக்கொண்டும் கொஞ்ச தூரம் பயணித்தேன். இரவு திரும்புகையில் அமைச்சக அம்பாஸடரில் வந்து வீட்டில் விடப்பட்டிருக்கிறேன். வீட்டில் ஃபோன் இல்லாத சூழலில்,  காலையில் புறப்பட்ட நான், அலுவலகம் போய்ச் சேர்ந்தேனா, திரும்பி எப்போது வீடு திரும்புவேன் என்கிற எந்தத் தகவலும் இல்லாததோடு, வெளியே நடமாடவோ, அடுத்தவீடுகளுக்கும் போகமுடியாத நிலையில் என் மனைவி மிகவும் கஷ்டப்பட்ட, ஒரு பயங்கர, அதிர்ஷ்டவசமாக சில நாட்களே நீடித்த சூழலது.

தன் முதல் போஸ்ட்டிங்காக தோஹாவிற்கு மோகனனும், சோமாலியாவின் தலைநகர் மொகதிஷுவிற்கு நானும் சென்றபின், எங்கள் தொடர்பு வெகுவாகக் குறைந்தது. இண்ட்டர்நெட் இல்லாத காலத்தில் தூதரக வாயிலாக கடிதங்கள் எழுதித் தொடர்புகொண்டால்தான் முடியும் என்கிற நிலை. அவ்வப்போது தாய்நாடு திரும்புகையில், டெல்லியிலிருந்த தலைமை அலுவலகங்களில் பார்த்துக்கொள்வோம்.  சௌத் ப்ளாக்கின் காஃபி ஹவுஸில் சந்தித்துக் கொஞ்சம் பேசியிருக்கிறோம். பிறகு அவரவர்க்கு வாய்த்த அயல்நாட்டுப் பணிகளை மேற்கொண்டு பயணித்தோம். இப்படிச் சென்றது எங்களது நட்புக் காலம். 

பணி ஓய்விற்குப் பின், சில சமயங்களில் முகநூலில் விஜாரிப்பு என்று
தொடர்கிறது இப்போதும்.

[அடுத்த வாரம் ]
**

=====================================================================================================

நியூஸ் ரூம் 








=====================================================================================================

இன்றைய கல்வி நிலையின் அவலம்...


சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசு அளித்தேன். இரண்டு மாணவிகள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார்கள். பாடி முடிந்த பிறகு, அவர்கள் கையில் இருந்த காகிதத்தைப் பார்த்தேன், ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் பாடியிருக்கிறார்கள். ‘உங்களுக்குத் தமிழ் தெரியாதா..?’ எனக் கேட்டேன். பேசத் தெரியும், படிக்கத் தெரியாது என்றார்கள். இத்தனைக்கும் அவர்கள் வெளிநாட்டு மாணவிகள் இல்லை. தமிழ் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான்!
‘எத்தனை மாணவர்களுக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்கிறது’ எனக் கேட்டதற்கு, விரல் விட்டு எண்ணும் அளவே கையைத் தூக்கினார்கள். ‘மற்றவர்கள் ஏன் புத்தகங்கள் படிப்பது இல்லை?’ எனக் கேட்டேன்.
‘பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிக்கக் கூடாது. புரிந்தோ, புரியாமலோ… மனப்பாடம் செய்தால் மட்டும் போதும் என ஆசிரியரும் பெற்றோரும் கூறுகிறார்கள்’ என மாணவர்கள் பதில் சொன்னார்கள்.
ஒரு மாணவன் குரலை உயர்த்தி, ‘எனக்குப் பரிசாக கிடைத்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தைக் கூட வீட்டில் படிக்க அனுமதிப்பது இல்லை. காலேஜ் போனதுக்கு அப்புறம் படித்துக் கொள்ளலாம்’ என அப்பா திட்டுகிறார்​' என்றான்.
‘ஏன் இந்தச் சூழல்...?’ என ஆசிரியர்களிடம் கேட்டதற்கு, நிறைய மார்க் வாங்காவிட்டால் காலேஜ் சீட் கிடைக்காது. புத்தகம் படித்தால் மாணவர்கள் கவனம் சிதறிப் போய்விடும். கெட்டுப் போய்விடுவார்கள்.​  பெற்றோர்கள் எங்களைத் திட்டுவார்கள் என ஒருமித்த குரலில் சொன்னார்கள்.
‘பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரை இதை ஏற்றுக் கொள்வேன். ஆனால், ஆறு முதல் ஒன்பது வரை உள்ள மாணவர்கள் பல்வேறு துறையைச் சார்ந்த புத்தகங்கள், கதை கட்டுரைகள் படிக்கலாம் தானே? விளையாட்டு, இசை, யோகா, ஓவியம், கராத்தே போன்ற எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கி கற்றுத் தருகிறீர்கள். ஆனால், புத்தகம் வாசிப்பதில் மட்டும் ஏன் கவனம் செலுத்துவது இல்லை’ எனக் கேட்டேன்,
‘அதற்கு எல்லாம் டைம் கிடையாது சார். நிறைய ஹோம்வொர்க் இருக்கிறது’ என்றார்கள்.
‘ஆசிரியர்களில் எத்தனை பேருக்கு படிக்கிற பழக்கம் இருக்கிறது. சமீபமாக என்ன புத்தகம் படித்தீர்கள்?’ எனக் கேட்டேன். 80 ஆசிரியர்களில் 7 பேர் மட்டுமே புத்தகம் படிக்கிறவர்களாக இருந்தார்கள். அவர்களும் ‘பணிச் சுமை காரணமாக படிக்க நேரம் கிடைக்கவில்லை’ என அலுத்துக் கொண்டார்கள். இது ஒரு பள்ளியின் பிரச்சனை மட்டுமில்லை. தமிழகம் முழுவதும் கல்விச் சூழல் இப்படித்தான் இருக்கிறது.
-எஸ்.ராமகிருஷ்ணன்
நன்றி: இந்து தமிழ் திசை 

=====================================================================================================


=================================================================================================================================

ஒரு தொடுதலில் 
மலர்கின்றன 
புத்தகங்கள் 

வாசகர்களின் வரவுக்காக 
வரிசையில் காத்திருக்கின்றன 
அலமாரியில் புத்தகங்கள் 

எடுத்துக் பிரிக்கும் 
கரங்களுக்காக 
ஏங்கி காத்திருக்கின்றன 
புத்தகங்கள் 

தனக்கான வாசகனுக்கு 
தன்னையே கொடுக்க 
தயாராக காத்திருக்கின்றன 
தரமான புத்தகங்கள் 

=============================================================================================
பொக்கிஷம் : -  விகடன் - விடுதலைக்கு முன்!

தூக்குமர நிழலில் என்று சி ஏ பாலன் எழுதியது எப்போதோ படித்திருக்கிறேன்.  ஆனால் மறந்து விட்டது.  இப்போது பொக்கிஷத்துக்கு துழாவியபோது இது கிடைத்தது.  இதைப் படிக்கவேண்டும் என்று ஆவல்.


1929 ம் வருட அனுபந்தம்!  

மசோதா என்று வந்தாலே ஒரு எதிர்ப்பும், பதட்டமும் இருக்கும் போல...


எந்தக் காலத்திலும் இப்படிதான் இருக்கும்!


இதை  எழுதி இருப்பவர் பரதன் என்னும் ஆர் பார்த்தசாரதி.


முதன்முதலாக சென்னையில்...


சொல்லி இருப்பவர் ரா அ பத்மநாபன்.

1933ல் எம் எஸ் அம்மா.

119 கருத்துகள்:

  1. சிவகாமி படத் தயாரிப்பு காலத்தில் பாகவதர் மிகவும் வறுமை நிலையில் இருந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். சேலத்தில் இரண்டாவது அக்ரஹாரத் தெருவிலிருந்த லஷ்மண அய்யர் என்ற வக்கீல் வீட்டுக்கு அவர் வந்திருந்த சமயத்தில் பார்த்திருக்கிறேன்.
    அந்நாளைய பாகவதரை கற்பனையில் கொண்டு ஜெயகாந்தன் சிறுகதையொன்றை ஆனந்த விகடனில் எழுதியிருந்தார். வாசித்திருக்கிறீர்களோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  படித்திருக்கிறேன்.  கதையின் பெயர் சுயதரிசனமா என்று சந்தேகம்.  எம் கே டி அப்படி ஒன்றும் வறுமையில் இல்லை என்று அவர் உறவினர் யாரோ ஒரு பலகீனமான பேட்டியும் எப்போதோ தந்திருந்த நினைவு.  சர்க்கரை நோய்க்கு அலோபதி மருந்தெல்லாம் எடுத்துக் கொள்ளாமல் எம் கே டி எங்கோ கோவிலில் சென்று தங்கி இருந்ததாகவும் படித்த நினைவு.  எது உண்மை, எது நிஜம்..  யாரே அறிவார்!

      நீக்கு
    2. சுயதரிசனம், வேறே கதை. லெட்டர் எழுதி வைத்து விட்டு டெல்லிக்குப் போன சாஸ்திரிகளின் சுயதரிசனத்தை சொல்லும் கதை.

      நீக்கு
    3. ஆனால் நீங்கள் சொல்லும் இந்தக் கதை படித்திருக்கிறேன்.  எங்கள் பைண்டிங் கலெக்ஷனிலும் உள்ளது.  அதற்கான  ஓவியரின் படம் கூட மனதில் நிற்கிறது. தேடும்போது கிடைத்ததும் பகிர்கிறேன்.

      நீக்கு
    4. ஓவியம்: கோபுலு.
      குளத்தங்கரை
      சாஸ்திரிகளை ஆவியின் ஆஸ்தான ஓவியர் கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.

      நீக்கு
    5. அட, தலைப்பை சொல்லுங்களேன்!

      நீக்கு
  2. //ஷிஃப்ட் டூட்டியை விடாமல் நான் செய்தது இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது
    படித்த எனக்கே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  உயிருக்கே ஆபத்தான பின்னணி.  அந்த நாட்களின் வீர்யத்தை இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கலாம் என்று தோன்றியது.

      நீக்கு
    2. நினைவில் மீட்டிருந்தேன். கொஞ்சம் கூட எழுதினேன். உண்மையைத்தான். பின்னர் உடனே குறைத்தேன். இது போதுமே... சுயபிரதாபமாக ஆகிவிடப்போகிறதே என்கிற அச்சத்தினால்..

      நீக்கு
    3. நான் அப்போது மதுரையில் இருந்தேன்.  சாதாரண சூழல்.  பெரிய ஆபத்தியில்லை.  டெல்லியின் சூழ்நிலை எப்படி இருந்தது என்று அறியும் வாய்ப்பாக இருந்தது.

      நீக்கு
  3. mkt வீழ்ச்சி (சரிவு?)யின் பின்னணியில் திராவிடக் கழகம் பற்றி பூடகமாகக் சொல்லியிருக்கிறார் ராண்டார் கய் தன் புத்தகத்தில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராண்டார் கய் புத்தகம் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறதா என்று பலமுறை தேடிப்பார்த்திருக்கிறேன்!

      நீக்கு
    2. பத்திரிகைகளில் அவர் ராண்டார் கை.

      நீக்கு
    3. சிவாஜியல்ல, எம்ஜிஆரல்ல.. எம்கேடி இன்னும் உயிர்ப்புடன் உலவுவதாகத் தோன்றும் சில சமயங்களில்.

      ஹவானாவின் ஆள்நடமாட்டம் அதிகமாகக் காணப்படாத பெருவீதிகளில் அப்போது என் கியா ரியோவின் கேசட்டில் எம்கேடியைக் கேட்டவாறு மெல்ல ஓட்டிச் சென்றபோது.. குறிப்பாக மாலைப்பொழுதுகளில்...

      நீக்கு
    4. ஆஹா.. அருகில் பாருங்கள் நானும் இருக்கிறேன்!

      நீக்கு
  4. சிரிப்பே வராத துணுக்கு சேர்ப்பது என்று ஏதாவது வியாழக்கிழமை விரதமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதெல்லாம் நகைச்சுவைத் துணுக்குகள் எப்படி இருந்தன என்பதை இந்தக் கால சமூகத்துக்கு தெரிவிப்பது கடமை என்று நினைக்கிறேன்.  இதற்குதான் மக்கள் அப்போது விழுந்து விழுந்து (காயம் படாமல்) சிரித்தார்கள் என்பதையும் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்!

      நீக்கு
    2. அடடா! இது தெரியாம நான் ஏதேதோ சொல்ல்லிட்டனே

      நீக்கு
    3. அது சரி, எத்தனை நகைச்சுவை துணுக்குகளுக்கு நீங்க மிக சிரித்திருக்கிறீர்கள்?  அப்படி சிரித்த துணுக்கு எதுவும் நினைவில் இருக்கிறதா?  புன்னகைக்க வைப்பதே அபூர்வம்!

      நீக்கு
    4. நிறைய. சில துணுக்குகள் இரண்டாம் முறையும் சிரிக்க வைக்கும்.
      ஸ்ரீதர், மதன், ஆர் கே லசுமன், சில குஷ்வந் சிங், பல ஆங்கில கார்டுனிஸ்ட்டுகள்..

      நீக்கு
    5. நிறைய. சில துணுக்குகள் இரண்டாம் முறையும் சிரிக்க வைக்கும்.
      ஸ்ரீதர், மதன், ஆர் கே லசுமன், சில குஷ்வந் சிங், பல ஆங்கில கார்டுனிஸ்ட்டுகள்..

      நீக்கு
    6. நல்லது.  எனக்கும் சில அப்படி உண்டு.  நினைவில் அவை இன்னும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்.  குஷ்வந்திசிங்கின் அசைவ ஜோக்குகளை தனியாக அனுப்பவும்!

      நீக்கு
  5. ‘எத்தனை மாணவர்களுக்கு எஸ்ரா புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்கிறது’ என்று கேட்டிருப்பார். விரல் விட்டு எண்ணுமளவு உயர்ந்ததே புண்ணியம் ! ;-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக புத்தகம் படிக்கும் பழக்கமா, அல்லது எஸ்ரா புத்தகம் படிக்கும் பழக்கமா?!!  தினமலர் செய்தி போல வாக்கியத்தை அமைத்திருக்கிறீர்களே!!

      நீக்கு
  6. நாகையா நடித்த 'ஏழை படும் பாடு' என்ற திரைப்படத்தின் மூலக்கதையும் Jean Valjean தான். இந்தப் படத்தில் ஜாவர் என்ற பெயரில் இன்ஸ்பெக்டராக அற்புதமாக நடித்த புகழில் தான் சீதாராமன், ஜாவர் சீதாராமன் ஆனார்.
    மின்னல் மழை மோகினியைக் கூட மறக்க முடியாது தான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல் பொருள் ஆனந்தியையும்.  ஏன், அந்த நாளையும்!

      நீக்கு
    2. ஜாவர் சீதாராமனின் கவர்ச்சித் தலைப்புகள்.. வெளிப்பட்ட அந்தக்காலக் குமுதம்.. ஆ! வருகிறது நினைவில்...

      நீக்கு
  7. எந்த பழைய பஞ்சாங்கமோ ரசனையே இல்லாமல் சொன்னது அமிர்த விஷக் கதை.
    அளவுக்கு மீறினாலா?.. அளவுக்கு மீறுதலிலும் கண்ணைக் கவரும் ஓர் அழகு இருக்கிறது.
    அறியுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சாருக்கு அருமையான அக்கார வடிசலை, அண்டா அளவு கொண்டுவைத்து, முழுவதும் சாப்பிட்டால்தான் மேசையை விட்டு நகரஙாம் என்று சொன்னால், அமிர்தம் விஷம் அர்த்தம் புரிந்துவிடும்.

      நீக்கு
    2. எப்பப் பார்த்தாலும் சாப்பாட்டு நினைப்பு தானா? .. சாப்பாட்டு விஷயங்கள் மனதைக் கவர்வதில்லை.

      நீக்கு
    3. ஹா..  ஹா..  ஹா...  போதுமென்று  சொல்லக்கூடிய ஒரே விஷயம் சாப்பாடுதான்.  ஆனால் செவிக்குணவு இல்லாதபோதுதான்...

      நீக்கு
    4. // எந்த பழைய பஞ்சாங்கமோ ரசனையே இல்லாமல் சொன்னது அமிர்த விஷக் கதை.
      அளவுக்கு மீறினாலா?.. அளவுக்கு மீறுதலிலும் கண்ணைக் கவரும் ஓர் அழகு இருக்கிறது.
      அறியுமோ? //

      ஓ..   சுவாரஸ்யமாகவே இருந்தது என்று சொல்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளவா?!  நன்றி!

      நீக்கு
  8. ஸாரி.. திருத்தம்:
    மனதைக் கவரும்.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய பகுதிகள் (கவிதை படிக்கவில்லை இன்னும்) நன்று. பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  11. பதிவு வெளியானதுமே படித்து விட்டேன்..

    கருத்து!?..

    அப்புறமாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்..

    பதிலளிநீக்கு
  12. வழக்கம் போல ஸ்ரீராம் அவர்களது கை வண்ணம்/ தொகுப்பு..

    பதிலளிநீக்கு
  13. இன்னும் ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார் கருத்தைக் காணோம்.  கமலா அக்கா மறுபடியும் காணோம்!  அதைவிட DD கொஞ்ச நாட்களாய் காணோம்.

    பதிலளிநீக்கு
  14. பதிவில்
    திரு ஏகாந்தன் அவர்களது பங்களிப்பு அருமை..

    உள்ளங்கை நெல்லிக்கனி..

    ஆனாலும் உண்மையைப் பேசுதற்கு இது தருணம் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். இன்னும் சுவாரஸ்யங்களை வரும் வாரங்களில் எதிர்பார்ப்போம்.

      நீக்கு
  15. தமிழகம் முழுவதும் கல்விச் சூழல் இப்படித்தான் இருக்கிறது.

    - எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களது கட்டுரையை இப்போது தான் படிக்கின்றேன்.. இதில் சொல்லப்பட்டுள்ள ஆதங்கங்கள் நியாயமானவை.. இப்படியான வருத்தம் சில வருடங்களுக்கு முன்பிருந்தே எனக்குள்ளும் இருக்கின்றது..

    பொது கருத்துகளுக்கு இன்று இடம் ஏது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது இது மட்டும்தான் பொழுதுபோக்கு.  இப்போது கவனம் கலைக்க ஏகப்பட்ட சமாச்சாரங்கள்!

      நீக்கு
  16. தமிழ் பயிற்றுவிக்கும் உரிமை கூட தமிழால் /தமிழுடன் வாழ்பவர்களுக்கு இல்லை..

    என்னுடைய பள்ளி நாட்களில் தமிழ்க் கல்லூரிகள் பல இருந்தன..

    இன்றைய நாட்களில் இசுக்கூலில் தமிழில் பேசி விட்டால் தண்டனை தரும் இசுக்கூல்கள் நிறையவே உள்ளன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் தமிழை வளர்ப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் நடத்துக் கல்விக் கூடங்களில்தான் இந்நிலைமை அதிகம்!

      நீக்கு
  17. வெட்டி ஆராய்ச்சி வீண் என்றாலும் அலசல் பல அறியாத விவரங்களை தந்தது.

    ஏகாந்தன் சார் 6 கி மி நடந்து வீடு சென்ற கதை போல் தான் நானும் அன்று 12 கி மி நடந்து வீட்டை அடைந்தேன். கையில் சம்பளம் முழுதும் ரொக்கமாக. துணைக்கு ஒரு ex service வந்ததால் கொஞ்சம் தைரியம் அடைந்தேன்.

    எஸ் ரா வின் வருத்தத்திற்கு விடை இல்லை. தொழில், சம்பாத்தியம் போன்றவற்றை நினைக்காமல் விரும்பியபடி வாழ்ந்த காலங்கள் சென்று விட்டன. கிண்டில் யுகத்தில் இணையமும் தொலைக்காட்சிகளும் அளவுக்கு அதிகம் தீனி போடும்போது "புத்தகங்கள் ஒரு வீண் செலவு" என்ற நிலைக்கு வந்துவிட்டன என்பதில் ஐயம் இல்லை. நான் பலதரப்பட்ட சுப்ஜெக்ட்டுகளில் சுமார் 400 புத்தகங்கள் வைத்திருக்கிறேன். ஆனால் எனக்குப் பின் இந்த புத்தகங்கள் எல்லாம் குப்பை தான். என்னுடைய காலமோ தீரப்போகிறது. ஆகவே புத்தகங்கள் வாங்குவதை நிறுத்தி விட்டேன்.

    புத்தகங்கள் பற்றிய கவிதை வெறும் கோஷங்கள் ஆகி விட்டது.

    தூக்கு மரத்தின் நிழலில் மலையாளத்தில் படித்திருக்கிறேன்.

    தலைவர்களின் கைதுக்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பது எல்லாம் அந்தக்ககாலம். (பொக்கிஷம்)

    கொஞ்சம் பெரிய பதிவு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. LKG பிள்ளைகள் போலும் கூகிள் செய்து ஹோம் வொர்க் செய்கிறார்கள்.

      நீக்கு
    2. ஸி ஏ பாலன் எழுதிய தூக்குமர நிழலும், நான் இங்கு பகிர்ந்திருப்பதும் வெவ்வேறு என்று நினைக்கிறேன்.   செய்தியாரைப் பாடங்கள் அதிகம் இருப்பதும், பொக்கிஷப் பதிவுகள் அதிகம் இடம்பற்றதும் பெரிய பதிவுக்கு காரணமாக இருந்திருக்கலாம்!

      நீக்கு
  18. தோழர் பாலனைப் படமாய்ப் பார்த்ததும்
    பழைய நினைவுகள் மலர்ந்தன. துக்ளக் இதழ்களில் ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவமாய் பாலன் பற்றி ஜேகே. பகிர்ந்து கொண்ட நினைவுகள் உன்னதமானவை. (ஹி..ஹி..எனக்கெல்லாம் ஜேகே என்றால் ஜெயகாந்தன் தான்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸி ஏ பாலனும் பாலதண்டாயுதமும் ஒருவர்தானா?

      நீக்கு
    2. இல்லை. இவர் கே. பாலதண்டாயுதம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத் தலைவர்களில் ஒருவர். கோவை எம்.பி.யாக இருந்திருக்கிறார். ஒரு விமான விபத்தில் காலமானார்.

      நீக்கு
  19. சோவின் துக்ளக்கில் ஜெயகாந்தனின் அந்தத் தொடரை ஆர்வத்துடன் படித்திருக்கிறேன். பல வருடங்களுக்குப் பின் அவரின் ’ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ புத்தகத்தையும் வாங்கி வாசித்தேன். சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்ட அனுபவங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல் அனுபவங்கள் இருக்கிறது.  கலையுலக அனுபவங்கள் இருப்பதாய் தெரியவில்லை - என்னிடம்!

      நீக்கு
  20. மாலியின் ஓவியம் பற்றிப் படித்தபோது சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றிர்க்குப் பெயர் தெரியாத பலர் மாடலாக இருந்திருப்பார்கள், சிலை வடித்தபிறகு சரியாக வந்திருக்கிறதா, பலர் ரசிக்கிறார்களா, சிற்பியின் காலத்துக்குப் பிறகும் படைப்பில் தாம் இருப்போம் என்றெல்லாம் அவர்கள் மனதில்எண்ணங்கள் ஓடியிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது அப்படி தோன்றி இருக்குமா என்பது கந்தான் சந்தே.  அப்போது மாலி பின்னாட்களில் இவ்வளவு பேசப்படுவார் என்பதை அறிந்திருப்பார்களா என்ன!

      நீக்கு
  21. புத்தகங்களைப் பற்றிய கவிதை எண்ணம் ஓகே. ஆனால் புத்தகங்கள் மிக அதிக விலையில் விற்கப்படுகின்றன, எங்கே வாசகர்கள் வாங்கிவிடப் போகிறார்களோ என்ற பயத்தில்.. அதிலும் வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்கள்.

    பதிலளிநீக்கு
  22. இவர்களெல்லாம் போராடி என்ன சாதித்தார்கள் என்ற நினைப்பைவிட, அவரவர்கள் தாம் நம்பிய கொள்கைக்காக, அவரவர் விருப்பப்படி வாழ்ந்தார்கள் என்ற எண்ணமே மேலோங்குகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் உண்மை.  தங்கள் எண்ணங்களுக்கு நேர்மையாய் இருந்தார்கள்.

      நீக்கு
  23. ஏகாந்தன் சாரின் அனுபவம் நன்று. அந்தச் சமயத்தில் நான் பிஜி படித்துக்கொண்டிருந்தேன். சாதாரணவர்களே தலைப்பாகை கட்டிக்கொண்டுவந்தால் மாணவர்கள் ஆர்ப்பரித்துக் குரல் எழுப்பிய சமயம் அது. இந்திராகாந்தி, தமிழக காங்கிரஸ் எனப் பல நினைவுகள் வந்துபோகிறது... வாழப்பாடியோடு தமிழக காங்கிரஸ் முற்றுப்பெற்றது. அதற்குப்பிறகு காங்கிரஸ் ஒட்டுண்ணி வியாபாரிகள் கையில்

    பதிலளிநீக்கு
  24. எனக்குத் தெரிந்து சொந்தமாக்க் கதை எழுதி திரையில் வந்தது அழகி போன்ற ஒரு சில திரைப்படங்கள்தாம். மற்றபடி எல்லாமே காப்பி. அடுத்தவர்கள் உழைப்பைச் சுரண்டி கதை பண்ணுவது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்ல முடியாது.  ரொம்ப நோண்டினால் எதனுடனான இன்ஸ்பிரேஷனாக இருக்க வாய்ப்பு அதிகம்.

      நீக்கு
  25. ...6 கி மீ நடந்து வீடு சென்ற கதை போல்... //

    வீடு சென்ற கதை அல்ல! ஆஃபீஸ் சென்ற கதை. 6 கி.மீ. அத்தகைய பதற்ற சூழலில், ஆஃபீஸ் நோக்கி ஐடி கார்டை மட்டும் பத்திரமாக வைத்துக்கொண்டு நடந்திருக்கிறேன். யாராவது ரெண்டு பேராவது எப்படியாவது டூட்டிக்கு வந்துவிடமாட்டார்களா என்று ஆஃபீஸே நிலைகொள்ளாது தவித்திருந்த வேளையில்... போய்ச் சேர்ந்தேன். செய்தேன், சில அவசரமான, சிக்கலான பணிகளை..

    வீட்டை நோக்கி நடக்கவில்லை. இரவில் திரும்புகையில், காரில் அரசினால் பாதுகாப்புடன் வீட்டில் கொண்டுவந்துவிடப்பட்டிருக்கிறேன். நெஞ்சார்ந்த நன்றி இந்திய அரசுக்கு என்றென்றும்...

    வீட்டை நோக்கி நடப்பது கொஞ்சம் எளிதானது, ஆசுவாசம் தருவது. வந்து, நடந்த கதை சொல்லி, சாப்பிட்டுவிட்டுத் தூங்கவேண்டியதுதானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று எங்களுக்கு ஆபீஸ் பஸ் இருந்தது. காலையில் எப்போதும்போல் 7 மணிக்கு நாங்கள் புறப்பட்டு 8 மணி ஷிப்ட்டுக்கு வந்து விடுவோம். சாயந்திரம் ஐந்தரை மணிக்கு பஸ் கொண்டு விடும். அன்று பதட்டம் ஆகையால் பஸ் கான்சல். அதனால் தான் 12 கி மி நடக்க வேண்டி இருந்தது. அடுத்த நாள் காலை முதல் எல்லாம் வழக்கம் போல் நடைபெற்றது.
      Jayakumar​

      நீக்கு
    2. நீங்களும் டெல்லியிலா இருந்தீர்கள் அப்போது?

      நீக்கு
    3. நான் 40 வருடம் திருவனந்தபுரம் ISRO வில் பணி புரிந்து ஒய்வு பெற்றவன்.
      Jayakumar

      நீக்கு
  26. வழக்குக்கு முன் அவரை அந்த அளவு ஆராதித்தவர்கள் அதற்குப்பின் சடாரென மாறியது ஆச்சர்யம். விடுதலைக்குப் பின் அவர் நடித்த படங்கள் நன்றாய்ப் போகவில்லை - அவர் நிரபராதி என்று நீதிமன்றம் சொல்லியும் கூட...//

    இதில் மறைமுகமாக ஒரு விஷயம் இருக்கிறது கவனித்தீர்களா ஸ்ரீராம்? அல்லது எனக்கு அப்படித் தோன்றுகிறதோ?

    அதாவது அந்த நாட்களில் மக்கள் நடிகர்களைக் கொண்டாடினாலும் அவர்கள் மீது கரை படிந்தால் ....ப்பூ இவ்வளவுதானா நீ என்று ஒதுக்கியிருக்கிறார்கள்.

    ஆனால் இப்போதைய நிலையை நினைத்துப் பாருங்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குலமகள் ராதை  பாடல் நினைவுக்கு வருகிறது கீதா...  பல்லவியின் நான்காவது வரி!  குலமகள் ராதை என்றதும் நினைவுக்கு வருகிறது.  இந்த வருடம் சாஹித்ய அகாடமி விருது வாங்கி இருக்கும் தேவி பாரதி சொல்லி இருப்பது!  நேரு இறந்தபோது அதைத்தாங்க முடியாமல் அவர் அப்பா அழுது கொண்டே இருந்தாராம்.  இடிந்து போய் உட்கார்ந்திருந்தாராம்.  தை மாற்ற அவர் அம்மா எல்லோரையும் குலமகள் ராதை படத்துக்கு அழைத்துப் போனாராம்.

      நீக்கு
  27. மித்ராதாஸ் - ? - ! - சுவாரசியம் ஆச்சரியம்! அப்ப வாட்சப் மாதிரி இமோஜி எல்லாம் இருந்திருந்தா ஒரு கதையையே இமோஜிகள்ல முடிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்! நான் அப்படி ஒன்று புது முயற்சியாக கதை ஒன்று செய்து வைத்திருக்கிறேன் கொஞ்சம்தான். காரணம் சில இமோஜிகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியலை!!! ஹிஹ்ஹிஹிஹி....நெட்டில் இமோஜிகளின் அர்த்தம் பார்க்க வேண்டும்.

    ஜாவர் பெயர்க்காரணம் மற்றும் பல தகவல்கள் கொடுத்திருக்கீங்க ஸ்ரீராம். இதில் ஒரு சில தான் மனதில் பதியும். மற்றவை ஷ்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கதையிலிருந்து இன்னொரு கதை - சிறு மாற்றங்களுடன்..  ஆனால் மஹாபாரதத்திலிருந்து எத்தனை எத்தனை கதைகள் வந்திருக்கிறது!

      நீக்கு
    2. ஆமாம் மகாபாரதம் இராமாயணம் கதைகளில் இருந்து கருத்து வேறு வேறு கோணத்தில் அவர்கள் வாசிக்கும் போது மனதில் எழும் கேள்வி களில் இருந்து கதைகள் varuginranathaan. படமே வந்திருக்கே ஹிஹிஹி ...

      கீதா

      நீக்கு
  28. ஜீன்வால்ஜீன் - ம் இதெல்லாம் எங்க எனக்குத் தெரியப் போகுது. நீங்க கொடுக்கும் தகவல்களில் இருந்துதான்.

    சினிமா தகவல்கள் எல்லாமே புதுசு.

    கீதா

    பதிலளிநீக்கு
  29. பல ஆங்கிலச் சொற்கள் கிரேக்க, லத்தீன் மொழிகளில் இருந்துதான் வந்தவை என்று அகராதியில் சொல்லப்பட்டிருக்கும். கிரேக்க மொழி மிகப் பழைமையான ஸ்க்ரிப்ட் கொண்டது என்று ஆங்கில அகராதியில் தெரிந்து கொண்டதுண்டு.

    கிரேக்க மொழியிலிருந்து தமிழுக்கு வந்தச் சொற்களும் உண்டு. (யப்பா யாரும் சண்டைக்கு வந்திடாதீங்க...தமிழ் மொழி தொன்மையான மொழி அதெப்படி கிரேக்க மொழி புகுந்துச்சுன்னு சொல்றன்னு தமிழ் மொழிதான் முதலில் வந்த மொழின்னு....)

    கன்னல், சுரங்கை, ஒரை, குருசு போன்றவை கிரேக்க மொழிச் சொற்கள்.

    கிரேக்கத்திலும் தேவதைகள் உண்டு ஒவ்வொன்றுக்கும் என்று வாசித்ததுண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் சில தகவல்கள் கொடுத்திருப்பதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  30. அடுத்த இணையப் படம் ரசித்தேன் என்னவோ எடுப்பது - தற்படம்/சுயபடம் - ஹிஹிஹிஹி செல்ஃபி - போல் இருக்கிறது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  31. ஏகாந்தன் அண்ணா, சொல்வனத்தில் உங்கள் அனுபவக் கட்டுரை ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலை ப் பொழுது' வாசித்திருக்கிறேன்.

    //ஷிஃப்ட் டூட்டியை விடாமல் நான் செய்தது இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது. சொன்னாலும், நிலமையை அனுபவித்திராதவர்கள், நம்பக் கஷ்டப்படுவார்கள்தான். //

    என்னால் புரிந்து கொள்ள முடியும் ஏகாந்தன் அண்ணா. நாகர்கோஒவிலில் இருந்தப்பவும் சரி திருவனந்தபுரத்தில் இருந்தப்பவும், நாகர்கோவிலிலும் நாங்கள் பெரும்பாலும் கிராமத்திலிருந்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் நடந்து செல்வதாகத்தான் இருக்கும். அப்போது கலவரங்கள் நிறைய நடக்கும். அப்படி நடக்கும் போது எங்கள் ஊர்ப்பகுதியில் நடந்து செல்வது என்பது வீட்டிலுள்ளோர்க்கு திக் திக் தான்.

    திருவனந்தபுரத்தில் நம் வீட்டின் முன்னேயே கட்சிக் கொலைகள் நடக்கும்....கட்சிகள் பற்றி இங்குப் பொதுவெளியில் சொல்லவில்லை. நான் நேரடியாகக் கண்டதுண்டு. அவ்வளவுதான் ஏரியா முழுவதும் கார்டன் ஆஃப் பண்ணப்பட்டு, கர்ஃப்யூ என்று....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் நிறைய அனுபவித்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே!

      நீக்கு
  32. வசதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் - அட!! நல்லாருக்கே! நல்ல மாற்றம்.

    எல்லா நாடுகளிலும் பரவுது இந்த கொரோனா....இங்கும் வயதானவர்கள் உடல் நலக் கோளாறுகள் உள்ளவங்க மாஸ்க் போட்டுக்கச் சொல்லி உத்தர்வு என்றில்லை எனினும் போட்டுக்கோகனு சொல்றாங்க. நாங்கள் அணிந்து செல்கிறோம்.
    கொரோனா செய்திகள் அதிகம் இடம்பிடித்துள்ளன...எல்லாரும் கவனமா இருங்க. மாஸ்க் போட்டுப் போங்க!

    கைரோகேப்டர் - ஆஹா! நல்லாதான் இருக்கு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வசதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் - நியாயம்தான்.  ஊருக்கு உபதேசம்.  கோடிகோடியாய் கொள்ளை அடித்தவர்கள் மறுபடி அடிக்க வேண்டாம்.  புதியவர்கள் அடிக்கட்டும் என்று விடுகிறார்களா!

      நீக்கு
    2. ஓ இப்படி ஒரு கோணம் இருக்கோ...

      கீதா

      நீக்கு
  33. ஆஅயன் குளம் கிணறு நிரம்பிடுச்சா? ஆ! அது மேஜிக் கிணறு ஆச்சே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவர் இடிந்து மணி மூடிக் கொண்டதால் இந்த நிலைமை என்கிறார்கள்.  தெரியவில்லை.

      நீக்கு
    2. ஓஹோ.....பார்க்க வேண்டும் ...செய்தியை.

      கீதா

      நீக்கு
  34. நம்ம் ஊர் கல்வி பற்றித் தெரியாதா? இப்படித்தான்.....புஸ்தகம் வாசித்தா தப்பு. இது இப்ப இல்லை என் காலத்துல எங்க வீட்டிலும் இப்படித்தானே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை, எங்கள் வீட்டில் அப்படி சொன்னது கிடையாது கீதா.

      நீக்கு
  35. அந்த தாமிரபரணி செய்தி பத்தி, தின்னவேலியில் இருக்கும் என் அத்தையின் பெண் சொல்லிட்டிருந்தா. அவங்க ஏரியால தண்ணி கட்டலை.....மெயின் ரோட்டில்தான் தண்ணீர் இவங்க ஏரியாக்குள்ள போக வர முடியாத படி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் நிலைமையும் சென்னையிலும் நெல்லையிலும் உண்டுதான்.

      நீக்கு
  36. ஸ்ரீராம் உங்க கவிதைப் புத்தகம்!! நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  37. சிறு வயதில் ஆர்வம் அதிகம் ஆனா வாசிக்க வாய்ப்பு இருந்தத்ல்லை...கடுமையான கட்டுப்பாடுகள். அதன் பின்னும்.....இப்போது வாசிக்க முடிகிறது ஆனா புத்தகம் வாங்க முடியவில்லை. இணையத்தில் இருப்பதுதான். அதை வாசித்துவிடுகிறேன் நேரம் கிடைக்கும் போதெல்லாம். இணையத்தின் மிகப் பெரிய பயன்பாடுகளில் இது டாப். என்னைக் கவந்ததும் இதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு படிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம் கீதா. அப்பா கலெக்ஷன் வைத்திருந்தார். லைப்ரரி செல்வோம்.

      நீக்கு
  38. தூக்குமர நிழல் ஈர்க்கிறது....

    ஔவை ஹோம் என்று இப்போது பெசன்ட் அவென்யூவில் இருப்பதுதான் அன்றைய ஔவை ஆச்ரமமா? நான் சொல்வதும் 1931ல் டாக்டர் முத்துலட்சுமி அவர்களால் தொடங்கப்பட்ட ஒன்று. நான் சென்னையில் இருந்தப்ப அடிக்கடி சென்றதுண்டு அங்கு. ஆனால் அங்கு ஹிந்து சமூகம் என்று எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை. பெண் குழந்தைகளுக்கானது எனவே இரண்டும் வெவ்வேறு என்றே தோன்றுகிறது.

    ரா அ பத்மநாபன் - எங்கேயோ கேள்விப்பட்டது போல இருக்கிறது.
    மாலி யின் ஒவியங்கள் தனி...இங்குள்ள படம் ஆணிற்குப் பெண் வேடம் போட்டது போன்று அந்த முகம்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராணி முத்துவில் வந்த தூக்கு மர நிழலில் படித்திருக்கிறேன் தவிர, சுத்தமாய் நினைவில் இல்லை.

      நீக்கு
    2. மாலை மதியில் "தூக்கு மர நிழலில் " படித்து இருக்கிறேன். சினிமாவாக சிவக்குமார், ஜெயசங்கர், லட்சுமி, சுலோஜனா நடித்த படமும் பார்த்து இருக்கிறேன். கொஞ்சம் கதையை மாற்றி இருந்தார்கள் என்ற நினைவு இருக்கிறது.

      நீக்கு
    3. இன்று நீ நாளை நான் படம்.  தாழம்பூவே கண்ணுறங்கு பாடல் நன்றாய் இருக்கும்.

      நீக்கு
  39. சுவாரஸ்யமான திரைப்பட தகவல்கள் ஜி. ஞான ஒளி படம் வெளியான ஆண்டு 1942 சரியான தகவலா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிழை.  42 ல் சிவாஜியே வரவில்லை ஜி.  திருத்தி விட்டேன்.  டைப்பிங்கின்போது விரல் ஒரு படி கீழே இறங்கி இருக்கிறது.

      நீக்கு
  40. வெட்டி அரட்டை இல்லை. பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்த பதிவுதான்.'ஏழை படும்பாடு' பற்றி என் மாமியார் சொல்லி கொண்டே இருப்பார்கள். அதனால் அந்த படம் தொலைக்காட்சியில் வைத்த போது பார்த்தேன். நன்றாக இருக்கும். ஜீன்வால்ஜீன் படத்தில் அணிந்து இருக்கும் ஆடை போலவே தான் நாகைய்யா பெரிய தனவந்தராக ஆன பின் உடை அணிந்து இருப்பார்.

    ஜாவர் சீதாராமன் அவர்கள் நன்றாக நடித்து இருப்பார்.
    அவர் கதைகள் படித்து இருக்கிறேன். அம்மா பைண்ட் செய்து வைத்து இருந்தார்கள்.

    1942 ல் பி மாதவன் இயக்கத்தில் சிவாஜி, மேஜர், சாரதா நடிக்க 'ஞான ஒளி' படம் எடுத்தார்கள். //

    1972 க்கு என்று அடிப்பதற்கு பதில் 1942 என்று வந்து விட்டது போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.  இது போன்ற விவரங்கள் எப்போதுமே கொஞ்சம் சுவாரசியம் தரும்.

      நீக்கு
  41. நான் நீங்கள் திருத்தும் முன் எழுதி கொண்டு இருந்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  42. ஏகாந்தன் சார் சொன்னது போல பதட்டமான சூழ்நிலைகளில் வேலைக்கு போனவர்கள் வீட்டுக்கு வரவில்லை என்றால் வரும் வரை வீட்டில் இருப்பவர்கள் மிகவும் கவலையும் பதட்டமும் அடைவார்கள்.

    பதிலளிநீக்கு
  43. இந்து தமிழ் திசை வந்த கட்டுரை வாசிப்பு குறைகிறது என்கிறது

    உங்கள் கவிதை புத்தக வாசகர்கள் என்று இருப்பார்கள் என்று சொல்வது போல இருக்கிறது. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மகன்களேபடிப்பதில் நாட்டமில்லாமல் இருக்கிறார்கள்!

      நீக்கு
  44. பொக்கிஷ பகிர்வுகள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!