வெள்ளி, 8 டிசம்பர், 2023

வெள்ளி வீடியோ : இவள் காலடி நிழல் படும் நேரம் மலர் போலே முள்ளும் மாறும்.

 அய்யப்பன் பாடல்கள் என்றாலே கே வீரமணியும், பெங்களூர் ரமணி அம்மாளும்தான்.

கடவுள் இல்லையென்று சொல்பவர் பெயரும் கே வீரமணி.  ஐயப்பன்மேல் பகுதி பாடல்கள் பாடும் இவர் பெயரும் கே வீரமணி.

இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினைத் தீர்க்கும் எமனையும் 
வெல்லும் திருவடியைக் காண வந்தோம்

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்!

நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!

கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து

பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
இருமுடி எடுத்து எரிமேலி வந்து 
ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது 
ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!

அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!

கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருட்
காவலனாய் இருப்பார்

தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும்
தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார்
நல்ல பாதையைக் காட்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!

சபரி பீடமே வந்திடுவார் சபரி
அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனில் நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதியென்று அவனை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனைத் துதிக்கையிலே
தன்னையே மறந்திடுவார்

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!


=============================================================================================

1969 ல் வெளியான ஐந்து லட்சம் என்கிற நகைச்சுவைத் திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, சோ, மனோரமா தேங்காய், மேஜர் ஆகியோர் நடித்திருந்தனர்.  

இலட்சாதிபதி மெஜாரின் மகள் சரோஜா தேவியை மணக்க ராதாகிருஷ்ணனாம் ஜெமினிக்க் தேவை 5 லட்சம்.  பக்கத்துக்கு ஊர் ஜமீன்தாருக்கு கடனை அடைக்க தேவை 5 லட்சம்.  நாச்சு தன் காதலி அமுதாவை மணக்க தேவை ஒரு நாய்க்குட்டி.  இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருக்க அதை அவர்கள் எப்படி முடிக்கிறார்கள், அடைகிறார்கள் என்பதே கதையாம்.

இன்று பகிரப்படும் பாடலை எழுதியவர் வாலி.  இசை எஸ் எம் சுப்பையா நாயுடு. ஜி ராமகிருஷ்ணன் என்பவர் தயாரித்தும் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் இந்தப் பாடலைப் பாடி இருப்பவர்டி எம் சௌந்தரராஜன்.

நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
நான் கவிஞன்னொன்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து ( நான் பாடிய )

கள்ளில் உண்டாகும் போதை இவள் சொல்லில் உண்டாவதேனோ
தொட்டால் உண்டாகும் இன்பம் கண்கள் பட்டால் உண்டாவதேனோ
இவள் காலடி நிழல் படும் நேரம் மலர் போலே முள்ளும் மாறும். ( நான் பாடிய )

எதிரில் நின்றாடும் போது இளமனதை பந்தாடும் மாது
அருகில் வந்தாட வேண்டும் அதில் ஒரு கோடி பாடல் தோன்றும்
வண்ண ஆடைகள் மூடிய தேகம் அதை கொஞ்சும் இளமை வேகம் ( நான் பாடிய ) 

கோயில் கொள்ளாத சிலையோ இளங் கிளிகள் கொய்யாத கனியோ
ஏட்டில் இல்லாத கவியோ இவள் எழுத்தில் வராத பொருளோ
மடல் வாழையை போல் இவள் மேனி நகை சிந்தும் அழகு ராணி. ( நான் பாடிய) 

49 கருத்துகள்:

 1. முதல் பாடல் பல்லாயிரம் முறைகள் கேட்டு ரசித்து இருக்கிறேன்.

  இரண்டாவது பாடல் எனது ஃபேவரிட் லிஸ்டில் இருந்தது ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  முதல் பாடல் அய்யப்பன் பாடல்களில் முதன்மையான பாடல்களில் ஒன்று.  நன்றி ஜி.

   நீக்கு
 2. இன்று மீண்டும் கேட்க வைத்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. டிசம்பர் ஸீஸன் வந்தாச்சு. ஒரு மாறுதலுக்காக கர்நாடக சங்கீத கச்சேரி கீர்த்தனை ஒன்றைப் போடுங்களேன். தாளம் போட்டு ரசித்துக் கேட்கலாம்.
  சஞ்சய் என் சாய்ஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேலன் வருவாரடி, எப்படி பாடினாரோ போன்ற பாடல்களை ஏற்கெனவே பகிர்ந்துள்ளேன்.  இது அய்யப்பன் விரத காலம் என்பதால் அய்யப்பன் பாடல்கள்!

   நீக்கு
 4. முதல் பாடலை எப்போது கேட்டாலும் சிலிர்க்கும். சில பக்திப் பாடல்கள்தாம் அத்தகைய உணர்வைத் தரக்கூடியது.

  நல்ல சினிமா தன்னைத் தானே படைத்துக்கொள்வது போல, பக்திப் பாடலும் அப்படித்தான் போலிருக்கிறது

  பதிலளிநீக்கு
 5. இரண்டாம் பாடலையும் ரசிப்பேன். இது வரை அந்தப் பாடலை எம்ஜிஆருக்கானது என்றே நினைத்திருந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டி எம் எஸ் அவரவருக்கு தக்கவாறு குரலை மாற்றி பாடுவார் என்பது ஜல்லி என்று தெரிகிறது!

   நீக்கு
 6. கொய்யாத கனியோ என்கிறார் வாலி. உவமையாக கொய்யாப் பழத்தைத் தான் சொல்கிறார் என்று நினைத்துப் பெயர்க் காரணம் தேடியது வம்பாய்ப் போச்சு.

  பதிலளிநீக்கு
 7. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 8. நேற்று அதிகாலை தனியார்
  பேருந்தில் பயணம்..

  அதில் ஒலித்த பாடல் -

  இருமுடி தாங்கி ஒரு மனதாகி
  குருவெனவே வந்தோம்..

  ஆயினும், வேறொரு பாடகர் குரலில் ஒலித்தது..

  அதில் அந்தப் பழைய ஜீவன் இல்லை என்பது புரிந்தது..

  ஆயினும் இதைச் செல்வதற்கு நாம் யார்?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிலும் வீரமணி பாடல்கள் நிறைய டூப்ளிகேட் குரல்கள் உள்ளன.

   நீக்கு

 9. @ ஜீவி அண்ணா..

  // இளங் கிளிகள் கொய்யாத கனியோ.. //

  இதற்குப் பொருள் தேடியதும் அதிசயமே..

  இது என்ன பொருள் விளங்கா ப் பொருளா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொய்ய முடியாத கனி என்றாலும்
   மலரைத் தான் கொய்வார்கள்.
   கனியைக் கூடவா?
   இளங்கிளிகள் கொத்தாத கனி என்று வாலி எழுதியிருக்கலாம். இசைக்காக மாற்றி விட்டார்கள் போலிருக்கு.

   நீக்கு
  2. 'சந்திரோதயம் ஒரு பெண்ணாததோ' பாடலில் இதே வாலி 'கிளி வந்து கொத்தாத பழமல்லவோ' என்று எழுதியிருக்கிறார். அதனால் தான் நெல்லை கூட எம்ஜி ஆருக்கான பாடல் என்று நினைத்திருக்கிறார்.
   என்னலாம் ஆராய்ச்சி பாருங்க,..

   நீக்கு
 10. அந்த நாட்களில் இந்தப் பாடலும் மனப்பாடம்..

  அது அதுவாகவே பதிவானது..

  அன்றைக்கு என்ன விக்கியா குழாயடியா!?..

  அதெல்லாம் ஒரு பொற்காலம்!..

  பதிலளிநீக்கு
 11. அன்றைக்கு தமிழறிந்த கவிஞர்களால் பற்பல திரைமறைவுகள் மனதில் இலை மறைவு காய் மறைவு எனப் பதிந்தன...

  ஆயினும்,
  யோக்கியத்திலும் யோக்கியமாக வாழ்ந்திருந்தோம்..

  " நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்.. அவன் மாம்பழம் வேண்டும் என்றான் "

  இந்த மாதிரி எழுதிய கவிஞர்கள் காலத்தை வென்று இருக்கின்றார்கள்..

  பதிலளிநீக்கு
 12. அன்றைக்கு தமிழறிந்த கவிஞர்களால் பற்பல திரைமறைவுகள் மனதில் இலை மறைவு காய் மறைவு எனப் பதிந்தன...

  ஆயினும்,
  யோக்கியத்திலும் யோக்கியமாக வாழ்ந்திருந்தோம்..

  " நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்.. அவன் மாம்பழம் வேண்டும் என்றான் "

  இந்த மாதிரி எழுதிய கவிஞர்கள் காலத்தையும் வென்று இருக்கின்றார்கள்..

  பதிலளிநீக்கு
 13. அன்றைக்கு தமிழறிந்த கவிஞர்களால் பற்பல திரைமறைவுகள் மனதில் இலை மறைவு காய் மறைவு எனப் பதிந்தன...

  ஆயினும்,
  யோக்கியத்திலும் யோக்கியமாக வாழ்ந்திருந்தோம்..

  " நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்.. அவன் மாம்பழம் வேண்டும் என்றான் "

  இந்த மாதிரி எழுதிய கவிஞர்கள் காலத்தையும் வென்று இருக்கின்றார்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே கவிஞர்  காட்டுராணி கோட்டையிலேயும் எழுதி இருக்கிறார்.

   நீக்கு
 14. அவள் கவிஞனாக்கினாள் என்னை!...
  - கவியரசர்..

  நான் கவிஞன் என்றானதெல்லாம்
  இந்த அழகியின் முகம் பார்த்து..

  - கவித்தென்றல் வாலி..

  ஆகா!

  அவள் தான் எல்லாமுமே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண் என்றால் பெண்
   அவள் என்றாள் அவள்
   வெறும் வாயை மெல்வோருக்கு
   வாயிலே விழுந்தது அவல் !

   நீக்கு
 15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 16. /// நான் கவிஞனொன்றானதெல்லாம்///

  நான் கவிஞனென்றானதெல்லாம் √√

  பதிலளிநீக்கு
 17. ஐயப்பன் பாடலென்றாலே கே.வீரமணி.. என்று படிக்க் ஆரம்பித்தபோது, அந்தக் கருப்புச்சட்டையா இப்படியெல்லாம் பாடியது என்று அசட்டுத்தனமாகக் கேட்டது மனம். (ஐயப்பன் பாடல்களை சின்ன வயதில் கேட்டிருந்தாலும் பாடியவரின் பெயரை அறிந்ததில்லை.) அடுத்த வரிகள் சாமாதானப் படுத்திவிட்டன!

  பதிலளிநீக்கு
 18. /// பெண் என்றால் பெண்
  அவள் என்றாள் அவள்
  வெறும் வாயை மெல்வோருக்கு
  வாயிலே விழுந்தது அவல்!..///

  !!..??..

  பதிலளிநீக்கு
 19. எதிர் வரும் புதன் கிழமைக்காக..

  நாரதரே..
  பெண் என்றால் யார்?..

  அவள் என்றால் யார்?..

  (குழம்பிய நாரதரின் மனசாட்சி..

  ஈஸ்வரா.. இப்படியும் ஒரு கேள்வியா?..

  பெண் தானே அவள்..

  அவள் தானே பெண்!...)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில வருடங்களுக்கு முன் நான் கூட இப்படி ஒன்று எழுதி இருந்தேன். கிடைக்கும்போது பகிர்கிறேன்.

   நீக்கு
 20. /// கடல் கொந்தளிப்பு குறையாததால் சென்னை வெள்ளம் வடியவில்லை: வல்லுனர் தகவல் ///

  தினமலர் செய்தி..

  இந்தக் கடல் இருப்பதாலேயே வெள்ளம் குறையவில்லை!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். நானும் படித்துச் சிரித்தேன். உருட்டுகள் பலவகை.

   நீக்கு
 21. பீச்சாங்கரை இர்க்காங்காட்டியும் படா பேஜாருதான் நெய்னா!..

  பதிலளிநீக்கு
 22. ஐயப்பா சரணம். ஐயப்ப காலத்தில் வெள்ளி பகிர்வு சிறப்பானது.
  அருமையான பாடல்.

  இரண்டாவது பாடலும் நல்ல பாடல்.

  பாடல் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 23. கார்த்திகை மாதம் எப்போதும் எங்கும் ஒலிக்கும் பாடல்.
  மிகவும் பிடித்த பாடல். கேட்டேன்.
  அடுத்த பாடல் முன்பு ரேடியோவில் கேட்ட பாடல். பழைய பாடல் பகிர்வில் தொலைக்காட்சியில் கூட கேட்கவில்லை. பல வருடங்கள் கழித்து இன்று கேட்டேன் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. இந்த பாடல் இல்லாத ஐயப்பன் பூசை இல்லை...

  சுவாமியே சரணம் ஐயப்பா...

  பதிலளிநீக்கு
 25. 2. இனிமையான பாடல்

  Merina Beach, LIC Building எல்லாம் பாடலின் ஆரம்பத்தில் வருகிறது...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!