புதன், 27 டிசம்பர், 2023

மன நிம்மதி, மகிழ்ச்சியை எது கொடுக்கிறது?

 

நெல்லைத்தமிழன்: 

1. பெரிய பணக்காரன் என்று ஒருவனைச் சொல்வதில் அர்த்தம் இருக்கிறதா? பணக்காரன் என்பதை எதை வைத்து அறுதியிடுவது?

$ பணத்தைக் கொண்டுதான்!

# வரவுக்குள் செலவு செய்து கணிசமாக சேமித்து வைத்திருப்பவன் பணக்காரன். நிறைய சேமிப்பும், நிறைய அன்றாட வரும்படியும்,  குறைந்த செலவும் இருப்பவன் பெரும் பணக்காரன்தானே.

& பெரிய பணக்காரன் என்று ஒருவனை சொல்வதில் அர்த்தம் இல்லை. யார் சொல்கிறாரோ  அவர் தன்னிடம்  இருக்கும் பணத்தைக் கொண்டுதான் மற்றவரை அப்படி சொல்லக்கூடும். பெரிய பணக்காரர்கள் யாருமே தாந்தான் பெரிய பணக்காரன் என்று சொல்லிக்கொள்ள மாட்டார்கள். 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். 

2. மன நிம்மதி மகிழ்ச்சியை எது கொடுக்கிறது? 

$ நிம்மதி பற்றிய சிந்தனை வராத போது.

# கவலை, அச்சம் இல்லாத மனம்.

& எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு, திட்டமிட்ட நேரத்தில் செய்து முடித்தால் வருகின்ற நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் ஈடு இணை இல்லை. 

3. எப்போது சந்தோஷமாக இருப்பதை ஒருவர் உணர்வார்?

# அந்த சந்தோஷம் குறைந்த பின்..

& கவலைப்படுவதற்கு எதுவும் இல்லாதபோது! 

4. முதுகு வளைந்து உழைப்பது..... நாம் ஒவ்வொருவருமே, முதலாளியானால் நாம் அம்பானி அதானிகளைப் போலத்தான், ஏன் அவர்களைவிட மோசமாகத்தான் நடந்துகொள்வோம் என்பதை வாழ்க்கையில் கிடைத்த சந்தர்ப்பத்தில் நிரூபித்திருக்கிறோம் இல்லையா?

$ எல்லோரும் முதலாளிகள் 1என்றால் வேலை செய்வது யார்?

& அம்பானி / அதானி எல்லோரும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. 

முன் காலத்தில் (நான் பள்ளியில் படித்த காலத்தில்) பணக்காரர்கள் என்றால் டாடா / பிர்லா என்று கூறி வந்தார்கள். இப்போ அம்பானி / அதானி என்கிறார்கள். வரும் காலத்தில் வேறு யாராவது அப்படி பேசப்படக்கூடும்! 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

நேற்று ஐ.பி.எல். ஏலம் பார்த்தீர்களா?

# இல்லை. இதைப் பார்த்து என்ன பயன் ? நாம் இப்படி கோடி கோடியாய் கொடுத்து புஸ்வாணங்கள் வாங்குவது மடத்தனம் என்று நினைக்கிறோம். அவர்கள் அந்த மடத்தனத்தின் வழியே கோடிகள் சம்பாதிப்பதை மறந்து விடுகிறோம்.

& ஐ பி எல்லைப் பொருத்தவரை நான் ஆட்டம் மட்டுமே பார்ப்பேன். மற்றபடி யாருக்கு என்ன விலை, யார் வாங்கினார்கள் என்பது பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை! எந்தெந்த அணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று கூட கவனிப்பது இல்லை. ஆடுபவர் நன்றாக ஆடுகிறாரா? அது போதும் எனக்கு. 

= = = = = = = = =

KGG பக்கம் : 

JTS படித்த காலத்தில், work  shop பிரிவில் எல்லோருக்கும் பொதுவாக ஒரே elective subject - Moulding & foundry என்று சொல்லியிருந்தேன். 

வாரத்தில் இரண்டு நாட்கள், ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் - moulding வகுப்பு. அதைத் தவிர்த்து சனிக்கிழமைகளில் அரை நாள் முழுவதும் ( நான்கு மணி நேரம்) machineshp - Lathe section. 

அந்தப் பிரிவின் ஆசிரியர் கலியமூர்த்தி என்று ஒருவர். எங்களைவிட அநேகமாக ஏழெட்டு வயதுதான் அதிகம் இருக்கும். 

நாங்கள் எல்லோரும் அந்தப் பிரிவு வகுப்புக்குச் சென்றவுடன், " எல்லோரும் ஆளுக்கு ஒரு pattern எடுத்துக்கொண்டு moulding தயார் செய்யுங்கப்பா " என்று சொல்லிவிட்டு, மற்ற பிரிவு ஆசிரியர்களுடன் அரட்டை அடிக்கச் சென்று விடுவார். 

மோல்டிங் மண் இரண்டு வரிசைகளில் கொட்டப்பட்டு இருக்கும் - ஒவ்வொரு வரிசை மண்ணை சுற்றி 12 பேர் உட்கார்ந்து மோல்டிங் தயார் செய்வோம்

நாங்கள் எங்களுக்குச் சுலபமான பேட்டர்ன் ஒவ்வொன்றைத் தேடி எடுத்து முக்கால் மணி நேரத்துக்குள் moulding தயார் செய்து வைத்துவிடுவோம். 

அதற்குப் பிறகு - எங்கள் இரண்டு குழுக்கள் - அரட்டைக் கச்சேரி ஆரம்பமாகும். 

எங்களுடன் படித்தவர்களில் T மனோகரன் என்ற பையன் பற்றி ஞாபகம் வருகிறது.  திருவாரூரில் அவனுடைய அப்பா, 'வள்ளுவர் சுருட்டு' என்று ஒரு சுருட்டுக் கம்பெனியின் அதிபர். மனோகரன் ஒவ்வொரு வாரமும் திருவாரூர் தியேட்டரில் ஒரு படம் பார்த்துவிட்டு வந்துவிடுவான். 

அவன் பார்த்த ( பெரும்பாலும் எம்ஜியார் படங்கள் ) படத்தின் கதையை டைட்டில்ஸ் முதல் வணக்கம் வரை, விலாவாரியாக இரசனையாக கதை, வசனம், பாட்டு எல்லாவற்றையும் சொல்லுவான்.  

காவல்காரன் படத்தில், " காது கொடுத்துக் கேட்டேன் - ஆஹா குவா குவா சத்தம் " பாடல் ஆரம்பிக்கும் முன்பு உள்ள வசனங்கள், நடிப்பு எல்லாவற்றையும் மனோகரன் கூறியது இவ்வளவு வருடங்கள் கழித்தும் எனக்கு ஞாபகம் இருக்கிறது -  பாடல் ஆரம்பிக்கும் முன்பு, எம்ஜியார் ஜெயலலிதாவின் எந்த அங்கத்தில் முதலில் காதை வைப்பார் என்று அவன் கூறியதிலிருந்து எல்லாம் ஞாபகத்தில் உள்ளது! 

ஒரு குழுவில் மனோகரன், மற்றொரு குழுவில் கலியமூர்த்தி (ஆசிரியர் அல்ல - மாணவர் கலியமூர்த்தி!) என்ற பையன்கள்தான் கதை சொல்லுபவர்களில் முன்னோடி. ஒவ்வொரு குழுவிலும் ஒவ்வொரு படம் ஓடிக்கொண்டிருக்கும். மற்றவர்கள் எல்லோரும் ஆடியன்ஸ். சந்தோஷமாக கேட்டுக்கொண்டு பொழுதைக் கழிப்போம். 

1965 - 1968 கால கட்டத்தில் வந்த எல்லா படங்களும் முழு கதையும் மெயின் வசனங்களும் இவர்களின் கதாகாலட்சேபம் மூலம் நான் தெரிந்துகொண்டேன்! 

= = == = = = = =

அப்பாதுரை பக்கம் : 

கோரா போரா

கேள்வி கேளுங்க பதில் சொல்றோம்ன்றது நாப்பது அம்பது வருஷமா பத்திரிகை உலகுல சாதாரண வழக்கமாயிடுச்சு. இப்பல்லாம் பாதி பத்திரிகைங்கள்ல கேள்வி-பதில் பகுதி சப்பையா இருக்குதுனா அதுக்கு காரணம், சுவாரசியமான கேள்விகள் குறைஞ்சு போனதுனாலனு சொல்லலாம். பதிலை விட சுவாரசியமான கேள்விக்குத்தான் மவுசு. 

இணையகாலம் இல்லையா? எத்தினியோ  புரட்டிப் போட்டாச்சு, கேள்வி பதிலை விட்டு வைப்பானேன்? இணையத்துல கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் quoraனு ஒரு தளம் இருக்கு.  கேள்வி கேக்குறவங்களும் சந்தா கட்டணும், பதில் சொல்றவங்களும் சந்தா கட்டணும். சிறந்த கேள்வி பதில் இரண்டுக்கும் அங்கீகாரம் உண்டு.  ஒரு கேள்விக்கு நிறைய பேர் போட்டி போட்டுக்கிட்டு பதில் சொல்லி, பதில்மன்னன் பதிலரசன் பதில்பேரரசன் பதில்ஞானி பதில்புயல்னு பல விதமா மெடல் வாங்கி அவங்க பேருக்குப் பக்கத்துல போட்டுக்குறாங்க.

இருபது வருசமா இந்த கோரா தளம் இயங்கிட்டுவருதுனு நினைக்கிறேன். ஆனா சமீபமா கூகில்ல ஏதாவது தேடினா விகிபீடியா மாதிரி கோரா தளத்துலந்தும் பதில்களைச் சேர்ப்பது அதிகமாயிட்டே வருது.  கோரா தளத்தை நல்லா பரப்புறாங்க. கூகில் ஏஐல கோரா பதில்கள் வருது இப்போ.  

இந்த கோராவுல தொடர்பதில்னு ஒரு வசதி இருக்கு.  ஒரு பதிலை எழுதிட்டு அதுக்கு அப்டேட் குடுத்துட்டே இருக்கலாம். வருசக்கணக்கா தொடர் பதில் தந்து கொண்டிருக்கும் பிரபலங்கள் நிறைய இருக்காங்க கோராவுல.

பின் வரும் கேள்வி-பதில் எல்லாம் கோரா உபயம். எல்லா கேள்விகளும் பல பதில்களும் இந்திய கோரா பயனர்கள் பரிமாறிக்கொண்டவை. (எங்கியோ போயிட்டோம் நாம!! :-)

பின்வரும் கேள்வி 2008ல பதிவாச்சு. பத்து வருசமா தொடர்பதில்கள் வந்துட்டே இருந்தன. ஆயுசு கெட்டி கேள்விகள்ல இது ஒண்ணு. என்னைக் கவர்ந்தது. அதிர வைத்தது என்பதும் சரி.

கேள்வி:

நம்ம பெற்றோர் காலத்து உறவுமுறைகள் போலில்லாமல் திருமணத்துக்கு முன்னால் ஆண் பெண் இருவருமே பல காதல் உறவுகளைப் பழக வேண்டும் என்று நம்புகிறேன்.  லிவிங் டுகெதர் ஒத்து வராது. போன ஜெனரேசன். கமிட் பண்ணாம அதே நேரம் சரியான துணையைத் தேட அவகாசம் தேவை. நான் இருக்கும் வளாகத்தில் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன.  எங்கே பார்த்தாலும் "அழகான வாய்ப்புகள்" நிறைய இருக்கின்றன. பெற்றோர்களுக்கு தெரியாமல் ரகசியமாக சிலருடன் காதல் பழகி பொருத்தமான ஒரு உறவைத் தேட விரும்புகிறேன். வழி உண்டா?

 - சுந்தர்

பதில் மற்றும் எட்டு வருட அப்டேட்களின் "।" சாரம் (லிவிங் டுகெதர் போன ஜெனரேஷனாமே?):

எங்கள் (பெங்களூரு) வளாகத்தில் ஆயிரத்துக்கு  மேல் குடியிருப்புகள் உள்ளன. நான் கல்லூரி சேர்ந்த புதிதில் தினம் ஒரு பெண்ணுடன் பழகினேன். கம்யூனிடி ஹால் ஜிம் டெனிஸ் கோர்ட் என்று ப்ளாக் தாண்டிப் பழகினால் யாருக்குமே தெரியாமல் பழகலாம். ।। பல ஆண்களுடன் பழகுவது டேஞ்சர்.  ரொம்ப ஷேர் செய்து கொள்கிறார்கள் அழுமூஞ்சிகள் ।। பெண்கள் நம்மை ஒரு வாரத்துக்கு மேல் மதிப்பதில்லை என்று புரிந்துகொண்டேன்.  ।। அப்பா அம்மாவிடம் பலவிதமாக பொய் சொல்லி காசு வாங்க முடியவில்லை என்பதால் கடந்த மூன்று வருடங்களாக ஒரே பெண்ணுடன் பழகி வருகிறேன். ।। படிப்பு முடிந்து வேலை செட்டில் ஆகிற வரைக்கும் ரகசியமாக வைக்க முடிவு செய்தோம்.  அதனால் எங்கள் வீட்டிலேயே சந்திக்க முடிவு செய்தோம். அவள் என் குடியிருப்பில் நாலாவது மாடி, நான் இருப்பது ஐந்தாவது மாடி என்பதால் குறி கொடுத்துக் கொள்வது சுலபமானது.  குடியிருப்பு வளாகத்தில் நான் கம்ப்யூடர் மெகேனிக் வேலை பார்ப்பதால் இதை சாக்காகப் பயன்படுத்திக் கொள்வோம். கம்ப்யூடர் ரிபேர் என்று என் அம்மாவிடம் சொல்வாள்.  என் அம்மாவே என்னை வலுக்கட்டாயமாக "பாவம்டா அவள்" என்று அனுப்பி வைப்பார். அவர்கள் வீட்டிலும் கட்டுப்பாடு கிடையாது. ।। அவளுடன் பத்து பதினைந்து நிமிடம் இருந்துவிட்டு திரும்புவேன். ।। முத்தம் குடுத்துக்குவோம், அவ்ளோ தான் ।।கோவிட் டயத்துல சிரமமாச்சு.  ஆனா வொர்க் ப்ரம் ஹோம் என்னை பணக்காரனாவே ஆக்கிடுச்சுனு சொல்வேன். நிறைய பெண்கள் பழக்கமானாங்க ।।  இப்ப நானும் மீராவும் (பெயர்!!) நெருக்கமாயிட்டோம், என் கேள்விக்கு தொடர்பதில் தந்தவங்களுக்கு நன்றி ।। மீராவுக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் ப்ரெண்ட்ஸ் ।। அடுத்த வாரம் கல்யாணம், பத்து வருசமா தொடர்ந்து அப்டேட் போட்டவங்களுக்கு நன்றி. இதோ எங்க போட்டோ.

கதை எப்படி??! மீராவும் சுந்தரும் அசல் பெயர்களா தெரியவில்லை, ஆனால் போட்டோ ஷேர் பண்ணியிருக்கிறார்கள்.  

கேள்வி:

நாம் மறந்து போன சென்ற ஐநூறு வருடங்களின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் பத்து சொல்லமுடியுமா?

நான் படித்த பதில்களில் பிடித்தது: indoor plumbing.  

யாரோ ஒரு ஆர்கிடெக்ட் பதில் சொல்லியிருக்கிறார். Toilet flushக்கு முன் கழுவிக்கொள்ள நகர மக்கள் பட்ட கஷ்டம் பற்றிப் புட்டு வைத்து plumbingன் பெருமையை நினைவுபடுத்தியுள்ளார். 1800களில் லண்டன் நகர வீடுகளில் toilet flush மற்றும் kitchen sink வேண்டும் என்று பிரிடிஷ் சட்டம் கொடுத்த அவசரத்தினால் indoor plumbing நமக்குக் கிடைத்தது என்கிறார். ஒரு விதத்தில் அவர் கணிப்பு சரியே என்று தோன்றுகிறது. சல்யூட்.

கேள்வி:

எனக்கு முப்பது வயதாகிறது. பட்டப்படிப்பு முடிக்கவில்லை. ஏதோ அங்கே இங்கே நிலையில்லாத வேலை. வீட்டில் வரதட்சணையுடன் திருமணம் செய்து வைக்கிறேன் என்கிறார்கள். எனக்கு இஷ்டமில்லை. என்ன செய்யலாம்?

நான் படித்த பதில்களின் சாரம்:

ப்ரோ, எனக்கு 32 வயதாகிறது, நானும் உன் கேஸ் தான் ।। கல்யாணம் செய்து கொள், பணம் உதவும் ।। கல்யாணம் செய்யாதே, அந்தப் பெண் உன்னை இன்னும் டிப்ரெஸ் செய்வாள் ।। ஐடி செக்டரில் வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தால் கட்டிக்கொள், ஆன்சைட் கிடைத்து ஓடிவிடுவாள் ।। அரசியலில் சேர வேண்டியது தானே?

படிச்சு வேலைக்குப் போய் உருப்படுற வழியப் பாருனு ஒருத்தர் கூட பதில் சொல்லவேயில்லை என்பது ஆச்சரியம்.

அடுத்த கேள்வியும் பதிலும் ஆச் அதிர்ச்.

கேள்வி:

பெற்றோர் நிச்சயம் செய்த திருமணம் ஆன அடுத்த மாசத்துல என் கணவருக்கு கடுமையான வயிற்றுவலி. அது அல்ஸரா வளர்ந்து இப்ப கேன்சரா இருக்கும்னு டெஸ்ட் எடுக்கிறாங்க.  இது போல திருமணத்துல எத்தனை நாள் தாக்கு பிடிக்கலாம்?

பதில்:

உன்னைவிட பணக்கார புருஷனா இருந்தா 12 மாசம், நோ கர்ப்பம், செடில்மெண்டுடன் டைவோர்ஸ்.

உன்னைவிட ஏழையா இருந்தா இமிடியட் அவுட். உன் பெற்றோர் மூஞ்சில கூட முழிக்காதே.

கேள்வி:

அரசாங்க வரி வருவாய் இருவது லட்சம் கோடிலருந்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஆளுக்கு ஒரு கோடி கொடுத்தால் என்ன?

பதில்:

முதல் இருவது லட்சம் வீட்டுல உன் வீட்டு முகவரி வருதா பார்த்துக்க. இந்திய மக்கள் தொகை எவ்ளோனு தெரியும்ல? கணக்கு வருமா?

இன்னும் சில கோரா **கேள்விகளை மட்டும் கொடுத்திருக்கிறேன். எபி ஆசிரியர்கள் பதில் சொல்லட்டும்:

= = = = = = = = =

** அந்த ஐந்து கேள்விகளும், அவற்றுக்கான 'எங்கள்' பதில்களும் அடுத்த புதன்கிழமை பார்ப்போம். 

= = = = = = = =

39 கருத்துகள்:

  1. பல வருடங்களாக கோரா தளம் பார்த்து வருகிறேன்.  பெரும்பாலும் வக்கிரமான கேள்விகள்.  சில சுவாரஸ்யம் நிகழ்வு, சம்பவங்களும் கிடைக்கும் சில சமயம்.  சமீப காலங்களில் அங்கு நகைச்சுவைப் பகுதியும் வருகிறது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில கேள்விகளுக்கு நானும் பதிலளித்திருக்கிறேன்.  வெங்கட் நாகராஜ் கூட ஓரிரு பதில் கொடுத்திருக்கிறார் என்று நினைவு.

      நீக்கு
    2. கோரா தளம் useless. வக்கிரம். வரைமுறை இல்லாத பிதற்றல்கள். ஆபாசங்களால் நிரம்பியிருப்பதால் நல்லதைத் தேட முடிவதில்லை, becomes irrelevant

      நீக்கு
    3. நானும் கோரா தளம் முன் காலத்தில் பார்த்தது உண்டு. பெரும்பாலானவை இந்தியர்களுக்கு ஒத்து வராது விஷயங்கள் என்று தோன்றுகிறது.

      நீக்கு
  2. நெல்லை சில அர்த்தமுள்ள கேள்விகளைத் தான் கேட்டிருக்கிறார். பதில்கள் அரசு தரத்தில் இல்லாவிட்டாலும் நன்றாக உள்ளன.

    கேள்வியின் நாயகி கீதா மேடம் சிறிது நாட்களாகவே காணவில்லை.

    கோராவில் சேர சந்தா ஒன்றும் இல்லை. நானும் கோரவில் பதில்கள் எழுதுகிறேன். அதிகம் கேள்வி கேட்பவர்களுக்கு ராயல்டி போல் கொஞ்சம் டாலர் கொடுக்கிறார்கள். அதே போல் சிலரது பதில்களை நாம் பார்ப்பதற்கு ரூபாய் கொடுக்க வேண்டும். அங்கேயும் அரசியல் அதிகம் புகுந்துவிட்டது. ஆபாசமும்.

    நானும் கேள்விகள் அனுப்பியிருந்தேன். காணவில்லை. இது சாதாரணமாக எப்போதும் எனக்கு ஏற்படுகிறது. கேள்விகள் நிராகரிக்கப்பட்டால் நிராகரிக்கப்பட்டன என்று ஒரு பதில் அனுப்பலாம்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. 1. பணத்த வைச்சு அளவீடு செய்வதுதான். இந்த அளவீடுகள் மாறிக் கொண்டே இருக்கும். வரும் போகும். ஆனா என் தனிப்பட்ட கருத்து படுத்தா அடுத்த நிமிஷம் தூங்கணும். அப்படியானவங்கதான் பணக்காரன். மருத்துவமனைக்குச் செல்லாதவர்கள் பணக்காரர்கள்.

    2. மனசுக்குள் மத்தாப்பூ!!! அதை வெளியில் தேடினால் எங்க கிடைக்கும்? அதெல்லாம் தற்காலிகம்.

    3. புற அளவீடுகளை வைத்து தற்காலிக மகிழ்ச்சியை அளவிடுகிறோம். மகிழ்ச்சி, வருத்தம்/துக்கம் இரண்டும் மாறி மாறி வந்துகிட்டேதானே இருக்கும்.
    நிரந்தர மகிழ்ச்சி என்பது நம் மனதிற்குள்தான். மனசுக்குள்ள மகிழ்ச்சி இருக்கறப்ப எப்ப நாம் மகிழ்வாக இருக்கிறோம் என்பது இலையே...எப்பவுமே சலனமில்லாம இருக்கறதுதான்.

    அது இல்லாமதான் புரிந்து கொள்ள முடியாமதான் நாம தவிக்கிறோம். அதை அடைந்துவிட்டால் ஞானி! மாபெரும் சக்தியை உணரும் நிலை.

    நிறையப்பேர் நித்திய தேடிப் போறாங்க!!!!!!!!!! ஆனா அந்த ஆளுக்கும் நிம்மதி இல்லை!!!! என்பதுதான் முரண்!!!!!!!!!! ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நெல்லை சொல்லுவார்....கீதா ரெங்கன்(கா) க்கு வயசாகிடுச்சுன்னு!! ஹாஹாஹாஹா....அப்படினாக்க 18 வயசிலேயே முதியோர் கல்வி படிச்சிருக்கேனாக்கும்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீல்லாம் சொல்லமாட்டேன். சொன்னால், எனக்கும் வயசாவது தெரிந்துவிடும் அல்லவா? அதனால் சிம்ப்ளி 'க்கா'

      நீக்கு
  5. பணத்தை வைத்துப் பெரும் பணக்காரன் என்று முடிவு செய்வது அபத்தம். சாதாரண நிலையில் ஆரோக்கியமாக, அன்றாட வாழ்வாதாரத்துக்குக் கவலையில்லாமல் மன நிம்மதியோடு ஒருவர் இருக்க முடிந்தால் அவரே பெரும் பணக்கார்ர் என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
  6. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது யாருக்குமே நினைவுக்கு வரவில்லையே

    பதிலளிநீக்கு
  7. கௌதமன் அனுபவம் எனக்கு ஹாஸ்டலில் ஏற்பட்ட அனுபவங்களை நினைவுபடுத்தியது. 10ம் வகுப்பிற்குட்பட்ட ஹாஸ்டலில், மாலை விளையாட்டு (பள்ளியிலிருந்து வந்தபின், ஹாஸ்டல் டீம்கள், அட்டவணை பிரகாரம்), 6 மணிக்கு ஸ்டடி டைம், 7 1/2க்கு இரவு உணவு. சாப்பிட்டபின், 8 1/2 வரையில் குழுக் குழுவாக மணல் வெளியில் (வளாகத்துக்குள்) உட்கார்ந்தி அரட்டை. கோபாலகிருஷ்ணன் போன்ற சிலர் திரைப்படங்களை அச்சு மாறாமல் நடிப்புக் குரலில் விவரிப்பார்கள். பெல் அடித்தவுடன், தொடரைம், நாங்கள் இரவு ஸ்டடிக்குச் செல்லவேண்டும். 9-91/2க்கு படுக்கை. ரொம்பவும் நினைவில் இருக்கும், அனுபவித்த நாட்கள் அவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களை நீங்களும் எழுதி எங்களுக்கு அனுப்பலாமே!

      நீக்கு
  8. //நித்தியைத் தேடிப் போறாங்க... அவருக்கும் நிம்மதியில்லை// -டக் என்று மனதில் தோன்றியது.... காலையில் இறைவன் அலங்காரத்துடன் வீற்றிருக்கிறார். மக்கள் சாரிசாரியாக வருகிறார்கள். எத்தனைபேர், இறைவா எனக்கு வாழ்க்கை கொடுத்ததற்கு நன்றி, இந்தத் தவறுகளைச் செய்கிறேன், மன்னித்து குறைந்த தண்டனை கொடு, எப்போதும் உன்னை நினைக்க அருள் செய்னு வேண்டுவாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை உண்மையா சொல்லணும்னா என் பிரார்த்தனை அதுமட்டுமே. நன்றி நிறைய சொல்லுவேன். மன்னிப்பு கேட்பதுண்டு.

      கீதா

      நீக்கு
    2. நாம் யோகியையோ இல்லை கடவுளையோ சந்திக்கச் சென்றாலும் நம் பாவங்களை, கஷ்டங்களை அவங்க மேல ஏற்றுவதிலேயே குறியா இருக்கோம். 'நன்றி' சொல்வது என்பதே விதிவிலக்கு மனிதர்கள்ட இருக்கு. 'எல்லாரையும் நல்லபடியா வைப்பா' என்று கேட்பவர்களும் மிகக் குறைவு. (நானும் அவர்களில் ஒருவன்).

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  9. நான் போட்டகருத்துகள் இருக்கிறதே.....மேலே .....கௌ அண்ணா பார்க்கலை போல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. கௌ அண்ணா வின் அனுபவங்கள் சுவாரசியம். எங்கள் நட்புக் குழுவிலும் இப்படி லெட்டர் சீனிலிருந்து அதுவும் இசையோடு சொல்பவர் உண்டு. அப்படிச் சில படங்கள் பற்றித் தெரிந்துகொண்டதுண்டு.

    மோல்டிங்க் - ஆஹா நல்ல சப்ஜெக்ட். நம் கற்பனைத் திறனை வளர்க்கும். வெளிக் கொணரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கோரா அவ்வப்போது பார்த்ததுண்டு. ஒரு சில நல்லாருக்கும் குறிப்பாக ஏதேனும் கடைகள் எவை நல்லவை என்று தெரிந்துகொள்ளத் தேடும் போது அங்கு அனுபவங்கள் சொல்லப்பட்டிருக்கும்.

    ஆனால் நிறைய விஷயங்கள் ரசிக்கவில்லை.

    அப்பாதுரை ஜி சொல்லிருப்பது போல கூகுளில் எது தேடினாலும் பெரும்பாலும் கோரா பதில்கள் வந்துவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. சில நாட்களாக தொடரமுடியவில்லை.

    வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. சில நாட்களாக தொடரமுடியவில்லை.

    வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
    எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே! என்ற பாடல் நினைவுக்கு வந்தது.
    எதிர்பார்ப்பு இல்லையென்றால் நிம்மதி கிடைக்கும், மனம் ஏதாவது எதிர்பார்த்து கவலை கொள்கிறதே!
    மனநிறைவு நிம்மதி தரும்.

    பதிலளிநீக்கு
  16. KGG சார் பக்கத்தில் சொன்னது போல என் பள்ளிபருவத்தில் சினிமா கதைகளை அப்படியே சொல்லும் மாணவியும், கணித ஆசிரியரும் இருந்தார்கள். கணித ஆசிரியர் உமா அவர்கள் "சீதா அவுர் கீதா"
    ஹேமமாலினி நடித்த இந்தி படம் கதையை மிக அருமையாக சொன்னார்.

    பதிலளிநீக்கு
  17. பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!