நெல்லைத்தமிழன் :
அரிசி உப்புமாவிற்கு என்ன என்ன காம்பினேஷன் நல்லா இருக்கும்? எது பெஸ்ட்? (இது எபி ஆசிரியர் அல்லது வாசகர்களுக்கு. எங்க வீட்டுல இன்றைக்கு இது பற்றி வேறு வேறு கருத்து. அதனால் மனைவி சொல்படி இந்தக் கேள்வி 😅)
# என் அபிமான உப்புமா "குழம்புமா உப்புமா" என்று அறியப்படும் அரிசிமாவு உப்புமா. அதற்கு எனக்குப் பிடித்த சப்போர்ட் வற்றல் குழம்பு அல்லது தயிர்.
மாறாக அரிசி நொய் உப்புமா என்றால் - வெறும் மிள. வற்றல் +புளி+பெருங்காயம் (உப்பு) சேர்த்து சற்றே நீர்க்க அரைத்த காரப்பேஸ்ட்.
& அரிசி உப்புமா - ஆஹா - நான் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. அரிசி உப்புமா செய்முறை பற்றி நெல்லை தயவு செய்து ஒரு திங்க கிழமை பதிவு அனுப்பவும். எனக்கு செய்யத் தெரியாது. தெரிந்துகொள்ள ஆசை.
முன்பு அம்மா செய்த அ உ வை ஆசையாக, அம்மா செய்த மிளகாய் வற்றல் + புளி + உப்பு பேஸ்ட் துணையுடன் (அம்மா அதை 'புளிப்புத் துவையல்' என்று அழைப்பார்!) சாப்பிட்டேன். எட்டு வருடங்களுக்கு முன் அதே சுவையுடன், சமபந்தி அம்மாள் செய்த அ உ சாப்பிட்டேன். அதன்பின், இன்றுவரை சுவையான அ உ சாப்பிடவில்லை என்ற ஏக்கம் !
மனிதனின் ஆசைக்கு அளவே இல்லை என்னும்போது, ஒருவரின் கடைசி ஆசை என்பது என்னவாக இருக்கும்?
# இந்த ஒருமுறை தப்பிக்க அருள் செய் இறைவா என்று இருக்கலாம்.
& 'இது கடைசி ஆசையாக இல்லாமல் இருந்தால் நல்லா இருக்குமே!' என்பது.
சத்வ குணம் வெண்மை நிறம், தமோ குணம் கருமை நிறம் என்று கொண்டு மனிதனின் குணத்தை நிறத்தைக்கொண்டு அளவிட, கணிக்க முடியுமா?
# இதெல்லாம் புரிவதற்கான, புரிய வைப்பதற்கானகுறியீடு என்று கொள்ளலாம். குணம் கண்ணுக்குத் தெரிவது அல்ல. (குணம் சார்ந்த செயல் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்) எனவே குணத்திற்கு வண்ணம் ஏற்ற முடியாது.
எனக்கு இனிப்பு பிடிக்காது, காரம் பிடிக்காது என்றெல்லாம் சிறுவயதிலேயே வரும் ருசி/குணம் எங்கிருந்து வருகிறது? சிலர் இனிப்புக்கு அடிமையாக இருப்பாங்க, சிலருக்கு இனிப்பே பிடிப்பதில்லை. அதனால் இந்தக் கேள்வி.
# நானும் இது பற்றி யோசிப்பது எல்லாக் குழந்தைகளும் பிறந்து சில காலம் வரை உட்கொள்ளும் உணவு ஒன்றேதான் அல்லது ஒரு வகைப் பட்டதேதான். எனவே இதை பழக்க தோஷம் காரணமாக வந்த ஈடுபாடு என்று சொல்வதற்கில்லை. உட்கட்டமைப்பில் மாற்றம் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?
& எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இது அவரவர்களின் அம்மா செய்து வைக்கும் பழக்கம் காரணமாக வருவது என்பதுதான். சிலர் மட்டும் அம்மா செய்து வைத்த பழக்கத்தை, தங்களுடைய அனுபவ அறிவால் மாற்றிக்கொள்வது உண்டு.
ஒரு மனிதன், தன் நாக்குக்குப் பிடித்ததை எந்த வயதில் விடவேண்டும்?
# அதனால் உடல்நலப் பிரச்சினை ஏற்படுகிறது என்று தெரிந்த உடனேயே விட்டுவிடுவது நல்லது.
இந்த ரோஹித், விராட், கே எல் ராகுல் போன்ற சிங்கிள் டிஜிட் தாண்டாத கிரிக்கெட் வீரர்கள், எப்போதான் இந்திய டெஸ்ட் அணியை விட்டுப் போவாங்க? சுஹ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் போன்றோர்களெல்லாம் உலக அழகிப் போட்டிப் பக்கமே போவதில்லை என்பதைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள மாட்டார்களா?
# புதியவர்களுக்கு இடம் கொடுத்து, சரிவர ஆட இயலாத , பழைய தேர்ந்த ஆட்டக்காரர்கள் விலகுவது நல்லதுதான். ஆனால் வரலாற்றின் அடிப்படையிலே பார்த்தால் , சில காலம் நன்றாக ஆடாமல் இருந்து பின் மீண்டும் தம் பழைய நிலைக்குத் திரும்பிய சில வீரர்களை பற்றி நாம் அறிவோம் அல்லவா ? மீண்டும் நல்ல நிலைக்கு வந்து விடுவார்கள் என்கிற நப்பாசைதான் அவர்களை விலக்காமல் வைத்துக் கொள்ள வைக்கிறது.
& சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் போட்டியிலிருந்து விலகி இருப்பது பற்றி எல்லாம் யோசிக்கிறீங்க - தமன்னா போன்ற வயதான நடிகைகள் சினிமாவிலிருந்து விலகி, புது முகங்களான அத்யா, பவ்யா, சந்த்ராணி போன்றவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி யோசிக்கவில்லையா ?
("யோவ் & - நெ த கிரிக்கட் பத்தி கேட்டா - என்னை ஏன் இங்கே இழுக்கிறாய் ? பாரு உன்னை என்ன செய்கிறேன் என்று" )பானுமதி வெங்கடேஸ்வரன்:
இளவட்டத்தில் நண்பர்களின் ஏதாவது வினோதமான அல்லது விபரீதமான பந்தயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?
# இல்லை.
& JTS படித்த காலத்தில், புதிய கட்டிடத்திற்கு moulding section நிறுவ பகல் நேரத்தில், எல்லோரும் அருகில் உள்ள கடற்கரைக்கு சென்று parting sand எடுத்து வந்தோம். போகும்போது எல்லோரும் குஷியாக பேசிச் சிரித்தபடி போனோம். ஆனால் திரும்ப வந்தபோது பயங்கர பிரச்சனை. மணல் வாளி தூக்கி வந்த நண்பர்கள் சிலர் மணலில் நடக்க சிரமமாக இருக்கும் என்று அவர்களுடைய செருப்புகளை வகுப்பிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டதால், கால் சூடு, மணல் பளு தாங்க இயலாது, மிகவும் அவதிப்பட்டனர்.
ஒரு நண்பன் என்னிடம், " ஒரு பந்தயம் - நீ வெயிட் எதுவும் தூக்காமல்தானே வருகிறாய். உன்னுடைய செருப்புகளை கொடு, நான் போட்டுக்கொண்டு மணல் வாளி தூக்கி வருகிறேன் - நீ வெயிட் எதுவும் இல்லாததால் வேகமாக நட அல்லது ஓடு - யார் முதலில் வொர்க் ஷாப் போய் சேர்கிறோம் என்று பார்ப்போம்' என்று சொல்லி என் செருப்புகளை அவன் போட்டுக்கொண்டுவிட்டான். முதல் இரண்டு நிமிடங்கள் என்னை ஒன்றும் பாதிக்கவில்லை. ஆனால் போகப்போக பகல் வெயிலில் சூடான கடற்கரை மணலில் நடப்பது, ஓடுவது எல்லாமே மிகவும் கடினமாகி வியர்த்து விறுவிறுத்து மயக்கம் அடையும் நிலை வந்துவிட்டது! பந்தயம் என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது இதுதான்!
கே. சக்ரபாணி சென்னை 28:
1. ஓசியில் கொடுத்தார்கள் என்பதற்கும் ப்ரீயாக கொடுத்தார்கள் என்பதற்கும் என்ன வித்யாசம்?
# பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தோன்றவில்லை. இரவல் சட்டையை நான் போட்டிருந்தால் "ஓசி சட்டை" என்று சொல்வேன். ஆனால் திருப்பிக் கொடுத்து விடுவேன். ஃப்ரீ யாகக் கிடைப்பது திருப்ப வேண்டிய கட்டாயம் இல்லை.
& நமக்குத் தேவையானதை அல்லது நாம் விருப்பப்படுவதை அந்தப் பொருளை அதிகமாக வைத்துள்ள மற்றவர்கள் கொஞ்சம் நமக்குக் கொடுத்தால் அது ஓசி. உதாரணம் - சின்ன வயதில் நாம் பேனாவிற்கு பக்கத்துப் பையனிடம் அவசரத்திற்கு வாங்கிய சில துளி இங்க்.
ஃப்ரீ என்பது பொருளை நிறைய வைத்துள்ளவர்கள் விளம்பரத்திற்காக அல்லது வியாபாரப் பெருக்க யுக்தியாக மற்றவர்களுக்கு - அது அவர்களுக்குத் தேவையோ இல்லையோ - அவர்களுக்குக் கொடுப்பது. அந்தக் காலத்தில் குமுதம் பத்திரிக்கை கொடுத்த இலவச இணைப்புகள் இதற்கு உதாரணம்.
2. டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்தபிறகும் இன்னும் கோர்ட்களில் ஜட்ஜ் அவர்கள் ஒரு மர சுத்தியல் வைத்துதானே ஆர்டர் ஆர்டர் என்று மேஜைமீது தட்டுகிறார். இது மாறுமா?
# வக்கீல்கள் ஜட்ஜ்களின் கருப்பு அங்கி மாறினாலும் மாறலாம் மர சுத்தியல் மாறாது. இதெல்லாம் சம்பிரதாயம் சார்ந்த அடையாளங்கள்.
& வருங்காலத்தில் AI ஜட்ஜ்கள் வந்துவிடுவார்கள். அந்த AI நீதிபதிகள் சுத்தி (சுற்றி!) இருப்பவர்கள் என்ன கத்தினாலும் சுத்தியல் கொண்டு எங்கும் தட்டமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
3. ஒரு பெண்ணின் கணவனின் அம்மா மாமியார். மாமியாரின் தங்கை சின்னமாமியார். அக்கா. பெரிய மாமியார். எனில். மாமியாரின். மாமியார் என்ன உறவு முறை>
# கணவனின் பாட்டி. வேதாளம் கேள்வி கேட்பது போல் கேட்டு விட்டீர்களே !
& மாமாமியார்!
= = = = = = = = = =
KGG பக்கம் :
kgs நினைவுகள்.
ஒருமுறை kgs, அம்மாவிடம் வந்து, "எனக்கு ஒரு மேஜிக் தெரியும். இன்று பள்ளிக்கூடத்திற்கு வந்த ஒரு magician கிட்ட அந்த மேஜிக் கற்றுக்கொண்டேன்" என்றார்.
அம்மா : " அது என்ன மேஜிக்?"
அண்ணன் : " ஒரு நாலணாக் காசு இருந்தால் அதை எடுத்து இந்தத் தரை மீது வை "
(அந்தக் காலத்து நாலணா - கால் ரூபாய் - என்பது இந்தக் காலத்து நூறு ரூபாய்க்குச் சமம்!)
அம்மா கடுகு டப்பாவிலிருந்து தேடி எடுத்து ஒரு நாலணா காசை தரையின் மீது வைத்தார்.
அண்ணன் : " இப்போ அந்தக் காசின் மீது ஒரு பித்தளை சொம்பைக் கவிழ்த்து வை "
அம்மா, kgs சொன்னபடி செய்தார்.
அண்ணன் : " இப்போ இந்த சொம்பைத் தொடாமல் உள்ளே இருக்கும் நாலணாவை நான் எடுக்கப் போகிறேன்."
அம்மா : " அது எப்படி முடியும்?"
அண்ணன் : " என்னால் முடியும். பந்தயம் வைத்துக்கொள்வோம். நான் இதில் ஜெயித்தால் நீ எனக்கு நாலணா தரவேண்டும். தோற்றுவிட்டால் நான் உனக்கு நாலணா தருவேன்"
அம்மா : " சரி. "
அண்ணன் இரண்டு கைகளையும் மூடியபடி சொம்புக்கு மேலே அதன் மீது கை படாமல் ஆட்டியபடி கண்களை மூடி " ப்ரூபரம் பரமானந்தம் பிரம்மோபம் பரஸ்தாத் " என்று ஏதோ முணுமுணுத்தார்.
பிறகு, " ஆஹா நாலணா காசு இப்போது என் கைக்குள் வந்துவிட்டது " என்றார். வலது கையைத் திறந்து காட்டினார். அவர் கையில் நாலணா இருந்தது. (அவர் ஏற்கெனவே தன்னுடைய உண்டியலில் இருந்து ஒரு நாலணாவைக் கொண்டு வந்திருந்தார் என்பது பிறகு நாங்கள் தெரிந்துக்கொண்ட விஷயம்!)
அம்மா உடனே - " நான் வைத்த காசுதானா அது என்று பார்க்கலாம்? " என்று சொல்லி சொம்பைத் தூக்கினார்.
அண்ணன் உடனே சொம்பின் மீது கை படாமல், மின்னல் வேகத்தில் தரையில் இருந்த காசைக் கையில் எடுத்து சட்டைப் பையில் போட்டுக்கொண்டபடி " ஆஹா - பந்தயத்தில் நான் ஜெயித்துவிட்டேன். நான் சொம்பைத் தொடாமலேயே நாலணாவை எடுத்துவிட்டேன். இந்த நாலணா எனக்குத்தான் " என்று கூறியபடி ஓடிப் போய்விட்டார்!
= = = = = = = = =
இன்றைய கேள்வி பதில்கள் ரசிக்கும்படி இருந்தது. யாருடைய பதில் என்று வெளிப்படையாகவே எழுதிடலாம்
பதிலளிநீக்குஎங்கள் வாசகர்கள் எல்லோருக்கும் சுலபமாகப் புரியும்.
நீக்குஅத்யா பவ்யா சந்த்ராணி.. சும்மா அடிச்சுவிட்டிருக்கார்.
பதிலளிநீக்குஒன்று தெரியுமா? ஆண்களுக்கு loyalty, அதிலும் சினிமா நடிகைகளிடத்தில் கிடையாது (நடிப்பில் அல்ல மனதைக் கவரும் கவர்ச்சியில்) ராதா ரம்பா....தமன்னா ஸ்ரீதிவ்யா என நிறைய மாறியாச்சு. பின்பு அவர்களைத் திரையில் பார்த்து (சமீப உதாரணம் மெய்யழகன் ஸ்ரீதிவ்யா) நொந்துபோயாச்சு.
ஸ்ரீராமும் விதிவிலக்கில்லை. அப்படி இருந்திருந்தால் எப்போதாவது குண்டு அனுஷ்கா படம் போட்டிருக்கிறாரா
நீக்குஅத்யா, பவ்யா, சந்த்ராணி
நீக்குஎல்லோரும் இன்னிக்குதான் பிறந்திருக்காங்க. இன்னும் இருபது வருடங்களில் திரைத் தாரகைகளாக ஜ்வலிப்பார்கள் பாருங்கள்!
ஓசி free க்கு வியாக்யானம் எழுதியிருக்கீங்களே. அப்போ ஓட்டுக்காகக் கொடுப்பது ஓசியா freeயா இல்லை லஞ்சமா?
பதிலளிநீக்குஓட்டுக்காக கொடுப்பது ப்ரீ யும் அல்ல ஓ சி யும் அல்ல. பண்ட மாற்று.
நீக்குஓட்டுக்காக கொடுப்பது விலை.
நீக்குஜெயகுமார் சார் பொதுப்பணித்துறை பதிவாளர் ஆபீசில் வேலைபார்த்தாரா? பட்டா தர பண்டமாற்று ஐந்து லட்சம், ரெஜில்ட்ரேஷன் பண்டமாற்று இரண்டு லட்சம் என போர்டு வைக்க ஆலோசனை சொல்கிறாரே
நீக்குமக்கள் தொடர்பு இல்லாத லஞ்சத்திற்கு இடம் கொடுக்காத விண்வெளி நிலையத்தில் வேலை பார்த்தவன் என்று அறிந்தும் இந்த ஐயம்?
நீக்குJayakumar
அதானே!
நீக்குஅம்மா செய்து வைக்கும் பழக்கம்... எனக்கு நம்பிக்கையில்லை. பசங்க எல்லாருக்கும் ஒரே அம்மாதானே
பதிலளிநீக்குநான்தான் சொல்லிட்டேனே - பிறகு அவரவர்கள் சொந்த அனுபவத்தில் மாறிவிடுவார்கள் என்று!
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவேண்டுவோம்!
நீக்குஅ.உ.செய்முறை... Very Sorry. நிறைய செய்முறை எழுதாமலேயே படங்களுடன் இருக்கிறது. எழுதறேன்
பதிலளிநீக்குஎழுதுங்க; அனுப்புங்க!
நீக்குமனைவி சொல்றா அதை புளின்னு சொல்வாங்களாம். மஞ்சப் பொங்கலுக்கு சூப்பரா இருக்குமாம். இந்த வாரம் பண்ணச் சொல்லுவேன். அப்படியே அ.உ செய்முறையையும் தயார் பண்ணிடறேன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.
அ. உப்புமாவுக்கு சிகப்பு மிளகாய், கொஞ்சம் கூடுதலாக புளி சேர்த்து செய்யும் தே. சட்னி பொருத்தமாக இருக்கும். அத்தோடு மட்டுமின்றி கத்திரிக்காய் கொஸ்த்து (அதன் புளிப்பு, காரத்திற்காகத்தான் அதுவும் சுவையாக இருக்கும்.) சமயத்தில் வெறும் வெல்லப்பொடியும் மிகப் பொருத்தம் தரும்.
இந்த அரிசி உப்புமாவை ஆற வைத்து கொழுகட்டைகளாக பிடித்து அ. உ. கொ வாக செய்தால் தொட்டுக் கொள்ள ஏதுமின்றி வெறுமனே சாப்பிட்டு விடலாம்.
அ. உ. கொழுக்கட்டை பதிவு நானும் என் தளத்தில் பதிவாக போட்டுள்ளேன். நீங்கள் என் வலைத்தளத்திற்கு வருவதேயில்லை . அதனால் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அரிசி உப்புமா வெங்கல பானையில் செய்யும் போது அதன் மணமும், சுவையும் தனி. சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களின் கைப்பக்குவத்தில் அரிசி உப்புமாவைக் காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எங்கள் ஸ்ரீராம்தான் எங்கள் சார்பில் எல்லா தளங்களுக்கும் விசிட் செய்வார். முக்கியமான அல்லது எங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளைப் படித்தால் எங்களுக்கு தகவல் சொல்லிவிடுவார்!
நீக்குஓசி ப்ரீ வேறுபாட்டை விளக்கும் இரண்டு பதில்களும் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குஅரிசி உப்புமாவிற்கு தொட்டுக்கொள்ள கெட்சப் அல்லது ஸ்வீட் அண்ட் ஸ்பைஸி சாஸ் நன்றாக இருக்கும்.
கடைசி ஆசை. யாரும் கடைசி ஆசை என்று கேட்பதில்லை, தூக்கு தண்டனை கைதிகளைத் தவிர. ஆசை என்பது கடைசியா , இல்லையா என்று தீர்மானிப்பவர் மேலே இருக்கிறார்.
Jayakumar
சரியாக சொன்னீர்கள்! நன்றி.
நீக்குKGG பக்கம் - வழக்கம் போலவே சிறப்பு..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவணக்கம் ஸ்ரீராம் சகோதரரே
பதிலளிநீக்குநேற்றைய கதையின் பாதிப்பு இன்னமும் மனதிற்குள் ஓடுகிறது. கதை யதார்த்தத்தை சுட்டிக் காட்டியபடி நன்றாக இருந்தது. ஆனால், பாவம்..! கதையாயினும், அந்த இளைஞருக்கு என்ன மன கஷ்டமோ என இருக்கிறது. எங்கள் உறவில் இரண்டு மரணங்கள் இந்த ரயிலில் ஏறும் போதோ, இறங்கும் போதோ நடந்துள்ளது. அந்த நினைவு நேற்று முழுவதும். சமயங்களில் அன்றாட சௌகரியங்களும் ஆபத்தானவைதான்.
மெயிலில் செய்தி என்னவாக இருக்கும் என்ற சிந்தனை வேறு. பார்க்க முயற்சி செய்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
///சமயங்களில் அன்றாட சௌகரியங்களும் ஆபத்தானவை தான்.///
நீக்குஅருமை..
அருமை..
வணக்கம் கமலா அக்கா...
நீக்குஉங்கள் தளத்தில் நான் இடும் கமெண்ட்கள் நீண்ட நாட்களாகவே நிற்பதில்லை. ஸ்பாமுக்கு சென்று விடுகின்றன. சமயங்களில் ஒன்றிரண்டு நிற்கும். மற்ற தளங்களில் இதைச் சொல்லி விடுவிக்கச் சொல்ல முடியும். உங்களுக்கு மெயில் அனுப்பினால் மெயிலும் படிக்க முடியாது என்ற நிலை என்று தெரிய வருகிறது. உங்களைத் தொடர்பு கொள்ள எங்களுக்கிருக்கும் ஒரே சாதனம் அதுதானே...நீங்கள் பேஸ்புக்கிலும் இல்லை.
நேற்றைய மெயிலில் உங்கள் லேட்டஸ்ட் பதிவுக்கு நான் எழுதிய அத்தனை கமெண்ட்ஸையும் - இப்போதிருப்பவை, காணாமல் போனவை உட்பட எல்லாம் - சேர்த்து அனுப்பி இருந்தேன்.
வணக்கம் சகோதரரே
நீக்குதங்களின் பதிலில் விபரம் அறிந்து கொண்டேன்.
என் கைபேசியில் நான் ஆங்காங்கே செல்லும் போது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் நிறைய கணக்கில்லாமல் உள்ளன. நான் எங்கள் பேரன் பேத்திகள் இருக்கும், விளையாடும் வீடியோக்களை விடாது அழிக்க மனமின்றி வைத்துக் கொண்டயுள்ளேன். மகள் "அதில் தேவையில்லாததை எடுத்து விடு. அப்போதுதான் நீ உனக்கு வரும் மெயில்களை பார்க்க முடியும்." எனக் கூறிக் கொண்டேயுள்ளேன். அதில் கொஞ்மேனும் பார்த்து நீக்க வேண்டும். .நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மொபைலில் இருக்கும் படங்களை, வீடியோக்களை மொபைலில் நாம் பொருத்தும் மைக்ரோ எஸ் டி கார்டுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யலாமே.
நீக்குகௌதம் ஜி அவர்கள் கூட ஓசியைப் பற்றி அதிகம் சொல்ல வில்லையே
பதிலளிநீக்குஅப்படியா!
நீக்குஇலவசம் ஒதுக்கீடு இவற்றை காதில் கேட்டாலே உடம்பு எரிகின்றது..
பதிலளிநீக்குஎனக்கும்!
நீக்கு80 களில் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி யில் சேர்வதற்கு ஐயாயிரம்...
பதிலளிநீக்குஅன்றைக்கு அது இல்லாது போனதால் இன்றைக்குப் பிரச்னை..
ஓ
நீக்குஉப்புமா
பதிலளிநீக்குகேள்வி பதில் கள் உப்புமா போலவே !..
புதன் கிழமை
பதிவுக்குள் மிகக் கவனமாக வர வேண்டி இருக்கிறது..
ஊர் வம்பு நமக்கு எதற்கு???
அதானே!
நீக்குஎ.பி.யில் நன்றாக சமைக்கத் தெரிந்த, அதை படங்களோடு சிறப்பாக பதிவிடத் தெரிந்த பெண்கள் இருக்கும் பொழுது கேவலம் அரிசி உப்புமா ரெசிபியை ஒரு ஆணிடம் கேட்க வேண்டுமா?
பதிலளிநீக்குஆ! துடிக்கிறது மீசை! அடக்கு அடக்கு அல்லது அடங்கு என்கிறது ஆசை!
நீக்குஅரிசி உப்புமாவிற்கு தொட்டுக்கொள்ள எனக்கு பிடித்தது. சக்கரை. மற்றும்
பதிலளிநீக்குஉடைத்த வெல்லப்பொடி.
கே. சக்ரபாணி
சின்னக் குழந்தை சார் நீங்க!
நீக்குகேள்வி பதில்கள் ரசித்தேன்.
பதிலளிநீக்குதமனா ....ஹா...ஹா.
Kgg பக்கம் ரசிக்கும்படி இருந்தது.
அரிசி உப்புமாவும் பக்கத் துணைகளும் அலசல் சுவைத்தது.
பாராட்டுக்களுக்கு நன்றி.
நீக்குஅரிசி உப்புமாவிற்கு கொத்ஸு, சுட்டக்கத்தரி கொத்சும் நல்லாருக்கும், ஆனால் புளி சேர்த்ததாக இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குகௌ அண்ணா சொல்லியிருக்கும் அந்த வரமிளகாய் துவையல் சூப்பரா இருக்கும் கௌ அண்ணா. நல்ல கோம்போ
கீதா
நன்றி.
நீக்குஹலோ நெல்லை, கடைசி ஆசைன்னு ஒன்று இருக்கா என்ன? அதான் நீங்களே சொல்லிட்டீங்களே அளவே இல்லைன்னு!!! ஆசைகளுக்கா பஞ்சம்!!! ஹிஹிஹி...வாழ்நாள் விளிம்பில் இருந்தாலும் கூட நமக்கு சுய நினைவு இருந்தால் ஆசைகள் ஒவ்வொன்றாக வரும் வேண்டுமென்றால் அதை 1, 2 என்று வரிசைப்படுத்தி அதில் எது க்டைசின்னு பார்த்துக்கலாம் ஹிஹிஹி!!
பதிலளிநீக்குநம்ம கடைசி எப்பன்னு நமக்கே தெரியாதப்ப...இந்த தூக்குத் தண்டனைக் கைதிகளுக்குக் கடைசி ஆசை ஏதாச்சும் இருக்கான்னு கேட்பாங்கன்னு கேள்விப்பட்டதுண்டு படங்களிலும் பார்த்ததுண்டு. அப்படி மரணம் வந்து நம்மைக் கேட்குமா...கேட்டாலும்...இன்னும் ஒரு ரெண்டு வருஷம் இருந்துவிட்டு வரேனே, இருக்கட்டான்னு கேட்டா கொடுக்குமா!! உயிர் போய் பிழைத்தாங்கன்னு சொல்வாங்களே ஒரு வேளை அவங்களுக்கு அப்படி நடந்திருக்குமோ!!
கீதா
ஆம். சரிதான்.
நீக்குஎனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இது அவரவர்களின் அம்மா செய்து வைக்கும் பழக்கம் காரணமாக வருவது என்பதுதான்.//
பதிலளிநீக்குகௌ அண்ணா அப்படித் தோன்றவில்லை. இது நம் ஜீனில் வருவது பெரும்பாலும். நம் மனமும் ஒரு காரணம் எனலாம். சிறு வயதில் பிடிக்காதவை பின்னர் பிடிக்கலாம் சிறு வயதில் பிடித்தவை பின்னர் பிடிக்காமல் போகலாம்.
நாம் மாற்றிக் கொள்வது என்பது அனுபவம் எனும் போது பிடிக்காமல் அல்லது பிடித்து என்பதை விட சேர்த்துக் கொளல் அல்லது தவிர்த்தல் நலல்து கெட்டது என்ற ரீதியில் நம் ஆரோக்கியத்தின் அடிப்படையில்
கீதா
அப்படியும் இருக்கலாம்.
நீக்குஒரு மனிதன், தன் நாக்குக்குப் பிடித்ததை எந்த வயதில் விடவேண்டும்?//
பதிலளிநீக்குஆசிரியரின் பதில் சூப்பர். நானும் டிட்டோ செய்கிறேன் அதை.
நாக்குக்கு என்பதை விட உடலுக்கு என்பதைப் பழக்கிக் கொண்டால் நலல்துதான் இருந்தாலும் நாமளும் மனுஷங்கதானே! மனசு ஸ்ட்ராங்கா இருக்க வேண்டுமே!!! ஹிஹிஹி
கீதா
நன்றி.
நீக்குநெல்லை, சுஷ்மிதா, ஐஸ்வர்யா ராய் - நீங்க இப்படி யோசிச்சுப் பாருங்க....அவங்க டைட்டில் வின் பண்ணிட்டாங்க....அதை வைச்சுக்கிட்டே ஓட்டிடலாம் பல வருஷங்கள் பல விளம்பரங்கள், நடிப்பு, அது இதுன்னு....வின் பண்ணினதுக்கு அடுத்தும் கலந்துகிட்டு சப்போஸ் டைட்டில் கிடைக்கலைன்னு வைங்க...அப்போ உள்ளதையும் கெடுத்துக்கிட்டது போல ஆகிடும் இல்லையா இதில் ஒரு சுயமரியாதையும் கலந்திருக்கு இல்லையா? ஏன்னா நம்ம மீடியாவும் அப்படித்தானே இருக்கு உச்சத்தில் இருந்தா தூக்கிக் கொண்டாகும் இல்லைனா கீழ தள்ளிவிடும்.
பதிலளிநீக்குகீதா
உண்மை.
நீக்குஓசி ஃப்ரீ - பதில்கள் நன்று.
பதிலளிநீக்குஇதில் சில நல்ல உள்ளங்கள் அவ்வப்போது இலவசமாக எளியவர்களுக்குக் கொடுப்பதை ஃப்ரீ எனலாம் இல்லையா?
கீதா
எனலாம்!
நீக்குகேஜிஎஸ் - சூப்பர் சுவாரசியமான நிகழ்வு.
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதிரு கௌதம் ஜி..
பதிலளிநீக்குவெள்ளையர்கள்
On Compny service என்று தங்களுக்குள் கட்டணம் இல்லாமல் நடத்திக் கொண்ட அஞ்சல் சேவையே பின்னாளில் சுதந்திர இந்தியாவில் O C என்று பல்லைக் காட்டும் பழக்கம் ஆனது..
O C யின் வம்சாவளிகள் தான் இனாம் மாமூல் இலவசம் என்பதெல்லாம்!..
ஆம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
நீக்குமதிப்புக்குரிய கோமதி அரசு அவர்கள் இந்தப் பக்கம் வருவதில்லையே..
பதிலளிநீக்குகோமதி அக்கா தாய்லாந்து பயணம் முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருப்பார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் வலைத்தளங்களுக்கு வருவார். முன்னரே சொல்லக் சொன்னார். நான்தான் மறந்து விட்டேன். மன்னிக்கவும்.
நீக்குபயணம் சிறக்க வாழ்த்துகள்.
நீக்கு