அந்த கிராமத்தில் யாரும் சமைப்பதே இல்லை....
- நன்றி JKC Sir -
===============================================================================================
நான் படிச்ச கதை (JKC)
தம்பி - கௌதம சித்தார்த்தன்
முன்னுரை
கௌதம சித்தார்த்தன் எழுதிய “தம்பி” என்ற சிறுகதை இவ்வார ஆய்வில் இடம் பெறுகிறது. இக்கதை எஸ் ரா வுடைய 100 சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெற்ற ஒன்று.
கதை உளவியல் சம்பந்தப்பட்டது. U K G படிக்கும் பையனின் கற்பனைத் திறனில் வளரும் “தம்பி” யைப் பற்றியது. பையனுடைய கற்பனை முதிர்ந்தவர்களின் கற்பனையை மிஞ்சிய வண்ணம் விரிகிறது.
கதையில் வரும் பாத்திரம் (அப்பா) மூலமாகச் சொல்லப்படும் நடையில் இருந்தாலும், சில சமயங்களில் கதை மூன்றாம் மனிதர் சொல்லும் வகையாக நடை மாறி செல்கிறது. காரணம் அக்காட்சிகளில் கதை சொல்லும் அப்பா இல்லாததால் தான். இப்படி கதை, சொல்லும் முறையில், மூவரின் பார்வையில் விரிகிறது. கதை சற்றே நீளம் அதிகம்.
வாய்மையே வெல்லும் என்பது நம்முடைய விசுவாசம். அந்த வாய்மையை வெளிக்கொணர, பொய்யை உடைக்க ஒரு பொய் மற்றொரு பொய்யை துணைக்கு எடுத்துக் கொள்வது தவறில்லை என்பது தான் கதை. இது
பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்த்த
நன்மை பயக்கும் எனின்.
என்ற குறளை எடுத்துக் காட்டுகிறது.
முழுக் கதையோ, கதைச் சுருக்கமோ தரப்படவில்லை, ஆசிரியர் பற்றிய குறிப்பும் இல்லை. சுட்டிகள் தரப்பட்டுள்ளன.
கதையின் சில பத்திகள் மற்றும் என்னுடைய சில குறிப்புகள் மட்டும் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன. அவசியம் கதையை முழுமையாக வாசிக்கக் கோருகிறேன்.
கதையின் சுட்டி இங்கே
தம்பி - கௌதம சித்தார்த்தன்
கதை கா நா சு இலக்கணப்படி துவக்கம், நடு, முடிவு என்று சீராக அமைந்துள்ளது. வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும்படி ஒரு சம்பவத்தை விவரித்து பின்னர் அதன் காரண காரியங்களைச் சொல்லி, அடுத்து தொடரும் நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டி கதையில் உள்ளவர் (அப்பா) விவரிக்கும் பாணியில் அமைந்த கதைதான் “தம்பி”.
என் யு.கே.ஜி பையன் ஆத்மார்த்தன் அன்றும் வழக்கம் போல தன் தம்பியைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தான். நான் உற்சாகம் முகத்தில் ததும்ப மெதுவாக ரசித்துக் கொண்டிருந்தேன். தம்பி ஸ்டூலில் அமர்ந்து வெட்கத்துடன் நகம் கடித்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த என் மனைவி எங்கள் பேச்சை அலட்சியம் செய்தவளாய் அனாயசத்துடன் ஸ்டூலைத் தூக்கினாள். உடனே, “அய்யய்யோ… அம்மா அம்மா, அதில தம்பி உக்காந்திருக்காம்மா…” என்று அலறியடித்துக் கொண்டு வந்து அவள் கைகளைப் பிடித்தான் ஆத்மா. “வேற வேலையே கெடையாதா அப்பனும் மகனுக்கும்… போடா அந்தப்பக்கம்…” என்று ஆத்மாவை நெட்டித் தள்ளி விட்டு ஸ்டூலைத் தூக்கிக் கொண்டு போய் விட்டாள்.
ஆத்மா கீழே விழுந்து கிடந்த தம்பியைப் பதட்டத்துடன் தூக்கி நிறுத்தி என் மடியில் உட்கார வைத்தான். நான் பதனத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன். “தம்பி, அடிபட்டுச்சா… வலிக்குதா…?” ஏன்று கனிவாகக் கேட்டபடி தோளை உடம்பை எல்லாம் நீவி விட்டான். “அழுகாதே… இனிமே அம்மாவோட டூ… பேசவே கூடாது… அழுவாத ஸாமீ….” என்று ஆறுதல் கூறினான்.
இப்படி ஆரம்பிக்கிறது கதை. திகைத்து அமானுஷ்யம் வகையைச் சார்ந்ததோ கதை என்று நினைக்கும் முன் வருகிறது பிளாஷ் பேக்.
தம்பி பிறந்த கதை அற்புதமான கதை.
என் மனைவி தம்பியை வயிற்றுக்குள் வைத்துக் கொண்டிருந்த ஒரு நாள்.
இருள் மெல்ல கவிந்து கொண்டிருந்த வேளையில் என் மனைவி கட்டிலில் படுத்திருந்தாள்.
“வயித்துமேலே ஏறாதடான்னா பாரு. மறுபடியும் மறுபடியும் வந்து ஏர்ரே… அடி வேணுமா?”
“ஏ… வயித்துமேல ஏறினா என்னவாம்? நான் அப்பிடித்தான் ஏறுவே…” என்றபடி வயிற்றில் கால் வைக்க, என் மனைவி சட்டென காலைப் பிடித்து தூக்க, அவன் பொத்தென்று கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தான்.
நான் எழுந்து போய் அவர்களருகில் உட்கார்ந்து கொண்டு, ராஜா, அம்மா வவுத்துக்குள்ளே குட்டிப்பாப்பா இருக்கிறா… நீ மிதிச்சா அவளுக்கு வலிக்குமா இல்லியா…?” என்று அவன் முகத்தருகில் செல்லமாகச் சொல்லி கன்னத்தை நிமிண்டினேன். என் மனைவி சட்டென அவன் முகத்தை தன்பால் திருப்பி, “குட்டிப்பாப்பா இல்லடா… குட்டித்தம்பி…” என்றாள். இது குறித்து இருவருக்கும் தினமும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
ஆத்மா மெல்ல அழுகையை நிறுத்தியவாய் ஆர்வத்துடன் கேட்டான். “அம்மா தம்பி எப்பிடிம்மா இருப்பான், உம்மாதிரியா எம்மாதிரியா அப்பா மாதிரியா?”
“உம் மாதிரிதான் என் ராசா…”
இப்படி வயிற்றில் வளரும் தம்பியைப் பற்றியும், அவன் செய்யப்போகும் குறும்பு சேட்டைகளை பற்றியும் கூறி தம்பி பிறக்கும் நாள் எதிர்பார்த்து நிற்கும் போது
“அம்மா அம்மா… தம்பியை எறக்கி உடும்மா… நாங்க வெளையாடறோம்…” என்று எழுந்து உட்கார்ந்து கொண்டான்.
என்னிடமிருந்து குபீரென்று வெடித்துச் சிதறிய சிரிப்பால் என் மனைவி சங்கடத்துக்குள்ளாகி நெளிந்து கொண்டு சிரித்தாள்.
“அம்மா அம்மா, எறக்கி உடுமா…” என்று காலைப் பிடித்துக் கொண்டு சிணுங்கினான் ஆத்மா.
நான் அவனை அணைத்துக் கொண்டு “ராஜா… தம்பி எறங்கறதுக்கு இன்னும்…” மனசுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து, “ஏழுமாசம் ஆகும்… அப்பறமா வெளையாடலாம்…” என்றேன்…
“கண்ணா, தம்பி தூங்கீட்டிருக்கான்.. நாளைக்குத்தான் எந்திரிப்பான்… நாளைக்கு எந்திரிச்சதும் அப்பறமா தம்பியோட வெளையாடலாம்… என்ன செரி தானா…?” என்றேன். அவன் உடனே அழுகையை நிறுத்திக்கொண்டு அம்மாவின் அடிவயிற்றில் காதை வைத்து உற்றுக் கேட்டான்.
அடுத்த நாள் செண்டிமெண்டாய் தம்பி இறங்கி விட்டான். என் மனைவிக்கு கருச்சிதைவு ஆகிவிட்டது. அவள் காலையில் விஷயத்தை வருத்தத்துடன் தெரிவித்த போது எனக்கு அதிர்ச்சியில் ஊடலெங்கும் அதிர்ந்தது. கனவுகள் கனவுகளாகவே போய் விட்ட துயரம் உள்ளமெங்கும் விரவி உஷ்ணத்தைப் பாய்ச்சியது மனசு வரண்டு போய் சோகத்தின் துயர வலைக்குள் உழன்று கிடந்த நேரம் வந்து காலைக் கட்டிக் கொண்டான் ஆத்மா.
“அப்பா அப்பா… தம்பி எங்கப்பா?”
கண்களில் நீர் விசுக்கென தளும்பி நின்றது. முகத்தை வேறு பக்கம் திருப்பி மறைத்துக் கொண்டு அவனைப் பார்த்தேன். அவனைப் பார்த்தால் தூங்கி எழுந்து வந்தவன் போல முகம் சோபை இழந்து சோம்பல் முறித்துக்கொண்டு இல்லாமல், முகமெங்கும் ஆர்வத்தின் தேஜஸ் வழிந்துகிடக்க கைகால்களை துரு துருவென்று உற்சாகம் கலந்த பதட்டத்துடன் நின்றிருந்தான். என் மௌனம் அவன் பரபரப்பை அதிகப்படுத்தவே அம்மாவிடம் தாவினான்.
“அம்மா அம்மா, தம்பியை ஏறக்கி உட்டியா? எங்கம்மா தம்பி?” அவள் காலைக் கட்டிக்கொண்டு குதித்தான். என் மனைவியின் அழுகை ஆத்திரமாக மாறிற்று.
“போடா சனியனே… நீ வாய் வெச்சதிலே தான் இப்படியாய்டிச்சி…” என்று அவனை இழுத்துத் தள்ளி விட்டாள்.
அவன் தடுமாறி விழுந்து திக் பிரமை பிடித்தவனாய் அழ ஆரம்பித்தான்.
“தம்பி வெளையாடப் போயிருக்காம்பா… அவன் வந்ததும் நாம மூனு பேரும் வெளையாடுவோமா…ம்..?” என்றேன்.
அதுதான் நான் செய்த பெரிய தப்பு.
“உன்பாடு உங்கப்பா பாடு” என்று அவள் சமையலறைக்குப் போய் விட்டாள். நான் அவனைக் கூட்டிக் கொண்டு வெளியே கிளம்பும்போது என்னுள் ஒரு ஐடியா பளீரிட்டது.
“இதபாரு தம்பி வந்துட்டாம் பாரு….”என்றேன் கண்களில் அற்புதம் விரிய.
ஆத்மா ஆர்வமாக “எங்கே எங்கே” என்று கேட்டபடி சுற்று முற்றும் பார்த்தான்.
“இதபாரு. அட இங்கே பாரு…” என்று வெற்றுவெளியில் கைகளைத் துழாவி பையனைத் தூக்குவது போல பாவனை செய்து அந்தரத்தில் தூக்கிப் பிடித்துக் கொஞ்சினான்.
“டேய் தம்பி… ஆதுக்குள்ளே வெளையாடிட்டி வந்துட்டியா? திருட்டுப்பயலே, கிரிக்கெட் வெளையாடினயா? இதென்னடா தலையெல்லா ஒரே மண்ணு புழுதி… ப்பூ..ப்பூ..” என்று காற்றுக் கூட்டி ஊதிவிட்டேன்.
“என்ன சாமிநாதனை அடிச்சிப் போட்டியா? ஹ்ஹ்ஹ்ஹா ஆமா ஆத்மாவை உட்டு நீ மட்டும் எப்பட்றா வெளையாடப் போனே…? பாரு…நீ உட்டு வெளையாடப் போயிட்டேன்னு ஆத்மா அழுதிட்டிருக்காம் பாரு… இனிமேல் அவனை உட்டு வெளையாடப் போகாதே…” என்றபடி முகத்தில் பல்வேறு விதமான பாவனைகளுடன் கொஞ்சி… “எங்கே அப்பாவுக்கு ஒரு முத்தம் குடு… ம்… ஆத்மாவுக்கு…” என்று அவன் பக்கம் திருப்ப, அவன் வினோதமான ஆர்வத்துடன் முகத்தை நீட்டி முத்தத்தைப் பெற்றுக் கொண்டான்.
பின்வந்த நாட்களில் தம்பியை அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்குப் போனான். தம்பி பறித்துக் கொடுத்ததாக கொய்யாப்பழங்கள் கொண்டு வந்து கொடுத்தான். தம்பியை சின்ன சைக்கிளிலே வைத்துக் கொண்டு தெரு முழுக்கச் சுற்றினான். ‘தம்பி வீணாக சண்டைக்குப் போகமாட்டான் என்றும், வந்த சண்டையை விடமாட்டான் என்றும், தன்னோடு மல்லுக்கு நின்ற சாமிநாதனையும் மற்ற எதிராளிகளையும் அடித்து விரட்டி விட்டதாகவும்’ பெருமை பிடிபடக் கூறினான். ‘
என் மனைவி, “நீங்க கெட்டது போதாதா? பையனையும் பைத்தியக்காரனாக்கனுமா?” என்று சத்தம் போட்டாள். ஆத்மா அடம் பிடிக்காமல் சோறு தின்ன, பாடம் படிக்க தம்பி உபயோகப்பட்டதால் அவளும் சகித்துக் கொண்டாள்.
அரூபமான கடவுளை துதிக்கவே நமக்கு ஒரு உருவம் தேவைப்படும்போது அரூபமான கற்பனைத் தம்பியை ஒரு U K G பையன் சீராட்டுவது என்பது சற்றே மிகை. ஒரு பொம்மை என்பது போன்று ஏதாவது இருந்தாலாவது ஒத்துக்கொள்ளலாம்.
நாளாக நாளாக விசித்திரமான நிகழ்ச்சிகளையெல்லாம் கூற ஆரம்பித்தான்.
எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பயம் ஏற்பட ஆரம்பித்தது. என் அறைக்குள் நுழைந்து என்னுடைய புஸ்தகங்களையோ, மற்ற விஷயங்களையோ தொடக் கூடாது என்றும் ஒழுக்கமாக பாடப் புத்தகங்களை மட்டுமே படிக்க வேண்டும் என்றும் எச்சரித்து விட்டேன்.
பழைய சமையலறையைச் சுத்தம் செய்து தன் அறை என்றான். அவனுடைய சமாச்சாரங்களையெல்லாம் அதில் ரொப்பிக் கொண்டான்.
இது எங்கு போய் முடியும் என்று பயம் மண்டையை உலுக்கும்.
கதை போக்கின் இடையில் ஆத்மா தம்பி செய்யும் கற்பனை செயல்களை கூறும் சில சம்பவங்கள் கதையில் உள்ளன.
நான் அவன் அறைக்குள் பிரவேசித்தபோது இன்னும் தம்பியை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான்.
“ஆத்மா, மார்க்கெட் வர்ரியா?” என்றேன்.
“அட அவகெடக்கறா… நாம மார்க்கெட் போலாம் வா… போ போயி டரஸ்சேஞ்ச் பண்ணீட்டு ரண்டு பேரும் வாங்க போங்க…”
தம்பியையும் சேர்த்துக் கொண்டதில் ஆத்மாவுக்கு ஒரே குஷி. “இருப்பா வந்திடறோம்…” என்று வீட்டுக்குள் ஓடினான்.
அறையைப் பார்வை விட்டேன். சுவரில் ஆணியடித்து தோள் பை மாட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழே பாடப் புத்தகங்கள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அதன் ஓரத்தில் விளையாட்டுச் சாமான்கள்.
மூலையோரத்தில் சின்ன சைக்கிள் கம்பீரமாக நிறுத்தப்பட்டிருந்தது. வலது பக்க ஓரத்தில் களிமண் கொட்டியிருக்க பக்கத்திலிருந்த சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த தண்ணீர் மரக்கலரிலிருந்தது. அதன் ஓரத்தில் சதுரவாக்கில் பலகையாக ஒரு கருங்கல்… அதில் களிமண் படிந்திருக்க அதனடியில் முடிந்தும் முடிக்காமலும் களிமண் பொம்மைகள் சிதறியிருந்தன. ஆத்மா வந்து சேர்ந்தான்.
“ஏப்பா போலாமா?”
“ஆத்மா, பொம்மையெல்லாம் செய்வியா? எனக்குக் காட்டவேயில்லே…”
“இல்லப்பா இதெல்லாம் தம்பி செஞ்சது…”
“ஓ… செரி எங்கே பாக்கலாமே…” பொம்மைகளை நோட்டம் விட்டுக் கொண்டே வந்தவன் ஒரு பொம்மை வித்தியாசமாய்த் தெரியவே எடுத்துப் பார்த்தேன்.
“இதென்ன பொம்மை?”
“அது ஒத்தக் கண்ணுப் பிச்சைக்காரன்”
குச்சி குச்சியான இரண்டு கால்கள்; கால்களுக்கு மேல் ஒரு மனிதத்தலை; முகத்தில் தாடியும் மீசையும் கீறப்பட்டடிருந்தது; ஒரு கண் இருந்த இடத்தில் வெறும் குழி. தலைப்பகுதியிலிருந்து இரண்டு கைகள் குச்சிகளைப் போல முன்னால் நீட்டிக் கொண்டிருக்க கைகளின் மணிக்கட்டுப் பகுதியிலிருந்து… கமண்டலம்தானே அது…? முளைத்திருந்தது. ஹா… உடலெங்கும் புல்லரித்தது. பிரமித்துப் போனேன்.
ஓரிரு நிமிஷங்கள் வெறித்தபடி நின்றிருந்தவன்,
“இந்த பொம்மைக்கு மட்டும் வயிறு மட்டும் வெச்சிருந்தா அற்புதமா இருந்திருக்கும்…” என்றேன்.
“அதுவா… அவன் கையில கழட்டி வெச்சிருக்கானே… அதான் வயிறு”
என் மண்டைக்குள் சம்மட்டி அடி விழுந்தது. அவனைப் பற்றி ஏதேதோ விவரிக்க முடியாத ரூபங்கள் மனமெங்கும் வியாபித்துத் திரிந்தன. ஜீனியஸ் ஆஃப் தி ஏஜ்.
“தினமும் இந்தப் பிச்சைக்காரனை ஸ்கூலுக்கு போரப்ப வாரப்ப பாப்பம். ‘வயித்துக்கு ஏதாச்சும் போடுங்க தரும தொரே…’ ம்பான்; அவனோட பேச்சு வயித்தையே கழட்டி கைல புடிச்சிருக்கிற மாதிரி தெரியும்…”
எனக்கு உடனே அவனுடைய எல்லாப் பொம்மைகளையும் பார்க்கவேண்டும் போல ஆர்வம் பரபரத்தது, சம்மணமிட்டு நிலத்தில் உட்கார்ந்து கொண்டேன்.
அவனைத் தினம் ஸ்கூலுக்கு சுமந்துபோகும் சைக்கிள் ரிக்ஷாவும், ரிக்ஷாக்காரனும்; கிரிக்கெட் மட்டையுடன் ஒரு பையன்; மாடுகள் இல்லாமல் அவிழ்த்த விடப்பட்ட வண்டி; மிட்டாய் விற்கும் கூடைக்காரக் கிழவி; மனிதத் தலைகள், கைகள், வண்டிச் சக்கரங்கள்… ஒரு மனிதத் தலையை கையில் எடுத்து, “இதுதான் தம்பி…” என்றான் ஆத்மா.
ஆயாசத்துடன் நீண்டதொரு பெருமூச்சு கிளம்ப அதிலிருந்து மீண்டபோது வேறொரு பயம் சேர்ந்து கொண்டது. ‘இவன் ஸ்கூல் வாழ்க்கை எப்படி இருக்கிறது?’
“ஆத்மா, நேத்திக்கு உங்க மிஸ் என்ன பாடம் நடத்தினாங்க…”
“தெரியலேப்பா, நான் ஸ்கூல் போய் ஒரு வாரமாகுது”
சாட்டையின் நீண்டநாவுகள் உடம்பெங்கும் சொடுக்கி எடுத்தன. ரோட்டில் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டேன்.
“என்ன… என்ன சொன்னே? ஸ்கூலுக்குப் போறதில்லையா அடப்பாவி… பின்னெங்கடா போறே?”
ஆத்மா அம்மாவிடம் சொன்னான். “தம்பி கிம்பியெல்லாம் பறந்துடுவீங்க… ஏண்டா அவ்வளவு திமிரா? ஸ்கூல் பிடிக்காம போய்டிச்சா? ஒழுங்கா ஸ்கூலுக்குப் போகாட்டி சூடு போட்ருவேன்… கழுதை…” என்று கோரத் தாண்டவமாடவே தம்பி ஆத்மாவை அடக்கி விட்டான். இருவரும் ஒழுங்காக நல்ல பிள்ளையாய் ஸ்கூல் போனார்கள்.
இதுவரை ஆத்மாவின் அப்பா சொல்வது போன்று இருந்த கதை தற்போது ட்ராக் மாறி மூன்றாம் மனிதர் பார்வையில் சொல்லப்படுகிறது,
ஆத்மாவும் தம்பியும் மட்டும் வெளியே கால்போன போக்கில் நடந்தார்கள். சற்று தூரத்தில் பூங்கா ஏதிர்ப்பட்டது. அதன் அமானுஷ்ய தோற்றமும், பறவைகளின் சீச்சொலியும் பச்சைப் பசேலைப் போர்த்திக் கொண்டு ஆகாயத்தை நோக்கி சரேலித்திருந்த மரங்களின் கிளைகளும் அசைந்து அசைந்து வரவேற்றன.
யாருமேயில்லாத ஒரு இடம் தேடி புல்வெளியில் அமர்ந்து அந்த இடத்தின் அற்புதத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள். வகுப்பறையின் தூங்குமூஞ்சி சுவர்களைப் பார்த்து அலுத்துப் போன கண்களுக்கு அந்த இடம் கிடைத்ததற்கரிய அற்புதமாய்த் தெரிந்தது.
“எவ்வளவு அற்புதங்களை இழக்க இருந்தோம்” என்றான் தம்பி.
“ஆமாம் இன்னும் எவ்வளவோ அற்புதங்கள் வெளியே இருக்கக் கூடும்” என்றான் ஆத்மா.
அப்பொழுது ஆத்மாவின் தோளில் ஒரு கரம் மெல்லிய பீலியாய் விழுந்தது. திரும்பிப் பார்த்தால், எதிரே தும்பைப் பூவைப்போல நரைத்த தலையுடன் ஒரு பெரியவர் பளீரிட்ட பற்களைக் காட்டி குறுநகை புரிந்தார். அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்தவர் போலிருந்தது. கேசத்தில் நீர் ஸ்படிகத்துளிகளாய் மின்னியது. கேசத்தை மேலே தூக்கி வாரி நடு நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்திருந்தார். முகம் மொழு மொழுவென்று உருண்டையாய் தேஜஸ் மின்னியது. கைவரை மூடிய ஜிப்பாவும் கால்வரை வேஷ்டியுமாய் தூயவெண்மையாடை தரித்து மின்னற் குமாரன் போல காட்சியளித்தார். அழுக்கு மனிதர்களைப் பார்த்து அருவருப்படைந்த கண்களுக்கு அவரை ஒற்றிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. (JK யை விவரிக்கிறாரோ? ஆசிரியர் JK (ஜே கிருஷ்ணமூர்த்தி) பிரியர்.)
“என்ன தம்பி, ஸ்கூலுக்கு போகலியா…?” என்றார் பெரியவர். “என்ன டீச்சர் அடிச்சிட்டாங்களா?”
ஆத்மா இல்லை என்று தலையாட்டினான்.
“ஏன் ஸ்கூலுக்குப் போகலே?”
“ஸ்கூல எங்களுக்குப் பிடிக்கலே”
பெரியவர் ஆத்மாவைத் தூக்கி மார்போடு தழுவிக் கொண்டார். தம்பி சொன்னான்.
“ஸ்கூல்ல எங்களுக்குப் படிக்கறதுக்கு ஒண்ணுமேயில்லே…”
பெரியவர் அதிசயத்துடன் கண்களை அகல விரித்தார். அவர் இதழ்களின் கடைக் கோடியில் புன்முறுவலொன்று நழுவி ஓடியது.
“வாஸ்தவம்தான்… நீ ஸ்கூல்ல படிக்கறதுக்கு ஒண்ணுமேயில்லே… வெளியில படி சூரியனுக்குக் கீழேயிருக்கிற இந்த உலகத்தில படிக்கறதுக்கு நிறைய இருக்கு… அந்த கிளாஸ் ரூம்ல நேரத்தை வீணாக்கிட்டு இருக்காதே…”
ஆத்மாவின் கேசத்தைக் கோதி உச்சி முகர்ந்து மெல்லிய ஒரு முத்தம் கொடுத்து விட்டு எழுந்து, தலையை ஆட்டி விட்டு, மெல்ல நடந்து கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போனார்.
ஒவ்வொரு நாளையும் புதிய புதிய கோணத்தில் அனுபவிப்பது, சாயங்காலம் ஸ்கூல் விடும் நேரத்தில் வந்து ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு வீட்டுக்கு வந்து தங்கள் அறைக்குப் போய் ஓவியங்கள் வரைவது, களிமண் பொம்மைகள் செய்வது… என்றெல்லாம் தினமும் அவன் சந்தித்த நிகழ்வுகள், மனிதர்கள், நூலகத்தில் போய் படித்த – படம் பார்த்த – புத்தகங்கள் என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டே போனான்.
மீண்டு வந்த கதையாக அப்பாவின் வாக்குகளில் கதை சொல்லல் திரும்புகிறது.
எனக்கு பயம், கோபம், ஆத்திரம் அத்தனையும் ஒருசேர வெடித்தது. “வாயை மூட்றா கழுதை… தம்பியுமில்லே மண்ணாங்கட்டியுமில்லே… ஏண்டா ஸ்கூலுக்குப் போகச் சொன்னா ஊர் சுத்திட்டு வர்ரியாடா ராஸ்கல்”
நான் ஒருநாளும் அவ்வாறு கண்டித்ததில்லையாதலாலும், தம்பி இல்லை என்று அதிர்ச்சியடைய வைத்தாலும் ஆத்மா ஒரேயடியாய் பயந்து போய் கண்கள் சொருகிப் போய் கீழே விழுந்தான். நான் பதறிப் போனவனாய் அவனைத் தூக்கி “ஆத்மா, ஆத்மா,” என்று கூவினேன். பையன் மயங்கிக் கிடந்தான்.
அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கூட்டம் கூடி விசாரித்தார்கள்.
“ஒண்ணில்லீங்க… வெயில் பாருங்க கொளுத்தது… 108 டிகிரி நமக்கே ஒருமாதிரி இருக்குது… சின்னக் குழந்தைக்கு கேக்க வேணுமா… மயக்கம் போட்டான் போல…”
ஆத்மா கண் விழித்ததும் ‘தம்பி தம்பி’ என்று என்னென்னவோ உளறினான். “தம்பி இருக்காம்பா… இதபாரு நின்னிட்டிருக்காம் பாரு…” என்று அவனுக்குத் தண்ணீர் காட்டினேன். “நீ தம்பி இல்லேன்னு சொன்னேயில்லே… நீ என்னோட பேச வேண்டாம் போ…”
“இல்லைடா ராஜா… நான் சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன். இத பாரு தம்பி… நீ மயங்கி விழந்துட்டேன்னு அழுவுறாம்பாரு… வா எந்திரி போலாம்…” சட்டென்று அவனை கூட்டிக் கொண்டு நடந்தேன்.
வீடு திரும்பும் போது ஓயாமல் உழலவைக்கும் குழப்பங்களைப் போக்க டக்கென்று ஒருயோசனை தோன்றியது. அந்த நிமிஷத்தில் உடலெங்கும் பதட்டமும் பரபரப்பும் ஊர்ந்து நெளிந்தது.
எதிரில் பஸ் வந்தது. சாலையின் ஓரத்தில் ஒதுங்கினோம்.
அடுத்த கணம், “ஆ… அய்யய்யோ தம்பி பஸ்ல உழுந்திட்டானே…” என்று கத்தினேன். ஆத்மா சற்று தாமதித்து அந்த பயங்கரத்தைப் புரிந்து கொண்டு “ஐயோ ஐயோ” என்று அலறினான்.
பஸ் தம்பியின் மீதேறிப் போயேபோய்விட்டது. நான் ஓடிப் போய் நடுரோட்டில் மண்டியிட்டு அமர்ந்து, “ஆத்மா, தம்பி செத்துப்போயிட்டானே… ஐயோ, ஐயோ…” என்று அழுதேன்.
ஆத்மா ஓ வென்று அழ ஆரம்பித்தான்.
சுட்டியில் சென்று கதை முழுதும் வாசிக்கக் கோருகிறேன்.
நன்றி – அழியாச்சுடர்கள்
சுட்டிகள்: =====>அழியாச்சுடரில்<=====
ஆசிரியர் bio: சுட்டி ====> ஆசிரியர் <====
ஆசிரியரின் blog : சுட்டி =====> கௌதம சித்தார்த்தன்
ஆசிரியரின் email : unnatham@gmail.com
தம்பி கதை ஒலி வடிவில் : https://youtu.be/u9hMYsPRmnc
குஜராத் சமுதாய சமையலறை..... தமிழகத்தில் நெல்லைப் பகுதியில் இத்தகைய கிராம்ம் இருக்கிறது, அங்கு உணவு ஒவ்வொரு வேளையும் அந்த அந்த வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டுவிடுகிறது, ஆரோக்கிய சமையல் என்றெல்லாம் சில வருடங்களுக்கு முன்பே படித்தேனே.இதுபோல பாண்டிச்சேரியிலும், முதியவர்களுக்கான உணவு டெலிவரி ஒவ்வொரு வேளையும் நடைபுறுகிறது (பைக்குல் சென்று வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்கிறார்கள்) இரண்டாவது, கமர்ஷியலானது, முதலில் சொன்னது கிராம்ம் முழுமைக்கும் சமுதாய சமையலறைக் கூடத்தில் தயார் செய்வது.
பதிலளிநீக்குஅடுத்த தலைமுறை வெளிநாடுகளில் பணி புரிவதால், வயதானவர்களைப் பார்த்துக்கொள்வதும், அவர்களுக்கான உணவும் ஒரு சவாலாக அமைந்துவிடுகிறது. இத்தகைய ஏற்பாடுகள் உதவியாக இருக்கும் (உடல்நிலை சரியில்லையென்றால் நர்ஸ், மருத்துவ சேவை உட்பட). அதற்குத்தான் வயதானவர்கள் கூடி வாழும் குடியருப்புகள் பல ஏற்பட்டுள்ளன.
பதிலளிநீக்குவாவ்! குஜராத் சாந்தங்கி கிராமம் எடுத்துக்காட்டு. Old Age Village (Home) என்று சொல்லலாமோ!!! நல்ல விஷயம். தென்னகத்தில் தின்னவேலில இப்படி இருப்பதாக என் அத்தை பெண் சொல்லியிருக்கிறாள் அந்த ஊரின் பெயர் மறந்துவிட்டது.
பதிலளிநீக்குகீதா
தலைவாசல் விஜய் மகளைப் பற்றி அறிந்ததுண்டு. பாராட்டுகள் மகளுக்கும் ஆனால் அதை விட ஒரு சிறந்த தந்தையாக இருக்கும் தலைவாசல் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். நான் பார்த்த அறிந்த வரையில் இவர் குழந்தைகளை மிகச் சிறப்பாக வளர்த்திருக்கிறார் ஒரு நல்ல தந்தையாக. சினிமா உலகில் இருந்தும் கூட மிகச் சிறந்த பெற்றோர். இவர் பல சமயங்களில் போட்டிக்கு அழைத்துச் செல்ல கஷ்டப்பட்டிருக்கிறார் என்று சொல்லியிருந்ததும் நினைவு இருக்கு குறிப்பாகப் பணத்திற்கு. இம்மாதிரி போட்டிகளுக்குப் பணம் நிறைய செலவாகும். ஆனால் கடன் வாங்கும் வழக்கம் கிடையாது. நல்ல சப்போர்ட்டிவ் மனைவி. பல செலவுகளைக் குறைத்துக் கொண்டு குழந்தைகளுக்காகச் செய்தவங்க.
பதிலளிநீக்குகீதா
நல்ல வித்தியாசமான உளவியல் ரீதியிலான கதைக்கரு...நல்லா சொல்லியிருக்கிறார். பெற்றோரின் பதில்கள் குழந்தையை எப்படி உருவாக்கலாம் என்பதான பல விஷயங்களை கதை போகிற போக்கில் இயல்பாகச் சொல்லியிருக்கிறார் கதாசிரியர்.
பதிலளிநீக்குகீதா
ஆனால் இனி ஆத்மாவிடமிருந்த கிரியேட்டிவிட்டியும் மெச்சூரிட்டியும் காணாமல் போய்விடுமோ...
பதிலளிநீக்குஒன்று வந்தால் ஒன்று போமோ...
யெஸ் ஸ்ரீராம்....அதே தான் அடுத்த கருத்தில் ஒன்றில் சொல்லியிருப்பேன் பாருங்க.
நீக்குகீதா
ஆனால் சரியாகக் கையாண்டால் அதனை எழுப்பிவிட்டுவிடலாம்.
நீக்குகீதா
தம்பி இறந்துவிட்டான் எனும் போது அந்த அறிவு அதிகமான அக்குழந்தை நத்தை/ஆமை போன்று தனக்குள் சுருங்கிடவும் வாய்ப்புண்டு.//
நீக்குகீதா
கதையில் loophole. கருச்சிதைவு என்றால் மனைவி ஆஸ்பத்திரிக்குச் செல்லாமல் (ஜஸ்ட் மாதவிடாய் தள்ளிப் போனதால் கருவுற்றல் என்று நினைத்திருந்தாலும் கூட மருத்துவமனைக்குச் சென்றிருக்க வேண்டும்!) அவள் அடுக்களைக்குள் சென்றதாக வரி வருகிறது.
பதிலளிநீக்கு//போகும் வழியில் ஆத்மாவுடன் ஏதும் பேசவில்லை. அவனும் தம்பியும் உரையாடிக் கொண்டு வந்தார்கள். எனக்குள் அவனைப் பற்றிய சூட்சும ரூபங்கள் தனக்குள் பயங்கரத்தை புதைத்துக் கொண்டு பிரம்மாண்டமாய் விரிந்து படர்ந்தன. அவனை நினைத்துப் பெருமைப் படுவதா அல்லது கவலை கொள்வதா என்று விளங்காமல் உள்ளுக்குள் ஒரு போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆயாசத்துடன் நீண்டதொரு பெருமூச்சு கிளம்ப அதிலிருந்து மீண்டபோது வேறொரு பயம் சேர்ந்து கொண்டது. ‘இவன் ஸ்கூல் வாழ்க்கை எப்படி இருக்கிறது?’//
இந்த இடத்தில்தான் பையனப் பற்றிய பிரச்சனை வருகிறது.
குழந்தைகள் கற்பனைக் கதாபாத்திரங்கள் படைத்து அதோடு உரையாடுவது விளையாடுவது போல தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதுண்டு. (பல பிள்ளைகள் கூட வீட்டில் டீச்சர் போல தன்னை உருவகப்படுத்திக் கொண்டு தன் எதிரில் மாணவர்கள் இருப்பது போல பாவித்து விளையாடுவைதைப் பார்த்திருக்கலாம்) இது நல்லதுதான் இது பல social skills ஐ வளர்க்க உதவும், உரையாடல், தன் கருத்தைச் சொல்லும் தைரியம், சிந்தனை போன்றவற்றை...ஆனால் அது எல்லை மீறும் போது தனிமையை விரும்பும் போது பிரச்சனை.
//ஸ்கூலில் ஒரே மாதிரி தினமும் போய் உட்கார்வதும், டங் டங்கென்று மிஸ் வந்து ஏ,பி,சி,டி சொல்லச் சொல்வதும் அவர்கள் ஒப்பிப்பதும் ரைம் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதும் எழுதிக் காட்டச் சொன்னால் எழுதிக் காட்டுவதும் மறுபடியும் மறுபடியும் இதேதானா என்று தம்பிக்கு ஒரேயடியாய் சலித்துப் போய்விட்டது. ‘உனக்கு சலிப்பாக இல்லையா’ என்று ஆத்மாவைக் கேட்டேன். அப்பொழுது தான் அவனுக்கும் உறைத்தது. தனக்கும் சலிப்பாகிக் கொண்டு வருகிறதென்று. //
இது ஆத்மாவுக்குத்தான் சலிப்பு....அதைத் தம்பி எனும் தன்னுள் இருக்கும் இன்னொரு பெர்சனாலிட்டு மூலமாகத் தீர்த்துக் கொள்கிறான். ஆத்மா நார்மல் புத்திசாலித்தனத்தை விடக் கொஞ்சம் அதிகம் புத்திசாலிப்பையன் அதனால்தான பள்ளியில் அவனுக்கு இருப்பு கொள்வதில்லை. அவனை நார்மல் உலகில் செயல்பட வைப்பது கொஞ்சம் கடினம்...
“தம்பி கிம்பியெல்லாம் பறந்துடுவீங்க... ஏண்டா அவ்வளவு திமிரா? ஸ்கூல் பிடிக்காம போய்டிச்சா? ஒழுங்கா ஸ்கூலுக்குப் போகாட்டி சூடு போட்ருவேன்... கழுதை...” என்று கோரத்தாண்டவமாடவே தம்பி ஆத்மாவை அடக்கி விட்டான். இருவரும் ஒழுங்காக நல்ல பிள்ளையாய் ஸ்கூல் போனார்கள்.//
ஒன்றை அடக்கும் போது மற்றொன்று மேலெழும். சமத்தாக இருப்பது போல இருந்தாலும் இரண்டு மனமும் தனிமையில் செயல்படும் தன் இயல்பை செயல்படுத்தும் அதான் அந்தப் பூங்காவில் அந்தப் பெரியவர் வருவது இதெல்லாம் பையனுக்குள் இருக்கும் அடுத்த கேரக்டர். அவன் மனம் இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று விழையும் விதம்...இந்த உலகைப் பார்க்கும் விதம் -
இதில் மூன்றாவது பார்வையில் சொல்லும் இடம் வந்த பிறகு மீண்டும் அப்பா சொல்வது போன்று வரும் இடம் சரியாக ட்ரான்ஸ்ஃபார்ம் ஆகவில்லை என்று தோன்றுகிறது. அல்லது அங்கு அவர்கள் ஸ்கான் அலல்து தட்டச்சும் போது விட்டுப் போயிருக்கா என்று தெரியவில்லை.
இரு கேரக்டர்கள் ஒரு குழந்தைக்குள்....மூன்றாவதும் அந்தப் பெரியவர்... ....அதனால்தான் அப்பா கோபித்துக் கொள்ளும் போது அப்படி மயங்கிவீழ்கிறான்.
அக்குழந்தையின் இந்த நிலைக்குக் காரணம் ஆத்மாவின் பெற்றோர்தான்...அவன் கேட்கும் கேள்விகளுக்கு இவர்கள் சொன்ன பதில்கள்...உண்மையை குழந்தை புரிந்து கொள்ளும் பாணியில் சொல்வது என்றில்லாமல்...அதுவும் அவன் அறிவு தெரிந்திருந்தும், வேறு பயிற்சிகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதுதானே கதை. இப்படியும் இருக்கு என்று சொல்வதுதான் ஆசிரியரின் கதை.
ஆனால் அப்பா தம்பி பஸ்ஸில் அடிபட்டதாக நினைத்து அழுவது போல் நடித்து ஆத்மாவின் தம்பியை அவன் மனதிலிருந்து அகற்றிவிட்டதாக நினைத்தாலும், ஆத்மா ஓ வென்று அழுதான் என்று கதை முடிந்திருந்தாலும் அக்குழந்தையின் பிரச்சனை தீரவில்லை.
கதைக்கரு நன்றாக வித்தியாசமாக உளவியல் ரீதியில் நல்லாருக்கு என்றாலும் இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து? இல்லை அதை எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியலை...ஆனால் சொல்லியிருக்கலாம் என்று தோன்றினாலும் கதை நல்லாருக்கு வித்தியாசமாய்
கீதா
இப்படிப்பட்ட வித்தியாசமான உளவியல் கதையை எழுதுவது மிகக் கடினம். ஆசிரியர் கதையை சொல்வதில் பெற்ற வெற்றி கதை நாயகனை தேர்ந்தெடுத்தில் இல்லை எனலாம். ஆகவே இது ஒரு வித்தியாசமான முயற்சி என்ற முறையில் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நீக்குJayakumar
கண்டிப்பாக ஜெ கே அண்ணா. எழுதுவது கடினம். ரொம்பவும் வித்தியாசமான முயற்சி எனலாம்.
நீக்குஒரு வேளை நாம் அவர் எழுத்தில் ஒரிஜினலாக வாசிக்க வேண்டுமோ? ஏனென்றால் தளங்களில் வரும் போது நிறைய பிழைகள் வரிகள் ஒவ்வாமை வருகின்றன.
ஹான் இப்ப I got the point - நீங்க சொல்லியிருக்கும் இந்த வரி -
//ஆசிரியர் கதையை சொல்வதில் பெற்ற வெற்றி கதை நாயகனை தேர்ந்தெடுத்தில் இல்லை எனலாம்.//
கதை நாயகனும் சரிதான் அண்ணா. குழந்தை இப்படி பிஹேவ் செய்வதுஅவனது சூழலைப் பொருத்து வீட்டில் பெற்றோர் என்ன பேசுவது குழந்தையின் முன் சில விஷயங்களைப் பேசுவது என்பது உட்பட....குழந்தையின் மனதில் இருக்கும் தன்னால் செய்ய முடியாததை சிலதை அழகாகவெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்...ஒரு நண்பனை அடித்து வெற்றி கொள்வானா, டீச்சரை அடிப்பானா என்பது போன்றவை.
developmental milestones - ல் நிகழ்பவை அதனால்தான் 5 வயது வரை அதன் பின் 12 வயது வரை பெற்றோர் எப்படியான சூழலைக் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அதனால்தான் எனக்குத் தோன்றியது குழந்தையைப் பற்றி வருவதால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்க்...அதைச் சரியாகக் கையாண்டிருக்கலாம் என்று சொல்லியிருந்தேன்., இன்னும் கொஞ்சம் பெட்டராக...அப்பாவின் மனதில் தோன்றுவதாக...அப்பாவுக்குத் தெரிகிறது....பையனால் பள்ளியில் சரியாக இருக்க முடிகிறதா என்று. அப்பவே அப்பாவுக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது.
அதனால்தான் நான் சொன்னது மேலே உள்ள கருத்தில் கடைசியாய்.
ஆனால் அது ஒரு பெரிய குறையே அல்ல. கதை எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல விழிப்புணர்வுக் கதை என்றும் சொல்வேன்.
கீதா
நீங்கள் சொல்லியிருப்பது போல் alter ego என்று பார்த்தாலும் அது குழந்தைகளுக்கு நல்லது செய்யும் ஒன்றாகத்தான் கருதப்படுகிறது குழந்தைகளுக்கும் சரி பெரியவர்கள் என்றால் இதனை நல் வழியில் பயன்படுத்த சில பயிற்சிகள் கொடுக்கிறார்கள்தான். பெஸ்டாக உருவாக....இதனைப் பயன்படுத்தும் பயிற்சிகள் இருக்கின்றன
பதிலளிநீக்குஇக்குழந்தைக்கு அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ...தன் உள்ளில் இருக்கும் சில விஷயங்களை அக்குழந்தையால் வெளிப்படுத்த இயலாத நிலையில் தம்பி என்று சொன்னதும் தம்பி வரவில்லை என்று சொன்னதும் அப்பா அதை உருவகப்படுத்தியதும் தம்பியின் வழி அக்குழந்தை தன் உள் மனதை தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறது. அதனால்தான் தன் சில நண்பர்களைக் குறிப்பிட்டு தம்பி அவனை அடிச்சிடுவானா டீச்சரை அடிப்பானா என்று கேட்கிறான் ஆத்மா. தம்பி இறந்துவிட்டான் எனும் போது அந்த அறிவு அதிகமான அக்குழந்தை நத்தை/ஆமை போன்று தனக்குள் சுருங்கிடவும் வாய்ப்புண்டு.
குழந்தையும் அழுவதாகக் கதை முடிந்துவிட்டாலும் ஆல்டர் ஈகோ என்பது பிரச்சனை என்று கருதப்படாவிட்டாலும் இந்தக் கதையில் அதை ஒரு சிம்ப்டமாகப் பார்க்கலாம் குழந்தை என்பதால் DID யாக இருக்கலாமோ அதனால்தான் கதை முடிந்திருந்தாலும் அக்குழந்தையின் பிரச்சனை தீரவில்லை என்றேன்.
அந்நியனிலும் அப்படித்தானே முடிப்பாங்க!!! அப்போதைக்குக் கதையில் சுபம் போட்டாலும் அவன் பிரச்சனிய தீரவில்லை என்பது போல!
கதைத் தளத்தில் நிறைய எழுத்துப் பிழைகள்,. கூடவே
ஒரு வரி பொருந்தவில்லையோ என்று தோன்றுகிறது
//தம்பி மெல்ல அழுகையை நிறுத்தியவாய் ஆர்வத்துடன் கேட்டான். “அம்மா தம்பி எப்பிடிம்மா இருப்பான், உம்மாதிரியா எம்மாதிரியா அப்பா மாதிரியா?”//
ஆத்மா இல்லையோ அழுகிறான்? தம்பி இன்னும் வெளிவரலையே!!!!!
கதைத் தளத்தில் கதையை ஸ்கேன் அல்லது தட்டச்சு செய்யும் போது பிழை ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது
கீதா
உளவியல் என்று எங்காவது யாராவது குறிப்பிட்டால் தான் என்றில்லை, எல்லாக் கதைகளையுமே உளவியல் குடுக்கைக்குள் இட்டு குலுக்கலாம்.
பதிலளிநீக்குஏனென்றால் எழுதுவரின் கதையின் போக்கு என்பது அந்த எழுத்தாளரின் மனோலய போக்கிற்கு ஏற்பவே அமைகின்றன.
அடுத்த ஸ்டெப். வாசிக்கும் கதைகளை வைத்து அதை எழுதிய எழுதிய எழுத்தாளரையும்
உளவியல் ரீதியாக ஆராயலாம்.
அதற்கடுத்த ஸ்டெப். வாசகர் பற்றி. நாம் வாசிக்கும் விஷயங்களை வைத்து நம்மை நாமே ஓர் ஆய்வுக்குள் உட்படுத்தலாம். அத்தனையும் அவர் மனம் சம்பந்தப்பட்டவையே.
'நான் யார்?' என்பது ஆன்மீகத்தில் அடிக்கடி தட்டுப்படும் ஒரு கேள்வி.
என் மனம் தான் நான் என்பது அக்கேள்விக்கான இயல்பான, சொல்லப் போனால் சாதாரணமான பதில்.
// உளவியல் என்று எங்காவது யாராவது குறிப்பிட்டால் தான் என்றில்லை, எல்லாக் கதைகளையுமே உளவியல் குடுக்கைக்குள் இட்டு குலுக்கலாம்.//
நீக்குஉண்மை.
//ஏனென்றால் எழுதுவரின் கதையின் போக்கு என்பது அந்த எழுத்தாளரின் மனோலய போக்கிற்கு ஏற்பவே அமைகின்றன//
சிறு திருத்தம். அவர் எழுத நினைக்கும் மனோலயப் போக்குக்கு ஏற்பவே அமைகின்றன.
//அடுத்த ஸ்டெப். வாசிக்கும் கதைகளை வைத்து அதை எழுதிய எழுதிய எழுத்தாளரையும்உளவியல் ரீதியாக ஆராயலாம்.//
கஷ்டம். மாறுபடுகிறேன். எல்லா எழுத்தாளர்களும் சொந்த அனுபவங்களையே, மனப்போக்கையோ வைத்து எழுதுவதில்லை.
// அதற்கடுத்த ஸ்டெப். வாசகர் பற்றி. நாம் வாசிக்கும் விஷயங்களை வைத்து நம்மை நாமே ஓர் ஆய்வுக்குள் உட்படுத்தலாம். அத்தனையும் அவர் மனம் சம்பந்தப்பட்டவையே.
நீக்கு//
சற்று சிரமம். மறுபடியும் மாறுபடுகிறேன். எழுத நினைக்கும்போது முதலில் என்ன ஜானரில் எழுத நினைத்தோம் என்பது, அதைக் கொஞ்ச நாள் கழித்து எழுதினால் மனம் அன்றைய நிலையில் என்ன நிலையில் இருக்கிறதோ அதை வைத்து ஜானரே மாறலாம்.
வாசகனும் , படிக்கும் நாளில் இருக்கும் மனநிலைக்கேற்பவோ, படைப்பாளியின் எழுத்துத் திறமையினாலோ ரசிக்கலாம். மனிதனின் மனநிலை - Mood - மாறிக்கொண்டே இருப்பது.
நம்மை நாமே ஓர் ஆய்வுக்குள் உட்படுத்தலாம். அத்தனையும் அவர் மனம் சம்பந்தப்பட்டவையே.//
பதிலளிநீக்குஉட்படுத்த வேண்டும் என்றுதான் ஆன்மீகத் தத்துவமும் சரி, உளவியல் தத்துவமும் சரி சொல்கின்றன. இந்தக் கோட்டில் இரு தத்துவங்களும் இணைகின்றன எனலாம்.
கீதா
வாசிக்கும் கதைகளை வைத்து அதை எழுதிய எழுதிய எழுத்தாளரையும்உளவியல் ரீதியாக ஆராயலாம்//
பதிலளிநீக்குநோ, அண்ணா. அது கடினம். அப்படிச் சொல்ல முடியாது என்பது என் தனிப்பட்டக் கருத்து. ஏனென்றால் எல்லாரும் அப்படி எழுதுவதில்லை
கீதா
கீதா
நம்மை நாமே ஓர் ஆய்வுக்குள் உட்படுத்தலாம்.//
பதிலளிநீக்குஸ்ரீராம் இதுக்கு நான் போட்டக் கருத்தைக் காணலை இழுத்துட்டு வாங்க உள்ள ஒளிஞ்சிருந்தா
கீதா
கதை வாசிப்பின் ஊடே அங்கங்கே ஜெஸி ஸார் குறுக்கிடாமல் இருந்திருந்தால் இக்கதை வாசிப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குஎதற்காக இதை சொல்ல நேரிட்டது என்றால் ஜெஸி ஸாருக்கு ஒரு கேள்வி.
"ஏன் ஸார், நீங்கள் அந்தந்த இடங்களில் கதையின் போக்கை அர்த்தம் பண்ணிக் கொள்கிற போக்கிலேயே நாங்களும் இந்தக் கதையை வாசிக்க வேண்டுமா, என்ன?"
//"ஏன் ஸார், நீங்கள் அந்தந்த இடங்களில் கதையின் போக்கை அர்த்தம் பண்ணிக் கொள்கிற போக்கிலேயே நாங்களும் இந்தக் கதையை வாசிக்க வேண்டுமா, என்ன?" //
நீக்குகரெக்ட்... வாசகனை அவன் ரசனையை வைத்து எடைபோட முடியாது என்று நான் சொன்ன கருத்துக்கு நீங்களே வலு சேர்த்துள்ளீர்கள்!!
அதே சமயம்..
நீக்குநான் படிச்ச் கதை என்கிற தலைப்புக்கு அது பொருத்தமே. அவர் என்ன வகையில் கதையை சிலாகிக்கிறார் என்று பார்க்கலாம்.
ஒன்று சொல்லட்டுமா... ஒருவர் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்கும் மனநிலை 90% மனிதர்களுக்கு இருக்காது. ஒருவித எதிர்ப்பு மனப்பான்மைதான் இருக்கும். அப்படி என்ன இருக்குன்னு பார்ப்போமேன்னு தோணும்.
இங்கு அவன் மனம் சோதனைக்கு உட்படும். உண்மையாய் ரசனையான படைப்பாய் இருந்தால் அவனும் அதை புதுப்புது பரிமாணங்களில் ரசிப்பான்.
ஜீவி அண்ணா, நான் பார்க்கும்வ் அரையில் ஜே கே அண்ணா ஒரு போதும் தான் சொல்லும் கருத்துகளை மற்றவர்களும் ஏற்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அவர் மாறுபட்ட கருத்துகளை வரவேற்கிறார். அப்படி வர வேண்டும் சனிக்கிழமை என்பதுதான் அவரது விருப்பமும்.
நீக்குநான் படிச்ச கதை என்பதால் அவர் தன் கருத்துகளை தன் பார்வையை வைக்கிறார் அவ்வளவே.
நாம் அதில் மாறுபட்டு சொன்னாலும் அவர் அதையும் ஏற்பார் அல்லது அவர் கருத்தை முன்வைப்பார்.
கீதா
//ஒருவர் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்கும் மனநிலை 90% மனிதர்களுக்கு இருக்காது. ஒருவித எதிர்ப்பு மனப்பான்மைதான் இருக்கும். அப்படி என்ன இருக்குன்னு பார்ப்போமேன்னு தோணும்.
நீக்குஇங்கு அவன் மனம் சோதனைக்கு உட்படும். உண்மையாய் ரசனையான படைப்பாய் இருந்தால் அவனும் அதை புதுப்புது பரிமாணங்களில் ரசிப்பான்.//
அதே.
சிந்திக்கத் தெரிஞ்சவங்க, அதில் விருப்பம் உள்ளவங்க கண்டிப்பாகச் சிந்திப்பாங்க வேறு பரிமாணங்களில் ரசிப்பாங்க.
ஆனா ஸ்ரீராம் 90% கொஞ்சம் ஜாஸ்தி இல்லையோ!!!!! ஹாஹாஹா எனக்கு இந்த பெர்சன்டேஜ் இன்னும் குறைவாக இருக்கும்னு தோன்றும் இல்லைனா தங்கள் கருத்தைச் சொல்ல பயந்து வெளியில் சொல்லாமல் போகும் தொகையும் இருக்கலாம் . பிரச்சனை எதுக்கு,,,,,தலையாட்டிட்டுப் போய்டுவோம்னு!!
பதிவில் சொல்லலை நடைமுறை வாழ்க்கையில் சொல்கிறேன்!!!
கீதா
உளவியல் என்று எங்காவது யாராவது குறிப்பிட்டால் தான் என்றில்லை, எல்லாக் கதைகளையுமே உளவியல் குடுக்கைக்குள் இட்டு குலுக்கலாம்.//
பதிலளிநீக்குஅதே.
இன்னொன்று, அண்ணா, எழுதும் போது இருக்கும் மனோலயம் னு நீங்கள் சொல்வது உதாரணத்திற்கு, நான் முன்னர் எழுதிய கதையை இப்ப வாசிக்கும் போது வேறு மனோலயத்தில் தோன்றுவதுண்டு. அது போலவே நான் முன்னர் ஒரு கதையை வாசிக்கும் போது தோன்றியவை அதன் பின் கொஞ்சம் காலம் கடந்து அதே கதையை வாசிக்கும் போது தோன்றுவது வித்தியாசமாக இருக்கும். இங்கு நான் என்பதை ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன் பலருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
காரணம் நம் சிந்தனைகள், எண்ணங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதம் எல்லாமே மாறிக் கொண்டுதானே வரும். மாற்றங்கள் என்பவைதானே மாறாதவை!
கீதா
குஜராத்தில் முதியவர்களுக்கு உணவளிப்பது நல்லதோர் செயல். இதை ஆரம்பித்த பூனம்பாய் பட்டேல் அவர்களுக்கு முதல் பாராட்டுகள்.
பதிலளிநீக்குகதை குழந்தைகளின் மனோதத்துவக் கதையாக செல்கிறது படிக்கும்போது சலிப்பு ஏற்படாதவாறுஅதை நன்றாக நகர்த்தி செல்கிறார் கதை ஆசிரியர் . வித்தியாசமான இக் கதை சிறந்த கதையாக தெரிவாகி இருப்பது பாராட்டுக்குரியது.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதை பகிர்வு வித்தியாசமான கோணத்தில் நன்றாக உள்ளது. உளவியல் ரீதியாக பிறந்து வந்த கதை. ஏற்கனவே படித்த நினைவும் வருகிறது. உளவியல் என்பது நம்மனங்களில் இருந்து பிறப்பதுதானே..! இக்கதையும், கதைக்கு வந்த கருத்துக்களும் பல விதங்களில் சிந்திக்க வைக்கின்றன.
சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் சொல்வதை நானும் பல விதங்களில் சிந்தித்தேன்.
கதையில் உள்ளபடி மூன்று மாத கரு கலைந்து விட்டாலும், ஒரு அவசரத்திற்கென மருத்துவ ரீதியாக மருத்துவமனைக்கு அந்த தாய் செல்ல வேண்டும்/வேண்டியதிருந்திருக்கும். ஒரு வேளை அதை பார்த்த பின் சுய அறிவு மூலம் அந்த யூ. கே. ஜி படிக்கும் பையனுக்கும், தனக்கு வரப்போகும் தம்பி இல்லையென்ற விபரம் புரிந்திருக்கும். இல்லை புரிய வைக்கப்பட்டிருக்கும். மாறாக கதையில் அவள் அன்று இயல்பாக இருப்பது யதார்த்திற்கு கொஞ்சம் நெருடல்.
அதன் பின்தான், தம்பி எங்கே, எங்கே என நச்சரிக்கும் குழந்தைக்கு கற்பனை தம்பியை அவன் அப்பா உருவாக்குகிறார். அதை அந்தக் குழந்தையின் தாய் எச்சரிக்கும் போதும், அதைப்பற்றி அந்த குழந்தையின் தந்தை கவலையுறவில்லை. இறுதியில் தான் தோற்றுவித்ததை தானே அழிக்கிறார். இது கதைக்குப் பொருந்தும்.
உயிருடன் வாழும் சாதாரண மனங்களுக்கு மேலும் பல கற்பனை செயல்பாடுகளை, அதன் வளர்ச்சிகளை தன் எண்ணங்களின் மூலம் உருவாக்கி கொள்ளும் போது, மனம் சாதாரணமாகாமல் "ரணமாகி"வாழ்வியலில் பல குழப்பங்கள் வரலாம். இல்லை இந்த கதையில் உள்ளது போல எதையும் சாதா"ரணமாகக்" எடுத்துக் கொண்டு கடந்தும் விடலாம்.இதுவும் எல்லாம் அவரவரின் விதிப்பயன் சம்பந்தப்பட்டது. உளவியல் என்பது நம் மனங்களில் அன்றாடம் உதிக்கும் எண்ணங்கள்தாமே..! அவையும் நம்முடனே பிறந்து நம்மை படைத்த அந்த இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவை..!
இன்னும் சகோதரர் தந்த சுட்டிக்குச் சென்று படிக்க வேண்டும். வித்தியாசமான இக்கதையை பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஜீவி சார்
பதிலளிநீக்குநான் படிச்ச கதை விமரிசனங்களை நான் பல விதங்களில், பல பார்வைகளில் எழுதியிருக்கிறேன். அது போல் இது ஒரு புதிய பாணி. அவ்வளவு தான். நீங்கள் அவற்றை தனியாக வண்ணம் (கலர்) நோக்கி பின்னர் வேண்டுமென்றாலும் வாசிக்கலாம்.
நீங்கள் ஒருமுறை நான் படிச்ச கதை பகுதியில் (அழியா `சுடர் என்று நினைக்கிறேன்.) இப்படி கதையையும் உங்களுடைய பார்வையையும் சேர்த்து எழுதியிருந்தீர்கள். அப்பகுதியில் பின்னூட்டத்தில் நான் கதை ஆசிரியர் எழுதியது எது, உங்களுடைய எழுத்து எது என்று அறிய சிரமமாக இருக்கிறது. ஆகவே விமரிசனத்தை வேறுபடுத்தி காட்டும் வகையில் ஒரு குறியீடு செய்திருக்கலாம். என்று பின்னூட்டம் இட்டேன்.
அதற்கு நீங்கள் தயிர்சாதத்தை உதாரணமாக `சொல்லி நான் தருவது தயிர் சாதம், என்று பதில் கூறினீர்கள்.
நான் வேலை பார்த்த துறையில் analysis என்ற ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம். ஆக அந்த பிரித்து ஆராயும் மனப்பாங்கு என்னுள் ஊன்றிவிட்டது. நான் மாறுபட்ட கருத்துக்களை வரவேற்கிறேன்.
Jayakumar
வாசகர்களை வழி நடத்தாமல் சுதந்திரமாக
பதிலளிநீக்குபடித்த கதையின் கதாபாத்திரங்கள் பற்றி அவர்கள் கருத்துக்கள் சொன்னால் நன்றாக இருக்குமே என்பதற்காக சொன்னேன்.