புதன், 20 நவம்பர், 2024

கதை, கட்டுரைகளில் விலாவாரியாக சாப்பாட்டு விஷயங்கள் எழுதப்படுவதை ரசிக்க முடிகிறதா?

 

எங்கள் பதில்கள் : 

நெல்லைத்தமிழன்: 

உணவுப் பழக்கத்தை வைத்து ஒருவரை எடைபோட முடியுமா? (வெஜிடேரியன், நான் வெஜ், வீகன் என்றெல்லாம்). அல்லது உணவுப் பழக்கம் ஒருவரின் குணத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

# நம் சாஸ்திரங்கள் மக்களை சத்வ-ரஜஸ்-தமோ என‌ மூவகைப் படுத்துவது போலவே உணவையும் அதே சத்வ ரஜஸ் தமஸ் என்று பிரித்துச் சொல்கிறது. அந்தந்த குணம் உள்ளவர்கள் அந்தந்த வகை உணவை விரும்புவார்கள் என்று சொல்கிறது. மது அல்லது விஷம் போன்றவற்றை  உட்கொள்வதன் விளைவு உடனே தெரியும்.  மற்றபடி வழக்கமான உணவின் தாக்கம் நாட்பட்டுத்தான் வெளிப்படும். ஆனால் எளிதாகக் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கும்.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

கதை, கட்டுரைகளில் விலாவாரியாக சாப்பாட்டு விஷயங்கள் எழுதப்படுவதை ரசிக்க முடிகிறதா?

# முடியவில்லை. அடை, வத்தக்குழம்பு, ஊத்தப்பம் என்று எடுத்துக் கொண்டு சுமார் ஆயிரம் சொற்கள் !! அலுப்புத் தருகிறது.‌

"சூடான ஊத்தப்பத்தை ஓரத்திலிருந்து பிய்த்து சாப்பிட வேண்டும்" என்று ரத்தினச் சுருக்கமாகச் சொன்ன ராஜாஜி நினைவைப் போற்றுகிறேன்.

& கதையோடு ஒட்டி வந்தால் ரசிப்பேன். உதாரணம் : சமையல்கார சுப்பா ராவ் பற்றிய கதை என்றால் - அவர் சமையல் செய்யும் நேர்த்தியைப் பற்றி எழுதியிருந்தால் படித்து ரசிப்பேன். 

பா ராகவனின் சமையல் பற்றிய கட்டுரைகள் (ருசியியல்) மிகவும் விரும்பிப் படித்தேன். அனுபவக் கட்டுரைகள் + சமையல் குறிப்புகள். 

பிற துறைகளில் அனுபவசாலிகள் கொண்டாடப்படும் பொழுது (அவருக்கு இந்த ஃபீல்டுல எவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ் தெரியுமா?)  கலை உலகில் மட்டும் அந்த அனுபவம் செல்லுபடியாகத காரணம் என்ன?

# ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ? முப்பது நாற்பது ஆண்டுகள் இசை உலகில், நடிப்பில் ஜ்வலித்த நட்சத்திரங்கள் இருந்திருக்கிறார்களே !

ஒரு கலைஞன் காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால் இன்னும் அந்த காலத்திலேயே இருக்கிறார் என்று ஒதுக்கி விடுகிறார்களே?

# "பன்னிரண்டாம் வாய்ப்பாடும் வாய்ப்பாட்டும் ஒன்றல்ல .  கலையுலகம் விண்டோஸ் மாதிரி அப்டேட் செய்தவாறிருந்தால்தான் பரிமளிக்கும் " என்று சொன்ன பிரமுகர் - நான்தான் !

இப்பொழுது ரீ மிக்ஸ் பாடல்கள் ஏன் வருவதில்லை?

# இதற்கு பதில் சொல்ல‌ நான் முதலில் ரீமிக்ஸ் பாடல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். பழைய மெட்டு ஒன்றை அப்படியே வேறு வரிகளைக் கொண்டு பாட வைப்பதா அல்லது பழைய வரிகளை புது மெட்டுப் போட்டுப் பாடுவதா என்ற சந்தேகம் வருகிறது. அதே ட்யூன் சொல் வேறு என்றுதான் இருக்கும் என்று ஊகிக்கிறேன்.  எனக்கு இதன் வரலாறு தெரியாததால் பதிலை ஊகமாகச் சொல்கிறேன். இப்போதெல்லாம் ரீமிக்ஸ் பண்ணினால் நோட்டீஸ் வரலாம் என்பதால் இருக்கும்.

& நல்ல வேளை - ரீ மிக்ஸ் காலம் ஓய்ந்தது ! அந்தக் காலத்து " தொட்டால் பூ மலரும் " பாடலின் நிழலைக் கூடத் தொட முடியாது - பிற்காலத்திய தொ பூ ம பாடல். பொன் மகள் வந்தாள் பாடலும் அப்படித்தான். 

கே. சக்ரபாணி சென்னை 28: 

1.  பல வருடங்களுக்கு  முன்   DD சானலில் செய்தி  வாசித்து   எல்லாருக்கும்   பிடித்த ஷோபனா ரவி  அவர்கள்  செய்தி வாசிப்பதை  பார்த்திருக்கிறீர்களா? 

# ஷோபனா ரவி அவர்கள் தமிழ் செய்தி வாசித்து நிறைய கேட்டிருக்கிறேன். தெளிவான உச்சரிப்பும் சரியான காலப்பிரமாணமும் அவருடைய செய்தி வாசிப்பில் நல்ல அம்சங்கள்.

& காஷ்மீரின் காலை ஒடித்து, கஷ்மீர் ஆக்கியவர். அவருக்காகவே தமிழ் செய்திகள் கேட்க ஆரம்பித்த சில நண்பர்களை எனக்குத் தெரியும். தமிழ் செய்தி வாசிப்பாளர்களுக்கு ஒரு trend setter. சமீபத்தில் சில ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால், இந்த வயதிலும் சில சமீப செய்திகளை வாசித்து facebook பக்கத்தில் பதிந்திருந்தார். 

2.  அன்று  பேட்டா ஷூ  கம்பெனியால்  ஆரம்பித்த 199,  299 ,  399.  என்ற விலை நிர்ணயம்   தற்போது.  நிறைய  பொருடகளுக்கு  வந்து விட்டது குறித்து..  

# ஆம் இப்படி 199.99 என்று விலை போட்டால் 200க்கும் கீழே என்று விளம்பரம் செய்ய முடியும். இதை கண்டுபிடித்த பெருமை பேட்டாவுக்கே உரியது. இப்போது மிகப் பரவலாக பின்பற்றப்படுகிறது.‌

3.  பொம்மலாட்டம்  (Puppet show  ) நேரில் பார்த்திருக்கிறீர்களா?

# ஒரே ஒரு முறை நேரில் பார்த்திருக்கிறேன்.  என்ன கதை என்று கூட நினைவில்லை. அரிச்சந்திரன் சந்திரமதி போன்ற அந்த காலத்து கதை ஏதோ ஒன்று. மிகப்பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொம்மலாட்ட குழு எங்கள் கிராமத்திற்கு வந்தது. ஒரு மிகச்சிறு தொகைக்கு மேல் அங்கு இருக்கும் மிராசுதார்கள் அந்த குழுவுக்கு கொடுக்க முன் வராததால் "கட்டுப்படி ஆகாது " என்று சொல்லிப் போய்விட்டார்கள். அப்போது நான் அடைந்த ஏமாற்றம் துயரம் இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. 

அந்த காலத்தில் உள்ளூர் கொல்லர்,  தச்சர் , குடியானவர் இவர்களெல்லாம் வேஷம் தரித்து ராம நாடகக் கூத்து போட்டதையும் பார்த்து இருக்கிறேன். அது ஒரு கனாக்காலம் .  வேறு என்ன சொல்ல இருக்கிறது ?

& ஆறாம் வகுப்புப் படித்தபோது ஒரு பொம்மலாட்டக் கலைஞர், எங்கள் பள்ளிக்கூட மாணவர்களுக்கு (ஒரு அணாவோ அல்லது பத்து பைசாவோ டிக்கெட் விலை என்று ஞாபகம்) பொம்மலாட்டம் ஷோ காட்டினார். மிகவும் ரசிக்கும்படி இருந்தது - அந்தக் காலத்தில். 

கே சக்ரபாணி அனுப்பிய ஒரு முக்கியமான தகவல் : 

= = = = = = = =

KGG பக்கம். 

kgs நினைவுகள். 

பள்ளிக்கூடத்தில் kgs படித்த நாட்களில் - அம்மா விடுமுறை நாட்களில் வீட்டில் செய்யும் மாலை டிஃபன் எல்லாவற்றையும் நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்.  அப்போது வீட்டில் - டிஃபன் சாப்பிடும் வயதில் இருந்தவர்கள் kgs, இரண்டாவது அக்கா, அண்ணன் விசு மற்றும் நான் மட்டும்தான். (தங்கையும் தம்பியும் சிறு வயதினர். ) 

ஆளுக்கு ஒரு தட்டு கையில் வைத்துக்கொள்வோம். அப்பொழுது வீட்டில் உட்கார சரியான ஆசனங்கள் எதுவும் கிடையாது. 

ஒரே ஒரு முக்காலி. அது இரண்டாவது அண்ணன் kgy அவர்களின் ஆஸ்தான ஆசனம். அவர் வேலை கிடைத்து வேறு ஊர் சென்றதும், அது kgs அவர்களின் ஆஸ்தான ஆசனம் ஆயிற்று. 

அந்த முக்காலியில் யார் அமர்ந்திருந்தாலும், kgy அல்லது kgs வந்தால், உடனே அந்த முக்காலியில் அமரும் முன்னுரிமை அவர்களுக்குத்தான் ! 

மற்றவர்கள் உட்கார்வதற்கு சில சில இடங்கள் நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருந்தோம். அக்கா சமையல் அறையில் இருந்த  தண்ணீர் தொட்டியின் விளிம்பில் அமர்வார். 

அப்பா உட்கார்வதற்கு ஒரு பெரிய மனைப் பலகை. 

நானும், என்னுடைய சிறிய அண்ணனும் உட்கார சிறு மனைப் பலகைகள். 

தட்டுடன் முக்காலியில் உட்கார்ந்தவுடன் kgs அறிவிப்பார் - " இதுதான் ஹோட்டல் உட்லண்ட்ஸ் - நான் Woodlands ஹோட்டலில் டிஃபன் சாப்பிடுகிறேன் " 

அவ்வளவுதான் - நாங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு ஹோட்டல் பெயர் அறிவிப்போம்! 

அக்கா - உடுப்பி ஹோட்டல் 

சின்ன அண்ணன்  - " வாசன் கஃபே " ( எப்போதோ திருவாரூர் சென்றபோது கேள்விப்பட்ட ஹோட்டல் பெயரை சொல்வார்!)

நான் : " சங்கர ஐயர் கிளப் " (எனக்குத் தெரிந்த, பக்கத்தில் இருந்த ஒரே ஹோட்டல் அதுதான்! ) எல்லோரும் சிரிப்பார்கள். kgs அண்ணன் உடனே என்னிடம், "பெரிய ஹோட்டல் பெயராக வெச்சிக்கோ" என்பார். நான் சங்கர ஐயர் கிளப் பெயரை மாற்றி, 'ஹோட்டல் தினகரவிலாஸ்' என்று அறிவிப்பேன். அப்போது அதுதான் நாகையில் பெரிய ஹோட்டல்! 

அம்மா அன்றைய டிஃபனை ஒவ்வொருவர் தட்டிலும் போடப் போட, ஒவ்வொருவரும் ரசித்துச் சாப்பிடுவோம். 

அம்மா பஜ்ஜி செய்யும் நாட்களில்,  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு preference - kgs - உருளைக்கிழங்கு பஜ்ஜி, கத்திரிக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி ஆகியவற்றை விரும்புவார். 

அக்கா - உ கி, க கா, புடலங்காய் / பீர்க்கங்காய்  பஜ்ஜி 

சின்ன அண்ணன்  - எது வந்தாலும் ஏற்றுக்கொள்வார்! 

நான் : வெங்காய பஜ்ஜி தவிர மீதி பஜ்ஜிகள் ! பஜ்ஜியை எப்படி சாபிடுவேன் என்றால் - அது ஆறும் வரை தொடாமல் அப்படியே விட்டுவிடுவேன். பிறகு பஜ்ஜியை லேயர் லேயராக பிரித்துவிடுவேன். உள்ளே இருக்கின்ற காய் பகுதியை தனியே தட்டின் ஓரத்தில் எடுத்து வைத்துவிடுவேன். அதைச் சாப்பிடமாட்டேன்! பஜ்ஜியின் பொன்னிற கடலை மாவுப் பகுதியான இரண்டு லேயர்களை  மட்டும் ருசித்துச் சாப்பிடுவேன்.

சில சமயங்களில் பண்டமாற்றுகளும் நடைபெறும். kgs தனக்குப் பிடிக்காத பஜ்ஜிகள் இரண்டைக் கொடுத்து, தனக்குப் பிடித்த பஜ்ஜியில் ஒன்றை வாங்கிக்கொள்வார். எனக்கு வந்த வெங்காய பஜ்ஜிகளை அவர் வாங்கிக்கொண்டு, புடலங்காய் / பீர்க்கங்காய் பஜ்ஜிகளை எனக்குக் கொடுத்துவிடுவார். அவற்றிலிருந்து நான் பிரித்து எடுத்த காய்களை அக்கா வாங்கிச் சாப்பிட்டுவிடுவார்! 

எவ்வளவு ரசனையான நாட்கள் ! 

= = = = = = = = = 

51 கருத்துகள்:

  1. எளிமையில் இன்பம்... கடந்த காலங்களைப் போன்ற ருசியான நாட்கள் மீண்டும் வருவதில்லை. என் பசங்களும் முன்பு நடந்ததை சிலாகித்தும், என்னைக் கலாய்த்தும் சொல்லும்போதும், அவர்கள் அம்மாவின் சில சமையலை மிகவும் பாராட்டி அவைகளை மிஸ் பண்ணுகிறோம் என்று சொல்லும்போதும் எனக்கும் வியப்பாக இருக்கும்... இத்தனை விஷயங்களை நினைவில் வைத்திருக்கிறார்களே என்று.

    பதிலளிநீக்கு
  2. சில நாட்களுக்கு முன்பு நடிகைகள் பற்றிப் பேச்சு வந்தபோது, அவர்களும் நம்மைப் போன்றவர்களே, பக்தி, வருத்தம், நட்பு, குடும்பம் என எல்லாமே இருக்கும். நாமோ, கவர்ச்சியை நடிப்பை மாத்திரம் பார்த்து, எல்லாவற்றையும் நடிப்பு என்ற வட்டத்துக்குள்ளேயே கொண்டு சேர்த்துவிடுகிறோம் என்று பேசிக்கொண்டிருந்தோம்.

    ஈஷா சிவராத்திரியின்போது நடிகைகளில் சிலர் மனமொன்றி வழிபடுவதைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ​கேள்வி கேட்க இருவர் மட்டுமே. அதிராவுக்கு ஒரு ரிமைண்டர். கேள்வி கேட்கவும்.

    பஜ்ஜி படம் பார்க்கும்போதே நாவில் நீர் ஊறுகிறது. வெங்காய பஜ்ஜி எப்படி சாப்பிடுவது என்று மூத்த பதிவர்
    மறைந்த கந்தசாமி ஐயா எழுதிய பதிவு நினைவில் வந்தது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கவேண்டும். ஸ்ரீராமிடம் இருந்தால் பகிரவும். (பஜ்ஜி சாப்பிடுவது பற்றி)

      நீக்கு
    2. என்னிடம் இல்லை என்பதை மட்டற்ற வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்! அதே சமயம் நான் பஜ்ஜி பற்றி எழுதி இருந்ததை நினைவில் கொள்ளாதது குறித்து ஆழ்ந்த மகிழ்ச்சி அடைகிறேன்,.

      நீக்கு
  4. சில நாட்களாக பஜ்ஜி சாப்பிடணும், சிறு வெங்காயம் போட்ட ஹோட்டல் உளுந்தவடை சாப்பிடணும் என்று ஆசை. ஒன்பது நாட்கள் fasting programeஐயே உருப்படியா follow பண்ண முடியலை, எடையோ ஆமை வேகத்தில் குறைகிறது, இதில் இவற்றைச் சாப்பிட்டால் எடை அதிகமாகிவிடுமே என்ற எண்ணத்தில் ஜனவரில பார்த்துக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். படம் ஆவலைத் தூண்டுகிறது.

    எனக்கு தற்போது நீளமான வாழைக்காய் பஜ்ஜி, காலிஃப்ளவர் பஜ்ஜி, எப்போதும்போல வெங்காய பஜ்ஜியில் ஆசை. யாத்திரையின்போது வாரணாசியில் கொடுத்த கத்தரி பஜ்ஜி (பிடி கத்தரி அல்ல. பெரிய உருண்டை கத்தரி) ரொம்ப ருசியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  5. பா ராகவனின் சமையல் ருசிகள்... ருசியும் ரசனையும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அவர் கட்டுரைகளில் பல தவறுகளையும் கண்டிருக்கிறேன். அதை நம்பி நாம் சாப்பிட்டால், இதைப் போயா இவ்வளவு சிலாகிக்கிறார் என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

  7. ​//தட்டுடன் முக்காலியில் உட்கார்ந்தவுடன் kgs அறிவிப்பார் - " இதுதான் ஹோட்டல் உட்லண்ட்ஸ் - நான் Woodlands ஹோட்டலில் டிஃபன் சாப்பிடுகிறேன் " ​//

    அப்போதே woodlands டிரைவ் இண் இருந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிரைவ் இன் தெரியாது. உட்லாண்ட்ஸ் மதராசில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1938.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களின் முதல் கேள்விக்கான பதில் நன்றாக உள்ளது.

    செய்தி வாசிப்பாளர் சோபனா ரவியை மறக்க இயலாது. தெளிவான உச்சரிப்பு டன் அவருக்கென ஒரு ஸ்டைலில் அவர் செய்திகளை வாசிப்பதே ஒரு அழகு.

    நடிகர், நடிகைகளும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்கள்தானே.!

    தங்கள் பக்கம் சுவையாக இருக்கிறது. பஜ்ஜி படங்களும், விதவிதமாக செய்யும் பஜ்ஜி விபரங்களும் காலையிலேயே பசியை தூண்டுகிறது.

    பழைய நினைவுகள் நம் மனதில் என்றுமே அழியாத நினைவுகளாய் அமர்ந்திருக்கும். எங்கள் அம்மா வீட்டிலும், சாப்பிடும் போது, எங்களுக்கென்று தனித்தனி தட்டுக்களும் , ஓர் அமரும் பலகை ஆசனங்களும் உண்டு.அவரவர் ஆசனங்களை கொண்டு வந்து போட்டுக் கொண்டு அமர்ந்து சாப்பிட வேண்டும். அப்போது எச்சில் பத்து வேறு நிறைய பார்த்தோம். .பரிமாறுபவர் இறுதியில்தான் சாப்பிட முடியும். இப்போது போல் டேபிளில் மொத்தமாக அமர்ந்து உணவருந்தும் பழக்கம் அப்போது இல்லயே..! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிமாறுபவர் கடைசியில்தான் சாப்பிடமுடியும்... இந்தக் கருத்து எனக்குப் பழைய நினைவுகளைக் கொண்டுவந்துவிட்டது. என் பெரியம்மாவிற்கு ஒட்டிக்க ஒட்டிக்க, அதாவது இறக்கிய உடனேயே சுடச்சுட சாப்பிடப் பிடிக்குமாம். ஆனால் பாருங்க, அவங்க தளிகை பண்ணி, பிறகு பெரியப்பா, கண்டருளப் பண்ணி, நாங்க எல்லாரும் சாப்பிட்டு எச்சில் பத்து மொழுகிய பிறகுதான் அவர் சாப்பிட முடியும்.. என்ன கொடுமையான சிஸ்டம் பாருங்க.

      என் மனைவி என்னிடம் சொல்வது, தான் சாப்பிட உட்கார்ந்து, சாப்பிட்டு முடித்து அரை மணி நேரம் வரைல ஒரு வேலையும் சொல்லக்கூடாது என்று. அதை வெகு ஜாக்கிரதையாக்க் கடைபிடிக்க முயல்கிறேன்.

      நீக்கு
    2. பரிமாறுபவருக்கு பந்தியில் சாப்பிட உட்காரும்போது பாதிக்குமேல் கிடைக்காது என்பதை என் அம்மா சொல்வது எப்படி என்றால் "அரைச்சவளுக்கு அம்மி" என்பார்!

      நீக்கு
    3. என் அம்மா சொல்வது " பங்கிட்டவளுக்கு பானை!"

      நீக்கு
    4. ஆகா.. அந்த காலத்தில்தான் எல்லாம் அறிந்துதான் பொருத்தமாக சொல்லியுள்ளார்கள் . இதை சொல்லும் போது அவர்கள் முகத்தில் சிறிதளவும் கோபம் இருக்காது. மாறாக பேச்சில் பெருமையும், சிறிது கர்வமும் தொனிக்கும். "சமைச்சவங்களுக்கு சட்டியும், கரண்டியுந்தான் மிச்சம்" என்றும் கூறுவார்கள்.

      நீக்கு
  9. பஜ்ஜி விபரங்கள் காலையிலேயே பசியைத் தூண்டுகிறது..

    கௌதம் ஜி அவர்களே.,
    ஞாயமா இது!?..

    பதிலளிநீக்கு
  10. /// நடிகர், நடிகைகளும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்கள் தானே..///

    அந்த வட்டாரத்தைச் சார்ந்த அனைவருமே மனிதர்கள் தான்...

    பாவம் ...
    பாவப்பட்ட ஜன்மங்கள்..

    நடிப்பைக் கண்டு மகிழ்ந்தவர்க்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சி நடிகைக்குக் கிடைப்பதில்லை.. கிடைத்தாலும் நிலைப்பதில்லை( ஷோபா, படாபட் ஜெயலக்ஷ்மி, ஸ்மிதா)

    பாட்டைக் கேட்டவனுக்கு ஏற்படுகின்ற நெகிழ்ச்சி இசையமைத்தவனுக்கு வாய்ப்பதில்லை..

    புரிந்து கொண்டால் சரியாகி விடும்..
    ஆனால் புரிவதே இல்லை..

    பதிலளிநீக்கு
  11. வெங்காய பஜ்ஜி தான் எனது விருப்பம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சையில் எங்கு ருசியான பஜ்ஜி கிடைக்கும்னு துரை செல்வராஜு சார்ட கேட்டால் பதில் வருமா?

      நீக்கு
  12. ///பொம்மலாட்டம் நேரில் பார்த்திருக்கிறீர்களா? //.

    மாயூரம் கணநாதர் குழுவினரின் பொம்மலாட்டத்தைக் கண்டிருக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்த்ததும் அதுதான் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  13. தோல் பாவைக் கூத்துகளும் பார்த்திருக்கின்றேன்...

    குலதெய்வம் கும்பிடுவதற்காக உவரி செல்கின்ற போதெல்லாம் கணியன் கூத்து, வில்லிசை நிகழ்ச்சி..

    மூன்றாண்டுகளாக எங்கள் கோயிலில் கொடை தடை செய்யப் பட்டுள்ளது

    பதிலளிநீக்கு
  14. இங்கே தஞ்சை வட்டாரத்தில் விஷமிகளால் நடத்தப்படுகின்ற கரகாட்ட விழாக்களில் விருப்பமே இல்லை..

    பதிலளிநீக்கு
  15. கனம் பதிவாளர் அவர்களே பஜ்ஜி யாகப்பட்டது இன்னும் வந்து சேரவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைக்கு நான் சாப்பிட்டுக் கொண்டு இருப்பது அடை + அமரித் வெல்லப் பொடி.

      நீக்கு
    2. கேஜிஜிஅவர்களுக்கு குளிர் விட்டுப்போய்விட்டதா? பெங்களூரில் இருக்கும் குளிருக்கு, கார சாரமா மிளகாய்பொடி நல்லெண்ணெய் தொட்டுக்கொண்டு சாப்பிடுவதை விட்டுவிட்டு வெல்லப்பொடியா? சரி போனால் போகிறது... நெய் ஓரிரண்டு ஸ்பூன் விட்டுக்கொண்டீர்களா?

      நீக்கு
    3. இல்லை. சிலசமயங்களில் சூடான அடை மீது அமுல் அன்சால்ட்டட் வெண்ணை போட்டு உருகிப் படர்ந்த வெண்ணையோடு சாப்பிடுவேன்.

      நீக்கு
  16. பஜ்ஜி(படம்) நாவில் நீர் ஊற வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  17. எங்கள் வீட்டிலும் சாப்பிட அவரவருக்கு பிரத்யேக இடங்கள் உண்டு. என் அண்ணா பக்கத்தில் உட்கார மாட்டேன்,ஏனென்றால் அவர் பக்கத்தில் உட்கார்ந்தால் சிரிக்கக் கூடாது, கையை ஆட்டி பேசக்கூடாது, எச்சில் தெறித்து விட்டது என்று திட்டுவார். இப்போதெல்லாம் எங்கே உட்கார்ந்தால் டி. வி. பார்க்க முடியுமோ அங்குதான் இருக்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))) அவ்வளவு கண்டிசன் போடும் ஒரு அண்ணனைப் பற்றி முதல் முறையாக கேள்விப்படுகிறேன்!

      நீக்கு
  18. கேள்வி பதில்கள் உணவின் சுவை பற்றிய கருத்துக்கள் அனைத்தும் நன்று.

    Kgs பக்கம் அன்றைய அன்னியோன்னியமான காலத்தை கண்முன்னே கொண்டு வந்தது. உணவுடன் அன்பும் சுவைத்த காலங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!