15.9.25

"திங்க"க்கிழமை  :   கம்பு இட்லி    -  JKC ரெஸிபி 

  

கம்பு இட்லி 

உடலால் உழைப்பவர்கள் உண்ணும் உணவாக இருந்த சிறுதானியங்கள் உடல் உழைப்பில்லாதவர்களுடைய உணவாக மாறிவிட்டது. அவர்களும் உண்ணும் அரிசியைக் குறைத்து தானியங்களை சேர்த்துக் கொள்கின்றனர். அவ்வகையில் இன்றைய கம்பு இட்லியும் காலை உணவாக இடம் பெறுகிறது.   

சாதாரண இட்லி செய்ய எடுக்கும் அரிசியில் ஒரு பங்கை குறைத்து அதற்கு பதிலாக கம்பு எடுத்துக்கொள்ளவும். கம்பு என்றால் மரக்கொம்பு இல்லை. கம்பு என்ற சிறுதானியம்.



இங்கு எடுத்துக்கொண்ட அளவுகள்

 இட்லி அரிசி ஒரு கப்.

கம்பு ஒரு கப்.

உளுந்து ½ கப்.  

இவை எல்லாவற்ரையும் தனித்தனியாக ஊற வைக்கவும். 3 மணி நேரம் ஊறியபின் ஒவ்வொன்றாக எடுத்து நன்றாக கழுவவும். கம்பு தோல் நீக்குவது நல்லது.  

எடுத்துக்கொண்ட பொருட்களின் அளவு குறைவு. ஆகையால் பாஸ் எல்லாவற்றையும் மிக்ஸியில் ஒன்றாக அரைத்துக்கொண்டார். அரைத்து எடுத்த மாவு உப்பு சேர்த்து கரைத்து ஓர் இரவு புளிக்க வைக்கப்பட்டது.  

அடுத்த நாள் காலை புளித்திருந்த மாவை இட்லித்தட்டுகளில் வார்த்து இட்லி சுடப்பட்டது.

தொட்டுக்கொள்ள தண்ணி சட்னியும், மிளகாய், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து அரைத்த மிளகாய் சட்னியும் செய்யப்பட்டது. 

எல்லா பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்ததால் உளுந்து பொங்கவில்லை. ஆகவே இட்லி கல் போல் ஆகிவிட்டது. சாப்பிடும் எண்ணிக்கை குறைந்தது. ஆகவே மீதியிருந்த மாவு இரவு டிபனில் தோசை வடிவம் பெற்றது. தோசை முறுகலாக வந்தது.

படத்தில் இட்லியின் texture தெரிகிறதா. அதனால் இட்லி மாவு கிரைண்டரில் அரைப்பதே சாலச் சிறந்தது.

27 கருத்துகள்:

  1. கம்பு இட்லி நல்ல செய்முறைதான், ஜெ கே அண்ணா,

    படத்தில் texture நல்லா இருப்பது போலத்தான் இருக்கு.

    நீங்கள் சொல்வது சரிதான் கிரைண்டரில் அரைத்தால் நல்லா வரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. கம்பு இட்லிக்குக் கொஞ்சமா இருந்ததால் மிக்ஸில் அரைச்சாலும், இனி இப்படிச் செய்யும் போது அதாவது மிக்ஸியில் அரைக்கும்படி ஆனால் பிரச்சனை இல்லை, சாஃப்டாக வர, ஒரு கைப்பிடி அவல் சேர்த்துக்கலாம் இல்லைனா, சாதம் இருந்தால் எந்த சாதமானாலும், வெள்ளை அரிசியோ கேரளா அரிசியோ இல்லை பச்சரி இல்லை புழுங்கலரி எதுவா இருந்தாலும் சாதம் ஒரு கைப்பிடி சேர்த்து அரைத்தால் நல்லா பொங்கும். சாஃப்டாக வரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அண்ணா. வெந்தயமும் கொஞ்சம் ஊற வைத்து சேர்த்து அரைத்தால் நல்லாருக்கும். சுவையும் நல்லாருக்கும். கம்பு சற்று விரைப்புத் தன்மையைக் கொடுக்கும் என்பதால்.நானும் இதே ப்ரப்போர்ஷன் தான் ஆனால் பெரும்பாலும் இட்லி அரிசி சேர்க்காமல் கம்பு உளுந்த்து. வெந்தயம் தனியாக ஊற வைத்து. முதலில் வெந்தயத்தை நன்றாக அரைத்ததும் உளுந்தைப் போட்டு அரைத்து அதை எடுத்த பிறகு கம்பை போட்டு அரைத்து கலந்து ...நீங்க சொல்றாப்ல மாவு பொங்கணும். க்ரைண்டட் தான் பெஸ்ட்

    ஆனால் மிக்ஸியில் அரைத்தாலும் பொங்கினால் நல்லா வரும்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இதே போல சோள இட்லியும், வேறு மில்லட் இட்லியும் தோசையும் செய்யலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி. தினம் தினம் இட்லி என்பதில் கொஞ்சம் மாறுதல் அவ்வளவுதான். கம்பு இங்கு கிடைப்பது அபூர்வம்.

      Jayakumar

      நீக்கு
    2. https://sivamgss.blogspot.com/2015/10/blog-post_4.html

      நீக்கு
    3. https://sivamgss.blogspot.com/2015/09/blog-post_27.html

      நீக்கு
  5. நான் சிறுதானிய இட்லியில் ராகி இட்லி மாத்திரம்தான் சாப்பிட்டிருக்கிறேன்.

    செய்முறைக் குறிப்பும், வந்த விதமும் நல்லா பதிவு செய்திருக்கீங்க. கம்பு இட்லி, சமீபத்தில் விருந்தாவனம் மதுரா பகுதிகளில் பார்த்த, செழித்து வளர்ந்திருந்த கம்பு வயல்களை நினைவுபடுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுகளுக்கு நன்றி. மனைவியின் ஒத்துழைப்பும் உண்டு. பாதி பாராட்டை அவருக்கு கொடுத்து விட்டேன்.

      நீக்கு
    2. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

      நீக்கு
  6. நல்ல குறிப்பு. நமது இட்லியின் அளவுகள் தான். ஆசிரியரே ஒத்துக்கொண்டது போல கிரைண்டரில் அரைத்தால் அவல், சாதம் சேர்க்காமலேயே இட்லி நன்றாக வரும். நான் எப்போதும் கேழ்வரகு, வெள்ளை சோளம் [jowar] இட்லி அரிசி சேர்த்து செய்வேன். நன்றாக வரும். கம்பு சேர்த்து செய்ததில்லை. வயிறு ரொம்பவும் நிறைந்து சமயத்தில் ஹெவியாக ஆகிவிடும் என்பதால் கம்பு உபயோகித்து செய்ததில்லை.
    திரு. ஜெயகுமார் சந்திரசேகரன் அவர்களுக்கும் அவரது இல்லத்தரசிக்கும் நல்லதொரு குறிப்பு தந்ததற்கு இனிய நன்றி!

    பதிலளிநீக்கு
  7. எல்லாச் சிறு தானியங்களையும் சமைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். வரகிலும் சாமையிலும் பொங்கல் நன்றாக வரும். நல்ல ருசியாக இருக்கும். பொதுவாக உளுந்து கிரைண்டரில் அரைக்காமல் மிக்சியில் அரைத்தால் ஊற வைத்த உளுந்தை அரைப்பதற்கு ஒரு மணி முன்னால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். அல்லது உளுந்து அரைக்கையில் விடும் நீரைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு அதை ஊற்றி உளுந்தை அரைக்கலாம். மாவு நன்கு தளதளவென வரும். இட்லி, தோசை இரண்டுக்கும் நான் எப்போதும் ஒரே பதமாக அரைப்பதால் இது சரியாகவே வருகிறது.புழுங்கலரிசி இட்லி, தோசை, பச்சரிசி இட்லி, தோசை எல்லாவற்றிற்கும் ஒரே பதம் தான். கிரைண்டரில் அரைத்தால் தான் பொதுவாக நன்றாக இருக்கும் என்றாலும் கொஞ்சமாகப் போட்டால் கிரைண்டரில் அரைக்க முடியாது. அப்போ ஜலத்தைக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சு விட்டு அரைக்கலாம். உளுந்து வடைக்குக் கூட இப்படிப் பண்ணலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​நுண்மையான தகவல். நன்றி. மிக்ஸியில் உளுந்து அரைக்கும் முறை பற்றிய பாடத்திற்கு நன்றி.

      Jayakumar

      நீக்கு
    2. கூடுதலாக ஒரு விஷயம். எப்போவுமே அது கல்லுரல் ஆனாலும் சரி, கிரைண்டரோ, மிக்சியோ ஆனாலும் சரி முதலில் உளுந்தை அரைச்சுட்டுத் தான் பிறகு அரிசியை அரைக்கணும். அரிசி அரைச்சுட்டு உளுந்தை அரைச்சாலும் உளுந்து மாவு தளதளனும் வராது. நிறையவும் வராது.

      நீக்கு
    3. அரிசியை அரைச்சுட்டு உளுந்தை அரைச்சால் தோசைக்குச் சரியா இருக்கும். இட்லி மெல்லியதாக உளுந்து வாசனையுடன் நொழுக் என்று வரும். இட்லி மிருதுவாகவோ, சற்றே குண்டாகவோ வராது. வழுக் வழுக்கென்று இருக்கும்.

      நீக்கு
  8. வெளிநாடுகளில் கிடைக்கும் கினோவாவில் சாதம் சமைத்துப் புளியஞ்சாதம், எலுமிச்சைச் சாதம், வெஜிடபுள் சாதம், சாம்பார் சாதம் எனப் பண்ணலாம். அது போல் இந்தச் சிறு தானியங்களிலும் எல்லாமே பண்ணலாம்.

    பதிலளிநீக்கு
  9. வரகில் தீபாவளிக்குத் தேன்குழல் பண்ணி அதை ஏடிஎம் என்னும் அப்பாவி தங்கமணி நடத்தும் சஹானா தளம் மூலம் நடத்திய போட்டிக்கு அனுப்பி இருந்தேன். முதல் பரிசை வென்று ஒரு புடைவை கிடைத்தது.
    https://sivamgss.blogspot.com/2020/11/blog-post_30.html
    https://sivamgss.blogspot.com/2015/11/blog-post_8.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அருமை அருமை கீசாக்கா.

      நீக்கு
  10. கம்பு இட்லி செய்முறை நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  11. கம்பு இட்லி நன்றாக இருக்கிறது.
    நான் கொஞ்சமாக செய்வதால் மிக்ஸியில் தான் செய்கிறேன்.
    உளுந்தை தனியாக குளிர்ந்த தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. கொம்பு இட்டலி சே சே டங்கு ஸ்லிப்பாகுதே கம்பு இட்டலி சுப்பராக வந்திருக்குது ஜே கே ஐயா.
    ஆனா எனக்கொரு டவுட்... இங்கு நாங்கள் வாங்கும் கம்பு மெல்லிய பச்சை நிறமாக இருக்கும்.. நான் சோறாகவும் கஞ்சியாகவும், தோசையும் செய்திருக்கிறேன், மெல்லிய பச்சை நிறத்தில்தான் வரும் சுவையும் இனிக்கும்.
    உங்களுடையது வெள்ளையாக இருக்குதே.. நன்கு தீட்டியதாக இருக்குமோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hybrid pearl millet 49 rs per Kg in super market.

      நீக்கு
    2. முதல் புகைப்படத்தில் அரிசிக்கு பக்கத்தில் உள்ளது தான் கம்பு. கொத்தமல்லி நிறத்தில் இருக்கிறதல்லவா?

      நீக்கு
    3. தெரியுது ஆனா இங்கு பச்சை நிறமாக இருக்குது.

      நீக்கு
  13. கம்பு இட்டலி இதுவரை செய்யவில்லை நான், ஆனா குரக்கனிலும், முழுப்பச்சைப்பயறிலும் செய்திருக்கிறேன் அவையும் சூப்பர்.

    சமீபத்தில் கொழுக்கட்டைக்காக, சாமி வாங்கினேன், அதுவும் வெள்ளையாக இருந்தது ஆனா ஊரில் சின்ன வயதில் சாப்பிட்ட போது சாமி அரிசி எனில் பளிங்குபோல பொன்னிறமாக இருக்கும்.

    இங்கு எந்த மில்லெட் மா வகைகள் வாங்கினாலும் வெள்ளையாகவே கிடைக்குது, குரக்கன் மட்டும் கொஞ்சம் கறுப்பாக இருக்கும், அதனாலேயே நான் வீட்டிலேயே அரைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவாக தாங்கள் செய்த கம்பு இட்லி படங்கள், செய்முறைகளும் அபாரமாக உள்ளது. தினமும் அரிசி கொண்டு செய்யும் இட்லிக்கு பதிலாக இவ்விதம் செய்யலாம். இப்போது நீங்கள் சொல்வது போல அரிசியின் பயன்பாட்டை அனைவரும் குறைக்கவே ஆசைப்படுகின்றனர். நல்ல தெளிவாக கம்பு இட்லி எப்படி செய்வது என சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!