கொண்டைக்கடலை லசான்யா
கொண்டைக்கடலை போட்டு சுண்டல்தான் செய்ய வேண்டுமா என்ன? சுண்டலுக்காக வேகவைத்த கொண்டைக்கடலை ஒருநாள் அவதாரம் மாற்றப்பட்டது.
வெறும் பொரியலாகவோ, சுண்டலாகவோ சாப்பிட்டு அலுத்துப் போகும் நாளில், அல்லது வீட்டில் உள்ளோர் சாப்பிட மறுக்கும் நாளில் புதிய முயற்சி உருவாகிறது.
ரெட் சாஸ், ஒயிட் சாஸ் என்று கஷ்டப்பட வேண்டியதில்லை. சிம்பிளாக ஒன்று கூட போதும்.
தக்காளி, மிளகு, துளசி இலை, பூண்டு மற்றும் சோள மாவு சேர்த்து ஒரு சாஸ் தயாரிக்கவும்.
உப்பில்லாத வெண்ணெய் எடுத்து பானில் அல்லது வாணலியில் இட்டு அது உருகிய உடன் பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்கி, பின்னர் வெங்காயம் நறுக்கியதைச் சேர்த்து, அது கலந்து வந்த உடன் தக்காளியை போட்டு புரட்டி இறக்கி வைத்து, ஆறிய உடன் மிக்சியில் அரைத்து எடுத்துக் கொண்டு, மறுபடி பானில் பூண்டு சீரகம், சில்லி பிளேக்ஸ், மிளகுத்தூள், தாளித்து கலவையை அதில் கொட்டி கொஞ்சம் சோள மாவு போட்டு பால் ஊற்றி கொதிக்க விடவும். ரொம்ப கெட்டியாக ஆகும் முன் இறக்கி வைக்கலாம். ஏனென்றால் ஆறிய உடன் இன்னும் கெட்டியாகி விடும்.
இங்கு நான் வெங்காயம் சேர்க்காமல் தக்காளி மிளகு துளசி இலை சேர்த்தேன்.
பின்னர் வேகவைத்த கொண்டைக்கடலையை நன்கு மசித்து எடுத்துக் கொண்டு தேவைப்பட்டால் ஓரிரு சிட்டிகை கடலைமாவு சேர்த்துக்கொண்டு இரண்டு பிளாஸ்டிக் தாள்களுக்கு நடுவில் அல்லது பட்டர் பேப்பருக்கு நடுவில் வைத்து அப்பளம் போல் இட்டு காய வைக்கவும். சிறிய எவர்சில்வர் தட்டின் அடியில் அழுத்தி கூட அப்பளம் தயார் செய்துகொள்ளலாம்.
பின்னர் உங்களுக்குப் பிடித்த காய்கறி பூரணத்தைச் சேர்க்கவும். இதுதான், இன்னதுதான் என்றில்லை. உங்களுக்கு எது பிடிக்குமோ, எது தோன்றுகிறதோ.. அல்லது அன்று செய்த கறி மிஞ்சி இருந்தால் அதைக் கூட வைத்து ஸ்டஃப் செய்யலாம். எல்லாம் திப்பிச வேலைகள்தான்.
பின்னர் உங்களுக்குப் பிடித்த காய்கறி பூரணத்தைச் சேர்க்கவும். இதுதான், இன்னதுதான் என்றில்லை. உங்களுக்கு எது பிடிக்குமோ, எது தோன்றுகிறதோ.. அல்லது அன்று செய்த கறி மிஞ்சி இருந்தால் அதைக் கூட வைத்து ஸ்டஃப் செய்யலாம். எல்லாம் திப்பிச வேலைகள்தான்.
ஒரு பிளேட்டில் முதலில் சாஸ் தடவி பரப்பி விட்டு, அதன்மேல் ஒரு அப்பளம் வைக்கவும். அதன்மேல் நீங்கள் வைத்திருக்கும் காய்கறி கலவையை இட்டு பரப்பவும். (காய்கறி கலவையையும் முன்னதாக பானில் தாளித்து புரட்டி எடுத்து வைத்திருக்க வேண்டும்.) பிறகு மீண்டும் ஒரு அப்பளத்தை மேலே வைத்து மறுபடி இதே ப்ராசஸ். இது போல நான்கு அடுக்குகள் வைக்கலாம்.
எனது தோழி ஒருவர் வெறும் கத்தரிக்காய் நடுவில் வைத்து செய்து அசத்தினார். இன்னொருவர் அன்று செய்த வெண்டைக்காய் கறியை நடுவில் வைத்தார்.
நான் உருளைக்கிழங்கு, கேரட், இனிப்பு பட்டாணி மற்றும் காலிஃபிளவர் ஆகியவற்றை சேர்த்து பூரணமாக்கினேன்
அதன் மேல் சீஸ் தூவவும்..
180 டிகிரியில் 25 நிமிடங்கள் சுடவும். எதைச் சேர்த்தாலும், என்ன செய்தாலும் இதுதான் முக்கியம்.
உங்களிடம் காய்க்கலவை மீதமாகி விட்டால் இருந்தால் அதைக் கொண்டு ராஜ்மா செய்யலாம்.



அட... இது புதிய ரெசிப்பியாக இருக்கிறதே. எதையும் வீணாக்காமல் புதிய, பலரும் விரும்பும் ரெசிப்பி இது.
பதிலளிநீக்குவாங்க நெல்லை... இதுவரை நான் சுவைத்ததில்லை. நேற்று உடனடியாக ஸ்விக்கியில் ஆர்டர் போட்டு ஒன்று சுவைத்துப் பார்த்தேன்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் கொண்டைக்கடலையை வைத்து செய்த புது ரெசிபி வித்தியாசமாக நன்றாக உள்ளது. உடன் காய்கறிகளும் சேர்ந்த மாதிரி ஆயிற்று. சகோதரிக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம். வித்தியாசமாக இருக்கிறது. நிறைய வித்தியாசமாக முயற்சி செய்து அசத்துபவர் அவர்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குலெசானியா - குவைத்தில் சாப்பிட்டிருக்கின்றேன்.
பதிலளிநீக்குநான் நேற்றுதான் சாப்பிட்டேன். நமுத்துப்போன பீட்ஸா மாதிரி இருந்ததது
நீக்குஹாஹாஹா. நமுத்துப்போன பிட்சா.... எனக்கு திக் க்ரஸ்ட் பிட்சா பிடிக்கும். இன்று பாப்பாஜோன்ஸ் செல்கிறோம்
நீக்குபாப்பாஜோன்ஸ் என்றால் என்ன? ஏதோ கடை என்று தெரிகிறது. என்ன ஸ்பெஷல்?
நீக்கு"திக் க்ரஸ்ட் பிட்சா " - அப்படி ஒன்று இருக்கிறதா? ஒரு கை... இல்லை இல்லை.... ஒரு வாய் பார்த்து விடுகிறேன்.
பிட்சாவிற்கு பல பிராண்டு கடைகள் உண்டு. பிட்சா கார்னர், பிட்சா ஹட், பாபா ஜோன்ஸ் என்று பல. அதில் நான் வேலை பார்த்த ரிடெயில் க்ரூப்பில் பாப்பாஜோன்ஸ் பிட்சா அவுட்லெட்கள் கல்ஃபில் பல தேசங்களில் உண்டு. எங்கள் கடை என்பதால் நான் அங்குதான் பசங்களைக் கூட்டிச் செல்வேன். இந்தியாவிலும் நாங்கள் ஆரம்பித்து நிறைய நஷ்டம் ஏற்பட்டது. பிறகு அதிலிருந்து வெளியில் வந்துவிட்டோம். இதையெல்லாம் ஒரு நாள் எபியில் எழுதப்போகிறேன்.
நீக்குதின் க்ரஸ்ட் பிட்சா என்பது மெலிதாக இருக்கும். நோஞ்சான் பிட்சாவின் மேல் வெஜிடபிள்ஸ், சீஸ் போட்டிருப்பாங்க. திக் க்ரஸ்ட் என்பது கொஞ்சம் மெத் மெத் என்றிருக்கும் பிட்ஸா பேஸில் பண்ணியிருப்பாங்க. எனக்கு திக் க்ரஸ்ட் ரொம்பப் பிடிக்கும்.
இங்கெல்லாம் பாபா ஜோன்ஸ் தான் அதிகம். என்றாலும் எனக்கென்னமோ பிட்சா மேல் அவ்வளவெல்லாம் நாட்டம் இல்லை. ஹூஸ்டன் போயிருந்தப்போ ஒரு தரம் பையர் ஒரு மாலில் இத்தாலியன் ஒரிஜினல் பிட்சா எனச் சொல்லி வாங்கிக் கொடுத்தார். அதுவும் ஒரு சமயம் கடற்கரையில் ஒரு பிட்சா கடையிலும் நன்றாக இருந்தது. இரண்டுமே இத்தாலியர்கள் கடை.
நீக்கு/// 180 டிகிரியில் 25 நிமிடங்கள் சுடவும்.. ///
பதிலளிநீக்குஎல்லாருடைய வீட்டிலும் இது சாத்தியமா?..
சாத்தியமில்லாத வீட்டில் குக்கரில் வைக்க வேண்டியதுதான். எவ்வளவு நேரம் என்று அனுபவத்தில் தெரியும்!
நீக்குஒண்ணுமே புரியலை. முதலில் //தக்காளி, மிளகு, துளசி இலை, பூண்டு மற்றும் சோள மாவு சேர்த்து ஒரு சாஸ் தயாரிக்கவும்.// என்று கூறுகிறார். செய்முறை கூறவில்லை. மேலும் இதை எங்கு எப்படி உபயோகிக்க வேண்டும் என்று சொல்லவே இல்லை.
பதிலளிநீக்குஅடுத்து கடலை ரொட்டியில் காய்களை வைத்து பிஸ்ஸா போல் பேக் செய்ய சொல்கிறார். அவன் எல்லோருடைய வீட்டிலும் இருக்கும் என்று தோன்றவில்லை. வேகவைத்த காய்களா அல்லது பச்சை காய்களா என்றும் தெரியவில்லை.
சொல்லவந்தது முழுதும் பதிவில் வரவில்லை. அதனால் பதிவை சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கொஞ்சம் ரிவெய்ஸ் செய்திருக்கலாம்.
Jayakumar
வாங்க JKC சார்.. முதலில் எனக்கும் அப்படிதான் புரியாமல் இருந்தது. என் மருமகள் சாஸ் எல்லோருக்கும் தெரியுமே என்றதால் நான் விளக்கம் கொடுக்கவில்லை. மேலும் ராதா எனக்கு இதே லசான்யாவின் வேறு சில செய்முறைகள் videos அனுப்பியதால் நான் அதைப் பார்த்து புரிந்து கொண்டேன்.
நீக்குஇப்போது சில மாற்றதங்கள் செய்திருக்கிறேன். பார்த்து சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சுருக்கமாக மைதா மாவில் தோய்த்த அப்பளமோ, பிரெட்டோ, ஏதோ ஒன்றை பிரிக்கும் சுவராகக் கொண்டு, வெள்ளை சாஸ், சிவப்பு சாஸ். காய்கறிக் கலவை என்று வரிசையாக இடையில் வைத்து நான்கு அடுக்கு செய்து,, அவித்து எடுக்க வேண்டும்.
நீக்குகொஞ்சம் சேலம் புகழ் தட்டு வடை போல... கொஞ்சம் ஸாண்டவிச் போல...
புரிகிறது என்றாலும் அவர் அதாவது ராதா சுரேஷ் இன்னும் விரிவாகச் சொல்லி இருக்கலாம். தேவையான சாமான்கள் பட்டியலில் கொண்டைக்கடலை தவிர இப்படித் தயாரிக்கப்பட்ட சாஸ், அதன் பொருட்கள், காய்கறிக்கலவை, செய்யும் விதம் எனத் தனியாகக் குறிப்பிட்டிருக்கலாம். இதற்கு அவன் தேவை என்பதையும் மைக்ரோவேவ் இருந்தால் க்ரில்லிங் உள்ளதாக வேண்டும் என்பதையும் இரண்டும் இல்லை எனில் இரும்புச்சட்டி, அல்லது குக்கரில் பொடி மணல் அல்லது உப்புக்கல் போட்டுச் சூடு செய்து கொண்டு அதில் வைத்து பேக் செய்யணும் என்றும் சொல்லி இருக்கலாம். பொதுவாக உணவு சமைப்பதிலே சமைச்சபின்னர் அதை டிஸ்ப்ளே செய்வது மூலமாகவே சாப்பிடத் தூண்டணும் என்பார்கள். அதோடு செய்முறையும் தேவையான சாமான்களையும் சொல்லிடணும்.
நீக்குஇங்கே ராதா சுரேஷ் அவர்கள் சாஸ் செய்முறை சொல்லி இருந்தாலும் அதைப் புரியும்படி சொல்லாததால் ஜேகேசி சார் சாஸ் செய்முறையே தெரியலை என்கிறார். அல்லது ஸ்ரீராம் செய்த மாற்றங்களில் சாஸ் செய்முறையைச் சேர்த்திருப்பார் போல.
/// நான் நேற்றுதான் சாப்பிட்டேன். நமுத்துப்போன பீஸ்ஸா மாதிரி இருந்தது..///
பதிலளிநீக்குஇதற்குத் தான் இத்தனை கட்டுமான வேலைகள்.
லெசானியா மேற்கத்திய உணவு...
இப்படித்தான் இருக்கும்..
சீஸ் உருகி கூடுதல் சுவை தருகிறது. நான் பீட்சா சாப்பிடும்போது கூட சீஸ் இருக்கும்படி பார்த்துக் கொண்டதுண்டு. சமீபத்தில் பீட்ஸா சாப்பிட்டதில்லை.
நீக்குகடக் முடக் லெசானியா இனிமேல் தான் செய்ய வேண்டும்
பதிலளிநீக்குஅதற்கு சீஸ், சாஸ் இல்லாமல் நடுவில் மிக்ஸர், முறுக்கு என்று வைக்க வேண்டும்.
நீக்குலெசானியா ஏடுகளை அவித்துக் கொண்டு அதில் மாட்டின் இறைச்சியைப் பொதிந்து செய்வார்கள்...
பதிலளிநீக்குநான் சாப்பிட்டது காய்கள் & மக்ரோணி கலவை..
ஆம். எதை வேண்டுமானாலும் இடைவைக்கலாம்.
நீக்குபொதுவாக இங்கே கொண்டைக்கடலை, பச்சை மொச்சை அல்லது அவரை மொச்சை போன்றவற்றில் தின்பண்டங்கள் நிறையப்பண்ணுகிறார்கள் எனச் சொல்லிக் கேள்வி. ஃபலாஃபல்லும் அதில் ஒன்று. இதை நான் சில வருடங்கள் முன்னர் வீட்டில் செய்து பார்த்திருக்கிறேன். பதிவும் போட்ட நினைவு.
நீக்குஎதையாவது ஏடாகூடமாகத் தின்று விட்டு உபத்திரவத்தை வாங்கிக் கொள்ள வேண்டாம்...
பதிலளிநீக்குஎப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டாமா.... அதனால் சுவைத்தேன். என் சுவைக்கு மறுமுறை தேடும்படி இல்லை அது!
நீக்குஉணவகங்களில் சாஸ் சீக்கிரமே கெட்டுப் போவதைத் தடுப்பதற்கு அதனுடன் சிட்ரிக் அமில வகைகளைச் சேர்க்கின்றனர்
பதிலளிநீக்குசாஸை வீட்டில் தயாரித்துக் கொள்வது நல்லது
ஓ.. அப்படியா?
நீக்குநம்முடைய காசைப் பிடுங்குவதற்கு எத்தனை எத்தனையோ ஏவார தந்திரங்கள் உள்ளன...
நீக்குஅம்பேரிக்காவில், கான்டினென்டல் ஓட்டல்களில் ஸ்டார்டர்ஸுக்கு இந்த லெசானியாவும் இருக்கும். பையர், மருமகள் எல்லாரும் வாங்கிப்பாங்க. நான் சீஸ் ஃப்ரை வாங்கினாலே ஒண்ணே ஒண்ணு தான் எடுத்துப்பேன். இந்தியாவின் ஓட்டல்களில் ஸ்டார்டர்ஸில் நல்ல சுவையான உணவு வகைகள் கிடைக்கும். பஜ்ஜி, வடை, போண்டா, குழிப்பணியாரம், சிய்யம், பகோடா, குணுக்கு போலக்கடலைமாவில் பண்ணினது, டோக்ளா, காலிஃப்ளவர் மஞ்சூரியன் என விதம் விதமாக ஸ்டார்டர்ஸ் இருக்கும்.
பதிலளிநீக்குஅட! லசான்யா!!! ராதா அவங்க நிறைய வித்தியாசமா செய்வாங்க. இங்கும் குறிப்புகள் வந்திருக்கிறதே.
பதிலளிநீக்குஇது ஒரே ஒரு முறை மகன் சொல்லித் தந்து செய்தேன். அவன் இருந்த போது. இப்ப எங்க? அப்புறம் செய்ததில்லை.
இந்த சாஸ் வகைகள் நான் செய்து வைத்துக் கொள்வதுண்டு வீட்டில் இனிப்பில்லாமல். எனவே அப்ப அவன் சொல்ல நான் செய்துவிட்டேன்.
இப்ப ரெசிப்பி பார்த்ததும், சரி செய்திடலாமா என்று தோன்றியது. பார்ப்போம்.
கீதா
ஓவனிலிருந்து எடுத்ததும் சாப்பிட வேண்டும். அப்ப நல்லாருக்கும்
பதிலளிநீக்குகீதா