நான் நினைத்திருந்தது காலை அந்த இடத்தை அடைந்த உடனேயே கிளம்பி ரோப் கார் சர்வீஸுக்கு அழைத்துச் செல்லப் படுவோம் என்று. ஆனால் நேரம் நடந்துகொண்டிருக்க, காஃபி குடித்துவிட்டு தயாராய்க் காத்திருந்த நாங்கள் காத்துக்கொண்டே இருந்தோம்.
அங்குள்ள லோக்கல் தி பிரமுகரிடம் சொல்லி இருப்பதாகவும் என் செல்போன் நம்பருக்கு அறநிலையத்துறையிடமிருந்து அழைப்பு வரும் என்று சொன்னார்கள்.
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி..
மண்டபத்தில் மாலை நடக்க இருக்கும் விளக்கு பூஜைக்கான விளக்குகள் ஓரத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்தன.
அதை மதியத்துக்கு மேல் அலங்கரிக்க வேண்டும் என்று சொன்னபோது, பாஸ் தானும் வந்த உடன் அதற்கு உதவுவதாய் சொல்லிக் கொண்டிருந்தார். டைனிங் ஹாலும், இவர்கள் இருக்கும் தங்குமிடமும் மேலே முதல் தளம்.
கீழே சகோதரர்கள் இருவரும் அங்கு இருக்கும் நரசிம்மருக்கு பூஜை செய்வதற்கான வேலைகளில் ஆழ்ந்திருந்தனர். விஸ்தாரமாக மந்திரங்கள் சொல்லி இருவரும் பூஜை செய்வார்கள். ஸ்வாமிகளின் திரு உருவங்களை அபிஷேகம் செய்வது முதல், ஈரம் போக துடைத்து அலங்காரம் செய்வது வரை மூத்தவர் செய்ய, இளையவர் சிறு சிறு உதவிகளுடன் சத்தமாக மந்திரங்கள் சொல்லியபடி இருப்பார். மூத்தவரும் மந்திரங்கள் சொல்லிக்கொண்டே தான் செய்வார். அவர் மகன் கல்லூரியின் முக்கிய வகுப்பு காரணமாக வரவில்லை. இளையவரின் மகனும் பூஜையில் கலந்து கொள்வான் என்றாலும் கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளை. ரெட்டை வால்.
பூஜைக்கு அங்கே தார் தாராக வைக்கப்பட்டிருந்த வாழைப்பழங்களை சீப்பு சீப்பாக எடுத்துக் கொண்டு வந்து ஜன்னல் வழியே குரங்குகளை அழைத்து விநியோகம் செய்து கொண்டிருந்தான்! மூத்தவர் ஒரு குரல் ஓங்கி கொடுத்து அவனை பூஜைக்கு அழைத்துக் கொண்டார்.
இதை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி காத்திருந்தோம். நடந்து ஏறத் தொடங்கி இருந்தால் தரிசனம் முடிந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் திருமஞ்சன நேரம், திரை போட்டிருக்கிறார்கள், எனவே ரோப் காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்றார்கள்.
மதுவின் உதவியாளர் வந்து ரோப் காரில் வருபவர்கள் பெயரை எல்லாம் குறித்துக் கொண்டு, தொடர்புக்கு என் பெயரையும் வாங்கி கொண்டு வாட்ஸப்பில் குறிப்பிட்ட பெரிய மனிதருக்கு அனுப்புவதாகச் சொல்லிச் சென்றார். அப்போது மணி ஒன்பது. இதுவே இப்போதுதானா என்று தோன்றினாலும், கொஞ்சம் நம்பிக்கை வந்தது. எங்கள் ஓட்டுநர் பெயரையும் சேர்த்துச் சொல்லி விட்டோம். கூட இன்னும் மூன்று பேர்களும் சேர்ந்திருந்தார்கள். உலாவி, உலாவி கால் வலிக்க, 'கால் வந்ததா, கால் வந்ததா' என்று கேட்டபடி இருந்தான் மது.
இங்கு கீழே பூஜை முடிந்து, திரைபோட்டு திருமஞ்சனம் அம்சி ஆக, 'சாப்பிட்டு விட்டு செல்கிறீர்களா' என்று கேட்கப்பட்டபோது மணி ஒன்பதரை. எப்போது வேண்டுமானாலும் கூப்பிட்டு விடுவார்கள் என்று இருந்த நிலையில் பாதி சாப்பாட்டில் எழ வேண்டி இருந்தால் என்ன செய்வது என்று மறுத்தோம். மேலும், நரசிம்மரை தரிசிக்கும் வரை சாப்பிடாமல் இருக்க பாஸ் பிரியப்பட்டார். அவர்தான் உண்மையில் பசி தாங்க மாட்டார். தலை சுற்றும். வாயில் உமிழ்நீர் சுரக்கும். ஆனாலும் அவரே ப்ரயத்தனமாக இருக்கும்போது பசி பாதிக்காத எனக்கும் பிரச்சனை எழவில்லை. டிரைவரும் எதுவும் சாப்பிடாமலேயே இருந்தார். அவரை மேலே டைனிங் ஹாலிலேயே இருக்கச் செய்து, நாங்கள் அங்கேயே இவர்கள் அறையில் இருந்தோம்.
இன்னும் ஒரு முறை காஃபி ஆச்சு!
மதுவின் மகனை எங்களுடன் அனுப்ப இருந்தார்கள். அவனுக்கு எல்லா இடமும் அத்துபடி என்பதால் அவன் பார்த்துக் கொள்வான் என்று ஏற்பாடு/ அவனோ, என்னை பயமுறுத்திக் கொண்டே இருந்தான். போகும்போது வின்ச்சில் சென்று விடலாம். வரும்போது கிடையாது, நடந்துதான் இறங்க வேண்டும் என்றான்.
கல்யாணத்துக்கு வருவது மாதிரி சித்தி குடும்பத்துக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் லக்கேஜுடன் வந்து கொண்டே இருந்தார்கள். அவர்கள் எல்லாம் மூன்று நாட்கள் தங்கி ஞாயிறு இரவு கிளம்புவது போல வந்திருந்தார்கள். நாங்கள் அன்றே கிளம்புவது போல திட்டம். மறுநாள் சேலம் வேறு கிளம்புவதாக இருந்தோம்.
மணி பத்தை தாண்டிக் கொண்டிருக்க, 'என்னடா இது' என்று இருந்தது. 'கால் வந்ததா' கேள்வியும் நின்று போயிருக்க, எனக்கு அந்த உள்ளூர்ப் பிரமுகரின் அலைபேசி எண்ணைக் கொடுத்தார்கள். அங்கே செல்லும் போது ஏதாவது பிரச்சனை வந்தால் இந்த நம்பருக்கு கால் பண்ணி என் பேரைச் சொல்லுங்க என்று மூன்று பேர் சொன்னார்கள்! பிரச்சனை என்றால் என்ன வரும். குறுக்கே போறீங்க என்று யாராவது தகராறு செய்வார்களா ஏன்று கேட்டேன். முதல் நாளே அப்படி தகராறு நடந்ததாக மூத்தவன் சொல்லி இருந்தான். பணம் அதிகமாக கேட்பார்களா என்றும் கேட்டேன். இரண்டுக்குமே இல்லை, பயப்படவேண்டாம் என்று பதில் வந்தது.
"அங்க போனா நீங்களே புரிஞ்சிப்பீங்க அத்திபா"
இது இன்னும் குழப்பியது!!
கடைசியில் பத்து பத்து ஆகும்போது 'பத்தரை மணிக்கு அங்கு இருக்க வேண்டும்' என்று தகவல் வந்ததாகவும், கிளம்பும் படியும் தகவல் வந்தது.
ஒவ்வொருவரையும் கிளப்பிக்கொண்டு கீழே வந்தோம். மணி பத்தே காலைத் தாண்டிக் கொண்டிருந்தது.
"கவலைப்படாதீங்க அத்திபா... பக்கம்தான்.. போயிடலாம்"
நாங்கள் எங்கள் காரை அருகிலேயே நிறுத்தி இருந்ததால் அதில் உடனே ஆரோகணித்து விட்டோம். எங்களுடன் வர இருந்த குடும்பம் காரை சற்றுத் தொலைவில் நிறுத்தி இருக்க, அவர்கள் அதில் ஏறச் சென்றார்கள். தெரு திரும்பியதும் கார் பார்க்கிங் டோக்கன் கொடுத்து விட்டார்கள். முப்பது ரூபாய்.
மணி 10.20. எனக்கு உள்ளுக்குள் பதட்டமானது. ஏதோ வைகை, பாண்டியன், சதாப்தி எக்ஸ்பிரஸை பிடிக்கும் உணர்வு... நேரம் தாண்டினால் கிளம்பி விடுமென்ற பிரமை.
"அங்கிள்.. கவலைப்படாதீங்க.. ஐந்து நிமிடத்துக்கு ஒரு வண்டி இருக்கு... டோன்ட் க்ரை" என்றான் மதுவின் பையன்.
உட்கார சீட் இருக்குமா, ஸ்டேண்டிங் உண்டா, கூட்டம் அதிகமாக இருக்குமா என்கிற என் கேள்விகளுக்கெல்லாம் என்னை வினோதமாக பார்த்தான்.
"ஏன் அங்கிள்.. எங்கேயாவது உட்கார ஸீட் இல்லாமல் ஏதாவது ரைட் இருக்குமா? பஸ், ட்ரெயின், வேன், கார்.. நீங்க என்ன குழந்தைத்தனமா கேள்வி கேக்கறீங்க... ரோப் கார்ல எங்கேயாவது ஸ்டேண்டிங் இருக்குமா? முன்னால இது மாதிரி ரோப் கார்ல ஏறினதே இல்லையா? அப்புறம் இது மாதிரி இடங்களில், அதுவும் விசேஷ நாட்களில் கூட்டம் இல்லாமல் ஃப்ரீயாக இருக்குமா?" என்று பதில் கேள்விகள் கேட்டு மானத்தை வாங்கினான்.
எனக்கு பழக்கமே இல்லை என்பதை நம்ப மறுத்தான். சிறுவயதில் ஓரிருமுறை தஞ்சாவூர் சிவகங்கா கார்டனில் தொங்கு பாலத்தில் சென்றிருக்கிறேன். அங்கும் பெரும்பாலும் சர்வீஸ் நிறுத்தி தான் வைக்கப்பட்டிருக்கும்!
தூரத்தில் ரோப் கார் ஸ்டேஷன் தெரியும் போது தடுத்து நிறுத்தப் பட்டோம். பார்க்கிங்கில் காரை விடச் சொல்லி போலீஸ் அதட்டியது. இறங்கி நடக்கலாம் என்றால் மணி 10.22. காரை தூரத்தில் நிறுத்தி விட்டு ஓட்டுனரும், அந்த குடும்பத் தலைவரும் திரும்பும்போது மணி 10.25
வாட்ச்சை வாட்ச்சைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை கேலியாக பார்த்துக் கொண்டிருந்தான் சதுஷ்கவி என்னும் பெயர் கொண்ட மதுவின் பையன்.
===================================================================================================
முதுமையில் இளமை - சியாமளா வெங்கட்ராமன்
முதுமையில் இளமையாக இருக்க முடியுமா என்றால் கட்டாயம் முடியும், உடலளவில் இல்லாவிட்டாலும் மனதளவில் இருக்கலாம். நான் ஒரு சூப்பர் சீனியர் ஆனால் நான் எனக்கு வயதாகிவிட்டது என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. வயது என்பது நம்பர்தானே ஒழிய வேறில்லை.
வயதான காலத்தில் கணவன் மனைவி இருவரில்யாராவது ஒருவர் இறப்பது சகஜம். இதை மனதளவில் ஏற்றுக் கொள்வது அவசியம். அதேபோன்று நம் உடல் உறுப்புகள், கண்கள், பல், தோல், காது என இவற்றில் பிரச்சனைகள் வருவது சகஜம் என நினைப்பது முக்கியம்,
தற்கால காலகட்டத்தில் ஒவ்வொரு தம்பதிக்கும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான். வெளிநாட்டுக்கு படிக்கச் சென்று நிரந்தரமாக அங்கே தங்கி விடுகிறார்கள், கூட்டு குடும்பம் சிதைந்து தனி குடும்பம் என்று ஆனதால் ஒருவர் மட்டும் வாழும் பொழுது தனிமையில் இருக்கும் படி யான சூழ்நிலை, தனிமையை நாம் எப்படி ஏற்றுக் கொண்டு வாழ்வது என்பதே முதுமையின் ரகசியம், அப்போதுதான் நம் உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாக இருப்போம்,,,
குழந்தை பருவத்தில் எப்படி டைம் டேபிள் போட்டு நம்ம குழந்தைகளை வளர்த்தோமோ அப்படி நாமும் வயதானபோது நமக்கு நாமே டைம் டேபிள் போட்டுக்கொண்டு வேலைகளை செய்ய பழக வேண்டும். அதனால் நாம் சோம்பேறியாக இல்லாமல் நமக்கு நாமே எஜமானவர்களாக இருக்கலாம், வயதானால் முதலில் பாதிக்கப்படுவது கால்கள் தான், எனவே சிறிய நடைபயிற்சி அவசியம் வீட்டில் உள்ளேயோ வெளியிலேயே நடை பயிற்சி செய்ய வேண்டும், சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வதும் அவசியம் அதற்காக ஜிம்மிற்கு போக வேண்டும் என்று அவசியமில்லை,கை கால்களை அசைத்து சிற்சில உடற்பயிற்சிகளை செய்தாலே போதும்.அதிக நேரம் உட்கார்ந்து இல்லாமல் வீட்டிற்குள் நாம் சிறு சிறு வேலைகளை செய்து வந்தோமான ல் போதும்,
இண்டாவதாக நம் தனிமையை போக்க சிறந்த மருந்து அழகியல் நட்பு. அதாவது நல்ல நண்பர்கள் நம் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள..... வாய்விட்டு சிரித்து பேச...... பேசுவதன் மூலம் நம் மன இறுக்கம் குறைந்து ரத்த ஓட்டம் சீராகும், நேரில் தான் சந்தித்து பேச வேண்டுமென்று இல்லை வீடியோ காலில் கூப்பிட்டுபேசுவதால் நாம் அருகில் அவர்கள் இருப்பது போன்று உணர்வு ஏற்படும், தனிமை என்ற எண்ணம் நம்மிடம் இருந்து விலகும். தனிமையில் சிலருக்கு சாப்பிட தோன்றாது, அதனால் நமக்குபிடித்த சினேகிதர்களை ஃபோனிலோ வீடியோ காலில் கூப்பிட்டு பேசிக் கொண்டே சாப்பிடலாம், இது ஒரு சிறந்த முறை தனிமையைப் போக்க! நமக்கு வயதாகி விட்டதே நமக்கு எதுவும் தேவையில்லை என்று எண்ணாமல் ஏதேனும் ஒரு குறிக்கோள் கொண்டு வாழப்பழக வேண்டும்.. நம் இளமையில் செய்ய முடியாத மனதில் உள்ள சில கலைகளை தூசி தட்டி எடுத்து புதுப்பிக்கலாம், உதாரணத்திற்கு ஓவியம் வரைதல், இசை, கதை எழுதுதல் என எது விருப்பமோ அதை நாம் செய்ய பழகலாம் நம் மனமும் உடலும் சுறுசுறுப்பாக இருக்க கடந்த கால கசப்பானநிகழ்ச்சிகளை குப்பை என்று நினைத்து மனதில் இருந்து தூக்கி எறிய வேண்டும், மகிழ்ச்சியான எண்ணங்களை மலரும் நினைவுகளாக கொண்டு நேரத்தை கழிக்க வேண்டும் இவைகளை நீங்களும் பழகினால் நீங்களும் என்றும் 18 தான் என்ன நான் சொல்வது சரிதானே?
======================================================================================================
தேவன் எழுதிய 'துப்பறியும் சாம்பு' புத்தகத்திலிருந்து அவர் எழுத்து சுவாரஸ்யத்துக்கு சும்மா கொஞ்சம்...
'சரி, தெரிந்து கொண்டேன். இந்த கேஸ் விஷயமெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.நான் பத்து பன்னிரண்டு நாட்களாக வேலை செய்து வந்திருக்கிறேன். ஒன்றும் செய்யத் சொல்வதற்கில்லை. இன்னும் சிரமப்பட்டுப் பார்க்கலாமென்றுதான் இருக்கிறேன். நீங்களே நகையைக் கண்டுபிடித்தாலும் எனக்குச் சந்தோஷந்தான்!' என்றார்.
'என்னமோ.. என்னாலானது.. தங்களுக்கு.. அதாவது.. வேண்டுமானால்.. இல்லை, வேண்டிய மட்டும்.. ஒத்தாசையாயிருக்கிறேன்!' என்று குழறினான் சாம்பு.
'உம்ம உதவி, ஒத்தாசை ஒன்றும் எனக்குத் தேவையில்லை!' என்றார் கோபாலன் சற்று அகம்பாவமாக.
கோபாலனே தொடர்ந்து, 'சென்ற பத்து நாள்களாக நான் கண்டு பிடித்ததையும் சொல்லி விடுகிறேன். தேவையானால் நீர் உபயோகித்துக் கொள்ளும். அது, குற்றவாளி பொடி போடுபவனாயிருக்க வேண்டும் என்பது குற்றம் நடந்த ஸ்தலத்தில் புத்தம் புதிதாகப் பொடி சிந்திக்கிடந்தது. தெரிந்ததா?' என்றார்.
சாம்பு, 'ஹும்!' என்றான். அவன் மூளை வேலை செய்தது. குற்றவாளி பொடி போடுபவன் மட்டும் அல்ல; பொடியைச் சிந்துபவனாகக்கூட இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
கோபாலன் எழுந்து, 'நீர் உசிதம்போல் வேலையைத் தொடங்கலாம், நான் வருகிறேன்!' என்று கூறிவிட்டு அறையைவிட்டு வெளியே சென்றார்.
பத்து நிமிஷத்துக்கெல்லாம் குழந்தை தங்கவேலு சாம்புவிடம் ஓடிவந்து, 'திருடனைக் கண்டுபிடிச்சுட்டேளா? என்று கேட்டான்.
'அதுக்குள்ளே எப்படியடா குழந்தை, கண்டுபிடிப்பது?
'நானும் உனக்கு ஒத்தாசை செய்யட்டுமா?' என்று கேட்டான் பயல்.
'ஏன் இவனை நாம் ஒத்தாசைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது? என்று சாம்புவுக்குத் தோன்றியது. உடனே, 'சரி குழந்தை! நீ எனக்கு ஒத்தாசை செய்யலாம். ஆனால் நான் சொல்வதை யாரிடமும் சொல்லக் கூடாது. நான் பார்த்துவரச் சொல்வதையும் ஜாக்கிரதையாக அவ்வப்போது பார்த்துவர வேண்டும்!" என்றான்.
'ஓ! இப்போ நான் என்ன செய்யணும்?
'சரி. இந்த வீட்டிலே யார் யார் பொடி போடுகிறார்கள் என்று சொல்லு. அப்போ யார் கீழே பொடி சிந்தறான்னு பார்த்துக் கொண்டு வா!' என்றான். தங்கவேலு ஒரே ஓட்டமாக ஓடினான். அதற்கப்புறம் இரண்டு மணி அவகாசம் அவன் சாம்புவின் பக்கமே வரவில்லை. சாம்பு, இடைக்காலத்தில் குப்புசாமியுடன் பேசிக் கொண்டிருந்தான். பேச்சுவாக்கில் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பதையும் விசாரித்து அறிந்தான். அதனால் அவனுக்கு ஒருவித உபயோகமும் தென்படவில்லை; அவர்களை விசாரிக்க வேண்டியதும் அவசியமாகப் படவில்லை. மூன்றாவது மாடியில் புதிதாகக் கட்டிய இடங்களை, குமாஸ்தா அழைத்துப்போய்க் காண்பித்தான். திருட்டுப் போகும்போது கைப்பிடிச் சுவர் எழுப்பி, அதில் கலசங்களைக் கொல்லத்துக்காரர்கள் பொருத்திக் கொண்டிருந்ததாகக் குப்புசாமியிடமிருந்து அறிந்தான். வீடு பூராவுமே சுற்றிவந்து சாம்பு இண்டு இடுக்குகள் எல்லாம் பார்த்தான். அதனால் ஏற்பட்ட பலனும் பூஜ்யந்தான்.
பிறகு சாம்பு உதட்டைப் பிதுக்கிக் கொண்டு, குப்புசாமியுடன் திரும்பினான். ஏனோ குப்புசாமி மீது சாம்புவுக்கு ஓர் அபார வாஞ்சை பிறந்துவிட்டது. பொடி போடுபவர்கள் மேல் தனக்கு உள்ள சந்தேகத்தை அவனிடம் சொல்லி, 'மிஸ்டர் குப்புசாமி! என்னால் என்னவோ இந்தக் கேஸைக் கண்டுபிடிக்க முடியு மென்று நான் நினைக்கவே இல்லை. உம்மால் கூடிய ஒத்தாசை செய்ய வேணும்!' என்று அந்தரங்கமாகக் கேட்டுக் கொண்டான்.
'அதற்கென்ன சார்! உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்! நான் உடனே செய்கிறேன். ஆனால், நான் பொடி போடுவதில்லை. பார்த்துக் கொள்ளுங்கள்!' என்று சிரித்து விட்டுப் போனான் குப்புசாமி.
சுமார் ஒரு மணிக்குப் பிறகு, தங்கவேலு சாம்புவை வந்து ரகசியமாகப் பார்த்தான்.
'தாத்தா பக்கத்திலே என்ன கிடந்தது, தெரியுமா?' என்று கேட்டான் காதோடு.
'தெரியாது, சொல்லு!'
'கீழே பொடி கிடந்தது!'.......
=======================================================================================================
"பார்த்துப் போ.. பார்த்துப் போ... நீ நடந்து போகும் பாதையிலே... சில நண்பர்கள் வரக்கூடும்.. சில நரிகளும் விளையாடும்..."
பாதையெங்கும் பாதாளங்கள்
உடன் பயணித்தோர்
யாவரும்
ஒவ்வொரு குழியில் விழுந்து
காணாமல்
போய்க் கொண்டிருக்கிறார்கள்.
நான் தேடாவிட்டாலும்
எனக்கான பாதாளமும்
கட்டாயம் காத்திருக்கும்.
கைதட்டி வரவேற்கவில்லை
கைகட்டி காத்திருக்கவும் இல்லை
வாய்பொத்தி பயமுமில்லை
நான்
விரும்பினாலும் விரும்பா விட்டாலும்
வரத்தான் போகிறது
வாழ்ந்துவிட்டு போவோமே
அதுவரை
===============================================================================================
பதிவு நீளம் என்று கருதவேண்டாம். எளிதாகக் கடக்க கொஞ்ச தூரம்...
பேஸ்புக்கில் இப்படி ஒரு அழைப்பு நெடுநாட்களாக காத்திருந்தது. அவரிடம் சென்று நான் கேட்ட கேள்விகளும், அவர் எதிர்பார்ப்புகளும்!!

JKC அனுப்பிய ஜோக் ஒன்று...
இதைப் பற்றி சமீபத்தில் ஏதோ பேசினோமோ....
================================================================================================
பழைய மதி ஜோக் ஒன்று....
அம்மாடி.... வணங்குகிறேன்.
திருடனுக்கு ஒரு வேண்டுகோள்....
=============================================================================================
கர்ணன் பற்றி LK முன்னர் இதை பேஸ்புக்கில் போட்டிருந்தார். எப்போதோ எடுத்து வைத்தது... வெளியிட நேரம் வந்தது...
கர்ணன்
கர்ணனை ஆரம்ப கட்டங்களிலிருந்து துஷ்ட சதுஷ்டயம் (தீயோர் நால்வர் குழாம்) சார்ந்தவனாகவே வியாச முனிவரின் விவரிப்பு; துர்யோதனனுக்கு துராலோசனைகள் பல கூறியவன் கர்ணன். அர்ஜுனனை அழிக்கும்வரை கேட்போருக்குக் கேட்டதை அளிப்பேன் என அவன் செய்திருந்த சபதமே அவனைக் கொடையாளியாகக் காட்டுகிறது.
அவன் போரில் தோற்ற ஸந்தர்பங்களும் உள்ளன. பாரத யுத்தத்தில் அவனடைந்த தோல்விகள் தவிர, அதற்கு முன்னரும் அவன் போர்களில் தோற்றுள்ளான். விராட பர்வம் கோஹரண அத்யாயம் அர்ஜுனனை எதிர்கொள்ள முடியாமல் கர்ணன் புறமுதுகிட்டு ஓடிய செய்தி சொல்கிறது. கந்தர்வ யுத்தப் பரீட்சையிலும் ஐயா பாசாகவில்லை.
போரில் உயிரிழக்குமுன் கண்ணபிரான் வினவிய வினாக்களுக்கு விடைகூற இயலாமல் வெட்கித் தலைகவிழ்ந்தது உள்பட மேற்கூறிய அனைத்துமே வியாசர் விவரித்தவையே.
கர்ணனுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என ஒரு கப்ஸா; கர்ணன் குரு வம்சச்சிறார் அனைவருடன் சேர்ந்துகொண்டு த்ரோணரிடம் கல்வி கற்றவன். ஆதி பர்வத்தில் விவரமுள்ளது.
நவீன வியாசர்கள் திடீரென்று கர்ணனை ஏனோ உயர்த்திப் பிடிக்க முனைந்துள்ளனர். Invading the sacred ப்ராஜக்ட் சார்ந்த முயற்சியாக இருக்கலாம்.
” க்வ தே தர்மஸ்ததா கத: ? “
யுத்த பூமியில் கண்ணபிரான் கர்ணனிடம் கேட்பது -
உன் நியாயம் அப்போது எங்கே போனது ?
க்வ தே தர்ம: ததா கத: ?
யுத்தபூமியின்கண் கர்ணன் விழுந்து கிடக்கையில் கண்ணபிரான் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்...’ பாடியபடி அவனிடம் சென்று அறத்தை யாசித்ததாகத் திரைப்படம் சொல்கிறது. ஆனால் பாரதம் கர்ண பர்வத்தில் அப்பாடல் இல்லை.
சல்யன் கைவிட்டுச் சென்றபின் தேர்க்காலைப் பள்ளத்திலிருந்து எடுத்து நிறுத்தும்வரை போர் நிறுத்தம் செய்யுமாறு கேட்கிறான் கர்ணன். அப்போது கௌரவரோடு சேர்ந்துகொண்டு துஷ்ட சதுஷ்டயத்தில் ஒருவனான கர்ணன் செய்த நேர்மையற்ற செயல்களைக் கண்ணபிரான் பட்டியலிடுகிறார்-
சூதாட்டம் அறியாத தர்மபுத்ரரை விளையாட அழைத்தது, வனவாசம் முடித்துவந்த பாண்டவர்க்கு அவர்க்குரிய உரிமையைத் தர மறுத்தது, பீமசேனனுக்கு உணவில் நஞ்சிட்டது, அரக்கு மாளிகையில் தங்கச் செய்து நெருப்பிட்டது, சூதாட்டம் முடிந்து அவை நடுவே கையறு நிலையில் நின்ற பாஞ்சாலியைப் பார்த்து "க்ருஷ்ணே! பாண்டவர்கள் அழிந்தனர் என வைத்துக்கொள்; வேறு யாரையாவது கணவனாக வரித்துக்கொள் " என இகழ்ந்தது, அபிமந்யுவை மஹாரதர் பலர் சூழ்ந்து கொண்டு கொன்றது.
கர்ணனிடம் இவற்றுக்கு விடை இல்லை; அர்ஜுனன் அவன் கதையை முடிக்கிறான்.
யதா ஸபாயாம் ராஜாநமநக்ஷஜ்ஞம் யுதிஷ்டிரம் |
ஆநீய ஜிதவந்தோ வை க்வ தே தர்மஸ்ததா கத: ||
வநவாஸே வ்யதீதே ச கர்ண வர்ஷே த்ரயோதஶே |
ந ப்ரயச்சஸி யத்ராஜ்யம் க்வ தே தர்மஸ்ததா கத: ||
யத்பீமஸேநம் ஸர்பைஶ்ச விஷயுக்தைஶ்ச போஜநை: |
ஆசரத்த்வந்மதே ராஜா க்வ தே தர்மஸ்ததா கத: ||
யத்வாரணாவதே பார்தாந்ஸுப்தாஞ்ஜதுக்ருஹே ததா |
ஹந்துகாமாஸ்ததா யூயம் க்வ தே தர்மஸ்ததா கத: ||
யதா ரஜஸ்வலாம் க்ருஷ்ணாம் து:ஶாஸநவஶே ஸ்திதாம் |
ஸபாயாம் ப்ராஹஸ: கர்ண க்வ தே தர்மஸ்ததா கத: ||
யதநார்யை: புரா க்ருஷ்ணாம் க்லிஶ்யமாநாமநாகஸம் |
உபப்ரேக்ஷஸி ராதேய க்வ தே தர்மஸ்ததா கத: ||
விநஷ்டா: பாண்டவா: க்ருஷ்ணே ஶாஶ்வதம் நரகம் கதா: |
பதிமந்யம் வ்ருணீஷ்வேதி வதம்ஸ்த்வம் கஜகாமிநீம் |
உபப்ரேக்ஷஸி ராதேய க்வ தே தர்மஸ்ததா கத: ||
ராஜ்யலுப்த: புந: கர்ண ஸமாஹ்வயஸி பாண்டவாந் |
யதா ஶகுநிமாஶ்ரித்ய க்வ தே தர்மஸ்ததா கத: ||
யதா(அ)பிமந்யும் பஹவோ யுத்தே ஜக்நுர்மஹாரதா: |
பரிவார்ய ரணே பாலம் க்வ தே தர்மஸ்ததா கத: ||
[ஐம்பெரும் பாதகச் செயல்களில் ஒன்றையேனும் ஒருவன் செய்தது / தூண்டுதல் தந்தது உறுதியானால் அவனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது பழைய ராஜநீதி]
கண்ணபிரானின் வினாக்களுக்கு விடை கூற முடியாமல் கர்ணன் வெட்கி நின்றதும் சொல்லப்படுகிறது -
ஏவமுக்தஸ்ததா கர்ணோ வாஸுதேவேந பாரத|
லஜ்ஜயாவநதோ பூத்வா நோத்தரம் கிஞ்சிதுக்தவாந்||
(பாரத ! கர்ண: வாஸுதேவேந ஏவம் உக்த: ததா லஜ்ஜயா அவநத: பூத்வா, கிஞ்சித் உத்தரம் ந உக்தவாந்)
கண்ணபிரான் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டார் என்று பலரின் குற்றச்சாட்டு. கண்ணன் தம் நாராயணீ ஸேனையை [அளவற்ற வலிமை பெற்ற யாதவர் படை] துர்யோதநனுக்குக் கொடுக்காமல் மறுத்திருக்கலாம்; ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
துரியன் சமாதானத் தூது வந்த கண்ணபிரானை அவமதிக்குமாறு அவையினரை மிரட்டினான். பெருமானை நிலவறைக்குள் அமுக்கிச் சிறைப் பிடிக்கத் திட்டமிட்டான். அவர் மஹாத்மா விதுரரின் இல்லத்தில் தங்கி விருந்தேற்றதை ஏளனம் செய்து மகிழ்ந்தான். அவையின் அறிஞரும், மறை முனிவரும் இதமுரைத்த காலத்தில் , படைச் செருக்கினாலும், மாவீரர் துணையிருப்பதாலும் தொடை தட்டியவாறு அலட்சியப் படுத்தினான்.
கர்ணன் துரியனின் படையை நடத்தியது ஒன்றரை நாள்களே; அதற்குள் அவன்கதை முடிந்து விடுகிறது. மிக அதிக நாள்கள் படை நடத்தியது பீஷ்ம பிதாமஹர் ஒருவரே.
கர்ணனை சூதபுத்திரனாகவே சமுதாயம் மதித்தது; அந்தணர்களே அவனுக்கு 'வஸுஷேணன்' எனும் அழகிய பெயரையும் சூட்டினர்; பிறப்பின் ரகசியம் தெரியாதவன் என அவனுக்கு நாமகரணம் செய்யாமல் அவர்கள் ஒதுங்கவில்லை. அவனது வளர்ப்புத் தாய் ராதையின் பெயரால் அவன் 'ராதேயன்' எனவும் அழைக்கப்பட்டான்; ஆசார்ய துரோணரிடம் பிற அரச குலச்சிறார்களுடன் வித்தைகள் பயின்றான். துரியன் அவனை அங்கதேச மன்னனாக முடிசூட்டவும் செய்தான். உரிய காலத்தில் அவனது தந்தை அதிரதன் கர்ணனுக்கு 'வ்ருஷாலி' எனும் மங்கையை மணமுடிக்கவும் தவறவில்லை; அவன் மணமாகி ஒன்பது மக்களுக்குத் தகப்பனாகவும் ஆனான். பாண்டவர்க்கு அநீதி இழைப்பதிலும் முனைந்து நின்றான். சூரிய தேவனின் அருள் அவனுக்கிருந்தது; இந்திரன் கவச - குண்டலங்களைப் பெற்றிருப்பினும் அவனுக்கு வரங்கள் அளித்தான். சமுதாயம் ஒன்றிணைந்து அவனுக்கு அநீதி இழைத்ததாகக் கதை பரப்புவது முட்டாள்தனம்,
LK
==============================================================================
கல்கி 1946 தீபாவளி மலரிலிருந்து...
சூயிங் கம்
































காலை வணக்கம்!
பதிலளிநீக்குராகுல் காந்தி ஜோக் குறித்து: ராகுல் என்ற பெயர் ராகுவிலிருந்து தான் வந்தது!!
எனக்கு தெரிந்தவரை, சரித்திரத்தில் முதல் முதலாக ராகுல் என்ற பெயர் இடப்பட்டவர் கௌதம சித்தார்த்தனின் மகன். பந்தங்களை எல்லாம் துறந்து போக நினைக்கும் போது, கை விலங்குகள் போல குழந்தை பிறந்திருக்கிறதே என்ற ஆதங்கத்துடன் சித்தார்த்தர் 'கை விலங்கு' என்ற பொருளில் மகனுக்கு ராகுலன் என்று பெயர் வைத்தார்!! எதற்காக மற்றவர்கள் அந்த பெயரை இப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு என்றைக்குமே புரியப் போவதில்லை.
வாங்க TVM,,, உங்க பெயரைச் சுருக்கி கூகிளில் TVM என்று டைப் பண்ணும்போது தத்வம் என்று ஒரு ஆப்ஷன் வருகிறது!
நீக்குராகுலன் என்கிற பெயருக்கு இப்படி ஒரு பொருள் இருப்பதை இன்றுதான் அறிகிறேன். என் பெரிய மகனுக்கு ராகுல் என்றுதான் பெயர் வைத்திருக்கிறேன். குறுக்கு வழியில் புத்தர் ஆக ஆசைப்பப்பட்டேன்!! ஹிஹிஹி.. இந்தப் பொருளை எல்லாம் அறிந்திலேன்..
//TVM என்று டைப் பண்ணும்போது தத்வம் என்று ஒரு ஆப்ஷன் வருகிறது! // LOL
நீக்கு//என் பெரிய மகனுக்கு ராகுல் என்றுதான் பெயர் வைத்திருக்கிறேன்.// Sorry, bro! My bad. Didn't mean to rub you on the wrong side!!
சேச்சே... இதில் என்ன இருக்கிறது! புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்ததால் என் பெயர் ஸ்ரீராம். இபப்டி காரணம் பார்க்காமல் வேறு ஒரு அவசரத்தில் வைத்த பெயர் அது. அவன் நட்சத்திரம் திருவோணம்!
நீக்குஆண் ஒப்பர் இவன் நேரில்லை காண் திருவோணத்தான் உலகாளும் என்பார்களே -பெரியாழ்வார் திருமொழி 1 -1 -3
நீக்கு__/\__ எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் - ஏற்கனவே நைஸாக பலமுறை பீத்திக்கொண்டதால் - உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. எங்கள் திருமணம் நடந்தது ஒப்பிலியப்பன் கோவிலில்.. எனக்கு இரண்டு மகன்கள். இரண்டு பேரும் திருவோணம்!
நீக்குவேறென்ன வேறென்ன வேண்டும்!
நீக்கு__/\__
நீக்குபக்தர்களுக்கும் பாஸ்களுக்கும் ஒரு சேர ஊக்குவிக்கும் மூக்குப்பொடி அம்பாள் ஆபீசர்ஸ் பொடி! டி ஏ எஸ் ரத்தினம் பட்டணம் பொடியின் முன்னோடி!!
பதிலளிநீக்குஎங்கள் தாத்தா - KGG- ன் அப்பா - ஒரு மூக்குப்பொடி பிரியர். கையில் எப்போதும் வைத்திருப்பார். அதற்கென சில்வர் கலரிலொரு டப்பாவும் வைத்திருந்தார்.
நீக்குமாப்பிள்ளை மூர்ச்சை ஜோக்: ரேஷனில் அரிசி தட்டுப்பாடு; ஆனால் கோதுமை கிடைத்துக் கொண்டிருந்தது போலும், unless I missed something
பதிலளிநீக்குஅரிசிப் பஞ்சம் வந்த காலத்தில்தான் தமிழகத்தில் தீவிரமாக கோதுமைப் பொருட்கள் மற்றும் அதன் செய்முறைகள் நுழைந்தன. 40கள் எனச் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். ரவையும் அப்போதுதான் அறிமுகம். ஶ்ரீநிவாசன் சாருக்கு நியாயமா வரவேண்டிய சந்தேகம், தாத்தா காலத்தில் பெண்பார்க்கச் செல்லும்போது சொஜ்ஜி பஜ்ஜி கிடையாதா என்பதுதான். பெண் பார்ப்பது என்ற ஒன்றே இருந்திருக்காது.
நீக்குஆக அந்தத் துணுக்கு சிரிக்க வைக்கவில்லை. சிந்திக்க வைத்திருக்கிறது!!
நீக்குவாங்க நெல்லை... உங்களை மறந்துட்டேன் பாருங்க...
நீக்குஎன் அம்மா/பெரியம்மா இருவருக்கும் அந்த ரேஷன் காலத்திலே தான் திருமணம். திருமணத்துக்கு வருபவர்கள் தங்கள் ரேஷன் கார்டைக் கொண்டு வரவேண்டும் என்பதாக அரசுக் கட்டுப்பாடு இருந்ததாகச் சொல்லுவார்கள். அரிசி கிடைக்காத காலம் அது. இஎதைப் பற்றிச் சித்தப்பாக் கூடத் தன் பதினெட்டாவது அட்சக்கோடு புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார். அரிசிச் சாதம் அதிகம் சாப்பிட முடியாது எனவும் கறுப்புச் சந்தையில் தெரிஞ்சவங்க மூலம் அரிசி அதிகவிலையில் வாங்கியதாகவும் சொல்லி இருப்பார். இதைப் படிச்ச ஜெயமோகன் சித்தப்பா இளமையில் சாப்பாடு கிடைக்காமல் வறுமையில் வாடியதாகவும் அதனால் தான் அவர் ஒல்லியாகவே இருந்ததாகவும் அளந்திருப்பார். மேலும் கல்யாணம் ஆனதும் சித்தப்பா ரொம்பக் கஷ்டப்பட்டதாகவும் சித்தி அப்பளாம் இட்டு விற்றுக் குடும்பதைக் காப்பாற்றியதகா எல்லாம் சொல்லி இருப்பார். ஒரு அரசாங்கக் கட்டுப்பாடு எத்தனை பேருக்கு எவ்வளவெல்லாம் கற்பனைகளைத் தூண்டி விட்டிருக்கிறது.
நீக்குடி எம் எஸ் திருமணப் பத்திரிகையிலும் இந்த விஷயம் குறிப்பிடப்பட்டிருந்தது என நினைவு
நீக்குவாங்க கீதா அக்கா... உணவுக்கட்டுப்பாடு இருந்த காலத்தில் திருமணத்துக்கு வருபவர்கள் அவரவர்கள் ரேஷன் கார்டைட் கொண்டுவரவேண்டும் படித்திருக்கிறேன். எங்கு என்றுதான் நினைவில்லை.
நீக்கு2 காய் மட்டும் திருடவும்; வேற லெவல்!
பதிலளிநீக்குஅளவோடு திருடுங்கள்; இரண்டுக்கு மேல் வேண்டவே வேண்டாம்! முருங்கையோடு குடும்ப கட்டுப்பாட்டையும் இணைக்காவிட்டால் எப்படி ;-)
ஆமாமாம்.... குடும்பக் கட்டுப்பாடோடு முருங்கைக்கு சம்பந்தம் உண்டு என்று மு மு பாக்யராஜ் சொல்லி இருக்கிறாரே....
நீக்குBonomint விலை தெரியவில்லை. ஒருக்கால் விலையை பார்த்தால் சாப்பிடாமலே மருந்து வேலை செய்திருக்குமோ ;-)
பதிலளிநீக்குஹா.. ஹா... ஹா... அப்போதும் அது அந்த மருந்தினால் வந்த விளைவுதானே!!
நீக்குமுதுமையில் இளமை பற்றி எழுதுவதை விட இளமையில் முதுமையைக் களைவது எப்படி என்று எழுதி வழிகாட்டுவது தான் காலத்தின் கட்டாயமாகத் தெரிகிறதோ?... இது பற்றித் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்... இளமையில் முதுமை போல சோம்பி இருக்க வேண்டாம் என்று எல்லோரும் சொல்வார்களே என்று மாற்றி யோசித்திருக்கிறார் சி.வெ... நீங்கள் மறுபடி மாற்றுகிறீர்களே...!
நீக்குஇளமையில் முதுமை அக அழகு/அறிவழகு: அவ்வையார், காரைக்கால் அம்மையார், கரிகாலன் போல
நீக்குதிருஞான சம்பந்தரையும் சேர்த்துக் கொள்ளலாமோ...
நீக்குஇரண்டு அம்மையார்களும் இளமையிலேயே வயதானவர்கள் போல நரையும் திரையுமான உருவம் கொண்டவர்கள். கரிகாலன் முதியவர் வேடமிட்டு வழக்கை தீர்த்தவர்.
நீக்குஞானசம்பந்தருக்கும் இது போன்ற சம்பவம் உண்டா? தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
இல்லை.. அப்படி எல்லாம் எதுவும் எனக்குத் தெரியாது. இளமையில் ஞானம் பெற்றவர் என்ற வகையில் மட்டுமே சொன்னேன்.
நீக்குஞானசம்பந்தர் இறப்பும் மிகச் சிறுவயதிலேயே அவரின் திருமண அக்னியில் நிகழ்ந்தது.என்பார்கள்.
நீக்குதிருஞானசம்பந்தர் இறக்கவில்லை, அவர் சிவபெருமானுடன் இரண்டறக் கலந்துவிட்டார் (ஒன்றாகச் சேர்ந்துவிட்டார்) என்பதே சைவ மரபு: தன் திருமணத்தின்போது, சிவபெருமான்-பார்வதி காட்சி தந்து, சம்பந்தரின் பக்தியை மெச்சி, அவரைத் தம்முடன் சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றார்; அப்போது அவர் ஞானசம்பந்தராக இருந்து சிவபெருமானோடு ஒன்றிணைந்தார் என்கிறது AI
நீக்குவிரிவாக எழுத நினைச்சு இப்படிச் சொல்லிட்டுப் போனேன். அதுக்குள்ளே நீங்க சொல்லிட்டீங்க!
நீக்குஸ்ரீ அம்பாள் ஆபிஸர்ஸ் பட்டனம் பொடியை விட ரத்தினம் பட்டனம் பொடிக்குத் தான் உபயோகிக்கும் பட்டாளம் அதிகம் இருந்தது என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குசிமிட்டாப் பொடியை கட்டை விரல் -- ஆள் காட்டி விரல்களைக் குவித்து எடுத்து நாசியில் சர்ரென்று இழுத்தால் கண்கள் லேசாக சிவக்க உடல் பூராவும் பரவும் உற்சாக ஊற்றின் அனுபவமே அலாதி தான். நான் கூட கொஞ்ச காலத்திற்கு இதன் ஆட்படலில் சொக்கி இருந்தேன். சொர்க்கத்திலிருந்து மீண்டது அலாதியான கதை.
மூக்கில் சளி கட்டியிருந்தால் அதற்கு மூக்குப்பொடி நல்ல மருந்து. தாத்தா பொடி போட்டு அடுக்குத் தும்மல் போட்ட்தும் சளசளவென்று வென்று வழுவழுப்பாக மூக்கிலிருந்து வெளிப்படும் திரவம் பழுப்பு கலரில் இருக்கும்!!! அதைத் துடைக்க தாத்தா வேறு கலரில் கர்சீப் வைத்துக் கொள்ள மாட்டாரோ... நல்ல வெண்ணிற கர்சீப்தான்! அந்த கர்சீப் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறும் பாருங்கள்...
நீக்குதாமரை இலையின் கீழிருக்கும் நீர்த்துளிக்கும், தாமரை இலையின் மேல் பாதுகாப்பாக தொத்திக் கொண்டிருக்கும் நீர்த்துளிக்கும் வித்தியாசம் இல்லையா?.. நீங்களே சொல்லுங்கள்.
பதிலளிநீக்குபால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது போல...! இல்லை?
நீக்குவியாழக் கதம்பம் விளையாட்டாய் இருக்கிறது! வயோதிகத்தைக் கண்டும் காணாததுபோல் இருப்பதில், பாதாளத்தை மறக்காதிருப்பதில், ரோப் கார் போர் (bore) கார் ஆனதில் என...விதவிதமாய் விரிந்திருக்கிறது.
பதிலளிநீக்குஎல்லாம் சரி.. இந்த ஸ்ரீ அம்பாள் ஆபீஸர்ஸ் பொடி அமேஸானில் கிடைக்குமா !
அமேசானில் எதுதான் கிடைக்காது? எந்தப் பொடி கிடைத்தாலும், வாங்கி அதில் அம்பாள் பொடி என்று லேபிள் ஒட்டிவிட்டால் போகிறது...
நீக்குவாங்க ஏகாந்தன் ஸார்... வயோதிகத்தைக் கண்டு எனக்கு பயமில்லை. அது வரும்போது வரட்டும்!
ஓஹோ...!
நீக்கு// ஓஹோ...! //
நீக்குஅட.. நிசமாத்தான் சொல்றேன்!!
தேவனின் மாஸ்டர் பீஸ்கப் எத்தனையோ இருக்க, அவரது 'துப்பறியும் சாம்பு' தான் பிரபலமாகியிருக்கிறது.
பதிலளிநீக்குஇதே அபாக்கியம் தான் ஜ.ரா. சுந்தரேசனுக்கும். அவரின் எத்தனையோ அருமையான படைப்புகள் இருக்க பாக்கியம் ராமசாமியாக அவர் வேடம் தரித்த
'அப்புசாமியும் சீதா பாட்டியும்' தான் பிரபலமடைந்தது.. வெகுஜன வாசகர்களின் ...... குறைவு (மூன்றெழுத்துச் சொல் விட்டுப்போயிருக்கிறது) தான் காரணமோ? தெரியவில்லை.
அப்படி இல்லை ஜீவி ஸார்... தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம் உள்ளிட்ட சில புத்தகங்கள் என்னிடமும் இருக்கிறது. இப்போது அண்ணன் வாங்கி வைத்திருந்த துப்பறியும் சாம்புவும், சி ஐ டி சந்துருவும் மறுவாசிப்பில்.. அதுதான்..
நீக்குஜீவி அண்ணா, செவ்வாயன்று உங்கள் கருத்தைப் பார்த்ததும், கதையைப் பத்தி உங்கள் view வைச் சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்!
நீக்குகீதா
ஜீவி சார்... எழுத்து அல்லது காட்சிப் படைப்பு ஒரு சிலருக்கு உண்டானதா? பரவலாகப் பலரைக் கவர்ந்தால் அந்த எழுத்து சுமார் என்ற தகுதியைத்தான் அடையுமா? நான்லைப்ரரியில் முதல் முதலில் படித்தது துப்பறியும் சாம்பு.
நீக்குதேவனின் எழுத்தில் நானும் முதல் முதல் படித்தது துப்பறியும் சாம்பு தான்,. தேவன் மறைவிற்குப் பின்னர் ஆனந்த விகடனில் அது சித்திரத் தொடராக வெளி வந்தப்போப் படிச்சது. அது விகடனில் தொடராக வந்தது என்னும் விபரமே எனக்குப் பதினாறு வயதுக்குப் பின்னர் சித்தப்பா வீட்டில் அதன் பைன்டிங்கைப் படிச்சப்போத் தான் தெரியும். சித்திரத் தொடரில் மூலத்தில் உள்ள ஓரிரு தொடர்களைச் சேர்த்திருக்கவில்லை.
நீக்குநெல்லை, கீதா அக்கா.... உண்மை. அவரவர் ரசனை அவரவர்களுக்கு!
நீக்குகைப்பேசியில் அரைகுறைப் பார்வையில் தட்டச்சு செய்ததால் சில எழுத்துப் பிழைகள். பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஆர்வம்தான் தெரிந்ததே தவிர, பிழைகள் கண்ணில் படவில்லை; கருத்தில் பதியவில்லை.
நீக்குநீண்ட நாட்களுக்குப் பின்னான உங்கள் வருகை உற்சாகமளிக்கிறது ஜீவி ஸார்.
இலையின் மேல் உள்ள நீர்த்துளிக்கும், இலையின் கீழுள்ள தடாகத்திற்கும் வேறுபாடு அளவில்தானேயொழிய பொருளில் இல்லை. Qualitatively same; difference is just in the quantity என்று கவி சொல்லவருவதாக நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇது, Waves are nothing but water என்ற சாந்தோக்கிய உபநிஷத்தின் கருத்து/உவமை தழுவலே: அலைகள் தம்மை தனிப்பொருள்களாக எண்ணிக்கொள்கின்றன. ஆனால், கடல் நீரை நீக்கிவிட்டால், அலையில் வேறு பொருள் இல்லை. அது போல ஜீவன்களும், தம்மை ப்ரஹ்மத்திலிருந்து வேறாக எண்ணி மயங்குகின்றன; ஆனால் உண்மையில் அவை ப்ரஹ்மத்திலிருந்து சிறிதும் வேறானவை அல்ல.
जीवो ब्रह्मैव नापरः (ஜீவோ ப்ரஹ்மய்வ நா பர:) என்று ஆச்சார்யாள் சொன்னதும் இதேதான்.
அம்மாடி.. இவ்வளவு ஆழம் எனக்குத் தெரியாது.. மண்பாண்டத்துக்கும் மண்ணுக்கும் இதே போல உதாரணம் காட்டுவார்கள் இல்லையா? அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே என்பார்களே.. அதுபோல.. பரமாத்மாவின் துளியிலும் துளிதான் ஜீவாத்மா என்றெல்லாம் சொல்லி கொஞ்சம் படித்திருக்கிறேன். பஞ்சபூதங்களால் ஆனதுதான் உடம்பு என்றும் சொல்வார்களே? (எதையாவது எக்கு தப்பாய் கேள்வி கேட்டு மாட்டிக்கொள்ளப் போகிறேன்!)
நீக்கு100/100. Soooper, வாத்தியாரே!
நீக்குமண் பாண்டம் கடாகாசம் என்கிற contextலயும் வரும். பின்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.
தன்யனானேன் மஹாப்ரபு...
நீக்குஅது போல ஜீவன்களும், தம்மை ப்ரஹ்மத்திலிருந்து வேறாக எண்ணி மயங்குகின்றன; ஆனால் உண்மையில் அவை ப்ரஹ்மத்திலிருந்து சிறிதும் வேறானவை அல்ல.//
நீக்குஇது மட்டும் தான் தெரியும்....திவாமா அண்ணா....மத்த விஷயங்கள் நீங்க சொல்லிருக்கறது எதுவும் நான் அறியேன் அறிந்திலேன்....ஏதும் அறிந்திலேன்!!! சுத்தம்!
ஸ்ரீராம் நீங்க சொல்லிருக்கறது மட்டும் தான் மீக்கும் தெரியும்!!!! திவாமா செம தத்துவம்...
கீதா
ஹைஃபை
நீக்கு__/\__
நீக்குஶ்ரீநிவாசன் சார்.. அத்வைதம் த்வைதம் விசிஷ்டாத்வைதம் ஆகியவை இந்த பாயின்டில்தானே வேறுபடுகின்றன?
நீக்குப்ரம்மம் ஒகடே என்றாலும் ராமானுஜரின் கருத்து ஏற்காதோன்றுகிறது!
நீக்குவிளக்குகள் ஃபோட்டோ சூப்பர். நல்லா எடுத்திருக்கீங்க ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநான் ஒரு ஃபோட்டோ பிரியாயை! பார்க்கவும் எடுக்கவும்.
கீதா
வாங்க கீதா.. நன்றி.
நீக்குடைப்போவில் பிரியை பிரியாயை ஆகிவிட்டது!
ஆமாம் பிரியை!!!
நீக்குகீதா
//பிரியை பிரியாயை// இரண்டும் ஒன்றே. இரண்டும் சரியே! நீங்கள் நினைத்தாலும் தப்பாக அடிக்க வராது போலும்!
நீக்குஅப்படியா? இரண்டும் ஒன்றா? என்ன ஆச்சர்யம்?
நீக்குதீக்ஷிதர் எழுதிய ஒரு பாட்டு உடனே நினைவுக்கு வந்தது. காதம்பரி ப்ரியாயை என்று அம்பாள் பற்றி மோஹனத்தில்..
நீக்குமோகனமா? அப்புறமா கேட்டு விடுகிறேன்.
நீக்குAI Overview :
நீக்குபிரியை" (Priyai) என்பது பெரும்பாலும் "பிரியா" (Priya) என்ற பெயரின் ஒரு வடிவம், "அன்பானவள்", "பிடித்தவள்" என்று பொருள்படும். ஆனால், "பிரியாயை" (Priyayai) என்பது இலக்கணப்படி, ஒரு செயலைச் செய்பவள் அல்லது அந்த செயலுடன் தொடர்புடையவள் (உதாரணமாக, பிரியை செய்வதால், பிரியாயை - பிரியாவின் செயல்) என்பதைக் குறிக்கும். சுருக்கமாக, பிரியா என்பது பெயர், பிரியாயை என்பது அந்தப் பெயரின் ஒரு செயலைச் சுட்டும் இலக்கண வடிவம்.
சமஸ்கிருதத்திலிருந்து வந்த பெயர், பொருள்: அன்பானவள், பிடித்தமானவள், darling.
பொதுவாகப் பெண்கள் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது (உதாரணம்: பிரியா என்ற பெண்).
பிரியாயை (Priyayai):
இது "பிரியா" என்ற பெயரிலிருந்து பிறந்த ஒரு இலக்கண வடிவம்.
"பிரியா" + "ஐ" (ஐ என்பது செயலைச் சுட்டும் விகுதி).
பொருள்: பிரியையால், பிரியாவின் பொருட்டு, பிரியாயின் செயலாக (உதாரணம்: பிரியாயை (செயல்) = பிரியாவின் செயல்).
எடுத்துக்காட்டு:
பிரியா: அவள் பிரியா. (She is Priya).
பிரியாயை: பிரியாயை (செயல்) செய்ய வேண்டும். (The action of Priya must be done).
எனவே, பிரியா என்பது ஒரு நபர், பிரியாயை என்பது அந்த நபருடன் தொடர்புடைய ஒரு செயலைக் குறிக்கிறது, இது பெரும்பாலும் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் பயன்படுத்தப்படுகிறது
அதனாலதானே பிரியாயை நமஹ!!! என்று துதிக்கிறோம் இல்லையா...
நீக்கு//காதம்பரி ப்ரியாயை //
ஸ்ரீராம் அப்படிப் பார்க்கறப்ப ஃபோட்டோவை விரும்புபவள்!!!!!!
கீதா
திவாமா அண்ணா எனக்கு அந்தச் சந்தேகம் இருந்தது. உங்கள் விளக்கத்துக்கு நன்றி.
நீக்குகீதா
பூ மாலைகளும், "எப்போது எங்களை இறைவனிடம் சேர்க்கப் போகிறீர்கள்? ஏங்கி ஏங்கி வாடிக் கொண்டிருக்கிறோம்!! "
பதிலளிநீக்குஎன்று உங்களைப் போலவே காத்துக் கொண்டிருந்தன போலும்!
கீதா
என்னைப் போலவா? ஆ... எல்லா அலங்காரங்களும் முடிந்தபிறகு அந்த இடம் ஜெகஜோதியாய் இருந்தது.
நீக்கு//ஏங்கி வாடிக் கொண்டிருக்கிறோம்!! "என்று உங்களைப் போலவே காத்துக் கொண்டிருந்தன போலும்// பாஸ் ஸ்ரீராம்ஜியை அப்படி வாடவிடுவாரா? அவ்வப்போது முகத்தில் தண்ணீர் தெளித்து விடுவாரே; பூப்போல பாத்துக்கற லக்ஷணம் ;-)
நீக்குஆஹா.. கற்பனையே இனிக்கிறதே...
நீக்குஸ்ரீராம், தரிசனம் கிடைக்க ரோப் கார் வராமல் காத்திருந்ததைச்சொன்னேன்....
நீக்கு//பாஸ் ஸ்ரீராம்ஜியை அப்படி வாடவிடுவாரா? அவ்வப்போது முகத்தில் தண்ணீர் தெளித்து விடுவாரே; பூப்போல பாத்துக்கற லக்ஷணம் ;-)//
ரசித்தேன் ஆனா நான் சொன்னது வேறு அர்த்தம் ஆகிடுச்சோன்னு இப்ப கவலை வந்துவிட்டது!!!
ரோப்காருக்குக் காத்திருந்ததைச் சொன்னேன்...
கீதா
புரிகிறது.. புரிந்தது கீதா...
நீக்குஇளையவரின் மகனும் பூஜையில் கலந்து கொள்வான் என்றாலும் கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளை. ரெட்டை வால். //
பதிலளிநீக்குஹாஹாஹா ஆனால் பாருங்க ஒரு வயசு வரும் போது ரொம்பவே பெரியா ஆள் போல ஆகிடுவார்!
பாஸின் கஸின்ஸ் ரொம்ப சிரத்தை.
கீதா
ஆமாம். உண்மை. உண்மை.
நீக்குஸ்ரீவைஷ்ணவர்களின் பகவத் கைங்கரியம் ஈடு, இணையில்லாதது. பாசுரங்கள் தெரியாத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். பெருமாளுக்கு அம்சி செய்யாமல் சாப்பிட மாட்டார்கள். எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்வதில்லை. பெருமாளே எல்லாம்.
நீக்குஉண்மைதான் கீதா அக்கா.. கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கும்.
நீக்குநம்ம குரங்காரின் வீடியோவை ரசித்துப் பார்த்தேன். நம் மனதுக்கு என்ன ஒரு relaxation!!! அதன் சேட்டைகள் ரசிக்கத் தக்கவை. தூரத்திலிருந்து பார்க்கும் வரை!
பதிலளிநீக்குகீதா
அந்த வீடியோவில் ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன்.
நீக்குஒரு இளம் வாலார் ஒரு பழம் வாங்கி கால்களுக்கிடையே பத்திரப்படுத்தி, வயதான ஒரு வாலாருக்காக பாதுகாத்து வைத்து, மூத்தவர் நிதானமாக வந்து அதை எடுத்துக் கொண்டதும் நகர்ந்து செல்வது பார்த்தேன். முதலில் வாங்கிய பழத்தை கால்களுக்கிடையே மூத்தவருக்கு வைத்து விட்டு, தனக்கு ஒன்று கிடைக்குமா என்று காத்திருந்த அதன் பார்வை... தனக்கு ஒன்று கிடைக்காத நிலையிலும் காலுக்கிடையே மூத்தவருக்காக வைத்திருந்ததை எடுக்காத குணம்..
ஆனால் கையிருப்பு தீர்ந்து போனதில் இளம் வாலார் ஏமாந்துபோனார்.
ஓ.. வீடியோவின் விளக்கத்தைப் பார்த்துக் கொண்டுவிட்டென்....கீழே உங்கள் கருத்திலிருந்து இங்கு வந்து!!!
நீக்குகீதா
என்னிடம் செங்குரங்கார் சேட்டை செய்ததை முன்பே சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறேன் எங்கள் தளத்திலும் எழுதிய நினைவு.
பதிலளிநீக்குகடிபட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த சமயம்...
அப்ப வீட்டிற்கு ஆஞ்சு கோயிலில் பூஜை செய்யும் நம் தூரத்துச் சொந்தமும் அவருடன் பூஜைக்கு உதவி கோயிலை சுத்தப்படுத்தி சேவை செய்த மற்றொரு சொந்தத்தில் இருக்கும் அக்காக்களும் வீட்டுக்கு வந்திருந்தாங்க. அப்ப அந்த அண்ணா நம் வீட்டில் படுத்துக் கொண்டார். உடனே அக்காக்கள் என்னிடம் சொன்னாங்க..
பாரு, கரெக்ட்டா உன்னை அந்த ஆஞ்சநேயர் ஆசிர்வதித்திருக்கார் அதான் இப்ப இந்த சமயத்துல அண்ணா உங்க வீட்டில் படுத்துக் கொண்டுவிட்டார் பாரு ஆஞ்சுவோட அருள் உனக்கு வாய்ச்சிருக்கு...அதனாலதான் சிரமப்பரிகாரம் இங்கு செய்யறார்னு. இல்லைனா எங்கும் படுத்துக் கொள்ளமாட்டார் அப்படின்னு எல்லாம் என்னென்னவோ சொன்னாங்க.
மனதிற்குள் ஏகப்பட்ட கேள்விகள் வந்தாலும் எதுவும் கேட்கவில்லை. ஆனால் எனக்கு நடந்ததென்னவோ அத்தனையும் எதிர்மறை!!!!!!!!! முன்னும் பின்னும்....அவங்க சொன்னதுக்கு முரணான விஷயங்கள்!!!!!!!!!!!!
கீதா
அந்த அண்ணாங்கறது....
நீக்குஅந்தக் கோவிலில் பூஜை செய்தவர் பார்த்துக் கொண்டவர். பெயர் மறந்து போச்சு. ரொம்ப வருஷம் ஆச்சு...அதன் பின் தொடர்பு இல்லை.
நீக்குகிட்டத்தட்ட நம்ம பாஸின் தம்பிகள் போன்று....காட்டாங்குளத்தூரில் இருக்கும் ஆஞ்சு கோவில் அவங்கதான் கனவில் வந்து சொன்னதாக அங்குக் கோவில் எழுப்பி....
கீதா
__/\__
நீக்குகுரங்காரில் ஒருவர், பழத்தை வாங்கிக் கொண்டு காலில் வைத்துக் கொள்கிறாரே யாரையோ தேடுகிறார் போல!!! யாருக்கோ? தன் குட்டிக்கா? உடனே இன்னொருவர் வந்து அதை எடுத்துச் சாப்பிடுகிறார். அடுத்து குட்டி வருது அதை ஏமாற்றி விளையாடிவிட்டு பழம் நீட்ட அது வாங்கிச் சாப்பிடுவது......ரசித்தேன்..
பதிலளிநீக்குகீதா
ஜஸ்ட் அப்படியே மேலே பாருங்கள்... இதற்குதான் ஏற்கனவே விளக்கம் கொடுத்திருக்கிறேன்!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குமுருகா வா.. செந்தில் முதல்வா வா...!
நீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
இளையவரின் மகனும் பூஜையில் கலந்து கொள்வான் என்றாலும் கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளை. ரெட்டை வால். //
பதிலளிநீக்குஹாஹாஹாஹா அந்தக் குட்டி வால் பையனா!!!!
வேறொரு வீடியோவில் பார்த்தேன் அந்தக் குட்டிப் பையன்?
கீதா
ஆமாம். பயங்கர சேட்டை. காத்திருந்த வேளையில் சாக்லேட் வாங்கி குரங்கை ஏமாற்றப் பார்த்தான். அது இவனைவிட விவரம் லா... எத்தனை பேரைப் பார்த்திருக்கும் அது!
நீக்குகர்ணனைப் பற்றிய செய்திகள் மனதை
பதிலளிநீக்குநெருடுகின்றன..
ஆனாலம் இதுதான் உண்மை
ஆம். இந்த உறுத்தலுக்கு நடிகர் திலகம் தான் காரணம்.
நீக்குஇதைப் பற்றி இன்னும் விரிவாக என்ஞுடைய "கண்ணன் வருவான்" தொடரில் எழுதி இருந்தேன்.
நீக்கு__/\__
நீக்குஓ இந்த விளையாட்டு எல்லாம் ரோப் காருக்குக் காத்திருக்கும் நேரத்திலா?
பதிலளிநீக்குஉலாவி, உலாவி கால் வலிக்க, 'கால் வந்ததா, கால் வந்ததா' என்று கேட்டபடி இருந்தான் மது.//
சிரித்துவிட்டேன் வார்த்தை விளையாட்டு!!!
குட்டிப் பையன் நல்லா பல்பு கொடுக்கறானே!!! அதுவும் ரொம்பவே பிரகாசமாய்! வெளிச்சம் போட்டுக் காட்டுறானே!
சதுஷ்கவி என்னும் பெயர் கொண்ட மதுவின் பையன்.//
சதுஷ்கவி - பெயரே வித்தியாசமாக அழகாக இருக்கு
கீதா
// ஓ இந்த விளையாட்டு எல்லாம் ரோப் காருக்குக் காத்திருக்கும் நேரத்திலா? //
நீக்குஆமாம். ஆனால் அன்னதானக் கூடத்திலேயே......
அப்புறம்தானே கிளம்பினோம்?
புரிந்தது...
நீக்குகீதா
மூக்குப் பொடியே தான்!...
பதிலளிநீக்குபல வகை மூக்குப் பொடிகளை
விற்பதற்கு என்று தஞ்சாவூர் மங்களாம்பிகா
ஹோட்டல் அருகில் பிரத்யேக பொடிக்கடை
இருந்தது...
பொக்கிஷம் அருமை...
அடடே... தஞ்சையில் நான் மிஸ் செய்த இடங்களில் இன்னும் ஒன்று! ஆனால் மங்களாம்பிகாவை மிஸ் செய்யவில்லை. அந்த ஹோட்டலின் ஓனரின் பையன் எங்கள் பள்ளி மாணவன், ஸ்கூல் ஹாக்கி பிளேயர்.
நீக்குசியாமளா வெங்கட்ராமன் - நம்ம எபிக்குப் பரிச்சயமான மாமியா? திங்க, செவ்வாய்?
பதிலளிநீக்கு//நம் இளமையில் செய்ய முடியாத மனதில் உள்ள சில கலைகளை தூசி தட்டி எடுத்து புதுப்பிக்கலாம், உதாரணத்திற்கு //
நம்மைப் படுத்துவதே இதுதான்!!!! ஹாஹாஹா.....
//சுறுசுறுப்பாக இருக்க கடந்த கால கசப்பானநிகழ்ச்சிகளை குப்பை என்று நினைத்து மனதில் இருந்து தூக்கி எறிய வேண்டும், //
இது ரொம்பவே சரிதான்...
ஆனால் பாருங்க இந்தக் குப்பையும் (யாராச்சும் நம்மகிட்ட அதைக் கொட்டும் போது.....இல்லை நம் டஸ்ட்பின்னில் இருந்தாலும்...) கதை எழுதக் கிடைக்கும் பொக்கிஷமாகிடுமே!!
கீதா
அவரேதான்... அந்த தலைமையாசிரியையேதான். அவர் வந்து பார்ப்பதில்லை என்பதால் அவர் சார்பில் நானே நன்றி சொல்லி விடுகிறேன்!
நீக்குகுப்பை! ஆ மறுபடியும் முதல்லேர்ந்தா ;-) ;-)
நீக்குஹா.. ஹா.. ஹா... குப்பை.. எப்போதும் நீங்காமல் நிறைந்திருப்பது!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம். உடல் நலம் தேவலாமா?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. மலை மீது ஏற காத்திருந்த காலங்களில் எடுத்த விளக்குகள் படங்கள் அட்டகாசமாக உள்ளது. பூஜைகள் செய்யும் படமும் அருமை. நம் மூதாதையர் பழங்கள் சாப்பிடும் காணொளி எனக்கு வரவில்லையே..! அவர்களுக்கு பழங்கள் தந்து உதவியவர் உங்களுக்கும் உதவ வந்தார். அவர் பெயர் நன்றாக உள்ளது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இன்னமும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அடடா.. காணொளி ஓடவில்லையா? மற்ற நண்பர்களால் பார்க்க முடிந்ததா? தெரியவில்லையே.. பார்த்தவர்கள் சொல்லவும்.
நீக்குஎன்னால் பார்க்க முடிகிறது.
நீக்குஉறுதிப்படுத்தி வயிற்றில் வாழைப்பழம் வார்த்ததற்கு நன்றி கேஜிஜி.
நீக்கு/// ஆம். இந்த உறுத்தலுக்கு
பதிலளிநீக்குநடிகர் திலகம் தான் காரணம்.///
இல்லை இல்லை...
மாற்றப்பட்ட கதைக்களம் தான் காரணம்
ஆனாலும் கர்ணன் பரிதாபத்துக்கு உரியவன்...
ஆம். இந்த மாதிரி லிஸ்ட்டில் நிறைய பேர்கள் வருவார்கள்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகாலை 8.30 மணிக்கே ரோப்கார் வேகத்தில், கருத்துரைகள் எழுபதை தாண்டி விட்டன. நான் பதிவையும் முழுதாக படித்து, கருத்துரைகளையும் படிக்கவே இன்றைய நாள் முழுவதும் வேண்டும்போல் உள்ளது. இன்று சற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தாமதமாகத்தான் எழுந்தேன். படித்து விட்டு வருகிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உடல்நிலை கவனம் அக்கா.. மெதுவா வாங்க...
நீக்குரோப்கார் வேகத்தில்.. ஹா.. ஹா.. ஹா.. உண்மையில் அது ரொம்ப ரொம்ப ஸ்லோ கமலா அக்கா.
கமலாக்கா ரோப்கார் வேகம் சிரித்துவிட்டேன்!!!! ....ஓ ஸ்ரீராம் சொல்லிவிட்டார்!!!!!
நீக்குஉடம்பைப் பார்த்துக்கோங்க கமலாக்கா
கீதா
ரோப் கார் வேகத்தில் சிரித்துவிட்டேன் கமலாக்கா....ஓ ஸ்ரீராம் அதுக்கான பதில் சொல்லிவிட்டார்....
நீக்குகீதா
வணக்கம் சகோதரரே
நீக்குஇன்று எழுந்தவுடன் உடல்நிலை சற்று பரவாயில்லை. எடுத்துக் கொண்ட மருந்தினால், தாமதமாகத்தான் முழிப்பே வந்தது. இரண்டு மாதமாக இரண்டு நாட்களுக்கொரு முறை எட்டி எட்டிப் பார்த்த ஜலதோஷம் கடந்த இரு தினங்களாக கூடவே பக்க வாத்தியங்களை அழைத்து கொண்டபடி சுனாமியாகி ஆர்ப்பரித்து விட்டது. அதன் ஆசையை யார்தான் தடுக்க இயலும்? உங்கள் இருவரின் அன்பான அக்கறையான விசாரிப்புக்கும் மிக்க நன்றி.
நாங்கள் 1985 வாக்கில் ஒரு முறை பழனியில் ரோப்காரில் போகும் போது மட்டும் பயணித்து இருக்கிறோம். கொஞ்சம் வேகம் இருந்ததாக நினைவு.! மற்றபடி இந்த வசதிகளை அதற்குப்பின் எங்குமே அனுபவித்ததில்லை.( மலைக் கோவில், ரோப்கார் உள்ள இடங்களுக்கு எங்காவது போனால்தானே..!) அப்புறம் நீங்கள் மலைக்குச் சென்று நரசிம்மரை தரிசித்த பதிவை எதிர்பார்க்கிறேன். அடுத்த வியாழனும் கண் மூடுவதற்குள் பறந்தோடி வந்து விடுமே..! காத்திருக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தமிழகம் முழுவதுமே ரொம்பக் குளிர் தெரிகிறது. அதுவும் காரணம்.
நீக்குநான் பழனியே பார்ததில்லையாக்கும்!
ஸ்ரீராம், அந்த ஃபேஸ்புக் ஆள் உங்களைப் பெண்ணாக நினைத்துவிட்டாரா?!!!!!!! அவர் மெசேஜ் பார்த்துச் சிரிப்புதான் வந்தது,
பதிலளிநீக்குஜெ கே அண்ணா அனுப்பிய ஜோக் அரசல்புரசலாதான் புரிந்தது.
கீதா
பஞ்சதந்திரம் ஜோக் நினைவிருக்கிறதா கீதா?
நீக்குராம் "அண்ணா"...ஆமாம் இப்போ சொல்லு என்பார் கமல். அது போல..
சமீபத்தில் பேசினோமோ///
பதிலளிநீக்குஆமாம்...பேசினோம்...
கே பி எஸ் விஷயம் ரொம்ப ரசித்தேன் சுவாரசியம்.
கீதா
அங்கேயும் இதைக் குறிப்பிட்டிருந்தேனோ?!!
நீக்குராகு'ல் - ராகு - வார்த்தை ட்விஸ்ட் ஜோக்!!! நம்ம கமலாக்கா பாணி பெரும்பாலும் கருத்தில் வார்த்தை வைச்சு அவங்க கருத்து போடுவாங்களே!!!
பதிலளிநீக்குகீதா
மதியை நான் நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன். சுவாரஸ்யமான மனிதர். இப்போது அவர் தினமணி க்ரூப்பில் இல்லை.
நீக்குபயணக்கட்டுரை திடீர் என்று துவங்கியதில் ஒன்னும் புரியவில்லை. பின்னர் தான் சென்ற வார தொடர்ச்சி என்று தெரிந்தது, இது போன்ற தொடர் கட்டுரைகளில் முன் கட்டுரையின் சுருக்கமாக கூறிவிட்டு தொடரலாம்.
பதிலளிநீக்குவிளக்குகள் படம் நன்றாக உள்ளன.
சதுஷ்கவி பெயர் விசித்திரம். கவி ஓகே. சதுஷ்?
முதுமையில் இளமை கண்ட GMB ஐயா இல்லாதது ஒரு குறை. (சியாமளா கட்டுரை)
கவிதைகள் யாருடையது? நீங்கள் இவ்வளவு தத்துவமாக எழுத மாட்டீர்கள்!!!. விடுகதை போல் கவிதைகள்!
ரன்னுடைய அப்பாவும் மூக்குப்பொடி போட்டார். கடைசி காலத்தில் விட்டார். அப்போது அது பேஷன்.
இந்தவாரம் மாப்பிள்ளை ஜோக்ஸ் கொஞ்சம் பரவாயில்லை.
கோதுமை டிபின் என்று வாசித்தபோது
'கங்கை நதிபுறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்' என்று பாரதி பாடியது நினைவில் வந்தது.
இந்தவார பதிவு கொஞ்சம் நீளம் அதிகம் என்று கருதுகிறேன்.
Jayakumar
// சதுஷ்கவி பெயர் விசித்திரம். கவி ஓகே. சதுஷ்?//. பொதுவாக கவிஞர்களில் நான்கு வகை ஆசு, மதுரம், விஸ்தாரம், சித்ரம் என்று. ஆனால், எனக்குத்தெரிந்து நான்கு விதமாகவும் பாடத்தெரிந்தவர்கள் இருவர்: அருணகிரிநாதர், திருமங்கை ஆழவார். பின்னவர் நாலுகவிப்பெருமாள் என்றே அழைக்கப்பட்டார். நாலுகவி வடமொழிப்படி சதுஷ்கவி. மற்றபடி, பிள்ளைக்கு பெயர் வைத்தவர்தான் விளக்க வேண்டும் ;-)
நீக்குவாங்க JKC ஸார்... பயணக்கட்டுரை தொடர்ந்து கொண்டுதானேஇருக்கிறது! எனவே எப்போதும் போல சொல்லவில்லை. தனியாக வாசித்தாலும் குறை இருக்காது, தெரியாது!
நீக்குசதுஷ்கவி பெயருக்கு திருவாழிமார்பன் அற்புதமான பதில் அளித்து விட்டார். நானும் தெரிந்து கொண்டேன்.
GMB ஸார்.. பொருத்தமான நினைவுகூரல்.
// கவிதைகள் யாருடையது? நீங்கள் இவ்வளவு தத்துவமாக எழுத மாட்டீர்கள்!!!. விடுகதை போல் கவிதைகள்! //
ஆஹா.. ஆஹா.. ஆஹா... சந்தோஷமாக இருக்கிறது. பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்.
பதிவு கொஞ்சம் நீளம் அல்ல, அதிகமாகவே நீளம்தான். மன்னிக்கவும். சில படங்கள் விவரங்கள் நீண்டநாட்களாக டெஸ்க்டாப்பில் சேர்ந்மதுவிட்டன. அதைக் குறைக்கும் முகத்தான்....
TVM ஸ்ரீநிவாசன் ஸார்.. அசத்துகிறீர்கள். உங்களை பற்றி அறியும் ஆவல் கூடுகிறது. மூடுமந்திரமாகவே இருக்கிறீர்கள்.
நீக்கு"ஒருபொருள் மறைபொருள் இவருக்கு இலக்கணமோ..."
//ஒருபொருள் மறைபொருள் இவருக்கு இலக்கணமோ..."// ரசித்தேன்! மறைபொருள் என்பதைவிட மறை கழன்ற பொருள் என்பது பொருத்தமாயிருக்கும். காலி பெருங்காய டப்பா என்றும் சொல்லலாம். மூடி வைத்தாலும் திறந்து போட்டாலும் ஒன்றுதான். மூடும் இல்லை மந்திரமும் இல்லை :-)
நீக்கு/காலி பெருங்காய டப்பா என்றும் சொல்லலாம்./
நீக்குஆனால், எப்போதுமே காலி பெருங்காய டப்பாவுக்கு வாசம் அதிகம். அதன் வாசம் டப்பாவை விட்டு என்றுமே நீங்காத நிரந்தரமானது.
நான் சொல்ல வந்ததைதான் கமலா அக்கா சொல்லி இருக்கிறார்.
நீக்குஅந்த முதியவரைப் பற்றி வாசித்தேனே சமீபத்தில் எங்கே? வாசித்தேன்...ம்ஹூம்....ஆனால் செய்தி மட்டும் நினைவிருக்கு
பதிலளிநீக்குமுதியவரை வணங்கிடுகிறேன். நானும் அம்மாடியோவ் என்று நினைத்தேன் அதை வாசிச்சப்ப.
கீதா
__/\__
நீக்குமுருங்கைக்காய் - 2 மட்டும் - ஹாஹாஹா கு க!!?? பாக்கியராஜின் படம் முமு நினைவுக்கு வந்தது. படம் பார்த்ததில்லை இது மட்டும் அடிக்கடி சொல்வாங்களே அதனால!
பதிலளிநீக்குகீதா
நான் தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட்டில் படத்தைப் பார்த்தேன் என்று நினைவு. சுவாரஸ்யமான படம்.
நீக்குமுருங்கைக்காய் தவிர்த்த மற்ற ஜோக்குகள் எதுவும் படிக்க முடியலை!:(
நீக்குஆமாம். மோசமான கேவா கலரில் இருந்தது. நான் போடும்போதே நினைத்தேன். ஆனால் எல்லோரும் படித்திருக்கிறார்களே என்று சும்மா இருந்து விட்டேன்!
நீக்குபோனோமின்ட் சாப்பிட்ட நினைவு இருக்கே!!!
பதிலளிநீக்குகீதா
அடடே... எங்கள் காலத்தில் அதைப் பார்த்த ஞாபகமே இல்லை!!!!
நீக்குஹாஹாஹாஹா அப்படினா இந்த சுவீங்கம் போல ஒன்னு தந்திருக்காங்களே ஏன்னா நான் ரொம்பக் கஷ்டபப்டுவதுண்டு சின்ன வயசில். அப்ப எனக்கு வேற எதுவும் கொடுத்தா சாப்பிட மாட்டேன்னு எனக்குக் கொடுத்துருக்காங்களே....அப்ப அது வேறயா? ஹோ பெயர் நினைவுக்கு வரலையே. லாக்சேட்டிவ் சுவிங்கம்னதும் டக்குன்னு நினைவுக்கு வந்துச்சு அப்ப நான் ஸ்ரீலங்கா வாசம். மின்ட் சுவையுடன் ...நல்ல நினைவிருக்கு. இந்தியா வந்தப்புறமும் பாட்டி அதை வைச்சிருந்து எனக்குக் கொடுபபங்க அப்பா வாங்கிக் கொண்டு வந்திருக்கார்.
நீக்குகீதா
அடடே... எங்கள் காலத்தில் அதைப் பார்த்த ஞாபகமே இல்லை!!!!//
நீக்குசரி சரி....நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது. ஹிஹிஹி
கீதா
:))
நீக்குவண்டாடும் சோலை.....ஹரிகாம்போதி - எடுத்துக் கொண்டுள்ளேன். தங்கையிடம் சொல்லி கற்க வேண்டும். சங்கராபரணம் இடையில் வந்துவிடக் கூடாதே!!
பதிலளிநீக்குகீதா
ஆஹா.. மேதைகள் இடையே நான் என்ன சொல்ல...
நீக்குகாலை கமுகு,
பதிலளிநீக்குஸ்ரீராம் படத்துக்கான கதை பிறந்திருக்குமே!
ரவீந்திரர் சித்திரங்கள் படங்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.
கீதா
இல்லை கீதா.. அப்படி நினைக்கவே இல்லை. தோன்றவில்லை!!
நீக்குதாமரைத் தடாக நீர்த்ந். துளி சொல்வது....தத்துவம் அடங்கிய ஒன்று இல்லையா...மேலே நம்ம திவாமா அண்ணா சொன்னது தான்....
பதிலளிநீக்குமயிலும் குருவியும்.....இதில் குருவி வருத்தப்படுகிறது....நான் பலரையும் பார்த்து குருவியாக....ஆஹா எவ்வளவு அழகாக எழுதுகிறார்கள்!! என்று வியந்து பார்க்கிறேன்.
.காட்டுமலரும் சூரியகாந்தியும்----வாயில் உள்ள மீனை....எல்லாமே தத்துவம் அடங்கிய வரிகள்.
கீதா
தாகூர்!
நீக்குஆமாம் தாகூரின் வரிகள் பலதும் எடுத்து வைத்திருந்தேன் கல்லூரிக்காலத்தில். அந்த டயரி எங்க போச்சுன்னே தெரியலை. நிறைய காணாமல் போய்விட்டன...
நீக்குகீதா
(Y)
நீக்குகுழந்தை - நிலவு- அதானே குழந்தையும் நிலவு போன்றதுதானே.
பதிலளிநீக்குஅந்த வரிகளை ரொம்பவே ரசித்தேன்.
6 - வதும் விஷயம் சொல்லும் வரிகள். தத்துவம்.
இப்பகுதியை யோசிக்க யோசிக்க நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன. எங்கியாச்சும் புகுத்தணும்!!!
கீதா
// குழந்தை - நிலவு- //
நீக்குஹேமா நினைவுக்கு வருகிறார். திறமையான கவிஞர்.
அப்ப தீபாவளி மலர்...இப்ப டிவி அண்ட் மொபைல்!!!
பதிலளிநீக்குமூக்குப் பொடி - முன்ன எல்லாம் அதிகம் பார்த்திருக்கிறேன் சிலர் போடுவதை. இப்பலாம் பார்க்க முடியறதில்லை. மூபொ போடறவங்க குறைந்துவிட்டாங்களோ?! நம்ம தலைமுறையோடு போச்சு போல இப்ப பான் பராக்! அது இங்க நிறையப்பேர் போடுவதைப் பார்க்கிறேன்.
கீதா
மூக்குப்பொடி போடறவங்க சமீபத்துல என் கண்லயும் படவில்லை. ஓகே.. பல் ஆஸ்பத்திரிக்கு நேரமாகிறது. மீதி அப்புறம்..
நீக்குமறுபடியுமா..?
நீக்குஒரே நேரத்தில் செய்ய முடியாதல்லவா.. தெளிய வைத்து தெளிய வைத்துதானே அடிக்கணும்! பல சிட்டிங்ஸ்... சென்று வந்து விட்டேன். அடுத்து மார்ச் மாதம்தான்.
நீக்குஅப்பளாஸ் - புன்சிரிப்பு!
பதிலளிநீக்குகீதா
:))
நீக்குஸ்ரீராம், கவிதை சூப்பர். இடையில் சொல்லிட்டேன் என்று நினைத்தேன் அப்புறம் பார்த்தா இல்லை! பொ கொ.
பதிலளிநீக்குதத்துவார்த்தக் கவிதை....நீங்க கவிதையா கொடுத்ததை நான் வேறு வடிவத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் பொ கொ வை அதில் பயன்படுத்த முடியுமான்னு யோசிக்கிறேன்.
கீதா
படுத்துங்கள்! தாராளமாக படுத்துங்கள். நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குரோப் கார் வருகைக்கு ஏற்பட்ட கால தாமதத்தில் நீங்கள் அங்கு எடுத்த படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது பளபளவென்ற விளக்குகளின் போட்டோக்கள் கோணம் மிக அருமை. பூஜா பாத்திரங்களும், மலர்களும் தன் தெய்வீக தன்மையால் மனதை கட்டிப் போடுகின்றன.
நான் பொம்மையாக உருவெடுத்ததில்,
எதிரில் அழகான, வாசமுள்ள மலர்கள்,
முதுகில் சுமையாக வாடிய மலர்கள்,
வாடியதை உதிர்த்து விட்டு
வாசத்தை நுகரக் கூட இயலவில்லையே..!
என நினைக்கும் அந்த மாட்டின் படம் மிக அருமையாக உள்ளது. நான் இன்னும் அங்கிருந்து நகரவேயில்லை. :)) நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அந்த மாட்டின் சிரமத்தை நீங்களும், கோமதி அக்காவும் மட்டுமே பார்த்திருக்கிறீர்கள். உங்களைப்போலவே நானும் அதற்கு ஒரு கவிதை புனைய நினைத்திருந்தேன்! செய்யவில்லை.
நீக்குசில நேரங்களில் தரிசனத்துக்கு நிறைய நேரமாகும். காரணம் புரிந்துகொள்ள இயலாது. அவனிஷ்டம் என்றுதான் நினைத்துக்கொள்ளணும். பொறுமை இழக்கக்கூடாது.
பதிலளிநீக்குஆமாம். தெரிகிறது. அன்று திருமஞ்சன நேரமும் ஒரு காரணம். ஏதோ தரிசனம் தருகிறேன், பொறுமையாய் இரு என்று சொல்லி இருந்தாரே.. அதுவே பெரிது.
நீக்குமுதுமையில் இளமை... படிக்க நல்லா இருக்கு. மனதில் நாம் இளையவன் என்ற எண்ணமே இருக்கணும், நம் நண்பர்களும் அப்படியாக இருப்பவர்களையே வைத்துக்கொள்ளணும், சிறந்தது, சின்னவங்களை நண்பர்களா வச்சுக்கணும் (அதுக்கு முதலில் இன்னொருவரை ஜட்ஜ் செய்யாத தன்மை இருக்கணும்) நம்மை பிஸியாக வைத்துக்கொள்ளணும், குறிப்பா தொலைக்காட்சி யூடியூப் பார்ப்பதை பிஸி என்று நினைத்துக்கொள்ளக்கூடாது ஹாஹாஹா
பதிலளிநீக்குகரெக்ட். அந்த கட்டுரை உங்களுக்கெல்லாம் உபயோகமா இருக்கும்னுதான் ஷேர் செய்தேன். அப்புறம் உங்கள் கருத்தில் ஒரு இடையூறு... இளையவர்களுடன் இருந்தால் நாம்தான் வயதானவராகத் தெரிவோம். உல்ட்டா சரியாக இருக்கும்!
நீக்குஇல்லை. இளையவர்களுடன் தான் இருக்க வேண்டும். அவங்க அலைவரிசையில் பேசணும். வயதானவங்களோட இருந்தால், அவங்க அவங்களுடைய வயதுக்கு நம்மை இழுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். சின்னப் பசங்களுக்கு இந்த விவரம் தெரியாது
நீக்குஒவ்வொரு குழியில் விழுந்து
பதிலளிநீக்குகாணாமல்
போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இதை ஏன் பாதாளம் என்று நினைக்கவேண்டும்? நமக்கான ஸ்டேஷன் வரவில்லை என்று நினைத்தால் போதாதா?
அதுதான் எப்போதும் சொல்கிறோமே என்றுதான் மாற்றிச் சொன்னேன். ஸ்டேஷனில் இறங்கினால் மறுபடி பார்க்கும் வாய்ப்பிருக்கும்.
நீக்குஉங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். சிங்கப்பூரில் பபிள் கம் தடை செய்யப்பட்டது. பபிள்கம் சாப்பிடற பயலுவ எல்லாமே (அனேகமா) மிஞ்சின கம்மை சேரில் மற்றும் பிற இடங்களில் தேய்த்துவச்சுட்டுப் போயிடறாங்க.
பதிலளிநீக்குஅது உலக வழக்கம் இல்லையோ... எல்லோரும் செய்வதுதானே...
நீக்குகர்ணன்... உண்மையான விஷயத்தை எழுதியிருக்கீங்க. இன்று கீதா சாம்பசிவம் அவர்களின் கருத்து நிச்சயம் வரும் (இன்றைய பதிவுக்கு. அவர் என்றைக்குப் பார்ப்பாரோ தெரியாது)
பதிலளிநீக்குவந்து விட்டார். படித்து விட்டார். சென்று விட்டார்! இதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை!
நீக்குசொல்லி இருக்கேனே, கண்ணன் வருவான் தொடர் பற்றி.
நீக்குமுகநூல் சம்பாஷணை - நான் குமுதம் இணையத்துக்கு வந்த காலத்தில், இப்படி ஒரு சம்பாஷனை இன்னொருவரிடம் (அவனும் பெண் பெயரைத்தான் வைத்திருந்தான்) மேற்கொள்ள நேரிட்டது. கடைசியில் என் விவரம் தெரிந்து அவன் சொன்னது 'அடச்சீ... நானும் ஆண்... நல்ல பெண் நட்பு கிடைக்கும் என்று சேட்டிங் செய்துகொண்டிருந்தேன்' என்றான்.
பதிலளிநீக்குகுமுதம் இணையத்துக்கு வந்த காலத்திலா? அபுரி. அவனும் பெண் பெயரைத்தான் ... அப்போ நீங்களும்..?
நீக்குநேற்று ஒரு மீம்ஸ் Video பார்த்தேன். மூன்று நண்பர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். முதல்வன் உட்கார்ந்து கொண்டிருக்கும் இரண்டாமவனிடம் 'என்ன செய்கிறாய்' என்று கேட்கிறான்.. இப்பதான் ஒரு ஃபிகர் மாட்டி இருக்கு.. கடலை போடறேன் என்று சொல்கிறான் அவன். அவனுக்கு மேல்படியில் அமர்ந்திருக்கும் மூன்றாம் நண்பனிடம் 'நீ யார்ட்டடா கடலை போட்டுக்கிட்டிருக்கே' என்று கேட்க, அவன் சிரித்தபடி கீழே அமர்ந்திருப்பவனைக் சைகையில் காட்டுகிகிறான்!
மூக்குப்பொடி போடுபவர்கள், பான் பொருட்கள் சாப்பிடுபவர்கள் (பான்பராக் என்கிற பல்லிவால் சேர்ந்த துப்பும் பொருட்கள்) போன்றவர்கள் நேஸ்டி nasty என்ற எண்ணம் எனக்குச் சிறு வயதிலிருந்தே உண்டு.
பதிலளிநீக்குஹிஹிஹி.... எனக்கும்! எனக்கு வெற்றிலை பாக்கைக் குதப்புவர்களையே அப்படிதான் தோன்றும்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குபயண விவரம் அருமை. சுட்டி பையன் குரங்கிற்கு வாழைப்பழம் கொடுப்பது, அது ஒன்றை காலுக்கடியில் வைத்துக் கொண்டு இன்னொன்றுக்கு எதிர்ப்பார்த்து கைநீட்டுவது, பையன்(விளையாட்டுப்பிள்ளை) ஏமாற்றி விளையாடுவது என்று ரசித்தேன். அந்த குரங்கு முதலில் வாங்கி வைத்து இருந்ததை மற்றொறு குரங்கிற்கு கொடுப்பது என்று காணொளி அருமை.
பதிலளிநீக்குதீபங்களின் வரிசை மலர்களின் அணிவகுப்பு எல்லாம் ரசித்தேன்.
நன்றாக கவனித்திருக்கிறீர்கள், ரசித்திருக்கிறீர்கள். நன்றி கோமதி அக்கா.
நீக்குமுதுமையில் இளமை - சியாமளா வெங்கட்ராமன் அவர்கள் கட்டுரை பயன் உள்ளது.
பதிலளிநீக்குதேவன் எழுதிய 'துப்பறியும் சாம்பு' புத்தகத்திலிருந்து பகிர்வு பின்னால் வரும் மூக்குபொடி விளம்பரத்திற்கு பொருத்தம்.
யாராவது குறிப்பிடுவார்கள் என்று நினைத்தேன்!
நீக்கு//நான்
பதிலளிநீக்குவிரும்பினாலும் விரும்பா விட்டாலும்
வரத்தான் போகிறது
வாழ்ந்துவிட்டு போவோமே
அதுவரை //
அதுதானே! ப யந்து என்ன ஆகப்போகிறது வாழ்ந்து விட்டு போவோம்
வாழ்க்கை என்பது பாடல்.. அதில் ஆளுக்ஆளொரு ராகம்.. செல்வம் என்றொரு தாளம்.. ஆசைதான் அதன் மேளம்.. இதயங்கள் மாயையில் ஆடுது பாவம்!
நீக்கு- வாலியின் பாடல்!
கல்கி 1946 தீபாவளி மலரிலிருந்து... அனைத்தையும் ரசித்தேன். நன்றாக இருக்கிறது இனறைய பதிவு.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குஇன்றைய பதிவு அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குபயண கட்டுரை படத்தில் வாடிய பூக்கள் கம்பி சுருள் அதை வெட்ட பயன்படுத்தும் ஆயுதம் இவற்றின் பாரம் தாங்க முடியாமல் தலை சாய்ந்து இருப்பது போல இருக்கிறது மாட்டின் தோற்றம். ஐயோ பாவம் என்று இருக்கு.
பதிலளிநீக்குநன்றி அதை கவனித்துச் சொன்னதற்கு. உங்கள் கண்ணிலும், கமலா அக்கா கண்ணிலும்தான் அது மாட்டி இருக்கிறது. அதைத் தனியாக வேறு க்ளோசப்பில் ஒரு போட்டோ எடுத்திருந்தேன்.
நீக்கு