Fruit Yogurt
துரை செல்வராஜூ
தயிரும் கனியும்
குவைத்தில் சாப்பிட்டிருக்கின்றேன்...
தேவையானவை:-
1) மாம்பழமும் வாழைப்பழமும்
2) திராட்சையும் பப்பாளியும்
3) பேரிக்காயும் ஆப்பிளும் -
இவற்றுள் ஏதாவது ஒரு ஜோடி..
வீட்டில் தயாரிக்கப்பட்ட
தயிர் 300 gr
தேன் 300 gr
பட்டைத் தூள் ஒரு tsp
நெய்யில் வறுக்கப்பட்ட
முந்திரிப் பருப்பு 15
குறிப்பு :-
தயிர் அதிகம் புளிக்காமல் இருப்பது நல்லது..
சர்வோதய சங்கத்தின் தேன் சிறப்பு..
மாம்பழம் எனில் தோல், விதை நீக்கி விட்டு - சதைப்பகுதியை எடுத்துக் கொள்ளவும்
திராட்சை எனில் திராட்சையின் மெல்லிய தோல் மற்றும் விதைகளை அகற்றி விட்டு நறுக்கிக் கொள்ளவும்..
திராட்சையின் விதைகளை விரும்பினால் சிற்றரவையில் அரைத்துக் கொள்ளலாம்..
வாழைப்பழம் பப்பாளி இவற்றை ஒரே அளவில் சமச் சீராக நறுக்கிக் கொள்ளவும்..
பேரிக்காய், ஆப்பிள் எனில் Peeler கொண்டு தோல் நீக்கிக் கொள்ளவும்..
பேரிக்காய், ஆப்பிள் பழத் துண்டுகளைக் கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்து - குளிர வைத்துப் பயன்படுத்தவும்..
செய்முறை :-
நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரிப் பருப்புகளை நன்றாக நொறுக்கிக் கொள்ளவும்
தயிரில் நீர் அதிகம் இருந்தால் சுத்தமான மெல்லிய துணி கொண்டு ஓரளவுக்கு வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய தயிரைக் கிண்ணத்தில் ஊற்றி, தேன் கலந்து சிறிது நேரம் சில்லரில் வைக்கவும்.
பதினைந்து நிமிடங்கள் கழித்து வேறொரு கண்ணாடிக் கிண்ணம் ஒன்றில் - பழத் துண்டுகள் சிலவற்றை இட்டு அவற்றின் மீது குளிர்ந்திருக்கின்ற தயிர் - தேன் கலவையில் சிறிதளவு ஊற்றவும். தொடர்ந்து மீண்டும் சிறிதளவு பழக்கலவை, பின் தயிர் கலவை எனச் சேர்க்கவும்.
ஒரு கிண்ணத்தில் மூன்று தளங்கள் (அடுக்குகள்) போதும்..
கிண்ணத்தில் நிரப்பப்பட்ட தயிர் பழக் கலவையின் உச்சியை நெய்யில் வறுபட்ட முந்திரித் துகள்களால் அலங்கரித்து சிறு spoon கொண்டு சாப்பிடவும்..
சாப்பிடும் போது புன்னகை அவசியம்...
குழந்தைகள் இருக்கின்ற வீடு எனில் கண்ணாடிக் கிண்ணங்களுக்குப் பதிலாக சிறு சிறு St St கிண்ணங்களைப் பயன்படுத்துவது நல்லது..
இப்படி அடுக்குகளாக தயாரிப்பதில் அலுப்பு எனில் எல்லாவற்றையும் சிற்றரவையில் ஒன்றாகப் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளலாம்..
நாமே தயாரித்த தயிரும் கனியும் - ஆகா!...
நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
ஃஃ
இது ஒரு வித்தியாசமான ரெசிப்பி. எனக்கு மிகவும் பிடித்தமானது.
பதிலளிநீக்குதேனின் அளவு மிக அதிகமோ என்று தோன்றியது. ஆனால் சர்க்கரை எதுவும் சேர்க்காத ரெசிப்பி. இதில் முந்திரி தவிர வேறு உலர் பழங்களையும் சேர்க்கலாம்.
நெல்லை அவர்களுக்கு நல்வரவு...
நீக்குஇப்போது வெளியில் நடைப்பயிற்சி ஒரு மணி நேரம் சென்று வந்தேன். ரொம்பவே குளிர், ஸ்வெட்டர் போட்டுக்கொண்டிருந்தபோதும்.
பதிலளிநீக்குஇந்தக் குளிரில் இந்த ரெசிப்பியா எனத் தோன்றியது. பெப்ருவரிலதான் திராட்சை, மா சீசன் ஆரம்பம். இப்போ ஆப்பிள் ப்ப்பாளி சீசன். வெளிநாட்டு பேரீட்சையும் கிடைக்குறது. மனைவிக்குச் செய்துகொடுக்கிறேன், இரு நாட்கள் திருப்பதி பயணம் முடிந்ததும்.
/// இந்தக் குளிரில்
நீக்குஇந்த ரெசிப்பியா.. ///
இது கோடைக்கானது...
பருவம் தவறிய மழையைப்
போல பதிவு...
நெல்லை, இப்ப கொடுத்தா என்ன? கண்ணை மூடித் திறப்பதற்குள் இதோ குளிர் போய் வெயில் தொடங்கிவிடும். மார்ச் வாகில் அப்ப செஞ்சுக்கோங்க.., இப்பவும் செய்யலாம் குளிர வைக்காம சாதாரணமாவே இங்க தயிர் சில்லுனுதானே இருக்கும் இப்ப. இயற்கையான சில் சாப்பிடலாம். எனக்கு ரொம்பப் பிடிக்கும். இங்கு காலையில் பழங்கள் கண்டிப்பாக உண்டு. எனவே அதை நான் கொஞ்சம் தயிரில் போட்டு உலர் பருப்புகள், விதைகள் போட்டு...லபக்!
நீக்குகீதா
தயிர் சேர்ப்பதால், இந்தக் கலவையில் ஐஸ்க்கிரீம் சேர்ப்பது சரிப்படுமா?
பதிலளிநீக்குஎல்லோருக்கும் பிடித்த ரெசிப்பி துரை செல்வராஜு சார்.
ஐஸ்க்ரீமில் ஏதேதோ மூலக் கூறுகள் சேர்க்கப்படுவதால்
நீக்குஅப்படியான யோசனை இல்லை ..
சுலபமான, சுவையான டெசர்ட்! படங்கள் செர்த்திருக்கலாம். உடனே செய்து பார்த்துவிட வேண்டும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குபடங்கள் கிடைக்கவில்லை...
நீக்குஅன்பின் கருத்திற்கு
மகிழ்ச்சி.. நன்றி..
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
நீக்குதயிரும் கனியும் சுலபமான செய்முறை.
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது
மகிழ்ச்சி.. நன்றி
நீக்குஅருமையான ரெசிப்பி! லேயர் லேயராக அடுக்குவது - texture வித்தியாசம் கூடுகிறது; இதுவே இதன் தனி சிறப்பு என்று நினைக்கிறேன்..
பதிலளிநீக்கு//இப்படி அடுக்குகளாக தயாரிப்பதில் அலுப்பு எனில் எல்லாவற்றையும் சிற்றரவையில் ஒன்றாகப் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளலாம்..// இந்தக் கூழை நன்கு குளிர வைத்தால் அதன் பெயர் யோகர்ட் ஐஸ்கிரீம். ஒரு வகையில் இது நெல்லையின் கேள்விக்கு விடை அளிக்கிறது என்று நினைக்கிறேன் :-)
///இந்தக் கூழை நன்கு குளிர வைத்தால் அதன் பெயர் யோகர்ட் ஐஸ்கிரீம்....///
நீக்குஇது தான்... இதே தான்..
மகிழ்ச்சி.. நன்றி சகோ..
//தயிர் சேர்ப்பதால், இந்தக் கலவையில் ஐஸ்க்கிரீம் சேர்ப்பது சரிப்படுமா?//லோக்கோ பின்ன ருசி! உங்கள் இஷ்டம், வாத்தியாரே! செய்து பார்த்து எப்படி இருக்குன்னு எங்களுக்கு சொல்லுங்க ;-) ;-) காபியில் ஐஸ் கிரீம் போட்டு கலக்கி ரசித்து குடிப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஆகா!..
நீக்குதிருவாழி அவர்களுக்கு நல்வரவு..
முருகா சரணம்...
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். இன்றைய தங்களின் பதிவு நன்றாக உள்ளது. தயிரும், கனியும் பெயரே அருமை. தயிருடன் எதை கலந்து அருந்தினாலும் அதன் சுவை நன்றாகத்தான் சேர்ந்து விடும். இந்த பழங்களுடன் இந்த செய்முறை அருமையாக உள்ளது. இது போல் செய்து விடுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மகிழ்ச்சி.. நன்றியம்மா
நீக்குதுரை அண்ணா கலக்கறீங்க. அருமையான குறிப்பு செய்முறை.
பதிலளிநீக்குநம் வீட்டில் இப்போதும் செய்வதுண்டு என்றாலும் இங்கு வரும் முன்னர் வரை அங்கு உறவினர்கள் அவ்வப்போது கூடுவோம் என்பதால் கண்டிப்பாக இருது இருக்கும்.
இதில் உலர் பழங்கள், நட்ஸும் சேர்த்துக் கொளவதுண்டு அதுஇருப்பைப் பொருத்து!!!!
குழந்தைகள், வயதானவங்களுக்கு (கடிக்க கஷ்டப்படுபவங்களுக்கு) கூழாக்கிக் கொடுத்து குழந்தைகளுக்கு குளிர் சாதனப்பெட்டியில் வைத்துக் கொடுப்பதுண்டு.
இங்கும் பழத்துண்டுகளை நீங்க சொல்லியிருப்பது போல்!!!
தேன் சேர்ப்பது பொதுவாக இல்லாமல் தனியாக வைத்துவிடுவேன். மீ..... தேன்.... நஹி!
கீதா
மகிழ்வுடன் கருத்திற்கு நன்றி...
நீக்குதேன் என்றதும் எனக்கும் சர்வோதயா தேன் மார்த்தாண்டம் தேன் நினைவுக்கு வந்தது. நாங்கள் பொதுவாக இதைத்தான் வாங்குவதுண்டு.
பதிலளிநீக்குசமீபத்தில் இரு வாரங்களுக்கு முன்னர் நம்ம நட்பு துளசி இங்கு வந்திருந்த போது அவங்க தோட்டத்திலேயே தேனீ வளர்ப்பு செய்வதால் சுத்தமான தேன் கொண்டு வந்து கொடுத்தார்.
கீதா
ஆகா.. அருமை..
நீக்குதுரை அண்ணா, கெட்டித் தயிர் சிலப்போ இல்லைனா தயிரை ஒரு நல்ல துணியில் போட்டுத் தொங்க விட்டால் நல்ல கெட்டி க்ரீம் போன்று கிடைத்துவிடுமே அதில் போட்டால் இப்ப கடைகளில் விற்கப்படும் க்ரீக் யோகர்ட் எதுவும் ஈடாகாது நாம் செய்வதற்கு!
பதிலளிநீக்குகீதா
உண்மை தான்...
நீக்குநமது சமையல்
நமது ஆரோக்கியம்..
வித்தியாசமான ரெசிப்பி. அருமையாக உள்ளது.
பதிலளிநீக்குநன்றி மகிழ்ச்சி...
நீக்குதயிரும், கனியும் சேர்த்த கலவை...... படிக்கும்போதே சுவைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
பதிலளிநீக்கு