16.3.26

"திங்க"க்கிழமை  :: மிளகாய்ப் பழ சட்னி --- துரை செல்வராஜூ  ரெஸிப்பி

 

மிளகாய்ப் பழ சட்னி

துரை செல்வராஜூ 

நமக்காக நாமே உணவு வகைகளைத் தயாரித்துக் கொள்ளும் போது வெளியாட்களின் சுகாதாரக் குறைவு செய்முறை பற்றிய சந்தேகங்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு..



இன்று -
மிளகாய்ப் பழ சட்னி

தேவையானவை:
சிவப்பு மிளகாய்ப் பழம்
(Capsicum Red, Bell Pepper)
பெரியதாக ஒன்று
நடுத்தரம் எனில் இரண்டு

தக்காளிப் பழங்கள் ஐந்து
பல்லாரி வெங்காயம் 2
பூண்டு 10
(பெரிய பற்களாக)

தாளிப்புக்கு :-
நல்லெண்ணெய் தேவையான அளவு
கடுகு அரை tbsp
உளுத்தம் பருப்பு ஒரு tbsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
கல் உப்பு தேவைக்கு


செய்முறை :

தக்காளிப் பழங்களைக் கழுவி விட்டு ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

மிளகாய்ப் பழத்தையும் இரண்டாக நறுக்கி உள்ளீடுகளை அகற்றி விட்டு மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் பூண்டு இவற்றையும் நறுக்கிக் கொள்ளவும்.

இவை எல்லாவற்றையும் இருப்புச் சட்டியில்
நல்லெண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வதக்கவும்..

தக்காளி, மிளகாய்ப் பழம், வெங்காயம், பூண்டு இவை நன்றாக வதங்கியதும் சற்று ஆறவிட்டு சிற்றரவையில் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு குவளை வெதுவெதுப்பான நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்..

வேறொரு வாணலியை மிதமான சூட்டில் வைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து வதக்கி வைத்திருக்கும் தக்காளி விழுதைச் சேர்த்து மேலும் ஒரு குவளை வெதுவெதுப்பான நீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு மல்லித் தழையைத் தூவி -

ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். .

இந்தச் சட்னி ஓரளவுக்கு தளதள என்று இருத்தல் வேண்டும்..

மெல்லியதாக நறுக்கப்பட்ட தக்காளி, மிளகாய்ப் பழம் வெங்காயம் பூண்டு இவற்றை வதக்கி விட்டு விழுதாக அரைக்காமல் அப்படியே தாளித்துக் கொள்வதும் ஒரு வகை..

வயிற்றுக்குத் துன்பம் (வயற்றெரிச்சல் நெஞ்செரிச்சல்)
தராத தக்காளி மிளகாய்ப் பழ சட்னி தயார்...

எக்காரணம் கொண்டும் மிளகாய்த் தூள் சேர்க்க வேண்டாம்...

ஆபத்தான பொருட்களுள் ஒன்றாக மாறி வருகின்றது மிளகாய்..

நாவிற்கு அடிமை எனில் சிறிதளவு மிளகுத் தூள் தூவிக் கொள்ளலாம்...

சிவப்பு மிளகாய்ப் பழம் தவிர்த்து மஞ்சள் நிற மிளகாய்ப் பழத்திலும் இதே முறையில் செய்யலாம்!..

" .. குண்டு பச்ச மொளகாய் ல செய்ய முடியாதா?.. "

" ஏன் முடியாது?.. நிக் கூட்ணி (Colour Cambo) சரியாக இருக்காது.."


நமது நலம்
நமது கையில்..
ஃஃ

=======================================================================================

இந்தப் படங்கள் பார்த்திருக்கிறீர்களா...   எப்படி இருக்குமோ என்கிற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.  உங்களுக்காக இந்த விமர்சனம்..!




78 கருத்துகள்:

  1. இன்றைய செய்முறை புதிது.

    குடைமிளகாயை உபயோகித்துச் செய்யப்படுவது. வாசனை இருக்கும், காரம் இல்லாத்து. நல்ல செய்முறை.

    பதிலளிநீக்கு
  2. எனக்கு குடைமிளகாய் பருப்புசிலி ரொம்ப பிடிக்கும். நீங்க சாப்பிட்டிருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குப் பிடித்த உசிலி வாழைப்பூதான்.   நாங்கள் வடகறி என்போம்!

      நீக்கு
    2. பீன்ஸ் உசிலியும் சுவையாக இருக்கும்.

      நீக்கு
    3. எனக்குப் பிடிக்காது!

      நீக்கு
    4. அடாடா..! அப்ப வாழையோடு சம்பந்தபட்ட வாழைத்தண்டு உசிலி செய்யலாம்.

      நீக்கு
    5. ஸ்ரீராம், ரசனையே இல்லை போங்க. பருப்பு உசிலி என்றால் முதலில் கொத்தவரை, பின்னர் பீன்ஸ், பின்னர் வாழைப்பூ, புடலங்காய், எல்லாக் கீரைகளும், முக்கியமாய் முருங்கைக்கீரை போன்றவை தான். குடமிளகாய்க் கறியும் சரி, பருப்பு உசிலியும் சரி நன்றாக இருக்கும். அந்த அரைத்த பருப்பு விழுதைக் குடமிளகாயில் ஸ்டஃப் செய்தும் பண்ணிக்கலாம். அதுவும் நன்றாக இருக்கும்.

      நீக்கு
    6. வாங்க கீதா அக்கா..  எனக்கு சின்ன வயசுலேருந்து வாழைப்பூ வடகறி சாப்பிட்டே வழக்கம்.  அதுவே பிடித்துப்போனது.  வழக்கத்தினாலும் பழக்கத்தினால் அமைவது ரசனை. எனக்கு மற்றதெல்லாம் அப்புறம்தான்.

      நீக்கு
  3. நல்ல வேளை இந்தப் படங்களைப் பார்த்திருந்திருக்கவில்லை.

    இனி ஓடிடிகளிலோ இல்லை யூடியூபுகளிலோ காணக் கிடைக்காத படம் என்று விளம்பரப்படுத்தி திரை விமர்சனங்களை ஶ்ரீராம் வெளியிட்டுவிடுவாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் ஒரு படமாவது நானும் பார்ததில்லையாக்கும்!

      நீக்கு
    2. நான் "நாடோடி" மட்டும் பார்த்திருக்கேன்.

      நீக்கு
    3. அப்போ இனிமே வெறும்ன கீசா மேடம்னு எழுதாம, மிக மூத்த பதிவாளர் கீதா சாம்பசிவம் மேடம் அவர்கள்னு எழுதிட வேண்டியதுதான்.

      நீக்கு
    4. ஒரு விதத்தில் சரிதான் நெல்லை. 2004 ஆம் ஆண்டில் வலைப்பக்கங்களுக்கு விமரிசனம் செய்ய ஆரம்பிச்சேன். அம்பேரிக்காவுக்குப் பொண்ணு வீட்டுக்குப் போயிருந்தப்போ. பின்னர் 2005 ஆம் ஆண்டில் வலைப்பக்கம் திறந்து எழுத முடியாமல் தவித்துப் பின்னர் நண்பர் ஒருத்தர் மூலம் இ கலப்பையைத் தரவிறக்கித் தட்டச்ச ஆரம்பித்துப் பின்னர் அப்போதிருந்து தொடங்கியது வலைப்பயணம். இந்த விஷயத்தில் ஜீவி சார் கூட நான் வலை உலகுக்கு வந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே வந்தார். ஆனால் அதுக்கும் முன்னாலேயே அவர் மகனை எனக்கு நன்கு தெரியும். நல்ல நண்பர். இப்போதெல்லாம் அதிகம் வலைப்பக்கம் வருவதில்லை. ஆன்மிக ஈடுபாடு அதிகம் உண்டு. அவர் எழுத்தின் தரமே அதைச் சொல்லும்.

      நீக்கு
    5. நீங்க ரொம்ப அனுபவம் உள்ளவர்னு தெரியும் கீசா மேடம். ஜீவி சார் பையனும் எழுதுவாரா?

      நீக்கு
    6. https://jeevagv.blogspot.com/ ஜீவாவின் வலைப்பக்கம் இது தான் நெல்லை. நான் ஆரம்பித்த சமயம் தான் இவரும் ஆரம்பிச்சிருக்கார். எங்களுக்குள் அப்போலேருந்தே நல்லதொரு நட்பு உண்டு. அப்போ அதாவது 2005 இல் அவருக்குக் கல்யாணம் ஆன புதுசுனு நினைக்கிறேன். அம்பேரிக்காவிலேயே ஸ்ரீமந்தம் பண்ணினதை எல்லாமும் எழுதி இருப்பார். முதலில் பெண் குழந்தை. பெயர் சுவேதிகானு வைச்சார். அதை எழுதும்போது கண்டிப்பாக சுவேதிகானு தான் சொல்லணும். ஸ்வேதிகா இல்லைனு சொல்லி இருந்தார். அவளோட பிறந்த நாளைச் சென்னையில் கொண்டாடினப்போ எங்களை அழைத்திருந்தார். ஏதோ தீட்டு வரவே போக முடியலை. சுப்புத்தாத்தா மட்டும் போயிட்டு வந்து எனக்கு ஃபோன் பண்ணிச் சொன்னார். இப்போ சுப்புத்தாத்தாவும் அதிகம் பேசுவதில்லை. முன்னெல்லாம் கருத்துகளிலேயே எங்களுக்குள் கருத்துப் போரெல்லாம் உண்டு. அப்போத் தான் ஜீவா சொல்லி இருந்தார். இப்போப் புதுசா "ஜீவி" என்னும் பெயரில் எழுதறது என்னோட அப்பாதான் என்று. அது வரைக்கும் தெரியாது. இப்போ எழுதறதாகத் தெரியலை.

      நீக்கு
  4. 'அவன் பித்தனா' திரைப்படத்திற்கு விமர்சனம் படித்து---- எந்தப் பத்திரிகையோ தெரியவில்லை. குமுதமா இருக்காது என்பதற்கும் க்ளூ இருக்கிறது) --- நாம் பித்தனாக ஆகாமல் இருந்தால் சரி.

    அது சரி, ரெண்டு சரோஜா தேவி, ஒண்ணே ஒண்ணு விஜயகுமாரியா? ஏன் இந்த வஞ்சனை என்று தெரியவில்லை.

    அந்த ஹிந்திப் படம் பற்றி?.. தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் ஏன் இந்தத் திணிப்பு என்று மட்டும் தெரிலே. அதுக்குப் பதில் தெலுகு, கன்னடம், மலையாளம் என்று தென்னகப்படம் ஒன்றை உபயோகப்படுத்தியிருக்கலாம் இல்லையா?

    அடுத்த திங்களுக்காவது எதிர்பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்ன வேணுமின்னா செய்தேன்?!!  கையில் கிடைத்ததைதானே போடமுடியும்!

      நீக்கு
    2. பின்னூட்டம் என்பது நேரிடையான பதிலுக்கு இல்லை, ஸ்ரீராம். நான் சொல்வதில் எதையாவது பிடித்துக்கொண்டு நீங்களும் பதிவுக்கு சுவையூட்ட மாட்டீர்களா என்பதற்காகத்தான்

      குமுதம் இருக்காது என்பதற்கு க்ளூவா? அட! எனக்குத் தெரியுமே அது!
      யாராவது க்ளூவைக் கண்டுபிடிக்கிறார்களா என்று பார்ப்போம் என்கிற மாதிரி உங்கள் பதில் இருந்திருந்தால் பதிவுக்கு இன்னும் சுவை கூட்டுவதாக அது ஆகிப் போகும்.

      ஒரே ஸ்டோர் டைப்பான பின்னூட்டங்களை மாற்ற நானும் எவ்வளவோ முயற்சிகள் செய்கிறேன், ஸ்ரீராம்.

      நீக்கு
    3. ஒரே மாதிரியான பின்னூட்டங்களை மாற்ற --- என்று திர்த்திப் படித்துக் கொள்ளவும். ஸாரி.

      நீக்கு
    4. எனக்குத் தெரிஞ்சு ஒரு விஜயகுமாரி, ஒரு சரோஜா தேவி, இன்னொண்ணு கே.ஆர்.விஜயா, மற்றது சந்தியா நடிச்ச மராட்டி டப்பிங் படம் ஹிந்தியில்னு இருக்கு. சரோஜாதேவி படம் தேடிப் பார்த்தும் இன்னொண்ணு கிடைக்கலை. :(

      நீக்கு
    5. குமுதம் எனில் விமரிசனத்தின் மொத்தப் பொருளும் அந்தக் கடைசி ஒரு வரியில் அடங்கிடும். விகடன் எனில் கேட்கவே வேண்டாம். விஸ்தாரமாக அலசி இருப்பார்கள். அந்தக்கால கட்டக் கல்கியில் தான் இம்மாதிரிக் கட்டுரை போல் விமரிசனங்கள் வந்தன.

      நீக்கு
    6. சாந்தாராமின் வேறே ஹிந்திப்படங்கள் பல பிரபலமானவை அவற்றைப் பற்றிய விமரிசனங்களைப் போட்டிருக்கலாமோ? ஹிஹிஹி என்னோட ஒரு பைசாக் கருத்து.

      நீக்கு
    7. கங்கிராஸ்ட் கீதாம்மா!
      குமுத சினிமா விமர்சனம் பற்றிய க்ளூக்கு உங்க விடை கரெக்ட்.
      வெட்கக்கேடு என்று எந்த படத்திற்கு குமுத விமர்சனததின் கடைசி வரி இருந்தது என்று இப்போப் பார்த்து ஞாபகத்திற்கு வருகிறது!

      நீக்கு
    8. வேணடுமென்றே இரண்டு சரோஜாதேவி என்று அந்த தவறைச் செய்திருந்தேன்.
      'தாயின் மேல் ஆணை' அந்த விமர்சனக் குறிப்பிலேயே கே.ஆர்.விஜயா என்ற குறிப்பு இருக்கு பாருங்கள்.
      ஆக இரண்டிலும் உங்களுக்கே வெற்றி!

      நீக்கு
    9. @Jeevi Sir! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    10. இவர் என்றால் அவர் பின்னூட்டம் இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு அத்துபடி ஆகி விட்டது.
      அந்த வழக்கமான பாணிகள் மட்டும் மாற்றி மாற்றி மாறுனால், எபிக்கு இணை .....
      அது சரி, எதுக்கு மாத்திக்கணும் என்கிறீர்களா?
      தினமுன் ஒரே மாதிரி சமையல் அயிட்டம் என்றால் சுவைக்காது அல்லவா?
      அதே மாதிரி தான் இதுவும்.

      நீக்கு
    11. அடுத்து அந்தக் கேடு பற்றி... எந்தப் படமாயிருக்கும்?

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. மேலே இரண்டாய் பிரசுரம் ஆகிவிட்டதால் ஒன்றை கைகழுவி இருக்கிறேன். வேறே ஒன்றம் காரணமில்லை!

    பதிலளிநீக்கு
  7. நல்ல குறிப்பு! துரை அண்ணா.

    செய்வதுண்டு பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று. சென்ற வாரம் இடம் பெற்றது நம் வீட்டில், தோசைக்கு.

    கூடவே சாப்பாட்டிற்கு குடைமிளகாய் பருப்பு உசிலி.

    கு மி பருப்புசிலி ரொம்ப நன்றாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி...
      நன்றி சகோ...

      நீக்கு
    2. இந்தப் பல நிறக் குடைமிளாஅய்களுடன் பேபி கார்ன் சேர்த்துச் சாதம் பண்ணினால் நல்லா இருக்கும். நானும் இங்கே வந்து பண்ணணும்னு நினைச்சுக்கறேன். என்னவோ நேரம் சரியா வாய்க்கலை. இதுக்கு அநேகமா சாஸ் வகைகள் தான் சேர்ப்பாங்க. ஆனால் நான் தக்காளியை மட்டும் சாறாக எடுத்துண்டு மசாலாப் பொடிகள் சேர்த்துத் தான் பண்ணுவேன். எங்களோட (மாமா அன்ட் மீ) சுவைக்கு அது தான் ஒத்து வருகிறது.

      நீக்கு
  8. துரை அண்ணா, மிளகாய்த்தூள் மட்டுமல்ல, மிளகாயே நீங்க சொல்லிருப்பது போல் - வரமிளகாய் கலர் சற்று மாறி யிருந்தால் பயன்படுத்தக் கூடாதாம். கடையிலிருந்து வாங்கிவந்ததும் உடனே அவற்றை நீக்கி விட வேண்டுமாம். முழு மிளகாயும் சிவப்பாக இருக்க வேண்டுமாம். நுனியில் சற்று சிவப்பு கம்மியா மஞ்சள் கலந்தாப்ல இருநா ....நீக்கிடணுமாம்? அப்படினாக்க 1/4 கிலோ மிளகாய் வற்றலில் என்ன தேறும் என்று யோசிக்க வைக்கிறது. பொறுக்கியா வாங்க முடியும்?

    என்னவோ போங்க!!

    மிளகாய் வற்றல் பமி காய்கள் உலர்நு வரும் போது சில மஞ்சள் வந்து பின்னர்தானே சிவப்பாகும் அப்ப கொஞ்சம் பழுப்புடன் தானெ வரும் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அவன் பித்தனா - விமர்சனத்தின் முதல் பாராவை டிட்டோ செய்கிறேன். கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைகளோடு வாழ்ந்தால் உலகம் இப்படித்தான் பட்டம் கட்டும்.

    கதைக்கரு அக்காலத்துக்கான கரு. இப்பவும் கூட இப்படியான மனிதர்கள் இருந்தாலும் சினிமா எடுபடாது. அதுவும் பிரசங்கம் இருந்தால்...ஏற்கனவே நம்ம சமுத்திரக்கனிக்கு அப்படி ஒரு பட்டப்பெயர் உண்டு இல்லையோ? அதாவது சினிமாவில் அட்வைஸ் கருத்துகளை வழங்கும் கதாபாத்திரம் என்பதால்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. தாயின் மீது ஆணைக்கான விமர்சனத்தில் ஒரு வரி வருது பாருங்க....//தமிழ்ப்படங்களின் தரம் உயர்ந்து கொண்டு வருகிறது என்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்.....//

    அதை விமர்சித்தவர் இப்ப என்ன சொல்வார் என்று யோசிக்கிறேன். இப்போது சினிமாவின் தரம் அதாவது டெக்னாலஜிப்படியும் வித்தியாசமான சிந்தனைகளின் படியும் காட்சி அமைப்புகளிலும் வித்தியாசம் வந்திருக்கலாம் ஆனால் கதைகளில் இன்னும் வந்தால் நல்லா இருக்கும் ஒரு சில படங்களைத் தவிர. திரும்பத் திரும்ப சீசனல்ஆகத்தான் போகுது படங்கள்.

    ராதிகா சொல்றாங்க, தாய்க்கிழவிக்குப் பிறது நிறைய கதைகள் சொல்ல வந்தாங்களாம் எல்லாத்துலயும் கிழவி கேரக்டராம்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளையாத் திரைப்படங்களே பார்ப்பதில்லை. ஏனோ தெரியலை. அலுப்பைத் தருகின்றன படங்கள். அதுவும் தமிழ்ப்படங்கள். :(

      நீக்கு
    2. With Love பாருங்கள்.  நல்லாயிருக்கு...  உங்களுக்கு குடும்பக்கதையா இருக்கணுமா, த்ரில்லர்களாம் ஓகேயா?

      நீக்கு
    3. நகைச்சுவைப் படங்கள், த்ரில்லர் படங்கள் தான் பிடிக்கும். எங்கே! தமிழில் நகைச்சுவை என்னும் பெயரில் உருவத்தையும், நிறத்தையும் கேலி செய்து சிரிப்பது தான். த்ரில்லர் என்றால் அர்த்தமே புரியறதில்லை. முன்னாட்களில் ஸ்ரீதர் எடுத்தார் த்ரில்லர் படங்கள்

      நீக்கு
  11. எனது குறிப்பை பதிவு செய்த
    ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்வோம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. பதிவிற்கான அலங்காரங்கள்
    சிறப்பு..நன்றி ஸ்ரீராம்...

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்களில் காரம்/ காரமில்லாத சட்னி செய்முறை நன்றாக உள்ளது. படங்களுடன், கலர்கலராக அவைகள் மின்னும்படி தந்திருந்த சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த வெய்யிலில் காரம் தவிர்ப்பது நல்லது.

    அந்தக்கால படங்களை பொறுமையாகப் பார்க்க இப்போதுள்ளவர்களுக்கு பிடிப்பதில்லை. எங்கள் வீட்டில் நான் மட்டுந்தான் பார்ப்பேன். படங்களின் பகிர்வுக்கும் நன்றாக உள்ளது.

    சமையல் பொருட்கள் கலர், கலராக ஜொலிக்கிறது. அடுத்து கலரில்லாத ப்ளாக் அண்ட் ஒயிட் படங்களின் விமர்சனம். மாறுபட்ட இத்திங்களை (சந்திரனை) ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்ணப் படங்களையும், கருப்பு வெள்ளைப் 'படங்களை'யும் இணைத்தது சூப்பர்!

      நீக்கு
    2. மகிழ்ச்சி..
      நன்றியம்மா...

      நீக்கு
  15. ஸ்ரீராம் சினி விமர்சனம் பகிர்ந்தது நல்லருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  16. குடைமிளகாய் வைத்து விதம் விதமாக வடக்கில் சமையல் செய்வார்கள். எனக்குத் தெரிந்த கன்னடிகர் ஒருவர் குடைமிளகாயில் தயிர்பச்சடி செய்வார். குடைமிளகாயை பொடியாக நறுக்கி, வதக்கி, பின்னர் தயிர் கலந்து செய்வார் - அவரின் அம்மா சொல்லிக் கொடுத்தது என்றும் சொல்வார். நன்றாகவே இருக்கும்.

    சினிமா - மேற்கோள் காட்டப்பட்ட படங்கள் குறித்து கேள்விப்பட்டதே இல்லை! :) பார்க்கும் எண்ணமும் இல்லை.

    உசிலி - கொத்தவரங்காய், வாழைப்பூ ஆகிய இரண்டு மட்டுமே உசிலி வகையில் எனக்குப் பிடித்தது. பீன்ஸ் உசிலி அவ்வளவு ரசிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீராம். தக்காளி ரோஸ் கலர்..ஹாஹாஹா. உங்க கூட பேசும்போது தான் நீங்க சொல்லி கவனிச்சன் ஸ்ரீராம். காலையில் பார்க்கும்போது வேக வேகமாக பார்த்ததால் கண்ணில் படவே இல்லை, பாருங்க...இன்று அந்த அளவுக்கு தான் என் கவனம் இருந்திருக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. இந்த சினிமா விமர்சனங்கள்
    மீது அவ்வளவாக ஈர்ப்பு
    இருந்ததில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)) நமக்கு இல்லைன்னாலும் மற்றவர்களுக்கு இருக்கலாமே...!

      நீக்கு
  19. துரையின் இந்தக்குடைமிளகாய்ச் சட்னி செய்முறை நன்றாக இருக்கு. செய்து பார்க்கணும் பூண்டு சேர்க்காமல். மற்றபடி பச்சை மிளகாயில் இந்த மாதிரிச் சட்னி செய்திருக்கேன். சில நாட்கள் வரும்படி பண்ணி இருக்கேன்.

    பதிலளிநீக்கு
  20. "நாடோடி" படம் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பார்த்திருக்கேன். உண்மையில் நியூ சினிமாவில் வேறே ஏதோ ஜிவாஜி படம் பார்க்கணும்னு எங்க பெரியப்பா பெண் (அக்கா) என்னையும் அவர் தங்கை, அம்மாவையும் வேலைக்கார அம்மா துணையுடன் அழைத்துப் போனப்போ நியூ சினிமாவில் கூட்டம் தாங்கலை. தெருவெல்லாம் மக்கள் வெள்ளம். ஆகவே சினிமா பார்க்காமல் வீட்டுக்குத் திரும்புவதில்லை என்ற முடிவின்படி சென்ட்ரல் தியேட்டருக்கு வந்தோம். நியூ சினிமாவிலிருந்து கிட்டக்கத் தான் சென்ட்ரல் தியேட்டர். அங்கே காத்தாடிக் கொண்டிருந்து. சரினு டிக்கெட் வாங்கிப் போய்ப் படம் பார்த்தோம். தர்மலிங்கத்தின் முதல் பெண்ணாக பாரதி நடித்து இருப்பார். பின்னால் தான் ஜரோஜா தேவி பாரதியின் தங்கையாக வருவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது..  எம் ஜி ஆர் படத்துக்கு கூட்டமில்லையா?  சிவாஜி படத்துக்கு கூட்டமா?  ஆ...

      நீக்கு
    2. ஹெ,ஹெ,ஹெ ஆமாம், அதுவும் மதுரையில். :)))))))

      நீக்கு
  21. விமரிசனங்கள் எல்லாமும் படிச்சேன். குமுதமோ, ஆனந்தவிகடனோ இல்லை. ஒருவேளை கல்கியோ? ஏனெனில் விமரிசகரின் எழுத்து நடை குமுதமாகக் காட்டலை. ஆனந்த விகடனில் அப்போல்லாம், சங்கர் - கணேஷ், ஷண்முகசுந்தரம் - மீனாக்ஷி அம்மாள் என்னும் சில பெயர்களிலும் வேறு சில பெயர்களிலும் விமரிசனங்கள் வரும். அறுபதுகளுக்குப் பின்னர் இது மாறியது என நினைக்கிறேன். வாசன் இறந்து போய் நிர்வாகம் பாலசுப்பிரமணியம் கைக்கு வந்தப்புறமா மாறி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்கியில் வந்தவை.

      நீக்கு
    2. அப்படித்தான் நினைச்சேன். வார்த்தைப் பிரயோகங்களும் கட்டுரை வடிவிலான விமரிசனமும் அப்படித் தான் சொன்னது. மேலேயும் ஒரு இடத்தில் சொல்லி இருக்கேன்.

      நீக்கு
  22. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  23. மிளகாய்ப் பழ சட்னி நன்றாக இருக்கிறது. நான் குடைமிளகாயில் எல்லா வண்ணங்களில் இருக்கும் மிளகாயில் சட்னி செய்வேன்.
    பூண்டு சேர்க்காமல் உளுந்து வறுத்து அரைத்துக் கொள்வேன். கொஞ்சம் புளி வறுத்து சேர்த்துக் கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேல் விவரங்களுக்கு
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா.

      நீக்கு
  24. படங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.
    சாந்தாராம் படம் மட்டும் பார்க்கவில்லை. மற்ற படங்கள் பார்த்து இருக்கிறேன்.
    கடைசி படத்தை தொலைக்காட்சியில் பழைய படம் என்று பார்க்க ஆரம்பித்த போது இப்படி படம் எடுத்து இருக்கிறார்களே என்று தான் நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  25. /// :)) நமக்கு இல்லைன்னாலும்
    மற்றவர்களுக்கு இருக்கலாமே...!///

    தாராளமாக இருக்கலாம்..

    பதிலளிநீக்கு
  26. குடமிளகாய் சட்னி காரம் இல்லாத நல்ல செய்முறை.

    குடமிளகாய் சாதம், ப்ரைட்ரைஸ், சாட்டே ,பாஸ்ரா, காளான், சலாட் வகைகளில் கலப்போம் சட்னி செய்ததில்லை செய்து பார்க்கிறேன்.

    ப்ளாக் வைற் படங்களைக் காண்பது அரிது. இன்றைய திங்கள் படங்கள் வித்தியாசமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  27. காரமில்லாத மிளகாய் சட்னி வயிற்றுக்கும் நல்லது, நாவுக்கும் ருசியாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  28. பட விமர்சனம் கல்கியின் பாணியாக இருக்கிறதே என்று தோன்றியது. கீதா அக்கா கூற, ஸ்ரீராமும் அதை உறுதி படுத்தியிருக்கிறார். எனக்கு நானே ஷொட்டு கொடுத்டுக் கொள்கிறேன். ஹி ஹி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!