திடீரென்று பழைய வீட்டின் அருகே இருந்தவர் போனில் அழைத்து 'உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது இது உங்கள் வீட்டுப்பெயரா?' என்று மாமியார் பெயர் குறித்து கேட்க, 'ஆமாம்' என்று சொல்லி, அதை இங்கு அனுப்பச்சொல்லி, அது வந்ததும் படித்துப் பார்த்தால் மாமியாரின் குடும்ப ஓய்வூதியம் தடைப்பட்டிருக்கிறது என்பதை சொன்ன கடிதத்தில் 'காரணம் நீங்கள் லைவ் சர்டிபிகேட் கொடுக்காததே' என்கிற அந்த வாசகத்தைப் படித்ததும்தான் நான்கைந்து மாதங்களாக அவருக்கு வரவேண்டிய ஓய்வூதியம் வரவேயில்லை என்பதும் கவனத்துக்கு வர, 'கடந்த ஜூன் மாதம் தபால் அலுவலகம் மூலமாக லைவ் செய்தோமே என்னாச்சு' என்று கேள்வியும் எழ, நண்பர்களிடம் விவரம் விசாரித்து, மறுபடி அதே மாதிரி தபால் அலுவலகம் மூலம் (வீட்டுக்கு வரவழைத்துதான்) லைவ் செய்யலாமா என்கிற எங்கள் யோசனையும் நிராகரிக்கப்பட்டதில், சரி நேரி
அங்கிருந்து உறவினர் வீடு சென்று அளவளாவி, காபி குடித்து கிளம்பி, வரும் வழியில் நேரமாகி விட்டாலும் எதற்கும் இருக்கட்டுமே என்று நுழைந்து, என் வங்கிக்கும் சென்று அவர்களும் ஒத்துழைக்க, அவர்கள் சொன்ன ஃபார்மாலிட்டிஸ் அவ்வளவு முக்கியமில்லை என்று அறிந்தாலும், வந்ததற்கு அதையும் முடித்து வீடு திரும்பும்போது மணி மாலை ஆறு!=====================================================================================


நீதிபதி கண்ணீர் : சுவாசிப்பதற்கும், உணவு அளிப்பதற்குமான குழாய் அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. சுயநினைவு இல்லாமல் உள்ளார். டாக்டர்கள் கைவிட்ட நிலையில், ஹரீஷ் ராணாவுக்கான உயிர் காக்கும் கருவிகளை அகற்ற அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிபதி பர்திவாலா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டார்.
"இது வெறும் சட்டம் சார்ந்த முடிவு அல்ல; அன்பு, மருத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த முடிவு. உங்கள் மகனை கைவிடவில்லை. மாறாக அவர் கண்ணியத்துடன் இறக்க நீங்கள் அனுமதி கேட்டுள்ளீர்கள்," என்று ராணாவின் பெற்றோரை நோக்கி குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தின் கண்கலங்க வைக்கும் கடைசி காட்சிகளை விவரிக்கும் போஸ்ட்.
https://www.facebook.com/share/p/1EcbesVrDm/
===================================================================================
விஜயகாந்த் தொடர்ச்சியாக எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது சந்திரசேகரின் உதவியாளராக இருந்த செந்தில்நாதனை விஜயகாந்திற்கு மிகவும் பிடிக்கும். அவரது பணிவு, கடும் உழைப்பு அவருக்கு பிடித்து விட்டது. அவருக்கு ஒரு படம் நடித்து கொடுத்து அவரை இயக்குனராக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஒரு நாள் செந்தில்நாதனை அழைத்து "நான் ஒரு படம் நடித்து தருகிறேன். ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு நல்ல கதை எழுதி கொண்டு வா" என்று சொல்லி அவருக்கு ஒரு ஒட்டலில் அறையும் புக் செய்து கொடுத்தார். சில வாரங்களில் செந்தில்நாதன் கதையோடு வந்தார். அந்த கதையும் விஜயகாந்திற்கு பிடித்து விட்டது. செந்தில்நாதனுக்கு ஒரு தொகை முன்பணமாகவும் கொடுக்கப்பட்டது.
அப்போது விஜயகாந்த் 'காலையும் நீயே மாலையும் நீயே படத்தில் நடித்து வந்தார். செந்தில்நாதனுக்கு முன்பணம் கொடுத்த அன்று படப்பிடிப்பில விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் சகுணம் சரியில்லை என்று கூறி இந்த படத்தை டிராப் பண்ணிடலாம் என்று ராவுத்தர் கூறினார். அதற்கு விஜகாந்த் மறுத்து விட்டார்.
படப்பிடிப்புகள் நடந்தபோது படத்தில் இளம் ஜோடிகளாக நடித்த ஆனந்த், வாண விஸ்வநாத் காட்சிகள் படமானபோது விபத்து ஏற்பட்டு ஆனந்த் படுகாயம் அடைந்தார். இதனால் 2 மாதங்கள் படம் தடைபட்டது. இருவழியாக படம் முடிந்து இளையராஜாவிடம் பின்னணி இசைக்காக ஒப்படைக்கப்பட்டது. படத்தை பார்த் இளையராஜா 'இந்த படத்திற்கு ரீரிக்கார்டிங் பண்ணுவதே வேஸ்ட்' என்று சொன்னதாக ஒரு தகவல் பரவ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பணத்தை திருப்பி கேட்க தொடங்கினார்கள். இதனால் கோபம் அடைந்த விஜயகாந்த் இளையராஜாவை சந்தித்து படம் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் நீங்கள் இசை அமைத்து கொடுங்கள் என்று கூறிவிட்டார்.
பின்னணி இசை கோர்ப்பு முடிந்ததும் படத்தின் பிரிவியூ ஷோ போடப்பட்டது. மிகுந்த மன உளைச்சலில் இருந்த விஜயகாந்த் அந்த ஷோவிற்கு போகவில்லை. காரணம் படத்தை பார்க்க அவர் விரும்பவில்லை. ஷோ முடிந்ததும் விஜயகாந்திற்கு போன் கால்கள் பறந்தது. சார் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும், நீங்க பிரமாதமாக நடிச்சிருக்கீங்க என்றது போன்கால்கள்.
அதன்படியே படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வெள்ளி விழா கொண்டாடியது. அந்த படம் 'பூந்தோட்ட காவல்காரன்'.
பிளாஷ்பேக் - தினமலர்
=====================================================================================
ஒருமுறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு... பாடல் கேட்டிருக்கிறீர்களா? 1975 ல் வெளியான ஒரு படம் மயங்குகிறாள் ஒரு மாது.
விஜயபாஸ்கர் இசையில் 'சம்சாரம் என்பது வீணை', 'வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்' போன்ற நல்ல பாடல்களைக் கொண்ட படம். எஸ் பி முத்துராமன் இயக்கத்தில், முத்துராமன், சுஜாதா, தேங்காய், விஜயகுமார் நடித்திருக்கும் படம்.
திருமணத்துக்கு முன் விஜயகுமாரை காதலித்து, உடலுறவு கொண்டு கர்ப்பமாகி, அதைக் கலைக்கும் சுஜாதா பின்னர் முத்துராமனுக்கு மனைவியாகிறார். விஜயகுமார்-சுஜாதா தப்பு செய்த போட்டோக்களை கள்ளத்தனமாக எடுத்து தேங்காய் சுஜாதாவை பிளாக்மெயில் செய்கிறார். அவர் மனைவி சுஜாதாவின் கல்லூரித்தோழி. பிளாக்மெயில் விஷயம் தோழிக்கு தெரியாது. சங்கடம் போதாது என்று விஜயகுமாரும் அதே வீட்டுக்கு டிரைவராக வந்து சேர்கிறார். தேங்காய் பணம் கேட்கும்போதெல்லாம் சுஜாதா முத்துராமனுக்கு தெரியாமல் (என்று நினைத்து) பணம் எடுத்துக் கொடுத்துத் தவிக்கிறார். ஒருபுறம் விஜயகுமார், ஒருபெயரம் தேங்காய், நடுவில் சுஜாதா, அவர்களுக்கு பொதுவில் முத்துராமன். இந்தக் காட்சி அமைப்பில் வாணி ஜெயராம் குரலில் இந்தப் பாடல். பாடல் கண்ணதாசன்.
ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே
அழகிய கலைமான் அழகிய கலைமான்
ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே
அழகிய கலைமான் அழகிய கலைமான்
ரகசிய இதயம் பலவகை துயரம்
அவனருள் கிடைத்தால் துயரங்கள் விலகும்
ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்
உண்மையைச் சொன்னால் சன்னிதி திறக்கும்
ஒவ்வொரு மானுக்கும் நிம்மதி கிடைக்கும்
யாரறிவாரோ ஊமையின் கனவு
யாரறிவாரோ ஊமையின் கனவு
மானுக்கும் உண்டு ஒரு வகை மனது
ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே
அழகிய கலைமான் அழகிய கலைமான்
பாட நினைத்தது பைரவி ராகம்
பாடி முடித்தது யாவையும் சோகம்
மானும் நினைத்தது மங்கலம் பாட
மானும் நினைத்தது மங்கலம் பாட
மயங்கி விழுந்தது சங்கமமாக
ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே
அழகிய கலைமான் அழகிய கலைமான்
பெண்ணாய் பிறந்தால் பேதமை உள்ளம்
பேதமையாலே விளைந்தது கள்ளம்
கண்ணா உனது கருணையை காட்டு
கண்ணா உனது கருணையை காட்டு
காரிகை வாழ்வினில் நிம்மதியூட்டு
ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே
அழகிய கலைமான் அழகிய கலைமான்
ரகசிய இதயம் பலவகை துயரம்
அவனருள் கிடைத்தால் துயரங்கள் விலகும்
ஒரு புறம் வேடன் மறுபுறம் நாகம்
=============================================================================================
ஒரு அறிமுகம்....
18-ஆம் நூற்றாண்டு தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம். பலம் வாய்ந்த மொகலாய, விஜயநகர அரசுகள் சிதறுண்டு மராட்டியர்கள், ஹைதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப், திருவிதாங்கூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை தனி யரசுகள், எழுபத்தியிரண்டு பாளையங்கள் எனத் தென்னிந்தியா ஒரே நேரத்தில் பல சுதந்திர அரசுகளைக் கொண்டிருந்தது. இவை போதாதென்று தனி நபர்கள் தலைமையில் இயங்கிய கூலிப் படைகள். இந்தத் தனியரசுகள் ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டு தென்னகத்தைப் பெரும் கலவரப் பூமியாக மாற்றியிருந்தன. கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டுகளைப்போல், நம் அரசர்கள் இருப்பதை அறிந்த ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கீசியம், லத்தீன் பேசும் ஐரோப்பிய வணிகர்கள், வழிவழியாக வந்த அரசுரிமை பெற்றவர்களை ஓரம் தள்ளிவிட்டு, இந்தியாவின் ஆட்சியாளர்களாக மாற முயற்சி செய்த நேரமது.
அக்காலகட்டத்தில் பெரும்பாலான அரசுகளை வழிநடத்தியவர்கள் அதன் அமைச்சர்களும், தளபதிகளும்தான். துபாஷ்கள் என்ற புதிய அதிகாரவர்க்கம் ஒன்று தங்களது மொழிபெயர்ப்புத் திறமையால் பலம் பெற்றனர். துபாஷ்கள் இன்றி ஐரோப்பியர்களின் எந்த நடவடிக்கையும் இருக்காது.
அமைச்சர்களையும், துபாஷ்களையும் அனுசரித்தே ஆட்சி நடத்த வேண்டிய சூழலில் உள்நாட்டு அரசர்களும், ஐரோப்பியர்களும் இருந்தனர்.
தென்னிந்தியாவின் அமைதியையும், சுதந்திர அரசர்களுக்கிடையில் இருந்த ஒற்றுமையின்மையையும் துபாஷ்கள்மூலம் தெரிந்துகொண்டு ஐரோப்பிய அரசர்கள் அடுத்த நகர்வுகளைத் தீர்மானித்தனர். அந்நிய மொழி தெரிந்த துபாஷ்கள், நம் ஊர் அரசர்களிடம் நேரடியாகப் பேச வழி யில்லாததால் அமைச்சர்கள், தளபதிகள் மூலமாகக் காய் நகர்த்தினர்.
தஞ்சாவூர் மராட்டிய அரசனைவிட அவனது தளபதிகள் முராரி ராவும், மானோஜியும் பலம் வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். மைசூர் உடையார் அரசரைவிட அமைச்சர் பூர்ணய்யாவின் வார்த்தைக்கு மதிப்பு அதிகம். அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை யின் வார்த்தைகளைக் கட்டபொம்மன் மீறியதில்லை.
வாணிகம் செய்ய இந்தியா வந்த வெளிநாட்டவர்கள் இங்கிருந்த சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். கிடைத்த மிளகு, ஏலம், லவங்கம், தென்னிந்தியாவில் பனை வெல்லம், பருத்திக்கு ஐரோப்பியாவில் மிகுந்த தேவையிருந்தது. இங்கு வாழ்ந்த அரசர்களின் வாழ்க்கைமுறை, படோடபம், செல்வம் அவர்கள் நாட்டு அரசர்களின் வாழ்க்கைத்தரத்தோடு ஒப்பிடுகையில் மிக உயரியதாக இருந்தது. ஐரோப்பிய மத குருக்கள், தங்கள் பங்கிற்கு, இங்குள்ள சூழலை விரிவாகத் தங்கள் தலைமையகங்களுக்குக் கடிதமாக எழுதினர். வெளிநாட்டிலிருந்து இரண்டு மாதக் கடல் பயணத்தில் இந்தியாவிற்கு வந்து சேரக் கப்பல் போக்குவரத்தும், கடிதப் போக்குவரத்தும், தென்னிந்தியாவின் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்கு முடிவுகட்டத் தலைப்பட்டன.
தென்னிந்தியாவின் சில சிற்றரசுகள் தங்களது சுதந்திர உணர்வைக் காப்பாற்றிக்கொள்ள இறுதிக் கட்டப் போரைப் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் அறிவித்தன. 1799 ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப் பட்டினத்தில் கொல்லப்பட்ட பின்பு அடுத்த 160-ஆவது நாளில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். துந்தாஜி வாக், மருது பாண்டியர்கள், ஊமைத்துரை, சிவத்தையா, கோபால் நாயக்கர், பொம்மை நாயக்கர் எனப் போராளிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தூக்கிலிடப்பட்டனர். சின்ன மருதுவின் பன்னிரண்டு வயது மகன் துரைசாமியோடு சேர்த்து திண்டுக்கல், வாராப்பூர், கோயம்புத்தூர், நாங்குநேரிப் போராளிகள் எழுபத்தி இரண்டு பேர் மலேசியாவிலுள்ள பினாங்குத் தீவிற்கு நாடு கடத்தப்பட்டனர். சிவகங்கை அரசரும், பெரிய மருது சேர்வைக்காரரின் மருமகனு மான வெங்கம் பெரிய உடையணத் தேவர், சுமத்திரா தீவிலுள்ள பென்கோலனுக்கு போராளிகளின் நாடு கடத்தப்பட்டார். வருடத்திற்கு ஒருவராகப் போராளிகள் கொல்லப்பட்டனர். வீழ்ச்சியினால், மீதம் இருந்த சிற்றரசுகள் தங்களது சுதந்திரத்தை இழந்தன. ஆங்கி லேயர்களுக்கு அடிபணிந்து போயின. கிராமங்கள் பொருளாதாரத்தை இழந்தன.
- 1801 நாவல் - டாக்டர் ,மு. ராஜேந்திரன் இ. ஆ. ப முன்னுரை -
========================================================================================
வடிவுக்கரசி மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாமா? அங்கே பெரிய விளம்பரங்களுடன் ராதிகாவின் தாய்க்கிழவி வேஷம் பேசப்பட்டுக் கொண்டிருக்க, இங்கே வடிவுக்கரசி விளம்பரமில்லாமல் நூறு வயதுக்கும் மேற்பட்ட கிழவியாக நடித்து பயமுறுத்தி இருக்கிறார்.
நிதானமான நடிப்பு. பார்வையிலேயே நடிக்கிறார்.
வசனமே கிடையாது. விபரீதமான கதை அமைப்பு. நாமொன்று நினைக்க முடிவொன்றாய் இருப்பதும் எதிர்பார்க்கக் கூடியதே.. இரண்டாம் பாகம் வேணுமில்லோ..
========================================================================================
அம்மா மறைந்த உடன் அப்பா 'ஹேமாஞ்சாலி' என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டார். அதனோடு கூட, மறைந்த மனைவியுடன் தொடர்பு கொள்ள நிறைய முயன்றார். ஓஜோ போர்ட், ஆவியுலக ரவிச்சந்திரனுக்கு கடிதம், இறந்த மனைவியுடன் பேசியதாகச் சொன்ன ஆர் வி லக்ஷ்மண் புத்தகம்... இப்படி...
காஞ்சி மடத்துக்கும் சில சந்தேகங்களை எழுதி கேட்டிருந்தார். அங்கிருந்து வந்த பதில்..
வீட்டிலேயே இருந்திருக்கலாம்
என்று தோன்றுகிறது
வீட்டிலிருந்தால்
ஒரு மாமியார், ஒரு நாத்தனார்
வெளியில் பலர்.
ஓவியனின் பார்வையில்
படமாய் உறைந்தேன்
பேப்பரில்.
புத்தகம் திறந்ததும்
புத்துயிர் பெறுகிறார்கள்
கதை மாந்தர்கள்
==============================================================================================
மனிதனின் மறுபக்கம்..
ரஜினியின் வெளிவராத படம்.
பாலச்சந்தருக்கு அந்தச்செய்தி கேட்டதுமே ஒரு மாதிரி ஆகி விட்டது. புது வீடு கட்டி அதில் வைத்திருந்த பாலச்சந்தரின் பெரிய போட்டோவை அதில் கலந்து கொண்ட பாலச்சந்தரை பெருமைப்பட வைத்த அந்த போட்டோவை ரஜினி உடைத்துப்போட்டார் என்பது தான் அது.
'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் அனந்துவோடு சண்டை என்பதும் அவர் காதுகளுக்கு வந்து கொண்டு தான் இருந்தது. நினைத்தாலே இனிக்கும் டப்பிங் பேச வர வேண்டியது. வேறு ஒரு ஷுட்டிங்கிலிருந்த அவர் வரவேயில்லை.
ரஜினிகாந்த் பாலச்சந்தரின் பார்வையில் இப்படிப்பட்ட ஆளேயில்லை. அபூர்வராகங்கள் ரிலீசுக்குப்பின் ஒரு நாள் கே.பியை தேடிவருகிறார் ரஜினி. என்ன விஷயம் என்கிறார் கே.பி. "இல்லை..போன வருடம் இதே நாளில் நீங்கள் எனக்கு பெயர் வைத்தீர்கள்..ஆசிர்வாதம் வாங்க வந்தேன்". கேபிக்கு ஆச்சர்யம். வேறு எந்த புதுமுக நடிகனோ, நடிகையோ இப்படி வந்ததில்லை. அப்படி ஒரு நடிகரா இப்படி அடம் பிடிக்கிறார். எரிந்து விழுகிறார். மதுரையில் நடந்த திரிசூலம் விழாவிற்கு போய் விட்டு வரும் போது தகராறு.
ரஜினியின் சகோதரர் நாகேஸ்வரராவை அழைத்து கேட்கிறார் கே.பி. ரஜினியின் மாற்றம் குறித்துகேட்க அவரோ "பெரியண்ணனை கண் முன்னே வரவேண்டாம்" எனச்சொல்வதாக சொல்கிறார். "நீங்கள் அவர் கூடவே எப்போதும் இருங்கள்.." ஆனால் அவர் அன்றிரவே பெங்களூர் போய்விடுகிறார்.
பாலச்சந்தரை தேடி ஸ்ரீப்ரியா வருகிறார். "ரஜினியை காப்பாற்ற உங்களால் மட்டுமே முடியும்" ஸ்ரீப்ரியாவின் அந்த கோரிக்கையில் இருந்த அக்கறை கே.பிக்கு உறைத்தது. தந்தையாக தான் நிற்க வேண்டிய இடம் இது.
ரஜினியை சந்திக்கிறார் கே.பி. கே.பியின் கைகளை பிடித்துக்கொண்டு அழுகிறார் ரஜினி.
"என்னை ஏன் சார் ரஜினிகாந்த் ஆக்கினீர்கள். புகழின் வெளிச்சத்தை என்னால் தாங்கமுடியவில்லை..." ஒரு குழந்தையின் பரிதவிப்பாக ரஜினியிடம் கண்ட கே.பி நிலைமையை ஆராய்கிறார். ஓய்வில்லாத படப்பிடிப்பு. வரும் படங்களையெல்லாம் ஒத்துக்கொள்வது.
ரஜினியை நேரே டாக்டர் ஆர்.எஸ்.ராஜகோபாலிடம் கொண்டு போகிறார் கே.பி. அவர் பார்த்துவிட்டு "ஓய்வில்லாமல் இருப்பதால் பிபி எகிறி இருக்கிறது. ரெஸ்ட் எடுக்க வேண்டும்"
கே.பியே எல்லா இயக்குனர்களையும் அழைத்து கன்வின்ஸ் செய்கிறார். டாக்டர் செரியனிடம் அட்வைஸ் கேட்கப்படுகிறது. ஓய்வுக்குப்பின் கொஞ்சம் நார்மலாகிறது. பின் நின்று போன படங்களை முடித்துக்கொடுக்கிறார் ரஜினி.
கே.பி ரஜினியை வைத்து கொஞ்சம் எடுத்திருந்த 'மனிதனின் மறுபக்கம்' தேதிக்கு வேண்டி காத்திருக்கிறது. வேறொரு படமும் நிற்க பாலச்சந்தர் கலாகேந்திராவிடம் பேசி தன் படத்தை நிறுத்துகிறார். அந்தப்படத்தில் நடிக்கிறார் ரஜினி. அது தான் தர்மயுத்தம்.
மனிதனின் மறுபக்கத்தில் சினிமா இயக்குனராக ரஜினி, கீதாவுடன் நடிக்க இருந்தார். ஒரு பாடலும் படமாக்கப்பட்டிருந்தது. அதோடு படம் நிறுத்தப்பட்டது.
பாலச்சந்தர் அன்று ஒரு அட்வைஸ் செய்தார்.
"இனி நீ ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே ஒத்துக்கொள்ள வேண்டும்".
இன்று வரை அதை கடைபிடித்ததால் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். எல்லா மனிதனின் வாழ்விலும் மனிதனின் மறுபக்கம், தர்மயுத்தம் இவையெல்லாம் இருக்கிறது தானே....
கேபி ரஜினியை வைத்து எடுத்த 'மனிதனின் மறுபக்கம்' அதற்கு எடுத்த ஒரு பாடல் காட்சியை பின்னர் 'யுத்தகாண்டம்' என்ற படத்துக்கு உபயோகித்துக் கொண்டார்களாம்.
'மனிதனின் மறுபக்கம்' படத்தின் தலைப்பை மட்டும் சத்யஜோதி நிறுவனத்தார் வாங்கி, 'நிறக்கூட்டு' என்ற ஒரு மலையாள த்ரில்லர் படத்தை தமிழில் எடுத்தனர். சிவகுமார், ராதா, ஜெயஸ்ரீ நடித்த அந்தப் படத்தை இயக்கியவர் கே. ரெங்கராஜ். இளையராஜா இசையில் நான்கு பாடல்களுமே ஹிட். அதில் சித்ரா பாடிய வைரமுத்து பாடல் இன்று.
மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட சிவகுமாருக்கு மரணதண்டனை விதிக்கிறது நீதிமன்றம். தூக்கு தண்டனைக்கு முதல்நாள் சிறையிலிருந்து தப்பும் சிவகுமார் உண்மைக் குற்றவாளியைப் பழி வாங்குகிறார். மனைவியின் தங்கை ஜெயஸ்ரீக்கும் உண்மையை எடுத்துச் சொல்கிறார்.
சந்தோஷம் இன்று சந்தோஷம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்
சந்தோஷம் இன்று சந்தோஷம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்
உன் வார்த்தை செந் தேனா
நான் மாட்டேன் என்பேனா
சந்தோஷம் இன்று சந்தோஷம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்
மாலை சூடிடும் முன்னே
இவள் காதல் நாயகி
மாலை கூடினால் கண்ணா
இவள் காவல் நாயகி
சுகமா…..ஹா…..ஹா….உறவை மீட்டுவோம்
சுகம் தீராமல் இரவை நீட்டுவோம்
உன்னை ஒரு பூ கேட்கவே
ஓடிவந்தேன் இங்கே
பூந்தோட்டமே சொந்தம் என்றால்
நான் போவது எங்கே
சந்தோஷம் இன்று சந்தோஷம்
இந்த பொன் வீணையில் பொங்கும் சங்கீதம்
உன்னைக் கேட்கவே வந்தேன்
ஒரு ஆசை வாசகம்
நீயோ என்னிடம் கேட்டாய்
ஒரு காதல் யாசகம்
அதை தாளாமல் மனமோ துள்ளுது
இந்த போராட்டம் சுகமாய் உள்ளது
தெய்வம் வந்து என்னை கண்டு
தேதி ஒன்று கேட்கும்
கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே
கெட்டிமேளம் கேட்கும்
சந்தோஷம் இன்று சந்தோஷம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்
சந்தோஷம் இன்று சந்தோஷம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்
உன் வார்த்தை செந் தேனா
நான் மாட்டேன் என்பேனா
சந்தோஷம் இன்று சந்தோஷம்
இந்த பொன்வீணையில் பொங்கும் சங்கீதம்
===============================================================================================
ஜோக்ஸ்....
"அப்பா.. அவன் மூக்கு வேடிக்கையா இருக்கு பார்.."










சாண்டில்யனாக முயன்று முதல் பகுதியில் ஒரு வாக்கியத்தில் உங்கள் ஒரு நாள் அனுபவத்தை அடக்க முயன்றிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஎப்படியோ அன்றைய வேலைகள் முடிந்ததே
வாங்க நெல்லை... முடிந்ததாக கணக்குதான். அந்த கோர்ட் சமாச்சாரம் இழுபறிதான்.
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
நீக்குஇப்போது பூரண நலமாகி இருக்கிறீர்களா? கால் முட்டிகளில் வலிகள் எப்படி உள்ளது? மருந்துகள் ஏதேனும் விடாமல் எடுத்துக் கொள்ளுங்கள். தங்களுக்கு நன்கு குணமாக நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன். யுகாதி வாழ்த்துகள். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா ஹரிஹரன் மேடம். இது சரியாக ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்று தோன்றுகிறது. இருந்தாலும் மன வலிமையில் நடைப்பயிற்சி, நீச்சல், க்ரியா போன்றவற்றைச் செய்கிறேன். வெளியில் நடக்கும்போது மனதில் பயம், வழுக்குமோ என்று. இதில் இரண்டு நாட்கள் சென்னைப் பயணம்.
நீக்குஆமாம். இப்படிபட்ட அடிகள் விழுந்தால் பழையபடி சரியாக ஒரு வாரமென்ன, ஒரு மாதமே ஆகும். நானும் இதுபோல் நிறைய அடிகளை வாங்கி அனுபவித்துள்ளேன. எனக்கும் பட்ட அடிகளின் நினைவில் வெளியில் நடக்கவே அஞ்சுகிறேன். ஆனால், இந்த "ஆசைகள்" வலுக்கட்டாயமாக நம்மை இழுத்துச் சென்று மறுபடியும் அடி வாங்கித் தருகின்றன. அப்படிச் செல்லாவிட்டால், வீட்டிலேயே அடிகளை கொடுக்கின்றன. தவிர்க்க இயலவில்லை. உங்கள் மன உறுதிக்கு வாழ்த்துகள். எனினும் கவனமாக இருங்கள். நன்றி.
நீக்குகருணைக்கொலை வருத்த நிகழ்வு. நீதிபதி பர்திவாலாவின் மனிதநேயம் நெகிழ்ச்சி
பதிலளிநீக்குஆமாம். அந்த குடும்பத்தினரின் மனநிலை....
நீக்குஒன்று பணம் செலவழிக்கணும். End result தெரியாமல் செலவழிக்கணும்னா மைக்கேல் ஷூமேக்கர் அளவு பணம் இருக்கணும். கண் முன்னே தெரியும் உயிரின் கஷ்டம். இந்த நிலைக்குப் போகாமல் அதுவாகவே உயிர் பிரிந்திருந்தால் எல்லோருக்கும் மன நிம்மதியாக இருந்திருக்கும்.
நீக்குசட்டென மனம் வருவதில்லை. சில இடங்களில் சாரிட்டி மருத்துவமனைகள் இருந்திருக்கலாம்.
நீக்குபூந்தோட்டக் காவல்காரன்... எந்தப் படம் வெற்றிபெறும் என்பதைச் சொல்வது கடினம். இளையராஜா தவறா அனுமானித்த இன்னொரு படம் இதுபோல (மு.ம படம் கேள்விப்பட்டிருக்கேன்).
பதிலளிநீக்குஆமாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். கணிப்புகள் தவறுவதுண்டு.
நீக்கு1801 முன்னுரை.... வரலாறு... ஆனால் நம் மனதில் துயரமேற்படுத்தும் நிகழ்வுகள். பாரத்த்தின் நிலையை மாற்றிப்போட்டன.
பதிலளிநீக்குஉண்மை. அதைப்பற்றி பேசுவார் இல்லை!
நீக்குஅப்பாவிற்கான காஞ்சி மடத்தின் பதில் ஒரு பொக்கிஷம். இதை இவ்வளவு வருடங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்களே. சபாஷ்
பதிலளிநீக்குஎல்லாம் அப்பாதான் காரணம். அவர் பாதுகாத்து வைத்து அனுப்பியதுதான் காரணம். என் மகன்கள் இருவரும் பிறந்த தின நாட்காட்டி பக்கம் கிழித்தது பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளார். எங்களுக்கு அனுப்பி பாதுகாப்பாக வைக்கச்சொன்னார்.
நீக்குஸ்ரீராம், என்ன திடீர்னு தலைவர் பாணி!!! மூச்சு வாங்குது. முழுசும் வாசிப்பதற்குள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இருங்க வரேன்...யுகாதி இன்று!
பதிலளிநீக்குகீதா
ஹா.. ஹா.. ஹா.. வாங்க கீதா... எப்படி இருக்கு! பொறுமை இருக்கா?
நீக்குஆமாம்... உகாதிக்கும் கீர க்கும் என்ன சம்பந்தம்னு கேக்கப்படாது கேட்டேளோ?
நீக்குகன்னட தேசத்தில் இருப்பதால் 'ஊருடன் ஒத்து வாழ்!'!!
நீக்குஇங்க வளாகத்தில் மாலை கொண்டாட்டத்துடன் 300 ரூபாய்க்கு வாழை இலையில் விருந்து. எப்போதும்போல நாங்கள் போகவில்லை. மனைவிக்காகப் போகலாம் என நினைத்தேன், இரவு ஏழு மணிக்கு யார் விருந்து சாப்பிடுவா எனச் சொல்லிவிட்டாள்.
நீக்குபுகைப்படம் எடுத்திருக்கலாமே...
நீக்குசெவ்வாயில் வரும் ஒருவரும் நினைவுக்கு வருகிறார்! முதல் பகுதி வாசிக்கறப்ப!!!!
பதிலளிநீக்குகீதா
யார் அது? ஆனால் கீதா.. இப்படி எழுதியதால் சில விவரங்களை என்னால் விவரமாக எழுத முடியவில்லை!
நீக்குவிட்ட விவரங்களைத் தனிப் பதிவாக்குங்க ஸ்ரீராம்.!!!!
நீக்குநான் பதிவுல ஒரு 4, 5லைன் சேர்த்து எழுதினப்ப நீங்களே பெயர் சொல்லி அப்படி இருக்குன்னு சொன்னீங்களே!!!!!
செவ்வாய் கதைப் பகுதி!!! க்ளூ!
கீதா
பின்ன? விட்றுவோமா?!!
நீக்குஎன்னதான் எல்லா வேலைகளும் முடிக்க முடிந்தாலும் ஒரு நாள் முழுக்க ஆகிவிட்டதே! உறவினர் வீட்டு விஸிட் மற்றும் லஞ்ச் தவிர மற்ற விஷயங்கள் இண்டர்நெட்டிலேயே முடிக்கும் காலம் என்றுதான் வருமோ?
பதிலளிநீக்குபி.கு: வயலட் சட்டையுடன் ஹோட்டலுக்கும் முன்னால் நிற்பவர் யாரோ?
வாங்க சூர்யா.. அவர் என்னைப்போன்ற ஒருவர்!!! சாட் ஜிபிடி உபயம்! இன்டர்நெட்டில் முடித்ததுதான் ஒன்றில் தப்பாகி. நேரில் செல்ல வேண்டி இருந்தது.
நீக்குகோர்ட் கேட்கவே வேண்டாம்.
உறவு?
வேற வினையே வேண்டாம்!!!
ஒரு பதிவுல நானும் ஒரு சின்ன பத்தி 4 - 5 லைன் சேர்த்துக் கொடுக்க....மூச்சு வாங்கினீங்கல்ல!!!!! இருங்க இருங்க நானும் ஒரு பதிவே இப்படிப் போடறேன்!!!!! ஹாஹாஹாஹா!!!!!! இது சும்மா கலாய்த்தல் உங்களை!!!!
பதிலளிநீக்குகீதா
ஆனால் சில விஷயங்களை நிறைவேற்ற முயலும்போது சில விஷயங்களை இழக்க வேண்டி வருகிறது. விட்டுப்போன விவரங்கள் ஒருபுறம், இதை நான்கைந்து பதிவுகளாகக் கொடுத்திருப்பேன்!!!
நீக்குவாரா வாரம் என்ன புதுமை செய்வது என்று இன்று பழைய பாணிக்கே திரும்பி விட்டீர்களோ?
பதிலளிநீக்குபழைய பாணியா? இன்றா? எதை வைத்து சொல்கிறீர்கள்? வாங்க பானு அக்கா...
நீக்குYes, except songs same old Thursday stuff, good though.
நீக்குபாடல்கள் இந்த வியாழனில்தான் இடம் பிடித்திருக்கின்றன என்கிறீர்களா? சென்ற வியாழனும் இப்படித்தான் இருந்தது. உங்கள் கணிப்பு எதை வைத்து என்று புரியவில்லை! ஆனால் அதில் எனக்கு குறையில்லை. என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவல். அவ்வளவுதான்.
நீக்குஓரு நாள் மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் சுற்றியதை இப்படி மூச்சுவிடாமப் படிக்கறாப்ல கொடுத்ததை ரசித்தேன் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஇப்படி முன்ன, பதிவுலகம் வந்த புதிதில் ஒரு சம்பவத்தை நான் எழுதி பதிவாகப் போடும் முன்னரே துளசிக்கு அனுப்பிக் கேட்பேன் இல்லையா, அப்படி, கேட்டப்ப, அவரோ இப்படிப் போட்டா எல்லாரும் வாசிப்பாங்களான்னு யோசிச்சுப் போடு என்றுசொல்லிட, நானோ "மண்ணில் இந்தக் காதல் " பாட்டை உதாரணமாக விட....அது பாடல் அவர் பாடுவதையும் நீ எழுதறதையும் ஒன்றாகச் சொல்ல முடியாதென்பதோடு இப்பதான் பதிவுலகத்துல காலடி வைச்சிருக்கோம் என்பதால், ஏற்கனவே கருத்துகள் இல்லாததோடு வாசகர்களை வரவழைக்கணுமே தவிர விரட்டறா மாதிரி இருக்காம பின்னாடி வாசிக்கறவங்க வந்த பிறாகு வைச்சுக்கலாம்னு சொல்லி அங்கங்க கட் பண்ணிப் போடுன்னு சொல்ல, கட் பண்ணி போட்ட நினைவு! ஹிஹிஹிஹி
கீதா
ஹிஹிஹி.. நீங்களும் நல்லா முயற்சிக்கறீங்க பின்னூட்டத்தில்!
நீக்குஎன்ன ஆச்சர்யம் ஸ்ரீராம் தன் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்! முன்பு தன் புகைப்படத்தை வெளியிடாத நெல்லை இப்பொதெல்லாம் தன் புகைப்படங்களை வெளியிடுவதைப் பார்த்த பாதிப்பா?
பதிலளிநீக்குநன்றாக உற்றுப் பாருங்கள்.. நானா அது?!
நீக்குஇரவு வரும்பொழுது கண் மசமஸ்வென்று ஆகி விடுகிறது.
நீக்குகண்களை சோதிக்க வேண்டுமோ...
நீக்கு"மயங்குகிறாள் ஒரு மாது" படம் பார்த்திருக்கின்றேன். நல்ல பாடல்கள். "சம்சாரம் என்பது வீணை" கூட இந்தப் படத்தில்தானே? இசையமைப்பாளர் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பெரிய அளவில் இந்தப் படத்திற்கு அப்புறம் சோபிக்கவில்லை.
பதிலளிநீக்குவிஜயகுமாரும் தேங்காயும் இவ்ளாம் பெரிய பெல் பாட்டம் போட்டுக்கொண்டு வருவதை இக்காலக் குழந்தைகள் பார்த்தால் சிரித்து விடுவார்கள். எனக்கே கூட எப்படி அந்தக் காலத்தில் நான் இப்படி ஒரு அடிக்கு மேல் பாட்டம் வைத்துப் பேண்ட் போட்டுக்கொண்டேன் என்று நினைக்கும்போது மலைப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கும் 😆
விஜயபாஸ்கர் வெற்றிகரமான கன்னட இசையமைப்பாளர். அங்கு நிறைய படங்களை பண்ணி இருக்கிறார். தமிழிலும் நிறையவே இசை அமைத்திருக்கிறார்.
நீக்குஆமாம். அது ஒரு பேஷன்! நானும் பயங்கரமா பாட்டம் வச்சு பேண்ட்ஸ் போட்டிருக்கேன். அது அப்போதைய பேஷன் அவ்வளவுதான். வயிற்றுக்கு மேல் பெல்ட் போட்டு நெஞ்சு வரை பேண்ட் இருக்கும். யாரானா படத்தில் 'யே.. ஸாரா ஜமானா' பாடலில் அமிதாப்பைப் பாருங்கள்!
அந்த படத்தை கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு முன்பு தொலைகாட்சியில் பார்த்தேன். படத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன் வில்லன்..ரொம்ப கஷ்டப்பட்டு, நம்மையும் கஷ்டப்படுத்துவார். அவருக்கு ஜோடி ஃபடாஃபட் ஜெயலட்சுமி. என்ன கொடும சரவணா!
நீக்குஅது அந்த காலம் பானு அக்கா. அப்போது பார்த்திருந்தால் சாதாரணமாகத்தான் இருந்திருக்கும். தேங்காய் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.
நீக்குஇதில் புதுமைக் கருத்தை கவனித்தீர்களா? சந்தர்ப்பவசத்தால் கற்பிழந்த பெண்ணை அறிந்தே மணக்கும் நாயகன்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்வோம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கமும் பிரார்த்தனைகளும்.
நீக்குஇன்று லீவு என்பதால் வேலைகள் கூடுதல். பின்னாடி வருகிறேன், ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
வாங்க... உகாதி வேற...
நீக்குஆமாம், உகாதி வேறு. அதுக்குப் பெரிசா எதுவும் சாப்பாடு செய்வதில்லை இப்பலாம் சாப்பிட ஆள் இல்லை. எனவே உப்புப் போளி மட்டுமே! அதுவும் நோ மைதா. நோ இனிப்பு.
நீக்குகீதா
பி வீ பு வீ இரு வீடுகளிலும் உகாதை அனுசரிப்பதுண்டு!
நீக்குகீதா
//உப்பு போளி மட்டுமே... நோ மைதா நோ இனிப்பு // நானு இன்னைக்கு வெண் பொங்கல் பண்ணப்போறேன்... ஆமா டயட்ல இருக்கேன்னு சொன்னீங்களே.. ஆமாம். அதனால அரிசி உபயோகிக்க மாட்டேன். ரவை வேண்டாம். அதனால கோதுமை ரவை உபயோகிப்பேன். அப்படியா? ஆமாம். பாசிப்பருப்பு வாயுத் தொல்லைனு அதைச் சேர்க்க மாட்டேன். அப்போ மிளகு உப்புமா மாதிரி இருக்காது? அதிஉதான் இல்லை. மிளகு சீரகம்லாம் இப்கோ சாப்பிடறதை நிறுத்திருக்கேன். அப்போ நெய் கருவேப்பிலை தாளிப்பீங்களா? மூச் விடக்கூடாது. நெய்யா? அதுவும் உப்பும் எனக்கு ஆகாது. அப்போ எப்படித்தான் வெண் பொங்கல் செய்வீங்க? கோதுமை ரவையை வேகவைத்துச் சாப்பிடுவேன்.
நீக்குஓ அதுதான் உங்க வீட்டு வெண் பொங்கலா?
Life certificate, சம்பந்தபட்டவருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ அந்த வங்கியில் சென்று கொடுத்து விடலாமே?
பதிலளிநீக்குஅதுவும் அலைச்சல்தானே... சில வருடங்களாக போஸ்ட் ஆபீசில் சென்று கொடுக்கலாம் - எந்த ஊரில் இருந்தாலும். அல்லது போஸ்ட்மேனிடம் சொன்னால் அந்த மெஷினை வீட்டுக்கு எடுத்து வருவார், வீட்டிலேயே செய்து விடலாம். 70 ரூபாய் சார்ஜ். போஸ்ட்மேனுக்கு ஒரு ஐம்பது ரூபாய் அன்பளிப்பு கொடுப்போம்!
நீக்குரஜினி பற்றிக் கேள்விப்பட்ட விஷயம்தான். ஆனால் பாலசந்தர் படத்தை உடைத்தார் என்பது இது வரை நான் கேள்விப்படாதது. கேபி மட்டும் அந்தச் சமயத்தில் உதவாவிட்டால் ரஜினி இன்றைக்கு இந்த இடத்தில் இருந்திருக்க முடியாது. சும்மா சொல்லக்கூடாது...ரஜினியும் கேபிக்கு எவ்வளவோ திருப்பிச் செய்திருக்கின்றார்.
பதிலளிநீக்குஅதுவும் உண்மைதான். ரஜினி அமிதாப்பையே கடனிலிருந்து மீட்டிருக்கிறார்.
நீக்கு/வெளியான ஒன்பதாம் மயங்குகிறாள் ஒரு மாது. /
பதிலளிநீக்கு"ஓன்பதாம்".........புரியவில்லையே?
மன்னிக்கவும். டைப்போ. 'ஒரு படம்' என்றிருக்க வேண்டும்.
நீக்குஉங்கள் அப்பாவுக்கு காஞ்சி மடத்திலிருந்து வந்த கடிதத்தில் என்ன இருந்தது என்று எழுதியிருக்கலாம். புரிந்து கொள்ள சிரமமான எழுத்து. நான் புரிந்து கொண்டது:
பதிலளிநீக்குதங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் வருமாறூ:
1. இறந்தபின் அந்த வீட்டில் வாசம் செய்யாது
2. இறந்தவர்கள் உற்றார் உறவினர்களைதொடர்பு
3. கொள்வது கிடையாது
4. ஆவிகளுடன் பேசுவதை,சொல்வதை நம்பலாம்
5.மரணத்திற்கு பின்பு எல்லாம் அழிவது உண்மை
6. கருட புராணத்தில் ஆத்மா பற்றி சொல்வது சரியே
சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள். யுகாதி என்பதால், இன்று வீட்டு வேலை அதிகமென்றாலும், முதலில் உங்களின் முதல் பகுதி சுற்றலை முழுவதும் மூச்சுவிடாமல் படித்து ரசித்தேன். சுவாரஸ்யமாக இருக்கிறது.
முன்பு என் பதிவொன்றில், ஒரு பாராவுக்கு இப்படி நிறுத்தாமல் நான் எழுதியதற்கு நம் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் "ஒரு வரியே இவ்வளவு நீளமா?" என அதிசயப்பட்டு ஒரு கமெண்ட் தந்திருந்தார். இப்போது என்னைச் சொல்லப் போகிறாரோ என நினைக்கிறேன்.
விடாமல் சென்றதில்/ சொன்னதில் உங்களின் விட்டுப்போன பல வேலைகள் அன்று நல்லபடியாக முடிந்திருப்பதில் சந்தோஷமடைகிறேன். பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரசித்ததற்கும், பொறுமையாகப் படித்ததற்கும் நன்றி கமலா அக்கா.. அப்புறமா வாங்க... ஆனா வாங்க!!!
நீக்குயுகாதிக்கு என்ன என்ன வேலைகள், என்ன என்ன செய்தார்னு பதிவு கஹ மேடம் போடுவாங்களா? அவர் சொன்ன toneல், நான் பெரிய இலைச் சாப்பாட்டு ஐட்டங்களைக் கற்பனை செய்கிறேன்.
நீக்குஜோக்குகள் பரவாயில்லை. ஆஃபிசில் தூங்கும் ஜோக் படிக்கும் பொழுது இந்தக் கால நடைமுறை நினைவுக்கு வருகிறது. சில ஐ.டி. கம்பெனிகளில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு எல்லோரும் கண்டிப்பாக தூங்கித்தான் ஆக வேண்டும் என்று ரூல், என்றும், அதனால் அந்த கம்பெனிகளில் சாப்பாட்டு இடைவேளைக்குப் பிறகு அரை மணி நேரம் விளக்குகளை அணைத்து விடுவார்கள் என்றும் கேள்வி. அதற்கு பவர் நாப் என்று பெயராம். பவர் நாப்பிற்குப் பிறகு மிகவும் ஃப்ரெஷாக உணர்வார்களாமே?
பதிலளிநீக்குநானும் கேள்விப்பட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன்!
நீக்குஅனைவருக்கும் உகாதி வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅதே அதே... நன்றியுடன்!
நீக்குஇந்தியாவில் பகலாக இருக்கும் பொழுது இங்கே இரவு என்பதால், நேற்று இரவு எ.பி.யில் பின்னூட்டம் இட்டு விட்டு சென்று விட்டேன். இன்று மீண்டும் திறந்தபொழுதுதான் நெல்லை தமிழன் அவர்களுக்கு அடி பட்ட செய்தியை பார்த்தேன். இப்போது எப்படி இருக்கிறீர்கள்? டாக்டரிடம் சென்றீர்களா? கிரியா செய்யலாம், நீச்சல், நடை யோசித்துக் கொள்ளவும். Take care.
பதிலளிநீக்குநெல்லை மேடைக்கு அழைக்கப்படுகிறார்!
நீக்குநன்றி பா வெ மேடம். இப்போ யோகா செய்தேன், சூர்யநமஸ்கார் உத்தானசனாவிற்குப் பிறகு செய்ய முடியலை. நடை என்பது அப்சஷனாகப் போய்விட்டது. கடந்த 1100 நாட்கள் விடாமல் 10கிமீ தினமும் நடக்கறேன். இரயில் பயணம் முழு தினம் இருந்தால் 8 1/2 கிமீ வந்தாலே அதிகம். எனக்கு ரொட்டீனை விட்டுவிட்டால் மீண்டும் கடைபிடிப்பது கடினம் (என் இயல்பு சோம்பேறியாக இருக்க விருப்பப்படும்). மெதுவாக சரியாகும்னு தோணுது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்கு/அப்புறமா வாங்க... ஆனா வாங்க!!//
வேலைகளின் நடுவிலோ இல்லை வேலைகள் முடிந்த பொழுதிலோ வந்து விடுவேன். ஆனால், இப்போதே இந்த ஒன்றுக்கு மட்டும் வந்து விட்டேன்.
இந்த மயங்குகிறாள் ஒரு மாது படம் அந்த காலத்தில் A முத்திரைப் பெற்ற படம். நான் திருமணமாகாமல் அம்மா வீட்டில் இருந்த போது, நானும் என் அம்மாவும் மட்டும் ஒரு தியேட்டருக்கு ஒரு பக்திப்படம் (படம பெயர்நினைவில் இல்லை.) பார்க்கப் போனோம். அதறகு செல்லும் போதே தாமதமாகி விடவே படம் ஆரம்பித்து விட்டார்கள். எங்களுக்கு படம் ஆரம்பித்தப்பின் படம் பார்க்க பிடிக்காது. எனவே பிறகு அந்தப் படத்தை பிறகு ஒருநாள் பார்க்கலாம் என முடிவு செய்து அருகிலேயே உள்ள ஒரு திரையரங்கில் இந்தப்படம்( ம. ஒ. மா) போட்டிருப்பதை கண்டு இதற்கு சென்று வந்தோம்.
வீட்டுக்கு வந்ததும் எங்களிருவருக்கும் எங்கள் அப்பாவிடமிருந்தும். அண்ணாவிடமிருந்தும் ஒரே திட்டுக்கள் மயம். "எப்படி இவளை இந்தப் படத்திற்கு அழைத்துப் போனாய்.?" என்று அப்பா கத்த, அண்ணா" நீ அந்தப்படம் பார்க்க கூடாது என உனக்குப் புரியாதா" என திட்ட இந்தப்படத்தை மறக்கவே இயலாமல் போனது.( இப்போதுள்ள படங்களை பார்க்கும் பார்க்கும் போது, இதற்கு ஏன் அந்த முத்திரை தந்தார்கள் என்ற நினைப்பு வருகிறது.) ஆனால், இப் படத்தின் பாடல்கள் அவ்வளவு இனிமை. இலங்கை வானொலியில் அடிக்கடி இந்தப்படத்தில் பாடல்களை கேட்டு ரசித்திருக்கிறேன்.( ஒருவேளை இந்தப்படத்தை ஏன் பார்த்தோமென அவ்வளவு திட்டுக்கள் வாங்கியதால், இப்படத்தின் பாடல்களை கேட்க சுவாரஸ்யம் வந்ததோ என்னவோ.? மனப்பாடமாகும் வரை கேட்டு ரசித்துள்ளேன். :))).) இப்போது இங்குப் பார்த்ததும் மறக்கவியலாத என் மலரும் நினைவும் எழுந்தது. பிறகு கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சுவாரசியமான நினைவுகள் கமலா அக்கா. அந்தக் காலத்தின் A முத்திரைப் படங்கள் இந்தக் கால U முத்திரைப் படங்களை போலதான் இருக்கும். சரியாகத்தான் சொல்கிறேனா?
நீக்குவிஜயபாஸ்கர் இனிமையான இசை அமைப்பாளர். ஏகப்பட்ட மெலடி கொடுத்திருக்கிறார்.
கஹ மேடம்... மூன்றாம்பிறை வந்த சமயம் நாங்கள் (முதலிரண்டு பசங்க) நெல்லையிலும், பெற்றோர்கள் எங்க தம்பியுடன் திருவண்ணாமலையிலும் இருந்தார்கள். என் அண்ணன் மூ.பி படத்தை ஆஹா ஓஹோ என அப்பாக்கு எழுதி படம் பார்க்கச் சொன்னான். படம் பார்த்துவிட்டு கரும்ம் கரும்ம் இந்த மாதிரி காட்சி பாடல்களெல்லாம் இருக்கற படத்தை பசங்க புகழ்கிறார்களே என்றாராம் அப்பா.
நீக்குஅப்பாவிடம் நான் இதுபோல ஒரு தலை ராகம் படத்துக்கு திட்டு வாங்கினேன். அவர் கல்யாண நாளுக்கு சங்கராபரணம் பார்த்து வந்து அப்போதைய என்னிடம் இது மாதிரி வேற நல்ல படம் இருந்தா சொல்லு என்று கேட்டு, நான் எல்லாளரும் பெரிதாக பேசுகிறார்களே என்று இதைச் சொல்லப்போய் அப்பா அம்மா பார்த்து விட்டு வந்து ஒரே திட்டு.
நீக்குநிறம் மாறாத பூக்கள் அப்பா, அம்மா நாங்கள் எல்லோருமே பார்த்தோம். ராஜா கலையரங்கம் தியேட்டரிலிருந்து வெளியே வந்து ரயில்வே ஸ்டேஷன் அருகேயிருந்த நியூ பத்மா ஹோட்டல் வரை அப்பா எதுவும் பேசவில்லை. உள்ளே உட்கார்ந்த உடன் ஒரே ஒரு வார்த்தை சொன்னார்
"ச்சே.. என்னமா எடுத்திருக்கான்..."
வீட்டிலேயே இருந்திருக்கலாம்
பதிலளிநீக்குஎன்று தோன்றுகிறது
இருந்திருந்தால்
இனிய என்னவர்
மாமியார், நாத்தனார்
மற்றும் தோழிகளென்ற
நெருக்கங்களுடன்
நாட்கள் நகர்ந்திருக்கும்
விதி யாரை விட்டது?
ஓவியனின்
வக்கிரப் பார்வையில்
படமாய் உறைந்தேன்
புத்தகப் பக்கங்களில்
பொத்தி வைத்ததெல்லாம்
கடை விரிக்கப்பட்டது
பலர் பார்வைபட்டு
சின்னாப் பின்னமாகிறார்கள்
கதைகளில் உலாவிய என்
மனவெளி மாந்தர்கள்
(எனக்குத் தோன்றிய சில திருத்தங்களுடன். பொதுவெளிப் பகிர்தலின் ஆபத்து இது தான்!)
வாங்க ஜீவி ஸார்...
நீக்கு// பொதுவெளிப் பகிர்தலின் ஆபத்து இது தான்! //
உண்மைதான்!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
பதிலளிநீக்குவியாழன் கதம்பம் நன்று. ஒரு நாளில் நடந்த நிகழ்வுகள், அனுபவங்கள் நன்று. ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் அனுபவங்கள் பேசு பொருளாகவே இருக்கின்றன.
மற்ற பகுதிகளும் ரசித்தேன்.
வாங்க வெங்கட்.. நன்றி.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குதடை எடுப்பு
பதிலளிநீக்குஉயிர் விடுப்பு...
நீதிபதி கண்ணீர்
மனதைக் கலங்கச் செய்தது...
ஆமாம். கண்கள் கலங்கியதாலேயே அந்த பெற்றோரின் பாசத்தை, ஆதங்கத்தை, பரிதவிப்பை இங்கு பதிவு செய்தேன்.
நீக்குவியாழன் கதம்பம் சிறப்பு!..
பதிலளிநீக்கு(ஆகத்தான் இருக்கும்!...).
ஹா.. ஹா.. ஹா... நேற்று அவசரமாக அந்த முதல் பகுதியை எழுதி முடித்ததும் எனக்கு நினைவுக்கு வந்த முதல் நண்பர் நீங்கள்தான். உங்கள் பதிலை யூகித்திருந்தேன். உங்கள் கண்கள் நினைவுக்கு வந்தன!
நீக்குபூந்தோட்டக்காவல்காரன் செய்திகள்
பதிலளிநீக்குவேறொன்றையும் சொல்ல வேண்டியது
அடுத்து சிறைப்பறவையா!
போட்டால் போச்சு...
நீக்குஒருபுறம் வேடன்
பதிலளிநீக்குமறுபுறம் நாகம்...
கவியரசர் பாடலை மறக்க முடியுமா?..
ஊஹூம்...
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. சித்ராவின் குரலில் இளையராஜா ஜாலத்தில் பாடல் இனிமை.
நீக்கு///உங்கள் பதிலை யூகித்திருந்தேன்.
பதிலளிநீக்குஉங்கள் கண்கள் நினைவுக்கு வந்தன!///
மனதை மனமே அறியும் ஸ்ரீராம்...
__/\__
நீக்குபடத்இல் மஞ்சள் பையை எடுத்துவிட்டு, வீச்சரிவாளைக்்கொடுத்தால் சரியாக இருக்குமான்னு கௌதமன் சாரைக் கேட்கிறேன். வில்லனாக்க் கற்பனை செய்ய முடிகிறதா என அவர் சொல்ல வேண்டும்.
பதிலளிநீக்குஎனக்கு இந்த நிற ஷர்ட் ரொம்ப விருப்பமானது.
படத்திலிருப்பவரைச் சொல்கிறீர்களா? கொஞ்சம் என் நண்பன் கணபதி சுப்ரமணியம் சாயல் தெரிகிறது! ஏனென்றால் அவன் படத்தைக் கொடுத்துதான் நான் படம் தயார் செய்தேன்!
நீக்குகருணைக்கொலைக்கான மனு கொடுத்தல் பல வருடங்களாகக் கோர்ட்டில் நடந்து கொண்டிருந்தது இப்ப செய்யலாம்னு சொல்லிட்டாங்க போல.
பதிலளிநீக்குமனதை ரொம்ப வருத்தமடைய வைக்கும் இப்படியான முடிவுகள் ஆனால் யதார்த்தம் அதுதானே.
ஃபேஸ்புக் அப்புறம் பார்க்கிறேன், ஸ்ரீராம்
கீதா
அதிலேயே இரண்டு கட்டங்கள் என்றும் படித்தேன் செய்தியில்.
நீக்குஇப்படியான கருணைக்கொலை மனு ஒன்று வைக்கப்பட்டு நடந்தது பற்றி நான் எழுதிய நினைவு.
பதிலளிநீக்குமும்பை மருத்துவமனையில், 25 வயதில் பாலியல்பலாத்காரத்திற்கு உட்பட்டு நெரித்துக் கொலை செய்யப்பபட்ட முயற்சியில் உயிர்பிழைத்த நிலையில் வெறும் மூச்சுடன், வேறு எந்த நினைவும் இல்லாமல் living vegetable நிலையில் 42 வருடங்கள் இருந்திருக்கிறார். அவர் அங்கு பணியாற்றிய நர்ஸ். அப்போது பல பத்திரிகைகளும் இதை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தன. euthanasia laws பற்றிய விவாதங்கள் நடந்தன.
கீதா
ஆமாம். எனக்கும் நினைவுக்கு வருகிறது. :(
நீக்குஒரு படம் வெற்றி பெறுவதன் ரகசியம் பல சமயங்களில் புரிவதில்லை. பாருங்க பூ தோ கா வுக்குத் தடைகள் வந்தும் வெற்றி பெற்றிருக்கிறது!! விஜயகாந்தே ப்ரிவ்யூ பார்க்கப் பிடிக்காமல் இருந்தப்பவும்...
பதிலளிநீக்குகீதா
ஆமாம். எனக்கு அதில் இரண்டு பாடல்கள் பிடிக்கும்.
நீக்குபாராமல் பார்த்த நெஞ்சம்,
பாடாத தெம்மாங்கு
வார்த்தைகள் டக்குனு இசையை நினைவுபடுத்தலை கேட்டுப் பார்க்கிறேன் ஸ்ரீராம்
நீக்குகீதா
யுகாதியைக் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் பருப்பு போளியோ இல்லை தேங்காய் போளியோ செய்து கொண்டாடுவதை வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குஆனால் இனிப்பு உடம்புக்கு நல்லதல்ல என்று சொல்லிட்டு வெல்லம் போடாம போளி பண்ணுகிறேன்னு சொல்லி பரோட்டா செஞ்சு சாப்பிடறவங்களை என்னன்னு சொல்றது? காரபோளின்னு உட்டாலக்கடி பேர் வச்சுக்கிட்டாலும் அது ஆலு அல்லது ஆனியன் பராத்தா தானே.
ஆமாம் கார போளி யுகாதிக்குப் பண்ணி கொண்டாடறவங்க யார் யார்?
வேப்பம்பூ பச்சடி மெயின்! பொலிஆப்ஷனல்! வடை இருக்காம்! கார போளி No!
நீக்குhஹாஹாஹாஹா...நெல்லை, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உப்பு போளினாலும் அது போளிதான்....கடலைப்பருப்பு ஸ்டஃப்ட்! mot with the other masala chat powder, garam masala வகையறாக்கள் இல்லாம,...பராட்டானா இதெல்லாம் உண்டே!!!. பராத்தாவுக்கு எண்ணை ரொம்ப விட்டு ஒன்னும் பிசைய வேண்டாம். போளிக்கு அப்படி இல்லை....நல்லெண்ணை விட்டு பிசையணும் அதுவும் நான் கோ மாவுல..
நீக்குநம்ம வீட்டு போளி ஒன்றும் போலி போளியல்ல!!!!
நம்ம ரெண்டு வீட்டுலயும் இது செய்வாங்க குறிப்பா ஸ்ரீராம் சொன்னது போல் வேப்பம்பூ பச்சடி. வேப்பம்பூ ரசமும் செஞ்சுடுவாங்க நம்ம வீட்டில்
கீதா
ஒரு புறம் வேடன், மறுபுறம் நாகம் பாட்டு கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம் நிறைய. ஆனால் படம் பற்றித் தெரியாது. மயங்குகிறாள் ஒரு மாது பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பெயரில் ஒரு பாடலும் உண்டே!
பதிலளிநீக்கு//விஜயபாஸ்கர் இசையில் 'சம்சாரம் என்பது வீணை', 'வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்' போன்ற நல்ல பாடல்களைக் கொண்ட படம்.//
இந்தப் பாடல்களும் பல முறை கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம். இந்தப் படத்தில்தானா. ரொம்பப் பிடித்த பாடல்கள் இங்கு பகிர்ந்திருப்பதும் மற்ற இரண்டும்..
விஜயபாஸ்கர் இசை என்பதும் நோட்டட்!
கீதா
கிட்டத்தட்ட இப்ப எல்லடித் தலைமைக்குச் செய்திகள் வேறு விதமாகச் சொல்லப்பட்டு காய்கள் நகர்த்தப்படுகின்றனவோ அப்படித்தான் அப்பவும் அரசர்கள் காலமும் போல. அங்கருந்துதான் வழி வழியாக வந்திருக்கும்!
பதிலளிநீக்குஇடைத்தரகர்கள் இருந்தாலே பிரச்சனைதான்.
கீதா
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஆ! ஸ்ரீராம் இப்படி எல்லாம் ஒரு படம் பற்றிச் சொல்லிக் கொதி மூட்டுறீங்களே!
பதிலளிநீக்குவடிவுக்கரசி செமையான நடிகை. அதானே நீங்க சொல்றாப்ல ராதிகா இப்ப ரொம்பவே லைம்லைட் ல இருக்கறாப்ல வடிவுககரசியை யாரும் சொல்லலையே. ஏன் ஓடிடி ப்ளாட்ஃபார்ம்னா கீழா?
கீதா
ஒருநாள் நடந்த சம்பவங்கள் தந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குபாடல்களும் அதற்கான படமும் விளக்கங்களும் அறிந்தோம்.
ஆபீசில் பூர்த்தி தூங்கும் ஜோக்ஸ்.....:)
இருமல் என டாக்டரிடம் சென்றது.....உறுதிப்படுத்திய டாக்டர்.:)
ஒரு நாள் போதுமா என்று பாடவைத்தது ஒரு நாள் அலைச்சல். முன்பு 'கார் வேண்டுமா என்கிட்டே வாங்க' என்று ஒரு ரமேஷ் டிவியில் அலட்டுவாரே அது நினைவில் வந்தது உங்க பில்டர் கேஸ் படித்தபோது.
பதிலளிநீக்குபேரரசுகள் சிற்றரசுகளாகும், மீண்டும் அவை பேரரசுகளாகும். ரோம, அலெக்சாண்டரின் கிரீஸ், செங்கிசுகான் என்று எத்தனை பேரரசுகள் சிதைந்தன. ஏன் சமீபத்தில் சோவியத் யூனியன் உடையவில்லையா. 'காலங்கள் மாறும், காட்சிகள் மாறும். டாகடர் ராஜேந்திரன் முன்னுரை.
கவிதைகள் வேறு யாரோ எழுதியது போல் உள்ளது. காரணம் உங்களுக்கு சுருஙக்ச் சொல்ல தெரியாததே.
நானும் மதியம் உண்டபின் ஒரு 20 நிமிடம் உட்கார்ந்தபடியே ஆபீசில் தூங்கியிருக்கிறேன். தூக்கம் என்றும் சொல்ல முடியாது. யார் என்ன பேசினாலும் சரி, தொட்டு அசைந்தாலும் சரி எதிர் வினையோ, பேசுதலோ இருக்காது. அது முடிந்தபின் முகம் கழுவி உட்கார்ந்தால் அதுவரை மனதில் தேங்கியிருந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் விடை பளிச்சென்று தெரிய வரும். இது எனது அனுபவம்.
ஜோக்ஸ் நன்றாக உள்ளன.
Jayakumar